மாயன் நாள்காட்டி + நோவாவின் கப்பல் = 2012

சில மாதங்களுக்கு முன்பு, மாயன் நாள்காட்டியில் 2012 ல் உலகம் அழியப்போவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று மாயன் கலாச்சாரத்தை அலசி ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். அதற்கு அறிவியல் புனைகதை பூசி உலவவிட்டிருக்கிறார்கள் திரைப்படவடிவில், அதுதான் 2012.

மாயன் சமூகத்தை ஆராய்வதற்கு எவ்வளவோ தலைப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக, சிறப்பான தங்கள் கலாச்சாரத்தை பேணி வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், திடீரென மறைந்து போனதன் காரணம் என்ன? என்பதை கருப்பொருளாக கொண்டிருந்திருக்கலாம். வெறிபிடித்த ஸ்பெயின் காலனியாக்கவாதிகள் போரில் கொல்லமுடியாத அம்மக்களை உதவி என்ற பெயரில் அம்மை நோய்க்கிருமிகள் கொண்ட போர்வையை வழங்கி கொத்துக்கொத்தாக கொன்று தீர்த்ததை பரவலாக்கி அம்பலப்படுத்தியிருக்கலாம். ஆனால் அது அவர்களின் அரசியலுக்கு உகந்ததாக இருந்திருக்காது. இருக்கை நுனியில் அமர்ந்து நகம்கடிக்கும் ரசிகர்களுக்கும் உகந்ததாக இருந்திருக்காது.

பிரமாண்டமான வரைகலை உத்திகளின் பரபரப்பை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஏகாதிபத்தியவாதிகளின் சிந்தனை நெருக்கடியான கட்டத்தில் எப்படி மக்கள் விரோதமானதாக இருக்கும் என்பதை ஓரளவிற்கு உணர்த்துகிறது. 2012ல் உலகம் அழியப்போகிறது என்று 2009லேயே தெரிந்து கொண்ட பின்பும் மக்களைக்காக்க எந்த முயற்சியும் செய்யாமல் ஏகாதிபத்திய முதல்நிலை நாடுகளின் தலைவர்களும் பணக்கார பொறுக்கிகளும் தப்பிச்செல்வதற்கு கப்பல் தயாரிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் நிஜத்தில் தன்னுடைய மேலாதிக்கத்தை ஏற்கமறுக்கும் நாடுகளையும் அதன் மக்களையும் குண்டுவீசி கொல்லும் அமெரிக்க நாட்டின் அதிபர் நிழலில் தப்பிப்போக வாய்ப்பிருந்தும் மக்களுக்கு சேவைசெய்தே மடிகிறார். ஆஹா இது போன்ற தலைவர்களல்லவா நாட்டுக்கு வேண்டும்.

பைபிளில் (குரானிலும்) ஒரு கதை உண்டு. நோவாவின் (நூஹ்) காலத்தில் மக்கள் கடவுளின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த மறுக்க கோபம்கொண்ட கடவுள், நோவாவையும் அவரைச்சார்ந்தவர்களையும் கப்பல் கட்டச்செய்து தப்பவைத்து ஏனையவர்களை பெருவெள்ளம் கொண்டு அழிக்கிறார். இந்தக்கதையைத்தான் ராமநாராயணனின் வேப்பிலை அம்மன் அளவுக்கு இல்லாமல் அறிவியல் என்று சுற்றி இருக்கிறார்கள். உலகமக்களுக்கு அன்பை போதிக்கும் ஒரு கதையை எழுதி அது ஐநூறு படிகளே விற்ற நூலின் எழுத்தாளன் தான் கதையின் நாயகன். உலகம் அழியப்போகிறது என்று தனக்கு தெரிந்த உண்மையை உலகிற்கு சொல்ல காலம் இல்லாமல் மயிர் கூச்செரியும் சாகசம் செய்து தன் குடும்பத்தை காக்கிறார். துப்பாக்கியை வைத்துதான் ஆய்வு செய்வீர்களா என்று ஓரிடத்தில் வசனம் பேசுகிறார் நாயகன். உலகம் முழுவதிலும் ஆயுதங்களை முன்னிட்டே ஆய்வுகள் நடக்கின்றன என்பதை தெரியாத இந்த எழுத்தாளரின் நூல் தான் புதிய உலகிற்கு வேதமாக  எடுத்துச்செல்லப்படுகிறது.

பில்லியன் டாலர் லாபம் கிடைத்தது என்று விருந்து கொண்டாடும் முதலாளிதான் அதிபருக்கு அடுத்த இடத்திலிருந்து செயல்களை தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறான் என்பதை வெளிப்படையாக்குகிறது படம். இந்த முதலாளியோடு வாதம் செய்து தான் அறிவியலாளன் மக்களில் சிலரை கப்பலில் பயனிக்கச்செய்கிறான். கப்பலை செய்த தொழிலாளிகள் முதல் உலகம் அழியப்போகிறது என கண்டுபிடித்தவர் வரை எல்லோரும் அழிந்துபோக மில்லியன் டாலர் கொடுக்கமுடிந்தவர்கள் இங்கு ஏழைகளாக சித்தரிக்கப்படுகின்றனர். புதிய உலகின் ஏதுமற்ற வர்க்கம்?

யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் தயாரிக்கப்படும் கப்பலைப் பற்றி தகவல் தெரிந்த அனைவரும் வரிசையாய் கொல்லப்படுகிறார்கள். உலக அழிவையும் அதிலிருந்து தப்ப திட்டங்கள் தரும் அறிவியலாலனும் கூட கண்காணிக்கப்படுகிறான். இதையெல்லாம் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் அதிபர் எல்லாம் முடிந்தபின் மக்களுக்கு அறிவிக்கிறாராம். ஆனால், தொடக்கத்திலிருந்தே இந்த அழிவை மக்களுக்கு அறிவிப்பதையே நோக்கமாக கொண்டவன் ஒரு பைத்தியக்காரனைப்போல் காட்டப்படுகிறான். தனக்குத் தெரிந்த தகவலைக்கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பவன் கதாநாயகன், எதிர்வரும் அழிவை மக்களுக்கு சொல்ல நினைப்பவன் பைத்தியக்காரன். முதலாளியமும் இதையே தான் சொல்கிறது, உன்னை மட்டுமே பார் சமூகம் உனக்கு தேவையில்லை என்று.

சூரியனின் நெருப்பு விசிறல்கள் அதிகரித்து நியுட்ரினோக்களின் விளைவால் புவியின் உள்வெப்பம் அதிகரிப்பதால் பூமி பிளந்து எரிமலைக் குழம்புகள் வீசியடிக்கின்றன. ஆனால் இவ்விளைவுகளால் பூமியை மூழ்கடிக்கும் அளவிற்கு பெருவெள்ளம் எப்படி ஏற்படுகிறது?

வரைகலை உத்திகளால் மக்களை பிரமிப்புக்கு உள்ளாக்கி ஒருவித அயர்ச்சியுடன் வெளித்தள்ளும் இதுபோன்ற படங்களைவிட குறைகளிருந்தாலும் விழிப்புணர்வை தூண்டும் நாகரீக கோமாளி, ஈ போன்ற நம்மஊர் படங்கள் பல மடங்கு சிறந்தவை.

முந்தைய திரைப்பட மதிப்புரைகள்

உன்னைப்போல் ஒருவன்

தனம்

சுப்பிரமணியபுரம்

பருத்தி வீரன்

11 thoughts on “மாயன் நாள்காட்டி + நோவாவின் கப்பல் = 2012

 1. kadavulin peyaril sandai poduvadu enakkum pudikadu.. adarkaka aduthavarin nampikayai vasam padum unnai pontra murai ketta kuthadi naykal irupaduthan kastama irukku.. puthiya janakathil ammavai pondadinu kupituvayada .. oru ella visayangalilum adan muda nampikayai enpathu vanthu vidum.. adarkku unnai pontra sila nayaka panathirkku adai payan paduthu kirathu.. ade arivuketta kena punnakku.. araikurai padithu viddu enda aduthavan vayila vilura.. IDU UN PONDADI KUDA ARAIKURAI PALAKKAM VAITHA ADAN VILAIVU ENNA AKUMNU PARU.. NI VELINADDIL IRUKIYAME.. ADE NAYE POI UN FAMILYA PARUDA THARUTHALA…

 2. “””பைபிளில் (குரானிலும்) ஒரு கதை உண்டு. நோவாவின் (நூஹ்) காலத்தில் மக்கள் கடவுளின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த மறுக்க கோபம்கொண்ட கடவுள், நோவாவையும் அவரைச்சார்ந்தவர்களையும் கப்பல் கட்டச்செய்து தப்பவைத்து ஏனையவர்களை பெருவெள்ளம் கொண்டு அழிக்கிறார். “””””””””””””””
  இதை கதையென்று நீங்கள் சொல்கின்றீர்கள் ஆனால் இது உண்மையான வரலாறு என்று இந்த சுட்டிகள் சொல்கிறதே
  http://www.quranandscience.com/historical/102-noah-ark-at-gudi-mountain.html
  இது கதையென்றால் அந்த மலையில் எப்படி ஒரு கப்பல் இருந்திருக்க முடியும்?
  ராட்சத கிரேன் மூலம் கப்பலை அங்கு கொண்டு சென்றிருப்பார்களோ?
  அங்கு ஒரு கப்பல் இருப்பதை பைபிளும்,குரானும் வருவதற்கு முன்னவே கண்டு பிடித்தார்களா என்ன?

 3. //சூரியனின் நெருப்பு விசிறல்கள் அதிகரித்து நியுட்ரினோக்களின் விளைவால் புவியின் உள்வெப்பம் அதிகரிப்பதால் பூமி பிளந்து எரிமலைக் குழம்புகள் வீசியடிக்கின்றன. ஆனால் இவ்விளைவுகளால் பூமியை மூழ்கடிக்கும் அளவிற்கு பெருவெள்ளம் எப்படி ஏற்படுகிறது?//

  Very good question with active brain from senkodi..!

  But,here is a good answer from a blogger known as ‘senkodi’…!

  ==>//புவிசூடேற்றம் அல்லது குளோபல் வார்மிங் என்பது இன்று பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு பிரச்சனையாகும். இயல்பான இருப்பை விட தற்போது பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. இதனால் துருவ பகுதிகளில் உறைந்துகிடக்கும் பனிப்பாள‌ங்கள் உருகி கடலில் கலப்பதால் கடல் நீர்மட்டம் உயர்ந்து இன்னும் சில பத்தாண்டுகளில் உலகில் இருக்கும் சின்னஞ்சிறு தீவுகள் பல கடலில் மூழ்கி காணாமல் போய்விடும். மேலும் கண்டங்களின் பரப்பையும் கடல் விழுங்கும். புவி சூடேறுவதால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் இவை// { Thanks: https://senkodi.wordpress.com/2009/04/03/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/ }

 4. நோவா கப்பல் என்று ஆளாளுக்கு விடும் பிராடுத்தனத்தில் கொஞ்சம் குறையாமல் “கார்த்திக்”க்கும் கொஞ்சம் அள்ளி விடுகிறார்.
  இது சுத்த பிராடுத்தனம். அந்த டாக்குமெண்டரி சுத்த பிராடு என்று ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கு கப்பலின் மரம் என்ற் காட்டப்படுவது அங்கு முன்னால் வாழ்ந்த பழங்குடியினரின் Drogue Stone.

  இப்படியெல்லாம் ஏமாற்றி குரானையும் முகம்மதுவை நிரூபிக்க அலையும் “கார்த்திக்”ஐ பார்த்தால் பரிதாபமே வருகிறது.

 5. கார்த்திக்,
  இது போல போலி கட்டுரைகளை மேற்கோள் காட்டாதீர்கள். இது ஒரு ஏமாற்றுவேலை.

  இந்த ஆய்வில் நெடுங்காலம் பங்கு பெற்று அதன் பின்னால் இது ஒரு ஏமாற்றுவேலை என்று புரிந்து அதிலிருந்து விலகினார் டேவிட் பாஸல்ட்
  http://tuckerlibrary.com/tuckerwiki/David_Fasold

  After a few scientific expeditions to the Durupınar site that included drillings and excavation in the 1990s, Fasold began to have doubts that the Durupınar formation was Noah’s ark. He visited the site with geologist Ian Plimer in September 1994, and in a subsequent interview noted his change of mind saying “I believe this may be the oldest running hoax in history. I think we have found what the ancients said was the Ark, but this structure is not Noah’s Ark.”[18] At other times he claimed that the site was only what the ancients believed was Ziusudra’s ‘ark of reeds’.[19] In 1996 Fasold coauthored a paper with geologist Lorence Collins entitled “Bogus ‘Noah’s Ark’ from Turkey Exposed as a Common Geologic Structure” that concluded the boat-shaped formation was a curious upswelling of mud that happened to look like a boat.[20] In April 1997 during his testimony in an Australian court case Fasold repudiated his belief in the Ark, and stated that he regarded the claim as “absolute BS”

  நீங்கள் ஏமாறுவதற்கு ரெடியாக இருப்பதாக தெரிகிறது. ஆனால், மற்றவர்களை ஏமாற்றவேண்டாம்.

 6. Please, comrades,
  what is your reply for (Firaun body) Jehowa king’s body of aged more than 4000 years in Egyptian museum which was found ‘alive without mummified’ and taken out from Red sea only in this century as per Quran words. Is it also baseless and not true? Please explain.

 7. ஏய் அப்துல் நஸிர் –.யே நீயெல்லாம் ஒரு ஆளென்று என்னை கலாய்கறீயா.(மலம் மேலே கல்லெறிந்தால் அது என் மீது தான் தெரிக்கும்).

 8. “””””””””Please, comrades,
  what is your reply for (Firaun body) Jehowa king’s body of aged more than 4000 years in Egyptian museum which was found ‘alive without mummified’ and taken out from Red sea only in this century as per Quran words. Is it also baseless and not true? Please explain.””””””””””””””””
  அதையும் பொய்யென்றுதான் சொல்லுவார்கள்.ஏனென்று கேட்டால் நீங்கள் கொடுப்பதெல்லாம் fake site-னு ஒரு வார்த்தையில் சொல்லி முடித்துவிடுவார்கள்.

 9. நண்பர் ஆப்பு,

  உங்கள் கேள்விக்கும் ஒப்பிடலுக்கும் நன்றி.
  நீங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் அதே பத்தியில் தொடர்ந்து படித்தால் உங்கள் ஐயத்துக்கு விடையும் இருக்கிறது. புவி சூடேற்றம் தீவுகளையும் கண்டங்களின் ஓரப்பரப்புகளையும் விழுங்கும். ஆனால் பூமியின் மொத்த நிலப்பரப்பையும் முழ்கடிக்காது. அதற்கு எந்த அறிவியல் விளக்கமும் இல்லை.

  தோழமையுடன்,
  செங்கொடி.

 10. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் (28%) நிலத்தைவிட கடல் மூன்று மடங்கு(72%) அதிகம்.கடல் நீர் மட்டம் அதிகமானால் நிலத்தின் கதி என்னவாகும்?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s