நேபாளம்: வீழ்த்தும் வரை வீழ்வதில்லைதலைநகர் காட்மாண்டில் நடக்கும் மேதினப் பேரணியை அடுத்து மே 2 முதல் தொடர் கடையடைப்பு வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இந்தியச் சதிகளினால் கவிழ்க்கப்பட்ட மாவோயிஸ்டுகள் சோசலிசத்தை நோக்கி தமது நகர்வை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரை அவர்களை வாழ்த்தும் முகமாக மீள்பதிக்கப்படுகிறது.

தோழர்களுக்கு எனது மேதின வாழ்த்துக்கள்.


நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!


சுயாட்சிப் பிரதேசங்களை அறிவித்து, நேபாள பொம்மையாட்சியை முடக்கியுள்ளனர் மாவோயிஸ்டுகள்


அண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. “அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க!” என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.

நேபாளத்தின் புதிய இராணுவத் தலைமைத் தளபதி சத்ரமான் சிங் குருங், கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லிக்கு வந்து இந்திய இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூரையும் அரசுத் தலைவர் பிரதீபா பட்டீலையும் சந்தித்திருக்கிறார். அரசுமுறை மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்டாலும், மாவோயிஸ்டுகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பற்றி விவாதிக்கவே அவர் வந்திருக்கிறார்.

2006ஆம் ஆண்டு போடப்பட்ட அமைதி ஒப்பந்தப்படி, மாவோயிஸ்டுகளின் இராணுவப் படை நேபாள இராணுவத்துடன் இணைக்கப்பட்டு, புதிய நேபாள இராணுவம் கட்டியமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியத் தலைமைத் தளபதியோ, அவ்வாறு மாவோயிஸ்டு இராணுவப் படைகள் நேபாள இராணுவப்படைகளுடன் இணைக்கப்படக்கூடாது என்று நேபாள இராணுவத் தளபதியைச் சந்தித்தபோது வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். பசுபதிநாதர் கோயில் தலைமைப் பூசாரி விவகாரம் போலவே, நேபாள நாட்டின் உள்விவகாரங்களில் அப்பட்டமாகத் தலையிடும் மேலாதிக்கம்தான் இது.

மன்னராட்சிக்கு எதிராக நடந்த மக்கள் எழுச்சியை ஒடுக்கிய, மன்னர் உள்ளிட்ட குற்றவாளிகளைப் பற்றிய விசாரணை நடத்த, மன்னராட்சி வீழ்ந்த பிறகு ரயாமஜ்ஹி கமிசன் நிறுவப்பட்ட போதிலும், தற்போதைய நேபாள கூட்டணி பொம்மை அரசு அந்த அறிக்கையை இன்றுவரை வெளியிடாமல் மறைத்துள்ளது. மேலும், தோரான்ஜங் பகதூர் சிங் என்ற இரண்டாம் நிலையிலுள்ள தளபதிக்குப் பதவி உயர்வு அளித்துள்ளது. காத்மண்டு நகரில் இயங்கிவரும் ஐ.நா. கண்காணிப்புக் குழுவும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இம் முடிவை ரத்து செய்யுமாறு கோரியுள்ள போதிலும், விதிமுறைகளை மீறி அவரைத் தலைமைத் தளபதியாக்க நேபாள அரசு தீர்மானித்துள்ளது. இப்படி, அடுத்தடுத்து நேபாள பொம்மை அரசு அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராகவும், இந்திய அமெரிக்க மேலாதிக்கத் தலையீட்டுக்கு விசுவாசமாகவும் செயல்பட்டு வருகிறது.

ஈழ விடுதலைப் போரை அழித்தொழிக்க இந்தியா எப்படிச் செயல்பட்டதோ, அதைவிட மூர்க்கமாகவும் வெளிப்படையாகவும் நேபாளப் புரட்சியை அழித்தொழிக்கக் கிளம்பியுள்ளது. ஈழப் போர் போலவே, இந்தியாவின் ஆதரவுடன் நேபாள இராணுவம் மாவோயிஸ்டு அழிப்புப் போரைத் தொடுக்கலாம் என்ற அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், அத்தகைய போர்த்தாக்குதல் நடத்தப்பட்டால், அதை எதிர்கொண்டு முறியடிக்கவும், எவ்வித அந்நியத் தலையீடுமின்றி நேபாள மக்களின் கூட்டுக் குடியரசைக் கட்டியமைக்கவும் மாவோயிஸ்டுகள் தயாராகி வருகிறார்கள்.

நேபாளத்தில் நெவர், மகர், தரு, மைதிலி, தமாங் முதலான மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, நேபாள மொழியின் மேலாதிக்கம் தான் நிலவுகிறது. இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய நேபாள மொழி பேசும் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாவோயிஸ்டுகள் முன்வைக்கும் கூட்டுத்துவக் குடியரசு என்பது தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையும், சிறுபான்மை இனத்தவருக்கு சுயாட்சி உரிமையும், எவ்வித அந்நியத் தலையீடுமற்ற சுதந்திரமும் சுயாதிபத்திய உரிமையும் கொண்ட குடியரசாகும். இதனடிப்படையில், ஏற்கெனவே 9 மாவட்டங்களில் இணையான அரசை நடத்திவரும் மாவோயிஸ்டுகள், கடந்த நவம்பர் 25 தொடங்கி டிசம்பர் 18க்குள் 13 சுயாட்சிப் பிரதேசங்களை அடுத்தடுத்து அறிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று 5000 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் செங்கொடி ஏந்தி முழக்கமிட்டபடியே வந்து, நாடாளுமன்றக் கட்டடமான தர்பார் அரங்கத்தை முற்றுகையிட்டு காத்மண்டு பள்ளத்தாக்கைத் தனி சுயாட்சிப் பிராந்தியமாக அறிவித்தனர். நேவா சுயாட்சி அரசு என்று அதைக் குறிப்பிட்டு, துப்பாக்கி வேட்டுகள் முழங்க, இந்த அறிவிப்பை மாவோயிஸ்டு கட்சித் தலைவர் தோழர் பிரசந்தா பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதியன்று நடந்த மாபெரும் பேரணிக்குப் பின் நடந்த பொதுக்கூட்டத்தில், “”நேபாள காங்கிரசுக் கட்சியுடன் பேசிப் பார்த்தேன்; பலனில்லை. ஆளும் போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்டுலெனினிஸ்டு)உடன் பேசிப் பார்த்தேன்; பலனில்லை. இனி அவர்களின் எஜமானர்களான டெல்லியுடன் பேசலாம் என்று கருதுகிறேன்” என்று பெருத்த ஆரவாரத்துக்கிடையே, இந்திய மேலாதிக்கவாதிகளை அம்பலப்படுத்திக் கிண்டலாகக் குறிப்பிட்டார், தோழர் பிரசந்தா. ஏற்கெனவே மூன்று கட்டங்களாக நடந்த போராட்டம், வருமாண்டு ஜனவரி 24 முதலாக நாடு தழுவிய காலவரையற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டமாகத் தொடரும் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் 1905 ஆம் ஆண்டில் நடந்த புரட்சியை ஒத்த நிலைமைதான் இன்று நேபாளத்தில் நிலவுகிறது. நேபாள மக்கள் தற்போதைய அரசின் அதிகாரிகளைப் பொருட்படுத்தவில்லை; சட்டத்தைப் பொருட்படுத்தவில்லை; சட்டங்களையும் அதிகாரத்தையும் மக்கள் போராட்டம் மீறுகிறது. சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத செயல்கள் மூலம் புதியதோர் ஏற்பாட்டை, கண்ணெதிரே காணும் உண்மையாக உருவாக்குகிறது. புதிய புரட்சிகர அதிகாரத்தின் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் ஏற்பாட்டை செய்துகொள்ளுமாறு, அது மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விடுகிறது. ரஷ்யாவில் எவ்வாறு தொழிலாளர் விவசாயிகளின் சோவியத்துகள் உருவாகியதோ, அதைப்போல மக்கள்திரள் அரசியல் வேலைநிறுத்தங்கள் மூலம், புதிய மக்கள் சோவியத்துகளைக் கட்டியமைக்கும் திசையில் நேபாளம் முன்னேறுகிறது.

இந்தியஅமெரிக்கத் தலையீட்டையும் மேலாதிக்கத்தையும் வீழ்த்த, நேபாள மக்களையும் உலகெங்குமுள்ள புரட்சிகரஜனநாயக சக்திகளை மட்டுமே மாவோயிஸ்டுகள் நம்புகிறார்கள். ஆயுதமேந்திய சாகசச் செயல்கள் மூலமோ அல்லது சந்தர்ப்பவாத பேரங்கள் மூலமோ இதைச் சாதிக்க முடியாது என்பதையும் அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். விடுதலைப் புலிகளைப் போல, இந்திய ஓட்டுக்கட்சிகளிடம் உறவு கொண்டு, இந்திய அரசை நைச்சியமாகத் தமக்கு ஆதரவாக நிற்குமாறு அவர்கள் பேரங்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை. அல்லது காங்கிரசு ஆட்சிக்குப் பதிலாக, பா.ஜ.க.வும் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்தால் தமக்குச் சாதகமாக அமையும் என்று கருதவுமில்லை.

நாடு தழுவிய மக்கள்திரள் அரசியல் போராட்டங்கள் எனும் செயல்தந்திர உத்தியின் வழியாக, மக்களை அரசியல்படுத்துவதன் மூலம், அவர்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்கள் தமது செõந்த அரசைக் கீழிருந்து கட்டியமைக்கவும் பாதுகாக்கவும் அவர்கள் போராடி வருகிறார்கள். மேலிருந்து அதிகாரத்தைச் செலுத்திப் புரட்சியைத் தொடருவதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோது அதைப் பயன்படுத்திக் கொண்ட மாவோயிஸ்டுகள், இப்போது அந்த வாய்ப்பு பறிக்கப்பட்ட நிலையில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் புரட்சியைத் தொடர்கிறார்கள்.

சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 19

குரானின் திட ஆதாரங்களில் அடுத்து வருவது மறைக்கப்பட்ட ஏடுகள் எனக் கருதப்படும் இஞ்சீல் வேதம். இஸ்லாமிய நம்பிக்கைகளை பொருத்தவரை அனேக இறைத்தூதர்கள் அனேக வேதங்கள் இருந்தாலும், குரான் பெயர் குறிப்பிடுவது நான்கைத்தான். தாவூது (தாவீது) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட ஸபூர், மூஸா (மோசஸ்) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட தவ்ராத், ஈசா அல்லது மஸீஹ் (ஏசு) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட இஞ்சீல், முகம்மது எனும் இறைத்துதருக்கு வழங்கப்பட்ட குரான். இந்த நான்கில் எஞ்சியிருப்பது குரான் மட்டுமே, ஏனையவை அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன. இதில் ஈசாவுக்கு வழங்கப்பட்ட வேதமான இஞ்சீல் மனிதக்கரங்களால் திருத்தப்பட்டு உருமாறி அதன் தன்மையை இழந்து இருப்பதுதான் பைபிள் எனும் கிருஸ்தவர்களின் வேதம் என்பது இஸ்லாமியர்களின் கருத்து (இஸ்லாமின் கருத்தும் கூட).

கடந்த 1947 ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டின் சாக்கடலை அடுத்துள்ள குவாரடானியா (கும்ரான்) எனும் மலையின் குகை ஒன்றிலிருந்து சில தோல் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கோ, மொழிபெயர்த்து பரவலாக படிப்பதற்கோ அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆவனங்கள் தான் குரானை மெய்ப்படுத்தும் ஆதாரங்கள் என்கிறார்கள் மதவாதிகள். எப்படி? ஈசா மக்களிடம் பிரச்சாரம் செய்தது அவருக்கு அல்லாவால் கொடுக்கப்பட்ட வேதமான இஞ்சீலைத்தான். ஆனால் அதன் பின்னர் வந்தவர்களால் ஈசாவின் போதனைகள் திரிக்கப்பட்டு (பவுல் அல்லது பால்) புதிய மதமாகவும் புதிய வேதமாகவும் உருவாக்கப்பட்டன. அது தான் இன்றிருக்கும் பைபிளும், கிருஸ்தவமும். ஆனால் ஈசா பிரச்சாரம் செய்தது இஸ்லாத்தைத் தான். அதனால் புதிய திரிக்கப்பட்ட போதனைகளை ஏற்காதவர்கள். மெய்யான இஞ்சீல் வேதத்துடன் வெளியேறி மலைக்குகைகளில் மறைந்து வாழ்ந்தனர். அப்படி அவர்களால் மறைத்து வைக்கப்பட்ட அந்த ஏடுகள் தான் 1947ல் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள். அது இன்றிருக்கும் குரானையும் இஸ்லாத்தையும் மெய்ப்படுத்துவதால் தான் மக்கள் பார்வையிலிருந்து மறைத்து விட்டார்கள். இப்படி அந்த ஏடு வெளிப்படுத்தப்படும் என்று குரான் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டதால் குரான் இறைவனின் வேதம் தான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

இது குறித்து குரான் கூறும் கதை என்ன? குகை (கஹ்பு) என்னும் அத்தியாயத்தில் இந்தக்கதை வருகிறது. “அந்தக் குகையிலிருந்தோரும், சாசனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?” குரான் 18:9 என்று தொடங்கும் வசனங்களிலிருந்து அந்த கதை தொடங்குகிறது. சிலர் ஒரு நாயுடன் அந்த குகையில் வந்து தங்குகிறார்கள், தங்களின் இறைவனிடம் தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகிறார்கள், இறைவனும் அவர்களது கோரிக்கையை ஏற்று அவர்களை தூங்கச்செய்கிறார். எவ்வளவு காலத்திற்கு? 309 ஆண்டுகள் அவர்கள் தூங்குகிறார்கள். தாங்கள் எவ்வளவு காலம் தூங்கினோம் என்று அவர்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு, தங்களுக்கு உணவு வாங்கிவர அவர்களில் ஒருவரை கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரித்து ஊருக்குள் அனுப்புகின்றனர். 18:9 ல் தொடங்கி 26ம் வசனம் வரை குரான் கூறுவது இது தான். இதில் குரான் இரண்டு செய்திகளை அடிக்கோடிடுகிறது. அவர்கள் மொத்தம் எத்தனை பேர்? எவ்வளவு காலம் அவர்கள் உறங்கினர்? உனக்கு தெரியாத விசயங்களில் நீ தர்க்கிக்கவேண்டாம் என்றும் இதுபற்றி யாரிடமும் விளக்கம் கேட்கவும் வேண்டாம் என்று தன்னுடைய தூதருக்கு(!) அல்லா கட்டளையும் போடுகிறார். ஆனால் இந்தக்கதையில் முக்கியமான செய்தியாக இப்போது கருதப்படும்  அந்த ஏடு குறித்து குரான் விளக்கவேயில்லை 18:9ல் வரும் ‘சாசனத்தையுடையோரும்’ எனும் ஒரு வார்த்தையை தவிர. முக்கியமான இந்த விசயத்தை விட்டுவிட்டு அவர்கள் எத்தனை பேர் என்பதற்கு அவர்கள் மூவர் நான்காவதாக அவர்களது நாய்,  அவர்கள் ஐவர் ஆறாவதாக அவர்களது நாய்,  அவர்கள் ஏழு பேர் எட்டாவதாக அவர்களது நாய் என்றெல்லாம் விரிக்கிறது கடைசியில் அவர்கள் எத்தனை பேர் என்று குரான் கூறவும் இல்லை. முன்னூறு ஆண்டுகள் உறங்கினார்கள் என்றும் பின் ஒன்பது ஆண்டுகள் அதிகமாக என்றும் கூறுகிறது. முன்னூறா? முன்னூற்று ஒன்பதா? தெரியாது. முக்கியமில்லாத இவைகளை பலவாக்கியங்களில் விவரிக்கும் குரான் முக்கியமான அந்த ஏட்டை ஒரு வார்த்தையோடு முடித்துக்கொண்டுவிட்டது. இந்த வசங்களை வைத்துத்தான் மேலுள்ள கதையும் உருவகிக்கப்படுகிறது.

எத்தனை பேர் என்பது ஒருபுறமிருக்கட்டும், மனிதர்களால் முன்னூறு ஆண்டுகள் அல்லது முன்னூற்று ஒன்பது ஆண்டுகள் தூங்க முடியுமா? மூன்று நூற்றாண்டுகளாய் தூங்கியவர்கள் தூங்கி எழும்போது எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார்கள் என்றும் குரான் கூறுகிறது. அவர்கள் தங்களுக்குள் ஒரு நாள் அல்லது நாளின் சிறிய பாகம் தூங்கியதாய் பேசிக்கொண்டார்கள் குரான் 18:19

இந்தக்கதையில் குரான் எதை வலியுறுத்த விரும்புகிறது? அதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறது? ஒற்றைச் சொல்லில் சொன்னது தான் முக்கியமானது என்றால் இந்தக்கதையை நீளமாக வளர்த்தது ஏன்? அந்த சாசனங்கள் கண்டெடுக்கப்படும் என்றோ, அது தான் அத்தாட்சி என்றோ அந்த வசங்களில் எந்தக் குறிப்புமில்லை. மாறாக அவர்கள் குகையில் தங்கியிருப்பது தான் நம் அத்தாட்சி என்றும் கூறுகிறது குரான் 18:17.

கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் எந்தக்காலத்தைச் சேர்ந்தவை? கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எஸ்ஸீனர்களுடையவை என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த சாசனங்கள் ஈசாவின் காலத்தைச் சார்ந்தவை அல்ல, அதற்கும் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தயவை. ஆகவே அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதமாக,  இஞ்சீலாக இருக்கமுடியாது.  அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதம், அது குரானை ஒத்திருக்கிறது அதனால் தான் திருச்சபைகளும், கிருஸ்தவர்களும் அதை மறைக்கிறார்கள் என்று இஸ்லாமியவாதிகளின் பிரச்சாரத்தில் உண்மையில்லை.

அடுத்து ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது பின் ஏன் திருச்சபைகள் அதை மறைக்கவேண்டும்? இதில் தான் கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்களின் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது. என்னதான் திருச்சபைகள் உலகத்தின் பார்வையிலிருந்து அதை மறைக்கப் பாடுபட்டாலும் அவை வெளியே கசிந்தே இருக்கின்றன. ஈசாவின் அதாவது ஏசுவின் வாழ்வில் நடந்ததாக கூறப்படும் அனேக நிகழ்ச்சிகளும், அவரின் உரையாடல்களும் அவர் கூறிய எடுத்துக்காட்டுகளும் அந்த சாசனங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அது எப்படி? முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கப்போகும் ஒருவரின் செயல்களும் பேச்சுகளும் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னமே எப்படி எழுதி வைக்கப்பட்டிருக்க முடியும்? இங்கு தான் இதில் புத்தரின் பங்களிப்பு வருகிறது.

இங்கிலாந்து முதல் ஈராக் வரை நீண்டிருந்த பேரரசாகிய ரோமப் பேரரசின் பாலஸ்தீனப் பகுதியில் வாழ்ந்ததாக கருதப்படும் தெய்வத்திருமகனாக போற்றப்படும் ஏசு குறித்த வரலாற்றுத்தடங்கள் என்ன? அங்கு கிமு நான்கில் ஆட்சி புரிந்த ஜூலியஸ் சீசர், அவருக்குப்பின் அகஸ்டஸ் சீசர், கிமு மூன்றாம் நூற்றாண்டின் கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் என்று பலர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் புத்தர் (கிமு 563- 483) சந்திரகுப்த மௌரியர் (கிமு நான்காம் நூற்றாண்டு) அசோகன் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) போன்ற மன்னர்களுக்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. மன்னர்கள் மட்டுமல்ல. சாக்ரடீஸ் (கிமு 427- 347) அரிஸ்டாட்டில் (கிமு 384- 322) போன்ற தத்துவ அறிஞர்கள், ஈஸ்கிளீஸ் (கிமு 525 – 456) யூரிபிடஸ் (கிமு 480 – 406) ஆஸ்ரிடோபான்ஸ் (கிமு 445 – 385) போன்ற கிரேக எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புரட்சி வீரரான ஏசு குறித்த எந்தவித ஆதாரங்களும் கிடைக்காமல் போனதெப்படி?

ஏசு எனும் ஒருவர் வரலாற்றில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களான ரோமர்கள் யூதர்கள் ஆகியோரின் நூல்களான பிலாவியஸ் ஜோசபஸ் எழுதிய தி ஆன்டிகுடீஸ் ஆப் தி ஜெவ்ஸ்(The Antiquities of the Jews), யூதர்களின் சிறப்பைக் கூறும் டால்முட்(Talmud), பிளீனிதியங்கர் ரோமப் பேரரசன் டார்ஜானுக்கு எழுதிய கடிதம், டாஸிடஸ் எழுதிய அன்னல்ஸ் (Annals) போன்ற அனைத்தும் ஐயத்திற்கிடமானவை என வரலாற்றாசிரியர்களால் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றன.. எனவே ஏசு என்பவர் வரலாற்று மனிதரல்ல, மாறாக கற்பனை மனிதராகவே இருந்திருக்கிறார். இதை இன்னும் தெளிவதற்கு நாம் புத்தரிலிருந்து தொடங்க வேண்டும்.

புத்தரின் வாழ்வை விவரிக்கும் நூலகளான திரிபீடகங்கள், லலிதவிஸ்தாரம், தம்மபதம் போன்ற நூல்களில் கூறப்படும் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் ஏசுவின் வாழ்விலும் நிகழ்ந்திருப்பதை காணலாம்,

1) சித்தார்த்தனின் அன்னையின் பெயர் மாயா தேவி, ஏசுவின் அன்னை மேரி. இருவருமே ஆண் துணையின்றி குழந்தையை ஈன்றனர்.

2) சித்தார்த்தன் பிறந்ததும் மன்னன் பிம்பிசாரன் அக்குழந்தையை கொல்ல முயற்சித்தான். ஏசுவை ஏரோது மன்னன் கொல்ல முயற்சித்தான்.

3) ஏசுவின் மக்களுக்கான பணியில் சாத்தான் குறுக்கிடுவதைப்போல் புத்தரின் பணியில் மாரன் குறுக்கிடுகிறான்.

4) புத்தரின் சீடரான ஆனந்தர் மாதங்கி எனும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க அவளோ தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த என்னிடம் உயர்ந்த குலத்தைச்சார்ந்த நீங்கள் தண்ணீர் அருந்தலாமா எனக்கேட்க ஆனந்தர் பதிலாக நான் தண்ணீர்தான் கேட்டேன் குலம் கேட்கவில்லை என்று அவளிடம் தண்ணீர் பெற்று அருந்துகிறார். ஏசு ஒருமுறை ஒரு சமாரிய பெண்ணிடம் தண்ணீர் கேட்க அவளோ நீரோ யூதர் நான் சமாரியப் பெண் என்னிடம் தண்ணிர் கேட்கலாமா எனக்கேட்க , ஏசு பதிலாக நீ தண்ணீருடன் இருக்கிறாய் நான் தாகத்துடன் இருக்கிறேன் என்று தண்ணீர் வாங்கி அருந்துகிறார்.

5) புத்தர் ஞானோபதேசம் செய்ய காசி நகருக்கு செல்கிறார், அங்கு அவரது சொற்பொழிவைக்கேட்ட அவரின் எதிரி உட்பட நால்வர் சீடராக மாறுகிறார்கள். இதே கதை ஏசு வாழ்விலும் உண்டு ஒரே வித்தியாசம் காசி நகருக்கு பதிலாக கபர்னகூம்.

6) ஏசு உபதேசிக்கிறார், தன்னைப்போலவே எதிரிகளிடமும் நட்புக்கொள்ளவேண்டும்; புத்தர் உபதேசிக்கிறார், நம்முடைய எல்லாச்செயலும் நட்பும் தயவும் நிறம்பியதாய் இருக்கவேண்டும்.

7) தன்னுடன் சேருபவர்கள் சொத்து சுகங்களை துறந்து எளிமையாக வாழவேண்டும் என்பது புத்தரின் கட்டளை. புனிதப்பயணம் தொடங்கும் போது ஊன்றுகோல் அன்றி வேறு எதையும் எடுத்துச்செல்லக்கூடாது, இரண்டு உடைகள் உடுத்தக்கூடாது இது ஏசுவின் கட்டளை.

8) சாத்தானின் சூழ்ச்சி வலையிலிருந்து மீண்ட ஏசு கபர்னகூம் செல்கிறார். மாரனின் சோதனையிலிருந்து மீண்ட புத்தர் காசி செல்கிறார் (காசி கபர்னகூம் ஒற்றுமை காண்க)

9) புத்தர் கூறுகிறார் வானம் பூமியின் மீது இடிந்து விழுந்து இந்த உலகம் அழிந்து போகலாம், வலிமை மிகுந்த கடல் வற்றிப்போகலாம் ஆனந்தா என்னுடைய வாக்குகள் நிலைத்திருக்கும். கிருஸ்து கூறுகிறார் வானமும் பூமியும் அழிந்து போகலாம்  ஆனால் என்னுடைய வாக்கிற்கு அழிவு கிடையாது.

10) ஏசு இறந்தபின் மூன்றாம் நாள் மீண்டு வருகிறார். புத்தர் இறந்த மூன்றாம் நாள் அவரை அடக்கம் செய்த கல்லறையின் கதவு ஏதோஒரு சக்தியால் திடீரென திறக்கிறது.


புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள் புத்தர் இறந்து 130 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்களில் இடம்பெற்றிருக்கின்றன, அதேநேரம் ஏசு பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாக்ஸ்முல்லர் இவை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார் “புத்தரும் அவருடைய சீடர்களும் சொல்லிய மொழி நடைக்கும், கிருஸ்துவும் அவருடைய சீடரும் சொல்லிய மொழி நடைக்கும் பெரும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். புத்தமத நூல்களில் காணப்படுகின்ற சில உவமைகளும் கதைகளும் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்தது தானோ என்று ஐயம் தோன்றலாம், ஆனால் அவையெல்லாம் கிருஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை”

ஆக ஏசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்த ஒருவரல்ல என்பது உறுதியாகிறது. அடிமைகளின் எழுச்சியை அடக்குவதற்கு புத்த மதத்திலிருந்து உருவப்பட்ட கதைகளுடன் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து விளங்குகிறது. இது திருச்சபைகளுக்கும் தெரிந்து தான் இருந்திருக்கவேண்டும். அதனால் தான் அதை அம்பலப்படுத்தும் விதத்தில் கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச் சுருள்கள் என்றழைக்கப்படும் அந்த ஆவணங்களை மறைத்து விட்டனர். இதன்பின்னரும் இன்னொரு கேள்வி தொக்கி நிற்கிறது. இந்திய நேபாள எல்லையில் நிகழ்ந்த கதைகளும் நூல்களும் பாலஸ்தீனத்திற்கு எப்படி பரவியது? இதற்கும் வரலாற்றில் சான்றுகள் இருக்கின்றன.

கிமு 327ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து  தான் வென்ற நாடுகளிலிருந்து தத்துவ கலை சாத்திர நூல்களை தன்னுடன் எடுத்துசென்றான் என்பது வரலாறு. எகிப்தில் தான் உருவாகிய அலெக்ஸாண்டிரியா நகருக்கு இந்தியாவிலிருந்து புத்த பிக்குகளை அழைத்துச்சென்றது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி அசோகன் கலிங்கப்போரில் வென்று மனம்  திரும்பி புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அன்றைய உலகின் எகிப்து, பார்சீகம், ரோம் உட்பட எல்லாப் பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பிவைத்திருக்கிறான். இப்படி அனுப்பப்பட்ட புத்தமத தூதர்களின் கொள்கைகளால் கவரப்பட்ட குழுவினருக்குத்தான் எஸ்ஸீனர் என்று பெயர். இந்த எஸ்ஸீனர்களுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது, நாசரேயர்கள் என்பதுதான் அது.

ஏசு நாசரேத் எனும் ஊரில் பிறந்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் நாசரேத் எனும் ஊர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பழைய ஏற்பாடில் எந்த இடத்திலும் நாசரேத் எனும் ஊரைப்பற்றிய குறிப்பும் இல்லை. எனவே நாசரேயனாகிய கிருஸ்து எனும் பதம் நாசரேயர்கள் என்றழைக்கப்பட்ட புத்தக்கொள்கைகளால் கவரப்பட்ட குழுக்களையே குறிக்கும். எனவே பௌத்தக்கொள்கைகளைப் பற்றிய குறிப்பேடுகள் தான் கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள். ஏசு பொய் எனும் குட்டு உடைந்துவிடக்கூடதே என்று திருச்சபைகள் அதை மறைக்க; அதுவே குரானை உறுதிப்படுத்துவதாக இவர்கள் கதைக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் வழக்கமாக கேட்கும் கேள்வி ஒன்றிருக்கிறது. எல்லம் சரி இது எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு தெரிந்தது? இதற்கான பதிலும் அந்த குரான் வசனங்களிலேயே இருக்கிறது. குரான் 18:22 “இன்னும் அவர்கள் குறித்து இவர்கள் எவர்களிடமும் நீர் தீர்ப்பு கேட்கவும் வேண்டாம்” முகம்மதின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு இந்தக்கதை தெரிந்திருக்கிறது என்பதும், இது அவர்களிடம் இருந்துவரும் புராணக்கதை என்பதும் இந்த வசனத்திலிருந்தே விளங்குகிறது.

ஆக இவர்களின் அத்தாட்சிகளும் சான்றுகளும் எந்தவகைப் பட்டவை என்பது தெளிவாகிறதல்லவா. கேள்வரகில் எண்ணெய் வடிந்தால் என்று ஒரு பழமொழி சொல்வார்களே அது நினைவுக்கு வருகிறதா?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்


18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13.  கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9.  பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

கிரிக்கெட் விசிரியுடன் ஒரு உரையாடல்


இளைஞர்களையும், போக்குவதற்கு பொழுதுள்ளவர்களையும் இன்றைய பொழுதில் முழுமையாக ஆக்கிரமித்திருப்பது ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள். அனைத்துவகை செய்தி ஊடகங்களும் இது குறித்த செய்திகளை மக்கள் மறந்துவிடாதவாறு அவர்களுக்குள் திணித்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி திணிக்கப்படும் செய்திகளால் கிரிக்கெட் என்பது காற்றைப் போல், உணவைப்போல் இன்றியமையாததாகிவிட்ட ஒரு இளைஞனுடன் நடந்த உரையாடல் இது.

இந்த உரையாடலை தொடங்குமுன், இந்த உரையாடல் நடந்த களத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் தேவையானதாகும், அது இந்த உரையாடலின் பரிமாணத்தை உணர்த்த உதவும். சௌதி அரேபியா. இந்தியாவிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் சில மேல்மட்ட அதிகாரிகளுக்கு கனமான ஊதியமும், நிறைவான வசதிகளும் வாய்த்திருக்கலாம். ஆனால் கடைநிலை ஊழியர்களாக இங்கு பணிபுரியும் இந்தியர்களே அதிகம். அப்படி கடைநிலை ஊழியர்களாக இருக்கும் குறிப்பாக தமிழர்களும் குறிப்பிடத்தக்க அளவு பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் தங்கும் விடுதி. சனி முதல் வியாழன் வரை வேலை நாட்கள், வேலைநேரம் காலை எட்டிலிருந்து தொடங்கி மாலை நான்கு மணிவரை இடையில் ஒருமணிநேரம் மதிய உணவுக்காக இடைவேளை. சௌதியின் வேறுபல நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவு நல்ல நிலை. காலை ஆறுமணிக்கு எழுந்தால் காலைத்தேவைகளை முடித்து உணவாக ஒரு குப்புஸை (ஒருவகை ரொட்டி) கடித்துக்கொண்டு மதியத்திற்காக அடுக்குச்சட்டியில் (டிபன் கேரியர்) செய்து வைத்திருக்கும் உணவை எடுத்துக்கொண்டு ஏழுமணிக்குள் வந்தால் பேரூந்து கிடைக்கும், கொஞ்சம் தாமதமானாலும் அன்று விடுமுறை நாளாக எண்ணிக்கொள்ளவேண்டியது தான் சம்பளம் கிடைக்காது.

வேலை செய்யும் இடத்தில் நீண்ட வரிசையில் நின்று சோதனைகளை முடித்துக்கொண்டு உள்ளே சென்று எந்த நேரத்தில் அட்டையை அடித்துக்கொள்கிறோமோ (பஞ்சிங் கார்ட் சிஸ்டம்)அப்பொதிலிருந்து தான் நமது வேலை நேரம் தொடங்கும். எட்டு மணிக்குள் அடித்துவிட முடிந்தால் அன்று நமக்கு நல்ல நாள். பெரும்பாலானோருக்கு பத்து நிமிடம் வரை தாமதமாகிவிடும். திரும்பும் போதும் 4.10க்கு பேருந்து கிளம்பிவிடும் என்பதால் ஓரிரு நிமிடங்களுக்கு முன்னதாகவே அட்டை அடிக்கவேண்டியதிருக்கும், இவைகள் மொத்தமாக சேர்ந்து மாதக்கடைசியில் அரை நாளை விழுங்கியிருக்கும். மீண்டும் விடுதிக்கு வந்துசேர ஐந்து மணிக்கு மேலாகிவிடும்,. பின்னர் குளித்து முடித்து ஒரு தேனீரை போட்டு குடித்துவிட்டு, சமையலை தொடங்கினால் (இரவுக்கும் மறுநாள் மதியத்திற்கும்) இரவுச்சாப்பாட்டை முடிக்க ஒன்பதை தாண்டிவிடும். பின் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தை ஓடவிட்டு கட்டிலில் சாய்ந்தால் எப்போது தூங்கினோம் என்று அவர்களுக்கே தெரியாது. வெள்ளிக்கிழமை விடுப்பு என்பது ஒரு மகிழ்வான விடுதலை உணர்வை தரக்கூடிய ஒன்று. வாரத்தின் ஒவ்வொறு நாளும் வெள்ளிக்கிழமையை இலக்காகக் கொண்டே நகரும். வியாழன் இரவில் எல்லோரின் முகங்களும் சந்தோசத்தை பூசிக்கொண்டிருக்கும். பெரிய சத்தத்தில் திரைப்படப் பாடல்கள் ஒலிக்கும். ஒருபக்கம் இந்தி, மறுபக்கம் தமிழ், இடையில் மலையாளம், ஆங்கிலம் (பிலிப்பைனிகள்) என்று கலவையாய் பாடல்கள் ஒலிப்பது ஒரு தனி அனுபவமாக இருக்கும். வெள்ளி விடுமுறை என்றாலும் அறையை சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்றவைகள் தான் வெள்ளியின் பகலை நிறைத்திருக்கும். இப்படியான தருணத்தில் தான் ஐ பி எல் வந்தது.

முதலில் இந்த வித்தியாசம் வெளிப்படையாக தெரிந்தது குளியலறைகளில் தான். வரிசையாக கட்டிவிடப்பட்டிருக்கும் குளியலறைகளில் மாலை ஐந்து மணிக்கு மேல் ரகளையாக இருக்கும். முதலில் குளிப்பதற்கு போட்டியே நடக்கும். ஏனென்றால், முதலில் வேகமாக வரும் தண்ணீர் பின்னர் படிப்படியாக வேகம் குறைந்து சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போல் வரும். முதலில் நுழைபவர்கள் நேரம் எடுத்துக்கொள்ள வெளியில் இருப்பவர்களோ பொருமையிழந்து கதவை தட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருப்பர். ஆனால் திடீரென்று குளியலறைகள் வெறிச்சோடின. சாவகாசமாக ஆறுமணிக்கு வந்தாலும் ஆனந்தமாய் குளிக்க முடிந்தது. பின்னர் விசாரித்தபோதுதான் தெரிந்தது. எல்லோரும் வேலையை விட்டு வந்ததும் கிரிக்கெட்டின் முன் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியை வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. உழைத்துக்களைத்தவர்களுக்கு அவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு மாறுதல் தேவைதான் என்றாலும். அத்தியாவசியமான எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஒரு விளையாட்டு அனைத்தையும் விழுங்கிக் கொள்ள முடியுமென்றால் அது பொழுதுபோக்கா? இல்லை வேதனையா?

வயது இருபத்தைந்தை தாண்டியிருந்தாலும் தங்கைகளின் திருமணம் முடிந்த பிறகு தான் தனது திருமணம் என்பதில் உறுதியாக இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் அவன். எவ்வளவு கடினமான வேலை என்றாலும் தயங்காமல் செய்யக்கூடிய கடின உழைப்பாளி. ஓவர்டைம் வேலை என்றால் முதலில் கைதூக்கும் அளவுக்கு தேவையுள்ளவன். என் நண்பனான அவனும் தான் இந்த கிரிக்கெட் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்தான். இனி நானும் அவனும்.

நான்: ஒருவன் பந்து வீசுவதும், ஒருவன் மட்டையால் அடிப்பதும் இன்னும் சிலர் பந்தை தடுப்பதும் என்று சற்றேறக்குறைய ஒரே மாதிரியான காட்சிகளாகவே திரும்பத்திரும்ப வரும் இதில் அப்படி என்னதான் இருக்கிறது இதில்?

நண்பன்: எல்லாவற்றையும் உங்கள் கண்ணோட்டத்திலேயே பார்க்கக்கூடாது. தமிழ் நாடு விளையாடும் போது தமிழன் என்றமுறையில் அதை பார்ப்பது ஒரு உணர்வு. ஒரு பொழுது போக்கு. வேலை நேரம் என்றால் பார்க்கமுடியுமா? வேலை முடிந்து வந்து தானே பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ரிலாக்ஸ்.

நான்: இல்லை. நீங்கள் ஒரு படத்தை பார்ப்பதற்கும், வெறொரு நிகழ்சியை பார்ப்பதற்கும் கிரிக்கெட்டை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா?

நண்பன்: ஆமாம் இருக்கிறது ஒரு படம் பார்ப்பது பொழுது போக்கு மட்டும் ஆனால் கிரிக்கெட் அதோடு கொஞ்சம் உணர்வும் கலந்தது, நம்முடைய அணி ஆடும் போது நாமே ஆடுவது போன்று ஒரு உணர்வு.

நான்: இந்த நம்முடைய அணி என்ற உணர்வு எப்படி வந்தது? தமிழ்நாட்டு அணி அல்லது இந்திய அணி என்பதாலா? என்றால் இந்த உணர்வு விளையாடும் போது மட்டும் தானா? அல்லது மற்ற தருணங்களிலும் வருமா? அதுவும் கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் தானே இந்த உணர்வு வருகிறது மற்ற விளையாடுகளில் வருவதில்லையே

நண்பன்: மற்ற விளையாட்டுகள் இருந்தாலும் எல்லோராலும் விரும்பப்படுவது கிரிக்கெட் தான். என்னதான் மாநில வித்தியாசம் இருந்தாலும் கிரிக்கெட் என்றதும் எல்லோரும் ஒன்றாகி இந்தியா எனும் உணர்வு வருகின்றதல்லவா அது தான் கிரிக்கெட்டின் வெற்றி.

நான்: இந்த தேசிய உணர்வு விளையாடில் மட்டும் தானா? தேசியம் என்பது நாடு காடு மலை இதுமட்டுமா? அல்லது நாட்டிலுள்ள மக்களா? நாட்டிலுள்ள மக்கள் குறித்து வராத தேசிய உணர்வு கிரிக்கெட்டில் மட்டும் வருகிறது என்றால் அது மெய்யாகவே தேசிய உணர்வு தானா?

நண்பன்: யார் சொன்னது விளையாட்டில் மட்டும்தான் என்று? கார்கில் போர் நடந்த போது தமிழகம் தான் அதிகம் நிதி கொடுத்தது. வடமாநிலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து ஒரு பிலிப்பைனி தவறாக பேசியபோது சண்டையிடவில்லையா? இதையெல்லாம் என்னவென்று நினைக்கிறீர்கள் நீங்கள்?

நான்: இது என்ன மாதிரியான தேசிய உணர்வு? ரயில் விபத்து குறித்து அந்த பிலிப்பைனி என்ன மாதிரியான விமர்சனத்தை முன்வைத்தான்? இந்தியாவில் எதுவுமே சரியிருக்காது , புல்லட் ரயில் மாதிரியான வசதிகள் இல்லை, கடக்கும் பாதைகள் (லெவல் கிராசிங்) பாதுகாப்பற்று இருக்கும் என்று தானே. இதற்குத்தானே நீங்கள் பிலிப்பைன்ஸை விட இந்தியா முன்னேறிய நாடு என்று இந்தியாவின் வீரதீர பிரதாபங்களை எடுத்துவிட்டு சண்டையிட்டீர்கள். இதையே அந்த பிலிப்பைனி, மக்கள் மீது அக்கரையற்ற அரசுகள், பிலிப்பைன்ஸை போலவே ஊழல் மலிந்த அரசியல்வாதிகள், மக்களுக்கு சிறப்பான வசதிகளை, குறைந்தபட்ச குறைவற்ற சேவையை வழங்குவதில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளால் தான் இது போன்ற விபத்துகள் நடக்கின்றன என்று அவன் விமர்சனம் செய்திருந்தால் நீங்கள் சண்டையிட்டு இருப்பீர்களா? மாட்டீர்கள். ஆக உங்களின் தேசிய உணர்வு என்பது மக்களின் கோணத்திலிருந்தல்ல ஆள்பவர்களின் கோணத்திலிருந்து எழும் தேசிய உணர்வு. இந்த கிரிக்கெட்டும் அதே போன்ற ஒன்றுதான்.

நண்பன்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இதிலுமா அரசாங்கம் மக்கள் ஏழை பணக்காரன் என்று பிரித்துப்பார்ப்பது. எல்லோரும் தான் கிரிக்கெட் பார்க்கிறார்கள். அரசாங்கத்தில் வேலைபார்ப்பவர்கள் கிரிக்கெட் பார்ப்பதில்லையா? இந்தியா விளையாடுகிறது, தமிழ்நாடு விளையாடுகிறது என்றுதான் அவர்களும் பார்க்கிறார்கள். இதிலென்ன ஆள்பவர்கள் கோணம் மக்கள் கோணம்?

நான்: அப்படியில்லை. ஆள்பவர்களுக்கு எதிலெல்லாம் சாதமான அம்சங்கள் இருக்கிறதோ அதிலெல்லாம் தேசிய உணர்வு கிளறிவிடப்படும். ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோரும் அதை தேசிய உணர்வாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவார்கள். கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட்டிலிருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட முக்கால்பங்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை இந்த மூன்று நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அதனால் தான் இந்த விளையாட்டு பெருமிதமாக தேசிய ஆளுமை கொண்டதாக இருக்கிறது.

நண்பன்: இருக்கட்டுமே, அதனால் என்ன? பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கிறதே, அந்த வகையில் எடுத்துக்கொள்ளாலாமல்லவா?

நான்: நாம் எதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை நாம் தீர்மானிப்பதில்லை என்பதுதான் இதில் புரிந்துகொள்ள வேண்டியது. கிரிக்கெட் அளவுக்கு மற்ற விளையாட்டுகளை பற்றி பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறதா? அப்படி வந்தால் அந்த விளையாட்டை நீங்கள் தேசிய உணர்வுடன் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். இதிலாவது ஒன்றுபடுகிறோமே என்று இதை மேலோட்டமாக புரிந்து கொள்ளக்கூடாது. அவர்களுடைய நலன் தான் இதில் குறிக்கோள், நாம் எந்த விசயத்தில் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு லாபமோ அந்த விசயத்தில் நாம் சேர்ந்திருக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுவோம். பிரிந்திருப்பது லாபமென்றால் அந்த விசயத்தில் பிரிந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுவோம். இது தான் இங்கு எல்லா விசயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் உட்பட.

நண்பன்: அது எப்படி நான் கிரிக்கெட் பார்க்கவேண்டும் என்று யார் என்னை நிர்ப்பந்திக்க முடியும்? எனக்கு விருப்பமிருப்பதால் தான் பார்க்கிறேன். விருப்பமில்லாவிட்டால் பார்க்கமாட்டேன், அவ்வளவுதான்.

நான்: எது உங்களுடைய விருப்பம்? இரண்டு வாரமாக சி பிளாக்கில் ஏ சி வேலை செய்யவில்லை. கண்டுகொள்ளாமலிருக்கும் பராமரிப்புத்துறையில் போய் புகார்செய்வோம் என்று  எல்லோரையும் அழைத்தேன். நீங்களும் கூட வருவதாய் சொன்னீர்கள். ஆனால் வந்தது மூன்று பேர்தான். நீங்களோ தோற்றுப்போன ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு தோற்றுப்போன உணர்வுடன் டோனியை திட்டிக்கொண்டிருந்தீர்கள். எத்தனை பேர் சமைப்பதற்கு நேரமில்லாமல் மதியத்திலும் குப்புஸை சப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சமைப்பவர்கள் கூட ரசத்திற்கும் மோர்க்குளம்பிற்கும் மாறிவிட்டார்கள். நியாயமாக சொல்லுங்கள் சாப்பாட்டைவிட, ஏ சியை விட கிரிக்கெட் முக்கியமாகி விட்டதற்கு விருப்பம் மட்டும்தான் காரணம் என்கிறீர்களா?

நண்பன்: என்ன இருந்தாலும் எனக்கு விருப்பமில்லாவிட்டால் நான் பார்க்கமாட்டேன் அல்லவா?

நான்: உங்களுக்கு எப்படி இந்த விருப்பம் ஏற்பட்டது என்பதுதான் விசயம். எல்லா பத்திரிக்கைகளிலும் என்னென்ன தேதியில் என்ன நேரத்தில் எந்தெந்த அணிகள் ஆடுகின்றன என்ற விபரங்கள் மீண்டும் மீண்டும் வெளியிடப்படுகின்றன. எந்த அணிக்கு என்ன புள்ளிகள் என்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. செய்திகளில் முக்கிய செய்தியாக வருகிறது. இப்படித்தானே உங்களின் விருப்பங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விமர்சித்து கருத்துச்சொன்னால், உண்மையை சொன்னால் சிறைத்தண்டனை என்று சட்டமியற்றப்பட்டிருக்கிறது, அணுவிபத்து நடந்தால் அதுவரை லாபம் சம்பாதித்த முதலாளிகள் இழப்பீடு கொடுக்கவேண்டியதில்லை என்று சட்டம் வரவிருக்கிறது, பூமியிலுள்ள கனிமங்களை தனியாருக்கு கொடுக்கவேண்டுமென்பதற்காகவே அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்களை விரட்டியடிக்கிறார்கள். இவைகள் பற்றி பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் கிரிக்கெட்டைப்போல விரிவாக நிகழ்ச்சிகளை நடத்தியிருக்குமா? ஏன்? எது முக்கியம்? ஆக அவர்களுக்கு எதை மறைக்கவேண்டுமோ அதை மறைக்கிறார்கள், எதை வெளிப்படுத்த வேண்டுமோ அதை வெளிப்படுத்துகிறார்கள். சரியானதை விட சுலபமானதை செய்வதற்கு உங்களை பழக்கப்படுத்துகிறார்கள். நீங்கள் எதை செய்யவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்களோ, அதை சுலபமாக உங்களுக்கு கிடைக்கும்படி செய்கிறார்கள். இது தான் உங்களின் விருப்பமாக மாறுகிறது.

நண்பன்: சரிதான், இதற்கு நான் என்ன செய்யமுடியும்? நான் ஒருவன் மாறுவதால் என்ன ஆகப்போகிறது.

நான்: இதுதான். எல்லோரும் கூறும் சப்பைக்கட்டு இதுதான். நீங்கள் ஒருவர் பார்ப்பதால் டோனி பத்து ரான் அதிகம் அடித்துவிட முடியுமா? இல்லை பாலாஜி ஒரு விக்கெட் அதிகம் எடுத்துவிடமுடியுமா? இருந்தாலும் நீங்கள் பார்க்காமல் இருப்பதில்லையே. உங்களுக்கு பயன்படாத ஒன்றை பார்த்து உங்கள் நேரத்தை வீணக்குவதைவிட பயனுள்ள நல்ல விசயங்கள் எதையாவது தெரிந்து கொள்ளலாமே.

நண்பன்: !!!!!!!!!! (மௌனம்)

என் நண்பன் பதில் சொல்லமுடியாமல் அமைதியாய் இருந்தாலும், அவன் கண்களில் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வென்றால்தான் அரைஇறுதிக்குள் நுழைய முடியும். டோனியால் வெல்லமுடியுமா? எனும் கேள்வியே தொக்கி நிற்கிறது என்பதை நான் அறிவேன். ஆனாலும் மாற்றங்கள் மெதுவாகவேனும் வரும், வந்தே தீரும்.


தொடர்புடைய இடுகை

விடாமல் ஊட்டப்பட்டு வரும் கிரிக்கெட் போதை


மே நாளில் சூளுரைப்போம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


மே நாள்! தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை போராடி வென்ற நாள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய தொழிலாளி வர்க்கம் நாளொன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கவேண்டும். முதலாளியிடம் கோரிக்கை வைக்கவோ, சங்கம் வைக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. உழைப்பை விற்று உயிர் வாழலாம் அவ்வளவு தான்.

இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக 124 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ வீதியில் ஆயிரக்கணக்கில் வெகுண்டெழுந்தார்கள் தொழிலாளர்கள். அவர்களது போராட்டத்தை அடக்க துப்பாக்கி ஏந்திய படையை ஏவினார்கள் முதலாளிகள். இரத்தத்தையும் உயிரையும் சிந்தினார்கள் தொழிலாளர்கள். சிவந்தது சிகாகோ வீதி. அந்த சிவந்த மண்ணிலிருந்து மே நாளில் முளைத்ததுதான் 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்கிற உரிமை. அமெரிக்க வீதியை மட்டுமல்ல, அகில உலகையும் பற்றிக்கொண்டது அந்த போராட்டத் தீ. அதன் பின் சிகாகோ வெற்றி உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டுமொத்த உரிமையாக நிலைநாட்டப்பட்டது.

ஆனால் இன்றோ, பெற்ற உரிமைகள் அத்தனையும் இழந்து நிற்கிறது தொழிலாளர் வர்க்கம். கையில் செல்போன், கடன்வாங்கிக் கட்டிய வீடு, எந்நேரமும் பிடுங்கப்படலாம் என்கிற நிலையில் உள்ள இருசக்கர வாகனம் இவற்றையெல்லாம் காட்டி தொழிலாளர்வர்க்கம் முன்னேற்றம் அடைந்து விட்டதாக ஆளும் வர்க்கமும் பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களும் பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றன. முன்னேற்றம் எனும் மயக்கத்தில் உரிமை என்கிற உரிமை என்கிற உணர்வு மறக்கடிக்கப்படுகிறது.

உலகமயத்தின் இன்றைய விளைவாக 20 மணிநேரம் வரைகூட உழைக்க வேண்டியுள்ளது. சென்னை கோவை திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிருவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஆண் பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் சிறிநீர் கழிக்கக்கூடத் தடைவிதிக்கிறது முதலாளித்துவ அடக்குமுறை. கால்மணி நேரத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

நாடுமுழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பீகார், ஒரிஸ்ஸா, மேற்குவங்கம் போன்ற பிந்தங்கிய மாநிலத் தொழிலாளர்கள் ஓய்வு உறக்கம் இன்றி, ஓடிக்கொண்டிருக்கும் தானியங்கி எந்திரமாகவே மாற்றப்பட்டு விட்டார்கள்.

கொள்ளுப்பையை காட்டி குதிரையை ஓடவைப்பதைப் போல தாலியை காட்டி இளம் பெண்களின் உழைப்பையும், எதிர்காலத்தையும் உறிஞ்சும் ‘சுமங்கலித் திட்டம்’ இலட்சக்கணக்கான ஏழை இளம்பெண்களைக் கொத்தடிமைகளாய் பிணைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறது.

இப்படி, வேலைக்கும் சம்பளத்திற்கும், வாழ்க்கைக்கும் முதலாளிகளின் தயவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கூலி அடிமைகளாய் இன்று கோடிக்கணக்கில் தொழிலாளர்கள்.  உலகையே தனது வியர்வையால் கட்டியெழுப்பிய தொழிலாளி வர்க்கம், இன்று பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறது. விலை உயர்வுக்கேற்ற சம்பள உயர்வு, மருத்துவப்படி, போனஸ், ஓய்வூதியம், வாரிசுக்கு வேலை போன்று போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க சங்கம் அமைக்கக் கூட உரிமையில்லை. மொத்தத்தில் பெற்ற உரிமைகள் அனைத்தையும் சுனாமி போல் சுருட்டி 124 ஆண்டுகளுக்கு முந்திய நிலைக்கு இழுத்து தள்ளிவிட்டது முதலாளித்துவ பயங்கரவாதம்.

தொழிலாளர்களோ, புதிதாக எதையும் உரிமையாக கேட்கவில்லை. ஏற்கனவே போராடிப் பெற்ற உரிமைகளான சங்கம் கூடும் உரிமை, கோரிக்கைகளுக்காக போராடும் உரிமை இவற்றுக்காக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா உட்பட உலகம் முழுவதும் சங்கம் வைக்க தொழிலாளர்களுக்கு உரிமையில்லை. குறிப்பாக சென்னையில் உள்ள தென்கொரிய நாட்டு ஹூண்டாய் கம்பனியில் சி.ஐ.டி.யு சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் பு.ஜ.தொ.மு செயல்படும் புதுச்சேரி லியோஃபாஸ்ட்னர்ஸ், மெடிமிக்ஸ் பவர் சோப், சென்னை நெல்காஸ்ட், கோவை எஸ்.ஆர்.ஐ, உடுமலை சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் போன்ற கம்பனிகளில் சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. மேற்கூறிய கம்பனிகளில் சங்கம்  வைத்ததற்காகவே தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். மேலும் ஆலை மூடல் அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல், போலீஸை ஏவி பொய்வழக்கு- சிறைவைப்பு என அடுக்கடுக்காக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. தொழிலாளர்கள் உரிமை அனைத்தும் பறிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகள் மட்டுமல்ல, விவசாயிகள், மீனவர்கள், பழங்குடிகள், மாணவர்கள், வழக்குறைஞர்கள் என அனைத்து பிரிவினரின் உரிமைகளும் பரிக்கப்படுகிறது. விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்திவரும் விதைகளையும், விவசாயம் சார்ந்த அனுபவ அறிவையும் பயன்படுத்த தடை விதிக்கும் ‘தமிழ்நாடு வேளான்மன்ற சட்டம்’ எனும் கொடிய சட்டமும், அமெரிக்காவின் மான்சாண்டோ கம்பனியின் மரபணு மாற்று விதைகள் போன்றவற்றை எதிர்ப்போரை ஓர் ஆண்டு சிறையில் தள்ளவும், ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வகை செய்யும் ‘உயிரி தொழில் நுட்பவியல் ஒழுங்காற்று ஆணைய சட்டம்’ எனும் கருப்பு சட்டமும் மத்திய மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்டு விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

பன்னிரண்டு கடல் மைல்கள் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என சட்டமியற்றி மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு வழக்குறைஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாடலாம் என சட்டமியற்றி வழக்குறைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுகிறது.

மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பலகோடி மதிப்புள்ள கனிமவளங்களுக்கு பாதுகாப்பாய் இருந்துவருகிறார்கள் பழங்குடி மக்கள் போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு கம்பனிகள் அந்த தாதுப் பொருட்களையும் கனிம வளங்களையும் கொள்ளையடிக்க அப்பழங்குடி மக்கள் மீது ‘காட்டு வேட்டை’ எனும் பெயரில் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒரு லட்சம் துணை ராணுவ வீரர்களை ஏவி அம்மக்களின் வாழ்வுரிமையும் உயிரும் பறிக்கப்படுகிறது.

தங்களின் வாழ்வுரிமை பறிப்புக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் தனித்தனியாக போராடுகின்றனர். போராடும் அம்மக்கள் மீது போலீஸ் மற்றும் ராணுவத்தை ஏவி கொடூரமான யுத்தம் நடத்தப்படுகிறது. அதாவது பன்னாட்டு முதலாளிகள் நம் விவசாயத்தையும், விளை நிலங்களையும் அபகரித்துக் கொள்ளவும், நமது கடல் வளங்களை அள்ளிச் செல்லவும், காடு மற்றும் கனிம வளங்களை கொள்ளையடிக்கவும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது மத்திய மாநில அரசுகள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடினால் அந்த மக்கள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்றவற்றின் உத்தரவுப்படியே மத்திய மாநில அரசுகளால் நிறைவேற்றப்படுகிறது.

மக்களின் வாழ்வுரிமை பறிப்பும் தொழிலாளர்கள் மற்றூம் மக்கள் மீதான தாக்குதல்களும் ‘தேசத்தின் வளர்ச்சி’ என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக எந்த ஓட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் மூச்சு விடுவது இல்லை. காரணம் கொள்ளயடிக்கும் பணத்தில் ஓட்டுக் கட்சிகளுக்கும் ஊடக முதலாளிகளுக்கும் வாய்க்கட்டுப் போடுகின்றன பன்னாட்டு கம்பனிகள்.

தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறிப்பது, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் அவர்களுக்கு தரகு வேலை பார்க்கும் உள்நாட்டு முதலாளிகளின் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை மாற்றுவது, மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பது, எதிர்த்து போராடும் மக்களை வாழ்விடங்களிலிருந்தே விரட்டியடிப்பது, நாட்டையே பன்னாட்டு கம்பனிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது, இதைத்தான் மறுகாலனியாக்கம் என்கிறோம். வாழ்வுரிமையை இழந்து போராடும் மக்கள், நாடு மறுகாலனியாகிறது – நமது பிரச்சனைகளுக்கு அதுதான் காரணம் எனப் புரிந்து கொள்ளவில்லை. அவ்வாறு மக்களுக்கு புரியவைப்பதும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்டுவதும் தொழிலாளி வர்க்கத்தின் கடமை. ஏனெனில் தனது நலனுக்காக மட்டுமின்றி பிற வர்க்கங்களின் நலனுக்காகவும் போராடும் மரபை கொண்டது தொழிலாளி வர்க்கம்.

அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்து நாட்டையே அடிமையாக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக போலீஸ், ராணுவம், நீதிமன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம், ஓட்டுக்கட்சிகள், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நிற்கின்றன. ஆனால் உரிமைகளை இழந்து நிற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கோ, தங்களைப்போல் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு போராடும் பிற மக்களை தங்களுடன் இணைத்துக்கொள்வதும், சிதறிக்கிடக்கும் தொழிலாளர்களை அமைப்பாக அணிதிரட்டுவதையும் தவிர வேறு வழியில்லை. ஒற்றுமை உணர்வும் ஓங்கிய கைகளும் தோற்றதாக வரலாறு இல்லை. தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!

மே நாள் சூளுரை!

தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்!

போராடிப் பெற்ற உரிமைகளை மீட்டெடுப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

போலி ஜனநாயக மயக்கத்தை விட்டொழிப்போம்!

நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம்!

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு திரண்டெழுவோம்!

நிகழ்ச்சி நிரல்:

மே 1 – 2010

பேரணி துவங்கும் நேரம்: மாலை 4 மணி
இடம்: பாக்கமுடையான் பட்டு,
கொக்குப்பாலம், புதுச்சேரி.

பேரணி துவக்கிவைப்பவர்:
தோழர் காதர் பாட்ஷா, அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி
சிங்காரவேலர் சிலை, ரோடியர் மில், புதுச்சேரி

தலைமை:
தோழர் அ. முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

“போராட்டக் களத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”
நேருரைகள்: கோவை, ஓசூர், புதுச்சேரி தோழர்கள்

உலகமயமாக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறையும்:
தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

சிறப்புரை:


முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!


தோழர் காளியப்பன், இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

புரட்சிகரக் கலை நிகழ்ச்சி


மையக்கலைக்குழு, ம.க.இ.க., தமிழ்நாடு

__________________________________________________

தேசியவாத காலகட்டம் ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௯

மாவோ தற்போது ஒரு மார்க்சியவாதியாக இருந்தார் ஆனால் ஒரு கம்யூனிஸ்டாக ஆகவில்லை. ஏனென்றால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் சீனாவில் இருக்கவில்லை. பீக்கிங்கில் வாழ்ந்த ரஷ்யர்கள் மூலமாக, சென் ரூ கியூ அவர்களும், லி ரா சாவ் அவர்களும் கம்யூனிஸ்ட் சர்வதேசியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 1920ஆம் ஆண்டு வசந்த காலத்தின் போதுதான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உத்தியோக பிரதிநிதிகிரி கோரி வோய்ட்டின்ஸ்கி பீக்கிங் வந்து சேர்ந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான யாங் மிங் சாய் அவர்களும் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்ற வந்திருந்தார். அவர்கள் லி ரா சாவ் அவர்களுடனும் பெரும்பாலும் லீயுனுடைய மார்க்சிய கோட்பாட்டு ஆய்வுச்சங்கத்தின் உறுப்பினர்களுடனும்  கலந்துரையாடினர். அதே வருடத்தின் மூன்றாவது அகிலத்தின் டச்சுப் பிரதிநிதியும், உற்சாகமும் இணங்குவிக்கும் திறன் உடையவருமான ஜான் ஹென்ட்ரிக்கன்நீவ்லியட் (சீன மொழியில் ரி சான் குவோ சி) ஷாங்காய்க்கு வந்திருந்தார். அங்குள்ள தீவிர சீனக் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளவே அவர் வந்திருந்தார். 1920 மே மாதத்தில் சென் அவர்கள் தான் ஒரு மத்திய கம்யூனிசஸ்ட் குழுவை ஸ்தாபித்த ஒரு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.  இதன் சில உறுப்பினர்கள் (பீக்கிங்கில் உள்ள லி ராவ் சா குழு சென் அவர்களால் காண்டானில் அமைக்கப்பட்ட மற்றொரு குழு, ஷாண்டுங், ஹூப்பேயிலுள்ள குழுக்கள், ஹூனானில் உள்ள மாவோவின் குழு) அடுத்த வருடம் ஷாங்காயில் இடம்பெற்ற மாநாட்டின் அமைப்பாளர்கள் ஆகினார்கள். இவர்கள் வோய்ட்டின்ஸ்கியின் உதவியுடன் முதலாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரசை கூட்டினார்கள்.

இதை 1937ல் நினைவு கூரும்போது வயதில் இளமையாக இருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்ததோடு உலகத்திலேயே ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பலம்மிக்க தனக்கென்று சொந்த ராணுவத்தை கொண்டிருந்த ஒரேஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாகத்தான் இருந்தது.

மாவோ தன்னுடைய கதையை தொடர்ந்தார்,

1921 மே மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்குரார்பணக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் ஷாங்காய் சென்றேன். இதன் அங்குரார்ப்பணத்தில் முன்னோடிக்கடமைகள் சென் ரூ சியூ அவர்களாலும் லி ரா சாவ் அவர்களாலும் செய்யப்பட்டன. இந்த இருவருமே சீனாவின் மிகச்சிறந்த புத்திஜீவி தலைவர்களுள் இருவராக இருந்தனர். லி ரா சாவ்வின் கீழ் பீக்கிங் தேசிய பல்கலைக்கழகத்தின் உதவி நூலகராக நான் விரைவாக மார்க்க்சியத்தி நோக்கி விருத்தியடைந்தேன். இந்தப் பாதையை நோக்கிய எனது ஆர்வத்திற்கு சென் ரூ சியூ அவர்களும் ஊன்றுகோலாக இருந்தார். ஷாங்காய்க்கான எனது இரண்டாவது பயணத்தின் போது நான் படித்திருந்த மார்க்க்சிய புத்தகங்களைப்பற்றி சென்னுடன் கலந்துரையாடியிருந்தேன். நம்பிக்கை பற்றிய சென்னின் சொந்த விளக்கங்கள் எனது வாழ்க்கையின் மிகவும் தீர்க்கமான அந்த காலகட்டத்தில் என்னில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

ஷாங்காயில் இடம்பெற அந்த வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்திலே (கட்சியின் முதலாவது காங்கிரஸ்) என்னைவிட மற்றுமொரு ஹூனான்வாசியே இருந்தார் (மாவோவின் பழைய நண்பரான ஹோஷ் ஹெங். இவர் 1935ல் கோமிண்டாங்கினால் கொல்லப்பட்டார்) அதில் பங்குபற்றிய ஏனையோர் பின்வருமாறு, சாங் குவோ ராவ் (தற்போது செஞ்சீன ராணுவத்தின் ராணூவ கவுன்சில் உதவித்தலைவர்) பாவ் ஹூய் ஷெங், ஷூ பூ ஷாய் ஆகியவர்களாவர். எல்லாமாக எங்களில் 12 பேர் இருந்தோம். ஷாங்காயில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் மத்தியக்குழுவில் இருந்தோர் விபரம் பின்வருமாறு, சென் ரூ சியூ, சாங் குவோ ராவ், சென் குங் போ, ஷீ செங் ரூங் (தற்போது நாங்கிங்கில் அதிகாரி) சுன் யுவான் லு, லி ஹான் சுன் (1972ல் வூ ஹானில் கட்சியின் முதலாவது மாகாணக்கிளை அமைக்கப்பட்டது. அதில் நானும் உறுப்பினரானேன். ஏனைய மாகானங்களிலும் நகரங்களிலும் ஸ்தாபனங்கள் நிறுவப்பட்டன. ஹிப்பே உறுப்பினர்களில் ருங் பி வூ – தற்போது பாவோ அன்னில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிப் பாடசாலையின் அதிபர் – சு பாய் ஹாவ், ஷி யங் ஆகியோர் இருந்தனர். கட்சியின் சென்ஷி கிளையில் காவோ சுங் யூ(காவ் காங்)மேலும் பல மாணவர் தலைவர்களும் இருந்தனர். கட்சியின் பீக்கிங் கிளையில் வீ ரா ராவோ(ரெங் சுங் சியா 1934ல் சியாங்காய் ஷேக்கால் கொல்லப்பட்டார்) லோ சுங் லன், லியூ சென் ஜிங் (தற்போது ட்ராட்ஸ்கியவாதி) வேறுபலர் இருந்தனர். காண்டன் கிளையில் லின் போ சு தற்போது சீன சோவியத் அரசில் நிதி ஆணையாளராக உள்ளார். பெங் பாய் ஆகியோர் இருந்தனர். வாங் சுன் மெய் மற்றும் ரெங் என் மிங் ஆகியோர் ஷாண்டுங் கட்சிக் கிளை ஸ்தாபன உறுப்பினர்களில் அடங்குவர்.

இதனிடையே செயலாளராக இருந்த ஹூனான் கம்யூனிஸ்ட் கிளை 1922 மே மத அளவில் ஏற்கனவே சுரங்கத்தொழிலாளர்கள், ரயில்வே ஊழியர்கள், மாநகரசபை வேலையாட்கள், அச்சக ஊழியர்கள், அரச நாணயம் அச்சிடும் தொழிலாளர்கள் ஆகியோரிடையே 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உருவாக்கியிருந்தனர். அந்த வருடம் குளிர் காலத்தில் ஒரு உத்வேகமான தொழிலாளர் இயக்கம் உருவாகியது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் பிரதானமாக மாணவர்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் தான் கூடுதலாக நடத்தப்பட்டன. விவசாயிகளிடையே மிகக் குறைவான அளவிலேயே நடாடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான பெரிய சுரங்கங்களும், கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் ஸ்தாபனமயப் படுத்தப்பட்டனர். மாணவர் தொழிலாளர் ஆகிய இருதரப்பு முனைகளிலும் ஏராளமான போராட்டங்கள் இடம்பெற்றன. 1922 குளிர்காலத்தில் ஹூனானின் ஆளூனரான சாவோ கெங் ரி, ஹூ வாங் ஐ, பாங் யுவான் சிங் என்ற இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார். இதன் விளைவாக அவருக்கெதிராக பரவலான கிளர்ச்சி ஏற்பட்டது. கொலை செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களில் ஒருவரான ஹூ வாங் ஐ ஒரு வலதுசாரி தொழிற்சங்கத்தின் தலைவராவார்.


மாகாண கோமிண்டாங் கட்சியிலும் மாவோ ஒரு முன்னணி உறுப்பினராக இருந்தார். அடோல்ஃப் ஜோபேயுடன் சுன் யாட் சென் ஏற்படுத்திக்கொண்ட இருகட்சிக் கூட்டணி ஒப்பந்தத்தின் பின்பு சுன் யாட் சென் கோமிண்டாங் கட்சியினுள் கம்யூனிச எதிர்ப்பு சக்திகளை ரகசியமாக அகற்றத்தொடங்கினார். கட்சியை ஹூனானில் மறு சீரமைப்பதற்கு சுன் யாட் சென் தனது பழைய சகபாடி லின் த்சு ஹான், மா சே துங், சியாசி ஆகியோருக்கு அதிகாரம் அளித்தார். 1923 ஜனவரி சாரிகளை ஒரு தீவிரவாத கருவியாக  அவர்கள் மாற்றியிருந்தனர்.

தொழிற்சங்கங்களில் அராஜகநாதிகளும் செல்வக்குப் பெற்றிருந்தனர். அப்போது இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும், அனைத்து ஹூனான் தொழிலாளர் பிரதிநிதிகள் சபை என்ற அமைப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனாலும் அவர்களுடன் நாங்கள் சமரச உடன்பாடு கொண்டிருந்தோம். அத்தொடு பேச்சுவார்த்தை மூலமாக அவர்கள் எடுக்கவிருந்த அவசரமான, பயனற்ற நடவடிக்கைகள் பலவற்றை தடுத்தி நிறுத்தினோம். சாங் கெங் ரிக்கு எதிரான இயக்கத்தை ஒழுங்கு செய்து உதவ நான் ஷாங்காய்க்கு அனுப்பப்பட்டேன். 1922 குளிர்காலத்தில் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் கூட்டம் ஷாங்காயில் கூட்டப்பட்டது. அதில் கலந்து கொள்ள நான் விரும்பினேன். இருப்பினும் அந்தக்கூட்டத்தில் நான் பங்குபற்ற இயலாமல் போய்விட்டது. நான் ஹூனானுக்கு திரும்பி தொழிற்சங்கங்களுக்கு இடையேயான எனது வேலையில் தீவிரமாக ஈடுபட்டென். அந்த வருடம் வசந்த காலத்தில், மேம்பாடான ஊதியத்திற்காகவும், மேம்பாடான தொழிற்கௌரவத்திற்காகவும் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க வேண்டுமென்று பல வேலை நிருத்தங்கள் இடம்பெற்றன. அவற்றில் பெரும்பாலானவை வெற்றிபெற்றன. மே 1ம் திகதி ஹூனானில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சீனாவில் தொழிலாளர் இயக்கத்தின் முன்னெப்போதும் இல்லாத பலத்திற்கு இந்த சாதனை கட்டியம் கூறியது.

1923 மே மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் காண்டனில் நடைபெற்றது. கோமிண்டாங் கட்சியுடன் சேருவது, அதனுடன் ஒத்துழைப்பது, அத்தோடு வடபகுதி ராணுவத்திற்கு எதிராகஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்ற வரலாற்றுப் புகழ்மிக்க தீர்மானம் இங்கு தான் எடுக்கப்பட்டது. நான் காண்டானுக்கு சென்று கோமிண்டாங் கட்சியின் முதலாவது தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டேன். மார்ச் மாதத்தில் நான் ஷாங்காய் திரும்பி கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்றுக்குழு (மத்தியக் குழு)விலும் கோமிண்டாங் கட்சியின் நிறைவேற்றுக்குழுவிலும் எனது கடமையை ஒருங்கிணைந்த முறையில் செய்தேன்.  இந்தக்குழுவின் அப்போதைய ஏனைய உறுப்பினர்களில் வாங் சிங் வெய் (பின்னாளின் நாங்கிங்கின் பிரதமர்) ஹூஜ் ஹான் மின் ஆகியோர் அடங்குவர். கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியில் மேற்குறிப்பிட்டவர்களுடன் இணைந்து நான் செயற்பட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியினரும் தேசியவாத கட்சியினரும் 1925ல் முதலாவது ஷாங்காய் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தை உருவாக்கினார்கள். இதன் விளைவாக மே 30ம் திகதி ஆர்ப்பாட்டம் ஏற்ப்பட்டது. அன்னிய நாட்டில் பிராந்தியங்களை ஏற்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவருமாறும், ஷாங்காய் சர்வதேசக் குடியிருப்பின் ஆளுமையை சீனாவுக்கு திருப்பித்தருமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது பிரித்தானிய குடியிருப்பு காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டு பலரை கொன்றனர். பிரித்தானிய பொருட்களை பகிஷ்கரிக்கும் நடைமுறைக்கு இது வழிகோலியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னணி அமைப்பாளர்கள் லியூ ஷா சி, சென் யுன் ஆகியோராவர்.

இந் நூலின் முந்திய பகுதிகள்


பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

புரட்சிக்கு முன்னோடி ௧

புரட்சிக்கு முன்னோடி ௨

பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை

விலைவாசி உயர்வால் ஏழைகள் உணவுத்தேவையை சுருக்கிக்கொள்ளும் நிலையில் பஞ்சாப் அரசின் திறந்தவெளி கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள கோதுமை தண்ணீரில் ஊறி பாழாகிவருகிறது

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

“இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது” என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் என அவர் குறிப்பிடுவது நமக்குத்தெரிந்த குப்பன், சுப்பன் போன்ற சிறு நடுத்தர விவசாயிகளையோ, விவசாய கூலித்தொழிலாளர்களையோ குறிக்கவில்லை. ஏற்றுமதியை குறிவைத்து விவசாயத்தில் குதித்துள்ள புதுப் பணக்கார விவசாயிகளையும்; ஒப்பந்த விவசாயத்திலும், விவசாய விளைபொருட்கள் கொள்முதலிலும் இறங்கியுள்ள ஐடிசி, ரிலையன்ஸ், பிர்லா, பெப்சி போன்ற முதலாளித்துவ நிறுவனங்களையும் குறிப்பிடுகிறார்.

விவசாய உற்பத்தியை பெருக்குவதற்காக இந்த பட்ஜெட்டில் நான்கு அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிக்கு வழங்கப்படும் வங்கிக்கடன் 3.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் என்பது அத்திட்டத்திலுள்ள கவச்சிகரமான அம்சமாகும். 2000 ஆம் ஆண்டு தொடங்கி 2006 ஆம் ஆண்டு முடிய பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள விவசாயக்கடன் பற்றி நடத்தப்பட்டுள்ள ஆய்வில் 25000 ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கை இந்த ஆறு ஆண்டுகளில் சரிபாதியாக குறைந்துவிட்டதாகவும், அதே  பொழுதில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு 10 கோடி 20 கோடி என வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் இந்த 3.75 லட்சம் கோடி ரூபாய் கடனை சுருட்டப்போகும் விவசாயிகள் யாராக இருப்பார்கள் என்பது எளிதாக விளங்கிவிடும்.

விவசாய விளை பொருட்கள் அழுகி பாழாவதைக் குறைக்கவேண்டுமென்றால், அரசே கிராமப்புறங்களில் குளிர்பதனக் கிடங்குகளை கட்டித்தரவேண்டும். ஆனால் குளிர்பதன கிடங்குகளை கட்டிக்கொள்ள கடன் தரப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். வீடு தேடி வந்து கடன் கொடுத்தால் கூட இந்தக்கடனை சாதாரண விவசாயிகள் வாங்கிக்கொள்வார்களா? காய்கறிகளையும் பழங்களையும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்துவரும், ரிலையன்ஸ், கோத்ரேஜ், ஐடிசி, ஹெர்டேஜ், நீல்கிரீஸ் முதலாளிகள் தான் விவசாயிகள் என்ற போர்வையில் இந்தக் கடனை அனுபவிப்பார்கள்.

சென்னையில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும் மன்மோகன் சிங்கின் செல்லப் பிள்ளைகள்


இது மட்டுமின்றி, விவசாய விளை பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் பொருத்தப்படும் குளிர்பதன இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு  முழுச் சுங்க வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச்சலுகையால் பலனடையப்போவது அம்பானியா? அல்லது வாங்கிய கந்து வட்டிக்கடனை அடைக்கமுடியாமல் தூக்குக்கயிற்றை தேடிக்கொண்டிருக்கும் கிராமத்து விவசாயியா?

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகவும் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். நெல்லையும் கோதுமையையும் பயிரிடும் விவசாயி இனி அதை மாவாக்கி, இட்லியாக்கி, ரொட்டியாக்கி விற்கவேண்டும் என நிதியமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அப்படியென்றால் கரும்பு விவசாயி இனி சாராயம் தான் காய்ச்ச வெண்டும். இந்த அறிவிப்பால் விவசாயிகளை விட உருளைக்கிழங்கு சிப்ஸ், குர்குரே போன்ற நொருக்குத்தீனிகளைத் தயாரித்து விற்கும் முதலாளிகள் தான் மகிழ்ச்சி கொள்வார்கள்.

விவசாயிகள் மட்டுமல்ல, பிற அடித்தட்டு மக்களை வாட்டும் பிரச்சனைகள் பற்றியும் இந்த பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மேன்மக்கள் தமக்குப் பிடித்தமான கோக்கையும், பெப்சியையும், பர்கரையும், பிற ஆடம்பர நுகர்வுப்பொருட்களையும் வாங்கமுடியாமல் திண்டாடி நின்றுவிடக்கூடாதே எனக் கரிசனம் காட்டியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.

வருடத்திற்கு மூன்று லட்ச ரூபாய்க்கு மேல சம்பாதிக்கும் நடுத்தர / மேல்தட்டு வர்க்கத்தினர் கட்டிவரும் வருமான வரியில் சலுகைகளை அளித்து அவர்களின் ‘பணத்திண்டாட்டத்தை’ தீர்த்து வைத்திருக்கிறார் நிதியமைச்சர். இதன்படி வருடத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்வரை சம்பாதிப்பவர்களுக்கு 20,600 ரூபாய்வரை வரிச்சலுகை கிடைக்கும்; 8 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 51,500 ரூபாய்வரை வரிச்சலுகை கிடைக்கும். இப்படியாக இந்த பட்ஜெட்டில் வருமான வரி கட்டும் கணவான்களுக்கு 26,000 கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்பட்டு அந்தப்பணம் அவர்களின் கோட்டுப் பாக்கெட்டுகளில் திணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த பணத்தைக்கொண்டு தமக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள், பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள் அதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக்கூறி,இந்தச்சலுகை நியாயப்படுத்தப் படுகிறது.

மேல்தட்டு மக்களின் நுகர்விற்காக 26,000 கோடி ரூபாயை மானியமாக தூக்கிக் கொடுத்திருக்கும் மைய அரசு, அடித்தட்டு மக்களை விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க இந்த பட்ஜெட்டில் அளித்திருக்கும் சலுகை என்ன தெரியுமா? உணவு மானிய வெட்டு.

உணவுப் பொருட்களின் விலைகள் விசம்போல் ஏறுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் பொது வினியோகத்திட்டத்தை பலப்படுத்த வேண்டும். அதாவது, அரிசி கோதுமை மட்டுமின்றி மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் ரேசன் கடைகளின் மூலம் வழங்குவதோடு, அவற்றின் அளவையும் அதிகரிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு பட்ஜெட்டில் உணவு மானியத்தை அதிகரித்திருக்க வெண்டும். ஆனால் நிதியமைச்சரோ, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உணவு மானியத்திற்கு 500 கோடி ரூபாய் குறைவாகத்தான் நிதி ஒதுக்கியிருக்கிறார். மேலும் தனது கையிருப்பிலுள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மறுத்திருப்பதோடு, ரேசன் கடைகளின் மூலம் வழங்கப்படும் அரிசி கோதுமைகளின் விலைகளை அதிகரிக்கவும் திட்டம் போட்டுவருகிறது மைய அரசு.

மன்மோகன் சோனிய கும்பலின் வக்கிரத்திற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம். பெட்ரோல் டீசல் விலைகளையும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதி விதிக்கப்படும் கலால் வரிகளையும் உயர்த்தியிருப்பதன் மூலம் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்க்கு மேல் மக்களிடமிருந்து பரித்துக்கொண்டுள்ளது, அக்கும்பல். வருமான வரி கட்டும் கணவான்களுக்கு 26,000 கோடி ரூபாயை மானியமாக வாரிக்கொடுக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவெண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆனால் மன்மோகன் சிங் கும்பலோ இந்த உயர்வின் மூலம் இரண்டு மாங்காய்களை வீழ்த்திவிட்டது. ஒருபுறம், அவர்களுக்கு மானியம் கொடுத்து அவர்களின் மனங்களை குளிர வைத்துள்ள மைய அரசு அதனால் தமக்கு ஏற்படும் வருமான இழப்பை, பெட்ரோல் டீசல் விலைஉயர்வைக்கொண்டு கோடிக்கணக்கான மக்கள் மீது சுமத்தி ஈடு கட்டிவிட்டது. இது மட்டுமின்றி, இந்த பட்ஜெட்டில் 46,000 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுக வரிகளும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.


தனிப்பட்ட கணவான்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச்சலுகை ஒரு புறமிருக்க, தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகளை கேட்டால் நாம் அதிர்ச்சியில் உறைந்தே போய்விடுவோம்.  இந்த பட்ஜெட்டில் முதலாளித்துவ நிருவனங்களின் மீது விதிக்கப்படும் கம்பனிவரி உள்ளிட்ட நேரடியான வரி விதிப்புகளில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளின்  மூலம் 80,000 கோடி ரூபாய் முதலாளிகளுக்கு மானியமாக வாரிக்கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள சலுகைகையை விட 14,000 கோடி ரூபாய் அதிகம்; அதற்கு முந்தைய ஆண்டு அளிக்கப்பட்ட சலுகையை விட 18,000 கோடி ரூபாய் அதிகம். அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அளீக்கப்பட்டுள்ள நேரடி வரிச்சலுகை மட்டும் 2,08,00 கோடி ரூபாய்.

மானிய விலையில் டீசல் வழங்ககோரி மீனவர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத் துறைமுகத்தில் நிறுத்தப்படுள்ள படகுகள்


மேலும், இந்த பட்ஜெட்டில் கலால் வரி சுங்கவரி விதிப்புகளில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் மூலம் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் லாபம் மட்டும் 4,19,786 கோடி ரூபாய். இதோடு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நேரடி வரிச்சலுகையையும் சேர்த்து கணக்கிட்டால், இந்த ஆண்டு பட்ஜெட்டின் மூலம் மட்டும் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மானியம் 4,99,786 கோடி ரூபாய். நாளொன்றுக்கு வெறும் இருபது ரூபாய் கூலியை பெற்று வாழ்க்கையை ஓட்டிவரும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் அவர்களது எஜமானர்களான பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு நாளூம் 1,369 கோடி ரூபாய் மானியமாக வாரிக்கொடுக்கப்படுகிறது. இதைவிட அறுவெருக்கத்தக்க வக்கிரம் வெறெதுவும் இருக்க முடியுமா?

அதேசமயம், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒகுக்குவதில் இந்தளவிற்குத் தாராளமாக நடந்து கொள்ளவில்லை பிரணாப் முகர்ஜி. இத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஏன் ஒதுக்கவில்லை எனக் கேட்டால், பற்றாக்குறை பெருத்துவிடும் என பொருளாதார நிபுணர்களும், முதலாளித்துவ பத்திரிக்கைகளும் கூப்பாடு போடுகின்றன. தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும், மேல்தட்டு வர்க்கத்திற்கும் 5 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் மானியமாக வழங்கப்பட்டுள்ளதை கண்டு கொள்ள மறுக்கும் இக்கும்பல், உணவிற்கும், பெட்ரோலுக்கும், மண்ணெண்ணைக்கும் வழங்கும் ‘மானியத்தை’ நிறுத்தச் சொல்கிறது. இந்த ஓரவஞ்சணையைவிட வெறென்ன வக்கிரம் இருந்துவிட முடியும்?

இந்தப் பணச்சலுகைகள் ஒருபுறமிருக்க 40,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பதற்கும், நிதி நிருவனங்கள் என்ற பெயரில் பிளெடு கம்பனிகளை நடத்திவரும் முதலாளிகள்வர்த்தக வங்கிகளை திறந்துகொள்ளவும் பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் நெருங்கிவிட்டாலே, அது ஏதோ நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடும் மந்திரக்கோல் போல, அதுபற்றி வீணான பரபரப்பையும் கவர்ச்சியையும் முதலாளித்துவ ஊடகங்களும் நிபுணர்களும் வலிந்து உருவாக்கி வருகிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர்.

நாட்டின் வளங்களையும் வருமானத்தையும் முதலாளித்துவ கும்பலுக்கு மடைமாற்றிவிடும் சட்டப்பூர்வ ஏற்பாடு தான் பட்ஜெட். தனியார்மயம் தாராளமயம் திணிக்கப்பட்ட பிறகு, கடந்த 19 ஆண்டுகளில் போடப்பட்டுள்ள பட்ஜெட்டுகளை ஒரு புரட்டு புரட்டினாலே இந்த உண்மை பச்சையாக தெரியும். சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவதால் நரி பரியாகி விடாது. அப்படிப்பட்ட கவர்ச்சிகரமான பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி ஏன் தயாரிக்கவில்லை என்பது தான் போலி கம்யூனிஸ்டுகளின் அங்கலாய்ப்பு.


புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010 இதழிலிருந்து

நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 18

குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல். நூஹ் என்பவர் மக்களை திருத்துவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவர். இவரின் போதனைகளை மக்கள் ஏற்க மறுக்கவே அவர்களை அளித்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறார், இறைவனும் கருணை உள்ளங்கொண்டு நூஹையும் அவரின் சீடர்களையும் ஒரு கப்பலைக்கட்டி அதில் உலகின் விலங்குவகைகளை சதை சதையாகவும் (ஜோடி ஜோடியாகவும்) நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு பணிக்க அதன் பின் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் நீர் பெருக்கெடுக்க உலகம் மூழ்கியது. நூஹுவையும் அவரது இறைவனையும் நம்பியவர்கள் காப்பாற்றப்பட்டனர், ஏனைய அனைவரும் நீரில் அழிந்தனர். பின்னர் அந்தக்கப்பல் ஜூதி எனும் மலையின் மீது தங்குகிறது. பின்னர் அதிலிருந்து வெளிவந்து தான் மக்கள் உலகம் முழுவதும் பரவினர். இது தான் குரானில் சொல்லப்பட்டிருக்கும் நூஹின் கப்பல் குறித்த கதை. இந்த கதையில் வரும் நூஹின் கப்பல் துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள அராராத் என்னும் மலையின் மீதி பரவியிருக்கும் பனிப்படிவங்களுக்கிடையே புதைந்து கிடப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச்சொல்ல குரான் இறைவேதம் தான் என்பது மற்றுமொருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறிக்கொள்வதற்கு மதவாதிகளுக்கு ஏதுவாகியது.

இது குறித்த குரான் வசனங்கள் “நாம் அவரையும் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம், மேலும் அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” குரான் 29:15. இதை இன்னும் விரிவாக 11:44; 54:10-17 வசனங்களும் குறிப்பிடுகின்றன. இங்கு உலக மக்களுக்கு அத்தாட்சியாகவும் ஆக்கினோம் எனும் சொற்களில் தான் இதன் முக்கியத்துவமே தங்கியிருக்கிறது. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு பின்னர் இப்படி ஒரு கப்பல் கண்டுபிடிக்கப்படும் என்பது எப்படி தெரியும்? பின்னர் நடக்கப்போவதை முன்னமே அறிந்த இறைவனால் தானே பின்னர் வெளிப்படுத்தப்படும் என்பதை அறிந்து அத்தாட்சியாய் ஆக்கினோம் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறமுடியும் என வியக்கிறார்கள். ஆனால் இந்தக்கதை குரானில் மட்டும் இடம்பெற்ற ஒன்றல்ல. நூஹ் என்பவர் மூசாவிற்கும் காலத்தால் முற்பட்டவர் எனவே யூதர்களின் தோராவிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கும் கதைதான். அந்தக்கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்படும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை அதைத்தான் முகம்மதுவும் தன்னுடைய குரானில் வசனமாக்கியிருக்கிறார்.

இது ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மட்டும் கூறப்படும் கதையல்ல. சுமேரிய மரபுப்படி சுயூசுத்ரா எனும் மன்னன் என்கி எனும் கடவுளால் இது போன்ற ஊழிப் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறான். பாபிலோனிய மரபுகளில் இது கில்காமோஸ் ஐ உட்னபிசிதம் எனும் கடவுள் இதுபோன்ற ஊழிப் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறார். இந்துப்புராணங்களில் மன்னன் மனுவை மச்சாவதாரம் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதாக மச்சபுராணம் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் பண்டைய புராணங்கள் அனைத்திலும் இது போன்ற ஊழிப் பெருவெள்ளக் காட்சிகளும் கடவுளால் காப்பாற்றப்படுதலும் எதோ ஒரு வகையில் இருக்கின்றன. ஆனால் கடவுளோடும் மதங்களோடும் தொடர்புபடுத்தப்படாத ஊழிப்பெருவெள்ளக் காட்சிகள் தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. தமிழர்களின் தலை நிலம் அடுத்தடுத்த கடல்கோளால் அளிக்கப்பட்ட விதம் குறித்து தமிழ் இலக்கியங்கள் விரிவாகவே விளக்குகின்றன. கபாடபுரம், மதுரை, துவாரை என்று அழிந்து போன நகரங்களும் மக்களின் நகர்வும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கடவுளோடு தொடர்புகொண்ட காட்சிகளெல்லாம் காப்பாற்றப்பட்டவர்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்க, தமிழ் இலக்கியங்களில் அழிந்துபோன மக்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழில் ஒரு சொலவடை நீண்ட நெடுங்காலமாக வழக்கில் இருக்கிறது. இதற்கு புறப்பொருள் வெண்பாமாலையில்  ஐயனாரிதனார் எனும் புலவர் அளிக்கும் விளக்கம், கடல்கோளிலிருந்து தப்பிப் பிழைக்க மக்கள் மலைகளில் ஏறுகின்றனர். மலை உச்சிக்கு சென்றவர்களைதவிர ஏனையவர்கள் அழிந்துவிட வெள்ளம் வடிந்தபின் தரை தெரியாமல் அதாவது மண் தெரியாமல் மலைகளின் பாறைகளில் தப்பிப் பிழைத்த மக்களிலிருந்து தோன்றியது தான் தமிழ்க்குடி என்பது. தமிழில் பெருங்கப்பல்களை குறிப்பிட நாவாய் என்ற சொல் ஆளப்படுகிறது. இந்த நாவாய் எனும் சொல்தான் கப்பலோடு தொடர்புடைய கதை நாயகனுக்கான பெயராய் நோவா என்று மருவியது. அதுவே பின்னர் நூஹ் என்று திரிந்திருக்க கூடுமோ

இந்த நூஹ் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. இவ்வளவு காலம் வாழும் அளவுக்கு மனிதன் இருந்தானா? மனிதனின் செல் அமைப்புகள் எலும்புகளின் ஆர்கானிக் பொருட்கள் இவ்வளவு காலம் தாங்கி நிற்கும் அளவுக்கு திறனுடன் மனிதனிடம் இருந்ததா? மனிதனின் வாழ்நாள் இப்போது இருப்பது தான் அதிகம், தோராயமாக எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது, புராணக்குப்பைகள் என்பதல்லாது.


நூஹ்வின் கப்பலுக்கு திரும்புவோம், 1959ல் லிஹான் துரிப்பினார் எனும் ராணுவ அதிகாரி ராணுவ நில அளவை குறித்த பணியில் ஈடுபட்டிருந்த போது விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நிலைப்படம் ஒன்றிலிருந்து அராராத் மலையின் ஒருபகுதியில் கப்பல் போன்ற வடிவமுள்ள ஒன்று தெரிவதை கண்டுபிடித்தார். அதிலிருந்து அந்த பகுதி மிகவும் புகழ்பெற்ற இடமாகியது. நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியது.(ஆம் நூஹ்வின் கப்பலாக அல்ல நோவாவின் கப்பலாகவே கண்டுபிடிக்கப்பட்டது) இன்றும் அந்தப்பகுதி துரிப்பினாரின் பெயராலேயே அழைக்கப்பட்டுவருகிறது. 1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர். பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் ரான் யாட் என்பவரும் டேவிட் ஃபசோல்டு என்பவரும் இணைந்து துரிப்பினார் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டு நோவாவின் கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததோடு “இழந்த நோவாவின் கப்பல்” எனும் நூலையும் எழுதினர். இது தான் இறைவனின் அத்தாட்சியாக கூறப்படும் நூஹ்வின் அல்லது நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. ஆனால் கப்பலை கண்டு பிடித்தவர்களில் ஒருவரான  டேவிட் ஃபசோல்டு பின்னர் அதில் தமக்கு ஐயமிருப்பதாக கூறி மிண்டும் ஆய்வுகளை தொடர்ந்தார். இறுதியில் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி அதை நோவாவின் கப்பல் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.

அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான். இந்த இரண்டும் தவறு என்று நிரூபித்துவிட்டனர் இருந்தாலும் நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய வதந்தி மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது. அந்த கப்பல் வடிவின் அகலம் 138 அடியாக இருக்கிறது. கடல் மிதவை அளவீடுகளின் படி அந்தக்கப்பல் சீராக மிதந்திருக்கவேண்டுமென்றால் அதன் நீளத்துடன் ஒப்பிடும் போது 86 அடியாக இருந்திருக்கவேண்டும். அதாவது நீளத்தோடு ஒப்பிடும் போது அதன் அகலம் சற்றேறக்குறைய ஒருமடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அளவீடுகளின் படி ஒரு கப்பல் பல நாட்கள் சீறாக மிதந்திருக்க முடியாது என்கிறார் ஜான் டி மோரிஸ். அராராத் மலை ஒரு எரிமலையாகும், கடைசியாக அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள், அப்படி வெடித்து வெளிவந்த லாவா குளம்பு ஒரு கப்பல் வடிவில் படிந்திருக்கிறது என்பதை தவிர அதில் ஒன்றுமில்லை.

அடுத்த ஆதாரமான நங்கூர கற்பலகை என்பதும் திட்டமிட்டு திணிக்கப்பட்டது தான். கப்பல் வடிவிலான அந்தப்பகுதியிலிருந்து 14 மைல் தூரத்தில் தான் நங்கூர கற்பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வலவு தூரம் கப்பலைவிட்டு நங்கூரம் நகர்ந்தது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இல்லை. பழங்காலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களால் நடப்பட்ட ஒரு நடுகல்தான் அது என்பதும் கயிறு கட்டும் ஓட்டை என்று குறிப்பிடப்பட்டது விளக்கு ஏற்றுவதற்கானது என்பதாகவும் இருக்கலாம். அதோடு ஒரு கப்பலின் நங்கூரம் என்றால் கப்பல் புறப்பட்ட இடத்தில் கிடைக்கும் கல்லாகத்தான் இருக்கவேண்டும் ஆனால் இந்தக் கல் கப்பல் தரை தட்டி நின்ற இடத்திலுள்ள கல்லாக இருக்கிறது. எப்படியென்றால் அராராத் மலை எரிமலைக் குளம்புகளால் ஆனது. அதில் பசால்ட் வகை கற்களே காணப்படுகிறது. நங்கூரமாக காட்டப்படும் கற்பலகையும் பசால்ட் வகை கல்லே. அதாவது ஒருகாலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்தப்ப்குதியில் கிடைத்த கல்லைக்கொண்டு நடுகல்லாக செய்துவைத்து வணங்கியிருக்கவேண்டும், அதைத்தான் நங்கூரமாக காட்டி நம் மனதில் அவர்களின் கருத்தை நங்கூரமாக இறக்க முயல்கிறார்கள்.

தொல்லியலாளர்கள் நிலத்தை அகளும் போது முக்கியமான காலங்காட்டியாக டோபா எரிமலை படிவுகளை கொள்கிறார்கள். அதாவது இன்றைக்கு 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமத்திரா தீபகற்பத்திலுள்ள கோட்டா டம்பான் பகுதியில் இருக்கும் எரிமலை இரண்டு வாரங்களுக்கு குமுறி வெடித்தது. இதன் படிவுகள் ஆசியப்பகுதிகளைத்தாண்டி ஐரோப்பாவரை பரவியது. இந்தப்படிவுகள் ஒரு முக்கியமான காலங்காட்டியாக பயன்படுகிறது. இதேபோல் பண்டைய டெதிஸ் கடலின் படிவுகள் இயமமலையின் பாறைகளில் காணப்படுகின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிகழ்வுகளெல்லாம் காலங்காட்டியாக பதிந்திருக்கும் போது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட உலகம் முழுவதையும் சூழ்ந்த இந்த வெள்ளம் பற்றிய தயங்களோ பதிவுகளோ எதுவும் காணப்படவில்லையே ஏன்? ஆக அப்படி ஒரு பிரளயம் ஏற்படவே இல்லை என்பதுதான் உண்மை.

ஆதாரம் என்ற பெயரில் எதையாவது காட்டி என்னவாவது செய்து தங்கள் இறைவனின் இருப்பை தக்கவைப்பதற்கு கடும் முயற்சிகளைச் செய்யும் மதவாதிகளிடமிருந்து நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதைத்தான் இவைகளெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்


17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13.  கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9.  பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

%d bloggers like this: