கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 16


குரானின் அறிவியல் குறித்த உரையாடல்களில் கருவறை அறிவியலை தவிர்த்துவிட முடியாது. அவ்வளவு விரிவான அளவில் கருவறை குறித்து மதவாதிகள் விதந்தோதியிருக்கிறார்கள். இன்றைய நுண்ணோக்கிகள் நுழைந்து பார்க்கவியலா அறிவியல் கூறுகளை எல்லாம் குரானின் வசனங்கள் படம்பிடித்து காட்டுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். கருவரையையும் குழந்தை உருவாவதையும் பற்றி குரான் நிறைய வசனங்களில் குறிப்பிடுகிறது.

அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். குரான் 96:2

சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?, பின்னர் அவன் அலக் என்ற நிலையில் இருந்தான், அப்பால் படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். குரான் 75:37-39

……….உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்……… குரான் 39:6

நிச்சயமாக நாம் மனிதரை களிமண்ணிலிருந்துள்ள சத்திலிருந்து படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத்துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக் கை ஒரு தசைப்பிண்டமாக ஆக்கினோம். பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம்……… குரான் 23:12-14

……..இன்னும் அவன் உங்களுக்கு பார்வைப் புலன்களையும், செவிப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்………. குரான் 32:9

ஒவ்வொரு பெண்ணும் சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கு அறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது. குரான் 13:8

இவ்வளவு வசனங்கள் கர்ப்பப்பை குறித்தும் கரு பற்றியும் குரானில் பேசப்படுகின்றன. இந்த வசனங்களில் இருக்கும் கருத்துகளை தொகுத்துப்பார்த்தால் கரு, கருத்தரிப்பது குறித்து சாதாரணமாக ஒரு மனிதனின் பார்வையை விடுத்து மேம்பட்ட அறிவியல் கருத்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?, ஆண், பெண் என்ற இரு ஜோடி, தசைப்பிண்டமாக, எலும்புகளாக,  மாமிசமாக ஆக்குவது, பார்வைப் புலன்களும், செவிப் புலன்களும், இருதயங்களும் இருப்பது என்பதெல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன் எந்த மனிதனும் அறிந்திராதவைகளா? இந்த வசனங்களுக்குள் அப்படி என்ன அறிவியல் இருக்கிறது? மதவாதிகளின் பார்வையினூடாகவே பார்ப்போம்.

முதலில் அலக் எனும் வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அநேக மொழிபெயர்ப்புகளில் இந்த அலக் எனும் அரபு வார்த்தை மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் கருவுற்ற சினைமுட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார். பல்நாட்டு அறிஞர்களும் சரிபார்க்கும் வாய்ப்பை பெற்றதாக நண்பர்கள் கருதும் யூசுப் அலி என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உறைந்த இரத்தக்கட்டி (clot of congealed blood) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக் என்பவர் இந்தச்சொல்லுக்கு அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் விளக்கங்கள் சொல்கிறார். ஆக அலக் எனும் இந்த அரபுச்சொல்லுக்கு எதுதான் சரியான பொருள்? பொதுவாக பழைய மொழிபெயர்ப்புகளில் இரத்தக்கட்டி என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கர்ப்பப்பையில் கருவானது இரத்தக்கட்டியாக இருக்கிறதா? எனும் அறிவியல் ரீதியான கேள்வி எழுந்ததும் அதன் பொருள் அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் பயணப்பட்டு நவீன அறிவியலை உள்வாங்கிக்கொண்டு தற்போது கருவுற்ற சினைமுட்டையாக ஆகியிருக்கிறது. இது தான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட அறிவியலின் லட்சணம்.

குரான் 75:37-39 வசனங்களில் சொல்லப்படும் கருவின் வளர்ச்சி குறித்து தோராயமான பிம்பம் காட்டப்படுகிறது. இதுவே இன்னும் சற்று விரிவாக குரான் 23:12-14 வசனங்களில் சொல்லப்படுகிறது. பெண்ணின் உடலினுள் செலுத்தப்படும் விந்து தான் குழந்தையாக மாறுகிறது என்று அறிந்துகொண்டபின் அது எப்படி குழந்தையாக உருமாறுகிறது சிந்தித்த ஒரு மனிதனின் கற்பனைதான் இந்தக் காட்சிகள் இரத்தம் தான் விந்தாக உருமாறுகிறது எனும் நினைப்பில் மீண்டும் விந்து உறைந்து இரத்தக்கட்டியாக மாறுகிறது பின்னர் அது சதைக்கட்டியாக மாறுகிறது பின்னர் எலும்பும் அதன் பின்னர் மாமிசமாகவும் மாறி பின்பு குழந்தையாக வெளிவருகிறது. இப்படித்தான் சாதாரணமாக எந்த மனிதனின் கற்பனையும் 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கும், இப்படித்தான் முகம்மதுவும் உருவகித்திருக்கிறார். ஆனால், இன்று உருப்பெருக்கிகள் மூலம் கர்ப்பப்பையின் உள்ளே நடக்கும் மாற்றங்களை பதிவு செய்த பின்பு, ஆகா பாருங்கள் இதை அன்றே முகம்மது சொல்லிவிட்டார், படிக்காதவரான அவரால் எப்படி சொல்லமுடிந்தது? எனவே இது எல்லாவற்றையும் மிகைத்த அந்த சக்தியின் கருணைதான் இது என்று எடுத்துவிடுகிறார்கள்.

இதில் அறிவியலோடு ஒப்பிடும் படிநிலைகள் என்று எதுவுமில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான் எனும் வசனமும், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம் எனும் வசனமும் ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது. அது என்னவென்றால், கரு உருவாகி ஆரம்பக்கட்ட வளர்ச்சிகள் அடைந்தபின்பு குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் தான் அந்தக்கரு ஆணா? பெண்ணா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது தான். ஆனால் அறிவியல் இதை திட்டமாக மறுக்கிறது. உடலுறவு முடிந்து ஆணின் உயிரனுவானது பெண்ணின் சினை முட்டையை எந்தக்கணத்தில் துளைத்து நுழைகிறதோ அந்தக்கணத்திலேயே கருவானது ஆணா? பெண்ணா? என்பது தீர்மானமாகிவிடுகிறது. அதுமட்டுமன்றி அனைத்து விசயங்களும் தோலின் நிறம், அங்கங்களின் அமைப்பு, உயரமா? குள்ளமா? என்பன போன்ற அனைத்து செய்திகளும் டிஎன்ஏ ஏணிகள் மூலம் கருவுக்கு கடத்தப்பட்டு இதன் அடிப்படையிலேயே கருவின் வளர்ச்சி நடைபெறுகிறது.

குரானின் கருவளர்ச்சி நிலைகளோடு அறிவியலை ஒப்பிட்டால் அதுவும் ஒப்பிடக்கூடிய அளவில் இல்லை. அதிலும் முதலில் தசைப்பிண்டம் என்றும் பின்னர் மாமிசம் என்றும் இரண்டு வகையாக குறிப்பிடுவதும் பொருத்தமாக இல்லை. அறிவியல் கருவளர்ச்சியை பின்வருமாறு வகைப்படுத்துகிறது. இரண்டாவது மாதத்தில் ஆண் பெண் இன உறுப்புகள், மூன்றாவது மாதம் ஜீரண உறுப்புகள் எலும்புகள், நான்காவது மாதம் தோல் சுமாரான வடிவம் கண்கள் விரல்கள், ஐந்தாம் மாதம் தலைமுடி நகம் பல்முளைகள் முதுகெலும்பு சீராதல், ஆறாவது மாதம் கண்களில் பார்வை நாவில் ருசி, ஏழாவது மாதம் மூளை சீரடைதல் நரம்புகள் என்று தொடர்ச்சியான வளர்ச்சியில் எட்டு ஒன்பதாவது மாதங்களில் எல்லா உறுப்புகளுமே சீரான இயக்கத்திற்கு வந்து இறுதியில் வெளியேறுகிறது

அடுத்து குரான் 32:9 வசனத்தில் ஒரு வரிசை கூறப்படுகிறது. முதலில் பார்வை பின்னர் செவி அதன்பின்னர் இதயம் இந்த வரிசையில் உறுப்புகள் படைக்கப்படுவதாக அந்த வசனம் சுட்டுகிறது. இதில் முதல் இரண்டு புலன்களை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தீர்களா இன்றைய அறிவிலான முதலில் கண்ணும் பின்னர் காதும் உருவாகிறது என்பதை குரான் அன்றே சொல்லிவிட்டது என்கிறார்கள். ஆனால் இதில் மூன்றாவதாக வரும் இதயத்தை விட்டுவிட்டார்கள். ஏனென்றால் இதயமானது கண், காதுக்கு முன்னரே உருவாகிவிடுகிறது. ஆனால் குரானோ கண் காதுக்கு பின்னர் மூன்றாவதாக இதயத்தை குறிப்பிடுகிறது. இந்த வசனத்தில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. அவன் உங்களுக்கு பார்வைப் புலன்களையும், செவிப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான் என்கிறது அந்த வசனம். அதாவது பார்வைப் புலன்களையும் என்றால் கண்கள் இரண்டு,  செவிப் புலன்களையும் என்றால் காதுகள் இரண்டு இந்த வரிசையில் அடுத்து இதயங்களையும் என்று குறிப்பிடுகிறது குரான். என்றால் இரண்டு இதயம் என்று குறிப்பிடுகிறதா குரான்? இந்த குழப்பங்களிலிருந்து விடுபடவேண்டும் என்று தான் அண்மைய மொழிபெயர்ப்புகளில் உள்ளங்கள் என்று மொழிபெயர்த்து விட்டார்கள்.

அடுத்து குரான் 13:8 வசனத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது என்று ஒரு வரி வருகிறது. அதாவது மனிதனுக்கு கர்ப்ப காலம் பத்து மாதங்கள் என்றால் ஏனைய விலங்குகளுக்கும் இதே காலஅளவு இருப்பதில்லை வெவ்வேறு கால அளவுகளில் அவை பிரசவிக்கின்றன. இதைதான் அந்த வரியில் முகம்மது குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அந்த வரிகளுக்கு புதிய பொருளை கற்பிக்கிறார்கள். எப்படி என்றால் மனித உடல் அன்னியப் பொருட்களை உடலுக்குள் அனுமதிப்பதில்லை. கண்களில் ஒரு தூசு விழுந்துவிட்டால் கண்கள் ஒரு உருத்துதலை ஏற்படுத்தி கண்ணீரை சுரந்து அதை வெளியேற்றுவதற்கு முயற்சிக்கிறது. மூச்சுக் குழாயில் ஒரு துரும்பு சென்றுவிட்டால் தும்மலின் மூலம் அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. ஆனால் ஒரு அன்னியப்பொருளான கருவை பத்து மாதங்களாய் உடலுக்குள் தங்க அனுமதித்து அதன் பின்பே வெளியேற்ற முயற்சிக்கிறது. இன்றைய அறிவியலான இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது என்கிறார்கள். இது முழு உண்மையல்ல. எப்படியென்றால் நமது உடல் எல்லா அன்னியப் பொருட்களையும் எதிர்ப்பதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிப்பதை மட்டும் தான் எதிர்க்கின்றன. நாம் உண்ணும் உணவு உடலுக்கு அன்னியப் பொருள் தான் ஆனால் அதிலுருந்து தான் தனக்கு தேவையான சக்தியை உடல் பெற்றுக்கொள்கிறது. காற்று உடலுக்கு அன்னியப் பொருள்தான் ஆனால் அதிலிருந்து தான் தனக்கு தேவையான ஆக்ஸிஜனை உடல் பெற்றுக்கொள்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டால் வெளியிலிருந்து அன்னியப்பொருட்களான மருந்துகள் உட்செலுத்தப்படுகின்றன, உடல் அவற்றை ஏற்றுக்கொள்கிறது. செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுகின்றன அவைகளையும் உடல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வாமை என்றொரு நோய் உண்டு, உடலுக்கு தீங்கு செய்யாத பொருட்களைக் கூட தீங்கு செய்பவை என்று தவறாக கருதிக்கொண்டு உடல் எதிர்ப்பதற்குத்தான் ஒவ்வாமை என்று பெயர். ஆக உடல் தீங்கு செய்யும் அன்னியப் பொருட்களை மட்டுமே எதிர்க்கிறது. அந்த வகையில் கரு ஒரு அன்னியப் பொருளும் அல்ல. ஒரே மனித இனத்தின் எதிர்பாலின் உயிரணுவை தன்னுடைய அண்டத்துடன் இணைத்துக்கொள்வதை அன்னியப் பொருள் என்று எப்படி வகைப்படுத்த முடியும்?

அடுத்து குரான் 39:6 வசனத்தில் சொல்லப்படும் மூன்று இருள்கள் என்பது எதை குறித்து முகம்மது சொன்னார் என்பது தெரியவில்லை (தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்) ஆனால் அந்த மூன்று இருள் என்பது தாயின் அடிவயிறு, கர்ப்பப்பையின் சுவர், குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் என்று அறிவியல் விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால் முகம்மது அந்த மூன்று இருள்கள் என்பதை இப்படி அறிவியல் பூர்வமாக கூறவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். எப்படி என்றால் இதை அறிவியல் விளக்கமறிந்து கூறியவர் இதே வசனத்தில் அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு ஜோடி ஜோடியாக படைத்தான் எனும் பொருளற்ற வசனத்தை சொல்லியிருக்க முடியாது. கால்நடைகளில் எட்டு ஜோடிகள் தான் இருக்கின்றனவா? ஆக ஒரே வசனத்தின் மேல் வரி அர்த்தமற்றதாகவும், கீழ் வரி அறிவியல் பூர்வமாகவும் ஒருவர் கூறியிருக்க முடியாதல்லவா?

ஆக குரானின் வசனங்களில் அறிவியல் உண்மைகள் புதைந்து கிடப்பதாக கூறப்படுவதெல்லாம் வலிந்து ஏற்றப்படும் புனைபுரட்டுக்கள் என்பதை தவிர வேறொன்றுமில்லை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

42 thoughts on “கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

 1. களிமண்ணிலிருந்து மனிதனை படைத்தான் என்பதே பெரிய காமெடி, அதுவில்லாம இம்புட்டு காமெடி வேற உள்ளே இருக்கா!?

  சேஷாசலம்(பெரியார்தாசன்)மண்டையில் களிமண் தான் இருந்திருக்கும் போல, அதான் மதம் மாறியிருக்கிறார்!

 2. பிறக்க போகும் குழந்தை ஆணா ,பெண்ணா என்று முடிவு செய்யப்படுவது எப்போது என்று அறிவியல் அதிசயங்கள் நிறைந்த குரான் படி சொல்லமுடியுமா மதவாதிகளே ! அதையும் குரான் இப்படித்தான் சொல்கிறது .அதை இப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

 3. Hello Friend,  Hope everything is fine.
  I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is “Bloggers, Internet users and their intelligence”.  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire’s to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

   
  Meharunnisha
  Doctoral Candidate
  Dept of Psychology
  Bharathiar University
  Coimbatore – 641046
  Tamil Nadu, India
  meharun@gmail.com
  .
   
   
  (Pls ignore if you get this mail already)

 4. நல்ல தெளிவான பதிவு.
  பழக்கத்தில் இல்லாத அகராதியில் இல்லாத சொற்களை மொழிபெயர்ப்புகளில புகுத்தும் சமூக குற்றவாளிகள் இவர்கள்.

 5. 3 முதல் 4 வாரங்களுக்குள், உடல் அமைப்பு உருவாகி மூளை, முதுகுத் தண்டு, மற்றும் இதயம் ஆகியவை உருவாகி அவை கரு உறையை ஒட்டி காணப்படும். 4வது வாரத்தில் தான் கை, கால்களின் முலைகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மூளையைப்பற்றிய அறிவு அக்காலத்தில் இல்லாமையினாலேயே முஹம்மதும் மூளையைப் பற்றி எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. மற்ற எல்லா உறுப்புகளையும் விட மூளை முக்கியத்துவம் அற்றதா என்ன!

 6. சேஷாசலம் அதன் பெரியார்தாசன் இவ்வாறு பிதற்றுவது புதிதல்ல ஏற்கெனவே அவரின் தலைவர் ஒரு மதத்தை மட்டும் எதிர்த்தவர் .மற்ற மதங்கள் குறித்து வசதியாக வாய் மூடி மௌனியாக இருந்தார்.
  ஆனால் ஒன்று மட்டும் தெளிவான உண்மை-அனைத்து மதங்களுமே மக்களை முட்டாளாக்கி மூட நம்பிக்கையை வளர்ப்பவையே அன்றி வேறு எதற்கும் பயனில்லை இதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்கள்.
  அனால் சென்கொடிக்கு ஒரு சல்யூட் ஏனென்றால் பலரும் இந்த மதத்தின் பிறழ்வுகளை எடுத்துரைக்க தயங்கும் நிலையில்(நாத்திகவாதிகள் என மார் தட்டுபவர்கள் உட்பட)நீங்கள் உண்மையை எடுத்துரைப்பது மிக நல்ல ஒரு விஷயம்.பகுத்தறிவு மட்டுமே மக்களை விடுவிக்க சிறந்த ஒருகருவி.தொடர்ந்து எழுதவும்.நன்றி

 7. ஆண் பெண் பாலின உறுப்புகள் தோன்றுவதற்கு 30 நாட்களிலிருந்து 40 நாட்களை வரை ஆகின்றது என்று ஹிப்பொக்ரட்ஸ் சொல்கிறார்.
  [Hippocratic Writings (Penguin Classics, 1983) p. 329 ] அதைத்தான் முகம்மதுவும் திருப்பிச் சுற்றுகிறான்.

  “If a male’s fluid prevails upon the female’s substance, the child will be a male by Allah’s decree, and when the substance of the female prevails upon the substance contributed by the male, a female child is formed” [25].

  இதிலிருந்து குரோமசோம்களை எல்லாம் வழக்கம்போல கண்டுபிடிக்கிறார்கள் முல்லாக்கள்.

  உண்மை என்னவென்றால், பெண்ணின் முட்டையிலுள்ள குரோமசோம்களுக்கு ஆணா பெண்ணா என்று நிர்ணயம் பண்ணும் வேலையே கிடையாது. ஆணின் விந்துதான் அந்த குழந்தை ஆணா பெண்ணா என்பதை நிர்ணயம் செய்கிறது. வழக்கம்போல இதில் குரோமசோம்களை கண்டுபிடிக்கும் முல்லாக்களுக்கு மரபணு அறிவியலின் அடிப்படை கூட தெரியாது என்பதுதான் தெரிகிறது. அதை விட முக்கியம் “அல்லா”வுக்கும் முகம்மதுவுக்கும் மரபணு அறிவியல் சுத்தமாக தெரியாது என்பதும் வெளிப்படை

  ஏன் அதுகூட “அல்லா” சொன்னதல்ல, ஹிப்போக்ரட்ஸ் சொன்னது.

  இதோ ஹிப்போக்ரட்ஸ் எழுதியது

  “… both partners alike contain both male and female sperm (the male being stronger than the female must originate from a stronger sperm). Here is a further point: if (a) both partners produce a stronger sperm then a male is the result, whereas if (b) they produce a weak form, then a female is the result. But if (c) one partner produces one kind of sperm, and the other another then the resultant sex is determined by whichever sperm prevails in quantity. For suppose that the weak sperm is much greater in quantity than the stronger sperm: then the stronger sperm is overwhelmed and, being mixed with weak, results in a female. If on the contrary the strong sperm is greater in quantity than the weak, and the weak is overwhelmed, it results in a male” [Hippocratic Writings (Penguin Classics,
  1983) p. 320-1 ]

  நல்லவேளை, ஹிப்போக்ரட்ஸ் என்னிடம் அல்லாதான் சொன்னார் என்று ஒரு ரீலை ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்திருந்தால், மருத்துவ அறிவியல் ஹிப்போக்ரட்ஸை தாண்டி நகர்ந்திருக்காது.
  http://ennamopo.blogsome.com/2005/11/13/26-continuing-islamic-reels/

 8. //சேஷாசலம் அதன் பெரியார்தாசன் இவ்வாறு பிதற்றுவது புதிதல்ல ஏற்கெனவே அவரின் தலைவர் ஒரு மதத்தை மட்டும் எதிர்த்தவர்//
  இவன் அவர்களே,
  இப்போது பெரியார்தாசனின் தலைவர் முகமது. பெரியார் அல்ல. பெரியார் இந்து மதத்தை எதிர்த்த அளவுக்கு மற்ற மதத்தை எதிர்காததர்க்கு காரணம் இந்து பார்பனிய மதத்தின் கொடுமை சமுதாயத்தையே அடிமை படுத்தி வைத்திருந்தது. எல்லோரும் நாத்திகத்தை எற்றுகொள்ளாததால் , அப்படி உங்களுக்கு மதம் வேண்டும் என்றால் அதே நேரம் சூத்திர பட்டமும் போக வேண்டும் என்றால் இஸ்லாமிற்கு போகுமாறு மக்களை கூறினார். இதற்க்கு அர்த்தம் பெரியார் இஸ்லாமை ஏற்று கொண்டார் என்பது அல்ல.இந்து மதத்தின் மீது மட்டும் காழ்புணர்ச்சி என்பது அல்ல.

 9. Islam is great.. Who are all not obeying the Islam and Mohamed Nabi (Sal) they will surely going to know their mistakes shortly.

  May allah will bless u.

 10. //முதலில் அலக் எனும் வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அநேக மொழிபெயர்ப்புகளில் இந்த அலக் எனும் அரபு வார்த்தை மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் கருவுற்ற சினைமுட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார். பல்நாட்டு அறிஞர்களும் சரிபார்க்கும் வாய்ப்பை பெற்றதாக நண்பர்கள் கருதும் யூசுப் அலி என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உறைந்த இரத்தக்கட்டி (clot of congealed blood) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக் என்பவர் இந்தச்சொல்லுக்கு அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் விளக்கங்கள் சொல்கிறார். //

  மொழிபெயர்ப்புக்கள் என்ன சொன்னலும் Arabic dictionary என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

  புதிய அகராதி என்றால் மாற்றி விட்டீர்கள் என்று சொல்வீர்கள்
  அலகா என்பதற்கு பல பொருள் இருப்பதால் மொழிபெயர்ப்புகளில் ஏதாவ்து ஒன்று இருக்கும்

  பிரசித்தி பெற்ற Muhammed Ibn-Yaqub al-Firuzabadi(1329-1415) அகராதியில் இவ்வாறு வருகிறது

  1.Blood in its normal state or blood which is extremely red or which has hardened or congealed,
  2.a piece thereof
  3. Every thing that sticks ;
  4. Clay that sticks to hands;
  5. Unchanging enmity or love;
  6.Zu `alaq is the name of a hill of Banu Asad, where they defeated Rabi`ah ibn Maalik;
  7. An insect of water that sucks blood;
  8. That portion of a tree that is within the reach of animals.

  தமிழில்

  1. இரத்தக் கட்டி.
  3. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
  7. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்,

  மற்றும் இந்த மற்ற அகராதிகளின் படி இந்த மாதிரியான அர்த்தங்களே

  1. Lisan Al-Arab dictionary [1] , Book 5, Page 993.

  2. Al-Muheet dictionary [2], Page 839.

  3. Al-Muajam Al-Waseet dictionary [3], Page 622.

  4. Al-Mawrid dictionary Arabic-English section [4], Page 775.

  5. Al-Mawrid dictionary English-Arabic section [4], Page 520.

  6. Arabic-English dictionary the Hans Wehr dictionary [6], Page 634.

  நேரம் கிடைக்கும் போது மீதியை தொடர்வேன்

 11. //தமிழில்
  1. இரத்தக் கட்டி.
  3. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
  7. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்,//

  நானும் இதைத்தான் சொல்லுகிறேன் குரானின் பல வார்த்தைகளுக்கு (உதுமானின் குயுஃபுக் குரானில் புள்ளி ,கொடுகள் எல்லாம் போட்ட பிறகே) பல அர்த்தம் உண்டு.
  ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்.

 12. //(உதுமானின் குயுஃபுக் குரானில் புள்ளி ,கொடுகள் எல்லாம் போட்ட பிறகே) //

  அரபி அல்லாதவர்கள் வாசிக்க தான் புள்ளிக்கோடுகல்.உண்மையில் அரபு தாய் மொழியாக கொண்டவர்களுக்கு புள்ளி ,கோ டுகள் இல்லாமல் சரியாக வாசிப்பர்கள்.
  புள்ளிக்கோடுகள் உள்ள ஒரு அரபி நாளேட்டை காட்டுங்கள்.இது முட்டாள் தனமான வாதமாகும்

  குர்ஆன் கூறும் அலக் என்ற வார்த்தையின் இந்த மூன்று அர்த்தங்களும் இங்கே பொருந்திப் போகின்றது. முதலில் கருவானது ஃபலோப்பியன் குழாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து வந்து கர்ப்பப் பையை அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு ஒட்டிக் கொண்டு தொங்கும் இந்தக் கரு கர்ப்பப் பையின் சுவர்களில் ஆழமாக வேருன்றி அதிலிலுள்ள இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களை (Nutrition) ஒரு அட்டையைப் போன்று உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு சத்துக்களை (Nutrition) உறிஞ்சும் இந்தக் கரு இப்போது பார்ப்பதற்கு இரத்தக் கட்டியைப் போன்று தோற்றமளிக்கின்றது.

 13. ///ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்.///

  இது ஒரு ஆதாரம் தர இயலாமற் போகும் ஷீஆ சொன்னதாக இருக்கும்.

 14. //அரபி அல்லாதவர்கள் வாசிக்க தான் புள்ளிக்கோடுகல்.உண்மையில் அரபு தாய் மொழியாக கொண்டவர்களுக்கு புள்ளி ,கோ டுகள் இல்லாமல் சரியாக வாசிப்பர்கள்.//

  உதுமானின் காலத்து குரான் குயுஃபிக் எழுத்து முறையில் எழுதப்பட்டது.இதனை அரபி அல்லாதவர்கள் படிப்பதற்க்காக புள்ளிகள் கோடுகள் வைக்கப் பட்டது என்பது தவறு.

  முதலில் அரபி எழுத்துகளில் குறுகிய உயிரெழுத்துக்கள் இல்லாமலிருந்து, பின் காலத்திலேயே அவ்வகை எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. அராபிய மொழி மெய்யெழுத்து சார்ந்த ஒன்று. குறுகிய உயிரெழுத்துக்கள், எழுத்துக்கள் மூலமில்லாமல் மூன்று வகை ஒலிக்குறிப்புகள் (orthographical signs) மூலம் பயன்படுத்தப்பட்டன. பின்னால் மெய்யெழுத்துகளில் மாற்றங்கள் செய்தபின்பே, இந்த குறுகிய உயிரெழுத்துக்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

  கி.பி. 935-ல் Ibn Mujahid என்பவரால் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துகள் இறுதியிடப்பட்டு, அதன் மூலம் குரான் சீரமைக்கப் பட்டது.

  புள்ளி கோடுகள் இல்லமல் இருந்தால் பல அர்த்தங்கள் வரும் என்பதாலேயே புள்ளி கோடுகள் வைக்கப் பட்டன.
  இந்த கட்டுரை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்..

  http://isakoran.blogspot.com/2008/08/quran-or-qurans.html

  http://dharumi.blogspot.com/2010/12/462-why-i-am-not-muslim-8.html
  //புள்ளிக்கோடுகள் உள்ள ஒரு அரபி நாளேட்டை காட்டுங்கள்.இது முட்டாள் தனமான வாதமாகும்//
  நாம் விவாதிப்பது குரானின் குயுஃபிக் முறைக்கு ஏன் மாற்றம் செய்தார்கள் என்று அல்லவா?.
  உங்களின் கருத்துப் படி இப்போது எல்லா அரபி நாளேடுகளும் உதுமான் காலத்து குயுஃபிக் எழுத்து முறையையே பின் பற்றுகிறார்கள்.

  இது அறிவுப்பூர்வமான வாதம்?.
  இந்த சுட்டியை பாருங்கள். இன்னும் விவாதிப்போம்.

  Click to access arabic-script-languages.pdf

 15. //இது ஒரு ஆதாரம் தர இயலாமற் போகும் ஷீஆ சொன்னதாக இருக்கும்//
  இது அல்லா ஜிப்ரயிலூக்கு சொல்லி,அவர் முகமதுக்கு சொல்லி,அவர் தன்னை பின் பற்றுவர்க்கெல்லாம் சொல்லி, அவர்கள் உதுமானிடம் சொல்லி,அவர் அதை எழுதி,அப்புறம் கொஞ்சம் புள்ளி கோடு எல்லாம் வைத்த‌ முழுமையான குரான் சொல்லும் வசனம்.

  குரானின் மெக்கா சூராக்களையும்,மெதினா சூராக்களையும் பார்த்தாலே வித்தியாசம் புரிந்து விடும்.

  ______________________

  29:46. இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் – அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே – மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.( இது மெக்கா)

  9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?(இது மதினா)

  _________________________

  இந்த மாதிரி நிறைய காட்டலாம் .

 16. //(உதுமானின் குயுஃபுக் குரானில் புள்ளி ,கொடுகள் எல்லாம் போட்ட பிறகே) //
  அரபி அகராதியில் அலகா என்ன புள்ளிக்கோடுகளுடனா உள்ளது

 17. //29:46. இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் – அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே – மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.( இது மெக்கா)
  9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?(இது மதினா)//

  என்ன சொல்ல வ ருகிரீர் விளக்க முடியுமா
  _________________________

 18. //என்ன சொல்ல வ ருகிரீர் விளக்க முடியுமா//

  ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்

 19. //அரபி அகராதியில் அலகா என்ன புள்ளிக்கோடுகளுடனா உள்ளது//
  இல்லை
  _________________________
  நண்பர் முகமது,
  நான் சொல்ல் வந்தது இப்போது உள்ள குரானில் இந்த வார்த்தைக்கு 3 அர்த்தங்கள் தமிழில் வருகின்றன என்று நீங்கள் சொன்னதுதான்.
  அந்த் 3 வெவேறு அர்த்தங்களையும் இணைத்தாலே கருவுற்ற சினை முட்டை என்ற மொத்த(நான்காம்) அர்த்தம் வருகிறது.

  _______________________________________

  3. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,

  //முதலில் கருவானது ஃபலோப்பியன் குழாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து வந்து கர்ப்பப் பையை அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. //
  _____________________________________

  7. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்

  //இவ்வாறு ஒட்டிக் கொண்டு தொங்கும் இந்தக் கரு கர்ப்பப் பையின் சுவர்களில் ஆழமாக வேருன்றி அதிலிலுள்ள இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களை (Nutrition) ஒரு அட்டையைப் போன்று உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு சத்துக்களை (Nutrition) உறிஞ்சும் //

  __________________________
  1. இரத்தக் கட்டி.

  இந்தக் கரு இப்போது பார்ப்பதற்கு இரத்தக் கட்டியைப் போன்று தோற்றமளிக்கின்றது.//
  __________________________

  இப்படி பல அர்த்தம் வருவதால் ஒரு பிரச்சாரகர் தன் இஷ்டத்திற்கு விளக்க்ங்களை கொடுக்க முடியும்.

  இஸ்லாமிய அறிஞர்கள் பலர் குரான் விளக்கங்கள் பற்றி விவாதிப்பதை நீங்கள் கண்டதுஇல்லையா?

  _______________
  இந்த 96:2க்கு நான் வித்தியாசமாக ஒரு விளக்கம் கூறுகிறேன்.

  நீங்கள் சொன்ன ஆங்கில அர்தங்களில் நான்காம் விளக்கம் எடுக்கிறேன்.

  4. Clay that sticks to hands;

  இறைவன் ஆதமை களிமண்ணில் இருந்து படைத்தான் என்பதை இது கூறுகிறது என்று நான் கூற முடியுமா ?இல்லையா.

  இது குரானின் மற்ற வசங்களோடு ஒத்துப் போகிறது.

  2. அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக் கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக் கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!

  ______________________________

  நான் சொன்னதை பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்களே?

 20. //கருவுற்ற சினை முட்டை என்ற மொத்த(நான்காம்) அர்த்தம் வருகிறது///

  நான் சொல்லவேயில்லையே.

  //இப்படி பல அர்த்தம் வருவதால் ஒரு பிரச்சாரகர் தன் இஷ்டத்திற்கு விளக்க்ங்களை கொடுக்க முடியும்.//
  நான் அகராதியில் உள்ள ஆதாரத்துடன் குறிப்பிட்டேன்.

  எந்த அர்த்தம் பொருந்தாமல் போனது.

  //Clay that sticks to hands;//

  கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் களிமண்

  இது ஒட்டிக்கொண்டிருப்பதை தெளிவாக சொல்கிறது

  // அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக் கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக் கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!//

  ஏதாவது ஒட்டிக்கொண்டிருப்பதை கொள்ளும் அகராதி அர்த்ததுக்கு எப்படி இவ்வசனம் பொருந்தி போவதாய் சொல்வீர்கள்,
  sticks -ஒட்டிக்கொள்ளுதல்

  //ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்//

  இது உங்களுக்கு பொருந்தி போகிறது

  அகராதியில் உள்ள அர்தத்தை நான் தந்தேன்.அதை திரிபு படுத்தி விட்டீரே

 21. அகராதியின் ஆங்கில விளக்கம்
  As should be clear from the above that there are numerous meanings of the word, but they are all derived from the sense of ‘attachment or clinging’. For example love is alaqah because it clings to the heart and a leech is alaqah because it clings to the skin of the human who’s blood it sucks, and clay is alaqah because it clings to the hands. A faithful translation of the word in English would be ‘anything that clings or sticks’ i.e. ‘clinging thing’ because this would allow all the meanings of the word to be preserved.

 22. நண்பரே
  1.என்னுடைய நோகம் திரிபு படுத்துவது அல்ல,நான் ஒரு பிரச்சாரகானும் அல்ல.
  2. கருவுற்ற சினை முட்டை என்பது திரு பி ஜே வின் மொழி பெயர்ப்பு.

  இந்த 96:2 க்கு
  களிமண் என்றால் கையில் ஒட்டத்தான் செய்யும்,அல்லது இந்த வசனம் கூறி விடலாம் தோழர்

  37:11. ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.

  சில ஆங்கில மொழி பெயர்ப்புகளையும் கீழே கொடுத்து இருக்கிறேன். சில (யூசுப் அலி0 அப்படியே ஒட்டக் கூடிய க்ளிமண் என்றே கூறுவதை கூறுங்கள்.

  எனக்கு அரபி தெரியாது.இருந்தாலும் நான் இந்த 96:2ம் இதைத்தான் கூறுகிறது என்று (விதண்டா)வாதம் செய்ய முடியும்.
  இந்த வசங்களை பாருங்கள்.
  __________________

  32:7. அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.

  32:8. பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.

  களிமண்ணில் இருந்து ஆரம்பித்து பிறகு விந்ந்து துளி என்று கூறுகிறது.
  நீங்கள் கூறிய ஒட்டக் கூடிய ,அட்டை போன்ற இரத்தக்கட்டி அதற்கு முன் களிமண் அதாவது.
  களிமண்,விந்து,ஒட்டக்கூடிய,அட்டை மாதிரியான ,இரத்தக்கட்டி,கருவுற்ற சிஅனி முட்டை என்று ஒரு வரிசை கூறி விடலாம்.

  என்ன்ன்டைய ஒரு அரபி நண்பரிடம் கூட இதை பற்றி கேட்ட போது குரானின் ஒவ்வொரு சுராவிற்கும் குறைந்தது ஏழு அர்தங்கள் கூற முடியும் என்று அதிர்ச்சி கொடுத்தார்.

  அவ்வளவுதான்.
  ____________
  ____________
  http://www.quran browser.com
  just search for sticky clay

  Pickthall
  Then ask them (O Muhammad): Are they stronger as a creation, or those (others) whom we have created? Lo! We created them of plastic clay.
  __________________
  Yusuf Ali
  Just ask their opinion: are they the more difficult to create, or the (other) beings We have created? Them have We created out of a sticky clay!
  Hilali-Khan
  Then ask them (i.e. these polytheists, O Muhammad SAW): “Are they stronger as creation, or those (others like the heavens and the earth and the mountains, etc.) whom We have created?” Verily, We created them of a sticky clay.
  __________________
  Shakir
  Then ask them whether they are stronger in creation or those (others) whom We have created. Surely We created them of firm clay.
  _______________
  Sher Ali
  So ask them whether it is they who are harder to create, or those others whom WE have created? Them WE have created of cohesive clay.
  Khalifa
  Ask them, “Are they more difficult to create, or the other creations?” We created them from wet mud.
  ___________________
  Arberry
  So ask them for a pronouncement — Are they stronger in constitution, or those We created? We created them of clinging clay.
  Palmer
  Ask them whether they are stronger by nature or (the angels) whom we have created? We have created them of sticky clay.
  ___________________
  Rodwell
  Ask the Meccans then, Are they, or the angels whom we have made, the stronger creation? Aye, of coarse clay have we created them.
  Sale Ask [the Meccans] therefore, whether they [be] stronger by nature, or [the angels] whom we have created? We have surely created them of stiff clay.
  ________________
  Transliterated Arabic
  Faistaftihim ahum ashaddu khalqan am man khalaqna inna khalaqnahum min teenin lazibin
  __________________

 23. some more verses.clearly support my hierarchical explanation.
  _______________

  22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

  23:14 ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ ۚ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
  23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

  40:67 هُوَ الَّذِي خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ثُمَّ لِتَكُونُوا شُيُوخًا ۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبْلُ ۖ وَلِتَبْلُغُوا أَجَلًا مُّسَمًّى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ
  40:67. அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் – இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).

  75:38 ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
  75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

  96:2 خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
  96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்

 24. sankar///ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்///
  [திறமையான் பிரச்சாகர் அல்ல ]சிலர் தங்களது தவறான கொள்கைக்காக சம்பவங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட வசனங்களை தங்களுக்கு தகுந்தவாறு திரிபு செய்வதையே கூறியுள்ளீர்..அந்த புரட்டுவாதத்தால் சாதாரண மக்களைத்தான் ஏமாற்ற முடியும். நேர்மையார்களிடம் அந்த கதை எடுபடாது.இஸ்லாதிர்ர்க்கு எதிராகவே சிந்தித்து என்ன குறை காணலாம் என்பது உங்கள் ஆவல் தெரிகிறது.முஸ்லிம்களைத்தவிர வேறு எந்த மதவாதிகளாலும் நாத்திகர்களை எதிகொள்ள முடியாது.

 25. //இஸ்லாதிர்ர்க்கு எதிராகவே சிந்தித்து என்ன குறை காணலாம் என்பது உங்கள் ஆவல் தெரிகிறது.//

  நாங்கள் நக்கீரர் பரம்பரை குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர்களென்றால் பெருமைதான்.

  //முஸ்லிம்களைத்தவிர வேறு எந்த மதவாதிகளாலும் நாத்திகர்களை எதிகொள்ள முடியாது.//

  இதன் எதிர்மரையும் உண்மையே

  நாத்திகர்ளைத் தவிர வேறு எந்த (மத)வாதிகளாலும் (வஹாபி) முஸ்லிம்ககளை எதிர்கொள்ள முடியாது.

 26. 6:2

  நான் திரிபு படுத்தி விட்டேன் என்று சொன்னதை குறிப்பிட்ட இந்த வசனத்தை தான் நான் சொன்னேன்.இந்த வசனத்தில் sticky clay என்று வருகிறதா.மற்ற வசன்ங்கள் பொருந்தி வரலாம்.

  புள்ளிகோடுகள் இல்லாத அகராதியில் இருந்து விளக்கமளித்து விட்டேன்

  clay என்று தான் வருகிறது

  //அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக் கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக் கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!/

  6:2 Yusuf Ali
  He it is created you from clay, and then decreed a stated term (for you). And there is in His presence another determined term; yet ye doubt within yourselves!

  http://tanzil.info/#6:2

  மேலே உள்ள லிங்கில் ஒவ்வொன்றாகமற்ற மொழிபெயர்பாளர்ப்புக்களையும் check பண்ணுங்க

  புள்ளிகோடுகள் இல்லாத அகராதியில் இருந்து விளக்கமளித்து விட்டேன்

  புள்ளிக்கோடுகள் விடயத்தை பிறகு பதிலளிக்கிறேன்.

 27. //புள்ளிக்கோடுகள் விடயத்தை பிறகு பதிலளிக்கிறேன்//
  தவறாக copy paste ப்ண்ணப்பட்டது

 28. //6:2 Yusuf Ali
  He it is created you from clay, and then decreed a stated term (for you). And there is in His presence another determined term; yet ye doubt within yourselves!//

  இதில் sticks என்று எங்காவது வருகின்றதா

 29. குரானின் மொழி பெயர்ப்பே அப்ப்டித்தான்.உங்களுக்கு பிசுபிசுப்பான களிமண் வேண்டுமென்றால் 37.11 எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் விருப்பம் போல.

  37:11. ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்

  பி ஜே மொ.பெ

  11. இவர்கள் வலிமையான படைப்பா? அல்லது நாம் படைத்த(மற்ற)வைகளா? என்பதை இவர்களிடம் கேட்பீராக! இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் நாம் படைத்தோம்.368

  Pickthall

  Then ask them (O Muhammad): Are they stronger as a creation, or those (others) whom we have created? Lo! We created them of plastic clay.
  Yusuf Ali Just ask their opinion: are they the more difficult to create, or the (other) beings We have created? Them have We created out of a sticky clay!

  Hilali-Khan
  Then ask them (i.e. these polytheists, O Muhammad SAW): “Are they stronger as creation, or those (others like the heavens and the earth and the mountains, etc.) whom We have created?” Verily, We created them of a sticky clay.

  Shakir

  Then ask them whether they are stronger in creation or those (others) whom We have created. Surely We created them of firm clay.

  Sher Ali

  So ask them whether it is they who are harder to create, or those others whom WE have created? Them WE have created of cohesive clay.
  Khalifa Ask them, “Are they more difficult to create, or the other creations?” We created them from wet mud.
  Arberry

  So ask them for a pronouncement — Are they stronger in constitution, or those We created? We created them of clinging clay.
  Palmer Ask them whether they are stronger by nature or (the angels) whom we have created? We have created them of sticky clay.

  Rodwell

  Ask the Meccans then, Are they, or the angels whom we have made, the stronger creation? Aye, of coarse clay have we created them.

  Sale

  Ask [the Meccans] therefore, whether they [be] stronger by nature, or [the angels] whom we have created? We have surely created them of stiff clay.

  Transliterated Arabic
  Faistaftihim ahum ashaddu khalqan am man khalaqna inna khalaqnahum min teenin lazibin

 30. U bled y pasted, who have given the power to u to badly talk about the Great Islam & Prophet. Mind Ur business otherwise’ll receive some good lesson From the Almighty.

 31. நண்பர் பக்ருதீன் அலி,

  கரு வளர்ச்சி குறித்து அன்றே கூறப்பட்டது என்று கூறியதை விவாதிததை தவிர என்ன கூறப் பட்டது?

  விளக்கமாக தங்கள் கருத்தை கூறவும். கேட்க ஆவலாக இருக்கிறோம்.

 32. ஆண் பெண் எப்படி கருவில் நிர்ணயம் செய்யப்படுகிறது?

  3329. அனஸ்(ரலி) அறிவித்தார்
  நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினாக்hள். பிறகு, ‘1 இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), ‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), ‘உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று கூறினார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள். உடனே யூதர்கள், ‘இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
  Volume :4 Book :60

 33. குரானில் உள்ள (1)சில வசனங்கள் கரு வளர்ச்சியின் நிலைகளை கூறுவதாகவும்,(2)அது இதற்கு முன் யாராலும் குறிப்பிடப்படாதாகவும்,அது (3) இப்போதுள்ள அறிவியல் கூறும் கருத்து போலவே உள்ளதாகவும் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.
  இது போன்ற விஷயங்களை அறிந்தவர் இறைவன் மட்டுமே ஆகவே குரான் இறைவேதம்,இஸ்லாமே உண்மையான மதம் என்றும் கூறுகின்றனர்.
  இவர்கள் கூறுவது சரியா?

  STAGE 1. The two semens-ஆண் மற்றும் பெண்ணின் கலப்பு விந்து
  STAGE 2. embryo-கரு
  STAGE 3. unshaped flesh-தசைக்கட்டி
  STAGE 4. bones-எலும்பு
  STAGE 5. flesh grows on and around the bones-தசை மூடுதல்
  இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியே உள்ளது மற்றும் கேலன் ஆண் மற்றும் பெண்ணின் விந்து கல‌ப்பை கூறுகிறார்.

  ஆகவே இதுவரை யாரும் கூறாத ஒன்றை குரான் கூறவில்லை.

  எலும்புகளுக்கு பிறகு மாம்சத்தினால் போர்த்துவதென்றால் நடக்காத காரியம் ,,எலும்புகள் தோல் மற்றும் சதைக்குள்லேயே உருவாகிறது என்பதையும் சுட்டியின் காளொளியில் கண்டு இருக்கலாம்.கரு(குழந்தைக்கு) உணவு தொப்புள் கொடி வழியாக செல்வது,வெவ்வேறு உடல் உறுப்புகள் உருவாதல் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

  ஆக்வே கேலன் மற்றும் குரானின் கருத்து தவறானது.இது அறிவியலோடு ஒத்து போகவில்லை.

  கரு வளர்ச்சி பேசும் குரானிய விஞ்ஞானிகள் அது தொடர்பான குரான் வசனங்களை மட்டுமே மேற்கோள் கட்டுகிறார்கள்

 34. ondru mattum telivage terigirathu. matra mathangalai takkuvathaye polappage vaithiruntha muslimgal, ippoluthu mulu neratthayum islatthai tharkappathil payan padutthugiraargal. evvalavuthan marutthalum nastigargal islatthin “goal post” ai nerungi kondu irukkiraargal enbathe nijam.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s