குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே  பகுதி 5


முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை, அழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள், அதன்படியே தான் குரான் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குரானை மனப்பாடமாக தெரிந்திருந்தவர்களின் மனதில் குரான் பாதுகாக்கப்பட்டது தான் முதன்மையானது. எழுத்து வடிவில் பாதுகாப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே குரானின் பாதுகாப்பில் பிரச்சனை ஒன்றுமில்லை என நிலைப்படுகிறார்கள். ஆனால் முகம்மது அப்படி நினைத்திருக்க முடியாது. அப்படி நினைத்திருந்தால் எழுத்துவடிவில் அன்றிருந்த வசதிகளின் படி மரப்பட்டைகளிலும், தோல்களிலும் எழுதி பாதுகாத்துவைக்குமாறு ஒரு குழுவை நியமித்து பணித்திருக்கத்தேவையில்லை, ஏனென்றால் அல்லாவே குரானை பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அறிவித்துக்கொண்டுள்ளான். அப்படி இருக்கும்போது தொழுகையின்போது ஓதுவதை கட்டாயமாக்கி மனப்பாடமாகவும், எழுதிவைத்து திட ஆதாரமாகவும் பாதுகாக்கும் தேவை முகம்மதுக்கு இல்லை. ஆகவே முதன்மையானது இரண்டாம்பட்சமானது எனும் பேதமின்றி குரானை பாதுகாக்கும் தெரிவுதான் முகம்மதுவிடம் இருந்திருக்கும். ஆனால் அவரின் மரணத்திற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே வரிசைப்படி இல்லை எனக்கூறி அது அழிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? என்பது தான் மையமான கேள்வி. அதுவும் உலகில் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனிதன் பிறந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முகம்மது தான் அழகிய முன்மாதிரி என்று அறிவிக்கப்பட்டு, அவர் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் இன்றுவரை பாதுகாத்துவைத்திருக்கும் நிலையில் குரான் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை இணைத்துப்பார்க்கவேண்டும்.

 

அபூபக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட குரான் உமரின் காலத்திற்குப்பின் உஸ்மானிடம் வரவில்லை என்றால் அதற்க்கு, அபூபக்கர் தனக்குப்பின் உமரைத்தேர்ந்தெடுத்ததுபோல் உமர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனவே தான் அந்த குரான் உஸ்மானிடம் கொடுக்கப்படவில்லை என்று எண்ணுகிறார்கள். உமர் தனக்குப்பின் ஆட்சிசெலுத்த யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது மெய்தான். அவர் ஒரு குழுவை அமைத்து யாரை நியமிப்பது என்பதை அந்தக்குழு முடிவு செய்யும் என விட்டுவிட்டார், அந்தக்குழுவில் தன் மகனை உறுப்பினராக்குவதற்கும் கூட மறுத்துவிட்டார். ஆனால் குரானை அந்தக்குழுவிடம் ஒப்படைத்து அடுத்துவருபவரிடம் ஒப்படைக்குமாறு பணித்திருக்க முடியும் அவ்வாறன்றி தன் மகளிடம் கொடுக்கும் அவசியமென்ன? இதை அவர் தன்னிடம் வைத்திருந்த குரானை தன் மகளிடம் கொடுத்தார் என புரிந்துகொள்ளமுடியாது. ஏனென்றால் அன்றிருந்த நிலையில் அரசியல் முதல் சமூகம் வரையான அனைத்திற்கும் வழிகாட்டியான குரான் அதுமட்டும்தான் மற்றப்படி மனப்பாடமாய் தெரிந்து வைத்திருந்தவர்கள்தான். அவர்களும் தொடர்ச்சியான போர்களினால் குறைந்துபோய் சிலரே எஞ்சியிருந்த நிலையில், ஒரே ஆவணமான குரானை முகம்மதின் மனைவி என்றாலும்கூட தன்மகளிடம் கொடுக்கும் தேவை என்ன? என்பதுதான் கேள்வி.

 

இப்படி குரானை உஸ்மானுக்கு முன் உஸ்மானுக்கு பின் என்று பிரித்து குரானின் பாதுகாப்பில் கேள்வி எழுப்புவதன் காரணம் என்ன? குரான் வசனம் 31:27

 

“பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதிமுடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்”

 

என்கிறது. இதே பொருளில் இன்னொரு வசனமும் 18:109 இருக்கிறது. இந்த வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? எழுதுவதற்கு தாள் பயன்படுகிறது அது மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது அதில் திரவமான மை கொண்டு எழுதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால் முகம்மதின் காலத்தில் எழுதுவதற்கு தாளும் மையும் பயன்படுத்தப்படவில்லை. முகம்மது குரானை எழுதிவைப்பதற்கு அமைத்த குழு பேரீத்த மரப்பட்டைகளிலும், தோல்களிலும் தான் எழுதியதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதே காலத்தில் வந்த வசனமோ மரங்களை எழுதுகோல்களாகவும் கடல்களை மையாகவும் பயன்படுத்தச்சொல்கிறது. இது முகம்மது சொன்ன வசனமா? இல்லை அவர் காலத்திற்குப்பின்னர் வந்தவர்களால் சேர்க்கப்பட்ட வசனமா? இந்த ஐயத்தை எப்படிபோக்கிக்கொள்வது? அல்லா அனைத்தும் அறிந்தவன் முக்காலமும் உணர்ந்தவன், எல்லாம் தெரிந்த அவனுக்கு பின்னர் தாளும் மையும் வரவிருப்பது தெரியாமலா போயிருக்கும் என சிலர் நினைக்கலாம். ஆனால் தாளும் மையும் தேவையில்லாமலேயே கணிணியில் எவ்வளவு அளவிலும் எழுதிவிட முடியும் எனும் இன்றைய நிலை அந்த எல்லாம் அறிந்த அல்லாவுக்கு தெரியவில்லையல்லவா? இன்றைய முன்னேற்றங்கள் தெரியவில்லை அதனால் அதை குறிப்பிடவில்லை ஆனால் அன்றைய காலத்திற்கு சற்றைக்கு பின்னான முன்னேற்றங்கள் தெரியும் அதனால் அதை குறிப்பிட்டுள்ளான் என்பது முரணில்லையா? இஸ்லாமியர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? ஒன்று அல்லாவுக்கு எதிர்காலம் முழுமையாக தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும் அல்லது குறிப்பிட்ட அந்த வசனம் முகம்மதின் காலத்திற்குப்பின் குரானில் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும். இந்த இரண்டில் எதை ஏற்பார்கள்? எதை மறுப்பார்கள்?

 

 

முஸ்லீம்கள் தங்கள் வேதமான குரானுக்கு அடுத்தபடியாக மதிப்பது ஹதீஸ் நூல்களைத்தான். ஹதீஸ் என்பது முகம்மதுவின் வாழ்வில் அவர் செய்ததும் சொல்லியதுமான தொகுப்பு. இந்த ஹதீஸ் நூல்களில் முதலிரண்டு இடங்களில் இருப்பது ஸஹீஹுல் புகாரி என்பதும், ஸ‌ஹீஹ் முஸ்லீம் என்பதும். இதில் ஸஹீஹ் முஸ்லீமில் 3421ஆவது ஹதீஸ்

 

“ஆயிஷா அவர்கள் கூறியதாவது: பத்துமுறை பால் கொடுத்துவிட்டால் திருமணம் நிச்சயமற்றதாகிவிடும் என்று குரானில் இருந்தது பின்னர் இது ரத்து செய்யப்பட்டு ஐந்து தடவையாக குறைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது”

 

என்று இருக்கிறது. அதாவது கணவன் மனைவிக்கிடையான உறவில் மனைவியிடமிருந்து கணவன் குறிப்பிட்ட முறைகளுக்கும் அதிகமாக பாலருந்திவிட்டால் மனைவியானவள் கண‌வனின் தாயைப்போன்றவளாகிவிடுவாள் எனும் பொருள்படும்வசனம் முகம்மது இறக்கும் வரையிலும் குரானில் இடம் பெற்றிருந்தது என்று முகம்மதின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா கூறுவதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ். இது இட்டுக்கட்டிய ஹதீஸ் என்றோ, பொய்யானது என்றோ ஏற்றுக்கொள்ளப்படாதது என்றோ கூறிவிட முடியாது. ஏனென்றால் இது இடம்பெற்றிருப்பது ஸ‌ஹீஹ் முஸ்லீமில். (ஹதீஸில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டாதது என்று இரண்டு வகை உண்டு. இவை பற்றி பின்னர் பார்க்கலாம்) முகம்மதுவுக்கு மிகவும் விருப்பமான மனைவியாகிய ஆயிஷா அவர்களால் சுட்டப்படும் இந்த வசனம் தற்போதைய குரானில் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்று கூறவேண்டிய கடமை முஸ்லீம்களுக்கு இருக்கிறது. இல்லை தற்போதைய குரானில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை. அது எப்போது காணாமல் போனது? எப்படி இல்லாமல் போனது? நீக்கியது யார்? எந்த அடிப்படையில் நீக்கப்பட்டது? எல்லாம் அறிந்த அல்லாவால் அருளப்பட்டு கடைசி மனிதன் வரை நிலைத்திருக்கக்கூடிய குரானின் வசனங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருந்தது?

 

குரானை எழுதுவதற்கென்றே முகம்மது ஏற்படுத்திய குழு எழுதிய குரானை அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பதில்லை, அந்த எழுத்து முக்கியமானதல்ல அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுதான் முக்கியமானது. அந்த குரானுக்கும் தற்போதைய குரானுக்கும் எந்தவித்தியாசமும் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கும் முஸ்லீம்கள், ஆய்ஷாவின் அந்த வரிகளை கவனித்துப்பார்க்கவேண்டும். “அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது” முகம்மது இறந்தபிறகு குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூற முன்வந்த முகம்மதின் மனைவி யாரால் எப்போது மாற்றப்பட்டது என கூற முன்வரவில்லை. அதன் காரணம் என்னவாக இருந்தாலும் குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியமானது

59 thoughts on “குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

 1. //முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை//
  உங்கள் கட்டுரையின் ஆரம்பமே பொய்யோடே ஆரம்பிக்கிறது. முகம்மது முன்னின்று குர்ஆனைத் தொகுக்கவில்லை. உங்கள் கட்டுரையில் நிறைய பொய்கள் இருக்கின்றன. அவற்றை நான் இங்கு கட்டுடைத்தால், டவுசரைக் கழற்றித் தந்துவிட்டு நீங்கள் தெருத்தெருவாய் ஓட வேண்டி ஏற்படும். நானொரு அடிப்படை வாதியுமல்ல.

 2. மதங்களின் ஒப்பீடு என்பது எல்லாருக்கும் வராது தோழா. நிலா நிலா ஓடிவா. நில்லாமல் ஓடிவா பாடல் தெரியுமா?

 3. இந்த செங்கொடி எழுதிய முன்னைய உளறல் கட்டுரைகளை பார்க்கும்போது, எல்லாமே யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது.

  இந்த கட்டுரை நகைப்புக்கு உள்பட்டது. இது உளறலின் உச்சம்.

  ம்ஹ்ம் இது தேறாது!

 4. அன்பின் தோழரே உங்கள் வாதம் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.எல்லாம் அறிந்த அல்லாஹ்வுக்கு கணனியின் வரவு தெரியாமல் இருக்கும் என்றெல்லாம் கதை அளந்து இருக்கிறீர்கள்.உங்கள் வாதம் அப்பட்டமான பொய்.
  முஸ்லிம்கள் தாம் வாழ் நாளில் செய்யும் நன்மை -தீமை அல்லாஹ்வினால் பதிவு செய்யப்பருகிறது.நன்மை வலது கரப்பக்கத்திலும் தீமை இடது கரப்பக்கத்திலும் பதிவு செய்வதாக அல்லாஹ் சொல்கிறான்.தோழரே..இது உங்கள் கண்ணுக்குத்தெரிகிறதா?எங்கே எப்படி பதிவு செய்யப்படுகிறது என்று?
  உதாரணத்திற்கு ஒரு மனிதன் 40 ஆண்டுகள் வாழ்வதாயின் எவ்வளவு பதியப்பட்டிருக்கும்.அதைக் காகிதத்தில் பதிந்தால் எவ்வளவு வரும் அதுவும் பாதுகாப்பாக வைக்க முடியுமா?
  கிறுக்குத்தனமாக பேசும் தோழரே இன்று தான் மனிதன் இணையத்தளங்களை ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் எழுதுகிறான்.
  ஆனால் அல்லாஹ் எப்போதோ இதை சொல்லிவிட்டான்..குரானில் பல இடங்களில் சிந்திக்கும் மனிதர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளதை நீர் பார்க்கவில்லையா?

 5. //
  Ramzy, மேல் அக்டோபர் 30th, 2009 இல் 12:04 காலை சொன்னார்:
  //முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை//
  உங்கள் கட்டுரையின் ஆரம்பமே பொய்யோடே ஆரம்பிக்கிறது. முகம்மது முன்னின்று குர்ஆனைத் தொகுக்கவில்லை. உங்கள் கட்டுரையில் நிறைய பொய்கள் இருக்கின்றன. அவற்றை நான் இங்கு கட்டுடைத்தால், டவுசரைக் கழற்றித் தந்துவிட்டு நீங்கள் தெருத்தெருவாய் ஓட வேண்டி ஏற்படும். நானொரு அடிப்படை வாதியுமல்ல.
  Ramzy, மேல் அக்டோபர் 30th, 2009 இல்
  //

  அப்படியானால், அதை தொகுத்தது யார்??? இறைவனால் அருளப்பட்டது/மொழியப்பட்டது என்று தான் பலரும் நம்புவதாக (அர்த்தம்: நான் நம்புவதில்லை) நான் கேள்விப்பட்டிருக்கிறேன்….

  முகம்மது முன் நின்று நடத்தவில்லை எனில், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறதே! அதைத் தான் நீங்கள் சொல்ல வருகிறீர்களா??

 6. //
  goraka, மேல் அக்டோபர் 30th, 2009 இல் 12:49 காலை சொன்னார்:
  இந்த செங்கொடி எழுதிய முன்னைய உளறல் கட்டுரைகளை பார்க்கும்போது, எல்லாமே யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது.
  இந்த கட்டுரை நகைப்புக்கு உள்பட்டது. இது உளறலின் உச்சம்.
  ம்ஹ்ம் இது தேறாது!
  //

  சரியா தவறோ செங்கொடி கேள்வி கேட்டிருக்கிறார்….குரானின் முரண்பாடுகள் என்று அவர் நினைப்பதை சொல்லியிருக்கிறார்….

  முடிந்தால் நீங்கள் அதற்கு பதில் சொல்லலாம்…வெறுமனே உளறல், இது தேறாது, நகைப்புக்கு உட்பட்டது என்று வெத்துவேட்டாக சொல்வது உளறுவது யார் என்று காட்டுகிறது :0(

 7. //
  mohamed, மேல் அக்டோபர் 30th, 2009 இல் 1:01 காலை சொன்னார்:
  அன்பின் தோழரே உங்கள் வாதம் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.எல்லாம் அறிந்த அல்லாஹ்வுக்கு கணனியின் வரவு தெரியாமல் இருக்கும் என்றெல்லாம் கதை அளந்து இருக்கிறீர்கள்.
  //

  அப்படியானால், குரானில் கம்ப்யூட்டர் பற்றியும், மைக்ரோ ப்ராஸஸர் பற்றியும், ஜாவா பற்றியும், சூப்பர் கம்ப்யூட்டர்கள், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா???

  எல்லாம் தெரிந்தது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குங்கள்….செங்கொடியின் கேள்விக்கு அது மட்டுமே பதிலாக அமையும்….

  //
  முஸ்லிம்கள் தாம் வாழ் நாளில் செய்யும் நன்மை -தீமை அல்லாஹ்வினால் பதிவு செய்யப்பருகிறது.நன்மை வலது கரப்பக்கத்திலும் தீமை இடது கரப்பக்கத்திலும் பதிவு செய்வதாக அல்லாஹ் சொல்கிறான்.தோழரே..இது உங்கள் கண்ணுக்குத்தெரிகிறதா?எங்கே எப்படி பதிவு செய்யப்படுகிறது என்று?
  //

  அது தெரிகிறது….வலது பக்கம் பழைய ஏடு….இடது பக்கம் சூப்பர் கம்ப்யூட்டர் என்று இதை புரிந்து கொள்ள வேண்டுமா??

  இந்த இடது வலது கதை எல்லா மதங்களிலும் உண்டு…வலது கை லட்சுமி, இடது கை மூதேவி என்ற கதை இந்து மதத்திலும் கூட உண்டு….இதற்கும் செங்கொடியின் கேள்விக்கும் என்ன சம்பந்தம்??

  //
  உதாரணத்திற்கு ஒரு மனிதன் 40 ஆண்டுகள் வாழ்வதாயின் எவ்வளவு பதியப்பட்டிருக்கும்.அதைக் காகிதத்தில் பதிந்தால் எவ்வளவு வரும் அதுவும் பாதுகாப்பாக வைக்க முடியுமா?
  //

  இதை கம்ப்யூட்டர் என்று புரிந்து கொள்ள வேண்டுமா?? இதில் பாதுகாப்பு வேறு….ஆக, ஆண்டவன் எழுதியதற்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது???

  //
  இணையத்தளங்களை ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் எழுதுகிறான்.
  ஆனால் அல்லாஹ் எப்போதோ இதை சொல்லிவிட்டான்..குரானில் பல இடங்களில் சிந்திக்கும் மனிதர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளதை நீர் பார்க்கவில்லையா?
  //

  இதை உறுதியான ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?? எல்லா மதங்களிலும் தான் இப்படி கதைகள் இருக்கிறது…உதாரணம் மஹாபாரதத்தில் வரும் ப்ரம்மாஸ்திரம்…அதை ந்யூக்ளியர் பாம் என்று சொல்லி பின்பக்கம் புண்ணானவர்கள் அதிகம்…..கதைகளின் மூல பலமே அதை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்/திரிக்கலாம் என்பது தான்….

  ஆனாலும்…செங்கொடி கேட்கும் கேள்விக்கு நீங்கள் இன்னமும் பதில் சொல்லவில்லை…..

 8. @அதுசரி
  நிறமூர்த்தத்தில் (Chromosome) தகவல் சேமித்த இறைவனுக்கு ஜாவா, மைக்ரோ புரோஸசர் எல்லாம் ஒரு மேட்டரா? ஒரே கோணத்தில் நின்று கொண்டு சிந்திப்பது வேறு. எந்தக் கொள்கையையும் சாராது வெளியே நின்று எல்லாவற்றையும் ஒப்பிட்டு ஆய்ந்தறிதல் என்பது வேறு. நீங்கள், செங்கொடி போன்றவர்கள் முதலாம் ரகம்.

  நபித்தோழர் அபூபக்கர் கலீபாவாக இருந்த காலத்தில் உமரின் ஆலோசனைக்கிணங்க ஸைத் இப்னு தாபித் என்பவரின் தலைமையின் கீழ்தான் தொகுக்கப்பட்டது. அப்போது முகம்மது நபியவர்கள் உயிருடன் இருக்கவில்லை.

  குர்ஆன் தொகுக்கப்பட்ட காலத்தில் அதனை முறையாக மனனமிட்ட நிறைய நபித்தோழர்கள் இருந்தார்கள். தவிரவும் அல்குர்ஆன் வசனங்கள் அருளப்படுகிற போது அவை ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டும் இருந்தது. நபியவர்கள் மூன்றாவது தடவையாக தேவதூதரிடம் அல்குர்ஆனை முழுவதையும் ஓதிக்காட்டிய போது கூட ஸைத் இப்னு தாபித் அவர்களும் நின்று தனது மனனத்தை சரிபார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதன்பிறகு எந்த பின்னூட்டமும் இங்கு நான் இடப்போவதில்லை. உங்களுக்குப் பாடம் சொல்லித் தரவேண்டுமானால் வருகிறேன். நீங்கள் இது சம்பந்தமாக முதலில் நிறைய வாசிக்க வேண்டிக்கிடக்கிறது. செங்கொடி நீங்களும்தான்.

  அதுதான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் மதஒப்பீடு என்பது எல்லாருக்கும் வராது. நிலா நிலா ஓடிவா பாட்டுத்தெரியுமா? அபிநயத்துடன் பாடிக்காட்டுங்கள். பாட்டி மிட்டாய் வாங்கித் தருவார்.

 9. திரு.செங்கொடி/அதுசரி(எதுசரி) வகையறாகளுக்கு,
  குரான்-ஐ திரும்ப ஒரு முறை(மிக) கவனமாக படிக்கவும்.
  ஏனென்றால் அதில் சிந்திக்கும் மக்களுக்கு நிறைய சான்றுகள் இருக்கிறது.
  http://www.tamililquran.com/suraindex.asp

 10. தோழரின் முந்தைய கட்டுரைகளில் விட இக்கட்டுரைக்கான பின்னூட்டங்களில் அதிகமான கொசிப்புகள் காணப்படுகின்றன. இங்கு பின்னூட்டமிடும் இஸ்லாமிய நண்பர்கள் கட்டுரையாளரின் கேள்விக்கு நேரடியான பதிலை கூறாமல் விவாதத்திற்கு அப்பாற்பட்டு “உளறுகிறார்,தேறாது,கிறுக்குத்தனம்” என தங்களது ஆற்றாமையையே வெளிப்படுத்துகின்றனர்.
  இஸ்லாமிய நண்பர்களே குரான் அனைத்து பிர‌ச்சினகளுக்கும் தீர்வைச் சொல்லும் இறைவேதம் என்றால்,அதன்மூலம் செங்கொடியாரின் கிறுக்கல்களை ஆதாரத்துடன் விமர்சிக்கலாமே! உங்கள் பின்னூட்டமெல்லாம் ஏன் நழுவலாக உள்ள‌து?

 11. Dear Sengodi,
  Please read Quraan more times and then write your comments in the blog. Before commenting anythinge please make sure that you have the suffiecient knowledge to comment.

 12. முகம்மது நபியின் காலத்தில் எழுதுவதற்கு தாளும் மையும் பயன்படுத்தப்படவில்லை என்னும் கூற்று பிழையானதாகும். ஏனென்றால் பப்பிரஸில் மை கொண்டு எழுதுவது கி.மு. 800ம் ஆண்டுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டுவிட்டது.

 13. ஹலோ அதுசரி,

  இவரின் கட்டுரைகள் இஸ்லாத்தின்மேல் காழ்ப்புணர்ச்சிகொண்டுதான் எழுதப்படுகிறது. இஸ்லாத்தை அறிந்தவர்கள் இந்த உளறல்களைப் பார்க்கும்போதே விளங்கிவிடும், இது தேறாதென்று!

  இவரின் உண்மைக்குப் புறம்பான திரிபுகள், ஏலவே நாம் இஸ்லாமிய எதிர்ப்புக் காய்ச்சலை அள்ளி வீசும் ஆங்கில ஊடகங்களில் பார்த்ததுதான்!

  இப்படிப்பட்ட ஆங்கில ஊடகங்கள் இப்பொழுது சிறிது சிறிதாக மங்கிக்கொண்டிருக்கிறது.

  பலர் திருந்திவிட்டார்கள், இறைவேதத்தை தூய வடிவில் பயின்று!

  தமிழ் கூறும் நல்லுலகம், இவரின் கிறுக்கல்கள் நகைப்புக்கிடமானது என்று காண விரும்பின், நேரடி விவாதம் பயனுள்ளதாக அமையும்!

 14. நண்பர் ரம்ஸி,

  முகம்மது முன்னின்று குரானை தொகுத்தது பொய்யில்லை. அபான் பின் ஸ்யீத், காலித் பின் வலீத், ஸைத் பின் ஸாபித், ஸாபித் பின் கைஸ் இவர்களுடன் முதல் ஐந்து கலீபாக்களும் முகம்மது குரானை எழுத ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவர்கள். முதலில் நீங்கள் குரானின் வரலாற்றை விரிவாக தெரிந்துகொள்ள முயலுங்கள், பின்னர் என்னுடைய நிர்வாணம் குறித்து ஆலோசிக்கலாம்.

  நண்பர் முகம்மது,

  பழைய இலக்கியங்கள், புராணங்களில் அறிவியல் கூறுகள் அவ்வப்போது தலைகாட்டியிருக்கின்றன. அவைகள் இயற்றியவர்களின் கற்பனைத்திறனுக்கான சான்றுகளே தவிர அறிவியல் ஆதாரங்களல்ல. கம்ப்யூட்டர் குறித்த கேள்விகள் எந்த இடத்தில் வருகின்றன எனப்பாருங்கள், அதற்கு உங்கள் பதிலென்ன?

  நண்பர் தமிழன்,

  அச்சுக்கலை கிமுவிலேயே தொடங்கிவிட்டது, அதனுடன் மையும். ஆனால் இங்கு ஆளப்பட்டிருக்கும் சொற்களை கவனியுங்கள். எழுதுகோல் எனும் சொல் தாளில் மையை தொட்டு எழுதும் முறைக்கு பிறகே வந்தது. அதற்கு முன்னரெல்லாம், அச்சுக்கள் தாம், எழுதுகருவிகளல்ல. அவ்வளவு ஏன்? முகம்மதின் குரான் மரப்பட்டைகளிலும் தோல்களிலும், விலங்குகளின் பெரிய எலும்புகளிலும்தான் எழுதப்பட்டன. இதற்கு உங்கள் பதிலென்ன?

  நண்பர் கொரகா,

  பலமுறை நீங்கள் நான் காழ்ப்புடன் எழுதுவதாக குற்றம்சாட்டியிருக்கிறீர்கள். இஸ்லாத்திற்கு எதிராக எழுதிவிட்டால் அது காழ்ப்பாகிவிடுமா? உங்கள் கூற்றை நிருவ முடியுமா உங்களால்? நான் கோருவதெல்லாம் பரிசீலனையை தான். உங்கள் மத நம்பிக்கையை பரிசீலியுங்கள் என்பதைதான். இங்கு வைக்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறுவதன் மூலம் உங்கள் மதம் சரியானது என நிரூபிக்கலாமே. மாறாக பொருளற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே வீசிக்கொண்டிருந்தால் அதற்கு தமிழில் வேறு பெய‌ருண்டு.

  தோழமையுடன்
  செங்கொடி

 15. ஹலோ செங்கொடி,

  நீர் காழ்ப்புணர்வுடன்தான் எழுதுகிறீர் என்பது, உமது கிறுக்களின்மூலம் அப்பட்டமான தெளிவு.

  அதை நிரூபிக்கமுடியும், நான் சொன்னதுபோல் உம்மை மேடையில் நேருக்கு நேர் சந்தித்து, உமது பொய்யுரைகளை அவிழ்க்கும்போது!

  ஆங்கு, நீர் வீசிய பொருளற்ற குற்றச்சாட்டுக்களைத்தான் அம்பலமாக்குவோம், நீர் நேரடி விவாதத்திற்கு சம்மதித்தால்!

  இஸ்லாத்தைப் பற்றிய கோணலான பார்வையைக்கொண்ட உமதின் வினாக்களுக்கான விடைகள், ஏலவே அடிக்கடி இஸ்லாமிய இணையத்தளங்களில் வெளிவந்தவைதான்! உமது பார்வையை ஆங்கு செலுத்தின், பயனடைவாய்!

  மற்றவர்களின் மத நம்பிக்கைகளை பரிசீலிக்கச் சொல்லும் உமக்கு, நீர் கிறுக்கிய இஸ்லாத்திற்கு எதிரான பொய்மொழிகளை பரிசீலித்துப் பாரும்! அப்படி சக்தி பெறாவிட்டால், நேரடி விவாத மேடைகளிலாவது பங்குபற்றும்!

  தான் எழுதிக் கொட்டும் பொய்மைகள் ஒரு போதும் பொசுங்காது என்று கனவு கண்டால், நீர் சராசரி மட்டமானவர் என்றும் பரிதாவத்திற்கு உரியவர் என்றும்தான் யாருக்கும் எண்ண இடமளிக்கும்!

  அண்மையில், பகுத்தறிவாளர்கள் சிலர் நேரடி விவாதத்தில் தைரியத்துடன் எம்முடன் ஈடுபட்டனர், சினேகபூர்வமாக!

  அவர்களுக்குள்ள தைரியம்கூட, உமக்கு இல்லையா?

 16. செங்கொடி…
  கீழே தந்திருக்கும் லிங்கைக் கிளிக் செய்து அந்த வீடியோவை ஒரு முறை ஆழமாகப் பாருங்கள். மூடநம்பிக்கைகளையும் யாரோ கதாசிரியர் எழுதிய பழங்கதைகளையும் வேதமாக நம்புகின்ற நீங்கள் போன்றவர்கள் விஞ்ஞான, கணித ரீதியாக நிரூபிக்கப்பட்ட இதை நம்பித்தான் ஆகவேண்டும். காட்சியின் கடைசி நேரங்களில் சொல்லப்படுகின்ற வசனங்களை கருத்தூன்றிக் கேளுங்கள்.

  http://www.youtube.com/watch?v=Zuc3RvpBIEE&feature=player_embedded#

 17. அன்பின் செங்கொடி,

  தங்களின் கட்டுரைகளை கடந்த ஒரு மாதகாலமாக வாசித்து வருகிறேன், அருமையிலும் அருமை. அணுகுவதற்கே அஞ்சுகின்ற உண்மைகளை தெளிவாக வெளிக்கொண்டு வருகிறீர்கள்.. ….
  தொடர்ந்து கலக்குங்கள் ……. வாழ்த்துக்கள்

 18. செங்கொடி…
  கீழே தந்திருக்கும் லிங்கைக் கிளிக் செய்து அந்த வீடியோவை ஒரு முறை ஆழமாகப் பாருங்கள். மூடநம்பிக்கைகளையும் யாரோ கதாசிரியர் எழுதிய பழங்கதைகளையும் வேதமாக நம்புகின்ற நீங்கள் போன்றவர்கள் விஞ்ஞான, கணித ரீதியாக நிரூபிக்கப்பட்ட இதை நம்பித்தான் ஆகவேண்டும். காட்சியின் கடைசி நேரங்களில் சொல்லப்படுகின்ற வசனங்களை கருத்தூன்றிக் கேளுங்கள்.

 19. செங்கொடி,
  உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நான் ஒரு மருத்துவன். மருத்துவ படிப்பு படிக்கும்போதுதான் குரான் ஒரு பொய்ப்புத்தகம் என்று தோன்றியது. மேலும் படிக்க படிக்க வலுவடைந்தது. அதில் கூறப்பட்டுள்ள அனைத்துமே தவறானவை.

  உதாரணமாக ‘அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்’. (அல்குர்ஆன் 26:07)

  என்று கூறுகிறது. இது போன்ற ஒரு கருத்து பத்தாம் நூற்றாண்டில் இருந்திருக்கலாம். ஆனால் மைக்ரோ ஆர்கனிஸம் என்ற நுண்ணியிரிகள் கண்டுபிடிக்கப்பட்டபின் இது எவ்வளவு பெரிய பொய்மை என்று மனிதர்கள் அறிந்தார்கள். உலகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் உயிரினங்கள் பாக்டீரியா காளான் போன்றவை. இப்படிப்பட்ட ஓருசெல் உயிரினங்கள் அனைத்துமே ஆண் பெண் என்ற பாகுபாடு அற்றவை. இவற்றில் ஜோடி என்பதே கிடையாது. இது படிக்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது என்பது என்னவோ உண்மை. ஆனால் இது போல ஏராளமான பழங்கால விஷயங்கள் கொண்ட புத்தகமே குரான்.

  இங்கே ஒரு நபர் அல்லாஹ் என்பது முகம்மதின் ஸ்பிலிட் பர்சனாலிட்டி என்று பின்னூட்டமாக எழுதியிருந்தார்.. அது மிகச்சரியான வார்த்தை.

  கடவுள் இருக்கலாம். ஆனால் அது அல்லாஹ் அல்ல. அல்லாஹ் என்பது முகம்மதின் கற்பனை. அந்த கற்பனையை நம்புபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களிடம் அந்த கற்பனையை எடுத்துச்சொல்லி அதிலிருந்து மீட்கும் நல்ல வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.

  உங்களுக்கு என் ஆதரவை தெரிவித்துகொள்கிறேன்.

  இங்கே எதிர்கருத்து சொல்பவர்களை வன்முறை வார்த்தைகள் மூலம் பயமுறுத்துகிறார்கள். தங்களது நிலைப்பாடு ஆட்டம் காணும்போது இப்படிப்பட்ட வன்முறை நிலைப்பாடு வருவது இப்படிப்பட்ட மனிதர்களுக்கு இயல்பானது. நவீன யுகத்தின் அறிவில் இஸ்லாம் அழிகிறது என்பதை முஸ்லீம்கள் உணர்கிறார்கள். இந்த பயம் அவர்களை வன்முறையை நோக்கி தள்ளுகிறது. அன்புக்குரிய ஒருவர் இறந்துவிட்டார் என்று செய்தி சொன்னவரை அடிக்கப்போகும் ம்னநிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.

  உங்கள் முயற்சிக்கு நன்றி

 20. “””கடவுள் இருக்கலாம். ஆனால் அது அல்லாஹ் அல்ல. அல்லாஹ் என்பது முகம்மதின் கற்பனை. அந்த கற்பனையை நம்புபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களிடம் அந்த கற்பனையை எடுத்துச்சொல்லி அதிலிருந்து மீட்கும் நல்ல வேலையை நீங்கள் செய்கிறீர்கள்””””””
  கடவுளை இறைவன்,சாமி,ஆண்டவன் என்று எப்படி அழைத்தாலும் ஒரே பொருள்தான்.
  ஆங்கிலத்தில் god,ஹிந்தியில் பகவான், உருது மொழியில் குதா,அரபியில் அல்லாஹ்.சிலர் அல்லாஹ் என்பதை இறைவனுடய பெயர் என்று தவறாக நினைத்துகொண்டிருக்கிறார்கள்.
  நண்பர் ரபீக்,(இவருக்கு பெற்றோரிட்ட பெயர் வேறு முஸ்லிம் பெயரை பொய்யாக போட்டு கொண்டு கருத்து சொல்ல வந்திருக்கிறார்.இவர் முஸ்லிம் இல்லை என்பதை “”கடவுள் இருக்கலாம். ஆனால் அது அல்லாஹ் அல்ல””” என்ற இவருடைய மறுமொழியிலேயே நன்றாக தெரிகிறது.)நீங்கள் முஸ்லிம்களின் மேல் அக்கரையுள்ளவனாக இருந்திருந்தால் உங்களுடைய நிஜ பெயரோடு வந்து கருத்து சொல்லியிருக்கலாமல்லவா?பெயரிலேயே பொய்.நீர் எங்களை நல்வழிபடுத்த புறப்பட்டு விட்டீரோ?புரட்சியாளனுக்கு இதுதான் அழகா?

  “””””””ஆனால் மைக்ரோ ஆர்கனிஸம் என்ற நுண்ணியிரிகள் கண்டுபிடிக்கப்பட்டபின் இது எவ்வளவு பெரிய பொய்மை என்று மனிதர்கள் அறிந்தார்கள்.””””””””””

  எனக்கு மைக்ரோ ஆர்கானிஸம் பற்றி ஓரளவு தெரியும் என்பதால் இந்த கேள்வி உங்களிடம் கேட்கிறேன்.
  மைக்ரோ ஆர்கானிஸம் பற்றிய கண்டுபிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து விட்டதா (அ) இன்னும் கண்டுபிடித்துகொண்டிருக்கிறார்களா?
  மைக்ரோ ஆர்கானிஸமில் ஜோடி இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?அப்படியென்றால் -ve organism & +ve organism இருப்பதை நீர் படித்ததில்லையா?

  ஆண் பெண் இருந்தால்தான் ஜோடியென்று ஏற்று கொள்வீரா? அல்லது இனப்பெருக்கம் பண்ணினால்தான் ஏற்றுகொள்வீர் போலும்.நம்முடைய உடலிலுள்ள கைகள்,கால்கள்,காதுகள்,கண்கள்.,,etc இதெல்லாம் இனப்பெருக்கம் கொள்வதில்லை.அப்படியென்றால் இது ஜோடிகள் இல்லையா?

 21. இங்கே முஸ்லிம்களின் பெயரிலேயே குசும்பாக கேள்வியும் கேட்கப்படுகிறது. விடையும் அந்தக் குசும்புகளாலேயே ஒப்புவிக்கப்படுகிறது.

  முஸ்லிம்கள் இங்கு பின்னூட்டம் எழுதுவது மிகவும் அருமை.

  ஏனெனில், பொய்மைகள் புஸ்வாணமாகும் இடத்தில் முஸ்லிம்களுக்கு என்ன வேலை?

 22. //ஏனென்றால் அல்லாவே குரானை பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அறிவித்துக்கொண்டுள்ளான்//

  அல்லாஹ் அறிவித்தபடியே இன்றும் பல கோடிக்கனக்கான மனித மனங்களில் (அல்குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்கள்) அதைவைத்து பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறான். அல்லாஹ் இதனையே அவ்வாறு கூறினான்.

  ஆகவே பாதுகாப்பு பற்றி கேள்வியெழுப்பும் உங்கள் இந்தக் கட்டுரை தேவையற்றதும் பயனற்றதும் ஆகும். பாவம் நீங்கள்; இதை எழுதுவதற்கு எவ்வளவு காலத்தை வீணாக்கினீர்களோ தெரியாது.

  உலகம் அழிகின்றவரை குர்ஆனை அதன் தூயவடிவில் மனித மனங்களில் பாதுகாக்கப்படும். உங்களால் முடியுமானால் அதன் பாதுகாப்பை, அதன் இருப்பை கேள்விக்குறியாக்குங்கள். உங்களால் முடிந்தால் நான் எனது டவுசரைக் கழற்றித் தந்துவட்டு ஓடிவிடுகிறேன்.

  ஹதீஸ் பற்றியும், கடவுள் பற்றியும், இஸ்லாம் பற்றியும், நீங்கள் இன்னும் அதன் அடிப்படையைக் கூட கற்று முடிக்கவில்லை போல் தோன்றுகிறது.

  மனனமிட்டவர் அருகில் இல்லாத போது கேட்டுப்படிக்க ஆள் இல்லையாதலால், எழுதிவைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயப் படுகிறது. புத்தக வடிவில் எழுதிக் கொண்டது மக்களின் இலகுக்காக.

  மீண்டும் சொல்கிறேன் முகம்மது நபியின் மனத்தில் அல்குர்ஆன் எந்த வடிவில் இருந்ததோ அதே வடிவில் சந்ததி சந்ததியாக மனித மனங்களில் (அல்குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்கள்) இன்று வரை கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் அழிகின்றவை வரை நபியின் மனத்தில் இருந்த அந்த வடிவம் அதன் தூய்மை மாறாது காலத்தின் எல்லைவரை மனித மனங்களினூடாக (அல்குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்கள்) கடத்திச் செல்லப்படும்.

  இப்பவாவது விளங்கிடிச்சா நண்பரே…? இல்ல… நான் இன்னும் இறங்கி வரவா?

 23. //ஆயிஷா அவர்கள் கூறியதாவது: பத்துமுறை பால் கொடுத்துவிட்டால் திருமணம் நிச்சயமற்றதாகிவிடும் என்று குரானில் இருந்தது பின்னர் இது ரத்து செய்யப்பட்டு ஐந்து தடவையாக குறைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது//

  ஹதீஸ் என்பது இரண்டாம் பட்சமானது. குர்ஆனுக்கு முரணான கருத்து ஒன்று அதில் இருக்கிறதா? அந்த ஹதீஸ் பொய்யானது.

  இரண்டாம் பட்சமாக இருக்கின்ற ஒன்றை வைத்துக்கொண்டு முதன்மையானதை சரிபிழை காண்பதை வடிகட்டிய முட்டாள் கூட செய்யமாட்டான். குர்ஆனை வைத்துக் கொண்டு ஹதீஸை வேண்டுமானால் சரிபிழை காண்பதை ஏற்றுக் கொள்ளலாம். அடுத்த திசை வடிகட்டிய முட்டாள் தனம்.

 24. இஸ்லாமிய நண்பர்களே,
  உல்கில் மதமில்லாமல் பிறக்கும் குழந்தை இந்துவுக்கு பிறந்தால் இந்து, முஸ்லீமுக்கு பிறந்தால் முஸ்லீம் என்றே வளர்க்கப்படுகிறது. மதக்கோட்பாடுகளுடனும், கப்ரின் வேதனை என்ற பயமுறுத்தல்களுடனும், மறுமையின் நரகநெருப்பு வேதனை என்ற பயமுறுத்துகளுடனும் வளர்க்கப்படுகிற ஒருவன் இவற்றையெல்லாம் மீறி நாத்திகனாவது என்பது போகிறபோக்கில் நடக்கும் ஒரு நிகழ்வல்ல. கடவுள் இல்லை என்ற வார்த்தை சாதாரணமாக உதடுகளிலிருந்து வெளிவருவதில்லை. தான் சார்ந்திருந்த மதத்தின் வேதநூலின் முரண்பாடுகளை தெளிவாக அறிந்த பின்னரே மதத்திலிருந்து விலகுகிறோம். கடவுள் இல்லை என்கிறோம். சிலவற்றை அன்றே குரான் கூறியிருக்கிறது என நீங்கள் புளங்காகிதம் அடையலாம். இதுபோன்ற புளங்காகிதங்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு பொருளாதாரப் பிரச்சினைதான் முதன்மையானது.உலகம் தட்டையா தேனீ குட்டையா என்பது இரண்டாம் பட்சம்தான். குரான் சமத்துவத்தைப் போதிப்பதாக கூறுகிறீர்கள். ஏற்றத்தாழ்வான படைப்பில் எப்படி சமாதனம் இருக்கும் என்று கூறுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. மனிதன் பூமியில் குழப்பங்களை விளைவிப்பான் என்பதிற்கு பிறகு குரான் சமத்துவத்தை போதிக்கிறது என எப்படி கருதுகிறீர்கள்.இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களும் படைப்பில் ஏற்றத்தாழ்வையும் ஏட்டில் அன்பையும் சமத்துவத்தையுமே போதிக்கிறது. இது முரண்பாடில்லை என்கிறீர்களா? நாம் குரானை தெளிவாக அறிந்த பின்னரே விவாதத்திற்குள் நுழைகிறோம். மீண்டும்மீண்டும் தெளிவாக படியுங்கள் என்று தேய்ந்துபோன ரெக்கார்டு போன்று கூறுவது நீங்கள்தான் எதுவும் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. (ஆஹா குரான் சொல்வது அனைத்தும் உண்மை என்று கூறிவிட்டால் தெளிவாகப் படித்த்டுவிட்டோம் என்றாகிவிடுமோ!} நீங்கள் பற்றிருக்கும் சத்தியத்தில் உங்களுக்கு உறுதியிருந்தால் எங்களின் கிறுக்கத்தனமான எண்னங்களை உடைத்தெரியலாமே. செங்கொடி அவர்கள் எழுதிய கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பாகம் 5 வரையில் நீங்கள் எதையும் உருப்படியாக விவாதிக்கவில்லை.
  மார்க்சின் கிறுக்கல்கள் ஒரு மனிதனால் கிறுக்கப்பட்டது. அது சில தசாப்தங்களுக்குக்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதில் பிரச்சினையில்லை. ஆனால் ஏக இறைவனால் கிறுக்கப்பட்டது மன்னிக்கவும் அருளப்பட்டது எத்தனை நாட்களுக்கு தாக்குப்பிடித்தது? உங்களிடமிருந்து விவாதத்தை எதிர்பார்க்கின்றேன்.

 25. நண்பர் ramzy.
  “பத்துமுறை பால் கொடுத்துவிட்டால் திருமணம் நிச்சயமற்றதாகிவிடும் என்று குரானில் இருந்தது பின்னர் இது ரத்து செய்யப்பட்டு ஐந்து தடவையாக குறைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது”
  மேற்குறிப்பிட்ட வசனம் முகமது இறக்கும் வரையில் குரானில் இருந்து ஓதப்பட்டுள்ளது என்றே ஆயிஷா கூறியுள்ளார். முகமது இறக்கும் வரை இருந்த இவ்வசனம் பின்னர் ஏன் இல்லை என்பதுதான் குற்றச்சாட்டு. எவ்வாறு காணாமல் போனது என்பதை உங்கள் ஆலிம்களிடம் கேட்டு எழுதவும். பயத்தில் உளறவேண்டாம்.

 26. @Siddiq
  நான் ஏற்கனவே கூறிவிட்டேன்….

  ஹதீஸ் என்பது இரண்டாம் பட்சமானது. குர்ஆனுக்கு முரணான கருத்து ஒன்று அதில் இருக்கிறதா? அந்த ஹதீஸ் பொய்யானது.

  இரண்டாம் பட்சமாக இருக்கின்ற ஒன்றை வைத்துக்கொண்டு முதன்மையானதை சரிபிழை காண்பதை வடிகட்டிய முட்டாள் கூட செய்யமாட்டான். குர்ஆனை வைத்துக் கொண்டு ஹதீஸை வேண்டுமானால் சரிபிழை காண்பதை ஏற்றுக் கொள்ளலாம். அடுத்த திசை வடிகட்டிய முட்டாள் தனம்.

 27. @ Ramzy

  நண்பரே!!
  சிறு தவறு!!
  குரானை மேலும் வாசிக்கிற தேவை எமக்கு இருக்கின்றதோ இல்லையோ!!
  மேலும் ஒரு தடவை இப்பந்தியினை வாசிக்கவும்! பின்பு பதில் அளிக்கவும்!!!

  “மேற்குறிப்பிட்ட வசனம் முகமது இறக்கும் வரையில் குரானில் இருந்து ஓதப்பட்டுள்ளது என்றே ஆயிஷா கூறியுள்ளார். முகமது இறக்கும் வரை இருந்த இவ்வசனம் பின்னர் ஏன் இல்லை என்பதுதான் குற்றச்சாட்டு. எவ்வாறு காணாமல் போனது என்பதை உங்கள் ஆலிம்களிடம் கேட்டு எழுதவும். பயத்தில் உளறவேண்டாம்” (siddiq, மேல் நவம்பர் 3rd, 2009 இல் 5:47 மாலை சொன்னார்)

  * இங்கு வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது! முகமது இறக்கும் வரை இருந்த இவ்வசனம் பின்னர் ஏன் இல்லை என்பது ஆகும்! உங்களது அடுத்துவரும் பின்னுடலானது இக்கேள்விக்கு பதில் கூறும் என்று இருக்கும் என எதிர் பார்க்கின்றோம்

 28. @1G
  நண்பரே…
  இதற்கான விடையை நான் மீண்டும் மீண்டும் இரண்டு தடவைகள் சொல்லிவிட்டேன்.

  ஹதீஸ் என்பது இரண்டாம் பட்சமானது. குர்ஆனுக்கு (இஸ்லாத்தின் அடிப்படைக்கு) முரணான கருத்து ஒன்று அதில் இருக்கிறதா? அந்த ஹதீஸ் பொய்யானது.

 29. ரம்ழி சொல்லி புரியாதவர்களுக்கு ஒரு உதாரணம் கூறி என்னால் புரிய வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

  அதாவது, சித்திக், உங்கள் வீட்டிலேயே உங்களுக்கு தெரிந்து பல ஆண்டுகளாய் மாட்டப்பட்டிருக்கும் திருமண போட்டோவை காட்டி அதில் உங்கள் அம்மா பக்கத்தில் மாலையுடன் உள்ள நபர் தான் உங்கள் அப்பா என்று உங்களை பெற்ற தாய் சொல்கிறார். மற்றும் உங்கள் சொந்தபந்தம் அனைவரும் அதையே கூறுகிறார்கள்.

  ஆனால் எங்கோ வேறொரு ஊரில் உள்ள ஒரேஒருவர் மட்டும் யாரோ இன்னொருவரை கைகாட்டி அவர்தான் உங்கள் அப்பா என்கிறார். நீங்கள் யார் சொல்வதை நம்புவீர்கள்? கேட்டால், அம்மாவிடம் வோட்டர் ஐடி கார்டும் பாஸ்போர்ட்டும் இல்லை, ஆனால், நம்பிக்கை கொள்ள ‘அவரிடம்’ அதெல்லாம் உள்ளது என்று செங்கொடி சொல்வதை நீங்கள் வேண்டுமானால் நம்பலாம். நான் உங்கள் அம்மா சொல்வதையே நம்புவேன், சித்திக். நீங்கள் என்னை மடப்பயல், சிந்தனை அற்றவன், மூடநம்பிக்கையாளன் என எப்படி தூற்றினாலும், கிறுக்கன் என்றாலும் சரியே.

 30. சித்தீகின் ந‌ண்பரே,

  நீங்கள் எடுத்துவைப்பது தவறான முன்னுதாரணம். நாகரீகமான சொற்களை பயன்படுத்தியிருந்தாலும் உங்களின் கருத்து நாகரீகமற்றது. என்ன சொல்லவருகிறீர்கள் நீங்கள், அப்பாவை நம்பித்தானே ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் அதுபோல குரானையும் நம்புங்கள் என்றா? உங்கள் வாதப்படியே கொண்டாலும் ஐயம் திரிபற அப்பாவை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவ சோதனைகள் இருக்கின்றன. எந்த சோதனை கொண்டு குரானை ஏற்பது? வெறும் நம்பிக்கைதானா? அதையும் எக்காலத்திலும் பரிசீலனைக்கு உட்படுத்த மாட்டீர்கள் எனும்போது ஏன் அதை மூடநம்பிக்கை என்று கூறக்கூடாது?

  தோழமையுடன்
  செங்கொடி

 31. ////ஐயம் திரிபற அப்பாவை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவ சோதனைகள் இருக்கின்றன/////
  —– செங்கொடி,
  ஆண்டாண்டு காலமாய் தன் பிறப்பை பற்றி சந்தேகம் கொள்ளாத எண்ணற்ற முந்தய தலைமுறை மக்களை கேவலப்படுத்துவது போல உள்ளது, உங்கள் மறுமொழி. எதனையும் எழுதுவதற்கு முன் யோசித்து எழுதுங்கள். உங்களின் கருத்து நாகரீகமற்றது.

 32. அய்யா,
  எனக்கொரு சந்தேகம் இப்படி குர்ரானைப்பற்றி விமர்சனம் செய்தால் ஏன் பொத்துக்கொண்டு பலருக்கும் கோபம் வருகிறது.தவறாயிருந்தால் திருத்துங்கள் உண்மையை ஏற்றுக்கொள்வது தான் பகுத்தறிவு. பகுத்தறிவிற்கு கட்டுப்படாதது எல்லாம் காட்டுமிராண்டித்தனமே. கணினியைப்படைத்தது கடவுளுக்கு தெரியுமெனில் உலகில் நடப்பது யாவும் அல்லாஹ்ந் கருணையெனில் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முசுலீம் மக்களை கொன்றொழித்தது பார்ப்பன கைங்கர்யம் அதை தடுக்க அல்லாஹ் ஏன் வரவில்லை. அதற்கு மட்டுமல்ல எதற்கும் அல்லாஹ் மட்டுமல்ல யேசுவோ இந்து பொந்து மத சமிகள் யாரும் வரமாட்டார்கள். மக்கள் வாழ்வதே கூட தானாய் உழைத்துத்தானே தவிர யாரும் ஸ்பெசலாய் படியளக்கவில்லை. என்னவோ சாமியை திட்டினால் இப்படி பொத்துக்கொண்டு வரும் கோபம் சுரண்டுபவர்களை தண்டிக்காத கடவுள் மேல் வருவதில்லை. சுயமரியாதை காவு கேட்கிறதோ மதம் , அது தான் போதை மதப்போதை.

  உண்மையை ஏற்க தயாராயிருக்கிறோம் திட்டுவதால் எதையும் யாரும் பெற முடியாது.

  கலகம்

 33. ரம்ஸி அவர்களே,
  தெளிவாக படிக்கவும். குரானில் ஓதப்பட்ட ஒரு வசனம் முகமதின் இறப்பிற்கு பிறகு இல்லை என்பதினால் அக்குறிப்பிட்ட வசனம் நபி அவர்களால் ஓதப்பட்டு வந்தமையை ஆயிஷா அவர்கள் குறிப்பிடுகிறார். ஆயிஷா அவர்களின் கூற்றை இரண்டாம்பட்சமான ஹதீஸில்தானே ப்தியமுடியும். அவ்வசனம் குரானில் இருந்திருக்காதென்றால் ஆயிஷா பொய்யுரைக்கிறார் என்றுதான் கருதவேண்டும்.

  “ரம்ழி சொல்லி புரியாதவர்களுக்கு ஒரு உதாரணம் கூறி என்னால் புரிய வைக்க முடியும் என்று நம்புகிறேன்”
  (சித்தீக்)நண்பா, ரம்ஸியே தேவலாம். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று ஒன்றும் புரியவில்லை. ஒன்று மட்டும் புரிகிறது,நீங்கள் எப்படிபட்டவர் என.அதையும் நீங்களே எழுதியதிக்கொண்டமைக்கு நன்றி.

 34. @siddiq
  //தெளிவாக படிக்கவும். குரானில் ஓதப்பட்ட ஒரு வசனம் முகமதின் இறப்பிற்கு பிறகு இல்லை என்பதினால் அக்குறிப்பிட்ட வசனம் நபி அவர்களால் ஓதப்பட்டு வந்தமையை ஆயிஷா அவர்கள் குறிப்பிடுகிறார். ஆயிஷா அவர்களின் கூற்றை இரண்டாம்பட்சமான ஹதீஸில்தானே ப்தியமுடியும். அவ்வசனம் குரானில் இருந்திருக்காதென்றால் ஆயிஷா பொய்யுரைக்கிறார் என்றுதான் கருதவேண்டும்.//

  இதற்கும் அதே விடைதான்.
  ஹதீஸ் என்பது இரண்டாம் பட்சமானது. குர்ஆனுக்கு (இஸ்லாத்தின் அடிப்படைக்கு) முரணான கருத்து ஒன்று அதில் இருக்கிறதா? அந்த ஹதீஸ் பொய்யானது.

  இன்னும் புரியவில்லையா? ஹதீஸ் என்றால் என்ன? குர்ஆன் என்றால் என்ன? என்று முதலில் படியுங்கள். ஆயிஷாவும் பொய்யுரைக்கவில்லை. குர்ஆனும் மாற்றப்படவில்லை. ஆயிஷா கூறியதாகக் கூறும் அந்த ஹதீஸ் பொய்யானது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
  இவ்வாறான ஆயிரக் கணக்கான் ஹதீஸ்களை ஆயிஷா கூறியதாக குர்ஆனின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதற்காக நாமும் கூறலாம்.
  நீங்கள் இஸ்லாம் படிக்க வேண்டுமானால் யாரையாவது நாடிச்சென்று கற்றுக்கொள்ளுங்கள். செங்கொடி எழுதிய இத்தூண்டு கட்டுரை முழு இஸ்லாமாகாது. ஐந்து சகோதரர்களுடன் சமகாலத்தில் புணர்ந்த தாசியை எல்லாம் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் பற்றி விளக்கம் கூற அருகதையில்லை. அவர்கள் இஸ்லாம் பற்றி படிப்பதோடு நிறுத்திக் கொள்ளட்டும்.
  இங்கு ஆயிரம் பேர் சேர்ந்தாலும், முழு இஸ்லாத்தையும் ஒழுங்காகக் கூறிவிடவும் முடியாது.
  ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இஸ்லாத்தின் எந்தக் கூற்றும் எச்சந்தர்ப்பந்திலும் ஒன்றுக்கொன்று முரணாவதில்லை.

 35. @செங்கொடி…

  தாள், மை, எழுத்து பற்றியெல்லாம் எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு இஸ்லாத்தின் வரலாறு மட்டுமல்ல சாதாரண நடைமுறை உலகம் பற்றியாவது தெரியாது என்பது இதிலிருந்து விளங்குகிறது.நபியவர்கள் தங்களின் காலத்தின் பல மன்னர்களுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார்கள். அவை தாளில் மைகொண்டுதான் எழுதப்பட்டது. அதன் பிரதிகளில் சில இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. உதாரணமாக இதைப் பாருங்கள்.
  http://www.youtube.com/watch?v=JB5R1a4bSUM
  தாள், மை பற்றிய உங்கள் சந்தேகத்திலிருந்து ஒன்றை மட்டும் என்னால் ஊகிக்க முடிகிறது. நீங்கள் கற்பவருமில்லை, எதனையும் ஆழமாக ஆராய்வதுமில்லை. எங்கேயோ காதில் விழுந்ததை வைத்துக்கொண்டு உங்கள் பாட்டில் எண்ணிய படியெல்லாம் உளறித்தள்ளியிருக்கிறீர்கள். முதலில் படிக்க வேண்டும். கந்தசாமி, கருப்பன்சாமி சொன்னதெல்லாம் கல்வியல்ல.

 36. நண்பர் ரம்ஸி,

  முதலில் உங்களுக்கு நன்றி. நான் உளறுகிறேன் என வெற்றாய் கூறாமல் ஆதாரம் தரவேண்டும் என்பதற்காய் உங்களின் தேடலை தொடங்கியிருப்பதற்கு. ஆனால் இத்தேடலை நிருத்திவிடாமல் தொடர்ந்து உள்வசமாயும் அது விரிவடையவேண்டும் என்பதுதான் என் ஆவல்.

  முகம்மது தன் கடைசி ஆண்டுகளில் சூழவிருந்த பல மன்னர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார், நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் தாளும் பேனாவும் பயன் படுத்தி. ஆனாலும் நான் குறிப்பிட்டது இந்தக்காலகட்டத்தை அல்ல. கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ள வசனம் லுக்மான் அத்தியாயத்தில் 27ஆம் வசனமாக வருகிறது. இது மக்கீ வசனமாகும். அதாவது முகம்மது மக்காவில் இருக்கும் போது உள்ள வசனம். மக்காவில் உள்ளபோது தாளும் எழுதுகருவிகளும் புழக்கத்திற்கு வரவில்லை. முகம்மது குரானை எழுதப்பணித்த எழுத்தாளர்கள் பேரீத்த மரப்பட்டைகளிலும், தோல்களிலும், எலும்புகளிலும் எழுதிவைத்ததாகத்தான் குறிப்புகள் கிடைக்கின்றன. அவ்வளவு ஏன்? தமிழக முஸ்லீம்களில் பெரும்பான்மையோரால் பெரும் அறிஞராக மதிக்கப்படும் பிஜே கூட தன் மொழிபெயர்ப்பில் மரப்பட்டைகளிலும், தோல்களிலும் எழுதிவைத்ததாகத்தான் குறிப்பிடுகிறார். முகம்மது யாத்ரீபுக்கு நாடு கடந்து இஸ்லாமிய அரசை அமைத்து அது பல இடங்களுக்கும் பரவி போர்களெல்லம் புறிந்து ஓரளவு வலிமையான ராணுவமும் அமைந்த பிறகு தான் ஏனைய மன்னர்களுக்கு கடிதங்கள் எழுதுகிறார். இந்தக்கடிதங்கள் தான் தாளும் எழுதுகோல்களும் பயன்படுத்தி எழுதப்பட்டவை. ஆக முகம்மதின் கடைசி ஆண்டுகளில் இவை நிகழ்ந்ததாலும் குறிப்பிட்டவசனம் மக்காவில் இறங்கியதாலும் தான், “முகம்மது குரானை எழுதிவைப்பதற்கு அமைத்த குழு பேரீத்த மரப்பட்டைகளிலும், தோல்களிலும் தான் எழுதியதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதே காலத்தில் வந்த வசனமோ மரங்களை எழுதுகோல்களாகவும் கடல்களை மையாகவும் பயன்படுத்தச்சொல்கிறது” எனக்குறிப்பிட்டுள்ளேன்.

  மீண்டும் உங்களுக்கு நன்றி கூறி உங்களின் தேடலை நிருத்திக்கொள்ளவேண்டாம் என்றும் முன்வைக்கிறேன்.

  தோழமையுடன்
  செங்கொடி

 37. ஒவ்வொரு வசன முடிவிலும் மக்கி மதனி என்று சேர்ந்தே வஹி இறக்கப்பட்டதா? பின்னால் எழுதப்பட்டதா? மக்கா மதினா அல்லாமல் வேறு இடங்களில் குரான் வசனங்கள் இறங்கவில்லையா? அப்படியென்றால் அந்த ஊர்களின் பெயர்களில் ஏன் வசனக்கள் பெயரிடப்படவில்லை? மக்கி மதனி வசனங்கள் என்று பெயரிடப்பட்ட அனைத்தும் சரிதானா? சூரா பகரா முழுதும் மதினாவில்தான் அருளப்பட்டதா? மக்காவில் ஹஜ்ஜத்துவிதாவில் அருளப்பட்ட குரானின் கடைசி வசனம் ஏன் மதனி சூராவில் உள்ளது? குரானின் மூலப்பிரதியில் மக்கி மதனி என்று இப்படி ஏதும் இல்லையே? எல்லாமே உங்களைப்போல அரைவேக்காட்டு மனிதர்களின் வேலை. அதனால், ஏற்கனவே அரைவேக்காடான உங்களை முழு லூசாக்குகிறது.

  இஸ்லாமிய பல்கலைக்கழகில் நீங்கள் இன்னும் எல்கெஜி பாஸ் பண்ணவில்லை. உங்களின் பிரிகெஜி அறிவும் விவாதங்களுக்கு போதாது. இன்னும் நீங்கள் நிரய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படிக்க வேண்டும், செங்கொடி.

  உங்களின் அறிவை சோதிக்க சில பிரிகெஜி வினாக்கள்.

  1- இஸ்லாத்தை தோற்றுவித்தது முகம்மது நபி இல்லை. அதாவது, முதலில் முஸ்லிம் ஆனவர் ஆதி மனிதர் ஆதம். சரியா?

  2- அல்லாஹ் ஆண் பாலும் இல்லை, பெண் பாலும் இல்லை. நாம் சிபிஎஸ்சி & ஸ்டேட் போர்டில் படிக்காத ஒரு பாலினம் : ‘கடவுள்பால்’. சரியா?

  3- அல்லாஹ் எனும் இறைவனுக்கு உருவம் உண்டு. மனிதர்களின் கண்கள் அதனை காணும் சக்தியற்றது. சரியா?

  4- அல்லஹ் பிறக்கவும் இல்லை பிறக்கப்படவும் இல்லை. அல்லாஹுக்கு தூக்கம், களைப்பு, பசி, இயலாமை, மறதி, குழந்தை, மனைவி, குரு …. & இறப்பு கிடையாது. சரியா?

  5- இஸ்லாம் எனும் மார்க்கம், முஹம்மது நபி, அல்லாஹ், குரான் இவையனித்தும் முஸ்லிம்களுக்கு மட்டும் சொல்லப்படவில்லை. சரியா?

  இதில் ஏதாவது தவறு என்பீர்களாயின் தயவு செய்து பிரிகெஜியில் இம்புரூவ்மென்ட் எழுதி தேறி வாருங்கள்.

  கடைசியாக……

  செங்கொடி கையில் குரான் & ஹதீஸ் :-

  “குரங்கு கையில் லேப்டாப் & இன்ஸ்டாலேஷன் டிவிடி”

 38. //ம்முடைய உடலிலுள்ள கைகள்,கால்கள்,காதுகள்,கண்கள்.,,etc இதெல்லாம் இனப்பெருக்கம் கொள்வதில்லை.அப்படியென்றால் இது ஜோடிகள் இல்லையா?//

  ஓ ஓ அதுவும் ஜோடியா?

  இரண்டு கைகள் இருக்கின்றன, இரண்டு கால்கள் இருக்கின்றன.. சரி

  எத்தனை இதயம் இருக்கிறது? எத்தனை கல்லீரல் இருக்கிறது?

  ஒரு இதயம் தான் இருக்கிறது. அதற்கு ஜோடி இல்லையே?

  அல்லாஹ் பெயரில் முகம்மது உளறுகிறார். முகம்மதை விட்டுகொடுக்க முடியாது என்று நினைத்துகொண்டு முஸ்லீம்கள் உளறுகிறார்கள்.

 39. நீங்கள் இஸ்லாத்தை ஆராய்ச்சி செய்கிறீர்களா செங்கொடி அவர்களே…?
  முதலில் சென்று உங்கள் வேத புத்தகங்களை ஆராய்ச்சி செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்…
  சரி.. சரி.. நீங்கள் இஸ்லாமை ஆராய்வதிலே ஆழ்ந்து இருப்பதால் நான் உங்களுக்காகவே சில வசனங்கள் உங்களது வேதங்களில் இருந்தும், பகவத் கீதையில் இருந்தும் எடுத்துக் கூறுகிறேன்…
  நீங்கள் உண்மையான இந்துவாக இருந்தால் உங்கள் கடவுளை நம்பினால், உங்கள் வேதங்களை நம்பினால் இதற்க்கு பதில் கூறுங்கள்…

  “Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures.”
  [Bhagavad Gita 7:20]

  The Gita states that people who are materialistic worship demigods i.e. ‘gods’ besides the True God

 40. உபநிஷ்தத்தை நம்புகிறீர்களா நண்பரே???

  “He is One only without a second.”
  [Chandogya Upanishad 6:2:1]1

  “Of Him there are neither parents nor lord.”
  [Svetasvatara Upanishad 6:9]2

  “There is no likeness of Him.”
  [Svetasvatara Upanishad 4:19]3

  “His form is not to be seen; no one sees Him with the eye.”
  [Svetasvatara Upanishad 4:20]4

  இந்த வரிகளின் அர்த்தம் என்ன??…

 41. அடக்கொடுமையே! சொன்னது,
  “”””””இரண்டு கைகள் இருக்கின்றன, இரண்டு கால்கள் இருக்கின்றன.. சரி
  எத்தனை இதயம் இருக்கிறது? எத்தனை கல்லீரல் இருக்கிறது?
  ஒரு இதயம் தான் இருக்கிறது. அதற்கு ஜோடி இல்லையே? “””””””””””””””””
  சகோதரர் அடக்கொடுமையே(உங்களுடைய பெற்றோர் உங்களுக்கு அழகான வித்தியாசமான பெயரை வைத்திருக்கிறார்கள்).
  ஜோடியென்றால் இனப்பெருக்கம் கொண்டுதான் ஆகனுமா?என்பதற்கு உதாரணத்தை கூறத்தான் கைகளையும் கால்களையும் குறிப்பிட்டேன்.

  அடக்கொடுமையே! சொன்னது,
  “””””””””அல்லாஹ் பெயரில் முகம்மது உளறுகிறார்.””””””””””””
  என்னென்ன உளரினார்கள் என்பதை பட்டியலிட்டு கூறினீர்களென்றால் நானும் கொஞ்சம் தெரிந்து கொள்வேன்.உங்களுடைய ப(ட்டிய)திலுக்காக ஆஆஆஆஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன்.

 42. அன்பின் நண்பர் முகம்மது \\கிருக்குத்தனமாக பேசும் தோழரே இன்றுதான் மனிதன் இணையத்தளங்களை …….சிந்திக்கும் மனிதனுக்கு நிறைய அத்தாச்சிகள் இருக்கிரது\\ஒரு இசுலாமியன் தன்னை புகைப்படம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று குர்ரான் கூறுகின்றது,புணிதப்பயணம்[ஹஜ்]செல்லவும் கூறுகின்றது,இதற்க்கு கடவுச்சீட்டு[பாஸ்போர்ட்]வேண்டும்,அதில் கண்டிப்பாக புகைப்படம் ஒட்டியாகவேண்டும் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்வை அன்றே அல்லா தன் குர்ரான் மூலம் சொல்லி விட்டதாக கூறுகின்றீர்கள்,அப்போ..போட்டோ விசயம்?குர்ரானில் எங்கோ ஓர் இடத்தில் இன்றைய காலச்சூழலுக்கேர்ப்ப வாசகங்கள் இடம் பெற்றதாளேயே ,அதைப்பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது எப்படி சரியாகும், கிராமங்களில் மழை வேண்டி சாமி கும்பிடுவார்கள்,பூசாரி சாமியாடுவார் மக்கள் அவரிடம் மழைஎப்ப பெய்யும் என்று கேட்பார்கள்,ஏதாவது ஒரு தேதியை சொல்வார், எதார்த்தத்தில் அன்று மழை பெய்து விடும் மக்கள் சக்தியுல்ல சாமி என்று பேசிக்கொல்வார்கள்,அப்படித்தான் இதுவும்.

 43. heenaகம்யூனிஸ்டுகள் சாதி,மதங்களை தூக்கி எரிந்தவர்கள்,வெறி நாயில் நல்ல‌
  வெறிநாய், கெட்ட வெறிநாய் என்று பார்க்க முடியாதோ..அப்படித்தான் மதமும்
  வேதங்களை ஆய்வு செய்யச்சொல்கின்றீர்கள்? தோழர் செங்கொடி இந்து மதம்,
  புணிதமானது என்று எழுதினாரா? நீங்களும்[heen] இந்து மத குப்பையைப்பற்றி எழுதுங்களேன்,யார் தடுத்தார்.

 44. அய்யா செங்கொடி

  உங்கள் வாதப்படி அப்பாவை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவ சோதனைகள் இருக்கின்றன.
  ஆனால் ஒரு பெண் ஒருவனுடன் தான் உறவு கொண்டாள் என்பதற்க்கு எந்த மருத்துவ பரிசோதனை உதவும்.
  எனவே உங்கள் கற்பனைக்கோட்டையை மூட்டை கட்டிவையுங்கள்

 45. //அடக்கொடுமையே! சொன்னது,
  “”””””இரண்டு கைகள் இருக்கின்றன, இரண்டு கால்கள் இருக்கின்றன.. சரி
  எத்தனை இதயம் இருக்கிறது? எத்தனை கல்லீரல் இருக்கிறது?
  ஒரு இதயம் தான் இருக்கிறது. அதற்கு ஜோடி இல்லையே? “””””””””””””””””
  ஜோடியென்றால் இனப்பெருக்கம் கொண்டுதான் ஆகனுமா?என்பதற்கு உதாரணத்தை கூறத்தான் கைகளையும் கால்களையும் குறிப்பிட்டேன்.//

  சபாஷ் அப்துல்லாஹ்.
  இப்படித்தான் சமாளிக்க வேண்டும். ஜோடி என்றால் ஆண் பெண் என்று சொல்லலாம். ஆண் பெண் இல்லாமல் இருக்கும் ஒரு செல் உயிரிகளை குறிப்பிட்டால், அதில் வேறொரு ஜோடி மாதிரி ஒன்று இருக்கிறது என்று சொல்ல வேண்டும். கால் கை எல்லாம் இரண்டிரண்டாக இருக்கிறது என்று சொல்லவேண்டும். இருதயம் கல்லீரல் எல்லாம் என்ன வென்று கேட்டால், அது உதாரணத்துக்குத்தான் சொன்னேன். அதனை அல்லாஹ் குறிப்பிடவில்லை என்று சமாளிக்கவேண்டும்.

  // அதாவது கணவன் மனைவிக்கிடையான உறவில் மனைவியிடமிருந்து கணவன் குறிப்பிட்ட முறைகளுக்கும் அதிகமாக பாலருந்திவிட்டால் மனைவியானவள் கண‌வனின் தாயைப்போன்றவளாகிவிடுவாள் எனும் பொருள்படும்வசனம் முகம்மது இறக்கும் வரையிலும் குரானில் இடம் பெற்றிருந்தது என்று முகம்மதின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா கூறுவதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்.//

  இதனை சமாளிக்க முயற்சி செய்யவேண்டும். யோசித்துவிட்டு வருகிறேன்.

  இது தற்போது எகிப்தில் ஆணும் பெண்ணும் ஒரே அலுவலகத்தில் சேர்ந்து இருப்பதற்காக ஒரு இமாம் கொடுத்த ஆலோசனையும் இதுதான். அதாவது அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் அங்கிருக்கும் ஆண்களுக்கு மடியில் போட்டு பால் கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் மகன் முறையாகிவிடுவார்கள். பிறகு அவர்கள் ஒரே இடத்தில் வேலை செய்யலாம். இது முகம்மதுவின் ஹதீஸ் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒரு ஆலோசனை.

  இதில் இருக்கும் அறிவியல்பூர்வமான சிந்தனை புல்லரிக்க வைக்கிறது. இந்த அறிவியல் பூர்வமான சிந்தனை அந்த காலத்திலேயே முகம்மதுவிடம் இருப்பதினால், இது அல்லாஹ்வின் திருத்தூதர் என்பது தெரியவில்லையா?

  சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன.

 46. //ஐந்து சகோதரர்களுடன் சமகாலத்தில் புணர்ந்த தாசியை எல்லாம் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் பற்றி விளக்கம் கூற அருகதையில்லை.//

  இஸ்லாமியத்தை கேள்விகுள்ளாக்கினால் ஏன் வேறு மத சாயம் பூசுகிறீர்கள் என தெரியவில்லை!

  ராமாயணம்,மகாபாரதம் எப்படி கற்பனையோ, அதே போல் குரானும் கற்பனை தான்!

 47. //அல்லஹ் பிறக்கவும் இல்லை பிறக்கப்படவும் இல்லை. அல்லாஹுக்கு தூக்கம், களைப்பு, பசி, இயலாமை, மறதி, குழந்தை, மனைவி, குரு …. & இறப்பு கிடையாது. சரியா?//

  இதில் இயலாமைக்கு வருகிறேன்!

  கடவுளால் தூக்க முடியாத ஒரு கல்லை படைக்க முடியுமா!?

  படைக்க முடியாதென்றால் படைக்க இயலவில்லை!

  தூக்க முடியாதென்றால் தூக்க இயலவில்லை!

  இயலாமை வந்துருச்சே!?

  அப்ப கடவுளும் டுபாக்கூர் தானே!

 48. senkodi……….
  please study the Islam in open mind………
  try to consider the all aspect…….

  You can get all answer from Islam

 49. முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை, அழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள், அதன்படியே தான் குரான் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குரானை மனப்பாடமாக தெரிந்திருந்தவர்களின் மனதில் குரான் பாதுகாக்கப்பட்டது தான் முதன்மையானது. எழுத்து வடிவில் பாதுகாப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே குரானின் பாதுகாப்பில் பிரச்சனை ஒன்றுமில்லை என நிலைப்படுகிறார்கள். ஆனால் முகம்மது அப்படி நினைத்திருக்க முடியாது. அப்படி நினைத்திருந்தால் எழுத்துவடிவில் அன்றிருந்த வசதிகளின் படி மரப்பட்டைகளிலும், தோல்களிலும் எழுதி பாதுகாத்துவைக்குமாறு ஒரு குழுவை நியமித்து பணித்திருக்கத்தேவையில்லை, ஏனென்றால் அல்லாவே குரானை பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அறிவித்துக்கொண்டுள்ளான். அப்படி இருக்கும்போது தொழுகையின்போது ஓதுவதை கட்டாயமாக்கி மனப்பாடமாகவும், எழுதிவைத்து திட ஆதாரமாகவும் பாதுகாக்கும் தேவை முகம்மதுக்கு இல்லை. ஆகவே முதன்மையானது இரண்டாம்பட்சமானது எனும் பேதமின்றி குரானை பாதுகாக்கும் தெரிவுதான் முகம்மதுவிடம் இருந்திருக்கும். ஆனால் அவரின் மரணத்திற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே வரிசைப்படி இல்லை எனக்கூறி அது அழிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? என்பது தான் மையமான கேள்வி. அதுவும் உலகில் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனிதன் பிறந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முகம்மது தான் அழகிய முன்மாதிரி என்று அறிவிக்கப்பட்டு, அவர் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் இன்றுவரை பாதுகாத்துவைத்திருக்கும் நிலையில் குரான் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை இணைத்துப்பார்க்கவேண்டும்.

  அபூபக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட குரான் உமரின் காலத்திற்குப்பின் உஸ்மானிடம் வரவில்லை என்றால் அதற்க்கு, அபூபக்கர் தனக்குப்பின் உமரைத்தேர்ந்தெடுத்ததுபோல் உமர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனவே தான் அந்த குரான் உஸ்மானிடம் கொடுக்கப்படவில்லை என்று எண்ணுகிறார்கள். உமர் தனக்குப்பின் ஆட்சிசெலுத்த யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது மெய்தான். அவர் ஒரு குழுவை அமைத்து யாரை நியமிப்பது என்பதை அந்தக்குழு முடிவு செய்யும் என விட்டுவிட்டார், அந்தக்குழுவில் தன் மகனை உறுப்பினராக்குவதற்கும் கூட மறுத்துவிட்டார். ஆனால் குரானை அந்தக்குழுவிடம் ஒப்படைத்து அடுத்துவருபவரிடம் ஒப்படைக்குமாறு பணித்திருக்க முடியும் அவ்வாறன்றி தன் மகளிடம் கொடுக்கும் அவசியமென்ன? இதை அவர் தன்னிடம் வைத்திருந்த குரானை தன் மகளிடம் கொடுத்தார் என புரிந்துகொள்ளமுடியாது. ஏனென்றால் அன்றிருந்த நிலையில் அரசியல் முதல் சமூகம் வரையான அனைத்திற்கும் வழிகாட்டியான குரான் அதுமட்டும்தான் மற்றப்படி மனப்பாடமாய் தெரிந்து வைத்திருந்தவர்கள்தான். அவர்களும் தொடர்ச்சியான போர்களினால் குறைந்துபோய் சிலரே எஞ்சியிருந்த நிலையில், ஒரே ஆவணமான குரானை முகம்மதின் மனைவி என்றாலும்கூட தன்மகளிடம் கொடுக்கும் தேவை என்ன? என்பதுதான் கேள்வி.

  இப்படி குரானை உஸ்மானுக்கு முன் உஸ்மானுக்கு பின் என்று பிரித்து குரானின் பாதுகாப்பில் கேள்வி எழுப்புவதன் காரணம் என்ன? குரான் வசனம் 31:27

  “பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதிமுடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்”

  என்கிறது. இதே பொருளில் இன்னொரு வசனமும் 18:109 இருக்கிறது. இந்த வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? எழுதுவதற்கு தாள் பயன்படுகிறது அது மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது அதில் திரவமான மை கொண்டு எழுதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால் முகம்மதின் காலத்தில் எழுதுவதற்கு தாளும் மையும் பயன்படுத்தப்படவில்லை. முகம்மது குரானை எழுதிவைப்பதற்கு அமைத்த குழு பேரீத்த மரப்பட்டைகளிலும், தோல்களிலும் தான் எழுதியதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதே காலத்தில் வந்த வசனமோ மரங்களை எழுதுகோல்களாகவும் கடல்களை மையாகவும் பயன்படுத்தச்சொல்கிறது. இது முகம்மது சொன்ன வசனமா? இல்லை அவர் காலத்திற்குப்பின்னர் வந்தவர்களால் சேர்க்கப்பட்ட வசனமா? இந்த ஐயத்தை எப்படிபோக்கிக்கொள்வது? அல்லா அனைத்தும் அறிந்தவன் முக்காலமும் உணர்ந்தவன், எல்லாம் தெரிந்த அவனுக்கு பின்னர் தாளும் மையும் வரவிருப்பது தெரியாமலா போயிருக்கும் என சிலர் நினைக்கலாம். ஆனால் தாளும் மையும் தேவையில்லாமலேயே கணிணியில் எவ்வளவு அளவிலும் எழுதிவிட முடியும் எனும் இன்றைய நிலை அந்த எல்லாம் அறிந்த அல்லாவுக்கு தெரியவில்லையல்லவா? இன்றைய முன்னேற்றங்கள் தெரியவில்லை அதனால் அதை குறிப்பிடவில்லை ஆனால் அன்றைய காலத்திற்கு சற்றைக்கு பின்னான முன்னேற்றங்கள் தெரியும் அதனால் அதை குறிப்பிட்டுள்ளான் என்பது முரணில்லையா? இஸ்லாமியர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? ஒன்று அல்லாவுக்கு எதிர்காலம் முழுமையாக தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும் அல்லது குறிப்பிட்ட அந்த வசனம் முகம்மதின் காலத்திற்குப்பின் குரானில் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும். இந்த இரண்டில் எதை ஏற்பார்கள்? எதை மறுப்பார்கள்?

  முஸ்லீம்கள் தங்கள் வேதமான குரானுக்கு அடுத்தபடியாக மதிப்பது ஹதீஸ் நூல்களைத்தான். ஹதீஸ் என்பது முகம்மதுவின் வாழ்வில் அவர் செய்ததும் சொல்லியதுமான தொகுப்பு. இந்த ஹதீஸ் நூல்களில் முதலிரண்டு இடங்களில் இருப்பது ஸஹீஹுல் புகாரி என்பதும், ஸ‌ஹீஹ் முஸ்லீம் என்பதும். இதில் ஸஹீஹ் முஸ்லீமில் 3421ஆவது ஹதீஸ்

  “ஆயிஷா அவர்கள் கூறியதாவது: பத்துமுறை பால் கொடுத்துவிட்டால் திருமணம் நிச்சயமற்றதாகிவிடும் என்று குரானில் இருந்தது பின்னர் இது ரத்து செய்யப்பட்டு ஐந்து தடவையாக குறைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது”

  என்று இருக்கிறது. அதாவது கணவன் மனைவிக்கிடையான உறவில் மனைவியிடமிருந்து கணவன் குறிப்பிட்ட முறைகளுக்கும் அதிகமாக பாலருந்திவிட்டால் மனைவியானவள் கண‌வனின் தாயைப்போன்றவளாகிவிடுவாள் எனும் பொருள்படும்வசனம் முகம்மது இறக்கும் வரையிலும் குரானில் இடம் பெற்றிருந்தது என்று முகம்மதின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா கூறுவதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ். இது இட்டுக்கட்டிய ஹதீஸ் என்றோ, பொய்யானது என்றோ ஏற்றுக்கொள்ளப்படாதது என்றோ கூறிவிட முடியாது. ஏனென்றால் இது இடம்பெற்றிருப்பது ஸ‌ஹீஹ் முஸ்லீமில். (ஹதீஸில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டாதது என்று இரண்டு வகை உண்டு. இவை பற்றி பின்னர் பார்க்கலாம்) முகம்மதுவுக்கு மிகவும் விருப்பமான மனைவியாகிய ஆயிஷா அவர்களால் சுட்டப்படும் இந்த வசனம் தற்போதைய குரானில் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்று கூறவேண்டிய கடமை முஸ்லீம்களுக்கு இருக்கிறது. இல்லை தற்போதைய குரானில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை. அது எப்போது காணாமல் போனது? எப்படி இல்லாமல் போனது? நீக்கியது யார்? எந்த அடிப்படையில் நீக்கப்பட்டது? எல்லாம் அறிந்த அல்லாவால் அருளப்பட்டு கடைசி மனிதன் வரை நிலைத்திருக்கக்கூடிய குரானின் வசனங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருந்தது?

  குரானை எழுதுவதற்கென்றே முகம்மது ஏற்படுத்திய குழு எழுதிய குரானை அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பதில்லை, அந்த எழுத்து முக்கியமானதல்ல அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுதான் முக்கியமானது. அந்த குரானுக்கும் தற்போதைய குரானுக்கும் எந்தவித்தியாசமும் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கும் முஸ்லீம்கள், ஆய்ஷாவின் அந்த வரிகளை கவனித்துப்பார்க்கவேண்டும். “அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது” முகம்மது இறந்தபிறகு குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூற முன்வந்த முகம்மதின் மனைவி யாரால் எப்போது மாற்றப்பட்டது என கூற முன்வரவில்லை. அதன் காரணம் என்னவாக இருந்தாலும் குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியமானது

 50. மாறாதது என்று ஒன்று இல்லை !!
  மாற்றம் ஒன்றே நல்ல மருந்து !!
  குரானை அல்லாஹ் பாது காக்கிறான் என்றால் ஏன் மனிதனை மனனம் செய்ய வைக்கிறான்.
  மனித உதவியை நாடுபவன் எப்படி எல்லாம் வல்லவனாக முடியும். 🙂
  “உம்முள் கிதாப்” என்னும் மூல நூலில் அல்லாஹ் பாதுகாக்கிறான் என்றால் ஏன் இன்றும் குரானை அச்சடித்து பிரதி எடுத்து பாதுகாக்க வேண்டும்.
  பிரதி மற்றும் அச்சு மக்கள் படிப்பதற்கே என்றால் , அதன் பாதுகாப்பு குறித்து ஏன் இவ்வளவு சச்சரவு ?
  ஒன்றின் பாதுகாப்பு என்பதே அதன் மீதுள்ள நம்பக தன்மையை குறைக்கிறது.
  பயம் தான் ஒன்றை பாதுகாக்க செய்கிறது, அல்லாஹ்வுக்கு யாரை கண்டு பயம் ? மனிதனையா?
  எவ்வளவோ வேதங்களைஎல்லாம் கோட்டை விட்டு விட்டு திடீர் என்று குரானை மட்டும் அல்லாஹ் பாதுகாப்பதன் நோக்கம் என்ன ?
  அல்லாஹ் அதற்கு முன்னே புத்தி சுவாதீனம் இல்லாமல் இருந்தானா ?

 51. உங்கள் இந்த பதிவு இஸ்லாத்தின் வரலாறை அக்குவேறு ஆணிவேறாக தெரிந்த மேதாவியின் படைப்பு போல் நம்பவைக்க முயற்சித்திருக்கிறீர்கள். யாருடைய வாந்தியை அளௌளி சாணியாக தெளித்திருக்கிறீர்கள். உஸ்மான் காலத்தில் தான் குர்ஆன் முழூமையாக தொகுக்கபட்டது.அரசால் இது தான் முழுமைபடுத்ததபட்ட குர்ஆன் என்றும் அறிவிக்கபட்டு மற்றவர்களிடம் இருந்த குர்ஆன்பிரதிகள் அழிக்கபட்டன.பிறகு உமர் குர்ஆனை உஸ்மானிடம் கொடுக்காமல் தன் மகளிடம் கொடுத்தார் என புளுகுவீர்கள்.இஸ்லாம் மக்களாட்சி யை தான் வழியுருத்தியது .முகமது தனக்குபின் அபுபக்கரோ அவருக்கு பின் உமரோ அவருக்கு பின் உஸ்மானோ அவருக்கு பின் அலியோ ஆட்சி செய்யவேண்டும் சொல்லவில்லை.மாறாக அந்த மக்களே இவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.ஆயிசா சொன்னதாக உள்ள ஹதீஸ் ஏற்றுகொள்ளாபடாத பலமில்லாதவை.ஆயிசா முகமது நபியின் வாழ்க்கை குர்ஆனாக அமைந்திருந்தது.குர்ஆனிலோ முகமதுவின் வாழ்க்கையிலோ எநத விசயங்களிலையும் விட்டுவிட்டார் என்று சொல்லமுடியாது என்று கூறியுள்ளார்.ஆயிசாபெயரில் யூதர்கள் செய்த மோசடி ஹதீஸ் அது.குர்ஆனில் கம்யூட்டரை பத்திசொல்லவில்லை அல்லாஹ்விற்கு எதிர்காலத்தை பற்றிய அறிவு இல்லாமல் போனது ஏன் வினவிள்ள உங்களின் அரைகுறை அறிவை அறிந்து மெய்சிலிர்த்து போனேன்.இவ்வுலகில் தோன்றிய தோன்ற போகும் அனைத்து மக்களின் விதிகளும் இந்த புத்ததகத்தில் உள்ளது என குறிக்கபட்டுள்ளது.அதற்கு எத்ததனை பெரிய மெமமரியுள்ளள கம்யூட்டர் வேண்டும்.அந்த மக்களை நாம் மலட்டு காற்றால் அழித்தோம் என ஆக்சிஜனை பற்றியும்.வானத்தில் பறக்கும் பறவையை பூமியில் மோதமால் பறக்கவைக்கும் இறைவனின் ஆற்றலை நினைவுகூறுங்கள் என புவிஈர்ப்பு விசையை பற்றி கூறுகிறான்.சூரியனும் பூமியும் தத்தமது பாதையில் நீந்தி செல்கின்றன என்றும் முட்டை வடிவ பூமி என்றும் இன்னும் நிறைய அறிவியல் உண்மைகளை குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான்.குர்ஆன் அறிவியலை கூற வந்த அறிவியல் நூலல்ல. ஆனால் கூறியுள்ள அறிவியலை வரலாற்றையோ இக்கிக்க்த்தையோ எடுத்துக்காட்டு களிலோ எந் முண்பாட்டையோ பிழையையோ நீருபிக்க முடியாது. உங்கள் வாதத்தில் உறுதியாக இருந்தால் TNTJஎன்ற முஸ்லிம் இயக்கினரோடு விவாதிக்க தயாரா இல்லையென்றால் இந்த அரைவேக்காட்டு பதிவுகளை நிறுத்துங்கள்.நூறாண்டுகள் கூடநிலைக்காமல் தோற்றுபோன கம்யூனிச கொள்கையை மேம்படுத்தத முயற்சி செய்யுங்கள் நன்றி. ——திருச்சி சகீர்

 52. நண்பர் திருச்சி சகீர்,

  நீங்களே எல்லாம் தெரிந்தவராக இருந்து விட்டுப் போங்கள் அதில் எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

  1. முகம்மது காலத்தில் தொகுக்கப்பட்டதும், அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்டதும், அதிகாரபூர்வமற்றது என எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? இஸ்லாமிய இறையியல் ரீதியிலோ வரலாற்று ரீதியிலோ சான்றுகளைக் காட்டவும்.

  2. உமர் தனக்குப்பின் ஆட்சிசெலுத்த யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது மெய்தான். அவர் ஒரு குழுவை அமைத்து யாரை நியமிப்பது என்பதை அந்தக்குழு முடிவு செய்யும் என விட்டுவிட்டார், அந்தக்குழுவில் தன் மகனை உறுப்பினராக்குவதற்கும் கூட மறுத்துவிட்டார். ஆனால் குரானை அந்தக்குழுவிடம் ஒப்படைத்து அடுத்துவருபவரிடம் ஒப்படைக்குமாறு பணித்திருக்க முடியும் அவ்வாறன்றி தன் மகளிடம் கொடுக்கும் அவசியமென்ன? இதை அவர் தன்னிடம் வைத்திருந்த குரானை தன் மகளிடம் கொடுத்தார் என புரிந்துகொள்ளமுடியாது. ஏனென்றால் அன்றிருந்த நிலையில் அரசியல் முதல் சமூகம் வரையான அனைத்திற்கும் வழிகாட்டியான குரான் அதுமட்டும்தான் மற்றப்படி மனப்பாடமாய் தெரிந்து வைத்திருந்தவர்கள்தான். அவர்களும் தொடர்ச்சியான போர்களினால் குறைந்துபோய் சிலரே எஞ்சியிருந்த நிலையில், ஒரே ஆவணமான குரானை முகம்மதின் மனைவி என்றாலும்கூட தன்மகளிடம் கொடுக்கும் தேவை என்ன? என்பதுதான் கேள்வி.

  3. ஆய்சா சொன்ன அந்த ஹதீஸ் எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படாதது? பின் எப்படி அது முஸ்லீமில் இடம்பெற்றது?

  4. குரானில் மட்டுமல்ல பல்வேறு வேதங்களில் கூறப்பட்டிருக்கும் அறிவியல் எட்டிப் பார்க்கும் கருத்துகள் அனைத்தும் ஏற்றப்பட்ட மோசடிகளே. முடிந்தால் அவை அறிவியல் என நிரூபித்துக் காட்டுங்கள்?

  5. விவாதமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முடிந்தால் இங்கு மறுப்பை எடுத்து வையுங்கள், முடியாவிட்டால் நடையைக் கட்டுங்கள். எடுத்து வைக்கும் பட்சத்தில் உங்களுக்கு எல்லாத் தெளிவுகளையும் தர நான் தயார், நீங்கள் தயாரா?

  மற்றவற்றை பின்னர் பார்க்கலாம்.

 53. 1. குரான் முஹம்மது நபி (ஸல்) இறப்பதற்கு முன்னே தொகுக்கப்பட்டது, அதன் ஒரு பிரதி ஹாப்சா (ரலி) அவர்களிடம் இருந்தது
  2. உமர் (ரலி) அவர்கள் தன மகளிடம் குரானை கொடுக்க வில்லை, உமருக்கு முன்னே அவர் மகளிடம் இருந்தது
  3. ஹதீஸை தெளிவாக கூறவும், மேலும் கம்ப்யூட்டர் பத்தி குரானில் பல இடங்களில் உள்ளது, இறந்த பின் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு அவரவர் செய்த நம்மை தீமை பற்றி விசாரிக்க படுவார்கள் அப்பொழுது அவர்கள் வாய் பூட்டப்படும், அவர்களில் கைகள் கால்கள் கண்கள் ,,,,, எல்லாம் தான் செய்த நல்ல தீய தை விளக்கும், இதுதான் கம்ப்யூட்டருக்கு ஆதாரம், கம்ப்யூட்டர் சி டி பிளாப்பி யு எஸ் பி ன்னு நிறைய மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் விஷயங்களை சொல்லும்போது இறைவனால் முடியாதா?
  4. எது அறிவியலுக்கு முரண் என்று ஒவ்வொன்றாக சொல்லுங்கள் பிறகு விவாதிக்கலாம்

 54. நண்பர் ரிஸ்வான்,

  உங்கள் பின்னூட்டம் நீக்கப்படுகிறது. உங்கள் கருத்தைக் கூறுங்கள், அது எத்தகையதாக இருந்தாலும் வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்கு துணையாக வேறொருவர் எழுதியதை மேற்கோளாக காட்டுங்கள், ஏற்கிறேன். ஆனால் வெறுமனே வேறொரு இடத்திலிருந்து வெட்டி இங்கு வந்து ஒட்டிச் செல்வதை ஏற்கவியலாது.

  நன்றி.

 55. நுனிப்புல் மேய்ந்த கதையா இஸ்லாத்தை குறைகூறவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட எதிர்மறை சிந்தனை தான் இந்த கட்டுரை செங்கொடி இன்னும் இஸ்ஸாலத்தை நிறைய படிக்கணும் பிறகு விமர்ச்சிக்கணும்

 56. நண்பர் அபு நதீர்,

  இந்த அளவு படித்த பின்னர் தான் விமர்சிக்க வேண்டும் என்பதற்கு அளவு நிர்ணயித்து குரான் வசனம் எதுவும் இருக்கிறதா? இருந்தால் கூறுங்கள். நான் எந்த அளவுக்கு இஸ்லாத்தை படித்திருக்கிறேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், நீங்கள் நன்றாக படித்திருக்கிறீர்கள் தானே. இந்தக் கட்டுரையில் என்ன தவறு இருக்கிறது என சுட்டிக் காட்டுங்கள். அதிலிருந்து பேசுவோம். உங்கள் கசடு பிடித்த விருப்பத்திலிருந்து பேச வேண்டாம்.

  நன்றி.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s