இலங்கையும் இஸ்ரேலும்: இந்தியாவின் இரட்டை வேடம்

பயங்கரவாதத்திற்கு எதிரான போர். மனிதகுலத்திற்கு எதிரான அத்தனை வெறிச்செயல்களையும் இந்த ஒரு சொற்றொடர் நியாயப்படுத்திவிட முடிகிறது. கடந்த சனிக்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்கும் மேலாக இஸ்ரேலிய வான்படை விமானங்கள் காசா பகுதியில் தொடர்ந்து குண்டுவீசி நானூறு பேர்கள் வரை குழந்தைகள் பெண்கள் உட்பட கொன்றுகுவித்திருக்கிறது. ஆயிரம் பேர்களுக்குமேல் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அண்மையில் இவ்வாளவு கொடூரமான போரை பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்தியதேயில்லை என்று கூறுமளவுக்கு உக்கிரமான தாக்குதல் நடந்துவருகிறது. ராணுவம் தரைவழித் தாக்குதலுக்கும் ஆயத்தமாகிவருவதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஒரு கசப்பான முடிவை நெருங்கும் வரை யுத்தம் தொடரும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஹுத் பராக் அறிவித்திருக்கிறார். ஆனாலும் இது பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போரல்ல, ஹமாஸ் எனும் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்தான் இது ஆகையால் இது பயங்கரத்திற்கு எதிரான போர். ஹமாஸ் இயக்கம் ஏவுகணை வீசி இரண்டு இஸ்ரேலியர்களை கொன்றதன் எதிர்வினைதான் இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரைன் காரணமாம். நம்புங்கள். கடந்த அறுபது ஆண்டுகளாக இஸ்ரேல் என்ற தேசம் திணிக்கப்பட்டதிலிருந்து இந்த பயங்கரவாதத்திற்கெதிரான போர் நடந்துகொண்டே இருக்கிறது. எது பயங்கரவாதம்?

ஆங்கிலேய காலனியாதிக்கத்திற்கு அந்தப்பகுதி உட்பட்டிருந்தபோது குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட இர்குன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பின்னர் பிரதமராகவும் ஆன இஸ்ரேல் எனும் பயங்கரவாத நாடு பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்கிறதா? சூழ இருக்கும் அரபு நாடுகள் எண்ணெய் கண்டு செழிப்பாய் உருமாறியிருக்க விவசாயத்திற்கும் வழியில்லாத பாலஸ்தீன அரபிகளை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு விரட்டியடித்து யூதக்குடியேற்றங்களை அமைத்ததைவிட வேறு என்ன பயங்கரவாதத்தை ஏவிட முடியும் இஸ்ரேல் மீது? இழந்த நிலத்தை மீட்டெடுக்க போராடும் போராளிகள் பயங்கரவாதிகள் என்றால் அபகரித்துக்கொண்டவர்களின் பெயர் என்ன?

அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான ரவுடி நாட்டை பிரிட்டீஷ் அரசும் அமெரிக்காவும் பாலஸ்தீனில் திணித்ததன் பின்னணியில் யூததேசியம் மட்டும் இருக்கவில்லை. அது கண்டெடுக்கப்பட்ட மத்தியதரைக்கடல் நாடுகளின் எண்ணெய் வளத்தோடு பின்னிப்பிணந்தது. ஐந்து நாளாய் தொடரும் இந்தப் போரின் உடனடி விளைவாய் 34 டாலருக்கு இறங்கியிருந்த கச்சா எண்ணெயின் விலை 40 டாலராக ஏறிவிட்டது . வீழ்ந்த எண்ணெய் விலையை ஏற்றுவதற்கும், ஈரானை தாக்குவதற்கான ஒரு முன்னோட்டப்போராகவும் நடத்தப்படும் இந்தப்போரின் தொடக்க காரணம் தான் ஹமாஸின் ஏவுகணை வீச்சே தவிர போருக்கான காரணம் அல்ல. பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காகத்தான் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது என்று அப்பாவித்தனமாக நம்பும் ஏமாளிகள் வேண்டுமானால் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்திருப்பதாக நம்பிக்கொள்ளட்டும்.

இதையேதான் மகிந்த ராஜபக்சேவும் சொல்கிறார். நாங்கள் நடத்தும்போர் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத்தானேயன்றி தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்று. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நிருத்தம் இருந்த ஓரிரண்டு ஆண்டுகளைத்தவிர குண்டுமழை பொழிந்துவருகிறது சிங்கள ராணுவம். முன்னாள் அமைச்சர் சமரவீர வியட்நாமில் வீசப்பட்ட குண்டுகளை விட வடக்குப்பகுதிகளில் வீசப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை அதிகம் என்று போட்டு உடைக்கிறார். இங்குள்ள காங்கிரஸ் காடைகளோ எங்கள் தலைவனை கொன்றவர்களை மன்னிக்கமாட்டோம் என்று குதிக்கிறார்கள். தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளோ சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி மனிதச்சங்கிலி நின்று நடுவண் அரசிடம் போர் நிருத்தக்கோரிக்கை வைப்பதன் மூலம் போரை நடத்துவதே இந்திய அரசுதான் என்பதை தந்திரமாக மறைக்கிறார்கள். போர் நிருத்தம் செய்து தமிழர்களுக்கு உரிய அதிகாரத்துடன் மாகாண சபை அமைக்கப்படவேண்டும் என்கிறார்கள். சிங்கள அரசோ விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டு மாகாணாரசை அமைக்கிறோம் என்கிறது. இலங்கை தமிழர்களுக்குச்செய்யும் மனிதாபிமான உதவிகளைக்கூட விடுதலைப்புலிகள் என்ற எச்சரிகையுடனே பார்க்கவிரும்புகிறோம் என்று கூறும் காங்கிரஸ் களவாணிகள் ராஜீவை கொன்றதன் மூலம் தமிழர்களுக்கு அமைத்துத்தந்த வாழ்வை கெடுத்துக்கொண்டனர் விடுதலைப்புலிகள் என்று காரணம் தேடுகிறார்கள். எது தமிழர்களுக்கான வாழ்வு? 13ஆவது திருத்தமா? நாடாளுமன்றம் மட்டுமே சட்டமியற்றக்கூடிய அதிகாரம் பெற்ற அமைப்பு. கீழுள்ள நிர்வாக அமைப்புகளுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும் 76வது பிரிவை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு அதிகாரம் என்று கூறுவது அயோக்கியத்தனம் அல்லவா? ஒரு காவலரை இடமாற்றம் செய்யக்கூட அதிகாரம் இல்லை மாகாண சபைக்கு என்று எள்ளி நகையாடுகிறார் அந்த மாகாண சபையின் அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லா என்பவர். ஒருமித்த சிரிலங்க அரசமைப்பு சட்டத்தின் கீழ் அதிகாரப்பகிர்வு என்பது சாத்தியமில்லை என்று வெளிப்படுத்தியிருக்கிறார் இலங்கையின் முன்னாள் சட்ட அமைச்சர் ஜி எல் பெய்ரிஸ். இதைத்தான் தமிழர்களுக்கான வாழ்வு என்று காட்டி ஏமாற்றும் காங்கிரஸ் அரசிடம் போர் நிருத்தக்கோரிக்கை வைக்கச்சொல்லி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கசப்பான முடிவை நெருங்கும் வரை யுத்தம் தொடரும் என்கிறார் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர். கடைசிப்போராளி இருக்கும் வரை போர் தொடரும் என்கிறார் ராஜ பக்சே. இது அதிகமானது, போர் நிருத்தப்படவேண்டும் என்று தேர்ந்தெடுத்த வார்த்தைகள் மூலம் இஸ்ரேலை கண்டிக்கும் இந்திய அரசு சிங்கள அரசை கண்டிக்க மறுப்பதேன். சோமாலியக்கடற்கொள்ளயர்களிடமிருந்து சரக்குக்கப்பல்களை காக்க கடற்படை கப்பல்களை அனுப்பிய இந்திய அரசு தமிழக மீனவர்களை காக்க ஒரு படகைக்கூட அனுப்பாத மர்மம் என்ன? பிராந்திய வல்லரசாவதற்கு எந்த நிலையையும் எடுக்கத்தயாராக இருக்கும் இந்தியாவின் கபட வேடத்தை மக்கள் புரிந்து கொள்வது இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கிறது.

Advertisements

2 பதில்கள்

  1. ஒபாமா காசா படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்காததற்கு அரேபியர்கள் வருந்துவதாக நேற்று பத்திரிக்கையில் படித்தேன் ,எப்படி ஈழப்படு கொலைக்கு இந்தியா வருந்தாதோ அதே போல் காசா படு கொலைக்கு அமெரிக்கா வருந்தாது,ஏனெனில் அமெரிக்கா காசாவிலும்,இந்தியா ஈழத்திலும் போரை நடத்தி வருகின்றது,
    பத்திரிக்கைகளோ காசா படு கொலையை தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கின்றன .பாக் மீது இந்தியா உடனே போரை தொடங்க வலியுறுத்துகின்றன. இந்திய அரசை எதிர்ப்பது என்பது அதன் உறுப்புக்களான ஊடகங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

    கலகம்

  2. தகவல்களுக்கு நன்றி.

    உண்மைகள் எம்மைத் தேடி வரா. நாம்தான் தேடிப் போக வேண்டும்.

    விழிப்பாய் இருப்போம்!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: