சினிமா: திரை வில‌கும் போது

தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின் பால் கொண்டிருகும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது. 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக்கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்டது. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு தின, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலகக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் - சமூகச் செய்திகளைச் சினிமா … சினிமா: திரை வில‌கும் போது-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாசியின் அவலத்தைத் திரிக்கும் “தனம்”!

தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள், இடையில் கலர் கலராக ஆடைகளை மாட்டும் நாயக நாயகிகள் இன்னபிற ஐட்டங்களைக் கொண்ட அந்தப்படங்களுக்கு விமரிசனம் எழுதும் தேவை எதுவுமில்லை. அப்படி எழுதினாலும் கும்மியும், ஜல்லியுமாய்த்தான் இரைக்க வேண்டும் என்பதால் சமூகக் கருத்துக்களை -அது சரியோ, தவறோ- பிரதிபலிக்கும் படமென்பதால் தனத்திற்கு விமரிசனம் எழுதுகிறோம். பலரும் இந்தப் படத்தை … தாசியின் அவலத்தைத் திரிக்கும் “தனம்”!-ஐ படிப்பதைத் தொடரவும்.

 சுப்ரமணியபுரம்: ரசிக்கத்தக்க ரவுடித்தனம்?

சுப்பிரமணியபுரம் ஏன் வெற்றி பெற்றது என்பதைப் பற்றி இந்நேரம் கோடம்பாக்கத்து முதலாளிகள் நிச்சயமாக "ரூம் போட்டு' யோசித்துக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல இப்படத்தின் நகல்கள் பல டிஸ்கஷனில் இருக்கவும் வாய்ப்புண்டு. எனினும் ரசிகர்கள் இப்படத்தை மனம் ஒன்றிப் பார்க்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது. பருத்தி வீரன் ரகத்தில், அதனைக் காட்டிலும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் இது. இந்தப் படத்தில் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் உணர்ச்சி எது? ஒரு நண்பர் குழாமின் உயிர்த்துடிப்பான …  சுப்ரமணியபுரம்: ரசிக்கத்தக்க ரவுடித்தனம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

 தோகீ என் பாடல் துயரமிக்கது!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் கம்பெனிகள், விதைக் கம்பெனிகளின் படையெடுப்பின் விளைவாகவும், அவர்களது காலை நக்கி விவசாயிகளின் கழுத்தறுக்க துணை நின்ற அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் துரோகத்தின் விளைவாகவும், மென்னி முறிக்கும் கந்துவட்டிக் கொடுமையின் விளைவாகவும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அவ்விவசாயிகளின் வாழ்க்கையை ஆதாரபூர்வமாக அக்கட்டுரைகளில் நாம் காண முடியும். கடன் வாங்கிய பணத்தில் மகளின் …  தோகீ என் பாடல் துயரமிக்கது!-ஐ படிப்பதைத் தொடரவும்.

 பருத்தி வீரன் : பொறுக்கித்தனத்தின் இரசனையா யதார்த்தத்தின் ருசி?

வசூலில் வெற்றியடைந்திருக்கும் பருத்தி வீரனை மண்வாசனை கமழும் கதை, அசலான பாத்திரங்கள், தெற்கத்தியப் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் என எல்லா அம்சங்களிலும் போற்றும் இரசிகர்கள் திரைப்படத்தின் இறுதியில் வரும் கற்பழிப்புக் காட்சி குறித்து மட்டும் வருத்தப்படுகிறார்கள். பின்கழுத்தில் கொக்கி குத்தியதால் இரத்தம் சிந்திச் சாகும் தறுவாயிலுள்ள முத்தழகை லாரி ஓட்டுநர்கள் கதறக் கதறக் கற்பழிக்கிறார்கள். எல்லாம் முடிந்தபிறகு வரும் பருத்தி வீரனிடம் இதுவரையிலும் அவன் செய்திருக்கும் பாவம்தான் தன் தலைமீது இறங்கியிருக்கிறது என்று கதறும் …  பருத்தி வீரன் : பொறுக்கித்தனத்தின் இரசனையா யதார்த்தத்தின் ருசி?-ஐ படிப்பதைத் தொடரவும்.