சுவனத்தென்றலுக்கு மறுப்பு

     அண்மையில் சுவனத்தென்றல் வலைப்பக்கத்தை எதேச்சையாக பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் செங்கொடி.மல்டிப்பிளை தளத்தில் “காலம் காத்திருக்கிறது வாருங்கள் முஸ்லீம்களே” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைக்கு பின்னூட்டமாக இடப்பட்ட தகவல்கள் எனப்புரிந்தது. அதாவது நண்பர் டென்தாரா சுவனத்தென்றல் தளத்திலிருந்து பெற்ற தகவல்களைத்தான் தனது பின்னூட்டமாக இட்டிருந்தார் என்பது புரிந்தது. எனவே அங்கு கீழ்காணும் பின்னூட்டத்தை இட்டேன்.

 

நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். டார்வின் கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைக்கு உங்களின் பதிவை சிலர் பின்னூட்டமாக இட்டிருந்தனர் (அது உங்கள் தளத்திற்கு வருகை தந்தபின்னர்தான் புறிந்தது) அவைகளுக்கு நான் தக்க பதில் கூறியிருக்கிறேன். வாருங்களேன் விவாதிப்போம்.

தோழமையுடன்,செங்கொடி.

 

பின் அதை மறந்தும் விட்டேன்.  அவர் செங்கொடி.மல்டிப்பிளை தளத்தில் எந்த பின்னூட்டமோ கேள்வியோ வைக்கவில்லை. பின்னர் அவருடைய தளத்தில் ஏதாவது பதில் இடப்பட்டுள்ளதா என்பதை காணும் ஆவலில் சுவனத்தென்றல் தளத்திற்கு சென்றேன். அங்கு கடந்த October 26, 2008 தேதி உயிரைப்பற்றி சில ருசிகரத்தகவல்கள் எனும் தலைப்பில் ஒரு பதிவிடப்பட்டிருந்தது. அதில் கடைசியாக நண்பர் செங்கொடி அவர்களுக்கும் இதில் பதில் இருக்கிறது எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரை நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கும் கொடுத்திருந்த விளக்கங்களுக்கும் துளியும் தொடர்பில்லாமல் இருக்கிறது என்பதையும், என்னுடைய பெயரைக்குறிப்பிட்டு எழுதிவிட்டு என்னிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்தது எந்தவகையில் நாகரீகம் வாய்ந்தது என்பதையும் அந்த தளத்திடமும் அதன் வாசகர்களிடமும் விட்டுவிட்டு உயிரைப்பற்றிய சில ருசிகரத்தகவல்கள் என்ற கட்டுரையை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அந்த கட்டுரையை இங்கே படிக்கலாம்.

 

     அந்தக்கட்டுரை இரண்டு அம்சத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தது. ஒன்று உயிர் என்னும் பொருள் அடுத்தது கரு எனும் பிண்டத்தின் உயிர்த்தன்மை.

இதன்மூலம் உயிர் இருக்கிறது என்பது எவ்வளவு மெய்யான ஒன்றோ அது போல கடவுள் இருக்கிறார் என்பதும் மெய்யான ஒன்று என்று சுற்றிவளைத்து நம்பச்சொல்கிறார். ஒருவனுக்கு உயிர் இருக்கிறது என்றால் அதன் பொருள் செயல் படுகிறான் என்பது தானேயன்றி அவ‌ன் செய‌ல் ப‌டுகிறான் என்ப‌தால் உயிர் எனும் பொருள் அவ‌னுக்குள் இருக்கிற‌து என்ப‌த‌ல்ல‌. உயிர் என்ப‌து பொருளைக்குறிப்ப‌த‌ல்ல‌ த‌ன்மையை குறிப்ப‌து. உயிர் இருக்கிற‌து, உயிர் போய்விட்ட‌து என்று குறிப்பிடுவ‌தெல்லாம் சொல்வ‌ழ‌க்கேய‌ன்றி அத‌ன் மெய்யான‌ பொருளில‌ல்ல‌. காய்ச்ச‌ல் இருந்த‌து, காய்ச்ச‌ல் போய்விட்ட‌து என்றெல்லாம் சொல்கிறோம், காய்ச்ச‌ல் என்ப‌து பொருளா? நோயின் த‌ன்மை. அதுபோல‌த்தான் உயிர் என்ப‌தும். புல‌னுக்கு அப்பாற்ப‌ட்ட‌து என்ப‌தெல்ல‌ம் ம‌த‌வாதிக‌ளின் உருவேற்ற‌ல் (உயிர் ப‌ற்றி விரிவாக‌ டென்தாராவுக்கு ம‌றுப்பு என்ற‌ க‌ட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்) புல‌ன்க‌ளுக்கு புல‌ப்ப‌ட‌வில்லையெனின் அந்த‌ப்பொருள் இல்லை என்ப‌துதான் பொருள். ஏதாவ‌து ஒரு வித்த‌த்தில் த‌ன்னை வெளிப்ப‌டுத்திக்கொள்ளாத‌ பொருள் உண்டா உல‌கில்? இருந்தால் கூறுங்க‌ள். அல்ல‌து உட‌லுக்கு வெளியிலிருந்து உயிர் வ‌ருகிற‌து, உட‌லிலிருந்து வெளியில் செல்கிற‌து என்ப‌தையாவ‌து நிரூபியுங்க‌ள். க‌ருமுட்டையிலேயே உயிர் இருக்கிற‌து என்று இறை ம‌றுப்பாள‌ர்க‌ள் கூறுவ‌தாக‌ நீங்க‌ளாக‌வே ஒரு க‌ற்ப‌னையான‌ முடிவுக்கு வ‌ந்து அத‌ன் வ‌ழியே உல‌கின் முத‌ல் சோத‌னைக்குழாய் குழ‌ந்தைக்கு மூன்று ஆண்டுக‌ள் க‌ழித்து த‌ங்கை பிற‌ந்த்தைக்கூறி ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டு அதை இறைவ‌னின் ம‌க‌த்துவ‌மாக‌ காண்பிக்க‌ முய‌லுகிறீர்க‌ள். இது சாதார‌ண‌மாக‌ அன்றாட‌ம் ந‌டைபெறும் நிக‌ழ்ச்சிதான். விதைக‌ளை ப‌த‌ப்ப‌டுத்தி வைத்திருந்து பின் விதைப்ப‌தை நீங்க‌ள் கேள்விப்ப‌ட்ட‌தில்லையா? வெளியில் வைத்திருந்தால் அழுகி வீணாகிவிடும் த‌க்காளி குளிர்பெட்டிக்குள் வைத்திருந்தால் கெட்டுப்போகாம‌ல் இருப்ப‌தில்லையா? விந்தை த‌னியாக‌ பாதுகாக்கிறார்க‌ள் பெண்ணின் முட்டையை பாதுகாக்கிறார்க‌ள், இர‌ண்டையும் இணைத்தும் பாதுகாக்க‌லாம். க‌ருப்பையில் தாயின் உட‌லிலிருந்து புர‌த்த‌த்தின் உத‌வியுட‌ன் உருப்புக்க‌ளையும் இய‌க்க‌த்தையும் பெற்று உயிராக வெளியேறுகிற‌து.வ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌பின் த‌ன் அசைவை நிருத்திக்கொண்டால் குழ‌ந்தை இற‌ந்தே பிற‌ந்த‌து என்று கூறும் ம‌க்க‌ள் வ‌ள‌ர்ச்சிய‌டைவ‌த‌ற்கு முன்பே அழிந்துவிட்டால் க‌ரு க‌லைந்துவிட்ட‌து என்று சொல்வார்க‌ள். இந்த‌ இர‌ண்டு சொற்க‌ளின் பொருள் வித்தியாச‌த்தை புறிந்திருந்தால் ருசிக‌ர‌த்த‌க‌வ‌ல்க‌ள் எழுதும் தேவை உங்க‌ளுக்கு இருந்திருக்காது. ம‌ருத்துவ‌ வ‌ல்லுன‌ர்க‌ளின் உத‌வியும் தேவைப்ப‌ட்டிருக்காது.

 

     ம‌ர‌ணிப்ப‌த‌ற்கு முன்னால் அதாவ‌து உங்க‌ள் ந‌ம்பிக்கையின்ப‌டி இறைவ‌ன் உயிரைக்கைப்ப‌ற்றுவ‌த‌ற்ற்கு முன்னால் மூளைச்சாவு என்ற‌ நிலை ஏற்ப்ப‌ட்டுவிட்டால் அந்த‌ ம‌னித‌ரிட‌மிருந்து உருப்புக்க‌ளை எடுத்து வேறு ம‌னித‌னுக்கு பொருத்த‌லாம் என்று ம‌ருத்துவ‌ நிபுண‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள். இத‌ய‌ம் துடிப்ப‌தை க‌ட்டுப்ப‌டுத்தும் ப‌குதியை த‌விர‌ மூளை ம‌ற்ற‌ அனைத்துப்ப‌குதியின் செய‌ல்பாட்டை இழ‌ந்துவிட்டால் உயிர் போவ‌துவ‌ரை காத்திருக்க‌வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. இந்த‌ உட‌லிலிருந்து உருப்புக‌ளை பெற்று வேறு ம‌னித‌னுக்கு பொருத்தி அவ‌னை அந்த‌ உட‌ல் செய‌ல்க‌ளை நிருத்தும்வ‌ரை வாழ‌வைக்க‌லாம். காய்த‌ல் உவ‌த்த‌லின்றி இதைப்ப‌ற்றி நீங்க‌ள் சிந்தித்துப்பாருங்க‌ளேன்.

 

 

%d bloggers like this: