உப்புநீர் தாகம்

ஐயோ வன்முறை
ஆளும்கட்சி அராஜகம்
இது அம்மா.
ரூபாய்க்கு அரிசி
இலவசப்பொங்கல்
இது அப்பா.
இரண்டும் ஊழல் கட்சிகள்
இருண்டதை வெளிச்சமாக்குவேன்
இது ஒரு நடிகர்.
பீகாரா? தமிழகமா?
துணை ராணுவம் வேண்டும்
இது தேர்தல் கமிசன்.
ஒற்றைத்தொகுதிக்கு
ஒராயிரம் கூத்துகள்.
தினம் ஒரு கோடிக்கு
சாராய விற்பனை
ஒரு வோட்டு என்ன விலை?
ஐநூறா? ஆயிரமா?
பெரு ஊரா? நகரமா?
இதுவரை தெரியாது
திருமங்கலம்
தேர்தல் வந்ததால்
வழிவிடா வாகனமும்
திருவிழா நெருக்கடியும்.
இரைஞ்சு பேசியும் கேட்கவில்லை
இழவுக்கும் கூட…..
கதவு சாத்தியும் தாழவில்லை
வாக்காளப்பெருங்குடி மக்களே.
வாக்களிக்க மறவாதீர்
ஜனநாயக உரிமையாம்
எண்ணியதை பேசினால்
தடா முதல் பொடா வரை.
வேண்டாமென்றால் முடியாது
ஆயிரம் பொதுக்கூட்டம்
நம் பிரச்சனைக்கு கூடிப்பேச‌
போலீசுக்கு எழுதிக்கொடு.
மாரிக்கால மேகமாய்
பணமழை பொழிகிறது
ஒன்பதாம்தேதி கடந்ததும்
பாலைவன மேகமாய்
கண்முறைத்துப்பார்க்கும்.
பாசனத்திற்கு கரண்டில்லை
படிப்பதற்கு வெளிச்சமில்லை
பலநூறு விளம்பரமோ
வீதியில்
வெளிச்சமாய் சிரிக்கிறது.
ஆயிரமா? ரெண்டாயிரமா?
கேட்காமல் திணிக்கிறார்கள்
உழைத்த கூலி கேட்டால்
முதுகில் துப்பாக்கிச்சூடு.
உயிருக்கு உத்திரவாதமில்லை
இங்கே
வெளிநாட்டு முதலாளி வந்தால்
கொள்ளைக்கு உத்திரவாதம்.
தேர்தல் பல வந்தும்
மாறி மாறி ஓட்டுப்போட்டும்
விடிவு வந்ததா?
அள்ளிப்பருகினால் கடல்நீர்
தாகம் தீர்க்குமா?
வாழும் வசதிகளில்
வாழ்க்கை நிலைகளில்
ஆயிரம் பேதமிருக்கையில்
எல்லோருக்கும் ஜனநாயகம்
எப்படி வரும்?
டாடா அம்பானி
மன்மோகன் கூட‌
ஓட்டுப்போட்டதில்லை
நாம் மட்டும் வரிசையிலா?
போராடக்கற்போம்
வாழ்வே போராட்டமான
நமக்கு
வாழ்வதற்காய் போராட்டம்
புதிதொன்றுமில்லை பழகுவோம்
ஓட்டை  மறுத்து முதலில்
கொள்ளை லாபம் எதிர்த்து முடிவில்.
வர்க்கமாய் சேர்ந்துவிட்டால்
வளங்களெல்லாம் நமக்கே
உளியை கையில் ஏந்திவிட்டால்
மலையும் கூட உழக்கே.

Advertisements

2 பதில்கள்

 1. //ஆயிரமா? ரெண்டாயிரமா?
  கேட்காமல் திணிக்கிறார்கள்
  உழைத்த கூலி கேட்டால்
  முதுகில் துப்பாக்கிச்சூடு.//

  சிபிஎம்- ஓட்டும் கேக்கராங்க….
  துப்பாக்கி சூடும் வாங்கிராங்க….
  சிறுதாவூர் நிலத்தையும் மீக்கராங்க…
  ஏகாதிபத்தியத்தையும் எதிர்பாங்களாம்…
  சேதுசமுத்தரத்தையும் நிரைவேத்துவாங்களாம்….
  அதுக்காக போயஸ் தோட்டத்துலையும் தூங்குவாங்களாம்….

  எங்கள வச்சு ‘காமெடி , கீமெடி பன்னலயே…..

  – சென்னைத்தமிழன்

 2. 89 சதவிகித வாக்கு பதிவு,
  திமுக 79000
  அதிமுக 40000
  தேமுதிக 12,……
  சமக800…..
  வரலாறு காணாத வெற்றி
  எல்லா முடிவுகளும்
  அறிவிக்கப்பட்டுவிட்டன
  மக்களாட்சியின்
  கடைசி
  ஊர்வலத்துக்கும் சேர்த்து.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: