கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 10

நாம் வசிக்கும் பூமியில் முக்கால் பகுதி கடலாகவும் கால்பகுதி மட்டுமே நிலமாகவும் இருக்கிறது. முக்கால் பாகமுள்ள கடலை நம்முடைய வசதிக்காக கடல்களாகவும், பெருங்கடல்களாகவும் பிரித்திருக்கிறோம். சில கடல்கள் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு எல்லைகளுடைய தனிக்கடலாக இருக்கும் மத்திய தரைக்கடலைப்போல. இன்னும் சில கடல்கள் மூன்றுபுறமும் நிலங்களாலும் ஒருபுறம் மற்றொரு கடலாலும் சூழப்பட்டிருக்கும் வங்காள விரிகுடா போல. பொதுவாக கடல்களின் எல்லை என்றால் நிலப்பரப்பு தான். நிலப்பரப்பு அல்லாமல் கடல்களுக்கு எல்லை என்று ஒன்றில்லை. பசுபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் தனித்தனி பெயர்களால் குறிக்கப்பட்டாலும் இவற்றிற்கிடையே எல்லை என்று ஒன்றில்லை, அந்தந்த பகுதியைக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடல் என்றும் பசுபிக் பெருங்கடல் என்றும் அழைக்கிறோம். இரண்டு நாடுகளுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதைப்போல் இரண்டு கடல்களுக்கிடையே எல்லைக்கோடு இருப்பதில்லை. ஆனால் குரானின் இந்த வசனங்களை கேளுங்கள், “அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச்செய்தான்” “அவற்றிற்கிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது அதை அவை மீற்மாட்டா” குரான் 55:19; 55:20. இந்த வசனங்கள் இரண்டு கடல்களுக்கிடையே ஒரு தடுப்பு இருப்பதாக கூறுகிறது. ஆனாலும் அவை என்ன வகையினாலான தடுப்பு? என்ன பண்புகளினாலான தடுப்பு? அவற்றின் செயல்பாடு? எதுவும் விளக்கப்படவில்லை.

இதுபற்றி மதங்கற்ற அறிவியலாளர்கள் கூறுவதைக்கேட்கலாமா? ஆரம்பத்தில் மனிதனுக்கு கடல்கள் எல்லாம் ஒன்று தான் அவற்றினிடையே வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான். பின்னர்தான் விஞ்ஞானிகள் ஒரு கடலுக்கும் இன்னொரு கடலுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்துச் சொன்னார்கள். எல்லாக்கடல் நீரும் உப்பாக இருந்தாலும் அவற்றின் அளவுகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாபெரும் அறிவியல் உண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முகம்மது நபிக்கு எப்படி தெரிந்தது? அதிலும் அவர் படிக்காதவர். இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன? அனைத்தும் அறிந்த அல்லாஹ்தான் முகம்மது நபியின் வழியாக குர் ஆனை இறக்கியிருக்கிறான் என்பது உறுதியாகிறதல்லவா? இப்படிப்போகிறது மதம் படித்த விஞ்ஞானிகளின் விஞ்ஞானம்.

பண்டைய கடலாடிகளுக்கு இது தெரிந்தே இருந்திருக்கிறது. பலநாடுகளுக்கு கடல்கடந்து வணிகம் செய்த வணிகர்களுக்கும் மாலுமிகளுக்கும் கடல் நீரின் தன்மை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்காது என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் கண்களாலும் நாவினாலும் அறிந்து வைத்திருந்த அதை அறிவியலும் உறுதி செய்தது. எல்லா இடத்திலும் கடல் நீரின் உவர்ப்புத்தன்மை ஒரே திறத்தில் இருப்பதில்லை. அந்தந்த இடத்திற்கு ஏற்ப வளரும் கடற்றாவரங்கள் வசிக்கும் கடல் உயிரிகள் மண்ணின் தன்மை நீரோட்டங்களின் விளைவு கலக்கும் ஆற்றுநீரின் அளவு இவைகளின் அடிப்படையில் அந்த கடலின் உப்பு தாதுக்கள் மட்டுமல்லாது நீரின் தெளிவுத்தன்மை உட்பட பல மாறுதல்கள் இருக்கும். இவை வேறு வேறு கடல்களுக்கு என்று மட்டுமில்லை ஒரே கடலிலும் கூட பலப்பல மாறுதல்கள் இருக்கின்றன. வங்காள விரிகுடாவில் தான் சென்னையும், போர்ட் பிளேரும் (அந்தமான் நிகோபர் தீவுகள்) இருக்கின்றன, ஆனால் சென்னை மெரினாவிலும் போர்ட் பிளேர் கடற்கரையிலும் நீரின் தெளிவுத்தன்மை உட்பட எவ்வளவு வித்தியாசங்கள்? ஒரே கடலில் உள்ள வேறுபட்ட தன்மைகளையோ அல்லது வேறு கடல்களின் மாறுபட்ட தன்மைகளையோ தான் குரானின் வசனங்கள் தடுப்பு என குறிப்பிடுகிறதா? குரானின் வசனங்கள் தெளிவாகவே கடல்களின் எல்லை குறித்தே பேசுகின்றன. வசனம் 25:53 இன்னும் தெளிவாகவே இதனை குறிப்பிடுகிறது, “அவன் தான் இரண்டு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று மிக்க இனிமையும் சுவையுமுள்ளது, மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்” கடல் நீரின் சுவை குறித்து கூறினாலும் இரண்டு கடல்களுக்கும் ஒரு வரம்பு இருக்கிறதென்றும், இரண்டினிடையே இருக்கும் தடைய அவைகளால் மீறமுடியாதென்றும் ஐயத்திற்கிடமின்றியே அறிவிக்கிறது.

கடலுக்குள் யாரும் எல்லைக்கோடு பிரித்து வைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், கடலுக்குள் நீரோட்டங்கள் இருக்கின்றன, இந் நீரோட்டங்கள் நிலத்தில் ஓடும் ஆறுகளைப்போல் கடலுக்குள் ஓடுகின்றன. ஒருகடலிலிருந்து மற்றொரு கடலுக்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பாயும் பல கடலடி நீரோட்டங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன? இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன? கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது? ஒன்று தெளிவாகிறது கடலாடி அனுபவமில்லாத முகம்மது, கடலாடிகளிடமிருந்து கடல்நீரின் சுவை வேறுபாடுகளைப்பற்றி அரைகுறையாக செவியுற்று அதையே தன்னுடைய குரானில் தடையாக அரங்கேற்றிவிட்டார். அதையே இவர்கள் மாபெரும் அறிவியல் உண்மையாக அளந்துவிடுகிறார்கள்.

கடலைப்பற்றிய இன்னொரு மாபெரும் அறிவியல் உண்மையும் குரானில் காணக்கிடைக்கிறது. வசனம் 24:40 “அல்லது ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். பல இருள்கள். சில சிலவற்றிற்கு மேல் இருக்கின்றன. அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதை பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை”

இஸ்லாத்தை ஏற்காதவர்களின் நிலையை விவரிக்கும் இந்த வசனம். ஒருவனை அல்லா நேர் வழியில் செலுத்தவில்லை என்றால் அவனுக்கு எந்த நேர்வழியும் இல்லை என எச்சரிக்கிறது. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும் எனும் வாக்கியம் தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மை.

கடலில் ஆழத்தில் செல்லச்செல்ல வெளிச்சம் குறைந்து உள்ளங்கைகளை கூட பார்க்கமுடியாத அளவுக்கு இருட்டாகிவிடும். இது ஒன்றும் யாருக்கும் தெரியாத சங்கதி அல்ல. கடலோடு மனிதனுக்கு தோடர்பு ஏற்பட்ட பிறகு எளிதாக இதை மனிதன் கண்டிருக்கமுடியும். ஆனால் இதையும் பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பான கடல் நீரில் ஒளியின் நிறமாலை நிறங்கள் ஊடுருவும் ஆழம் பற்றிய தகவல்களை ஒன்றிணைத்து பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பை குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்கிறார்கள்

இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. அமெரிக்காவின் கடலாய்வு அறிவியலாளரான பேராசிரியர் வில்லியம் ஹை என்பவர் 1980 களின் தொடக்கத்தில் தாம் ஜித்தா பல்கலைக்கழகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அழைக்கப்பட்ட கதையை விளக்குகையில், தாம் குரானில் கூறப்பட்டிருக்கும் ஆழ்கடல் இருளை அறிவியல் ஆதாரங்களுடன் மெய்பிக்கும் தகவல்களுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தன்னிடம் கோரப்பட்டதை விவரிக்கிறார். ஆனால் தான் அவ்வாறான அறிக்கையை அளிக்காமல் குரானில் கூறப்பட்டிருப்பதும் நிறங்களின் ஊடுறுவும் ஆழமும் தொடர்பில்லாதது என சொற்பொழிவாற்றியதாகவும், பின்னர் தன்னுடைய கட்டுரை மலரில் சேர்க்கப்படவில்லை என்றும் அதற்குப்பதிலாக அதே தலைப்பில் பேராசிரியர் துர்க்கா ராவ் என்பரின் கட்டுரை இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு விசயத்தையும் நீங்கள் கவனிக்கலாம், அறிவியல் உண்மை என மதவாதிகள் ஆராதிக்கும் விசயங்களையெல்லாம் அராய்ந்தால் அவைகளெல்லாம் சௌதி அரேபியாவில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளாக மட்டுமே இருப்பதைக்காணலாம். ஆக அனைத்து ஆற்றல்களையும் கொண்ட அவர்களின் அல்லாவைவிட அறிவியல் நிரூபணம் இஸ்லாத்தின் பரவலுக்கு அவசியம் என்பதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

24 thoughts on “கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

 1. பேராசிரியர் துர்காராவ் கடல் பற்றிய ஆழ்ந்த அறிவு கொண்ட உலகப்புகழ் பெற்ற பேராசிரியர்.

  Prof. Durga Rao is an expert in the field of Marine Geology and was a professor at King Abdul Aziz University in Jeddah.

  அவர் ஜெட்டாவில் இருக்கும் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் கடல் துறை பேராசிரியராகவும் இருக்கிறார்.

  ஜெட்டாவில் பேராசிரியராக இருந்துகொண்டு 20 ஆம் நூற்றாண்டு அறிவியல் குரானில் இல்லை என்று சொன்னால் விட்டுவிடுவோமா?

  சும்மா பெண்டு நிமித்திட மாட்டோம்?

  அப்புறம் சும்மாவா “சிந்திக்க மாட்டீர்களா?” என்று அல்லாஹ் மூஃமீன்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறான்.?

  ஜெட்டாவில இருக்கிற பேராசிரியர்களை எல்லாம் சும்மா சிந்திக்க வச்சிடுவோமில்ல?

 2. வணக்கம் இப்னுபஷீர்(2) அவர்களே,
  உங்களுடைய பணியை சிறப்பா செய்றீங்க(சைஞ்சக்).வாழ்த்துக்கள்.

 3. தோழர் ஸ்டாலின் 130வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், தோழர்கள் பார்வைக்குhttp://vitudhalai.wordpress.com/

 4. “”””””””இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன? இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன? “””””””””””””””””””””””
  என் இஸ்லாமிய சகோதரர்களே கவலை படாதீர்கள்.உங்களுக்காக நான் பதில் தருகிறேன்.ரெடியோவிற்கும் (அ)மொபைல்களுக்கும் உள்ள அலைவரிசைகள் ஒன்றோடொன்று கலந்துவிடாமலிருக்க கண்ணுக்கு தெரியாத தடுப்பை நாம் ஏற்படுத்தி(“program” பண்ணி)யது மாதிரி அல்லாவும் “program” பண்ணிருக்காரோ என்னவோ……..ஹி….ஹி…ஹி

 5. செங்கொடி,

  உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

  அல்குரான் முழுவதும் முகம்மதுவின் உருவாக்கமே. அது அல்லா கொடுத்தது என்று சொல்வது ஒரு ஏமாற்றுவேலை என்ற கருத்து சிலகாலமாகவே இருந்து வந்தது.
  உங்களுடைய கட்டுரைகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

  இஸ்லாம் என்பதே ஒரு பொய் என்ற கருத்து என் நண்பர்களிடையேயும் வலுப்பட்டு வருகிறது. அரபு கலாச்சாரத்தை உலகெங்கும் திணிக்க கடவுளின் பெயரால் திணிக்கப்படும் ஒரு மேலாதிக்கமே இஸ்லாம் என்பதுதான் உண்மை.

  இதற்கு எதிர்ப்புறத்தில் நாம் தமிழ் கலாச்சாரத்தை தூக்கி பிடித்து தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றி பெயர்களை மாற்றி தமிழர்களாக அடையாளம் கண்டுகொள்ளவேண்டியது ஒரு தேவையோ என்றும் சிந்திக்கிறேன்.

  உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
  நன்றி

 6. “”””””””””இஸ்லாம் என்பதே ஒரு பொய் என்ற கருத்து என் நண்பர்களிடையேயும் வலுப்பட்டு வருகிறது. அரபு கலாச்சாரத்தை உலகெங்கும் திணிக்க கடவுளின் பெயரால் திணிக்கப்படும் ஒரு மேலாதிக்கமே இஸ்லாம் என்பதுதான் உண்மை. “”””””””””””””””””””
  இஸ்லாம் என்றால் ஒரு மதம் மட்டும்தானே. “இஸ்லாம் என்பதே பொய்” என்று நீங்கள் சொல்வதைப்பார்த்தால் அதனுள் வேறென்னென்ன விஷயங்கள் உள்ளடக்கியிருக்கிறது?
  என்னென்ன அரபு க்லாச்சாரங்கள் இதுவரை புகுத்தப்பட்டிருக்கிறது?
  “””””””””””””‘இதற்கு எதிர்ப்புறத்தில் நாம் தமிழ் கலாச்சாரத்தை தூக்கி பிடித்து தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றி பெயர்களை மாற்றி தமிழர்களாக அடையாளம் கண்டுகொள்ளவேண்டியது ஒரு தேவையோ என்றும் சிந்திக்கிறேன்.”””””””””””””””””””””””””””””
  இப்பதான் நீங்க நம்ம வழிக்கு வந்திருக்கின்றீர்கள்.நிச்சயம் தேவை தமிழர்களாகிய நாம்தான் தமிழ் கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கவேண்டும் அயல் நாட்டுகாரனோ அல்லது மற்ற மொழி பேசுபவனா வந்து தூக்கி பிடிக்கபோகிறார்கள். நீங்கள் தான் இஸ்லாமைவிட்டு வந்து விட்டீர்களே பிறகு ஏன் இன்னும் “அப்துல் நஸிர்” என்று பெயரை வைத்திருக்கின்றீர்கள்.எதற்கு நமக்கு அரபி பெயர் அழகிய தமிழ் பெயரை சூட்டிகொள்ளலாமே.நீங்கள்தான் வளர்ந்து விட்டீர்களே உங்களுடைய பெயரையும் மாற்றிவைத்துகொள்ள உங்களுக்குதான் உரிமைகள் கொடுக்கபட்டிருக்கே.உங்களுக்கு வேற பெயர் வைத்துகொள்ள விருப்பமிலையென்றால் அப்துல் நஸிர் என்பதை வெற்றியாளனின் அடிமை என்று அப்படியேகூட தமிழ் படுத்திகொள்ளலாம். (அப்துல் என்றால் அடிமை,நஸிர் என்றால் வெற்றியாளன்.)
  “”””””உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

  அல்குரான் முழுவதும் முகம்மதுவின் உருவாக்கமே. அது அல்லா கொடுத்தது என்று சொல்வது ஒரு ஏமாற்றுவேலை என்ற கருத்து சிலகாலமாகவே இருந்து வந்தது.
  உங்களுடைய கட்டுரைகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.”””””””””””
  நானும் செங்கொடியின் கட்டுரைகளை படித்து கொண்டுதான் வருகிறேன்.நீங்கள் சொல்வதுபோல் குரானின் வரிகள் தவறென்று எந்த கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.இஸ்லாமிய அறிஞர்களின் விளக்க(திரிப்பை)த்தை பற்றிதானே குறிப்பிட்டிருக்கிறார்.
  நானும் குரானை படித்தவன் என்பதினால் சொல்கிறேன்.இன்னும் குரானில் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கிறது(Ex: “காபா” அபய பூமி,வானத்தில் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் பூமியில் ஒரு மலையளவுகூட கீழே செல்லமுடியாது,பாதுகாக்கப்பட்ட பிரவ்ன் உடல்,மலை மீது பாதுகாக்கப்பட்ட நூஹ் (நோவா) நபியின் கப்பல்,etc etc)

 7. தொழர் செங்கொடிக்கு வாழ்த்துக்கள்… உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிரேன். நல்ல ஆழமான பதிவுகள். இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அறிவியல் முகமூடி தொடர்ந்து கிழிக்கப்படுவதை வாசிக்க காத்திருக்கிரேன்.இந்த இஸ்லாமிய அறிவுஜீவிகள் கடல் சார் அறிவியலில்(Oceanography)வரும் பிக்னோக்லைன் எனும் பன்பை தான் (pycnocline phenomenon)மேலே கூறப்பட்ட குரான் வசனஙளுக்கு ஆதாரமாக காட்டுகிரார்கள். அதை பற்றி வாசிக்க இங்கே சொடுக்கவும் http://en.wikipedia.org/wiki/Pycnocline. அறிவியல் விதிப்படி pycnocline ல் இரண்டு கடல்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும்.ஆனால் குரான் இதை மறுக்கிறது.ஆக குரான் இறை வேதமல்ல என்பது மீண்டும் நிரூபனம் ஆகிறது.

 8. செங்கொடியின் கட்டுரைகளை படிக்கிறீர்களா என்று சந்தேகமாக இருக்கிறது.
  அவர் அல்குரானின் வசனங்களுக்கு இஸ்லாமிய அறிவுஜீவிகள் கொடுக்கும் விளக்கம் மட்டுமெ தவறல்ல, வசனங்களே தவறானவை. அவற்றில் என்ன பொருளெடுத்தாலும் அவை தவறாகவே இருக்கின்றன என்று காட்டுகிறார்.
  சரியாக படித்துப்பாருங்கள்.
  ”இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்” இது வசனம்.

  செங்கொடியின் உடைப்பு.
  //இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன? இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன? கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது? ஒன்று தெளிவாகிறது கடலாடி அனுபவமில்லாத முகம்மது, கடலாடிகளிடமிருந்து கடல்நீரின் சுவை வேறுபாடுகளைப்பற்றி அரைகுறையாக செவியுற்று அதையே தன்னுடைய குரானில் தடையாக அரங்கேற்றிவிட்டார்.//
  ஆகவே அல்குரான் அல்லாஹ்வின் உருவாக்கமல்ல. முகம்மதுவின் உருவாக்கம்.
  இதனை விட தெளிவாக அல்குரானை உடைக்க முடியாது.

  இன்னும் இஸ்லாத்தை நம்புபவர்கள் ஏமாளிகளே.
  இங்கே கவனிக்க வேண்டியது முக்கியமான ஒன்று.

  ஒரே ஒரு குரானின் வரி தவறு என்று நிரூபிக்கப்பட்டாலே அது அல்லாவின் உருவாக்கமல்ல, முகம்மதுவின் உருவாக்கமே என்று நிரூபிக்க போதுமானது.

  இருப்பினும் ஒவ்வொரு வசனத்தையும் செங்கொடி உடைத்து காட்டிய பின்னரும் தங்களை முஸ்லீம்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை என்ன சொல்வது?

  ஆனால் கல்ட்டில் இருப்பவர்கள் வெளியே வர அஞ்சுவார்கள். தவறு தெரிந்தாலும் விலக் முடியாது. அது மனித மனத்தின் பலவீனங்களில் ஒன்று

 9. மிரட்டல் சொன்னது
  “””””””என் இஸ்லாமிய சகோதரர்களே கவலை படாதீர்கள்.உங்களுக்காக நான் பதில் தருகிறேன்.ரெடியோவிற்கும் (அ)மொபைல்களுக்கும் உள்ள அலைவரிசைகள் ஒன்றோடொன்று கலந்துவிடாமலிருக்க கண்ணுக்கு தெரியாத தடுப்பை நாம் ஏற்படுத்தி(“program” பண்ணி)யது மாதிரி அல்லாவும் “program” பண்ணிருக்காரோ என்னவோ……..ஹி….ஹி…ஹி””””””””””””””””””””
  மிரட்டல் அவர்கள் நக்கலுக்காக சொல்லியிருந்தாலும் அதில் சொல்லப்பட்ட விஷயத்தை நன்கு கவனியுங்கள்.
  தடுப்பென்றால் கண்ணுக்கு தெரிந்தால்தான் தடுப்பா?
  ரேடியோவில் எத்தனையோ அலைவரிசைகள்(stations) இருக்கிறது.எல்லா அலைவரிசைகளும் காற்றில்தான் உலவுகின்றது.ஆனால் கிடைக்கவேண்டியது மட்டும் அழகாக துள்ளியமாக கிடைக்கிறதென்றால் எப்படி?
  காற்றில் உலவும் அலைவரிசைகள் எல்லாம் கலந்துவிடாமல் எது அதை தடுத்து கொண்டிருக்கிறது?ஒரு தடுப்பு இருக்கிறதல்லவா.

 10. //கடலுக்குள் நீரோட்டங்கள் இருக்கின்றன, இந் நீரோட்டங்கள் நிலத்தில் ஓடும் ஆறுகளைப்போல் கடலுக்குள் ஓடுகின்றன. ஒருகடலிலிருந்து மற்றொரு கடலுக்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பாயும் பல கடலடி நீரோட்டங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். //
  அப்படிப்பட்ட நீரோட்டங்களின் பெயர்கள் அல்லது அவை சார்ந்த தகவல்கள் தாருங்கள் செஙகொடி.

 11. கம்யூனிஸத்திற்கு இஸ்லாமியர்களை கண்டால் பிடிக்காதோ என்னவோ.சைனாவில் உய்குர் முஸ்லிம்கள் எத்தைனை பேரை கொன்றொழித்திருக்கிறது என்பதை இநத சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தவகல்களை பாருங்கள்.

  —————————————————————-
  ஆஃப்கானிஸ்தானில் எத்தனைபேரை கொன்றிருக்கின்றது என்பதை இந்த சுட்டியை பாருங்கள்.
  http://thamizmani.blogspot.com/2008/01/blog-post_24.html
  இப்ப குரானில் தவறு என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்?
  எப்ப எப்ப என்னென்ன யுத்திகளை கையாளுவதில் கம்யூனிஸ்ட்டுகள் புத்திசாலிகள்தான்(!) இன்னும் எத்தனை உயிர்கள் கம்யூனிஸ்டுகளால் போக தயாராகி கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
  கம்யூனிஸத்தின் கொடி சிகப்பு நிற(இரத்த)மாகவும் ஆயுதமும் இருப்பது எதனால் என்பது புரிகிறதா? ஜாக்கிரதையா இருந்துகொள்ளுங்கள் மக்களே.

 12. brother,

  -from where did you derive the conclusion that space is not made up of anything in your previous article when science says that perfect vaccum is impossible.

  – if you mean to say that space is not made of anything then it means space is nothing.

  -could you imagine a car made of nothing or a television made of nothing.

  -will you be able to imagine a cake made of nothing or a juice made of nothing.

  -if not possible then how could be the space is nothing.

  -nothing was the condition which prevailed before bigbang.

  -if you say that space is nothing then it implies that space existed before bigbang which is against science.

  -science says space had a beginning. To put it in other terms, space had a origin which is the moment of bigbang.

  -how could a space made of nothing will be able to expand ?.

  -The expansion itself shows that space is something. The space made of nothing could not expand at all.

  -you say that after removing the interstellar dust, plasma, planets, galaxies, stars, magnetic field, dark energy and light energy, the remaining emptyness is space.

  -from where did you derive this definition when science says perfect vaccum is not possible at all.

  -you should give me the source to prove that space is made of nothing.

  -suppose you remove the wheels, light, seats, window glasses, doors, body and everything from the car.

  -what will be there?

  -if there is nothing, will you call it a car made of nothing.

  -nothing is simply nothing. where it be for space or car.

  -there is no such thing as space made of nothing.

  -Pls explain brother. Thank You…

 13. இரு கடல்களை – அவைஇரண்டும்ஒன்றோடொன்று சந்திக்கஅவனே விட்டு விட்டான். (ஆயினும்) அவைஇரண்டுக்கிடையில் ஒருதடுப்புண்டு: (அத்தடுப்பானதை) அவ்விரண்டும் மீறிவிடாது. (அல் குர்ஆன்: 55:19-20).

  குர்ஆனில் தவறுகளா? நீங்களே பாருங்கள் இந்த வீடியோவை

  இரு கடல்களிலும் உண்டாகும் பேரலைகள், சக்திவாய்ந்த நீரோட்டங்கள் மற்றும் சிற்றலைகள் போன்றவற்றின் தாக்கத்தால் எந்த பாதிப்பையும் இரு கடல்களிலும் உண்டாக்குவதில்லை.Principles of Oceangraphy, Davis, p.92-93.

 14. நண்பர் முஜாஹித்,

  இதுபோன்ற ஆறுகளின் கழிமுகப் பகுதியிலோ ரசாயனக் கலவைகள் கொட்டப்படும் இடங்களையோ படம் பிடித்து அதை மதப்பிரச்சாரமாக காட்டுவதை நம்ம்பாதீர். உலகின் எந்தப்பகுதியிலாவது கடலில் சென்று பாருங்கள் இது போல் வித்தியாசம் இருக்கிறதா என்று. முதலில் ஒரு கடலுக்கும் இன்னொரு கடலுக்கும் எல்லை இருக்கிறது என்பதே அபத்தம். சிந்தித்துப் பாருங்கள்.

  செங்கொடி

 15. Mr. Karthik,
  //கம்யூனிஸத்திற்கு இஸ்லாமியர்களை கண்டால் பிடிக்காதோ என்னவோ.//
  It is not surprising. After ‘cold war’ the capitalists, to retain their supremacy with an eye on the middle east nations’ oil wealth, have targeted Islam. So communists do not want to lag behind. Let them do it.

  They conveniently forget or hide that communists Russia, China and Korea had killed more people during modern times alone, than all killings in the name of all religions since the time of recorded history.

  The only bright spot is the scientific discussion. But what is disgusting, here in this blog, is one and the the same person in different IDs (that too with muslim names) coming and commenting in support (Jaing-Chucking) of the arguments by Senkodi, to create an impression that communism is becoming successful in changing the minds of muslims.

  A very sad state of affairs and strategy for an otherwise fair ideology, which is in its death-bed.

  I even doubt that the blogger and supporters are the same person.

 16. please see the reference

 17. அவன் தான் இரண்டு கடல்களையும் ஒன்று சேர்த்தான்,ஒன்று சுவையானதாகவும் மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும் மீறமுடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.(25:53)

  இருந்துவிட்டுப் போகட்டும். மேற்கண்ட வசனத்தை படித்துவிட்டு கைதேர்ந்த ஆன்மீக விஞ்ஞானிகள் எல்லாம் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன முடிவெடுத்தார்கள்? உப்பு+இனிப்பு கடலில் இருப்பதாலேயே ஒரு பக்கம் உப்பும் ஒரு பக்கம் சர்க்கரையையும் பிரித்து எடுத்துக் கொடுத்து விட்டார்களா? இல்லை சுவையான நீர் இருக்குமிடத்தை கண்டறிந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார்களா? வசனம் இருக்கு சரி யாருக்கு பயன்பட்டது? அட..மத்தவங்கள விட்டுவிடுவோம் கடலை நம்பி வாழ்கின்ற கடற்கரை வாசிகளுக்காவது வசதிக்காக அவர்கள் வசிக்கும் பகுதியிலாவது உப்பில்லாமல் கடல் நீரை அப்படியே குடிக்க வைத்து தனது வல்லமையை நிரூபித்திருக்கலாமே? சரி அதுவும் வேண்டாம் எந்த இடத்தில் சுவையான் நீர் கிடைக்கும் என்றாவது தூதருக்கு வஹி அனுப்பித்தந்தானா? இது விளங்காம பாவம் அரேபியர்கள் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரையும் குடிக்கலாம் என்பது கூட தெரியாமலேயே காலத்தைக் கழித்து விட்டு,அந்த எல்லாம் வல்ல அறிவியலார்களின் துணையுடன் கடல் நீரை குடிநீராக்கி குடித்து வருகிறார்கள். முகம்மது அவர்களால் சொல்ல மட்டுமே முடிந்தது ஆனால் அறிவியலாளர்களால் செய்து காண்பிக்க முடிந்தது இதில் வல்லவன் மனிதனா,வக்கற்ற இறைவனா? வேதம் தந்த அரபு நாட்டினவருக்கே தான் படைத்த(?)கடல்நீரை குடிநீராக்கித் தர தகுதியற்றவன் வல்ல இறைவனா?

 18. ingu marumozhi koduthirukkum abdul nazir and ansari agiyoor unmayanavarhala illai fkae name vaithu vilaiyadikondu irukkirarkala????

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s