மும்பை தாக்குதல்: உடனடி விளைவும் உள்ளார்ந்த வினையும்

26/11என்றும் இந்தியாவின் 9/11 என்றும் அதிர்ச்சியுடன் பார்க்கப்பட்ட மும்பை தாக்குதல் நிகழ்வானது அனைவரையும் திகிலடைய வைத்திருக்கிறது. பன்னாட்டு கவனத்தை ஈர்க்கவேண்டும் என்ற முனைப்புடன் வெளிநாட்டினர் தங்கும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக நம்பப்பட்டது. இது குறித்து வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பல்வேறு முரண்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் தாஜ் விடுதியில் வேலைசெய்தவர்கள் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அதை மறுத்து வெளியிலிருந்து கடல் வழியாக வந்து தாக்குதல்களை நடத்தியதாக கூறப்பட்டது.வந்தவர்கள் 12பேர் என்றும் பின்னர் 10பேர் என்றும் கடைசியாக கடலில் பிடிபட்ட படகில் 15 குளிர் அங்கிகள் இருந்ததாக கிடைத்த தகவலின் படி வந்தது 15பேர் என்றால் 9பேர் கொல்லப்பட்டு ஒருவன் பிடிபட்டிருக்க மீதி 5பேர் தப்பிவிட்டனரா? கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஆங்கிலேயர்களும் இருந்ததாக வந்த தகவல்கள் பின்னர் கைவிடப்பட்டன. தாவூத் இப்ராஹிம் நண்பனான கொலாபா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் தான் தாக்குதலுக்கு வேண்டிய ஆயுதங்கள் மற்றும் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்து உதவியதாக முதலில் கூறப்பட்டது, பின்னர் அதை வேகமாக மறுத்து குஜராத் மீன்பிடிபடகை கடத்தி அதில் வந்ததாக இப்போது சொல்கிறார்கள். தாக்குதலுக்கு மறுநாள் காலையிலேயே டெக்கான் முஜாஹிதீன் என்ற பெயருடைய அமைப்பு இதற்கு பொருப்ப்பேற்றுக்கொண்டிருப்பதாக மின்னஞ்சல் வந்ததென கூறப்பட்டது, பின்னர் தாவூத் இப்ராஹீம் திட்டத்துடன் லஷ்கர் இ தொய்பாவினர் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாயின மேலும் ஜெய்ஷ் இ முகம்மதுவும் அல்காய்தாவும் தற்போது சேர்க்கப்பட்டிருக்கின்றன. இப்படி பல்வேறுபட்ட முரண்பாடான தகவல்களை தந்து செய்தி ஊடகங்கள் மக்களை குழப்பி ஒரு திகிலான பதட்டம் தக்கவைக்கப்பட்டது. தேசிய‌பாதுகாப்புப்ப‌டையின‌ரின் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் நேர‌டியாக‌ தொலைக்காட்சிக‌ளில் தொட‌ர்ந்து காட்ட‌ப்ப‌ட்டு த‌ங்க‌ளுடைய‌ பார்வையாள‌ர்க‌ளுக்கு திரைப்ப‌ட‌ அனுப‌வ‌த்தை வ‌ழ‌ங்கின‌.

அர‌சிய‌ல் அர‌ங்கில், ஏற்க‌ன‌வே தொட‌ர்ச்சியான‌ குண்டுவெடிப்பினாலும், திட்ட‌மிட்ட‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளாலும் தேசப்பாதுகாப்பில் அல‌ட்சிய‌ம் காட்ட‌ப்ப‌டுவ‌தாக‌ குற்ற‌ம்சாட்ட‌ப்ப‌ட்ட‌ காங்கிர‌ஸ் அர‌சு வேக‌மாக‌ செய‌ல்ப‌டுவ‌தாக‌ காட்டுவ‌த‌ற்காக‌ ப‌ல்வேறு முய‌ற்சிக‌ளை எடுத்த‌து. தேசிய‌ பாதுகாப்பு ப‌டை அனுப்ப‌ப்ப‌ட்ட‌து, உள்துறை அமைச்ச‌ரின் ம‌ற்றும் தேசிய‌ பாதுகாப்பு ஆலோச‌க‌ர் எம்கே நாராய‌ண‌ன், இன்ட‌லிஜென்ஸ் பீரோ இய‌க்குனர் பிசி ஹல்தர், உள்துறை செயலாளர் ம‌துக்கூர் குப்தா, ம‌ராட்டிய‌ முத‌ல்வ‌ர் துணை முத‌ல்வ‌ர் ஆகியோரை ப‌த‌விவில‌க‌ வைத்த‌து, தாக்குத‌லுக்கு கார‌ண‌மான‌வ‌ர்க‌ள் க‌டுமையாக‌ த‌ண்டிக்க‌ப்ப‌டுவார்க‌ள் என்ப‌ன‌ போன்ற‌ ச‌வ‌டால் அறிவிப்புக‌ள் என்று தொட‌ர்ந்த‌ன‌. எதிர் முகாமிலோ அத்வானி த‌ங்க‌ள் வ‌ழ‌க்க‌மான‌ ப‌ல்ல‌வியை பாடினார். க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ள் தேவை என்றார். தாஜ் வ‌ளாக‌த்திற்கு நேர‌டியாக‌ சென்று பேட்டிய‌ளித்தார். மோடி இன்னும் ஒரு ப‌டி மேலே போய், மாலேகான் குண்டு வெடிப்பு வ‌ழ‌க்கில் அதுவ‌ரை ஆன்மீக‌ ப‌ட‌ம் காட்டிக்கொண்டிருந்த‌ இந்துச்சாமியார்க‌ளை (சாமியாரிணி) கைது செய்த‌த‌ற்காக‌ த‌ங்க‌ளால் தூற்ற‌ப்ப‌ட்டுக்கொண்டிருந்த‌, ஹேம‌ந்த் க‌ர்க‌ரே தாக்குத‌லில் உயிரிழ‌ந்த‌தும் இந்து க‌தாநாய‌க‌னாக‌ காட்ட‌முய‌ன்றார். இதே போல‌ உயிரிழ‌ந்த‌ ம‌ற்றொரு அதிகாரியின் வீட்டிற்கு சென்று கேர‌ள‌ முத‌ல்வ‌ர் அச்சுதான‌ந்த‌ன் மூக்குடைப‌ட்டார். இப்ப‌டி துப்பாக்கியால் தாறுமாறாக‌ சுட‌ப்ப‌ட்டு அப்பாவிம‌க்க‌ள் செத்து ம‌டிந்தாலும் த‌ங்களின் ஓட்டு வ‌ங்கி செத்துவிடாதிருக்க‌ க‌டுமையாக‌ முய‌ன்றார்க‌ள்.

தாக்குத‌ல் முறிய‌டிக்க‌ப்ப‌ட்டாலும் இன்னும் விரைந்து செய‌ல் ப‌ட்டிருந்தால் ம‌ர‌ண‌ எண்ணிக்கையை குறைத்திருக்க‌ முடியும். தேசிய‌ பாதுகாப்பு ப‌டையின‌ர் நாட்டின் முக்கிய‌மான‌ ந‌க‌ர‌மான‌ மும்பைக்கு வ‌ந்து சேர‌ 10ம‌ணி நேர‌மாகியிருக்கிற‌து. இர‌வு 9.30 ம‌ணிக்கு தொட‌ங்கிய‌ தாக்குத‌லுக்கு எதிராக‌ தேசிய‌ பாதுகாப்பு ப‌டையின‌ர் காலை 7 ம‌ணிக்கு மேல் தான் த‌ங்க‌ளின் ந‌ட‌வ‌டிக்கையை துவ‌ங்கியிருக்கிற‌து. இந்த‌ இடைவெளியை குறைத்திருந்தாலே அனேக‌ரை காப்பாற்றியிருக்க‌ முடியும். இது ஒருபுற‌‌மிருக்க‌ வ‌ழ‌க்க‌மான‌ குண்டுவெடிப்பு, தீவிர‌வாத‌ தாக்குத‌ல் போல‌ன்றி நாடாளும‌ன்ற‌ தாக்குத‌லைப்போல‌ இது இந்தியா பாக்கிஸ்தான் இடையே போர் மூளும் அபாய‌த்தை ஏற்ற்ப‌டுத்தியுள்ள‌து. இதைத்தான் இந்த‌ தாக்குத‌லின் விளைவாக‌வும் கார‌ணியாக‌வும் பார்க்க‌வேண்டும்.

ஜேஜே ம‌ருத்துவ‌ம‌ணை ம‌ருத்துவ‌ர்க‌ள் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் உட‌லிலிருந்து எடுக்க‌ப‌ட்ட‌ தோட்டாக்க‌ளில் பாக்கிஸ்தா‌ன் ஆர்டின‌ன்ஸ் பேக்ட‌ரி என்று பொருள்ப‌டும் பிஓஎஃப் என்று பொறிக்க‌ப்ப‌ட்டிருந்த‌தாக‌ கூறிய‌தும், பிடிப‌ட்ட‌ தீவிர‌வாதி பாக்கிஸ்தானில் செய‌ல்ப‌டும் ல‌ஷ்க‌ர் அமைப்பை சார்ந்த‌வ‌ன் என்றும் அவ‌னுடைய‌ வாக்குமூல‌மும் தாவூதின் தொட‌ர்பிருப்ப‌த‌ற்கான‌ ச‌ந்தேக‌ம் போன்ற‌வ‌ற்றின் மூல‌ம் பாக்கிஸ்தான் தான் இத்தாக்குத‌லின் பின்ன‌ணியிலுள்ள‌து என்று குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌து. நாடாளும‌ன்ற‌ தாக்குத‌லின் போதும் இதேபோல் இருநாடுக‌ளுக்கிடையே போர்ப்ப‌த‌ட்ட‌ம் ஏற்ப‌ட்டு எல்லையில் ப‌டைக‌ள் குவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஆனால் அப்போது அந்த‌ போர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை அமெரிக்கா விரும்பாத‌தால் ஒரு குண்டைக்கூட‌ வீணாக்காம‌ல் ப‌டைக‌ள் திருப்பி அழைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஆனால் இப்போது புதிதாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமா பாக்கிஸ்தான் தொட‌ர்பிருப்ப‌து தெரிய‌வ‌ந்தால் தாக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்றார். இப்போது போர் மூளும் தேவை அமெரிக்காவுக்கு இருப்ப‌த‌ற்கு கார‌ண‌மும் உண்டு. தாலிபான்க‌ளுக்கு எதிராக‌ பாக்கிஸ்தான் எல்லையில் அவ்வ‌ப்போது அமெரிக்க‌ குண்டுவீசிவ‌ருவ‌தை வெளிப்ப‌டையாக‌ எதிர்க்க‌ முடியாவிட்டாலும் அதை த‌விர்க்கும் வ‌கையில் அந்த‌ப்ப‌குதியில் ப‌க்கிஸ்தான் ப‌டைக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு அமெரிக்காவுக்கு எதிரான‌ ம‌க்க‌ளின் கோப‌த்தை ச‌மாளிக்க‌ப்பார்க்கிற‌து பாகிஸ்தான். இத‌னாலும் அமெரிக்காவுக்கு வாலாட்டும் நாடுக‌ளின் ப‌ட்டிய‌லில் த‌ற்போது இந்தியாவும் சேர்ந்திருப்ப‌த‌னாலும் பாக்கிஸ்தானை க‌ழ‌ட்டிவிட‌ த‌ருண‌ம் பார்க்கிற‌து அமெரிக்கா‌. மேலும் ச‌ரிந்து கொண்டிருக்கும் த‌ன்னுடைய‌ பொருளாதார‌த்தை மீட்டுக்கொள்ள‌வும் இந்திய‌ பாக்கிஸ்தானிடையே போர்மூள்வ‌து ப‌ய‌ன்ப‌டும். அத‌னால் தான் ஒபாமா முந்திக்கொண்டு இந்தியாவுக்கு உரிமை வ‌ழ‌ங்கியிருக்கிறார்.

ஆனால் போர் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் இத‌ற்கு தீர்வாக‌ அமையுமா? பாக்கிஸ்தான் உள‌வு அமைப்புக‌ள் இதுபோன்ற‌ அமைப்புக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ல்ப‌ட்டாலும், ப‌ன்னாட்டு நிர்ப்ப‌ந்த‌ங்க‌ளுக்கு ப‌ணிந்து இந்த‌ இய‌க்க‌ங்க‌ள் பாக்கிஸ்தானில் த‌டைசெய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அவ‌ர்க‌ளுக்கு எதிராக‌ ஒருசில‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் எடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அத‌ன் கார‌ண‌மாக‌வே இந்தியா பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தைக‌ளும், புகைவ‌ண்டி பேரூந்து போக்குவ‌ர‌த்தும் இன்னும் ப‌ல‌ பிணைப்புக‌ளும் ஏற்ப‌ட்டு, நெருக்க‌ம் ஏற்ப‌டும் வாய்ப்புக‌ள் உருவாகின்ற‌ன‌. இந்த‌ நெருக்க‌ம் விடுத‌லை என்ற‌ பெய‌ரில் ம‌க்க‌ளை கொல்லும் இய‌க்க‌ங்க‌ளுக்கு நெருக்க‌டியை ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌ பாக்கிஸ்தானில் செய‌ல்ப‌டும் இய‌க்க‌ங்க‌ளுக்கும், இந்தியாவில் இந்துவெறி ப‌ரிவார‌ங்க‌ளுக்கும். இந்த‌ போர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை, ப‌த‌ட்ட‌த்தை ஏற்ப‌டுத்த‌த்தான் இதுபோன்ற‌ தாக்குத‌ல்க‌ள் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.

ந‌ம் நாட்டில் பிரிவினையை தூண்டுகிறார்க‌ள் என்று இந்திய‌ தேசிய‌வாத‌ம் பேசும் இந்துப்ப‌ரிவார‌ங்க‌ளும், கா‌ஷ்மீரில் முஸ்லீம்க‌ளை கொல்கிறார்க‌ள் என்று ம‌த‌வாத‌ம் பேசும் பாக்கிஸ்தானிலுள்ள‌ தீவிர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளும் எதிரிக‌ளை போல் காட்டிக்கொண்டாலும் இவ‌ர்க‌ளின் நோக்க‌ங்க‌ள் ஒரு புள்ளியில் இணைவ‌தை க‌வ‌னிக்க‌ வேண்டும். நாட்டின் அனைத்து குண்டுவெடிப்புச் ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கும் முஸ்லீம்க‌ளே கார‌ண‌ம் என‌ ஒற்றைப்பாதையில் செய‌ல்ப‌ட்டுக்கொண்டிருந்த‌ இந்திய‌ புல‌னாய்வுத்துறையின் செய‌ல்பாடுக‌ளுக்கு ம‌த்தியில் மாலேகான் குண்டுவெடிப்பு புல‌னாய்வின் மூல‌ம் இந்துத்தீவிர‌வாதிக‌ளின் வ‌ண்ட‌வாள‌த்தை அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கும் ஹேம‌ந்த் க‌ர்க‌ரேயின் கொலை ஒன்றும் த‌ற்செய‌லாக‌ ந‌ட‌ந்த்த‌ல்ல‌. விஹெச்பி, ச‌ங்ப‌ரிவார், பாஜக‌ கும்ப‌ல்க‌ள் அவ‌ரை வில்ல‌னாக‌ சித்த‌ரித்த‌ன‌. கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கு ஓரிரு நாட்க‌ளுக்கு முன்பு அவ‌ருக்கு கொலை மிர‌ட்ட‌ல் விட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. பிடிப‌ட்ட‌ க‌ஸாவ் கூட‌ நாங்க‌ள்தான் க‌ர்க‌ரேவை கொன்றோம் என்று கூறியிருக்கிறான். (இந்த‌ இட‌த்தில் இன்னொரு நிக‌ழ்வையும் ஞாப‌க‌ப்ப‌டுத்துவ‌து சிற‌ப்பு. அண்மையில் ஜெய‌ல‌லிதா
சிபிஐயுட‌ன் ச‌ந்தித்தார் தேர்த‌ல் ப‌ற்றி பேச‌. அத‌ற்க்கு ம‌றுநாள் ஜெயின் ராஜ‌குரு சோ வும் ச‌ந்தித்தார். அப்போது அவ‌ர்க‌ள் பேசிய‌தாக‌ ஒரு துணுக்குச்செய்தியை ஜுனிய‌ர் விக‌ட‌ன் வெளியிட்ட‌து. அதில் சோ கூறுகிறார் ‘அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு க‌ம்யூனிஸ்ட்டுக‌ளுட‌ன் கூட்டணி அமைத்துக்கொள்ள‌வெண்டாம், விரைவில் பாஜ‌க‌வுக்கு ஆத‌ர‌வான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நிக‌ழ‌விருக்கின்ற‌ன‌, அது பாஜ‌க‌வுக்கான‌ ஓட்டுக‌ளாக‌ மாறும் அடுத்த‌ ஆட்சி பிஜெபிக்குத்தான் என‌வே அவ‌ச‌ர‌ப்ப‌ட‌வேண்டாம்’ என்று) ஆக‌ ப‌ரிவார‌ங்க‌ளின் விருப்ப‌மான‌ மாலேகான் குண்டுவெடிப்பை புல்னாய்வை திசை திருப்புவ‌தும், கொடூர‌த்தாக்குத‌ல் மூல‌ம் இந்தியா பாக்கிஸ்தான் இடையே சிக்க‌லை ஏற்ப‌டுத்துவ‌தும் என‌ இர‌ண்டும் ஒரே நிக‌ழ்வில் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆனால் ம‌க்க‌ளோ ம‌த‌ங்க‌ளின் பெய‌ரால் பிள‌வுண்டு கிட‌க்கிறார்க‌ள்.

உல‌கில் தீவிர‌வாத‌ம் என்று சொல்ல‌ப்ப‌டுவ‌தின் பொருள் ம‌க்க‌ளிட‌ம் புழ‌ங்கும் தீவிர‌வாத‌ம் என்ற‌ பொருளிலிருந்து மாற்ப‌ட்ட‌து. பொதுவாக‌ அர‌சுக‌ளை எதிர்க்கும் எவ‌ரையும் தீவிர‌வாத‌ம் என்ற‌ சொல்லாலேயே குறிக்கிறார்க‌ள். ப‌னிப்போர் கால‌க‌ட்ட‌த்தில் த‌ங்க‌ளின் லாப‌வெறிக்காக‌வும் அதைச்சார்ந்த‌ கொள்கைக‌ளின் விளைவால்
ம‌க்க‌ளின் போராட்ட‌ குண‌த்தை ம‌ழுங்க‌டிக்க‌வும், த‌ங்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்காக‌ ம‌க்க‌ளை ஒன்றிணைக்கும் ஒரு பொது எதிரி தேவைப்ப‌ட்ட‌து. க‌ம்யூனிச‌த்தை அந்த‌ பொது எதிரியாக‌ சித்த‌ரித்து ம‌க்க‌ளை வேட்டையாடின‌ர். சோவிய‌த்யூனிய‌ன் சித‌ருண்ட‌பின் த‌ற்போது பொது எதிரியாக‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ம் இருக்கிற‌து. தீவிர‌வாத‌ம் என்று சொல்ல‌ப்ப‌டுவ‌தெல்லாம் இந்த‌ப்பொருளில்தான் நேர‌டியாக‌வோ ம‌றைமுக‌மாக‌வோ அட‌ங்கிநிற்கிற‌து.

மும்பை தாக்குத‌லை தொட‌ர்ந்து உச்ச‌ரிக்க‌ப்ப‌டும் இன்னொரு வார்த்தை நாட்டு ந‌ல‌ன் என்ப‌து.எது நாட்டு ந‌ல‌ன்? நாட்டில் 70விழுக்காட்டிற்கும் அதிக‌மானோர் வ‌ருமையில் உழ‌ன்று கொண்டிருக்கையில் விவாதிக்க‌ப்ப‌டாத‌ நாட்டு ந‌ல‌ன், தாஜ் விடுதி தாக்க‌ப்ப‌ட்ட‌வுட‌ன் அது நாட்டு ந‌ல‌னுக்கு எதிரான‌தாக‌ விவாதிக்கப்படுகிற‌து. ஊர் ம‌க்க‌ள் முன்னிலையில் தாயையும் ம‌க‌னையும் நிர்வாணமாக்கி கொடுமைப்ப‌டுத்தும்போது எற்ப‌டாத‌ அவ‌மான‌ம், ஷில்பா செட்டியின் நிற‌த்தை கேலிசெய்ததும் ஏற்ப‌ட்டுவிடுகிற‌து. 2000முஸ்லீம்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌போது ஏற்ப‌டாத‌ ப‌தைப்பு, அமிதாப்ப‌ச்ச‌ன் நோயுற்று ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்ந்த‌போது ஏற்ப‌டுகிற‌து. ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்து கொண்ட‌போது ஏற்ப‌டாத‌ ப‌ரிதாப‌ம், ஒரு ந‌டிகையின் ம‌ர‌ண‌த்தில் ஏற்ப‌டும் என்றால், நாடு என்ப‌து யார்? அந்த‌ நாட்டின் ந‌ல‌ன் என்ப‌து என்ன‌? நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் ம‌க்க‌ளை ஒதுக்கிவிட்டு, அவ‌ர்க‌ளின் உழைப்பில் வாழும் ஒரு சிறு கூட்ட‌ம் த‌ங்க‌ளின் ந‌ல‌னை நாட்டின் ந‌ல‌னாக‌வும், த‌ங்க‌ளின் இழ‌ப்பை நாட்டின் இழ‌ப்பாக‌வும் சித்த‌ரிக்குமானால் அந்த‌ மோச‌டியை எப்ப‌டி ஏற்ப‌து?
மும்பை தாக்குத‌லுக்குப்பிற‌கான‌ உண‌ர்ச்சிமிக்க‌ நாட்டுப்ப‌ற்று என்ப‌து இந்த‌ வ‌கையை சேர்ந்த‌து தான். இதை உண‌ர்ந்து கொள்வ‌துதான் இதுபோன்ற‌ தாக்குத‌ல்க‌ளை த‌டுக்குமேய‌ன்றி, போர்க‌ள‌ல்ல‌.

Advertisements

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: