அனைவருக்கும் அருள் பாலித்த‌ லிபரான் அறிக்கை

மாட்சிமை தாங்கிய ஆட்சிமை வழங்கும்(!) பெருமை மிகு பாராளுமன்றத்தில் வெளியிடும் முன்பே நாளிதழ்களில் வெளியாகி விட்டது லிபரான் அறிக்கை. அடுக்குமா இது, இந்தியாவுக்கே தலைகுனிவல்லவா எகிரிக்குதிக்கின்றன ஓட்டுக்கட்சிகள். காட் ஒப்பந்தம் முதல் இப்போதைய அணு ஒப்பந்தம் வரை நாடாளுமன்றத்தில் வைக்காமலேயே நடப்புக்கு வந்தபோதெல்லாம் அடங்கியிருந்த கோபம் லிபரான் அறிக்கையில் பொங்கி வழிகிறது. 17 ஆண்டுகள் 48 முறை கால நீட்டிப்பு சற்றேறக்குறைய 8 கோடி ரூபாய் செலவு இவ்வள‌வையும் செரித்துவிட்டு லிபரான் அறிக்கை தந்திருக்கும் சாறு வாஜ்பாய், அத்வானி, பால் தாக்கரே, மற்றும் காங்கிரஸ் அமைச்சர் வகேலா உட்பட அறுபதிற்கும் மேற்பட்டோர் மசூதி இடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் என அறிவித்திருப்ப‌து. 92 டிசம்பர் 6க்கு மறுவாரத்தில் தேனீர்கடைகளில் பேசப்பட்ட உண்மையை கண்டுபிடிக்க 17 ஆண்டுகள்; கோபம் வரவேண்டிய இந்த இடத்தில் யாருக்கும் கோபம் வரவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் நாளிதழ்களில் வந்துவிட்டதால் இரு அவைகளும் அமளியில் அதிர்ந்தது. ஏன்? ஏனென்றால் மெய்யாகவே இது கோபமில்லை, கோபமாக வெளிப்படுத்தப்படும் மகிழ்ச்சி.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேதுறையில் ஊழல் நடந்திருக்கிறது, அதை விசாரிக்கவேண்டும் என்று தற்போதைய அமைச்சர் மம்தா பானர்ஜி நேரடியாக சிபிஐ க்கு கடிதம் எழுதியதால் காங்கிரசுக்கு  என்ன செய்வது என்று தர்மசங்கடம். தங்கவிலை எகிறுவது போல் நாளுக்கு நாள் மது கோடாவின் சொத்துக்கணக்கு எகிறுவதால் ஏதாவது செய்து திசைதிருப்பியாக வேண்டிய நிர்ப்பந்தம். அலைவரிசை ஊழலில் திமுகவை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும் முடியாமல் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூழல்,  இவைகளை மந்திரம் போட்டாற்போல் மறக்கடிக்க வைக்கும் ஒன்றாக கிடைத்தது அறிக்கை கசியவிடப்பட்டது. எனவே ஆளும் கும்பலுக்கு மகிழ்ச்சி.

ஆர் எஸ் எஸ் மோகன் பகவத்தை நேரடியாக எதிர்த்து அறிக்கை விட்ட ராஜ்நாத், தேர்தல்களில் அடிக்கு மேல் அடிவாங்கிய கலக்கத்திலும் பிரதமர் கனவு தகர்ந்து போன அதிர்ச்சியிலும் அத்வானி. இனியும் ராமன் பயன்படமாட்டான் என்று பரணில் வீசியாயிற்று வேறு யாரைச்சொல்லி  நடத்திச்செல்வது என்ற குழப்பத்தில் கட்சி. ஒரு வழியாக அடுத்த தலைவரை தேர்வு செய்து விட்டாலும் மல்லுக்கு நிற்கும் சுஷ்மாவையும் மனோகர் ஜோஷியையும் என்ன செய்வது என்ற கவலை. எல்லாவற்றுக்கும் மேலாக லிபரானை காரணம் காட்டி காங்கிரஸ் பழி வாங்கினால் அதை எப்படி கட்சிக்கான ஓட்டாக மாற்றுவது என்ற யோசனை. இவ்வளவிலிருந்தும் ஆசுவாசப்பட அருமணியாய் வாய்த்தது அறிக்கை கசியவிடப்பட்டது. எனவே காவிக்கும்பலுக்கு மகிழ்ச்சி

ஆண்டு தோறும் டிசம்பர் 6 நினைவு நாளைப்போல் கொண்டாட மக்களை பழக்கி விட்ட போதிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு இத்தனை ஆண்டுகளாக சட்டரீதியாகவே இழுத்தடிக்கப்பட்டபோதிலும், பாபர் பள்ளியை சொல்லியே அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியாக  ஓரளவு ஒன்று திரட்டிவிட்ட போதிலும்; இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஆதரவை இப்படியே தக்கவைக்க முடியும் எனும் வேளையில் மிகச்சரியாய் வந்த லிபரான் அறிக்கையும், எதிர்பார்த்தது போலவே இந்து பாசிசங்களை குற்றம் சாட்டி வந்ததும் மதவாத கும்பல்களுக்கு மகிழ்ச்சி

லிபரான் அறிக்கையுடனேயே தாக்கல் செய்யப்பட்ட மேல் நடவடிக்கை திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை குறித்த எந்த உருப்படியான திட்டமும் இல்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு உறுதி என்று நாளிதழ்கள் வாயிலாக சவடால் அடிப்பதில் எந்தக்குறைவும் இல்லை. ஆக திட்டமிட்ட நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுவிட்டது. இதில் பார்வையாளர்களான மக்கள் தான் வழக்கம் போல் பாதிப்புக்கு உள்ளாகி நிற்கிறார்கள்.

நடப்பு ஆண்டில் மட்டும் பல‌முறை சர்க்கரை விலை  உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கரும்பு கொள்முதல் விலையோ உயர்த்தப்படுவதில்லை. கரும்பு கொள்முதல் விலை சட்டத்தை எதிர்த்து கரும்பு விவசாயிகள் ஒன்றுகூடி தலைந‌கரில்  போராட்டம் ஒன்றை நடத்திக்காட்டினார்கள். லிபரான் அறிக்கை சுனாமியில் கரும்பு கட்டுமரங்கள் தூக்கிவீசப்பட்டன. ஒட்டுக்கட்சிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் ஒருங்கிணைவையும் தளராத போராட்டத்தையுமே கோரி நிற்கின்றன. அதை நோக்கி நகர்வது தான் மக்களின் முன்னுள்ள ஒரே தெரிவாக இருக்கிறது. இதையும் தன் லிபரான் அறிக்கை கசிவு உணர்த்தி நிற்கிறது.

28 thoughts on “அனைவருக்கும் அருள் பாலித்த‌ லிபரான் அறிக்கை

 1. செங்கொடி,

  மிகச்சரியாகவே, காங்கிரஸ் கட்சியின் ஊழல்களிலிருந்து மக்களை திசை திருப்ப லிபரான் முன்னுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை கூறியிருக்கிறீர்கள்.

  அதனை விட முக்கியமானது ஒன்று இருக்கிறது.

  பாபர் மசூதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், பாபர் மசூதி இடிப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

  இன்றும் ஏராளமாக இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மசூதிகள் தாக்கபப்டுகின்றன. பாகிஸ்தானில் பல மசூதிகளுக்குள் குண்டு வைத்து மசூதிகளும் உள்ளே தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்களும் முஸ்லீம்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர். இதே தான் ஈராக்கிலும் நடந்துவருகிறது. ஷியா மசூதிகள் மீது சுன்னிகள் தாக்குவதும், சுன்னி மசூதிகள் மீது ஷியாக்கள் தாக்குவதும், ஏராளமாக நடந்திருக்கிறது.

  இருப்பினும் இத்தனை ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஒரே ஒரு முறை இந்து் பயங்கரவாதிகள் ஒரு மசூதியை உடைத்திருக்கிறார்கள். அதற்குப் பின்னரும் ஒரு மசூதி இவர்களால் உடைக்கபப்டவில்லை அதற்கு முன்னரும் இவர்களால் ஒரு மசூதி உடைக்கப்படவில்லை.

  ஆனால், இந்த மசூதி உடைப்பை காரணமாக வைத்துக்கொண்டு ஏராளமாக கோவில்கள் பாகிஸ்தனிலும் பங்களாதேஷிலும் உடைக்கப்பட்டிருக்கின்றன. இன்னமும் முஸ்லீம்களால் உடைக்கப்பட்டு வருகின்றன.

  இந்த மசூதி உடைப்புக்கு முன்னாலும் பின்னாலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் காஷ்மீரில் ஏராளமான கோவில்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.

  ஏன் மற்ற மசூதி உடைப்புகள் யாராலும் பேசப்படுவதில்லை? ஏன் இந்துக்கள் உடைத்த ஒரே ஒரு மசூதி உலக மகா முக்கியத்துவம் பெறுகிறது?

  அந்த மசூதி உடைப்பை ஏன் இந்திய ஊடகங்கள் இவ்வளவு பெரிய விஷயமாக ஆக்குகின்றன. ஏன் மற்ற மசூதி உடைப்புகளும் மற்ற கோவில் உடைப்புகளும் ஒருவராலும் பேசப்படவில்லை?

  இவைகளைப் பற்றி பேசாமல் இந்த மசூதி உடைப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பேசுவது முஸ்லீம்கள் எப்போதும் இந்துக்களுக்கு விரோதிகளாகவே இருக்கவேண்டும் என்று இந்து பயங்கரவாதிகளும், இந்திய ஊடகங்களும், முஸ்லீம் தீவிரவாதிகளும் நினைப்பதாலேயே வருகிறது.

  இதுவே மக்கள் ஒருங்கிணைப்புக்கு எதிரான ஒரு முக்கியமான கருவியாக இன்று இந்திய ஆளும் வர்க்கத்தால் உபயோகப்படுகிறது. அதற்கு துணை போகும் இஸ்லாமிய தீவிரவாதிகளும், இந்து தீவிரவாதிகளும் தொடர்ந்து பாபர் மசூதியை பேசுகிறார்கள்.

  பாபர் மசூதியில் கோவில் இருந்தாலும் சரி மசூதி இருந்தாலு்ம் சரி, உழைக்கும் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் ஒரு பைசா பிரயோசனமும் கிடையாது.
  பாபர் மசூதியை வைத்து பேசும் ஒவ்வொருவரும் மக்களின் விரோதிகளே!

 2. அறிவழகன் சார்

  நிங்க சொல்வதில் உண்மையும் பொய்யும் கலந்துள்ளது

  1, உடைகப்பட்ட கோவிலையோ மசூதியயையோ யாரும் இதுவரை உரிமைகொண்டாடியது இல்லை பாபர் மசூதியை ப்போல்

  2,பாகிஸ்தானில் நடப்பது அரசியல் அதிகாரம்
  யாருக்கு வேணும் என்பதர்க்காக

  //இருப்பினும் இத்தனை ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஒரே ஒரு முறை இந்து் பயங்கரவாதிகள் ஒரு மசூதியை உடைத்திருக்கிறார்கள்//

  3,அதர்க்காக இதைப்பத்தி பேசாமல் இருந்தால் அந்த பயங்கரவாதிகள் லிஸ்ட்டில் இன்னும் பல நூரு மசூதிகள் உள்ளது என்கிரார்களே அதையும் உடைப்பார்கள் பரவாஇல்லையா?

  //இந்த மசூதி உடைப்புக்கு முன்னாலும் பின்னாலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் காஷ்மீரில் ஏராளமான கோவில்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.//

  4,உண்மைதான் சார் அனால் அதை இந்திய அரசாங்கமும் ரானுவமும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது இல்லை சுட்டு தள்ளுகிரார்கள் அதே நிலைதான் இங்கும் வேண்டும்

  // முஸ்லீம்கள் எப்போதும் இந்துக்களுக்கு விரோதிகளாகவே இருக்கவேண்டும் என்று இந்து பயங்கரவாதிகளும், இந்திய ஊடகங்களும், முஸ்லீம் தீவிரவாதிகளும் நினைப்பதாலேயே வருகிறது//

  5,இதை கலைவதர்க்குதான் நாம் ஒன்றுப்படவேண்டும்
  இந்தியா இந்தியாவாக இருக்கவேண்டும் என்றால் இந்துவும் முஸ்லீமும் சகோதரத்துடன் வாழவேண்டும்.

 3. ரஜவம்சம்,
  அறிவழகன் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வதில் சமாளிப்புதான் இருக்கிறது.

  1) காஷ்மீரில் உடைக்கப்பட்ட கோவில்களுக்கு எதிராக இந்திய அரசாங்கத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அது மட்டுமல்ல, காஷ்மீரில் ஆளும் நேசனல் கான்பரன்ஸ் கட்சியும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, அப்படி கோவில்களை உடைத்தவர்களை ஒன்றும் செய்யவில்லை. இத்தனைக்கும் முஃப்டி முகமது சையது என்ற காங்கிரஸ் மந்திரி (பின்னால் முதலமைச்சாராகவும் ஆனவர்) முன்னின்றுதான் கோவில்களை உடைத்தார். அவை செய்திகளே ஆவதில்லை என்பதால் உங்களுக்கு தெரியவில்லை. அவ்வளவுதான். உரிமை கொண்டாடிய அனைத்து காஷ்மீர இந்துக்களையும் துரத்திவிட்டுவிட்டார்கள். அவர்கள் ஜம்முவிலும் மற்ற இடங்களிலும் அகதி முகாம்களில் இன்ற்ம் வாழ்கிறார்கள்.
  இந்த இந்துக்கள் இருக்க இடமே இல்லாமல் இருக்கிறார்கள். இதில் எங்கே இந்து கோவில்களுக்கு உரிமை கொண்டாடுவது?

  2) இந்து பயஙக்ரவாதிகள் மசூதியை உடைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அது மசூதியாகவே இல்லை என்பதுதான் உண்மை. ராஜீவ் காந்தி அதனை இந்துக்கள் வழிபட திறந்து விடும் முன்னர் அது பிரிட்டிஷ் காலத்திலிருந்து பூட்டியே கிடந்தது. இந்தியாவெங்கும் எந்த இடத்திலும் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று இருக்கும்போது அந்த துண்டு நிலத்துக்க்காக பிரிட்டிஷ் காலத்திலிருந்து போராடி வரும் இந்துக்கள் மடையர்கள். நீங்கள் ரொம்ப புத்திசாலி. விட்டுக்கொடுக்காத முஸ்லீம்கள் பரந்த மனம் படைத்தவர்களா?

  3) சரி பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்து கோவில்களை உடைக்கிறார்களே முஸ்லீம்கள். அவர்களை நோக்கி எப்போதாவது யாருடைய விரல்களாவது நீண்டதுண்டா?

  முஸ்லீம்கள் மசூதிகளை உடைதுக்கொள்ளட்டும். மசூதிக்குள்ளேயே குண்டு வைத்து அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுகொல்லட்டும். அது அப்படித்தான் அழியும்.

  அவர்களது மதத்தின் ஆரம்பமே மற்றவர்களது கோவில்களை உடைத்து அங்கு தங்கள் மசூதியை வைப்பத்தான். காபாவிலிருந்து பாபர் மசூதி வரைக்கும்.

  அதற்கு ஒரு முடிவு வரும். வர வேண்டும்.

 4. நிலா ,RSS க்கு ஆள் சேர்க்க போகலாம் நீங்க..முஸ்லிம் தீவிரவாதிகள் எவ்வளவு தவறோ , அதே போல் இந்து தீவிரவாதிகள் செய்வதும் தவறே. பாபர் மசூதி ,இந்த இரு கும்பலுக்குமே அரசியல் செய்ய மக்களின் மத வெறியை தூண்டிவிட பயன்படுகிறது. காஷ்மீரில் இந்துக்கள் துரத்த பட்டதற்காக ,முஸ்லிம்களை துரத்த வேண்டும் என்று சொல்வீர்கள் போலவே .. குஜராத்தில் 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு ,அப்பாவி இந்துக்களை கொன்றால் ஏற்றுகொள்ள முடியுமா..?

 5. “”””””அவர்களது மதத்தின் ஆரம்பமே மற்றவர்களது கோவில்களை உடைத்து அங்கு தங்கள் மசூதியை வைப்பத்தான். காபாவிலிருந்து பாபர் மசூதி வரைக்கும்.

  அதற்கு ஒரு முடிவு வரும். வர வேண்டும்””””””””””””””””
  ஏக இறைவனை வணங்கிகொண்டிருந்த மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டதுதான் காபா ஆலயம்.இணை வைப்பவர்களிடமிருந்து மீண்டும் அதை ஏக இறைவனை வணங்கும் (முஸ்லிம்)கூட்டமே பெற்று கொண்டது.அதுபோல இதற்கும் (பாபர் மசூதிக்கும்) ஒரு முடிவு வராமலா போய்விடும்.

 6. matt,
  முஸ்லீம் தீவிரவாதிகள் செய்வது தவறு என்று எப்போது நீங்கள் சொன்னீர்கள்? இது கேட்டதும்தானே சொல்கிறீர்கள்?
  எத்தனை முறை முஸ்லீம்கள் இந்துக்கோவில்களை இடிப்பதற்கு எதிராக எழுதியிருக்கிறீர்கள்? அல்லது வினவு, செங்கொடி, அல்லது எந்த முஸ்லீம் பதிவர் இந்துக்கோவில்களை முஸ்லீம்கள் இடிப்பது தவற் என்று எழுதியிருக்கிறார்? காட்டமுடியுமா?
  ஆனால் எவ்வளவு பக்கங்கள் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து எழுதப்பட்டுள்ளன!

  குஜராத்தில் 3000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்களா? எந்த ஆதாரத்தில் எழுதியிர்க்கிறீர்கள்? அதே குஜராத் கலவரத்தில் எவ்வளவு பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற் மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்திய அரசு (காங்கிரஸ் அரசு) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது என்று தெரியுமா?

  700 பேர்கள் முஸ்லீம்கள், 530 பேர்கள் இந்துக்கள்.
  மோடியின் குஜராத் அரசு கலவரத்தை அடக்க எத்தனை இந்துக்களை கொன்றுள்ளது என்று தெரியுமா? 100க்கும் மேல்.
  மீத இந்துக்கள் எல்லோரும் முஸ்லீம்களால்தான் கொல்லப்பட்டார்கள். முஸ்லீம்களால் கொல்லப்பட்ட இந்துக்களுக்காக எப்போதேனும் நீங்கள் வருந்தியதுண்டா?

  முஸ்லீம்களுக்கு ஆதரவாக வாதம் செய்வதில் தவறில்லை. ஆனால், உண்மையை முன்னே வைத்துக்கொண்டு வாதம் செய்யுங்கள். பொய்கள் உதவாது.

 7. அப்துல்லாஹ்,
  //ஏக இறைவனை வணங்கிகொண்டிருந்த மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டதுதான் காபா ஆலயம்.//
  அப்படி என்று முஸ்லீம்கள் சொல்லிக்கொள்கிறீர்கள்.
  அதில் 365க்கும் மேற்பட்ட விக்கிரகங்கள் இருந்தன. அவற்றை உடைத்து தூக்கி எறிந்துதானே காபாவை அல்லாஹ் மசூதி ஆக்கினார்?
  அதில் முன்னால் ஏக இறைவனை வணங்கிக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

  //இணை வைப்பவர்களிடமிருந்து மீண்டும் அதை ஏக இறைவனை வணங்கும் (முஸ்லிம்)கூட்டமே பெற்று கொண்டது.அதுபோல இதற்கும் (பாபர் மசூதிக்கும்) ஒரு முடிவு வராமலா போய்விடும்.//

  ஆமாம். பாபர் மசூதி வைப்பதற்கு முன்னால் ராமர் கோவில் இருந்தது. அதற்கு முன்னால், அங்கு அல்லா மசூதி இருந்தது. அதனை உடைத்துத்தான் ராமர் கோவில் கட்டினார்கள். அதனை உடைத்து பாபர் மசூதி கட்டினார். திரும்பவும் அதில் அல்லா மசூதி வைக்கப்போகிறீர்கள்.
  நல்லாத்தான் இருக்கு. நீங்கள் உருவாக்கும் போலி வரலாறுகள்.

  சரி அப்துல்லாஹ்,
  ராம் ஜன்ம பூமியை விடுவோம். அதற்கு பிறகு வருவோம்.

  வங்காளத்தில் மால்டாவில் அதீனா மசூதி இருக்கிறது.
  http://www.historyofbengal.com/Maldah_article.html
  அதில் இன்னமும் முகப்பில் பிள்ளையார் சிலை இருக்கிறது. கோவிலை உடைத்து மசூதி பண்ணியதை சரியாக செய்யவில்லை.

  இது மாதிரி எத்தனை இணையப்பக்கங்கள் ஆதாரம் வேண்டும்? அத்தனை மசூதிகளும் முன்னால் கோவில்களை இடித்து கட்டப்பட்டவை.
  அவைகளும் உங்களது அரபி ஏக்க இறைவனது மசூதிகளாக இருந்தவையா?

 8. “”700 பேர்கள் முஸ்லீம்கள், 530 பேர்கள் இந்துக்கள்.
  மோடியின் குஜராத் அரசு கலவரத்தை அடக்க எத்தனை இந்துக்களை கொன்றுள்ளது என்று தெரியுமா? 100க்கும் மேல்.
  மீத இந்துக்கள் எல்லோரும் முஸ்லீம்களால்தான் கொல்லப்பட்டார்கள். “””””””””

  இதென்ன புது கதையை கூருகிறீர்கள்.TEHELKA வில் தாங்கள் செய்த தவறு(வதங்)களை ஒப்பு கொண்டு கம்பீரமாய் சொன்னார்களே.மறந்து போய்விட்டதா என்ன.முஸ்லிம்களை கருவருக்க வேண்டுமென RSS,பஜ்ரங்தள் அமைப்பினர் இந்துக்களை தூண்டியதாக ஒப்புகொண்ட வீடியோவை மறந்து போய்விட்டீர்களா என்ன?
  முஸ்லிம்களுக்கெதிராக கலவரத்தில் ஈடுபட மறுத்த இந்துக்களை மிரட்டியதை ஒப்புகொண்டதையும் மறந்து விட்டீர்களா என்ன?
  மோடி கலவரத்தை கலைத்தாரா இது பெரிய ஜோக்.(இந்த ஜோக்குக்குதான் முதல் பரிசு)

 9. அப்துல்லாஹ்,

  டெஹெல்கா கொடுப்பது போல இன்னொரு செய்தியும் கொடுக்கலாம். ஊடகங்கள் மூலமாக என்ன பிம்பத்தையும் உருவாக்கலாம்.
  டெஹெல்கா பஜ்ரங்தள் அமைப்பினரை செய்தது போல எந்த முஸ்லீம்களையும் இப்படி திருட்டு வீடியோ செய்திருந்தால், அங்கும் நாறியிருக்கும். ஆனால், இந்திய ஊடகங்களும், வினவு, செங்கொடி முதலானோரும் முதலில் இந்துக்களைத்தான் வில்லன்களாக சித்தரிப்பார்கள். முஸ்லீம்கள் செய்யும் அட்டூழியங்களை பேசினால்தானே பிரச்னை?

  அப்துல்லாஹ்,

  குஜராத்தில் கொல்லப்பட்ட 700 முஸ்லீம்களுக்கு பதிலாக எத்தனை இந்துக்கள் இந்தியாவெங்கும் முஸ்லீம்களால் கொல்லப்பட்டார்கள். அதனை கணக்கில் எடுக்கலாமே?

  23 November 2007 Uttar Pradesh serial blasts
  13 May 2008 Jaipur bombings
  25 July 2008 Bangalore serial blasts
  26 July 2008 Ahmedabad serial blasts
  13 September 2008 Delhi serial blasts

  இவற்றில் கொல்லப்பட்ட இந்துக்களின் கணக்கு என்ன?
  இவற்றை எல்லாம் குஜராத் கலவரத்துக்கு பதிலாக செய்ததாக தானே முஸ்லீம்கள் கூறிக்கொள்கிறார்கள்

 10. ////23 November 2007 Uttar Pradesh serial blasts
  13 May 2008 Jaipur bombings
  25 July 2008 Bangalore serial blasts
  26 July 2008 Ahmedabad serial blasts
  13 September 2008 Delhi serial blasts ///

  Ask in your RSS office, they will show you their guts and ferocious faces lively in front of you with proud. If not, ask Modi, he will tell you every episode right from sabarmathi ashramam’s ‘Ismayil’ to Gothra to Goa.

  Very recently Goa police blocked the next serial blast episode plan of ‘your RSS people’. And I’m asking you now, which is your next episode in that bomb blast serial. Atleast tell me here, which will be useful to protect many nonRSS hindus while bomb blasting (-which is the ‘action’), and then many many many muslims from your RSS people, because of your ‘reaction’.

  Get lost. Give freedom to India. We (all religions) want to live in peace.

 11. “”””””டெஹெல்கா பஜ்ரங்தள் அமைப்பினரை செய்தது போல எந்த முஸ்லீம்களையும் இப்படி திருட்டு வீடியோ செய்திருந்தால், அங்கும் நாறியிருக்கும். “””””””””””””””””””””
  அதெப்படி நிலா நீங்கள் இந்து என்று குறிப்பிடாமல் பஜ்ரங்தள் என்று குறிப்பிடுகிறீர்கள்.அதையே ஒரு முஸ்லிம் செய்திருந்தால் அவனை தனிமை படுத்தாமல் முஸ்லிம்கள் என்று ஒட்டு மொத்த சமுதாயத்தையே இழுக்கிறீர்கள்.இதில் தெரிகிறது உங்களுடைய நடுநிலை.
  “””””””””””23 November 2007 Uttar Pradesh serial blasts
  13 May 2008 Jaipur bombings
  25 July 2008 Bangalore serial blasts
  26 July 2008 Ahmedabad serial blasts
  13 September 2008 Delhi serial blasts

  இவற்றில் கொல்லப்பட்ட இந்துக்களின் கணக்கு என்ன?””””””””””””””””””””””””””
  இதில் முஸ்லிம்களும் கொல்லப்பட்டிருக்கிறார்களே.
  குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களை கொன்றாதற்க்காகத்தான் இத்தனை குண்டுவெடிப்புகளும் செய்தார்கள் என்றால் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுள் முஸ்லிம்களும் அடங்குகிறார்களே அப்படியென்றால் இதென்ன கணக்கு?

 12. அப்புதுல்லா

  கோவில்களை இடித்து உங்கள் அரபி ஏக்க இறைவனுக்கு மசூதிகளை கட்டியவர்களும் இப்படி பயங்கரவாதிகளா? அல்லது வெறுமே முஸ்லீம்களா?

  அந்த மசூதிகள் கோவில்கள் மீது கட்டப்பட்டவை என்று பாபர், அக்பர் அவுரங்கசீப்பு சுல்தான்கள் எல்லோரும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதனையும் திருப்பி தந்து அங்கு கோவில் கட்ட ஏற்பாடு செய்கிறீர்களா?

  எப்படி வசதி?


  என்னுடைய நடுநிலை எப்படியோ போகட்டும். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். டெஹெல்கா பஜ்ரங்க் தளத்தினரை செய்தது போல எந்த முஸ்லீம் அமைப்பையும் செய்திருந்தாலும் இப்படித்தான் நாறியிருக்கும் என்ற் ஒப்புக்கொள்கிறீர்களா?

  இந்தியன் முஜாஹிதீன் ஆட்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களிடம் பேட்டி கேட்டு வெளியிடலாமே?

  கோவையில் குண்டு வைத்தவர்களையே ஜிகாதிகள் என்று பாராட்டி கூட்டம் போட்டு தியாகிகளாக்கி காசு வசூலித்து கொடுத்த கூட்டமெல்லாம் என்ன வெறும் பயங்கரவாதிகளா அல்லது சாதாரண முஸ்லீம்களா?

  கோவை குண்டு வெடிப்பில் கூடத்தான் ஒரு சில முஸ்லீம்கள் செத்து போயிருப்பார்கள். அதனை பற்றி கேள்வி கேட்க வேண்டியது என்ன இந்துக்களிடமா அல்லது குண்டு வைத்த முஸ்லீம்களிடமா?
  கோவையில் குண்டு வைத்து இறந்து போனதில் ஒரு சில முஸ்லீம்கள் இருந்தால், அந்த குண்டுகளை வைத்தது இந்துக்கள் என்ற் ஆகிவிடுமா?

  உளறலுக்கு ஒரு எல்லை இருக்கிறது. தீபாவளி கூட்டத்திலும், வெள்ளிக்கி்ழமை தொழுகை நேரத்திலும் குண்டு வைக்கிறார்கள். கோவிலுக்குள் குண்டு வைக்கிறார்கள். இதெல்லாம் குஜராத்தில் கொல்லப்பட்ட 700 முஸ்லீம்களுக்காக என்று சொல்கிறார்கள். அறிக்கை விடுகிறார்கள். அந்த குண்டுகளில் சில முஸ்லீம்களும் இறந்து போயிருந்தால், அதற்காக நீங்கள்தான் அந்த பயங்கர்வாதிகளிடம் கேட்க வேண்டும்.

  காபிர்களை கொல்லுவதாக சொல்லிக்கொள்ளும் தாலிபானும் அல்குவேதாவும் அதிகமாக கொன்றது முஸ்லீம்களைத்தான். (ஷியா முஸ்லீம், தங்கள் பேச்சை கேட்காத முஸ்லீம், பாகிஸ்தானை கடுப்பேற்ற பெஷாவரில் மார்கெட்டில் போய் வந்துகொண்டிருக்கும் முஸ்லீம் என்று இப்படித்தான் கொல்கிறார்கள்.

  முஸ்லீம்கள் வாழும் நாடுகள் எல்லாம் இப்படித்தான் அழிந்துகொண்டிருக்கின்றன.

 13. இந்து முன்னணி என்கிற பெயரில் போஸ்டர் ஒட்டி ராமகோபாலன் விநாயகர் ஊர்வலத்தை குறிப்பாக மசூதிகளின் வழியாக நடத்துகிறானே ,எதற்கு ? கலவரத்தை உருவாக்கத்தானே..அந்த ஊர்வலங்களில் எத்தனை பார்பான் கலந்து கொள்கிறான்? எல்லோரும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களே..! அவர்களையே கலவரத்திற்கும் பயன்படுத்துவது.. மலேக்கான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் என்ற 37 வயது பெண் சாமியார் பற்றி ஒருவார்த்தை திறக்கவில்லையே இந்துத்துவ குஞ்சுகள் ..நிலா திறப்பாரா..! நாங்கள் எவரும் முஸ்லிம் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை ,வன்மையாக எதிர்க்கிறோம் ,அதே போல் இந்துத்துவ பயங்கரவாதிகளையும் எதிர்க்கிறோம்.

 14. “”””””அந்த மசூதிகள் கோவில்கள் மீது கட்டப்பட்டவை என்று பாபர், அக்பர் அவுரங்கசீப்பு சுல்தான்கள் எல்லோரும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதனையும் திருப்பி தந்து அங்கு கோவில் கட்ட ஏற்பாடு செய்கிறீர்களா? “””””””””””
  எந்த மசூதிகள் என்று குறிப்பிடுங்களேன்.

  “””””””””””கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். டெஹெல்கா பஜ்ரங்க் தளத்தினரை செய்தது போல எந்த முஸ்லீம் அமைப்பையும் செய்திருந்தாலும் இப்படித்தான் நாறியிருக்கும் என்ற் ஒப்புக்கொள்கிறீர்களா? “”””””””””””””””””””
  யார் செய்தாலும் தவறுதான். முஸ்லிம்கள் செய்தாலும் தவறுதான்.தாராளமாக பேட்டி கண்டு வெளியிடட்டுமே.

 15. “”””இந்தியன் முஜாஹிதீன் ஆட்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களிடம் பேட்டி கேட்டு வெளியிடலாமே?””””””””””””

  இந்த கேள்வியை ஏன் எங்களிடம் கேட்கிறீர்கள்.டெஹல்காவிடமல்லவா கேட்க வேண்டும்.

  “”””””””””கோவை குண்டு வெடிப்பில் கூடத்தான் ஒரு சில முஸ்லீம்கள் செத்து போயிருப்பார்கள். அதனை பற்றி கேள்வி கேட்க வேண்டியது என்ன இந்துக்களிடமா அல்லது குண்டு வைத்த முஸ்லீம்களிடமா?”””””””””””
  குண்டு வைத்தவன் இந்துவா,முஸ்லிமா என்று ஏன் பார்க்கிறீர்கள் அவன் முதலில் மனிதனா என்று மட்டும் பாருங்களேன்.பிரக்கியா சிங்கை நாங்கள் என்ன ஹிந்து என்றா பார்த்தோம்.பதில் கூறுங்கள் தோழரே.

  “”””””காபிர்களை கொல்லுவதாக சொல்லிக்கொள்ளும் தாலிபானும் அல்குவேதாவும் அதிகமாக கொன்றது முஸ்லீம்களைத்தான். (ஷியா முஸ்லீம், தங்கள் பேச்சை கேட்காத முஸ்லீம், பாகிஸ்தானை கடுப்பேற்ற பெஷாவரில் மார்கெட்டில் போய் வந்துகொண்டிருக்கும் முஸ்லீம் என்று இப்படித்தான் கொல்கிறார்கள்”””””””””””””””””””
  இவர்கள் செய்வது சரியென்று யார் சொல்கிறார்கள்.யார் செய்தாலும் தவறுதான்.

 16. (நிலா: இனி நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். உங்கள் வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன்)

  1-கொடியவர் பயங்கரவாதி காந்தி தற்கொலை செய்து கொண்டார். அதை கொலை என்று திசை திருப்பி அப்பாவி தியாகி கோட்சே அவர்களை அநியாயமாக மாட்டிவிட்டு வீண்பழி சுமத்தி ஆர்.எஸ்.எஸ். மேல் அபாண்டமாய் பழி போட்டு விட்டார்கள்.

  2-பூகம்பத்தில் தானே இடிந்து விழுந்த பாபர் மசூதியை இடித்தார்கள் என்று கதை கட்டி விட்டு விட்டார்கள் கயவர்கள்.

  3-குஜாத்தில் ஆயிரக்கணக்கில் இறந்தவர்கள் அனைவரும் ஒரே நாளில் கூட்டாக தற்கொலை செய்து கொண்டவர்கள். தெஹல்காவின் வீட்டில் இடி விழ.

  4-எங்கெல்லாம் குண்டு வெடிக்குதோ வெடிக்குமோ, வெடித்ததோ – அதற்கு முஸ்லிம்கள்தான் காரணம். அவ்வளவு ஏன், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு போட்டது கூட அல்கொய்தாதான் என்ற குழந்தைக்கும் தெரிந்த உண்மையை மூடி மறைத்து விட்டார்கள், பொய்யர்கள்.

  5-ஒரிஸ்ஸாவில் பாதிரியார் எரிந்ததுக்கு காரணம் அவர் சிகரட்டை அணைக்காமல் பெட்ரோல் டாங்க்கில் போட்டதுதான். கன்னியாஸ்திரியை கற்பழித்ததெல்லாம் அந்த பாதிரியார்தான். செத்தவுடன் உயிர்த்தெழுந்து வந்து இந்த ஈனச்செயலை செய்தார். பாவம் ஒரு பக்கம், பழி வேறு பக்கம்.

  வாழ்க ஹிந்துத்வா. வளர்க ஆர்.எஸ்.எஸ்.

 17. matt,

  பிரக்யா சாமியார் எல்லாம் பயங்கரவாதிகள்தான். அதில் ஒரு மாற்று கருத்துமில்லை. அவர்களை நான் ஆதரிப்பதாக பூச்சாண்டி காட்டவேண்டாம்.

  ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக இந்துக்களின் கோவில்களை உடைத்தும் இந்துக்களை கொன்றும் வந்திருக்கிற முஸ்லீம்களை கண்டிக்காமல், ஒரே ஒரு சாமியார் எதிர்வினை புரிந்த்தற்கு என்ன எகிறி குதிக்கிறீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். ஆயிரக்கணக்கான கோவில்கள் முஸ்லீம்களால் இடிக்கப்பட்டிருக்கின்றன. அவை உங்களை போன்றோரால் விமர்சிக்கப்படவே இல்லை. ஆனால்; ஒரு மசூதி இந்துக்களால் இடிக்கப்பட்டதற்கு என்ன எதிர்வினை வருகிறது!

  அப்துல்லாஹ்,
  ஏற்கெனவே இணைப்புகளை கொடுத்திருக்கிறேன். படித்து பாருங்கள்.

  இந்துக்கோவில்கள் மட்டுமல்ல..
  http://en.wikipedia.org/wiki/Conversion_of_non-Muslim_places_of_worship_into_mosques

  http://voiceofdharma.org/books/htemples1/

  இந்த கோவில்களை திருப்பி தருகிறார்களா முஸ்லீம்கள்?

  நீங்கள் விட்டுவிட்ட ஒரு விஷயத்தை திரும்ப கேட்கிறேன்.
  //கோவையில் குண்டு வைத்தவர்களையே ஜிகாதிகள் என்று பாராட்டி கூட்டம் போட்டு தியாகிகளாக்கி காசு வசூலித்து கொடுத்த கூட்டமெல்லாம் என்ன வெறும் பயங்கரவாதிகளா அல்லது சாதாரண முஸ்லீம்களா?//


  நிலாவின் துணைக்கோள்,
  பாவம் இதே விஷயத்தை முஸ்லீம்களிடம் கேளுங்களேன்.
  முஸ்லீம்கள் செயுயும் அட்டூழிய்ங்கள் எல்லாம் மற்றவர்களால் செய்யப்படுபவை என்ற் சொல்பவர்கள் அவர்கள்தான்

 18. சகோதரர் அப்துல்லாஹ்

  இவ்வாறு காபிர்களிடம் பேசுவது தேவையற்றது.
  குர்ஆன் 2:115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகிறது.
  ஆகவே இறைவனை வணங்குவது என்பது அல்லாஹ்வை வணங்குவது மட்டுமே.மற்ற பொய்தெய்வங்களை வணங்குவதை அழிப்பது சரியானதுதான்.

  9:29 வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

  அல்லாஹ் எல்லோருக்கும் வேதத்தை அருளியுள்ளான்.

  உலகம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.
  காபிர்கள் அனைவரும் இஸ்லாத்தை தழுவும் வரையிலும் எல்லா முஸ்லீம்களும் காபிர்கள் மீது ஜிகாத் தொடுத்தே ஆகவேண்டும்.

  அப்படி விருப்பமில்லாத முஸ்லீம்கள் தங்களை முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்ள வேண்டாம். தாராளமாக இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாவோ ஆகிவிடலாம்.

  9:9 அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் – நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.

  அப்படிப்பட்ட காபிர்களாகிவிட்ட முஸ்லீம்கள் மீதே தாலிபான் போர் தொடுக்கிறார்கள். அவர்களது மசூதிகளை உடைக்கிறார்கள்.

  9:109 யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.

  9:110 அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது)¢ அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்¢ ஞானமிக்கவன்.

  ஆகவே முஸ்லீம்கள் இந்துக்களின் கோவில்களை உடைத்து மசூதிகளை அங்கு எழுப்புவது அல்லாஹ்வின் ஆணைப்படியே.

 19. ரொம்ப சூப்பர்..

  அப்துல்லாஹ், உங்கள் நண்பர் குரான் ஆதாரமாக நீங்கள் செய்யும் அட்டூழியங்களை பட்டியல் போடுகிறார்.

  கோவில்களை உடைக்கவே இல்லை என்று நீங்கள் சாதிக்கிறீர்கள். ஆதாரம் காட்டுகிறேன். உங்களிடமிருந்து பதில் வரவில்லை.

  கோவில்களை உடைப்பது அல்லாவின் ஆணைப்படியே என்று ரஹ்மத் கூறுகிறார். உங்களிடமிருந்து பதில் வரவில்லை.

 20. “”””””””””ரொம்ப சூப்பர்..

  அப்துல்லாஹ், உங்கள் நண்பர் குரான் ஆதாரமாக நீங்கள் செய்யும் அட்டூழியங்களை பட்டியல் போடுகிறார். “””””””””

  நண்பர் நிலா அவர்களுக்கு,

  ரஹ்மத் மறுமொழியை படித்தேன். அவர் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது என்பதை அவருடைய வரிகளை படிக்கும்பொழுதே தெரிந்துகொண்டேன்.அவரை நான் ஒரு மனிதனாக கூட கர்பனை செய்யவில்லை.பிறகு நான் எதற்காக அவரை திட்டவோ (அ) அறிவுரை கூரவோமுடியும்.
  அவருடைய முயற்சி எங்களுக்கெதிராக உங்களையெல்லாம் திரட்ட வேண்டும்.நாட்டில் கலவரத்தை உண்டாக்கிட (அதில் இவர்கள் மட்டும் சுகமாய் குளி காய )வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு மிருகம்.அதே சமயம் தன்னை முஸ்லிம்போல் காட்டிகொள்ள வேண்டும் அதற்கு தேவை ஒரு முஸ்லிம் பெயர் “ரஹ்மத்”.(முஸ்லிபோல காட்டி கொண்டு மற்றவர்க்ளை திட்டினால்தானே முஸ்லிம்களுக்கெதிராக மக்களை திரட்ட முடியும்)
  இங்கு மறுமொழியிடுபவர்கள் யார் வேண்டுமானாலும் எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.இது இவர்களைப்போன்ற கயவர்களுக்கு வசதியாக இருக்கிறது.முகத்தை காட்ட தேவையில்லை,முகவரி கொடுக்க தேவையில்லை எனும் போது யார் வேண்டுமானலும் ஒரு சமுதாயத்துக்கு ஆதரவு கொடுப்பது போல எதிர்க்கவும்,எதிர்ப்பதைப்போல அதரவும் கொடுக்க முடியுமே.
  உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால் இந்த மறுமொழியையே எடுத்து கொள்ளுங்கள் “நிலாவின் துணைகோள்” என்று ஒரு சகோதரர் ஒரு மறுமொழி கொடுத்தாரே அது உங்களுக்கு ஆதரவாகவா எழுதினார்?
  ரஹ்மத் என்பவர் முஸ்லிமில்லையென்றால் அவர் ஏன் குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்ட வேண்டும் என்ற ஐயமும் உங்களுக்கு ஏற்படலாம்.குர்ஆன் வசனங்களை முஸ்லிம்கள் மட்டும்தான் பயன்படுத்துகிறார்களா என்ன?

  “””””””””””””””””கோவில்களை உடைக்கவே இல்லை என்று நீங்கள் சாதிக்கிறீர்கள். ஆதாரம் காட்டுகிறேன். உங்களிடமிருந்து பதில் வரவில்லை.””””””””””””””””””””””””””””””

  ஒவ்வொருவருடைய ஆட்சி மாற்றங்களுக்கேற்ப ஒவ்வொரு வழிபாட்டுதளமும் மாறி மாறி தகர்க்கப்பட்டது என்பது தவிர்கமுடியாத உண்மை.(இதில் அனைவரும் அடங்கும்).

  “””””””””””””””கோவில்களை உடைப்பது அல்லாவின் ஆணைப்படியே என்று ரஹ்மத் கூறுகிறார். உங்களிடமிருந்து பதில் வரவில்லை.”””””””””””””””””””””””””””””””””””
  இது மாபெரும் தவறு.இதற்கு அந்த ரஹ்மத்திடம் ஆதாரம் கேளுங்கள்.

  நண்பர் நிலா அவர்களுக்கு என்னுடைய சிறிய வேண்டுகோள்.முகம் தெரியாத முகவரி தெரியாத நபர்கள் கூருவதை பெரிதுபடுத்தாதீர்கள்.நான் என்னுடைய அனுபவத்தை வைத்துதான் சொல்கிறேன்.”மிரட்டல்” என்பவர் (நண்பரோ(அ) எதிரியோ எப்படி வேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம்)”முஸ்லிம்களை இந்த நாட்டை விட்டே துரத்தவேண்டும்.நாட்டை மட்டுமில்லை உலகத்தை விட்டே துரத்த வேண்டும்” என்று ஒரு மறுமொழி கொடுத்திருந்தார்.அது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.எவனோ முகம் தெரியாத முகவரியில்லாத ஒருவன் சொன்னதை ஏன் பெரிது படுத்திகொள்ளவேண்டும் என்று பிறகு என் மனதை சமாதானப்படுத்திகொண்டேன்.

 21. அப்துல்லாஹ்,

  உங்கள் பதில் கண்டு மகிழ்கிறேன்.

  ***ஒவ்வொருவருடைய ஆட்சி மாற்றங்களுக்கேற்ப ஒவ்வொரு வழிபாட்டுதளமும் மாறி மாறி தகர்க்கப்பட்டது என்பது தவிர்கமுடியாத உண்மை.(இதில் அனைவரும் அடங்கும்).***

  ****
  “””””””””””””””கோவில்களை உடைப்பது அல்லாவின் ஆணைப்படியே என்று ரஹ்மத் கூறுகிறார். உங்களிடமிருந்து பதில் வரவில்லை.”””””””””””””””””””””””””””””””””””
  இது மாபெரும் தவறு
  ***
  கோவில்களை உடைத்தது மன்னர்கள் என்று சொல்கிறீர்கள்.
  அது மாபெரும் தவறு. அப்படி அல்லாவின் ஆணை ஒன்றும் இல்லை என்றும் கூறுகிறீர்கள்.
  ஆகவே இந்த மன்னர்கள் செய்தது தவறுதானே?

  அல்லாவின் ஆணை இல்லாத ஒன்றை இந்த மன்னர்கள் செய்துவிட்டதை திருத்தி சரி செய்வதுதானே முறை?

  ஆயிரக்கணக்கான கோவில்கள் இப்படி மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளன என்று ஆதாரப்பூர்வமாக காட்டியிருக்கிறேன்.

  அவற்றை திருப்பி இந்துக்களிடமே கொடுப்பதுதானே முறை?

  முஸ்லீம் தலைவர்களிடம் பேசி இதற்கு ஆவண செய்யுங்கள்.

 22. நிலா,
  நீங்கள் நேர்மையாளராக இருந்தால், ஆரம்பத்தில் இருந்து வரவும்.

  முதலில் ஆயிரக்கணக்கான சைவ சமயக்கொவிள்களை இடித்தார்களே. அதற்கு கணக்கு தீர்க்கவும்.

  பின்னர் ஆயிரக்கணக்கான வைணவக்கொவில்களை இடித்தார்களே அதற்கு கணக்கு தீர்க்கவும்.

  பின்னர் நூற்றுக்கணக்கான புத்த ஆலயங்களை இடித்தார்களே அதற்கு கணக்கு தீர்க்கவும்.

  அதன் பிறகு நூற்றுக்கணக்கான சமண கோவில்களை இடித்தார்களே அதற்கு கணக்கு தீர்க்கவும்.

  மேலே சொன்ன அனைத்துக்கும் வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

  நானே எனது பள்ளி நாட்களில் ஆறு முதல் பத்து வரை வகுப்புக்களின் என் வரலாறு புத்தகங்களில் படித்து இருக்கிறேன்.

  அதன்பிறகு இல்லவே இல்லாத ராமர்கொவிலுக்கும் ஆதாரமற்ற அதன் ‘இடிப்புக்கும்’ (??காற்றை இடித்தார்களோ??) வரவும்.

  பாபர்மசூதி இடிக்கப்பட்டதற்கு உங்களிடம் வேண்டுமானால் ஆதாரம் இல்லாமல் இருக்கலாம். என்னிடமும் உலகம் முழுவதும் ‘கண்ணால் கண்ட சாட்சியங்கள்’ இருக்கின்றனர் என்பதை இங்கு தைரியமாக பதிவு செய்கிறேன்.

 23. அன்புள்ள நண்பர் நிலா அவர்களுக்கு,

  இந்த இணைப்பில் இருக்கும் கட்டுரையை சற்று படிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
  http://www.tntj.net/?p=7656

  “””””””””””ஆயிரக்கணக்கான கோவில்கள் இப்படி மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளன என்று ஆதாரப்பூர்வமாக காட்டியிருக்கிறேன்.

  அவற்றை திருப்பி இந்துக்களிடமே கொடுப்பதுதானே முறை? “”””””””””””””””

  நீங்கள் கேட்பது நியாயமான ஒன்றுதான்.கோயில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதிகள் கட்டப்பட்டிருந்தால் அந்த இடத்தை ஹிந்துக்களிடம் திருப்பி கொடுப்பதுதான் நியாயமானது.
  “”””””””””””முஸ்லீம் தலைவர்களிடம் பேசி இதற்கு ஆவண செய்யுங்கள்.””””””””””””””””””””””””””””””””
  முதலில் பாபர் மசூதியை எடுத்துகொள்வோம்.(இதுதான் நாட்டில் பெறும் பிரச்சனையாக இருக்கிறது).
  பாபர் மசூதிக்கு முன் உண்மையாகவே அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது “நிரூபனமானால்” நான் ஹிந்துக்களுக்கு support பண்ணுவேன்.நீங்கள் சொல்வதுபோல் என்னால் முஸ்லிம் தலைவர்களிடமெல்லாம் பேச முடியாது காரணம் நான் ஒரு சாதாரண ஆள். என்னால் முடிந்தது என் பேச்சை யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு “உங்கள் பக்கத்திலுள்ள நியாயத்தை” எடுத்துரைப்பேன்.

 24. ஷமீம்,

  கேள்விக்கான பதிலை அப்துல்லாஹ் கூறிவிட்டார்.
  கிறிஸ்துவர்கள் மசூதியை திருப்பித்தந்தால்தான் முஸ்லீம்கள் சர்ச்சை திருப்பித்தரவேண்டும் என்று அல்லா கூறியிருக்கிறாரா?

  முஸ்லீம் மன்னர்கள் செய்தது அல்லாவுக்கு புறம்பானது. அல்லாவின் பார்வையில் அது மாபெரும் தவறு என்று அப்துல்லா கூறுகிறார்.

  அல்லாவின் கருத்துக்கு எதிரான செயலை செய்த நீங்கள்தான் அதனை சரி செய்யவேண்டும்.

  மற்றவர்கள் சாராயம் குடிக்கிறார்கள் என்பதற்காக முஸ்லீம்கள் சாராயம் அருந்துவீர்களா?

  உங்களுடைய மதத்தின் படி தவறான ஒன்றை நீங்கள் செய்யக்கூடாது. அது மற்றவர்களை சார்ந்து இல்லை.

  இது என்னுடைய பக்க நியாயம் அல்ல. இது உங்கள் பக்க நியாயம். அது படி நீங்கள்தான் நடக்கவேண்டும். அதனை நீங்களே வற்புறுத்த வேண்டும்.
  ————–
  அன்புள்ள அப்துல்லாஹ்,

  அவற்றை திருப்பி இந்துக்களிடமே கொடுப்பதுதானே முறை? “”””””””””””””””

  நீங்கள் கேட்பது நியாயமான ஒன்றுதான்.கோயில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதிகள் கட்டப்பட்டிருந்தால் அந்த இடத்தை ஹிந்துக்களிடம் திருப்பி கொடுப்பதுதான் நியாயமானது.–

  உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்ற நிறைய முஸ்லீம்கள் உரத்த குரலுடன் பேச எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  பாபர் மசூதிக்கு முன்பு அங்கு ராமர் கோவில்தான் இருந்தது. டிஎண்டிஜே பக்கத்தில் ஒரு பக்க சார்புடன் எழுதப்பட்டுள்ளது. அங்கு ராமர் கோவில்தான் இருந்தது.
  Mir Baqi allegedly destroyed the temple at Ayodhya, built by the Hindus to commemorate Rama’s birthplace, and built the Babri Masjid, naming it after Emperor Babur.[9] Although there is no reference to the new mosque in Nanur’s diary, the Baburnama, the pages of the relevant period are missing in the diary. The contemporary Tarikh-i-Babari records that Babur’s troops “demolished many Hindu temples at Chanderi”[10]

  Palaeographic evidence of an older Hindu temple on the site emerged from an inscription on a thick stone slab recovered from the debris of the demolished structure in 1992. Over 260 other artifacts were recovered on the day of demolition, and many point to being part of the ancient temple. The inscription on the slab has 20 lines, 30 shlokas (verses), and is composed in Sanskrit written in the Nagari script. The ‘Nagari Lipi’ script was prevalent in the eleventh and twelfth century. The crucial part of the message as deciphered by a team comprising epigraphists, Sanskrit scholars, historians and archaeologists including Prof. A.M. Shastri, Dr. K.V. Ramesh, Dr. T.P. Verma, Prof. B.R. Grover, Dr. A.K. Sinha, Dr. Sudha Malaiya, Dr. D.P. Dubey and Dr. G.C. Tripathi.

  The first twenty verses are the praises of the king Govind Chandra Gharhwal (AD 1114 to 1154) and his dynasty. The twenty-first verse says the following; “For the salvation of his soul the King, after paying his obeisance at the little feet of Vamana Avatar (the incarnation of a god as a midget Brahmana) went about constructing a wondrous temple for Vishnu Hari (Shri Rama) with marvelous pillars and structure of stone reaching the skies and culminating in a superb top with a massive sphere of gold and projecting shafts in the sky – a temple so grand that no other King in the History of the nation had ever built before.”

  இவைகள் ஆதாரப்பூர்வமானவைதான்.

  பாபர் மசூதி- ராம் ஜன்ம பூமியை விவாதப்பொருளாக ஆக்கினாலும், மற்ற கோவில்கள் இப்போதும் மசூதிகளாகத்தான் இருக்கின்றன. அவை இஸ்லாத்துக்கு புறம்பானவை என்று நீங்களும் சக முஸ்லீம்களும் கருதினால், அவற்றை இந்துக்களிடம் திருப்பித் தருவதே முறை.
  உங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி.

 25. அப்துல்லாஹ், ஷமீம்,

  நீங்களே ஒத்துகொண்டபின்னால் ஏன் இன்னமும் இந்துக் கோவில்களை மசூதிகளாக வைத்திருக்கிறீர்கள்?

  தற்போது ஜவஹிருல்லாஹ் பாபர் மசூதியை திருப்பித்தரவேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

  அதற்கு முன்னால், ஏற்கெனவே மசூதிகளாக ஆகியிருக்கும் இந்துக் கோவில்களை திருப்பித்தரவேண்டாமா?

  முதலில் உலகறிந்த ஞான்வபி மசூதி, ஆகியவற்றை மீண்டும் இந்துக்களிடம் திருப்பித்தர சொல்லுங்கள்.

  இல்லையென்றால், நீங்கள் செய்வது நல்லான் சொல்லும் புனித மோசடி என்னும் தக்கியா என்றுதான் கருத வேண்டி வரும்.

  உங்களிடமிருந்தும் உங்கள் தலைவர்களிடமிருந்தும், இதுவரை இந்துக்கொவில்களை ஆக்கிரமித்து அழித்தற்கு மன்னிப்பு கோர வேண்டும் அவற்றை திருப்பித்தர வேண்டும்.

  அது வராத வரை நீங்கள் சொல்வதெல்லாம் ஏமாற்று வார்த்தைகளே.

 26. அன்புள்ள அப்துல்லாஹ், ஷமீம், இன்னும் சகோதர நண்பர்களுக்கு,

  நீங்களே ஒப்புக்கொண்டதுபோல, பிஜே போன்ற தமிழக இஸ்லாமிய தலைவர்களிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிட நீங்கள் பகிரங்கமாக கேட்டுக்கொள்ளலாமே?

  இந்து கோவில்களை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து மசூதிகளாக மாற்றியுள்ளவற்றை இந்துக்களிடமே திருப்பித்தருவோம் என்று நீங்கள் அறிக்கை வெளியிட்டால் உங்களை பற்றி மக்கள் நல்லவிதமாக சிந்திப்பார்களே..

  உங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்

  நன்றி

 27. முஸ்லீம் என்ற மதமே ஹிந்துவுக்கு பின்னர்தான் வந்தது
  தாத்தா சொத்து பேரனுக்கு தானே , அதுதான் தாத்தா கோவிலை பேரன் மசூதியாக மாற்றுகிறான் .
  மன்னித்து விடுங்கள் குறை உள்ளவர்களை ………………

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s