வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம்

(19461951) இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஒரு மகத்தான மக்கள் போராட்டமாகும். அது நிஜாம் மாநிலத்தின் நிலப்பிரபுத்துவ நவாப்பிற்கு எதிரானதும், அதிகார வர்க்க நிலப்பிரபுத்துவ மிராசுதாரர்களின் கொடுமையான சுரண்டலுக்கு எதிரானதும், மற்றும் நிஜாம் மாநிலத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பாதுகாக்க நுழைந்த நேரு அரசின் இராணுவத்துக்கு எதிரானதுமான ஆயுதந் தாங்கிய விவசாயிகளின் ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியாகும். நிலத்திற்காகவும், உணவுக்காகவும், தங்களின் விடுதலைக்காகவும் தெலுங்கானா மக்களால் நடத்தப்பட்ட ஆயுதந்தாங்கிய ஒரு மகத்தான விவசாயப் புரட்சியாக அது விளங்குகிறது.

வீரம் செறிந்த மகத்தான தெலுங்கானா போராட்டம் பல்வேறு விதமான சுரண்டல்களை இல்லாதொழித்ததுடன், காலங்காலமாக இருந்துவரும் “வெட்டிச்சாக்கிரி’ (கொத்தடிமை)யையும் ஒழித்தது. நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையை ஒழித்து, சுமார் 3000 கிராமங்களில் விவசாயிகள் தங்களது சொந்த அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினர். நிலப்பிரபுக்களின் சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குள் விநியோகித்துக் கொண்டனர். தங்களது சொந்த நிலத்தைப் பாதுகாக்க மக்கள் ஆயுதம் ஏந்தினர். இவ்வாறாக வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் மூன்று கோடி ஆந்திர மக்களை ஒன்றிணைத்த ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியாகத் திகழ்ந்தது. இந்தியாவில் விவசாயப் புரட்சியை தெலுங்கானா போராட்டம் முன்னணிக்குக் கொண்டு வந்தது. அது இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் நடத்தப்பட்ட முதல் மிகப் பெரிய விவசாயப் போராட்டமாகும்.

ஆனால், இந்த வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் போலி கம்யூனிஸ்டுகளான திரிபுவாதிகளாலும் நவீன திரிபுவாதிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் எல்லா வெற்றிகளும் அவர்கள் மேற்கொண்ட நாடாளுமன்றப் பாதையினூடே இழக்கப்பட்டன. இப்போராட்டத்திலிருந்து, இந்தியாவில் விவசாயப் புரட்சிக்கான இயக்கத்தை கட்டியெழுப்ப நாம் சரியான படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 போராட்டத்தின் பின்னணி
நிஜாம் மாநிலம், 16 மாவட்டங்களைக் கொண்டிருந்தது.மூன்று மொழி பேசப்படும் பிரதேசங்கள் இருந்தன. அதாவது 8 தெலுங்கானா மாவட்டங்களும், 5 மராட்டிய மாவட்டங்களும், 3 கன்னட மாவட்டங்களும் இருந்தன. ஒன்றரை கோடி மக்கள்தொகை கொண்ட அவ்வரசில் தெலுங்கானா மக்களின் தொகை 1 கோடியாக இருந்தது.

நிஜாம் மாநிலம் முழுவதும் ஒரு நிலப்பிரபுத்துவ மாநிலமாகத் திகழ்ந்தது. இந்தியாவில், பிரித்தானிய அரசுக்கு அடிபணிந்து நிஜாம் மாநிலத்தின் நவாப், தனது சொந்தப் படை, நாணயம், அஞ்சல் மற்றும் சுங்கம் ஆகியவற்றுடன் தனது மாநிலத்தின் மீது முழு அதிகாரமும் கொண்டிருந்தான். மாநிலத்தில் எந்தத் தேர்தல் முறையும் இல்லை. ஆணைகளை நிறைவேற்றும் அதிகாரமற்ற ஒரு ஆலோசனைக் குழுதான் இருந்தது.

மாநிலத்தை அநேகமாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். கல்சா பகுதி என்றும் கல்சா இல்லாத பகுதிகள் என்றும் பிரிக்கலாம். கல்சா பகுதி என்பது நிஜாம் மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதியாகும். மாநிலத்தின் மூன்றில் இரண்டு பகுதிகள் இதிலடங்கும். கல்சா இல்லாத பகுதி என்பது நிஜாம் மாநில அரசிற்கு அடிபணிந்த ஜாகிர்தார்கள், ஜமீன்தார்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இதுமூன்றிலொரு பகுதியை அடக்கும். இப்பகுதியைக் குறுநில மன்னர்கள், பைகாக்கள், ஜாகிர்தார்கள், மாக்தாக்கள் மற்றும் தேஷ்முக்குகள் ஆகியோர் நிஜாம் அரசுக்கு கட்டுப்பட்டு ஆண்டு வந்தனர். கல்சா இல்லாத பகுதியில் நிலத்திற்குப் பாத்தியதை இல்லை. தாங்கள் உழும் நிலமோ, வசிக்கும் வீடுகளோ மக்களுக்குச் சொந்தமில்லை; கிராமங்களை விட்டுப் போக வேண்டுமெனில் வெறுங்கையுடன்தான் போகவேண்டும். அவர்களுக்கென்று எதுவும் சொந்தமில்லை.

நிஜாம் மாநில நவாப்பே ஒரு பெரும் நிலப்பிரபு; மாநிலத்தின் 18 தாலுக்காகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் அவனுக்குச் சொந்தம். நிஜாம் அரசுக்குட்பட்ட சில குறுநில மன்னர்கள் கூட தங்கள் சொந்தத் தீர்வை, போலீசு மற்றும் இதர அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். ரயத்துவாரிப் பகுதிகளில் கூட, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருந்த மிராசுதாரர்கள் கிராமப்புற பொருளாதார, அரசியல் விவகாரங்களில் சக்தி பெற்றவர்களாக விளங்கினர். ஜன்னா ரெட்டி குடும்பத்தினர் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் வைத்திருந்தனர். பாபாசாகிப் பட்டேல் குடும்பத்துக்கு பத்தாயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. இப்படிப்பட்ட பெரும் நிலப்பிரபுக்கள் கிராமங்களில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்தனர். எல்லா வளமான நிலங்களும், நீர்ப்பாசன வசதிகளும் இம் மிராசுதாரர்களுக்குச் சொந்தம். அந்தந்த வட்டாரத்தின் பொது பன்சார் (நன்செய்) நிலங்களும், தோப்புகளும் இவர்களுக்குச் சொந்தம். எதன் மீதும் மக்களுக்கு உரிமையில்லை.

இதற்கும் மேலாக, மேல்தட்டு வர்க்கங்கள், அரசு அலுவலகங்களைச் சார்ந்த முசுலீம் அதிகாரிகள் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். நாட்டின் பல்வேறு மக்களின் தாய்மொழிகள் நசுக்கப்பட்டன. ஆட்சி மொழி உருது என்பதால் இதர மொழிகளுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.

 கொத்தடிமைச் சமுதாயம்
நிலப்பிரபுத்துவ நிஜாம் மாநிலம் ஓர் இருண்ட பிரதேசமாக விளங்கியது. மிகப் பெரும்பான்மையான மக்கள் நாகரீக வாழ்வின் அறிகுறி கூட இல்லாவண்ணம் வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள் ஆகியோருக்கும், கிராமங்களுக்கு வழக்கமாக வரும் இதர அதிகாரிகள் ஆகியோருக்கும், கிராம ஏழை மக்களும் சுரண்டப்படுவோரும் கொத்தடிமை முறையின் கீழ் பல்வேறுபட்ட உழைப்பினைச் செய்ய வேண்டியிருந்தது.

இம்முறை கிராமத்தின் எல்லா ஏழைப் பிரிவுகளுக்கும் இருந்தது. தாழ்த்தப்பட்டோர், வண்ணார்கள், நாவிதர்கள், கும்மாரி மற்றும் வியாபாரிகள் ஆகிய எல்லோருமே இக்கொத்தடிமை உழைப்பினைச் செய்ய வேண்டியிருந்தது. நடுத்தர, மற்றும் பணக்கார விவசாயிகள் கூட இக்கொத்தடிமை உழைப்பிலிருந்து தப்பமுடியாது. விதைப்புக் காலத்தில் அவர்கள் மிராசுதாரர்கள் நிலத்தில் முதலில் விதைத்து முடிக்க வேண்டும். பின்னரே தங்கள் சொந்த நிலத்தில் விதைக்க முடியும்.

இதற்கும் மேலாக ஏழை மக்கள், அநேக விதமான, சட்ட விரோதமான வரிகளை மிராசுதாரர்களுக்குச் செலுத்த வேண்டும். தங்கள் தானியங்கள் உழுபடைக் கருவிகளுக்கும் வரி, திருமணங்களுக்கு வரி, தங்கள் பெண்கள் பருவம் அடைந்ததற்கு வரி, பிறப்புக்கும் இறப்புக்கும் வரி போன்ற கற்பனைக்கெட்டாத பல சட்ட விரோத வரிகளை ஏழைகள் செலுத்த வேண்டும். இவை ஜாகீர்தாரர்கள், தேஷ்முக்குகள் மற்றும் பெரும் மிராசுதாரர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட வேண்டும். மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள் ஆகியோர் “”நாகு” மற்றும் மிக அதிகமான கந்து வட்டி முறைகளில் ஏதாவது ஒரு காரணத்தின் பேரில் கிராம மக்களைக் கொடூரமாகச் சுரண்டி வந்தனர்.

வெகுகாலமாக அரசியல் அமைப்புகளோ, அரசியல் நடவடிக்கைகளோ நிஜாம் மாநிலத்தில் அனுமதிக்கப்படவில்லை. 1936க்கு பிறகுதான் “”மாநில காங்கிரஸ்” அமைக்கப்பட்டது. நிஜாம் மாநிலத்திற்கு பொறுப்பு வாய்ந்த அரசுக்காக அது மெதுவாக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கியது. நவாபை அதிகாரத்திலிருந்து விலக்காதவாறு அவனுடன் சமரசம் பேசுவதுதான் அதன் கோரிக்கை.

பின்னர் “”ஆரிய சமாஜம்”, முசுலீம் ஆதிக்கத்திற்கு எதிராகத் தொடங்கப்பட்டது. இந்து மத அடிப்படையில் இந்து இளைஞர்களை அது அமைப்பாகத் திரட்டத் தொடங்கியது. ஆனால் மாநிலத்தில் மிகப் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். எனவே முசுலீம் எதிர்ப்புப் போராட்டம், நிஜாம் நவாபை எதிர்த்த ஒரு போராட்டமாக உருவெடுத்தது.

மாநிலத்தின் தெலுங்கானா பகுதியில், தெலுங்கு மக்களின் மொழி, ச­க நிலைமை, கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பணியாற்றும் குறிக்கோளுடன் “”ஆந்திர மகாசபை” தொடங்கப்பட்டது. நிஜாம் மாநிலத்திற்கு வெளியே தேசிய இயக்கம் முன்னேறிக் கொண்டிருக்கும் போது ஆந்திர மகாசபை இயக்கம் மாநிலத்தில் தொடங்கியது. இவ்வியக்கங்கள் நிஜாம் மாநிலத்தில் மக்களின் கவனத்தை, குறிப்பாக மாணவர்களின் கவனத்தை கவர ஆரம்பித்தன. அவர்கள் மத்தியில் தேசிய உணர்வு வளரத் தொடங்கியது.

 “வந்தே மாதரம்” வேலை நிறுத்தம்
இவ்வியக்கங்களின் முன்னேற்றத்தின் பயனாக ஹைதராபாத் மாணவர்கள் “வந்தே மாதரம்” பாடலைப் பாடும் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்தனர். கல்லூரி விடுதி அதிகாரிகளால் தடை செய்யப்பட்டிருந்தும் விடுதி மாணவர்கள் “வந்தே மாதரம்” தேசியப் பாடலைப் பாடத் தொடங்கினர். விடுதியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மாணவர்கள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்தனர். வேலை நிறுத்தம் ஹைதராபாத் நகரக் கல்லூரிகளுக்கு மட்டுமின்றி, வெளியேயுள்ள இதர கல்லூரிகளுக்கும் பரவியது. இவ்வேலை நிறுத்தத்தில் சுமார் 600 மாணவர்கள் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டனர்.

மாநிலக் காங்கிரஸ் சத்தியாக்கிரகம், ஆரிய சமாஜ சத்தியாக்கிரகம், வந்தே மாதரம் வேலை நிறுத்தம் ஆகியவை ஓரளவிற்கு அமைப்பு ரீதியிலான இயக்கங்களாக இருந்தன. ஆனால்மூன்றுமே தங்கள் குறிக்கோளை அடைவதில் தோல்வியுற்றன. ஏனெனில் இவ்வியக்கங்களில், ஏழை மக்களைத் திரட்டுவதை அந்தந்த அமைப்புகள் செய்யத் தவறின. சிறிது சிறிதாக இவ்வியக்கங்களில் நம்பிக்கையின்மை படர்ந்தது.

 மார்க்சியக் குழுக்களின் தோற்றம்
1939-1940 காலப் பகுதியில், இந்நிலைமைகளின்போது முதலில் மார்க்சியக் குழுக்கள் நிஜாம் மாநிலத்தில் தோன்றின. தேசிய இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட இளைஞர்கள்தான், மார்க்சியத் தத்துவத்தினாலும் கவர்ந்திழுக்கப்பட்டனர். அங்கும் இங்குமாக மார்க்சியக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இளைஞர்களிடையே விஞ்ஞான சோசலிசக் கருத்துகள் பரவத் தொடங்கின. ஏழை மற்றும் சுரண்டப்படும் மக்களை, வர்க்கப் போராட்டங்களுக்காக அமைப்பாகத் திரட்டும் கருத்துகள் பரவ ஆரம்பித்தன. மாநிலத்தில் விரைவிலேயே பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டது.

இடதுசாரிக் கண்ணோட்டமுள்ள எல்லா இளைஞர்களும், மார்க்சிய உணர்வு கொண்டவர்களும் ஆந்திர மகாசபையை ஓர் இடைத்தளமாகப் பயன்படுத்திக் கொண்டு மக்களிடையே வேலை செய்யத் தொடங்கினர். இதனால் ஆந்திர மகாசபையின் தன்மையே மாற ஆரம்பித்தது. அதுவரை ஆந்திர மகாசபையின் வலதுசாரிகள், தெலுங்கு மொழி வளர்ச்சிக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் மட்டுமே செயல்பட்டு வந்தனர். அவர்கள் ஏழை விவசாயிகளின் கோரிக்கைகளின் பேரில் சில வெற்றுத் தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றுவது வழக்கம். ஆனால் மார்க்சியவாதிகள், விவசாயிகளிடையே இத் தீர்மானங்களைப் பிரபலமாக்கி, ஆந்திர மகாசபையின் தலைமையில் இக்கோரிக்கைகளுக்காகப் போராட அவர்களைத் திரட்டத் தொடங்கினர். குறுகிய காலத்திலேயே ஆந்திர மகாசபை உண்மையிலேயே ஒரு மக்கள் அமைப்பாக வளர்ந்து விட்டது.

ஆந்திர மகாசபையின் வலதுசாரிகள், இயக்கத்தின் இவ்வளர்ச்சியைக் கண்டு பயமடைந்தனர். அவர்கள் இவ்வியக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயன்று தோல்வியுற்றனர். படிப்படியாக போங்கீர் மகாசபை (மாநாடு) காலத்தில் (1944) ஆந்திர மகாசபை மார்க்சியவாதிகளின் தலைமையின் கீழ் வந்தது.

 நிலப்பிரபு எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பேரலை
போங்கீர் மாநாட்டிற்குப் பின்னர் பல கிராமங்களில், “சங்கம்” என்ற பெயரில் ஆந்திர மகாசபையின் கிளைகள் அமைக்கப்பட்டன. கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், கட்டாய வரி வசூலிப்பு மற்றும் விவசாயிகளை நிலத்தை விட்டுப் பலாத்காரமாக வெளியேற்றுவது ஆகியவற்றுக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஒரு பெரும் கிளர்ச்சி தொடங்கப்பட்டது.

கண்துடைப்புக்காக நிஜாம் மாநில நவாப், அரசு சட்டங்களில் மட்டும் சில சலுகைகளை மக்களுக்குக் கொடுத்திருந்தான். ஆனால் இவை கூட ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை. எனவே இச்சமயம் கிளர்ச்சியின் முழு இலட்சியமும் அரசு சட்டங்களாக உள்ள இச்சலுகைகளை நடைமுறைப்படுத்துவதே. கிளர்ச்சி, அரசு சட்டங்களின் எல்லைக்கு வெளியே செல்லவில்லை. கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், நிலத்தைவிட்டு விவசாயிகøளப் பலாத்காரமாக வெளியேற்றுவது ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் சட்டத்தின் அமைப்பைவிட்டு மீறவில்லை.

இச்சமயத்தில் முந்தரை கிராமத்தில் ஒரு நிலப் பிரச்சினை, இயக்கத்தின் பரிசீலனைக்கு வந்தது. கட்டாரி ராமச்சந்திர ராவ் என்னும் மிகப் பிரபல கொடிய மிராசுதாரருக்குச் சொந்தமான 3040 ஏக்கர் நிலத்தை லம்பாடி விவசாயிகள் உழுது வந்தனர். லம்பாடிகளுக்கு கொடுத்திருந்த குத்தகைக் காலம் முடிந்தவுடன் நிலப்பிரபு ரௌடிக் கூட்டமொன்றுடன் நிலத்தை மீட்க வந்தான். எல்லா லம்பாடி விவசாயிகளும் தடுக்கத் தயாராயினர். ரிசர்வ் போலீசு மற்றும் நிலப்பிரபுவின் குண்டர்கள் ஒருபுறமும், தடிகள், இதர கிராமக் கருவிகள் இவற்றால் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டு செங்கொடி ஏந்திய லம்பாடி உழவர்கள் மறுபுறமும் ஒருவருடன் ஒருவர் மோதத் தயாராகினர். ரிசர்வ் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தத் தயாரானபோது மிகவும் விருப்பமின்றி உழவர்கள் பின்வாங்க வேண்டியிருந்தது.

இம்மாதிரி மற்றொரு போராட்டம் பாலகுருத்தி என்னும் கிராமத்தில் நடந்தது. ராமச்சந்திர ரெட்டி என்னும் விஷ்ணூ<ரின் தேஷ்முக், சாகலி இலம்பா என்னும் ஏழை விவசாயியிடமிருந்து நிலத்தைப் பலாத்காரமாக எடுத்துக் கொள்ள முயன்றான். விளைந்த பயிரைப் பலாத்காரமாக எடுத்துச் செல்ல தனது குண்டர்களை அனுப்பினான். ஆந்திர மகாசபையின் தலைமையில் 18 விவசாயிகள் குச்சிகள் மற்றும் இதர கிராமக் கருவிகளை ஆயுதங்களாகக் கொண்டு ஏழை விவசாயியின் விளைந்த பயிரைப் பாதுகாக்கப் போரிட்டனர். குண்டர்களை அடித்து விரட்டிப் பயிரைப் பத்திரமாக இலம்பாவுக்கு மீட்டுத் தந்தனர்.

மறுநாள் காலை போலீசு வந்து சங்க ஊழியர்களைக் கைது செய்தது. போலீசு நிலையத்தில் சங்க ஊழியர்கள் மிகக் கொடூரமாக அடிக்கப்பட்டு மனிதத் தன்மையற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டனர். இரகசிய உறுப்புகளில் குச்சிகளை திணிப்பது, கண்களில் மிளகாய்ப் பொடி தூவுவது, வாயில் சிறுநீர் ஊற்றுவது இவை போலீசு மற்றும் குண்டர்களால் பயன்படுத்தப்பட்ட முறைகளில் சிலவாகும்.

இப்போõரட்டத்தினோடு புதுவிதமான நிலப் பிரச்சினைகள், இயக்கத்தினால் தீர்க்கப்பட முன்வரத் தொடங்கின. இதுவரை விவசாயிகளை அவர்கள் குத்தகை நிலத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றுவதற்கு எதிராகவும், அவர்களது குத்தகை நிலங்களை அவர்களே மீண்டும் குத்தகைக்கு எடுக்கவும் கிளர்ச்சிகள் நடந்தன.முந்தரை நிகழ்ச்சிக்குப் பிறகு, மிராசுதாரர்கள் பலாத்காரமாக எடுத்துக் கொண்ட நிலங்களின் பிரச்சினைகள் முன் வந்தன. இவற்றைச் சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் தீர்க்கப்பட முடியவில்லை. சட்ட வரம்பை மீறிச் சென்று மக்கள் இந்நிலங்களை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இது, மக்கள் போராட்டங்களால் மட்டுமே தீர்க்கப்பட முடியும். இயக்கம், இப்பிரச்சினையைக் கையிலெடுத்துப் போராட்டங்களுக்காக மக்களை அமைப்பாகத் திரட்டியதால் ஓர் உயர்ந்த கட்டத்திற்கு இயக்கம் முன்னேற முடிந்தது.

 1946ஜூலை: தொட்டி கொமரய்யாவின் கொலை — மக்கள் போராட்டங்களின் ஒரு பேரலை
இதுநாள் வரை பொதுவுடைமைக் கட்சியும் ஆந்திர மகாசபையும் கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், நிலத்தைவிட்டு பலாத்காரமாக விவசாயிகளை வெளியேற்றுவது மற்றும் கட்டாயமாக லெவி தானியங்களை வசூலிப்பது ஆகியவற்றிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து மக்களை திரட்டி வந்தன. இப்பிரச்சினைகளின் பேரில் பல போராட்டங்கள் பல கிராமங்களில் நடத்தப்பட்டன.
1946ல் மிகவும் கொடூரமான மிராசுதாரர்களான விஷ்ணூ<ர் ராமச்சந்திரரெட்டி, புஷ்கூர் ராகவராவ், கட்டாரி ராமச்சந்திர ராவ் போன்றவர்களுக்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சி ஜனகோன் தாலுகா மக்களால் நடத்தப்பட்டது. கொத்தடிமை மற்றும் இம் மிராசுதாரர்களின் கொடூரச் செயல்களை எதிர்த்த ஜனகோன் மக்களின் போராட்டம், தெலுங்கானா பகுதி முழுவதிலும் மக்கள் இயக்கத்திற்கு ஒரு மாபெரும் உந்து விசையாகத் திகழ்ந்தது.

பரம்பரை பரம்பரையாக ஒடுக்கப்பட்டு வந்த தெலுங்கானா பகுதி மக்கள் புதிய உணர்வு பெறத் தொடங்கினர். தங்களைத் தாங்களே திரட்டி, அமைப்பாகி மிராசுதாரர்களின் கொடுமைகளுக்கு எதிராகப் புரட்சி செய்யத் தொடங்கினர். ஒடுக்குமுறைக்கும் பலாத்காரத்திற்கும் பழக்கப்பட்டிருந்த மிராசுதாரர்களுக்கு மக்களிடையே பரவி வந்த புதிய உணர்வையும் மக்களியக்கம் வளர்ந்து வருவதையும் சிறிதும் பொறுக்க முடியவில்லை. அவர்கள் போலீசையும் குண்டர்களையும் கொண்டு மக்களைத் தாக்கத் தொடங்கினர். மிராசுதாரர்கள் பகிரங்கமாகத் தங்கள் துப்பாக்கிகளுடன் வெளிவந்து மக்களையும் அவர்களின் தலைவர்களையும் சுடத் தொடங்கினர்.

இச்சமயம் ஜனகோன் தாலுகாவில் தேஷ்முக்காக இருந்த விஷ்ணூ<ர் ராமச்சந்திர ரெட்டியை எதிர்த்த காடவெண்டி கிராம மக்களின் போராட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற நிகழ்ச்சியாக அமைகிறது. தெலுங்கானாவில் மக்கள் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு இது ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது. இந்த தேஷ்முக், சங்கத்தின் தலைவர்களைக் கொல்லத் திட்டமிட்டான். இதற்குத் தனது குண்டர்களைத் தயார் செய்தான். போலீசின் உதவியையும் பெற்றான்.

ஜூலை 4, 1946 அன்று காடவெண்டி கிராமத்தில் மிராசுதாரர்களின் குண்டர்கள் நன்றாகக் குடித்துவிட்டு உள்ளூர் ஆந்திர மகாசபையின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளைத் தாக்கவும் அவர்களை வலுச் சண்டைக்கு இழுக்கவும் தொடங்கினர். மிராசுதாரர்களின் அயோக்கியத்தனமான திட்டத்தை மக்கள் உடனே உணர்ந்து கொண்டனர். ஆந்திர மகாசபையின் தொண்டர்கள் உடனே தடிகளாலும், இதர கிராமக் கருவிகளாலும் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டு தங்கள் அலுவலகம் முன் கூடினர். செங்கொடிகளுடன் மிகப் பெரும் ஊர்வலமாகச் சென்றனர். “புரட்சி ஓங்குக”, “ஆந்திர மகாசபை வாழ்க” என்னும் போராட்ட முழக்கங்கள் விண்ணதிரக் கிளம்பின. ஜமீன்தாரின் மாளிகையை ஊர்வலம் எட்டியபோது அங்கு மறைந்திருந்த குண்டர்கள் திடீரென்று ஊர்வலத்தைத் தாக்கத் தொடங்கினர். தொண்டர்களை நேரடியாகச் சுடத் தொடங்கினர். ஊர்வலத்தை நடத்திச் சென்ற தொட்டி மல்லய்யாவும் மங்க கொண்டய்யாவும் மிகவும் கடுமையாகக் காயமுற்றனர். அக்கிராமத்தின் மகாசபையின் தலைவராக விளங்கிய தொட்டி கொமரய்யாவின் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு ஒன்று பாய்ந்தது. உடன் அவர் உயிர் பிரிந்தது. இவ்வியக்கத்தில் முதல் உயிர்த் தியாகி அவர்தான்.

இயக்கத்தில் ஒரு மாபெரும் விவசாய வீரன் இறந்துவிட்டான். மக்களது கோபம் எல்லையற்றுப் பெருகியது. கிராமம் முழுவதும் திரண்டு, மிராசுதாரரின் குண்டர்கள் மறைந்திருந்த குடிசையைச் சூழ்ந்து கொண்டனர். “இரத்தத்திற்கு இரத்தம்” என மக்கள் முழக்கமிட்டனர். இதனைக் கண்டு குண்டர்கள் பீதியுற்று, மிராசுதாரரின் மாளிகைக்குப் பாதுகாப்பிற்காக ஓட்டமெடுத்தனர். வெகுண்ட மக்கள் மிராசுதாரரின் மாளிகையையும் முற்றுகையிட்டனர். இச்செய்தி சுற்றுப்புறக் கிராமங்களுக்குப் பரவியவுடன் எல்லா கிராமங்களின் மக்களும் காடவெண்டி கிராம மக்களுக்காக ஓடி வந்தனர். அக்கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் மக்கள் அன்று கூடினர். மிராசுதாரரின் மாளிகையைத் தீக்கிரையாக்க தயார் செய்யத் தொடங்கினர்.

இச்செய்தி கேட்டு தேஷ்முக்கின் மகன் பாபுராவ், துப்பாக்கிகள், ஈட்டிகள் மற்றும் இதர பயங்கர ஆயுதங்களுடன் சுமார் 200 குண்டர்களை அழைத்துக் கொண்டு தனது மாளிகையைப் பாதுகாக்க ஓடி வந்தான். நூற்றுக்கணக்கான மக்கள் கிராமத்திற்கு வெளியே கவனம் வைத்துக் கொண்டிருந்தனர். இக்கூட்டத்தைக் கண்டவுடன் “ஆந்திர மகாசபைக்கு வெற்றி” என்று இடியோசை கிளப்பிக் கொண்டு குண்டர்களைத் தாக்கத் தொடங்கினர். குண்டர்கள் மீது கல்மாரி பொழிந்தனர். 3 மைல்களுக்குக் குண்டர்களைத் துரத்தினர். கைக்கு கிடைத்தவர்களை இரக்கமின்றி அடித்தனர். மிராசுதாரரின் பெரிய மாந்தோப்பை அழித்தனர்.

இச்சண்டையில் குண்டர்களின் தலைவனை மக்கள் பிடித்து விட்டனர். அவன் காலிகளில் ஒருவன். தேஷ்முக்கின் பேர்போன அடியாள். அங்கே அப்போதே மக்கள் ஒரு நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுத்து அவனை விசாரணைக்கு உட்படுத்தினர். அவனது குற்றங்களுக்குப் பகிரங்கமாக மக்கள் சாட்சி சொல்ல முன்வந்தனர். அவனுக்கு மக்கள் நீதிமன்றம் உடனே மரண தண்டனை விதித்தது. தனது குற்றங்கள் எல்லாம் பகிரங்கப்பட்டபோது, இந்த ரௌடி தனது குற்றங்களுக்காக வருந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்டான். இது கண்டு மக்கள் நீதிமன்றம் அவனை மன்னித்து, அவனுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்தது.

இதற்கிடையில் சுமார் 6 ரிசர்வ் போலீசார் அங்கு வந்தனர். குண்டர்களைத் தண்டிப்பதாக போலி வாக்குறுதிகள் தந்து அவர்கள் மக்களை நம்பச் செய்தனர். இதன்பின் தங்கள் வீடுகளுக்கு மக்கள் திரும்பினர். மக்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றவுடன் தங்கள் வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டு போலீசார், தேஷ்முக்கிடம் குண்டர்களை ஒப்படைத்தனர். இது மட்டுமின்றி, ஆந்திர மகாசபை ஊழியர்கள் மீது கலகம் விளைவித்ததாக ஆறு பொய் வழக்குகளை சோடித்து தாக்கல் செய்தனர்.

உயிர்த்தியாகி கொமரய்யாவின் உடலை கிராமத்திற்கு மக்கள் எடுத்து வந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு பெரும் ஊர்வலமாக வந்தனர். அவரது உடல், மக்கள் தலைவன் ஒருவனுக்கான பெரும் மதிப்புடன் தகனம் செய்யப்பட்டது. தேஷ்முக்குக்கு முன் காடவெண்டி மக்கள் பணியவில்லை. அக்கிராமத்தில் அவனது விவசாய வேலைகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டன.

கொமரய்யா ஒரு மகத்தான உயிர்த்தியாகி. அவருடைய தியாகங்களால் தெலுங்கானா இயக்கம் ஒரு புதிய உயர்ந்த கட்டத்தை எட்டியது. புதிய மக்கள் கவிஞர்கள் மக்களிடையே பிறந்தனர். எங்கும் “அமரஜீவி கொமரய்யா…..” என்று மக்கள் பாடத் தொடங்கினர். அது வெகுசீக்கிரம் பிரபலமான பாட்டாகியது.

 மக்கள் போராட்டங்களின்தடுக்கவியலாப் பேரெழுச்சி
கொமரய்யாவின் கொலைக்குப் பின்னர், தெலுங்கானா மக்கள் ஒரு மாபெரும் போராட்டத்தில் கிளர்ந்தெழுந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தன. ஒரு கிராமத்து மக்கள் மற்றொரு கிராமத்திற்கு ஊர்வலமாகச் செல்வர்; கிராம சங்கத்தை அங்கு அமைப்பர். பின் ஊர்வலம், அடுத்த கிராமத்திற்குத் தொடரும். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு, மக்களின் வெற்றிகரமான பீடு நடையாகும் அது.

ஒவ்வொருவரும் தடிகளோ இதர கிராமக் கருவிகளோ ஆயுதமாகக் கொண்டு சென்றனர். ஒவ்வொரு கிராமமும் “ஜமீந்தாரி அமைப்பு ஒழிக!” “மிராசுதாரர்களின் கொடுமைகள் ஒழிக!” “போலீசு கொடூரங்கள் ஒழிக!” “புரட்சி ஓங்குக!” என்ற போராட்ட முழக்கங்களை எதிரொலித்தது. இப்போராட்ட முழக்கங்களின் எதிரொலிகளால் மக்கள் விரோதிகள் எங்கும் பீதியடைந்து, இம்முழக்கங்களை கேட்ட மாத்திரத்திலேயே தங்கள் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்தனர். இப்பொழுது இலட்சக்கணக்கான மக்கள், மிராசுதாரர் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கு கொள்ள முன்வந்தனர். பெண்கள் ஆயிரக்கணக்கில் இவ்வியக்கத்தில் கலந்து கொண்டனர்.

இச்சமயத்தின் போது பலாத்காரமாகவோ, கொடுத்த கடனுக்காகவோ மக்களிடமிருந்து மிராசுதாரர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களைப் பற்றிய பிரச்சினைகள் பல இடங்களிலிருந்து தீர்ப்புக்கு வந்தன. கட்சியும், ஆந்திர மகாசபையும் இயக்கத்தை தீவிரப்படுத்தவும் உயர்ந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இப்பிரச்சினைகளைக் கையிலெடுத்தனர். இதனால் இயக்கம் ஒரு புதிய உயர்ந்த கட்டத்தினை அடைந்தது. ஒவ்வொரு இடத்திலும், குறிப்பாக ஹுசூர் நகர், சூரியபேட்டா மற்றும் ஜனகோன் தாலுக்காகளில் மிராசுதாரர்களால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இம்மாதிரி நிலங்களை மீட்டெடுத்துக் கொள்ள மக்கள் தைரியமாக முன் வந்தனர்.

இவ்வித நிலங்களை மீட்டெடுத்துக் கொள்வதற்கான இயக்கத்தில் தர்மாபுரம் மற்றும் பெத்தவோலு மக்களின் போராட்டங்கள், இன்னும் பெரும் போராட்டங்களுக்காக அனைத்து தெலுங்கானா மக்களையும் உணர்வூட்டுவதில் மிகப் பெரிய பங்காற்றின. தர்மாபுரம் கிராமத்தில் மிராசுதாரர் புஷ்கூர் ராகவராவ், லம்பாடி விவசாயிகளால் உழப்பட்டு வந்த சுமார் 25 ஏக்கர் நிலத்தை பலாத்காரமாக ஆக்கிரமிக்க அவனது குண்டர்களை அனுப்பினான். ஆந்திர மகாசபையின் தலைமையில் லம்பாடி உழவர்கள் தங்கள் நிலத்தினைப் பாதுகாக்கத் தங்களைத் தயார் செய்து கொண்டனர். தடிகளாலும், தொன்று தொட்டு இருந்து வரும் இதர கிராம ஆயுதங்களாலும் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டு நிலத்தை நோக்கி வீறுநடை போட்டனர். மிராசுதாரரின் குண்டர்களை விரட்டியடித்தனர். இந்நிலத்தினைச் சுற்றிச் செங்கொடிகளை ஊன்றினர். அங்கு ஏழைகளின் நிலத்தைப் பாதுகாக்கும் காவலனாகியது, செங்கொடி!

பெத்தவோலு கிராம மக்கள், மிகவும் கொடிய மிராசுதாரரான தாரகமல்ல சீதாராமச்சந்திரராவின் கொடூரங்களை எதிர்த்து கிளர்ச்சி செய்து கொண்டிருந்தனர். இச்சமயம் இக்கிளர்ச்சி தீவிரமாக்கப்பட்டது. நிலத்தை அளந்து ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தமின்றி எந்த வரிகளையும் செலுத்த மக்கள் மறுத்துவிட்டனர். இம்மிராசுதாரருக்குச் சொந்தமான 600 ஏக்கர் பன்சார் நிலங்களை அவர்கள் எடுத்துக் கொண்டனர். தங்களுக்குள் அதனைப் பங்கிட்டுக் கொண்டனர். இன்றும்கூட அவர்கள் அதனை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வியக்கத்தை நசுக்க, நிஜாம் மாநில அரசு தனது இராணுவத்தை அனுப்பியது. தலைவர்களுடன் நூற்றுக்கணக்கான கிராமக் கட்சி ஊழியர்களைக் கைது செய்யத் தொடங்கியது. கிராமங்களில் மிகப் பெரிய அளவில் இராணுவம் சோதனையிடத் தொடங்கியது. ஆனால் மக்கள், எதிரியின் தாக்குதலுக்கு முன்னே பின்வாங்க மறுத்தனர். இத்தாக்குதலை ஒன்று சேர்ந்து, கூட்டாகத் தடுக்கத் தொடங்கினர். 1946இல், சூரியபேட்டா தாலூகாவைச் சேர்ந்த பலேமுலா, பட்ட சூரியபேட்டை ஆகியவற்றிலும், ஹுசூர் நகர் தாலுகாவைச் சார்ந்த மல்லரெட்டிக்கூடத்திலும், ஜனகோன் தாலுகா தேவருபுலா விலும் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் தெலுங்கானா போராட்டத்தின் முன்னேற்றத்திற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு பங்கை வகித்தன.

இரவு முழுவதும் மக்கள் தங்கள் கிராமங்களைப் பாதுகாக்கத் துவங்கினர். கற்களையும் தடிகளையும் சேமித்துத் தங்கள் கூரையில் தயாராக வைத்தனர். ஒவ்வொரு மனிதனும் தடியால் அல்லது கவண்கல்லால் தன்னை ஆயுதபாணியாக்கிக் கொண்டான். பெண்கள் மிளகாய்த் தூளுடன் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டனர். ஒரு கிராமம் தாக்குதலுக்குள்ளானால், அதன் பாதுகாப்பிற்காக சுற்றுப்புற கிராம மக்கள் முன் வந்து, அரசு போலீசை எதிர்த்துக் கூட்டமாகச் சேர்ந்து போரிட்டனர். கட்சி மற்றும் ஆந்திர மகாசபை ஊழியர்களைப் பாதுகாக்க அவர்கள் மிகக் கடினமான பணிகளையும் மேற்கொண்டனர். மக்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று கூடி போலீசுக்கு எதிராகக் கூட்டாகப் போரிடத் தொடங்கினர். இதுவே எங்கும் காணப்படும் நிகழ்ச்சியாகியது.

இங்கு நாம் இவ்வியக்கத்தில் இதுவரை வெளிப்பட்டுள்ள சிறப்புத் தன்மைகளைக் கவனிக்க வேண்டும்.

*கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், கட்டாய லெவி வசூலிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம், ஜமீந்தாரி எதிர்ப்புப் போராட்டமாக வளர்ந்தது. பலாத்காரமாக நிலத்திலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டம், மிராசுதாரர்கள் பலாத்காரமாக ஆக்கிரமித்துக் கொண்ட நிலங்களை மீட்டெடுக்கும் போராட்டமாக வளர்ந்தது.

*மக்கள் இயக்கத்தின் முன்னேற்றத்தின் பயனாக கட்டாய லெவி வசூல் முற்றுப் புள்ளிக்கு வந்தது. அரசு அதிகாரிகள் கிராமங்களுக்கு வரவே பயந்தனர். கொத்தடிமை, சட்ட விரோத வரிகள் முற்றாக அழிந்தன. விவசாயிகளை வெளியேற்றுவது முற்றிலும் நின்று விட்டது.

*இதுவரை மிராசுதாரர்களின் குண்டர்களை எதிர்த்துக் கொண்டிருந்த மக்கள், இப்போது நிஜாம் அரசின் போலீசையும் இராணுவத்தையும் எதிர்க்க முற்பட்டனர்.
* சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தைப் பாதுகாக்க ஒன்று கூட ஆரம்பித்தனர். போலீசையும் இராணுவத்தையும் எதிர்த்துக் கூட்டாகப் போரிடத் தொடங்கினர்.

*இப்போராட்ட இயக்கத்தில் புதிய உணர்வுடன் பெண்கள் பங்கு கொள்ள ஆரம்பித்தனர். ஆண்களுக்குப் பக்கபலமாக நின்று போராடத் தொடங்கினர். ஆண்கள் கவண் எடுத்துச் சுற்றினால் பெண்கள் அவர்களுக்கு கற்களை எடுத்துத் தந்தனர். ஆண்கள் தடிகளை எடுத்துப் போரிட்டால், பெண்கள் மிளகாய்த் தூள் வீசி போலீசுடன் போரிட்டனர்.

* இப்போது கிராமச் சங்கம் தன்முன் வரும் எல்லாப் பிரச்சினைகளையும் — கணவன் மனைவிக்குள் வரும் சச்சரவு முதற்கொண்டு —தீர்க்கத் தொடங்கியது. இதனுடன் மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள் ஆகியோரின் சட்டவிரோத வரிகள் யாவும் ஒரு முடிவுக்கு வந்தன.

இங்கு நாம் மற்றொரு முக்கிய விசயத்தையும் கவனிக்க வேண்டும். தற்போது போலி கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து வரும் தெலுங்கானாவின் கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த வீரதீரப் போராட்டங்களை அன்று எதிர்த்தனர். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் என்று அவற்றைக் கண்டித்தனர். ஆனால் மக்களும் ஊழியர்களும் அவர்களது விமர்சனத்திற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. இயக்கம் முன்னேறி புதிய பகுதிகளுக்குப் பரவியது. அது ஓர் உயர்ந்த கட்டத்திற்குத் தாவியது. நில விநியோகத் திட்டம் முன்னேறியது. இக்கட்டத்தில்தான் மக்கள் தொண்டர் அமைப்புகள் எங்கும் நிறுவப்பட்டன.

 ஆகஸ்டு 15, 1947லிருந்து செப்டம்பர் 13, 1948 வரை:

கூலிப்படைத் தாக்குதல்கள் — ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு — கிராம அரசியல் அதிகாரத்தை நிறுவுதல்
நிஜாம் மாநில அரசு வளர்ந்து வரும் மக்கள் இயக்கத்தை நசுக்க மாநிலம் முழுவதும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது. பல கிராமங்களில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டன. கிராமங்களில் மாதக்கணக்கில் தாக்குதல் தொடுத்து கிராம மக்களை சித்திரவதை செய்யத் தொடங்கினர். ஆந்திர மகாசபையிலிருந்து மக்களை விலகச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர்.

மக்கள் நீண்டகாலத்துக்கு இத்தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இராணுவத் தாக்குதல்கள் தீவிரமாக இருந்த கிராமங்களில் மக்கள் சரணடையத் தொடங்கினர். இராணுவத் தாக்குதல்களிலிருந்து தப்ப சரணடைந்தனர். முன்னர் தங்கள் கிராமங்களை விட்டு ஓடிப்போன மிராசுதாரர்கள் மீண்டும் திரும்பி வந்து மக்களை ஒடுக்கத் தொடங்கினர். அவர்கள் சரணடைந்தவர்களை, கட்சி மற்றும் ஆந்திர மகாசபை ஊழியர்களைத் தேடுவதற்குத் தங்களுடன் வரக் கட்டாயப்படுத்தினர். மிராசுதாரர்கள் யாராவது கட்சி அல்லது ஆந்திர மகாசபை ஊழியரைப் பிடித்துவிட்டால் அவரை மனிதத் தன்மையற்ற சித்திரவதைக்கு உள்ளாக்கினர். மக்கள், அரசிடம் தற்காலிகமாக சரணடைந்தாலும், கட்சி மற்றும் மகாசபையின் தலைவர்களிடமும், ஊழியர்களிடமும் இன்னமும் பெரிய அளவில் அனுதாபம் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பளித்து உணவளிக்கவும் செய்தனர். ஆனால் மற்றொரு பக்கம் தற்காலிக நம்பிக்கையின்மை தோன்ற ஆரம்பித்தது.

கடுமையான அடக்குமுறையுள்ள இச்சமயத்தில், தற்காலிக நம்பிக்கையின்மை ஏற்பட ஆரம்பித்த கிராமங்களிலிருந்து கட்சி மற்றும் ஆந்திர மகாசபை ஊழியர்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டியிருந்தது. அவர்கள் குறைவான அடக்குமுறையுள்ள இதர கிராமங்களுக்குச் சென்று போராட்டங்களுக்கு மக்களைத் திரட்ட முனைந்தனர். இங்ஙனம் இயக்கம் புதிய பகுதிகளுக்குப் பரவியது.

சில கிராமங்களில் தற்காலிக நம்பிக்கையின்மை தோன்றியவுடன், வெளித் தோற்றத்தைக் கண்டு நிஜாம் அரசு, இயக்கத்தைத் தான் நசுக்கி விட்டதாக நினைத்து கிராமங்களிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றி விட்டது. இந்நிலைமைகளில், கட்சியும் சங்கமும், பேர்போன குண்டர்கள் மற்றும் மிகவும் கொடிய மிராசுதாரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியது. கட்சித் தொண்டர்கள் அத்தகைய குண்டர்களைப் பிடித்து கடுமையாக அடித்தனர். இப்பணி கிராமத் தொண்டர்களாலேயே எங்கும் நிறைவேற்றப்பட்டது.

இதில் மக்கள் தாங்களே முன்முயற்சி எடுத்துக் கொண்டனர். மக்கள் எதிரிகளை எச்சரித்து வீடுகளில் கைப்பிரசுரங்களை ஒட்டினர். மிராசுதாரர்களின் வீடுகளில் இம்மாதிரியான பிரசுரங்களை எறியவும் மக்கள் எதிரிகளின் வீடுகளில் அவற்றை ஒட்டவும் செய்தனர். அவர்கள் கூடி மக்கள் எதிரிகளை அடித்து விட்டு ஒன்றுமறியாதது போல் மக்களுடன் மக்களாகக் கலந்துவிடுவர். இந்தக் கைப்பிரசுரங்கள் போலீசு மற்றும் இராணுவ முகாம்களில் கூட எறியப்பட்டன. இந்நடவடிக்கைகள் அதிகரித்தவுடன் மிராசுதாரர்கள் திரும்பவும் பீதியுற்று இராணுவப் பாதுகாப்பிற்காக மீண்டும் நகரங்களுக்கு ஓட ஆரம்பித்தனர். கோழைகள்! இதனால் மக்கள் மீண்டும் தன்னம்பிக்கை பெற்றனர். அவர்கள் சங்கம் திரும்பவும் உயிர் பெற்று விட்டதென உணர்ந்தனர்.
1947 ஆகஸ்ட் 15 — இந்திய யூனியனுடன் நிஜாம் அரசு இணைவதற்கõன இயக்கம்
1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதியன்று பிரிட்டிசு ஏகாதிபத்தியம் காங்கிரஸ் தலைமையுடன் சமரசம் செய்து கொண்டது. இவ்வாறு பிரிட்டிசு ஏகாதிபத்தியம் பின்னணிக்குச் சென்று விட்டது; அதே சமயத்தில் பெருமுதலாளிகளும், பெரிய நிலப்பிரபுக்களும் அடங்கிய காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. மற்ற எல்லா அரசுகளும் இந்திய யூனியனுடன் சேர்ந்து கொள்ள ஒத்துக் கொண்டாலும் காசுமீர், நிஜாம் ஆகிய அரசுகள் இந்திய யூனியனுடன் சேர மறுத்துவிட்டன.

இந்திய யூனியனுடன் சேர்வதற்கான இயக்கமானது நிஜாம் அரசில் பெரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மாநில காங்கிரசு இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டது. “பொறுப்புள்ள அரசாங்கம்”, “விசாலாந்திரா” போன்ற முழக்கங்களுடன் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை தயார் செய்தது.

இது நடந்துகொண்டிருந்த சமயத்தில், மாணவர்கள் மிகப் பரந்த அளவில் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல மறுத்தல், நீதிமன்றங்களைப் புறக்கணித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கிராமங்களில் இயக்கமானது மற்றொரு திருப்பத்தை எதிர்கொண்டது. பட்டேல்களின் — பட்வாரிகளின் ஆவணங்களை எரிப்பது, எல்லைப் பகுதிகளில் இருந்த சுங்கச் சாவடிகளை அழிப்பது ஆகிய செயல்களில் இயக்கம் ஈடுபட்டது. மேலும் வரிகொடா இயக்கமும் நடத்தப்பட்டது. கிராமங்களில் நில வருவாய் தடைபட்டதோடு கிராம மட்டத்தில் நிஜாம் அரசின் அதிகாரச் சின்னமும் அழிக்கப்பட்டது.

மேலும், மக்கள் இயக்கமானது பீடுநடையுடன் முன்னேறியது. பாதசூரியபேட்டா, பாலமுலா, தேவருபுலா, மல்லாரெட்டி கூடம் ஆகிய கிராமங்களில் நடந்த மக்கள் போராட்டங்களைப் போலவே, இச்சமயமும் மக்கள் இயக்கத்தில் பேரலைகள் இருந்தன. மீண்டும் கூத்தப்பாலா சங்கம் வளர ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான கிராமங்களில் பட்டேல்களின் பட்வாரிகளின் ஆவணங்கள், பதிவேடுகள் எரிக்கப்பட்டன. இது மட்டுமல்ல; நிலப்பிரபுக்கள், வியாபாரிகள், பணக்காரர்கள் ஆகியோரிடமிருந்த கடன் பத்திரங்களும் கொளுத்தப்பட்டன. இவ்வாறாக, நிஜாமுக்கு எதிரான போராட்டமானது நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட்டது.

எல்லாக் கிராமங்களும் இம்மாதிரியான போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டன. கிராமங்களில் தேசியக் கொடிகளும், செங்கொடிகளும் தடையின்றிப் பறந்து கொண்டிருந்தன. நிலப்பிரபுக்களின் பெரிய மாளிகைகளைத் தாக்கி, அதிக அளவில் தானியங்களை அவர்களாகவே விநியோகம் செய்து கொண்டனர். இவ்வாறாக இயக்கமானது ஒரு புதிய நிலைக்கு உயர்ந்தது.

இச்சமயத்தில், நிப்பிரபுக்களின் நிலங்களைப் பறிக்கும் போராட்டமானது ஒரு புதிய நிலைக்கு உயர்ந்தது. அதுவரை சட்டங்களின்மூலமாகவும் மற்ற வழிகளின்மூலமாகவும் நிலப்பிரபுக்கள் ஆக்கிரமித்துக் கொண்ட நிலங்களைக் கைப்பற்றுவதில் மட்டுமே இயக்கம் சுற்றிக் கொண்டிருந்தது. நலகொண்டா மாவட்டத்திலுள்ள சூரியபேட்டா, ஹுசூர் நகர் ஆகிய தாலுகாகளில் போராட்டங்கள் மிகப் பரந்த அளவில் நடத்தப்பட்டு வந்தன.

இப்பொழுது இயக்கமானது இத்துடன் நின்று விடவில்லை. வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து விட்ட நிஜாம் நவாபை ஆதரித்துவந்த, கொடுமையான நிலப்பிரபுக்களின் நிலங்களை விநியோகிப்பது பற்றிய கேள்வியானது முன்னணிக்கு வந்தது. மக்கள் அந்நிலங்களைப் பறிக்க வேண்டுமென முழங்கினர். அவர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர்களை வைத்துக் கொண்டிருந்த நிலப்பிரபுக்களைத் தாக்கினர். அவர்களது நிலங்கள் மக்களுக்கிடையே விநியோகிக்கப்பட்டன. மக்கள் ஊர்வலமாகச் சென்று, வறிய மக்களுக்கு இந்நிலங்களை விநியோகம் செய்தனர்.

ஆனால் இயக்கமானது இத்துடன் கூட நின்றுவிடவில்லை. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நிலப்பிரபுக்கள் வைத்துக் கொண்டு பரம்பரை பரம்பரையாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். நிலப்பிரபுக்களுக்கான உச்சவரம்பு பற்றியும், மீதி நிலங்களை வறிய மக்களுக்கு விநியோகம் செய்வது பற்றியதுமான கேள்வி இச்சமயத்தில் எழுப்பப்பட்டது. ஆரம்பத்தில் 500 ஏக்கராக உச்சவரம்பு விதிக்கப்பட்டது. உபரி நிலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால் விநியோகம் செய்வதற்கு நிலங்கள் போதுமானதாக இல்லை. பின்பு உச்சவரம்பு 200 ஏக்கராகக் குறைக்கப்பட்டு மீதி நிலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்தச் சமயத்தில் நிலப்பிரபுக்களிடமிருந்து இலட்சக்கணக்கான பன்சார் (நன்செய்) நிலங்களும், பன்சராய் (மேய்ச்சல் நிலங்களும்) விநியோகம் செய்யப்பட்டன.

நில விநியோகத்தில், கிராம ஐக்கிய முன்னணியானது வளர்க்கப்பட்டது; பாதுகாக்கப்பட்டது. மக்களுடைய எதிரிகள் அல்லாத பணக்கார விவசாயிகள் சிறிய நிலப்பிரபுக்களின் நிலங்கள் தொடப்படவில்லை. முதலில் விவசாயத் தொழிலாளிகளுக்கும், வறிய விவசாயிகளுக்கும், அதற்குப் பின்னர் நடுத்தர விவசாயிகளுக்கும் என்ற முறையில் நிலமானது விநியோகம் செய்யப்பட்டது. நில விநியோகத் திட்டத்தின்மூலம் நிலம் கிடைக்கப் பெற்ற விவசாயத் தொழிலாளிகளும், விவசாயிகளும் ரஜாக்கர் குண்டர்களினதும் நிஜாம் இராணுவத்தினதும் நிலப்பிரபுக்களின் குண்டர்களினதுமான தாக்குதல்களைத் தடுக்க உறுதியாக, தீர்மானமாக முன்வந்தனர். நில விநியோகமானது எங்கெல்லாம் வெற்றிகரமாக செயல்பட்டதோ அங்கெல்லாம், எதிர்க்கும் போராட்டங்கள் வெற்றி பெற்றன. இன்றும் கூட இப்பகுதிகளில் இயக்கமானது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 ரஜாக்கர் குண்டர்களின் குழு அமைத்தல் கிராமங்களின் மீதான தாக்குதல்கள்
நிஜாம் நவாபின் ஆட்சியும் சுரண்டலும், கிராமங்களிலுள்ள நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவையே. ஆனால் உணர்வுகளை அடைந்த மக்கள், இடி போன்ற தாக்குதல்களை தொடுத்து கிராம மட்டங்களில் எங்கும் நிலப்பிரபுத்துவத்தை அழிக்க ஆரம்பித்தனர். வளரும் மக்கள் இயக்கத்தை அடக்குவதன் பொருட்டும், சுரண்டலைப் பாதுகாப்பதன் பொருட்டும் நிஜாம் நவாப் முசுலிம் மக்களிடையே வகுப்புவாதக் கொள்கையை வேகமாகப் பரப்பினான். காஸிம் ராஸ்வியின் தலைமையின் கீழ் முசுலிம் குண்டர்களை ஆயுதம் தரிக்கச் செய்து கிராமங்களைத் தாக்க அனுப்பினான்.

இந்த ரஜாக்கர் குண்டர்கள் கிராமங்கள் முழுவதையும் எரித்தனர்; சூறையாடினர்; கிராமங்களிலுள்ள எல்லாவற்றையும் அழிக்கவும் செய்தனர். இவர்கள் நிஜாம் நவாப்பின் கூலி ஆட்களே. இந்த குண்டர்கள் கத்தி, கொடுவாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமல்லாது, நவீன துப்பாக்கிகளையும் (Rifles) வைத்துக் கொண்டு கிராமங்களை சூறையாடினர்.

மக்கள் தங்களுடைய கிராமங்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தாங்களாகவே மிகப் பெரும் அளவில் திரண்டனர். ரஜாக்கர் குண்டர்கள் தாக்க வருகின்றார்கள் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு ஒவ்வொரு கிராமத்திலும் “நகரா’ என்ற சாதனம் உபயோகிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் காவல் படை (Sentries) நிறுவப்பட்டது. ரஜாக்கர்களின் வருகையை, இக்காவல் படை அறிந்தவுடனேயே “நகரா’வின் உதவி கொண்டு கிராமம் முழுவதையும் எச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டனர். உடனே கிராமம் முழுவதும் தற்காப்புக்காகத் திரளும். நகராவின் ஒலி கேட்டதும் சுற்றிலுமுள்ள கிராம மக்கள், தாக்கப்படும் கிராமத்தைப் பாதுகாப்பதற்கு ஓடிச் செல்வர். அவர்கள் “ஆந்திர மகாசபை வாழ்க!” என்ற போர் முழக்கத்துடன், “வாதெசலா’ (Vadasala) வினால் ரஜாக்கர் குண்டர்களின் மேல் கற்களை எறிந்தனர். ரஜாக்கர் குண்டர்களை கிராமங்களின் அருகில் நெருங்குவதற்கு விடுவதில்லை. நவீன ஆயுதங்கள் வைத்துக் கொண்டிருந்தாலும் ரஜாக்கர்கள் கிராமங்களிலிருந்து ஓட வேண்டியதாயிற்று. பைத்தியம் பிடித்தவர்கள் போல ரஜாக்கர்கள் மக்களைச் சுடுவர்; இம்மாதிரியான தாக்குதலினால் ஒன்றுமறியாத பல மக்கள், ரஜாக்கர் குண்டர்களினால் கொல்லப்பட்டனர்.

அரசாங்க இராணுவம் மற்றும் ஆயுதமேந்திய ரஜாக்கர் குண்டர்கள் கிராமங்களைத் திரும்பத் திரும்பச் சூறையாடி, மக்கள் பலரை சித்திரவதை செய்தனர். இச்செயல்கள் அரசாங்கத்தின் மீதும், ரஜாக்கர்களின் மீதும் மக்களின் வெறுப்பை எல்லை கடக்கச் செய்தது. ரஜாக்கர் குண்டர்களின் மையங்களை அழிப்பதற்கான உடனடித் தேவைக்காக மக்கள் தீவிரமாகக் குரல் கொடுத்தனர்.

 ஆயுதச் சேகரிப்பு — காவல்படை உருவாக்கம் ஆயுதம் தரித்த எதிர்ப்பு
ரஜாக்கர் குண்டர்கள், போலீசு, இராணுவம் ஆகியவைகளை எதிர்ப்பதற்கு தடி, ஈட்டி, மிளகாய்ப் பொடி ஆகியவை போதுமானதாக இருக்கவில்லை. நவீன ஆயுதங்களின் தேவையை மக்கள் உணர்ந்தனர். இதற்கான முயற்சிகளை மக்களே மேற்கொண்டனர். கட்சிக்கும், ஆந்திர மகாசபைக்கும் மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு தங்களுடைய துப்பாக்கிகள், கத்திகள், ஈட்டிகள் போன்றவற்றைத் தந்தனர். நிலப்பிரபுக்களிடமிருந்து துப்பாக்கிகளை மக்களே பறித்துக் கொண்டனர்.
கிராமங்களின் தற்காப்பும், ஆயுதங்களைச் சேகரிப்பதும் உடனுக்குடன் நடந்தேறின. தானிய வரியைக் கொடுக்க மறுப்பதும், வரிகொடா இயக்கமும், நில வினியோகமும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. மக்களின் எதிரிகள், அவர்களின் குற்றங்களுக்கேற்றவாறு தண்டிக்கப்பட்டனர்.

 கொரில்லாக் குழு உருவாக்குதல்
ஆயுதம் தாங்கிய ரஜாக்கர் குண்டர்கள், போலீசு, இராணுவம் ஆகியவை தினந்தோறும் கிராமங்களின் மீது படையெடுத்தனர். வீடுகளை எரித்தனர். வீடுகளைச் சூறையாடுதல், பெண்களைக் கெடுத்தல், மக்களைச் சித்திரவதை செய்தல் ஆகிய குற்றங்கள் தினந்தோறும் ஏதாவதொரு கிராமத்தில் இடம் பெற்றன. எதிரிகளின் இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து வெற்றிபெற, நன்கு தேர்ந்த படையில்லாமல் சாத்தியப்படாது என்பதை மக்கள் உணர்ந்தனர்.

ஆரம்பத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு படை நிறுவப்பட்டது. கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் இந்த மாவட்டப் படைக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் மிகச் சீக்கிரத்திலேயே கீழணிகளிடம் ஆயுதங்கள் இல்லாமலிருப்பது தவறு என்று புரிந்து கொள்ளப்பட்டது. எனவே மாவட்டப் படை கலைக்கப்பட்டது. தாலுகா மட்டத்தில் படை அமைக்கப்பட்டு, அவர்களுடைய வேலைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. கிராம மட்டத்திலான படைகளும் நிறுவப்பட்டன. கிராமங்களைப் பாதுகாப்பதே அவர்களுடைய முக்கியமான வேலையாக இருந்தது. ஆயுதந்தரித்த ரஜாக்கர் குண்டர்கள், இராணுவம் ஆகியவை உபயோகித்து வந்த பாதைகளைக் கூட அவர்கள் அழிக்க வேண்டியிருந்தது. கிராமத்திலுள்ள எல்லா இளைஞர்களும் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தபோதே இந்தக் கிராமப் படைகளிலும் பங்கெடுத்துக் கொண்டனர்.

படைகளில் முழுநேர ஊழியர்களாக வேலை செய்யச் சித்தமாயிருந்த இளைஞர்களால் முறையான கொரில்லாப் படைகள் நிறுவப்பட்டன. இதற்கான ஆர்வத்தையும் உறுதியையும் அவர்கள் பெற வேண்டியிருந்தது. இந்த முறையான படைகள் முக்கியமாக, ஆயுதந்தாங்கிய ரஜாக்கர் குண்டர்களையும் இராணுவத்தையும் எதிர்ப்பதாக இருந்தன. கிராமங்களைப் பாதுகாப்பது அவர்கள் வேலையாயிற்று. இந்தப் படைகள் தன்னகத்தே 10லிருந்து 25 பேர் வரை கொண்டிருந்தது. சில சமயங்களில் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு ஒரு குழு மற்றொரு குழுவுடன் சேர்ந்து குறிப்பிட்ட தாக்குதல்களை நடத்திற்று. பின்பு தத்தம் இடங்களுக்குச் சென்றது.

இதுவரை உழுவதை மட்டுமே அறிந்த சாதாரண விவசாயிகளின் புதல்வர்கள் எதிரிகளிடமிருந்து ஆயுதங்களைப் பிடுங்கினர். இவர்கள் சண்டைகளின்மூலமும், அனுபவங்கள்மூலமும் போர்த் தந்திரங்களைத் தெரிந்து கொண்டனர். சாதாரண கல்வி கூடப் பெறாத இவர்கள், முறையான கொரில்லாப் படைகளின் தலைவர்களாக உருவாயினர். சாதாரண மக்கள் மத்தியிலிருந்து சிறந்த தீரர்கள் உருவாயினர்.

கொரில்லா படைகள் அமைந்ததன் பயனாக, தெலுங்கானா இயக்கம் ஒரு புதிய, உயர்ந்த கட்டத்தை அடைந்தது. ரஜாக்கர் குண்டர்களின் தாக்குதல்களிலிருந்து கிராமங்களைப் பாதுகாப்பதுடன் மக்கள் திருப்தியடையவில்லை. விவசாய கொரில்லாப் படைகள் தாங்களாகவே ரஜாக்கர் குண்டர்கள் மற்றும் போலீசாரின் சிறிய முகாம்களைத் தாக்க ஆரம்பித்தன. விவசாயக் கொரில்லா படையினர் அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்துக் கொண்டனர். போலீசு அல்லது ரஜாக்கர்களின் வருகைக்காக மறைவாகக் காத்திருந்தனர். அவர்கள் மீது திடீர்த் தாக்குதல் தொடுத்தனர். இதன்மூலமாகப் பல வெற்றிகளை அடைந்தனர்.

படைகளுக்குப் பக்கபலமாக மக்கள் நின்றனர். போலீசார் மற்றும் ரஜாக்கர் குண்டர்களின் தாக்குதல்களை மக்களும் படைகளும் ஒன்று சேர்ந்து வீரத்தோடு எதிர்த்தனர். எதிரிகளுக்கு மக்கள் பலவழிகளில் தொல்லைகளைக் öகாடுத்தனர். இம்மாதிரியான தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடந்த வண்ணமிருந்தன. ஒவ்வொரு கிராமமும் போர்க்களமாக மாறியது. அம்மெனபரொலு, பைரனிபள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்பெற்ற எதிர்த் தாக்குதலானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை, தெலுங்கானா மக்கள் எல்லோரையும் ஊக்குவித்தன. இந்தச் சமயத்தில் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை வீரத்துடன் போராடிய வீரப்புதல்வர்கள் பலரைக் கட்சி இழந்தது. அவர்கள் தங்கள் கைகளில் செங்கொடியை ஏந்தியும் “கம்யூனிஸ்ட் கட்சி ஓங்குக!” என்று முழங்கியும் கம்யூனிஸ்டுகளாகப் போராடினர்.

இந்த வீரமான மக்களில், தோழர் யாதகிரி என்பவரும் ஒருவர். இவர் சூரியபேட்டா தாலுகாவிலுள்ள சிலுவஜந்தா கிராமத்தில் விவசாயத் தொழிலாளியாக இருந்தார். ஜன்னாரெட்டி பிரதாபரெட்டி என்ற கொடுமை வாய்ந்த நிலப்பிரபுக்களிடம் பண்ணைக் கூலியாக இருந்தார். அவர் ஒரு போலீசு லாரியைப் பிடிக்க ஓடினார். போலீசு சுடப்போவதையும் அவர் பொருட்படுத்தவில்லை. இறுதியில் அவர் காலில் குண்டடிபட்டது. மேற்கொண்டு ஓட முடியவில்லை. அருகிலிருந்த அடர்ந்த மரங்களுக்கிடையில் ஒளிந்து கொண்டார். போலீசு உடனே அவரைத் தேட ஆரம்பித்தது; பின்பு அவரைப் பிடித்து மான்ட்ராய் போலீசு பாசறைக்குக் கொண்டு சென்றனர்.

படைகளின் இரகசியம் அறிவதற்காக நாள் கணக்காக அவர் சித்திரவதை செய்யப்பட்டார். இந்தச் சித்திரவதை ஒருநாள் இரண்டு நாள் மட்டுமல்லாது தொடர்ந்து 10 நாட்களுக்கு நடந்தது. அவருடைய விரல்களுக்குள் ஊசி குத்தப்பட்டது. அவருடைய உடம்பு முழுவதும் பிளேடுகளால் கிழிக்கப்பட்டது; சிகரெட் நுனிகளால் சுடப்பட்டது. அவர், தலைகீழாகத் தொங்கவிடப்பட்டார். தடிகளாலும், துப்பாக்கியின் பின்பகுதிகளாலும் அடித்தும், போலீசு பூட்ஸ் கால்களால் உதைத்தும் அவருடைய ஒவ்வொரு எலும்பும் நொறுக்கப்பட்டது.

இவ்வளவு சித்திரவதைபடுத்தப்பட்ட போதும், நமது வீரர் யாதகிரி சிறிதும் வளைந்து கொடுக்கவில்லை. படைகளைப் பற்றிய இரகசியங்கள் ஒன்றைக் கூட அவர் சொல்ல மறுத்துவிட்டார். அவர் உறுதியாகச் சொன்னார்: “உங்களுக்கு முன் நான் பணியப் போவதில்லை. நான் இறந்தாலும் கூட எங்களுடைய சங்கம் உயிருடன் இருக்கும். அது உங்கள் எல்லோரையும் அழித்து விடும்.” இதுவே அவர் கடைசி வரைக்கும் சொன்ன வீரமிக்க வார்த்தைகள்.

இறுதியில் இராணுவ அதிகாரி அவரை ஒரு நாற்காலியில் அமரச் செய்து இரகசியங்களைச் சொல்லிவிடுமாறு கெஞ்சினான். ஆனால் யாதகிரி உறுதியான, முடிவான பதிலையே திரும்பச் சொன்னார். இதனால் கோபமடைந்த இராணுவ அதிகாரிகள் அவரைக் கொல்வதற்கு உடனே உத்தரவுகள் பிறப்பித்தனர்.

யாதகிரியினுடைய கால்களும் கைகளும் கட்டப்பட்டன. இராணுவத்தினர் அவருடைய உடம்பின் பகுதிகளை ஒவ்வொன்றாகச் சுட ஆரம்பித்தனர். இடையிடையே அவரை இரகசியங்களைச் சொல்லிவிடுமாறு கேட்டனர். ஆனால் யாதகிரி மறுத்துவிட்டு “சங்கம் வாழ்க! கம்யூனிஸ்ட் கட்சி ஓங்குக!” என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொன்னார். இறுதியில் அவருடைய இதயத்தில் சுடப்பட்டு உயர்ந்த தியாகியானார். அவர் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் ஆனார். கம்யூனிச சித்தாந்தத்திற்குச் சிறந்த மதிப்பைப் பெற்றுக் கொடுத்தார்.
 போர் நிறுத்த ஒப்பந்தம் —பாசறைகளை அழித்தல்
இந்தப் போராட்டங்களுக்கிடையில் நிஜாம் நவாப், காங்கிரசு அரசாங்கத்துடன் ஒரு சமரசத்திற்கு வந்தான். ஒரு வருடத்திற்கு சுதந்திரமாக இருப்பதற்கு அவனது ஆட்சிக்கு அனுமதி கிடைத்தது. இவ்வகையாக, காங்கிரசு அரசாங்கம் தெலுங்கானா மக்களுக்குத் துரோகம் செய்தது. இந்தச் சமரசத்தினால் நிஜாம் நவாப் திரும்பவும் தெலுங்கானா மக்களின் போராட்டத்தை கொடூரமாக அடக்குவதற்கு ஆரம்பித்தான். மாநில காங்கிரசு ஏற்கனவே போராட்டத்திற்கு வருந்தி விலகிவிட்டது. இதன்மூலம் மாநிலக் காங்கிரசு அதிகாரபூர்வமாக வெள்ளைக் கொடியை உயர்த்தியது. இதன் வழியாக காங்கிரசு அரசாங்கமும், மாநில காங்கிரசும் தெலுங்கானா மக்களின் போராட்டத்தை அடக்குவதற்கு நவாப்பிற்கு மறைமுகமாக உதவின. மக்களின் இயக்கம் நசுக்கப்படுமென்று அவர்கள் வீணான கனவு கண்டனர். ஆனால் முடிவுகள் இதற்கு எதிராக அமைந்தன.

 பாசறைகளை அழித்தல்
நிஜாம் அரசின் போலீசும், இராணுவமும், ஆயுதந்தரித்த ரஜாக்கர் குண்டர்களும் மக்களைக் கொல்வதற்காக கிராமங்களில் வெறித்தனமாக செயல்பட்டனர். கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் மக்கள் வீசியெறியப்பட்டனர். மக்கள் தங்களுடைய சவக்குழிகளைத் தாங்களாகவே தோண்டச் செய்யுமாறு பலாத்காரப்படுத்தப்பட்டனர். பின்னர், அதில் புதைக்கப்பட்டனர்.

மக்களும் படைகளும் இந்தக் கொடிய தாக்குதல்களை எதிர்க்கப் பரந்த அளவில் முன்வந்தனர். இராணுவமும் ரஜாக்கர்களும் உபயோகப்படுத்தும் வீதிகளையும் பாதைகளையும் அவர்கள் அழித்தனர். இதன் பின்னர், ரோந்து சுற்றுதலை அதிகரிக்க கிராமங்களில் இராணுவத்தின் பாசறைகள் அதிகரிக்கப்பட்டன. ஒவ்வொருமூன்று அல்லது நான்கு மைல்களுக்கு ஒரு இராணுவப் பாசறை அமைக்கப்பட்டது. இந்தப் பாசறைகள் தேஷ்முக், நிலப்பிரபுக்கள் ஆகியோர்களுடைய வீடுகளில் அமைக்கப்பட்டன.

எனவே கட்சியும், மக்களும் அந்த இராணுவப் பாசறைகளை அழிப்பதற்குத் திட்டங்களைத் தீட்டினர். கொரில்லாப் படைகளுடன் சேர்ந்து போராட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் முன்வந்தனர். தேஷ்முக், ஜமீன்தார் ஆகியோருடைய வீடுகளைச் சூறையாடுவது தீவிரப்படுத்தப்பட்டது. இந்தச் சிறந்த இயக்கத்தின் இலக்கு, கிராமங்களில் எதிரிகளின் பாசறைகள் இருக்க முடியாமல் செய்வதேயாகும். இந்த இயக்கத்தில் ஜமீன்தார்கள் மற்றும், நிலப்பிரபுக்களின் பல வீடுகள் அழிக்கப்பட்டன. இதனால் போலீசும், ரஜாக்கர் குண்டர்களும் சரியான இடங்கள் கிடைக்காததால் கிராமங்களிலுள்ள தங்கள் பாசறைகளைக் கலைத்துவிட்டு தாலுகா மையங்களில் பாசறைகளை அமைத்துக் கொண்டனர்.

இராணுவத்தின் சூறையாடுதல் வளர்வதைத் தடுக்க, இராணுவப் பாசறைகளை சூறையாடுவதற்கு கட்சியானது திட்டம் தயாரித்தது. தாலுகா மையங்களிலிருந்த பாசறைகளை ஒழிக்க ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பல வெற்றிகள் கிடைத்தன. ஆயுதங்கள் பல கிடைக்கப் பெற்றன. மக்களின் இந்த சூறையாடலினால் எதிரிகள் பயந்து போய், சிறிய பாசறைகளைக் கலைக்கும்படி நேரிட்டது. இராணுவத்தினரால் நூற்றுக்கணக்கான பாசறைகள் அமைக்கப்பட்டன. இம்மாதிரியான பெரிய பாசறைகள் இருந்தாலும் கொரில்லாக் குழுக்களும், மக்களும் தொடுத்த தாக்குதல்களினால் அவர்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழவேண்டியிருந்தது. அச்சம் கொண்ட இராணுவத்தினர் தமது உணர்வுகளைத் தக்க வைத்துக் கொள்ள இரவு முழுவதும் இலக்கின்றி சுடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 கிராம ராஜ்ஜியத்தை நிறுவுதலும் விவசாயச் சீர்திருத்தங்களும்
இராணுவத்தின் கண்காணிப்புப் பலமாக இருந்த நிலையிலும், கிராமங்களைப் போலீசு, ரஜாக்கர் குண்டர்கள் சூறையாடுவது அதிக அளவில் நடந்து கொண்டிருந்த நிலையிலும், மக்கள் திரள் திரளாகக் கொலை செய்யப்பட்ட நிலையிலும் கூட, இம் மாபெரும் இயக்கம் புதிய புதிய இடங்களுக்குப் பரவிச் சென்றது. இது எவ்வாறு சாத்தியமானது?

கிராமத்திலுள்ள மக்கள் எல்லோரும் உறுதியாக நின்றனர். அவர்கள் அடிமைத்தளைகளை உடைத்துப் பலவகையான சுரண்டல்களிலிருந்தும் தங்களை விடுதலை செய்து கொண்டனர். நிலப்பிரபுக்களின் ஆதிக்கமானது முடிவுக்கு வந்தது. கிராம அளவிலான நிஜாம் அரசின் உறுப்புச் சக்திகளின் வடிவங்கள் ஒழிக்கப்பட்டன. ஏறக்குறைய 3000 கிராமங்களில் கிராம ராஜ்ஜியம் நிறுவப்பட்டது.

நிஜாம் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்களுக்கெல்லாம் கிராம ராஜ்ஜியத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. மேல்மட்ட வர்க்கங்களைப் பொருத்தவரையில் போர்க்குணமிக்கவர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்தக் கிராமச் சபைகளில் விவசாயத் தொழிலாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமச் சபையும் 5லிருந்து 11 வரையில் உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. தேவையான தகுதிகளைக் கொண்ட பெண்களும் இந்தச் சபைகளில் அங்கம் வகித்தனர். இந்தக் கிராமச் சபைகள் கிராம மக்களுக்கிடையிலான சச்சரவுகளைத் தீர்த்து வைத்தன.

 நிலப் பங்கீடு
“வெட்டிச் சாக்கிரி” ஒழிப்பு மற்றும் வரி கொடா இயக்கமானது, தானியப் பங்கீடு இயக்கம் நிலப்பங்கீடுக்கான இயக்கமாக வளர்ந்தது. பன்சார், பன்சாரி நிலங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர்கள் மக்களுக்குப் பங்கீடு செய்யப்பட்டன. நிலப்பிரபுக்களால் பலாத்காரமாக ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்ட நிலங்களை மக்கள் திரும்பவும் எடுத்துக் கொண்டனர். நிலப்பிரபுக்களின் நிலங்களுக்கு ஓர் உச்சவரம்பு ஏற்படுத்தப்பட்டது. மேலதிகமான எல்லா நிலங்களும் பங்கிடப்பட்டன.

பன்சார் நிலங்களைத் தவிர, ஏறக்குறைய பத்து லட்சம் ஏக்கர் நிலங்கள் மக்களுக்குப் பங்கிடப்பட்டன. இந்த நிலங்கள் முக்கியமாக விவசாயக் கூலிகளுக்கும் வறிய,நடுத்தர விவசாயிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் விவசாயக் கருவிகளும் கால்நடைகளும்கூட மக்களிடம் பங்கீடு செய்யப்பட்டன. எதிரிகளுடன் சேர்ந்துவிட்ட நிலப்பிரபுக்களின் நிலங்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு, மக்களிடம் பங்கிடப்பட்டன. இவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்படவில்லை. ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள் ஆகியோர் விவசாயிகளுக்குக் கொடுத்த கடன்கள் யாவும் ரத்து செய்யப்பட்டன. தேஷ்முக், மற்ற நிலப்பிரபுக்கள் ஆகியோருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான தானியமூட்டைகள் மக்களிடையே பங்கீடு செய்யப்பட்டன.

விவசாயத் தொழிலாளர்களின் தினக்கூலி உயர்த்தப்பட்டது. நிலவரி  ஒழிக்கப்பட்டது. கள்ளுத் தொழிலாளர்களுக்கு மரங்களிலிருந்து இலவசமாக கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டது. பல கிராமங்களில் மக்களுடைய நிலங்களுக்குப் பாசன வசதிக்குத் தேவையான கால்வாய்கள், குளங்கள் கட்டுவதற்கு மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டன.

கிராமங்களில் மருத்துவ வசதி அதிக அளவில் அதிகரிக்கப்பட்டது. முக்கியமாக காலரா தொற்று நோய்க்காலத்தில், அதற்கான மருந்துகள் மிகப்பெரிய அளவில் விநியோகிக்கப்பட்டன. கிராமங்களில் விவசாயக் கருவிகளை இலவசமாகப் பெறுவதற்கு அனுமதிஅளிக்கப்பட்டது. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை அளிக்கப்பட்டது. தேவையான சமயங்களில் அது நிறைவேற்றப்பட்டது. இந்த மாபெரும் இயக்கமானது தீண்டாமையை (க்ணtணிதஞிடச்ஞடூடிtதூ) அழித்தது. பழையமூட நம்பிக்கைகள் பல ஒழிக்கப்பட்டன.

அரசியல் பிரசாரம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவை மிக விரிந்த அளவில் நடத்தப்பட்டன. கல்வியைப் பரப்புவதற்கு இரவு நேரப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. இலட்சக்கணக்கான மக்கள் ஆரம்பக் கல்வியைப் பெற்றனர். திருடுவதானது பெரும்பாலும் இல்லாத ஒன்றாகியது.

 யூனியன் போலீசு நடவடிக்கை (1948 செப்டம்பர் 13) — ரஜாக்கர் குண்டர்களை அழித்தல் — மக்கள் போராட்டம் முன்னேறுதல்
1948க்குள்ளாக, தெலுங்கானா மக்கள் இயக்கமானது மிக உயர்நிலையை அடைந்தது; அது பல புதிய இடங்களுக்கும் பரவியது. இயக்கமானது நலகொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய அளவில் பரவியது. இயக்கம் ஏற்கனவே மேடக் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நுழைந்து விட்டது. தெலுங்கானா மக்கள் உறுதியாக நின்றனர். நிஜாமினுடைய ரஜாக்கர் குண்டர்களை அவர்கள் துரத்தி அடித்தனர். நிஜாம் இராணுவமும், ஆயுதந்தாங்கிய ரஜாக்கர்களும் எதிர்த்து நிற்க முடியாமல் ஓடினர். ஆயிரக்கணக்கான கிராமங்கள் விடுவிக்கப்பட்டன. பரந்த அளவில் நிஜாமின் ஆட்சி அழிக்கப்பட்டது.

டெல்லியிலிருந்த காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா மக்கள் இயக்கத்தைக் கண்டு அஞ்சினர். பெருமுதலாளித்துவ, பெரு நிலப்பிரபுத்துவ காங்கிரசு அரசாங்கத்திற்குக் கிராமங்களில் பண்ணையடிமை முறை தேவையாயிருந்தது. இந்த பண்ணையடிமை முறை நிஜாம் அரசில் அழிக்கப்பட்டு வந்தது. இந்தியாவின் நடுப்பகுதியிலேயே இது நடைபெற்றது. இந்த இயக்கமானது சேதங்களை ஏற்படுத்துமோ என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அஞ்சினர். அதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடியுமுன்னரே, மத்திய காங்கிரசு அரசாங்கமானது நிஜாம் அரசுக்குள் தன்னுடைய இராணுவத்தை நுழையுமாறு ஆணை பிறப்பித்தது. இந்தப் போலீசு நடவடிக்கை 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. நிஜாம் நவாபை ஆட்சியிலிருந்து விலக்க அது கருதவில்லை. தெலுங்கானா மக்களே இதைச் செய்து வந்தனர். இந்திய இராணுவத் தலையீட்டின் முக்கிய நோக்கம், வளர்ந்து கொண்டிருக்கும் விவசாயப் புரட்சியை இரத்தத்தில்மூழ்கடித்து, அழிந்து கொண்டிருக்கும் சுரண்டல் தன்மை வாய்ந்த பண்ணையடிமை முறையைப் பாதுகாப்பதே. இவ்வளவு சீக்கிரத்தில் மத்திய அரசாங்கத்தின் இராணுவத் தலையீடு நடைபெறும் என்று கட்சித் தலைமை எதிர்நோக்கவில்லை. இவ்வாறாக ஒரு புதிய பிரச்சினை எழுந்தது.

இந்திய யூனியனின் இராணுவம் நுழைவதற்கு முன்னரே ராஜ்பஹதூர் கௌர் மற்றும் பலர் (இவர்கள் தற்சமயம் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளனர்) பொதுக் கூட்டம் கூட்டி தெலுங்கானா சுதந்திரமான மாநிலமாக வேண்டும் என்று கூறினர். யூனியன் அரசாங்கமானது கட்சி முழுவதையும் உலுக்கிய இந்த முழக்கத்தை ஆதரித்து பயன்படுத்திக் கொண்டது. ஆனால் கட்சி இந்த முழக்கத்தை நிராகரித்தது.

கட்சியிலிருந்த சில வலதுசாரிகள் இந்த இயக்கத்தை உடனே நிறுத்த வேண்டுமென்று கூறினர். இவர்கள் ஏற்கனவே வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்டனர். அருட்ல ராமச்சந்திரரெட்டி போன்றவர்கள் கைதாக்கப்பட்டு, பின்பு சிறையிலிருந்து கொண்டு இயக்கத்தை நிறுத்துமாறு கடிதங்களை எழுதினர். அவர்களெல்லாம் இன்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலைவர்களாக உள்ளனர். ஆனால் இந்த சரணாகதிப் பாதையை கட்சி முழுமையும் நிராகரித்தது. நிஜாம் அரசாங்கத்தின் இராணுவ மையங்களை அழிக்கத் திட்டத்தை தீட்டியது. நிலப்பிரபுக்களை அழித்து, அவர்களின் நிலங்களைப் பங்கிடுவதற்காகத் திட்டம் தீட்டியது.

 ரஜாக்கர்களின் மையங்களை அழித்தல்
இந்திய அரசின் இராணுவம் எல்லைகளில் நுழைந்ததன் விளைவாக ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டைகளினதும், இயந்திர துப்பாக்கிகளினதும் பேரொலிகளைக் கேட்டவுடன், தெலுங்கானா மக்கள் முழுமையும் மாபெரும் போராட்டத்திற்குத் தயாராயினர். கடந்த 3 வருடங்களாக மக்களுக்கு மனிதத் தன்மையற்ற, இழிந்த, கொடிய செயல்களைச் செய்த ரஜாக்கர் குண்டர்களின் மையங்களைத் தாக்கினர். எல்லா இடத்திலிருந்தும் மக்கள் போராட்டத்திற்குக் கிளம்பினர். இலட்சக்கணக்கான மக்கள் ரஜாக்கர் குண்டர்களின் மீது பழிக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக முன்வந்தனர். ரஜாக்கர் குண்டர்களின் மையங்களை சுற்றி வளைத்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆயுதங்களை பறித்தனர். எதிர்த்தவர்களையெல்லாம் மக்கள் அழித்தனர். சரணடைந்தவர்களை மக்கள் மன்னித்தனர். ஆட்களை உயிருடன் கொளுத்துதல், கொல்லுதல் — இவை சுரண்டல் வர்க்கங்கள் மேற்கொண்ட போர்முறை; சரண்டைந்த எதிரிகளுக்கு மன்னிப்பை அளித்தல் — இவை சுரண்டப்பட்ட வர்க்கங்கள் மேற்கொண்ட போர்முறை.

 நிலப்பிரபுக்களின் மாளிகைகளின் மீதான தாக்குதல்
அதுநாள்வரை மக்களின் எதிரிகள் தங்கள் சுரண்டல் சாம்ராஜ்ஜியத்தை சுதந்திரமாக நடத்திவர நிஜாமின் ரஜாக்கர் குண்டர் படைகளைச் சார்ந்திருந்தனர். ஆனால் நிஜாம் இராணுவம் இந்திய யூனியனிடம் ஒரு வாரத்திற்குள் சரணடைந்தது. ரஜாக்கர் குண்டர்கள் மக்களிடம் சரணடைந்து ஆயுதங்களை ஒப்படைத்தனர். இந்தச் செயல்களின்மூலமாக மக்களைச் சுரண்டியவர்களுக்கு நடுக்கம் கண்டது. எதிரிகளின் தவறான செயல்களுக்குப் பழிவாங்க எல்லா மக்களும் ஒன்றாகத் திரண்டதைக் கண்ட சுரண்டல்காரர்கள் அச்சம் கொண்டனர். ஒரு பகுதியினர் தங்களுடைய வைக்கோல் போர்களுக்குள் ஒளிந்து கொண்டனர்.

ஆனால் கொடியவர்கள் புரிந்த அந்தக் கொலைகளை மக்கள் மறக்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் எல்லா இடங்களிலும் பல்வேறு நிலப்பிரபுக்களின் வீடுகளைத் தாக்கி முழுமையாக அழித்தனர். அவற்றைப் பரந்தவெளியாக மாற்றினர். அதனிடத்தில் நடைபாதையை அமைத்தனர். இதன்மூலம் காலாங்காலமாக இருந்து வந்த அவர்கள் வெறுப்பு தணிந்தது.

மாபெரும் தியாகி கொமரய்யாவைக் கொலை செய்த பாபுராவ் படேல் (விஷ்ணூ<ர் தேஷ்முக்கின் மகன்) என்பவன் போலீசு உதவியால் சரக்கு ரயில் வண்டியில் ஏறி மக்களின் சீற்றங்களிலிருந்து தப்ப முயன்றான். ஆனால் ஜனகோன் ரயில் நிலையத்தில் மக்கள் அவனைக் கண்டுபிடித்து விட்டனர். அவனைக் கீழே வீழ்த்தினர். அவன் சாகும்வரை அவன் உடலின் மீது ஏறிக் குதித்தனர். ஆனாலும் மக்களின் வெறுப்பு தணியவில்லை. ஒரு வயதான லம்பாடிப் பெண் அவன் முகத்தில்மூத்திரம் பெய்தாள். வழிவழியாக வந்த அடிமை முறையின் பாதிப்புகள், சித்திரவதைகள், கொள்ளையடித்தல், பெண்கள் மீதான பாலியல் வன்முறை ஆகியவற்றால் அவதியுற்ற மக்களின் வெறுப்பே இது. தலைமுறை தலைமுறையாக வந்த வெறுப்புகள் எல்லாம் எதிரிகளின் மீது பழிதீர்க்க வெடித்தன.

மக்கள் புயல்போல் எழுந்து ரஜாக்கர் குண்டர்களை ஆயுதமிழக்கச் செய்தனர். அவர்கள் நிலப்பிரபுக்களின் சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். ஆனால் மக்களின் சீற்றங்களிலிருந்து ரஜாக்கர் குண்டர்களை விடுவிக்க, காங்கிரசு அரசாங்கத்தின் இராணுவம் முன்வந்தது.

மறுபுறத்தில், காங்கிரசின் தொண்டர்களும் நுழைந்தனர். தெலுங்கானா மக்களால் நடத்தப்பட்டு வந்த நிஜாம் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த போதெல்லாம் இந்த “மாபெரும் வீரர்கள்’ யூனியன் பகுதிகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்தனர். யூனியன் இராணுவம் நுழைந்தவுடன் இந்த வீரர்களும் தெலுங்கானா பகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் முசுலீம் ஏழைகளுக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய பொருட்களைக் கொள்ளையிட ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கான முசுலீம் ஏழைப் பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டனர். ஆயுதந்தரித்த மக்கள் படைகள் முசுலீம் பெண்களை காங்கிரசு ரஜாக்கர்களிடமிருந்து பாதுகாத்தது. முன்பு நிஜாம் நவாபின் முசுலீம் ரஜாக்கர்கள் இந்து மக்களை கொடுமைப்படுத்திக் கொலை செய்தனர். இப்போது காங்கிரசு ரஜாக்கர்கள் முசுலீம் மக்களை கொடுமைப்படுத்திக் கொலை செய்ய ஆரம்பித்தனர். முன்பு செங்கிஸ்கான், தமர்÷சன் நிஜாம் நவாப்; இப்போது காங்கிரசு ஆட்சியாளர்கள் — இவ்விரு சாராருமே கொலைகாரர்கள்.

நிஜாம் அரசுக்குள் யூனியன் இராணுவம் நுழைந்தவுடன் தெலுங்கானா மக்களின் போராட்டம் ஓர் உயர்ந்த, புதிய கட்டத்தை அடைந்தது. நகர்புற மையங்களில் மக்களின் எதிரிகள் பாதுகாக்கப்பட்டாலும், கிராமங்களில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம் தடையில்லாத தீச்சுவாலைகள் போல் பரவியது. இது தீவிரப்பட்டுக் கொண்டிருந்தது. யூனியன் இராணுவம் வந்து சேருவதற்கு முன்னரே நிலப்பிரபுக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இலட்சக்கணக்கான தானியமூட்டைகள் மக்களிடையே பங்கிடப்பட்டன. அவர்களுடைய ஆயிரக்கணக்கான கால்நடைகள் மக்களால் பறிமுதல் செய்யப்பட்டு பங்கீடு செய்யப்பட்டன. நிஜாம் இராணுவத்தினரும், ரஜாக்கர் குண்டர்களும் பாசறை போட்டு இருந்த இடங்களில் நிலப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தாலும், இப்போது அது செய்யப்பட்டு புதிய கிராமங்களிலும் முழுமையான கிராம இராஜ்ஜியம் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் பல ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

 1948 முடிவு வரை: இராணுவ அரசாங்கம் கிராமங்களைச் சூறையாடுதல்
யூனியன் இராணுவம் நுழைந்த ஒரு வார காலத்திற்குள் நிஜாம் நவாப்பின் அரசு சரணடைந்தது. நிஜாம் அரசு முழுமையும் யூனியன் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கவர்னர் ஜெனரல் ஜெ.என். சௌத்திரியின் கீழ் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.

மக்கள் எதிரிகளுக்கு, இராணுவ அரசாங்கம் பாதுகாப்பு அளித்தது. இதற்கு முன்னர் ஓடிப்போன ஜமீன்தாரர்கள், ஜாகீர்தாரர்கள், தேஷ்முக்குகள் ஆகியோர் யூனியன் இராணுவத்துடன் கிராமங்களுக்கு திரும்பி வந்து, தங்களை நிலைநாட்டிக் கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரசு குண்டர்கள் நின்றனர். யூனியன் இராணுவம் பல இடங்களில் பல பாசறைகளை நிறுவியது. ஒவ்வொரு முகாமிலும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் இருத்தப்பட்டனர். இந்த முகாம்களின் அருகில் காங்கிரசு தொண்டர்கள் தங்களுடைய அலுவலகங்களைத் திறந்தனர். அவர்களுடைய கொடியானமூவர்ணக் காங்கிரசு கொடி பறக்கவிடப்பட்டது.

காங்கிரசு தொண்டர்களும், நிலப்பிரபுக்களும், மக்களிடையில் ஏமாற்றுமுகமாக ஒன்றைப் பரப்பினர். “நமது எதிரி நவாப்பின் அரசே! இப்பொழுது அவன் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டான். அதனால் நீங்கள் பங்கிட்டுக் கொண்ட நிலங்களையும், கால்நடைகளையும் அதன் சொந்தக்காரர்களுக்குத் திருப்பித் தந்துவிடுங்கள். பின்னர் காங்கிரசே நிலப்பிரபுக்களுக்குரிய நிலங்களைப் பிரித்துத் தரும். கம்யூனிஸ்டுகளை நம்பாதீர்கள். அவர்கள் ரசியாவின் ஏஜெண்டுகள்!” இதுவே காங்கிரசு தொண்டர்களும், நிலப்பிரபுக்களும் பரப்பியது. அவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். கவர்னர் ஜெனரல் ஜெ.என். சௌத்திரி “கம்யூனிஸ்டுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் சரணடையாவிட்டால் அவர்களை அழிப்பேன்” என்று பகிரங்கமாக ஹைதராபாத்தில் சொன்னான்.

இத்தகைய பிரச்சாரத்தால் மக்களை ஒருபுறத்தில் ஏமாற்றிக் கொண்டு, மறுபுறத்தில் இராணுவம், காங்கிரசு தொண்டர்களின் உதவியுடன் கட்சி ஊழியர்களையும் ஆந்திர மகாசபை ஊழியர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்தது. அவர்கள் சந்தேகப்படும் ஒவ்வொருவரையும் பிடித்து சித்திரவதை செய்தனர். கிராப்புத் தலையுடையவர்கள் ஒவ்வொருவரும், வெள்ளைச் சட்டை அணிந்த ஒவ்வொருவரும் கம்யூனிஸ்டு என்று சந்தேகிக்கப்பட்டு, கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டனர்.

பங்கிடப்பட்ட நிலங்களை மக்களிடமே விட்டுவிட வேண்டுமென்றும், கிராம ராஜ்ஜியம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும் கட்சி கோரியது. ஓர் உடன்படிக்கை செய்யவேண்டும் என்றே இந்தக் கருத்துகளை கட்சி கூறியது. ஆனால் இந்த நியாயமான கருத்துகள் கூட அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டன.

யூனியன் இராணுவம் மக்களையும் அவர்களுடைய இயக்கத்தையும் தாக்குவதற்குத் தயார் செய்தது. மக்கள் பிரச்சினைகளில் ஒன்று கூட தீர்க்கப்படவில்லை. ஆனால் மக்களால் எதிர்த்தாக்கு தலை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. அதனால் மக்களின் எல்லாப் படைகளும் சமதளத்திலிருந்து காட்டுப் பகுதிகளுக்குப் பின்வாங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. முக்கியமாக மனுகோட்டா, பத்ராசலம், நல்லமலா ஆகிய பகுதிகளிலுள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது. மக்களுடைய ஆலோசனையைக் கேட்ட பின்னரே இம் முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கட்சி விரும்பியது. ஆனால் படைகள் உடனேயே காட்டுப்பகுதிகளுக்குள் செல்லவில்லை. இந்தப் படைகள் கிராமங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருந்தன. இவ்வாறாக மிக முக்கியமான நேரத்தையிழந்தது. இதற்குள்ளாக யூனியன் இராணுவம், மக்கள் வீரர்கள் பலரை பிடித்துக் கொன்றது. மிகச் சீக்கிரத்திலேயே இயக்கம் பலத்த இழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.

 போராட்டத்தைத் தொடர முடிவுசெய்தல்
யூனியன் இராணுவம் நுழைந்தவுடன், நிஜாம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒப்புக்காகக் கலந்து கொண்ட பணக்கார விவசாயிகளும் சிறிய நிலப்பிரபுக்களும் இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டனர். தெலுங்கானாவை காங்கிரசு அரசாங்கம் விடுவித்து விட்டது என்று கூறி மக்களை ஏமாற்ற ஆரம்பித்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர் சில தலைவர்கள் மக்கள் துரோகியாக மாறிவிட்டனர்.

இதையொட்டி திரிபுவாத சரணாகதி மனப்போக்கு கட்சிக்குள்ளேயே தலைதூக்கியது. போராட்டத்தை நிறுத்துமாறு அவர்கள் கோரினர். அவர்கள் பின்வருமாறு விவரித்தனர்: “நிஜாம் எதிர்ப்பு உணர்வுகளை மக்கள் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் காங்கிரசு எதிர்ப்பு உணர்வுகளைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் காங்கிரசை எதிர்க்கவில்லை. அதனால் அவர்கள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் காங்கிரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டத்தை எதிர்க்கின்றனர். சட்டத்திற்குட்பட்ட கிளர்ச்சிகளின்மூலம் சலுகைகளை அடைய விரும்புகின்றனர். நிலப்பங்கீட்டைப் பற்றி கட்சி மிகைப்படுத்திக் கூறுகின்றது. குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களும், நிலப்பிரபுக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே விநியோகிக்கப்பட்டுள்ளன. உபரி நிலங்கள் (Surplus Lands) விநியோகிக்கப்பட்டதைப் பற்றிய அறிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் நிலப்பிரச்சினை என்பது இனி இல்லை. நிலங்களைத் தற்காத்தல் என்பது பற்றிய பிரச்சினை எழவில்லை.”

— இதுவே ரவிநாராயண ரெட்டி மற்றும் அவரைப் போன்றவர்களுடைய பேச்சின் சாரம். இங்கு நாம் ஒரு விசயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். போங்கீர் பகுதியில் ஜமீன்தார் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற போதிலும், அப்போது நிலப்பங்கீடு அளவிற்கு இயக்கம் வளரவில்லை. மொத்தத்தில் ரவிநாராயண ரெட்டி போன்றவர்கள், யூனியன் இராணுவத்திடம் சரணடைந்த பணக்கார விவசாயிகள் மற்றும் சிறிய நிலப்பிரபுக்கள் ஆகியோரின் கருத்துக்களையே ஆதரித்துப் பேசினர்.

ஆனால் மக்களுடைய கருத்து முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது. முக்கியமாக சுரண்டப்பட்ட மக்கள் பிரிவினர் சரணடையத் தயாராக இருக்கவில்லை. கிராமங்களிலிருந்து ஓடிச் சென்ற மக்களின் எதிரிகள், யூனியன் இராணுவத்துடன் கிராமங்களுக்குத் திரும்பியதை தங்கள் கண்களாலேயே பார்த்துவிட்டனர். அதனால் யூனியன் இராணுவத்தின் குணத்தைச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் சரணடைய மறுத்தனர். ஆயுதங்களை ஒப்படைக்க ÷வண்டõமென்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்தச் சமயத்தில் “ஓ, கிஸான்! சமரசம் செய்து கொள்ளாதே, பூனைக்கும் எலிக்கும் இடையிலான சமரசமே இது” என்ற பாடல் மக்களிடையில் மிகவும் புகழ் பெற்றதாயிருந்தது. இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிராமமும் இந்தப் பாட்டைப் பாடியது. போராட்டத்தைத் தொடருமாறு மக்களைக் கோரியது. இயக்கத்தின் வெற்றிகளைத் தற்காத்துக் கொள்ள மக்கள் தயாராயினர். இந்த நிலைமைகள் எல்லாவற்றையும் பரிசீலித்த பின்னர், கட்சியின் மாகாணக் கமிட்டி போராட்டத்தைத் தொடர முடிவு செய்தது.

 மக்களுடைய எதிர்ப்பு
காங்கிரசு ரஜாக்கர் குண்டர்களின் உதவியுடன் யூனியன் இராணுவம் கிராமங்களின் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் படை உறுப்பினர்களையும், கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் கைது செய்வதற்காக, கொரில்லாக் குழுக்களின் மறைவிடங்களைத் தேட மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டது. இவர்கள் மக்களை சித்திரவதை செய்தனர். இந்தச் சூழ்நிலையில் மக்களும், படைகளும் சாதாரண ஆயுதங்களை வைத்துக் கொண்டே தடுத்தனர். அவர்கள் தீவிரமாகப் போரிட்டனர். சில வீரர்கள் போராட்டத்தில் வீழ்ந்தனர். ஆனால் இந்த இழப்புக்களினால் மக்களுடைய எதிர்ப்பு பலவீனமடையவில்லை. இராணுவம் வரும் பாதைகளில் மறைந்திருந்து திடீரெனத் தாக்கி பல வெற்றிகளைப் பெற்றனர்.

 1949 இறுதி வரை: அடக்குமுறை, சுற்றி வளைத்துத் தாக்குதல்
1949 இறுதி வரைக்கும் எல்லா இடங்களிலும் மக்களிடமிருந்தும், மக்களுடைய படைகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பை இராணுவம் சந்தித்தது. 5060 இராணுவத்தினர் கூட கிராமத்திற்கு வந்து திரும்ப முடியவில்லை. இதனால் இராணுவம் தனது தந்திரங்களை மாற்றிக் கொண்டது. ஒரே சமயத்தில் 5000லிருந்து 6000 வரையிலான இராணுவத்தினர் சேர்ந்து கொண்டு 5 அல்லது 6 கிராமங்களைச் சுற்றி வளைத்து தேடும் படலம் கொண்ட திட்டத்தை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல், சுற்றி வளைத்துத் தாக்குவது என்று சொல்லப்படும். அவர்கள் இவ்வாறாக ஒவ்வொரு பகுதியையும் தேடினர்.

அவர்கள் கிராம மக்களை ஓர் இடத்தில் கூடுமாறு செய்து, கம்யூனிஸ்டுகளைக் காட்டி கொடுக்க வேண்டுமென்றும், கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலக வேண்டுமென்றும், நிலப்பிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை நிலப்பிரபுக்களுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டுமென்றும் கோரினர். இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டுமென்று மக்கள் சித்திரவதைப்படுத்தப்பட்டனர். பிரம்பினாலும், லத்திகளாலும், துப்பாக்கியின் பின்புறங்களாலும் இரக்கமின்றி மக்கள் தாக்கப்பட்டனர். சீதாபதி என்ற இராணுவ அதிகாரி மக்களின் முதுகுகளில் அரிவாள், சுத்தியல் கொண்ட வடிவத்தைப் போல் காயம் உண்டாகும் வரை அடித்துக் கொண்டேயிருப்பான். இந்தக் கேடுகெட்ட நாய் பின்னர் கொரில்லாக் குழுக்களினால் கொல்லப்பட்டான். கட்சி அங்கத்தினர்களுக்கு ஒரு தனிவகையான சித்திரவதை செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட தோழர்களை மக்கள் முன்பாகவே மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தனர்.

இந்தத் தாக்குதல்களினால் மக்கள் படைகள் சிறிய அளவிலேயே நகர்ந்து சென்றது. சுற்றி வளைத்துத் தாக்கும் முறையில் அகப்பட்டுக் கொண்ட படைக் குழுக்கள் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை வீரமாகப் போரிட்டனர். மக்களின் உதவியால் சுற்றி வளைக்கும் நடவடிக்கை வருகிறது என்பதை அறிந்தவுடன், சுற்றி வளைக்கப்படும் முன்னரே மக்கள் படைகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிவிடும். அவர்கள் இரகசியமாக இயங்கி, மக்களுக்கு உற்சாகம் ஊட்டினர்.

இருந்தாலும், படைகளை பாதுகாப்பதென்பது மிகவும் சிரமமான காரியமாக மாறியது. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் தாக்குதல் தொடுத்தனர். மக்களும் படைகளும் இத்தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. படைகளுக்குப் பக்கபலமாக இருந்த மக்களால் இந்த மனிதத்தன்மையற்ற சித்திரவதையை தாக்குப் பிடிக்க முடியவில்லை. ரஜாக்கர் குண்டர்கள் செய்ததை விட “ஜனநாயக சோசலிஸ்ட்’ நேருவினுடைய இராணுவம் செய்த சித்திரவதையானது மிகவும் கொடியதாக இருந்தது. மக்கள் பின்வருமாறு சொல்ல ஆரம்பித்தனர்: “ஆட்டைச் சாப்பிட்டவன் மறைந்து விட்டான்; ஆனால் அவனுடைய இடத்தில் எருமையைச் சாப்பிடுபவன் வந்துவிட்டான்.”

முன்னர் அடக்கி ஒடுக்கப்பட்ட எதிரிகள் இப்பொழுது இராணுவத்தின் உதவியுடன் கிராமங்களில் மீண்டும் தலைதூக்கினர். சந்தர்ப்பவாதிகள் மக்களிடையில் ஒழுக்கமின்மையைப் பரப்ப ஆரம்பித்தனர். இத்தகைய சூழ்நிலைமைகளில் வறிய மக்கள் சித்திரவதையிலிருந்து தப்ப சரணடைய ஆரம்பித்தனர். படைகள், கட்சி ஊழியர்கள் ஆகியோரின் தற்காப்பு மிகக் கடுமையான சூழ்நிலையில் சிக்கியது. இயக்கம் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்தது. பல பிரதேச, மாவட்ட தலைவர்கள், பகுதிவாரிக் கமிட்டிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், படை உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிருகத்தனமான சித்திரவதைக்குள்ளாயினர். படைகள், அமைப்பாளர்கள், கிராமத் தலைவர்கள், உள்ளூர்ப்படை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலுள்ள அமைப்புத் தொடர்பு உடைக்கப்பட்டது. கட்சி முழுமையும் தற்காலிகக் குலைவு ஏற்பட்டது. தற்காப்பு சரியில்லாமையால், கிராமப்படை உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துக் கமிட்டிகளின் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். அல்லது அரசாங்கத்திடம் சரணடைந்தனர். சரணடைந்தவர்கள் எல்லோரும் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

1949 பிப்ரவரி இறுதிக்குள், ஆயிரக்கணக்கிலிருந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிற்கு தாழ்ந்தது. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு தாலுகாவிலும் 100 அல்லது 200 என்ற அளவிற்கு குறைந்தது. கட்சியுடனும், படைகளுடனும் தங்கிவிட்டவர்களுக்கு சமவெளியில் இருப்பதற்கு இயலவில்லை. தங்களுடைய சொந்த அனுபவங்களின்மூலம், அந்த உறுப்பினர்கள் காடுகளில் ஒன்று சேர்ந்து தங்களை ஒரு அமைப்பாக ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறு இயக்கம் புதிய பகுதிகளுக்குப் பரவியது. சுற்றி வளைத்துத் தாக்குதல், அடக்குமுறை ஆகிய போர் நடவடிக்கைகளில் நேரு அரசாங்கமானது கட்சி, படை ஆகியவற்றின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் மீது மனிதத் தன்மையற்ற கொடுமையான சித்திரவதையைச் செய்தது. தோழர் இராமுலுவின் மீதான இராணுவத்தினரின் மனிதத் தன்மையற்ற சித்திரவதை, கொடூரத்திற்குச் சிறந்த உதாரணமாகும்.

தோழர் இராமுலு சூரியபேட்டாவைச் சேர்ந்த மிர்யாலா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு விவசாயத் தொழிலாளி. அவர் கட்சியில் சேர்ந்து, சிறந்த பெயரை மக்களிடம் பெற்றார். சிறிது காலத்திற்குள்ளாகவே அவர் படை உறுப்பினராக ஆனார். பின்னர் கிராமத் தலைவராக ஆனார். பின்னர் கொரில்லாக் குழுவின் தலைவராக ஆனார். சுற்றி வளைத்துத் தாக்குதல், அடக்குமுறை ஆகிய போர் நடவடிக்கைகளில் அவர் மிர்யாலாவிற்கு அருகில் பிடிபட்டார். கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாலும் கட்சியின் இரகசியங்களில் ஒன்றைக் கூட கூற மறுத்துவிட்டார். இராணுவ நாய்கள் அவரை தெரு வழியாக ஒரு லாரியில் கட்டி இழுத்துச் சென்றனர். அவர் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளாக கிழிக்கப்பட்டது. அவர் மக்களின் பெருமை மிக்க தியாகியானார்.

இத்தகைய கடுமையான அடக்கு முறைகள் நடந்தாலும், மக்கள் படைகள் இராணுவத்தினரை எதிர்த்தனர். நூற்றுக்கணக்கான இராணுவத்தினரை எதிர்த்து வெறும் இரண்டு அல்லதுமூன்று படைஉறுப்பினர்கள் தீவிரமாகப் போரிட்டனர். கடைசிக் குண்டு இருக்கும் வரைக்கும் அவர்கள் போரிட்டனர் போரிட்டுக் கொண்டே இறந்தனர். உயிருடன் பிடிபட்டாலும், கொடுமையான சித்திரவதைக்குட்பட்டாலும் அவர்கள் கட்சி இரகசியங்களைச் சொல்ல மறுத்தனர். எத்தகைய சிறந்த தீரர்கள்! உண்மையான கம்யூனிஸ்டுகள்!

 1951 இறுதிவரை: காடுகளில் புதிய தளங்கள், புதிய பகுதிகளுக்கு இயக்கம் பரவுதல்
கட்சி முடிவுப்படி சில படைகள் மட்டுமே சமவெளிகளில் தங்கியது. மற்ற பெரும்பான்மையான படைகள் காட்டிற்குள் சென்று தங்கின.

கிரிஜன்களுடைய நிலைமைகள்

காடுகளில் முக்கியமாக கோயாக்கள், செஞ்சுக்கள், காடுகளுடன் தொடர்பான கைத்தொழிலைச் சார்ந்திருந்தவர்கள் ஆகியோர் வாழ்ந்து வந்தனர். ஆரம்பத்தில் கோயாக்கள், மக்கள் படைகளை நம்பவில்லை. கோயா மக்களின் நிலைமைகள், அவர்களுடைய ஏழ்மைகளைத் தீர்க்க கட்சி நடத்தும் போராட்டங்களின் நோக்கங்கள் ஆகியவற்றைப் பொறுமையாக விளக்கிய பின்னரே, கோயா மக்கள் படைகளை நம்பத் தொடங்கினர். “பொடு’ விவசாயம், கால்நடை உற்பத்தி, காட்டுப் பொருட்களைச் சேகரித்தல் ஆகியவை மக்களின் முக்கியமான வேலைகள். அவர்களால் இவற்றை நம்பி வாழ்க்கை நடத்த முடியவில்லை. அதனால் அவர்கள் உயிர்வாழ காட்டு வேர்களையும் மற்றவற்றையும் நம்பியிருந்தனர். காட்டுக் குத்தகைக்காரர்கள், காட்டு அதிகாரிகள், வியாபாரிகள், முட்டார்லு ஆகியோர் காடுவாழ் மக்களை பல்வேறு முறைகளில் சுரண்டி வந்தனர். காட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு வகையான கொத்தடிமைகளாக இருந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை காட்டிலேயே கழித்து வந்தாலும், அவர்களுக்கு (கிரிஜன்களுக்கு) விவசாயக் கருவிகளையோ, அல்லது காடுகளிலிருந்து கிடைக்கும் வீட்டிற்குத் தேவையான பொருட்களையோ பெறுவதற்குக் கூட உரிமை இல்லை. அவர்கள் “பொடு’ நிலங்களை தாங்கள் வாங்கிய கடன்களின்மூலம் வியாபாரிகளிடம் இழந்தனர். இதனால் வியாபாரிகள் நிலப்பிரபுக்களாக உயர்ந்தனர்.

 கோயா மக்கள் மத்தியில் புதிய உணர்வுகள்
கோயா மக்களின் மீதிருந்த பல்வேறு வகையான கொடுமையான சுரண்டல்களைப் பற்றி கட்சி பொறுமையாக விளக்கியது. எதிரிகளுக்கு எதிராக எவ்வாறு போரிட வேண்டுமென்று விவரித்தது. அப்போராட்டங்களின்மூலம் எல்லாவகைச் சுரண்டல்களிலிருந்தும் எவ்வாறு விடுதலை பெற முடியுமென்று கட்சி விளக்கியது. கட்சியின் அரசியல் நோக்கங்களையும், தெலுங்கானா இயக்கத்தைப் பற்றியும் அவர்களுக்குக் கட்சி சொல்லிக் கொடுத்தது. காடுகளில் படைகள் சேகரிக்கப்பட்டவுடன், ஊழல் நிறைந்த காட்டு அதிகாரிகளும், வியாபாரிகளும், நிலப்பிரபுக்களும் காட்டுப் பகுதியை விட்டு ஓடினர்.

இதன்மூலம் கட்சியினிடத்திலும், படைகளினிடத்திலும் கோயா மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. சங்கத்தைப் பற்றிய உணர்வு அவர்களிடம் வளர்ந்தது. தங்களுடைய அடிமைத்தளைகளை உடைத்தெறிய அவர்கள் உறுதிபூண்டனர். “முட்டா’ பெரியவர்களிடமும் கூட ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் எல்லாவகையான சுரண்டல்களையும் நிறுத்தினர். கோயா மக்களோடு சேர்ந்து கொண்டு அவர்கள் படைகளுக்கு உதவ முன்வந்தனர்.

இந்தப் புதிய உணர்வுடன் கோயா மக்கள் போராட்டத்தில் சேர்ந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் முன்னேற்றத்தினால் மக்களுடைய எதிரிகள் காட்டுப்பகுதியிலிருந்து ஓடிவிட்டனர். காட்டுப் பகுதிகளிலிருந்த எல்லாக் கிராமங்களிலும் கிராம ராஜ்யம் நிறுவப்பட்டது. நூற்றுக்கணக்கான கோயா மக்கள் கிராமப் படைகளிலும், கமிட்டிகளிலும் முறையான கொரில்லாப் படைகளிலும் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். கோயா பெண்களும் கூட இந்த இயக்கத்தில் முக்கிய இடம் பெற்றனர். கோயா ஆண்களும் பெண்களும் கட்சி அமைப்பாளர்களாகவும், படைத் தளபதிகளாகவும் உயர்த்தப்பட்டனர்.

இவ்வாறாக காட்டுப்பகுதி முழுவதிலும் இயக்கத்தில் ஒரு பேரெழுச்சி காணப்பட்டது. கிராமப் படேல்கள், பட்வாரிகள், ஊழல் நிறைந்த காட்டு அதிகாரிகள் ஆகிய எல்லோரும் காட்டுப் பகுதி கிராமங்களிலிருந்து ஓடிவிட்டனர். காட்டுக் குத்தகைக்காரர்களிடமிருந்தும் காட்டு அதிகாரிகளிடமிருந்தும் சரியான கூலியை மக்களால் பெற முடிந்தது. சில சமயங்களில் இந்தக் கோரிக்கைகளைப் பெற அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினர். வியாபாரிகள் தங்கள் வணிகச் சரக்குகளை, கட்சியால் குறிக்கப்பட்ட விலைகளுக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

காட்டுப்பகுதிகளில் தங்கியிருந்த நிலப்பிரபுக்களின் நிலங்களை கோயா மக்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். அவர்களுடைய கால்நடைகளும், விவசாயக் கருவிகளும் கூட விநியோகிக்கப்பட்டன. காட்டு எல்லைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த நிலப்பிரபுக்களின் நிலங்களும் கால்நடைகளும் கூட கோயா மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் தானியங்களில் வரம்புக்கு மேற்பட்டவை பெரிய அளவில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டது.

காட்டுப் பகுதிகளில் மக்கள் இயக்கம் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், யூனியன் பகுதியிலிருந்த ஆந்திர மக்கள் “எல்லா ஆந்திரர்களும் இணைந்து விசாலாந்திரத்தை (அகண்ட ஆந்திரத்தை) வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்ற முழக்கத்துடன் தெலுங்கானா இயக்கத்துக்கு உறுதுணையாக நின்றார்கள். காங்கிரசு அரசாங்கம் மிகவும் கொடிய அடக்குமுறைகளை ஆந்திர மக்களின் மீது திணித்து வந்தது. வீடுகளைக் கொள்ளையடிப்பது, சாதாரண மக்களைச் சித்திரவதைக்குள்ளாக்குவது, பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவுவது, ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாக நடத்திச் செல்வது ஆகிய இந்தக் கொடுமையான அடக்கு முறைகள் யூனியன் பகுதியில் ஆந்திர மக்களின் இயக்கத்தை ஒடுக்குவதற்காகக் கையாளப்பட்டன.

மறுபுறத்தில், இரகசியமாகச் சமவெளிகளில் சிறுபடைகள் வேலை செய்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில் இராணுவம் முக்கியமாகச் சமவெளிகளிலேயே கவனம் செலுத்தி வந்தது. இயக்கத்தை அடக்குவதற்கு 5 அல்லது 6 சிறிய இராணுவப் பாசறைகளுக்குப் பாதுகாப்பாக ஒரு பெரிய இராணுவ முகாம் நிறுவப்பட்டது. இந்த அடக்குமுறைகளின் விளைவாக கிராமங்களில் மீண்டும் மக்களின் எதிரிகள் தலைதூக்கினர். இந்தச் சூழ்நிலைமைகளில் 3 அல்லது 4 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் படையினர், வீடுகளிலோ அல்லது வயல்களிலோ பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களிடையே வெகு இரகசியமாக வேலை செய்து வந்தனர்.

காங்கிரசு அரசாங்கத்தின் வர்க்கக் குணத்தை வெளிப்படுத்தியும் மக்களிடையில் இயக்கத்தின் வெற்றிகளைப் பாதுகாப்பதற்காக மக்களைப் போராடத் தூண்டியும் துண்டுப் பிரசுரங்களை அவர்கள் விநியோகித்தனர். மக்களிடையில் அரசியல் பிரச்சாரத்தை சிறு கூட்டங்களின்மூலமாக அவர்கள் நடத்தி வந்தனர். மக்களின் எதிரிகளுக்கு எதிரான செயல்களை அவர்கள் நடத்தி வந்தனர். இரவு நேரங்களில் இராணுவத்தின் மீது அவர்கள் திடீரென்று தாக்குதல் தொடுத்தனர். புதிய போர்த்தந்திரங்களின்மூலம் அவர்கள் கட்சிப் பாசறைகளைத் திரும்பவும் அமைத்தனர்.

இவ்வேலையின் முன்னேற்றத்தின் காரணமாக மக்களுடைய எதிரிகள் தங்களுடைய சொந்த கிராமங்களிலேயே திரும்பவும் தங்கியிருக்க முடியாது போயிற்று. அவர்கள் கட்டாயமாக இராணுவ முகாம்களில் தங்கும்படி நேர்ந்தது. அல்லது தங்களுடைய கிராமங்களில் தங்குவதற்கு மக்களுடன் சமாதானம் செய்து கொண்டு அவர்களுடைய அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. மக்களுடைய எதிரிகள் தங்களுடைய விவசாய வேலைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு முடியவில்லை. சமவெளிகளில் இயக்கம் இன்னும் தணியவில்லை என்று காங்கிரசு அரசாங்கமே ஒத்துக் கொள்ள வேண்டி வந்தது.
 மக்களுடைய எதிர்ப்பு
இராணுவம், காட்டுப் பகுதிகளிலும் நுழைந்து இராணுவ முகாம்களை நிறுவியது. காட்டுப் பகுதிகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் வளர்ந்துவரும் மக்கள் இயக்கத்தை ஒடுக்குவதற்கு கொடுமையான முறைகளைக் கையாண்டது. இந்தக் காலகட்டத்திலும், மக்களும் படைகளும் தீரத்துடன் இராணுவத்தை எதிர்த்தனர்.

இராணுவத்தினர் நவீன ஆயுதங்களை வைத்திருந்தனர். தேவையான போர்த் தந்திரங்களை தெரிந்து வைத்திருந்தனர். மக்கள் படைகள் சாதாரண ஆயுதங்களையே வைத்திருந்தன. மிக ஆரம்பத்திலிருந்தே அவர்கள் போர்த்தந்திர முறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் தீரமுள்ள கொரில்லாக் குழுக்கள் இராணுவத்தைக் கடுமையான சூழ்நிலைகளில் சிக்கவைப்பதில் வெற்றியடைந்தது. இராணுவ முகாம்களின் மீது மறைந்திருந்து திடீரென அவர்கள் தாக்கினர். மணிக்கணக்காக அவர்கள் போரிட்டனர். அவர்கள் மிகக் குறைந்த இழப்புகளுடன் இராணுவத்தின் மீது அதிகளவில் சேதம் விளைவித்தனர். அவர்கள் போர்த் தளவாடங்களைக் கைப்பற்றுவதற்காக தாக்குதல் தொடுத்து வந்தனர். இராணுவத்தின் மீதான இத்தகைய இரகசிய திடீர்த் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தன. மனுகோட்டா என்ற பகுதியில் மட்டும் இவ்வகையான 400 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன்­மூலம் போராட்டத்தின் தீவிரத்தினை நாம் புரிந்து கொள்ளலாம்.

வளர்ந்து வரும் இந்த இயக்கத்தை ஒடுக்க, முக்கியமாக காட்டுப்புற இயக்கத்தை ஒடுக்க நேரு இராணுவம் மக்களின் மீதும், படைகளின் மீதும் பாசிச அடக்குமுறைகளைக் கையாண்டது. மிக மோசமான பாசிசக் கொள்ளைக் கூட்டத்தைப் போல் நேரு இராணுவம் நடந்து கொண்டது. இராணுவத்திடமிருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருந்து வந்தாலும், ஹுசூர்நகர் தாலுகாவிலுள்ள ஜன்னபுது கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதிய விவசாயி நிலப்பங்கீடு சமயத்தில், தனக்குக் கிடைத்த நிலத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார். கொடுமைக்கார இராணுவத்தினர் அந்த வயதானவரை பிடித்து எறும்புப் புற்றுக்கு இழுத்துச் சென்று புற்றுக்களின் மீது தண்ணீரைத் தெளித்துவிட்டனர். அவர் மீதும் தண்ணீரைத் தெளித்து சர்க்கரையைப் பூசிவிட்டனர். எறும்புப் புற்றுக்களின் மீது படுக்க வைக்கப்பட்டு நிலத்துடன் உறுதியாகக் கட்டப்பட்டு எறும்புகள் தின்பதற்காக அவரை அங்கே விட்டுவிட்டுச் சென்றனர். இந்த நிலையில் அவர்மூன்று நாட்களுக்கு வைக்கப்பட்டு இருந்தார். சுற்றியிருந்த கிராமத்து மக்களை இந்த இடத்திற்கு வலுக்கட்டாயமாக வரச் செய்து இந்தக் கோரமான நிகழ்ச்சியைப் பார்க்கச் செய்தனர். இந்த வயதான விவசாயி, எறும்புகளாலும், பலவகையான பறவைகளாலும் முழுவதுமாக உண்ணப்பட்டு இறந்தார்.

இந்த அட்டூழியமான செயல் எங்கு நடந்தது? ஹிட்லருடைய ஜெர்மனியிலா? அல்லது முசோலியினுடைய இத்தாலியிலா? அல்லது தெற்கு வியட்நாமிலா? இல்லை! சோவியத் திரிபுவாதிகளால் “ஜனநாயகவாதி”, “சோசலிசவாதி” என்றெல்லாம் புகழப்பட்ட நேரு ஆட்சியின் கீழ்தான் இது நடந்தது.

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகள் மிக வீரத்துடன் போரிட்டனர்; கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை அவர்கள் போராடினர்; போரிட்டவாறே அவர்கள் இறந்தனர். மிக மோசமான சித்திரவதைக்குட்பட்டாலும் அவர்கள் சரணடையவில்லை. ஒரு இரகசியத்தைக்கூட அவர்கள் சொல்ல மறுத்தனர்; இயக்கத்தைக் காப்பதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

தோழர் இரல்லி மல்லய்யா, சமவெளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது இராணுவத்திடம் பிடிபட்டார். கட்சியின் இரகசியங்களை சொல்ல வேண்டி இராணுவத்தினரால் அவர் மிகவும் கொடுமையான முறையில் கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு எருமை மாட்டு வண்டியுடன் கட்டப்பட்டு கற்களின் மீது இழுத்துச் செல்லப்பட்டார். அவர் உடம்பிலிருந்த தோல் முழுவதும் உரிந்தது. ஆனாலும் அவர் சிறிதும் வளைந்து தரவில்லை. அவர் எஃகு மனத்தைக் கொண்டவர். இராணுவத்தினரால் அவரிடமிருந்து ஒரு இரகசியத்தைக் கூட அறிய முடியவில்லை. கத்தியினால் ஒரே ஒரு வீச்சு; அவர் கை துண்டாக்கப்பட்டது. அவர் இரகசியத்தைக் கூற மறுத்துவிட்டார். அவருடைய மற்றொரு கையும் துண்டாக்கப்பட்டது. இருந்தும் அவர் இரகசியங்களைச் சொல்ல மறுத்துவிட்டார். ஒரு கால் வெட்டப்பட்டது. ஆனால் அவர் இரகசியங்களை சொல்லிவிடவில்லை. மற்றொரு காலும் வெட்டப்பட்டது. ஆனால் ஒன்றைக்கூட அவர் சொல்லவேயில்லை. இறுதியில் அவர் இறந்துவிட்டார். இந்த மக்கள் தலைவனின் இரத்தத்தால் செங்கொடி மேலும் சிவப்பைப் பெற்றது. கம்யூனிஸ்டு தலைமுறைக்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

ஒட்டுமொத்தக் கொலைகள் பிரிக்கு (Brigg)னுடைய திட்டம்
மலேயாவிலிருந்த கம்யூனிஸ்டு கொரில்லா இயக்கத்தை ஒடுக்க பிரிக்குனுடைய திட்டத்தை பிரிட்டிசு ஏகாதிபத்தியம் மலேயாவில் கையாண்டது. நேரு அரசாங்கம், காட்டுப்பகுதியில் கோயா மக்களின் இயக்கத்தை ஒடுக்குவதற்காக இந்தக் கொடுமையான திட்டத்தைக் கையாண்டது.

இந்தத் திட்டத்தின்படி 20லிருந்து 30 பேர் கொண்ட கோயா மக்களை சித்திரவதை முகாம்களில் (Concentration Camps) கூட்டி இராணுவத்தினரின் நேரடிப் பார்வையின் கீழ் வைத்தனர். இந்த முகாம்களில் 50 மைல்களுக்கு அப்பாலிருந்த கிராம மக்களும் அடைக்கப்பட்டனர். காட்டுப்பகுதி மக்கள் முழுமையும் 4 அல்லது 5 சித்திரவதை முகாம்களில் வைக்கப்பட்டனர். இதுதான் பிரிக்குனுடைய திட்டம். இவைகளை மனமாற்ற மையங்கள் (Rehabilitation centres) என்று காங்கிரசு அரசாங்கம் அழைத்தது. உண்மையில் இங்கு ஏகப்பட்ட கொடூரங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான கிராமங்களை அவர்கள் எரித்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். கணவனுக்கு முன்னாலேயே மனைவியை நாசப்படுத்துவது என்பது சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. இச்சித்திரவதை முகாம்களில் நூற்றுக்கணக்கானோர் பசியினாலும், தனிமையினாலும், தொற்று நோய்களினாலும் இறந்தனர். சிறிது கூட வெட்கமில்லாமல் இந்த நரகங்களை “காந்திநகர்’, “நேரு நகர்’, “வல்லபாய் நகர்’ என்று காங்கிரசு தலைவர்கள் அழைத்தனர்.

ஆனாலும் காங்கிரசு அரசாங்கத்திடம் மக்கள் சரணடையவில்லை. போலியான மாற்றங்களைக் கண்டு அவர்கள் ஏமாறவில்லை. சித்திரவதை முகாம்களில் இருந்து கொண்டே அவர்கள் படைகளுக்கு உதவி வந்தனர். சில கிராமங்கள், சித்திரவதை முகாம்களுக்குச் செல்ல மறுத்துவிட்டன; கிராம மக்கள் முழுவதும் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். அங்கு அவர்கள் தங்களுடைய சிறிய, தட்டுமுட்டுச் சாமான்களை மறைத்து வைத்துக் கொண்டனர். குடும்பங்கள் முழுவதும் காட்டுப்பகுதிக்குள் சென்று வாழ ஆரம்பித்தன. இப்படி இருந்தாலும் அவர்கள் இன்னமும் படைகளுக்கு உதவினர். இயக்கமானது புதிய பகுதிகளுக்கும் பரவியது. இவ்வாறாக பிரிக்குனுடைய திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
சாதாரண விவசாயத் தொழிலாளிகள், வறிய விவசாயிகள் ஆகியோரின் மகன்களும், மகள்களும் சாதாரண ஆயுதங்களை வைத்துக் கொண்டே, நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த இராணுவத்தினருடன் தீரமாகப் போரிட்டனர். பலவழிகளில் அவர்கள் இராணுவத்தினரைத் தொந்தரவு செய்து, பல வெற்றிகளை ஈட்டினர். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், அவர்கள் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்ததுதான்; அவர்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை உணர்ந்திருந்தனர். அவர்கள் சரியான காரணத்திற்காகப் போரிட்டனர்; இதனாலேயே அவர்கள் தீரமாகப் போரிட்டுப் பல வெற்றிகளை அடைய முடிந்தது.

இராணுவத்தினரால் ஒட்டு மொத்தமாகக் கொடுமைப்படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டாலும், தெலுங்கானா இயக்கம் புதிய இடங்களுக்குப் பரவியது. நலகொண்டா மாவட்டத்தில் ஆரம்பித்த இயக்கம் அடிலாபாத், மேடக், குண்டூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களுக்கும், மத்திய பிரதேசத்திலுள்ள (இன்றைய சட்டிஸ்கார் மாநிலத்திலுள்ள) பஸ்தார் பகுதிகளுக்கும் பரவியது. சமவெளிகளிலேயே மக்கள் படைகள் இராணுவ முகாம்களின் மீதும், மக்கள் எதிரிகளின் மீதும் மறைந்திருந்து திடீர்த் தாக்குதல்களைத் தொடுத்தன.

இவ்வாறாக, 1951க்குள்ளாக புதிய பகுதிகளுக்கு இயக்கம் பரவியது. நேரு அரசாங்கம் 50,000 இராணுவத்தினரை அனுப்பியும், 10 கோடி ரூபாய்களைச் செலவு செய்தும் தெலுங்கானா இயக்கத்தை ஒடுக்க முடியவில்லை. கணக்கற்ற இடர்ப்பாடுகள், இழப்புக்கள் ஏற்பட்டாலும் இயக்கம் முன்னேறியது; மிகுதியான தியாகங்களினூடே புதிய பகுதிகளுக்குப் பரவியது.

 அறியப்பட்ட பாடங்கள்
விடுதலைக்கான அவர்களின் போராட்டம், தெலுங்கானா அல்லது ஆந்திர மக்கள் முழுமைக்கும் மட்டுமல்லாது இந்திய மக்கள் அனைவருக்கும் தெலுங்கானா பேரியக்கம் மதிப்புமிக்க பல பாடங்களைத் தந்துள்ளது.

1. தெலுங்கானா பேரியக்கமானது சாரத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம். சாகுந் தருவாயிலுள்ள நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம். நிஜாம் நவாபின் மிகக் கொடுமையான ஆட்சிக்கெதிரான போராட்டம். ஜமீன்தாரர்கள், ஜாகிர்தார்கள், தேஷ்முக்குகள், நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிரான மாபெரும் போராட்டம். கொத்தடிமைத்தனத்திற்கும், மக்களிடமிருந்து பல வழிகளில் நிலங்களை பிடுங்கியதற்கும் எதிராக ஆரம்பித்த போராட்டம், நிலத்துக்கான போராட்டமாகவும் பன்சார், பன்சாரி நிலங்கள், நிலப்பிரபுக்களால் பிடுங்கிக் கொள்ளப்பட்ட நிலங்கள், நிலப்பிரபுக்களினுடைய நிலங்கள் ஆகியவற்றைப் பங்கிடுவதற்கான போராட்டமாகவும் முன்னேறியது.

2. இந்தப் போராட்டம், நிலப்பிரபுக்களுக்கெதிரான போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. நிஜாம் அரசின் ஆட்சியிலிருந்தும், நேரு அரசாங்கத்தின் இராணுவ ஆட்சியிலிருந்தும் தெலுங்கானா மக்களை விடுவிக்கும் போராட்டமாகவும் இருந்தது.

புதிய ஜனநாயகப் புரட்சியே, இந்திய மக்களின் ச­க, பொருளாதார அரசியல் விடுதலையைக் கொடுக்கும். இந்தப் புரட்சி மட்டுமே, இந்திய மக்களின் அடிமைத்தளைகளை உடைத்தெறியும். புதிய ஜனநாயகப் புரட்சியை அடைவதற்கான வழியை தெலுங்கானா இயக்கம் காட்டியது.

3. மாபெரும் தெலுங்கானாப் போராட்டமானது, எல்லாத் தெலுங்கு மக்களின் தேசியக் கோரிக்கையுடன் சம்பந்தப்பட்ட போராட்டமாகும். தங்களுடைய தாய் மொழியைக் காப்பதும், விசாலாந்திராவை நிறுவுவதற்கான, நவாப் நிஜாமின் ஆட்சிக்கெதிரானதுமான எல்லாத் தெலுங்கு மக்களினுடைய போராட்டமாகும். தேசியப் போராட்டமானது வர்க்கப் போராட்டத்துடன் இணைக்கப்பட்டது. “விசாலாந்திராவில் மக்களாட்சி” என்ற முழக்கமானது, ஆந்திர மக்கள் முழுமையின் தேசியக் கோரிக்கையாகும்.

4. இது கம்யூனிஸ்டுக் கட்சித் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட மிகப் பெரிய சுயேச்சையான மக்கள் இயக்கமாகும்.

5. இது உண்மையான மக்கள் போராட்டம் ஆகும்; இந்த இயக்கத்தில் இலட்சக்கணக்கான சுரண்டப்பட்ட மக்கள் நேரடியாகப் பங்கேற்றனர். அடிமைத்தளையை உடைத்தெறிந்து முன்னேறினர். சிறிய கூட்டங்கள், கிளர்ச்சிகள் ஆகியவற்றுடன் ஆரம்பித்து, மக்கள் கொதித்தெழுந்து கூட்டமாகத் தடுத்து நிறுத்துவது, ஆயுதப் போராட்டம், படைகளைக் கட்டுதல் என்ற கட்டத்திற்கு உயர்ந்தது.

தெலுங்கானா மக்கள் எல்லோரும், போராட்டப் பேரலைகளை எழுப்பினர். இந்தப் பேரியக்கம் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டதாகஇருந்தது. ஆனாலும் போராட்டங்களில் மக்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் பல கட்டங்களிலும், பல வடிவங்களில் பங்கேற்றனர். அவர்கள் எதிரிகளின் ஆணிவேர்களை அறுத்தனர். கட்சிப் பிரசுரங்களை அவர்கள் இரகசியமாக விநியோகித்தனர். இவ்வாறாக, போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் இயக்கத்துடன் மக்கள் தொடர்பு கொண்டிருந்தனர். இயக்கத்தின் எந்தக் கட்டத்திலும் மக்களிடமிருந்து இயக்கம் தொடர்புகளை விட்டுவிடவில்லை. மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும், படைகளும் கட்சியும் மக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டே இருந்தன. மீன் தண்ணீரிலிருப்பதைப் போல அவர்கள் மக்களுடன் இருந்தனர். இதனால் 50,000 இராணுவத்தினரின் அடக்குமுறை இருந்தபோதிலும், கிராமங்களை முழுமையாக எரித்தபோதிலும், கூட்டம் கூட்டமாக மக்கள் கொலை செய்யப்பட்ட போதிலும் மாநிலத்தின் ஒருமூலையில் ஆரம்பிக்கப்பட்ட தெலுங்கானா இயக்கமானது மாநிலம் முழுவதும் பரவியது.

6. சாதாரண பிரச்சினைகளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், ஒவ்வொரு கட்டமாக உயர்ந்தது. ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது. இந்த இயக்கம் நேருவின் போலித்தனமான சோசலிசத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அம்பலப்படுத்தியது. ஆட்சியின் அடித்தளத்தை அசைத்து இடிக்கும் புரட்சிகரமான இயக்கத்தை சந்தித்தவுடன், அழிந்து கொண்டிருக்கும் வர்க்கங்களும் அவர்களின் வர்க்க அரசாங்கமும் எத்தகைய கொடுமைகளை எல்லாம் செய்யும் என்று இந்த இயக்கம் காட்டியுள்ளது. இத்தகைய நிலைமைகளில் ஒட்டு மொத்தமான எதிர்ப்புகளின்மூலம் முன்னேற முடியும் என்றும் இயக்கம் காட்டியுள்ளது.

7. முதன்முறையாக இந்தியாவில் 3000 கிராமங்கள் விடுதலை செய்யப்பட்டு, கிராம ராஜ்ஜியம் நிறுவப்பட்டது. ரசியாவின் நவம்பர் புரட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட “சோவியத்”களைப் போலவே இவை இருந்தன. விடுதலை செய்யப்பட்ட பகுதி பரந்த அளவில் இந்தியாவில் நிறுவப்பட்டது, இதுவே முதல் தடவையாகும்.

8. முதன் முறையாக, கிரிஜன் (மலைவாழ்) மக்களும் கோயா மக்களும் பரந்த அளவில் இயக்கத்திற்குள் இழுக்கப்பட்டனர். அவர்கள் உணர்வு பெற்று, கம்யூனிஸ்டுக் கட்சியைத் தங்களுடைய தலைமையாக ஏற்றுக் கொண்டனர். இன்றைக்குக் கூட காங்கிரசு ஆட்சியில் கோயா மக்கள் பலவீனமான இணைப்பாகத்தான் உள்ளனர்.

9. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக தெலுங்கானா இயக்கம் வளர்ந்தது. மலேயா, பர்மா, இந்தோனேஷியா, இந்தோசீனா, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளைவாக, பிரிட்டிசு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய தேசிய எழுச்சி வந்தது. தெலுங்கானாப் போராட்டமானது இந்தத் தேசிய எழுச்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக வளர்ந்தது.

மாபெரும் தெலுங்கானா இயக்கமானது, இந்திய மக்களின் ஜனநாயகப் புரட்சிக்கு மிக முக்கியமான பாடங்கள் கொண்ட நூலகம் ஆகும்.

 பழைய, புதிய திரிபுவாதிகள் (போலி கம்யூனிஸ்டுகள்) காட்டிக் கொடுத்தல்
நேரு அரசாங்கத்தின் பெரிய இராணுவ நடவடிக்கைகள் இருந்த போதிலும், நவீன ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தாலும், ஒட்டு மொத்தக் கொலைகள் நடைபெற்ற போதிலும், மக்கள் மீதான பயங்கரமான நடவடிக்கை இருந்தபோதிலும் தெலுங்கானா இயக்கம் பீடு நடையுடன் முன்னேறியது.

நேரு அரசாங்கம், இராணுவத்தின்மூலம் எதைச் சாதிப்பதில் தோல்வி அடைந்ததோ, அதை, அந்த வெறுக்கத்தக்க அரசாங்கத்திற்காக பழைய, புதிய திரிபுவாதிகள் வெட்கமில்லாமல் முடித்துத் தந்தனர்.

நிஜாம் அரசின் எல்லைக்குள் இந்திய யூனியனின் இராணுவம் நுழைந்த பிறகு தெலுங்கானா இயக்கம் இரத்தத்தில்மூழ்கத் தொடங்கியது. தெலுங்கானா இயக்கத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்ற கேள்வி நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது.

அப்போது கட்சித் தலைவராக இருந்த பி.டி. ரணதிவே (பின்னர் நவீன திரிபுவாத சி.பி.எம். கட்சியின் தலைவர்) மக்கள் யுத்த வழியை எதிர்த்தார். ஒரே சமயத்தில் நாடு முழுமையும் ஆயுதக் கிளர்ச்சியை உடனடியாக உண்டாக்கும் திட்டத்தை அவர் பரப்பினார். இவ்வாறாகத் தெலுங்கானா இயக்கத்தைத் தன்னுடைய பிரச்சாரத்தால் சரியான பாதையிலிருந்து மாறச் செய்ய முயன்றார்; ஆனால் தோல்வியுற்றார். அந்தச் சமயத்திலிருந்து மாகாணக் கட்சித் தலைமை, மக்கள் யுத்தக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து போராட்டத்தை நடத்த முடிவு செய்தது. (தற்சமயம் இந்தத் தலைவர்களில் சிலர் பி.டி. ரணதிவேயுடன் சேர்ந்து கொண்டு மக்கள்யுத்தக் கோட்பாடுகளை எதிர்க்கிறார்கள்).

நிஜாம் அரசில் இந்திய யூனியனின் இராணுவம் நுழைந்தவுடன், நிஜாம் எதிர்ப்பு உணர்ச்சியுடன் இயக்கத்தில் சேர்ந்திருந்த பணக்கார விவசாயிகளும், சிறிய நிலப்பிரபுக்களும் இயக்கத்தைக் கைவிட்டு அரசாங்கத்திடம் தாங்களாகவே சரணடைந்தனர். ஏற்கனவே இந்த வளர்ச்சியை நாம் பார்த்தோம்.

 இயக்கம் நிறுத்தப்படுதல்
இந்தக் கட்டத்திலேயே, ஏற்கனவே கட்சியில் திரிபுவாதத்தின் பக்கம் சார்ந்த ரவி நாராயணரெட்டி, அருட்ல ராமச்சந்திரரெட்டி போன்றவர்கள் பணக்கார விவசாயிகள் மற்றும், சிறிய நிலப்பிரபுக்களின் கோரிக்கைகளைத் தாம் எடுத்துக் கொண்டு இயக்கத்தை நிறுத்துமாறு கோரினர். நாம் இந்த வளர்ச்சியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்தச் சரணடைதல் கொள்கையை கட்சி நிராகரித்து, போராட்டத்தைத் தொடர முடிவு செய்தது. இதனால் ரவி நாராயணரெட்டியும், அவரைப் பின்பற்றுபவர்களும் இயக்கத்திலிருந்து மெதுவாக விலக ஆரம்பித்தனர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். தன்னுடைய சரணடைதல் கொள்கையை மறைப்பதற்காக ரவி நாராயண ரெட்டி “தெலுங்கானாவின் வெளிப்படையான உண்மைகள்” என்ற புத்தகத்தை வெளியிட்டு, மக்களிடத்தில் வெட்கமில்லாமல் விநியோகம் செய்தார். தெலுங்கானா இயக்கம் முழுமையும் சூறையாடும் இயக்கமென்றும், மக்களுடைய பொருளைத் திருடும் இயக்கமென்றும் அந்தப் புத்தகம் கண்டனம் தெரிவித்தது. அவர் நம்பிக்கை துரோகம் செய்து தெலுங்கானா இயக்கத்தின் முதுகிலே குத்திவிட்டார். இவ்வாறாக மக்களின் கண் முன்னாலேயே மாபெரும் தெலுங்கானா இயக்கத்தைக் குலைக்க இத்துரோகிகள் அரசாங்கத்திற்கு நேரிடையாக உதவினர்.

சரியாக இந்தச் சமயத்தில், டாங்கே, அஜாய் குமார் கோஷ், காட்டே ஆகியோர் கட்சியை எதிர்த்துக் கலகம் செய்து மக்கள் யுத்த வழியை எதிர்ப்பதில் ரவி நாராயணரெட்டியுடன் சேர்ந்து கொண்டனர். தெலுங்கானா இயக்கத்திற்கு ஏற்பட்ட இந்தப் புதிய எதிர்ப்போடு, தெலுங்கானா இயக்கம் உட்பிரச்சினைகளைச் சந்தித்தது.

இவ்வளர்ச்சிகளின் காரணமாக, நேரு அரசாங்கத்தின் வர்க்கக் குணங்களைப் பற்றியும் இந்தியப் புரட்சிக் கட்டத்தைப் பற்றியும், போராட்டத்தின் வழியைப் பற்றியும் ஒரு பெரிய சித்தாந்தப் போராட்டம் கட்சி முழுவதிலும் வெடித்தது. இந்த சித்தாந்தப் போராட்டத்தின் விளைவாக 1951இல் கட்சித் திட்டம், நடைமுறைத் தந்திரம் ஆகியவை உருவாக்கப்பட்டன.

இந்த மாபெரும் சித்தாந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கானா இயக்கத்தின் தீரர்கள், மத்திய அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதலை எதிர்த்துப் போராடி, இயக்கத்தை முன்னுக்கு கொண்டு சென்றனர். 1951ஆம் ஆண்டுத் திட்டம் அல்லது நடைமுறைத் தந்திரம் (இயக்கத்தின் நிலைமைகளைப் பரிசீலிப்பது) கூறுவதைப் போல, தெலுங்கானா இயக்கத்தை நிறுத்துவதற்கோ அல்லது புதிதாக நிறுவுவதற்கோ அவசியமே ஏற்படவில்லை.

அந்தச் சமயத்தில் எல்லா இடையூறுகளையும் கடந்து இயக்கம் புதிய பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்தது. சமவெளியில் இருந்த மக்கள் பல்வேறு வடிவங்களில் இயக்கத்திற்கு உதவி வந்தனர். மக்கள் எதிரிகள் தங்களுடைய கிராமங்களிலேயே தங்க முடியவில்லை. இராணுவ முகாம்களில் பாதுகாப்பை நாடினர். இராணுவத்தினராலும் கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அவர்கள் பகலில் சுதந்திரமாகச் சுற்றினாலும் இரவில் தங்களுடைய முகாம்களிலேயே தங்க வேண்டி வந்தது.

இந்த நிலைமைகளில், தங்களுடைய சொந்த அனுபவங்களைக் கொண்டு படைகளின் உறுப்பினர்கள், இயக்கம் தொடர்ந்து நடக்க வேண்டுமென்று கோரினர். இந்தச் சமயத்தில் மத்திய கமிட்டியின் தலைவர்கள், புதிய திட்டத்தை சாக்காக வைத்துக் கொண்டு இயக்கத்தை நிறுத்த வேண்டுமென்று ஒருதலைச் சார்பாக முடிவு செய்தனர்; இயக்கத்தின் நிலைமைகளைப் பரிசீலனை செய்தும், படை உறுப்பினர்களின் கருத்தைக் கேட்ட பிறகும் இறுதியான முடிவை எடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மத்தியக் கமிட்டித் தலைவர்கள், பிரதேசத் தலைவர்கள் ஆகியோர் இந்த முடிவையும் மீறி, ஆயுதங்களைத் தங்களுடைய பொறுப்பிலேயே கீழே வைக்கவேண்டுமென்று படை உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறாக, இயக்கம் பின்வாங்கப்பட்டது. மத்திய கமிட்டித் தலைமையானது, ஆந்திரத் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே தெலுங்கானா இயக்கத்தைப் பகிரங்கமாகப் பின்வாங்கச் செய்தது.

இரத்தத்தின்மூலமும், தியாகங்களின்மூலமும் சுமார் 4000 மக்கள் வீரர்களின் உயிர்களைத் தியாகம் செய்ததன்மூலமும் வளர்ந்த தெலுங்கானா இயக்கம், கடுமையான போராட்டங்களினிடையில் பல வெற்றிகளை அடைந்தது. போராட்ட வெற்றிகளைப் பாதுகாக்க மத்திய கமிட்டி எந்தவித முயற்சியும் செய்யவில்லை. விநியோகிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடமே இருக்க வேண்டுமென்றும் கிராம ராஜ்ஜியம் அங்கீகரிக்கப்படவேண்டுமென்றும், கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனையில்லாமல் விடுவிக்கப்படவேண்டுமென்றும் கட்சித் தலைமை மத்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினாலும், உறுதியாக அவற்றை வலியுறுத்தவில்லை. மத்திய அரசாங்கம் இந்த நிபந்தனைகளை நிராகரித்தது. கட்சித் தலைமையானது, இயக்கத்தை நிபந்தனையின்றி பின்வாங்க முயற்சிக்கிறது என்று மத்திய அரசாங்கத்திற்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் அது உறுதியாக நிராகரித்தது.

தேர்தல்களில் கலந்து கொள்வதற்குக் கட்சிக்கு அனுமதியளிப்பதாக மத்திய அரசாங்கம் உறுதி கூறியது. தேர்தல்களுக்குப் பின்னர், ஹைதராபாத் நிலச் சட்டத்தை மாற்றுவதற்கு உறுதியளித்தது. ஆயுதங்களைச் சரண்டையச் செய்தவர்களின் மீது வழக்குகள் போடமாட்டோமென்றும், முக்கியமான வழக்குகளில் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்போமென்றும் எல்லா கிராமங்களிலும் பஞ்சாயத்துகளை அமைக்கவும் உறுதி கூறியது.

மத்திய கமிட்டித் தலைமை இந்த ஏமாற்று உறுதிகளை ஏற்றுக் கொண்டது. தெலுங்கானா இயக்கத்தின் வெற்றிகளைப் பாதுகாக்க போராட வேண்டுமென்று அது நினைக்கவேயில்லை. தேர்தல்களில் கலந்து கொள்ள அனுமதி கிடைத்தால், அதுவே எல்லாவற்றையும் அடைந்துவிட்டதாகப் பொருள் என்று நினைத்தது. வரப்போகும் தேர்தல்களின் மீது கண் வைத்துக் கொண்டு இயக்கத்தை ஒருதலைச் சார்பாக நிறுத்தி, ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்தது.

 எல்லா வெற்றிகளையும் இழத்தல்
போராட்டத்தை முதுகில் குத்தி, அரசாங்கத்திடம் ஆயுதங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இந்தச் சரணடைதலுடன் தெலுங்கானா இயக்கத்தின் வெற்றிகள் யாவும் இழப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

தெலுங்கானா இயக்கத்தின் வீச்சால், தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் கம்யூனிஸ்டுக் கட்சி பெரும்பான்மையான கட்சியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. இலட்சக்கணக்கான மக்களின் தியாகங்களின் விளைவாக கட்சித் தலைவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றனர். கட்சித் தலைவர்களில் சிலர், ஓட்டுப் பெட்டிகளின்மூலம் சோசலிசத்தை சுலபமாக அடையலாம் என்று நினைத்தனர். எல்லாவகைத் தேர்தல்களிலும் கட்சியைக் கலந்து கொள்ளுமாறு அவர்கள் செய்தனர். மக்கள் மத்தியில் வர்க்க உணர்வை உண்டாக்குவது, வர்க்கப் பிரச்சினைகளில் மக்களைத் தீவிரமாக்குவது, வர்க்கப் போராட்டங்களை நடத்துவது ஆகியவை மெதுவாகப் பின்னணிக்குத் தள்ளப்பட்டன. தியாகங்களின் அர்த்தங்களும், கம்யூனிசத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்வதும் மழுங்கடிக்கப்பட்டன. இவ்வாறாக தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் கட்சி பலவீனமடைந்தது.

நாடாளுமன்றப் பாதையைப் பின்பற்றுவதன்மூலம் கட்சியானது மாபெரும் தெலுங்கானா இயக்கத்தையும் அதனுடைய வரலாற்றுப் பூர்வமான வெற்றிகளையும் காட்டிக் கொடுத்துவிட்டது. வர்க்கப் போராட்டங்களின்மூலம் மட்டும் தீர்க்கப்படக் கூடிய நிலப்பிரச்சினை, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. காங்கிரசு அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் என்றுமே வறிய மக்களுக்கு நிலங்களைக் கொடுக்கவில்லை. அந்தத் திட்டங்களின் நோக்கமே நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பிரித்துக் கொடுப்பதாக என்றுமே இருந்ததில்லை. அந்தத் திட்டங்களின்படி, சில பணக்கார விவசாயிகள் மட்டுமே சில நிலங்களை வாங்க முடிந்தது. போராட்டத்தின்மூலம் மக்கள் அடைந்த இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் திரும்பவும் கொள்ளைக்கார நிலப்பிரபுக்களுக்கே திருப்பித் தரப்பட்டன. ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட கிராம இராஜ்ஜியம் அழிக்கப்பட்டது. கிராம இராஜ்ஜியத்திற்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சாயத்துச் சபைகள், பஞ்சாயத்து சமிதிகள், மாவட்டப் பரிஷத்துக்கள் ஆகியவை வர்க்கப் போராட்டங்களைத் திசை திருப்பவும், கிராமங்களில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைத் திரும்பவும் நிறுவவுமே உதவின.

நாடறிந்த மக்கள் எதிரிகள் கூட, கிராமங்களில் மெதுவாகத் தங்களுடைய ஆட்சியை நிறுவினர். சுரண்டல், வலிந்து பிடுங்கிக் கொள்ளுதல் ஆகியவை மீண்டும் கிராமங்களில் தோன்றின. தரகு, கொடும் வட்டித் தொழில் ஆகியவை மிகவும் தீவிரமான வடிவங்களில் மீண்டும் தோன்றின. இது மட்டுமல்ல; தெலுங்கானா போராட்டக் காலத்தில் கிராமங்களில் நிலப்பிரபுக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்பொழுது அவர்கள் பஞ்சாயத்துப் போர்டுகள், பஞ்சாயத்து சமிதிகள், பரிஷத்துக்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஆகியவைகளில் நுழைந்து சக்திமிக்க பதவிகளில் அமர்ந்தனர். அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் ஆனார்கள். இவ்வாறாக அவர்கள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக ஆனார்கள். மக்களின் கழுத்துக்களின் மீது இறுக்கமாக உட்கார்ந்து கொண்டு, அரசியல் தலைவர்களாக மாறினார்கள். இவ்வாறாக அழிந்து கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவம் இன்னொரு முறை வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டது. பழைய வடிவத்திலிருந்த கொத்தடிமைத்தனத்தைத் தவிர, மற்ற எல்லாவிதச் சுரண்டல்களும் கிராமங்களில் தோன்றி மக்கள் கொடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். இது கட்சியிலிருந்த திரிபுவாதத் தலைவர்கள் கைக்கொண்ட நாடாளுமன்றப் பாதையின்மூலம் தெலுங்கானா இயக்கத்திற்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.

இப்பொழுது இந்தக் கிராமங்களில்தான் — எங்கு கடுமையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தனவோ அந்தக் கிராமங்களில்தான் — மக்கள் நடைமுறை வெற்றிகள் எல்லாம் இழக்கப்பட்டுவிட்டாலும் இயக்கமானது இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கின்றது. கடுமையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் எங்கு நிற்க முடியவில்லையோ அங்கெல்லாம் —அதாவது மனுகோட்டா போன்ற இடங்களிலெல்லாம் — நிலப்பிரபுக்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.

 நவீன திரிபுவாதி (சி.பி.எம்.)களின் தடை
பழைய திரிபுவாதிகளின் துரோகத்தையும், தடைகளையும் தெலுங்கானா இயக்கம் மெதுவாக வெற்றி கண்டு சில இடங்களில் உயிருடன் இருந்தது. 1963க்குப் பின்பு விவசாயக் கூலிகளுக்காகவும், நிலக் குத்தகைக்காகவும் தானியப் பிரச்சனைகளுக்காகவும் போராட்டங்கள் புதிய கண்ணோட்டத்தில் நடத்தப்பட்டன. இயக்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. அப்பொழுதிலிருந்து காங்கிரசு அரசாங்கம் இயக்கத்தை மறுபடியும் இரத்தத்தில்மூழ்கடிக்க ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் முயன்றது.

மக்கள் குண்டர்கள் மோதலில் ஆயிரக்கணக்கானவர்களின் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தல், நிலப்பிரபுக்களால் மக்கள் சுடப்படுதல், நிலப்பிரபுக்களால் முறையான குண்டர் படைகள் அமைக்கப்படுதல், மக்களின் மீதான போலீசு குண்டர்கள் கூட்டுத் தாக்குதல், மக்களின் மீதான பாசிசச் சித்திரவதை ஆகியவை தெலுங்கானா இயக்கத்தை மீண்டும் அடக்க, அரசாங்கமும் நிலப்பிரபுக்களும் கையாண்ட முறைகளில் சில.

மக்களை ஒன்று திரட்டுவதன்மூலம் மட்டுமே, வர்க்கப் போராட்டங்களை நடத்துவதன்மூலம் மட்டுமே நாம் இந்தப் பாசிச அடக்குமுறையை முறியடித்து வெற்றி பெற முடியும். இது வரலாற்று உண்மை. ஆனால் நவீன திரிபுவாதிகளின் (சி.பி.எம்.) தலைமை இந்தப் பாதையை நிராகரித்துவிட்டது. காங்கிரசு எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் அது நாடாளுமன்ற முறையையே தொடர்கிறது. அதனால்தான் பாசிச அடக்குமுறையை எதிர்த்து அது மக்களைத் திரட்டுவதில்லை. விண்ணப்பங்கள் (மனு), பிரதிநிதித்துவப்படுத்தல், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றின்மூலம் மக்களை அது ஏமாற்றுவதற்கு முயல்கிறது.

தெலுங்கானா இயக்கத்திற்கு இந்தப் பாதை இழைத்த மிகப்பெரிய தீமை, கம்மம் மாவட்டத்தில் நடந்த விளைவுகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும். புதுத் திரிபுவாதிகளின் (சி.பி.எம்.) ஒரு பிரிவினர் சித்தாரெட்டியைச் சார்ந்த காங்கிரசு பிரிவினரை ஆதரிக்கின்றனர். மற்றொரு பிரிவினர் வெங்கல்ராவைச் சார்ந்த மற்றொரு காங்கிரசு குழுவை ஆதரிக்கின்றனர். (பிறகு இந்தக் குழு திரிபுவாதிகளிடம் — வலது கம்யூனிஸ்டுகளிடம் — சேர்ந்து விட்டது). சில நிலப்பிரபுத்துவ குழுக்களின் உதவியுடன் நகரசபை, பஞ்சாயத்து சமிதி ஆகியவற்றில் தங்களுடைய இடங்களைப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது.

அரசியல் ரீதியாக மக்களைத் திரட்டியும், பாசிச அடக்குமுறையை எதிர்த்தும் வாரங்கல், நலகொண்டா மாவட்டங்களில் ஓரளவிற்கு மக்கள் இயக்கங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நவீன திரிபுவாதிகளின் (சி.பி.எம்.) தலைமை கம்மம் மாவட்டத்தில் பாசிச அடக்குமுறையை எதிர்த்து மக்களைத் திரட்ட மறுத்துவிட்டது. இதன் விளைவாக அங்கு கட்சி உறுப்பினர்களின் மீதும், மக்கள் மீதும் பாசிச அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. சிலர் நிலப்பிரபுக்களிடம் சரணடைய ஆரம்பித்துவிட்டனர். இதுதான் நவீன திரிபுவாதத் தலைமையின் இன்றைய நிலையாகும்.

தற்சமயம் ஆளும் கட்சியில் நிலப்பிரபுக்கள் ஒரு பகுதியாக இருக்கின்றனர். ரஜாக்கர் குண்டர்கள் இடத்தைக் காங்கிரசு குண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். ஒரு சமயத்தில் நமது சிவப்புக் கிராமங்களாக இருந்தவற்றில் குண்டர்களும் நிலப்பிரபுக்களும் கிராமங்களை ஆதிக்கம் புரிய வந்துள்ளனர்.

திரிபுவாத, நவீன திரிபுவாத போலி கம்யூனிஸ்டுகள் தெலுங்கானா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல எள்ளளவும் அக்கறையின்றி நாடாளுமன்றப் பாதையிலே சென்று பதவி சுகத்திலேமூழ்கிக் கிடக்கின்றனர். தெலுங்கானா இயக்கத்தைத் தனிமைப்படுத்தி நசுக்கச் செய்யும் அவர்களின் நோக்கம் தற்காலிகமாகத்தான் வெற்றிபெற முடிந்தது.

 மீண்டும் பேரெழுச்சி
வசந்தத்தின் இடிமுழக்கமாக எதிரொலித்த நக்சல்பாரி உழவர் பேöரழுச்சி, வர்க்க உணர்வுள்ள தெலுங்கானா மக்களுக்கு மீண்டும் ஒரு உந்துதலைக் கொடுத்தது. விவசாயிகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்டியாக விளங்கிய நக்சல்பாரி புரட்சிப் பாதையில் நிலத்திற்கும் அரசியல் அதிகாரத்துக்குமான பேரெழுச்சியாக தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் இயக்கம் பரவியது. தெலுங்கானா போராட்டத்தை போலி கம்யூனிஸ்டுகள் எவ்வளவுதான் திரித்துப் புரட்டினாலும், அவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு நக்சல்பாரி புரட்சியாளர்கள் தலைமையில்விவசாயிகள் அணிதிரண்டு புரட்சிப் பாøதயில் முன்னேறி வருகின்றனர்.

பாசிச கொலைவெறி பிடித்த வெங்கல்ராவ், அஞ்சையா ஆட்சிகள் போர்க்குணமிக்க விவசாயிகளின் போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தன. நூற்றுக்கணக்கான இளம்புரட்சியாளர்களும் விவசாயிகளும் “போலீசுடன் மோதல்’ என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆட்சிகள் மாறின. ஆனாலும் அடக்குமுறை ஓயவில்லை. பாசிச சன்னியாசி என்.டி.ஆர். ஆட்சியிலும் புரட்சியாளர்களும் போராடும் விவசாயிகளும் நரவேட்டையாடப்பட்டனர். இந்தக் கோழைகள் எவ்வளவுதான் அடக்குமுறைகளை ஏவிவிட்டாலும் புரட்சித் தீயை அவர்களால் ஒருபோதும் அணைக்க முடியவில்லை. அது நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதான் இருக்கிறது. ஆயிரமாயிரம் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி புரட்சிப் பாதையில் தன்னம்பிக்கையோடு நாம் தொடர்ந்து முன்னேறுவோம்!

இறுதி வெற்றி உழைக்கும் மக்களுக்கே!

மாபெரும் தெலுங்கானா இயக்கம் நீடூழி வாழ்க!

விவசாயிகளின் விவசாயப் புரட்சி ஓங்குக!

வெளியீடு
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

Advertisements

2 பதில்கள்

  1. நல்ல பதிப்பு..!

  2. இது ஒரு சின்ன புத்தகமாக வந்ததே. அதன் முழு எலெக்ட்ரானிக் வெர்ஷனா இது?

    தேவையான பதிவுதான்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: