கோமாதாவும் மூத்திர வியாபாரிகளும்

சில நாட்களுக்கு முன் நண்பரொருவர் இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Mr.Senkodi

What is your opinion of following article ?

Is it True ? If it is true can we drink ?

Medically  it is ok ??

please answer it.

byrosekhan

one of the agenda from hindutva.

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின்சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தைஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெளஜல் என அது பெயரிட்டுள்ளது.இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இதுமார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக்குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர்வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போதுமார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போலஉடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காதுஎன்றார் ஓம் பிரகாஷ்.இந்தியாவில் தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள்தான் கோலோச்சிவருகின்றன. இவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும், இந்துத்வாவை இதிலும்புகுத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வகையில்இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவின் சிறுநீரை அடிப்படையாகக் கொண்டகுளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். தயாரித்துள்ளது. 2001ம் ஆண்டுதான் கோமியம், உடல் கோளாறுகளை குறிப்பாக கல்லீரல்பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்து என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும்பிரசாரத்தைத் தொடங்கின என்பது நினைவிருக்கலாம். இதுதவிர உடல்பருமனையும் குறைக்கும் அரு மருந்து கோமியம். புற்று நோயைக் கூட இதுகுணப்படுத்தும் எனவும் இந்த அமைப்புகள் கூறி வந்தன.ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டுகுளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள்தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டுதயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேதமூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும். இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம்இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்.தற்போது உள்ள அமெரிக்காவின் குளிர்பானங்களுக்கு எங்களது புதியகுளிர்பானம் கடும் போட்டியைக் கொடுக்கும். அவர்களுக்கு கடும் போட்டியைக்கொடுக்கும் வகையில் நாங்கள் மார்க்கெட்டிங் செய்யவுள்ளோம் என்றார்.உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோமிய குளிர்பானத்தைஏற்றுமதி செய்யப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.

அண்மையில் தோழர் அரை டிக்கட் வினவு தளத்தில் பின்னூட்டமிடுகையில் கதை ஒன்றை சொல்லியிருந்தார். பிரிட்ஜ் (குளிர் பெட்டி) வாங்குவதற்கு ஒருவர் கடைக்கு செல்கிறார். விற்பனைப்பிரதிநிதியோ அவருக்கு அதை விற்க மறுக்கிறார். பின் அவர் பல நாட்களில் பல்வேறு வேடங்களில் வந்து கேட்டும் அவரை சரியாக அடையாளம் கண்டு ஒவ்வொரு முறையும் “உனக்கு விற்பதற்கில்லை” என மறுத்துவிடுகிறார். கடைசியில் சோர்ந்து போய் அவர் “ஒவ்வொரு முறையும் நான் தான் என்று எப்படி சரியாக அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்?” என்று விற்பனை பிரதிநிதியிடம் கேட்டார். “யோவ் நீ ஒவ்வொரு முறையும் பிரிட்ஜ் என்று கேட்டது ஒரு வாஷிங் மிஷினை” என்றார். இதைப்போல்தான் பார்ப்பனீய பாசிசங்கள் சுதேசி என்றும் கலாச்சார காவலர்கள் என்றும் பல்வேறு முகமூடிகளுடன் வருகிறார்கள். ஆனாலும் அவர்களால் அவர்களின் சொந்த கோர முகத்தை மறைக்க முடிவதில்லை. அந்த வகையில் இப்போது கோமிய பானம். அதாவது பசுவின் மூத்திரத்திலிருந்து குளிர்பானம் தயாரிக்கிறார்களாம், அதற்கு கோஜல் என்று பெயராம். கோகோகோலா, பெப்சி போன்ற அமெரிக்க மூத்திரத்தில் உட்கொள்ளக்கூடாத அளவில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் ஆய்வகங்களில் சோதனை செய்து நிரூபித்தனர் சில ஆண்டுகளுக்கு முன்பு. அதனைத்தொடர்ந்து பல ஊர்களிலும் அந்த அமெரிக்க மூத்திரத்தில் மின்ட் மிட்டாயை போட்டால் எப்படி பொங்கிச்சீருகிறது என்று பலர் நேரடியாக செய்து காட்டினர். இன்னும் சிலர் கழிப்பறையை கழுவி அதன் கரை நீக்கும் அமிலத்தன்மையை விளக்கிக்காட்டினர். அந்த நேரத்தில் அவைகளின் விற்பனை கொஞ்சம் சரிந்திருந்தது. இதைப்பயன்படுத்தி ஒரேகல்லில் மூன்று மாங்காய்களை அடிக்கத்திட்டமிட்டன பாசிசப்பரிவாரங்கள். அந்தக்கல்தான் கோஜல் எனும் மாட்டு மூத்திரம். அப்படியென்றால் மூன்று மாங்காய்கள்?

உழவர்களின் வாழ்வோடும், கிராமப்புற கால்நடை வளர்ப்போடும் இரண்டறக்கலந்த விலங்கு மாடு. உழவுக்கு காளையும், கால்நடை வளர்ப்புக்கு பசுவும் இன்றியமையாதவை. அறுவடைக்குப்பிறகு வைக்கோல் மாடுகளுக்கு உணவானது, அடுத்த விதைப்புக்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடை வளர்ப்பு மாற்றுத்தொழில். பால், இறைச்சியை உணவாகக்கொள்வதும், சாணத்தை வீடுகளில் தரை மொழுகவும், அடுப்பெரிக்கவும் என்று அவர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒன்றாக இருந்தது. அதனால்தான் அவர்கள் கொண்டாடும் திருநாளில் கூட மாட்டுக்கு உரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். ஆனால் இதற்கு நேர் எதிராக வேள்வி நெருப்பில் குதிரையையும் மாடுகளையும் பொசுக்கித் தின்றுதீர்த்த பார்ப்பனக்கூட்டம், பௌத்தத்தை எதிர்கொள்ளமுடியாமல் அதன் கொல்லாமயை தன்னுள் வாங்கிக்கொண்டு புலாலுண்ணாமை என தகவமைத்துக்கொண்டு தன்னை தக்கவைத்துக்கொண்டது. பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் தங்கியிருப்பதாக புழுகி அதையே புராணமாக்கி பசுவை புனிதமாக்கிக்கொண்டது. இன்று அதைக்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் நரவேட்டையாடிவருகிறது. மாட்டை கொன்றார்கள் என்று கூறி மனிதர்களின் தோலை உரிக்கிறது. மாட்டின் உயிரைவிட மனிதனின் உயிர் முக்கியமானதல்ல என்று வெளிப்படையாகவே கொக்கரிக்கிறது. பெரியார் ஒரு முறை சொன்னார், “பஞ்சகவ்யம் என்று பசுவின் சாணி மூத்திரம் போன்றவற்றை கலந்து அதை புனித தீர்த்தமாக குடிக்கச்செய்வது, முகம் சுழிக்காமல் குடிக்கிறானா என்பதை வைத்து இவன் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறான், எந்த அளவு இவனை ஏமாற்றலாம் என்று அளந்து பார்க்கும் கருவியாக பசுமூத்திரத்தையும் சாணியையும் பயன்படுத்துகிறான்” என்று. இன்று அதே சோதனையை விரிவான அளவில் செய்யப்போகிறார்கள் அதுவும் நம்மிடமே காசு வாங்கிக்கொண்டு. சரி இந்துக்கள் என்று தம்மை நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சரிவரும் ஏனையவர்களுக்கு? அதற்க்காகத்தானே பசு மூத்திரம் செல்வளர்ச்சிக்கு உதவுகிறது என்று டாக்டர் சந்திர சேகர் என்பவர் ஆய்வு செய்து கூறியிருக்கிறார். குஜராத்தில் பசுவின் பயபாடுகள் பற்றி கருத்தரங்கம் நடத்தியிருக்கிறார்கள். மைசூரில் பிஞ்சாரேபோல் சொசைட்டி சாந்திலால் சோர்டியா என்பவரின் தலைமையில் இது போன்ற அரிய உண்மைகளை(!) கண்டுபிடித்துச்சொல்வதற்கு முழுமூச்சோடு ஈடுபட்டு வருகிறது. உத்ராஞ்சல் அரசு 20கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. இணையத்தில் தேடினாலோ உலகத்திலுள்ள அத்தனை நோய்களுக்கும் கோமியம் சிறந்த நிவாரணி என்று கட்டுரைகள் கிடைக்கும். ஆக நாம் எவ்வளவு ஏமாளி என்று நம்முடைய காசைக்கொண்டே சோதித்துப்பார்த்து அதில் லாபமும் அடைவது முதல் மாங்காய்.

பெப்சி கோக் போன்ற அன்னியப்பொருட்களை எதிர்ப்பது போலவும், சுதேசியத்தை காப்பது போலவும் போராட்டம் நடத்தியவர்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்தது என்ன? பொதுத்துறை நிறுவனங்களை அன்னியனிடம் அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்றே ஒரு அமைச்சகம் அமைத்தார்கள். பசுவதை தடுப்புச்சட்டம் என்று மாட்டின் புனிதம் பற்றி பாடம் நடத்தியவர்கள், அந்த புனிதமான மாட்டோடு இணைந்த விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ள காரணமான கொள்கையை எதிர்த்து ஒரு எழுத்தேனும் பேசமுடியுமா? நாடெங்கும் உள்ள சிறுபான்மையினர் உணவுக்காக கொன்ற மாட்டைவிட பால் பவுடர் இறக்குமதி என்ற ஒரே உத்தரவில் லட்சக்கணக்கான மாடுகளை ஒழித்துக்கட்டினார்களே, இதற்கு பதில் கூற முடியமா? இப்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாயைப்போல சேவகம் புறிய ஓட்டுப்பொறுக்குவதற்கு, சுதேசி கோமாத என்று கபட நாடகமாடுவதற்கு மாட்டு மூத்திர கோஜல் பயன்படுகிறதே இது இரண்டாவது மாங்காய்.

நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபாயம் என்று பயங்கர வாதம் குண்டுவெடிப்பு சீன் காட்டி சிறுபான்மையினரை விரக்தியின் விழிம்புக்குத்தள்ளி அதைக்காரணம் காட்டியே இந்து என்ற பட்டிக்குள் எல்லோரையும் அடைத்துக்கொண்டிருக்கிறார்களே பாசிச பயங்கரவாதிகள், அவர்களின் அந்த செயல்திட்டத்தின் வழிமுறைகள் தான் தேசிய நாயகன் தேசிய கலாச்சாரம் என்பது. ஒரே நாடு ஒரேகலாச்சாரம் ஒரே சட்டம் என்று தங்களின் பார்ப்பனிய முகத்தை தேசிய முகமூடியால் மறைத்துக்கொள்ள மருத்துவப்பலன்களை புனைந்து அதைக்காட்டி ஒரு குளிர்பானமாய், விதேசியத்திற்கெதிராய் சுதேசியமாய் விளம்பரம் செய்து, தேசிய வெறியை கிளப்பி தங்களின் அரசியல் இலக்கை நீங்கள் அறியாமலேயே உங்களுக்குள் திணிக்கிறார்களே இது மூன்றாவது மாங்காய்.

நாட்டில் பயங்கரவாதத்திற்கு பலியானவர்களை விட, தொன்னூறுகளின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த பொருளாதாரக்கொள்கையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம். விவசாய நாடான இந்தியாவில் பெருமளவில் வேலைவாய்ப்பை கிராமப்புறங்கள் தான் வழங்கிக்கொண்டிருந்தன. அவர்களை கிராமியச்சூழலிலிருந்து பிய்த்து உதிரித்தொழிலாளர்களாய் நகரங்களில் வீசி எறிந்திருக்கிறது அந்த பொருளாதாரக்கொள்கை. சமூகத்தில் எல்லாத்தட்டு மக்களையும் பாதிக்கும் பொருளாதாரக்கொள்கைகளையும், உலக வங்கியின் உத்தரவுகளையும் எந்தக்கட்சியும் மீறுவதில்லை. இப்படி அன்னியக்கைக்கூலிகளாய், நம் வாழ்வை அன்னியனின் சுரண்டலுக்குள் அடிமைப்படுத்தும் சோரம் போனவர்கள் தான் சுதேசியம் என்றும், தேசியக்கலாச்சாரம் என்றும் கௌஜல் புனிதம் என்று சொல்லிக்கொண்டு உங்கள் முன் வருகிறார்கள். இத சரியான வழியில் புறிந்து கொள்வதற்கும் முறியடிப்பதற்கும் பெப்சி கோக்கை கையில் பிடித்துக்கொண்டு சிந்திப்பவர்களால் முடியாது. பெப்சி கோக்கின் ஒவ்வொரு சொட்டிலும் விவசாயிகளின் கண்ணீரும் ரத்தமும் கலந்திருக்கிறது. அவைகளை புறக்கணிப்பதுடன் ஆரோக்கியமும் ருசியும் நிறைந்த இளநீர் மோர் போன்ற பானங்களுக்கு திரும்புவோம். அதோடு மட்டுமன்றி இயற்கை பானங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகவும், இயற்கை வளங்களை நாசமாக்கி அதை தம் சொத்தாக மாற்றுபவர்களுக்கு எதிராகவும் அணிதிரள்வோம்.

9 thoughts on “கோமாதாவும் மூத்திர வியாபாரிகளும்

 1. அப்ப தீர்த்தம் குடிக்கக் கூடாதோ? கோயில்ல ஐயரின் கால்களைக் கழுவி வருவது எவ்வளவு நோய் நிவாரணி. அது உங்களுக்குத் தெரியாதோ?

 2. Hi

  உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

 3. //அப்ப தீர்த்தம் குடிக்கக் கூடாதோ? கோயில்ல ஐயரின் கால்களைக் கழுவி வருவது எவ்வளவு நோய் நிவாரணி. அது உங்களுக்குத் தெரியாதோ?//

  அம்பி அது அடுத்த ரவுண்டு குளிர்பானமா வரும் அம்பி. முதல்ல மாட்டு மோத்திரத்த சந்தையில விட்டு பாப்போம். அது சக்ஸஸ் ஆனா ஐயரோட கால கழுவுன தண்ணி, வேறைதையாவது கழுவுன தண்ணின்னு நிறைய மேட்டரு வைச்சிருக்கொம்.

 4. மாட்டு மூத்திரத்துக்கு (இந்திய மாட்டின் மூத்திரத்துக்கு மட்டுமே), 5 பேடன்ட் வழன்கியிருக்கிறார்களே.. அவர்கள் பைத்தியக்காரர்களா?

  இதைப்பற்றி எனக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் கேட்டேன்.. பசுமாட்டு மூத்திரம் இதய நோயை குணப்படுத்துகிறது என்று சொல்கிறார்க்ளே.. உண்மையா என்று கேட்ட்பொழுது, அவர் சிரித்து கொண்டே, இது பழைய கதை.. முன்பு அதில் இருந்து எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்ட மருந்தை கொடுத்தார்கள்.. இப்பொழுது அதை விட அட்வான்ஸான மருந்தெல்லாம் வந்து விட்டது என்றார்..

  நான் மறுபடியும் கேட்டது இதுதான்.. இலவசமா கெடைக்கற இதய மருந்து இருக்கும்பொழுது, எதுக்கு அநியாய விலைக்கு வேறு மருந்து வாங்கனும்.. சிரித்து கொண்டு சென்று விட்டார்..

  ஈ.வே.ரா என்னும் கபோதி சொன்னான் என்பதற்காக மூளையை கழட்டிவிட்டு எழுதுகிறீர்க்ள் .. என்னுடைய சொந்தக்காரர் ஒருவர் நாலு மாதமாக பஞ்சகவ்யம் சாப்பிட்டு கேன்சர் குண்மாகி இப்பொழுது நலமாக இருக்கிறார்..

  கோவை KMCh ல ரெண்டு கீமோவுக்கு கூட உடம்பு தாங்காது.. அவ்வளவுதான் என்று சொன்னவர்கள் இதை பார்த்து நம்பமுடியவில்லை..

  ஹிந்துதுவவாதிகள் சொன்னார்கள் என்பதற்காக நமது பாரம்பரியத்தின் உண்மைத்தன்மை போய்விடுமா?

 5. நண்பர் செந்தில்,

  என்னால் சிரிக்கக் கூட முடியவில்லை. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு வந்தால் மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்லுங்கள். புற்றுநோய் வந்தால் சாணியை தின்னக் கொடுங்கள். இன்னும் காச நோய்க்கு பெருச்சாளியின் மூத்திரத்தைக் கூட கொடுங்கள். பார்ப்பன ‘ஸ்மிதி’ களில் விலங்குகளுக்கா பஞ்சம். அப்படியே பாரம்பரிய காவலர்களையும் உடனழைத்துக் கொண்டு மருத்துவத்துறை எங்களை புண்படுத்துகிறது எனவே அதை நீக்க வேண்டும் என்று சாலை மறியல் செய்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s