பிரபஞ்சமும் அதனை கட்டுப்பட அழைத்த குரானும்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 8


நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பு எனும் நிகழ்விலிருந்து துவங்கியதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், எரிமீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள், பால்வீதிகள் என்று எண்ணிலடங்கா பொருட்கள் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் நிறைந்துள்ள  இந்த பிரபஞ்சத்தின் மொத்த அளவு தற்போதைய அளவுகோல்களின் படி 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு பயணம் செய்தால் எவ்வளவு தூரம் பயணப்பட்டிருக்குமோ அவ்வளவு. ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிமீ. இவ்வளவு வேகம் கொண்ட ஒளி ஒருமுனையிலிருந்து மறுமுனையை அடைய 2500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றால் நம் பிரபஞ்சத்தின் அளவுகளை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அளவு இப்படியே இருக்குமா? அல்ல இன்னும் விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு ஒருமையிலிருந்து வெடித்துப்பரவியதில் தொடங்கியது, அதைத்தான் பெருவெடிப்பு கொள்கை என்கிறார்கள்.  இந்த பெரு வெடிப்புக்கொள்கை குரானில் கூறப்பட்டிருக்கிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இன்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் உருவான குரானில் இன்றைய அறிவியல் எப்படி இடம்பெற்றிருக்க முடியும்? எனவே குரான் இறைவனால் அருளப்பட்டது என்பது அவர்களின் வாதம்.

 

பிரபஞ்சம் குறித்து குரான் கூறுவதென்ன?

 

வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் ……….. அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? வசனம் 21:30

 

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான் விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. வசனம் 41:11

 

இந்த இரண்டு வசனங்களும் தான் பெருவெடிப்புக்கொள்கையை விளக்குவதாக இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள். முதல் வசனத்தில் வானங்களும் பூமியும் இணைந்திருந்ததாகவும் பின்னர் அவைகள் பிரிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இரண்டாவது வசனமோ வானத்திற்கு முந்தைய நிலை புகை என்றும் அதை பின்னர் வானமாகவும் பூமியாகவும் மாற்றியதாக குறிப்பிடுகிறது. இந்த இரண்டின் பொருளும் எப்படி பெரு வெடிப்புக் கொள்கையை பேசுவதாக அறியப்படுகிறது? விண்மீன்கள் (ந‌ட்சத்திரங்கள்) தோன்றுவதற்கு முன் அதாவது ஆரம்பகால பிரபஞ்சத்தில் 72 விழுக்காடு கரும்பிண்டமாக இருந்தது எனவும் இக்கரும்பிண்டங்களின் திணிவிலிருந்து விண்மீன்கள் தோன்றின என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். கரும்பிண்டங்கள் என்பது எந்த ஒரு பொருளுமாக இல்லாமல் ஆற்றலாக இருந்தன. இந்த இடத்தில் இதை பொருலாக இல்லாமல் ஆற்றலாக என்பதை புகை என்பதாக உருவகப்படுத்தி, அந்தப்புகையிலிருந்து நட்சத்திரங்களும் ஏனைய பொருட்களும் தோன்றின என்பதாக பொருள் எடுத்துக்கொண்டு மேற்கண்ட வசனங்கள் பெருவெடிப்புக்கொள்கையை கூறுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

 

முதலில் வானம் என்பது என்ன? உயரத்தில் நீலமாக தெரிவதா? பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் வெளிதான் வானம் எனப்படுகிறது. நட்சத்திரங்கள், கோள்கள் உள்ளிட்ட அனைத்துபொருட்களையும் உள்ளடக்கிய பெரு வெளியை பிரபஞ்சம் என்றால் பருப்பொருட்களை நீக்கியபின் இருக்கும் வெளி வானம் எனலாம். ஆனால் குரான் கூறுகிறது வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான் என்று. விண்மீன்கள் கோள்கள் முதலான பொருட்களை புகையாக இருந்தபோது நாடினான் என்றிருந்தாலும் கூட கொஞ்சம் அறிவியல் வாசம் அடித்திருக்கும்.  தொடர்ந்து அவர்கள் வானம் என்பதை பூமியை தவிர்த்த அனைத்தும் என்பதாக பொருள் கொள்ளச்சொல்கிறார்கள். ஏனென்றால் குரானின் படி அப்படி பொருள்கொண்டால் தான் அந்த வசனங்களுக்கு அறிவியல் சாயம் பூச முடியும். வானங்களும் பூமியும் இணைந்திருந்த போது என்றும், அதற்கும் பூமிக்கும் கூறினான் என்றும் குரான் வானத்தையும் பூமியையும் மட்டுமே குறிப்பிடுகிறது. எனவே பூமியை தவிர்த்த அனைத்தும் வானம் என்று எடுத்துக்கொண்டு சுலபமாக பொருள் பண்ணிக்கொண்டார்கள். ஆனால் குரானில் மற்றொரு வசனம் வானமும் அதன் பொருட்களும் வேறு வேறு என்று தெளிவாக அறிவிக்கிறது. வசனம் 41:12 …………. கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்………….. இந்த வசனத்தில் இருக்கும் விளக்குகளால் எனும் சொல் விண்மீன்கள் கோள்களை குறிக்கிறது. எனவே வானம் என்பதற்கு பூமியை தவிர ஏனைய அனைத்தும் என்று பொருள் கொள்வது குரானின் படியே முரணானது.

 

வானத்தை கண்களுக்கு புலனாகும் ஒரு பொருளாக கருதுவதும், அது புகையிலிருந்து உருவானதாக நினைப்பதும் மனிதன் மேகத்தை பார்த்ததன் திரிபாக கொள்ளலாம். வசனம் 50:6 ……………. அதில் எந்த ஓட்டைகளும் இல்லை என்று கூறியிருப்பதன் மூலம் நிறமாலையின் நீல நிற‌த்தை பிரதிபலிக்கும் நீலப்பின்னணியை அதன் சீறான தன்மையையே குரான் வானம் என குறிப்பிடுகிறது என்பது தெளிவாகிறது.  மீண்டும் இரண்டாவது வசனத்தை கவனியுங்கள் புகையாக இருந்த வானத்தை நாடிய போதே பூமியும் சேர்த்து கூறப்படுகிறது அதற்கும் பூமிக்கும் கூறினான் என்று. ஆக குரானின் இந்த வசனங்களில் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுவது போல் எந்த அறிவியல் கூறுகளும் இல்லை. மரபுவழி புராணங்களின் துணையுடன் சாதாரண மனிதன் கூறிவிட முடிகிற இந்த வசனங்களை அறிவியலுடன் முடிச்சுப்போடுவது இவர்களின் வெற்று பிதற்றல்கள் தானேயன்றி வேறில்லை.

ஒரு சிங்குலாரிடியிலிருந்து வெடித்து விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் பெருவெடிப்புக்கொள்கையின் எந்த சாயலும் இல்லாத மேற்கண்ட இரண்டு வசனங்களும் இன்னொன்றையும் தெளிவாக்குகிறது. வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது. இந்த அறிவியலை அறியாத குரான், பூமியையும் வானத்தையும் பிரித்துவிட்டதாய் விளம்புகிறது. பூமியின் அருகிலிருக்கும் வானத்தை விளக்குகளால் அலங்கரித்ததாய் கதைக்கிறது.

 

மதவாதிகள் தேடுவதெல்லாம் அறிவியலோடு ஐக்கியமாகிப்போகின்ற வசனங்கள், அதைவைத்துக்கொண்டு அதற்குள் அறிவியலை வளைத்து  நுழைத்துவிடுகிறார்கள். பின்னர் அவர்களே ஆச்சரியப்பட்டு ஆஹா குரான் இன்றைய அறிவியலை மெய்ப்பித்துவிட்டது என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை இறைவன் எனும் ஒன்றை இவர்கள் குறிப்பிடும் தகுதிகளோடு கூடிய ஒரு ஆற்றலை அறிவியல் திடமாக மறுக்கிறது என்பதை.

 

28 thoughts on “பிரபஞ்சமும் அதனை கட்டுப்பட அழைத்த குரானும்.

 1. //வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் ……….. அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? வசனம் 21:30//

  வானங்கள் என்று பல வானங்கள் இருக்கின்றன. அதாவது ஏழு வானங்கள் இருக்கின்றன என்று அல்லாஹ் குரானில் சொல்கிறான்.
  ஆனால் ஒரே ஒரு பூமியைத்தான் பிரித்ததாக சொல்கிறான்.
  ஆகவே பேரண்டத்தில் வேறெங்கும் கோள்களே கிடையாது. பூமி மட்டுமே கிரகம் என்பதையும் அல்லாஹ் கூறுகிறான்.
  ஆனால் தற்போது பிரபஞ்சத்தில் மற்ற நட்சத்திரங்களை சுற்றி பூமியை போன்ற கோள்கள் இருப்பதாக மூளை கெட்ட விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதனை நம்ப வேண்டாம். மற்ற நட்சத்திரங்களை சுற்றி பூமிகள் இருப்பதாக எங்காவது அல்லாஹ் சொல்கிறானா? அப்படி சொல்லவில்லை என்றால் இல்லை என்றுதான் பொருள்.

  ஏழு வானங்களில் நடு வானத்தில் சூரியனையும் சந்திரனையும் அல்லாஹ் வைத்திருக்கிறான். கீழ் வானத்தில் விளக்குகளாக நட்சத்திரங்களை வைத்து அழகு படுத்தியிருக்கிறான். ஆகையால் கீழ் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் ஏதோ சூரிய்னையும் சந்திரனையும் தாண்டி இருப்பதாக விஞ்ஞானிகள் கதை அளக்கிறார்கள் அதையும் நம்ப வேண்டாம்.

  கீழ் வானத்தில் வைத்திருக்கும் நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் இருந்தால் நம் கண்ணுக்கே தெரிந்திருக்குமே? அதிலிருந்தே தெரியவில்லையா அல்லாஹ் இந்த கீழ்வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை சுற்றி கோள்களை வைக்கவில்லை என்று. மூளை கெட்ட விஞ்ஞானிகள்!

  ஆகவே செங்கொடி, இந்த விஞ்ஞானிகளை நம்ப வேண்டாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பெருவெடிப்பு கொள்கையை குரானில் கண்டுபிடித்திருப்பதால் அதனை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், மற்ற நட்சத்திரங்களை சுற்றி பூமிகள் இருப்பதாக சொல்வதை நம்ப வேண்டாம். ஒரே ஒரு பூமியைத்தான் அல்லாஹ் கூறுகிறான்.

  //பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான் விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. வசனம் 41:11//

  இதில் பெருவெடிப்பு கண்டுபிடித்துள்ள இஸ்லாமிய விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். ஆனால், புகை பெருவெடிப்பு நடந்தபின்னால் வந்ததா, பெருவெடிப்பு நடக்கும் முன்னால் வந்ததா? அந்த புகை எப்படி நம் ஊர் செத்தை குப்பையை எரித்த புகை போல இருக்குமா? அப்படியானால், இந்த புகைக்கு முன்னால் இருந்த செத்தை குப்பைகளை யார் எரித்தது? அதையும் அல்லாஹ்வே எரித்தார் என்று நம் இஸ்லாமிய விஞ்ஞானிகளுக்கு ஐடியா கொடுப்போம்.

  சிந்திக்க மாட்டீர்களா என்று அல்லாஹ் மூஃமீன்களை கெஞ்சி கேட்டுக்கொள்வது இப்படி கஞ்சா புகையில், பெருவெடிப்பு போன்றவற்றை கண்டுபிடிக்கத்தான்.

  ஆனால், மூஃமீன்கள் குரானில் கண்டுபிடிக்கும் இப்படிப்பட்ட அற்புதங்கள் சரியில்லை என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. உங்களை வழிகேடராக்கி நரகத்தில் தள்ளி கல்லால் அடிப்பான். ஜாக்கிரதை. தோலை உரித்து மீண்டும் தோலை கொடுத்து தோலை உரிப்பான்.

 2. போதுமான அளவுக்கு குர்ஆனின் அறிவியல் பற்றி தெரிந்து கொண்டோம்.நன்றி.
  அறிவியலை மட்டும் இவர்கள் சொல்லிகொண்டு திரிவதில்லை.அதையும் தாண்டி ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.அடுத்த முறை குர்ஆனின் முன்னறிவுப்புகள் பற்றிய கட்டுரையை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
  1.மனிதர்களால் முகம்மதுவை கொல்ல முடியாது
  2.ரோம் சாம்ராஜ்யம் சில ஆண்டுகளில் வெற்றி பெறும்
  3.பாதுகாக்கப்பட்ட பிர்அவ்ன் உடல்
  4.மலை மீது அமர்ந்த நூஹ் வின் கப்பல்
  இப்படி நிறைய மலிந்து கிடக்கிறது.இதை பற்றியும் எழுதுங்கள் தெரிந்து கொள்கிறோம்.
  தோழர் இப்னுபஷீர்(2) அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்களுடைய மறுமொழி செம நக்கலாக இருந்தது.விடக்கூடாது இவர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டே துரத்தியாக வேண்டும்.(நாட்டை மட்டுமில்லை உலகத்தை விட்டே).
  தோழர் இப்னுபஷீர்(2) அவர்களே நானும் உங்களின் வரிசையில் இனிமேல் என்னுடைய நக்கல்களையும் பதிவிடுகிறேன்.

 3. மிகச்சிறப்பான அரிய தகவல்கள்,
  தோழர் செங்கொடிக்கு ஒரு ஆலோசனை, தாங்கள் இக்கட்டுரையினை எழுதி முடித்தவுடன் அதை பிடிஎப் கோப்பாக வெளீயிட்டால் பயனாக இருக்கும், குர்ரான் மட்டுமல்ல எந்த மத நூலுமே அந்த காலத்தில் இருந்த மனிதன் தனக்கு தெரிந்ததை மட்டும் எழுதினான்/எழுதினார்கள். அதற்கு மேல் அவர்கள் தான் சிந்திக்க வில்லை நாம் சிந்திப்பதையும் மதத்தின் பேரால் தடுக்கிறார்கள். இப்படி அல்லாவுக்கு வக்காலத்து வாங்குபவர்களே ஏன் உங்க அல்லாவோ அல்லது ஏனை சாமியான்களோ அரிசி விலை பருப்பு விலையை குறைக்க முயற்சிக்கக்கோடாது. பிராக்டிகல் வாழ்க்கையினில் இருந்து சிந்தித்து பாருங்கள் நண்பர்களே. சும்மா உளுத்துப்போனதுக்கெல்லாம் சாயம் பூசாதீர்கள்.

  கலகம்

 4. mr. கலகம்
  இஸ்லாம் ஒன்றும் மதமல்ல அது மார்க்கம் வாழ்க்கைக்கான வழிகாட்டி.
  “குர்ரான் மட்டுமல்ல எந்த மத நூலுமே அந்த காலத்தில் இருந்த மனிதன் தனக்கு தெரிந்ததை மட்டும் எழுதினான்/எழுதினார்கள்.”
  உங்களால் முடிந்தால் திருக் குர் ஆன் மனிதர்களால் எழுதப்பட்டது என்று நிரூபித்து விட்டு மேலே பேசுங்கள். அகில உலகையும் படைத்து பரிபாலிக்கும் அந்த ஏகனின் அருட் கொடையை உங்களைப்பொன்றவர்களால் களங்கப்படுத்திவிட முடியாது.

  mr. செங்கொடி
  இப்படி வெறிபிடித்தவர்களையெல்லாம் ஏன் அனுமதிக்கிறீர்கள்?
  “இவர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டே துரத்தியாக வேண்டும்.(நாட்டை மட்டுமில்லை உலகத்தை விட்டே)”

 5. அப்துல் காதிர் சொல்வதை ஆமோதிக்கிறேன். இப்படிப்பட்டவர்களை உலகத்தை விட்டே துரத்தவேண்டும் என்பது போன்ற கருத்துக்களை அனுமதிக்காதீர்கள். இதனை வைத்து இந்த பக்கத்தை வன்முறையை தூண்டும் பக்கம் என்று மூஃமீன்கள் பிரச்சாரம் செய்வோம்.

  ஆனால், காபிர்களின் விரல்களையும் வெட்டிவிடு, காபிர்களின் கழுத்தை வெட்டு, அவர்கள் முஸ்லீமாக மாறும் வரை அவர்கள் மீது ஜிகாத் தொடு, என்பது போன்ற வசனங்களை இறக்கிய பேரருளாளன் அல்லாஹ்வையே வணங்குவோம்.

  அல்குரான் இந்த உலக மக்களுக்கு பெரும் கொடை என்பது என்ன சும்மாவா? அதுவும் ஏராளமானவர்களை காபிர்களாக பிறக்க வைத்த அல்லாஹ் அந்த காபிர்களுக்கு கொடுக்கும் அன்பை சொல்லவும் திகட்டுமே!

 6. முன்பெல்லாம் செங்கொடியின் கட்டுரைக்கும்,கட்டுரைக்கு மறுமொழியில் சந்தேகம் கேட்கும் சகோதரர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு எனக்கு தெரிந்த அளவுக்கு பதில் கொடுத்து வந்தேன்.ஆனால் போக போகத்தான் அவர்கள் கேட்பது சந்தேகத்தை தெரிந்து கொள்வதற்கல்ல என்பதை உணர்ந்தேன்.அதனால்தான் நான் பதில் கொடுப்பதை நிறுத்தி கொண்டேன்.சந்தேகங்களைவிட நக்கல்கள் அதிகமாக வந்தது ஆனால் இன்று அதையும் மிஞ்சி ஒருவர் மிரட்டியிருக்கிறார்.

  “இவர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டே துரத்தியாக வேண்டும்.(நாட்டை மட்டுமில்லை உலகத்தை விட்டே)”

  கட்டுரை எழுதுவதின் நோக்கம் என்னவென்பதை தெரிந்து கொண்டோம்.
  “இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல் வழியே” என்ற கட்டுரைகளை எழுதி சந்தேகம் கேட்பது என்ற பெயரில்
  முஸ்லிம்களுக்கெதிராக மக்களை திரட்டும் பணியில் இறங்கியிருக்கிறீர்கள்.அதன் விளைவுதான் நாங்கள் இப்போது காண்பது.முதலில் சந்தேகம்,பிறகு நக்கல்,அதன் பிறகு இன்று மிரட்டுகிறீர்கள், நாளை?
  நீங்கள் நக்கல்,கேலி செய்தாலும்,எங்களுக்கெதிராக மக்களை ஒன்று திரட்டினாலும் சரி நாங்கள்(மறுமை வாழ்க்கையை நம்பும் ஒவ்வொரு முஸ்லிமும்) கொண்ட கொள்கையில் உறுதியாய் இருப்போம்.உங்களுடைய நக்கல்கல்கள்,மிரட்டல்கள் எல்லாம் இம்மையில்தான் மறுமையில் நாங்களே வெற்றி பெற்றவர்களாவோம். இம்மையில் நீங்கள் செய்யும் கேலிகளையும்,மிரட்டல்களையும் பொறுத்து கொள்கிறோம் எங்கள் இறைவன் எங்க(நம்பிக்கையாளர்க)ளுக்கு வாக்களித்த சொர்க்கத்திற்காக.
  நான் இங்கு ஆதரவை தேடி கொள்வதற்காக எழுதவில்லை.மிரட்டல் எப்படி தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்தினாரோ அதுபோலத்தான் நானும் என் மனதிலுள்ளதை வெளிப்படுத்தியிருக்கிறேன்.எனக்கு நன்றாக தெரியும் இதற்கும் நீங்கள் கேலி செய்வீர்கள். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.
  அத்தனை நபிமார்களும் பட்ட துன்பத்தை விடவா நாங்கள் பட்டுவிட்டோம்.அதை காட்டிலும் இதெல்லாம் குறைவுதான்.இறுதியில் வெற்றி பெறப்போவதோ ஏக இறைவனின் நம்பிக்கையாளர்கள்தான் என்பதை உணர்வீர்கள்.

 7. நண்பர் அப்துல்லாஹ்,

  நான் பின்னூட்டங்களை தடுத்துவைப்பதில்லை, அவர்கள் எப்படி எழுதியிருந்த போதிலும். ஒருவர் தவறாக ஒரு பின்னூட்டமிட்டால் அதை திருத்தாமல் வெளியிடுவதன் மூலமும், அதற்கு வரும் எதிர்வினைகள் மூலமும் குறிப்பிட்ட அவரை சரியான வினையாக்கலுக்குள் கொண்டுவர முடியுமா எனும் முயற்சியினால். நண்பர் மிரட்டல் எழுதிய குறிப்பிட்ட அந்த வரிகள் எனக்கும் உடன்பாடில்லாதவை தான். மற்றப்படி என்மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். நான் தெரிந்து கொண்ட இஸ்லாத்தை வெளிப்படையான கட்டுரைகள் மூலம் அதன் உள்ளீடுகளை வெளிச்சமாக்குவதன் வாயிலாக நான் ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கையான பொதுவுடமையின் பால் மக்களை அணிதிரட்டும் ஒரு முயற்சிதான் இது. இதை விளக்கமாக நுழைவுவாயில் எனும் முன்னுரையில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். நீங்கள் உங்கள் கருத்துக்களை தைரியமாக இங்கு முன்வைக்கலாம், யாருடைய கருத்தும் இங்கு தடுக்கப்படாது என்பதுடன், விமர்சனங்களை ஏற்கவும், தவறிருந்தால் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் ஆயத்தமாகவே இருக்கிறேன். இவை இஸ்லாம் எனும் மதத்திற்கு எதிரான கட்டுரைகளே தவிர இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல. சக மனிதர்களாக வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவதன் தேவையை வலியுறுத்துவது தானேயன்றி வேறெந்த நோக்கமும் எனக்கில்லை.

  தோழமையுடன்
  செங்கொடி

 8. இவ்வளவு அறிவு படைத்த நபிகள் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள மெக்காவுக்கும் மேதினாவுக்கும் ஏன் ஓடினார் என்று தெரியவில்லை? யாராவது விளக்குங்களேன்:(

 9. அப்துல்லா அவர்களே.
  இசுலாமியர்கள் சாந்தியும் சமாதானமும் கொண்ட உள்ளமு படைத்தவர் கள் என்பதுபோல் கதைக்கவேண்டாம். மிரட்டல்விடுவதும் பத்வா கொடுப்பதும் போன்ற கயமைத்தனங்களை செய்வதில் முதன்மையானவர்கள் நீங்களே. எனக்கு வந்த மிரட்டல்கள் நிறைய.
  படியுங்கள் எனது புத்தகத்தை

 10. நிச்சயம் படிக்கிறேன் காட்டுங்கள் உங்களுடைய வலைப்பதிவை.

 11. கம்யூனிஸத்திற்கு இஸ்லாமியர்களை கண்டால் பிடிக்காதோ என்னவோ.சைனாவில் உய்குர் முஸ்லிம்கள் எத்தைனை பேரை கொன்றொழித்திருக்கிறது என்பதை இநத சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தவகல்களை பாருங்கள்.

  —————————————————————-
  ஆஃப்கானிஸ்தானில் எத்தனைபேரை கொன்றிருக்கின்றது என்பதை இந்த சுட்டியை பாருங்கள்.
  http://thamizmani.blogspot.com/2008/01/blog-post_24.html
  இப்ப குரானில் தவறு என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்?
  எப்ப எப்ப என்னென்ன யுத்திகளை கையாளுவதில் கம்யூனிஸ்ட்டுகள் புத்திசாலிகள்தான்(!) இன்னும் எத்தனை உயிர்கள் கம்யூனிஸ்டுகளால் போக தயாராகி கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
  கம்யூனிஸத்தின் கொடி சிகப்பு நிற(இரத்த)மாகவும் ஆயுதமும் இருப்பது எதனால் என்பது புரிகிறதா? ஜாக்கிரதையா இருந்துகொள்ளுங்கள் மக்களே.

 12. அன்புள்ள கார்த்திக்,

  கம்யூனிஸ்டு கொள்கை தவறு என்பதாலோ, அல்லது கம்யூனிஸ்டுகள் தவறு என்பதாலோ அல்குரான் சரியாகிவிடுமா?

  நீ மட்டும் ஒழுங்கா? என்று கேட்பது நம் முஸ்லீம்கள் பாணி. இந்து மதம் குப்பை, கிறிஸ்துவம் குப்பை என்று நீட்டி முழக்குவோம். ஆனால் இஸ்லாம் குப்பை என்று யாரேனும் நிரூபித்தால் பொங்கி எழுவோம். நீ யார்? கிறிஸ்துவனா? உன் மதம் மட்டும் ஒழுங்கா என்றுதான் பொங்கி எழுவோம். எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலே சொல்லமாட்டோம்.

  அல்குரான் தவறு என்றால் தவறுதான். அல்குரான் முகம்மதின் உருவாக்கம் என்று யாரேனும் நிரூபித்தால், அதனைத்தான் எதிர்த்து வாதிட வேண்டும். நீ கம்யூனிஸ்டு. அது மட்டும் ஒழுங்கா என்று கேட்பது சரியான வாதம் அல்ல. அது அல்குரான் முகம்மதின் உருவாக்கமே என்று ஒத்துக்கொள்வது போலத்தான்.

  நீங்கள் உண்மையிலேயே கார்த்திக் என்ற பெயர் சூட்டிக்கொள்ள வாழ்த்துக்கள்.

  குடும்ப சூழ்நிலையால் மட்டுமே எனக்கு அந்த தைரியம் இன்னும் வாய்க்கவில்லை.

  வாழ்த்துக்கள்

 13. “”””””””””குடும்ப சூழ்நிலையால் மட்டுமே எனக்கு அந்த தைரியம் இன்னும் வாய்க்கவில்லை””””””””””””””””””
  என்ன பொல்லாத சூழ்நிலை.நீங்கள் உங்களுடைய மதத்தை மனதளவில் தூக்கியெரிந்த பின்னர் ஏன் இன்னும் அதிலேயே விழுந்து கிடக்க வேண்டும்.நீங்கள் என்ன இன்னும் சின்ன குழந்தையா?
  நீங்க வளர்ந்துவிட்ட பின்னர் எதற்க்காக தாமதிக்க வேண்டும்.உங்களுக்கென்று சுய அறிவு இருக்கிறதல்லவா.

  நீங்கள் மனதளவில் உங்களுடைய மதத்தை தூக்கியெரிந்த பின் இன்னும் ஏன் அதனுடனே ஒட்டி கொண்டிருக்கின்றீர்கள் என்பது எனக்கு புரியவில்லை.
  “நம் முஸ்லீம்கள் பாணி” ஏன் முஸ்லீம்களின் பாணி என்று மட்டுமே குறிப்பிடவேண்டியதுதானே.
  “”இந்து மதம் குப்பை, கிறிஸ்துவம் குப்பை என்று நீட்டி முழக்கு”வோம்”.
  இந்து மதம் குப்பை கிறித்தவம் குப்பை என்று நீட்டி முழக்குவார்கள் என்று குறிப்பிடவேண்டியதுதானே?
  “ஆனால் இஸ்லாம் குப்பை என்று யாரேனும் நிரூபித்தால் பொங்கி எழு”வோம்”.
  ஆனால் இஸ்லாம் குப்பை என்று யாரேனும் நிரூபித்தால்(இஸ்லாமியர்கள்) பொங்கி எழுவார்கள் என்று சொல்லவேண்டியதுதானே?
  வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் பின்பற்றிய மதத்தோடு உங்களை இணைத்து கொண்டிருக்கின்றீர்கள்.அது ஒரு சாக்கடை என்றும் சொல்கிறீர்கள்.அதை விட்டு வெளியேறாத காரணம் குடும்ப சூழ்நிலை என்று பொய்யுறைக்கின்றீர்கள்.

 14. கார்த்திக்,

  நீ மட்டும் ஒழுங்கா என்பதில்தான் இன்னமும் நிற்கிறீர்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. இல்லையென்றால், பதில் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அதாவது அல்குரான் முகம்மதின் உருவாக்கமே. அல்லாஹ் என்பது முகமதின் கற்பனையே. இல்லையா?

  பெயர் மாற்றம்: அதற்கு ஒரு நேரம் வரும். நான் தூக்கி எறிவேன். அது என்னுடைய கால நேரத்தை பொறுத்தது. ஆனால், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நான் என் நண்பர்களிடம் இதன் குப்பையை சொல்லித்தான் வருகிறேன்.

  நிச்சயம் இதிலிருந்து வெளியேறுவேன். அதில் சந்தேகம் வேண்டாம். என் பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ நான் படும் கஷ்டத்தை படவேண்டுமா?

  இன்றைக்கு அவர்களிடம் உங்களைப்போன்ற தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாத்துவிடலாம். ஆனால் நாளைக்கு இன்னொரு ஒஸாமாவோ, ஜவஹருல்லாஹ்வோ அவர்களை மூளைச்சலவை செய்ய வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆயிரக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் சிமி என்றும், இன்னும் பல்வேறு பெயர்களில் தீவிரவாதத்தில் இறங்கியதையும் அதனை தடுக்க வழியறியாது பெற்றவர்கள் திகைத்ததையும் பார்த்தவன் நான்.
  என் குழந்தைகளுக்கோ அல்லது என் பேரப்பிள்ளைகளுக்கோ அந்த நிலை வேண்டாம் என்று நான் கருதினால் அவர்களது அடையாளத்தை மாற்றித்தான் ஆகவேண்டும். நிச்சயம் மாற்றுவேன். அது என் வேலை என் சொந்தக்கவலை அதனை நான் பார்த்துக்கொள்வேன்.

  என்னளவில் செங்கொடி செய்துவரும் இந்த அளப்பரிய பணியின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இஸ்லாம் என்ற தீய மார்க்கத்திலிருந்து மனிதர்களாக ஆக்கப்போகிறது என்று தெரிகிறது. அவர்கள் தாங்கள் முஸ்லீம்கள் என்ற அடையாளத்தை இழந்தாலே அவர்களும் அவர்களது சந்ததிகளும் தப்புவார்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு முன்னால், இஸ்லாம் என்பது முகம்மதின் உருவாக்கமே, அதில் அல்லாஹ் என்பது முகம்மதின் கற்பனையே என்பதை நிரூபிப்பது முக்கியம். அதனையே செங்கொடி செய்துவருகிறார்.

 15. “””””””நீ மட்டும் ஒழுங்கா என்பதில்தான் இன்னமும் நிற்கிறீர்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. இல்லையென்றால், பதில் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அதாவது அல்குரான் முகம்மதின் உருவாக்கமே. அல்லாஹ் என்பது முகமதின் கற்பனையே. இல்லையா?”””””””””””””””””””””””””
  நான் ஒருமுறை குரானுக்கு வக்காளத்து வாங்கியதால் என்னை ஒரு முஸ்லிம் என்று அடையாளபடுத்திவிட்டீர்கள்.
  எனக்கு கம்யூனிஸத்தை பிடிக்கவில்லை.கம்யூனிஸத்தின் எதிரி எனக்கு நண்பன்.அந்த முறையில்தான் நான் பதிலளித்தேன்.செங்கொடி கம்யூனிஸத்திற்கு ஆள்சேர்க்கிறார்.அது அவருடைய உரிமை.நான் கம்யூனிஸத்தை எதிர்க்கிறேன் இது எனது உரிமை.
  செங்கொடி பைபிளைப்பற்றியோ,பகவத் கீதை பற்றியோ கட்டுரை எழுதினாலும் நான் எனது கருத்தை வெளியிடுவேன்.பைபிளுக்கு வக்காலத்து வாங்கினால் நான் கிறித்தவனா?
  எனக்கு கம்யூனிஸ கொள்கைதான் எதிரி.கம்யூனிஸத்திற்கு யார் யாரெல்லாம் எதிரியாக் இருக்கின்றார்களோ அவர்களெல்லாம் எனக்கு நண்பன்.(பல கோடி அப்பாவி மக்களை கொன்றொழித்த கம்யூனிஸம்)
  “”””””””””””””””நிச்சயம் இதிலிருந்து வெளியேறுவேன். அதில் சந்தேகம் வேண்டாம். என் பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ நான் படும் கஷ்டத்தை படவேண்டுமா? “””””””””””””””””””””””””””””””””
  அது உங்களுடைய உரிமை.
  “””””””இன்றைக்கு அவர்களிடம் உங்களைப்போன்ற தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாத்துவிடலாம். ஆனால் நாளைக்கு இன்னொரு ஒஸாமாவோ, ஜவஹருல்லாஹ்வோ அவர்களை மூளைச்சலவை செய்ய வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். “””””””””””””””””
  இது உங்களுக்கும் உங்கள் சமுதாயத்திற்குமுள்ள பிரச்சினை அதில் நான் தலையிடப்போவதில்லை. என்னை நீங்கள் எப்படி தீவிரவாதியென்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது.இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும்.
  “”””””””””””””””””நீ மட்டும் ஒழுங்கா என்பதில்தான் இன்னமும் நிற்கிறீர்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. இல்லையென்றால், பதில் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அதாவது அல்குரான் முகம்மதின் உருவாக்கமே. அல்லாஹ் என்பது முகமதின் கற்பனையே. இல்லையா?”””””””””””””””””””””””””””
  நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிகொண்டால் அதற்கு நான் பொருப்பில்லை.குரான் முகமதுவுடைய கைசரக்கோ (அ) அல்லாவின் உருவாக்கமோ,முகமதுவுடைய கற்பனைதான் அல்லா என்றெல்லாம் எனக்கு கவலையில்லை.(நான் எற்கனவே சொல்லிவிட்டேன் கம்யூனிஸத்திற்கு யார்யாரெல்லாம் எதிரிகளோ அவர்களெல்லாம் எனது நண்பர்கள்).
  “””””””””””””””””””””””””என்னளவில் செங்கொடி செய்துவரும் இந்த அளப்பரிய பணியின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இஸ்லாம் என்ற தீய மார்க்கத்திலிருந்து மனிதர்களாக ஆக்கப்போகிறது என்று தெரிகிறது. அவர்கள் தாங்கள் முஸ்லீம்கள் என்ற அடையாளத்தை இழந்தாலே அவர்களும் அவர்களது சந்ததிகளும் தப்புவார்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு முன்னால், இஸ்லாம் என்பது முகம்மதின் உருவாக்கமே, அதில் அல்லாஹ் என்பது முகம்மதின் கற்பனையே என்பதை நிரூபிப்பது முக்கியம். அதனையே செங்கொடி செய்துவருகிறார்”””””””””””””””””””””””
  செங்கொடி செய்துவரும் பணியைதான் நானும் செய்து கொண்டிருக்கிறேன்.செங்கொடிக்கு இஸ்லாமை பிடிக்காததுபோல் எனக்கு கம்யூனிஸத்தை பிடிக்கவில்லை அவ்வளவுதான்.அவர் கம்யூனிஸத்திற்கு ஆள் சேற்கிறார்.பல கோடி மக்களை கொன்றொழித்த கம்யூனிஸத்தில் யாரும் விழுந்துவிடக்கூடாதென மக்களுக்கு என்னால் முடிந்த எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறேன்.

 16. உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை; இயற்பியலில் அது தானாகவே உருவானது என்று உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், அண்மையில் புதிதாக வெளியிட்டுள்ள ‘தி கிராண்ட் டிசைன்’ எனும் நூலில் எழுதியுள்ளார். அமெரிக்காவைச் சார்ந்த மற்றொரு இயற்பியல் விஞ்ஞானி லியோனார்டு லோடினோவ் என்பவருடன் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார். இந்த உலகம் (பிரபஞ்சம்) உருவாவதற்கு முன்பு மிகப் பெரும் வெற்றிடம் இருந்தது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை; கடவுள் உருவாக்கவும் இல்லை. தத்துவவாதிகள் (மதவாதிகள்) கூறுவது போல், உலகத்துக்கு வெளியிலிருந்தும் எவரும் படைக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. “கடவுள் வந்து, தடவிப் பார்த்து, உலகமே நீ உருவாகு’ என்று கூறுவது அபத்தமானது என்றும் ஹாக்கிங் கூறியுள்ளார்.

  விண்வெளி ஆய்வுக்கு தனது ஆராய்ச்சிகள் வழியாக பெரும் பங்காற்றியவர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ். பூமியை உருவாக்குவதில் ‘கடவுளுக்கும்’ பங்கு இருக்கலாம் என்ற கருத்தையே ஏற்கனவே முன் வைத்தார். அந்தக் கருத்தை, இப்போது தாம் மாற்றிக் கொண்டு விட்டதாக புதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய நூல் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போது வெளியிட்ட ஆய்வு நூலில், கடவுளுக்கும் பிரபஞ்சம் உருவானதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார். புதிய நூலில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

  “எனக்கு நானே இரண்டு கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறேன். முதல் கேள்வி, இந்த பிரபஞ்சம் உருவானதற்கான காரணம், நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காகவே கடவுள், இந்த உலகை உருவாக்கினாரா? இது முதல் கேள்வி. அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில், உலகம் (பிரபஞ்சம்) உருவானதா என்பது இரண்டாவது கேள்வி.

  இதில் இரண்டாவது கேள்வியையே நான் ஆதரிக்கிறேன். இயற்பியல் கோட்பாடுகள்தான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்று நான் கூறுவதை, நீங்கள் ஏற்கத் தயங்கினால், அந்த அறிவியலுக்கு, கடவுள் என்று நீங்களே பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதில், எந்தக் கடவுளும் உரிமை கோர முடியாது என்பதே எனது உறுதியான கருத்து” – என்று தனது நூலில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

 17. நண்பர் கார்த்திக் ,
  /////எனக்கு கம்யூனிஸ கொள்கைதான் எதிரி.கம்யூனிஸத்திற்கு யார் யாரெல்லாம் எதிரியாக் இருக்கின்றார்களோ அவர்களெல்லாம் எனக்கு நண்பன்./////
  நீங்கள் கம்யூனிஸ கொள்கைகளை எதிர்க்கலாம் ஆனால் அதற்காக பல போலிகளை ஆதரிக்கலாமா ?
  ஒரு தீமையை (உங்கள் கூற்றுப்படி கம்யூனிஸ கொள்கை) அழிக்க இன்னொன்றை ஆயுதமாக்கலாமா?
  நீங்கள் துணைக்கு அழைக்கும் மதங்களின் கொடூரத்தன்மை கம்யூனிஸ கொள்கைகளை விட மோசமானது என்பதை அறிவீர்களா?

 18. Mr.Ibnu Basheer avarkale unaku Dill irunthal TNTJ udan Neradi vivatham Nadatha thayara? Ipadi arivial theriyamal pesura nee…. Unaku Dil irunthal TNTJ udan orey Meadiyil vivatham nadathu paakalam…

 19. Mr.Ibnu Basheer avarkale….Neegal TNTJ udan Live ah vivatham nadatha mudiuma? Unnai Seeikaram allah intha ulaktha vitte thuratha poran.Appo therium un kirukalkal….poli endru….

 20. அதாவது ஆரம்பகால பிரபஞ்சத்தில் 72 விழுக்காடு கரும்பிண்டமாக இருந்தது எனவும் இக்கரும்பிண்டங்களின் திணிவிலிருந்து விண்மீன்கள் தோன்றின என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். ==============
  நீ முட்டாளா இல்லை முட்டாளாக நடிக்கிறாயா? கருதுவதை வைத்து எப்படி குரானை சந்தேகிக்க முடியும்? அறிவுடன் செயல்படவும்

 21. 21:30, 41:11 மட்டுமல்ல வேறு சில வசனங்களும் உண்டு, அது உனக்கு தெரியாது உன் அறிவு அவ்வளவுதான், அதனால் நல்ல முறையில் படித்து தெரிந்து கொண்டு வரவும்

 22. கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம்………….. இந்த வசனத்தில் இருக்கும் விளக்குகளால் எனும் சொல் விண்மீன்கள் கோள்களை குறிக்கிறது. எனவே வானம் என்பதற்கு பூமியை தவிர ஏனைய அனைத்தும் என்று பொருள் கொள்வது குரானின் படியே முரணானது.===============அலங்கரித்தோம் என்றுதான் உள்ளது, வானத்தை உண்டாக்கினோம் என்று இல்லை

 23. 21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s