ஓரின ஈர்ப்பும் விவாதங்களும் பகுதி இரண்டு

ஓரின ஈர்ப்பும் விவாதங்களும் என்ற தலைப்பில் இடப்பட்ட இடுகைக்கு வந்த எதிர்வினைகளுக்கு பதிலளிக்கும் முகமாக இந்த இரண்டாம் பகுதி இடப்பட்டுள்ளது. பின்னூட்டமிட்ட தோழர் பென் அவர்களுக்கும், குடும்பக்கட்டுப்பாடு குறித்து மின்னஞ்சலில் கேள்வி கேட்ட நண்பர் சூ.பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி


ஓரின ஈர்ப்பு பற்றிய விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பிவிட்டதில் தில்லி உயர்நீதி மன்றத்திற்கு பெரும்பங்குண்டு. ஓரினச்சேர்க்கை என்ற சொல்லை உச்சரிப்பதே ஒழுக்கக்கேடான ஒன்று, அதைப்பற்றி பேசுவதே அபத்தமானது என்ற நிலையில் அது சரியா தவறா என்று பேசவைத்திருக்கும் அந்த நீதிமன்றத்தீர்ப்பு தன் வேலையை சரியாக செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பைபிளில் இந்தப்பாவத்தில் ஈடுபட்டதற்காக ஒரு நகரையே அழித்ததாய் ஒரு கதை இருக்கிறது. இது குரானிலும் உண்டு. கடவுளுக்கு கோபத்தை ஏற்படுத்தி ஒரு நகரை அழிக்கவைத்த பாவத்திற்கு ஒரு நீதிபதி அனுமதி கொடுப்பதா என மதவாதிகளுக்கு கோபம், அதனால் கலாச்சாரம் என்றும் நோய் பரவும் என்றும் பொழிப்புரை வழங்குகிறார்கள். ஆனால் இதை எப்படி ஆதரிப்பது? எந்த நோக்கில் இதை ஏற்றுக்கொள்வது? என்பதற்கு பதில் ஒன்றுமில்லை.

இதில் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் ஏற்றுக்கொள்வது தான் நாகரீகம், முற்போக்கு என்று நிலைப்படுகிறார்கள் சிலர். யாருக்கும் பாதிப்பில்லை என்பது மட்டுமே ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு போதுமானதாக ஆகிவிடுமா? ஒருவர் ஒரு மதத்தை பின்பற்றுகிறார் என்பது யாருக்கும் பாதிப்பில்லாத ஒன்றுதான், ஆனாலும் ஏன் கடவுள் போன்ற கற்பிதங்களை எதிர்த்து பரப்புரை செய்யவேண்டும்? ஒரு பாப்பான் பூனூல் அணிவது யாருக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஆனாலும் அதன் நோக்கம் பற்றி நுணுக்கமாக ஆராய்வதில்லையா? தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார், “ஒரு தெருவில் இருக்கும் வீடுகளில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினி வாழும் வீடு என்று சொந்த செலவில் எழுதிவைத்தால் அதை ஏற்க முடியுமா என்று?”  இதை பாதிப்பில்லை என்றுதானா புரிந்து கொள்வது. பாதிப்பில்லை என்பதை இன்னும் நீட்டிக்கொண்டே போனால் விபச்சாரத்தைக்கூட ஏற்றுக்கொள்ள நேரிடும்.

தனி மனிதனை முன்னிலைப்படுத்துவதா? சமூகத்தை முன்னிலைப்படுத்துவதா? என்பதை எப்படி கையாள்வது? சமூகம் என்பது தனிமனிதர்களின் சமரசம் என எண்ணுகிறார்கள். தனி மனிதர்களின் கூட்டு தன் சமூகம் என்பது சமூகம் உருவாகத்தொடங்கிய காலகட்டத்தில் தான் சரியானது. அப்போதும் தனிமனிதர்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை என்று ஒன்றிருந்தது. வேட்டையாடு அல்லது வேட்டையாடப்படுவாய் என்றிருந்த அன்றைய நிலையில் ஒன்றிணைவது அவசியத்தேவையாக இருந்தது. அந்தத்தேவையின் அடிப்படையில் ஒன்றிணைந்தார்கள் சமூகம் உருவானது. ஒன்றிணையவில்லையென்றால் சமூகம் உருவாயிருக்காது அதேநேரம் தனிமனிதர்களும் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று தனிமனிதர்களின் கூட்டினால் சமூகம் இல்லை, சமூகத்தின் அங்கங்களாகவே தனிமனிதர்கள் இருக்கிறார்கள். அங்கங்களாக இருக்கும் தனிமனிதர்களிடையே பேதங்களை தனி மனித உரிமை தீர்மானிக்கக்கூடாது என்பதால் தான் ஓரின ஈர்ப்பின் சமூகத்தேவை கோரப்படுகிறது. அப்படி ஒன்று இல்லாத நிலையில் அது எதிர்க்கப்படவேண்டியதே. அன்றியும் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் ஆதரிக்கலாமே என்பதுதான் சமரசம் என்பதன் கீழ் வரும். தேவை என்றில்லாமல் வெறும் சமரசத்தினால் கூட்டுச்சேர்வதை சமூகம் என்ற தகுதியில் மாற்றுக்குறைவானதாகவே கருதப்படும்.

மதமாற்றத் தடைச்சட்டமும் ஓரின ஈர்ப்பும் வேறுவேறு தளத்தில் இயங்குபவைகள். ஓரின ஈர்ப்பு தனிமனித உரிமை எனும் அடிப்படையில் எழுந்தது. ஆனால் மதமாற்றத் தடைச்சட்டம் என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையின் அடிப்படையில் வந்தது. ஒருவன் ஒரு மதத்தில் இருப்பதும், வேறொரு மதத்திற்கு மாறுவதும் அவனின் தனிப்பட்ட உரிமை என்பதால் அச்சட்டத்தை எதிர்க்கவில்லை, சரியாகச்சொன்னால் மதங்களின் பிடியிலிருந்து மனிதன் விடுபடவேண்டும் என்பதே அவசியம் மாறாக மத மாற்றத் தடைச்சட்டம் ஆளும் வர்க்கத்திலிருந்து பார்ப்பனீயத்திலிருந்து சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்களின் மீது பாய்ந்த வெறிநாய்ச்சட்டம் என்பதாலேயே அது எதிர்க்கப்பட்டது.

ஓரின ஈர்ப்பு சமூக அடையாளம் இல்லை, எங்கோ ஓரிவர் ஈடுபடுவது என்பதெல்லாம் அதன் விரிவாக்கத்தன்மையை திரையிட்டு மறைப்பதாகும். ஒரு வாதத்திற்க்காக அப்படிக்கொண்டாலும் சமூக அடையாளமாக மாறும்வேளை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? நாளை விலங்குகளிடம் ஈர்ப்புகொண்ட ஒரு குழு அங்கீகாரம் கோரினால் அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாமா? இது ஒன்றும் எங்குமே நடக்காத ஒன்றல்ல, இதற்கும் இலக்கியங்களிலும் புராணங்களிலும் ஆதாரமிருக்கிறது. இல்லாத ராமர்பாலத்திற்கு ராமாயணத்தை ஒரு நீதிபதி ஆதாரமாக கொண்டதைப்போல், இதற்கும் ராமாயணத்தை ஆதாரமாகக்கொண்டு சட்ட அங்கீகாரம் வழங்கினால் அதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா?

ஓரின ஈர்ப்பால் சமூகத்திற்கு பாதிப்பில்லை என எப்படி தீர்மானிக்கமுடியும்? பரவலாக இது பின்பற்றப்பட்டு மனித உற்பத்தி பாதிக்கும் நிலை வந்தால் தான் எதிர்க்கவேண்டும் அதுவரை சிறிய அளவில் ஆதரிக்கலாம் என்பது வரட்டுத்தனமாகவும் மால்தூஸ் கொள்கையை நினைவு படுத்துவதாகவும் இருக்கும். இப்போது குடும்ப அளவில் குடும்பக்கட்டுப்பாடு நிலவில் இருக்கிறது, இதனாலும் மனித உற்பத்தி பாதிக்கப்படத்தான் செய்கிறது அது போல இதையும் கொள்ளலாமே என்பதும் ஏற்கப்படமுடியாததே. ஏனென்றால் குழந்தை வளர்ப்பு சமூகப்பொறுப்பாக மாறாத வரை அதை ஏற்பது தான் சரியானதாகும்.

தனியொரு  மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் முதன்மையானவை. சில நேரங்களில் சமூக ரீதியான பாதிப்பு நுட்பமானதாக இருக்கலாம், அதை தெளிவாக உணர்ந்து சரியான நேரத்தில் எதிர்ப்பது தான் காலத்தேவை. அந்தவகையில் ஓரின ஈர்ப்பை எதிர்ப்பது தான் இன்றைய காலத்தேவையாக இருக்கிறது.

5 thoughts on “ஓரின ஈர்ப்பும் விவாதங்களும் பகுதி இரண்டு

 1. //தனியொரு மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் முதன்மையானவை. சில நேரங்களில் சமூக ரீதியான பாதிப்பு நுட்பமானதாக இருக்கலாம், அதை தெளிவாக உணர்ந்து சரியான நேரத்தில் எதிர்ப்பது தான் காலத்தேவை. அந்தவகையில் ஓரின ஈர்ப்பை எதிர்ப்பது தான் இன்றைய காலத்தேவையாக இருக்கிறது.// Correct.

 2. மிக நன்றாக இருக்கிறது கட்டுரை. ஓரினசேர்ப்பினை தனிமனித உரிமையாக கூறி சுகம் காண்பவர்களுக்கு சரியான பதிலடி. பார்ப்பான் – பூனூல் சரியான உதாரணம்.மக்கள் கொத்து கொத்தாய் சாவதை விட ஓரினசேர்க்கைதான் முக்கிய விசயமாக கொள்பவர்களே உங்களிடம் ஒரு கேள்வி . சமூகத்தின் பொருளாதார பிரச்சினைகள் உங்களைபாதிக்கிறதா இல்லையா? மக்கட் போராட்டம் உரிமையை பெற்றுத்தருமா இல்லை இல்லை ஒரினப்போராட்டமா/

  பலர் கேட்கலாம் ஏன் அவர்களுக்கு உரிமை இல்லையா? அவர்கள் எங்கு தன் இச்சையை உணர்வுகளை தீர்ப்பார்கள்? பாலுறவு என்பது எதற்கு என்பது புரியாது அல்லது இயற்கையான உறவு முறையை மறுப்பதே இந்த ஓரினச்சேர்க்கை. இயற்கைகு எதிரானதா இல்லையா? பாலுறவின் நோக்கம் மனித உற்பத்திக்கானதா இல்லையா? தன் உணர்வினை தீர்க்க என்பது சமூக உற்பத்திக்காக என்பதாக இல்லையெனில் வெறியாக மாறும் என்பதும் உண்மைதான்.

  ஓரின ஆதரவாளர்களே உங்கள பாலுணர்வுத்தேவையைவிட ஏன் வயிற்றுப்பாடு பெரியதாக தெரியவில்லை? ஒருவேளை சோத்துக்கு கஷ்டப்பாடாமலிருப்பதாலோ என்னவோலட்சக்கணக்கில் விவசாயி செத்ததை விட நாடு அடிமையானதை விட பத்திரிக்கைகளுக்கு ஒரின விசயம் கிளுகிளுப்பாக இருக்கிறது காரணம் ஆண் பெண் உறவு முதலாளித்துவத்துக்கு சலித்து போய்விட்டது.

  கலகம்

 3. ஆண் பெண் உறவே இயற்கையானதாகவும், சமூக கட்டமைப்புக்கு தேவைப்படுவதாகவும் உள்ளது. மற்ற படி ஓரின சேர்க்கை இச்சைகளை ஒரு மாறுபட்ட மன நோயாகவே, அல்லது இத்தகைய பழக்கத்திற்கு அடிமையானதால் அதை தொடரும் (சுய இன்ப பழக்கத்தை போல) ஒழுங்கீனமாகவே கருத வேண்டும். அமெரிக்க சாமியார் ஓஷோவிடம் சரணடைந்த (வாழ்வின் அனைத்து சுகங்களையும் கண்டு களித்து புது புது பேன்டசியை தேடி அலையும் மேல் தட்டு வர்க்கம்) போதை மனிதர்களாகவே இவர்கள் என் கண்கலுக்கு காட்சி தருகிறார்கள்.
  என் சொந்த கிராமத்தில் கூட இத்தகைய சீர்கேடுகளுக்கு சிறுவயதில் அடிமையான சிலரின் மூலத்தை கிளறிய போது அவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையானது கெட்ட புத்தகங்கள், படங்கள் மூலமாகவே (சுய இன்ப பழக்கத்துக்கு அடிமையானதை போலவே). அப்பழக்கம் அவர்கலின் பெற்றோருக்கு தெரிய வந்த பொழுது அவருக்கு திருமணம் செஇது வைத்து விட்டார்கள். இப்போது சரியக இருக்கிறார். தன்னுள் எழும் காம இச்சையை கட்டுப்படுத்தும் வழிவகையற்ற பலரின் வடிகாலாகவே இதனை கருத முடிகிறது.

 4. //ஒருவர் ஒரு மதத்தை பின்பற்றுகிறார் என்பது யாருக்கும் பாதிப்பில்லாத ஒன்றுதான், ஆனாலும் ஏன் கடவுள் போன்ற கற்பிதங்களை எதிர்த்து பரப்புரை செய்யவேண்டும்? ஒரு பாப்பான் பூனூல் அணிவது யாருக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஆனாலும் அதன் நோக்கம் பற்றி நுணுக்கமாக ஆராய்வதில்லையா?//

  ஒரு தனி மனிதன் மதத்தை பின்பற்றுவது என்பது சுய சிந்தைக்கு உட்பட்டது ஆனால் அதே மதம் ஒரு சமூகத்தையே ஆட்கொள்ளும் பொழுது எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உதாரணத்திற்கு மதங்கள் இப்பொழுது சமூக நிறுவனங்கள் ஆகி விட்டன. மனிதனின் எல்லா வளர்ச்சிக்கும் அது தடை கற்களாக திகழ்வதனால் எதிர்த்து அழிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பூணுல் என்பது வெறும் நூல் அல்ல அது ஒரு அடையாளம் என்பதில் தான் பிரச்சனை. இப்பொழுது எனக்கு தெரிந்த பார்பன்னர்கள் பூணுல் கூட அணிவதில்லை ஆனால் அவர்கள் சாதிய அடையாளத்தை தொரந்துவிட்டர்கள் என்பது இல்லை.

  //தனி மனிதர்களின் கூட்டு தன் சமூகம் என்பது சமூகம் உருவாகத்தொடங்கிய காலகட்டத்தில் தான் சரியானது. அப்போதும் தனிமனிதர்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை என்று ஒன்றிருந்தது. //

  கூட்டு என்பது சமரசத்தில் இருந்து தான் பிறகும் அல்லவா?

  //ஆனால் இன்று தனிமனிதர்களின் கூட்டினால் சமூகம் இல்லை, சமூகத்தின் அங்கங்களாகவே தனிமனிதர்கள் இருக்கிறார்கள். அங்கங்களாக இருக்கும் தனிமனிதர்களிடையே பேதங்களை தனி மனித உரிமை தீர்மானிக்கக்கூடாது என்பதால் தான் ஓரின ஈர்ப்பின் சமூகத்தேவை கோரப்படுகிறது. //

  சமூக தேவை என்பது சரி அல்ல என்பது உண்மை ஆனால் உரிமைகளை தீர்மானிக்கும் ‘மனு’ யார் என்பதில் தான் ஒரு இடறல்.

  //மதமாற்றத் தடைச்சட்டமும் ஓரின ஈர்ப்பும் வேறுவேறு தளத்தில் இயங்குபவைகள். ஓரின ஈர்ப்பு தனிமனித உரிமை எனும் அடிப்படையில் எழுந்தது. ஆனால் மதமாற்றத் தடைச்சட்டம் என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையின் அடிப்படையில் வந்தது. ஒருவன் ஒரு மதத்தில் இருப்பதும், வேறொரு மதத்திற்கு மாறுவதும் அவனின் தனிப்பட்ட உரிமை என்பதால் அச்சட்டத்தை எதிர்க்கவில்லை, சரியாகச்சொன்னால் மதங்களின் பிடியிலிருந்து மனிதன் விடுபடவேண்டும் என்பதே அவசியம் மாறாக மத மாற்றத் தடைச்சட்டம் ஆளும் வர்க்கத்திலிருந்து பார்ப்பனீயத்திலிருந்து சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்களின் மீது பாய்ந்த வெறிநாய்ச்சட்டம் என்பதாலேயே அது எதிர்க்கப்பட்டது.//

  முற்றிலும் தவறு என்பதே எனது கருத்து, மத மாற்ற தடை சட்டத்தின் அடிப்படை நோக்கம் என்பது மதம் சமூகத்தின் உயிர் நாடி என்பதை மீண்டும் நிறுவதற்கான சானக்யதனம். அதனால் காப்பாற்றப்படுவது ஆளும் வர்கங்களுக்கு தேவையான சாதியம் (இந்தியாவில் ). இதை வரலாற்றில் பல நாடுகளில் பல சந்தர்பங்களில் தம் உடைய வர்க்க நிலைகளை பாதுகாக்க மக்கள் மீது எவ பட்டு உள்ளது. இதை தனி மனித உரிமை என்கின்றன ஒரே ஆயுதத்தால் தான் முறி அடிக்க முடியும். மதம் வர்கங்களின் ஓர் அரண் என்பதையும் உணர முடியும்.

  //ஓரின ஈர்ப்பு சமூக அடையாளம் இல்லை, எங்கோ ஓரிவர் ஈடுபடுவது என்பதெல்லாம் அதன் விரிவாக்கத்தன்மையை திரையிட்டு மறைப்பதாகும். ஒரு வாதத்திற்க்காக அப்படிக்கொண்டாலும் சமூக அடையாளமாக மாறும்வேளை எதிர்ப்பதா//

  //ஓரின ஈர்ப்பால் சமூகத்திற்கு பாதிப்பில்லை என எப்படி தீர்மானிக்கமுடியும்? பரவலாக இது பின்பற்றப்பட்டு மனித உற்பத்தி பாதிக்கும் நிலை வந்தால் தான் எதிர்க்கவேண்டும் அதுவரை சிறிய அளவில் ஆதரிக்கலாம் என்பது வரட்டுத்தனமாகவும் மால்தூஸ் கொள்கையை நினைவு படுத்துவதாகவும் இருக்கும். இப்போது குடும்ப அளவில் குடும்பக்கட்டுப்பாடு நிலவில் இருக்கிறது, இதனாலும் மனித உற்பத்தி பாதிக்கப்படத்தான் செய்கிறது அது போல இதையும் கொள்ளலாமே என்பதும் ஏற்கப்படமுடியாததே. ஏனென்றால் குழந்தை வளர்ப்பு சமூகப்பொறுப்பாக மாறாத வரை அதை ஏற்பது தான் சரியானதாகும்.//

  அது மாறுமா என்பது இருக்கட்டும் மாறினால் உங்கள் பிரச்சனை என்ன என்பது புரியவில்லை. இது எந்த வர்க்க நிலையையும் ஏற்படுத்தாது வர்க்க நிலைக்கு கண்மூடித்தனமாக கைகொடுக்காது, உற்பத்தி என்ற சொல்லினால் மனிதர்களை ஒரு இயந்திரம் ஆக்கி விட்டீர்கள் அப்போ குழந்தை பெற முடியாதவர்கள் உங்கள் சமூகத்தில் தலித்கள் போலும்.

  //தனியொரு மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் முதன்மையானவை. சில நேரங்களில் சமூக ரீதியான பாதிப்பு நுட்பமானதாக இருக்கலாம், அதை தெளிவாக உணர்ந்து சரியான நேரத்தில் எதிர்ப்பது தான் காலத்தேவை. அந்தவகையில் ஓரின ஈர்ப்பை எதிர்ப்பது தான் இன்றைய காலத்தேவையாக இருக்கிறது.//

  தனிமனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு தான் சமூகத்தில் விஸ்வரூபம் எடுக்கும். மனிதர்களை சூற்றி தான் சமூகம் அமையவேண்டும் தவிர சமூகத்திற்காக மனிதர்களை வளைத்தால் தளர்த்த முடியாத கட்டுமானங்கள் தான் உருவாகும்.

  இதை நான் மையப்படுத்த வேண்டிய பிரச்சனையாக பார்க்கவில்லை ஆனால் பல நிலவும் சமூக அநீதிகளின் ஓர் அங்கமாக பார்கிறேன்(இது ஒரு கிரிமினல் குற்றமாக உள்ள நிலையில்).

  தோழமையுடன்
  பென்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s