தோழர் நந்தன் அவர்களின் பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் பொருட்டு நண்பர் டென்தாரா இஸ்லாத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு உயர்ந்தது என்று சில பைபிள் வசனங்களை ஒப்பிட்டுக்காட்டியிருந்தார். மெய்யாகவே இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளதா? ஆண்களுக்கு சமமாய் பெண்களை நடத்துகிறதா? மெய்யாகவே இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா? கௌரவப்படுத்தியிருக்கிறதா?
பொதுவாக இஸ்லாமியவாதிகள் மூன்றுவிதமான சிறப்புகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிடுவார்கள். ௧)சொத்துரிமை ௨)விவாகரத்துரிமை ௩)ஜிஹாப் எனும் பெண்ணாடை
சொத்துரிமை: பெண்களை பொருளாதார ரீதியில் ஒரு பொருட்டாக மதிக்காதிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது என்பார்கள். குரானில் பெண்களுக்கு சொத்துரிமை குறித்த வசனங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி? ஆணில் பாதி. ஆண் எவ்வளவு பெறுகிறானோ அதில் பாதிதான் பெண்ணுக்கு. குரானின் நான்காவது அத்தியாயம் 11வது வசனம் இப்படிக்கூறுகிறது. “இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்…..” ஒரே பெற்றோருக்கு பிறந்த ஆண் பெண் பிள்ளைகளில் பேதம் பார்க்கும் இந்த குரானின் வசனத்திற்கு நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள், சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றொரை பாதுகாக்கும் கடமை ஆண்களுக்குத்தான் உண்டு எனவேதான் ஆணுக்கு இரண்டு பங்கு, சகோதரிகளின் திருமணத்தின் போதும் அதற்குப்பிறகும் சகோதரனே அதிகப்பொறுப்பேற்கிறான் எனவேதான் அவனுக்கு இரண்டு பங்கு, குடும்பச்சொத்து வளர்வதற்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள் எனவேதான் அவர்களுக்கு இரண்டு பங்கு. ஆனால் இதுபோன்ற காரணங்களுக்காக குரான் ஆணுக்கு இரண்டு மடங்கு கொடுக்கச்சொல்லவில்லை. மேற்கூறிய அந்த வசனம் இப்படி முடிகிறது. “…..உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாக பயன் தருபவர் யார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்” அறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிற அல்லாதான் கடைமையாக விதித்திருக்கிறானேயன்றி ஆண்களின் பங்களிப்பு குறித்த காரணங்களுக்காக அல்ல. அதையும் இந்த வசனம் தெளிவாகவே சொல்லிவிடுகிறது, உங்களுக்கு அதிகமாக பயன் தருபவர் யார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்பதன் மூலம். இருந்தாலும் விளக்கம் கூறுபவர்களை கேட்கலாம், பெண்களே பெற்றோரை பாதுகாக்கும் குடும்பங்களில், சகோதரிகளின் திருமணங்களிலும் அதற்குப்பிறகும் பெண்களே பெறுப்பேற்கிற குடும்பங்களில், குடும்பச்சொத்து வளர்வதற்கு பெண்கள் பங்களிக்கின்ற குடும்பங்களில் பெண்களுக்கு இரண்டு பங்கு கொடுக்கலாமா? வேண்டாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக கொடுக்கலாமா? பெற்றோரின் சொத்தை பிரிப்பதில் இந்த வித்தியாசம் காட்டும் குரான் கணவன் மனைவி சொத்து விசயத்தில் என்ன கூறுகிறது?
“உங்கள் மனைவியருக்கு குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச்சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்கு குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச்சென்றதில் கால்பாகம் உங்களுக்கு உண்டு…..உங்களுக்கு குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச்சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்கு குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச்சென்றதில் எட்டில் ஒருபாகம் அவர்களுக்கு உண்டு….”குரான்4:12 புரிகிறதா இந்த வித்தியாசம்? எடுத்துக்காட்டாக கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியே 100ரூபாய் சொத்து இருப்பதாக கொள்வோம். குழந்தை இல்லாத நிலையில், மனைவி இறந்தால் கணவனுக்கு 50ரூபாய் சொத்து கிடைக்கும், கணவன் இறந்தால் மனைவிக்கு 25ரூபாய் சொத்துதான் கிடைக்கும். குழந்தை இருக்கும் பட்சத்தில் மனைவி இறந்தால் கணவனுக்கு 25ம் கணவன் இறந்தால் மனைவிக்கு 12.50ம் கிடைக்கும். இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் ஆணுக்கு நான்கு மனைவிவரை திருமணம் செய்ய அனுமதி இருப்பதால் கணவனிடமிருந்து மனைவிக்கு போகும் சொத்து நான்காக பிரியும். மனைவியிடமிருந்து கணவனுக்கு வரும் சொத்து நான்கு மடந்காக உயரும். இது படிப்படியாக பெண்களிடமுள்ள சொத்தை ஆண்களுக்கு போய்ச்சேரவே வழிவகுக்கிறது. இதில் எங்கே இருக்கிறது சமத்துவம்?
இந்த இடத்தில் சிலர் ஒரு கேள்வி எழுப்பலாம். பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமையை குறைவாகவேனும் வழங்கியிருக்கிறதே இது போற்றப்படவேண்டியதில்லையா? இஸ்லாத்திற்கு முன்பு பெண்களுக்கு சொத்துரிமை இல்லை இஸ்லாம்தான் அதை வழங்கியது என்று சொல்வது மோசடியானது. முகமது நபியின் முதல் மனைவி பெயர் கதீஜா. மக்கா நகரின் மிகப்பெரும் செல்வந்தர். அரேபியாவின் பலபகுதிகளுக்கும் சென்று வியாபாரம் செய்ய பல வணிகர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தவர். அப்படி ஒருவர்தான் முகமது நபி. கதீஜாவின் செல்வத்தோடு ஒப்பிட்டால் முகமது நபி பரம ஏழை. இவர்கள் இருவரும் திருமணம் செய்து பலகாலம் கழிந்த பின்புதான் இஸ்லாத்தின் முதல் வேத வெளிப்பாடே வருகிறது. வரலாறு இப்படி இருக்கையில் எந்தப்பொருளில் இஸ்லாம்தான் இல்லாதிருந்த சொத்துரிமையை பெண்களுக்கு வழங்கியது என்று கூறுகிறார்கள். கதீஜா போல பொருளியல் செல்வாக்குள்ள ஒரு பெண்ணை 1400ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று காணமுடியவில்லை என்பதே உண்மை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சொத்துக்களை பிரிப்பதை விரிவாக பேசும் அல்லாவுக்கு, முக்காலமும் உணர்ந்த எல்லாம் தெரிந்த ஞானமிக்க அல்லாவுக்கு தனிச்சொத்துடமைதான் உலகத்தின் அனைத்துப்பிரச்சனைகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் மூலகாரணம் என்பது தெரியாமல் போனதேனோ? இல்லை இறந்ததற்குப்பின்னால் விண்ணில் கிடைக்கவிருப்பதாக தன்னால் நம்பவைக்கப்பட்டிருக்கும் சொர்க்கத்தை தனிச்சொத்துரிமையை ஒழித்து மனிதன் உயிருடன் இருக்கும்போதே மண்ணிலேயே பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவா?
விவாகரத்துரிமை: பிடிக்காத மனைவியை விவாகரத்து செய்யமுடியாமலும், வேறு திருமணமும் செய்யமுடியாமலும் கொடுமைப்படுத்துவதும் கொலை செய்வதும் நடந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில், பெண்களுக்கேகூட அந்த உரிமையை வழங்கி பெண்களின் வாழ்வில் கண்ணியத்தையும் மலர்ச்சியையும் ஏற்படுத்தியது இஸ்லாம். பெண்ணியம் பற்றி பேசும்போதெல்லாம் இஸ்லாமியவாதிகள் தவறாமல் எடுத்துவைக்கும் வாதமிது. இது மெய்தானா? ஆண்களுக்கு தலாக் என்றும் பெண்களுக்கு குலாஉ என்றும் இரண்டுவிதமான விவாகரத்துமுறைகளை இஸ்லாம் சொல்கிறது. ஆண் தன் மனைவியை பிடிக்கவில்லையென்றால் மூன்றுமுறை தலாக் என்ற வார்த்தையை சொல்லிவிட்டால் விவாகரத்து ஆகிவிட்டதாகப்பொருள். இதை ஒரே நேரத்தில் சொல்ல முடியாது, கால இடைவெளிவிட்டு ஒவ்வொரு முறையாக சொல்லவேண்டும். முதல் இரண்டு முறை தலாக் சொன்னபிறகு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விரும்பினால் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் மூன்று முறை கூறிவிட்டால் சேரமுடியாது(ஆனால் மூன்று முறை அல்ல முத்தலாக் என்ற ஒற்றை வார்த்தயிலேயே பல பெண்கள் வாழ்க்கையிழந்து விரட்டப்பட்டுள்ளனர் என்பதுதான் நடைமுறை) இதை ஆண் தன் குடும்பத்திற்குள்ளாகவே முடித்துக்கொள்ளமுடியும். ஆனால் பெண் குலாஉ முறையில் கணவனை விவாகரத்து செய்யவேண்டுமென்றால் ஊர்த்தலைவரிடம்(அல்லது நீதிமன்றம்)
முறையிட்டு பெற்றுக்கொண்ட பணத்தை திரும்பக்கொடுத்துவிட்டு விவாகரத்தைப் பெறவேண்டும். ஏற்கனவே நான்கு மனைவிவரை வைத்துக்கொள்ள (கூடுதலாக எத்தைனை அடிமைப்பெண்கள் என்றாலும்) அனுமதி உள்ள நிலையிலும் ஆண்களுக்கு கால அவகாசம் (மூன்று தலாக்)அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்ணுக்கோ ஊர்த்தலைவரிடம் முறையிட்டு திருமணத்தின் போது பெற்ற பணத்தை திரும்பக்கொடுக்கச் சம்மதித்தால் அந்தக்கணமே விவாகரத்து. அதாவது உரிமை கொடுப்பதைபோல் கொடுத்துவிட்டு விளைவுகளைக்கொண்டு பெண்களை மிரட்டுகிறது. எச்சரிக்கை கணவனை எதிர்த்தால் மணவாழ்வையும் இழந்து, பெற்ற பணத்தையும் இழந்து வேறு வாழ்க்கைத்துணையைத்தான் தேடவேண்டியதிருக்கும். எனவே கணவனுக்கு அஞ்சி நடந்துகொள். ஆணுக்கோ மனைவியரும் அடிமைப்பெண்ணும் இருக்க தெவைப்பட்டால் அடுத்த மணமுடிக்க விவாகரத்துப்பெற்ற மனைவி திரும்பக்கொடுத்த பணமும் இருக்க எல்லா வசதிகளும் ஆணுக்குத்தான், பெண்ணுக்கு எதிர்காலம் குறித்த பயம் மட்டும்தான். பெண்களுக்கான விவாகரத்தின் பின்னே ஆணுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கவேண்டும் என்பதுதான் மறைமுகமாக தொக்கி நிற்கிறது. ஆணும் பெண்ணும் அதாவது கணவனும் மனைவியும் பிணங்கியிருக்கும் காலத்தில் ஆண்விருப்பப்பட்டால் மட்டுமே இணைந்து வாழமுடியும். பெண்ணின் விருப்பம் இந்கே ஒரு பொருட்டில்லை. “இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களை திரும்பச்சேர்த்துக்கொள்ளும் உரிமை படைத்தவர்கள்….” குரான் 2:228. இதில் என்ன கண்ணியமும் மலர்ச்சியும் இருக்கிறது. சரி குழந்தைகள் இருக்கும் நிலையில் விவாகரத்தானால் குழந்தை யாருக்கு சொந்தம்? சந்தேகமில்லாமல் ஆணுக்குத்தான். ஆண்களுக்குத்தான் வாரிசுரிமையே தவிர பெண்ணுக்கல்ல. ஆணைப்பொருத்தவரை பெண் ஒரு போகப்பொருள் தான். விவாகரத்து சமயத்தில் பால்குடி குழந்தை இருந்தால் குழந்தை பால் குடிப்பதற்கு பணம் கொடுக்கச்சொல்லி தாய்மையை இழிவுபடுத்துகிறது குரான். அதனால்தான் குரான் கூறுகிறது “உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள், உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்” குரான்2:223. தங்கம், வெள்ளி, குதிரை போன்று பெண்களும் ஆண்களுக்கு இவ்வுலகின் வாழ்க்கை வசதிகள். “பெண்கள்,ஆண்மக்கள், திரட்டப்பட்ட தங்கம், வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள் மற்றும் விளைநிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள்….” குரான் 3:14 இதுதான் மணவாழ்வில் இஸ்லாம் பெண்ணிற்கு தந்துள்ள உரிமை. இவைஎல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கும், அடிமைப்பெண்களை ‘வைத்து‘க்கொள்வதற்கும் ஆண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும் நிபந்தனை தகுதி என்ன தெரியுமா? பணம். உனக்கு வசதியிருந்தால் புகுந்து விளையாடு என்பதுதான்.மஹர் கொடுக்கும் வசதியிருந்தால் திருமணம் இல்லையேல் நோன்புவைத்துக்கொள். இதில் என்ன பெண்ணுரிமை இருக்கிறது? முக்கியமான செய்திக்கு வருவோம். இஸ்லாத்திற்கு முன்னால் பெண்ணிற்கு விவாகரத்துரிமையோ மறுமண உரிமையோ இருந்ததில்லையா? மீண்டும் கதீஜா பிராட்டியின் வரலற்றுக்கு திரும்பலாம், முகமது நபிக்கு கதீஜா முதல் மனைவி அனால் கதீஜாவுக்கு முகம்மது நபி…..? மூன்றாவது கணவர். எந்த அடிப்படையில் இவர்கள் இஸ்லாம்தான் பெண்ணுக்கு விவாகரத்துரிமையும், மறுமணம் செய்துகொள்ளும் உரிமையும் அளித்தது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்?
ஜிஹாப் எனும் பெண்களுக்கான ஆடை(பர்தா): ஆண்களின் காமப்பார்வையிலிருந்து பெண்கள் தங்களை காத்துக்கொள்ள இஸ்லாம் வழங்கிய கொடை இந்த பர்தா எனும் ஆடை என்பது இஸ்லாமிய வாதிகளின் வாதம். அணியும் ஆடைகள் தொடர்பாக ஆண்களுக்கு குறிப்பிடத்தகுந்த கட்டுப்பாடு எதியும் வழங்காத இஸ்லாம் பெண்களுக்கு அனேக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெற்றோர்கள் கணவன் உட்பட்ட நெருங்கிய சில உறவினர்களை தவிர ஏனையவருக்கு தங்கள் ஆடை அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாது. இருக்கமான ஆடைகளை அணியக்கூடாது. தோலின் நிறம் தெரியக்கூடிய அல்லது தோலின் நிறத்திலுள்ள ஆடைகள் அணியக்கூடாது. முகம் முன்கைகள் தவிர ஏணைய பாகங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டிருக்கவேண்டும் இப்படிப்பல. பெண்ணை பாலியல் பண்டமாகப்பார்ப்பதன் நீட்சிதான் இது. ஆணின் காமப்பார்வைக்கு நான்கு மனைவிகளையும் கூடுதலாக அடிமைப்பெண்களையும் தந்துவிட்டு அவன் பார்வையிலிருந்து தப்பிக்க பெண்களை கவசமணியச்சொல்வது குரூரமான நகைச்சுவை. இப்படிக்கூறுவதன் மூலம் இன்றைய முதலாளித்துவ உலகின் பெண்ணை காட்சிப்பொருளாக்கும் சீரளிவுக்கலாச்சாரத்திற்கான ஆதரவு என யாரும் தவறாக எண்ணிவிடலாகாது. பெண்ணின் ஆடையை ஆணின் வக்கிரப்பார்வை தீர்மானிக்கலாகாது என்பதுதான். முழுக்க முழுக்க மறைத்துவிட்டு ஒற்றை விரல் மட்டும் தெரிந்தாலும் அதையும் வெறித்துப்பார்க்கவைப்பது ஆணின் வக்கிரமேயன்றி பெண்களின் உடலல்ல. தவறு ஆண்களிடம் தண்டனை பெண்களுக்கா? பார்வை இருக்கட்டும் கேட்கக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார்களே பெண்கள் வெளியில் வரும்போது காதுகளை பஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வரவேண்டும் என்று சட்டம் செய்யலாமா? பொது இடங்களுக்கு வந்தால் உரசுவதற்காகவே கடந்துபோகிறார்களே என்னசெய்யலாம்? பர்தாவை இரும்பால் நெய்து கொள்ளவேண்டும் அதுவும் உடலைவிட்டு அரை அடி தள்ளியிருப்பதுபோல் தைத்துக்கொள்ளவேண்டும் எனத்திருத்தம் கொண்டு வரலாமா?
பொதுவாக ஆணின் பாலியல் வெறி அல்லது அதீத பாலியல் உணர்வு என்பது சமூகத்திலிருந்து வருவது. உடலுறவு என்பது இனப்பெருக்கத்திற்கானது என்ற இயற்கையை தாண்டி அது இன்பமாக நுகர்வாக ஆனது தான் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கான தொடக்கப்புள்ளி. எல்லாம் தெரிந்த ஆண்டவன் இந்த தொடக்கப்புள்ளியிலிருந்துதான் அந்தக்குற்றத்தை பார்த்திருக்கவேண்டும். இந்த தொடக்கப்புள்ளியிலிருந்து தான் தீர்வை தொடங்கியிருக்கவேண்டும். ஆனால் ஆணின் காம உணர்வை இன்ப நுகர்வாக அங்கீகரித்துவிட்டு அதிலிருந்து தப்புவதற்காக பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிப்பது எந்த வகையில் பெண்களுக்கு கண்ணியத்தை தரும் என்று மதவாதிகள் கூறவேண்டும்.
சாட்சியத்தில் பெண் ஆணில் பாதி(2:282), போர்க்கைதிகளோடு உறவுகொள்ள அனுமதி(33:50), மனைவியை அடிப்பதற்கு அனுமதி(4:34), கணவன் உறவுக்கு அழைத்து ஏதாவது காரணத்தால் மனைவி மறுத்தால் விடியும் வரை வானவர்களால் சபிக்கப்படுவாள்(புகாரி) போன்று பெண்ணை இழிவுபடுத்தும் வசனங்கள் குரானிலும் ஹதீஸிலும் ஏராளம் உண்டு. இவைகளையெல்லாம் மறந்துவிட்ட நண்பர் டென்தாரா பைபிளின் வசனங்களை சுட்டிக்காட்டியுள்ளார். பெண்ணை ஆணாதிக்கத்திற்கு பலியாக்கும் பிற்போக்குத்தனத்திற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. ஆணோ பெண்ணோ நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தால் அவர்களை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச்செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்(16:97) என்பனபோன்ற ஆணையும் பெண்ணையும் பொதுவாக பாவிப்பது போன்று தோற்றம் ஏற்படுத்தும் வசனங்களும் குரானில் உண்டு. ஆண், பெண்ணின் நல்லறம் எது என்று பார்த்தால் அங்கே பேதம் பல்லிளிக்கிறது.
பெண்களுக்கான கண்ணியமும், மதிப்பும் காக்கப்படவேண்டுமென்றால், ஆணாதிக்கம் ஒழிக்கப்படவேண்டும். ஆணாதிக்கம் ஒழிக்கப்படவேண்டுமென்றால் தனியுடமை தகர்க்கப்படவேண்டும். தனியுடமையை தக்கவைத்துக்கொண்டு பெண்ணியம் பேசமுடியாது. எனவே டென்தாரா அவர்களே (உங்களின் கடைசி வரியை மீண்டும் கூறுகிறேன்) சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
நண்பர் டென்தாராவின் பின்னூட்டம்
Filed under: மதம் | Tagged: இஸ்லாம், சொத்துரிமை, ஜிஹாப், பர்தா, பெண்ணியம், விவாகரத்து |
“பெண்களுக்கான கண்ணியமும், மதிப்பும் காக்கப்படவேண்டுமென்றால், ஆணாதிக்கம் ஒழிக்கப்படவேண்டும். ஆணாதிக்கம் ஒழிக்கப்படவேண்டுமென்றால் தனியுடமை தகர்க்கப்படவேண்டும். தனியுடமையை தக்கவைத்துக்கொண்டு பெண்ணியம் பேசமுடியாது.”
சிறப்பான வரிகள்.தனியுடமையை வைத்துக்கொண்டு பெண்ணியம் மட்டுமல்ல,எந்த உரிமையையும் பேச முடியாது.
கலகம்
http://kalagam.wordpress.com/
இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! – சகுந்தலா நரசிம்ஹன்
திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.
சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் “சதி” (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
‘ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்’ என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.
சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு “பெண்கள் பகுதி” க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.
செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!
சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.
மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.
“சவுகரியமா? இதன் மூலமா?” என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.
எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.
நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.
மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த “பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்” இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.
ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த ‘மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்’ என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.
சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.
என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, “கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!” என்றார்.
நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: “எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?”
அதற்கு அவர், “நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!” என்றார்.
“முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்” என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.
“இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?” பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.
“இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி…!” என்றார்.
அத்துடன் நில்லாமல், “இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?” என்றார்.
அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், “புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?” என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.
என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.
“உங்களுக்குத் தெரியுமா?” என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். “மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!” என்றார்.
“கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்” என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.
பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.
என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், “தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக”க் குறிப்பிட்டார். “சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!” என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.
வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?
அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.
இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.
அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.
அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.
அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்.”நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?” என்று கேட்டு விட்டேன்.
நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: “இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது” என்றார்.
என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:
“செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?” என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.
இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள்.
அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, “கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?” என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.
எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.
மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே ‘அடிமைத்தனம்’ என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் ‘பெண்ணடிமை’த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.
ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.
என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?
பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,
இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!
சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்! – தமிழாக்கம்: அபூ ஸாலிஹா நன்றி-(www.satyamargam.com) http://www.tmmk.info/news/999726.htm
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் அது “ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
“ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!” என்று முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் அந்தப் போலித்தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
“ஹிஜாப்” என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
இதுபற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.
ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம்
ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். அனால் சமத்துவம் பேசும் இவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். இதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை எதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் அந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை எதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் அவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் அந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள் அவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட அந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. என் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே அதை அனுமதிக்க மாட்டார்கள்.
“ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்” என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஒரளவுக்கு அவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு யாருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பு
இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு அதுதான்.
பெண்களின் ரசனை அத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. அதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு அவ்வாதம் வலுவானதன்று.
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. அனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.
ஹிஜாபைக் குறை கூறுவோர் அதைச் சிந்திப்பதில்லை.
பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். “இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்” என்றெல்லாம் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.
பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது?
பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா? பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் என்?
பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும்போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.
பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத்தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானதுதான். அதைவிட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் அந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.
ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக்குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.
முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்டவேண்டும்.
மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.
எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபட கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். அதனால்தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.
இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக்கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.
முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.
இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.
பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் ஆடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக்கொண்டிருப்பதில்லை.
ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பதுதான் நமக்கு வியப்பாகவுள்ளது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.
http://valpaiyan.blogspot.com/2009/04/family-photo.html
இந்த பதில் நீண்ட விவாதம் இருக்கிறது நண்பரே!
இஸ்லாத்தின் ஆணாதிக்க சிந்தனை இந்த அளவுக்கு இருக்குன்னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்!
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454