நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும்.

தமிழகம் தன்னுடைய எல்லையிலுள்ள அண்டை மாநிலங்கள் அனைத்திலிருந்தும் விவசாயத்திற்கான தண்ணீர் குறித்து பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறது. காவிரி தண்ணீருக்காக கன்னடத்துடனான பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. நடுவர் மன்ற தீர்ப்பாணயம் தமிழகத்திற்கு இன்னின்ன மாதங்களில் இவ்வளவு டிஎம்சி தண்ணீர் விடவேண்டும் என்று தீர்ப்பாக தந்திருந்தும் கர்நாடகம் காவிரியை தன்னுடைய அணைகளின் வடிகாலாகவே இதுவரை கருதிவருகிறது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நீதிமன்றம் 142அடிவரை நீர்தேக்கிக்கொள்ள அனுமதித்தும்கூட கேரள அரசு அதை மறுத்து வரைகலை(கிராஃபிக்ஸ்)உத்திகளுடன் கேரளம் அழிவதைபோல படம் தயாரித்து காட்டி மக்களிடம் கேரள உணர்வை ஊட்டி வருகிறது. ஏற்கனவே ஆலைக்கழிவுகளாலும், ஆக்கிரமிப்பாலும் நாச்மாய்போயிருக்கும் பாலற்றின் குறுக்கே அணைகட்டப்போவதாக ஆந்திரா மிரட்டிவருகிறது. இந்தநிலையில் தான் நெய்யாறு குறித்த பிரச்சனை கிளம்பியிருக்கிறது.

நெய்யாறு குமரி மாவட்ட எல்லையை ஒட்டிய பகுதியில் உற்பத்தியாகி கேரளாவில் ஓடும் ஒரு ஆறு. இந்த ஆற்றில் குமரி மாவட்டத்தை ஒட்டிய அகத்தியமலையின் அடிவாரத்தில் நெய்யாற்று அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தமிழகத்தின் ஆறுகாணி, பத்துகாணி, பேணு, கற்றுவா போன்ற பகுதிகளை நீர்பிடிப்பு பகுதிகளாக கொண்டுள்ளது. கருப்பையாறு என்னும் சிற்றாறும் நெய்யாற்றில் கலக்கிறது இதன் காரணமாக காமராஜர் ஆட்ட்சியின் போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த ஐம்பது ஆண்டுகளாய் இடதுகரை, வலதுகரை என்னும் வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு வருகிறது. இதனைக்கொண்டு விளவங்கோடு வட்டத்திலுள்ள 9200ஏக்கர் நிலப்பரப்பு உட்பட(இடதுகரை கால்வாய்) மொத்தம் 25000ஏக்கர் நிலப்பரப்பு பாசனவசதி பெறுகிறது. இதில் கடந்த 2004 ஆண்டிலிருந்து இடதுகரை கால்வாயை அடைத்து தண்ணீர் தருவதை நிருத்திவிட்டது கேரள அரசு. இது குறித்து கடிதப்போக்குவரத்தும், நினைவூட்டல்களும் தொடர்ந்து நடைபெற்றபோதும் இதுவரை தண்ணீர் திற‌ந்துவிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2007 ஏப்ரலில் கேரள நீர்ப்பாசன அமைச்சர் பிரேமச்சந்திரன் தமிழக அரசுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் உரிய கட்டணம் பெற்றுவிட்டுத்தான் த‌மிழ‌க‌த்திற்கு த‌ண்ணீர் த‌ருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முல்லைபெரியாறு அணையில் 144அடி த‌ண்ணீர் தேக்கினால் அத‌னால் கேர‌ளாவின் எந்த‌ ப‌குதிக‌ளெல்லாம் நீரில் மூழ்குமோ அந்த‌ப்ப‌குதிக‌ளையெல்லாம் க‌ண‌க்கெடுத்து அத‌ற்காக‌ இன்றுவ‌ரை த‌மிழ‌க‌த்திலிருந்து க‌ட்ட‌ண‌ம் பெற்றுவ‌ரும் கேர‌ளா, 142அடி வ‌ரை நீரைத்தேக்க‌ நீதிம‌ன்ற‌ம் அனும‌திய‌ளித்த‌ பின்பும் 136அடிக்கு மேல் த‌ண்ணீரை தேக்குவ‌தில்லை. அதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் அவ்வ‌ப்போது பொறியாள‌ர்க‌ளை அனுப்பி சோத‌னை செய்வ‌தும், த‌மிழ‌க‌ அதிகாரிக‌ளின் அனும‌தி ம‌றுப்ப‌துமாக‌ அடாவ‌டி செய்துவ‌ருகிற‌து. த‌ற்போது நெய்யாற்று க‌ட்ட‌ண‌ம் குறித்த‌ ஒப்ப‌ந்த்த‌த்தில் ஒப்புத‌லைப்பெற்றுவிட்டால் பின்ன‌ர் அத‌னை முல்லைப்பெரியாறு ஆளியாறு ப‌ர‌ம்பிக்குள‌ம் என‌ ம‌ற்ற‌வ‌ற்றிக்கும் விரிவுப‌டுத்திக்கொள்ள‌லாம் என‌க்கேர‌ள‌ சிபிஎம் அர‌சு எண்ணுகிற‌து.

க‌ட‌ந்த‌ நான்கு ஆண்டுக‌ளாக‌ கும‌ரிமாவ‌ட்ட‌ விவ‌சாயிக‌ள் நெய்யாற்று த‌ண்ணீர் நிருத்த‌ப்ப‌ட்ட‌து குறித்து ப‌ல‌வித‌மான‌ க‌வ‌ன ஈர்ப்பு போராட்ட‌ங்க‌ள் சாலை ம‌றிய‌ல் உண்ணாவிர‌த‌ம் என‌ ந‌ட‌த்தியிருந்தும் க‌ண்டு கொள்ளாத‌ ஓட்டுப்பொறுக்கி அர‌சிய‌ல் க‌ழிச‌டைக‌ள் த‌ற்போது தேர்த‌ல் நெருங்குவ‌தைய‌டுத்து இதைக்கையிலெடுத்து போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ ஆர‌ம்பித்துள்ள‌ன‌ர். கிள்ளியூர் காங்கிர‌ஸ் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜான் ஜேக்க‌ப் இளைஞ‌ர் காங்கிர‌ஸ் சார்பில் மார்த்தாண்ட‌த்தில் சாகும் வ‌ரை உண்ணாவிர‌த‌ம் என்று போராட‌த்தொட‌ங்கினார். இத‌னால் கும‌ரி மாவ‌ட்ட‌த்தில் குறிட்ட‌ அள‌வு வாக்குவ‌ங்கியை(!) வைத்திருக்கும் சிபிஎம் ப‌த‌றிப்போன‌து. இதைத்தொட‌ர்ந்து ஒரு அறிக்கை விட்ட‌து சிபிஎம் அதில் நெய்யாறு த‌ண்ணீர் பிர‌ச்ச‌னை தொட‌ர்பாக‌ பேச்சு ந‌ட‌த்த‌ வ‌ருமாறு ப‌ல‌முறை கேர‌ள‌ அர‌சு அழைத்த‌தாக‌வும், த‌மிழ‌க‌ அர‌சு அதை க‌ண்டுகொள்ளாம‌ல் புற‌க்க‌ணித்த‌தாக‌வும் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதாவ‌து கேர‌ள‌ சிபிஎம் அர‌சு த‌ண்ணீர் த‌ர‌ த‌யாராக‌ இருப்ப‌த்தாக‌வும் ஆனால் த‌மிழ‌க‌ அர‌சின் அலட்சிய‌த்தினால்தான் த‌ண்ணீர் கிடைக்க‌வில்லை என்றும் கூறுகிற‌து. இதையே சிபிஎம்மின் மாநில‌ செய‌ற்குழு உறுப்பின‌ர் நூர் முக‌ம்ம‌து “கேர‌ள‌ அர‌சு த‌ண்ணீருக்கு க‌ட்ட‌ண‌ம் எதையும் கேட்க‌வில்லை. மாறாக‌ த‌ண்ணீர் விடும்போது அதைக்கையாளுவ‌த‌ற்கான‌ க‌ட்ட‌ண‌த்தைத்தான் கேர‌ள‌ அர‌சு கேட்கிற‌து. இந்த‌ சிறிய‌ அள‌விலான‌ க‌ட்ட‌ண‌த்தை கூட‌ தேவைப்ப‌ட்டால் பெச்சுவார்த்தையின் போது ம‌ற்றிக்கொள்ள‌லாம் என்று முத‌ல்வ‌ர் அச்சுதான‌ந்த‌ன் எங்க‌ளிட‌ம் உறுதியளித்துள்ளார் என‌வே சிபிஎம் அர‌சு த‌ண்ணீர்த‌ர‌ ம‌றுக்கிற‌து என்ற‌ பொய்பிர‌ச்சார‌த்தை முறிய‌டிக்கும் வித‌மாக‌ நாங்க‌ளும் போராட்ட‌த்தை அறிவித்துள்ளோம்” என்று கூறியுள்ளார். ஆனால் 1971ல் நெய்யாற்று நீர்ப்ப‌கிர்வு குறித்து த‌மிழ‌க‌ அர‌சு கேர‌ளாவிட‌ம் அளித்த‌ வ‌ரைவு ஒப்ப‌ந்த்த‌த்திலேயே ப‌ராம‌ரிப்பு, கையாளுத‌ல் குறித்த‌ செல‌வின‌ங்க‌ளின் ஒரு ப‌குதியை த‌மிழ‌க‌ம் ஏற்ப‌தாக‌ குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. இதை வ‌ச‌தியாக‌ ம‌றைத்துவிட்ட‌ சிபிஎம் கேர‌ளாவிதிக்கும் க‌ட்ட‌ண‌த்தை தேவைப்ப‌ட்டால் குறைத்துக்கொள்ள‌லாம் என்று ஏற்றுக்கொள்ள‌ச்சொல்கிற‌து. அதும‌ட்டுமா? கேர‌ள‌ அர‌சு 1958ம் ஆண்டு வெளியிட்ட‌ அம்மாநிலத்தின் நீர் ஆதார‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அறிக்கையிலேயே நெய்யாறு இருமாநில‌ ஆறுதான் என‌க்குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌தை ம‌றைத்துவிட்டு அந்த ஆற்றில் த‌மிழ‌க‌த்திற்கும் உரிமையுண்டு என்று பேசி பிர‌ச்ச‌னையை சிக்க‌லாக்காம‌ல் சுமூக‌மாக‌ பேசி த‌ண்ணீர்கிடைக்க‌ த‌மிழ‌க‌ அர‌சு ஏற்பாடு செய்ய‌வேண்டுமென்றும் கூறியுள்ளார். அதாவ‌து கேர‌ள‌ சிபிஎம் அர‌சு விதிக்கும் அடாவ‌டியான‌ கெடுபிடிக‌ளை ம‌றுக்காம‌ல் ஏற்றுக்கொண்டு த‌ண்ணீர் கிடைப்ப‌தில் தான் க‌வ‌ன‌ம் செலுத்த‌வேண்டுமென்கிறார். இந்த‌ சிபிஎம் எடுபிடிக‌ளால் வேறு என்ன‌ சொல்ல‌முடியும்?

சேல‌த்தை த‌லைமையிட‌மாக‌க்கொண்டு த‌னி தொட‌ர்வ‌ண்டிக்கோட்ட‌ம் அமைப்ப‌தை கேர‌ள‌த்தின் வ‌ருமான‌ம் இழ‌ப்பை ச‌ந்திக்கும் என்ப‌த‌ற்காக‌ எதிர்த்த‌வ‌ர்க‌ளால் வேறு என்ன‌ சொல்ல‌முடியும்?

க‌ட‌ல்சார் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் க‌ல்க‌த்தாவில்தான் நிருவ‌ப்ப‌ட‌வேண்டும் சென்னையில் கூடாது என்று சொன்ன‌வ‌ர்க‌ளாயிற்றே. சென்னையில் க‌ட‌ல்சார் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் அமைப்ப‌து தொட‌ர்பான‌ ஆணை பாராளும‌ன்ற‌த்தில் வாக்கெடுப்புக்கு வ‌ந்த‌போது ஆத‌ரித்து வாக்க‌ளிக்க‌முடிய்ய‌து என்ற‌வ‌ர்தான் ம‌துரைத்தொகுதியின் சிபிஎம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் மோக‌ன். இவ‌ர்க‌ளால் வேறு என்ன‌ சொல்ல‌முடியும்?

அங்கு போராடும் விவசாயிக‌ள் இதுபோன்ற‌ ஓட்டுப்பொறுக்கிக‌ளின் அக்க‌ப்போர்க‌ளை ம‌றுத்து ம‌க்க‌ளிட‌ம் சென்று ம‌க்க‌ள‌ சார்ந்து போராட்ட‌ங்க‌ளை முன்னெடுக்க‌வேண்டும். ச‌ம‌ர‌ம‌ற்ற‌ அந்த‌ப்போராட்ட‌மே இப்போதைய‌ தேவை.

One thought on “நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும்.

 1. எனக்கு வந்த இமெயில்
  விளக்கம் கொடுக்கவும்

  மகஇக-வே இதோ உனக்கு ஒரு சாவு மணி !

  விஜயகாந்த்,ரஜினிகாந்த் போன்ற புரட்சியாளர்கள் முதல்வர்களாக வர வேண்டும் கொடி பிடித்து அலையிற நாட்டில் போலி ஜனநாயகம்,போலி அரசியல்வாதிகளின் கை பிடிக்குள் இருக்கிற நாட்டில்,கம்யூனிச சிந்தனைவாதிகளும் போலி கம்யூனிஸ்ட்டுகளாக அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

  கர்நாடக கம்யூனிஸ்ட்,கேரள, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் அந்த அந்த மாநில உணர்வோடுதான் இருந்தால்தான் வோட்டு பொறுக்க முடியும் . எடுத்துக்காட்டாக ஒரு தமிழன்.தமிழன் என்ற உணர்வோடு இருந்தால் கேரளாவில் ஒரு சின்ன பெட்டிக்கடை கூட வைத்து பிழைக்க முடியாது. பிழைக்க போன இடத்தில் மலையாளிகளின் உணர்வோடு ஒத்துப் போனால் தான்,அந்த தமிழனால் உயிர் பிழைக்க முடியும்

  இந்த நிலைபாட்டை புரிந்து கொண்டால் தான் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகளை புரிந்து கொள்ள முடியும். இதனால் தான் கேரளா கம்யூனிஷ நாடாக இருந்தாலும்,தண்ணீர் தர மறுக்கிறது.இந்த நடைமுறை உண்மையை உணர்ந்தால் தான் இந்த மண்ணுக்கேத்த புரட்சியை முன்னெடுத்து செல்ல முடியும்.

  மொழி,சாதி ,மதம் ,நாடு போன்ற பிரிவினை செய்யாத ஒரு புதிய இந்தியாவை அமைப்பது வெறும் கம்யூனிஷ்டுகள் மட்டுமே செய்ய வேண்டும் என்று குறை கூறி திரிபுவாதம் பேசாமல் அனைவரும் பங்கேற்க,பங்கேற்கபடி செய்ய வேண்டும்.

  அதை விட்டு விட்டு கம்யூனிஸ்டுகளை குறை கூறுவதால் மட்டும் மகஇக-வே நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் ஆகிவிட முடியாது.

  இந்தியாவில் ஊழல் பெருச்சாளிகளின் நிழலின் தான் பொதுவுடைமை ,பெரியார் இயக்கங்கள் வளர வேண்டிய சூழலுக்கு தள்ள பட்டு கிடக்கின்றன.

  அந்த கட்சியை சேர்ந்த தோழர்கள் தங்களின் சொந்த பணத்தை,நேரத்தை,உழைப்பை ஏன் சில சமயங்களில் இரத்தத்தைக் கூட கொடுத்து, தன் குடும்ப நலனை விட,நாட்டு நலனே முக்கியம் என்று பணம், பணம் என்று பணத்துக்கு பின்னால் ஓடும் சராசரி மனிதப் பிணங்களுக்கு மத்தியில் தியாக தீபங்களாக,உண்மையான மனிதர்களாக நடமாடி வருகிறார்கள்.

  இவர்களுக்கு நீங்கள் மரியாதை கூட தர வேண்டாம்.அவமானப்படுத்தாதீர்கள்! இவர்களின் தியாகங்களை கொச்சை படுத்தாதீர்கள்!

  பெரியார் படைத் தளபதி கி.வீரமணி பெரியார் சிந்தனைகளை விற்று காசக்கிறார் என்று ஊளைவிடுகிறீர்கள்.பெரியார் சிந்தனைகளை விற்று காசாக்குவது கடினம்.மக்களை சிந்திக்கிற தூண்டுகிற உண்மைகள் அவைகள். அந்த கடினமான பணியை பெரியாரின் இறப்புக்கும் பிறகும் கூட செய்து பெரியார் இயக்கத்தை பல மடங்கு உயர்த்திக் காட்டிய பெருமை,கம்பீரம் தமிழர் தலைவர் கி.வீரமணிக்கு உண்டு.இந்த நல்ல விஷயத்தை முடிந்தால் பாராட்டக் கற்றுகொள்ளுங்கள்.

  உங்கள் அணுகுமுறையில்,பேச்சில்,உங்கள் எழுத்தில் அழுகல் வாடை அல்லவா வீசுகிறது?கடவுளை கட்டி அழுகிற முட்டாள் மூடநம்பிக்கைவாதிகளை, முதலாளிகளை காப்பாற்றுகிற பணமுதலைகளின் அசல் குரலாகத்தான் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

  ஏ…..! ஓநாய் கூட்டமே!உன் குரலை நீயே உற்றுக் கேள்.அந்த உண்மை உனக்கே புரியும்.!

  பொய் முகத்தோடு,பொய் இமெயில் முகவரியோடு,எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு அழுகிப் போன எழுத்துக்களை அள்ளி வீசும் கோழைகளே !நீங்களோ உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்? நீங்களா புரட்சியின் புதல்வர்கள்? அட! மானம் கெட்டவர்களே!

  அரசு டாஸ்மாக் சாராயம் விற்ற காசில் ரேஷன் கடையில் சர்க்கரை பொங்கல்,ஒரு ரூபாய் அரிசி என்று இலவசமாக வழங்கும் போலி அரசியல்வாதிகளை தான் நீங்கள் அதிகமாக விமர்சிக்க வேண்டும்? அவர்கள் தானே ஆட்சியில் இருக்கிறார்கள்?

  மிஞ்சிப்போனால் தமிழ் நாட்டுக்குள் வெறும் பத்து இடங்களுக்கும் குறைவாக தேர்தலில் வெற்றி பெறும் (உங்கள் பாணியில் சொன்னால்) போலி கம்யூனிஸ்டுகளின் மீத உங்கள் எழுத்து அசிங்களை அள்ளி வீசுவது? அதிமுக,திமுக,தேமுக,மதிமுக போன்ற நாடு “முன்னேற” உழைக்கும் உண்மையான அரசியல்வாதிகளை,உண்மையான கம்யூனிஸ்ட்டுகளான நீங்கள் விமர்ச்சனம் செய்யுங்கள்! அந்த விமர்சனத்தை பார்த்து புல்லரித்துப் போகும் மக்கள் உங்களுக்கே ஒட்டு போட்டு புளகாங்கிதம் அடைவார்கள்!

  எங்களுக்கு யாரும் ஓட்டெல்லாம் போட மாட்டர்கள் என்ற அவநம்பிக்கை உங்களுக்கு தோன்றினால்…

  உங்கள் செயல்,நடவடிக்கைகள்,குழுக்களை கலைத்து விட்டு மக்களோடு மக்களாக வாழ முயற்சி செய்யுங்கள்!

  பெரியார்,பொதுவுடைமை இயக்கங்களை குறை சொல்லுவது மட்டும்ந்தான் உங்கள் புரச்ச்ச்ச்ச்…..சி அரசியல் என்றால் தயவு செய்து எல்லோரும் நல்ல மன நோய் மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்!

  அதுதான் உங்களுக்கும்,மக்களுக்கும்,நாட்டுக்கும் நல்லது!

  நன்றி!…

  “நகர்ந்து கொண்டிருப்பதே…… நதி!
  இயங்கிக் கொண்டிருப்பவனே….. இளைஞன்!”

  my web page locating address:

  http://www.beyouths.co.cc

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s