இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..

நுழைவாயில்

பொதுவாக மதம் என்பது மக்களிடையே சக்திவாய்ந்த நம்பிக்கையாக இருக்கிறது. மக்கள் தங்களின் உயிர்ப்பிற்கும், மரணத்திற்கும்; சுக துக்கங்களுக்கும்; இன்னும் அனைத்திற்கும் அதுதான் காரணமாக இருக்கிறது என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே உலகை சீர்பட நடத்திவருவதாக ஏற்கிறார்கள், தற்போதைய சீர்கேடுகளுக்கு அந்த நம்பிக்கை குறைந்ததே காரணம் என கருதுகிறார்கள். வேறு எந்த நம்பிக்கையை காட்டிலும் மத நம்பிக்கையே, கடவுள் நம்பிக்கையே வீரியம் மிக்கதாய் இருக்கிறது. சிலபோதுகளில் அந்த நம்பிக்கையில் கீரல் விழுந்தாலும் மறு கணமே மனதிலிருந்து ஒரு உந்துதல் கிளம்பி அந்த கீரல் சரிசெய்யப்பட்டுவிடுகிறது. இது மனதில் நம்பிக்கை என்ற அளவில், ஆனால் நடப்பிலோ அவர்களின் வாழ்க்கையும் அதன் வலிகளும் அவர்களை கோபம் கொள்ளச்செய்கிறது. தங்களின் பிரச்சனைகளுக்கு காரணமாகத் தெரிபவர்களை பழிவாங்க முயல்கிறார்கள். மீண்டும் அதேபோல் நேராவண்ணம் தற்காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு இருக்க முயல்கிறார்கள். ஆனாலும் கடவுள் தங்களுக்கு விதித்ததை தவிர வேறெதுவும் நேராது என உறுதியாக நம்புகிறார்கள். மேலும் பிரச்சனைகள், மேலும் மேலும் பிரச்சனைகள் அவர்களை அழுத்த அழுத்த நாட்கள் கடந்து கடந்து ……ஒரு நாள் மரணித்தும் விடுகிறார்கள். தங்களின் பிரச்சனைகள் இந்த உலகிலிருந்தே எழுந்து வருபவைகள். சிலர் கொழுக்க நினைப்பதாலேயே தமக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும், தம்முடைய உழைப்பு முழுவதும் தமக்கு கிடைப்பதில்லை என்பதும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி தெரியவிடாமல் செய்வதில் கடவுள் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. இப்படி கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவு வீரியமாக இருப்பதற்குக்கு காரணம் என்ன?

 

மனிதன் பிறந்தது முதலே ஏதாவது ஒரு மத நம்பிக்கையின் நிழலிலேயே வாழ நேரிடுகிறது. வளர்ந்த பிறகு அந்த நம்பிக்கையின் சடங்குகளுக்குள் சிக்கிக்கொள்கிறான். அவனுக்கு போதிக்கப்படும் அத்தனையும் ஏதாவது ஒரு ரீதியில் கடவுளின் இருப்பை பத்திரப்படுத்துகின்றன. அவன் சிந்திக்கும் பருவத்தை அடையும் போது வேதங்களும் அதன் விளக்கங்களும், விரிவுரைகளும் பொழிப்புரைகளும் அவனுள் நுழைந்து அவனின் சிந்தனைக்கான வழியை கைப்பற்றிக்கொள்கின்றன. எதைப்பற்றி சிந்தித்தாலும் இந்த வழியை மீறிவிடாதவாறு சொந்தங்களும் சமூகமும் பார்த்துக்கொள்கின்றன. கூடவே இன்றைய வாழ்முறைகளும் பொழுதுபோக்கு கட்டமைப்புகளும் ஒரு செக்கு மாட்டுத்தனத்தை ஏற்படுத்திவிட, பொருப்புகள் அதை சுமந்தே ஆகவேண்டிய கடமைகள் அவைகளுக்காக பொருளீட்டும் தேவை, அந்த தேவைகளுக்காக வரித்துக்கொண்டேயாகவேண்டிய தகுதிகள்……. மூச்சுவிடத்திணரும் அவதியில் ஏன் எனும் அந்தக்கேள்வி எழும்பும் வலுவற்றே போய்விடுகிறது.

 

இவைகள் போதாதென்று தற்போது தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் மத பரப்புரைகள் விஞ்ஞான விளக்கங்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு நிஜம் போலவே வலம் வருகின்றன. அதெப்படி பொய்களுக்கு அறிவியல் விளக்கங்கள் தரமுடியும்? தருகிறார்கள். மதம் பேசுபவர்கள் இப்போது அறிவியலையும் குழைத்தே பேசுகிறார்கள்.

 

பேரண்டம் என்றாலும் அணுப்பிளவு என்றாலும் வேத வசனங்களை பொருள் பிரித்து அடுக்குகிறார்கள். நீட்டி முழக்குகிறார்கள், அறைகூவல் விடுகிறார்கள். வாழ்க்கையின் பற்சக்கரங்களிடையே திமிறிக்கொண்டு வரும் வெகுசில நேரங்களில் மக்களுக்கு ஏற்படும் கேள்விகளை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வியக்கவைத்தே பலங்குன்றச் செய்துவிடுகின்றன. மதப்பிரச்சாரக்கூட்டங்களுக்கு மக்கள் தேடிப்போய் கேட்பது குறைவு, மதவிளக்க நூல்களை படிப்பது அதனிலும் குறைவு ஆனால் திரைப்பட நிகழ்ச்சியின் அல்லது விளையாட்டின் விளம்பர இடைவேளையில் தெரியாமல் இதுபோன்ற நிகழச்சிகள் பார்வைக்கு வந்துவிட்டால் கூட இதன் தாக்கம் மக்களின் மனதில் இருக்கை போட்டு அமர்ந்துவிடுகிறது. இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. ஏனையோர்களைவிட இஸ்லாமியர்களிடம் மதப்பிடிப்பும், இது தான் சரியான மதம் எனும் உறுதியும், அதை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும் அதிகம்.

இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.

 

இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை. அதோடு இன்றைய சூழலில், எந்தஒரு மதத்திலும் அதில் பிடிப்பும் பற்றார்வமும் கொண்டிருப்பவர்கள் தவிர்க்கவே முடியாமல் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோவதையே வழியாக கொண்டிருக்கிறார்கள்.

 

அரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள். புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூகத்தேவையாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் இத்தொடர் பயன்படுமென நம்புகிறேன்.

 

ஒரு வேண்டுகோள்: இஸ்லாமும் அதன் சட்டதிட்டங்களும் மட்டுமே சரியானது ஏனைய அனைத்தும் ஏதோ ஒருவகையில் தவறானவை என்பனபோன்ற முன்முடிவுகளை தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான வகையில் வினையாற்ற வாருங்கள் என அனைவரையும் அழைக்கிறேன்.

தோழமையுடன்

செங்கொடி

24 thoughts on “இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..

  1. மார்க்சீயம் காணாமல் போய்விட்டது. இப்பொழுது புரட்சிகர மார்க்சீயம் வந்து விட்டது. அப்படியானால் பழைய மார்க்சீயம் தப்புதானே?
    அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கம்யுனிஸ்டுகளுக்கு இருக்கிறதா? பைபிளும் கூட மாறிக் கொண்டுதானிருக்கிறது. உலகில் மாறாத ஒன்று இருக்கிறது என்றால் அது அல்லாஹ்வும் அவன் அருளிய குர்ஆனும் தான்.இன்னும் ஆயிரமாயிரம் கார்ல் மார்க்ஸ் வந்தாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் காணாமல் போவது நீங்களும் உங்கள் தத்துவமுமாகத்தான் இருக்கும். இதி்ல் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

  2. செங்கொடி,
    முதலில் புரட்சிகர மார்க்சீயம் என்றால் என்ன என்று இரண்டு வரி எழுதிவிட்டு அதன் பிறகு மதங்களை பற்றி எழுதியிருந்தால் நன்றாக இருக்கும். புரட்சிகர மார்க்சீயம் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே அது மதத்தை விட சிறந்ததா என்பதை தீர்மானிக்கமுடியும்?

    kazeeb,
    பைபிள் மாற்றப்படவில்லை. தவறான தகவல்களை தரவேண்டாம்.

  3. இஸ்லாம் தோன்றி 1500 வருடங்களாகியும் அதன் மேல் பற்றும் நம்பிக்கை கொள்பவர்களது எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர (மாக்ஸ்சிசத்தை போலன்றி) குறையவில்லை ஏன் எனில் அதன் உறுதியும் தெளிவான சிந்தனைகளுமே காரணமாகும். சகோதரி, உங்களை போல் பல ஆயிரக்கணககானவர்கள் அதன் உறிதித்தன்மையை சவாளுக்கு உட்படுத்த முனைந்த போதும் அனைவரும் தோல்வியடைந்ததுவே வரலாறு. இஸ்லாமிய சட்டங்கள், வேத வசனங்களை எவ்வாறு நீங்கள் சவாளுக்கு உட்படுதத போகிரீர்கள் என்பதை பார்கதான் போகிறேன்.

  4. செங்கொடி, உங்கள் வாதங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன. இஸ்லாத்தைப் பற்றிய சரியான அறிவின்றி பொதுவாக சாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் ரீதியாக உங்கள் புரட்சி மார்க்ஸிஸம் ஏன் சிறந்தது என்று நிறுவுங்கள், பின்னர் மதங்களைப் பற்றிப் பேசுங்கள். இஸ்லாம் ஒரு மதமன்று, அது ஒரு வாழ்க்கை திட்டம். குறை நிறைந்த மனிதனுக்கு அவனைப் படைத்த குறையற்ற இறைவனால் வழங்கப்பட்டது. மார்க்ஸிஸம், ஒரு உணர்ச்சியும் தார்மிகக் கோபமும் கொண்ட ஒரு மனிதனின் சிந்தனைக் குமுறல் அன்றி வேறில்லை. அதுவும் அது போன்ற கொள்கைகளும் தோற்றுப் போன வரலாறு உலகறிந்த விடயம். நீங்கள் ஒரு உண்மையான கொள்கைவாதியென்றால் குர்ஆன் எனும் ஒரு புரட்சிகரமான நூல் இருக்கின்றது. அதை ஆழமாக படித்து விட்டு அதில் எந்த விடயம் பிழையானது, எது மனிதனுக்கு வழிகாட்ட இயலாதது, உங்கள் மார்க்ஸிஸம் அந்த குறிப்பிட்ட பிரச்சனைக்கு என்ன தீர்வை தருகின்றது என்று அறிவார்த்த ரீதியாக நிறுவுங்கள். அதை விடுத்து அறிவுஜீவி போல கண்ணை மூடிக்கொண்டு விமரிசையாதீர்கள்.
    நன்றி.

  5. அடுத்தடுத்த பகுதிகளை எதிர்பார்த்திருக்கிறேன்.

    மார்க்சியம் தொடர்பாக இங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு:

    மார்க்சியம் ஒரு விஞ்ஞானம்.

    மதங்களுக்கும் விஞ்ஞானத்துக்கும் (இதில் விஞ்ஞானம் என்ற சொல் அறிவியல், பொறியியல் போன்ற குறுகிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை) இடையிலான வேறுபாடு என்னவென்றால்

    * மதங்கள் குறித்த சில நூல்களை, கருத்துக்களை கண்மூடித்தனமாக நம்புபவை.

    * அந்த நூல்களில் கருத்துக்களில் எந்தச்சிறிய மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாதவை.

    * மற்றது கடவுள், ஆன்மா போன்ற நேரில் பார்க்க முடியாத, “மனித அறிவுக்கு அப்பாற்பட்டவையாக” அவை சித்திரிக்கும் “கருத்துக்கள்” மீது கட்டியெழுப்பப்பட்டவை.

    * முடிந்த முடிவாக “கூறப்பட்ட” கருத்துக்களின் மீது மதங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த மதக்கருத்துக்கள் “இறைவனால்” இறக்கப்பட்டவையாக நம்பப்படும். எனவே கேள்விகளோ, மாற்றங்களோ வளர்ச்சிகளோ நடைபெற அங்கே இடமில்லை.

    விஞ்ஞானம்,

    * மனிதரால் தொடர்ச்சியாக செய்யப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறுகளிலிருந்து கட்டியெழுப்பப்படுவது.

    * குறித்த கருத்து சொல்லப்பட்டதன் பின்னான ஆய்வுகளின்படி அக்கருத்து மாற்றப்பட, திருத்தப்பட வேண்டி ஏற்படுமாயின் அவ்வாறு திருத்திக்கொள்ளத் தயங்காதது.

    * தொடர்ச்சியான ஆய்வுகளையும் தொடர்ச்சியான நடைமுறைகளையும் தொடர்ச்சியான கற்கையையும், தொடர்ச்சியான வளர்ச்சியையும் விஞ்ஞான முடிவுகள் கொண்டிருக்கும்.

    மார்க்சியம் இந்த வகையில் விஞ்ஞானமாகிறது.

    கார்ல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் தமது ஆய்வறிவையும், கண்டுபிடிப்புகக்ளையும் தமக்கு முன்னான மனித குலத்தின் ஆய்வறிவு, கண்டுபிடிப்புக்களுடன் தொகுத்து சில முடிவுகளுக்கு அவ்ந்து அவற்றை தமது கருத்துக்களாக கோட்பாடாக வெளியிட்டுள்ளனர்.

    அவர்களுக்குப்பின்வந்த லெனின், மாவோ, ஸ்தாலின் போன்றோர் முதல் இன்றைய நேபாளப் புரட்சியாளர்கள் வரை மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுத்துச்செல்கின்றனர். எத்தனையோ முடிவுகள் திருத்தப்பட்டுள்ளன. வளர்த்தெடுக்கபப்ட்டுள்ளன. மார்க்சியம் தனது அடிப்படைக்கோட்பாடுகளில் ஒன்றாகக்கொண்டிருக்கும் இயங்கியலின் அடிப்படையில் அந்தத்தத்துவமும் இயங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது.

    இதுவே மதத்துக்கும் மார்க்சியத்துக்குமான வேறுபாடு.

    இங்கே கார்ல்மார்க்சை நபி போல சித்தரித்து நீங்ன்கள் கருத்துச்சொல்வது பொருத்தமற்றது. கார்ல் மார்க்ஸ் மிகச்சாதாரண மனிதர். அவர் தனது, தனக்கு முன்னான மனித அறிவுகளைத் தொகுத்து தந்துள்ளார். அவ்வளவே.

  6. சகோதரர் ரோபின்! பைபிள் மாற்றப் படவில்லை என்றால் எதற்காக புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும்? மேலும் அது பற்றிய விவாதம் இங்கே வேண்டாம் என்று கருதுகின்றேன். காரணம் சகோதரர் செங்கொடி யின் கருத்துக்களுக்கு இங்கே மறுமொழி இட்டால் மட்டுமே விவாதத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல முடியும்.

  7. ம்ம்ம்ம்…

    பரபரப்பான பதிவா???

    மததை வைத்து எழுதினால் பிரபலமாகும்,

    மதத்தை வைத்து நன்கு காலங்களை ஓட்டுகிறீர்கள்.

    விமர்ச்சீங்க விமர்சீங்க…

    அனைவருக்கு ஒரு சிறு விண்ணப்பம், தயவு செய்து அடுத்த மதத்தை விமர்ச்சிக்காதீர்கள்.

  8. சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் மஸ்தான். அவரவர் தாம் சார்ந்திருக்கும் மதத்தை விமரிசிப்பது தான் நல்லது. தவிர தனக்குப் பிடிக்கா விட்டால் விருப்பமான பாதையில் செல்வதை யாரும் தடுக்க வில்லையே! என்ன ஒரு பிரச்சினை என்றால் இவர்களுக்குத் தெரிவது எல்லாம் வெறும் பெயர்களே! இஸ்லாமியப் பெயரில் யார் என்ன சொன்னாலும். செய்தாலும் இஸ்லாமை விமரிசிப்பதற்கு தயாராகி விடுகிறார்கள். தவிரவும் தன்னுடைய நாற்றங்களை மறைக்கவும். மறக்கவும் அது தேவையாகவும் இருக்கிறது.

  9. கம்யூனிசம் ெதரிந்தவர்கள் என்ன ேமதாவிகளா? இஸ்லாத்தில் இருப்பது அறிவுப்பூர்வமானதா எதுவாய் இருந்தால் மனிதனாய் இருக்கலாம்?

  10. kazeeb,

    //அவரவர் தாம் சார்ந்திருக்கும் மதத்தை விமரிசிப்பது தான் நல்லது. // ஊருக்குத்தான் உபதேசமா? அடுத்தவர் மதத்தை விமர்சிக்ககூடாது என்று பைபிளை விமர்சிப்பது ஏன்? செங்கொடியின் விமர்சனங்களுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள். உங்களுக்கெல்லாம் பைபிளை குறை சொல்லவில்லையென்றால் தூக்கம் வராது போலிருக்கிறது!

  11. Don’t be emotional in your arguments. Could you dare to challenge the below article from the brother hamza?

    http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html

    I really appreciate if you could come up with some logic and intelligence…

    For more info: http://hamzatzortzis.blogspot.com/

    http://www.facebook.com/h.a.tzortzis

    I suggest u to see his debate videos with promenient athesit is UK and US , which will be available in this website.

  12. நண்பர் ஷியா,

    நீங்கள் சுட்டியிருக்கும் தொடுப்புகளிலிருக்கும் கட்டுரைகளை தமிழ்ப்படுத்தித் தர இயலுமா, நீங்களோ அல்லது வேறு யாராயினும். தந்தால் அது குறித்த என் எண்ணங்களை தனி பதிவாகவே இடுகிறேன்.

    செங்கொடி

  13. இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..
    Posted on செப்டம்பர்16, 2009 by செங்கொடி

    இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. ஏனையோர்களைவிட இஸ்லாமியர்களிடம் மதப்பிடிப்பும், இது தான் சரியான மதம் எனும் உறுதியும், அதை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும் அதிகம்.

    இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.

    Indian Penal Code (IPC)

    Section 295A. Deliberate and malicious acts, intended to outrage religious feelings or any class by insulting its religion or religious beliefs

    1[295A. Deliberate and malicious acts, intended to outrage religious feelings or any class by insulting its religion or religious beliefs.

    Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class of 2[citizens of India], 3[by words, either spoken or written, or by signs or by visible representations or otherwise], insults or attempts to insult the religion or the religious beliefs of that class, shall be punished with imprisonment of either description for a term which may extend to 4[three years], or with fine, or with both.]

  14. செங்கொடி அவர்களுக்கு வணக்கம் நன்றாக தர்க்கம் செய்கின்றிர்கள் …..
    வாழ்த்துக்கள் ….

    இசுலாமிய குற்றவியல் சட்டதை .அதன் தண்டனையை விமர்சித்து உள்ளீர்கள் …. ஒரு வேலை உங்கள் வாதம் சரிஎன்றே வைத்து கொள்வோம் …

    தற்போது ..சரியான குற்றவியல் சட்டம் உள்ளநாடு எது ..எந்த நாட்டில் அதன் சட்டத்தால் குற்றம் குறைந்தது என்று எனக்கு தெரிய படுத்தவும் ….

    தண்டனை வழங்குவது என்பது குற்றம் குறையத் தானே ஒழிய …. குற்றம்

    இளைத்தவனுக்கு கருணை காட்ட இல்லை …….

    கம்யூனிஷத்தை … குறை கூறவில்லை இங்கே அதுவல்ல விஷயம் ….

    கம்யூனிஷத்தால் …என்னவானது ரஷியா … எதாவது பெரிய மாற்றத்தை ..

    கொண்டு வந்து ..இருக்கா … ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள் செங்கொடி ..

    அவர்களே …இசுலாத்தை பற்றி விவாதிக்க … குரான் னை ..மட்டும் தான் …

    மேற்கோள் காட்டவேண்டுமே ஒழிய ..மற்றவற்றை அல்ல …….

    இசுலாமியர்கள் பின்பற்ற வேண்டியது குரான் எனும் இறை வாக்கு மட்டுமே …
    Syed Abutahir Chennai

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s