மிரட்டிய உலக‌ தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்.

          north_korea_missile_143254f1அண்மையில் வடகொரியாவின் சொந்தத்தயாரிப்பான ‘உன் ஹா 2’ என்ற ராக்கெட் மூலம் ‘குவாங் மியோங் சாங்’ எனும் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோளை வடகிழக்குப்பகுதியிலுள்ள ‘முஸ்டான்டி’ ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவியது. ஏற்கனவே வடகொரியா ‘டோபோடாங் 2’ போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதை முன்கூட்ட்யே தெரிந்து கொண்ட அமெரிக்காவும், தென்கொரியா, ஜப்பானும் செயற்கைக்கோள் ஏவுதல் என்ற பெயரில் நீண்ட தூர இலக்கு கொண்ட ஏவுகளையை சோதித்துப்பார்பதாக குற்றம் சாட்டின. அப்படி சோதனை செய்யும் பட்சத்தில் இடையிலேயே அதை சுட்டு வீழ்த்தப்போவதாக மிரட்டின. அப்படி ஏதும் நடந்தால் அதுவே போரை தொடங்குவதற்கான காரணமாக இருக்கும் என வடகொரியா எச்சரித்தது. தொடர்ந்து அமெரிக்காவும் ஜப்பானும் தங்கள் போர்க்கப்பல்களை வடகொரிய கடல் பகுதியில் நிலைநிறுத்தின. வடகொரியாவும் போருக்கு தயாராகுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் தற்போது, தங்கள் செயற்கைக்கோள் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டு சுற்றிவருவதாக வடகொரியாவும், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எந்தப்போருளும் நுழையவில்லை அது பசிபிக் பெருங்கடலில் விழுந்துவிட்டது, திட்டம் தோல்வி என்று அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

           மலைப்பாங்கான பிரதேசமும், மொத்தப்பரப்பில் வெறும் 18விழுக்காட்டையே விளைநிலமாவும்; அடிக்கடி வறட்சியும், வெள்ளமும் தாக்கும் நாடாகவும், சொந்த நாட்டு மக்களின் உணவுத்தேவையில் தன்னிறைவை எட்டாத நிலையில் இருக்கும் வடகொரியா தன் நாட்டு மக்களின் பட்டினியை போக்கும் திசையில் தன்னுடைய அறிவியல் ஆய்வுகளை செயல் படுத்தாமல் அணுஆயுத தயாரிப்புக்கும் விண்வெளி போட்டிக்கும் தன்னை உட்படுத்திவருவது சொந்த நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்பது ஒருபுறமிருந்தாலும், ஆயுதங்களை நோக்கி தன் ஆய்வுகளை திருப்பியதன் பின்னணியில் தொழிற்படும் அரசியலே முக்கியமான பொருளாக இருக்கிறது. அதைப்பற்றி அறிந்து கொள்ள காலத்தே சற்று நாம் பின்னோக்கி செல்லவேண்டும்.

          இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை கொரிய தீபகற்பம் ஜப்பானின் கீழ் இருந்தது. அச்சு நாடுகளின் தோல்வியையும், ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்கு உள்ளான அதிர்ச்சியையும் தொடர்ந்து நேசநாடான அமெரிக்காவின் கீழ் வந்தது கொரியா பின்னர் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியமும் அதற்கு உரிமை கோரியதால் ஒரு உடன்பாடு ஏற்பட்டு 38வது அட்ச ரேகையின்வடபகுதியை ரஷ்யாவும், தென்பகுதியை அமெரிக்காவும் ஆளுமைப்படுத்த அதுவே வடகொரியா, தென்கொரியா என்று தனித்தனி நாடாகியது. அதுவரை உறவினர்களாக கொரியர்களாக இருந்தவர்களிடம் பகைமை திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இதில் 1950ல் வடகொரியா தென்கொரியாமீது தொடுத்த போரும் சேர்ந்து கொள்ள வெற்றிகரமாக தொடங்கியது ஆயுதப்போட்டி. வடகொரியாவுடன் ஒப்பிடுகையில் 20மடங்கு அதிக வளங்களைக்கொண்ட தென்கொரியா அமெரிக்க முதலாளித்துவ பாணியில் முன்னேறியது(!) போதிய விளை நிலமில்லாத வடகொரியாவில் விவசாயத்தில் கொண்டுவரப்பட்ட கூட்டு கம்யூன் முறையும், ரேசன் பகிர்வுத்திட்டங்களும் ஓரளவுக்கு நிலமையை சமாளித்தாலும் போதுமான அளவுக்கு இல்லை. பனிப்போரின், பதிலிப்போரின் இறுதியில் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் சிதறிப்போய்விட , வடகொரியாவின் உணவுத்தேவையை பயன்படுத்தி ஏராளமான அமெரிக்கக்குழுக்கள் உதவி என்ற பெயரில் உள்நுழைந்து பெயரளவுக்கு இருந்த சோசலிசத்தையும் துடைக்கும் திட்டத்துடன் களமிறங்கின.

          தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த தென்கொரியாவிலும், தன்னுடைய மேலாதிக்கத்தை ஒரு வழியில் ஏற்றுக்கொண்ட ஜப்பானிலும் ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் குவித்தது அமெரிக்கா. இதன் காரணமாக வடகொரியாவும் அணுஆயுத ஏவுகணை ஆராய்ச்சியில் இறங்கியது. தன்னைத்தவிர வேற் யாரும் ராணுவ மேலாதிக்கம் பெற்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் அமெரிக்கா எந்த ஒரு நாடு ஏவுகணை தொழில்நுட்பத்தையோ, அணு ஆயுத பரிசோதனையோ நடத்தினால் கடுமையாக எதிர்ப்பதுடன் ஐநா சபை மூலம் பொருளாதாரத்தடை உட்பட பல்வேறு தடைகளை ஏற்படுத்தும். இந்த அடிப்படையில் உருவானது தான் அணுஆயுத பரவல் தடைச்சட்ட ஒப்பந்தம். உலகின் வல்லசுகளான ஐந்து நாடுகளைத்தவிர ஏனைய நாடுகள் அணுத்தொழில்நுட்ப ஆய்வில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் இந்த ஒப்பந்தம். பல‌ நாடுகளை அதன் பொருளாதார நலைமைகளைக்கொண்டும், உதவி என்ற பெயரில் மிரட்டியும் இந்த ஒப்பந்தத்தை பிற நாடுகள் மீது திணித்து வருகின்றனர். வடகொரியாவும் இதில் 1985ல் ஒப்பமிட்டது. அதற்கு முக்கியமான நிபந்தனையே தென்கொரியாவிலும் ஜப்பானிலும் அமெரிக்க நிறுவி வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விலக்கிக்கொள்ளவேண்டும் என்பது தான். ஆனால் இன்று வரை உலக சட்டாம்பிள்ளை அமெரிக்க இதை நிறைவேற்றவில்லை. அதோடுமட்டுமல்லாது, வடகொரியாவின் அணுவுடன் தொடர்பில்லாத பிற தொழில்நுட்பங்களையும் சோதனை செய்யவேண்டும் என நிர்ப்பந்தித்தது. இதனால் 2003ல் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்த்தத்திலிருந்து வடகொரியா விலகியது. அன்றிலிருந்து ஐநா சபை பொருளாதாரத்தடை உட்பட பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. இவை எல்லாவற்றையும் மீறி தன்னுடைய அணுத்தொழில் நுட்பத்தை மேம்படுத்தி வருவதுடன் தன்னிடம் அணுஆயுதங்கள் இருக்கிறது என்று வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறது. அதன் தொடற்சியாகத்தான் ஏவுகணை பரிசோதனைகளும்.

          

north-korea-missleஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தமும் அதை மீறினால் ஐநா சபை விதிக்கும் தடைகளும் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவையல்ல. மாறாக அமெரிக்காவின் மேலாதிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்ளச்செய்வதை நோக்கமாக கொண்டவை. அமெரிக்காவிடம் மட்டும் சற்றேறக்குறைய 15000க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது, இது போன்று ஏனைய வல்லரசுகளிடமும். அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற வல்லரசுகள் மட்டுமல்லாமல் இஸ்ரேல், இந்தியா, பாக்கிஸ்தான், வடகொரியா ஆகிய ஒன்பது நாடுகள் அணு தொழில்நுட்ப நாடுகளாக அறியப்பட்டிருக்கின்றன. இந்நாடுகளால் வைத்திருக்கும் குண்டுகளை தவிர தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் உருவாக்கிக்கொள்ளமுடியும். இவை தவிர இன்னும் நாற்பது நாடுகளிடம் அணுகுண்டுகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுத பரவல் தடைச்சட்டத்தின் மூலம் அமெரிக்க மேலாண்மையை ஏற்றுக்கொள்வது ஆயுதப்போட்டிக்கும் அணு ஆயுதப்பரவலுக்கும் தான் வழிவகுக்குமேயல்லாது அதை அழிப்பதற்கு ஒருபோதும் பயன்படப்போவதில்லை.

          கோடிக்கணக்கான ஆண்டுகளாய் பூமியில் வசித்துவரும் உயிரினங்கள் அனைத்தையும் ஓரிரு மணித்துளிகளில் அழித்துவிடும் வல்லமை கொண்ட அழிவுசக்தியை கட்டிவைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில்தான் ஏகாதிபத்தியங்கள் தங்களின் வணிக நலன்களுக்காக உலகை மறுபங்கீடு செய்யும் தருணத்திற்காக காத்திருக்கின்றன. தனிமனித உரிமை என்ற பெயரில் உலகின் மொத்தவளத்தையும் ஒருவனிடம் குவிக்கும் திசைவழியில் சென்றுகொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின் தலைமையில் இந்த அழிவு சக்திகளை கண்காணிப்பதோ அழிப்பதோ சாத்தியமற்றவை. சமூக நலனை முன்னிலைப்படுத்தும் பொதுஉட‌மைக்கொள்கையை அடிப்படையாகக்கொண்ட சோசலிச நாடுகளின் கூட்டுத்தலைமையில்தான் மனித குலத்தை காப்பது சாத்தியப்படும்.

6 thoughts on “மிரட்டிய உலக‌ தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்.

 1. ஐநா சபையா… இல்ல …. அமெரிக்கா சபையா

  அப்புரம் எதுக்கு ஐக்கிய நாடுகள் சபைனு பேரு வச்சுருக்காய்ங்க…
  அமெரிக்க நாடுகள் சபைனு வைக்க வேண்டியதான….

  இலங்கைல ஒரு இனத்தையே இப்போ அழிச்சுகிட்டு இருக்கானுங்க இத எவனும் கேட்கல…..

  அணுகுண்ட கண்டு பிடிச்சா வருங்காலத்துல ஆபத்துனு
  இப்போ கண்டனம் தெரிவிக்கிறாய்ங்க……

  போரை நிறுத்துனு ஐநா சொல்லியும் கேட்காத இலங்கை மீது பொருளாதாரத்தடை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்க துப்பில்ல…

  அது சரி. நம்ம சொந்தகாரனே சரியில்ல…
  அப்பறம் எங்க அவன குறை சொல்றது

 2. சிறந்த கட்டுரை. அமெரிக்கா நல்ல வளங்களை உள்ளடக்கிய, மக்கள் தொகை குறைவாயுள்ள, பெரிய நாடு. ஆசிய, ஐரோப்பிய கண்டங்களிலிருந்து வெகுதொலைவில் உள்ளனர். அவர்கள் ஏன் அடுத்தவன் சிக்கல்களில் தலையிட வேண்டும்?

  ஒவ்வொரு நாட்டிலும் தனது மூக்கை நீட்டி, அந்நாட்டை அழிப்பதே அவர்களின் வழமையாயுள்ளது. ஆனால், அவர்களின் வீழ்ச்சி தொடங்கி விட்டது என்பது தான் உண்மை.

 3. அரிய தகவல்களுடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் செங்கொடி. வெளிவந்த சமயத்தில் படித்திருக்கவில்லை. விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டதில் பார்த்து இப்பொழுது தான் படித்தேன்.

  வாசகர்களுக்கு வாக்களிக்க உங்கள் தளத்திற்கு வரும் நேரமிது. அதனால், சில மாற்றங்களை செய்தால் நல்லது. சில எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. மாற்றுங்கள். பிறகு, நீண்ட பாராக்களாக இருக்கிறது அதை, இரண்டாக உடைத்தால் நல்லது. புதிய வாசகர்களுக்கு வாசிக்க எளிதாக இருக்கும்.

  தமிழ்மண வாக்கெடுப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள். என் ஓட்டு உங்களுக்கு தான்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s