அண்மையில் சுவனத்தென்றல் வலைப்பக்கத்தை எதேச்சையாக பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் செங்கொடி.மல்டிப்பிளை தளத்தில் “காலம் காத்திருக்கிறது வாருங்கள் முஸ்லீம்களே” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைக்கு பின்னூட்டமாக இடப்பட்ட தகவல்கள் எனப்புரிந்தது. அதாவது நண்பர் டென்தாரா சுவனத்தென்றல் தளத்திலிருந்து பெற்ற தகவல்களைத்தான் தனது பின்னூட்டமாக இட்டிருந்தார் என்பது புரிந்தது. எனவே அங்கு கீழ்காணும் பின்னூட்டத்தை இட்டேன்.
நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். டார்வின் கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைக்கு உங்களின் பதிவை சிலர் பின்னூட்டமாக இட்டிருந்தனர் (அது உங்கள் தளத்திற்கு வருகை தந்தபின்னர்தான் புறிந்தது) அவைகளுக்கு நான் தக்க பதில் கூறியிருக்கிறேன். வாருங்களேன் விவாதிப்போம்.
தோழமையுடன்,செங்கொடி.
பின் அதை மறந்தும் விட்டேன். அவர் செங்கொடி.மல்டிப்பிளை தளத்தில் எந்த பின்னூட்டமோ கேள்வியோ வைக்கவில்லை. பின்னர் அவருடைய தளத்தில் ஏதாவது பதில் இடப்பட்டுள்ளதா என்பதை காணும் ஆவலில் சுவனத்தென்றல் தளத்திற்கு சென்றேன். அங்கு கடந்த October 26, 2008 தேதி உயிரைப்பற்றி சில ருசிகரத்தகவல்கள் எனும் தலைப்பில் ஒரு பதிவிடப்பட்டிருந்தது. அதில் கடைசியாக நண்பர் செங்கொடி அவர்களுக்கும் இதில் பதில் இருக்கிறது எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரை நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கும் கொடுத்திருந்த விளக்கங்களுக்கும் துளியும் தொடர்பில்லாமல் இருக்கிறது என்பதையும், என்னுடைய பெயரைக்குறிப்பிட்டு எழுதிவிட்டு என்னிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்தது எந்தவகையில் நாகரீகம் வாய்ந்தது என்பதையும் அந்த தளத்திடமும் அதன் வாசகர்களிடமும் விட்டுவிட்டு உயிரைப்பற்றிய சில ருசிகரத்தகவல்கள் என்ற கட்டுரையை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அந்த கட்டுரையை இங்கே படிக்கலாம்.
அந்தக்கட்டுரை இரண்டு அம்சத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தது. ஒன்று உயிர் என்னும் பொருள் அடுத்தது கரு எனும் பிண்டத்தின் உயிர்த்தன்மை.
இதன்மூலம் உயிர் இருக்கிறது என்பது எவ்வளவு மெய்யான ஒன்றோ அது போல கடவுள் இருக்கிறார் என்பதும் மெய்யான ஒன்று என்று சுற்றிவளைத்து நம்பச்சொல்கிறார். ஒருவனுக்கு உயிர் இருக்கிறது என்றால் அதன் பொருள் செயல் படுகிறான் என்பது தானேயன்றி அவன் செயல் படுகிறான் என்பதால் உயிர் எனும் பொருள் அவனுக்குள் இருக்கிறது என்பதல்ல. உயிர் என்பது பொருளைக்குறிப்பதல்ல தன்மையை குறிப்பது. உயிர் இருக்கிறது, உயிர் போய்விட்டது என்று குறிப்பிடுவதெல்லாம் சொல்வழக்கேயன்றி அதன் மெய்யான பொருளிலல்ல. காய்ச்சல் இருந்தது, காய்ச்சல் போய்விட்டது என்றெல்லாம் சொல்கிறோம், காய்ச்சல் என்பது பொருளா? நோயின் தன்மை. அதுபோலத்தான் உயிர் என்பதும். புலனுக்கு அப்பாற்பட்டது என்பதெல்லம் மதவாதிகளின் உருவேற்றல் (உயிர் பற்றி விரிவாக டென்தாராவுக்கு மறுப்பு என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்) புலன்களுக்கு புலப்படவில்லையெனின் அந்தப்பொருள் இல்லை என்பதுதான் பொருள். ஏதாவது ஒரு வித்தத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத பொருள் உண்டா உலகில்? இருந்தால் கூறுங்கள். அல்லது உடலுக்கு வெளியிலிருந்து உயிர் வருகிறது, உடலிலிருந்து வெளியில் செல்கிறது என்பதையாவது நிரூபியுங்கள். கருமுட்டையிலேயே உயிர் இருக்கிறது என்று இறை மறுப்பாளர்கள் கூறுவதாக நீங்களாகவே ஒரு கற்பனையான முடிவுக்கு வந்து அதன் வழியே உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தைக்கு மூன்று ஆண்டுகள் கழித்து தங்கை பிறந்த்தைக்கூறி ஆச்சரியப்பட்டு அதை இறைவனின் மகத்துவமாக காண்பிக்க முயலுகிறீர்கள். இது சாதாரணமாக அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிதான். விதைகளை பதப்படுத்தி வைத்திருந்து பின் விதைப்பதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? வெளியில் வைத்திருந்தால் அழுகி வீணாகிவிடும் தக்காளி குளிர்பெட்டிக்குள் வைத்திருந்தால் கெட்டுப்போகாமல் இருப்பதில்லையா? விந்தை தனியாக பாதுகாக்கிறார்கள் பெண்ணின் முட்டையை பாதுகாக்கிறார்கள், இரண்டையும் இணைத்தும் பாதுகாக்கலாம். கருப்பையில் தாயின் உடலிலிருந்து புரத்தத்தின் உதவியுடன் உருப்புக்களையும் இயக்கத்தையும் பெற்று உயிராக வெளியேறுகிறது.வளர்ச்சியடைந்தபின் தன் அசைவை நிருத்திக்கொண்டால் குழந்தை இறந்தே பிறந்தது என்று கூறும் மக்கள் வளர்ச்சியடைவதற்கு முன்பே அழிந்துவிட்டால் கரு கலைந்துவிட்டது என்று சொல்வார்கள். இந்த இரண்டு சொற்களின் பொருள் வித்தியாசத்தை புறிந்திருந்தால் ருசிகரத்தகவல்கள் எழுதும் தேவை உங்களுக்கு இருந்திருக்காது. மருத்துவ வல்லுனர்களின் உதவியும் தேவைப்பட்டிருக்காது.
மரணிப்பதற்கு முன்னால் அதாவது உங்கள் நம்பிக்கையின்படி இறைவன் உயிரைக்கைப்பற்றுவதற்ற்கு முன்னால் மூளைச்சாவு என்ற நிலை ஏற்ப்பட்டுவிட்டால் அந்த மனிதரிடமிருந்து உருப்புக்களை எடுத்து வேறு மனிதனுக்கு பொருத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதயம் துடிப்பதை கட்டுப்படுத்தும் பகுதியை தவிர மூளை மற்ற அனைத்துப்பகுதியின் செயல்பாட்டை இழந்துவிட்டால் உயிர் போவதுவரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. இந்த உடலிலிருந்து உருப்புகளை பெற்று வேறு மனிதனுக்கு பொருத்தி அவனை அந்த உடல் செயல்களை நிருத்தும்வரை வாழவைக்கலாம். காய்தல் உவத்தலின்றி இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப்பாருங்களேன்.
நண்பரே! தொடர் வேலை காரணமாக உடனுக்குடன் பதில் தா முடிவதில்லை. உங்கள் கேள்விகளுக்கும் முடிந்தவரை பதில் தா முயற்ச்சிக்கிறேன். நன்றி!
தோழர் செங்கொடியும் பரிணாம அறிவியலும்!
டார்வினின் பரிணாம அறிவியலுக்குள் புகுந்தால் சில நேரங்களில் படிக்கும் நாமே குழப்பத்தோடு வெளியில் வருவோம். இதுவரை இந்த துறையை அனைவரும் ஒத்துக் கொள்ளும் படியாக விளக்கமளித்த நபர்களே இல்லை எனலாம். அந்த குழப்பமும் சிக்கலும் நிறைந்த பரிணாமக் கொள்கையைப் பற்றி சில காலம் முன்பு நானும் இங்கு http://www.suvanappiriyan.blogspot.com/2006/03/blog-post.html பதிவாக இட்டிருந்தேன். இதைப் படித்த தோழர் செங்கொடி இது சம்பந்தமாக மேலும் விவாதிக்க என் தளத்துக்கு வாருங்களேன் என்று அழைப்பு விடுத்திருந்தார். தற்போதுள்ள வேலைப்பளுவில் அதற்க்கெல்லாம் நேரம் இருக்காது என்பதால் அவர் வலைப்பதிவை http://www.senkodi.multiply.com பார்வையிட்டதோடு விட்டு விட்டேன். கம்யூனிஷத்தில் பிடிப்புள்ளவர் ஆதலால் நிறைய படிக்கிறார் போல. நிறைய விபரங்களைத் தெரிந்தும் வைத்திருக்கிறார்.
சமீபத்தில் உயிர் சம்பந்தமாக நான் இட்ட பதிவில் – சுவனப்பிரியன்: உயிரைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்! உயிர் சம்பந்தமாக நாத்திகவாதிகள் வைக்கும் வாதத்துக்கு பல விளக்கங்களை இந்த பதிவு தந்திருக்கும். எனவேதான் பரிணாமவியலில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கும் இதிலும் விடை கிடைக்கும் என்ற ரீதியில் பதிவிட்டிருந்தேன். இதைப் பார்த்த செங்கொடி திரும்பவும்சுவனத்தென்றலுக்கு மறுப்பு « செங்கொடியின் சிறகுகள் ‘வாருங்களேன் விவாதிப்போம்’ என்று அழைத்துள்ளார். நான் முன்பே கூறியது போல் வருட முடிவில் வேலைப்பளுவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. எனவே எனக்கு உள்ள சில சந்தேகங்களை பின் வருமாறு பட்டியலிட்டுள்ளேன். தோழர் செங்கொடியோ அல்லது இது பற்றித் தெரிந்தவர்கள் விளக்கமளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
1. ‘ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்’ என்பது அறிவியலார் பொதுவாக ஒத்துக் கொண்ட உண்மை.
ஆனால் பரிணாமவியலோ உலகம் முழுவதும் உயிரற்றப் பொருட்களான கற்பாறைகள் மண்,வாயு ஆகியன நிரம்பி இருந்த போது காற்று, மழை, மற்றும் மின்னல் ஆகியவற்றின் பல பொருட்களின் கூட்டு விளைவால் உயிர் உண்டானது என்கிறது. இரண்டு கருத்தக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இதற்கான உங்களின் விளக்கம் என்ன?
2.ஜீன்களை ஆராய்ந்த அறிவியலார் மனித இனம் அனைத்தும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்து பிறகு பல்கிப் பெருகியதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி பரிணாமவியல் சொல்வது என்ன?
3. ‘ஆற்றலை ஒரு போதும் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆயினும் மாற்றி அமைக்கவே முடியும்’ – ஐன்ஸ்டீன்.
ஒரு பொருளைப் படைப்பதற்கு ஆற்றல் மிகவும் இன்றியமையாதது.மனிதனைப் படைத்தது இறைவன் தன்னகத்தே கொண்ட ஆற்றலினால் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். இல்லை… மனிதனாலும் படைக்க முடியும் என்கின்றனர் நாத்திகவாதிகளும் பரிணாமவியலாரும். இது உண்மையானால் அண்டசராசரங்கள் அடங்கிய இப் பேரண்டத்திலிருந்து எந்த ஒன்றையும் எவ்விதத்திலும் பயன்படுத்தாமல் சுத்த சூன்யத்திலிருந்து சுயமாக (இறைவன் படைப்புகளில் கை வைக்காது) சொந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு சிறிய அணுவையேனும் படைத்துக் காட்ட முடியுமா?
4.நமக்குள் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது? உயிரின் உதயம் எவ்வாறு நிகழ்கிறது? மனிதனின் இறப்புக்குப் பின் எங்கு செல்கிறது?
5.மனிதனுக்குப் பிறகு பரிணாமம் அடைந்து நாம் என்னவாகப் போகிறோம்? அது எப்போது என்பதையும் தெரிவிக்க முடியுமா?
6. எந்த ஒரு கோட்பாடும் நிரூபிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். டார்வினின் கோட்பாடுகளில் எத்தனை கோட்பாடுகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளன?
7.மனிதன் தனது உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால்தான் பெறுகிறான்.
உடல் வளர்ச்சி, உடல் அமைப்பில் மாறுதல் என்பதற்குத்தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறார். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் நிர்பந்தம் எது என்று பரிணாமவியல் கூறும் தத்துவம் என்ன?
பரிணாமவியலை முழுவதும் படித்தவனல்ல நான். எனக்குள் எழுந்த சந்தேகங்களை பட்டியலிட்டுள்ளேன். நான் தெளிவு பெற விளக்கமாக பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
தின மலர். அறிவியல் ஆயிரம்!
கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?
-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.
இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.
கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.
சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.
ஒரு நிமிடம் …. செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது…. இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்….இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு ‘தகவல்’ இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ….எது? யார?