நண்பர்களே,
அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கையிலிருக்கும் போர்க்கருவி. இந்திய ஆளும் வர்க்கமான முதலாளிகளும், தரகுப் பண்ணைகளும் மக்கள் மீது தொடுத்திருக்கும் போர் தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர். நக்சல் ஒழிப்பு என்பது ஒரு காரணம், முதலாளிகளுக்கு எதிரான மக்களையும், முதலாளிகளுக்கு எதிரான மனோநிலையையும் அழித்து, துடைத்து எறிவது தான் நோக்கம். தீவிரவாதம், முன்னேற்றம் என்ற சொற்களையெல்லாம் யாருக்கு எதிரான தீவிரவாதம், யாருக்கு ஆதரவான முன்னேற்றம் என பிரித்து அறிந்து கொள்ள முடிந்தால் நக்சல்களுக்கு எதிரான போர் யாருக்கு எதிராக யார் நடத்தும் போர் என்பது தெளிவாகும். பிப்ரவரி 20 ல் நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் அவ்வாறான பகுத்தறிதலை உங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கும்.
வாருங்கள்,
உங்கள் குடும்பத்தினரோடு
உங்கள் நண்பர்களோடு
ஆம் நண்பர்களே, நம் மீதான போரை நாம் எதிர்ப்பதன் முதல்படி இது.
தொடர்புக்கு: (0091) 9710082506
(0091) 9444834519
அன்பார்ந்த நண்பர்களே,
மதங்களை விமர்சிப்பதினால் நாங்கள் உங்களின் துரோகிகளும் அல்ல எதிரிகளும் அல்ல.. மதங்கள் தங்களது இருப்பைத் தக்கவைத்துகொள்ள அறிவியல் சாயம் பூசிக்கொண்டு புதிய அவதாரம் எடுக்கின்றன. முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்பத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல் காரணமும் விளங்காமல் கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இதனால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கம் மக்களை இம்மடமை படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது. மக்கள் நல அரசுகளாக முகமூடியணிந்திருந்த முதலாளித்துவம் தங்களது அனைத்து முகமூடிகளையும் கழற்றியெறிந்து விட்டன. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக நேரிடையான போர்ப்பிரகடனம் சொல்லாததுதான் மிச்சம். நம்மை அனைத்து வழிகளிலும் உறிஞ்சிக்கொண்டுள்ளது முதலாளித்துவம். நம்மை மட்டுமல்ல இயற்கையையும் பாழ்படுத்தி நாசமாக்கிவிட்டது. கூச்சமேயில்லாமல் அலட்சியம் செய்கிறது. முதலாளித்துவமே நமது எதிரி. நமது எதிரி சமீபமாகவே இருக்கிறான் ஆனாலும் நம்மால் வீழ்த்த முடிவதில்லை. ஏன்? சாதியாக மதங்களாக இனங்களாக நம்மை பிரித்து வைத்திருக்கின்றான். இவற்றைக்கடந்து எதன் கீழ் நம்மால் அணிதிரளமுடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? சாதி அமைப்புகளின் கீழ்,மதங்களின் கீழ் முடியும் என்று நினைக்கிறீர்களா? அல்லது இதுதான் உலகின் முடிவு நாளுக்கான அறிகுறி என்று கண்ணை மூடிக்கொண்டு ஜெபம் செய்யலாம் என்கிறீர்களா? உலகின் 90 சதவீத மக்கள் வறுமையில் வாடுவதை விதியின் செயல் என்று விட்டுவிடலாம் என்கிறீர்களா? தொழிலாளர்கள்,விவசாயிகள்,நெசவாளர்கள், பாதிக்கப்பட்டபோது மிகப்பெரும் போராட்டங்கள்வெடிக்கவில்லை. தற்போது பழங்குடியினர் தங்களது நிலங்களை விட்டுப்போகமுடியாது என போராடுகின்றனர். முழங்குகின்றனர். ஒரே இரவில் இஸ்லாமிய தீவிரவாதம் பின்னுக்கு தள்ளப்பட்டு நக்சல் தீவிரவாதம் முன்னுக்கு வந்துவிட்டது. போராட மறந்த நாம் போராட மறுத்த நாம், இவர்களுக்காக உரத்த குரல் கொடுப்போம். வாருங்கள்.
எவ்வளவோ முயன்று என்னென்னவோ கட்டுரைகள் எழுதி பார்த்தீர்கள்.ஆனால் உங்களுடைய கட்டுரைக்கு மறுமொழிகள் சரியாக கிடைக்கவில்லை.எப்படி மக்களை உங்கள் பக்கம் ஈர்க்கமுடியும் என்ற புதிய யுக்தியை கையாண்டீர்கள்.அதுதான் “இஸ்லாமிய எதிர்ப்பு”.
இஸ்லாமை எதிர்த்தால் பிர”பல”மாகிடலாம் என்று தொடர்ந்து இஸ்லாமைப்பற்றி விமர்சித்து கொண்டேயிருந்தீர்கள்.நீங்கள் நினைத்ததுபோல உங்களுடைய கட்டுரைக்கு மறுமொழிகள் குவிய தொடங்கியது.உங்களுடைய வலைத்தளமும் உங்களுடைய கட்சியும் வலைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டது.
நீங்கள் பிரபலம் அடைவதற்க்காக இஸ்லாமை பகடைக்காயாய் ஆக்கிவிட்டீர்கள்.இதன் மூலம் மக்களை உங்கள் பக்கம் ஈர்துவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டீர்கள். கம்யூனிஸம் பற்றியும்தான் அவ்வப்போது(மாவோவின் வரலாறு,ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்) கட்டுரைகள் எழுதுகிறீகள் ஆனால் உங்களுக்கு கிடைக்கும் மறுமொழிகளின் எண்ணிக்கை 3 (அ)4.அதுவே இஸ்லாமை விமர்சிப்பதன் மூலம் உங்களுடைய கட்டுரைக்கு கிடைக்கும் மறுமொழியின் எண்ணிக்கை குறைந்தது சராசரியாக 50-ஐ தாண்டுகிறது.
இதன் மூலம் என்ன தெளிவாகிறது?
இஸ்லாமுக்கும் இஸ்லாமியர்களுக்கெதிராகத்தான் உங்களால் மக்களை திரட்ட முடியுமே தவிர உங்கள் கட்சிக்கு ஆதரவாக திரட்டமுடியாது.
ம.க.இ.க (ம.க-வுக்கு என்ன அர்த்தம்னு தெரியலை ஆனால் இ.க-வின் அர்த்தம் “இ”ஸ்லாமிய எதிர்ப்பு “க”ட்சி என்பது நன்றாகவே புரிகிறது).
நண்பர் அப்துல்லாஹ்,
நீங்கள் என்மேல் சுமத்தும் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். இஸ்லாம் தொடர்பாக நான் எழுதுவதன் நோக்கம் மதமெனும் மாயவலைக்கு எதிரான விழிப்புணர்வுக்காகத்தான், நான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அல்ல. மற்ற இடுகைகளுக்கு அதிக பின்னூட்டங்கள் வராததற்கு நீங்களும் உங்களைப்போன்றோரும் இன்னும் அதன் பிடியிலிருந்து வெளியேறவில்லை என்பதே காரணம். அடுத்து, இதன் மூலம் நீங்கள் கூறவருவதென்ன? பிரபலமடையவேண்டும் எனும் நோக்கத்தில் எழுதப்படுவதால் அதில் இருப்பவைகள் உண்மைகளல்ல என்பதா? செங்கொடி தளத்தில் இடப்படுபவை அனைத்தும் எல்லோரும் படிக்கவேண்டும் என்பதற்காகத்தான். படித்த படிக்கும் உங்களின் எதிர்வினை என்ன? சரி என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள், தவறு என்றால் எப்படி தவறு என விளக்குங்கள். மாறாக உங்களின் கற்பனைகளையே உண்மைகள் போல் ஊருக்குச் சொல்லவேண்டாம். முடிந்தால் மறுத்துப் பாருங்கள்.
மகஇக பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம். இஸ்லாமுக்கு எதிராக இஸ்லாமியர்களை திரட்டுவதும் அதன் இயங்கியலுக்கு உட்பட்டது தான். எல்லா மதங்களும் உழைக்கும் மக்களை ஓட்டச் சுரண்டுவதற்கு துணைபோகின்றன. இதில் இஸ்லாம் ஒன்றும் விதிவிலக்கல்ல.
தோழமையுடன்
செங்கொடி
ஹலோ…அப்துல்லாஹ்…
இஸ்லாம் பற்றி ”தெளிவாக(?)தெரிந்துகொள்ள” செங்கொடி தளத்தை தோழர்கள் படிப்பதைப்போல கம்யூனிசம், சோஷலிசம் பற்றி எல்லாம் நிஜமாகவே மிகத்தெளிவாக தெரிந்துகொள்ள
http://nellikkani.blogspot.com/2010/02/blog-post.html
இது போன்ற தளங்களை நீங்களும் படிக்கலாமே….
பயனுள்ள சுட்டியை கொடுத்த சகோதரர் நேசன் அவர்களுக்கு நன்றி.