குரானின் மலையியல் மயக்கங்கள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 11

மலைகள் பற்றி குரான் குறிப்பிடும் சில செய்திகள் விந்தையானவை. மதவாதிகள் வழக்கம் போலவே இதற்குள்ளும் அறிவியலை திரித்து இறக்கியிருக்கிறார்கள்.

பூமியை தொட்டிலாகவும் மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? குரான் 78:7 இதில் மலைகளை முளைகளாக ஆக்கியிருப்பதாக குரான் கூறுகிறது. இந்த வசனத்தில் மட்டுமல்லாது இன்னும் பல வசனங்களில் (15:19; 16:15; 21:31; 27:61; 31:10; 41:10; 79:32; 77:27) மலைகளை முளைகள் என குரான் குறிப்பிடுகிறது. ஒரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த எல்லா வசனங்களிலும் மலைகளை முளைகளாகவே பிஜே அவர்கள் மொழிபெயர்த்த குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் பிஜேவுக்கு முன்னரே மொழிபெயர்ப்பை வெளியிட்ட ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் 78:7 ஐ தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் முளைகளாக அல்ல மலைகளாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மலைகளை முளைகளாக குறிப்பிடுவதில் உள்ள அறிவியல் என்ன?

நாம் வாழும் பூமி பலவித அடுக்குகளாக உள்ளது. ஒவ்வொரு அடுக்கும் வெவ்வேறு கனத்தில் அமைந்திருக்கிறது. வெவ்வேறு கனத்தில் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ள பூமி சுற்றிக்கொண்டேயிருக்கிறது. ஒரு சீரான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் எப்படி பல்வேறு அடுக்குகளும் அதே சீர்வேகத்தில் சுழல முடியும்? ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு வேகத்தில் சுழலும் சாத்தியமுண்டல்லவா? ஆனால் அப்படி வெவ்வேறு வேகத்தில் சுழன்றால் பூமி பூமியாக இருக்குமா? உயிரினங்கள் நிலைத்து வாழ முடியுமா? இருப்பினும் அப்படி வெவேறு வேகத்தில் சுழலாமல் ஒரே வேகத்தில் எப்படி சுழல்கிறது என்றால், மலைகள் பூமியில் முளைகளாக நடப்பட்டு பல்வேறு அடுக்குகளையும் ஒன்றாக இறுக்கிப்பிடித்து வைத்திருப்பதனால் தான் பூமி ஒரே சீரான வேகத்தில் சுழல்கிறது. அதனால் தான் நாமெல்லாம் வாழ முடிகிறது. இவ்வளவு அற்புதமான இந்த அறிவியல் உண்மை, அண்மைக்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விஞ்ஞானம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவருக்கு தெரிந்திருக்க முடியுமா? ஆனால் குரான் எவ்வளவு தெளிவாக இதை குறிப்பிடுகிறது. எல்லாவற்றையும் அறிந்த ஒரே இறைவனான அல்லாவைத்தவிர வேறு யாரால் இப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்க முடியும்?

நாம் வாழும் இந்த பூமி பல அடுக்குகளாகத்தான் இருக்கிறது. ஆனால் மலைகள் முளைகளாக இறுக்கிப் பிடித்துவைத்திருப்பதால் தான் பூமியால் சீராக சுழலமுடிகிறது என்பது மதவாதிகளின் அசட்டுத் துணிச்சல். முதலில் பூமியின் அடுக்குகளைப்பார்ப்போம். பூமியை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அதன் திணிவை மூன்றாக பிரிக்கலாம், ௧) இன்னர் கோர் ௨) அவுட்டர் கோர் ௩) மேண்டில். இதில் இன்னர் கோர் திடப்பொருளாகவும், அவுட்டர் கோர் பாறைக்குளம்பாக திரவப்பொருளாகவும், மேண்டில் கனிம வளங்களை உள்ளடக்கிய திடப்பொருளாகவும் இருக்கிறது. மேண்டிலை மட்டும் அணுக்கமாகப் பார்த்தால் ஏதினோஸ்பியர், லிதோஸ்பியர், க்ரஸ்ட் என்று சில அடுக்குகளாகப்பிரிக்கலாம். இவற்றில் க்ரஸ்ட் என்பதில் தான் நாம் காணும் கடல், மலை, நிலம் என்று அணைத்தும் உள்ளன. இந்த க்ரஸ்டின் கனம் அதிகபட்சம் நூறு கிமீ வரை இருக்கிறது. அதாவது எல்லா இடங்களிலும் நூறு கிமீ அளவுக்கு இல்லை சமமற்ற முறையில் ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கிறது. சில இடங்களில் பத்து கிமீ இருக்கலாம், சில இடங்களில் 20, 30 என அதிகபட்சம் 100 கிமீவரை. இந்த அதிகபட்ச ஆழமானது மலைப்பகுதிகளில் இருக்கிறது. இதை வைத்துத்தான் இவர்கள் மலைகளை முளைகள் என்கிறார்கள். கவனிக்கவும் (படம்) மலைகளின் வேர்கள் எந்த அடுக்கையும் ஊடுறுவிச்செல்லவில்லை. மற்ற இடங்களை விட அதிக ஆழ‌மாக இருக்கிறது அவ்வளவு தான். இதை முளை என்றும் எல்லா அடுக்குகளையும் இறுக்கிப்பிடித்திருக்கிறது என்றும் கூறுவதற்கு அசட்டுத்துணிச்சல் தேவைதான்.

குரான் வசனம் 16:15,16 பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க அதில் முளைகளையும், …………அமைத்தான்………. இந்த வசனத்தில் மலைகள் அதாவது முளைகள் இருப்பதால் தான் பூமி உங்களை அசைத்துவிடாதிருக்கிறது என்று கூறுகிறது குரான். மலைகள் என்று கொண்டாலும் முளைகள் என்று கொண்டாலும் இதில் பொருள் மயக்கம் வருவதில்லை ஆனால் சொற்றொடரின் பொருளோ மயக்கம் வர‌வைக்கும் அளவிற்கு இருக்கிறது. பூமி நம்மை அசைப்பதே இல்லையா? அவ்வப்போது அது நம்மை அசைத்து பல உயிர்களை கொள்ளையிட்டுக்கொண்டிருக்கிறது நிலநடுக்கம் எனும் பெயரில். தூரப்பகுதிகளை விட்டுவிடுவோம், மலைப்பகுதிகளிலாவது நிலநடுக்கம் வராமலிக்கிறதா? சில மாதங்களுக்கு முன் இத்தாலிய மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 300 பேர் வரை மரணமடைந்தனர். ஆனால் குரான் சொல்கிறது பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க மலைகளை அமைத்ததாக.

பூமியின் மேற்பரப்பு கண்டத்தட்டுகளாக அமைந்திருக்கிறது.  நிலப்பகுதியிலும் கடல்களுக்கு அடியிலுமாக பூமி ஆபிரிக்க, அண்டார்ட்டிக்,ஆஸ்திரேலிய, யூரேசிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசிபிக், கோகோஸ், நாஸ்கா, இந்தியா என்று பத்து பெரிய தட்டுகளாகவும்; இன்னும் சில சிறிய தட்டுகளாகவும் அமைந்துள்ளன. இந்த கண்டத்தட்டுகள் நகர்ந்துகொண்டிருக்கிறன. ஆண்டுக்கு ஒரு செமீ முதல் 13 செமீ வரை நகர்கின்றன. சில ஒன்றை ஒன்று விலகி நகர்கின்றன. சில ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இந்த நகர்வுகளை அல்லது அசைவுகளை மலைகள் கட்டுப்படுத்துகின்றனவா? மாறாக இந்தியத்தட்டு யுரேசியத்தட்டுடன் மோதுவதால் தான் இமய மலை தோன்றியது இன்னும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துகொண்டும் இருக்கிறது. புவியியல் அமைப்புகள் இப்படி இருக்க, மலைகள் எந்த அசைவைக்கட்டுப்படுத்துகின்றன? குரானில் இதற்கு விளக்கம் ஒன்றுமில்லை, அல்லாவோ பதில் கூறப்போவதில்லை. பின் யார் இதை விளக்குவது? வாய்மையுள்ளவர்கள் விளக்கவும்.

பூமிக்குள் மனிதனால் எவ்வளவு ஆழத்திற்கு செல்லமுடியும்? அதிக அளவாக மூன்று கிமீ வரை சுரங்கம் அமைத்திருக்கிறார்கள். பத்து கிமீ க்கு அதிகமான ஆழத்திற்கு குழாய்களை இறக்கியிருக்கிறார்கள். மூன்று கிமீ க்கு கீழே மனிதர்கள் இறங்கவோ, இன்னும் ஆழமாக குழாய்களை இறக்கவோ தேவை ஒன்றும் இப்போதைக்கு ஏற்படவில்லை என்றாலும் இன்னும் ஆழமாக கீழே செல்வது சாத்தியக்குறைவானது தான். ஆழம் செல்லச்செல்ல அதிகரிக்கும் வெப்பம், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நச்சு வாயுக்கள் என பல பிரச்சனைகள். ஆனால் செல்லமுடியாது என குரான் கூறியிருக்கிறது எனவே தான் செல்லமுடியவில்லை என அடித்துக்கூறுகிறார்கள் மதவாதிகள். பூமியை பிளந்து மலையின் உச்சியளவுக்கு மனிதனால் செல்லமுடியாது என குரான் உறுதியாக குறிப்பிட்டிருப்பதாக கதைக்கிறார்கள். பூமியில் உயரமான மலை இமயமலை, எவெரெஸ்ட் சிகரம் உயரம் சற்றேறக்குறைய 9 கிமீ. பூமியின் உயரமான மலையளவான இந்த அளவிற்கு பூமிக்குள் மனிதனால் செல்லமுடியாது என குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது, இன்றுவரை யாராலும் செல்லமுடியவில்லை. இது குரான் இறைவனின் வெளிப்பாடுதான் என்பதை நிரூபிக்கிறதா இல்லையா? என்று விவரிக்கிறார்கள். குரான் அப்படி கூறியிருக்கிறதா?

“பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்” குரான் 17:37. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது. ஆனால் இதே வசனம் ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் இப்படி இருக்கிறதா? “நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம். நிச்சயமாக நீர் பூமியை பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது.” இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்? கர்வம் பிடித்தலையும் மனிதர்களுக்கு குரானின் அறிவுரை இது பூமியை பிளந்துவிட முடியுமா? மலையின் உச்சிக்கு சென்றுவிட முடியுமா? எனவே உன்னை பெரிதாய் நினைத்து கர்வத்துடன் நடக்காதே. இதுதான் குரான் வாயிலாக முகம்மது சொல்லவருவது. ஒரு ஒப்பீட்டுக்காக கூறுவது. பின்னர் மனிதர்கள் மலையின் உச்சியை அடைந்து விடுவார்கள், பூமியை பிளந்து விடுவார்கள் (பிளப்பது என்றால் இரண்டு துண்டுகளாகவா?) என்பதெல்லாம் முகம்மதுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இதை எப்படி திரித்துவிட்டார்கள்.

எங்கள் மதம் அறிவியலை எதிர்க்காதமதம், அறிவியலை முன்னறிவித்த மதம் என்று காட்டுவதற்காக எந்தவித செயலையும் செய்வதற்கு இவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் தான் இவை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

55 thoughts on “குரானின் மலையியல் மயக்கங்கள்.

  1. அன்புள்ள செங்கொடி,

    உலகம் தட்டை என்று முகம்மது கூறுவதும், மலைகளை முளைகளாக அமைத்திருப்பதாக கூறுவதும், ஒரே கருத்தின் விளைவுகள்.
    பாலைவன மணலில் ஒரு பாயை, அல்லது துணிப்படுதாவை விரியுங்கள். அவைகள் நகர்ந்துவிடாமலிருக்க முளைகளை நடுவார்கள். அதே விசயத்தை இங்கே முகம்மது நீட்டுகிறார். உலகம் தட்டையாக விரிக்கப்பட்டுள்ளது. அது நகர்ந்துவிடாமலிருக்க மலைகளை முளைகளாக அல்லா நடுகிறார் என்று கற்பனை செய்கிறார் முகம்மது.

  2. Mr.அப்துல் நஸிர்
    “””””””இன்றைக்கு அவர்களிடம் உங்களைப்போன்ற தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாத்துவிடலாம். ஆனால் நாளைக்கு இன்னொரு ஒஸாமாவோ, ஜவஹருல்லாஹ்வோ அவர்களை மூளைச்சலவை செய்ய வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். “””””””””””””””””
    இது உங்களுக்கும் உங்கள் சமுதாயத்திற்குமுள்ள பிரச்சினை அதில் நான் தலையிடப்போவதில்லை. என்னை நீங்கள் எப்படி தீவிரவாதியென்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது.”இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும்.”

  3. அன்பின் செங்கொடி அவர்களே
    நீங்கள் கொடுத்த இணைப்பிலுள்ள சுட்டிகள் எதுவுமே open-ஆகவில்லை.
    (புத்தக பிரியன் பக்கம் open-ஆகுது ஆனால் அதில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் எதுவுமே open ஆகவில்லை)

    எனக்கு நீங்கள் பதிலளிக்கவேயில்லையே?

  4. நண்பர் கார்திக்,

    தவறுதான், உங்களுக்கு இணைப்பு கொடுக்குமுன் அது வேலை செய்கிறது என்பதை உறுதி செய்திருக்கவேண்டும். முன்னர் திறந்து படித்ததைக் கொண்டு இணைப்பு கொடுத்துவிட்டேன். இதுகுறித்த வேறு நூல்கள் இணையத்தில் படிக்கக்கிடைக்கிறதா எனத்தேடுகிறேன். கிடைத்ததும் நிச்சயம் உங்களுக்கு இணைப்பு கொடுக்கிறேன். நீங்கள் சென்னையிலிருப்பவர் என்றால், புத்தகக்கண்காட்சியில் கீழைக்காற்று பதிப்பக‌கடை எண்: 64, 65 க்கு வருகை தாருங்கள்.
    மேலும் மார்க்ஸிய நூல்களை செங்கொடி தளத்தில் வரிசையாக வெளியிடும் திட்டமிருக்கிறது. அதில் வெளியிடுகிறேன்.

    தோழமையுடன்
    செங்கொடி

  5. அன்பின் செங்கொடி

    தமிழில் குரான் சைட் மொழிபெயர்ப்பு இதுதான்.

    http://tamililquran.com/quran.asp?sura=17&line=37

    17:37 மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

    http://quranexplorer.com/index/Sura_017_Al_Isra_ISRA_THE_NIGHT_JOURNEY_CHILDREN_OF_ISRAEL.aspx

    17Verse:037
    Dr. Mohsin : And walk not on the earth with conceit and arrogance. Verily, you can neither rend nor penetrate the earth, nor can you attain a stature like the mountains in height.
    Pickthal : And walk not in the earth exultant. Lo! thou canst not rend the earth, nor canst thou stretch to the height of the hills.
    Yusuf Ali : Nor walk on the earth with insolence: for thou canst not rend the earth asunder, nor reach the mountains in height.

    இவைதான் மொழிபெயர்ப்புகள் என்றால், பூமியை மனிதன் பிளந்தும் இருக்கிறான். மலையின் உயரத்துக்கு உயர்ந்தும் இருக்கிறான். எவரெஸ்டிலேயே ஏறிவிட்டான். அப்படியென்றால், அல்லாவின் குரான் வசனம் பொய் என்று ஆகிவிடும். அதுமட்டுமல்ல, குரான் முகம்மது இட்டுக்கட்டியதுதான் என்றும் ஆகிவிடும்.

    ஆகையால் அல்லாவையும் முகம்மதையும் காப்பாற்ற இதற்கு இன்னொரு மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகையால், உலகத்திலேயே மிகப்பெரிய மலையின் அளவுக்கு பூமியை தோண்டமுடியாது என்று நாம் இதற்கு பொருள் வைத்துக்கொள்ளவேண்டும். மலையளவு என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, எந்த மலை என்று சொல்லவில்லை அல்லவா? அதனால், நாமாக உலகத்திலேயே மிகப்பெரிய மலை என்று வைத்துகொள்ளவேண்டும். அப்படி குரானில் இல்லையென்றாலும் அப்படி வைத்துகொண்டால்தான் அல்லாவை காப்பாற்றமுடியும் இல்லையா?

    சரி எவரெஸ்டின் உயரத்தின் அளவு 9 கிலோமீட்டர். அதனை விட ஆளமாக ரஷியாவில் 12 கிலோமீட்டர் அளவுக்கு தோண்டிவிட்டதாக இந்த இணையப்பக்கம் சொல்கிறது.

    http://ezhila.blogspot.com/2008/09/12_17.html

    பிளந்துவிடமுடியாது என்றுதான் பொருள் கூறினால், மலையின் அளவை விட அதிகமாக ரஷியர்கள் பிளந்துவிட்டிருக்கிறார்கள் என்று ஆகிறது. (இவர்களை யார் பிளக்க சொன்னது? கெட்ட கம்யூனிஸ்டுகள்.. முகமது மேல் மரியாதையே இல்லை!)

    ஆகவே ஜெயினுலாபுதீன் சொன்ன பொருளும் பொய்யாகிவிடுகிறது.

    ஆகவே இதற்கு இன்னொரு பொருள் கண்டுபிடித்து முகம்மதை காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

    சிந்திப்போம் முகம்மதை காப்பாற்றுவோம்..

  6. மலை – பூமி பற்றிய ஆய்வுகள் (Geology)தொடர்பான பல தகவல்கள் மிக கஷ்டப்பட்டு பதிவு செய்துள்ளீர்கள். பதிவில் “வாய்மையுள்ளவர்கள் விளக்கவும்” என்று குறிப்பிட்டதட்கிணங்க நான் பதிவிடுகிறேன். நீங்கள் அரபியில் 0 என்பது உங்கள் தலைப்பை பார்த்தாலே புரிகிறது. குரானை குர்ஆன் என்று மாற்றிக்கொள்ளுங்கள்.

    மலைகள் பற்றி குர்ஆனில் நீங்கள் குறிப்பிட்டபடி (15:19; 16:15; 21:31; 27:61; 31:10; 41:10; 79:32; 77:27) பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க அதில் முளைகளையும், …………அமைத்தான்………. என காணப்படுகிறது. அது வரைக்கும் உங்கள் கட்டுரையில் “அசைத்தல் ” என்று குறிப்பிட்டு விட்டு பின்னர் “நிலநடுக்கம்” என்ற சொல்லை புகுத்தியதுதான் ஏன் என்று புரியவில்லை. சரி, நான் விளக்கத்திற்கே வருகிறேன்.

    பூமி மிக வேகமாக சுழல்கிறது என்று யாவரும் அறிந்ததே. மேற்கூறப்பட்ட அனைத்து குர்ஆன் வசனங்களிலும் “தமீதா” (thameedha) எனும் அரபுப் பதம் உபயோகிக்கப்படுகிறது. 79:32 எனும் தொடரில் “அதில் மலைகளையும் அவனே நிலை நாட்டினான். “என்றும் காணப்படுகிறது. .உங்கள் பதிவில் மலைகள் எந்த அசைவைக் கட்டுப்படுத்துகின்றன? என்ற கேள்வி தோன்றியதற்கு முக்கிய காரணம் உங்களுக்கு “thameedha” என்ற சொல்லுக்கு விளக்கம் தெரியாததே.

    உலகில் அநேக பல்கலைக் கழகங்களில் காணப்படுகின்ற Geology சம்பந்தமாக எழுதப்பட்ட Dr. frank press(American geophysicist and Advisor of former president Gimmy carter.USA ) அவர் தனது ஆய்வுப் குறிப்பில் பூமியை நிலைப்படுத்துவது மலைகளாகும்(the mountains give stability to the earth) என குறிப்பிடுகிறார். இப்போது குர்ஆனில் நீங்கள் குறிப்பிட்ட 21:31,31:10,16:15 போன்ற வசனங்களைப் பாருங்கள். “உங்களுடன் பூமி அசையாது இருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை நிறுத்தினான்”. என்று காணப்படுகிறது. செங்கொடி அவர்களே note this point:-mountains to prevent earth from shaking.not prevent the earth quake. வேகமாக பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும் மேல் அடுக்கில் உள்ள எடை குறைவான பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற முடியாது. இந்நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்களும் கட்டடங்களும் தூக்கி வீசப்படுவார்கள்.
    இந்த இடத்திலும் உங்கள் நுனிப்புல் மேய்தலை நிரூபித்து இருக்கிறீர்கள். நிலநடுக்கத்திற்கு அரபியில் “சல்சலா” (zalzala) என்ற பதம் பாவிக்கப்படும். நிலநடுக்கம் தொடர்பாக குர்ஆனில் 99 வது அத்தியாயத்தில் நீங்கள் பார்க்கலாம். zalzala (earth quake) – a sudden and violent shaking of the ground, sometimes causing great destruction, as a result of movements within the earth’s crust or volcanic action.
    ஆனால் இங்கு மேல் குறிப்பிட்ட அனைத்து வசனங்களிலும் “thameedha” என்ற சொல்லே குறிப்பிடப்படுகிறது. thameedha is – to prevent the earth from shaking with you.

    thameedha, zalzala போன்ற சொற்களுக்கு விளக்கம் தேவைப்படின் english-arabic dictionary யை பாருங்கள்.

    மேலதிக விளக்கத்திற்கு – http://www.youtube.com/watch?v=zQu7FznVOvI&NR=1

  7. செங்கொடி அவர்களே,

    தங்களுடைய விவாதம் சம்பந்தமாக தமிழகத்தில் இன்று வாழும் மிகப்பெரிய அறிஞரான இஸ்லாம் மார்கமேதை PJ அவர்களிடம் கருத்து கேட்டேன். மேலும், தங்களுடைய முதலாம் பதவில் சில சகோதரர்கள் அப்போது நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் கலந்துகொள்ள அழைக்கும்போது தாங்கள் நழுவியதையும் குறிப்பிட்டேன். அதற்கு அவர்கள் அளித்த பதில் கீழே,

    //ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டு அழைப்பது சரியா என்ற அவரது கேள்வி நியாயமானது. ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது. நேரடி விவாத்தில்தான் உடனுக்குடன் கேள்வி கேட்கமுடியும். ஒருவர் சொல்வது தவறா என்பதை உடனே கண்டுபிடிக்க முடியும். எனவே செங்கொடி என்பவரோ அவரைச்சேர்ந்தவகளோ தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் இதற்கு பயப்டவேண்டியதில்லை. அவர்களே மூடநம்பிக்கையின் ஒட்டுமொத்த வடிவமாக இருப்பதால் நேருக்கு நேராக சந்திக்க பயப்படுகிறார்கள். அவர்களுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து விவாதம் செய்ய நாம் தயார். அடுத்து அவர் விதித்திருக்கும் நிபந்தனைகூட அறியாமையாக உள்ளது. இஸ்லாம் மட்டுமே சரியானது என்ற நிலையை மாற்றிகொண்டால் தான் விவாதிப்பேன் என்பது அந்தக் கேளி கூத்தான நிபந்தனை. இஸ்லாம் மட்டுமே சரியானது என்று தக்க ஆதாரத்துடன் நம்புவதால் தான் விவாதத்திற்கே அழைக்கிறோம். பரிசீலனைக்கு உரியது என்ற கருத்து இருந்தால் அதில் விவாதத்துக்கு தேவையே இல்லையே. தனது விவாதத்தின் மூலம் அவர் நிரூபிக்க வேண்டுமே தவிர விவாதத்திற்கு முன்பே தோற்றுவிட்டதாக எழுதிகேட்பது மடத்தனமானது. இப்படி கூறுவதில் இருந்து இவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது உறுதியாகிறது. இதற்கு எதிர் கருத்தாக இஸ்லாம் பரிசீலனைக்கு உரியது அல்ல என்று செங்கொடி அறிவித்தால் தான் விவாதிப்பேன் என்று நான் சொன்னால் அதற்கு அவரது பதில் என்ன? வேண்டுமானால் இஸ்லாம் பரிசீலனைக்கு உரியதா? இவர்களின் கொள்கை பரிசீலனைக்கு உரியதா என்ற தலைப்பில் முதலில் விவாதிப்போம். இதற்கு அவர் சம்மதிக்கிறாரா என்று கேட்டு எழுதுங்கள். பகுத்தறிவு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் மடமையை தோலுரிக்க நாம் தயார்.//

    இதற்கு ஓடி ஒழியாமல், நழுவாமல் உடன் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

  8. raisul kamal,inimai சொல்வது நியாயமாகத்தான் படுகிறது.விவாதிப்பதற்கு தயாராக இருக்கும் கூட்டத்திடம் விவாதம் செய்ய ஏன் தாமதிக்க வேண்டும்?மறைந்து கொண்டு எழுதுவதால் எந்த பயனும் அடையமுடியாது.இருவரும் விவாதிப்பதால் உண்மைகள் வெளிவரும்.
    செங்கொடியாரே நீங்கள் இஸ்லாமைப்பற்றி தரக்குறைவாக எழுதுவதாலோ,முஸ்லிம்கள் இஸ்லாமை பற்றி தூக்கிவைத்து எழுதுவதாலோ அதை காணும் மக்கள் பகுத்தறியாமல் மடையர்களாகத்தான் இருப்பார்கள்.இருவரின் கருத்துக்களையும் மோதவிட்டு அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் மக்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.பிறகு மக்களே தெரிந்துகொள்வார்கள் எது உண்மை எது பொய்யென்று.
    ப்ரியமுடன்
    கார்த்திக்

  9. செங்கொடி அவர்களே,

    தங்களுடைய இந்த நழுவலுக்கு,

    //செங்கொடி, மேல் செப்டம்பர் 30th, 2009 இல் 10:38 மாலை சொன்னார்:

    நண்பர் அப்துல் லத்தீப் அவர்களுக்கு,

    தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அழைப்பது தான் முறையா? நீங்கள் தந்திருக்கும் சுட்டியில் பார்த்தேன். சென்னையில் நடைபெறவிருக்கும் இதில் என்னால் கலந்து கொள்ள இயலாது, காரணம் உங்களுக்கு தெரிந்ததுதான். மேலும் திராவிடர் கழகம் போன்ற ஒரு அமைப்பினருடன் சேர்ந்து விவாதத்தில் பங்கெடுப்பதும், அமைப்பிலிருந்து யாரேனும் பங்கெடுக்கலாமா என்பதும் கலந்து பேசித்தான் சொல்லமுடியும்.

    என்னைப்பொருத்தவரை எப்போதும் நான் எழுத்து வடிவ விவாதத்திற்கு தயார். ஒரே நிபந்தனை, உங்களிடம் முன்பே கூறிய்து தான் இஸ்லாம் மட்டும் தான் சரியானது எனும் முன்முடிவை தவிர்த்துவிட்டு உங்கள் கொள்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்த தயாரா என்பது தான். தயாரென்றால் யாருடனும் எப்பொழுதும். இனி பதில் உங்கள் புறமிருந்து.

    தோழமையுடன்
    செங்கொடி//

    தாங்கள் கேட்ட பதில் தாமதமாக என்றாலும் வந்துள்ளது. அது இரண்டு நாள்களுக்கு முன்புதான் பெரியவர் PJ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்களின் பதில் கீழே,

    //ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டு அழைப்பது சரியா என்ற அவரது கேள்வி நியாயமானது. ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது. நேரடி விவாத்தில்தான் உடனுக்குடன் கேள்வி கேட்கமுடியும். ஒருவர் சொல்வது தவறா என்பதை உடனே கண்டுபிடிக்க முடியும். எனவே செங்கொடி என்பவரோ அவரைச்சேர்ந்தவகளோ தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் இதற்கு பயப்டவேண்டியதில்லை. அவர்களே மூடநம்பிக்கையின் ஒட்டுமொத்த வடிவமாக இருப்பதால் நேருக்கு நேராக சந்திக்க பயப்படுகிறார்கள். அவர்களுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து விவாதம் செய்ய நாம் தயார். அடுத்து அவர் விதித்திருக்கும் நிபந்தனைகூட அறியாமையாக உள்ளது. இஸ்லாம் மட்டுமே சரியானது என்ற நிலையை மாற்றிகொண்டால் தான் விவாதிப்பேன் என்பது அந்தக் கேளி கூத்தான நிபந்தனை. இஸ்லாம் மட்டுமே சரியானது என்று தக்க ஆதாரத்துடன் நம்புவதால் தான் விவாதத்திற்கே அழைக்கிறோம். பரிசீலனைக்கு உரியது என்ற கருத்து இருந்தால் அதில் விவாதத்துக்கு தேவையே இல்லையே. தனது விவாதத்தின் மூலம் அவர் நிரூபிக்க வேண்டுமே தவிர விவாதத்திற்கு முன்பே தோற்றுவிட்டதாக எழுதிகேட்பது மடத்தனமானது. இப்படி கூறுவதில் இருந்து இவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது உறுதியாகிறது. இதற்கு எதிர் கருத்தாக இஸ்லாம் பரிசீலனைக்கு உரியது அல்ல என்று செங்கொடி அறிவித்தால் தான் விவாதிப்பேன் என்று நான் சொன்னால் அதற்கு அவரது பதில் என்ன? வேண்டுமானால் இஸ்லாம் பரிசீலனைக்கு உரியதா? இவர்களின் கொள்கை பரிசீலனைக்கு உரியதா என்ற தலைப்பில் முதலில் விவாதிப்போம். இதற்கு அவர் சம்மதிக்கிறாரா என்று கேட்டு எழுதுங்கள். பகுத்தறிவு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் மடமையை தோலுரிக்க நாம் தயார்.//

    விவாதத்திற்கு வருவீர்கள் என்று எதிபார்க்கிறேன்.

  10. அன்பின் செங்கொடி,

    எழுத்து மூலமாக விவாதம் என்றால், பிஜே என்ன சொல்கிறாரோ அதனை இணையத்திலும் மற்ற இடங்களிலும் பரிசோதித்து பின்னால், வாதிட முடியும்.

    ஆனால், நேரடியாக விவாதம் என்றால் ஜாகிர்நாயக் விவாதம் போலத்தான் நடக்கும். தடாலடியாக எதாவது சொல்லவெண்டியது. ஆஹா என்று மூஃமீன்கள் கைதட்டுவது என்று இஸ்லாத்தை நிலைநாட்டிவிடலாம்.

    எழுத்து மூல விவாதத்துக்கு ஏன் பிஜே மற்றும் இதர அறிஞர்கள் வரமாட்டேன் என்கிறார்கள் என்பதையும் நீங்கள் கேட்கலாம்.

    நேரில் விவாதம் என்று உங்களது முகத்தை பார்ப்பதில் அவர்களுக்கு என்ன ஆர்வம் என்று யோசித்துப் பாருங்கள். உங்களது முகத்திலா விவாதம் இருக்கிறது? உங்களது கருத்தில்தானே இருக்கிறது? அது எழுத்து மூலமாக வருவதுதானே சரியான முறை?

    எழுத்து மூலமான விவாதத்துக்கு தொடை நடுங்குவது ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள்.

  11. அப்துல் நசீர்,

    //ஆனால், நேரடியாக விவாதம் என்றால் ஜாகிர்நாயக் விவாதம் போலத்தான் நடக்கும். தடாலடியாக எதாவது சொல்லவெண்டியது. ஆஹா என்று மூஃமீன்கள் கைதட்டுவது என்று இஸ்லாத்தை நிலைநாட்டிவிடலாம்.//

    என்னே உங்கள் நியாயம்? PJ அவர்களிடம் விவாதத்திற்கு வாருங்கள் என்றால் ஜாகிர் நாயக்கை காரணம் காட்டி தொடை நடுங்குகிறீர்கள்.

    PJ அவர்கள் நடாத்திய பல விவாதங்கள் அவர்களின் http://onlinepj.com//ல் காணக்கிடைக்கிறது. அது எவ்வளவு கட்டுக்கோப்பாக விவாதிப்பவர்கள் அல்லாது பார்வையாளர்கள் வேறு எவரும் வாய் திறக்கக்கூடாது உட்பட பல விதிமுறைகளை வகுத்து நடாத்தப்பட்டிருக்கு என்பதை காண்பீர்கள். நீர் யாரோ எனக்கு தெரியாது. நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளர்களாக இருந்தால் வாருங்கள் கோழைகளாக ஓடி ஒழியாரதீர்கள்.

  12. நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளர்களாக இருந்தால் வாருங்கள் எழுத்து மூலமான விவாதத்துக்கு.

    கோழைகளாக ஓடி ஒளியாதீர்கள்
    .
    ஏன் எழுத்து மூலமான விவாதத்துக்கு தொடை நடுங்குகிறீர்கள்?

    இங்கே ஏற்கெனவே விவாதம் ஆரம்பித்துவிட்டது.

    இங்கே எழுதியுள்ளவைகளுக்கு பிஜேவை பதில் எழுதச் சொல்லுங்கள்.

    பார்க்கலாம்.

  13. Assalamu alaikum. Anbu sakotharare, neengal islathai patri thappaka vilangi vaithulirkal. Eluthu moolamaka thaan vivathipen entral neengal http://www.onlinepj.com la ulla ungal kelvi pakuthiyil ungal santhekagankalai vivathikalam. Neradiyaka vivathithal thane karuthukalai udanakudan pera mudiyum. Neengal thairiyamaga p.j udan vivathathirku varungal. Avar thayaraka ullathaka solkirar. Vivatham nadakum pothu entha muslimum ungaluku ethiraga kosam poda matarkal.

  14. ஆக நீர் தான் செங்கொடிஎன்பது தெரிகிறது. கோழையே விவாதம் என்றால் நேருக்கு நேர் தான் நடக்கணும். அப்போதுதான் மக்களுக்கு ஒரு முடிவுக்கு வர யார் உளறுகிறார்கள் யார் உண்மையில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். நீர் ஒழிந்துகொள்வதிளிருந்தே தெரிகிறது உம்மிடம் உண்மை இல்லை என்று. ஓடிப்போ.

  15. 16.

    அப்துல் நசீர்,

    ஆக நீர் தான் செங்கொடிஎன்பது தெரிகிறது. கோழையே விவாதம் என்றால் நேருக்கு நேர் தான் நடக்கணும். அப்போதுதான் மக்களுக்கு ஒரு முடிவுக்கு வர யார் உளறுகிறார்கள் யார் உண்மையில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். நீர் ஒழிந்துகொள்வதிளிருந்தே தெரிகிறது உம்மிடம் உண்மை இல்லை என்று. ஓடிப்போ.

  16. அறிவு உள்ளவர்கள் சிந்திக்க

    எழுத்து மூலம் விவாதம் என்றால் என் வலைத்லத்தில் இருந்துக்கொண்டு நான் என்னவேண்டாலும் எழுதலாம் காக்கையை குருவி என்றும் குதிரையை கலுதையென்ரும்

    நேருக்குநேர் என்றால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கட்டாயம் சொல்லனும் திருப்பி அறிவோடகேள்விகேக்கனும் இத்ல்லாம் நடக்ககூடியதா?

    ஏதோ எல்லாம் தெரிஞ்சமாதிரி நம்ம எழுதுரதும் ஒன்னுமே தெரியாத இரண்டுபேர் ஆஹா ஓஹோ என்கிறார்கள் அதுப்பொருக்காத இரண்டுபேர் கூவுறாங்க இப்படியே நம்மபொளப்பு ஓடுது அதுப்புடிக்காம விவாதம் நேரடி ஒளிபரப்புன்னு பீதியகிளப்புறானுங்க

    இங்க வர்ர யாருக்கும் அட்ரஸ் இல்லயே ஏன்?

  17. //“பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்” குரான் 17:37. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது.//

    ஆனால், இப்னு பஷீர்2 அதற்கு எதிர் விளக்கம் சொல்கிறார், இப்படி:

    //இவைதான் மொழிபெயர்ப்புகள் என்றால், பூமியை மனிதன் பிளந்தும் இருக்கிறான். மலையின் உயரத்துக்கு உயர்ந்தும் இருக்கிறான். எவரெஸ்டிலேயே ஏறிவிட்டான்.//
    http://en.wikipedia.org/wiki/Kola_Superdeep_Borehole
    இது சொல்கிறது, As of 2003[update], the deepest active bore, SG-5, is 8,578 m (28,140 ft) and with a 214 mm (8.4 in) diameter. என்று. மலையின் உயரத்திற்கு மனிதன், தானே தன் உயிருள்ள உடலை தன் கால் கைகளினால் எதுத்துச்சென்று உயர்ந்திருக்கிறான்- கீழ்நோக்கி அல்ல..! மேல் நோக்கி..! அதாவது ஆகாயத்தை நோக்கி, அதாவது புவி ஈர்ர்ப்பு விசைக்கு எதிர் திசையில் பிரயாணித்து, அதாவது கடல் மட்டத்துக்கு மேலே..!

    ஆனால், 214 mm (8.4 inch) diameter அளவுள்ள அந்த துளையில் -அதாவது கீழ்நோக்கி போடப்பட்ட துளையில், கடல்மட்டத்துக்கு கீழே போடப்பட்ட துளையில், அதாவது புவி ஈர்ர்ப்பு விசையின் மையத்தை நோக்கி அதாவது பூமியில் போடப்பட்ட துளையில், அதுவும் 214 mm (8.4 inch) சுற்றளவுள்ள அந்த துளையில் எந்த மனிதன் சென்று வந்தான் என்று இப்புனு பச்சீறு இரண்டாம் நம்பர் அய்யா தான் விளக்கனும். முடிந்தால் சென்று வந்த ‘அவர்’, பெயர், ஊர், விலாசம் கொடுக்க முடியுமா?

    செங்கொடியின் ‘அசைவுக்கு’, ‘நிலநடுக்கம்’ என்ற போகிறபோக்கில் கூறப்படும் கருத்து திரிபுக்கு இது எந்த வகையிலும் குறைந்ததில்லை.

    ஏற்கனவே Mohamed Sabry, (மேல் ஜனவரி 5th, 2010 இல் 5:43 மாலை சொன்னார்) செங்கொடியை கிழித்து கந்தலாக்கி கசக்கி கரித்துணியாக்கி நஞ்சிப்போய் குப்பை தொட்டியில் போட்டு விட்டபடியால் மேற்கொண்டு நான் சொல்ல எதுவும் இல்லை.

  18. நண்பர் முகம்மத் சாப்ரி,

    மலைகளை முளைகளாக என்பத‌ற்கு நான் நில நடுக்கத்தை மட்டும் குறிப்பிடவில்லை.பூமியின் மூன்று வித அசைவுகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன், அதில் நிலந‌டுக்கமும் ஒன்று. நீங்களும், நீங்கள் சுட்டியிருந்த காணொளியில் ஜாஹிர் நாயக்கும் இன்னும் ஏனைய அறிஞர்களும் பூமியிலுள்ள பலவித அடுக்குகள் முறையான வேகத்தில் சுழல்வதற்கு மலைகள் பயன்படுகின்றன என திரும்பத்திரும்ப கூறி வருகிறீர்கள். ஆனால் எப்படி மலைகள் அதை செயல்படுத்துகின்றன என்பதை சொல்லத்தான் யாருமில்லை. மலைகள் இல்லாத காலத்திலும் பூமி சுழன்றுகொண்டுதான் இருந்தது. பூமியின் அடுக்குகள் சீறான வேகத்தில் சுழல்வதற்கு மலைகள் தேவையில்லை. ஏனென்றால் பூமியின் அடுக்குகள் சீரான கனத்தில் இல்லை. ஒவ்வொரு இடத்திலும் வெவேறு கனங்களில் இருப்பதால் அவை தமக்குள்ளே மாறுபட்டவேகம் ஏற்பட்டுவிடாதவாறு பிடிப்பை கொண்டிருக்கின்றன. நீங்கள் சுட்டிக்காட்டும் காணொளியிலேயே எல்லா அறிவியலாளர்களும் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்பதை குறிப்பிடுகிறார் கவனிக்கவும். சௌதி பல்கலைக்கழகத்திற்காக குரானை உண்மைப்படுத்தும் நவீன அறிவியல் எனும் தலைப்பிற்காக பெறப்பட்ட ஆய்வுரைகள் இப்படித்தான் இருக்கமுடியும். ஆனால் அதையே அறிவியலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது அவசியமில்லை. மாரிஸ் புகைல், கீத் மூரே உட்பட பல அறிவியலாளர்கள் சௌதியின் வேண்டுகோளுக்கிணங்க இதுபோன்ற ஆய்வுரைகளை பல தலைப்புகளில் தந்திருக்கின்றனர். இவைகளைத்தான் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

    கண்ட நகர்வு, அடுக்குகளின் மாறுபட்ட வேகம், நிலநடுக்கம் பூமியின் இந்த மூன்றுவித அசைவையும் மலைகள் கட்டுப்படுத்தவில்லை, தடுக்கவும் இல்லை. அப்படியென்றால் மலைகளை முளைகளாக பயன்படுத்தியது எதற்கு? இனி விளக்கமளிப்பது உங்கள் கடமை.

    நண்பர் இப்னு பஷீர்,

    \\செங்கொடியை கிழித்து கந்தலாக்கி கசக்கி கரித்துணியாக்கி நஞ்சிப்போய் குப்பை தொட்டியில் போட்டு விட்டபடியால்//

    செங்கொடியின் மீது அவ்வளவு கோபமா உங்களுக்கு?

    தோழமையுடன்
    செங்கொடி

  19. செங்கொடி அவர்களே,

    இஸ்லாமிய மார்க்க மேதை பெரியவர் PJ, அவர்களுடைய http://onlinepj.com// -ல் கீழ்க்கண்ட அழைப்பை விடுத்துள்ளார்கள். வழக்கம்போல் மௌனம் சாதித்தால் உங்கள் நிலை கேவலத்திலும் கேவலம் தான்.

    //சில கிருத்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்ட்களும், நாத்திகர்களும் இணையதளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்தை விததைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பதுதான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போதுதான் வெளியில் விமர்சிக்கவேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்கள் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.//

    பதிலை எதிர்பார்த்து,

    இனிமை.

  20. அப்படித்தான் இபனுபஷீர்22 .. வெளுத்து வாங்குங்கள்.. நாம்தான் மொழிபெயர்ப்பிலே தப்பிப்பது எப்படி என்பதில் வில்லாதி வில்லர்களாயிற்றே.

    தமிழில்குரானின்

    17:37 மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

    இந்த மொழிபெயர்ப்பு பொய்யாகிவிட்ட பின்னால்,

    பிஜேயின் இந்த மொழிபெயர்ப்பில்

    பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்” குரான் 17:37

    என்பதில் ரஷியர்கள் அந்த ஆழத்தை அடைந்துவிட்டார்கள். ஆகவே, அதற்கு இன்னொரு பொருள் கண்டுபிடித்துவிட்டார். அதாவது அங்கே சென்று குடியிருப்பது.

    ”பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவுக்கு ஆழக்த்து போய் குடியிருந்து டீ குடிக்கவே முடியாது“

    அரபியிலிருந்து தமிழிலேயே இவ்வளவு குளறுபடி என்றால், நாம் தமிழிலேயே தமிழுக்கு எவ்வளவு குளறுபடி பண்ணுவோம்..

    எப்படி முகம்மதை தப்பிக்க வைத்துவிட்டோம். அப்படித்தான் இப்னுபஷீர்22.

    எவனாவது அந்த ஆழத்துக்கு போய்விட்டால், அங்கு சென்று டீ குடித்தாயா மஞ்சள் அரைத்தாயா என்று கேட்டு பின்னி பெடல் எடுத்துவிடுவோம்ல!

    அப்படியே அங்கு சென்று டீ குடித்துவிட்டாலும், அது அரபி குரானில் எழுதிய்ருக்கிறது. ஆகவே அங்கு சென்று அரபியாவில் உருவான டீ தான் குடிக்க வேண்டும் என்று கிளப்பிவிடுவோம்.

    சும்மாவா நம்மளை “சிந்திக்க மாட்டீர்களா?” என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறார் முகம்மது?

  21. செங்கொடி அவர்களே,

    இந்த விவாதம் சம்பந்தமாக நாம் விவாத்தித்துக் கொண்டிருபது ஒரு முடிவுக்கு வரும் நிலையை எட்டி இருக்கு என்று நம்புகிறேன். பெரியவர் PJ அவர்கள் மிகத்தெளிவாக தங்களுடைய நேரடி விவாத தயக்கம் நீங்க விளக்கி உள்ளார்கள். அது கீழே,

    //நேரடி விவாதம் குறித்து சொல்லப்படும் கருத்து ஏற்கத்தக்கது அல்ல.

    விவாத்தின்போது குர்ஆன் ஹதீஸை நாம் எடுத்துக்காட்டினால் அதை உடனடியாக சரிபார்க்க அவர்களுக்கு இயலாது என்பதும், அவர்கள் கம்யூனிசம் குறித்து எடுத்துவைத்தால் நாம் சரிபார்க்க முடியாது என்பதும் காரணம் என்றால் அதற்கு நேரடி விவாதத்தின் ஒப்பந்தத்தில் வழி காணலாம்.
    விவாதத்தில் காட்டப்படும் மேற்கோள்கள் எதுவானாலும் அதற்கான ஆதாரத்தை இருதரப்பும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொண்டால் இது ஒரு பிரச்னையே இல்லை.
    நேரடி விவாதத்தில் எதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்களோ அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் இந்தக் காரணம் ஏற்கத்தக்கது அல்ல.
    ஒருவர் தவறான வாதத்தை எடுத்து வைத்தால் அவர் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து உண்மை எது பொய் எது என்று சந்தேகத்திகு இடமில்லாமல் நிரூபிக்கும் வாய்ப்பு நேரடி விவாதத்தில் தான் உண்டு.
    எழுத்து வடிவிலான விவாதம் என்றால் வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டு போகலாம். அதிக இடைவெளி இருப்பதால் மக்களால் உண்மையை எளிதில் புரிய முடியாது.
    சில விஷயங்களுக்குப் பதில் கூற முடியாத போது அதை ஒப்புக் கொள்ளாமல் சம்பந்தமில்லாதவைகளை எழுதுவதும் கடைசியில் அதற்குப் பதில் கூறுவதாகவும் கூறிக்கொண்டு நாட்களை கடுத்துவதும் எழுத்து விவாதத்தில் உண்டு என்பதை அனுபவபூர்வமாக நாம் அறிகிறோம்.
    எந்த மனிதரும் பொதுமக்கள் மத்தியில் பேசுவது போல் எதிரியின் முன்னிலையில் பேசமாட்டார். மிகச் சரியான தகவலையே பேசுவார். எழுத்து விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் தெரிவிக்கும் கருத்து அல்ல. பொது மக்களை வசீகரப்படுத்தும் தந்திரம் தான் அதில் மிகைத்து இருக்கும். நேரடி விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் கருத்தை தெரிவிப்பது என்பதால் அது தான் ஆழமானதாகவும் அறிவுப்பூர்வமனதாகவும் இருக்கும்.
    கம்யூனிசம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அதை அவர் விடுவதாகவும் இஸ்லாம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அதை நீங்கள் விடுவீர்களா என்றும் இப்போது கேட்பது போல் முன்னர் கேட்கவில்லை.
    விவாதம் என்றாலே இதுதான் அர்த்தம். எது தவறு என்று நிரூபிக்கப்படுகிறதோ அதை விடமாட்டேன் என்றால் அது விதண்டாவாதம். இஸ்லாம் தவறு என்று நிரூபிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அவர்களால் நிரூபிக்க முடியாது என்பதால்தான் விவாதத்துக்கு அழைக்கிறோம். இஸ்லாம் தவறு என்று அவர்கள் நிரூபித்து விடுவார்களானால் தவறானது என்று நிரூபிக்கப்பட்டதில் நாங்கள் இருக்கமாட்டோம். அதுபோல் கம்யூனிசம் தவறு என்பது மிக எளிதில் நிரூபிக்கத் தக்கது என்பதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். இஸ்லாம் தவறு என்று இதுவரை நிரூபித்தவர் எவரும் இல்லை என்பதையும் அவர் பாணியில் நானும் உறுதிபடக் கூறுகிறேன்.
    விவாதம் என்பது திடீரென உட்கார்ந்து பேசுவது அல்ல. இதுகுறித்து இரு தரப்பும் கலந்து பேசி தகுந்த விதிமுறைகளை வகுத்துக்கொண்டு தான் விவாதம் நடத்துவோம். எனவே நேரடி விவாதம் தொடர்பாக என்னென்ன குறைபாடுகள் தெரிவிக்கப்படுகிறதோ அதைச்சரி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்துகொண்டால் அதிகப் பயனுள்ள வகையில் நேரடி விவாதத்தை அமைக்க முடியும்.
    இப்போது எழுத்து வடிவிலான விவாதம் குறித்த அவரது தயக்கம் நீங்கி விட்டதால் விவாத ஒப்பந்தத்துக்கான தேதியை அவர் அறிவிக்கட்டும். ஒப்பந்தம் செய்யும்போது தேவையான அவகாசத்தை இருவரும் எடுத்துக்கொள்ளலாம். அதற்காக நாம் காத்திருக்கிறோம்.//

    பதிலை எதிர்பார்த்து,

    இனிமை.

  22. தங்கள் பதிலுக்கு நன்றி. காத்திருக்கிறோம்

  23. செங்கொடி அவர்களே,
    இங்கே இப்னுபஷீர்(2) அடித்திருக்கும் கிண்டலை பாருங்கள். அதில் உண்மைஇருக்கிறது.

    பிஜேவுக்கும் சரி, உங்களுக்கும் சரி, அரபி மொழி தாய்மொழி அல்ல. அதனை கரைத்துகுடித்தவர்களும் அல்ல. ஆனால் நீங்கள் விவாதிக்கப்போவதோ, அதன் மொழிபெயர்ப்புகளை வைத்து. பிஜே அரபி பண்டிதராகவே இருந்தாலும், அவரது மொழிபெயர்ப்பு காலம் காலமாக அரபியை தாய்மொழியாக கொண்ட அரபியர்களே செய்துவந்த மொழிபெயர்ப்பிலிருந்து மாறுபட்டு இவராக ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்கி அதன் மூலம் விவாதிக்கப் போகிறார்.

    அவரது மொழிபெயர்ப்பு தவறு என்று நீங்கள் சொன்னால், தனது மொழிபெயர்ப்புதான் சரி என்று சாதிப்பார். அவரளவுக்கு உங்களுக்கு அரபி மொழிபாண்டித்யம் கிடையாது என்று வாதிடுவார்.

    இந்த வீடியோவில் அரபியை தாய்மொழியாக கொண்ட அரபி மொழி ஆராய்ச்ச்சியாளர், குரான் ஆராய்ச்சியாளர், குரானில் உலகம் தட்டைதான் என்று வாதிடுகிறார். ஆனால், அரபியை தாய்மொழியாக கொண்டிராத தமிழரான பிஜேயோ, இரவுக்குள் பகல் போகிறது என்று குரானில் இருப்பதை வைத்து உலகம் உருண்டை என்று பம்மாத்து செய்கிறார். இதனை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது. (திருக்குறளுக்கு எவனோ ஒரு அரபியன் வந்து இதுதான் சரியான பொருள் என்று தமிழர்களை திருத்தினால் நாம் சிரிப்போமா சிரிக்கமாட்டோமா?)

    இவரது பதிவில் நான் ஒரு கேள்வி கேட்டேன். அதனை அனுமதிக்கவில்லை. பிஜேவை வானளவாக பாராட்டும் கருத்துக்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுகின்றன. இவர்களிடம் என்ன வாதம் செய்யமுடியும்?

    நேரடியாக வாதம் என்பது ஆளை அடையாளம் கண்டுகொள்ளவும்,அவரது சொந்தங்களை அச்சுருத்தவுமே பயன்படும். அவர்கள் அச்சுருத்தவில்லை என்றாலும், ஒரு மணி நேரத்திலோ ஒரு நாளிலோ முடியக்கூடிய விவாதம் அல்ல இந்த இஸ்லாமிய விவாதம். பல மாதங்கள் நீடிக்கக்கூடியது. நிதானமாக ஒவ்வொரு வாதத்தையும் உடைக்க வெகுகாலம் தேவை. ஏனெனில் அவர்கள் இது போன்ற போலி வாதங்களை ஏராளம் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

    எழுத்து மூலம் விவாதமே சிறந்தது. அதில்தான் இவர்களது தீவிரவாத போலி அறிஞர் முகத்திரையை கிழிக்க முடியும்.

  24. அப்துல் நஸிர்,

    //பிஜே அரபி பண்டிதராகவே இருந்தாலும் //

    கொழந்தே.

  25. அன்புள்ள செங்கொடி

    inimai சொல்வதை கவனியுங்கள்

    பிஜே தனது தவறை ஒப்புக்கொள்ளவே மாட்டார். அவரது தொண்டரடிப்பொடிகளும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.

    நீங்கள் வைத்திருக்கும் வாதங்கள் முகம்மதே குரானை உருவாக்கியவர் என்று தெளிவாகவே நிரூபிக்கின்றன.

    சிந்திக்க முடிந்த எவராலும் இதை சரியாக புரிந்துகொண்டுவிடலாம்.

    ஆனால், ஏன் இவர்கள் பிஜேவை வாதிட அழைக்கிறார்கள்? பிஜே எப்படியாவது உங்களை தோற்கடித்துவிடமுடியும் என்ற் நினைக்கிறார்கள்.

    இத்தனைக்கும் பிஜேவின் வாதங்களையே நீங்கள் உடைத்திருக்கிறீர்கள்.

    ஏனெனில் இது அடையாளம் சம்பந்தப்பட்ட விஷயம். தவறாகவே இருந்தாலும் வெளியே வர முடியாது.

    அடையாளத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே இது முடியும்.

  26. அப்துல் நஸிர்,

    உம்மை நான் எந்த கணக்கில் எடுப்பது. நான் சொன்னது (கொழந்தே) ரொம்பவும் நளினமோ? வேறு வார்த்தையை பயன்படுத்தி இருக்கனுமோ?

    நீர் தொடர்ந்து இட்டு வரும் பின்னூட்டங்கள்…….சொல்லிறவா?

    ஒரு குழந்தையை அடித்துவிட்டு வருத்தப்படுவது போல் தான் இருக்கும்.

    கொழந்தே,
    //நேரடி விவாதத்தில் காட்டப்படும் மேற்கோள்கள் எதுவானாலும் அதற்கான ஆதாரத்தை இருதரப்பும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொண்டால் இது ஒரு பிரச்னையே இல்லை.
    நேரடி விவாதத்தில் எதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்களோஅந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் இந்தக் காரணம் ஏற்கத்தக்கது அல்ல.
    ஒருவர் தவறான வாதத்தை எடுத்து வைத்தால் அவர் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து உண்மை எது பொய் எது என்று சந்தேகத்திகு இடமில்லாமல் நிரூபிக்கும் வாய்ப்பு நேரடி விவாதத்தில் தான் உண்டு.
    எழுத்து வடிவிலான விவாதம் என்றால் வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டு போகலாம். அதிக இடைவெளி இருப்பதால் மக்களால் உண்மையை எளிதில் புரிய முடியாது.
    சில விஷயங்களுக்குப் பதில் கூற முடியாத போது அதை ஒப்புக் கொள்ளாமல் சம்பந்தமில்லாதவைகளை எழுதுவதும் கடைசியில் அதற்குப் பதில் கூறுவதாகவும் கூறிக்கொண்டு நாட்களை கடுத்துவதும் எழுத்து விவாதத்தில் உண்டு என்பதை அனுபவபூர்வமாக நாம் அறிகிறோம்.
    எந்த மனிதரும் பொதுமக்கள் மத்தியில் பேசுவது போல் எதிரியின் முன்னிலையில் பேசமாட்டார். மிகச் சரியான தகவலையே பேசுவார். எழுத்து விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் தெரிவிக்கும் கருத்து அல்ல. பொது மக்களை வசீகரப்படுத்தும் தந்திரம் தான் அதில் மிகைத்து இருக்கும். நேரடி விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் கருத்தை தெரிவிப்பது என்பதால் அது தான் ஆழமானதாகவும் அறிவுப்பூர்வமனதாகவும் இருக்கும்.//
    மிகத்தெளிவாகத் தான் சொல்லப் பட்டிருக்கு.
    செங்கொடி அவர்களுக்கு புரிந்துதான் நேரடி விவாதத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளார்.
    உம்மை பார்த்து அவர் தலையில் தான் அடித்திக் கொள்வார்.

  27. “அப்துல் நஸிர்” அவர்களே நீங்கள் ரொம்ப அலட்டி கொள்ளவேண்டாம்.

  28. நண்பர் அப்துல் நசீர்,
    தோழர்கள் நேரடி விவாதத்திற்கு தயாராகியே வருகின்றனர். பசுங்கொடிகள் செங்கொடிகளை கருப்பு கொடிகளைப் போன்றதுதான் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். செங்கொடிகளுக்கு முன் எந்தக்கொடிகளாலும் பறக்க முடியாது. பசுங்கொடி மட்டும் விதிவிலக்கா என்ன! அதுவும் எமது தோழர்கள் பற்றிருக்கும் செங்கொடிக்கு முன்பாகவா,வாய்ப்பே இல்லை.

  29. நண்பர் செங்கொடி,

    அண்ணன் பீஜே அவர்கள் தங்கள் நிலை அறிந்து ஒப்புதல் தெரிவித்துள்ளார்கள்.

    //வெளி நாட்டில் இருப்பதால் விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள முடியாது என்ற காரணம் ஏற்கக் கூடியது தான். அவர் ஊர் வரும் போது தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றட்டும். அதுவரை நாம் காத்திருப்போம். – பீஜே.//

    நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

  30. நண்பருக்கு இறையருள் வேண்டியவனாக,

    நண்பர் நிறைய ஆய்வு செய்ய முனையாமல் நுனிப்புல் மேய்வது கவலையாக இருக்கின்றது.

    மாற்றங்களுக்கு வேண்டுகின்றோம்.

  31. நண்பர் செங்கொடி,

    அண்ணன் பீஜே அவர்கள் தங்கள் நிலை அறிந்து ஒப்புதல் தெரிவித்துள்ளார்கள்.

    //வெளி நாட்டில் இருப்பதால் விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள முடியாது என்ற காரணம் ஏற்கக் கூடியது தான். அவர் ஊர் வரும் போது தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றட்டும். அதுவரை நாம் காத்திருப்போம். – பீஜே.//

    இந்த செய்தியை நான் பார்த்து சந்தோஷப்பட்டதுடன் கடுமையாக கவலயடைந்தேன், காரணம், பீஜே அவர்கள் இந்தியாவில் இருக்கும் வரை செங்கொடி இந்தியாவுக்கு வரமாட்டார்.

    அது நிச்சயம்,

  32. இஸ்ஸதீன், ரொம்ப கவலையா இருந்தா உங்க பீஜேவை செங்கொடி வேலை செய்யும் இடத்திற்கு போகச் சொல்லுங்களேன்.

  33. குரான் 17:37 பற்றி சிறு ஆய்வு.
    சரியான மொழி பெயர்ப்பு எது?
    இதற்கு டான்ஜில் (www.tanzil.info) என்ற இணையத் தளம் பல மொழிகளில் குரான் மொழிபெயர்ப்பு அளிக்கும் தளம் மற்றும் குரான் வார்த்தைகளுக்கு அர்த்தம் அளிக்கும் கார்பஸ் குரான்(corpus.quran.com) என்ற‌ தளத்திலும் அர்த்தம் தேடினோம்.

    .குரானில் குறிப்பிடபடுவது என்ன?

    இருவிதமான பொருள்கள்.

    1.மலையின் உச்சியை அடைய முடியாது.(அறிவியலின் படி தவறு)

    2.மலை உச்சி அளவிற்கு உயரமாக முடியாது.

    டான் ஜில் தளத்தில் பார்த்தால் அடைபுக்குறியை நீக்கி பார்த்தால் முதல் அர்த்தமும்,அடைப்புக் குறியோடு பார்த்தால் இரண்டாம் அர்த்தமும் வருகிறது.

    17.37:மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

    மூல அரபி வார்த்தையை ஆய்வு செய்ய எண்ணி அந்த வார்த்தையை துலான் என்று கண்டு கார்பஸ் குரான் தளத்தின் மூலம் அர்த்தம் பார்த்தால்

    (17:37:13)- طُولًا
    –tulan -(in) height.-உச்சி(யளவு)-(N – accusative masculine indefinite noun)

    துலான் என்ற வார்த்தை குரானில் இதே விதமாக இந்த வசனத்தில் ம்ட்டுமே பயன் படுத்தப்பட்டு உள்ளது.

    துலான் என்பதற்கு சரியான அர்த்தம் என்பதை ஆறாம் நூற்றாண்டு குரேஷிய அரபி மொழி இலக்கணம் கொண்டு விளக்குங்கள்.

    துலான் -tulan-(in) height-உச்சி(யளவு)

    முடிவு என்ன?

    துலான் என்பதின் அர்த்தம் உச்சி அளவு என்ரால் அடைப்புக் குறியினுள் கூற வேண்டிய அவசியம் என்ன‌
    ஆங்கிலத்திலும் (in) height)அவ்விதமாகவே கூறப்பட்டுள்ளது.

    ஆகவே அடைப்புக் குறிஅயை பொறுத்தே அவ்வாக்கியத்தின் அர்த்தம் மாறுகிறது.

  34. இந்த குரான் 17:37 க்கு பி.ஜே ஒரு விளக்கம் தருகிறார். அத்னை படியுங்கள்.ம்லையின் உயரத்திற்கு இல்லை ஆழத்திற்கு செல்ல முடியாது என்றே குரான் கூறிவதாக பி.ஜே கூறுகிறார்.

    ஆழம் ந்பதை குறிக்கும் வார்த்தை அரபி மூலத்தில் இல்லையே என்றால்,இந்த மாதிரி கேட்டால் அறிவியல் எப்படி வரும் என்று கூறிவிடுவார்.
    பி.ஜே வின் மொழிபெயர்ப்பு

    37. பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!266
    என்ன உயரம்தானே இருக்கிறது என்றால்.விளக்க குறிப்பு 266ஐ பார்க்க வேண்டும்.
    //266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது

    விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று (17:37) சொல்கின்றது.
    இவ்வசனம் மிகப் பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.
    தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர்.
    ‘நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை’ என்ற கருத்துப் படவே பெரும்பாலான மொழி பெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.
    ஆரம்ப காலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.
    மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக்கூடாது என்ற செயலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.
    இவ்வசனத்தின் சரியான பொருள் இது தான்.
    ‘நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை’
    மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படியெல்லாம் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பது தான் இவ்வசனம் கூறும் கருத்தாகும்.
    நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான்.
    இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம்.
    மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.
    பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும்.
    இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான்.
    உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை.
    உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
    பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டாலே காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை.
    மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச் செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது.
    இந்தப் பேருண்மைகளை 14 நூற் றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறை வேதம் என்பது நிரூபணமாகின்றது.

    11.07.2009. 03:39

    //’
    அதாவது

    1. மலையின் உயரம்,நீளமாகி,ஆழமானது.

    2.உலகின் உயரமான சிகரம் எவெரெஸ்ட்(கடல் மட்டத்தில் இருந்து 8,848 மீட்டர்)

    http://geology.com/records/highest-mountain-in-the-world.shtml

    உலகில் ஆழமான் கடல் பகுதி (கடல் மட்டத்தில் 10,916 மீட்டர்)

    http://geology.com/records/deepest-part-of-the-ocean.shtml

    நீர்மூழ்ழ்கி கப்பலைல் கடலின் அடியை அடைய முடியும்.ம்லையின் உயரம் அளவிற்கு ஆழத்தை அடைய முடிகிறது அல்லவா?

  35. சங்கர் ///பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! ////
    வசனம் பூமியில் கர்வத்துடன் நடப்பவர் பற்றித்தான் கூறுகிறது .உங்களைபோல ,செங்கோடிப்போல கம்யுனிசத்தை தேடி சோஷலிச பாதை என்று கடல் நீரின் மேல் நடக்கவில்லை.

  36. நண்பர் இப்ராஹிம்
    உலகின் மிக ஆழமான சுரங்கம் டவுடோன தென் ஆப்பிரிக்காவில் உள்ளது.இது 1962 ல் தோண்ட ஆரம்பிக்கப்பட்டது.2008ல் இதன் ஆழம் 3.9 கி.மீ.சுமார் 50 ஆண்டுகளை 4 கி.மீ என்றால்,இன்னும் 100 வருடம் தோன்டினால் நிச்சயமக 10 கி.மீ வரை செல்ல முடியும்.தேவை என்றால் மனித்ன் 100 கி.மீ அழத்திலும் பணி செய்வான்.

    ஆகவே மலையின் உய‌ர அளவு(அதிக பட்சம் 10 கி.மீ) ஆழம் என்பது அடைய முடியாத தூரம் அல்ல.

  37. சங்கர்,கம்யுனிச ஆட்சிக்காக பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு பொறுமை காக்கும் உங்களுக்கு பத்து ஆண்டுகள் பொறுக்கக்கூடாதா? பத்து கி.மி.ஆலாத்தில் பூமியின் வெப்பம் மற்றும் பூவு ஈர்ப்பு விசை பற்றி பி.ஜே கூறியுள்ளாரே அது பற்றி வலைத் தளங்களில் ஒன்றும் கிடைக்கவில்லையா?

  38. //பூமியின் வெப்பம் மற்றும் பூவு ஈர்ப்பு விசை பற்றி பி.ஜே கூறியுள்ளாரே அது பற்றி வலைத் தளங்களில் ஒன்றும் கிடைக்கவில்லையா//

    பூமியின் மேற்பகுதி சுமார் 10_30 கி.மீ ஆழம் உடையது. உலகின் மிக ஆழமான குழியை இரஷ்ய விஞ்ஞானிகள் தோண்டியுள்ளனர்.1970ல் இருந்து தோண்டிய இதன் ஆழம் சுமார் 40,000அடி(12,000 கி.மீ).

    இந்த குழி பூமியின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக மட்டுமே தோண்டப்பட்டது. இது இல்லாமல் இன்னும் சில ஆழ்மான துளைகளும் உண்டு. அது பற்றிய சுட்டிகள் தருகிறேன். மற்ற விவரங்கள் ஆய்வில் உள்ளதால் எதிர்காலத்தில் வெளிவரும்.
    http://www2.gi.alaska.edu/ScienceForum/ASF7/725.html

    http://en.wikipedia.org/wiki/Kola_Superdeep_Borehole

    http://en.wikipedia.org/wiki/Sakhalin-I

  39. பூமி ஆடாதிருக்க மலையை ந‌ட்டதாக குரான் குறிப்பிடபடுவது நல்ல கர்பனை.கொஞ்ஜம் ஜப்பான் சுனாமி பற்றி {குரான் வசனம் 16:15,16 பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க அதில் முளைகளையும், …………அமைத்தான்………. இந்த வசனத்தில் மலைகள் அதாவது முளைகள் இருப்பதால் தான் பூமி உங்களை அசைத்துவிடாதிருக்கிறது என்று கூறுகிறது குரான்}சுனமி சாத்தான் செயல் என்பதை தவிர வேறு காரணங்கள் இருக்க முடியுமா.

  40. மிகுந்த பைத்தியக்காரத்தனமான வகையில் ஒரு வசனம் உள்ளது. இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி, சாயாமலிருக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம். (சூரா 21-31) என்கிறது. பூங்காக்களில் சிறார்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட சீசா பலகை போலவா உலகம் உள்ளது? மனிதர்கள் ஆடினால் சாய்ந்து விடுமாமே! இது அதனைத் தடுப்பதற்காக மலைகளை அமைத்ததாமே! உலகம் உருண்டை என்பதை மெகல்லன் எண்பித்துக் காட்டிய பிறகும் கூட, பழைய மூடக்கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் மத நூல்களை நம்பலாமா?

  41. நாத்திகனே தாங்கள் பைத்தியக்காரனாக உளறக் கூடாது .ஆடி என்பதை பூமியின் சுழர்ச்சியை இங்கு கூறப்படுகிறது குறிப்பிட்ட இந்த வசனத்தின் விளக்கத்தை பீஜேயின் தமிழாக்கத்தில் விளக்க குறிப்பு எண் 248 மோளம் தெரிந்து கொண்டு அதன் பின்னர் உமது விமர்சனத்தை வைக்கவும்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s