நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

1917ம் ஆண்டு நவம்பர் 7 உலக வரலாற்றில் போற்றத்தக்க சாதனைகளை தன்னுள் கருக்கொண்ட நாள். முதன்முதலாக பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப்பட்ட நாள். சுரண்டல் ஒழிந்து சுரண்டப்பட்ட மக்கள் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். ரஷ்யாவில் ஜாரின் ஆட்சியதிகாரத்தை புரட்சியின் மூலம் தூக்கி வீசிவிட்டு தோழர் லெனின் தலைமையில் உலகின் முதல் பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரஷ்யாவின் மொத்த வளங்களும் நாட்டுடமையாக்கப்பட்டன. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கைப்பற்றி வைத்திருந்த பண்ணைகளின் நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. மக்கள் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. திட்டங்கள் தீட்டப்படவும் அதை செயல்படுத்தவும் கூடிய அதிகாரம் பெற்றவையாக அந்த மன்றங்கள் செயல் பட்டன. தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களிடமே தரப்பட்டது. அதுவரை தனிமனிதனின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலை மாறி மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்டது. அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டது. உலகப்போரினால் நிம்மதியிழ‌ந்து அமைதியற்றிருந்த மக்களுக்கு லெனின் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தம் மகிழ்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமா? ஜாரின் ஆட்சியின் கீழ் பிடித்துவைக்கப்பட்டிருந்த அண்டை நாடுகள் அனைத்திற்கும் விடுதலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தோழர் லெனின் தலைமையில் தங்கள் நாடுகளிலும் சோசலிசம் செயல்படுத்தப்படவேண்டும் என்பதால் அவை பிரிந்து செல்வதை விரும்பவில்லை அதனால் அந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் முன்னேறத்தொடங்கியது சோவியத் யூனியன்.

அனைத்து மக்களும் சம உரிமையும் சம வாய்ப்பும் பெற்று அனைத்துவித பேதங்களையும் கடந்து அடக்குமுறையற்ற முன்னேற்றப்பாதையை நோக்கி ஏற்படுத்தப்பட்ட இந்த புரட்சிகர மாற்றங்களை, மக்களை அடக்கி ஒடுக்கி அனைத்து வழிகளிலும் சுரண்டி தன்னை வளப்படுத்திக்கொண்டு அதையே முன்னேற்றமாய் சித்தரித்துக்காட்டி மக்களை ஏய்க்கும் முதலாளித்துவ அரசுகள் பொறுக்குமா இதை? போர் தொடுத்துப் பார்த்தும் முடியாததால் பலவிதமான பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் கம்யூனிசம் சோசலிசம் புரட்சி போன்ற சொற்கள் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை துடைத்து எறிவதற்கு அனைத்து உத்திகளையும் கையாண்டது. தோழ‌ர் ஸ்டாலினுக்கு பிற‌கு அங்கு சோச‌லிச‌த்தை பின்ன‌டைய‌ச்செய்வ‌தில் வெற்றிக‌ண்டாலும் இன்றுவ‌ரை அந்த‌ பொய்ப்பிர‌ச்சார‌ங்க‌ளை நிறுத்திக்கொள்ள‌வில்லை. க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து, க‌டும் ப‌ஞ்ச‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தி க‌ம்யூனிச‌ம் ம‌க்க‌ளை கொன்ற‌ழித்த‌து. புர‌ட்சி சாத்திய‌மில்லை என்றெல்லா‌ம் ம‌க்க‌ளை ஏமாற்றி அத‌ன் மூல‌ம் த‌ங்க‌ளின் இருப்பை அவ‌சிய‌ப்ப‌டுத்திவ‌ருகின்ற‌ன‌ர்.

க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌தா?

க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து என‌ எத‌னால் கூறுகிறார்க‌ள்? பாருங்க‌ள், சோவிய‌த் யூனிய‌ன் சித‌ற்ண்டுவிட்ட‌து என‌வே க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து. ஒரு கொள்கை தோற்றுவிட்ட‌து என‌க்கூற‌வேண்டுமென்றால் அந்த‌க்கொள்கை செய‌ல்பாட்டில், ந‌ட‌ப்பில் இருந்திருக்க‌ வேண்டும். அது த‌ன் இய‌ல்புகளை செய‌ல்வ‌டிவில் கொண்டுவ‌ந்திருக்க‌ வேண்டும். அந்த‌ செய‌ல்பாடுக‌ளின் விளைவு அத‌ன் நோக்க‌ங்க‌ளை விட்டு வில‌கி எதிர்ம‌றையான‌ முடிவுக‌ளை த‌ந்திருக்க‌ வேண்டும். நோக்க‌ங்க‌ளுக்கும் செய‌ல்பாடுக‌ளுக்குமான‌ இடைவெளி பெருகி அன்னிய‌ப்ப‌ட்டு நிற்க‌வேண்டும். இதைத்தான் ஒரு கொள்கையின் தோல்வி என்று கூற‌முடியும். இவ‌ற்றில் எது க‌ம்யூனிச‌த்திற்கு நேர்ந்திருக்கிற‌து? உல‌கின் எந்த‌ நாட்டிலும் க‌ம்யூனிச‌ம் பொறுப்பில் இருக்க‌வுமில்லை, த‌னி ஒரு நாட்டில் க‌ம்யூனிச‌ம் ஏற்ப‌ட‌வும் முடியாது. க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து என‌க்கூறுப‌வ‌ர்க‌ள் க‌ம்யூனிச‌ம் என்றால் என்ன‌வென்று அறியாத‌வ‌ர்க‌ளும், க‌ம்யூனிச‌ம் வ‌ருவ‌தால் க‌டும் விளைவை ச‌ந்திக்க‌விருப்ப‌வ‌ர்க‌ளும் தான். ர‌ஷ்யாவிலும், சீனாவிலும் இன்னும் ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளிலும் இருந்த‌து சோச‌லிச‌ம் தான். சோச‌லிச‌ம் என்ப‌து க‌ம்யூனிச‌ம‌ல்ல‌, க‌ம்யூனிச‌த்திற்கான‌ பாதை தான். அந்த‌ க‌ம்யூனிச‌த்திற்கான‌ பாதையை, சோச‌லிச‌த்தை மாபெரும் ச‌திக‌ள் மூல‌ம் பின்ன‌டைய‌ச் செய்த‌வ‌ர்க‌ள் தான் கம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து என‌க் கூப்பாடுபோடுகிறார்க‌ள். உல‌கில் எங்கேயும் இல்லாம‌லிருந்து ந‌ட‌ப்பிலிருக்கும் ஆட்சிமுறைக்கு எதிராக‌ புதிதாக‌ தோன்றும் ஆட்சிமுறை பின்ன‌டைவை ச‌ந்திப்ப‌து இய‌ல்பான‌துதான். மீண்டும் அது எழுச்சிபெறும் என்ப‌த‌ற்கான‌ அண்மைச்சான்றுதான் நேபாள‌ம். எல்லோருக்கான‌ ஜ‌ன‌நாய‌க‌ம், ஒட்டுமொத்த‌ முன்னேற்ற‌ம் என்றெல்லாம்

வ‌ர்ணிக்க‌ப்ப‌ட்ட‌ முத‌லாளித்துவ‌ம் அத‌ன் நோக்க‌ங்க‌ளாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌திலிருந்து ந‌ழுவி ம‌க்க‌ளுக்கு பெரும் சீர்குலைவை த‌ந்திருப்ப‌தை இன்றைய நிதிநெருக்க‌டி வெளிப்ப‌டையாக‌ காட்டிய‌பின்னும் இது ச‌ரிவு என்றும் மீண்டுவிடுமென்றும் கூறுப‌வ‌ர்க‌ள் க‌ம்யூனிச‌ம் தோற்றுவிட்ட‌து என்ப‌து வேடிக்கையான‌து ம‌ட்டும‌ல்ல‌ மோச‌டியான‌தும் கூட‌.

க‌ம்யூனிச‌மும் ப‌ஞ்ச‌மும்

ர‌ஷ்யாவில் ஏற்ப‌ட்ட‌ ப‌ஞ்ச‌ங்க‌ளுக்கு க‌ம்யூனிச‌மே கார‌ண‌ம் என்றும் அத‌னால் கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர் என்றும், ஸ்டாலின் ஒரு கொடுங்கோல‌ன் த‌ன்னை எதிர்த்த‌வ‌ர்க‌ளை கொன்றுகுவித்த‌வ‌ர் என்றும் இன்றும் அவ‌தூறு ப‌ர‌ப்பிவ‌ருகிறார்க‌ள். ர‌ஷ்யா ஒரு இரும்புத்திரை நாடு ஆனால் ஸ்டாலினுக்கு பிற‌கு வ‌ந்த‌ குருஷேவ், பிர‌ஷ்னேவ், கோர்ப்ப‌சேவ் போன்ற‌வ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் ஜ‌ன‌நாய‌க‌வாதிக‌ள் அவ‌ர்க‌ள் மூல‌ம் இத‌ற்கான‌ ஆதார‌ங்க‌ள் கிடைத்த‌தாக‌ பித‌ற்றிக்கொள்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ அவ‌தூறுக‌ள் குருஷேவ் கால‌த்துட‌ன் அல்ல‌ ஹிட்ல‌ருட‌ன் தொட‌ர்பு கொண்ட‌து. தூய‌ ஆரிய‌ இன‌ம், அக‌ண்ட‌ஜெர்ம‌னி போன்ற‌ க‌ன‌வுக‌ளுக்கு அன்றைய‌ சோவிய‌த் யூனிய‌னுட‌ன் இணைந்திருந்த‌ உக்ரைனை மீட்டெடுப்ப‌து அவ‌சிய‌ம் என‌க்க‌ருதினான் ஹிட்ல‌ர். இதை 1925லேயே த‌ன்னுடைய‌ மெயின் கேம்ப் எனும் நூலில் தெரிவித்திருக்கிறான். இதை ந‌ன‌வாக்குவ‌த‌ற்கு த‌ன்னுடைய‌ அமைச்சர் கோய‌ப‌ல்ஸ் த‌லைமையில் ஒரு குழு அமைத்து அத‌ன் மூல‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ பிர‌ச்சார‌ம் தான் ர‌ஷ்யாவின் க‌ம்யூனிச‌ம் ஏற்ப‌டுத்திய‌ ப‌ஞ்ச‌ங்க‌ளும் தோழ‌ர் ஸ்டாலின் மேல் சும‌த்த‌ப்ப‌ட்ட‌ ப‌டுகொலை குற்ற‌ச்சாட்டுக‌ளும். இது தொட‌ர்ந்து விரிவ‌டைந்து அமெரிக்காவின் பெரும் செய்தியிய‌ல் முத‌லாளியான‌ ஹெர்ஸ்ட் என்ற‌ ஹிட்ல‌ரின் ந‌ண்ப‌ன் மூல‌ம் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து. உல‌க‌ம் முழுவ‌தும் வெளியான‌ அவ‌ன‌து செய்தி ஏடுக‌ள் தின‌ந்தோறும் க‌ம்யூனிச‌ம் ப‌ற்றிய‌ க‌ட்டுக்க‌ட்டான‌ பொய்க‌ளுட‌ன் வெளிவ‌ந்த‌ன‌. ர‌ஷ்யாவில் ந‌ட‌ந்த‌ வ‌ர்க்க‌ப்போராட்ட‌த்தையும், ப‌ண‌க்கார‌ நில‌ப்பிர‌புக‌ளுக்கு எதிரான‌ நில‌ம‌ற்ற‌ ஏழைவிவ‌சாயிக‌ளின் போராட்ட‌த்தையும் நில‌ம் ப‌கிர்ந்த‌ளிக்க‌ப்ப‌ட்ட‌தையும் கொச்சைப்ப‌டுத்தினார்க‌ள். க‌ட்டாய‌ உழைப்பு முகாம்க‌ளை கொடுஞ்சிறைக்கூட‌மென்று திரித்தார்க‌ள். 1910க‌ளின் பிற்ப‌குதியில் ஐரொப்பாவிலும் அமெரிகாவிலும் ப‌ர‌விய‌ ஸ்பெயின் ஃப்ளு என்ற‌ தொற்றுநோயால் 2கோடிக்கும் மேற்ப‌ட்டோர் ம‌டிந்த‌ன‌ர். இத‌ற்கு யாரும் அந்நாட்டு அர‌சாங்க‌ங்க‌ளை குற்ற‌ம் சாட்ட‌வில்லை. ஆனால் ர‌ஷ்யாவில் ஏற்ப‌ட்ட‌ ப‌ஞ்ச‌த்திற்கு க‌ம்யூனிச‌ம் கார‌ணம் என்றார்கள். இர‌ண்டாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌னியும் ஹிட்ல‌ரும் சோவிய‌த்யூனிய‌னால் தோல்விடைய‌ச்செய்ய‌ப்ப‌ட்ட‌தும் இந்த‌ க‌ம்யூனிச‌த்திற்கு எதிரான‌ பொய்ப்பிர‌ச்சார‌ங்க‌ளை அமெரிக்க‌ சிஐஏவும் பிரிட்ட‌னின் எம்15 என்னும் உள‌வு அமைப்பும் முழுமையாக‌ ஏற்றுக்கொண்ட‌ன‌. அமெரிகாவிலிருந்து வெளிவ‌ந்த‌ கிர‌ம்ளின் மாளிகையின் க‌ருப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ள், ர‌ஷ்யாவில் ம‌னித‌ வாழ்வு, ராப‌ர்ட் க‌ன்குவ‌ஸ்ட் எழுதிய‌ சோக‌த்தின் அறுவ‌டை போன்ற‌ நூல்க‌ளில் சோவிய‌த்தை ப‌ற்றிய‌ க‌ட்டுக்க‌தைக‌ளும் ப‌ஞ்ச‌ம் ப‌ட்டினி ப‌டுகொலைக‌ள் போன்ற‌ அவ‌தூறுக‌ளும் திரும்ப‌த்திரும்ப‌ வெளியிட‌ப்ப‌ட்டு அறிவுத்துறையின‌ர் ம‌த்தியில் திணிக்க‌ப்ப‌ட்ட‌து. ஜா‌ர்ஜ் ஆர்வ‌ல், ஸ்டீப‌ன் ஸ்பென்ட‌ர், ஆர்த‌ர் கீஸ்ல‌ர், பெர்ட்ராண்ட் ர‌ஸ்ஸ‌ல் போன்ற‌ முன்னாள் இட‌துசாரி எழுத்தாள‌ர்க‌ளுக்கெல்லாம் அமெரிக்க‌ பிரிட்டிஷ் உள‌வுநிறுவ‌ன‌ங்க‌ள் பெரும் ப‌ண‌ம் கொடுத்து க‌ம்யூனிச‌ எதிர்ப்பு இல‌க்கிய‌ங்க‌ளை தொட‌ர்ந்து எழுத‌ ஊக்குவித்த‌ன‌. இவ‌ர்க‌ள் எழுதிய‌ இல‌க்கிய‌ குப்பைக‌ளுக்காக‌ உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளிட‌மிருந்து பெரும் ப‌ன‌ம் பெற்ற‌து நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. அப்ப‌டி ப‌ண‌ம் கொடுக்க‌ப்ப‌ட்ட‌தை அந்த‌ உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளே ஒத்துக்கொண்ட‌ன‌. ஆனால் அந்த‌ நூல்க‌ள் இன்றும் க‌ம்யூனிச‌ எதிர்ப்புக்கு ப‌ய‌ன்ப‌ட்டுக்கொண்டிருக்கிற‌ன‌. பின்ன‌ர் 1987ல் க‌ன‌டாவைச்சேர்ந்த‌ ப‌த்திரிக்கையாள‌ர் எழுதிய‌ “மோச‌டி ப‌ஞ்ச‌ம் ம‌ற்றும் பாசிச‌ம் ஹிட்ல‌ர் முத‌ல் ஹாவ‌ர்ட் வ‌ரை உக்‌ரைன் பெருந்திர‌ள் ப‌டுகொலை என்ற‌ புனைவும்” இவைக‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌து எவை எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ மேற்கு உல‌கின் கோரிக்கையை ஏற்று கோர்ப்ப‌சேவ் அர‌சு சோவிய‌த்யூனிய‌ன் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் ம‌த்திய‌ க‌மிட்டியின் ஆவ‌ண‌ காப்ப‌க‌த்தை வ‌ர‌லாற்று ஆய்வுக்காக‌ திற‌ந்துவிட்ட‌து. அதுவ‌ரை தாங்க‌ள் எழுதிய‌ குப்பைக‌ளுக்கெல்லாம் அந்த‌ ர‌க‌சிய‌ ஆவ‌ண‌ காப்ப‌க‌த்தில் ஆதார‌ம் இருப்ப‌தாக‌ கூச்ச‌லிட்ட‌வ‌ர்க‌ள் ஆவ‌ண‌க்காப்ப‌க‌ம் திற‌ந்து விட‌ப்ப‌ட்ட‌தும் வேறு வ‌ழியின்றி வாயை மூடிக்கொண்டார்க‌ள். இன்றும் தாங்க‌ளை அறிவாளிக‌ள் என்று க‌ருதிக்கொள்வோர் ர‌ஷ்ய‌ப்ப‌ஞ்ச‌ம், ஸ்டாலின் ப‌டுகொலைக‌ள் என்று பேசுவ‌து முத‌லாளித்துவ‌ சுர‌ண்ட‌லை ம‌றைப்ப‌த‌ற்குத்தானேய‌ன்றி வேறெத‌ற்காக‌வுமில்லை.

புர‌ட்சி சாத்திய‌மா?

இன்றைய‌ ம‌க்க‌ளின் ம‌னோநிலை சுய‌ந‌லமாய் மாறிவிட்ட‌து. தான்‌, த‌ன்னுடைய‌ குடும்ப‌ம், அத‌ற்கான‌ ந‌ல‌ன்க‌ள் என்று ம‌க்க‌ள் சுருங்கிவிட்டார்க‌ள். என‌வே இனி போராட்ட‌ம் புர‌ட்சி என்ப‌தெல்லாம் சாத்திய‌மில்லை என்ப‌ன‌ போன்ற‌ ந‌ம்பிக்கைக‌ள் ம‌க்க‌ளிட‌ம் ப‌திய‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால் ந‌ட‌ப்புக‌ள் அத‌ற்கு மாற்ற‌மாக‌ உள்ள‌ன‌. நாள்தோறும் போராட்ட‌ச்செய்திக‌ள் வ‌ந்த‌வ‌ண்ண‌ம் உள்ள‌ன‌. நாளித‌ழ்க‌ளில் போராட்ட‌ச்செய்தியில்லாத‌ ப‌க்க‌ங்க‌ளேயில்லை என்னும் அள‌விற்கு வித்வித‌மான‌ த‌னிப்ப‌ட்ட‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்காக‌ ம‌க்க‌ள் போராடிக்கொண்டிருக்கிறார்க‌ள். போராட்ட‌ உண‌ர்வும் ம‌க்க‌ளிட‌ம் மிகுதியாகிக்கொண்டிருக்கிற‌து. அர‌சுக‌ள் த‌ங்க‌ள் மீது திணிக்கும் வ‌ச‌திக்குறைவுக‌ளை உரிமைப்ப‌றிப்புக‌ளை ச‌கித்துக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள் த‌ற்போது எதிர்த்துக்கேட்க‌ முன்வ‌ந்திருக்கிறார்க‌ள். இதுவ‌ரை போராடிக்கொண்டிருந்த‌ ஏழைக‌ளையும், தொழிலாள‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ளின் போராட்ட‌ங்க‌ளையும் முக‌ச்சுளிப்புட‌ன் த‌ன‌க்கான‌ இடையூறாக‌ க‌ருதிவ‌ந்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தைக்கூட‌ த‌ற்போதைய‌ நிதிநெருக்க‌டிக‌ள் போராட்ட‌த்தில் குதிக்க‌வைத்துள்ள‌ன‌. ஆம், த‌ன‌க்கான‌ ம‌ர‌ண‌க்குழியை முத‌லாளித்துவ‌ம் தானே தோண்டும் என‌ மார்க்ஸ் கூறிய‌து வ‌ர‌ட்டுத்த‌ன‌மான‌ க‌ற்ப‌னைய‌ல்ல‌ என்ப‌து மெய்ப்பிக்க‌ப்ப‌ட்டுவ‌ருகிற‌து. முத‌லாளித்துவ‌த்தின், உல‌க‌ம‌ய‌மாக்க‌லின் அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் ப‌ர‌ந்துப‌ட்ட‌ ம‌க்க‌ளின் சொத்துக‌ளை சூரையாடி த‌னிம‌னித‌னிட‌ம் குவிப்ப‌தையே நோக்க‌மாக‌ கொண்டிருக்கும் போது ம‌க்க‌ளால் எப்ப‌டி போராடாம‌ல் இருக்க‌ முடியும்? இந்த‌ நூற்றாண்டின் முத‌ல் புர‌ட்சியாக நேபாள‌ம் க‌ண்முன்னே நிற்கிற‌து. ம‌க்க‌ளுக்கான‌ வாழ்க்கையை தேர்ந்தெடுக்க‌ புர‌ட்சியைத்த‌விர‌ வேறு வ‌ழியில்லை. அத‌ற்கு வ‌ழிகோலிய‌ ந‌வ‌ம்ப‌ர் புர‌ட்சியின்‌ உண‌ர்வுக‌ளை நெஞ்சிலேந்துவோம். அத‌ற்கான‌ ப‌ணிக‌ளையே ம‌கிழ்வாய் கொள்வோம்.

உழைக்கும் வ‌ர்க்க‌த்தின் வாரிசுக‌ளாகிய‌ நாம், மார்க்ஸிய‌ ஆசான் லெனின் வ‌ழியை பின்பற்‌றுவோம். பாட்டாளி வ‌ர்க்க‌த் த‌லைமையின் கீழ் அணிதிர‌ள்வோம். மார்க்ஸிய‌ லெனினிய‌ மாசேதுங் சிந்த‌னையை உய‌ர்த்திப்பிடிப்போம். ந‌ம் நாட்டிலும் ஒரு புர‌ட்சியை ந‌ட‌த்திமுடிப்போம். ச‌மூக‌ மாற்ற‌த்தை நிக‌ழ்த்திக்காட்டிவோம். ந‌வ‌ம்ப‌ர் 7 புர‌ட்சி தின‌த்தில் உறுதியேற்போம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s