சத்யம் மோசடி: முதலாளித்துவ பயங்கர வாதத்தின் முகவரி.


ஊடகங்களாலும், மக்களாலும் தற்போது அதிகம் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெயர் சத்யம். கடந்த சில மாதங்களாகவே  உலக அளவிலும் தொடர்ச்சியாகவே இந்தியாவிலும்  ஐ.டி துறை நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் ஆட்க்குறைப்பு, ஊதியம், சலுகைகள் குறைப்பு, நிறுவனங்களை மூடுவது என தொடர்கிறது. கணித்துறையில் இந்தியர்களை மிஞ்ச ஆளில்லை. அமெரிக்க மென்பொருள் துறையிலும், நாசா ஆய்வகத்திலும் இந்தியர்களே முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்பன போன்ற புனைவுகளால் கணினி குறித்து  படிப்பதுதான் அறிவு, ஐ.டி துறையில் இருப்பவர்கள் தான் அறிவாளிகள் என்ற பிம்பம் வலிந்து ஏற்படுத்தப்பட்டது. விளைவு ஐ.டியில் இருப்பவர்கள் தங்களை மேன் மக்களாக வரித்துக்கொள்ள கூடவே ஏனைய துறைகளைவிட அதிகமாக கொடுக்ப்பட்ட ஊதியமும்  சேர்ந்து கொள்ள நாங்கள் சம்பாதிக்கிறோம், செலவு செய்கிறோம் என்பது சமூக சீரழிவுகளை  விரைவாக்கியது. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழானது. அமெரிக்கா தொடங்கி இந்தியா வரையிலும் தற்கொலைச் செய்திகள். இது சத்யம் என்ற நிறுவனத்துடனும் ராமலிங்க ராஜு செய்த முறைகேடுகளுடனும் மட்டும் தொடர்பு கொண்டதா?

சத்யம் நிறுவனம் தன்னுடைய லாப மதிப்பை பொய்யாக உயர்த்திக்காட்டி  பங்குச்சந்தையில் தன்னுடைய மதிப்பை நிலை நிறுத்தி அதன் மூலம் முதலீட்டாளார்களை   முதலீடு செய்ய வைத்ததுதான் மோசடியாக பேசப்படுகிறது என்றால் பங்குச்சந்தையின்  மதிப்பு பல்வேறு காரணங்களுக்காக வீழும் போதெல்லாம் அரசே தன்னுடைய( தனியார் மயமாக்கியது போக மிச்சமிருக்கும்) பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் சந்தையில்  முதலீடு செய்யவைத்து  செயற்கையாக வீழ்ச்சியடையாமல் நிலை நிறுத்தியதே, இதன் பெயர் என்ன?

இது போன்ற மோசடிகள் நடப்பது இதுதான் முதல் முறையா? தொண்னூருகளில் ஹர்சத் மேத்தா தொடங்கி பல்வேறு சிறிதும் பெரிதுமான மோசடிகளும் ஊழல் புகார்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  இவைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட செபி போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

இப்போது ஒரு சத்யம்  நிறுவனம் மோசடி செய்துவிட்டது என்பது உறுதியாகி விட்ட நிலையில்  இதற்கு முன்னர் ஊடகங்களாலும் ஏனைய செய்தி அமைப்புகளாலும்  சத்யம் போலவே வித்ந்தோதப்பட்ட ஏனைய நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ்  போன்றவைகளும் இது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை என எப்படி உறுதி செய்து கொள்வது?

இதுபோன்றா கேள்விகளெல்லாம் ஒரு இடத்திலயே மையம் கொண்டுள்ளன. அதுதான் முதலாளித்துவம். முதலாளித்துவம் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள எந்த வழிகளிலும் பயணிக்கும் என்பதற்கு அண்மை எடுத்துக்காட்டுதான் சத்யம். தன்னுடைய நிறுவனத்திற்கான லாபத்திற்காக இத்தைகைய முறைகேடுகளில் ஈடுபடாத நிறுவனம் என்று உலகத்தில் எதுவும் இல்லை. இதற்கு மேலும் இதை மறைமுகமாக செய்யமுடியாது  எனும் போது சட்டத்தை மாற்றுவதுதான் அவர்கள் நடைமுறையே தவிர தங்கள் செயல்களை மாற்றுவதல்ல.

இப்போது பெயில் அவுட் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறது அரசு. ஊழல் செய்த  நிறுவனத்தை காப்பதற்கு  மக்கள் வரிப்பணம் ஏன் கொடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக அதில் பணிபுரியும் 53000 பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை முன்வைக்கும் அறிவு ஜீவிகள்.  நாட்டில்  லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்ட போது எங்கே போயிருந்தார்கள்.  பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டபோதும்,  தங்கள் உரிமைகளுக்காக தொழிலாளர்கள்  போராட்டம்  நடத்தியபோது, தொழிற்சாலைகள் மூடப்பட்டப்போதும், வேலையிழந்து நடுத்தெருவில் வீசி எறியப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஒன்றுமில்லை.

தற்கொலைப்படை தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் மட்டும் தான் பயங்கர வாதமா? உலகில் 1800 கோடி பேருக்கு உணவிருக்க உலகின் மொத்த மக்கட்தொகையே 650 கோடிதான். ஆனாலும் 300 கோடிக்கும் மேற்பட்டோர் பட்டினியால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களே இது பயங்கர வாதமில்லையா? உயிர் காக்கும் மருந்துகளைக்  கூட    தங்களின் லாபவெறிக்கான பண்டமாக பார்ப்பதால் ஆண்டுதோறும் ஒரு கோடிப் பேர் இறந்து கொண்டிருக்கிறார்களே இது பயங்கர  வாதமில்லையா?

பசுமைப்புரட்சியால் விவசாயிகள் விவசாயத்தை இழந்து நகரங்களை நோக்கி நகர்ந்தனர். உதிரித் தொழிலாளிகளான   அவர்களை காட்டி இருக்கும்  தொழிலாளிகளின் ஊதியம் குறைக்கப்பட்டது.   இப்படி விரட்டப்பட்டவர்கள் கடைகளையும்  சிறு தொழில்களையும்  தொடங்கினால்  வாட் வரி வந்து வதைத்தது.  சில்லறை வியாபாரமாவது  செய்யலாமென்றால் ரிலையன்ஸ் வந்து மிரட்டியது.  கோடிக்கணக்கான  தொழிலாளர்கள்  இப்படி உழன்று கொண்டிருக்கும் வேளையில் சத்யத்தின்  53000 தொழிலாளர்களைப்பற்றி  மட்டும் கவலைப்படுவதும் அமெரிக்க அதிபருட‌ன் சமமாக உட்காந்து பேசும்   ராமலிங்க ராஜு  இப்போது சிறையில்  திருடர்களுன் அமர்ந்துகொண்டிருக்கிறார் என்று  பரிதாபப்படுவதும் பயங்கரவாதமில்லையா? ஆம் இது பயங்கர வாதம்தான். முதலாளித்துவ பயங்கரவாதம். இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தை  சகித்துக்கொண்டு வாழ நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். முதலாளித்துவ  பயங்கரவாதத்தை இயற்கை சீற்றங்களாகவும்  இயற்கையான மரணங்களாகவும் பார்க்குமாறு  நாம் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

இதை மேலும்  விரிவான தளத்தில் புரிந்து கொள்வதற்கும்  எதிர்த்து போராடும் வலிமை பெறுவதற்கும்  உங்களை அழைக்கிறது முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு.

வாருங்கள்  ஜனவரி 25 ல்   அம்பத்தூரை நோக்கி.

Advertisements

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: