இந்தியா பாக்கிஸ்தான் போர் பீதியின் பின்னால்….

 

    

 இந்தியாவின் வர்த்தக தலைந‌கரான மும்பையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை முன்னிட்டு இந்தியா பாக்கிஸ்தான் இடையே மீண்டும் போர் பீதி ஏற்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் பாக்கிஸ்தானியர்கள், பாக்கிஸ்தானில் தான் திட்டம் தீட்டப்பட்டது என்றும், ஆதாரங்களை ஒப்படைத்துவிட்டோம் என்றும், ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கெடு விதித்து இந்தியாவும்; தாக்குதல் நடத்தியதில் பாக்கிஸ்தானின் தொடர்பு இல்லையென்றும், ஆதாரம் போதாது என்றும், இந்தியா கொடுத்துள்ள பட்டியலில் இருக்கும் இருபது பேரை இந்தியாவிடம் ஒப்படைக்கத்தேவையில்லை என்று பாக்கிஸ்தானும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியதில் பதட்டம் கூடியது. இரண்டு நாடுகளும் போருக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த வெறியூட்டும் குற்றச்சாட்டுகளையும், போர்ப்பதட்டத்தையும் தேசபக்தியாய் மொழிமாற்றம் செய்வதில் ஊடகங்கள் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. கடந்த காலங்களில் நடைபெற்ற போர்களில் கூட இப்படித்தான் நடந்தது. அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஆதரவு தெரிவிப்பதுதான் மக்களின் கடமை என்பதாக முன்மொழியப்படுகிறது. மாற்றுக்கருத்து கொண்டிருந்தாலோ தேசவிரோதி என்பதற்கு வேறு சான்று எதுவும் தேவையில்லை.

 

     மும்பை தாக்குதல் நடைபெற்ற உடனேயே பாக்கிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்று முதலில் தொடங்கிவைத்தவர் அமெரிக்க அதிபராகவிருக்கும் ஒபாமா. பின்னர் காண்டலிசா ரைசும் வேறு சில அதிகாரிகளும் தில்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் மாறிமாறி பறந்தனர். இந்தியாவில் இருக்கும்போது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் சர்வதேசசமூகத்தில் பாக்கிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கு சாதகமாக பாடுவது. பின் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானின் தீவிர‌வாத‌த்திற்கு எதிரான‌ ந‌ட‌வ‌டிக்கை திருப்தியாக‌ இருக்கிற‌து என்று சுதிமாற்றிப்பாடுவ‌து. இத‌ன்மூல‌ம் போரை த‌ணிப்ப‌த‌ற்கான‌ முய‌ற்சியில் ஈடுப‌டுவ‌தாக‌ போக்குகாட்டிக்கொண்டே அதை திணிப்ப‌தில் தீவிர‌மாக‌ இருக்கிற‌து. ஒருக‌ண‌ம் பாக்கிஸ்தானுக்கு எதிராக‌ ராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கை இல்லை என‌ பிர‌த‌ம‌ர் கூறுகிறார், ம‌றுக‌ண‌ம் மும்பைதாக்குத‌லுக்கு த‌க்க‌ ப‌தில‌டி கொடுக்க‌ப்ப‌டும் என‌ சோனியாகாந்தி முழ‌ங்குகிறார். இத‌ற்கெல்லாம் மேலாக‌ போர் தொடுத்தால் ச‌ந்திக்க‌த்த‌யார் என்றும், எங்க‌ள் ராணுவ‌த்தை குறைத்து ம‌திப்பிட‌வேண்டாம் என்றும் பாக்கிஸ்தான் அதிப‌ர் ச‌வ‌டால் அடிக்கிறார். இவைஎல்லாம் ஒன்றுகூடி இந்த‌ போர் ப‌த‌ட்ட‌த்தை ம‌க்க‌ளிட‌ம் நியாய‌ப்ப‌டுத்துகிற‌து. ஆனால் மும்பைத்தாக்குத‌லின் பின்ன‌ணி என்ன‌? போரின் மூல‌ம் இதுபோன்ற‌ தாக்குத‌ல்க‌ளை நிறுத்திவிட‌முடியுமா? என்ப‌ன‌போன்ற‌ முக்கிய‌மான‌ கேள்விக‌ள் புற‌ந்த‌ள்ள‌ப்ப‌டுகின்ற‌ன‌.

 

     பொதுவாக‌ பாக்கிஸ்தானில் ராணுவ‌ ச‌ர்வாதிகார‌மும் ம‌க்க‌ளாட்சியும்(!) மாறிமாறி வ‌ந்தாலும் நிர்வாக‌த்தில் ராணுவ‌த்தின் கை மேலோங்கியே இருக்கிற‌து. இந்திய‌வுக்கு எதிரான‌ தாக்குத‌ல்க‌ளில் அது முனைப்பு காட்டுகிற‌து என்ப‌தையும் முழுதாக‌ ம‌றுப்ப‌த‌ற்கில்லை. அதேநேர‌ம் இந்திய‌ உள‌வு அமைப்புக‌ளும் பாக்கிஸ்தானுக்கு எதிரான‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌ட‌வேயில்லை என்றும் கூறிவிட‌முடியாது. இப்ப‌டி இர‌ண்டு நாடுக‌ளும் ஒன்றுக்கு எதிராய் ம‌ற்றொன்று செய‌ல்ப‌டுவ‌த‌ன் வேரான‌து காஷ்மீர் தேசிய‌ விடுத‌லையில் புதைந்திருக்கிற‌து. தொட‌க்க‌த்தில் காஷ்மீர் தேசிய‌ விடுத‌லை போராட்ட‌மாக‌வே இருந்த‌ காஷ்மீர் பிர‌ச்ச‌னையை இரு நாடுக‌ளும் த‌ங்க‌ள் அர‌சிய‌ல் சூழ்நிலைக‌ளுக்கு சாத‌க‌மாக்க‌வேண்டி ம‌த‌ப்பிர‌ச்ச‌னையாக‌ மாற்றின‌. த‌ற்போது இந்திய‌ப்ப‌குதி காஷ்மீரில் ச‌ற்றேற‌க்குறைய‌ ஐந்து பேருக்கு ஒருவ‌ர் என்ற‌ க‌ண‌க்கில் ராணுவ‌ம் அங்கே நிலைபெற்றிருக்கிற‌து. இந்தியா த‌ன் இறையாண்மையை காக்க‌ நாளொன்றுக்கு சுமார் 750 கோடிக‌ளை காஷ்மீரில் செல‌வ‌ழிக்கிற‌து. இதேபோல் பாக்கிஸ்தானிலும். இர‌ண்டு நாடுக‌ளும் ஆண்டுக்கு ஆண்டு த‌ங்க‌ள் ராணுவ‌ச்செல‌வை ஏற்றிக்கொண்டே போவ‌த‌ற்கு காஷ்மீர் சூடு இற‌ங்காம‌ல் இருப்ப‌தே கார‌ண‌ம். இது இந்தியாவுக்கு எதிரான‌ தாக்குத‌ல்க‌ளுக்கு கார‌ண‌மான‌ ஒருப‌க்க‌ம் என்றால் ம‌றுப‌க்க‌மான‌ ம‌த‌த்தீவிர‌வாத‌ம் என்ப‌து அமெரிக்காவால் ஊட்டி வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து. சென்ற‌ நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் அலைய‌லையாய் ப‌ர‌விய‌ க‌ம்யூனிச‌தாக்க‌த்தை எதிர்ப்ப‌த‌ற்காக‌ அமெரிக்காவால் உறுவாக்க‌ப்ப‌ட்ட‌துதான் இஸ்லாமிய‌ ம‌த‌ மீட்டுறுவாக்க‌ம் என்ப‌து. சோவிய‌த்யூனிய‌னுட‌னான ப‌னிப்போரின் போதும் பின்ன‌ர் ப‌திலிப்போர்க‌ளிலும் அமெரிக்காவுக்கு கை கொடுத்த‌து இந்த‌ ம‌த‌ தீவிர‌வாத‌ம்தான். ம‌த்திய‌த்த‌ரைக்க‌ட‌ல் நாடுக‌ளின் எண்ணெய்வ‌ள‌ங்க‌ளை கொள்ளைய‌டிப்ப‌த‌ற்கு இன்றும் அது உத‌விக்கொண்டிருக்கிற‌து. இது ஈரானில் அமெரிக்க‌ கைப்பாவை ம‌ன்ன‌ன் ஷாவை தூக்கிவீசிய‌திலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக‌ திசைமாற‌த்தொட‌ங்கிய‌து. இந்த‌ இஸ்லாமிய‌ ம‌த‌த்தீவிர‌வாத‌ம் இந்தியாவில் வேறூன்றி வ‌ள‌ர்வ‌த‌ற்கு இந்துத்தீவிர‌வாத‌மே முழுப்பொறுப்பாகும். காஷ்மீர் தொட‌ங்கி மும்பை குஜ‌ராத் வ‌ழியாக‌ இந்தியாவெங்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் குறிவைத்து தாக்க‌ப்ப‌டும்போது, க‌ல்வி வேலைவாய்ப்பு தொட‌ங்கி அனைத்து துறைக‌ளிலும் நேர‌டியாக‌வும் ம‌றைமுக‌மாக‌வும் இஸ்லாமிய‌ர்க‌ள் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டும்போது, எங்கும் மேலோங்கியிருக்கும் இந்துவெறி ஆதிக்க‌த்தால் இஸ்லாமிய‌ர்க‌ள் இர‌ண்டாம்த‌ர‌ குடிம‌க்க‌ளாய் ஆக்க‌ப்ப‌டும்போது இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் வ‌ள‌ர்வ‌த‌ற்கு வேறு கார‌ண‌ம் தேவையில்லை.

 

     இந்த‌ப்பின்னணிக‌ளை புற‌க்க‌ணித்துவிட்டு போர் ந‌ட‌த்தினால் என்ன‌வாகும்? முத‌லாளித்துவ‌ சூதாட்ட‌த்தால் உல‌க‌ப்பொருளாதார‌மே க‌ண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் இந்த‌ச்சூழ‌லில் இந்தியாவும் பாக்கிஸ்தானும் போரில் ஈடுப‌ட்டால் பொருளாதார‌ம் ப‌டுமோச‌மாகும். ஒரு மாத‌த்திற்கு தேவையான‌ உண‌வைக்கூட‌ இற‌க்கும‌தி செய்ய‌முடியாத‌ நிலைக்கு பாக்கிஸ்தான் த‌ள்ள‌ப்ப‌டும் என‌ பொருளாதார‌ நிபுண‌ர்க‌ள் எச்ச‌ரித்துள்ள‌ன‌ர். இந்த‌ அள‌வுக்கு மோச‌மான‌ நிலையில் இந்தியா இல்லை என்றாலும் அத‌ன் விளைவுக‌ள் க‌டுமையான‌தாக‌வே இருக்கும். ஏற்க‌ன‌வே ராணுவ‌ச்செல‌வுக‌ளுக்காக‌வும், அர‌சிய‌வாதிக‌ளின் பாதுகாப்புச்செல‌வுக‌ளுக்காக‌வும் கொட்டிக்கொடுத்து அதை ஈடுக‌ட்ட‌ ம‌க்க‌ளின் அத்தியாவ‌சிய‌த் தேவைக‌ளுக்கான‌ வெட்டிக்குறைத்துவ‌ரும் சூழ‌லில் ம‌க்க‌ளின் த‌லையில் இடியாக‌வே இது இற‌ங்கும். இது ஒருபுற‌மிருக்க‌, இப்ப‌டி முன்சென்று தாக்குத‌ல் ந‌ட‌த்தும் போரால் அத‌ன் நோக்க‌மான‌ தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளை முறிய‌டித்துவிட‌முடியாது என்ப‌த‌ற்கு அமெரிக்கா ஈராக்கில் ப‌ட்டுக்கொண்டிருக்கும் செருப்ப‌டிக‌ளே சாட்சி. போர் ந‌ட‌ந்தால் பாக்கிஸ்தானுக்கு ஆத‌ர‌வாக‌ தாலிபான் த‌ற்கொலைப்ப‌டை போராளிக‌ள் க‌ள‌த்தில் இற‌க்கிவிட‌ப்ப‌டுவார்க‌ள் என்று தாலிபான் அறிவித்திருக்கிற‌து. ம‌த‌தீவிர‌வாத‌க் குழுக்க‌ளுக்கும் பாக்கிஸ்தான் ராணுவ‌த்திற்குமிடையே நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்த‌ கார‌ண‌மாக‌ இருக்க‌ப்போகும் இந்த‌ப்போரான‌து எந்த‌ வித‌த்திலும் தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்தாது, மேலும் அதிக‌ரிக்க‌வே வ‌ழிசெய்யும். ஒரு போரின் மூல‌ம் ம‌த‌தீவிர‌வாத‌க் குழுக்க‌ளை ஒட்டுமொத்த‌மாக‌ அழித்துவிடுவ‌து சாத்திய‌மும் அல்ல‌. ஆக‌ இந்திய‌ அர‌சுக்கும், பாக்கிஸ்தானிய‌ அர‌சுக்கும் ப‌ய‌ன‌ளிக்காத‌, இரு நாட்டு ம‌க்க‌ளுக்கும் ப‌ல‌ன‌ளிக்காத‌ இந்த‌ப்போரினால் கிடைக்கும் ப‌ல‌ன் யாருக்கு‌? எந்த‌ ம‌த‌தீவிர‌வாத‌க்குழுக்க‌ளை ஒழித்துக்க‌ட்ட‌ போர் ந‌ட‌த்த‌ப்ப‌டுமோ அந்த‌ ம‌த‌தீவிர‌வாத‌க்குழுக்க‌ளுக்கு உள‌விய‌ல் ரீதியிலான‌ ப‌ல‌ன்க‌ளை கொடுக்கும். குண்டுக‌ளால் கொன்று, எஞ்சியிருக்கும் ம‌க்க‌ளை விலையேற்ற‌த்தினால் கொல்லும் இந்த‌ப்போரினால் இர‌ண்டு நாடுக‌ளுக்கும் த‌ள‌வாட‌ங்க‌ளை விற்கும் அமெரிக்காவின் லாக்ஹீட்போன்ற‌ நிருவ‌ன‌ங்க‌ள் தான் கொள்ளை லாப‌ம் பார்க்கும். அத‌னால்தான் எல்லோரையும் முந்திக்கொண்டு தாக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என‌ அறிவிக்கிறார் ஒபாமா, அதோடும‌ட்டும‌ன்றி சீனாவைக்க‌ட்டுப்ப‌டுத்தும் தெற்காசிய‌ப் பிராந்திய‌க் க‌ண்ணோட்ட‌மும் அமெரிக்காவுக்கு உண்டு என்ப‌து த‌னிக்க‌தை.

 

     போர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு மாறாக‌ இந்தியா பாக்கிஸ்தான் இடையே நெருக்க‌த்தை அதிக‌ரிப்ப‌த‌ன் மூல‌மே ம‌த‌ தீவிர‌வாத‌க்குழுக்க‌ளை த‌னிமைப்ப‌டுத்த‌ முடியும். இதுவ‌ரை ஏற்ப‌ட்ட‌ இந்தியா பாக்கிஸ்தான் ந‌ல்லிண‌க்க‌மெல்லாம் வ‌ர்த்த‌க‌த்தை முன்வைத்தே ந‌ட‌ந்த‌ன‌. ஆண்டொன்றுக்கு நாற்ப‌தாயிர‌ம் கோடிக்குமேல் வ‌ர்த்த‌க‌ம் ந‌ட‌த்தும் த‌ர‌குமுத‌லாளிக‌ளின் க‌ன‌வுக‌ளினூடாக‌வே ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுவ‌ந்த‌ ச‌மாதான‌ முய‌ற்சிக‌ள் மாற்ற‌ப்ப‌ட்டு ம‌க்க‌ள் ந‌ல‌ நோக்கில் உற‌வுக‌ள் மேம்ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டும். ர‌யில் விடுவ‌து ப‌ஸ் விடுவ‌து என்று சென்டிமென்ட் அர‌சிய‌லாக‌ ந‌ட‌க்கும் உற‌வுக‌ளைவிட‌ ராணுவ‌ செல‌வுக‌ளை குறைக்கும் நோக்கில் செய‌ல்ப‌ட‌வேண்டும். அதும‌ட்டும‌ல்லாம‌ல் இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் நீடிப்ப‌த‌ற்கு முன்தேவையாய் இருக்கும் இந்துப்பாசிச‌வெறி முற்றிலும் த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும். அதுவ‌ரை இதுபோன்ற‌ தாக்குத‌ல்க‌ளை த‌விர்த்துவிட‌ முடியாது.

 

     ஆனால் இவைக‌ளெல்லாம் இந்திய‌ அர‌சோ பாக்கிஸ்தானிய‌ அர‌சோ செய்யாது செய்ய‌வும் விடாது என்ப‌து தான் கால‌ம் காட்டும் உண்மைக‌ள். இய‌ற்கை சீற்ற‌மென்றாலும், வ‌லிந்து திணிக்க‌ப்ப‌டும் போர்க‌ள் என்றாலும் ச‌ப்புக்கொட்டிக்கொண்டு லாப‌ம் பார்க்க‌த்துடிக்கும் முத‌லாளித்துவ‌, உல‌க‌ம‌ய‌ சிந்த‌னைக‌ளை மாற்றாம‌ல் இவைக‌ளை சாத்திய‌ப்ப‌டுத்த‌முடியாது என்ப‌தை ம‌க்க‌ள் உண‌ர‌வேண்டும். அது தான் தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளிலிருந்து ம‌ட்டும‌ல்லாம‌ல் பொருளாதார‌ தாக்குத‌ல்க‌ளிலிருந்தும் ம‌க்க‌ளை காக்கும் ஒரே வ‌ழி.

சுவனத்தென்றலுக்கு மறுப்பு

     அண்மையில் சுவனத்தென்றல் வலைப்பக்கத்தை எதேச்சையாக பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் செங்கொடி.மல்டிப்பிளை தளத்தில் “காலம் காத்திருக்கிறது வாருங்கள் முஸ்லீம்களே” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைக்கு பின்னூட்டமாக இடப்பட்ட தகவல்கள் எனப்புரிந்தது. அதாவது நண்பர் டென்தாரா சுவனத்தென்றல் தளத்திலிருந்து பெற்ற தகவல்களைத்தான் தனது பின்னூட்டமாக இட்டிருந்தார் என்பது புரிந்தது. எனவே அங்கு கீழ்காணும் பின்னூட்டத்தை இட்டேன்.

 

நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். டார்வின் கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைக்கு உங்களின் பதிவை சிலர் பின்னூட்டமாக இட்டிருந்தனர் (அது உங்கள் தளத்திற்கு வருகை தந்தபின்னர்தான் புறிந்தது) அவைகளுக்கு நான் தக்க பதில் கூறியிருக்கிறேன். வாருங்களேன் விவாதிப்போம்.

தோழமையுடன்,செங்கொடி.

 

பின் அதை மறந்தும் விட்டேன்.  அவர் செங்கொடி.மல்டிப்பிளை தளத்தில் எந்த பின்னூட்டமோ கேள்வியோ வைக்கவில்லை. பின்னர் அவருடைய தளத்தில் ஏதாவது பதில் இடப்பட்டுள்ளதா என்பதை காணும் ஆவலில் சுவனத்தென்றல் தளத்திற்கு சென்றேன். அங்கு கடந்த October 26, 2008 தேதி உயிரைப்பற்றி சில ருசிகரத்தகவல்கள் எனும் தலைப்பில் ஒரு பதிவிடப்பட்டிருந்தது. அதில் கடைசியாக நண்பர் செங்கொடி அவர்களுக்கும் இதில் பதில் இருக்கிறது எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரை நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கும் கொடுத்திருந்த விளக்கங்களுக்கும் துளியும் தொடர்பில்லாமல் இருக்கிறது என்பதையும், என்னுடைய பெயரைக்குறிப்பிட்டு எழுதிவிட்டு என்னிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்தது எந்தவகையில் நாகரீகம் வாய்ந்தது என்பதையும் அந்த தளத்திடமும் அதன் வாசகர்களிடமும் விட்டுவிட்டு உயிரைப்பற்றிய சில ருசிகரத்தகவல்கள் என்ற கட்டுரையை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அந்த கட்டுரையை இங்கே படிக்கலாம்.

 

     அந்தக்கட்டுரை இரண்டு அம்சத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தது. ஒன்று உயிர் என்னும் பொருள் அடுத்தது கரு எனும் பிண்டத்தின் உயிர்த்தன்மை.

இதன்மூலம் உயிர் இருக்கிறது என்பது எவ்வளவு மெய்யான ஒன்றோ அது போல கடவுள் இருக்கிறார் என்பதும் மெய்யான ஒன்று என்று சுற்றிவளைத்து நம்பச்சொல்கிறார். ஒருவனுக்கு உயிர் இருக்கிறது என்றால் அதன் பொருள் செயல் படுகிறான் என்பது தானேயன்றி அவ‌ன் செய‌ல் ப‌டுகிறான் என்ப‌தால் உயிர் எனும் பொருள் அவ‌னுக்குள் இருக்கிற‌து என்ப‌த‌ல்ல‌. உயிர் என்ப‌து பொருளைக்குறிப்ப‌த‌ல்ல‌ த‌ன்மையை குறிப்ப‌து. உயிர் இருக்கிற‌து, உயிர் போய்விட்ட‌து என்று குறிப்பிடுவ‌தெல்லாம் சொல்வ‌ழ‌க்கேய‌ன்றி அத‌ன் மெய்யான‌ பொருளில‌ல்ல‌. காய்ச்ச‌ல் இருந்த‌து, காய்ச்ச‌ல் போய்விட்ட‌து என்றெல்லாம் சொல்கிறோம், காய்ச்ச‌ல் என்ப‌து பொருளா? நோயின் த‌ன்மை. அதுபோல‌த்தான் உயிர் என்ப‌தும். புல‌னுக்கு அப்பாற்ப‌ட்ட‌து என்ப‌தெல்ல‌ம் ம‌த‌வாதிக‌ளின் உருவேற்ற‌ல் (உயிர் ப‌ற்றி விரிவாக‌ டென்தாராவுக்கு ம‌றுப்பு என்ற‌ க‌ட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்) புல‌ன்க‌ளுக்கு புல‌ப்ப‌ட‌வில்லையெனின் அந்த‌ப்பொருள் இல்லை என்ப‌துதான் பொருள். ஏதாவ‌து ஒரு வித்த‌த்தில் த‌ன்னை வெளிப்ப‌டுத்திக்கொள்ளாத‌ பொருள் உண்டா உல‌கில்? இருந்தால் கூறுங்க‌ள். அல்ல‌து உட‌லுக்கு வெளியிலிருந்து உயிர் வ‌ருகிற‌து, உட‌லிலிருந்து வெளியில் செல்கிற‌து என்ப‌தையாவ‌து நிரூபியுங்க‌ள். க‌ருமுட்டையிலேயே உயிர் இருக்கிற‌து என்று இறை ம‌றுப்பாள‌ர்க‌ள் கூறுவ‌தாக‌ நீங்க‌ளாக‌வே ஒரு க‌ற்ப‌னையான‌ முடிவுக்கு வ‌ந்து அத‌ன் வ‌ழியே உல‌கின் முத‌ல் சோத‌னைக்குழாய் குழ‌ந்தைக்கு மூன்று ஆண்டுக‌ள் க‌ழித்து த‌ங்கை பிற‌ந்த்தைக்கூறி ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டு அதை இறைவ‌னின் ம‌க‌த்துவ‌மாக‌ காண்பிக்க‌ முய‌லுகிறீர்க‌ள். இது சாதார‌ண‌மாக‌ அன்றாட‌ம் ந‌டைபெறும் நிக‌ழ்ச்சிதான். விதைக‌ளை ப‌த‌ப்ப‌டுத்தி வைத்திருந்து பின் விதைப்ப‌தை நீங்க‌ள் கேள்விப்ப‌ட்ட‌தில்லையா? வெளியில் வைத்திருந்தால் அழுகி வீணாகிவிடும் த‌க்காளி குளிர்பெட்டிக்குள் வைத்திருந்தால் கெட்டுப்போகாம‌ல் இருப்ப‌தில்லையா? விந்தை த‌னியாக‌ பாதுகாக்கிறார்க‌ள் பெண்ணின் முட்டையை பாதுகாக்கிறார்க‌ள், இர‌ண்டையும் இணைத்தும் பாதுகாக்க‌லாம். க‌ருப்பையில் தாயின் உட‌லிலிருந்து புர‌த்த‌த்தின் உத‌வியுட‌ன் உருப்புக்க‌ளையும் இய‌க்க‌த்தையும் பெற்று உயிராக வெளியேறுகிற‌து.வ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌பின் த‌ன் அசைவை நிருத்திக்கொண்டால் குழ‌ந்தை இற‌ந்தே பிற‌ந்த‌து என்று கூறும் ம‌க்க‌ள் வ‌ள‌ர்ச்சிய‌டைவ‌த‌ற்கு முன்பே அழிந்துவிட்டால் க‌ரு க‌லைந்துவிட்ட‌து என்று சொல்வார்க‌ள். இந்த‌ இர‌ண்டு சொற்க‌ளின் பொருள் வித்தியாச‌த்தை புறிந்திருந்தால் ருசிக‌ர‌த்த‌க‌வ‌ல்க‌ள் எழுதும் தேவை உங்க‌ளுக்கு இருந்திருக்காது. ம‌ருத்துவ‌ வ‌ல்லுன‌ர்க‌ளின் உத‌வியும் தேவைப்ப‌ட்டிருக்காது.

 

     ம‌ர‌ணிப்ப‌த‌ற்கு முன்னால் அதாவ‌து உங்க‌ள் ந‌ம்பிக்கையின்ப‌டி இறைவ‌ன் உயிரைக்கைப்ப‌ற்றுவ‌த‌ற்ற்கு முன்னால் மூளைச்சாவு என்ற‌ நிலை ஏற்ப்ப‌ட்டுவிட்டால் அந்த‌ ம‌னித‌ரிட‌மிருந்து உருப்புக்க‌ளை எடுத்து வேறு ம‌னித‌னுக்கு பொருத்த‌லாம் என்று ம‌ருத்துவ‌ நிபுண‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள். இத‌ய‌ம் துடிப்ப‌தை க‌ட்டுப்ப‌டுத்தும் ப‌குதியை த‌விர‌ மூளை ம‌ற்ற‌ அனைத்துப்ப‌குதியின் செய‌ல்பாட்டை இழ‌ந்துவிட்டால் உயிர் போவ‌துவ‌ரை காத்திருக்க‌வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. இந்த‌ உட‌லிலிருந்து உருப்புக‌ளை பெற்று வேறு ம‌னித‌னுக்கு பொருத்தி அவ‌னை அந்த‌ உட‌ல் செய‌ல்க‌ளை நிருத்தும்வ‌ரை வாழ‌வைக்க‌லாம். காய்த‌ல் உவ‌த்த‌லின்றி இதைப்ப‌ற்றி நீங்க‌ள் சிந்தித்துப்பாருங்க‌ளேன்.

 

 

மாலுமியின் க‌தை

அண்மையில் ந‌ண்ப‌ர் மாலுமி ஒரு க‌தையை குறிப்பேடில் எழுதியிருந்தார். ப‌திலுக்கு நானும் அவ‌ர் க‌தையை முடித்துவைத்திருந்தேன். ஆனால் குறிப்பேட்டில் நீள‌மாக‌ போவ‌தால் அதை ம‌றுப்புரையில் கொண்டுவ‌ந்துள்ளேன்.(செங்கொடி.மல்டிபிளை தளத்தில்)

 

maalumi wrote on Nov 9, edited on Nov 9

 

தாங்கள் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்தால் இதற்கு விளக்கம் தரவும்

இறைவன் இருந்தால் நல்லா இருக்கும் !

இறைவன் இருந்தால் நல்லா இருக்கும்கமலஹாசனின் தசவதாரக் கான்செப்டைக் கேட்டுவிட்டு இறைவன் ஒரு சாதாரண மனிதனாக மாற்றிக் கொண்டு கீழே வருகிறார். அருகில் இருக்கும் ஆலயத்தின் மணி ஓசைக் கேட்க, தன்னை அழைப்பதை உணர்கிறார். உள்ளே நுழைகிறார், பக்தர்களுடன் வரிசையில் நிற்கிறார், அர்சகர் இவருடைய அருகில் செல்லும் போது

இறைவன் : நான் பகவான் வந்திருக்கேன்

அர்சகர் : நட்சத்திரம் சொல்லுங்கோ

இறைவன் : நட்சத்திரமா ? எனக்கு பிறப்பே இல்லை

அர்சகர் : லோகத்துல பிறப்பு இல்லாதவர் இருப்பாரா ? அநாதையா ? பரவாயில்லை…பகவான் பேருக்கு அர்சனைப் பண்ணிடுறேன்… அப்பறம் ஷேமமாக இருப்பேள். போய் அர்சனை தட்டும் சீட்டும் வாங்கி வாங்கோ

*******

இறைவன் வந்த வழியாக திரும்பி நடக்கிறார், அருகே வாசலில் செருப்பு பாதுகாப்பாளரிடம் செல்கிறார்

பாதுகாப்பாளர் : சாமி இன்னா வோணும்

,

இறைவன் : நான் தான் சாமி

பாதுகாப்பாளர் : உன் பேரு சாமியா, ரொம்ப களைச்சு போய் இருக்கே…தண்ணி குடிக்கிறியா

?

இறைவன் : அதெல்லாம் வேண்டாம்

பாதுகாப்பாளர் : வேற இன்னா வோணும் ? வீட்டாண்ட போன பையனைக் காணும், சித்த இப்பிடி குந்திகினு இரு யாராவது செருப்புப் போட்டால் வாங்கி வையி, வயித்த கலக்குது போய்டு வந்துடுறேன் என்று சொல்லி கள்ளாவைப் பூட்ட சாவியைத் தேடுகிறார்

இறைவன் எதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்

பாதுகாப்பளர் : ஐயே…இது பூட்ட கேசு

*******

அங்கே அருகில் இருந்த க்ளினிக்கைப் பார்க்கிறார், டாக்டர் பத்மனாபன் என்று போட்டிருந்தது

,

மூடப் போகிற நேரம் யாரும் பேசண்ட் இல்லை, இறைவன் டாக்டரைப் பார்க்கனும் என்றதும் ஒரு அம்மா உள்ளே போகச் சொல்லுது. டாக்டர் பக்தி பழமாக இருந்ததுடன், அன்று பிஸ்னஸ் முடியும் நேரம் என்பதால் சாமி படத்திற்கு கற்பூரம் காட்ட ஆயத்தமாகும் வேளையில், இறைவனைப் பார்த்துவிடுகிறார்

டாக்டர் : உட்காருங்க… உங்க பேரு

இறைவன் : நான் தான் இறைவன்

டாக்டர் ; நல்ல பெயர், இறையன்பு, இறையடியான் போல உங்க பேரு இறைவனா

?

இறைவன் : ஆமாம்

டாக்டர் : உங்களுக்கு என்ன செய்து

இறைவன் : எனக்கு ஒண்ணும் செய்யல, நான் தான் எல்லோருக்கும் இறைவன்

டாக்டர் இறைவனின் கையை நீட்டச் சொல்லி நாடியைப் பார்க்கிறார், மனதுக்குள் எல்லாம் சரியாகத் தானே இருக்கு…பின்னே… யோசித்தவாறு

டாக்டர் : நீங்க தப்பான டாக்டரிடம் வந்திருக்கிங்க, பக்கத்து தெருவுல பரந்தாமன் என்று ஒருவர் இருக்கிறார், எனக்கு நண்பர் தான் போன் போட்டுச் சொல்கிறேன், மன நல சிகிச்சை யெல்லாம் அவர் தான் கொடுப்பார்

*******

இறைவன் ஏமாற்றமாக அங்கிருந்து கிளம்ப…..அருகில்ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர சுவாமிஜி சரணாகதி ஆஸ்ரமம்” என்ற பெயர் முகப்பில் தாங்கி இருந்த ஒரு ஆசிரமம் போன்ற இடம், பஜனைப் பாடல்கள் ஒலிக்க பத்தி மணம் கமழந்தது….அந்த வீட்டிற்குள் நுழைகிறார்…”

எல்லோரும் பக்தி பெருக்குடன் மெய் மறந்த நிலையில் உணர்ச்சி வயப்பட்டு பாடிக் கொண்டு இருக்கின்றனர்

ஆஸ்ரம ஸ்வாமிஜி , எல்லோரையும் சகஜ நிலைக்குத் திரும்பச் சொல்கிறார். வாசலில் நிற்கும் இறைவனை சைகையால் அங்கே ஓரமாக அமரச் சொல்லிவிட்டு பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்…..காமமே கடவுள்….காமத்தை முறையாக பெறுபவனும்…தருபவனும் இறைவனை தரிசிக்கிறான்…இல்லை இல்லை…இறைவனே அவன் தான்…இறைவனாகவே ஆகுகிறான்ரஜினிஸ் சாமியார் ரேஞ்சிக்கு பேச்சு சென்று கொண்டு இருக்கிறது

,

அருகில் இருந்தவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார் இறைவன்

பக்தர் : புதுசா வந்திருக்கிங்களா

?

இறைவன் : ஆமாம்

பக்தர் : யார் தேடினாலும் கிடைக்காத இறைவனின் அவதாரம் தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர ஸ்வாமிகள்… இன்று இவர் இங்கே ரகசியமாகத்தான் வந்திருக்கிறார்…சொல்லிவிட்டு வந்தால் பக்தர் கூட்டம் கட்டுப்படுத்த முடியாது…குறிப்பாக பெண்களின் கூட்டம்….பகவான் அல்லவா

?

இறைவன் : நான் கூட இறைவன் தான்

பக்தர் : எங்க வந்து என்ன சொல்றிங்க..,பாபம் பண்ணிடாதிங்க…நாமெல்லாம் மனிதர்கள்…அவர் ஒருவர் தான் பகவான்… அவர் தேஜஸ் மின்னுவதைப் பாருங்கள்

இறைவன் பார்த்தார், நியான் மற்றும் சோடியம் விளக்கு புண்ணியத்தில் சாமியாரின் தேஜஸ் மின்னியது

சாமியாரின் அருளுரையை கேட்டு பரவசமடைந்தவர்கள்

சர்வேஸ்வர பகவானே….நாங்கள் ஜென்மம் தொலைத்தோம்…புண்ணியம் பெற்றோம்” என்கிறார்கள்

நல்ல வேளை ஒரு பெண்வேடம் எடுத்து நான் வரவில்லை…தப்பினேன் அங்கிருந்து மெதுவாக வெளியேறினார்…. இறைவன்

*******

அருகில் இருந்த இறைமறுப்பாளர்களின் தலைவரின் பெரிய பங்களா போன்ற இல்லத்துக்குள் அனுமதி கேட்டு காத்திருந்து உள்ளே செல்கிறார்

இறைமறுப்பாளர் : என்ன விசயமாக வந்திருக்கிங்க

இறைவன் : இறைவன் உண்டு, நான் தான் இறைவன்

இறைமறுப்பாளர் : முதலில் நீங்கள் சொல்வது பொய், அப்படி ஒன்று இல்லவே இல்லை

இறைவன் : நான் தான் உங்கள் எதிரில் இருக்கிறேனே, நான் உண்மை

இறைமறுப்பாளர் : அப்படியென்றால் ஒன்று கேட்கிறேன்….. ஒருபக்கம் பணக்காரர்கள் இருக்கிறார்கள், ஏழைகள் இருக்கிறார்கள் ஏற்றத் தாழ்வு ஏன் ? ஏழைகள் வஞ்சிக்கப்பாடுவது ஏன்

?

இறைவன் : உங்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பு 500 கோடி…நீங்கள் நினைத்தால் ஒரு லட்சம் ஏழைகளுக்கு உதவி இருக்கலாம், 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து இருக்கிறீர்கள், இன்றைய தேதியில் எதிர்காலத்தில் உங்கள் பேரனுக்கு வாரிசு இருக்குமா இல்லையா என்றே உங்களுக்கு தெரியாது…உங்கள் சொத்துக்களெல்லாம் 4 ஆவது தலைமுறையால் தின்றே அழிக்கப்படுமா என்று கூட உங்களுக்கு தெரியாது, இருந்தாலும் பேராசையால் சொத்துக்களை குவித்தே வருகிறீர்கள், நீங்கள் மனது வைத்தால் ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்….பணக்காரர்களின் சுரண்டலால் தானே ஏழை பரம ஏழை ஆகிறான்

இறைமறுப்பாளர் : இன்கெம்டாக்ஸ் ஆலுவலத்திலிருந்து வந்திருக்கிங்களா ? சொத்துவிபரமெல்லாம் சரியாகச் சொல்றிங்க…நாளைக்கு ஆடிட்டரிடம் பேசுங்க…இப்ப கிளம்புங்க

*******

அங்கிருந்து கிளம்புகிறார்… அருகே ரயில் தண்டவாளம்

ஒருவர் பரபரப்புடன் ரயிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்… ரயில் நெருங்கவும் தண்டாவளத்தில் பாய முயன்றவரை இழுத்துவிட்டு…. தனது சக்தியால் அவரை சாந்தமடைய வைத்துவிட்டு

இறைவன் : நான் இறைவன் சொல்லுங்க உங்களுக்கு என்ன கஷ்டம்…

தற்கொலை ஆசாமி : நகை பணமெல்லாம் சூதாட்டத்தில் போய்விட்டது கடன் தொல்லை அதனால் தான் தற்கொலை செய்ய வந்தேன்…நீங்கள் இறைவன் என்றால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுங்கள்…இல்லை என்றால் என்னை சாகவிடுங்கள்.

இறைவன் : நீங்கள் புத்திக் கெட்டுப் போய் செய்த பிழையெல்லாம் என்னால் எப்படி சரிசெய்ய முடியும்… அப்படியே செய்தாலும் மீண்டும் சூதாட்டத்தில் இறங்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்

?

தற்கொலை ஆசாமி : உதவ முடிந்தால் இருங்கள்…இல்லை என்றால் போய்விடுங்கள்… எனக்கு உங்கள் உபதேசம் தேவையில்லை… என்னைப் பொறுத்து இறைவனே இல்லை என்று முடிவு செய்து கொள்கிறேன்

*******

அங்கிருந்து கிளம்ப

தூயத் தமிழில் ஒருவர் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு நடந்து செல்ல அவரின் அருகில் சென்று இறைவன்

இறைவன் : நானே இறைவன் அனைத்தையும் ரட்சிப்பவன்

செந்தமிழர் : ரட்சிப்பவன் என்பது வடசொல், காப்பவன் என்று சொல்லி இருக்க வேண்டும், செந்தமிழ் பேசாத நீங்கள் இறைவனாக இருக்க முடியாது.

திடுக்கிட்ட கடவுள்… சொல்லிக் கொள்ளமால்

*******

அங்கே, அருகில் ஒரு ஜோதிடரின் வீட்டை அடைகிறார்

இறைவன் : நான் இறைவன் வந்திருக்கிறேன், உண்மையான இறைவன்

ஜோதிடர் : எனக்கு சனி திசையின் ஆரம்ப நாட்கள் நடக்கிறது, இப்போது இறைவன் எனக்கு முன்பு வரும் கிரக அமைப்பு கொஞ்சம் கூட இல்லை. பைத்தியகாரனுக்கு நான் ஜோதிடம் பார்ப்பது இல்லை…கிளம்புங்க

கிளம்பினார்

,

*********

வழியில்

,

ஒரு தாயின் இடுப்பில் இருந்த குழந்தை இறைவனைப் பார்த்து முகம் மலர… மிக்க மகிழ்ச்சியுடன் டாட்டா சொல்லியது

சும்மா இரு…. உங்க அப்பாவுக்கு காட்டச் சொன்னால் காட்ட மாட்டே…..கண்டவங்களுக்கும் டாட்டா காட்டனுமா ?” அந்த தாய் அதனை அதட்டினாள்….இறைவன் அதைக் கேட்டதைத் தெரிந்து சிறிது சங்கடமாக நெளிந்தாள் அந்த தாய்

குழந்தையின் முகத்தில் இருந்த புன்னகையில் கிடைத்த திருப்தியுடன் இறைவன் மறைந்துவிட்டார்.

**********

இறைவனைத் தேடுகிறவர்கள் அனைவருமே….ஓவியத்திலும் கல்லிலும் வடித்திருப்பது போன்று இறைவன் இருப்பான் என்றே நினைக்கிறார்கள்.
சாதரண மனிதனாக வெறும் கையோடு வந்தால் எவரும் உணரக்கூடிய நிலையில் கூட இல்லை. அப்படியே முருகனாகவோ வேறு எதோ ஒரு கடவுளாக முன் தோன்றினாலும் போட்டிருக்கும் நகையெல்லாம் ஒரிஜினலா என்று அறிந்து கொள்ளவே ஆர்வம் காட்டுவர், இவர்கள் துயரப்படும் போது சரியான நேரத்தில் உதவி வரவில்லை என்றால் இறைவன் இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றே என்பர்.

இறைவன் இல்லை என்போரும்….தெரிந்தே செய்யும் தங்களின் அடாத செயல் எவருக்கும் தெரியாமல் இருந்தால் தங்களுக்கு தண்டனை இல்லை…இன்று வரை நன்றாகத் தானே வாழ்கிறோம்… நம்மை யார் தடுக்கிறார்கள் ? ஒருவரும் இல்லையே ! என்ற சுய கேள்வி / பதிலில் இறைவனின் இருப்பை பலமாகவே மறுக்கிறார்கள்

maalumi

 

senkodi wrote on Nov 10

 

நண்பர் மாலுமி

,

இறைவன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற வாக்கியத்தை ஒருவன் பயன்படுத்தினால் இறைவன் இருப்பு குறித்த தன்னுடைய கருத்தை அவன் மறைக்கிறான் என்பது பொருள்.

இறைவன் குறித்து நீங்கள் எழுதியுள்ள கதை முழுமையடையாமல் இருக்கிறது. இதோ நான் முழுமையடையச்செய்கிறேன்.

அந்த இறைவன் தற்போது ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டின் வீட்டிற்கு சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.

அமருங்கள், உங்கள் பெயர் தான் கடவுள் என்பதா? :கம்யூனிஸ்ட்

ஆம் : கடவுள்

இந்த ஏழை பணக்காரன் குறித்து…..? :கம்யூனிஸ்ட்

பணக்காரர்கள் சொத்து ஆசையால் பகிர்ந்தளிக்க மறுப்பதே ஏழ்மையின் காரணம். : கடவுள்

 

ஏழையானாலும் பணக்காரனானாலும் அவர்களை செயல் பட வைப்பது

நீங்கள் தானே

, உம்மையல்லாது அவர்களால் தனித்து செயல் பட முடியுமோ? :கம்யூனிஸ்ட்

அது…வந்து….. : கடவுள்

சரி போகட்டும், நீங்கள் தான் காடு, மலை, பூமி ஏன் மொத்த அண்டவெளியையும் படைத்தது நீங்கள்தான் என்று பூமியில் மனிதர்கள் பிதற்றித்திரிகிறார்களே, மெய்யாகவே நீங்கள் தான் மொத்த அண்டவெளியையும் படைத்தீர்களென்றால் அப்படி படைப்பதற்கு முன்னால் எங்கு இருந்தீர்கள்? :கம்யூனிஸ்ட்

கடவுள் என்ற பெயர்கொண்ட அவர் காற்றில் மறைந்து காணாமல் போய்விட்டார்.

நண்பரே கற்பனை கதைகளுக்கு விளக்கம் கேட்பதைவிட உங்கள் மூடநம்பிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு நேரடியாக பூமியையும், மக்களையும் பாருங்கள், உங்களிடமிருந்து கடவுள் காணாமல் போய்விடுவார்.

 

உங்கள் வாக்கிய அமைப்பு நீங்கள் ஒரு முஸ்லீம் என்று காட்டுகிறது, உள்ளே வந்து மறுப்புரைகள் (மதம்)எனும் தலைப்பிலுள்ள பதிவுகளுக்கும், அதன் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முயலுங்களேன்.

 

 

 

தோழமையுடன்
செங்கொடி

பெண்ணியமும் இஸ்லாமும்

image001 

    தோழர் நந்தன் அவர்களின் பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் பொருட்டு நண்பர் டென்தாரா இஸ்லாத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு உயர்ந்தது என்று சில பைபிள் வசனங்களை ஒப்பிட்டுக்காட்டியிருந்தார். மெய்யாகவே இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளதா? ஆண்களுக்கு சமமாய் பெண்களை நடத்துகிறதா? மெய்யாகவே இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா? கௌரவப்படுத்தியிருக்கிறதா?

 

     பொதுவாக இஸ்லாமியவாதிகள் மூன்றுவிதமான சிறப்புகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிடுவார்கள். ௧)சொத்துரிமை ௨)விவாகரத்துரிமை ௩)ஜிஹாப் எனும் பெண்ணாடை

 

     சொத்துரிமை: பெண்களை பொருளாதார ரீதியில் ஒரு பொருட்டாக மதிக்காதிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது என்பார்கள். குரானில் பெண்களுக்கு சொத்துரிமை குறித்த வசனங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி? ஆணில் பாதி. ஆண் எவ்வளவு பெறுகிறானோ அதில் பாதிதான் பெண்ணுக்கு. குரானின் நான்காவது அத்தியாயம் 11வது வசனம் இப்படிக்கூறுகிறது. “இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்…..” ஒரே பெற்றோருக்கு பிறந்த ஆண் பெண் பிள்ளைகளில் பேதம் பார்க்கும் இந்த குரானின் வசனத்திற்கு நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள், சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றொரை பாதுகாக்கும் கடமை ஆண்களுக்குத்தான் உண்டு எனவேதான் ஆணுக்கு இரண்டு பங்கு, சகோதரிகளின் திருமணத்தின் போதும் அதற்குப்பிற‌கும் சகோதரனே அதிகப்பொறுப்பேற்கிறான் எனவேதான் அவனுக்கு இரண்டு பங்கு, குடும்பச்சொத்து வளர்வதற்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள் எனவேதான் அவர்களுக்கு இரண்டு பங்கு. ஆனால் இதுபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ குரான் ஆணுக்கு இர‌ண்டு ம‌ட‌ங்கு கொடுக்க‌ச்சொல்ல‌வில்லை. மேற்கூறிய‌ அந்த‌ வ‌ச‌ன‌ம் இப்ப‌டி முடிகிற‌து. “…..உங்க‌ள் பெற்றோர் ம‌ற்றும் பிள்ளைக‌ளில் உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள். அல்லாஹ் விதித்த‌ க‌ட‌மை. அல்லாஹ் அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிறான்” அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிற‌ அல்லாதான் க‌டைமையாக‌ விதித்திருக்கிறானேய‌ன்றி ஆண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌. அதையும் இந்த‌ வ‌ச‌ன‌ம் தெளிவாக‌வே சொல்லிவிடுகிறது, உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள் என்ப‌த‌ன் மூல‌ம். இருந்தாலும் விள‌க்க‌ம் கூறுப‌வ‌ர்க‌ளை கேட்க‌லாம், பெண்க‌ளே பெற்றோரை பாதுகாக்கும் குடும்ப‌ங்க‌ளில், ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌ங்க‌ளிலும் அத‌ற்குப்பிற‌கும் பெண்க‌ளே பெறுப்பேற்கிற‌ குடும்ப‌ங்க‌ளில், குடும்ப‌ச்சொத்து வ‌ள‌ர்வ‌த‌ற்கு பெண்க‌ள் ப‌ங்க‌ளிக்கின்ற‌ குடும்ப‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு இர‌ண்டு ப‌ங்கு கொடுக்க‌லாமா? வேண்டாம் ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் ச‌ம‌மாக‌ கொடுக்க‌லாமா? பெற்றோரின் சொத்தை பிரிப்ப‌தில் இந்த‌ வித்தியாச‌ம் காட்டும் குரான் க‌ண‌வ‌ன் ம‌னைவி சொத்து விச‌ய‌த்தில் என்ன‌ கூறுகிற‌து?

 

     உங்க‌ள் மனைவிய‌ருக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் பாதி உங்க‌ளுக்கு உண்டு. அவ‌ர்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால்பாக‌ம் உங்க‌ளுக்கு உண்டு…..உங்க‌ளுக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால் பாக‌ம் உங்க‌ள் ம‌னைவிய‌ருக்கு உண்டு. உங்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் எட்டில் ஒருபாக‌ம் அவ‌ர்க‌ளுக்கு உண்டு….”குரான்4:12 புரிகிற‌தா இந்த‌ வித்தியாச‌ம்? எடுத்துக்காட்டாக‌ க‌ண‌வ‌னுக்கும் ம‌னைவிக்கும் த‌னித்த‌னியே 100ரூபாய் சொத்து இருப்ப‌தாக‌ கொள்வோம். குழ‌ந்தை இல்லாத‌ நிலையில், ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 50ரூபாய் சொத்து கிடைக்கும், க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 25ரூபாய் சொத்துதான் கிடைக்கும். குழ‌ந்தை இருக்கும் ப‌ட்ச‌த்தில் ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 25ம் க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 12.50ம் கிடைக்கும். இதில் இன்னொரு விச‌ய‌ம் என்ன‌வென்றால் ஆணுக்கு நான்கு ம‌னைவிவ‌ரை திரும‌ண‌ம் செய்ய‌ அனும‌தி இருப்ப‌தால் க‌ண‌வ‌னிட‌மிருந்து ம‌னைவிக்கு போகும் சொத்து நான்காக‌ பிரியும். ம‌னைவியிட‌மிருந்து க‌ண‌வ‌னுக்கு வ‌ரும் சொத்து நான்கு ம‌ட‌ந்காக‌ உய‌ரும். இது ப‌டிப்ப‌டியாக‌ பெண்க‌ளிட‌முள்ள‌ சொத்தை ஆண்க‌ளுக்கு போய்ச்சேர‌வே வ‌ழிவ‌குக்கிற‌து. இதில் எங்கே இருக்கிற‌து ச‌ம‌த்துவ‌ம்?

 

     இந்த‌ இட‌த்தில் சில‌ர் ஒரு கேள்வி எழுப்ப‌லாம். பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லாத‌ கால‌த்தில் இஸ்லாம் பெண்க‌ளுக்கு சொத்துரிமையை குறைவாக‌வேனும் வ‌ழ‌ங்கியிருக்கிற‌தே இது போற்ற‌ப்ப‌ட‌வேண்டிய‌தில்லையா? இஸ்லாத்திற்கு முன்பு பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லை இஸ்லாம்தான் அதை வ‌ழ‌ங்கிய‌து என்று சொல்வ‌து மோச‌டியான‌து. முகம‌து ந‌பியின் முத‌ல் ம‌னைவி பெய‌ர் க‌தீஜா. ம‌க்கா ந‌க‌ரின் மிக‌ப்பெரும் செல்வ‌ந்த‌ர். அரேபியாவின் ப‌ல‌ப‌குதிக‌ளுக்கும் சென்று வியாபார‌ம் செய்ய‌ ப‌ல‌ வ‌ணிக‌ர்க‌ளை வேலைக்கு அம‌ர்த்தியிருந்த‌வ‌ர். அப்ப‌டி ஒருவ‌ர்தான் முக‌ம‌து ந‌பி. க‌தீஜாவின் செல்வ‌த்தோடு ஒப்பிட்டால் முக‌ம‌து ந‌பி ப‌ர‌ம‌ ஏழை. இவ‌ர்க‌ள் இருவ‌ரும் திரும‌ண‌ம் செய்து ப‌ல‌கால‌ம் க‌ழிந்த‌ பின்புதான் இஸ்லாத்தின் முத‌ல் வேத‌ வெளிப்பாடே வ‌ருகிற‌து. வ‌ர‌லாறு இப்ப‌டி இருக்கையில் எந்த‌ப்பொருளில் இஸ்லாம்தான் இல்லாதிருந்த‌ சொத்துரிமையை பெண்க‌ளுக்கு வ‌ழ‌ங்கிய‌து என்று கூறுகிறார்க‌ள். க‌தீஜா போல‌ பொருளிய‌ல் செல்வாக்குள்ள‌ ஒரு பெண்ணை 1400ஆண்டுக‌ள் க‌ட‌ந்த‌ நிலையில் இன்று காண‌முடிய‌வில்லை என்ப‌தே உண்மை.

 

     இவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ சொத்துக்க‌ளை பிரிப்ப‌தை விரிவாக‌ பேசும் அல்லாவுக்கு, முக்கால‌மும் உண‌ர்ந்த‌ எல்லாம் தெரிந்த‌ ஞான‌மிக்க‌ அல்லாவுக்கு த‌னிச்சொத்துடமைதான் உல‌க‌த்தின் அனைத்துப்பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் ஆணாதிக்க‌த்திற்கும் மூல‌கார‌ண‌ம் என்ப‌து தெரியாம‌ல் போன‌தேனோ? இல்லை இற‌ந்த‌த‌ற்குப்பின்னால் விண்ணில் கிடைக்க‌விருப்ப‌தாக‌ த‌ன்னால் ந‌ம்ப‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் சொர்க்க‌த்தை த‌னிச்சொத்துரிமையை ஒழித்து ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும்போதே ம‌ண்ணிலேயே பெற்றுவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌வா?

 

     விவாக‌ர‌த்துரிமை: பிடிக்காத‌ ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்ய‌முடியாம‌லும், வேறு திரும‌ண‌மும் செய்ய‌முடியாம‌லும் கொடுமைப்ப‌டுத்துவ‌தும் கொலை செய்வ‌தும் ந‌ட‌ந்து கொண்டிருக்கும் இந்த‌ நாட்க‌ளில், பெண்க‌ளுக்கேகூட‌ அந்த‌ உரிமையை வ‌ழ‌ங்கி பெண்க‌ளின் வாழ்வில் க‌ண்ணிய‌த்தையும் ம‌ல‌ர்ச்சியையும் ஏற்ப‌டுத்திய‌து இஸ்லாம். பெண்ணிய‌ம் ப‌ற்றி பேசும்போதெல்லாம் இஸ்லாமிய‌வாதிக‌ள் த‌வ‌றாம‌ல் எடுத்துவைக்கும் வாத‌மிது. இது மெய்தானா? ஆண்க‌ளுக்கு த‌லாக் என்றும் பெண்க‌ளுக்கு குலாஉ என்றும் இர‌ண்டுவித‌மான‌ விவாக‌ர‌த்துமுறைக‌ளை இஸ்லாம் சொல்கிற‌து. ஆண் த‌ன் ம‌னைவியை பிடிக்க‌வில்லையென்றால் மூன்றுமுறை த‌லாக் என்ற‌ வார்த்தையை சொல்லிவிட்டால் விவாக‌ர‌த்து ஆகிவிட்ட‌தாக‌ப்பொருள். இதை ஒரே நேர‌த்தில் சொல்ல‌ முடியாது, கால‌ இடைவெளிவிட்டு ஒவ்வொரு முறையாக‌ சொல்ல‌வேண்டும். முத‌ல் இர‌ண்டு முறை த‌லாக் சொன்ன‌பிற‌கு சில‌ நிப‌ந்த‌னைக‌ளுக்கு உட்ப‌ட்டு விரும்பினால் மீண்டும் சேர்ந்து கொள்ள‌லாம். ஆனால் மூன்று முறை கூறிவிட்டால் சேர‌முடியாது(ஆனால் மூன்று முறை அல்ல‌ முத்த‌லாக் என்ற‌ ஒற்றை வார்த்த‌யிலேயே ப‌ல‌ பெண்க‌ள் வாழ்க்கையிழ‌ந்து விர‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌துதான் ந‌டைமுறை) இதை ஆண் த‌ன் குடும்ப‌த்திற்குள்ளாக‌வே முடித்துக்கொள்ள‌முடியும். ஆனால் பெண் குலாஉ முறையில் க‌ண‌வ‌னை விவாக‌ர‌த்து செய்ய‌வேண்டுமென்றால் ஊர்த்த‌லைவ‌ரிட‌ம்(அல்ல‌து நீதிம‌ன்ற‌ம்)

முறையிட்டு பெற்றுக்கொண்ட‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுத்துவிட்டு விவாக‌ர‌த்தைப் பெற‌வேண்டும். ஏற்க‌ன‌வே நான்கு ம‌னைவிவ‌ரை வைத்துக்கொள்ள‌ (கூடுத‌லாக‌ எத்தைனை அடிமைப்பெண்க‌ள் என்றாலும்) அனும‌தி உள்ள‌ நிலையிலும் ஆண்க‌ளுக்கு கால‌ அவ‌காச‌ம் (மூன்று த‌லாக்)அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால் பெண்ணுக்கோ ஊர்த்த‌லைவ‌ரிட‌ம் முறையிட்டு திரும‌ண‌த்தின் போது பெற்ற‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுக்க‌ச் ச‌ம்ம‌தித்தால் அந்த‌க்க‌ண‌மே விவாக‌ர‌த்து. அதாவ‌து உரிமை கொடுப்ப‌தைபோல் கொடுத்துவிட்டு விளைவுக‌ளைக்கொண்டு பெண்க‌ளை மிர‌ட்டுகிற‌து. எச்ச‌ரிக்கை க‌ண‌வ‌னை எதிர்த்தால் ம‌ண‌வாழ்வையும் இழ‌ந்து, பெற்ற‌ ப‌ண‌த்தையும் இழ‌ந்து வேறு வாழ்க்கைத்துணையைத்தான் தேட‌வேண்டிய‌திருக்கும். என‌வே க‌ண‌வ‌னுக்கு அஞ்சி ந‌ட‌ந்துகொள். ஆணுக்கோ ம‌னைவிய‌ரும் அடிமைப்பெண்ணும் இருக்க‌ தெவைப்ப‌ட்டால் அடுத்த‌ ம‌ண‌முடிக்க‌ விவாக‌ர‌த்துப்பெற்ற‌ ம‌னைவி திரும்ப‌க்கொடுத்த‌ ப‌ண‌மும் இருக்க‌ எல்லா வ‌ச‌திக‌ளும் ஆணுக்குத்தான், பெண்ணுக்கு எதிர்கால‌ம் குறித்த‌ ப‌ய‌ம் ம‌ட்டும்தான். பெண்க‌ளுக்கான‌ விவாக‌ர‌த்தின் பின்னே ஆணுக்கு அடிமைப்ப‌ட்டுக்கிட‌க்க‌வேண்டும் என்ப‌துதான் ம‌றைமுக‌மாக‌ தொக்கி நிற்கிற‌து. ஆணும் பெண்ணும் அதாவ‌து க‌ண‌வ‌னும் ம‌னைவியும் பிண‌ங்கியிருக்கும் கால‌த்தில் ஆண்விருப்ப‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே இணைந்து வாழ‌முடியும். பெண்ணின் விருப்ப‌ம் இந்கே ஒரு பொருட்டில்லை. “இருவ‌ரும் ந‌ல்லிண‌க்க‌த்தை விரும்பினால் அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை திரும்ப‌ச்சேர்த்துக்கொள்ளும் உரிமை ப‌டைத்த‌வ‌ர்க‌ள்….” குரான் 2:228. இதில் என்ன‌ க‌ண்ணிய‌மும் ம‌ல‌ர்ச்சியும் இருக்கிற‌து. ச‌ரி குழ‌ந்தைக‌ள் இருக்கும் நிலையில் விவாக‌ர‌த்தானால் குழ‌ந்தை யாருக்கு சொந்த‌ம்? ச‌ந்தேக‌மில்லாம‌ல் ஆணுக்குத்தான். ஆண்க‌ளுக்குத்தான் வாரிசுரிமையே த‌விர பெண்ணுக்க‌ல்ல‌. ஆணைப்பொருத்த‌வ‌ரை பெண் ஒரு போக‌ப்பொருள் தான். விவாக‌ர‌த்து ச‌ம‌ய‌த்தில் பால்குடி குழ‌ந்தை இருந்தால் குழ‌ந்தை பால் குடிப்ப‌த‌ற்கு ப‌ண‌ம் கொடுக்க‌ச்சொல்லி தாய்மையை இழிவுப‌டுத்துகிற‌து குரான். அத‌னால்தான் குரான் கூறுகிற‌து “உங்க‌ள் ம‌னைவிய‌ர் உங்க‌ளின் விளைநில‌ங்க‌ள், உங்க‌ள் விளைநில‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் விரும்பிய‌வாறு செல்லுங்க‌ள்” குரான்2:223. த‌ங்க‌ம், வெள்ளி, குதிரை போன்று பெண்க‌ளும் ஆண்க‌ளுக்கு இவ்வுல‌கின் வாழ்க்கை வ‌ச‌திக‌ள். “பெண்க‌ள்,ஆண்ம‌க்க‌ள், திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ த‌ங்க‌ம், வெள்ளியின் குவிய‌ல்க‌ள், அழ‌கிய‌ குதிரைக‌ள், கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் விளைநில‌ங்க‌ள் ஆகிய‌ ம‌ன‌விருப்ப‌ம் ஏற்ப‌டுத்தும் பொருட்க‌ளை நேசிப்ப‌து ம‌னித‌ர்க‌ளுக்கு க‌வ‌ர்சியாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவை இவ்வுல‌க‌ வாழ்க்கையின் வ‌ச‌திக‌ள்….” குரான் 3:14 இதுதான் ம‌ண‌வாழ்வில் இஸ்லாம் பெண்ணிற்கு த‌ந்துள்ள‌ உரிமை. இவைஎல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ள் செய்வ‌த‌ற்கும், அடிமைப்பெண்க‌ளை வைத்துக்கொள்வ‌த‌ற்கும் ஆண்க‌ளுக்கு இஸ்லாம் ஏற்ப‌டுத்தியிருக்கும் நிப‌ந்த‌னை த‌குதி என்ன‌ தெரியுமா? ப‌ண‌ம். உன‌க்கு வ‌ச‌தியிருந்தால் புகுந்து விளையாடு என்ப‌துதான்.ம‌ஹ‌ர் கொடுக்கும் வ‌ச‌தியிருந்தால் திரும‌ண‌ம் இல்லையேல் நோன்புவைத்துக்கொள். இதில் என்ன‌ பெண்ணுரிமை இருக்கிற‌து? முக்கிய‌மான‌ செய்திக்கு வ‌ருவோம். இஸ்லாத்திற்கு முன்னால் பெண்ணிற்கு விவாக‌ர‌த்துரிமையோ ம‌றும‌ண‌ உரிமையோ இருந்த‌தில்லையா? மீண்டும் க‌தீஜா பிராட்டியின் வர‌ல‌ற்றுக்கு திரும்ப‌லாம், முக‌ம‌து ந‌பிக்கு க‌தீஜா முத‌ல் ம‌னைவி அனால் க‌தீஜாவுக்கு முக‌ம்ம‌து ந‌பி…..? மூன்றாவ‌து க‌ண‌வ‌ர். எந்த‌ அடிப்ப‌டையில் இவ‌ர்க‌ள் இஸ்லாம்தான் பெண்ணுக்கு விவாக‌ர‌த்துரிமையும், ம‌றும‌ண‌ம் செய்துகொள்ளும் உரிமையும் அளித்த‌து என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்க‌ள்?

 

     ஜிஹாப் எனும் பெண்க‌ளுக்கான‌ ஆடை(ப‌ர்தா): ஆண்க‌ளின் காம‌ப்பார்வையிலிருந்து பெண்க‌ள் த‌ங்க‌ளை காத்துக்கொள்ள‌ இஸ்லாம் வ‌ழ‌ங்கிய‌ கொடை இந்த‌ ப‌ர்தா எனும் ஆடை என்ப‌து இஸ்லாமிய‌ வாதிக‌ளின் வாத‌ம். அணியும் ஆடைக‌ள் தொட‌ர்பாக‌ ஆண்க‌ளுக்கு குறிப்பிட‌த்த‌குந்த‌ க‌ட்டுப்பாடு எதியும் வ‌ழ‌ங்காத‌ இஸ்லாம் பெண்க‌ளுக்கு அனேக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்துள்ள‌து. பெற்றோர்க‌ள் க‌ண‌வ‌ன் உட்ப‌ட்ட‌ நெருங்கிய‌ சில‌ உற‌வின‌ர்க‌ளை த‌விர‌ ஏனைய‌வ‌ருக்கு த‌ங்க‌ள் ஆடை அல‌ங்கார‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்த‌க்கூடாது. இருக்க‌மான‌ ஆடைக‌ளை அணிய‌க்கூடாது. தோலின் நிற‌ம் தெரிய‌க்கூடிய‌ அல்ல‌து தோலின் நிற‌த்திலுள்ள‌ ஆடைக‌ள் அணிய‌க்கூடாது. முக‌ம் முன்கைக‌ள் த‌விர‌ ஏணைய‌ பாக‌ங்க‌ள் அனைத்தும் ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வேண்டும் இப்ப‌டிப்ப‌ல‌. பெண்ணை பாலிய‌ல் ப‌ண்ட‌மாக‌ப்பார்ப்ப‌த‌ன் நீட்சிதான் இது. ஆணின் காம‌ப்பார்வைக்கு நான்கு ம‌னைவிக‌ளையும் கூடுத‌லாக‌ அடிமைப்பெண்க‌ளையும் த‌ந்துவிட்டு அவ‌ன் பார்வையிலிருந்து த‌ப்பிக்க‌ பெண்க‌ளை க‌வ‌ச‌ம‌ணிய‌ச்சொல்வ‌து குரூர‌மான‌ ந‌கைச்சுவை. இப்ப‌டிக்கூறுவ‌த‌ன் மூல‌ம் இன்றைய‌ முத‌லாளித்துவ‌ உல‌கின் பெண்ணை காட்சிப்பொருளாக்கும் சீர‌ளிவுக்க‌லாச்சார‌த்திற்கான‌ ஆத‌ர‌வு என‌ யாரும் த‌வ‌றாக‌ எண்ணிவிட‌லாகாது. பெண்ணின் ஆடையை ஆணின் வ‌க்கிர‌ப்பார்வை தீர்மானிக்க‌லாகாது என்ப‌துதான். முழுக்க‌ முழுக்க‌ ம‌றைத்துவிட்டு ஒற்றை விர‌ல் ம‌ட்டும் தெரிந்தாலும் அதையும் வெறித்துப்பார்க்க‌வைப்ப‌து ஆணின் வ‌க்கிர‌மேய‌ன்றி பெண்க‌ளின் உட‌ல‌ல்ல‌. த‌வ‌று ஆண்க‌ளிட‌ம் த‌ண்ட‌னை பெண்க‌ளுக்கா? பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க்கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா? பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம்? ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌துபோல் தைத்துக்கொள்ள‌வேண்டும் என‌த்திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா?

 

     பொதுவாக‌ ஆணின் பாலிய‌ல் வெறி அல்ல‌து அதீத‌ பாலிய‌ல் உண‌ர்வு என்ப‌து ச‌மூக‌த்திலிருந்து வ‌ருவ‌து. உட‌லுற‌வு என்ப‌து இன‌ப்பெருக்க‌த்திற்கான‌து என்ற‌ இய‌ற்கையை தாண்டி அது இன்ப‌மாக‌ நுக‌ர்வாக‌ ஆன‌து தான் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கான‌ தொட‌க்க‌ப்புள்ளி. எல்லாம் தெரிந்த‌ ஆண்ட‌வ‌ன் இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்துதான் அந்த‌க்குற்ற‌த்தை பார்த்திருக்க‌வேண்டும். இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்து தான்  தீர்வை தொட‌ங்கியிருக்க‌வேண்டும். ஆனால் ஆணின் காம‌ உண‌ர்வை இன்ப‌ நுக‌ர்வாக‌ அங்கீக‌ரித்துவிட்டு அதிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ பெண்க‌ளுக்கு ஆடைக்க‌ட்டுப்பாடு விதிப்ப‌து எந்த‌ வ‌கையில் பெண்க‌ளுக்கு க‌ண்ணிய‌த்தை த‌ரும் என்று ம‌த‌வாதிக‌ள் கூற‌வேண்டும்.

 

            சாட்சிய‌த்தில் பெண் ஆணில் பாதி(2:282), போர்க்கைதிக‌ளோடு உற‌வுகொள்ள‌ அனும‌தி(33:50), ம‌னைவியை அடிப்ப‌த‌ற்கு அனும‌தி(4:34), க‌ண‌வ‌ன் உற‌வுக்கு அழைத்து ஏதாவ‌து கார‌ண‌த்தால் ம‌னைவி ம‌றுத்தால் விடியும் வ‌ரை வான‌வ‌ர்க‌ளால் ச‌பிக்க‌ப்ப‌டுவாள்(புகாரி) போன்று பெண்ணை இழிவுப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ள் குரானிலும் ஹ‌தீஸிலும் ஏராள‌ம் உண்டு. இவைக‌ளையெல்லாம் ம‌ற‌ந்துவிட்ட‌ ந‌ண்ப‌ர் டென்தாரா பைபிளின் வ‌ச‌ன‌ங்க‌ளை சுட்டிக்காட்டியுள்ளார். பெண்ணை ஆணாதிக்க‌த்திற்கு ப‌லியாக்கும் பிற்போக்குத்த‌ன‌த்திற்கு எந்த‌ ம‌த‌மும் விதிவில‌க்க‌ல்ல‌. ஆணோ பெண்ணோ ந‌ம்பிக்கை கொண்டு ந‌ல்ல‌ற‌ம் செய்தால் அவ‌ர்க‌ளை ம‌கிழ்ச்சியான‌ வாழ்க்கை வாழ‌ச்செய்வோம். அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌த‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ளின் கூலியை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குவோம்(16:97) என்ப‌ன‌போன்ற‌ ஆணையும் பெண்ணையும் பொதுவாக‌ பாவிப்ப‌து போன்று தோற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ளும் குரானில் உண்டு. ஆண், பெண்ணின் ந‌ல்ல‌ற‌ம் எது என்று பார்த்தால் அங்கே பேத‌ம் ப‌ல்லிளிக்கிற‌து.

 

     பெண்க‌ளுக்கான‌ க‌ண்ணிய‌மும், ம‌திப்பும் காக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால், ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டும். ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால் த‌னியுட‌மை த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டும். த‌னியுட‌மையை த‌க்க‌வைத்துக்கொண்டு பெண்ணிய‌ம் பேச‌முடியாது. என‌வே டென்தாரா அவ‌ர்க‌ளே (உங்க‌ளின் க‌டைசி வ‌ரியை மீண்டும் கூறுகிறேன்) சிந்தியுங்க‌ள் செய‌ல்ப‌டுங்க‌ள்.

ந‌ண்ப‌ர் டென்தாராவின் பின்னூட்ட‌ம்

செருப்பு

காலில் மிதிக்கும்

அந்த‌ இர‌ண்டு செருப்புக‌ளுக்கு

புனித‌ம் முழைத்துவிட்ட‌து.

பாதிப்புனிதம்..

இல‌க்கை அடைய‌வில்லையே

ஆனாலும் அது

செருப்பின் குற்ற‌ம‌ல்ல‌

செருப்பும்

சிந்தித்து செய‌ல்ப‌டுகிற‌தோ

ஒரு அசிங்க‌த்தில் ப‌டுவ‌தினின்று

த‌ப்பித்துக்கொண்ட‌தே.

கோம‌ண‌த்தையும் த‌ட‌விப்பார்க்கும்

அமெரிக்க‌ப்ப‌ய‌த்தை

செருப்பே ஆயுத‌மாவென‌

அல‌ர‌வைத்த‌

ஈராக்கிய‌ வ‌ல்ல‌வ‌ன்

அன்று

க‌வ‌ச‌ப் ப‌டைக‌ளை

த‌ன் செருப்பால் வ‌ர‌வேற்ற‌

ஒரு பிஞ்சின் ப‌ரிணாம‌ம்.

ஒன்றும் இர‌ண்டுமாய்

ஈராக்கின் ப‌திப்பிற்கு

600கோடி செருப்புக‌ள்

வ‌ரிசையில் காத்திருக்கின்ற‌ன‌.

எறிந்து பார்த்து ப‌ழ‌குவ‌த‌ற்கு

ஆயிர‌மாயிர‌ம்

ஊளையிடும் வில‌ங்குக‌ளுண்டு

செருப்புக்கா ப‌ஞ்ச‌ம்

இன்றே தொட‌ங்குவோம்

ந‌ம் க‌ர‌சேவையை.

சினிமா: திரை வில‌கும் போது

தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின் பால் கொண்டிருகும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது. 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக்கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்டது. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு தின, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலகக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் – சமூகச் செய்திகளைச் சினிமா போல சூடு குறையாமல் பரபரப்புடன் விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் திரைப்பட விமரிசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும் , சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிக்கைகள் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா, இல்லையா என்ற மலிவான ரசனையைத் தான் குமுதம், விகடன் முதலான வணிகப் பத்திரிக்கைகள் விமரிசனமென்ற பெயரில் கற்றுத் தருகின்றன. இதை ‘தினத்தந்தி’ பாணி விமரிசனம் என்று தரங்குறைந்ததாகக் கருதும் சிறு பத்திரிக்கையோ, சினிமா என்ற அறிவியலின் தொழில்நுட்பங்கள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கின்றன. முன்னது ரசிகனது கைதட்டலையும், பின்னது படைப்பாளியின் ‘மேதைமையையும்’ வியந்தோறுகின்றன.

எமது விமரிசனங்கள் இவ்விரண்டிலிருந்தும் வேறுபடுகின்றன. ஒரு இயக்குநரின் வாழ்க்கை குரித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசப்பத்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலன் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சிவசப்படுவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத்தான் எமது விமரிசனங்கள் கண்டுபிடிக்க விரும்புகின்றன. முக்கியமான ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் ஒரு இயக்குநரின் அற்பவாத உணர்ச்சி என்ற ·பார்முலாவில் குழைக்கப்பட்டு , ஒரு ரசிகனின் சமூகக் கருத்தை மறைமுகமாகப் பாதிப்பதுதான் சினிமாவின் பலம், இந்த ரசிகர்களில் சாதாரண நபர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அறிவுஜீவி ரசிகர்களும், இன்ன பிற அறிவாளி, பேராசிரியப் பெருமக்களும் உண்டு.

அதனால் தான் எம்மால் விமரிசனம் செய்யப்பட்ட படங்கள் பல இவர்களால் பாராட்டும், பரிசும் கொடுத்துப் புகழப்பட்டன. பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகையில் எமது விமரிசனப் பார்வை தமிழில் தனித்து நிற்கின்றன. அதேசமயம் எந்த அளவுக்குத் தனித்து நிற்கின்றனவோ அந்த அளவுக்கு மக்கல் நோக்கிலான ஒரு சமூகக் கண்ணோட்டத்தைக் கூர்மையாக உருவாக்கியும் வருகின்றன.

செல்வாக்கு மிக்க திரையுலக ரசனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய ஜனநாயகப் பண்பாட்டை,அதன் உண்மையான அழகை அடையாளம் காட்டுவதற்கு இவ்விமரிசனங்கள் உதவி செய்யும். புதிய கலாச்சாரம் ஏட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள் , எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.

வெளியீடு & தொடர்புக்கு:
***********************************
புதிய கலாச்சாரம்
# 16, முல்லை நகர் வனிக வளாகம்,
இரண்டாவது அவென்யூ,
அஷோக் நகர்,
சென்னை. 600 083.
தொலை பேசி – 044-23718706.
..
பக் 205, விலை ரூ 70..
கிடைக்குமிடம்
******************
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

தாசியின் அவலத்தைத் திரிக்கும் “தனம்”!

தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள், இடையில் கலர் கலராக ஆடைகளை மாட்டும் நாயக நாயகிகள் இன்னபிற ஐட்டங்களைக் கொண்ட அந்தப்படங்களுக்கு விமரிசனம் எழுதும் தேவை எதுவுமில்லை. அப்படி எழுதினாலும் கும்மியும், ஜல்லியுமாய்த்தான் இரைக்க வேண்டும் என்பதால் சமூகக் கருத்துக்களை -அது சரியோ, தவறோ- பிரதிபலிக்கும் படமென்பதால் தனத்திற்கு விமரிசனம் எழுதுகிறோம்.
பலரும் இந்தப் படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் கதைச் சுருக்கம்.

தாசித் தாய்க்குப் பிறந்து தாயைக் காப்பாற்றுவதற்காக விபச்சாரத்திற்கு அறிமுகமாகும் தனம் ஐதராபாத்தில் இருக்கும் காந்தி நகர் பகுதியில் முழுநேர விபச்சாரியாக காலம் கழிக்கிறாள். 500 ரூபாய் கட்டணத்தை செலுத்தி விட்டு அவளை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களில் எல்லா வகையினரும் இருக்கிறார்கள். கும்பகோணத்தில் ஆச்சார அனுஷ்டானங்களைப் பின்பற்றும் ஒருபார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த அனந்தராமன் படிப்பிற்காக ஐதராபாத் நகருக்கு வருகின்றான். மற்றவரின் துன்பத்திற்கு கணக்கு வழக்கில்லாமல் உதவும் தனத்தின் மீது அனுதாபம் பிறந்து காதலாக மாறுகிறது அனந்துவுக்கு.

நோட்டைக் கொடுத்துவிட்டு தன்னை நுகருவதோடு உறவு முடிந்தென போய்விடு என்று வாதாடும் தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க வைக்கிறான் அனந்து. இறுதியில் அவனது பெற்றோர் அவள் இன்ன தொழில் செய்கிறாள் என்பதைத் தெரிந்து ஏற்றுக்கொண்டால் திருமணத்திற்குத் தயார் என்கிறாள் தனம். ஆனால் இதை முதலில் அதிர்ச்சியுடன் மறுக்கும் அவன் குடும்பம் பின்னர் ஜோசியரின் வாக்கைக் கேட்டு தாசி வந்தால் எல்லாத் துன்பங்களும் போய்விடும் என்று தனத்தை மருமகளாக ஏற்றுக் கொள்கிறது.

அந்த ஜோசியக்காரன் தனத்தை அனுபவிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த நாடகத்தை நடத்துகின்றான். தனமோ அவனை காறி உமிழ்கிறாள். இதற்கு பழிவாங்கும் முகமாக அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையைக் கொன்றால்தான் குடும்பத்திற்கு நல்லது என்று அனந்துவின் அப்பாவை அச்சுறுத்துகிறான். பல தயக்கங்களுக்குப் பிறகு அனந்துவின் குடும்பம் ஒரு மருத்துவச்சியை அழைத்துக் கள்ளிப்பால் கொடுத்து அந்தக் குழந்தையைக் கொல்கிறது. இதை அறிந்த தனம் தன் குழந்தையை தாயே தன் வயிற்றில் பிறந்தது போல நேசித்தவள் கோபம் கொண்டு மொத்தக் குடும்பத்திற்கும் சாப்பாட்டில் விசம் கொடுத்துக் கொல்கிறாள்.

இதை மறுவிசாரணை செய்ய வரும் போலீசு அதிகாரி தனத்தின் நல்மனதைத் தெரிந்துகொண்டு புலனாய்வை முடித்துக்கொள்கிறார். தனம் மீண்டும் காந்தி நகரில் தொழிலைத் தொடர்கிறாள்.

விபச்சாரத்தில் காலத்தைத் தள்ளி வரும் ஒரு தாசியின் வாழ்க்கையில், காதல், குடும்பம், கணவன், குழந்தை என்று நல்லவிசயங்கள் ஏற்பட்டு மூடநம்பிக்கையாலும் அவளைத் துய்க்கத் துடிக்கும் ஆண்களாலும் ஏமாற்றப்பட்டு மீண்டும் தொழிலுக்கு திரும்புகிறாள் என்பதே இயக்குநர் சொல்ல விரும்பிய கதை!

ஒரு விபச்சாரியின் வாழ்க்கையில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதை சினிமாவுக்காக வேண்டுமானால் யோசிக்கலாம். உண்மையில் அப்படி நடக்கக் கூடிய சாத்தியமில்லை என்பதோடு ஒரு விபச்சாரியின் அவலமான வாழ்க்கையை பார்க்க மறுப்பதும் இந்த சினிமாக் கற்பனையில் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் தனத்தின் நல்ல பண்புகளைப் பற்றி காந்தி நகரில் இருக்கும் அடித்தட்டு தொழிலாளிகள் ஆல் இந்தியா ரேடியோ போல வாசிக்கிறார்கள். நாயகி என்பதால் இந்த ஒளிவட்டம் இயக்குநருக்கு தேவைப்படுகிறது என்பதைத் தவிர ஒரு விபச்சாரி அப்படி ஒரு பகுதிக்கு தலைவியாக விளங்க முடியுமா?

நூறுக்கும், இருநூறுக்கும் தனது உடலை விற்கும் தெருவோர தாசி ஒருத்தி போலீஸ், தரகன், ரவுடி, விபச்சாரிதானே என்று எந்த அக்கறையோ, நாகரிகமோ இன்றி மிருக்கங்களைப்போல வரும் வாடிக்கையாளர்கள்…. இவர்களை மல்லுக்கட்டுவதற்கே தனது நேரத்தையும், சக்தியையும், வருமானத்தையும் செலவிடும் போது தானம் தருமம் செய்வதற்கெல்லாம் வழியேது? ஊரைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கவலைப் படுவதற்கு முகாந்திரமேது? யதார்த்தத்தில் ஒரு விபச்சாரி விபச்சாரத்தில் உழலும் ஒரு பரிதாபமான ஜீவனாகத்தான் இருக்க முடியுமே தவிர நல்ல பண்புகளைக் கொண்ட சமூக சேவகியாகவெல்லாம் வாழ முடியாது.

இயக்குநரின் இந்தச் சித்தரிப்பே தாசிகளை அனுபவிக்கத் துடிக்கும் ஆண்களின் குற்ற உணர்ச்சியைத் தட்டிக் கேட்பதற்குப் பதில் அதை ஒரு ரசனையாக உணர்த்துகிறது. ஒரு விபச்சாரியின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி உணர்த்த் விரும்பினால் அதை சாந்தினி பார் போன்று எடுத்திருக்கலாம். அந்தப் படத்தில் விபச்சாரம் இனிமையான ஒரு தொழில்ல என்பதோடு துயரத்தில் குவிந்திருக்கும் அந்தப் பெண்ணின் வலி நிறைந்த வாழ்வை கனத்த மனதுடன் உணர்கிறோம்.

ஆனால் தனம் ஒரு தமிழ் சினிமாவின் நாயக நாயகி லாஜிக் படி எடுக்கப்பட்டிருப்பதால் இங்கே நாம் ஒரு அடிமட்டத்து விபச்சாரியை சந்திக்கவில்லை, ஒரு கதாநாயகியைத்தான் காண்கிறோம். மேலும் எல்லாத் தொழலைப் போன்று விபச்சாரமும் ஒரு தொழில் என்று எந்த உறுத்தலுமில்லாமல் சகஜமாக காட்ட முனைந்திருப்பது ஒரு சராசரி ஆணின் மனதில் ஆசையைத் தூண்டுவதற்குத்தான் உதவுமே ஒழிய அவனுக்கு உடலை எந்திரம் போல விற்கும் ஒரு பரிதாபத்திற்குரிய பெண்ணின் வேதனையை புரியவைக்காது.

படத்தில் தனத்தின் வாடிக்கையாளராக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட அவளது நல்ல மனதுக்காக அவளது நியாயமான கொலைகளை மூடிமறைக்கிறாராம். யதார்த்தத்தில் தெருவோர விபச்சாரிகளை போலீஸ் துரத்துவதும், மாமூல் வாங்குவதும், தேவைப்படும் போது இலவசமாக அனுபவிப்பதும், கைது செய்து வழக்குப் போடுவதும்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். படத்தில் இந்த யதார்த்தத்தை இயக்குநர் மீறியிருப்பது நாயகியின் நல்ல உள்ளத்தைக் காட்டுவதற்குத்தான். துயரமே வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விபச்சாரியின் உலகில் இத்தகைய நல்லது கெட்டதுகளுக்கெல்லாம் எங்கே இடமிருக்கிறது?

தாம்பத்திய உறவில் ஏமாற்றங்களையும், மகிழ்ச்சியையும் இழந்திருக்கும் ஆண்களுக்கு தனம் ஒரு வடிகாலாக இருக்கிறாள் என்பதுதான் இயக்குநர் சொல்லவரும் சேதி. ஆணாதிக்கம் தன்னை நியாயப்படுத்த முடியாத இடங்களில் இப்படித்தான் பேசும். இங்கே அதே தாம்பத்திய உறவில் அதே ஏமாற்றங்களையும், மகிழ்ச்சியையும் இழந்திருக்கும் பெண்களுக்கு என்ன பதில்? அதற்குப் பதில் சொல்ல முனைந்திருந்தால் அது தனத்தின் கதையாக இருக்காது.

ஒரு தாசியை ஒரு ஆச்சாரப் பார்ப்பன இளைஞன் திருமணம் புரிவதும், ஜோசியக்காரனுக்காக அதை பெற்றோர் ஏற்பதும், பின் குழந்தையைக் கொல்வதும் பார்பனர்களை அம்பலப்படுத்துவதாக சிலர் மகிழ்ச்சியடைகின்றனர்.ஆனால் நமக்கு அப்படித் தோன்றவில்லை. ஜெயந்திரன் என்ற காஞ்சி சங்கராச்சாரியின் வண்டவாளங்கள் கிரைம் தில்லராக எல்லாப் பத்திரிகைகளிலும் அம்பலமேறினாலும் அவாள்கள் மட்டும் அதை ஏற்காமல் இன்னமும் அவரை மரியாதை செய்கிறார்கள். இத்தகைய உடும்புப்பிடி பார்ப்பனர்களைக் கொண்ட சமூகத்தில் காலத்திற்கேற்ற முறையில் தன்னை தகவமைக்கும் சாதியை இந்தப் படம் மிகவும் வறட்டுத்தனமாக சித்தரிக்கின்றது.

இயக்குநர் சொல்வது போல ஒரு ஜோசியக்காரனுக்காகவெல்லாம் ஒரு தெருவோர விபச்சாரியை மருமகளாக ஒரு பார்ப்பனக் குடும்பம் ஏற்றுக் கொள்வது நம்பும்படியாகவும் இல்லை; அது உண்மையும் இல்லை. ஒரு வேளை அவள் கோடிசுவரியாக இருந்திருந்தால் சாத்திரத்திற்கு புதிய விளக்கத்தை சொல்லிவிட்டு ஏற்றுக் கொண்டிருக்கலாம். பார்ப்பனர்களின் விழுமியங்களை பொருள் என்ற செல்வத்தின் மகிமைதான் மாற்றுகிறதே ஒழிய வெறுமனே சாத்திரங்கள் அல்ல. அதனால்தான் சில ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் சங்கரமடத்தை பார்பனர்கள் இன்றும் ஆதரிக்கிறார்கள். ஒரு வேளை அந்த மடம் அன்றாடங்காய்ச்சியாக இருந்திருந்தால் எந்தப் பார்ப்பான் அதை மதிப்பான்?

மற்றவர்களைக் காட்டிலும் பார்ப்பனர்கள் பிற்போக்கானவர்கள் என்பதன் பொருள் அவர்கள் மூடநம்பிக்கைகளைக் கறாராக பின்பற்றுகிறார்கள் என்பதல்ல. அந்தப் பிற்போக்கின் சாரம் அவர்கள் மற்ற சாதிகளைக் காட்டிலும் தங்களை உயர்வாகக் கருதிக்கொள்கிறார்கள் என்பதுதான். அதுவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், நைச்சியமாகவும், தந்திரமாகவும் இன்னும் பல விதங்களில் வடிவெடுக்கிறது. ஆனால் படம் பார்ப்பனர்களை ஏதோ அசட்டுத்தனமாக சில மூடநம்பிக்கைகளைப் பின்பற்றும் முட்டாள்களாகச் சித்தரிக்கிறது. இது பார்ப்பனர்களின் சமூக இருப்பைக் குறைத்து மதிப்பிடுகிறது என்பதுதான் நமது விமரிசனம்.

அதுவும் பார்ப்பனியத்தில் ஊறிப்போன கும்பகோணத்துப் பார்ப்பனர்களை இத்தகைய அசடுகளாகக் காட்டியிருப்பதில் சிறிதும் நியாயமில்லை. படத்தில் வேலை வெட்டியில்லாத அக்ரஹாரத்துப் பார்ப்பனர்கள் தனம் வந்த்திலிருந்து அவளை சைட் அடிப்பதையே தொழிலாக செய்கிறார்கள். வாழ்ந்து கெட்ட பல அக்கிரகாரங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும் இன்று பார்ப்பனர்கள் கிராமங்களைக் காலி செய்துவிட்டு மாநகரம், டெல்லி, அமெரிக்கா என்று பறந்து விட்டார்களே! வயோதிகப் பார்ப்பனர்கள் முதியோர் இல்லங்களில் முடங்கிக் கிடக்க பையனோ, பெண்ணோ அமெரிக்காவில் செட்டிலாகியிருப்பதுதானே இன்றைய யதார்த்தம்?

ஒரு விபச்சாரியைச் சித்திரிப்பதிலும், ஒரு பார்ப்பனக் குடும்பத்தை படம் பிடிப்பதிலும் இயக்குநர் சராசரி சினிமா லாஜிக் படிதான் கதையை அமைத்திருக்கிறார். அதனால் தனம் திரைப்படம் விபச்சாரியையும் காட்டவில்லை, பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்தவில்லை. மேலோட்டமான நீதி, அநீதிகளுக்கிடையில் பயணிக்கும் இத்திரைப்படம் முற்போக்குச் சாயலில் இருக்கிறதேயன்றி வாழ்க்கையை உரசிப்பார்க்கும் நெருப்பின் பொறி படத்தில் இல்லை. ஒரு மாறுபட்ட களத்தில் சென்டிமெண்ட்டை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் தனம் மற்றத் திரைப்படங்களை விட்டு விலகி தனி ஆவர்த்தனம் ஏதும் செய்யவில்லை. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்கும் கலையில் தமிழ் சினிமா என்றைக்கும் வெற்றிபெற்றதில்லை என்பதை தனமும் நீருபிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

வினவு

%d bloggers like this: