புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.

இன்று ஜனவரி 26.

குடியரசுதினம் என்று வெகுகாலமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு என்றால் குடிகளுக்கான அரசு என்று பொருள், அதாவது குடிமக்களுக்கான அரசு. ஆனால் தங்களின் செயல்களால் இது குடிமக்களுக்கான அரசல்ல என அறிவித்துக்கொண்டு குடியரசுதினம் எப்படி கொண்டாடமுடியும்?

90களில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் கொல்லைப்புற வழியில் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிறகு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் விவசாயிகள் இடுபொருள் விலையை குறையுங்கள், தண்ணீர் கிடைக்கச்செய்யுங்கள், விளை பொருளுக்கு உரிய விலை தாருங்கள் அல்லது நிர்ணயம் செய்ய அனுமதியுங்கள் என்று பலகாலமாய் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத அரசு; கவர்ச்சியான திட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசாகப் போடவும், வந்தவிலைக்கு விற்றுவிட்டு வெளியேறவும், இப்படியான நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களும் தரகுமுதலாளிகளும் சூறையாடுவதற்கும் வேண்டிய அனைத்தையும் செய்துவருகிறது.

பன்னாட்டு ஆழ்கடல் மீன்பிடிநிறுவனங்களுக்கு ஆதரவாக சொந்தநாட்டு மீனவர்களை கடற்புற மேலாண்மை திட்டத்தின் மூலம் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தி அங்கு கேளிக்கை விடுதிகளையும் நட்சத்திர ஓட்டல்களையும் கட்ட முதலாளிகளை அனுமதித்திருக்கிறது.

கைத்தறிகளுக்கும், எளிய விசத்தறிகளுக்குமான ரகங்களின் கட்டுப்பாட்டை நீக்கியதால் அவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை சிறுவணிகத்தில் அனுமத்தித்ததன் மூலம் கோடிக்கணக்கான சிறுவணிகர்களை வீதிக்கு விரட்டியிருக்கிறது.

எல்லாத்தரப்பு மக்களையும் ஓட்டாண்டியாக்கும் திட்டங்களை சில முதலாளிக்களுக்கு ஆதரவாக செயல்படுத்தி பெரும்பான்மை மக்களை வதைக்கும் அரசை குடிகளுக்கான அரசு என்று எப்படி சொல்வது?

நாட்டின் மிகப்பெரிய அமைப்பான ராணுவமும், காவல்துறையும்  யாரைப் பாதுகாக்கிறது? தண்ணீர் இல்லை என்பதிலிருந்து வேலையில்லை என்பது வரை யார் எதற்காக போராடினாலும் காவல்துறைதான் குண்டாந்தடியோடு வருகிறது. தீவிரவாதம் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் போலிமோதல் கொலைகளையும், பாலியல் கொடுமைகளையும் அரங்கேற்றுகிறது ராணுவம். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நிரந்தரமாக தங்கியிருந்து மக்களை சிதைத்து வருகிறது. ராணுவத்தின் மக்களை காக்கும் அரும்பணிக்கு எடுத்துக்காட்டுகள் கீழே,

ஆபரேசன் கிரீன்ஹன்ட் என்ற பெயரை செவியுற்றிருக்கிறீர்களா?

7300 கோடி செலவில் சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களில் எல்லைப்புறங்களிலும் செயல்படுத்தப்படவிருக்கும் ராணுவ நடவடிக்கைக்கு தான் ஆபரேசன் கிரீன்ஹன்ட் என்று பெயர். ராணுவ நடவடிக்கை என்பது அரசு சொல்லும் பெயர் ஆனால் எதார்த்தத்தில் இது மக்களுக்கு எதிரான போர். இதற்கு அரசு சொல்லும் காரணம் மாவோயிஸ்டுகளின், நக்ஸல்களின் தீவிரவாதம் பெருகிவிட்டது என்பது. ஆனால் மெய்யான காரணம் அதுவல்ல. இந்தப்பகுதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார்கள் நக்ஸல்கள், இப்போது பல படைப்பிரிவுகளையும், போர்விமானம், எழுவூர்திகளையும், செயற்கைக்கோள் கண்காணிப்பையும் கொண்டு நக்ஸல்களையும் மாவோயிஸ்டுகளையும் அழிக்கப் புறப்பட்டிருப்பதன் காரணம் அந்தப்பகுதியின் கனிமவளங்கள். உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமென்டு உற்பத்திக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிகா, குவார்ட்சைட் போன்ற 28 வகைக் கனிவளங்களும் காட்டு வளங்களும் நீர்வளமும் நிறைந்திருக்கும் அந்த வனப்பகுதியை பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் கூறுகட்டி விற்க அந்தப்பகுதியிலிருக்கும் பழங்குடிகளை விரட்டியடிக்க வேண்டும். இதற்கு எதிராக அம்மக்களை விழிப்புணர்வூட்டி போராடத்தூண்டி வருகிறார்கள் மாவோயிஸ்டுகள். இதற்காகத்தான் அவர்களை வேட்டையாடத்துடிக்கிறது அரசு.

இது குடியரசு என்று கூறிக்கொண்டே தன் சொந்த குடிமக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது? குடியரசு, ஜனநாயகம் என்ற போர்வையில் முதலாளிகளுக்கான அரசாக நடந்துகொண்டு மக்களை வதைப்பது. அவர்களின் உழைப்பையும், வாழ்வையும் வாழ்விடத்தையும் அபகரிப்பவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவுவது. இதை புரிந்துகொண்டு போராடினால் அவர்களை கிரீன்ஹன்ட் என்றபெயரில் அழிப்பது; இதை புரியாமல் இருந்தால் குடியரசு என்ற பெயரில் அல்வா கொடுப்பது.

அல்வாவை ருசித்து புறங்கை நக்க நாம் என்ன அஃறினைகளா?

ஆபரேசன் கிரீன்ஹன்ட் குறித்து விரிவாக அறிந்து கொள்ள

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

 • நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
 • பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
 • போராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்!
 • மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

ஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தொடர்புக்கு: அ.முகுந்தன், 110,2- வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. செல்பேசி 94448 34519

14 thoughts on “புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.

 1. செங்கொடி நீங்களும் வினவு தளம் போல இருட்டடிப்பு செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். நெத்தியடி முஹம்மது சொன்ன எந்த ஒரு கருத்தும் இங்கே காணவில்லையே. ஏன் அவை எல்லாம் உங்களின் இயக்கத்தவர்களின் பிழைப்புவாதத்தை தோலுரிக்கின்றது என்றெண்ணி நீக்கி விட்டீர்களா? இதில் எந்த லட்சணத்தில் மற்றவர்களை குறை கூறுகின்றீர்கள்? பதில் சொல்லுங்கள் செங்கொடி.

 2. அய்யா ஷாஜஹான் & co
  ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ.

  ஈழ விவகாரத்தில் பாராமுகமாக இருந்த தமிழகமக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியது முத்துக்குமாரின் தற்கொலைதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அவரின் முடிவு ஆற்றாமையின் வெளிப்பாடு. துரோகிகளுக்கு மத்தியில் ஏதாவது செய்யமுடியாதா என்ற மனக்குமுறல். எல்லா முஸ்லீம்களுக்கும் ஐவேளை தொழவேண்டும் என்ற அறிவில்லாததுபோல எல்லோருக்கும் அரசியல் அறிவு இருப்பதில்லை. முத்துக்குமாரின் இறுதிக்கடிதத்தை படித்தபின்னும் கோழைத்தனம் என்று நீங்கள் கூறினால் உங்களின் புரிதலை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது, எல்லோருக்கும் அரசியல் அறிவு இருப்பதில்லையே!. அய்யா ஷாஜஹான்,தோழர்கள் யாரும் தற்கொலையை ஆதரிக்கவில்லை.

 3. தோழர் செங்கொடி?
  ////அட…! ஆமாம் செங்கொடி…! சீக்கிரமா வந்து எல்லா மறுமொழிகளையும் தூக்கி விடுங்கள்… இல்லாவிட்டால் சீட்டை கிழித்து உங்களை ம க இ க விலிருந்து தள்ளி வைத்து விடப்போகிறார்கள்…////

  —உங்களுக்கு செல்பேசிக்கு அவசர ஐ.எஸ்.டி அழைப்பு ‘அங்கிருந்து’ வந்திருக்கும் என்று தெரியும்…
  உடன் செயல்பட்டு உங்கள் இருப்பை நீங்கள் ‘அங்கு’ காப்பாற்றிக்கொண்டதற்கு பெயர் என்ன, தோழர்?

 4. நான் நினைத்துகூட பார்க்கவில்லை செங்கொடியாரே.

 5. அன்பார்ந்த நண்பர்களே,

  செங்கொடி தளத்திற்கும், அதன் பதிவுகளுக்கும் தொடர்பில்லாமல் இங்கு இடப்பட்டிருந்த அனைத்து பின்னூட்டங்களும் நீக்கப்படுகின்றன. நீக்கப்படும்.

  அனைத்து பின்னூட்டங்களையும் அப்படியே அனுமதிப்பது எனும் என்னுடைய நிலையில் ஒரு மாற்றம் செய்திருக்கிறேன். செங்கொடி தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பாக வரும் பின்னூட்டங்கள் அவை எத்தகையதாக இருந்தாலும் வெளியிடப்படும் என்பதில் மாற்றமொன்றுமில்லை. மாறாக வேறொரு தளத்தின் விவாதங்களை இங்கு அனுமதிப்பது முழுமையாக என்னுடைய விருப்பத்திற்கு உட்பட்டது. எனவே தான் அவைகள் நீக்கப்பட்டன.

  பதிவுகளுக்கு தொடர்பில்லாத தலைப்புகளில் வினவ விரும்புபவர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் தகுந்த பதிலளிக்கப்படும்.

  தோழமையுடன்
  செங்கொடி

 6. .செங்கொடி ஷாஜஹான் மற்றும் மொஹமத் வெளியிட்ட பின்னூட்டங்களெல்லாம் வினவின் ஒத்துவராத மறுமொழிகள் பகுதியில் இருக்கிறது, இப்போதுதான் அனைத்தையும் படித்து தலையில் அடித்துகொண்டேன். இவர்களால் முசுலீம்களுக்கே கெட்ட பெயர், இவர்கள் உளரல்களை படித்தால் முற்றிலுமாக முசுலீம்களை தமிழ் எதிரியாக பார்ப்பார்கள். அருமை தலைவர் பி.ஜெவுக்கும் இவர்களால் மிகவும் கெட்ட பெயர்.

 7. “”””””””””””””””அஹமத், மேல் ஜனவரி 27th, 2010 இல் 8:00 மாலை சொன்னார்:

  .செங்கொடி ஷாஜஹான் மற்றும் மொஹமத் வெளியிட்ட பின்னூட்டங்களெல்லாம் வினவின் ஒத்துவராத மறுமொழிகள் பகுதியில் இருக்கிறது, இப்போதுதான் அனைத்தையும் படித்து தலையில் அடித்துகொண்டேன். இவர்களால் முசுலீம்களுக்கே கெட்ட பெயர், இவர்கள் உளரல்களை படித்தால் முற்றிலுமாக முசுலீம்களை தமிழ் எதிரியாக பார்ப்பார்கள். அருமை தலைவர் பி.ஜெவுக்கும் இவர்களால் மிகவும் கெட்ட பெயர்.””””””””””””””””””””””””””””””””
  முடியலைடா எப்பா? ஷாஜஹான் மற்றும் மொஹமத் அப்படி என்ன பின்னூட்டங்கள்பா போட்டாங்க?
  இவர்க்ள் போட்ட பின்னூட்டத்துக்கு பதில் மட்டும் இருக்குது.இவர்கள் அனுப்பிய பதில் பின்னூட்டம் மட்டும் ஒத்துவ்வராத மறுமொழி பகுதியில் இருக்கிறதா என்ன.கொடுமைப்பா.
  “”””””””””””””””””””செங்கொடி ஷாஜஹான் மற்றும் மொஹமத் வெளியிட்ட பின்னூட்டங்களெல்லாம் “”””””””””””””””””
  ஷாஜஹான் மொஹமத் இவர்கள் முஸ்லிம்கள்.இதில் செங்கொடி எங்கிருந்துப்பா வந்தாரு?
  “”””””””””””””””””””””””இப்போதுதான் அனைத்தையும் படித்து தலையில் அடித்துகொண்டேன். இவர்களால் முசுலீம்களுக்கே கெட்ட பெயர்””””””””””””””””””””””
  அப்பப்பா என்ன அக்கறைப்பா உடம்புல புல்லறிக்குது.என்னே வேசம் (மன்னிக்கனும் வேசம் என்பதை பாசம் என்று திருத்திகொள்ளுங்கள்).முடிந்தவரை தங்களை முஸ்லிம்”போல” காட்ட முயல்கிறீர்கள்.
  தலையில் அடித்துகொண்டீர்களா?(தலையிலும்,மார்பிலும் அடித்து கொண்டால் அதற்கு பெயர் ஒப்பாரி.ஒப்பாரி வைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருக்கிறதா Mr அஹமத்)

 8. செங்கொடி சொல்வதில் தவறொன்றும் இருப்பதாக எனக்கு படவில்லை. முஸ்லிம் நண்பர்கள் எல்லாப்பிரச்சனைகளையும் தங்கள் மத கண்ணோட்டத்தில் இருந்து பார்கிறார்கள் என்றே தோணுகிறது. பொதுப்பிரச்சனைகளை மத ரீதியாக அணுகுவதை தவிர்ப்பதுநல்லது.

 9. அப்துல்லா அல்லது வேறு யாரோ, எனது மதப்பற்றை உங்களிடம் நிருபிக்கும் அவசியம் எனக்கில்லை. உங்களுக்கு ஏதே இன்பிரியாரிடி காம்ப்ளெக்ஸ் அதனால்தான் மீண்டும் மீண்டும் அவர்களிடம் போய் சண்டை போட்டு வாங்கிகட்டி கொள்கிறீர்க்ள். என்னிடமே பொய் சொல்கிறீர்களே பாய்(?) அவர்கள் மறுமொழி பதில் மறுமொழி எல்லாம்தான் அங்கு இருக்கிறது. முத்துக்குமார் மரணம் ஒரு போர் சூழலில் நடந்த்து அதை தற்கொலையாக பார்க்க முடியாது, அது கலக நடவடிக்கை அதை நீங்கள் அவமானப்படுத்தியதை அருமை அண்ணன் தலைவர் பீஜே உட்பட யாரும் ரசிக்கவில்லை. . இதை ஏன் எழுதுகிறேன் என்றால் உங்களுடைய முட்டாள்தனமான பின்னூட்டங்களினால் முசுலிமை தமிழ் விரோதியாக சித்தரிக்க துவங்கிவிடுவர் முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்

 10. “”””””””””””””””முத்துக்குமார் மரணம் ஒரு போர் சூழலில் நடந்த்து அதை தற்கொலையாக பார்க்க முடியாது, அது கலக நடவடிக்கை அதை நீங்கள் அவமானப்படுத்தியதை அருமை அண்ணன் தலைவர் பீஜே உட்பட யாரும் ரசிக்கவில்லை. “”””””””””””””””””””””””””
  முத்துகுமாரின் மரணம் எதிர்பாராத ஒன்றுதான்.அதை யாரும் அவமானப்படுத்தவில்லை.செத்தது யாரு ஒரு அரசியல்”வியாதி”யா (அ) அரசியல் கட்சி தொண்டரா என்றால் இல்லை.உன்னைப்போன்ற,என்னைபோன்ற,நம்மைபோன்ற ஒரு சாதாரண சராசரி மனிதன்.போன உயிர் திரும்பி வரப்போவதில்லை.முத்துகுமார் மரணத்தையே தங்களுடைய ஆயுதமாக ஆக்கிகொண்டு தங்களுடைய சுயலாபத்திற்க்காக(தங்களுடைய கட்சியை வலுப்படுத்துவதற்காக) அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிக்ளை பார்த்துதான சகோதரர் ஷாஜஹான் அப்படியொரு(ஈழதமிழர்களுக்காக முத்துகுமாரைப்போன்று நீங்களும் தற்கொலை செய்துகொள்ளவேண்டியதுதானே என்று வினவு, ம.க.இ.கவினரிடம்) கேள்வியை எழுப்பினார்.
  நம்மைபோன்ற ஒரு சாதாரண மனிதன் முத்துகுமாருக்கு இருக்கும் ஆதங்கம்கூட இந்த தரம்கெட்ட அரசியல்வாதிகளிடம்(எல்லா கட்சியினரையும்) ஏன் இல்லை.இவர்கள்தான் நம் பாதுகாவலர்களா?இவர்களை பார்த்து சகோதரர் ஷாஜஹான் கேள்வியெழுப்பியது ஒன்றும் த்வரில்லை என்றே எண்ணுகிறேன்.

 11. அஹமத், மேல் ஜனவரி 28th, 2010 இல் 9:02 AM சொன்னார்:
  “””””””””””””இதை ஏன் எழுதுகிறேன் என்றால் உங்களுடைய முட்டாள்தனமான பின்னூட்டங்களினால் முசுலிமை தமிழ் விரோதியாக சித்தரிக்க துவங்கிவிடுவர் முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்”””””””””””””””
  இன்றுவரை முஸ்லிம்களை விரோதியாகத்தான் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.மற்ற மாநிலங்களை எடுத்து கொள்ளவேண்டாம் நம் அமைதி பூங்காவான த்மிழ்நாட்டிலேயே முஸ்லிம் விரோத போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
  தமிழ்நாட்டில் பெரிய் பெரிய பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் செய்யமுடியாத பணியை இஸ்லாமியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.அத்ரகு ஒரு சிறு உதாரணம் த.த.ஜ(TNTJ)-வினர் நிறைய முறை இரத்த தானம் செய்திருக்கிறார்கள்(அதிக முறை இரத்ததானம் செய்ததற்காக பலமுறை விருதுகள் பெற்றிருக்கின்றார்கள் ), தமுமுக வினர் நிறைய ஆம்புலன்ஸ் கொடுத்திருக்கின்றார்கள்.இன்னும் பல்வேறு பணிகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம் எதற்காக மற்றவர்களின் பாரட்டுகளை பெறுவதற்காகவா என்றால் இல்லை எல்லாம் மறுமை வாழ்வுக்காக.
  நம்மை யாரும் புரிந்துகொள்ளபோவதில்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s