ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?

ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள மனதனுக்கு மரணம் என்றால் அச்சம்தான். இயல்பான வாழ்க்கையில் முதுமை காரணமாகவோ, உடலை வதைக்கும் நோய் காரணமாகவோதான் பெரும்பான்மையினர் இறக்கிறார்கள். ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கத்திற்காக நடத்ததப்படும் போரில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இங்கு இறப்பு கொலையாக மாறி நிற்கிறது. ஈழத்தில் முல்லைத்தீவில் அடைக்கலம்புகுந்திருக்கும் மக்களை இப்படித்தான் இலங்கை ராணுவம் கொன்று வருகிறது. மரணத்தின் காரணங்களும், தோற்றுவாய்களும், தருணங்களும் இயற்கையால், அநீதியான இந்த சமூக அமைப்பால் செயல்படுகின்றன. இந்த சமூக அமைப்பின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் போராளிகளோ தமது உயிரை முன்னறிந்து இழப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒடுக்குமுறைகளைக் கண்டு குமுறும் உள்ளம் தனது உயிரை துச்சமென மதித்து துறப்பதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது. தனிப்பட்ட வாழக்கைப் பிரச்சினைகளுக்காகவும், சமூகக் காரணங்களுக்காகவும் தற்கொலை செய்வதில் பாரிய வேறுபாடு இருக்கிறது. அதே சமயம் இரண்டுமே தன்னுயிரை வதைக்கும் சமூகக் கொடுமைகளை இறப்பதன் மூலம் தண்டிக்க நினைக்கிறது. முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார். மரணத்துக்கு முந்தைய சில மணித்துளிகளுக்கு முன்னால் கூட மருத்துவர்களிடமும், போலீசிடமும் தனது அரசியல் கோரிக்கைகளை நிதானமாக பேசியிருக்கிறார். அவரது கடிதம் ஈழமக்களைக் காப்பாற்ற முடியாமல் இருக்கும் சிக்கலை எல்லாக் கோணங்களிலும் விவரிக்கிறது. துரோகம் செய்யும் இந்தியாவைக் கண்டித்தும், அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் சர்வதேச சமூகத்தை கேள்வி கேட்டும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை போர்க்குணமிக்க போராட்டத்தை துவங்குமாறு கோரியும், இந்தப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையையும் விவரிக்கும் அந்தக் கடிதத்தை படிக்கும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது. காவிரிப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியார் பிரச்சினையிலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பதை நினைவுபடுத்தும் முத்துக்குமார் தமிழகத்தில் இருக்கும் மற்ற மொழி பேசும் மக்களை சகோதரர்களாக விளித்து ஈழத்திற்கான நியாயத்தைப் புரிந்து கொண்டு ஆதரிக்குமாறு வேண்டுகிறார். இதன் மூலம் சிவசேனா, நவநிர்மான் சேனா போன்ற இனவெறிக்கட்சிகள் தமிழகத்தில் தலையெடுக்க முடியாமல் செய்யலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். தீக்காயங்களால் கருகியிருக்கும் தனதுஉடலை புதைக்காமல் அதை ஒரு அரசியல் குறியீடாக்கி போராடுமாறு மாணவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். வேலைக்காக தட்டச்சு செய்து வாழும் முத்துக்குமாரின் கைகள் தனது 2000 வார்த்தைகள் அடங்கிய மரண சாசனத்தை ஒரு அரசியல் கட்டுரையாக நிதானம் தவறாமல் அடித்திருக்கிறது. முத்துக்குமாருக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தாலும் அவர் இந்த தலைவர்களின் மோசடி நாடகத்தை புரிந்தே எழுதுகிறார். குறிப்பாக தி.மு.கவின் உணர்ச்சிப் பசப்பல்கள் வடிவேலு காமடியைவிட கீழாக இருப்பதாக கேலி செய்கிறார். இன்று வழக்கறிஞர்கள் தமிழகமெங்கும் நீதிமன்றங்களை புறக்கணித்து போராடுகின்றனர். தமிழக அளவில் கல்லூரி மாணவர்களும் போராடுகின்றனர். எனினும் போருக்கெதிராக தமிழகத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளையோ போராட்டங்களையோ இந்திய அரசு கடுகளவும் சட்டை செய்யவில்லை. எத்தனை ஆயிரம் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும், விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டும் வரையில் இந்தப் போரைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ராஜபக்சே அரசுக்கு உறுதுணையாக நிற்கிறது இந்திய அரசு. முல்லைத்தீவு பகுதியில் சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சில் ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், சிவிலியன்களுக்கான பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ள பகுதிகளில் மக்களுக்கு உணவோ, மருந்துப் பொருட்களோ இல்லை. அதுமட்டுமல்ல, பாதுகாப்புப் பகுதி என்று அறிவித்து விட்டு, அங்கே தஞ்சம் புகுந்துள்ள மக்களின் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது சிங்கள இராணுவம். இப்பகுதியின் மருத்துவமனை மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்களே காயமடைந்துள்ளனர். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய உயிரிழப்புகள் நேருவதாகக் கூறித் தனது குற்றங்களை மறைத்துக் கொள்கிறது சிங்கள அரசு. எனினும் இந்தியா, பாகிஸ்தான், சீனா முதல் அமெரிக்கா வரையிலான நாடுகளின் முழு ஆதரவோடு இந்தப் போரை சிங்கள அரசு நடத்திவருவதால், இந்தப் படுகொலைக்கு எதிராக சம்பிரதாயமான ஒரு கண்டனம் கூட யாரிடமிருந்தும் வெளிவரவில்லை. குறிப்பாக இந்தப் போரில் சிங்கள அரசு ஈட்டிவரும் வெற்றி குறித்து தமிழகத்தின் பார்ப்பன ஊடகங்கள் மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் திளைக்கின்றன. அந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘அப்பாவித் தமிழர்கள்’ போரினால் பாதிக்கப்படுவது குறித்து பெரிதும் கவலைப்படுவது போல நடிக்கின்றன. இந்தியா இலங்கைக்கு பீரங்கிகள் அனுப்பியிருக்கிறது என்பதும், அதுவும் தமிழகம் வழியாகவே அனுப்பப்பட்டிருக்கிறது என்பதும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. எனினும் “தமிழ்நாட்டிலிருந்து எந்தவித அரசியல் அழுத்தம் எழுந்தாலும் ராஜபக்சே நடத்தும் இந்தப் போரை எக்காரணம் கொண்டும் தடுப்பதில்லை என்ற முடிவில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று கூறுகிறது சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர். தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளும், தி.மு.க அரசும் நடத்தும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை. “வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் இலங்கை சென்றால் போதாது; வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்லவேண்டும்” என்ற கோரிக்கையை ஏதோ மிகப் பயங்கரமானதொரு கோரிக்கை போல வைத்தது திமுக அரசு. “பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார்” என்ற செய்தியை அன்பழகன் சட்டசபையில் தெரிவித்தவுடனே சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் பத்திரிகை செய்தியோ இந்தக் கேலிக்கூத்தை அம்பலமாக்கியிருக்கிறது. “புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் வைத்துவரும் கோரிக்கைக்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பெரிதும் வலியுறுத்திக் கூறினர்” என்று கூறுகிறது இந்து நாளேடு. “எங்களுடைய அழைப்பின் பேரில்தான் பிரணாப் முகர்ஜி இலங்கை வந்திருக்கிறார்” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள். (தி இந்து, ஜன, 28). “புலிகள் மீது இந்திய அரசுக்கு எவ்வித அனுதாபமும் கிடையாது. இந்த மோதலில் அப்பாவி மக்கள் பலியாகக் கூடாது என்பது மட்டுமே எமது கவலை” என்று கூறியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. இப்படியாக பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயம் என்பது திமுகவை சமாதானப் படுத்துவதற்கான ஒரு கண்துடைப்பு நடவடிக்கை கூட அல்ல என்பது அப்பட்டமாக அம்பலமாகிவிட்டது. ஈழத்தமிழர் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபினமானப் பிரச்சினையாகவும், இந்திய அரசின் கருணையை எதிர்பார்த்துக் காத்துநிற்கும் பிரச்சினையாகவும் தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகள் மாற்றினர். அதனை இந்திய ஆளும் வர்க்கமும் சிங்கள அரசும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டனர். “போர்நிறுத்தம் கிடையாது, சுயநிர்ணய உரிமையும் கிடையாது. இராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது மட்டும்தான் பிரச்சினை>” என்பதாக பிரச்சினை சுருங்கி விட்டது. “அவ்வாறு மக்கள் கொல்லப்படுவதற்கு யார் காரணம்? சிங்கள இராணுவத்தின் தாக்குதலா அல்லது மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் புலிகளா?” என்பது மட்டுமே இப்போது விவாதத்துக்கு உரிய பிரச்சினையாகச் சுருக்கப்பட்டு விட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை போர்நிறுத்தம் கோரி, மாணவர்கள் உள்ளிட்ட பல பிரிவினரின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெறுகின்றன. அநீதியான இந்தப்போரை நிறுத்தவேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. ஈழத்தமிழர் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபினமானப் பிரச்சினையாக தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகள் மாற்றிவிட்டதால், மேற்கூறிய மக்களின் உணர்வு ஒரு அரசியல் எழுச்சியாக வடிவெடுக்கவில்லை. அந்த அரசியல் எழுச்சியை எழுப்புவதுதான் நமக்குள்ள கடமை. சிங்கள அரசுக்கும், இந்திய மேலாதிக்க அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டத்தையும் மக்கள் மத்தியில் முடுக்கி விடுவதுதான் நமது பணி. முடங்க வேண்டிய நிர்ப்பந்தம் சந்தரப்பவாதிகளுக்கும் ஓட்டுக் கட்சி பிழைப்புவாதிகளுக்குமதான் இருக்கிறது. இது நாம் செயல்பட வேண்டிய தருணம். சிங்கள இனவெறி அரசுக்கும், அதனுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நாம் தீவிரமாக நடத்த வேண்டும். எமது அமைப்புக்கள் தமிழகமெங்கும் மக்களி மத்தியில் விரிவான பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதோடு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றன. இன்று சென்னையில் எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டச் செய்திகளையும், படங்களையும் வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.

நன்றி: வினவு வினை செய்

பிரணாப் இலங்கை சென்றது எதற்கு? பிணங்களை எண்ணிப்பார்க்கவா?

இலங்கை ராணுவம் நடத்தும் இனப்படுகொலை தடித்த தோலையும் ஊடுருவி ஐநாவை ஒப்புக்கெனும் குரல் கொடுக்க வைத்திருக்கிறது. இந்தியாவோ குடியரசுக்கொண்டாட்டங்களில் மூழ்கிக்கிடக்கிறது. தமிழ் மக்கள் எரிந்துகொண்டிருக்கையில் தமிழினத்தலைவர்(!) பிடில் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறார் இறுதிவேண்டுகோள் என்ற தலைப்பில். மாண்வர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், குடியரசுதினத்தை மறுத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருக்கிறார்கள் மக்கள். பலருக்கு புறியவில்லை அடுத்து எப்படி போராடுவதென்று? சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் புறியவில்லை, ஆயிரம் ஆயிரம் பேர்களை கொன்று குவிப்பவர்களுக்கு பத்துப்பேரின் பட்டினிப்போராட்டம் உரைக்கப்போவதில்லை என்று. ஆயுதங்கள் அனுப்பியதும், அதை இயக்க தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பியதும், களத்தில் பணியாற்ற ராணுவ அதிகாரிகளையே அனுப்பியதும் அம்பலப்பட்ட பின்னரும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் போராட்டங்கள் வீணானவை என்பது புறிந்திருக்கவேண்டும். பிரணாப் முகர்ஜி தன்னுடன் இந்திய அரசின் பரிசாக 120 கவசவாகனங்களை எடுத்துச்சென்றிருக்கும் பின்னராவது…….

பிராந்திய வல்லரசாக முறுக்கிக்கொண்டிருக்கும் இந்தியா சுய நிர்ணய உரிமைப்போராட்ட இயக்கங்களை நசுக்கியே வந்திருக்கிறது. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இன்னும் நசுக்கிக்கொண்டிருக்கிறது. இந்திய தரகு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்காக எதையும் செய்து கொடுக்கத்தயாராக இருக்கிறது மண்மோகன் அரசு. துரோக காங்கிரஸ் மட்டுமல்ல பாசிச பிஜேபி தொடங்கி போலிகள் ஊடாக அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இதற்கு விலக்கல்ல. இலங்கையை ஒட்டச்சுரண்டுவதற்கு அங்கே அமைதி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் ராஜபக்சேவுடன் இணைந்து கொண்டு நரவேட்டை ஆடிவருகிறார்கள். நக்சல்களையும் மாவோயிஸ்டுகளையும் எதிர்கொண்டுவரும் இந்திய அதிகாரவர்க்கத்திற்கு புலிகள் மேலோங்கிவருவதை தடுப்பதும், அவர்களை ஒழிப்பதும் தேவையாயிருக்கிறது, குறிப்பாக நேபாளப்புரட்சிக்குப்பிறகு. தமிழக ஓட்டுக்கட்சிகள் நடத்தும் போராட்டங்களெல்லாம் கிள்ளிவிட்டுப்பின் ஆட்டப்படும் காரியவாத தோட்டிலாட்டல்கள் என்றானபிறகு அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது போல் நடிக்கும் தேவையும் இல்லாமல் போய்விட்டது. சரி, இங்கு போராடுபவர்கள் சுயநிர்ணய உரிமை வேண்டியா போராடுகிறார்கள்? இலங்கை தமிழர் பிரச்சனையின் ஆழ அகலங்களை புறிந்துகொள்ளாமல் ஏதோ தமிழர்களை கொல்கிறார்களாம் என்று தன்னிரக்கம் மேலிட செயல்படுபவர்களால் எதை தீர்க்கமாக முன்வைக்க முடியும்? ஈழத்திற்கு குரல் கொடுப்பவர்களால் காஷ்மீரத்திற்கு குரல் கொடுக்க முடியுமா?

இலங்கையும் புதிய சூழலுடன் இருக்கிறது. முன்பிருந்த நிலமை அங்கில்லை. சற்றேரக்குறைய புலிகள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். இனி நேரடி யுத்தத்திற்கோ இலங்கை ராணுவத்தை பயங்கொள்ளவைக்கும் ராணுவ நடவடிக்கைக்கோ திரும்ப மிக நீண்ட காலம் பிடிக்கலாம் புலிகளுக்கு, அல்லது இயலாமலும் போகலாம். அதுவரை தற்கொலை தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளுமே வழியாகலாம். கர்ணாவைப்போல் ஒரு கோடாரிக்காம்பை பிடித்து அரசியல் தீர்வாய் காட்டிவிட்டு முதலாளித்துவப்படையெடுப்பும், இனஅழிப்பும் முன்னைக்காட்டிலும் தீவிரப்படுத்தப்படலாம். இது தான் முப்பதாண்டுகால போராட்டத்தின் முடிவா? உலகிலேயே பலம் மிகுந்த விடுதலை இயக்கம் என்று விதந்தோதப்பட்ட புலிகளின் ராணுவ பலம் ஏன் தமிழ் ஈழத்தை சாதிக்கமுடியவில்லை? புலிகளின் ராணுவ பலம் தான் இலங்கை தமிழர்களின் இன்றைய இழிநிலைக்கு காரணமாகி நிற்கிறது. தமிழ் மக்களின் எந்தப்போராட்ட வடிவமும் இன்று பயங்கரவாதமாக மொழிமாற்றம் பெற்றிருக்கிறது. மக்களை நம்பிப்போராடாமல் ஆயுதத்தை நம்பிப்போராடியதால்தான் நெருக்கடி வந்தபோது எதிர்கொள்ளமுடியாமல் தமிழ்நாட்டு ஓட்டுப்பொறுக்கிகளின் தினப்படி நாடகங்களை கண்டு எப்படியும் போரை நிறுத்திவிடுவார்கள் என நம்பினார்கள். இந்தியபேரரசு எங்களை கைவிடாது என்று அறிக்கையாய் விட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழ் ஈழம் தமிழ் மக்கள் என்பது போய் இந்துக்கள் என்று கூறியாவது தம் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமென்று பாசிச இந்து வெறியர்களுக்குக்கூட வால் பிடிக்கத்தயாராயினர். இவைகளெல்லாம் எதைத்தெளிவாக்குகிறது? ராணுவ பலத்தைவைத்து மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்துவிடமுடியும் என்பது அடிப்படையிலேயே தவறான வாதம் என்பதைத்தான். இன்று ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டும் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியும் நொருங்கிக்கிடக்கிறது ஈழம். இதை வெற்றி எனக்கொண்டாடும் சிங்கள் பேரினவாத அரசின் அழைப்பின்படி இலங்கை சென்றிருக்கிறார் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அதுவும் 120 கவசவாகனங்களை பரிசாக எடுத்துக்கொண்டு.

இந்த நிலையில் தமிழக மக்கள் செய்யவேண்டியது என்ன? இலங்கை தமிழ் மக்களை அணிதிரட்டி இன அழிப்புக்கு எதிராக சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டங்களை நடத்த உணர்வும் தம்பும் ஊட்டவேண்டிய கடமை தமிழக மக்களுக்கு இருக்கிறது. அதை எப்படிச்செய்வது? ஓட்டுக்கட்சிகள் அடிக்கும் கூத்துகளாக போராட்டங்களை குறுக்கிவிடாமல் நடுவண் அரசுக்கு நெருக்கடியை தரக்கூடிய போராட்டங்களை நடத்தவேண்டும். அத்தகைய போராட்டங்களை ஏற்கனவே புரட்சிகர அமைப்புகள் நடத்திக்கொண்டிருக்கின்றன. அவர்களோடு இணையட்டும் உங்கள் கரங்கள். அந்த முழக்கங்கள் இந்திய அரசை உலுக்கும் போது, இலங்கை த்தமிழர்கள் மீண்டெழுவர் பீனிக்ஸ் பறவையாய்.

இன்று குடியரசு தினமாம்


யாருக்கான குடியரசு இன்று?
குடிமக்களுக்கா?
மக்களை குடிக்கப் பழக்கும் அரசுதான் உண்டு
தீண்டாமை ஒழிந்திருக்கிறதா?
அறியாமை அகன்றிருக்கிறதா?
பஞ்சம் பசி மறைந்திருக்கிறதா?
என்ன கிடைத்திருக்கிறது இந்த குடியரசால்?
வாழும் உரிமையற்று தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள்,
மலம் உண்ணும் உரிமை தந்த திண்ணியங்கள்
பெருங்கற்காலத்தில் வாழச்செய்த கயர்லாஞ்சிகள்
இவைதானே குடியரசின் பரிசுகள்.
என்ன இருந்தாலும் சுதந்திரம்
வெள்ளையனிடமிருந்து பெறப்பட்டதாய்
வீரவசனம் பேசுவோரே
இதோ இந்த படங்களைப் பாருங்கள்
அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டில்
மக்கள் போராடிக்கொண்டிருந்தனர்
இவர்களின் சொகுசு வாழ்க்கைக்கோ
கொஞ்சமும் குறைவில்லை.
அன்று
மக்களின் கைகளால் சுதந்திரம் கிடைப்பதை தடுத்ததும் இவர்கள் தான்
இன்று
மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவிடாமல் தடுப்பதும் இவர்கள் தான்.
கடைசிப்படத்தை பாருங்கள்
மெக்காலே திமிருடன் எழுதியிருப்பதை
அன்று அவன் எழுதியதை
இன்று செயல்படுத்திக்கொண்டிருப்பவர்களை வீழ்த்தாமல்
குடியரசு தினமா?
வெட்கம்! வெட்கம்!

இந்த மாநாடு உங்களுக்காகத்தான் நண்பர்களே அனைவரும் வாருங்கள்

நிகழ்ச்சி நிரல்

நாள் : ஜனவரி 25, 2009, ஞாயிறுடம் :டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்

கருத்தரங்கம்:

காலை அமர்வு
காலை 10 – 1 மணி
தலைமை :
தோழர் அ. முகுந்தன்
மாநிலத் தலைவர்
புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி

சிறப்புரை:

தோழர் கவிஞர் துரை. சன்முகம்

மக்கள் கலை இலக்கியக்கழகம்

வழக்குரைஞர்: சி.பாலன்

உயர் நீதிமன்றம் பெங்களூரு

1-2 உணவு இடைவேளை

இரண்டாவது அமர்வு 2-5

சிறப்புரை :சு.ப.தங்கராசு

மாநில‌ பொதுச்செயலாளர் பு.ஜ.தொ.மு

பா.விஜயகுமார்

மாநில‌ பொருளாலர் பு.ஜ.தொ.மு

தமிழ் ஊடகப் பொய்யர்கள் கல்வித்தந்தை என்று பட்டம் சூட்டியுள்ள கள்ளச்சாராய ரவுடி ஜே.பி.ஆர் ன் ரவுடித்தனத்தை அடக்கி அய்யாவின் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்கத்தை கட்டி சாதித்ததை போன்று பல்வேறு போராட்டங்களுக்கு த‌லைமையேற்ற முன்னணி தோழர்களின் அனுபவங்களை அவர்களே கூறுகிறார்கள்.

நன்றியுரை: தோழர் இல.பழனி

மாலை 6 மணி

மாபெரும் பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சி‌‌

சிறப்புரை

தோழர் மருதையன்

மாநில‌ பொதுச்செயலாளர் மக்கள் கலை இலக்கியக்கழகம்

இறுதியாக‌ மக்கள் கலை இலக்கியக்கழக மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி‌‌ நடை பெறும்

பொதுக்கூட்டம் நடை பெறும் இடம்
அம்பத்தூர் OT மார்கெட்

தொடர்புக்கு

அ. முகுந்தன்: 94448 34519, 94444 42374

பாண்டியன்: 9941175876

அனைவரும் வருக‌

super links

சத்யம் மோசடி: முதலாளித்துவ பயங்கர வாதத்தின் முகவரி.


ஊடகங்களாலும், மக்களாலும் தற்போது அதிகம் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெயர் சத்யம். கடந்த சில மாதங்களாகவே  உலக அளவிலும் தொடர்ச்சியாகவே இந்தியாவிலும்  ஐ.டி துறை நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் ஆட்க்குறைப்பு, ஊதியம், சலுகைகள் குறைப்பு, நிறுவனங்களை மூடுவது என தொடர்கிறது. கணித்துறையில் இந்தியர்களை மிஞ்ச ஆளில்லை. அமெரிக்க மென்பொருள் துறையிலும், நாசா ஆய்வகத்திலும் இந்தியர்களே முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்பன போன்ற புனைவுகளால் கணினி குறித்து  படிப்பதுதான் அறிவு, ஐ.டி துறையில் இருப்பவர்கள் தான் அறிவாளிகள் என்ற பிம்பம் வலிந்து ஏற்படுத்தப்பட்டது. விளைவு ஐ.டியில் இருப்பவர்கள் தங்களை மேன் மக்களாக வரித்துக்கொள்ள கூடவே ஏனைய துறைகளைவிட அதிகமாக கொடுக்ப்பட்ட ஊதியமும்  சேர்ந்து கொள்ள நாங்கள் சம்பாதிக்கிறோம், செலவு செய்கிறோம் என்பது சமூக சீரழிவுகளை  விரைவாக்கியது. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழானது. அமெரிக்கா தொடங்கி இந்தியா வரையிலும் தற்கொலைச் செய்திகள். இது சத்யம் என்ற நிறுவனத்துடனும் ராமலிங்க ராஜு செய்த முறைகேடுகளுடனும் மட்டும் தொடர்பு கொண்டதா?

சத்யம் நிறுவனம் தன்னுடைய லாப மதிப்பை பொய்யாக உயர்த்திக்காட்டி  பங்குச்சந்தையில் தன்னுடைய மதிப்பை நிலை நிறுத்தி அதன் மூலம் முதலீட்டாளார்களை   முதலீடு செய்ய வைத்ததுதான் மோசடியாக பேசப்படுகிறது என்றால் பங்குச்சந்தையின்  மதிப்பு பல்வேறு காரணங்களுக்காக வீழும் போதெல்லாம் அரசே தன்னுடைய( தனியார் மயமாக்கியது போக மிச்சமிருக்கும்) பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் சந்தையில்  முதலீடு செய்யவைத்து  செயற்கையாக வீழ்ச்சியடையாமல் நிலை நிறுத்தியதே, இதன் பெயர் என்ன?

இது போன்ற மோசடிகள் நடப்பது இதுதான் முதல் முறையா? தொண்னூருகளில் ஹர்சத் மேத்தா தொடங்கி பல்வேறு சிறிதும் பெரிதுமான மோசடிகளும் ஊழல் புகார்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  இவைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட செபி போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

இப்போது ஒரு சத்யம்  நிறுவனம் மோசடி செய்துவிட்டது என்பது உறுதியாகி விட்ட நிலையில்  இதற்கு முன்னர் ஊடகங்களாலும் ஏனைய செய்தி அமைப்புகளாலும்  சத்யம் போலவே வித்ந்தோதப்பட்ட ஏனைய நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ்  போன்றவைகளும் இது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை என எப்படி உறுதி செய்து கொள்வது?

இதுபோன்றா கேள்விகளெல்லாம் ஒரு இடத்திலயே மையம் கொண்டுள்ளன. அதுதான் முதலாளித்துவம். முதலாளித்துவம் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள எந்த வழிகளிலும் பயணிக்கும் என்பதற்கு அண்மை எடுத்துக்காட்டுதான் சத்யம். தன்னுடைய நிறுவனத்திற்கான லாபத்திற்காக இத்தைகைய முறைகேடுகளில் ஈடுபடாத நிறுவனம் என்று உலகத்தில் எதுவும் இல்லை. இதற்கு மேலும் இதை மறைமுகமாக செய்யமுடியாது  எனும் போது சட்டத்தை மாற்றுவதுதான் அவர்கள் நடைமுறையே தவிர தங்கள் செயல்களை மாற்றுவதல்ல.

இப்போது பெயில் அவுட் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறது அரசு. ஊழல் செய்த  நிறுவனத்தை காப்பதற்கு  மக்கள் வரிப்பணம் ஏன் கொடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக அதில் பணிபுரியும் 53000 பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை முன்வைக்கும் அறிவு ஜீவிகள்.  நாட்டில்  லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்ட போது எங்கே போயிருந்தார்கள்.  பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டபோதும்,  தங்கள் உரிமைகளுக்காக தொழிலாளர்கள்  போராட்டம்  நடத்தியபோது, தொழிற்சாலைகள் மூடப்பட்டப்போதும், வேலையிழந்து நடுத்தெருவில் வீசி எறியப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஒன்றுமில்லை.

தற்கொலைப்படை தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் மட்டும் தான் பயங்கர வாதமா? உலகில் 1800 கோடி பேருக்கு உணவிருக்க உலகின் மொத்த மக்கட்தொகையே 650 கோடிதான். ஆனாலும் 300 கோடிக்கும் மேற்பட்டோர் பட்டினியால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களே இது பயங்கர வாதமில்லையா? உயிர் காக்கும் மருந்துகளைக்  கூட    தங்களின் லாபவெறிக்கான பண்டமாக பார்ப்பதால் ஆண்டுதோறும் ஒரு கோடிப் பேர் இறந்து கொண்டிருக்கிறார்களே இது பயங்கர  வாதமில்லையா?

பசுமைப்புரட்சியால் விவசாயிகள் விவசாயத்தை இழந்து நகரங்களை நோக்கி நகர்ந்தனர். உதிரித் தொழிலாளிகளான   அவர்களை காட்டி இருக்கும்  தொழிலாளிகளின் ஊதியம் குறைக்கப்பட்டது.   இப்படி விரட்டப்பட்டவர்கள் கடைகளையும்  சிறு தொழில்களையும்  தொடங்கினால்  வாட் வரி வந்து வதைத்தது.  சில்லறை வியாபாரமாவது  செய்யலாமென்றால் ரிலையன்ஸ் வந்து மிரட்டியது.  கோடிக்கணக்கான  தொழிலாளர்கள்  இப்படி உழன்று கொண்டிருக்கும் வேளையில் சத்யத்தின்  53000 தொழிலாளர்களைப்பற்றி  மட்டும் கவலைப்படுவதும் அமெரிக்க அதிபருட‌ன் சமமாக உட்காந்து பேசும்   ராமலிங்க ராஜு  இப்போது சிறையில்  திருடர்களுன் அமர்ந்துகொண்டிருக்கிறார் என்று  பரிதாபப்படுவதும் பயங்கரவாதமில்லையா? ஆம் இது பயங்கர வாதம்தான். முதலாளித்துவ பயங்கரவாதம். இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தை  சகித்துக்கொண்டு வாழ நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். முதலாளித்துவ  பயங்கரவாதத்தை இயற்கை சீற்றங்களாகவும்  இயற்கையான மரணங்களாகவும் பார்க்குமாறு  நாம் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

இதை மேலும்  விரிவான தளத்தில் புரிந்து கொள்வதற்கும்  எதிர்த்து போராடும் வலிமை பெறுவதற்கும்  உங்களை அழைக்கிறது முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு.

வாருங்கள்  ஜனவரி 25 ல்   அம்பத்தூரை நோக்கி.

சிபிஎம் போலிகளும் பெரியாரிய பிழைப்புவாதிகளும்: இதோ ஒரு சவுக்கடி.

நெய்யாறு கேரள அடாவடியும் சிபிஎம் எடுபிடியும் என்ற தலைப்பில் அண்மையில் இட்ட ஒரு பதிவிற்கு விஜிடன் லதிப் எனும் நண்பர் ஒருவர் தனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை பின்னூட்டமாக இட்டு விளக்கம் கேட்டிருந்தார்.அந்த பதிவையும் மகஇகவே இதோ உனக்கு ஒரு சாவுமணி என்ற தலைப்பிலான பின்னூட்டத்தையும் காண இங்கே சொடுக்கவும்.

மதவாதிகளிடம் பேசும் வாய்ப்புகளில் நாம் எடுத்து வைக்கும் அறிவியல் ரீதியிலான வாதங்களை மறுக்கமுடியாமல் கண்களில் கோபம் தெறிக்கும், உதடுகள் துடிக்கும். ஆனால் வார்த்தைகள் வராது. அது போன்றதொரு நடுக்கம்தான் இந்த பின்னூட்டத்தில் தெரிகிறது. எடுத்துவைக்கும் விமர்சனங்களுக்கு விளக்கமளிக்க வக்கற்றவர்கள் அவர்களை விமர்சியுங்கள் இவர்களை விமர்சியுங்கள் என்றெல்லாம் பிதற்றுவது சிறுபிள்ளைத்தனமானது. போலிகள் ஏன் போலிகளாக இருக்கிறார்கள்? கம்யூனிசத்தின் அடிப்படைக்கூறுகள் எதுவும் இல்லாமல் பெயரில் மட்டும் கம்யூனிசத்தை வைத்துக்கொண்டு இருப்பதால்தான் போலிகள். இந்த கழிசடை ஓட்டுப்பொறுக்கிகளின் செயல்பாடுகளை கண்டு மக்களுக்குள் இயல்பாகவே கம்யூனிசம் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் போலிகளுக்கோ அவர்களோடு இருப்பதனால் போலிகளாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதாம். அதுசரி பூவாக இருந்தால் நாரையும் மணக்கச்செய்யும் மூக்கு நீண்ட பிறவிகளல்லவா அதனால் தான் கன்றுகளின் உணவை மாற்றுகிறது. இருந்தாலும் முதல் வரியிலேயே போலிகள் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்ததற்கு நன்றி. அடுத்து போலிகள் மாநில உணர்வோடு இருக்கிறார்களா? கேரள போலிகள் மாநில உணர்வோடு இருப்பதனால் தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்பதை மாநில உணர்வு என்று கொண்டாலும் அதே பிரச்சனையில் இங்குள்ளவர்கள் எந்த மாநில உணர்வோடு இருந்தார்கள்? கேரளமாநில உணர்வோடு அவர்கள் தண்ணீர் தர மறுத்தால் தமிழ்நாடு மாநில உணர்வோடு இவர்கள் தண்ணீர் கேட்டு போராடியிருக்கவேண்டுமல்லவா? சேலம் ரயில்வே கோட்ட விவகாரத்தில் எந்த மாநில உணர்வோடு ஊமையானார்கள்? கடல்சார் பழ்கலைகழக விவகாரத்தில் எந்த மாநில உணர்வோடு பாராளுமன்றத்தில் வாக்களிக்கமறுத்தார்கள்? பெல்லார்மினும் மோகனும் அடுத்தமுறை கொச்சியிலும் கோழிக்கோட்டிலுமா போட்டியிடப் போகிறார்கள்?

எது மண்ணுக்கேற்ற புரட்சி? மேற்குவங்கம் சிங்கூரிலும் நந்திகிராமிலும் போராடிய உழைக்கும் மக்களை கட்சிக்குண்டர்களைக் கொண்டும் போலீஸ் போக்கிரிகளைக் கொண்டும் கொன்றொழித்தார்களே அதுதான் மண்ணுக்கேற்ற புரட்சியா? பார்ப்பன பயங்கரவாதி ஜெயேந்திரனை அரசு மரியாதையுடன் கேரளாவிற்கு வரவேற்றார்களே அதுதான் மண்ணுக்கேற்ற புரட்சியா? இல்லை கோஷ்டிசண்டையில் அழுகி நாறுவதுதான் மண்ணுக்கேற்ற புரட்சியா? குறை சொல்கிறார்கள் என்று ஒப்பாரி வைப்பதை விட கூறப்பட்ட விமர்சனத்திற்கு அறிவு நேர்மையோடு பதில் கூற முயற்சி செய்யுங்கள். இன்னமும் புரட்சியை நேசிக்கின்றவர்கள் போலிகளின் அணியில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் கூர்மையான விமர்சனங்களினூடாக அவர்களை சிந்திக்கத்தூண்டுகிறோம். அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக போன்ற கழிசடைகளை விமர்சிக்கும் அளவிற்குதான் உங்களையும் விமர்சிக்கவேண்டும் என்றால் முதலில் பெயரிலுள்ள கம்யூனிசத்தை எடுத்துவிடுங்கள் அதற்கு பதிலாக கழுதை முன்னேற்ற சங்கம், கட்டெறும்பு முற்போக்கு அணி என்று ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களை விமர்சிக்கும் இதே அளவிற்கு உங்களையும் விமர்சிக்கலாம்.

பெரியாரின் பணியை அவரின் இறப்பிற்கு பிறகும் செய்துவருகின்ற தமிழர் தலைவர் வீரமணியாம். பெரியாரின் சிந்தனைகளையும் குடியரசு இதழில் அவர் எழுதியவற்றையும் பண்டமாக்கி தனது சொத்தாக்கிக்கொண்டவீரமணிக்கு, பெரியார் தி.கவுக்கு எதிரான வழக்கில் தன்னை ஒரு இந்து என்று குறிப்பிட்ட வீரமணிக்கு (அல்லது கோழைமணிக்கு) பெரியார் பெயரை உச்சரிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது? வாழ்வியல் சிந்தனைகள் என்ற பெயரில் நிலபிரபுத்துவ ஒழுக்கநெறிகளை தூசுதட்டி முதலாளித்துவத்திற்கேற்ப துடைத்து மெருகேற்றிக்கொடுப்பதுதான் பெரியார் இட்ட பணியா? பெரியார் திடலில் சுவிசேஷக் கூட்டங்கள் நடத்துவதுதான் பெரியாரின் இயக்கத்தை வளர்க்கும் வழியா?

இயக்கம் என்ற பெயரில் மூளையை கறை படுத்தும் செக்குச் சுழற்சியிலிருந்து விடுபட்டு மார்க்சிய, மெய்யான பெரியாரிய சிந்தனைகளுக்குத் திரும்புங்கள். அது தான் உங்கள் பைத்தியத்திற்கு சிறந்த மருந்து.

லாரிகள் வேலைநிருத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது முடிவா? தொடக்கமா?

எட்டு நாட்களாக நீடித்த லாரி உரிமையாளர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வேலைநிருத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது கண்டு மக்கள் நிம்மதியடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண்டிகை காலங்களில் லாரிகள் வேலைநிருத்தத்தினால் ஏற்பட்ட பொருட்தட்டுப்பாடும், விலையேற்றமும் மக்களை வதைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக பண்டிகைகள் என்பது ஓய்வின்றி உழைத்துக்களைக்கும் மக்களுக்கு கொஞ்சம் இழைப்பாறலை தருகின்ற இடைவெளி. அந்த இடைவெளியில் உண‌வுப்பொருட்கள் உள்ளிட்ட தட்டுப்பாடும் விலையேற்றமும் அவர்களை கலக்கமடையச்செய்தன. ஆனால் மத்தியதரவர்க்கத்திற்கோ காரில் சென்று ரிலையன்ஸ் பிரஷில்(!) வாங்கி பொம்மைகளைப்போல் குளிர்பெட்டிகளில் அடுக்கிவைத்திருப்பதால் பெட்ரோலும் எரிவாயு உருளையுமே அவர்கள் பிரச்சனைகளாக இருந்தன. எந்த அரசு வந்தாலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் பொருளாதார கொள்கைகளால் மக்கள் வாழ்விலிருந்து பிய்த்தெறியப்பட்டு அவதியுற்றுவரும் போதும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வரிவிதிப்புகள், எல்லாவற்றையும் தனியார்மயமாக்கல் போன்றவைகளால்  மக்கள் அவதியுற்று வரும் போதும் அவற்றையெல்லம் கண்டு கொள்ளாத ஊடகங்கள் போராட்டம், வேலைநிருத்தம் என்றால் மட்டும் மக்கள் அவதியுறுவதாக கொட்டைஎழுத்துகளில் வருத்தப்பட்டு பாரம்சுமக்கின்றன.

அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் டீசலுக்கு பத்து ரூபாய் விலைகுறைப்பு, வரிகுறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிருத்தி வேலைநிருத்தத்தை அறிவித்தபோது அதை கண்டு கொள்ளாத நடுவண் அரசு பின்னர் அத்தியாவசியப்பொருட்கள் சட்டத்தைக்காட்டி மிரட்டியது. தலைவர்களை கைதுசெய்தது. சில மாநிலங்கள் கூட எஸ்மா போன்ற சட்டங்களை கையிலெடுத்தது. போராட்டத்தை கைவிட்டால்தான் பேச்சுவார்த்தை என்று முதலில் விரைப்புக்காட்டிவிட்டு பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியது. கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பையடுத்து எட்டுநாள் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

கச்சாஎண்ணெய் பீய்ப்பாய் ஒன்றுக்கு 150 டாலரை தொட்டபோது ஏறியவிலை தற்போது 40 டாலராய் இருக்கும் போதும் அதற்க்குத்தகுந்ததுபோல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கிறது அரசு. எண்ணெய் நிருவனங்கள் இழப்பை சந்திக்கின்றன என்ற இசைத்தட்டு கீரல் விழுந்த பிறகும் மாற்றப்படவேயில்லை. மானியம் கொடுக்கப்படுவதினால்தான் இந்தவிலையிலாவது விற்கப்பட‌ முடிகிறது என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. உண்மையில் எண்ணெயின் மீது விதிக்கப்படும் வரிகளால்தான் இந்தியப்பொருளாதாரமே உயிருடனிருக்கிறது. இறக்குமதிவரி உள்ளிட்டு எண்ணெயின் மீது விதிக்கப்படும் வரிகள் எண்ணெயின் சர்வதேச விலையைவிட ஒன்றரை மடங்கு அதிகம். இந்தியாவின் மொத்த  வரிவருவாயில் எண்ணெய்வர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த பெரும் பங்களிப்பாகும். பொருளாதாரத்தில் பாதாளத்தில் இருக்கும் பாக்கிஸ்தானில் கூட லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கப்படும்போது இந்தியாவால் ஏன் முடியாது? ஏனென்றால், அரசின் ஊதாரித்தனமான செலவுகளை எண்ணெய்வரிகள் தான் ஈடுகட்டுகிறது. உண்மை இப்படியிருக்கையில் லிட்டருக்கு பத்து ரூபாய் குறையுங்கள் என்று கோரிப்போராடுவது எப்படி சரியானதாக இருக்கும்? எண்ணெய்விலையை உச்சியில் வைத்திருக்கும் வரிவிதிப்பு முறையை நீக்குவதற்கு அல்லவா போராடவேண்டும். நீங்கள் என்ன விமானம்  ஓட்டி வாழ்க்கை நடத்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு மட்டும் விலையை குறைப்பதற்கு?  லாரி ஓட்டி சொகுசாக இருப்பவ‌ர்களாயிற்றே.

உங்கள் போராட்டத்தின் விளைவுகள் உழைக்கும் மக்களை பாதித்த அளவிற்கு உங்கள் கோரிக்கைகள் அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. உழைக்கும் மக்களோடு ஒப்பிடுகையில் நிறைவாக இருக்கும் உங்களை தன்னுடைய தாக்குதலிருந்து தள்ளிவைத்திருக்கிறதா உலகமயம்? பின் ஏன் நீங்கள் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை தள்ளிவைக்கவேண்டும்.

வேலைநிருத்தம் திரும்பப்பெறப்பட்டது இதற்கான தொடக்கமாய் அமையவேண்டும்.

%d bloggers like this: