இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 18
குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல். நூஹ் என்பவர் மக்களை திருத்துவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவர். இவரின் போதனைகளை மக்கள் ஏற்க மறுக்கவே அவர்களை அளித்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறார், இறைவனும் கருணை உள்ளங்கொண்டு நூஹையும் அவரின் சீடர்களையும் ஒரு கப்பலைக்கட்டி அதில் உலகின் விலங்குவகைகளை சதை சதையாகவும் (ஜோடி ஜோடியாகவும்) நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு பணிக்க அதன் பின் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் நீர் பெருக்கெடுக்க உலகம் மூழ்கியது. நூஹுவையும் அவரது இறைவனையும் நம்பியவர்கள் காப்பாற்றப்பட்டனர், ஏனைய அனைவரும் நீரில் அழிந்தனர். பின்னர் அந்தக்கப்பல் ஜூதி எனும் மலையின் மீது தங்குகிறது. பின்னர் அதிலிருந்து வெளிவந்து தான் மக்கள் உலகம் முழுவதும் பரவினர். இது தான் குரானில் சொல்லப்பட்டிருக்கும் நூஹின் கப்பல் குறித்த கதை. இந்த கதையில் வரும் நூஹின் கப்பல் துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள அராராத் என்னும் மலையின் மீதி பரவியிருக்கும் பனிப்படிவங்களுக்கிடையே புதைந்து கிடப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச்சொல்ல குரான் இறைவேதம் தான் என்பது மற்றுமொருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறிக்கொள்வதற்கு மதவாதிகளுக்கு ஏதுவாகியது.
இது குறித்த குரான் வசனங்கள் “நாம் அவரையும் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம், மேலும் அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” குரான் 29:15. இதை இன்னும் விரிவாக 11:44; 54:10-17 வசனங்களும் குறிப்பிடுகின்றன. இங்கு உலக மக்களுக்கு அத்தாட்சியாகவும் ஆக்கினோம் எனும் சொற்களில் தான் இதன் முக்கியத்துவமே தங்கியிருக்கிறது. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு பின்னர் இப்படி ஒரு கப்பல் கண்டுபிடிக்கப்படும் என்பது எப்படி தெரியும்? பின்னர் நடக்கப்போவதை முன்னமே அறிந்த இறைவனால் தானே பின்னர் வெளிப்படுத்தப்படும் என்பதை அறிந்து அத்தாட்சியாய் ஆக்கினோம் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறமுடியும் என வியக்கிறார்கள். ஆனால் இந்தக்கதை குரானில் மட்டும் இடம்பெற்ற ஒன்றல்ல. நூஹ் என்பவர் மூசாவிற்கும் காலத்தால் முற்பட்டவர் எனவே யூதர்களின் தோராவிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கும் கதைதான். அந்தக்கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்படும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை அதைத்தான் முகம்மதுவும் தன்னுடைய குரானில் வசனமாக்கியிருக்கிறார்.
இது ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மட்டும் கூறப்படும் கதையல்ல. சுமேரிய மரபுப்படி சுயூசுத்ரா எனும் மன்னன் என்கி எனும் கடவுளால் இது போன்ற ஊழிப் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறான். பாபிலோனிய மரபுகளில் இது கில்காமோஸ் ஐ உட்னபிசிதம் எனும் கடவுள் இதுபோன்ற ஊழிப் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறார். இந்துப்புராணங்களில் மன்னன் மனுவை மச்சாவதாரம் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதாக மச்சபுராணம் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் பண்டைய புராணங்கள் அனைத்திலும் இது போன்ற ஊழிப் பெருவெள்ளக் காட்சிகளும் கடவுளால் காப்பாற்றப்படுதலும் எதோ ஒரு வகையில் இருக்கின்றன. ஆனால் கடவுளோடும் மதங்களோடும் தொடர்புபடுத்தப்படாத ஊழிப்பெருவெள்ளக் காட்சிகள் தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. தமிழர்களின் தலை நிலம் அடுத்தடுத்த கடல்கோளால் அளிக்கப்பட்ட விதம் குறித்து தமிழ் இலக்கியங்கள் விரிவாகவே விளக்குகின்றன. கபாடபுரம், மதுரை, துவாரை என்று அழிந்து போன நகரங்களும் மக்களின் நகர்வும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கடவுளோடு தொடர்புகொண்ட காட்சிகளெல்லாம் காப்பாற்றப்பட்டவர்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்க, தமிழ் இலக்கியங்களில் அழிந்துபோன மக்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழில் ஒரு சொலவடை நீண்ட நெடுங்காலமாக வழக்கில் இருக்கிறது. இதற்கு புறப்பொருள் வெண்பாமாலையில் ஐயனாரிதனார் எனும் புலவர் அளிக்கும் விளக்கம், கடல்கோளிலிருந்து தப்பிப் பிழைக்க மக்கள் மலைகளில் ஏறுகின்றனர். மலை உச்சிக்கு சென்றவர்களைதவிர ஏனையவர்கள் அழிந்துவிட வெள்ளம் வடிந்தபின் தரை தெரியாமல் அதாவது மண் தெரியாமல் மலைகளின் பாறைகளில் தப்பிப் பிழைத்த மக்களிலிருந்து தோன்றியது தான் தமிழ்க்குடி என்பது. தமிழில் பெருங்கப்பல்களை குறிப்பிட நாவாய் என்ற சொல் ஆளப்படுகிறது. இந்த நாவாய் எனும் சொல்தான் கப்பலோடு தொடர்புடைய கதை நாயகனுக்கான பெயராய் நோவா என்று மருவியது. அதுவே பின்னர் நூஹ் என்று திரிந்திருக்க கூடுமோ
இந்த நூஹ் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. இவ்வளவு காலம் வாழும் அளவுக்கு மனிதன் இருந்தானா? மனிதனின் செல் அமைப்புகள் எலும்புகளின் ஆர்கானிக் பொருட்கள் இவ்வளவு காலம் தாங்கி நிற்கும் அளவுக்கு திறனுடன் மனிதனிடம் இருந்ததா? மனிதனின் வாழ்நாள் இப்போது இருப்பது தான் அதிகம், தோராயமாக எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது, புராணக்குப்பைகள் என்பதல்லாது.
நூஹ்வின் கப்பலுக்கு திரும்புவோம், 1959ல் லிஹான் துரிப்பினார் எனும் ராணுவ அதிகாரி ராணுவ நில அளவை குறித்த பணியில் ஈடுபட்டிருந்த போது விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நிலைப்படம் ஒன்றிலிருந்து அராராத் மலையின் ஒருபகுதியில் கப்பல் போன்ற வடிவமுள்ள ஒன்று தெரிவதை கண்டுபிடித்தார். அதிலிருந்து அந்த பகுதி மிகவும் புகழ்பெற்ற இடமாகியது. நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியது.(ஆம் நூஹ்வின் கப்பலாக அல்ல நோவாவின் கப்பலாகவே கண்டுபிடிக்கப்பட்டது) இன்றும் அந்தப்பகுதி துரிப்பினாரின் பெயராலேயே அழைக்கப்பட்டுவருகிறது. 1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர். பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் ரான் யாட் என்பவரும் டேவிட் ஃபசோல்டு என்பவரும் இணைந்து துரிப்பினார் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டு நோவாவின் கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததோடு “இழந்த நோவாவின் கப்பல்” எனும் நூலையும் எழுதினர். இது தான் இறைவனின் அத்தாட்சியாக கூறப்படும் நூஹ்வின் அல்லது நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. ஆனால் கப்பலை கண்டு பிடித்தவர்களில் ஒருவரான டேவிட் ஃபசோல்டு பின்னர் அதில் தமக்கு ஐயமிருப்பதாக கூறி மிண்டும் ஆய்வுகளை தொடர்ந்தார். இறுதியில் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி அதை நோவாவின் கப்பல் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.
அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான். இந்த இரண்டும் தவறு என்று நிரூபித்துவிட்டனர் இருந்தாலும் நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய வதந்தி மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது. அந்த கப்பல் வடிவின் அகலம் 138 அடியாக இருக்கிறது. கடல் மிதவை அளவீடுகளின் படி அந்தக்கப்பல் சீராக மிதந்திருக்கவேண்டுமென்றால் அதன் நீளத்துடன் ஒப்பிடும் போது 86 அடியாக இருந்திருக்கவேண்டும். அதாவது நீளத்தோடு ஒப்பிடும் போது அதன் அகலம் சற்றேறக்குறைய ஒருமடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அளவீடுகளின் படி ஒரு கப்பல் பல நாட்கள் சீறாக மிதந்திருக்க முடியாது என்கிறார் ஜான் டி மோரிஸ். அராராத் மலை ஒரு எரிமலையாகும், கடைசியாக அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள், அப்படி வெடித்து வெளிவந்த லாவா குளம்பு ஒரு கப்பல் வடிவில் படிந்திருக்கிறது என்பதை தவிர அதில் ஒன்றுமில்லை.
அடுத்த ஆதாரமான நங்கூர கற்பலகை என்பதும் திட்டமிட்டு திணிக்கப்பட்டது தான். கப்பல் வடிவிலான அந்தப்பகுதியிலிருந்து 14 மைல் தூரத்தில் தான் நங்கூர கற்பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வலவு தூரம் கப்பலைவிட்டு நங்கூரம் நகர்ந்தது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இல்லை. பழங்காலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களால் நடப்பட்ட ஒரு நடுகல்தான் அது என்பதும் கயிறு கட்டும் ஓட்டை என்று குறிப்பிடப்பட்டது விளக்கு ஏற்றுவதற்கானது என்பதாகவும் இருக்கலாம். அதோடு ஒரு கப்பலின் நங்கூரம் என்றால் கப்பல் புறப்பட்ட இடத்தில் கிடைக்கும் கல்லாகத்தான் இருக்கவேண்டும் ஆனால் இந்தக் கல் கப்பல் தரை தட்டி நின்ற இடத்திலுள்ள கல்லாக இருக்கிறது. எப்படியென்றால் அராராத் மலை எரிமலைக் குளம்புகளால் ஆனது. அதில் பசால்ட் வகை கற்களே காணப்படுகிறது. நங்கூரமாக காட்டப்படும் கற்பலகையும் பசால்ட் வகை கல்லே. அதாவது ஒருகாலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்தப்ப்குதியில் கிடைத்த கல்லைக்கொண்டு நடுகல்லாக செய்துவைத்து வணங்கியிருக்கவேண்டும், அதைத்தான் நங்கூரமாக காட்டி நம் மனதில் அவர்களின் கருத்தை நங்கூரமாக இறக்க முயல்கிறார்கள்.
தொல்லியலாளர்கள் நிலத்தை அகளும் போது முக்கியமான காலங்காட்டியாக டோபா எரிமலை படிவுகளை கொள்கிறார்கள். அதாவது இன்றைக்கு 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமத்திரா தீபகற்பத்திலுள்ள கோட்டா டம்பான் பகுதியில் இருக்கும் எரிமலை இரண்டு வாரங்களுக்கு குமுறி வெடித்தது. இதன் படிவுகள் ஆசியப்பகுதிகளைத்தாண்டி ஐரோப்பாவரை பரவியது. இந்தப்படிவுகள் ஒரு முக்கியமான காலங்காட்டியாக பயன்படுகிறது. இதேபோல் பண்டைய டெதிஸ் கடலின் படிவுகள் இயமமலையின் பாறைகளில் காணப்படுகின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிகழ்வுகளெல்லாம் காலங்காட்டியாக பதிந்திருக்கும் போது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட உலகம் முழுவதையும் சூழ்ந்த இந்த வெள்ளம் பற்றிய தயங்களோ பதிவுகளோ எதுவும் காணப்படவில்லையே ஏன்? ஆக அப்படி ஒரு பிரளயம் ஏற்படவே இல்லை என்பதுதான் உண்மை.
ஆதாரம் என்ற பெயரில் எதையாவது காட்டி என்னவாவது செய்து தங்கள் இறைவனின் இருப்பை தக்கவைப்பதற்கு கடும் முயற்சிகளைச் செய்யும் மதவாதிகளிடமிருந்து நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதைத்தான் இவைகளெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
15. விந்து குறித்த குரானின் விந்தைகள்
14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்
7. குரான் கூறுவது அறிவியலாகுமா?
6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
ஆபிரகாம மதம் அனைத்திலும் இந்த நோவா கப்பல் கதை உண்டா!?
நாஸ்கா (nazka) லைன்கள் கூட அல்லா வந்து வரைஞ்சிட்டு போனது தான்னு இன்னும் கொஞ்ச நாளில் சொல்லுவாங்க பாருங்க!
நண்பர் செங்கொடி,
ஆதாரங்கள் எதுவுமில்லாவிட்டாலும் எதையாவது சொல்லி உங்கள் வாதத்தை நிலைநிறுத்த நீங்கள் மேற்கொள்ளும் விடாமுயற்சிகளை பாராட்டத்தான் வேண்டும்.
அராராத் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட படிவங்கள் நூஹ் நபி அவர்களின் கப்பல் அல்ல என்றே நீங்கள் நிரூபித்துவிட்டதாக வைத்துக் கொள்வோமே..! இப்போது என்ன, குர்ஆனில் உள்ள நூஹ் நபி சம்பந்தப்பட்ட அனைத்து வசனங்களும் பொய் என்று ஆகிவிடுமா? அல்லது, ‘இறைவனே இல்லை’ என்று நிரூபணமாகி விடுமா?
//அதிலிருந்து அந்த பகுதி மிகவும் புகழ்பெற்ற இடமாகியது. நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியது.(ஆம் நூஹ்வின் கப்பலாக அல்ல நோவாவின் கப்பலாகவே கண்டுபிடிக்கப்பட்டது) //
அதாவது, நோவாவும் நூஹ்வும் வேறு வேறு நபர்கள் என்கிறீர்களா?
//எண்பதுகளின் தொடக்கத்தில் ரான் யாட் என்பவரும் டேவிட் ஃபசோல்டு என்பவரும் இணைந்து துரிப்பினார் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டு நோவாவின் கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததோடு “இழந்த நோவாவின் கப்பல்” எனும் நூலையும் எழுதினர். ஆனால் கப்பலை கண்டு பிடித்தவர்களில் ஒருவரான டேவிட் ஃபசோல்டு பின்னர் அதில் தமக்கு ஐயமிருப்பதாக கூறி மிண்டும் ஆய்வுகளை தொடர்ந்தார். இறுதியில் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி அதை நோவாவின் கப்பல் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.//
ஆய்வு நடத்திய இருவரில் ஒருவர் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி விட்டார். சரி.. அந்த இன்னொருவர் ‘அது நோவாவின் கப்பல்தான்’ என்பதில் இன்னும் உறுதியாக இருக்கிறார் அல்லவா? மாறுபட்ட கருத்துக்களை உடைய இருவரி்ல் ஏன் ரான் யாடின் கருத்துக்கள் உண்மையானதாக இருக்கக் கூடாது?
//அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான். இந்த இரண்டும் தவறு என்று நிரூபித்துவிட்டனர்//
இரண்டு ஆதாரங்கள் மட்டுமல்ல நண்பரே.. ஒரு கிருஸ்துவ இனையத்தளத்தில் 14 ஆதாரங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றையும் தவறு என்று நிரூபியுங்களேன்.
The Real Noah’s Ark!
Top Points to Consider
1. It is in the shape of a boat, with a pointed bow and rounded stern.
2. Exact length as noted in biblical description, 515 feet or 300 Egyptian cubits. (Egyptian not Hebrew cubit would have been known to Moses who studied in Egypt then wrote Genesis.)
3. It rests on a mountain in Eastern Turkey, matching the biblical account, “The ark rested . . . upon the mountains of Ararat” Genesis 8:4. (Ararat being the name of the ancient country Urartu which covered this region.)
4. Contains petrified wood, as proven by lab analysis.
5. Contains high-tech metal alloy fittings, as proven by separate lab analyses paid for by Ron Wyatt, then performed later by Kevin Fisher of this web site. Aluminum metal and titanium metal was found in the fittings which are MAN-MADE metals!
6. Vertical rib timbers on its sides, comprising the skeletal superstructure of a boat. Regular patterns of horizontal and vertical deck support beams are also seen on the deck of the ark.
7. Occupied ancient village at the ark site at 6,500 ft. elevation matching Flavius Josephus’ statement “Its remains are shown there by the inhabitants to this day.”
8. Dr. Bill Shea, archaeologist found an ancient pottery sherd within 20 yards of the ark which has a carving on it that depicts a bird, a fish, and a man with a hammer wearing a headdress that has the name “Noah” on it. In ancient times these items were created by the locals in the village to sell to visitors of the ark. The ark was a tourist attraction in ancient times and today.
9. Recognized by Turkish Government as Noah’s Ark National Park and a National Treasure. Official notice of its discovery appeared in the largest Turkish newspaper in 1987.
10. Visitors’ center built by the government to accommodate tourists further confirms the importance of the site.
11. Huge anchor stones were found near the ark and in the village Kazan, 15 miles away, which hung off the rear of the ark to steady its ride.
12. The ark rests upon Cesnakidag (or Cudi Dagi) Mountain, which is translated as “Doomsday” Mountain.
13. Dr. Salih Bayraktutan of Ataturk University stated, “It is a man made structure, and for sure it’s Noah’s Ark” Common Sense. This same article also states “The site is immediately below the mountain of Al Judi, named in the Qur’an as the resting place of the Ark.” Houd Sura 11:44
14. Radar scans show a regular pattern of timbers inside the ark formation, revealing keels, keelsons, gunnels, bulkheads, animal chambers, ramp system, door in right front, two large barrels in the front 14′ x 24′, and an open center area for air flow to all three levels.
நண்பர் சலாஹுத்தீன்,
இறைவன் இல்லை என்பதையோ, குரானின் வசனங்கள் பொய் என்பதையோ தனிப்பட்டு தேடவேண்டியதில்லை. மொத்தமாக பாருங்கள். நூஹ்வின் கப்பல் பொய் என்பதால் இறைவன் இல்லை என்பதல்ல, இதுபோன்ற புரட்டுகளாலேயே இறைவனின் இருப்பு நிருவப்படுகிறது என்பதே உணரவேண்டிய செய்தி.
நோவாவும் நூஹ்வும் வேறு வேறு என நான் குறிப்பிடவில்லை, கப்பலை கண்டுபிடித்ததில் முச்லீம்களின் பங்கு ஒன்றுமில்லை என்பதை குறிக்கவே அவ்வாறு எழுதினேன், அதுவும் அடைப்புக்குறிக்குள்.
கப்பலை கண்டுபிடித்த ரான் யாட், டேவிட் ஃபசோல்டு இருவரில் டேவிட் ஃபசோல்டு பின்னர் அது நோவாவின் கப்பல் இல்லை என்று கூறிவிட்டார். ரான் யாட்டோ முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக இதை நிரூபிப்பது கடினமான பணி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இனி நீங்கள் குறிப்பிட்டுள்ள 14 ஆதாரங்களுக்கு(!) வருவோம்.
1) கப்பலின் வடிவில் இருப்பதால் மட்டுமே அது நூஹின் கப்பலாகிவிடுமா?
2) கப்பலின் அளவு குறித்து கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
4) அனேக கிருஸ்தவ தளங்களில் மரப்பலகையும் ஆணியும் கண்டுபிடித்ததாக அளந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பலகையோ ஆணியோ அல்லது உலோகங்களோ காணப்படவில்லை என்பதே உண்மை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக நீங்களும் நம்பினால் அந்த கிருஸ்தவ தளங்களில் ஆதாரங்களை கேட்டுப் பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்கே புரியவரும்.
5) அலுமினியமும், டைட்டானியமும் காணப்பட்டதாக இவர்கள் கூறுவது ஒன்றே போதும் அதை பொய் என்று நிரூபிக்க, காரணம், டைட்டானியம் 1791ல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம். அலுமினியமோ ஹான்ஸ் கிரிஸ்டியன் என்பவரால் 1825ல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.
6) கப்பலின் தளங்கள் ஏதும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில கிருஸ்தவ தளங்களில் தேடிப்பாருங்கள், அவைகளில் அங்கு கப்பலின் வடிவில் இருப்பது கல்லாகவே இருந்தாலும் கல்லாய்போன மரம் என்று நாம் கேள்விப்பட்டதில்லையா? என்று கேட்டு கிலியூட்டுகிறார்கள்.
7) இது எந்த விதத்தில் அந்த கப்பலோடு தொடர்புடையது என்பது புரியவில்லை.
8) கட்டுரையில் நான் இதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும், விடுபட்டுவிட்டது. கண்டெடுக்கப்பட்ட அந்த மட்பாண்டத்தில் ஒருவன் சுத்தியலால் வேலை செய்வது போலவும், ஒரு மீனும், ஒரு புறாவும் அல்லது பறவை பொறிக்கப்பட்டிருந்தது. கிருஸ்தவ தொன்மங்களின்படி, மீன் என்பது வெள்ளத்தையும் புறா என்பது வெள்ளம் வடிந்துவிட்டதா என்பதை அறிந்துகொள்ள நோவா வெளியில் பறக்கவிட்டு அது ஒலிவ இலையுடன் திரும்பி வந்ததால் வெள்ளம் வடியத்தொடங்கிவிட்டதாக அறிந்ததையும் குறிக்கும். எனவே அந்த மட்பாண்டம் அந்தப்பகுதியில் வசித்த மக்களின் சடங்குகளுக்கு பயன்பட்டதாகவே இருக்கவேண்டும் ஏனென்றால் இந்தக்கதை காலங்காலமாக அந்தப் பகுதியில் நிலவிவருவதுதான். அதோடு அந்த மட்பாண்டம் காலநிர்ணயம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
3) நான் குறிப்பிட மறந்த இன்னொரு செய்தியும் இருக்கிறது. பைபிளில் கப்பல் தங்கிய இடம் அராராத் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குரானில் ஜூதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அராராத் மலையும் ஜூதி மலையும் வேறு வேறு மலைகள். ஜூதி மலை அர்மீனிய எல்லையில் இருக்கிறது. இப்போது கப்பல் தங்கிய இடமாக எதை கருதுவது? அராராத்தா? ஜூதியா?
9,10,12,13) இவை ஆதாரங்கள் இல்லை என்பதால் குறிப்பிட ஒன்றுமில்லை.
11) நங்கூரக் கற்கள் பற்றி எற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
14) ஆணிகள், மூட்டுகள், அறைகள் அறைக்கதவு இவைகளெல்லாம் எந்த ரேடார் ஸ்கேன் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டன? யார் செய்த ஆய்வு? எப்பொழுது? விபரம் தரமுடியுமா?
நீங்கள் குறிப்பிட்டவற்றிற்கு நான் பதிலளித்து விட்டேன். இனி கட்டுரையில் குறிப்பிட்டவற்றிற்கு உங்களின் பதில் என்ன?
செங்கொடி
நண்பர் செங்கொடி,
//நூஹ்வின் கப்பல் பொய் என்பதால் இறைவன் இல்லை என்பதல்ல, இதுபோன்ற புரட்டுகளாலேயே இறைவனின் இருப்பு நிருவப்படுகிறது என்பதே உணரவேண்டிய செய்தி.// என்பது தவறான கண்ணோட்டம். இறைவனின் இருப்பை நிருவ ஏராளமான அடிப்படை உண்மைகள் இருக்கின்றன. நூஹ் நபியின் கப்பல் போன்ற, வேதங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் அத்தாட்சிகள் கண்டுபிடிக்கப்படும்போது, ‘இறைவன் இருக்கிறான்’ என்ற நம்பிக்கையை மேலும் உறுதி படுத்துகின்றன.
//நோவாவும் நூஹ்வும் வேறு வேறு என நான் குறிப்பிடவில்லை, கப்பலை கண்டுபிடித்ததில் முச்லீம்களின் பங்கு ஒன்றுமில்லை என்பதை குறிக்கவே அவ்வாறு எழுதினேன், அதுவும் அடைப்புக்குறிக்குள்.//
இருவரும் ஒருவர்தான் எனும்போது, அந்தக் கப்பலை யார் கண்டுபிடித்தால்தான் என்ன? ஒரு முஸ்லிம் விஞ்ஞானி கண்டுபிடித்த மருந்து என்றால் நீங்கள் அதை பயன்படுத்த மாட்டீர்களா என்ன?
//கப்பலை கண்டுபிடித்த ரான் யாட், டேவிட் ஃபசோல்டு இருவரில் டேவிட் ஃபசோல்டு பின்னர் அது நோவாவின் கப்பல் இல்லை என்று கூறிவிட்டார். ரான் யாட்டோ முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக இதை நிரூபிப்பது கடினமான பணி என்று குறிப்பிட்டிருக்கிறார்.//
ரான்யாட்டோ சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகளுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் அளிப்பது இயலாத காரியம். அதற்காக அவை நிகழவே இல்லை என்று சொல்ல முடியாது.
பெருவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பதற்கு அறிவியலில் இன்னும் பதில் இல்லை. இதை நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் பிரபஞ்சம் தோன்றவே இல்லை என்று சொல்வீர்களா?
விவாதக்களம் பகுதியில் நான் ஏற்கனவே இப்படி சொல்லியிருந்தேன்.. ‘பிரபஞ்சம் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் அறிவியல் பதில் சொல்லி விடவில்லை. அந்த அளவிற்கு அறிவியல் முழுமை பெறவில்லை. இதுவரையிலான அறிவியல் கண்டுபிடிப்புகளும் யூகங்களும் கூட நாளையே மாற்றம் பெறலாம்.’
எனவே, அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை என்பதால் மட்டுமே அது நோவாவின் கப்பல் இல்லை என்றாகி விடாது.
இதையே இன்னொரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம்… அறிவியல் விதிகளுக்கு உட்படாததாலேயே நோவா காலத்து பிரளயம் ஒரு அசாதரண நிகழ்வாகவும், அக்கப்பல் அந்த நிகழ்வுக்கு ஒரு சான்றாகவும் இருக்கிறது. இவற்றை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும் என்றால் அது மனித இனத்தின் கவனத்தைப் பெற்றிருக்காது.
//1) கப்பலின் வடிவில் இருப்பதால் மட்டுமே அது நூஹின் கப்பலாகிவிடுமா?//
கப்பல் வடிவில் இருப்பது வேறு என்னவாக இருக்கும்?
//2) கப்பலின் அளவு குறித்து கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.//
//அந்த கப்பல் வடிவின் அகலம் 138 அடியாக இருக்கிறது. கடல் மிதவை அளவீடுகளின் படி அந்தக்கப்பல் சீராக மிதந்திருக்கவேண்டுமென்றால் அதன் நீளத்துடன் ஒப்பிடும் போது 86 அடியாக இருந்திருக்கவேண்டும். அதாவது நீளத்தோடு ஒப்பிடும் போது அதன் அகலம் சற்றேறக்குறைய ஒருமடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அளவீடுகளின் படி ஒரு கப்பல் பல நாட்கள் சீறாக மிதந்திருக்க முடியாது என்கிறார் ஜான் டி மோரிஸ்.//
நான் மேலே குறிப்பிட்டதுபோல, இந்தப் பிரளயமே ஒரு அசாதரண நிகழ்வு. அதில் பயன்படுத்தப்பட்ட கப்பல் பிற்கால சந்ததியினருக்கு ஒரு அத்தாட்சியாக இருக்க வேண்டுமெனில், அதுவும் அசாதரணமானதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதைச் சரியாக அவதானித்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கான ஆதாரம் அல்ல. மாறாக இது எனக்கான ஆதாரம்.
//4) அனேக கிருஸ்தவ தளங்களில் மரப்பலகையும் ஆணியும் கண்டுபிடித்ததாக அளந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பலகையோ ஆணியோ அல்லது உலோகங்களோ காணப்படவில்லை என்பதே உண்மை.//
அங்கு பலகையோ ஆணியோ உலோகங்களோ இல்லை என்ற உங்கள் கூற்றிற்கான ஆதாரங்களை தாருங்கள். யார் அளந்திருக்கிறார்கள் என்று ஒப்பீடு செய்ய வசதியாக இருக்கும்.
//5) அலுமினியமும், டைட்டானியமும் காணப்பட்டதாக இவர்கள் கூறுவது ஒன்றே போதும் அதை பொய் என்று நிரூபிக்க, காரணம், டைட்டானியம் 1791ல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம். அலுமினியமோ ஹான்ஸ் கிரிஸ்டியன் என்பவரால் 1825ல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.//
டைட்டானியம் 1791-ல் கிரிகோரால் கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் ஃப்ரான்ஸ் ஜோசப் முல்லர் என்பாரும் 1795-ல் மார்ட்டின் ஹேய்ன்ரிக் க்ளாப்ரோத் என்பாரும் தனித்தனியாக இந்த உலோகத்தை கண்டறிந்திருக்கின்றனர். இதற்கு டைட்டானியம் எனப் பெயரிட்டவரே க்ளாப்ரோத் தான், கிரிகோர் அல்ல.
Ancient Greeks and Romans used aluminium salts as dyeing mordants and as astringents for dressing wounds; alum is still used as a styptic.
இப்போது எனது கேள்வி என்னவெனில், இந்த உலோகங்கள் ஏன் நோவாவின் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது?
//6) கப்பலின் தளங்கள் ஏதும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. //
தெரிந்துக் கொள்வதற்காக கேட்கிறேன். நோவாவின் கப்பல் பற்றிய ஆய்வுகள் முடிந்து விட்டனவா? கப்பலின் தளங்கள் அங்கு இல்லை என்று unanimousஆக அறிவித்து விட்டார்களா?
//இன்னும் சில கிருஸ்தவ தளங்களில் தேடிப்பாருங்கள், அவைகளில் அங்கு கப்பலின் வடிவில் இருப்பது கல்லாகவே இருந்தாலும் கல்லாய்போன மரம் என்று நாம் கேள்விப்பட்டதில்லையா? என்று கேட்டு கிலியூட்டுகிறார்கள்.//
இதில் நீங்கள் கிலியடைய என்ன இருக்கிறது என்று புரியவில்லை. Fossil எப்படி உருவாகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
A fossil is the remains of a dead animal or plant that has been preserved in rock. Sometimes the fossil is just an imprint such as a footprint, or even an animal’s dung. Fossils are generally found in rocks that were once under water. The animal or plant was first covered by mud, and over a very long time, many layers of soil or mud built up and were squeezed together. Water containing minerals seeped through the layers and changed the plant or animal remains into rock.
//7) இது எந்த விதத்தில் அந்த கப்பலோடு தொடர்புடையது என்பது புரியவில்லை.//
கப்பலிலிருந்து வெளிப்பட்டவர்கள் அதே இடத்தில், அதாவது நில மட்டத்திலிருந்து சுமார் 6,500 அடி உயரத்திலேயே, வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை குறிப்பிடுவதாக நினைக்கிறேன். அப்படியென்றால் இது அந்தக் கப்பலோடு தொடர்புடையதுதான்.
8 ) In ancient times these items were created by the locals in the village to sell to visitors of the ark. The ark was a tourist attraction in ancient times and today. பண்டைக் காலத்திலேயே அந்தக் கப்பல் ஒரு அதிசய காட்சிப் பொருளாக இருந்திருக்கிறது அதைப் பார்க்க வெளியிடங்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்திருக்கிறார்கள் என்பதையும் இந்தப் பத்தி குறிப்பிடுகிறது. இதற்கு நீங்கள் என்ன விளக்கமளித்திருக்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை.
//3) நான் குறிப்பிட மறந்த இன்னொரு செய்தியும் இருக்கிறது. பைபிளில் கப்பல் தங்கிய இடம் அராராத் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குரானில் ஜூதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அராராத் மலையும் ஜூதி மலையும் வேறு வேறு மலைகள். ஜூதி மலை அர்மீனிய எல்லையில் இருக்கிறது. இப்போது கப்பல் தங்கிய இடமாக எதை கருதுவது? அராராத்தா? ஜூதியா?//
ஜூதி என்ற அரபுச் சொல்லுக்கு ‘மலை’ ‘உயர்வான இடம்’ என்ற பொருளும் உண்டு. எனவே குர்ஆன் குறிப்பிடும் இடம் அராராத்தாக இருக்க சாத்தியம் இருப்பதை மறுக்கவியலாது.
//14) ஆணிகள், மூட்டுகள், அறைகள் அறைக்கதவு இவைகளெல்லாம் எந்த ரேடார் ஸ்கேன் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டன? யார் செய்த ஆய்வு? எப்பொழுது? விபரம் தரமுடியுமா?//
ரான் யாட், டேவிட் ஃபசோல்டு இந்த இருவரின் ஆய்வின்போதுதான் ரேடார் ஸ்கேன் பயன்படுத்தப் பட்டுள்ளது. இணையத்தில் தேடிப்பாருங்கள். மேலும் விபரங்கள் கிடைக்கும்.
//நீங்கள் குறிப்பிட்டவற்றிற்கு நான் பதிலளித்து விட்டேன். இனி கட்டுரையில் குறிப்பிட்டவற்றிற்கு உங்களின் பதில் என்ன?//
//இந்தக்கதை குரானில் மட்டும் இடம்பெற்ற ஒன்றல்ல. நூஹ் என்பவர் மூசாவிற்கும் காலத்தால் முற்பட்டவர் எனவே யூதர்களின் தோராவிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கும் கதைதான். அந்தக்கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்படும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை அதைத்தான் முகம்மதுவும் தன்னுடைய குரானில் வசனமாக்கியிருக்கிறார்.//
இது உங்களின் வெற்று யூகம்!
இந்த வரலாற்றுச் சம்பவம் ஏனைய வேதங்களில் சொல்லப் பட்டிருந்தாலும் அவற்றிற்கும் குர்ஆனில் விவரிக்கப் பட்டிருப்பதறகும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது.
//…நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு பணிக்க அதன் பின் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் நீர் பெருக்கெடுக்க உலகம் மூழ்கியது. ..//
மூழ்கியது முழு உலகமுமல்ல, ஒரு பிரதேசம் மட்டுமே மூழ்கடிக்கப்பட்டது என்பதற்கு குர்ஆன் வசனங்களில் ஆதாரங்கள் இருக்கின்றன. ‘இஸ்லாம் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்’ என்று நீங்கள் மார்தட்டியிருப்பதால் அந்த ஆதாரங்களை நான் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்காதுதானே?
சுமேரிய மரபு, பாபிலோனிய மரபு, இந்துமத புராணங்கள் என நீங்கள் எழுதியிருப்பதற்கும் நோவாவின் கப்பலுக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு விளங்கவில்லை.
//அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான்.//
கப்பலின் நீளம் பற்றி ஏற்கனவே பதிலளித்திருக்கிறேன்.
//அடுத்த ஆதாரமான நங்கூர கற்பலகை என்பதும் திட்டமிட்டு திணிக்கப்பட்டது தான். கப்பல் வடிவிலான அந்தப்பகுதியிலிருந்து 14 மைல் தூரத்தில் தான் நங்கூர கற்பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வலவு தூரம் கப்பலைவிட்டு நங்கூரம் நகர்ந்தது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இல்லை.//
நங்கூர கற்பலகை கப்பலிலிருந்து 14 மைல் தூரத்திற்கு எப்படி போனது என்பதற்கு உங்களுக்கு விளக்கம் கிடைக்கவில்லை என்பதால் அது நங்கூரமேயில்லை என்றாகி விடாது. பிற்காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், புயல் போன்றவற்றின் காரணமாக அந்த நங்கூரம் நகர்த்தப் பட்டிருக்கலாம். கப்பல் நின்ற இடம் ஒரு மலையுச்சி என்பதால் இந்த நங்கூரம் மேடான பகுதியிலிருந்து உருண்டிருக்கலாம். அல்லது அக்கால மக்களே ஏதோ ஒரு காரணத்திற்காக அக்கல்லை இடம் மாற்றி யிருக்கலாம்.
//பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிகழ்வுகளெல்லாம் காலங்காட்டியாக பதிந்திருக்கும் போது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட உலகம் முழுவதையும் சூழ்ந்த இந்த வெள்ளம் பற்றிய தயங்களோ பதிவுகளோ எதுவும் காணப்படவில்லையே ஏன்? ஆக அப்படி ஒரு பிரளயம் ஏற்படவே இல்லை என்பதுதான் உண்மை.//
அதற்குள் அவசரப் பட்டால் எப்படி?
தொல்பொருள் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, பிரளயத்தில் மூழ்கிய பிரதேசம் அன்றைய மெசபடோமியாவை (இன்றைய ஈராக்) உள்ளடக்கிய ஒரு பெரும் பிரதேசமாக இருக்கும். இதை உறுதிப் படுத்தும் வகையில், இன்றைய ஈராக்கின் ‘உர்’ பிரதேசத்தில் பிரிட்டிஷ் மியூசியமும் பென்சில்வேனியா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஒரு தொல்பொருள் ஆய்வின்போது, அந்தப் பகுதியில் வாழ்ந்த ஒரு சமூகம் பெருவெள்ளம் ஒன்றினால் மூழ்கடிக்கப்பட்டு, பின் அதே பிரதேசத்தில் சில காலங்களுக்குப் பிறகு இன்னொரு சமூகம் வாழ்ந்து மறைந்ததர்கான சான்றுகளை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நான் பதிலளிக்காத உங்கள் கேள்வி எதுவும் மீதம் உள்ளதா?
– சலாஹுத்தீன்
dear friend salahudheen need ur mail id plz send
சகோதரர் ரபீக், என் வலைப்பதிவில் ( http://islamanswers.blogspot.com/ ) உங்கள் மின்னஞ்சலை ஒரு பின்னூட்டமாக பதியுங்கள்.
நண்பர் சலாஹுத்தீன்,
கப்பல் வடிவில் இருப்பதெல்லாம் கப்பலாக இருப்பதற்க்கு அவசியம் ஒன்றுமில்லை. வெளுத்ததெல்லாம் பாலல்ல.
வெள்ளம் ஒரு அசாதாரணம் எனவே கப்பலும் அசாதாரணம் என்றால் அது நம்பிக்கையில் மட்டுமே நிலவும் உங்களின் நம்பிக்கையை யாரும் இங்கு கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனால் அதுவே நிரூபணமாக கூறப்படும் போது அசாதாரணம் மட்டும் போதுமானதல்ல.
மரப்பலகைகளும், ஆணியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதற்கு கட்டுரையிலேயே ஆதாரம் இருக்கிறது \\1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர்// இவர்கள் தான் அந்த இடத்தை முதலில் ஆராய்ந்தவர்கள்.
இந்த உலோகங்கள் நோவாவின் காலத்தில் பயன்படுத்தப்பட்டன என்பதை எப்படி அறிந்து கொள்வது? இரும்பு யுகத்தில் இருந்த அந்தக்காலத்தில் டைட்டானியமும் அலுமினியமும் பயன்பாட்டில் இருந்தது என்பதற்கு ஏதாவது தொல்லியல் கூறுகளை காட்டலாம் நீங்கள்.
ஒருவேளை ஆய்வுகள் முடியவில்லை என்றால் நீங்கள் காத்திருக்கலாம், எல்லா ஆய்வுகளும் முடிந்தபின்பு ஆம் அந்த இடத்தில் கப்பல் இருக்கிறது அதற்கு இன்னின்ன ஆதாரங்கள் என்று கூறலாம். முடிவதற்கு முன்பே அது நூஹுடைய கப்பல்தான் என்று ஏன் அறிவிக்கிறீர்கள்?
கல்லாய் சமைந்த மரம் என்பதில் கிலியடைய ஒன்றுமில்லை, ஆனால் ஒரு தளத்தில் மரம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வேறொன்றில் கல்லாயிருந்தாலும் அது கல்லாய்ச்சமைந்த மரம் என்றும்; கல்லாயிருந்தாலும் மரமாயிருந்தாலும் எங்களின் நம்பிக்கைக்கு முன்னால் எல்லாம் ஒன்றுதான் என்கிறார்களே சமூக அக்கரை கொண்ட யாருக்கும் அதில் கிலியடைய விசயம் இருக்கிறது.
அந்த மலையில் மட்டுமல்ல சற்றேறக்குறைய அனைத்து மலைகளிலும் குடியேற்றம் இருந்ததற்கான தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளன.
அந்த இடத்தில்கிடைத்துள்ள ஒரு உடைந்த மண்பானை கிடைத்தைக் கொண்டு அந்த இடத்தை சுற்றுலாத்தலம் போல உருவகிக்கிறார்கள். கிடைத்த பானை ஓட்டைக் கொண்டு அப்படி உருவகிக்க வழியில்லை. மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் அந்த மக்களிடையே நோவா கதை உலவியிருக்கிறது என்று தான் அதிலிருந்து கொள்ளமுடியும்.
ஜூதி எனும் அரபுச்சொல்லுக்கு மலை(!) என்றும் பொருளிருக்க குரான் மொழிபெயர்ப்புகளில் ஜூதி மலையில் அந்த கப்பல் தங்கியதாக தவறாக மொழிபெயர்த்திருப்பதை நீங்கள் உட்பட எந்த அறிஞரும் இதுவரை முணுமுணுக்கவில்லையே ஏன்? பிரச்சனை என்று வந்த பின்னர் இப்படியும் பொருள் கொள்ளலாம் அப்படியும் பொருள் கொள்ளலாம் என்பது சரியாக இல்லையே. ஜுபல் எனும் சொல் மலையை குறிப்பதற்கு இருக்கும் போது இறைவன் ஜூதி எனும் சொல்லை பயன்படுத்தியதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ(!)
காலத்தால் முற்பட்ட ஒருவரின் கதை காலத்தால் பிற்பட்ட மக்களிடம் நிலவியிருக்கிறது என்பதற்கு பெரிதாக யூகம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை.
ஆம். குரானில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் ஏனைய வேதங்களில் குறிக்கப்பட்டிருப்பதற்கும் வித்தியாசமிருக்கிறது, பைபிளில் அளவுகளெல்லாம் இருக்கிறது. குரானில் மாட்டிக்கொள்ளும்படி அளவுகளெல்லாம் இல்லை, பொதுவாகத்தான் இருக்கிறது, உண்மைதான்.
நோவாவின் கப்பலுக்கும் சுமேரிய, பாபிலோனிய மரபுகளுக்கும் தொடர்பிருப்பதாக நானும் கூறவில்லை, எல்லாப்புராணங்களிலும் இதுபோல் இருக்கிறது என்பது தான் நான் குறிப்பது.
ஒருவேளை அங்கு வாழ்ந்த மக்கள் ஏதோஒரு காரணத்திற்காக நங்கூரக்கல்லை நகர்த்திக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்றே கொள்வோம். அது எப்படி அந்த மலையில் கிடைக்கும் கல்லாகவே இருக்கிறது?
அன்றைய மொசபட்டோமியாவில் மட்டுமல்ல உலகின் பல பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கின் அடையாளங்கள் இருக்கின்றன. சிசிலியில், சிவாலிக் பகுதிகளில் வெள்ளத்தின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் நோவாவின் பெருவெள்ளத்தோடு தொடர்புடையனவா? அந்தப்பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கா? உலகம் முழுமைக்குமா? இந்தக்கதையின் படி வெள்ளம் உலகம் முழுமைக்கும் தான். இல்லையென்றால் அனைத்து மிருகங்களிலும் பறவைகளிலும் புள்ளினங்களிலும் சதைசதையாக ஏற்றிக்கொள்ளச் சொல்லவேண்டிய அவசியமென்ன? இன்றைய அராராத் மலையின் உயரம் நான் கூற வேண்டிய அவசியமின்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு உய்ரத்திலுள்ள மலையில் கப்பல் தங்கவேண்டுமென்றால் அந்த உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்திருக்கவேண்டும். கடல் மட்டத்தில் ஒரு சில மீட்டர்கள் கூடினாலே பாதி உலகம் காணாமல் போய்விடும் தெரியுமா உங்களுக்கு? மலை உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது உண்மை, எல்லா மிருகங்களையும் ஏற்றிக்கொள்ளச்சொன்னது உண்மை ஆனாலும் வெள்ளம் ஒரு பகுதில் மட்டும் தான், எங்கோ இடிக்கிறது அல்லவா?
ரான் யாட், டேவிட் ஃபசோல்டு இந்த இருவரின் ஆய்வின்போதே ரேடார் ஸ்கேன் பயன்படுத்தப்பட்டு மரம் ஆணி மூட்டுகள் அறைகள் அறைக்கதவு எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் டேவிட் ஃபசோல்டு எனக்கு ஐயமிருக்கிறது என்று விலகி அது நோவாவின் கப்பல் இல்லை என்று கூறவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது, ரான் யாட்டுக்கும் அறிவியல் ரீதியாக நிருவுவது கடினம் என்று கூறவேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.
\\இருவரும் ஒருவர்தான் எனும்போது, அந்தக் கப்பலை யார் கண்டுபிடித்தால்தான் என்ன? ஒரு முஸ்லிம் விஞ்ஞானி கண்டுபிடித்த மருந்து என்றால் நீங்கள் அதை பயன்படுத்த மாட்டீர்களா என்ன?// எனக்கு இதில் ஆட்சேபம் ஒன்றுமில்லை. ஆனால் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து நான் கிருஸ்தவ தளங்களிலிருந்து காப்பியடித்து எழுதுவதால் இதற்கு பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை எனும் பொருள்பட பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். அவ்வாறில்லை என்றாலும் கிருஸ்தவ தளங்களிலிருந்து எடுத்தெழுவதால் பதிலளிக்கும் தேவையில்லை எனும்போது நான் பிரித்தெழுதுவதில் பிழை ஒன்றுமில்லை தானே (என்றாலும் அந்த வாக்கியம் கொஞ்சம் கருத்துப்பிழையாகத்தான் இருக்கிறது)
பெருவெடிப்பிற்கு நேரடியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்பது உண்மை தான், அதற்கு காரணம் அறிவியல் இன்னும் அந்த உயரத்தை எட்டவில்லை என்பதுதான் காரணம். அதனால் எதற்குமே அறிவியல் ஆதாரங்கள் அவசியமில்லை என்றாகிவிடுமா? பெருவெடிப்பு அளவிற்க்குத்தான் அறிவியல் எட்டவில்லை நோவாவின் கப்பல் அளவிற்கு எட்டியிருக்கிறது எனவே அறிவியல் தடயங்களும் அவசியப்படுகிறது.
தோழமையுடன்
செங்கொடி
பின்னூட்டங்களை அறியும் பொருட்டு
நண்பர் செங்கொடி,
//ஒருவேளை ஆய்வுகள் முடியவில்லை என்றால் நீங்கள் காத்திருக்கலாம், எல்லா ஆய்வுகளும் முடிந்தபின்பு ஆம் அந்த இடத்தில் கப்பல் இருக்கிறது அதற்கு இன்னின்ன ஆதாரங்கள் என்று கூறலாம். முடிவதற்கு முன்பே அது நூஹுடைய கப்பல்தான் என்று ஏன் அறிவிக்கிறீர்கள்?//
இந்த விவாதங்களில் உங்கள் தரப்பு நிலைபாடு என்ன என்பதையே அடிக்கடி மறந்து விடுகிறீர்கள்!
‘எதையும் அறிவியல் ஆதாரங்கள் இருந்தால்தான் நம்புவோம்’ என்பது உங்கள் வாதம். அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியவில்லை என்றால் அந்த விஷயம் நிகழவேயில்லை என்பது உங்கள் முடிபு. சரிதானே?
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் வரை, அறிவியலாளர்கள் ‘Static Universe Model’ என்ற ‘என்றும் நிலைத்திருக்கும் பிரபஞ்சம்’ என்ற கொள்கையில் உறுதி(?)யாக இருந்தார்கள். அதாவது, இந்தப் பிரபஞ்சமானது ஆதியிலிருந்தே இப்படியே இருந்துக் கொண்டிருக்கிறது; இனியும் காலாகாலத்திற்கு இப்படியே இருக்கும். இதற்கு தோற்றமும் இல்லை. முடிவும் இல்லை’ என்ற கொள்கை. இதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் ‘Static Universe Model’ என்று இணையத்தில் தேடிப் பாருங்கள்.
இந்தக் காலத்தில் நம் விவாதம் நடந்திருந்தால் நீங்கள் என்ன மாதிரியான வாதத்தை முன்வைத்திருப்பீர்கள் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். “என்னது, பிரபஞ்சம் சூன்யத்திலிருந்து திடீரென்று தோன்றியதா? என்ன அபத்தம் இது? இதற்கெல்லாம் அறிவியலில் ஆதாரமே கிடையாது. பிரபஞ்சம் என்றென்றும் அப்படியே இருந்துக் கொண்டிருக்கிறது என்று அறிவியலாளர்கள் உறுதியாக சொல்லி விட்டார்கள். அது திடீரென்று தோன்றியது என்பதெல்லாம் குரானின் கட்டுக்கதை. அதனால் இஸ்லாம் ஒரு கற்பனைக் கோட்டை” என்றெல்லாம் உறுதி(?)யாக சொல்லியிருப்பீர்கள்.
இந்த உறுதியெல்லாம் எதுவரை? 1920-களின் இறுதியில் ‘பெருவெடிப்பு’ என்ற உண்மையை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து அறிவிக்கும்வரை. பெருவெடிப்பு சாத்தியம் என்ற அறிவியல் கண்டுபிடிப்பு ‘என்றும் நிலைத்திருக்கும் பிரபஞ்சம்’ என்ற முந்தைய அறிவியல் கொள்கையை தவிடுபொடியாக்கி விட்டது. சூன்யமான நிலையிலிருந்துதான் பிரபஞ்சம் தோன்றியது என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘சூன்யத்திலிருந்துதான் பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் அதை யாரும் படைக்கவில்லை. அது தானாக தோன்றியதா என்பது தெரியவில்லை’ என்று “வரும்… ஆனா வர்ராது..” என்ற ரேஞ்சில் காமடி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால், ‘பிரபஞ்சம் சூன்யத்திலிருந்து படைக்கப்பட்டது’ என்பதை இன்று நேற்றல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டது குர்ஆன். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்புதான் அறிவியலாளர்களுக்கு கிடைத்த ஆதாரம், (அதுவும் கூட இன்னும் யூகம் என்ற அளவில்தான் உள்ளது) 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு குறைபாடுகளுள்ள, முழுமை பெற்றிராத அறிவியலைக் கொண்டு நீங்கள் குர்ஆனை அளவிடுகிறீர்கள். நாங்களோ குர்ஆன் தரும் குறிப்புகளைக் கொண்டு இன்றைய அறிவியலை அளவிடுகிறோம்.
தீர்மானமாக முடிவு செய்யப்பட்டுவிட்ட எந்த அறிவியல் கொள்கைக்கும் குர்ஆனின் கருத்துகள் எக்காலத்திலும் முரண்படாது. அப்படி ஒரு முரண்பாடு இருக்குமென்றால் அந்தத் துறையில் இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டியவை இருக்கின்றன என்பதுதான் பொருள். கண்டுபிடிப்புகள் முழுமையடையும் தருணத்தில் அவை குர்ஆனின் கருத்துக்களோடு நிச்சயம் ஒத்துப் போகும். முரண்பாடுகள் நிச்சயம் அகலும்.
அதுவரை காத்திருக்க வேண்டியது நீங்கள்தான்; நாங்களல்ல!
இது நூஹ்நபியின் கப்பல்தான் என்பதை அறிவியல் ரீதியில் நிரூபித்தபிறகுதான் குர்ஆன் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்ற நிலை முஸ்லிம்களுக்கு இல்லை. இதை மறுக்க வந்திருக்கும் நீங்கள்தான் தகுந்த ஆதாரங்களைக் காட்டி ‘இது நூஹ் நபியின் கப்பலல்ல’ என்பதை நிரூபிக்க வேண்டும்.
உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை இப்போது புரிந்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதை திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டிய அவசியத்தை தயவு செய்து ஏற்படுத்தாதீர்கள். அது வீணான கால விரயம்.
உங்கள் பதிலில் நீங்கள் சொல்லியிருப்பது பெரும்பாலும் சப்பைக்கட்டுகள் தான் என்ற போதிலும், அவற்றிற்கு எனது அடுத்த பின்னூட்டத்தில் பதிலளிப்பேன்.
நன்றி
– சலாஹுத்தீன்
நண்பர் செங்கொடி,
உங்களின் இந்தப் பதிவும் பதில்களும், நீங்கள் இந்த விஷயத்தை அரைகுறையாக மட்டுமே புரிந்து கொண்டிருப்பதை காட்டுகின்றன.
ரான் யாட் மேற்கொண்ட ஆய்வகளின் குறிப்புகள் இணையத்தில் முறையாக பதியப் பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பார்த்திருந்தீர்களென்றால் //ரான் யாட்டுக்கும் அறிவியல் ரீதியாக நிருவுவது கடினம் என்று கூறவேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.// என்று நீங்கள் கூற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இணையத்தில் அந்த விபரங்களைத் தேடுவதற்கு உங்களுக்கு சிரமமாக இருந்தால் சொல்லுங்கள்.. அந்த இணையத் தளத்தின் முகவரியை உங்களுக்குச் சொல்கிறேன்.
மரப்பலைகள், உலோகங்கள் (குறிப்பாக டைட்டானியம், அலுமினியம் ஆகியவற்றை ஒத்த உலோகங்கள்) ஆகியவை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கும், கப்பலின் தளங்கள் இருப்பதற்கான சான்றுகளும், ஆய்வின்போது ராடார் ஸ்கேன் பயன்படுத்தப் பட்டதற்கும், கல்லாய்ச் சமைந்த மரத்திற்கும், இன்னும் ஏராளமான சான்றுகளும் (முக்கியமாக புகைப்படச் சான்றுகள்) அந்த இணையத் தளத்தில் பதியப் பட்டுள்ளன.
முத்தாய்ப்பாக, ரான் யாட் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி, உங்கள் பார்வைக்கு…
Many damaging things have been said about Ron, which, through first hand knowledge, I know to be totally false. Authors have spent pages trying to disprove his findings and speakers without any evidence of their own go to great lengths to discredit him. Most of these people have never taken the time to check out the things they are talking about! Ron’s response “Well bless their heart. If I hadn’t seen these things for myself I would be a skeptic too.”
Ron Wyatt said that “boat shaped object” was Noah’s Ark.
வேறு எதுவும் சந்தேகம் உள்ளதா உங்களுக்கு?
நன்றி
– சலாஹுத்தீன்
நண்பர் சென்கோடி அவர்களுக்கு,
குரானின் மொழிபெயர்ப்பு காலத்திற்கு காலம் மாறுவது அல்ல, நீண்கள் ஒரு அரபி ஆங்கில மொழி பெயர்பை நிரந்தரமாக வைத்துக்கொல்வது சிறந்தது.
அன்பு சகோதரர் சலாவுதீனுக்கு,
தோழர் செங்கொடியின் விமர்சனங்களுக்கு தாங்கள் அளிக்கும் பதில் அருமையாக உள்ளது..
இந்த விவாதம் இஸ்லாம் பற்றிய எனது புரிதலை மேலும் அதிகப்படுத்துகிறது..
நண்பர் சென்கொடி அவர்களே,
அதிகமாக எலுதி பக்கங்கலை நிரப்புவதை விடுத்து, குறைவாக எலுதி குரான் பற்றிய உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
நண்பர் சலாஹுத்தீன்,
யார் காத்திருக்கவேண்டும் என்பது குறித்த உங்களின் நீண்ட விளக்கம் எடுத்துக்கொண்ட பகுதியை விட்டு நகர்ந்து விட்டிருப்பதால் சுருக்கமாக பதிலளிக்கிறேன். கப்பல் அந்த இடத்தில் புதைந்திருக்கிறது எனும் உங்கள் நம்பிக்கையை யாரும் இங்கு கேள்விக்கு உள்ளாக்கவில்லை, அதை அறிவியலும் நிரூபிக்கிறது எனும் போது தான் கேள்வி எழுகிறது. அந்த இடத்தின் ஆய்வுகள் முடிந்து அது கப்பல் இல்லை என்று அறிவித்து விட்டார்களா? என்று உங்களிடமிருந்து கேள்வி எழுந்ததால் முடியும்வரை காத்திருக்கலாமே என நான் பதிலிறுத்தேன். அறிவியல் மாறக்கூடியது தான், காரணம் அது தேடலை அடிப்படையாக கொண்டது, சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது, அறிவை அடிப்படையாக கொண்டது மாறாக நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதல்ல. நேற்றொரு கொள்கை இன்றொரு கொள்கை என மாறிக்கொள்வதில் எனக்கு அசூயை ஒன்றுமில்லை. ஏனென்றால் நேற்று எது சரியாக இருந்ததோ அதை ஏற்றுக்கொண்டேன், இன்று எது சரியாக இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறேன், நாளை எது சரியாக இருக்குமோ அதை ஏற்றுக்கொள்வேன். ஏற்றுக்கொள்வதா மறுப்பதா எனும் கேள்வியில் எது சரியோ அதை ஏற்பது என்னுடைய நிலை. ஒரு அடிப்படையுமில்லாமல் இதுதான் சரி என நம்புவதற்கு நான் தயாரில்லை எதையும். எது நடந்தாலும் அது வேத வசனங்களில் ஒளிந்திருக்கிறதா என நீங்கள் தேடிப்பார்த்துக்கொள்ளலாம் அது உங்கள் பிரச்சனை என்னுடையதல்ல. ஆனால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என நீங்கள் கூறும்போதுதான், என்ன ஆதாரம் என கேள்வி எழுகிறது. எனவே உங்கள் நம்பிக்கையை யாருக்கும் ஆதாரம் காட்டவேண்டிய அவசியமின்றி நீங்கள் கூறிக்கொள்ளலாம், அறிவியல் என்று கூறும் பட்சத்தில் காத்திருந்து ஆதாரம் கிடைத்தபின் கூறுங்கள். இதில் பிழை ஒன்றுமில்லையே. (எடுத்துக்கொண்டதை விட்டு இனியும் விலகிப் போகமாட்டீர்கள் என எதிர்பார்க்கிறேன்)
ரான் யாட்டின் புத்தகங்கள் விற்கும் தளம் மட்டுமல்ல நீங்கள் இன்னும் தேடியிருந்தால் ரான் யாட்டின் நூலையும் பதிவுகளையும் கேள்விக்குள்ளாக்கும் தளங்களையும் நீங்கள் கண்டிருக்கக் கூடுமே, முயற்சித்துப் பாருங்கள்.
ராண் யாட் கண்டெடுத்ததாக சொல்லப்படும் மட்கிப்போன பலகையில் இருந்த கார்பனின் அளவு அவர் கொடுத்திருக்கும் இரண்டு பரிசோதனை கூடங்களின் அளவும் மாறுபாடாக இருக்கிறது. ஒன்றில் 1.88 விழுக்காடு மற்றொன்றில் 4.95 விழுக்காடு. மேலும் இந்த அளவு கார்பன் தான் அந்த பகுதியெங்கும் அதாவது அந்த மலைப்பகுதி முழுவதும் கிடைக்கிறது என்பதை முனைவர் பௌம் கார்ட்னெர் சோதனை செய்து காட்டியிருக்கிறார். எனவே ரான் யாட் கண்டெடுத்ததாக குறிப்பிடப்படுவது மரமல்ல. இன்னும் அந்த மலை எரிமலை குளம்புகளாலானது, எனவே மாங்கனீஸ் போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்கும் இதைத்தான் உலோகமாகவும் காட்டுகிறார்.
கல்லாய்ச்சமைந்த மரம் என ரான் யாட் காட்டுவதும் கல்மரமல்ல. இதுவரை உலகில் கண்டெடுக்கப்பட்ட எந்த கல்லாய்ச் சமைந்த மரத்தின் வகையிலும் சாராமலிருக்கிறது. முக்கியமான விசயம் என்னவென்றால் கல்லாய் மாறிய மரம் எனக் காட்டப்படும் ஒன்றில் வளர்வளையங்கள் காணப்படவில்லை. எந்த மரத்துண்டிலும் வளர்ச்சியை குறிக்கும் வரைகள் காணப்படும், கல்லாய் சமைந்த மரத்திலும் இவ்வரைகள் மாறுவதில்லை. ஆனால் இவ்வாறான வரைகள் எதுவும் கண்டெடுக்கப்பட்ட அதில் காணப்படவில்லை. இதுவரை 200 கல்லாய்ச் சமைந்த மரங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அனைத்தும் இன்றைய மரவகைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன, ஆனால் இதில் மட்டும் எந்த தொடர்பையும் காணமுடியவில்லை. ஏன்? ஆக சாதாரணமாக மலைப்பகுதிகளில் காணப்படும் எடை குறைந்த கூடிய கற்களை மரம் என்றும் கல்லாய்ப் போன மரம் என்றும் காட்டியிருக்கிறார்.
ரான் யாட்டுடன் ஜி பி ஆர் (தரை துளைக்கும் ரேடார்) பணியில் ஈடுபட்டிருந்த டாம் ஃபென்னர் கூறுகிறார், “பலமுறை நாங்கள் பரிசோதனை செய்தும் ஒவ்வொறு முறையும் வேறுவேறான முடிவுகளே கிடைத்தன, ஒரே மாதிரியான முடிவு திரும்பவும் கிடைக்கவில்லை எனவே ஒன்றரை நாளில் ரேடார் பணியை நாங்கள் முடித்துக்கொண்டோம்” என்று. மேலும் அதே இடங்களில் முனைவர் பௌம் கார்ட்னெர் மூலக்கூறு அதிர்வு கருவியை கொண்டு சோதித்துப்பார்த்துவிட்டு “மனித கரங்களினால் பணியப்பட்ட எதுவும் இங்கு இருப்பதற்கு 10விழுக்காடிற்கும் குறைவான வாய்ப்பே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
1959ல் அந்த இடம் நோவாவின் கப்பலாக அறியப்பட்டதிலிருந்து அங்கு ஆய்வுகளைச் செய்த பலர் இங்கு நோவாவின் கப்பல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் வன்டேமன்
டான் லாவரிட்ஜ்
டேவிட் மெர்லிங்
டேவிட் ஃபசோல்டு
டாம் ஃபென்னர்
பௌம் கார்ட்னெர்
ஜான் மோரிஸ்
ஹெரால்ட் கஃபின்
இன்னும் பலர். இதன் பிறகும் அங்கு நோவாவின் கப்பல் இருப்பதாக நம்பத்தான் முடியும், ஏற்கமுடியாது.
செங்கொடி
நண்பர் செங்கொடி,
//நேற்றொரு கொள்கை இன்றொரு கொள்கை என மாறிக்கொள்வதில் எனக்கு அசூயை ஒன்றுமில்லை. ஏனென்றால் நேற்று எது சரியாக இருந்ததோ அதை ஏற்றுக்கொண்டேன், இன்று எது சரியாக இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறேன், நாளை எது சரியாக இருக்குமோ அதை ஏற்றுக்கொள்வேன். ஏற்றுக்கொள்வதா மறுப்பதா எனும் கேள்வியில் எது சரியோ அதை ஏற்பது என்னுடைய நிலை.//
நேற்று ஒரு நிலை இன்று ஒரு நிலை என்று நாளுக்கு நாள் நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இன்று உங்களுக்குத் தெரிந்திருப்பது மட்டுமே உண்மை என்று நீங்கள் நம்பிக் கொண்டிருப்பதிலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பூனை கண்ணை மூடிக் கொண்டிருக்கும் வரை அதற்கு எல்லாமே இருட்டாகத்தான் தெரியும் என்பதை நான் நன்கு புரிந்து வைத்திருக்கிறேன்.
ஆனால், ‘நான் இன்று எதை உண்மை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறேனோ அதை மட்டுமே நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக நீங்கள் எதையாவது நம்பிக் கொண்டிருந்தால் அதுவெல்லாம் வெறும் கற்பனை. நாளை நான் என் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளும்போது நீங்களும் மாறிக் கொள்ள வேண்டும்’ என்று, உங்கள் நம்பிக்கையை எங்கள் மேல் திணிக்க முற்படும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.
யோசனை செய்து பாருங்கள் நண்பரே!
நிலையில்லாத இந்த அரைகுறை அறிவைக் கொண்டுதானா நீங்கள் இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்கப் போகிறீர்கள்?
//ரான் யாட்டோ முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக இதை நிரூபிப்பது கடினமான பணி என்று குறிப்பிட்டிருக்கிறார்.// என்று நேற்று சொன்ன நீங்கள், ரான் யாட் அவ்வாறு சொன்னதாகத் தெரியவில்லை.. மாறாக அது நோவாவின் கப்பல்தான் என்று ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டியபிறகு, இன்று வேறொரு பட்டியலைக் கொடுத்து ‘இவர்களெல்லாம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்’ என்கிறீர்கள்.
இன்று நீங்கள் இந்த பட்டியலில் உள்ள நபர்களை நம்புகிறீர்கள். நானோ குர்ஆனில் சொல்லப் பட்டதை நம்புகிறேன். அதன் கருத்துக்களோடு ஒத்துப் போவதால் ரான் யாட்டை நம்புகிறேன்.
உங்கள் பட்டியலில் உள்ள நபர்கள் உங்களைப் போலவே நாளையே அவர்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து நீங்களும் நிலை மாறலாம். ஆனால் குர்ஆனில் சொல்லப்பட்டவை ஒருபோதும் மாறாது. மாற வேண்டிய அவசியமும் இல்லை.
நன்றி
– சலாஹுத்தீன்
அருமை தோழர்
தொடருங்கள் அம்பலபடுத்தலை
Need Changes – மாற்றங்கள் தேவை
Issadeen Rilwan – Changes Do Club
அன்பின் சகோதரர் சென்கொடியாருக்கு…………….
அன்பின் சகோதரருக்கு,
கடவுளின் நல்லருள் தேடியவனாக,
நேற்று எனது நண்பனின் 3 மாதாங்கள் நிறைந்த குழந்தையை கண்டு கொஞ்சிச் சிறிக்கும் போது அந்த சிறிசு தனக்குச் சொந்தமான ம்.. ம்.. ஆ என்கிற வார்த்தைகளால் என்னை சந்தோஷப்படுத்தியது, அது நியாயமானது,
ஆனால் எனது சகோதரர் சென்கொடியாரின் வார்த்தைகளும் அப்படியானதா என்று என்னை சிந்திக்கச் செய்கின்றது.
புனித அல் குர் ஆனின் அழகிய, அற்புதமான, உலக விஞ்ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் சவால் ஊதக்கூடிய வசனங்களை பச்சிலம் குழந்தையின் வார்த்தைகளிலும் சிந்தனைகளிலும் எழுதி வருகின்றார்.
கவலையாக இருக்கின்றது,
அவருக்கு நிறைய ஆலோசனைகள் வழங்க வேண்டும்போல் இருக்கின்றது.
ஒரு கணக்காலன் தனது கூட்டல் கழித்தல் கணக்குகளை சரிபார்த்துக்கொள்வதற்கு தன்னுடன் ஒரு calculator வைத்திருப்பது போல் இன்றைய விஞ்ஞானிகளும் அறிஞர்களும் ஒரு புத்தகத்தை வைத்துக்கொள்கின்றார்கள், அதன் மூலம் தங்கலது கண்டுபிடிப்புக்கள் சரியானது, என்கேயவது முரண்படுகின்றதா எவரது விமர்சனத்திற்கும் உள்வாங்கப்படுமா என்பதை அந்த புத்தகத்தின் மூலம் சரிபார்த்திக்கொள்கின்றார்கள்.
அந்த புத்தகம் தான் 14 நூற்றாண்டுகளுக்கு முன் இறக்கியருளப்பட்ட, சென்கொடியாரின் சிந்தனையற்ற எழுத்தாக்கங்களுக்கு சன்கூதப்படத்தக்கது, அது தான் அந்த புனித அல் குர்ஆன் தான் என்றால் மிகையாகாது.
எனது அன்பருக்கு நான் பொதுவாகச் சொல்லும் சில வார்த்தைகள் மட்டுமே இவைகள்.
செங்கொடியார் தனது இணையத்தளத்தில் எழுதிவரும் ஒவ்வொரு கட்டுரைகளுக்கும் தொடராக பாடம்படிப்பிக்கப்படும் என்பதையும் சொல்லிக்கொள்கின்றேன்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்
நண்பர் சலாஹுத்தீன்,
நான் மாறுகிறேன். அறிவியல் உலகம் மாறுகிறது, புதிய புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன, அது புதிய புதிய ஆய்வுகள் மூலம் நிருவப்படுகின்றன. அனைத்தும் மாறிக்கொண்டுஇருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் அதனுடன் ஒத்திசைந்து வாழும் சமூகப் பிராணியான நான் மாறுகிறேன், மாறவேண்டும். மாறுவது எல்லாமும் ஏற்கக்கூடாததல்ல, மாறாமலிருக்கும் எதுவும் ஏற்கக்கூடியதும் அல்ல. எதை ஏற்க வேண்டும் என்பதும் எதை மறுக்கவேண்டும் என்பதும், எது சரி எது தவறு என்பதை அடிப்படையாக கொண்டது.
நான் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சரியானதிற்கு வருவதால் மாறுகிறேன், தவறானதை விட்டு நீங்குவதால் மாறுகிறேன். ஆனால் நீங்களோ கிழிந்து போன சல்லடையை கொண்டு எல்லாவற்றையும் அறித்து மிஞ்சுவதை நம்புகிறீர்கள். நம்புவதற்கும் ஏற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அறிவியல் நிலையற்றது ஆனால் உரசிப்பார்ப்பதற்கு அறிவியலை விட சிறந்த வழி எது? குரானை வைத்துக்கொண்டு எதையும் உரசிப்பார்க்க முடியாது. தேனீக்கள் கனிகளை உண்கின்றன (அதிலும் பேரீத்தம் பழங்களை) என்று குரான் கூறுகிறது. எந்த அறிவியல் நிரூபணமும் தேவையில்லாமல் இதை நீங்கள் நம்பலாம். ஆனால் என்னால் இந்த அபத்தத்தை ஏற்க முடியாது. நீங்கள் நிலையாக நம்புவதால் தேனீ கனிகளை உண்பது உண்மை என கூறமுடியுமா? இல்லை என்று மறுக்க முடியுமா? புதிய உண்மைகளை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பவர்களாலேயே உலகம் முன்னேறுகிறது, அவர்களாலேயே உண்மையான முன்னேற்றத்திற்கான திசையில் மாறுவதற்கு ஆயத்தமாகவும் இருக்கிறது. பழம் பசலித்தனங்களை அதுதான் உண்மை என நம்பிக்கொண்டிருப்பவர்களை கண்டு எப்படி இவர்களை சீராக்குவது என்றே சிந்திக்கிறோம், மீறிப்போயின் அலட்சியம் செய்கிறோம். குரானில் இருந்துவிட்டால் போதும் அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அதுபற்றி கவலையில்லை எனும் உங்களின் நம்பிக்கைக்கும்; ஆய்வுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டால் சரி இல்லையென்றால் தவறு எனும் என்னுடைய ஏற்பிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
முழுக்க முழுக்க இதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது கடினமான பணி என நான் சொல்லவில்லை, ரான் யாட் தன்னுடைய நூலின் 13வது பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாக டேவிட் மெர்லிங் கூறுகிறார்.
எடுத்துக்கொண்ட தலைப்பைவிட்டு வெகுதூரம் கொண்டுவந்து விட்டீர்கள். மேற்கூறியவற்றிற்கு நீங்கள் விளக்கமளிக்கும் போது நோவாவின் கப்பல் குறித்து விடுபட்டவற்றிற்கும் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் அப்போதுதான் நாம் மீண்டும் தலைப்பிற்கு திரும்புவதற்கு வசதியாக இருக்கும்.
செங்கொடி
55:56 வசனத்தில் என்ன சொல்லியிருக்குன்னு யாராவது சொல்லுங்கப்பா! குரானின் அறிவியலை கொஞ்சம் உரசிப்பார்ப்போம்!
நூஹின் கப்பல் மட்டுமல்ல குரானில் வரும் வசனங்களும் புளுகுதான்.
ஆதம் முதல் இவ்வுலகம் அழிக்கப்படும் வரையில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவிற்குமான பிரதிபலன்கள் வழங்கப்படுவது மறுமைநாளின் போதுதான் என்பது முஹம்மதின் கூற்று. ஆனால் நூஹின் காலத்தில் பிரளயத்தில் அழிக்கப்பட்டவர்கள் நரகத்தில் புகுத்தப்பட்டதாக வசனம்: 71:25 கூறுகிறது.
“அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர். பிறகு நரகத்திலும் புகுத்தப்பட்டனர்………”
நூஹின் வார்த்தைகளை கேட்காதவர்களை பிரளயத்தில் மூழ்கடிக்கப்பட்டதே ஒரு மோசடி. அவர்கள் நூஹிற்கு மாறு செய்யவேண்டும் என்பதுதான் அல்லாவின் விருப்பம். இதை நூஹே விளக்குகிறார்.
வசனம்:- 11:34. மேலும் நான் உங்களுக்கு உபதேசம் செய்ய நாடினாலும், அல்லாஹ் உங்களுக்கு வழிகெடுக்க நாடியிருந்தால், என்னுடைய உபதேசம் உங்களுக்குப் பலனளிக்காது. அவன் உங்களுடைய இறைவன். அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
நண்பர் செங்கொடி,
//நான் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சரியானதிற்கு வருவதால் மாறுகிறேன், தவறானதை விட்டு நீங்குவதால் மாறுகிறேன். ஆனால் நீங்களோ கிழிந்து போன சல்லடையை கொண்டு எல்லாவற்றையும் அறித்து மிஞ்சுவதை நம்புகிறீர்கள்.//
இதைப் படித்ததும் சிரிப்புதான் வருகிறது. 80 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலாளர்கள் கண்டுபிடித்த ஒரு விஷயத்தை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் அறிவித்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டிய பிறகுமா இப்படி எழுதியிருக்கிறீர்கள்?
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை இஸ்லாம் எதிர்க்கிறது என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு நண்பரே. அதற்கு மாறாக, இன்னும் கண்டுபிடிக்கப் பட்டிராத பல விஷயங்களை குர்ஆன் சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளது.
பெருவெடிப்பிற்ற்கு முன் இருந்த நிலை பற்றி அறிவியலாளர்கள் இன்னும் ஆராயத் தொடங்கவில்லை என்பதாக நீங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தீர்கள். குர்ஆன் காட்டும் குறிப்புகளின்படி அது புகையாக இருந்தது. இதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து அறிவிக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ தெரியவில்லை.
அறிவியல் என்பது ஒரு குறுகிய சாவித்துவாரத்தின் மூலம் உலகை காண்பதைப் போன்றது. அந்தத் துவாரத்தில் தெரிவது மட்டும்தான் உலகம் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால் எப்படி?
சரி.. மீண்டும் நாம் தலைப்பிற்கு திரும்புவோம்.
//ஜுபல் எனும் சொல் மலையை குறிப்பதற்கு இருக்கும் போது இறைவன் ஜூதி எனும் சொல்லை பயன்படுத்தியதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ(!)// என்று கேட்டிருக்கிறீர்கள். இதையேதான் நானும் எழுத நினைத்திருந்து விட்டுப் போய்விட்டது.
மலையை குறிக்க ‘ஜபல்’ என்ற சொல் அதிக இடங்களில் குர்ஆனில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது உண்மையே. அதிகம் பயன்பாட்டிலும் இருக்கும் சொல்தான் அது. ஆனால் ‘ஜூதி என்ற மலை மீது இறக்கினோம்’ என்று வாக்கியம் இருக்கவேண்டுமென்றால் ‘ஜபல் ஜூதி’ என்று குர்ஆன் வசனத்தில் இருந்திருக்க வேண்டும். உதாரணமாக ஜபல் நூர், ஜபல் ஹிரா, ஜபலுர் ரஹ்மா போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். ஆனால் அந்த குர்ஆன் வசனத்தில் ‘ஜூதி’ என்று மட்டுமே வந்துள்ளது. ஜூதி என்பதற்கு ‘மலை’ என்ற பொருள் இல்லாமல் அது ஒரு இடத்தின் பெயர் என்று மட்டுமே இருந்தால் அது ஒரு சமவெளியையோ, பள்ளத்தாக்கையோ, பாலைவனத்தையோ, கானகத்தையோ கூட குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா? அவ்வாறல்லாமல், ஜூதி என்ற சொல்லுக்கு ‘மலை’ என்ற பொருள் இருந்ததாலேயே அந்த வசனத்தில் ‘ஜூதியில் இறக்கினோம்’ என்று சொல்லப் பட்டுள்ளது.
ஜபல் எனும் சொல் இருக்கும்போது ஏன் ஜூதி என்ற சொல் உபயோகிக்கப் பட்டது என்ற உங்கள் கேள்விக்கு, ‘ஏன் உபயோகிக்கக் கூடாது?’ என்ற என் கேள்வியையே பதிலாக்குகிறேன்.
//அன்றைய மொசபட்டோமியாவில் மட்டுமல்ல உலகின் பல பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கின் அடையாளங்கள் இருக்கின்றன. சிசிலியில், சிவாலிக் பகுதிகளில் வெள்ளத்தின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் நோவாவின் பெருவெள்ளத்தோடு தொடர்புடையனவா? //
ஆய்வாளர்களின் கணிப்புப்படி வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடம் மெசபடோமியாவியை உள்ளடக்கிய ஒரு பிரதேசம். அவர்களின் கணிப்பிற்கு வலு சேர்க்கும் வகையிலேயே இன்றைய ஈராக் பகுதியில் வெள்ளப் பெருக்கின் அடையாளங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
//அந்தப்பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கா? உலகம் முழுமைக்குமா? இந்தக்கதையின் படி வெள்ளம் உலகம் முழுமைக்கும் தான். இல்லையென்றால் அனைத்து மிருகங்களிலும் பறவைகளிலும் புள்ளினங்களிலும் சதைசதையாக ஏற்றிக்கொள்ளச் சொல்லவேண்டிய அவசியமென்ன?//
பெருவெள்ளம் ஏற்பட்டது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில்தான் என்று நம்புவதற்கு குர்ஆனில் ஆதாரங்கள் இருக்கின்றன. முழு உலகமும் மூழ்கியது என்பது கிருஸ்துவ நம்பிக்கை. குர்ஆனில் அதற்கான குறிப்பு எதுவும் இல்லை.
உலகின் எல்லா பிரதேசங்களிலும் ஒரே மாதிரியான உயிரினங்கள் வசிப்பதில்லை. காடு, பாலைவனம், கடலோர பிரதேசம், பனிப் பிரதேசம் போன்ற இடங்களில் வெவ்வேறான உயிரினங்கள் வசிக்கின்றன. முழு உலகும் மூழ்கப் போகிறது என்றால் நூஹ் நபி உலகம் முழுவதும் சுற்றி வந்து எல்லா பிரதேசங்களின் உயிரினங்களையும் ஜதை ஜதையாக சேகரித்திருக்க வேண்டும். அப்படி அவர் செய்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே, அவர் தான் வசித்த பிரதேசத்தில் வசித்த உயிரினங்களை மட்டும் ஏற்றியிருப்பார் என்ற கருத்து வலுப்பெறுகிறது.
//இன்றைய அராராத் மலையின் உயரம் நான் கூற வேண்டிய அவசியமின்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு உய்ரத்திலுள்ள மலையில் கப்பல் தங்கவேண்டுமென்றால் அந்த உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்திருக்கவேண்டும். கடல் மட்டத்தில் ஒரு சில மீட்டர்கள் கூடினாலே பாதி உலகம் காணாமல் போய்விடும் தெரியுமா உங்களுக்கு?//
உலகின் ஆக உயரமான சிகரம் எவரஸ்ட். எனவே முழு உலகமும் மூழ்க வேண்டுமென்றால் அராரத் மலை அளவிற்கல்ல, எவரஸ்ட் உயரத்திற்கே வெள்ளம் வந்திருக்க வேண்டும்.
//மலை உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது உண்மை, எல்லா மிருகங்களையும் ஏற்றிக்கொள்ளச்சொன்னது உண்மை ஆனாலும் வெள்ளம் ஒரு பகுதில் மட்டும் தான், எங்கோ இடிக்கிறது அல்லவா?//
இடிக்கத்தான் செய்யும். அசாதாரண நிகழ்வு என்றால் அது அறிவியல், பௌதீக விதிகளை மீறியதாகத்தான் இருக்கும்.
வேறு எதாவது கேள்விகள் மீதம் உள்ளதா? இல்லையென்றால் உங்களின் இன்னொரு பதிவிற்கு நகரலாம்.
நன்றி
– சலாஹுத்தீன்
நண்பர் சலாஹுத்தீன்,
ஏனையவையெல்லாம் நெடுஞ்சுவர்கட்டி பார்வையிலிருந்து உலகை மறைத்து வைத்திருக்கும் போது சாவித்துவாரம் வழியாகவாவது காட்டுவதுதான் அறிவியல்.
புகையாக இருந்தது குறித்து தெரிய இதே தொடரின் வேறொரு பகுதிக்கு செல்லுங்கள். உங்களுக்கு அறிவியல் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஒரு விசயம் குரானில் இருக்கிறதா பொருந்திவருகிறதா என்பதுதான் முக்கியமேயன்றி, அறிவியலுக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை. குரானுடன் பொருந்திவருகிறதா இல்லையா என்பதுதான் உங்களின் கேள்வி. பொருந்தி வந்தால் ஆஹா அறிவியலை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்று கதைப்பீர்கள், இல்லையென்றால் குப்பை என்று தள்ளிவிடுவீர்கள். அறிவியலை தவிர்த்தால் குரானையே தவிர்த்துவிடுவார்கள் என்பதால்தான் தவிர்க்க முடியாமல் அறிவியல் எனும் சொல்லை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீகள். தேனீ பழம் குறித்து எதுவும் பேசாமல், புகையை இழுத்து வந்திருப்பதே அதற்கு போதுமான சாட்சி.
ஜூதி எனும் சொல்லுக்கு மலை என்பது தான் பொருள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.பிரச்சனை என்று வந்தபின் குரானுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுப்பது தான் உங்களின் வழமை.
பிஜே வின் மொழி பெயர்ப்பு: அந்தக்கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது
ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு: ஜூதி மலை மீது தங்கியது
யூசுப் அலி மொழிபெயர்ப்பு: The Ark rested on Mount Judi
கிட்டத்தட்ட அனைத்து மொழிபெயர்ப்புகளிலுமே ஜூதி மலை என்று குறித்திருக்க, உங்களைத்தவிர யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. நீங்களாவது உங்கள் வலைத்தளத்தில் ஜூதி மலையல்ல ஜூதி என்பதே மலை தான் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கலாம். அராராத்திற்கு அருகிலேயே ஜூதி என்றொரு மலை இருக்க, மலைக்கு ஜபல் என்ற சொல்லும் இருந்திருக்க எந்த இடத்தில் கப்பல் தரை தட்டியது என்பதை தெரிவிக்க குழப்பமே ஏற்படாமல் ஜூதி எனும் சொல்லை தேர்ந்தெடுத்த அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்னே தீர்க்கதரிசனம்.
உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான விலங்குகள் வசிப்பதில்லை. ஒரு சில விலங்குகள் அந்தந்தப் பகுதிக்கேயான சிறப்பு விலங்குகளாக இருக்கும். ஒரு பகுதியை மட்டும் அழிக்க நினைத்த இறைவன் அந்தப்பகுதிக்கான சிறப்பு விலங்கை மட்டும் ஏற்றிக்கொள்ளச்சொல்லாமல் விலங்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஜோடியை ஏற்றிக்கொள்ளச்சொல்வானேன்? இந்த ஒவ்வொன்றிலிருந்தும் எனும் சொல்லுக்கான பொருளை நூஹ் சரியாக புரிந்து கொள்ளவில்லையா அல்லது அந்தச்சொல்லுக்கு (மின் குல்லின்) அந்தப்பகுதியின் சிற்ப்பு விலங்கை குறிக்கும் பொருள் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் அருஞ்சொற்பொருள் கண்டு விளக்கவேண்டும்.
எவெரெஸ்ட் உயரத்திற்கு வெள்ளம் வரவில்லை என்றாலும் அராராத் அளவிற்கு வந்திருக்கிறது, சரிதானே இப்போது அராராத்தை விட உயரமான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, ராக்கி மலை, கிளிமஞ்சாரோ போன்ற சில உயரமான மலைகளை தவிர ஏனைய பகுதிகள் மூழ்கியிருக்கும் சரிதானே. அப்போது இதுபோன்ற வெகுசில மலைகளின் உயரத்தில் தங்கியிருந்த மக்களை தவிர ஏனையவர்களெல்லாம் அழிந்திருப்பார்கள் அப்படித்தானே. இப்படிப்பட்ட வெள்ளத்தை உலகம் முழுமைக்கும் வந்த வெள்ளமாக சொல்வது பொருத்தமாக இருக்குமா? இல்லை மொசபட்டோமியா பகுதிக்கு மட்டும் வந்த வெள்ளம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா?
நீங்கள் செங்கொடி தளத்தின் எந்தப் பதிவிற்கும் நகரலாம் ஏனென்றால் செங்கொடியின் கதவுகள் மூடப்படுவதில்லை. ஆனால் கண்டெடுக்கப்பட்ட மரத்தின் கார்பன் அளவு வேறுபாடுகள், கல்லாய்போன மரம் குறித்த கேள்விகள், நங்கூரக்கல்லின் ஒத்த தன்மைகள் மற்றும் இன்னும் கேட்கப்படாத பெருவெள்ளம் எப்படி வந்தது , வருவதற்கு சாத்தியமுண்டா? பின் எங்கு சென்றது? போன்றவைகளும் இருக்கின்றன. ஆனால் நான் வற்புறுத்தவில்லை. வேறு பதிவுகளில் சந்திக்கலாம்.
தோழமையுடன்
செங்கொடி
நண்பர் செங்கொடி,
//உங்களுக்கு அறிவியல் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஒரு விசயம் குரானில் இருக்கிறதா பொருந்திவருகிறதா என்பதுதான் முக்கியமேயன்றி, அறிவியலுக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை. குரானுடன் பொருந்திவருகிறதா இல்லையா என்பதுதான் உங்களின் கேள்வி. பொருந்தி வந்தால் ஆஹா அறிவியலை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்று கதைப்பீர்கள், இல்லையென்றால் குப்பை என்று தள்ளிவிடுவீர்கள். அறிவியலை தவிர்த்தால் குரானையே தவிர்த்துவிடுவார்கள் என்பதால்தான் தவிர்க்க முடியாமல் அறிவியல் எனும் சொல்லை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீகள்.//
அறிவியலைப் பற்றிய இஸ்லாமின் கண்ணோட்டத்தை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது வியப்பளிக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள், கொள்கைகள் அனைத்தையும் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1) குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கும், குர்ஆனோடு முரண்படாத கண்டுபிடிப்புகள்
2) குர்ஆனில் குறிப்பிடப்பட்டிராத, ஆனால் குர்ஆனோடு முரண்படாத கண்டுபிடிப்புகள்
3) குர்ஆனோடு முரண்படும் கொள்கைகள்
இவற்றில், மூன்றாவதைத் தவிர மற்ற இரு வகை கண்டுபிடிப்புகள், கொள்கைகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. இவை தவிர, அறிவியலாளர்கள் இன்னும் கண்டுபிடித்திராத ஏராளமான விஷயங்களை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.
குர்ஆனில் ஆயிரத்திற்கும் அதிகமான அறிவியல் அத்தாட்சிகள் இருப்பதாக டாக்டர் ஜாகிர் நாயக் குறிப்பிடுகிறார். அவற்றில் பல இன்னும் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை.
//ஏனையவையெல்லாம் நெடுஞ்சுவர்கட்டி பார்வையிலிருந்து உலகை மறைத்து வைத்திருக்கும் போது சாவித்துவாரம் வழியாகவாவது காட்டுவதுதான் அறிவியல்.//
இல்லை நண்பரே. சாவித்துவாரத்தில் மட்டும் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். அதையும் தாண்டி சிந்தித்துப் பாருங்கள் என்று தூண்டுவதுதான் இஸ்லாம். “நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என பல இடங்களில் இடித்துரைக்கிறது குர்ஆன்.
//தேனீ பழம் குறித்து எதுவும் பேசாமல், புகையை இழுத்து வந்திருப்பதே அதற்கு போதுமான சாட்சி.//
பெருவெடிப்பிற்கு முந்தைய நிலை குறித்து அறிவியலாளர்கள் இன்னும் ஆராயத்தொடங்கவில்லை என்று நீங்கள் சொன்னதால்தான் நான் ‘அது புகையாக இருந்தது’ என்ற குர்ஆனின் குறிப்பை சுட்டிக் காட்டினேன். தேனீ பழம் என்ன பிரச்னை என்பது எனக்கு புரியவில்லை. இது பற்றி நீங்கள் முன்னரே எழுதியிருந்தால் அதன் சுட்டியைத் தாருங்கள். அது பற்றி நான் எதுவும் அறிந்திருந்தால் அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.
குர்ஆன் அரபி மூலத்தில் ‘ஜூதி’ என்ற வார்த்தை மட்டும்தான் இருக்கிறது. ‘ஜபல்’ என்ற மலையைக் குறிப்பிடும் சொல் அங்கு இல்லை. அரபி மூலத்தில் இல்லாத ஒரு சொல்லை மொழி பெயர்ப்பில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அதை அடைப்புக்குறிக்குள் இடுவது மொழிபெயர்ப்பாளர்களின் வழக்கம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று மொழிபெயர்ப்புகளிலும் ‘மலை’ என்ற சொல் அடைப்புக்குறிக்குள் இல்லை. அரபி மூலத்தில் இல்லாத ஒரு சொல்லை அவர்கள் எப்படி மொழிபெயர்ப்பில் இணைத்தார்கள்? ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால்தான்.
//ஒரு பகுதியை மட்டும் அழிக்க நினைத்த இறைவன் அந்தப்பகுதிக்கான சிறப்பு விலங்கை மட்டும் ஏற்றிக்கொள்ளச்சொல்லாமல் விலங்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஜோடியை ஏற்றிக்கொள்ளச்சொல்வானேன்? இந்த ஒவ்வொன்றிலிருந்தும் எனும் சொல்லுக்கான பொருளை நூஹ் சரியாக புரிந்து கொள்ளவில்லையா அல்லது அந்தச்சொல்லுக்கு (மின் குல்லின்) அந்தப்பகுதியின் சிற்ப்பு விலங்கை குறிக்கும் பொருள் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் அருஞ்சொற்பொருள் கண்டு விளக்கவேண்டும்.//
இந்தியப் பிரதமர் ஒரு வரிச்சலுகையை அறிவித்து, ‘இது வரி செலுத்தும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்’ என்று சொன்னால் நீங்கள் எப்படி பொருள் கொள்வீர்கள்? அறிவிப்புச் செய்யும் பிரதமர் எந்த பிரதேசத்தை பிரதிநிதிக்கிறாரோ அந்த பிரதேசத்து மக்களை மட்டுமா? அல்லது முழு உலகிலும் உள்ள ‘அனைத்து மக்களை’யுமா?
//எவெரெஸ்ட் உயரத்திற்கு வெள்ளம் வரவில்லை என்றாலும் அராராத் அளவிற்கு வந்திருக்கிறது, சரிதானே இப்போது அராராத்தை விட உயரமான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, ராக்கி மலை, கிளிமஞ்சாரோ போன்ற சில உயரமான மலைகளை தவிர ஏனைய பகுதிகள் மூழ்கியிருக்கும் சரிதானே//
அராராத் மலை அளவிற்கு முழு உலகமும் சீராக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் என்று நான் சொல்லவில்லை. அராராத் மலையை உள்ளடக்கிய ஒரு பிரதேசம் மட்டுமே மூழ்கியிருக்கும் என்பதுதான் ஆய்வாளர்களின் கணிப்பு.
//..கண்டெடுக்கப்பட்ட மரத்தின் கார்பன் அளவு வேறுபாடுகள், கல்லாய்போன மரம் குறித்த கேள்விகள், நங்கூரக்கல்லின் ஒத்த தன்மைகள்..//
நான் அறிவியல் ஆய்வாளன் அல்ல. அராராத் மலைப்பகுதிக்குச் சென்று அந்தக் கப்பலையும் நான் பார்த்ததில்லை. நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வுகள் நடத்திய வெவ்வேறு ஆய்வாளர்களின் கருத்துக்களை நாம் ஏற்று கொள்கிறோம். ரான் யாட் போன்ற ஆய்வாளர்கள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாத சில விஷயங்கள் அதில் இருந்தாலும் அது நோவாவின் கப்பல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். வேறு சில ஆய்வாளர்கள் அதில் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்கள். இதில் யார் உண்மை சொல்கிறார்கள் என்று எப்படி கண்டறிவது?
//..மற்றும் இன்னும் கேட்கப்படாத பெருவெள்ளம் எப்படி வந்தது , வருவதற்கு சாத்தியமுண்டா? பின் எங்கு சென்றது? போன்றவைகளும் இருக்கின்றன //
நண்பர் செங்கொடி,
யூத, கிருஸ்துவ, இஸ்லாமிய வேத நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நோவா எனப்படும் நூஹ் நபி அவர்கள், ஒரு கற்பனை கதாபாத்திரமல்ல. அவர் நிஜமாகவே வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர் எனில், அவர் காலத்தில் மாபெரும் அசாதாரண நிகழ்வாக ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டது என்பதை கற்பனையாக புனைந்து அவர் காலத்திற்கு பின் வந்த இறைவேதங்களிலெல்லாம் பதிவு செய்து வைப்பது சாத்தியமான காரியமா? நேஷனல் ஜியாக்ரபி இணையத்தளத்தில் ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்: Geology grew partly out of a search for evidence of Noah’s Flood. ஒரு கற்பனைக்கதையை முன்வைத்து அறிவியலின் ஒரு பிரிவு தோன்றியது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?
நன்றி
– சலாஹுத்தீன்
பெருவெள்ளம் பூமி முழுவதும் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமான குரானின் வசனங்கள்.
வசனம்-71:26. மேலும் நூஹ் கூறினார்,”என்னுடைய இறைவனே! நிராகரிப்பாளர்களிலிருந்து வசிக்க எவரையும் பூமியின் மீது நீ விட்டுவிடாதே.
வசனம்-37:77. மேலும், அவருடைய சந்ததியைத் தான் நாம் மிஞ்சியுள்ளோராய் ஆக்கினோம்
//வசனம்-71:26. மேலும் நூஹ் கூறினார்,”என்னுடைய இறைவனே! நிராகரிப்பாளர்களிலிருந்து வசிக்க எவரையும் பூமியின் மீது நீ விட்டுவிடாதே.
வசனம்-37:77. மேலும், அவருடைய சந்ததியைத் தான் நாம் மிஞ்சியுள்ளோராய் ஆக்கினோம்//
சரியான மொழிபெயர்ப்பு இதோ:
71:26 அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
‘இக்காஃபிர்களில்’ என்று குறிப்பிட்டுச் சொல்வதை கவனிக்கவும்..
37:77 மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
இதில் ‘அவருடைய சந்ததியைத்தான்..’ என்று குறிப்பிடப் படாததை கவனிக்கவும்.
//வசனம்-71:26. மேலும் நூஹ் கூறினார்,”என்னுடைய இறைவனே! நிராகரிப்பாளர்களிலிருந்து வசிக்க எவரையும் பூமியின் மீது நீ விட்டுவிடாதே”
“71:26 அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே”
இரண்டு மொழிபெயர்ப்புகளும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றன. இவற்றில் “பூமியின் மீது” மற்றும் “எவரையும்” என்ற இரண்டுமே முக்கியமானவை.
”வசனம்-37:77. மேலும், அவருடைய சந்ததியைத் தான் நாம் மிஞ்சியுள்ளோராய் ஆக்கினோம்/”
”37:77 மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்”
இவ்விரண்டு மொழிபெயர்ப்புக்கும் கருத்து வேற்பாடு இருப்பதாகவும் தோன்றவில்லை. நீங்கள் அளித்த மொழிபெயர்ப்பில் “தான்” என்பது இல்லையே தவிர அதன் கருத்தும் ஒன்றுதான். பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் தானே பிற்காலம் நிலைத்திருந்தனர்! மற்றவர்கள் அழிந்துவிட்டனர் என்றுதானே அர்த்தம்.
ஆளுக்கொரு விதமாக குரானை மொழிபெயர்த்தால் நாங்கள் எதுதான் சரியானது என்று நம்புவது? தவறாக இருந்தாலும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதுதான் அல்லாவின் கட்டளை என்கிறீர்களோ!
பீஜேயின் மொழிபெயர்ப்பு.
37:77. ”அவரது சந்ததிகளையே எஞ்சியோராக ஆக்கினோம்”
நிச்சயமாக நீங்கள் எடுத்து வைத்த மொழிபெயர்ப்பிற்கும் நான் எடுத்து வைத்த மொழிபெய்ர்ப்பிற்கும் இடையில் பெரும் வித்தியாசங்கள் உள்ளன. எனது முந்தைய பதிலில் தடித்த எழுத்துக்களில் உள்ள வார்த்தைகளை கவனமாக பாருங்கள்.
யாருடைய மொழிபெயர்ப்பிலிருந்து நீங்கள் அந்த வசனங்களை எடுத்தீர்கள்?
//வசனம்-71:26. மேலும் நூஹ் கூறினார்,”என்னுடைய இறைவனே! நிராகரிப்பாளர்களிலிருந்து வசிக்க எவரையும் பூமியின் மீது நீ விட்டுவிடாதே”
“71:26 அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே”
நிச்சயமாக இவ்விரண்டிற்கும் வேறுபாடில்லை.
நிச்சயமாக வேறுபாடு உண்டு. அத்தியாயம் 71ஐ முழுதுமாக படித்துப் பாருங்கள். ‘நிராகரிப்பாளர்கள்’ என்று நூஹ் நபி குறிப்பிடுவது யாரை? அவரது சமூகத்திலிருந்த நிராகரிப்பாளர்களையா? உலகெங்கிலும் வசித்திருந்த நிராகரிப்பாளர்களையா? என்பது உங்களுக்குப் புரியும்.
யாருடைய மொழிபெயர்ப்பிலிருந்து நீங்கள் அந்த வசனங்களை எடுத்தீர்கள்? என்ற என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே?
சலாஹுதீன் அவர்களே,
நூஹின் சமூகத்தினர் என்போர் யாவர்? ”என்னுடைய சமூகத்தினரே” என்று எவர்களையெல்லாம் நூஹ் அழைக்கிறார். அவரது காலத்தில் நூஹ் சமூகம் அல்லாது வேறு சமூகத்தினர் இருந்ததற்கான ஆதாரமெதுவும் குரானில் இருக்கிறதா? (மேற்காசிய நாடுகளில் இருந்தவர்கள் மட்டும்தான் மனிதர்கள் என்று நினைத்து, அவர்கள் மட்டும்தான் மூடர்களாகவும் ஓரிறை நிராகரிப்பாளர்கவும் இருக்கின்றனர் என நினைத்து,அவர்களுக்கு மட்டுமே, அப்பகுதிக்கு மட்டுமே,அப்பகுதியிலிருந்து மட்டுமே தூதர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியது அல்லாவினுடைய ஆற்றலின் வெளிப்பாடுகள் என்பது வேறு விஷ்யம்)
அஸ்கர் அவர்களே, உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லுமுன் “யாருடைய மொழிபெயர்ப்பிலிருந்து நீங்கள் அந்த வசனங்களை எடுத்தீர்கள்?” என்ற என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்
திருக்குர்ஆன் அறக்கட்டளை விளியீடு. ஆசிரியர்கள் M.அப்துல் வஹாப், K.A.நிஜாமுதீன், R.K.அப்துல் காதிர்.
வசனம்-10:73. அப்போது, அவரை அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே, அவரையும் அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் நாம் காப்பாற்றினோம். மேலும் அவர்களை பின் தோன்றல்களாக ஆக்கினோம்…..
ஜான் டிரஸ்ட்.
வசனம்-10:73. அப்பொழுதும் அவர்கள் அவரை பொய்யரெனவே கூறினார்கள். ஆகவே நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் காப்பாற்றினோம். மேலும் அவர்களை அதிபதிகளாகவும் ஆக்கினோம்….
பீஜே
வசனம்-10:73. அவர்கள் அவரை பொய்யெரெனக் கருதினர். எனவே அவரையும் அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். அவர்களை வழித்தோன்றல்களாக ஆக்கினோம்……
ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பில் மற்ற இரண்டிற்கும் முற்றிலும் மாற்றமாக “அவர்களை அதிபதிகளாகவும் ஆக்கினோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜாகிர் நாயக் “தஹாஹா” என்ற வினைச்சொல்லை முட்டை என தவறாக (மோசடியாக)மொழிபெயர்த்திருக்கிறார் என பீஜே குற்றம்சுமத்துகிறார். நாம் யாரை நம்புவது!
நிச்சயமாக மொழிபெயர்க்கும் ஆலிம்கள் வழிகேட்டிலும் மற்றவர்களை வழிகெடுப்பதிலுமே இருக்கின்றனர். இவர்களுக்கு பத்வா கொடுப்பது யார்? முக்கியமாக இவர்களுக்குத் தான் பத்வா கொடுக்கவேண்டும். ஏனென்றால் தவறானதை படிக்கும் ஒருவர் நரகவாதியாகிவிடலாமல்லவா?
நண்பர் சலாஹுத்தீன்,
அறிவியல் பற்றி இஸ்லாமின் கண்ணோட்டம் எனக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டு, நான் என்ன எழுதியிருந்தேனோ அதையே மீள எழுதியிருக்கிறீகள். நான் இரண்டாக பிரித்து குரானின் வசனங்களுக்கு பொருந்தி வந்தால் ஏற்பது இல்லையென்றால் மறுப்பது என்று எழுதியிருந்தேன். அதையே நீங்கள் மூன்றாக பிரித்து நகாசு வேலையுடன் எழுதியிருக்கிறீர்கள். ஒரு அறிவியல் முடிவு ஒன்று வருகிறது என்று கொள்வோம். எந்த அடிப்படையில் அதை ஏற்பீர்கள் அல்லது மறுப்பீர்கள்? குரானோடு பொருத்திப்பார்த்து அதற்கு முரண்படாமல் இருந்தால் ஏற்றுக்கொள்வீர்கள், முரண்பட்டால் மறுத்து விடுவீர்கள். சரியா தவறா என்பது உங்களுக்கு அளவுகோல் அல்ல. இதற்கு ஏற்கனவே ஒரு எடுத்துக்காட்டு தந்திருந்தேன் தேனீ கனியை சாப்பிடுவதாக குரான் குறிப்பிடுகிறது என்று. ஆனால் அது புரியவில்லை என்கிறீர்கள். நான் என்ன சொல்வது தவிர்க்க விரும்புகிறீர்கள் அவ்வளவு தான். வேறொன்று சொல்லவா? ஆதிமனிதன் முதலே ஈமச்சடங்கு இருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. ஆனால் அறிவியல் அதை மறுக்கிறது. இதில் எதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்? என்ன அடிப்படையில்?
மற்றப்படி அறிவியல் முன்னறிவிப்புகள் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதோ ஒன்று சொல்லப்பட்டிருக்க அவைகளுக்கிடையில் புகுந்து வெறொன்றாக புரிந்து கொள்ளச்சொல்வதுதான் அறிவியலாக இருக்கிறது. இதைத்தான் இத்தொடர் நெடுக நான் சொல்லிவருகிறேன்.
குரான் சிந்திக்கச்சொல்கிறது? ஆனால் எப்படி? இறைவனின் இருப்புக்கு ஆதரவாக சிந்திக்கச்சொல்கிறது? இறைவனின் இருப்புக்கு ஆதாரமென்ன என்பதும் சிந்தனைதான் அதை ஏற்றுக்கொள்ளுமா குரான்?
ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால் இதுவரை மொழிபெயர்த்தவர்கள் ஜூதி மலை என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள். இரண்டில் எதை சரி என்பது. ஒன்று செய்யுங்கள் ஜபல் அல் நூர் என்பதுபோல் ஜூதி அல் உஹத் என்பது போன்று ஒரு சொல்லை மேற்கோள் காட்டமுடியுமா?
பிரதமர் ஒன்றை சொல்கிறார் என்றால் அது இந்தியாவுக்கு மட்டும்தான் பொருந்தும் ஏனென்றால் அவர் இந்தியாவுக்கு மட்டும் தான் பிரதமர், இந்தோனேசியாவுக்கு அல்ல. ஆனால் இதை உதாரணமாக சொல்லியிருப்பதன் மூலம் நான் எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாவும் அந்தப் பகுதிக்கு மட்டும்தான் இறைவனாக இருந்தார் என்றா? சரி உங்கள் வாதப்படி அந்தப்பகுதியை மட்டும் குறிக்கும் என்றே வைத்துக்கொள்வோம். அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாதா விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா? ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும்? அல்லது அந்தப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு எந்தப்பகுதியிலுமே இருந்திராத அதிசய விலங்குகளாக இருந்தன என்பதற்கு குரானில் வசனம் ஏதேனும் இருக்கிறதா?
\\அராராத் மலை அளவிற்கு முழு உலகமும் சீராக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் என்று நான் சொல்லவில்லை. அராராத் மலையை உள்ளடக்கிய ஒரு பிரதேசம் மட்டுமே மூழ்கியிருக்கும் என்பதுதான் ஆய்வாளர்களின் கணிப்பு.// இதில் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டிருக்கின்றன, அதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியும் இருக்கிறார்கள். ஆனால் அது அராராத் மலை அளவுக்கு இருந்ததா என்பதுதான் கேள்வி. அராராத் மலைஅளவு உயரத்திற்கு வெள்ளம் வந்திருந்தால் அது அந்தப்பகுத்திக்கு மட்டுமாக இருக்காது உலகம் முழுமைக்குமாக இருக்கும் என்பது உறுதி. ஏனென்றால் தண்ணீர் மட்டம் என்பது ஏற்ற இறக்கமாக இருக்காது. அதனால் தான் மலையை அளப்பதற்குக்கூட கடல் மட்டத்தை அளவுகோலாக வைத்திருக்கிறார்கள். இப்போது தெளிவாக ஒன்றை நீங்கள் சொல்லுங்கள். வெள்ளம் அந்தப்பகுதிக்கு மட்டுமா? இல்லை முழு உலகிற்குமா? வாழைப்பழத்தை நினைவூட்டும் விதமாக வெள்ளம் அந்தப்பகுதிக்கு மட்டும்தான் ஆனால் அராராத் உயரத்திற்கு என்று சொல்லக்கூடாது.
உங்களைப்போல் தான் நானும், நான் துருக்கிக்கும் செல்லவில்லை, ஆய்வாளனும் இல்லை. ஆனால் இருக்கும் இரண்டு முடிவுகளில் எதை ஏற்பது எதை மறுப்பது? இரண்டில் எது விவரணமாக அறிவியல் ஆய்வுகளால் மேம்பட்ட நிலையில் இருக்கிறதோ அதை நான் ஏற்கிறேன். ஏனென்றால் புராணங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் எனக்கு தேவையில்லாதது. நீங்கள் எதை ஏற்கிறீர்கள்? குரானில் சொல்லப்பட்டிருப்பதால் அது நூஹ் கப்பல்தான் என நம்புகிறீர்கள் அப்படித்தானே. என்றால் தெளிவாக சொல்லிவிடுங்களேன். அறிவியல் என்பதெல்லாம் எனக்கு தேவையில்லாதது என்று. இரண்டுக்கும் ஆசைப்பட்டால் எப்படி?
நூஹ் ஒரு கற்பனைப் பாத்திரம் தான். நூஹ் என்ற பெயரில் யாரேனும் அசீலியன் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் குரானில் சொல்லியிருக்கும் அதிசயங்களுடன் அவர் வாழ்திருக்கமுடியாது. ஐம்பது குறைவாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தார் என்பதே அதற்கு சாட்சி. கற்பனைக்கு எப்படி அறிவியல் துறையை ஏற்படுத்தினார்கள் என்பதெல்லாம் பொன்மாற்றுதான். ‘இயோந்ரோபஸ்’ என்று அறிவியல் பெயர் கொடுக்கப்பட்ட மண்டை ஓடு ஒன்று போலியானது என்று தெரியவந்த போது அவைகளை ஆய்வதற்கென்றே பரிணாமவியலில் அந்தப்பெயரால் ஒரு துறையே தொடங்கப்பட்டது.
தோழமையுடன்
செங்கொடி
திரு. அஸ்கர்,
//பெருவெள்ளம் பூமி முழுவதும் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமான குரானின் வசனங்கள்.
வசனம்-71:26. மேலும் நூஹ் கூறினார்,”என்னுடைய இறைவனே! நிராகரிப்பாளர்களிலிருந்து வசிக்க எவரையும் பூமியின் மீது நீ விட்டுவிடாதே.
வசனம்-37:77. மேலும், அவருடைய சந்ததியைத் தான் நாம் மிஞ்சியுள்ளோராய் ஆக்கினோம்//
என்று நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் வசனங்களை யாருடைய மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு நீங்கள் பதில் சொன்ன பிறகு பிற விஷயங்களைப் பற்றி நாம் பேசலாம்.
சலாம்.செங்கொடி அவர்களே,கொஞ்சம் விவாத களத்திலும் என்ன நடக்கிறது என்று கண்காணித்து பின்னோட்டம் எழுதவும்.நேரடி விவாதம் குறித்து உங்கள் பின்னோடதிர்க்கு மகிழ்ச்சி தெரிவித்து பதில் எழுத்தும் படி கேட்டு இருந்தேன்.நீங்கள் பதில் தரவில்லை.
நண்பர் செங்கொடி,
//அறிவியல் பற்றி இஸ்லாமின் கண்ணோட்டம் எனக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டு, நான் என்ன எழுதியிருந்தேனோ அதையே மீள எழுதியிருக்கிறீகள். நான் இரண்டாக பிரித்து குரானின் வசனங்களுக்கு பொருந்தி வந்தால் ஏற்பது இல்லையென்றால் மறுப்பது என்று எழுதியிருந்தேன். அதையே நீங்கள் மூன்றாக பிரித்து நகாசு வேலையுடன் எழுதியிருக்கிறீர்கள்.//
நாள்தோறும் புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளியாகிக் கொண்டுள்ளன. அவை அனைத்துமே குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை. ஆனால் அவற்றை எல்லாம் இஸ்லாம் அங்கீகரித்துக் கொள்கிறது, ஒரே ஒரு சோதனையை கொண்டு. குர்ஆனில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளுடன் இந்தக் கண்டுபிடிப்பு முரண்படுகிறதா இல்லையா என்பதுதான் அந்தச் சோதனை! இதை நீங்கள் சொல்ல மறந்து விட்டீர்கள் என்பதால்தான் அதை நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.
//ஒரு அறிவியல் முடிவு ஒன்று வருகிறது என்று கொள்வோம். எந்த அடிப்படையில் அதை ஏற்பீர்கள் அல்லது மறுப்பீர்கள்? குரானோடு பொருத்திப்பார்த்து அதற்கு முரண்படாமல் இருந்தால் ஏற்றுக்கொள்வீர்கள், முரண்பட்டால் மறுத்து விடுவீர்கள். சரியா தவறா என்பது உங்களுக்கு அளவுகோல் அல்ல.//
எந்த ஒரு அறிவியல் முடிவையும் ஏற்றுக் கொள்ளுமுன் அது சரியா தவறா என்று சீர் தூக்கி பார்ப்பதுதான் எங்கள் நோக்கம். குர்ஆனை அதற்கான உரைகல்லாக நாங்கள் பார்க்கிறோம். குர்ஆனில் குறிப்பிடப்பட்டிராத, அதன் கருத்துக்களோடு முரண்படாத எத்தனையோ அறிவியல் கொள்கைகள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம். ஆனால், அறிவியல் என்ற பெயரில் யார் என்ன கட்டுக்கதைகளைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை.
சரி.. ஒரு அறிவியல் முடிவு ஒன்று வருகிறது என்றால் எந்த அடிப்படையில் நீங்கள் அதை ஏற்பீர்கள் அல்லது மறுப்பீர்கள்? ‘அறிவியல்’ என்ற லேபிள் குத்தப்பட்ட எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா? அது சரியா தவறா என்று பார்ப்பீர்கள் என்றால் எதன் அடிப்படையில் அதை சரிகாண்பீர்கள்?
“Science and religion are not compatible” என்று சில அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இதை மறுக்கிறார்கள். “Science without religion is lame. Religion without science is blind” என்று சொன்னார் ஐன்ஸ்டீன். இதில் யாருடைய கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்? ஏன்?
//தேனீ கனியை சாப்பிடுவதாக குரான் குறிப்பிடுகிறது என்று. ஆனால் அது புரியவில்லை என்கிறீர்கள். நான் என்ன சொல்வது தவிர்க்க விரும்புகிறீர்கள் அவ்வளவு தான். வேறொன்று சொல்லவா? ஆதிமனிதன் முதலே ஈமச்சடங்கு இருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. ஆனால் அறிவியல் அதை மறுக்கிறது. இதில் எதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்? என்ன அடிப்படையில்?//
தேனி கனியைச் சாப்பிடுவது பற்றி நீங்கள் ஏதாவது பதிவு எழுதியிருந்தால் அதன் சுட்டியைத் தாருங்கள் என்று கேட்டேன். அப்படி இல்லாவிட்டால் அதற்கான குர்ஆன் வசன எண்ணையாவது தாருங்கள். அதேபோல ஈமச் சடங்கு பற்றிய எந்த குர்ஆன் வசனத்தை எந்த அறிவியலாளர் மறுக்கிறார்? அதற்கு அவர் என்ன ஆதாரம் தருகிறார்? இந்த விபரங்களை தந்தீர்களென்றால் நாம் அதுபற்றி பேசலாம்.
//குரான் சிந்திக்கச்சொல்கிறது? ஆனால் எப்படி? இறைவனின் இருப்புக்கு ஆதரவாக சிந்திக்கச்சொல்கிறது? இறைவனின் இருப்புக்கு ஆதாரமென்ன என்பதும் சிந்தனைதான் அதை ஏற்றுக்கொள்ளுமா குரான்?//
இறைவனின் இருப்புக்கு ஆதாரம் என்ன என்பதைப் பற்றி இறைமறுப்பாளர்கள் சிந்திக்கத்தானே செய்கிறார்கள்? ‘இறைவன் இல்லை’ என்பதற்கு அவர்கள் அறிவியல் ரீதியான ஆதாரங்களை கண்டுபிடித்து விட்டார்களா? உங்களிடம் நான் முதன்முதல் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறதா?
//ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால் இதுவரை மொழிபெயர்த்தவர்கள் ஜூதி மலை என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள்.//
ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்றுதான் நானும் சொல்கிறேன்.
//பிரதமர் ஒன்றை சொல்கிறார் என்றால் அது இந்தியாவுக்கு மட்டும்தான் பொருந்தும் ஏனென்றால் அவர் இந்தியாவுக்கு மட்டும் தான் பிரதமர், இந்தோனேசியாவுக்கு அல்ல. ஆனால் இதை உதாரணமாக சொல்லியிருப்பதன் மூலம் நான் எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாவும் அந்தப் பகுதிக்கு மட்டும்தான் இறைவனாக இருந்தார் என்றா?//
நூஹ் (அலை) ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார், முழு உலகிற்குமல்ல என்பதையே நான் சுட்டிக் காட்டினேன்.
//இப்போது தெளிவாக ஒன்றை நீங்கள் சொல்லுங்கள். வெள்ளம் அந்தப்பகுதிக்கு மட்டுமா? இல்லை முழு உலகிற்குமா? வாழைப்பழத்தை நினைவூட்டும் விதமாக வெள்ளம் அந்தப்பகுதிக்கு மட்டும்தான் ஆனால் அராராத் உயரத்திற்கு என்று சொல்லக்கூடாது.//
இன்னும் புரியவில்லையா உங்களுக்கு? வெள்ளம் அந்தப்பகுதிக்கு மட்டும்தான் ஆனால் அராராத் உயரத்திற்கு என்பதுதான் என் வாதம். இதை அறிவியலாளர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதால்தான் அது அசாதாரண நிகழ்வாக பதியப் பட்டுள்ளது. அறிவியல் அரைகுறையானது, நாளுக்கு நாள் மாறக்கூடியது என்பதை நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அறிவியலாளர்கள் எனப்படுபவர்களே தங்களுக்குள் மாறுபாடான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். இந்த அழகில், நீங்கள் அறிவியலை அளவுகோலாகக் கொண்டு ஒரு அசாதாரண நிகழ்வை மதிப்பிடுகிறீர்கள். ‘அறிவியல்’ என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள். சாவித்துவாரத்திற்குள் முழு உலகமும் தெரியாது நண்பரே!
//நீங்கள் எதை ஏற்கிறீர்கள்? குரானில் சொல்லப்பட்டிருப்பதால் அது நூஹ் கப்பல்தான் என நம்புகிறீர்கள் அப்படித்தானே. என்றால் தெளிவாக சொல்லிவிடுங்களேன். அறிவியல் என்பதெல்லாம் எனக்கு தேவையில்லாதது என்று. இரண்டுக்கும் ஆசைப்பட்டால் எப்படி?//
நான் முன்பே சொல்லியிருக்கிறேன். இந்த விஷயத்தில் அறிவியலாளர்கள் ஒத்த கருத்தை உடையவர்களாக இல்லை. இவற்றில் ரான் யாட்டின் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். காரணம், நான் முன்பே சொன்னதுபோல அவை குர்ஆனின் கருத்துக்களிலிருந்து முரண்படவில்லை.
//நூஹ் ஒரு கற்பனைப் பாத்திரம் தான். நூஹ் என்ற பெயரில் யாரேனும் அசீலியன் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் குரானில் சொல்லியிருக்கும் அதிசயங்களுடன் அவர் வாழ்திருக்கமுடியாது.//
இதற்காகத்தான் நான் உங்களை அடிப்படையிலிருந்து விவாதத்தை தொடங்குங்கள் என்றேன். நூஹ் நபி ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்குமானால் நாம் கப்பலைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லையே! தவிர, நீங்கள் முதலில் மறுக்க வேண்டியது நோவாவைப் பற்றி முதன் முதலில் குறிப்பிட்ட யூதர்களின் வேதத்தை. அதன்பிறகு கிருஸ்துவர்களின் பைபிள். அதற்குப் பிறகு குர்ஆன். ஒரே கல்லில் மூன்று மாங்காய்!
திரும்பவும் அடிப்படைக்குச் செல்வோமா?
நன்றி
– சலாஹுத்தீன்
// வெள்ளம் அந்தப்பகுதிக்கு மட்டும்தான் ஆனால் அராராத் உயரத்திற்கு என்பதுதான் என் வாதம்.//
அரராத் மலை அளவிற்கு வெள்ளம் வந்து விட்டால் இந்த உலகமே மூழ்கி விடாதா? அது எப்படி குறிப்பிட்ட பகுதி மட்டும் மூழ்கும்?
//உலகின் ஆக உயரமான சிகரம் எவரஸ்ட். எனவே முழு உலகமும் மூழ்க வேண்டுமென்றால் அராரத் மலை அளவிற்கல்ல, எவரஸ்ட் உயரத்திற்கே வெள்ளம் வந்திருக்க வேண்டும்// உலகம் முழுவதும் என்றால் உயரமான மலைகளும் சேர்ந்து மூழ்க வேண்டும் என்பதல்ல.
//A 1 m rise of sea level will inundate 1,810 square km of land in Gujarat, 1,220 square km in West-Bengal, 670 square km in Tamil Nadu, 550 square km in Andhra Pradesh, 480 square km in Orissa, 410 square km in Maharashtra, 290 square km in Karnataka, 160 square km in Goa, and 120 square km in Kerala.//
http://blogs.siliconindia.com/DrNachiketaDas/Sea_level_rise_and_inundation_of_coastal_India-bid-769p8m0i29722581.html
வெறும் 1 மீட்டர் உயரம் வெள்ளம் வந்தாலே இவ்வளவு பாதிப்பு. இதற்கிடையில் 5165m உயரமுள்ள அரராத் மலை அழவிற்கு வெள்ளம் வந்தால் இந்த உலகம் தாங்குமா? ஒரு மனிதனாவது உயிர் பிழைக்க முடியுமா?
மொழிபெயர்ப்பாளர் பெயரை சொன்னால் தான் தொடருவீர்களோ!
நான் குறிப்பிட்ட வசனங்களின் மொழிபெயர்ப்பாளர்கள்.
”திருக்குர்ஆன் அறக்கட்டளை விளியீடு. (ஆசிரியர்கள் M.அப்துல் வஹாப், K.A.நிஜாமுதீன், R.K.அப்துல் காதிர்”)
நான் அளித்த மொழிபெயப்பு தவறு என்று நீங்கள் கொடுக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் இவர்களிடம் விளக்கம் கோரலாம் என்றிருக்கின்றேன்.
ரோபின்,
வெள்ளம் எவரெஸ்ட் சிகரம் அல்லது அதற்கு மேலும் வரட்டுமே ஆற்றல் மிக்க இறைவன் நில் என்றால் நிற்காதா.
//நான் அளித்த மொழிபெயப்பு தவறு என்று நீங்கள் கொடுக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் இவர்களிடம் விளக்கம் கோரலாம் என்றிருக்கின்றேன்.//
கேட்டுக் கொள்ளுங்கள்.
எவ்வளவு ஆதாரங்களை எடுத்து வைத்தாலும் நான் பிடித்த முயலுக்கு மூணு கால்கள் தான் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. ?!
//ரோபின்,
வெள்ளம் எவரெஸ்ட் சிகரம் அல்லது அதற்கு மேலும் வரட்டுமே ஆற்றல் மிக்க இறைவன் நில் என்றால் நிற்காதா//
அப்போ இது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். பிறகு ஏன் இவ்வளவு தூரம் விவாதம் செய்யவேண்டும்?
குர்ஆனில் இந்த பெருவெள்ளம் சம்பவம் பைபிளிருந்து காப்பியடிக்கப்பட்டது. அப்படி காப்பியடிக்கப்பட்டபோது கொஞ்சம் கூட குறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓன்றுதான் உலகத்தின் ஒரு பகுதி மட்டும்தான் மூழ்கியது என்ற கூற்று.
இந்த முழு சம்பவத்தையும் பார்க்கும்போது இன்னும் பதில் தெரியாத பல கேள்விகள் கேட்கமுடியும். உதாரணமாக எல்லா உயிரினங்களும் எப்படி கப்பலுக்குள் வந்தது? அவை பராமரிக்கப்பட்டது எப்படி? இன்னும் பல. என்னை பொறுத்தவரை இறைவன் அறிவியலால் முடியாததையும் செய்துக் காட்டக்கூடியவர். அறிவியலால் சாத்தியப்படும் காரியங்களை மட்டும்தான் இறைவனால் செய்யமுடியும் என்றால் அவருக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
கடவுளால் தூக்கமுடியாத ஒரு கல்லை கடவுளால் படைக்க முடியுமா!?
மனிதனால் முடியாத காரியத்தை கடவுளால் செய்ய முடியுமென்றால் ஏன் இன்னும் சாத்தான் அழிக்கப்படவில்லை!, சாத்தான் என்ன கடவுளுக்கு சகலையா!?
குரானில் பெயருடன் அறியப்பட்ட தூதர்களில் இவ்வுலகிற்கு நூஹ் மூன்றாவதாக வருகிறார். நபிமார்களின் வரிசையில் நூஹிற்கு ஒரு சிறப்பிடமுள்ளதாக ஆலிம்கள் கூறுகின்றனர். இவ்வுலகிற்கு நன்மாராயங் கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும் முதன்முதலில் அனுப்பப்பட்டவர் நூஹூதன் என்பதே அச்சிறப்பு என்றும் கூறுகின்றனர். முதன் முதலாக இவ்வுலக மக்களுக்கு நன்மாராயங் கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் வந்த நூஹ் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் வந்தார் என்பது நகைப்புக்குரியது.
“”ரஸூலாக-(அதாவது நன்மாராயங் கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும் )முதன்முதலில் அனுப்பப்பட்டவர் நூஹூதன். அவர் அனைத்துலக மக்களுக்கும் ரஸூலாக அனுப்பட்டார் என்று பெருமானார் கூறியதாக இப்னு அப்பாஸ் அவர்கள் கூறுகிறார்கள்” (குர்தூபி)
//குர்ஆனில் இந்த பெருவெள்ளம் சம்பவம் பைபிளிருந்து காப்பியடிக்கப்பட்டது. அப்படி காப்பியடிக்கப்பட்டபோது கொஞ்சம் கூட குறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓன்றுதான் உலகத்தின் ஒரு பகுதி மட்டும்தான் மூழ்கியது என்ற கூற்று.//
நண்பரே, எங்கள் தரப்பில் நம்பிக்கைதான் பிரதானம். ஒப்புக் கொள்கிறேன். ஆனால், உங்கள் தரப்பு வாதம் என்ன? எதையுமே அறிவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து நிரூபிக்க முடிந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வீர்கள். அப்படித்தானே?
இப்போது மேலே உள்ள உங்கள் கூற்றைப் பாருங்கள். இதை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் அவற்றை எடுத்து வையுங்கள். முக்கியமாக அந்த ஆதாரங்கள் வேறு யாராலும் மறுக்க முடியாதவையாக இருக்க வேண்டும்.
இல்லையெனில், உங்களின் இந்தக் கூற்று வெறும் யூகம்தான். ஒரு யூகத்தை வைத்துக் கொண்டு எங்கள் நம்பிக்கையை எப்படி பொய்யாக்குவீர்கள்?
யோசித்துப் பாருங்கள்!
//கடவுளால் தூக்கமுடியாத ஒரு கல்லை கடவுளால் படைக்க முடியுமா!?//
நண்பரே, உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்குமுன் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றி சிறு அறிமுகம் கொடுங்கள்.
உதாரணமாக, எதையுமே அறிவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து நிரூபிக்க முடிந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்பது நண்பர் செங்கொடியின் நிலைப்பாடு. உங்கள் நிலைப்பாடு எப்படி?
கடவுள் வந்து நாந்தான் கடவுள்ன்னு சொன்னா சத்தியமா நம்பமாட்டேன்! இது தான் என் நிலைப்பாடு!
எதற்கும் அதிகபட்ச சாத்தியகூறுகள் இருப்பதையே உண்மை என சொல்லமுடியும் என்பது என் நிலைப்பாடு!
போதுமா கடவுள் கல்லை படைப்பாரா!?
//இப்போது மேலே உள்ள உங்கள் கூற்றைப் பாருங்கள். இதை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறீர்களா? // பைபிளையும் குரானையும் படித்து பார்த்தாலே தெரியும். பைபிளிருந்து திருடப்பட்டவற்றை சற்று திருத்தி கொஞ்சம் கற்பனையும் சேர்த்து உருவாக்கப்பட்டதுதான் குரான். இதற்கு பெரிய ஆராய்ச்சி ஒன்றும் செய்யத்தேவையில்லை. திறந்த மனதுடன் வாசியுங்கள், உண்மை விளங்கும்.
நன்பர் செங்கோடி அவர்களே.
\\ஒரு அறிவியல் முடிவு ஒன்று வருகிறது என்று கொள்வோம் எந்த அடிப்படையில் அதை ஏற்ப்பிற்கள் அல்லது மறுப்பிர்கள் குர்ஆனோடு பொருந்தி பார்த்து அதற்க்கு முரண்படாமல் இருந்தால் ஏற்றுக்கொள்விர்கள் முரண்பட்டால் மறுத்து விடுவிர்கள் சரியா? தவறா? என்பது உங்களுக்கு அளவுகோள் அல்ல என்பது உங்களுடய விளக்கம்.
உஙகள் பதிலில் அறிவியலோடு குர்ஆன் பொருந்திவுள்ளதை ஏற்ப்பிர்கள் ஆகவே அறிவியலில் பெரும்பாலும் குர்ஆன் வசனங்கள் பொருந்திவுள்ளது என்பதை நீங்கள் மொழிந்தீர்கள், குர்ஆனோடு அறிவியல் முரண்பட்டால், எங்கள் நிலை என்ன தெரியுமா! அந்த வசனங்களில் அடிப்படை கொண்டு அறிவியலில் கண்டுபிடிக்க வேண்டியது உள்ளது கண்டுபிடிக்கும் வரை நீங்கள் பொறுமையாக இருங்கள். அவசரத்தில் வீனான அசுர பிதற்றல் ஏன் சகோதரரே நாங்கள் அறிவியல் சொன்னதை குர்ஆனோடு பொருந்திபார்க்கின்றோம் முழு ஒத்துலைப்பு இந்த நாள் வரை உள்ளது அறிவியலுக்கு பொருந்திய அந்த வசனங்களை கொண்டு நீங்கள் சிந்தியுங்கள் சகோதரரே! இப்போது சரிதனே? கண்டுபிடிக்கும் வரை பொறுமை இல்லமல் இருப்பது நல்ல அலவுகோலா? தவறு சகோதரரே.
கடவுள் வந்து நாந்தான் கடவுள்ன்னு சொன்னா சத்தியமா நம்பமாட்டேன்! இது தான் என் நிலைப்பாடு!
எதற்கும் அதிகபட்ச சாத்தியகூறுகள் இருப்பதையே உண்மை என சொல்லமுடியும் என்பது என் நிலைப்பாடு?
கடவள் இல்லை சரி! இப் பிரபஞ்சம் தானக தோன்றியதை அறிவியல் சாத்திய கூறுகள் மூலம் விளக்க முன்வருவீர்களா சலாஹீதீன் அவர்கள் உங்கள் கொள்கையை உதிர்க்க தயராக இருக்கிறார்.
//பைபிளையும் குரானையும் படித்து பார்த்தாலே தெரியும். பைபிளிருந்து திருடப்பட்டவற்றை சற்று திருத்தி கொஞ்சம் கற்பனையும் சேர்த்து உருவாக்கப்பட்டதுதான் குரான். இதற்கு பெரிய ஆராய்ச்சி ஒன்றும் செய்யத்தேவையில்லை. திறந்த மனதுடன் வாசியுங்கள், உண்மை விளங்கும்.//
நண்பரே, நான்தான் முன்பே சொன்னேனே, நம்பிக்கைதான் எங்களுக்கு பிரதானம் என்று. நான் தினமும் குர்ஆனை படிக்கத்தான் செய்கிறேன். அது நாள்தோறும் என் நம்பிக்கையை மேலும் உறுதிப் படுத்துகிறதே தவிர குறைக்கவில்லை.
ஆனால் நீங்கள் “பைபிளிருந்து திருடப்பட்டவற்றை சற்று திருத்தி கொஞ்சம் கற்பனையும் சேர்த்து உருவாக்கப்பட்டதுதான் குரான்” என்று தீர்ப்பளிக்குமுன் அந்த இரண்டையும் தீர்க்கமாக அலசி ஆராய்ந்திருப்பீர்கள் அல்லவா? அந்த ஆராய்ச்சியைத்தான் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்கிறேன்.
அப்படி எந்த ஆராய்ச்சியையும் நீங்கள் நிகழ்த்தியிருக்கவில்லை என்றால், உங்கள் வெற்று யூகத்தைவிட குர்ஆனை நிதமும் ஓதும் எங்கள் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது.
எனவே…..
//கடவுள் வந்து நாந்தான் கடவுள்ன்னு சொன்னா சத்தியமா நம்பமாட்டேன்! இது தான் என் நிலைப்பாடு!
எதற்கும் அதிகபட்ச சாத்தியகூறுகள் இருப்பதையே உண்மை என சொல்லமுடியும் என்பது என் நிலைப்பாடு!//
நண்பரே,
இரண்டே இரண்டு வாக்கியங்களை சொல்லியிருக்கிறீர்கள். அந்த இரண்டுமே ஒன்றிற்கொன்று முரண்பாடாக இருக்கிறது.
கடவுள் உங்களெதிரே வந்து ‘நான்தான் கடவுள்’ என்று சொன்னால் கூட அதை சத்தியமாக நம்ப மாட்டீர்கள். அதாவது, இறைவன் இருக்கிறான் என்பதற்கான அதிக பட்ச சாத்தியக்கூறுகளை உங்கள் கண்ணெதிரே காட்டினாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
ஆனால், உங்கள் அடுத்த வாக்கியத்தில் “எதற்கும் அதிகபட்ச சாத்தியகூறுகள் இருப்பதையே உண்மை என சொல்லமுடியும் என்பது என் நிலைப்பாடு” என்கிறீர்கள்.
உங்கள் முதல் வாக்கியத்தை உண்மை என்று எடுத்துக் கொண்டால் உங்கள் இரண்டாம் வாக்கியம் பொய்யாகிறது. இரண்டாம் வாக்கியம் உண்மை என்றால் முதல் வாக்கியம் பொய்யாகிறது. எது உண்மை? எது பொய்?
இரண்டில் ஒன்றுதான் பொய் என்றாலும் நீங்கள் 50% பொய் சொல்லக்கூடியவர் என்பது தெளிவாகிறது. நீங்கள் சொல்வதில் எந்த 50% பொய் என்பதை யாருக்கும் கண்டுபிடிக்க முடியாது. எனவே நீங்கள் சொல்லும் எதையும் யாரும் நம்ப மாட்டார்கள், அதாவது நீங்கள் 100% பொய்யர் என்கிறேன். இதை நீங்கள் மறுக்க முடியுமா?
பின் குறிப்பு: நீங்கள் தர்க்க ரீதியான ஒரு கேள்வி கேட்டிருப்பதால் நானும் தர்க்கரீதியாகவே ஒரு மாற்றுக் கேள்வி கேட்டிருக்கிறேன். So, please don’t take it personal. நன்கு யோசித்து பதில் சொல்லுங்கள்.
“தேனி கனியைச் சாப்பிடுவது பற்றி நீங்கள் ஏதாவது பதிவு எழுதியிருந்தால் அதன் சுட்டியைத் தாருங்கள் என்று கேட்டேன். அப்படி இல்லாவிட்டால் அதற்கான குர்ஆன் வசன எண்ணையாவது தாருங்கள்.”
“நான் தினமும் குர்ஆனை படிக்கத்தான் செய்கிறேன். அது நாள்தோறும் என் நம்பிக்கையை மேலும் உறுதிப் படுத்துகிறதே தவிர குறைக்கவில்லை.”
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டும் நீங்கள் கூறியவைதாம். ஆனால் இரண்டும் முரண்பாடாக உள்ளது. தினமும் குரானை படித்து நம்பிக்கையை உரமேற்றிக்கொள்ளும் உங்களுக்கு தேனீ பற்றிய வசனம் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது அல்லது தினமும் படிப்பதாக சொல்வது பொய்யாக இருக்கவேண்டும்.
நண்பர் சலாஹூதீன்,
“தேனி கனியைச் சாப்பிடுவது பற்றி நீங்கள் ஏதாவது பதிவு எழுதியிருந்தால் அதன் சுட்டியைத் தாருங்கள் என்று கேட்டேன். அப்படி இல்லாவிட்டால் அதற்கான குர்ஆன் வசன எண்ணையாவது தாருங்கள்.”
“நான் தினமும் குர்ஆனை படிக்கத்தான் செய்கிறேன். அது நாள்தோறும் என் நம்பிக்கையை மேலும் உறுதிப் படுத்துகிறதே தவிர குறைக்கவில்லை.”
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டும் நீங்கள் கூறியவைதாம். ஆனால் இரண்டும் முரண்பாடாக உள்ளது. தினமும் குரானை படித்து நம்பிக்கையை உரமேற்றிக்கொள்ளும் உங்களுக்கு தேனீ பற்றிய வசனம் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது அல்லது தினமும் படிப்பதாக சொல்வது பொய்யாக இருக்கவேண்டும்.
நண்பர் சலாஹுத்தீன்,
அறிவியல் அறைகுறையானது என்று நான் சொன்னேன் என எழுதியிருக்கிறீர்கள். இது பொய்யான தகவல். அறிவியல் மாறும் தன்மையுடையது என்று தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதைக்கொண்டு என்னுடைய கருத்தை நீங்கள் வேண்டுமென்றே திரிக்கிறீகள். நான் கூறியது உங்களுக்கு புரியவில்லை, என்று இதை எடுத்துக்கொள்ள முடியாது ஏனென்றால் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு இது கடினமானதல்ல. எனவே இதை நீங்கள் வேண்டுமென்றே செய்திருக்கிறீர்கள், இது விவாத நேர்மையல்ல.
அறிவியலை நீங்கள் எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நான் சொன்ன அதே திசையில் தான் நீங்களும் சொல்கிறீர்கள். ஆனால் வித்தியாசம் இருப்பதுபோல் பிரித்துக்காட்டுகிறீர்கள். ஒரு முடிவு குரானில் இருப்பது போல் இருக்கிறது ஆனால் அதற்கு அறிவியல் ரீதியில் ஆதாரம் இல்லை என்றால் நீங்கள் இதை மறுக்கமாட்டீர்கள். அதேநேரம் ஒரு முடிவு குரானுக்கு மாற்றமாக இருக்கிறது ஆனால் அதற்கு அறிவியல் ரீதியாக ஆதாரம் இருக்கிறது என்றால் நீங்கள் இதை ஏற்க மாட்டீர்கள்.
தேனீ குறித்து கேட்டிருந்தீர்கள், இஸ்லாம் குறித்த தொடரில் பாலும் தேனும் எனும் கட்டுரையில் இது குறித்து லேசாக தொட்டிருக்கிறேன். இது குறித்த குரான் வசனம் 16:68,69. ஈமச்சடங்கு குறித்த வசனம் குரான் 5:31 (\\ஒரு பிரதேசம் மட்டுமே மூழ்கடிக்கப்பட்டது என்பதற்கு குர்ஆன் வசனங்களில் ஆதாரங்கள் இருக்கின்றன. ‘இஸ்லாம் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்’ என்று நீங்கள் மார்தட்டியிருப்பதால் அந்த ஆதாரங்களை நான் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்காதுதானே// எனக்கு இப்படி எழுதிய நீங்கள் குறிப்பிட்ட அந்த வசன எண்களை தாருங்கள் என நீங்கள் கேட்பதன் மூலம் குரானை நீங்கள் படிப்பதில்லை எனும் பொருள் வருகிறது. இதில் உங்களுக்கு உடன்பாடா?) ஆனால் நியாண்டர்தால் மனிதர்கள் தான் முதன் முதலில் ஈமச்சடங்கு செய்தவர்கள் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. ஹோமோஎரக்டஸ் வரையில் மனிதன் இறந்தவர்களை உணவாக கொண்டதற்கு ஆதாரம் இருக்கிறது. பீகிங் மனிதர்கள் வேட்டையாடமுடியாத முதியவர்களையும் கொன்று தின்றிருப்பதற்கான ஆதாரங்கள் சீனாவின் சௌகாடியன் குகையில் கிடைத்திருக்கின்றன. ஆனால் குரானோ ஆதாமின் மகனுக்கு பறவையை அனுப்பி ஈமச்சடங்கை கற்றுக்கொடுத்ததாக கூறுகிறது. இதெல்லாம் இந்தக்கட்டுரைக்கு வெளியில் இருப்பவை.
இந்தக்கட்டுரையிலேயே இரண்டு விசயங்கள் இருக்கின்றன. ஒன்று மனிதன் (நூஹ்) 950 ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது. இதற்கு அறிவியலில் எந்த வித ஆதாரமும் இல்லை. மனிதனின் கட்டமைப்பும் இவ்வளவு நீண்ட காலம் செயல்படுவதற்கான திறனின்றி அமைந்திருக்கிறது. அறிவியல் மறுக்கிறது என்பதால் ஒரு காலமும் நூஹ் 950 ஆண்டுகள் உயிர்வாழ சாத்தியமில்லை என்று கூறமாட்டீர்கள். ஏனென்றால் குரான் கூறிவிட்டது அதற்கு மேல் உங்களுக்கு எதுவும் தேவையில்லை. அடுத்தது அராராத் உயரத்திற்கு வெள்ளம் வந்திருக்கிறது, அந்த அளவுக்கு வெள்ளம் வந்தால் உலகின் 99 விழுக்காடு பகுதிகள் நீரால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் என்பது அறிவியல். என்றாலும், தலைகீழாக நின்றாலும் வெள்ளம் முழு உலகையும் மூழ்கடித்திருக்கும் என்பதை உங்களால் ஏற்க முடியாது. காரணம் குரானில் சொல்லப்பட்டுவிட்டது என்பதால் அதை உங்களால் மீறமுடியாது. பின் என்ன பொருளில் நீங்கள் அறிவியல் எனும் பதத்தை பயன்படுத்துகிறீர்கள்?
அறிவியல் எனும் பெயரில் யார் என்ன கட்டுக்கதைகளை சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வது அறிவியல் பார்வை அல்ல. ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும். ‘இயோந்ரோபஸ்’ அறிவியலின் பெயரால் வந்தது தான், அறிவியல் அதை ஏற்றுக்கொண்டதா? இல்லையே, பின் ஏன் நீங்கள் கட்டுக்கதைகளை ஏற்கவேண்டும்? அவசியமில்லை. ஆனால் மெய்யான அறிவியலையே மறுக்கிறீர்களே, அதுதான் பிரச்சனை.
அறிவியல் என்பது ஒரு தேடல், ஒரு பயணம். ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவை கண்டடையும், கண்டடைந்த முடிவை நடைமுறைப்படுத்தும், நடைமுறைகளின் வாயிலாக பரிசோதனைகள் செய்யும், பரிசோதனையின் விழுமியங்களை விதிகளாக்கும், விதிகளை மீண்டும் தொடர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். அதனால் தான் இதை தேடல் என்றும் பயணம் என்றும் கூறுவது. இதுதான் அறிவியலின் சாராம்சம். இதை என்றென்றைக்கும் மாறதது என்று சொல்லப்படும் ஒரு நம்பிக்கையோடு ஒப்பிடுவது பொருந்தாதது.
ஐன்ஸ்டீன் மதங்கள் குறித்து என்ன சொன்னார் என்பதையெல்லாம் ஏற்பதோ மறுப்பதோ அறிவியல் சார்ந்ததல்ல. காரணம் அவர் மதங்களை ஆராயவில்லை. அறிவியல் உலகில் ஐன்ஸ்டீன் என்றால் பொது சார்பியல் கோட்பாடு, சிறப்பு சார்பியல் கோட்பாடு இவை தொடர்பான, தொடுப்பான ஆய்வுகள் அவ்வளவு தான். ஐன்ஸ்டீன் ஒரு மாபெரும் அறிவியல் அறிஞர் என்பதால் அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அறிவியல் கருத்தாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. (கம்யூனிஸம் குறித்து கூட ஐன்ஸ்டீன் கருத்து கூறியிருக்கிறார் தெரியுமா உங்களுக்கு?)
இறைவன் இருப்பதற்கான ஆதாரம் குறித்து இறை மறுப்பாளர்கள் சிந்திக்கிறார்கள், அவர்களுக்கு ஆதாரம் கிடைத்ததா இல்லையா என்பதெல்லாம் வேறு கேள்விகள். குரான் சிந்திக்கச்சொல்லியிருக்கிறது என்றீர்கள். அதற்கு பதிலாக குரான் ஆதரவாக மட்டுமே சிந்திக்கச்சொல்லியிருக்கிறது எதிராக சிந்திப்பதை சிந்தனையாக குரான் ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே குரான் சிந்திக்கச்சொல்லியிருப்பதாக கொள்ளமுடியாது, ஏனென்றால் அது பக்கச்சார்பானது.
\\//ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால் இதுவரை மொழிபெயர்த்தவர்கள் ஜூதி மலை என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள்.//
ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்றுதான் நானும் சொல்கிறேன்// இது மட்டுமா நான் கேட்டிருந்தேன் இதில் இன்னொரு பகுதியும் இருக்கிறதே அதை ஏன் மறைத்து விட்டீர்கள்? \\ஜபல் அல் நூர் என்பதுபோல் ஜூதி அல் உஹத் என்பது போன்று ஒரு சொல்லை மேற்கோள் காட்டமுடியுமா?// இதற்கு என்ன பதில்?
பிரதமர் எடுத்துக்காடீன் மூலம் நீங்கள் கூறவருவதென்ன? எனும் ஐயத்தை வைத்து விட்டு \\உங்கள் வாதப்படி அந்தப்பகுதியை மட்டும் குறிக்கும் என்றே வைத்துக்கொள்வோம். அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாதா விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா? ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும்? அல்லது அந்தப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு எந்தப்பகுதியிலுமே இருந்திராத அதிசய விலங்குகளாக இருந்தன என்பதற்கு குரானில் வசனம் ஏதேனும் இருக்கிறதா?// என்றும் கேட்டிருந்தேன் இதை நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்ட மர்மம் என்னவோ?
\\நான் முன்பே சொல்லியிருக்கிறேன். இந்த விஷயத்தில் அறிவியலாளர்கள் ஒத்த கருத்தை உடையவர்களாக இல்லை. இவற்றில் ரான் யாட்டின் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். காரணம், நான் முன்பே சொன்னதுபோல அவை குர்ஆனின் கருத்துக்களிலிருந்து முரண்படவில்லை.// இதுதான் இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ரான் யாட் கூறுவது அறிவியலுக்கு நெருக்கமாக இருக்கிறதா? இல்லை அதை எதிர்த்து வைக்கப்படும் விமர்சனங்கள் அறிவியலுக்கு நெருக்கமாக இருக்கிறதா? எனும் பார்வை உங்களுக்கு அவசியமில்லாதது. ரான் யாட் கூறுவது குரானுக்கு நெருக்கமாக இருக்கிறது, அதுதான் உங்களுக்கு தேவையானது. இதில் என்ன அறிவியல் வாழுகிறது?
\\இதற்காகத்தான் நான் உங்களை அடிப்படையிலிருந்து விவாதத்தை தொடங்குங்கள் என்றேன். நூஹ் நபி ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்குமானால் நாம் கப்பலைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லையே!// இந்தக்கட்டுரையில் நான் மையமாக எடுத்துக்கொண்டிருக்கும் பொருள், குரானின் திட ஆதாரமாக வைக்கப்படும் நூஹ்வின் கப்பல் பொய்யானது என்பதுதான், அதிலிருந்து கிளைப்பதுதான் நூஹின் ஆயுளும் சாத்தியமும்.
\\திரும்பவும் அடிப்படைக்குச் செல்வோமா// உங்களின் அடிப்படை குறித்த அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கிறது. முதலில் நோவாவின் கப்பல் குறித்து முடிவுக்கு வாருங்கள். அடுத்து நான் உங்களிடம் வலியுறுத்திய அந்தக்கேள்விக்கு தெளிவான சுற்றிவளைக்காத பதிலை சொல்லுங்கள் இந்த இரண்டும் உங்களால் முடியுமென்றால் உங்களை மீண்டும் விவாதக்களத்தில் சந்திப்பதில் மகிழ்வுடையவனாக இருக்கிறேன். அதேநேரம் அப்படி சந்திக்கும் பட்சத்தில் விவாதமுறைமை குறித்து சில விதிமுறைகள் வகுத்துக்கொள்வது நலம்.
தோழமையுடன்
செங்கொடி
நண்பர் செங்கொடி,
உங்கள் கருத்தை நான் திரித்து விட்டேன் என்ற குற்றச்சாட்டு, எது விவாத நேர்மை?, குர்ஆனை நான் படிக்கிறேனா இல்லையா? 950 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்கள், பெரு வெள்ளத்தில் முழு உலகமும் மூழ்கியதா இல்லையா? குர்ஆன் சிந்திக்கச் சொல்கிறதா? ஜூதி பெயர் விவகாரம், பிரதமர் உதாரணம், இவற்றோடு பிற்சேர்க்கைகளான பழம் சாப்பிடும் தேனீ, ஈமச்சடங்கு – இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு நான் முன்னரே பதிலளித்திருந்தும், இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் உங்களின் துணை கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும் இன்ஷா அல்லாஹ். ஆனால் அதற்கு முன் நீங்கள் பதில் சொல்லாமல் விட்டுவிட்ட முக்கியமான எனது கேள்வி ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
ஒரு அறிவியல் முடிவு ஒன்று வருகிறது என்றால் எந்த அடிப்படையில் நீங்கள் அதை ஏற்பீர்கள் அல்லது மறுப்பீர்கள்? ‘அறிவியல்’ என்ற லேபிள் குத்தப்பட்ட எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா? அது சரியா தவறா என்று பார்ப்பீர்கள் என்றால் எதன் அடிப்படையில் அதை சரிகாண்பீர்கள்?
‘அறிவியல்’ என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்.
எனது மேற்கண்ட கேள்விக்கு, //அறிவியல் எனும் பெயரில் யார் என்ன கட்டுக்கதைகளை சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வது அறிவியல் பார்வை அல்ல. ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.// என மேம்போக்காக சொல்லி விட்டு நழுவியது ஏனோ?
நீங்கள் சொல்லாமல் விட்ட பதிலை நான் சொல்கிறேன். அதுவும் உங்கள் வார்த்தைகளிலிருந்தே!
ரான்யாட் நோவாவின் கப்பலை ‘முழுக்க முழுக்க இதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது கடினமான பணி’ என்று சொன்னதை மேற்கோள் காட்டிய உங்களுக்கு, அதே ரான்யாட் ‘இது நோவாவின் கப்பல்தான்’ என்று உறுதியாக அறிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் பார்வையில் ஏப்ரல் 9-ம் தேதி வரை அறிவியல் ஆய்வாளராக இருந்த ரான் யாட் இரண்டு நாட்களுக்குள் சந்தேகத்திற்குறிய நபராக மாறிய அதிசயம் என்னவோ? இன்னும் கொஞ்ச நாள் போனால் ‘ரான் யாட் முஸ்லிம்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தனது ஆய்வு முடிவுகளை திரித்து விட்டார்’ என்று சொன்னாலும் சொல்வீர்கள். இவ்வளவுக்கும் ரான் யாட்டின் பெயரை முதன் முதலில் இங்கு அறிமுகப் படுத்தியவரே நீங்கள்தான்.
உங்களுக்கு “ஐன்ஸ்டீன் ஒரு மாபெரும் அறிவியல் அறிஞர்”. எதுவரை? அதே ஐன்ஸ்டீன் ‘அறிவியலும் ஆன்மீகமும் பிரிக்க முடியாதவை’ என்று அறிவிக்கும் வரை மட்டுமே. உங்களைப் பொருத்தவரை ஐன்ஸ்டீன் போன்ற மாபெரும் அறிவியல் அறிஞராக இருந்தாலும் அவர் ‘பொது சார்பியல் கோட்பாடு, சிறப்பு சார்பியல் கோட்பாடு இவை தொடர்பான, தொடுப்பான ஆய்வுகளை மட்டுமே ஆராய்ந்து கருத்து சொல்லவேண்டும். அதையும் மீறி அவர் அறிவியலை ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்தி எதையாவது சொல்லிவிட்டால் அவரை புறந்தள்ளி விடுவீர்கள்.
எனவே, என்ன பொருளில் நீங்கள் அறிவியல் எனும் பதத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது புரிகிறதா?
உங்கள் பார்வையில் ஆன்மீகத்தை எதுவெல்லாம் எதிர்க்கிறதோ அவை மட்டுமே அறிவியல். ஆன்மீகத்தை யாரெல்லாம் மறுக்கிறார்களோ அவர்கள் மட்டுமே அறிவியலாளர்கள். முழுக்க முழுக்க இது எதிர்மறைக் கண்ணோட்டமே தவிர, உண்மை எது என்பதை அட் லீஸ்ட் அறிந்துக் கொள்ளும் ஆவல் கூட உங்களிடம் இல்லை.
ரான் யாட் கூறுவது அறிவியலுக்கு நெருக்கமாக இருக்கிறதா? இல்லை அவரது முடிவில் சந்தேகப்படும் டேவிட் ஃபசோல்டின் விமர்சனங்கள் அறிவியலுக்கு நெருக்கமாக இருக்கிறதா? எனும் பார்வை உங்களுக்கு அவசியமில்லாதது. டேவிட் ஃபசோல்டு சொல்வது உங்கள் இஸ்லாமிய எதிர்ப்புணர்விற்கு நெருக்கமாக இருக்கிறது, அதுதான் உங்களுக்கு தேவையானது.
ஐன்ஸ்டீன் மதங்களை ஆராய்ந்தாரா இல்லையா என்பது உங்களுக்கு முக்கியமில்லை. அறிவியல் குறித்தான அவரது ஆய்வுகளே அவரை ‘ஆன்மீகம் இன்றி அறிவியல்குறைபாடுடையது’ என்ற முடிவிற்கு வரவைத்திருக்கிறது. இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் ஆன்மீகம் பற்றிய உங்கள் எதிர்மறைக் கண்ணோட்டத்தோடு இது ஒத்துப் போகவில்லை. அதனால் ஐன்ஸ்டீனின் இந்தக் கருத்து உங்களுக்குத் தேவையில்லை.
இவற்றில் என்ன அறிவியல் வாழுகிறது?
அல்லது, இதுதான் உங்களுக்குத் தெரிந்த அறிவியலா?
நன்றி
– சலாஹுத்தீன்
நண்பர் சலாஹுத்தீன்,
\\ஒரு அறிவியல் முடிவு ஒன்று வருகிறது என்றால் எந்த அடிப்படையில் நீங்கள் அதை ஏற்பீர்கள் அல்லது மறுப்பீர்கள்? ‘அறிவியல்’ என்ற லேபிள் குத்தப்பட்ட எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா? அது சரியா தவறா என்று பார்ப்பீர்கள் என்றால் எதன் அடிப்படையில் அதை சரிகாண்பீர்கள்?
‘அறிவியல்’ என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்//
நான் பதில் சொல்லாத கேள்வி என்று இதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் இதற்கு நான் அழகாக, தெளிவாக பதில் கூறியிருக்கிறேன். இதோ அந்தப் பதில் \\அறிவியல் என்பது ஒரு தேடல், ஒரு பயணம். ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவை கண்டடையும், கண்டடைந்த முடிவை நடைமுறைப்படுத்தும், நடைமுறைகளின் வாயிலாக பரிசோதனைகள் செய்யும், பரிசோதனையின் விழுமியங்களை விதிகளாக்கும், விதிகளை மீண்டும் தொடர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். அதனால் தான் இதை தேடல் என்றும் பயணம் என்றும் கூறுவது. இதுதான் அறிவியலின் சாராம்சம்// அதெப்படி இது மட்டும் உங்களின் கண்களிலிருந்து மறைந்து விட்டதா?
\\ //அறிவியல் எனும் பெயரில் யார் என்ன கட்டுக்கதைகளை சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வது அறிவியல் பார்வை அல்ல. ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.// என மேம்போக்காக சொல்லி விட்டு நழுவியது ஏனோ?// இது எப்படி மேம்போக்கான பதிலாகும்? அறிவியல் என்ற பெயரில் யார் என்ன கட்டுக்கதைகளை சொன்னாலும் அதை அப்படியே ஏற்பது அறிவியலல்ல, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்வது தான் அறிவியல் என்று கூறி அதற்கு எடுத்துக்காட்டாக “இயோந்ரோபஸ்”ஐயும் குறிப்பிட்டிருந்தேன். ஆக அறிவியலை கூறி, அதன் சாராம்சத்தை விளக்கி அதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் கூறிய பின்னரும், நான் பதில் கூறாததைப்போல் நடித்திருப்பது நீங்கள் கூறும் பூனை உதாரணத்தைப்போல இருக்கிறது.
\\ரான்யாட் நோவாவின் கப்பலை ‘முழுக்க முழுக்க இதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது கடினமான பணி’ என்று சொன்னதை மேற்கோள் காட்டிய உங்களுக்கு, அதே ரான்யாட் ‘இது நோவாவின் கப்பல்தான்’ என்று உறுதியாக அறிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை// ரான் யாட் இது நோவாவின் கப்பல் தான் என்றதை ஏன் ஏற்க முடியவில்லை? என்பதற்கு காரணம் கூறியிருக்கிறேன். ரான் யாட் தன்னுடைய முடிவுகளை எதிர்த்து எழுந்த விமர்சனங்களுக்கு தகுந்த பதிலளிக்கவில்லை. (சிகுலரியா குறித்து அவர் அளித்த விளக்கமும் விமர்சனங்கள் மூலம் தகர்க்கப்பட்டது) என்பதோடு அவரே அறிவியல் ரீதியாக நிரூபிக்கமுடியாது என்றும் கூறிவிட்ட பிறகு அதை ஒதுக்கிவைத்துவிட்டு அவருடைய முடிவுக்கு எதிரான நிலை அறிவியல் காரணங்களோடு பொருந்தி நிற்பதால் அதை ஏற்பது தான் சரியான நிலைபாடாக இருக்கமுடியும். அதனால் தான் அது என்னுடைய நிலைபாடாக இருக்கிறது. இதுபோல் உங்களுடைய நிலைபாட்டிற்கு உங்களால் விளக்கமளிக்க முடியுமா? (இத்தனைக்கும் நான் தான் ரான் யாட்டை இங்கு அறிமுகப்படுத்தினே என்பதையும் மறந்துவிட வேண்டாம். அவருக்கு எதிரான நிலைதான் முக்கியம் என நான் கருதியிருந்தால் அவரை அப்படி அறிமுகம் செய்யவேண்டிய அவசியமேது?)
\\இன்னும் கொஞ்ச நாள் போனால் ‘ரான் யாட் முஸ்லிம்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தனது ஆய்வு முடிவுகளை திரித்து விட்டார்’ என்று சொன்னாலும் சொல்வீர்கள்// நான் இப்படி சொல்லவில்லை. காரணம், அவர் முஸ்லீம்களிடமோ கிருஸ்தவர்களிடமோ அதாயம் அடைந்துகொண்டு இதைச் செய்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை. ஆக இப்படி கூறியிருப்பதன் மூலம் ‘குதிருக்குள் இல்லை’ என்று நீங்களே எடுத்துத்தந்திருக்கிறீர்கள். அதேநேரம் அப்படி ஒரு சாத்தியம் இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1) அவர் இதுவரை செய்த ஆய்வுகளெல்லாம் பைபிளில் சுட்டப்படுபவைகளை மெய்ப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன.
2) 1959ல் அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து(!) அனேக ஆய்வாளர்கள் அதை ஆய்வு செய்திருக்கிறார்கள், ஆனால் துருக்கி அரசு அங்கீகரித்ததும் செலவை ஏற்றுக்கொண்டதும் ரான் யாட்டுக்கு மட்டும் தான்.
இதைவிட அவரின் முடிவுகளை ஒதுக்குவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது, இவைகளை நான் ஆய்வு செய்வதற்கு காரணம் கடவுள் என் கனவில் வந்து இவைகளை மெய்ப்பிக்குமாறு கூறியது தான் என்றும் தனது நூலில் முன்னுரையில் (பக்கம் iv) கூறியிருக்கிறார்.
\\உங்களுக்கு “ஐன்ஸ்டீன் ஒரு மாபெரும் அறிவியல் அறிஞர்”. எதுவரை? அதே ஐன்ஸ்டீன் ‘அறிவியலும் ஆன்மீகமும் பிரிக்க முடியாதவை’ என்று அறிவிக்கும் வரை மட்டுமே. உங்களைப் பொருத்தவரை ஐன்ஸ்டீன் போன்ற மாபெரும் அறிவியல் அறிஞராக இருந்தாலும் அவர் ‘பொது சார்பியல் கோட்பாடு, சிறப்பு சார்பியல் கோட்பாடு இவை தொடர்பான, தொடுப்பான ஆய்வுகளை மட்டுமே ஆராய்ந்து கருத்து சொல்லவேண்டும். அதையும் மீறி அவர் அறிவியலை ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்தி எதையாவது சொல்லிவிட்டால் அவரை புறந்தள்ளி விடுவீர்கள்//
இதுவும் உங்களின் மனம்போன போக்கில் நீங்கள் உருவகப்படுத்திக் கொண்டதுதான். எதை அவர் ஆய்வு செய்தாரோ, எதை அவர் கண்டடைவதற்காக தன்னுடைய அறிவையும், தன்னுடைய வாழ்வையும் செலவு செய்தாரோ, எதற்காக அவர் அறிவியலாளராக ஏற்றுக்கொள்ளப்படுகிறாரோ அதற்காக அவரை ஏற்றுக்கொள்வதுதான் சரியான பார்வை. மதங்களைப்பற்றி அவர் ஆய்வு செய்திருக்கிறாரா? சொல்லுங்கள். அவர் எதை ஆய்வு செய்யவில்லையோ அதை ஏற்றுக்கொள்வது போல் போக்குக்காட்டும் நீங்கள் இதே ஆன்மீகம் குறித்து அவர் கூறிய இன்னொரு கருத்தை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? “நான் கடவுள் எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அது தினப்படி மனிதவாழ்வை கட்டுப்படுத்தும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளமுடியாது” இதை உங்களால் ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமுடியாது. ஆன்மீகம் குறித்து அவர் கூறியவற்றில் சாதகமானதை எடுத்துக்கொண்டு பாதகமானதை விட்டுவிடும் நீங்கள் சரியானவரா? இல்லை, மதங்களை அவர் ஆய்வு செய்யவில்லை என்பதால் ஆன்மீகம் குறித்து அவர் கூறும் எதையும் ஏற்கமுடியாது எனும் நான் சரியானவனா?
\\ரான் யாட் கூறுவது அறிவியலுக்கு நெருக்கமாக இருக்கிறதா? இல்லை அவரது முடிவில் சந்தேகப்படும் டேவிட் ஃபசோல்டின் விமர்சனங்கள் அறிவியலுக்கு நெருக்கமாக இருக்கிறதா? எனும் பார்வை உங்களுக்கு அவசியமில்லாதது. டேவிட் ஃபசோல்டு சொல்வது உங்கள் இஸ்லாமிய எதிர்ப்புணர்விற்கு நெருக்கமாக இருக்கிறது, அதுதான் உங்களுக்கு தேவையானது//
என்னுடைய வாதங்களை நான் எடுத்துவைக்க பயன்படுத்தும் வடிவங்களை அப்படியே உல்டா பண்ணி நீங்கள் பயன்படுத்துவது உங்களுக்கு வாடிக்கையானதுதான். ஆனால் அப்படி உல்டா பண்ணினால் அதில் வீரியம் மீதமிருக்கிறதா என்பதையும் பார்க்கவேண்டும். என்னுடைய நிலைபாட்டிற்கான காரணிகளை நான் தெளிவாகவே முன்வைத்திருக்கிறேன். இதில் கடைசியில் பதில் சொல்லமுடியாமல் நிற்பது நீங்கள் தான்.
\\ஐன்ஸ்டீன் மதங்களை ஆராய்ந்தாரா இல்லையா என்பது உங்களுக்கு முக்கியமில்லை. அறிவியல் குறித்தான அவரது ஆய்வுகளே அவரை ‘ஆன்மீகம் இன்றி அறிவியல்குறைபாடுடையது’ என்ற முடிவிற்கு வரவைத்திருக்கிறது. இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் ஆன்மீகம் பற்றிய உங்கள் எதிர்மறைக் கண்ணோட்டத்தோடு இது ஒத்துப் போகவில்லை. அதனால் ஐன்ஸ்டீனின் இந்தக் கருத்து உங்களுக்குத் தேவையில்லை.
இவற்றில் என்ன அறிவியல் வாழுகிறது?
அல்லது, இதுதான் உங்களுக்குத் தெரிந்த அறிவியலா?//
முதலில் அறிவியல் அரைகுறையானது என்று நான் கூறியதாக எழுதினீர்கள். இப்போது ஐன்ஸ்டீன் கூறியதாக எழுதியிருக்கிறீர்கள். எதை தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலைக்கு நீங்கள் ஆளாகி நிற்பது குறித்து வருந்துகிறேன்.
நீங்கள் பதில் கூறாமல் மீதமிருக்கும் கேள்விகள்:
1) மனிதன் (நூஹ்) 950 ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது எந்த அடிப்படையில் ஏற்கத்தக்கது?
2) அராராத் அளவுக்கு வெள்ளம் ஆனால் மூழ்கியது அந்தப்பகுதி மட்டும் தான் என்பது எப்படி?
3) ஜபல் அல் நூர் என்பதுபோல் ஜூதி அல் உஹத் என்பது போன்று ஒரு சொல்லை மேற்கோள் காட்டமுடியுமா?
4) அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாத விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா? ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும்? அல்லது அந்தப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு எந்தப்பகுதியிலுமே இருந்திராத அதிசய விலங்குகளாக இருந்தன என்பதற்கு குரானில் வசனம் ஏதேனும் இருக்கிறதா?
5) ஒன்றை ஏற்பதா மறுப்பதா எனும் கேள்வியில் குரான் அதை ஏற்கிறதா மறுக்கிறதா என்பதைப்பொருத்தது என்று இரண்டாக பிரிக்கும் என்னுடைய நிலைக்கும் அப்படியல்ல என மறுத்து மூன்றாக பிரிக்கும் உங்களின் நிலைக்கும் என்ன வித்தியாசம்?
6) நங்கூர கல் புறப்பட்ட இடத்திலுள்ள கல்லாக இல்லாமல் தரைதட்டி நின்ற இடத்திலுள்ள கல்லாக இருக்கிறதே எப்படி?
7) டைட்டானியம், அலுமினியம் போன்றவை நூஹின் காலத்திலேயே பயன்படுத்தப்படிருக்கலாம் என்று கூறினீர்களே எந்த அடிப்படையில்?
8) கண்டெடுக்கப்பட்ட மரம், கல்லாய்ப் போன மரம் இவை அறிவியல் ஆய்வுகளில் தேறாதபோது அவை அப்படித்தான் என்று ஏற்கிறீர்களா? எந்த அடிப்படையில்?
9) பிற்சேர்க்கைகளான தேனீ, ஈமச்சடங்கு
தோழமையுடன்
செங்கொடி
நண்பர் செங்கொடி,
“Science without religion is lame. Religion without science is blind” என்று ஐன்ஸ்டீன் சொன்னதை மொழிபெயர்ப்புக்கூடச் செய்யாமல் அப்படியே கொடுத்திருந்தேன்.
அதற்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா?
//ஐன்ஸ்டீன் மதங்கள் குறித்து என்ன சொன்னார் என்பதையெல்லாம் ஏற்பதோ மறுப்பதோ அறிவியல் சார்ந்ததல்ல.//
Science without religion is lame. Religion without science is blind என்பது மதங்களை மட்டும் குறித்த கருத்தா? இது அறிவியல் சார்ந்ததில்லையா? அறிவியலின் அடிப்படைத் தன்மையைப் பற்றிய ஐன்ஸ்டீனின் கருத்தில்லையா இது?
நடுநிலையாகச் சிந்திக்கக்கூடிய நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் இந்த விவாதத்தை காட்டுங்கள் நண்பரே.
நான் பதில் கூறாத கேள்விகள் என நீங்கள் பட்டியலிட்டிருப்பதில் 10-வது கேள்வியாக ‘ரான் யாட்டிற்கு பண உதவி செய்த துருக்கி அரசு’ என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கும் சேர்த்தே நான் பதிலளிப்பேன் இன்ஷா அல்லாஹ்.
அலுவலக வேலைகள் குமிந்து விட்டதால் விவாதத்தில் சிறு இடைவேளை நேரிடலாம். அதுவரை நீங்கள் திறந்த மனதுடன் வாசிப்பதற்காக இரு கட்டுரைகளின் சுட்டியை இணைத்துள்ளேன். படித்துப் பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.
http://www.newsweek.com/id/93188/page/1
http://news.nationalgeographic.com/news/2004/10/1018_041018_science_religion.html
நன்றி
– சலாஹுத்தீன்
நண்பர் செங்கொடி அவர்களே, கீழே கொடுக்கபட்டுல்ல லின்க் பார்கவும், இதற்கு என்ன கதை சொல்ல போகிரீர்கள். இது புதுஸு…
http://news.nationalgeographic.com/news/2010/04/100428-noahs-ark-found-in-turkey-science-religion-culture/
நல்ல தமாஸ் பண்றிங்க! நாலு பேரு சொல்றதை வீடியோ எடுத்து போட்டு, புரானத்தில் இப்படி சொல்லியிருக்குன்னு தான் அவன் சொல்லுவான்!
இது தான் உண்மைன்னு வரிஞ்சி கட்டிகிட்டு நிக்க மாட்டான்!
இந்த சேனலில் உலகம் தோன்றி பல ஆயிரம் கோடிகள் ஆச்சுன்னு சொல்ராங்க, உங்க குரான் படி 5000 வருசம் தான் ஆச்சு!
ஒரு முக்கியமான அறிவிப்பு: ஆபீஸ் ஃபைல்களுக்கு மத்தியில் புதைந்து போன சலாஹுதீன் அவர்களை காணவில்லை. கண்டவர்கள் கையோடு செங்கொடி மேடைக்கு அழைத்து வருமாறு வேண்டப்படுகிறார்கள்
கரண்டு கம்பி,அவர்களே
ஒரு முக்கியமான அறிவிப்பு:??
இஸ்லாத்தை விமர்சனம் செய்து வருகின்ற கம்யுனிசவதிகளையும் செங்கொடியும் இன்று
வரை பல மாதங்கள் ஆகிவிட்டன நேரடி விவாதத்திற்க்கு வராமல் சப்பைக்கட்டுகட்டும்
செங்கொடியை?? மக்கள் மேடைக்கு?? கண்டவர்கள் அழைத்து வருமாறு அன்புடன்
தெரிவித்து கொள்கிறோம்
அன்புடன் கனி
ஹலோ புளிங்குடி,
செங்கொடியோ மத்தவங்களோ சொன்னா சொன்னது மாதிரி வருவாங்க. உங்க ஆளுங்க மாதிரி பதில் சொல்ல முடியலண்ணா ஆஃபீஸ்ல வேலையிருக்குன்னு டிமிக்கி குடுக்க மாட்டாங்க
கரண்டு கம்பி, அவர்களே
சலாஹுதீன் சொன்னா சொன்னது மாதிரி வருவாங்க. செங்கொடி மாதிரி நேரடி விவாதத்திற்க்கு டிமிக்கி குடுக்க மாட்டாங்க
அன்புடன் கனி
நண்பர்களே, நான் எங்கும் காணாமல் போய்விடவில்லை. என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் அலுவலக வேலையா, செங்கொடியுடன் விவாதமா என்றால் முன்னுரிமை அலுவலக வேலைக்குத்தான்.
தவிர, இதுவரை நடந்த விவாதத்தை முழுமையாக யாராவது படித்திருந்தால், அவற்றில் செங்கொடி தனது தரப்பு இன்னதென்று தெளிவாக விளக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதை காணலாம்.
முதலில் ‘இஸ்லாம் ஒரு கற்பனைக் கோட்டை’ என்றார். நோவா எனப்படும் நபி நூஹ் (அலை) ஒரு கற்பனைப் பாத்திரம் என்றார். இப்போது இயேசுவாகிய நபி ஈசா (அலை) அவர்களும் ஒரு கற்பனை மனிதர் என்கிறார். பொதுவாக, அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் அனைத்தையும் ‘கற்பனை’ என்று அறிவித்துவிடுவது அவரது வாத உத்தியாக இருந்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் ‘அறிவியல்’ என்று தமக்குதாமே லேபிள் குத்திக் கொள்வது உச்சக்கட்ட நகைச்சுவை.
மேலும், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டதை மட்டுமே ஏற்பேன் என்று சொல்லும் செங்கொடி, “அறிவியல் என்பது ஒரு தேடல், ஒரு பயணம்” என்கிறார். தேடல், பயணம் என்றால் இன்னும் முடிவு பெறவில்லை என்றுதானே பொருள்? முடிவு பெற்றிராத, முழுமை அடைந்திராத ஒன்றை வைத்துக் கொண்டு, இஸ்லாம் கற்பனை, குர்ஆன் கற்பனை, நோவா கற்பனை, இயேசு கற்பனை என்று ‘தீர்ப்பு’ வழங்குவது அறிவார்ந்தமான வாதமாக இல்லையே?
“Science without religion is lame. Religion without science is blind” என்று ஐன்ஸ்டீன் சொன்னதற்கு,
//ஐன்ஸ்டீன் மதங்கள் குறித்து என்ன சொன்னார் என்பதையெல்லாம் ஏற்பதோ மறுப்பதோ அறிவியல் சார்ந்ததல்ல.// என்று பதிலளித்திருந்தார் செங்கொடி.
Science without religion is lame. Religion without science is blind என்பது மதங்களை மட்டும் குறித்த கருத்தா? இது அறிவியல் சார்ந்ததில்லையா? அறிவியலின் அடிப்படைத் தன்மையைப் பற்றிய ஐன்ஸ்டீனின் கருத்தில்லையா இது? என்ற என் கேள்விக்கு இன்னும் அவரிடமிருந்து பதிலில்லை.
ஐன்ஸ்டீன் மதங்களை ஆராயவில்லை என்பதால் அவரது கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் செங்கொடி. ஐன்ஸ்டீன் ஒரு மாபெரும் அறிவியல் அறிஞர் என்பதால் அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அறிவியல் கருத்தாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை என்பதும் செங்கொடியின் கருத்து.
ஐன்ஸ்டீன் அறிவியல் ஆய்வாளர்தான், மத ஆய்வாளர் அல்ல என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அவரது அறிவியல் ஆய்வுகளின் வழியாகவே “Science without religion is lame. Religion without science is blind” என்ற கருத்திற்கு அவர் வந்திருக்கிறார் என்றால் இது நிச்சயமாக அறிவியல் சார்ந்த கருத்துதான். நண்பர் செங்கொடி இதை மறுக்கிறார் என்றால் அவர் ஐன்ஸ்டீனை விட மாபெரும் அறிவியல் ஆய்வாளராக இருக்க வேண்டும். ஐன்ஸ்டீனுக்குக் கூட தெரிந்திராத அறிவியல் உண்மைகளை செங்கொடி தனது ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை நண்பர் செங்கொடி நம்முடன் பகிர்ந்துக் கொள்ளலாமே?
நன்றி
– சலாஹுத்தீன்
நண்பர் செங்கொடி,
//உங்கள் கருத்தை நான் திரித்து விட்டேன் என்ற குற்றச்சாட்டு, எது விவாத நேர்மை?, குர்ஆனை நான் படிக்கிறேனா இல்லையா? 950 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்கள், பெரு வெள்ளத்தில் முழு உலகமும் மூழ்கியதா இல்லையா? குர்ஆன் சிந்திக்கச் சொல்கிறதா? ஜூதி பெயர் விவகாரம், பிரதமர் உதாரணம், இவற்றோடு பிற்சேர்க்கைகளான பழம் சாப்பிடும் தேனீ, ஈமச்சடங்கு – இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு நான் முன்னரே பதிலளித்திருந்தும், இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் உங்களின் துணை கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும் இன்ஷா அல்லாஹ்.// என நான் பதிலளிப்பதாகச் சொன்னவற்றிற்கு ஒவ்வொன்றாய் பதில் சொல்கிறேன்..
1. உங்கள் கருத்தை நான் திரித்து விட்டேன் என்ற குற்றச்சாட்டு:
//அறிவியல் அறைகுறையானது என்று நான் சொன்னேன் என எழுதியிருக்கிறீர்கள். இது பொய்யான தகவல். அறிவியல் மாறும் தன்மையுடையது என்று தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதைக்கொண்டு என்னுடைய கருத்தை நீங்கள் வேண்டுமென்றே திரிக்கிறீகள்.// என நீங்கள் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள்.
“‘அறிவியல்’ என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்” என்று நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள் என்று நினைவுள்ளதா?
அதற்கு நீங்கள் அழகாக, தெளிவாக சொன்ன பதில் இதோ: \\அறிவியல் என்பது ஒரு தேடல், ஒரு பயணம். ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவை கண்டடையும், கண்டடைந்த முடிவை நடைமுறைப்படுத்தும், நடைமுறைகளின் வாயிலாக பரிசோதனைகள் செய்யும், பரிசோதனையின் விழுமியங்களை விதிகளாக்கும், விதிகளை மீண்டும் தொடர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். அதனால் தான் இதை தேடல் என்றும் பயணம் என்றும் கூறுவது. இதுதான் அறிவியலின் சாராம்சம்//
மேலே உள்ள உங்கள் பதிலிலிருந்து அலங்காரமான வார்த்தைகளை நீக்கி விட்டு பார்த்தால், ‘அறிவியல் இன்னும் முழுமை அடையவில்லை’ என்ற சாராம்சம் தெரியவரும். ‘முழுமையானது அல்ல’ என்பதையே நான் சுருக்கமாக ‘அரைகுறையானது’ என்றேன். இதில் என்ன தவற்றை கண்டு விட்டீர்கள்?
அதே போல //முதலில் அறிவியல் அரைகுறையானது என்று நான் கூறியதாக எழுதினீர்கள். இப்போது ஐன்ஸ்டீன் கூறியதாக எழுதியிருக்கிறீர்கள். எதை தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலைக்கு நீங்கள் ஆளாகி நிற்பது குறித்து வருந்துகிறேன்.// என என் நிலைக்காக நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால் உண்மையில் உங்கள் நிலைக்காக நான்தான் வருந்த வேண்டும்.
“Science without religion is lame. Religion without science is blind” என்ற ஐன்ஸ்டீனின் கூற்றை குறிப்பிட்டிருந்தேன். இதில் lame என்ற ஆங்கில வார்த்தையின் பொருள் ‘நொண்டியான, குறைபாடுள்ள, திருப்தியற்ற’ என்பதாக தமிழ் அகராதிகளில் இருக்கிறது. இவற்றில் ஐன்ஸ்டீனின் கூற்றுக்கு பொருத்தமான அர்த்தம் தரும் பதம் ‘குறைபாடுள்ள’ என்பதாக இருக்கிறது.
எனவே அவரது ஆங்கில வாக்கியத்தை ‘ஆன்மீகம் இன்றி அறிவியல்குறைபாடுடையது’ என தமிழ்ப்படுத்தியிருந்தேன்.
இதிலும் என்ன தவற்றை கண்டு விட்டீர்கள்?
நன்றி
– சலாஹுத்தீன்
கரண்டு கம்பி, அவர்களே
சொன்னா சொன்னது மாதிரி வந்துவிட்டார்
சலாஹுத்தீன் கரண்டு கம்பியை உங்க ஆளுங்களையும் குறிப்பாக செங்கொடியும்
பல மாதங்கள் ஆகிவிட்டன நேரடி விவாதத்திற்க்கு வருவோம் எனறு மக்கள் மேடைக்கு?? கரண்டு கம்பி, அவர்களே எப்பொது அழைத்து வருவீர்கள்
அனபுடன கனி
முகமது கனி
9994500540 இது என் போன் நம்பர், ஈரோட்ல இருக்கேன்! வாங்க நேரடி விவாதத்துக்கு, நானும் பலமுறை கூப்டு பார்த்துட்டேன் ஒருபய வரலை!
2. எது விவாத நேர்மையல்ல?
//அறிவியல் அறைகுறையானது என்று நான் சொன்னேன் என எழுதியிருக்கிறீர்கள். இது பொய்யான தகவல். அறிவியல் மாறும் தன்மையுடையது என்று தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதைக்கொண்டு என்னுடைய கருத்தை நீங்கள் வேண்டுமென்றே திரிக்கிறீகள். நான் கூறியது உங்களுக்கு புரியவில்லை, என்று இதை எடுத்துக்கொள்ள முடியாது ஏனென்றால் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு இது கடினமானதல்ல. எனவே இதை நீங்கள் வேண்டுமென்றே செய்திருக்கிறீர்கள், இது விவாத நேர்மையல்ல.//
மேற்கண்ட உங்கள் குற்றச்சாட்டுகளில், ‘அரைகுறை அறிவியல்’ பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். இனி ‘எது விவாத நேர்மையல்ல?’ என்பதைப் பார்ப்போம்.
இதற்கு உங்கள் பதிவுகளிலிருந்தும் பதில்களிலிருந்தும் ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும் என்றபோதிலும், முக்கியமான ஓரிரண்டை மட்டும் சுட்டிக் காட்டி மற்றவற்றை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.
‘இஸ்லாம் ஒரு கற்பனைக் கோட்டை’ என்ற தலைப்பில் தொடர் பதிவுகளை எழுதி இந்த விவாதத்தை தொடங்கி வைத்தவர் நீங்கள்தான். இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்னவென்றால், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை வாழ்ந்து மறைந்த, வாழ்ந்துக் கொண்டிருக்கும், இனியும் வரப்போகும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அனைவரின் பொய்யான அடிப்படை நம்பிக்கைகளை தகர்த்தெரிந்து நீங்கள் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை முறையைக் காட்டப் போகிறீர்கள், அப்படித்தானே? உங்கள் நோக்கத்தை சரியாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறேனா? எதையும் திரித்து விடவில்லையே?
அப்பேர்ப்பட்ட மகத்தான நோக்கத்துடன் களம் புகுந்திருக்கும் நீங்கள், எங்கள் அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்கும் தெளிவான ஆதாரங்களை ‘பட்.. பட்’டென்று எடுத்து வைத்திருந்தால் அது விவாத நேர்மை. ஆனால் நீங்களோ, ‘இஸ்லாம் ஒரு கற்பனை. அது கற்பனை அல்ல என்பதற்கு நீங்களே ஆதாரம் தாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே அது விவாத நேர்மையல்ல.
வரிக்கு வரி அறிவியல் அறிவியல் என்று சொல்லும் நீங்கள், ‘கல்லாய்ப்போன மரமா?’ என்று ‘கிலி’யடைந்தபோது, fossils எப்படி உருவாகின்றன என்ற அறிவியல் உண்மையை சுட்டிக் காட்டி உங்கள் கிலியை போக்கியது நான்தான் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள். இந்த எளிய அறிவியல் உண்மையைக்கூட தெரிந்திராமல் ‘நோவாவின் கப்பல் கற்பனை’ ‘நோவாவே கற்பனை’ என நீங்கள் விவாதம் செய்ய வந்திருப்பது நிச்சயமாக விவாத நேர்மையல்ல.
நன்றி
-சலாஹுத்தீன்
வரிக்கு வரி
நண்பர் சலாஹுத்தீன்,
உங்களின் மிகுந்த அலுவல்களுக்கிடையேயும் ‘செங்கொடியை’ தவறாமல் படித்துவருகிறீர்கள் என்று உங்கள் பதிலிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி.
அறிவியல் என்பது ஒரு தேடல், பயணம் என்பது சரியானது தான், என்றால் அதன் பொருள் என்ன? அறிவியல் முடிந்து விட்டது இனி அறிவியல் தொடராது என்று யாரலும் கூறமுடியாது. அறிவியல் என்றும் முற்றுப்பெறவும் செய்யாது. அது தொடர்ந்துகொண்டே இருக்கும். பூமி முடிந்து போனாலும் கடைசி மனிதன் எங்காவது வாழ்ந்து கொண்டிருக்கும் வரை அறிவியல் தொடர்ந்து கொண்டிருக்கும். காரண காரியங்களை, நிகழ்வுகளுக்கான பின்னணிகளை அது தேடிக்கொண்டே இருக்கும். இது தான் தேடல் பயணம் என்பதன் பொருள். என்று மனிதன் தீயை கண்டானோ அதற்கு முன்னிருந்து தொடங்கியது அறிவியல், அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது நாளையும் தொடரும் (இங்கு நாளை என்பதற்கு 24 மணி நேரம் கழித்து என்பது பொருளல்ல) இது எந்த விதத்தில் உங்களுக்கு அறைகுறையானது என்று பொருள் தருகிறது? சில இடங்களில் சில ஆய்வுகளில் அறிவியல் முடிவை வந்தடைய முடியாமல் தவிக்கிறது. இது அந்த ஆய்வுக்கு மட்டும் தான், அதற்கு விடை கண்டுபிடிக்கப்படும் வரையில் தான். ஆனால் நீங்கள் அறைகுறையானது என்பதை என்ன பொருளில் பயன்படுத்துகிறீர்கள்? மொத்த அறிவியலையும், அறிவியல் என்றாலே அது அறைகுறையானது எனும் பொருளில் பயன்படுத்துகிறீர்கள். இது சரியா? தவறா?
ஐன்ஸ்டீன் குறித்த உங்களின் கேள்விக்கு நான் பதிலளிக்கவில்லை என்றெல்லாம் எழுதியிருந்தீர்கள். அந்த எல்லைக்கு நீங்கள் போகவேண்டாம். ஏற்கனவே நான் அளித்த பதில் அது விசயத்தில் போதுமானது என நான் கருதியதால் தான். அதாவது \\ இதே ஆன்மீகம் குறித்து அவர் கூறிய இன்னொரு கருத்தை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? “நான் கடவுள் எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அது தினப்படி மனிதவாழ்வை கட்டுப்படுத்தும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளமுடியாது” இதை உங்களால் ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமுடியாது. ஆன்மீகம் குறித்து அவர் கூறியவற்றில் சாதகமானதை எடுத்துக்கொண்டு பாதகமானதை விட்டுவிடும் நீங்கள் சரியானவரா? இல்லை, மதங்களை அவர் ஆய்வு செய்யவில்லை என்பதால் ஆன்மீகம் குறித்து அவர் கூறும் எதையும் ஏற்கமுடியாது எனும் நான் சரியானவனா?// நான் பதில் கூறாத உங்களின் கேள்விக்கு முன்னரே இது எழுதப்பட்டிருந்தாலும் உங்கள் கேள்விக்கு இது போதுமானது, இருந்தாலும் மீண்டும் நீங்கள் கேட்டிருப்பதால் விளக்கமாகவே கூறுகிறேன். உங்கள் கூற்றுப்படி அறிவியல் அடிப்படைகளின் ஊடாகவே அவர் ஆன்மீகம் குறித்த கருத்தை வந்தடைந்தார் என்றே கொள்வோம். ஆன்மீகம் என்ற கருத்தியலை அவர் எந்த அடிப்படையில் கையாண்டார்? அறிவியலாளர்கள் ஆன்மீகத்தை ஒரு அறுதலியாகத்தான் அதாவது கணிதவடிவில் விடை தெரியாத ஒன்று என்பதாகத்தான் பயன்படுத்துகிறார்கள் (அறுதலி = அறுதி + இலி; விடை தெரியாத, அறுதி இல்லாத)கணிதத்தில் தெரியாத விடையை எக்ஸ் என்று வைத்துக்கொள்வோமே அந்த அடிப்படையில் தான் பயன்படுத்துகிறார்கள். ஐன்ஸ்டீனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதை என்னுடைய சொந்த கணிப்பாக கூறவில்லை. அது தினப்படி மனிதவாழ்வை கட்டுப்படுத்தும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவரே கூறியதன் அடிப்படையில் தான். ஆக அவர் கூறிய ஆன்மீகம் இல்லாத அறிவியல் முடமானது என்று அவர் கூறியதன் பொருள் என்ன என்று புரிகிறதா? அறிவியல் குறித்து ஐன்ஸ்டீன் ஆய்ந்து கூறியிருக்கிறார், ஆனால் ஒரு மனிதனாக சமகால வாழ்வின் பல விசயங்கள் குறித்து அவர் கருத்து கூறியிருக்கிறார். கம்யூனிசம் மிகச்சிறப்பானது என்று கூறியிருக்கிறார் இதை ஏற்றுக்கொள்ளமுடியுமா உங்களால்? சொந்த வாழ்வின் அனுபவங்களினூடாக காதல் குறித்து கருத்து கூறியிருக்கிறார். உடனே அணுஆயுதம் தயாரியுங்கள் என்று அமெரிக்க அரசுக்கு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். எதை நீங்கள் ஏற்பீர்கள்? எதை மறுப்பீர்கள்? உங்களின் பார்வை ஒரு வழித்தடமானது. உங்களுக்கு சாதகமாக இருக்கும் எதையும் ஏற்பது, பாதகமாக இருக்கும் எதையும் மறுப்பது (இங்கு உங்களுக்கு என்பதன் பொருள் உங்களையல்ல இஸ்லாத்தை குறிப்பது) மீண்டும் என் பழைய கேள்வியையே கேட்கிறேன், ஆன்மீகம் குறித்து அவர் கூறியவற்றில் சாதகமானதை எடுத்துக்கொண்டு பாதகமானதை விட்டுவிடும் நீங்கள் சரியானவரா? இல்லை, மதங்களை அவர் ஆய்வு செய்யவில்லை என்பதால் ஆன்மீகம் குறித்து அவர் கூறும் எதையும் ஏற்கமுடியாது எனும் நான் சரியானவனா?
அடுத்து, என்னுடைய குற்றச்சாட்டுக்கு உங்களின் விளக்கம் குறித்து; நான் கூறியவற்றை நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் அல்லது அலங்கார வார்த்தைகளை நீங்கிவிட்டு பார்த்தால் அறிவியல் முழுமையடையாதது என்று தான் உங்களால் விளங்கிக்கொள்ள முடிகிறது என்பது என்னுடைய பிரச்சனையல்ல. அறிவியலைப்பற்றி நீங்கள் எப்படியும் கருத்துக்கொண்டிருக்கலாம், அறைகுறையானது என்றோ, கால் வாசியானது என்றோ, அறைக்கால்வாசியானது என்றோ எந்த அளவீடுகளில் வேண்டுமானாலும் நீங்கள் கருத்து கொண்டிருக்கலாம் அதுவும் என்னுடைய பிரச்சனையல்ல. ஆனால் நான் அறிவியல் அறைகுறையானது என்று கூறினேன் என நீங்கள் எழுதியிருந்தீர்களே அது தான் பிரச்சனை அது தான் என் குற்றச்சாட்டு. அதற்கு நீங்கள் பதில் சொல்லியாகவேண்டும். அடுத்து இன்னொரு புரட்டு வேலையும் செய்திருக்கிறீர்கள். \\அறிவியல் அரைகுறையானது, நாளுக்கு நாள் மாறக்கூடியது என்பதை நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.// என நீங்கள் எழுதியது ஏப்ரல் 16, 2010 அன்று. நீங்கள் திரிக்கிறீர்கள் என்று குற்றம் சட்டியதும் நான் எழுதியதிலிருந்து அலங்கார வார்த்தைகளை நீக்கிவிட்டு அரைகுறை என்று நீங்கள் புரிந்து கொண்டதும் ஏப்ரல் 17 ஆம் தேதி. ஆக ஏப்ரல் 17ஆம் தேதி நான் எழுதியதை அரை குறை என்று விளங்கிக்கொண்டு ஏப்ரல் 16 ஆம் தேதியே அரைகுறை என்று தீர்ப்பு வழங்கி விட்டீர்கள் அப்படித்தானே. என்னே உங்கள் நேர்மை.
அடுத்து விவாத நேர்மை குறித்து நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கலாம். நான் கூறிய ஒரு கருத்தை நான் என்ன பொருளில் அதை கூறுகிறேன் என்பதை அறிந்திருந்தும் அதற்கு மாறான ஒன்றை திரித்து நான் கூறியதாக நீங்கள் கூறியதை நான் விவாத நேர்மையல்ல என்று கூறியிருந்தேன். இதை விளக்குவதாக இருந்தால் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும்? இன்னின்ன காரணங்களால் அது விவாத நேர்மைதான் என்று விளக்கியிருக்க வேண்டும் அதுதான் நேர்மையானவர்களின் செயல். ஆனால் நீங்கள் செய்தது என்ன? ஆனால் நான் ஏற்கனவே விவாத நேர்மையற்று எழுதியிக்கிறேன் என்று பொருத்தமாற்று எதையோ சுட்டிக்காட்டுகிறீர்கள். இப்படி என்னை சுட்டிக்காட்டுவதால் நீங்கள் செய்தது விவாத நேர்மையாகிவிடுமா?
சரி என்னிடம் விவாத நேர்மையில்லாதது என்று சுட்டிக்காட்டுவதைப் பார்ப்போம். \\அப்பேர்ப்பட்ட மகத்தான நோக்கத்துடன் களம் புகுந்திருக்கும் நீங்கள், எங்கள் அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்கும் தெளிவான ஆதாரங்களை ‘பட்.. பட்’டென்று எடுத்து வைத்திருந்தால் அது விவாத நேர்மை. ஆனால் நீங்களோ, ‘இஸ்லாம் ஒரு கற்பனை. அது கற்பனை அல்ல என்பதற்கு நீங்களே ஆதாரம் தாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே அது விவாத நேர்மையல்ல// நான் எழுதிக்கொண்டிருக்கும் தொடரை தடக்கம் முதல் படித்துப்பாருங்கள் (விவாதம் உட்பட) எவ்வளவு ஆதாரங்கள்? எவ்வளவு தரவுகள்? எவ்வளவு அம்பலங்கள் எவ்வளவு கேள்விகள்? இவ்வளவையும் எடுத்துவைத்துவிட்டு அல்லவா? உங்கள் தரப்புக்கு என்ன ஆதரம் என்று கேட்கிறேன். ஆனால் நான் எதுவுமே சொல்லாமல் கற்பனை அல்ல என்பதற்கு நீங்கள் ஆதாரம் தாருங்கள் என்று உங்களை கேட்டதாக உளறியிருக்கிறீர்கள். உளறல்களையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. ஆனாலும் நண்பனாக விவாதம் செய்தீர்கள் எனும் அடிப்படையில் பதில் கூறிக்கொண்டிருக்கிறேன். இதை மறந்துவிட வேண்டாம்.
என்னுடைய கிலியை நீங்கள் நீக்கியதாகவும் எழுதியிருக்கிறீர்கள். சிரிப்பதற்கும் ஒரு எல்லையிருக்கிறது, அந்த எல்லையை தாண்டவைக்கிறீர்கள். \\இந்த எளிய அறிவியல் உண்மையைக்கூட தெரிந்திராமல் ‘நோவாவின் கப்பல் கற்பனை’ ‘நோவாவே கற்பனை’ என நீங்கள் விவாதம் செய்ய வந்திருப்பது நிச்சயமாக விவாத நேர்மையல்ல// இந்த இடுகையில் பின்னூட்டங்களில் நான் தந்திருக்கும் அறிவியல் விளக்கங்களை படித்துப்பார்த்தாலே நோவாவின் கற்பனை குறித்தான விவாதம் செய்ய எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிபடும். ஆனால் நேர்மையை தவற விட்டுவிட்ட உங்களுக்கு அது கொஞ்சம் சிரமம் தான் புரிகிறது.
\\முதலில் ‘இஸ்லாம் ஒரு கற்பனைக் கோட்டை’ என்றார். நோவா எனப்படும் நபி நூஹ் (அலை) ஒரு கற்பனைப் பாத்திரம் என்றார். இப்போது இயேசுவாகிய நபி ஈசா (அலை) அவர்களும் ஒரு கற்பனை மனிதர் என்கிறார். பொதுவாக, அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் அனைத்தையும் ‘கற்பனை’ என்று அறிவித்துவிடுவது அவரது வாத உத்தியாக இருந்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் ‘அறிவியல்’ என்று தமக்குதாமே லேபிள் குத்திக் கொள்வது உச்சக்கட்ட நகைச்சுவை.// எது நகைச்சுவை? நான் கற்பனை என்று கூறிய அனைத்திற்கு ஆதாரங்கள் தந்திருக்கிறேன். அதை மறுக்க முடியாமல் சம்மந்தமில்லாமல் எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் நகைச்சுவை என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் உங்களுக்கு நீங்களே லேபிள் குத்திக்கொள்கிறீர்கள். அது என்ன லேபிள் என்று என்னைக்கொண்டு சொல்லவைக்காதீர்கள்.
செங்கொடி
நண்பர் செங்கொடி.
என் மேல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதில் காட்டும் வேகத்தில் சிறிதளவு இந்த விவாதத்தில் உங்கள் பொறுப்பு என்ன என்பதைப் பற்றி சிந்திப்பதில் செலவிட்டிருந்தீர்களென்றால் இந்த விவாதம் இப்படி ஜவ்வு போல இழுத்துக் கொண்டு போகாது.
//அறிவியல் என்பது ஒரு தேடல், பயணம் என்பது சரியானது தான், என்றால் அதன் பொருள் என்ன? அறிவியல் முடிந்து விட்டது இனி அறிவியல் தொடராது என்று யாரலும் கூறமுடியாது. அறிவியல் என்றும் முற்றுப்பெறவும் செய்யாது. அது தொடர்ந்துகொண்டே இருக்கும். //
இதன் பொருள் என்ன? ஒரு தேடல், ஒரு பயணம் என்றால் அதன் இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்பதுதானே? இதை ‘முழுமையடையாதது’ என்றோ ‘அரைகுறையானது’ என்றோ சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
//சில இடங்களில் சில ஆய்வுகளில் அறிவியல் முடிவை வந்தடைய முடியாமல் தவிக்கிறது. இது அந்த ஆய்வுக்கு மட்டும் தான், அதற்கு விடை கண்டுபிடிக்கப்படும் வரையில் தான்.//
விடை கண்டுபிடிக்கப்பட்ட, அல்லது விடை கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக நம்பப்பட்ட ஆய்வுகள் கூட பிற்காலத்தில் மாற்றம் கண்டிருக்கின்றனவே? ஒரு உதாரணம் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். 1920-களின் இறுதியில் பெருவெடிப்புக் கொள்கை கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பு வரை Static Universe Model என்ற ‘என்றும் நிலைத்து நிற்கும் பிரபஞ்சம்’ என்ற கொள்கையைத்தான் அறிவியலாளர்கள் நம்பி வந்தார்கள். ஐன்ஸ்டீன் கூட இந்தக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவராகத்தான் இருந்தார். ஆனால் பெருவெடிப்புக் கொள்கை கண்டுபிடிக்கப்பட்ட பின் அந்த நம்பிக்கை தகர்க்கப் பட்டு விட்டது.
இதுதான் அறிவியலின் தன்மை. அறிவியலாளர்கள் இன்றைய தேதியில் அவர்களுக்கு கிடைக்கும் ஆதாரங்கள், தகவல்கள், ஆய்வு உபகரணங்களைக் கொண்டு சில முடிவுகளை எடுப்பார்கள். இன்றைய தேதிக்கு அதுதான் உண்மை எனத் தெரியும். நாளையே வேறு ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் முடிவுகளும் மாற்றம் காணும்.
ஐன்ஸ்டீன் கூற்று பற்றிய என் கேள்விக்கு பதிலாக நீங்கள் இன்னொரு கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள்.
//இதே ஆன்மீகம் குறித்து அவர் கூறிய இன்னொரு கருத்தை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? “நான் கடவுள் எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அது தினப்படி மனிதவாழ்வை கட்டுப்படுத்தும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளமுடியாது” இதை உங்களால் ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமுடியாது. ஆன்மீகம் குறித்து அவர் கூறியவற்றில் சாதகமானதை எடுத்துக்கொண்டு பாதகமானதை விட்டுவிடும் நீங்கள் சரியானவரா? இல்லை, மதங்களை அவர் ஆய்வு செய்யவில்லை என்பதால் ஆன்மீகம் குறித்து அவர் கூறும் எதையும் ஏற்கமுடியாது எனும் நான் சரியானவனா?//
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விவாதத்தில் எனது மற்றும் உங்களின் நிலைப்பாடுகளை அறிந்திராத ஒருவர்தான் இப்படியான கேள்வியை கேட்க முடியும். ஆனால் அந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.
எனது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை தெளிவாகச் சொல்கிறேன்..
எனது கொள்கை (அப்படியென்றால் இஸ்லாமியக் கொள்கை) குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கொள்கைகளுள் சில அறிவியல் உண்மைகளும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. நான் குர்ஆன் வழியாக அறிவியலைக் காண்கிறேன். குர்ஆனின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்ற, அதனோடு முரண்படாத அறிவியல் கண்டுபிடிப்புகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து மாறுதலடைந்துக் கொண்டிருக்கும் அறிவியல் கருத்துக்களில் எவை உண்மையானவை என்று கண்டுபிடிக்க குர்ஆன் ஒரு உரைகல்லாக இருக்கிறது.
எனவே, “நான் கடவுள் எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அது தினப்படி மனிதவாழ்வை கட்டுப்படுத்தும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளமுடியாது” என்ற ஐன்ஸ்டீனின் கூற்றை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதற்கு இரண்டு காரணங்கள்: 1. இது முழுக்க முழுக்க அறிவியல் தொடர்பற்ற, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒரு கருத்து 2. இது எனது அடிப்படைக் கொள்கைகளுடன் முரண்படுகிறது.
அதேசமயம், இன்னொரு விஷயத்தையும் நான் தெளிவு படுத்த வேண்டும். குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் அறிவியல் அத்தாட்சிகளை நீங்கள் அறிவியல் ரீதியில் அணுகுவதாகச் சொல்லிக் கொள்வதால், இந்த விவாதம் நெடுகிலும் நான் முடிந்தவரை அறிவியல் ரீதியான பதில்களையே அளித்துக் கொண்டிருக்கிறேன். குர்ஆன் வசனங்களையோ ஹதீஸ்களையோ ஆதாரங்களாக எடுத்து வைப்பதை தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் சுட்டிக் காட்டும் அறிவியல் உண்மைகளை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அது ஏன் என்பதை கீழே பார்ப்போம்.
இப்போது எனது கேள்விக்கு வருவோம்.
“Science without religion is lame. Religion without science is blind” என்ற ஐன்ஸ்டீனின் கூற்று அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இருக்கும் தொடர்பை சுட்டிக் காட்டுகிறது. இது முழுக்க முழுக்க மதம் சார்ந்த கருத்து என்று ஒதுக்க முடியாது. ஆனால் இந்தக் கருத்தை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? நான் குர்ஆனை உரைகல்லாக வைத்து அறிவியல் கருத்துக்களில் அதனோடு முரண்படாதவற்றை மட்டும் ஏற்பது போல, உங்களிடமும் ஒரு ‘உரைகல்’ இருக்கிறது. அந்த ‘உரைகல்’ கொள்கையுடன் மோதும் எந்தக் கருத்தையும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதுபோல, ரான் யாட்டின் முடிவுகளை உங்களால் ஏற்க முடியாததற்கு நீங்கள் சொன்ன ஒரு காரணம் அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தார் என்பது. ஆக, ஆன்மீக நம்பிக்கை கொண்ட ஒரு ஆய்வாளரின் ஆய்வு முடிகளை ஏற்றுக் கொள்ள உங்கள் ‘உரைகல்’ உங்களை அனுமதிக்கவில்லை.
எனது ஏப்ரல் 20 பின்னூட்டத்தில் இரு கட்டுரைகளின் சுட்டிகளை கொடுத்திருந்தேன். அவற்றை நீங்கள் படித்தீர்களா என்பது தெரியவில்லை. படித்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலான கருத்துக்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அவை படைப்புக் கொள்கையின் சாத்தியத்தை உறுதிப் படுத்துகின்றன. கடவுள் நம்பிக்கைக் கொண்ட பல அறிவியலாளர்களை சுட்டிக் காட்டுகின்றன. அவையெல்லாம் உங்கள் ‘உரைகல்’ கொள்கையுடன் மோதுவதால் உங்களால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்போது சொல்லுங்கள்.. குர்ஆன் தான் எனது உரைகல்; குர்ஆன் கருத்துக்களோடு முரண்படாத அறிவியல் கொள்கைகளை மட்டுமே நான் ஏற்றுக் கொள்வேன் என்று வெளிப்படையாக அறிவிக்கும் நான் சரியானவனா? இல்லை, அறிவியல் கருத்துக்களை ஒரு மறைமுக ஃபில்டரால் வடிகட்டி தனக்கு சாதகமானதை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் நீங்கள் சரியானவரா?
\\அறிவியல் அரைகுறையானது, நாளுக்கு நாள் மாறக்கூடியது என்பதை நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.// என நீங்கள் எழுதியது ஏப்ரல் 16, 2010 அன்று. நீங்கள் திரிக்கிறீர்கள் என்று குற்றம் சட்டியதும் நான் எழுதியதிலிருந்து அலங்கார வார்த்தைகளை நீக்கிவிட்டு அரைகுறை என்று நீங்கள் புரிந்து கொண்டதும் ஏப்ரல் 17 ஆம் தேதி. ஆக ஏப்ரல் 17ஆம் தேதி நான் எழுதியதை அரை குறை என்று விளங்கிக்கொண்டு ஏப்ரல் 16 ஆம் தேதியே அரைகுறை என்று தீர்ப்பு வழங்கி விட்டீர்கள் அப்படித்தானே. என்னே உங்கள் நேர்மை.//
குற்றம் சாட்டுவதிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும். அறிவியல் நாளுக்கு நாள் மாறக்கூடியது என்ற உங்கள் கூற்றுக்கு அண்மைய உதாரணமாக ஏப்ரல் 17 அன்று நீங்கள் எழுதியதை சுட்டிக் காட்டினேன். ஆனால், இதற்கு முன் நீங்கள் இதே கருத்தை வெளிப்படுத்தியதேயில்லையா என்ன? கீழே உள்ளது சாட்சாத் நீங்கள்தான் ஏப்ரல் 3-ம் தேதி எழுதியது:
//அறிவியல் மாறக்கூடியது தான், காரணம் அது தேடலை அடிப்படையாக கொண்டது, சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது, அறிவை அடிப்படையாக கொண்டது மாறாக நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதல்ல. நேற்றொரு கொள்கை இன்றொரு கொள்கை என மாறிக்கொள்வதில் எனக்கு அசூயை ஒன்றுமில்லை. ஏனென்றால் நேற்று எது சரியாக இருந்ததோ அதை ஏற்றுக்கொண்டேன், இன்று எது சரியாக இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறேன், நாளை எது சரியாக இருக்குமோ அதை ஏற்றுக்கொள்வேன்.//
நேர்மையை யார் தவற விட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறதா?
//நான் எழுதிக்கொண்டிருக்கும் தொடரை தடக்கம் முதல் படித்துப்பாருங்கள் (விவாதம் உட்பட) எவ்வளவு ஆதாரங்கள்? எவ்வளவு தரவுகள்? எவ்வளவு அம்பலங்கள் எவ்வளவு கேள்விகள்? இவ்வளவையும் எடுத்துவைத்துவிட்டு அல்லவா? உங்கள் தரப்புக்கு என்ன ஆதரம் என்று கேட்கிறேன். ஆனால் நான் எதுவுமே சொல்லாமல் கற்பனை அல்ல என்பதற்கு நீங்கள் ஆதாரம் தாருங்கள் என்று உங்களை கேட்டதாக உளறியிருக்கிறீர்கள். உளறல்களையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. ஆனாலும் நண்பனாக விவாதம் செய்தீர்கள் எனும் அடிப்படையில் பதில் கூறிக்கொண்டிருக்கிறேன். இதை மறந்துவிட வேண்டாம்.//
நண்பரே, ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது? உங்கள் பதிவுகள் அனைத்துமே உளறல்கள்தான் என்றாலும், விவாதத்தில் ‘உளறல்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது நாகரீகமாக இருக்காது என்பதால் அதை இதுவரை தவிர்த்தே வந்திருக்கிறேன். நீங்கள் எழுதுவதையெல்லாம் ஆதாரங்கள், அம்பலங்கள் என்று நீங்களே மெச்சிக் கொண்டால் எப்படி?
அவையெல்லாம் தவறான தகவல்கள், யூகங்கள், கற்பனைகள், பேசப்படும் பொருளுக்குத் தொடர்பில்லாத விஷயங்கள், மேலும் உங்கள் ‘மறைமுக உரைகல்’லைக் கொண்டு வடிகட்டப்பட்ட அரைகுறை ஆய்வுகள், என்பதைத்தான் நான் அம்பலப் படுத்தி வருகிறேன். எனக்கு நேரம் கிடைப்பதை பொருத்து, உங்கள் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் எப்படி உண்மையை மறைத்து தவறான தகவல்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
வரிக்கு வரி அறிவியல் அறிவியல் என்று சொல்லிக் கொண்டு, ஆனால் உண்மையில் தனக்குச் சாதகமானதை மட்டுமே ஏற்றுக் கொண்டு, தனது உண்மை நிலைப்பாட்டை மறைத்துக் கொண்டு விவாதம் புரியும் நீங்கள், //உங்களின் பார்வை ஒரு வழித்தடமானது. உங்களுக்கு சாதகமாக இருக்கும் எதையும் ஏற்பது, பாதகமாக இருக்கும் எதையும் மறுப்பது (இங்கு உங்களுக்கு என்பதன் பொருள் உங்களையல்ல இஸ்லாத்தை குறிப்பது)// என்று என்னை குற்றம் சுமத்துவதை உங்களின் ‘இந்த வார நகைச்சுவை’யாக எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி
– சலாஹுத்தீன்
Dear
Peace upon you
I have read the above
I think you are expecting answers from orthodoxes
Find exact answers from Final Testament
Beacuse Muslims in common are not moderates
நண்பர் சலாஹுத்தீன்,
நான் உங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு, நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக நீங்கள் திரித்தீர்கள் என்பது. அறிவியல் அரைகுறையானது அல்ல. நான் எழுதிவரும் விளக்கங்களில் இருந்து அவ்வாறு புரிந்து கொள்ளவும் முடியாது. அறிவியல் ஒரு பயணம் என்றால் அதற்கு ஒற்றை இலக்கு இருக்கிறது என்று சொன்னது யார்? இது என்ன பேருந்துப் பயணமா ஒரு இலக்கை அடைந்ததும் நின்றுவிடுவதற்கு? ஒவ்வொரு விசயத்தையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆய்ந்து விடை சொல்லிவிட்டு அடுத்த விசயத்திற்கு போய்விடும். அறிவியலின் பயணத்தை அறிந்துகொண்டே அறிவியல் அரைகுறையானது எனும் உங்களுக்கு தோதுவான நிலைப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். இவ்வுலகில் உண்மைகளாக நிலவுகின்ற அனைத்தும் அறிவியலால் விடை சொல்லப்பட்டவைகள் தான். விடை சொல்லமுடியாத வெகு சில விசயங்களில் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, அவைகளையும் அரைகுறை என்று சொல்லமுடியாது ஏனென்றால் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பின் எதை அடிப்படையாக கொண்டு நீங்கள் அரைகுறை என்று முடிவு செய்தீர்கள். அப்படி நீங்கள் தவறாக முடிவு செய்திருந்தாலும் கூட நான் அவ்வாறு சொன்னேன் என்று நீங்கள் கூறியது திரிப்புதான், அது விவாத நேர்மையற்றது தான். இது தான் நீங்கள் விளக்கம் சொல்லவேண்டிய இடம். இதை விட்டுவிட்டு அறிவியலின் மாறும் தன்மையினால் அது அரைகுறையானது என மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தால் நீங்கள் அரைகுறையானவர் என்று நான் கருதும்படியாகும், எச்சரிக்கை.
ஐன்ஸ்டீனின் கருத்துகளில் இங்கு சுட்டிக்காட்டப்பட்ட இரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகிறது என்பது உங்களுக்கு விளங்கவில்லையா? அதாவது ஆன்மீகமில்லா அறிவியல் அரைகுறையானது என்பதை ஏற்று தினப்படி மனித நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் கடவுளை மறுக்கிறேன் என்பதை மறுக்கிறீர்கள். நீங்கள் ஏற்றுக்கொண்ட முதல் கருத்தின் ஆன்மீகம் எனும் சொல்லின் விளக்கமாகத்தான் இரண்டாவது கருத்து இருக்கிறது. இரண்டாவது கருத்தை மறுக்கும் நீங்கள் முத்ல் கருத்தின் ஆன்மீகம் என்பதற்கு என்ன பொருள் கொள்வீர்கள்? உங்கள் விருப்பப்படியா? உங்கள் விருப்பபடி பொருள் கொள்வதற்கு ஐன்ஸ்டீனை ஏன் இழுக்கிறீர்கள்? உங்கள் கருத்தாகவே சொல்லிவிட்டுப் போகலாமே. இதில் நான் அறிவியலில் ஒன்றை மறுத்து இன்னொன்றை ஏற்பதாக தாளமடிக்கிறீர்கள். அறிவியலின் எந்தக் கூறை நான் மறுக்கிறேன் அல்லது எந்த ஆய்வை நான் ஏற்றுக்கொள்ளவில்லை சொல்லமுடியுமா? நீங்கள் இணைத்த சுட்டியில் இருப்பதென்ன? அறிவியல் கண்டுபிடிப்புகளா? இல்லையே. அறிவியலாளர்களின் கூற்றுகளில் சிலவற்றைவைத்து தொகுத்து எழுதப்பட்ட கட்டுரைகள். அந்த அறிவியலாளர்களின் கூற்றுகளிலும் படைப்புக்கொள்கையை ஆதரித்து என்ன இருக்கிறது? கட்டுரையாளர் அப்படி தோற்றம் வருவது போல் எழுதியிருக்கிறார். ஆனால் அறிவியலாளர்களின் கூற்றில் நான் ஏற்கனவே கூறியது போல் ஒரு கணித சமன்பாட்டை போல், ஒரு எக்ஸ் என்பதை போல் தான் ஆன்மீகம் இருக்கிறது. இப்படி புனைவுகளை மறுப்பதை அறிவியலை மறுப்பதைப் போல் பாவனை காட்டும் நீங்கள், அறிவியல் உண்மைகளையே மறுத்துக்கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா? ஏற்கனவே தேனீ உள்ளிட்ட சிலவற்றை சுட்டிக்காட்டியிருந்தேன். இன்னும் நீங்கள் பதிலளித்துக்கொண்………….டே இருக்கிறீர்கள். அறிவியல் உண்மைகள் எப்படி இருந்தாலும் சாதகமாக என்றாலும் பாதகமாக என்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்வது தான் என்னுடைய நிலை. ஏனென்றால் அறிவியல் தான் என் உரைகல், நீங்கள் கருதுவதைப்போல் வேறெதோ உரைகல்லை வைத்துக்கொண்டு அறிவியலை உரசிப்பார்ப்பதில்லை. ஏனென்றால் அறிவியலின் அணுகுமுறையே உரசிப்பார்ப்பதுதான்.
விடை கண்டுபிடிக்கப்பட்ட அல்லது விடை கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக நம்பப்பட்ட ஆய்வுகள் கூட பிற்காலத்தில் மாற்றம் கண்டிருப்பதாக நீங்கள் கூறுவது உண்மைக்கு புறம்பானது. நிலைப் பிரபஞ்சம் என்பது பெருவெடிப்புக்கொள்கையைப்போலவே யூகம் தான். யூகம் தான் மாறுபாடடையும், உண்மைகளல்ல. இருப்பினும் எதுவும் மாறும் தன்மையுடையது என்பது அறிவியலின் நேர்மை. அதன் வெளிப்படைத்தன்மைக்கான எடுத்துக்காட்டு. அதை உங்கள் வசதிக்கு உருமாற்றிக்கொள்ள முனையாதீர்கள்.
நீங்கள் சுட்டிக்காட்டும் அறிவியல்(!) உண்மைகளை ஏன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? ஏனென்றால் அவைகள் அறிவியல் உண்மைகளாக இல்லை என்பதால். ரான் யாட் ஒரு கடவுள் நம்பிக்கையாளர் என்பதாலா அவரின் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அப்படியென்றால் என்னுடைய எந்தப் பின்னூட்டங்களையும் நீங்கள் படிக்கவில்லை என்றல்லாவா பொருள்வரும். ரான் யாட் அறிவியல் என்ற பெயரில் எப்படி இட்டுக்கட்டியிருக்கிறார் என்பதை நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன், மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள், அவரின் முடிவுகளை மறுப்பதற்கான காரணங்களை எடுத்துவைத்திருக்கிறேன். இதுவும் உங்களின் விவாத நேர்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
அறிவியல் மாறும் தன்மையுடையது என்று நான் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறேன். ஆனால் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கூறும் போது பொருத்தமான மேற்கோள்கள் காட்டவேண்டும். தொடர்ந்து நான் கூறிவரும் ஒன்றை நான் இப்படி புரிந்து கொண்டேன் என்று நீங்கள் எந்த வாசகங்களால் புரிந்து கொண்டீர்களோ அதைத்தான் மேற்கோள் காட்டவேண்டும். ஒன்றை மேற்கோள்காட்டிவிட்டு, அது தவறு என்று சுட்டிகாட்டியதும் நான் முந்திய விளக்கங்களிலே புரிந்து கொண்டேன், அண்மையானது என்பதால் இதை மேற்கோள்காட்டினேன் என்பது தகைமையானது அல்ல.
நான் இஸ்லாம் கற்பனைக்கோட்டை என்று ஆதாரமில்லாமல் எழுதுவதாகவும், அது விவாத நேர்மையில்லை என்றும் நீங்கள் சுட்டிக்காட்டியதாலல்லவா நான் ஆதாரங்களோடும் அம்பலங்களோடும் எழுதுவாதாக குறிப்பிட்டேன். அதை நீங்கள் எனக்கு நானே மெச்சிக்கொள்வதாக எழுதியிருக்கிறீர்கள். என்றால் நான் ஆதாரத்தோடுதான் எழுதியிருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அப்படித்தானே. இல்லையென்றால் நீங்கள் ஆதாரத்தோடு எழுதவில்லை என்று நிரூபிக்கும் நோக்கிலல்லவா நீங்கள் எழுதியிருக்கவேண்டும். அதைவிடுத்து மீண்டும் கற்பனைகள், தவறான தகவல்கள் யூகங்கள் என்று இலக்கில்லாமல் எழுதுகிறீர்களே. உங்கள் விவாத நேர்மையின் லட்சணம் இது தானா? நான் ஆதாரங்கள், அம்பலங்கள் என்று என்னை நானே மெச்சிக்கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது வெற்று மெச்சலல்ல தகுதியான மெச்சல்தான். \\தவறான தகவல்கள், யூகங்கள், கற்பனைகள், பேசப்படும் பொருளுக்குத் தொடர்பில்லாத விஷயங்கள், மேலும் உங்கள் ‘மறைமுக உரைகல்’லைக் கொண்டு வடிகட்டப்பட்ட அரைகுறை ஆய்வுகள், என்பதைத்தான் நான் அம்பலப் படுத்தி வருகிறேன்// இது வரை இஸ்லாம் குறித்த தொடரில் தொடரை எதிர்த்து உங்கள் கருத்துக்களை எடுத்துவைத்தது இந்த கட்டுரையில் (நோவாவின் கப்பல்) மட்டும் தான். நீங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு வாதத்திற்க்கும் தகுந்த உறுதியான பதிலளித்திருக்கிறேன். கடைசியில் பதில் சொல்லமுடியாமல் அலுவலக வேலை என்று காரணம் சொல்லிக்கொண்டிருப்பது நீங்கள் தான். இந்த நிலையிலேயே உங்களை நீங்கள் நான் அம்பலப் படுத்தி வருகிறேன் என்று மெச்சிக்கொள்ளும்போது, நான் மெச்சிக்கொள்வதில் தவறொன்றுமில்லை. அடுத்து, என்னுடைய தொடர் பதிவில் எது தவறான தகவல்கள், எது யூகங்கள், எது கற்பனைகள், எது பேசப்படும் பொருளுக்குத் தொடர்பில்லாத விஷயங்கள், எது அரைகுறை ஆய்வுகள் என்று சுட்டிக்காட்டவேண்டும். இதற்கும் நேரம் கிடைக்கும் போது செய்கிறேன் என்று மழுப்பக்கூடாது. ஏனென்றால், நான் மட்டும் முழு நேரமாக கணிணி முன் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கவில்லை, நானும் தான் வேலை செய்கிறேன். இரண்டாம் கட்ட விசயங்களான அறிவியல் குறித்தும், ஐன்ஸ்டீன் குறித்தும் எழுதுவதற்கு நேரம் இருக்கும் போது முதல் கட்ட விசயங்களையும் எழுதுவதற்கு நேரம் இருக்குமல்லவா?
செங்கொடி
நண்பர் செங்கொடி,
ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகளை ஆதாரங்களின்றி ‘கற்பனை’ என்றும் ‘கட்டுக்கதை’ என்றும் எழுதிக் கொண்டிருக்கும் உங்களிடம் இத்தருணம் வரை மிகுந்த பொறுமையுடன், நட்பு ரீதியில், நாகரீகமான முறையில் உரையாடிக் கொண்டிருக்கிறேன். கோபமடைவதற்கு உங்களை விட எனக்குத்தான் அதிக காரணங்கள் இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். யார் அரைகுறையானவர் என்பதை நம் வாதங்கள் தீர்மானிக்கட்டும். உங்கள் எச்சரிக்கையை உங்களிமே வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் வேண்டாம்!
அறிவியலின் தன்மை பற்றி நான் போதுமான விளக்கம் சொல்லிவிட்டேன். உதாரணங்களும் கொடுத்திருக்கிறேன். உங்கள் வார்த்தைகளிலிருந்தே எடுத்துக்காட்டுகள் தந்திருக்கிறேன். அவையெல்லாம் புரியாததுபோல நடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் நான் நடிப்பதாக குறை கூறுகிறீர்கள்.
ஐன்ஸ்டீனின் இரண்டு கருத்துக்களில் ஒன்றை ஏற்று இன்னொன்றை மறுப்பதற்கு நான் நேரடியாக பதிலளித்திருக்கிறேன். “Science without religion is lame. Religion without science is blind” என்ற அவரது கூற்றை நீங்கள் மறுப்பதற்கு தகுந்த காரணம் எதையும் நீங்கள் சொல்லாமல் இன்றுவரை மழுப்பி வருகிறீர்கள்.
//நீங்கள் ஏற்றுக்கொண்ட முதல் கருத்தின் ஆன்மீகம் எனும் சொல்லின் விளக்கமாகத்தான் இரண்டாவது கருத்து இருக்கிறது. இரண்டாவது கருத்தை மறுக்கும் நீங்கள் முத்ல் கருத்தின் ஆன்மீகம் என்பதற்கு என்ன பொருள் கொள்வீர்கள்? உங்கள் விருப்பப்படியா? உங்கள் விருப்பபடி பொருள் கொள்வதற்கு ஐன்ஸ்டீனை ஏன் இழுக்கிறீர்கள்? உங்கள் கருத்தாகவே சொல்லிவிட்டுப் போகலாமே.//
அய்யா, நான்தான் சொல்கிறேனே, எனக்கு முதல் ஆதாரம் அடிப்படை எல்லாமே குர்ஆன்தான் என்று? ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு குர்ஆன் சொல்வதுதான் முக்கியமே தவிர ஐன்ஸ்டீன் சொல்வது அல்ல. ஆனால் குர்ஆனில் சொல்லப்பட்டிராத ஒரு அறிவியல் உண்மையை ஐன்ஸ்டீன் சொன்னாரென்றால் அதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
ஆனால் உங்களுக்கு? ஐன்ஸ்டீன் ஒரு மாபெரும் அறிவியல் மேதை என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். (எப்போது சொன்னேன் என்று ஆதாரம் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்). அப்படிப்பட்ட மேதை அவரது சிந்தனையில் சரி என்று தோன்றிய ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்? அது அறிவியல் சார்ந்தது அல்ல என்று மீண்டும் சொல்வீர்கள் என்றால் அந்த வாக்கியத்தில் வரும் Science என்ற வார்த்தைக்கு நீங்கள் என்ன பொருள் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.
//நீங்கள் இணைத்த சுட்டியில் இருப்பதென்ன? அறிவியல் கண்டுபிடிப்புகளா? இல்லையே. அறிவியலாளர்களின் கூற்றுகளில் சிலவற்றைவைத்து தொகுத்து எழுதப்பட்ட கட்டுரைகள். அந்த அறிவியலாளர்களின் கூற்றுகளிலும் படைப்புக்கொள்கையை ஆதரித்து என்ன இருக்கிறது? கட்டுரையாளர் அப்படி தோற்றம் வருவது போல் எழுதியிருக்கிறார்.//
அறிவியலாளர்களின் கூற்றிற்கும் அறிவியல் கண்டுபிடிப்பிற்கும் இடையில் என்னென்ன வேறுபாடுகள் என்பதை விளக்குங்கள்.
//அறிவியலாளர்களின் கூற்றில் நான் ஏற்கனவே கூறியது போல் ஒரு கணித சமன்பாட்டை போல், ஒரு எக்ஸ் என்பதை போல் தான் ஆன்மீகம் இருக்கிறது.//
கணித சமன்பாட்டில் எப்போதெல்லாம் எக்ஸ் குறியீட்டை பயன்படுத்துவார்கள்? In the world of mathematics, an “X factor” is an unknown quantity which only becomes known after following a prescribed process. It refers to something exists but undefined. புரிகிறதா? ஒரு பொருள் மறைவாக இருக்கிறது.. அதன் மதிப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனும்போதுதான் அதை ‘எக்ஸ்’ என பாவித்து அதன் மதிப்பை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும்.
அதுபோலவே, அறிவியலாளர்கள் ஆன்மீகத்தை ‘எக்ஸ்’ ஆக கருதுகிறார்கள் என்றால் அது “Exists” என்பதால்தான். அறிவியல் ரீதியில் அதற்கு இன்னும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஆன்மீகமே இல்லை என்றாகிவிடாது.
//இப்படி புனைவுகளை மறுப்பதை அறிவியலை மறுப்பதைப் போல் பாவனை காட்டும் நீங்கள், அறிவியல் உண்மைகளையே மறுத்துக்கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா? ஏற்கனவே தேனீ உள்ளிட்ட சிலவற்றை சுட்டிக்காட்டியிருந்தேன். இன்னும் நீங்கள் பதிலளித்துக்கொண்………….டே இருக்கிறீர்கள்.//
நான் எந்த அறிவியல் உண்மையை மறுத்திருக்கிறேன்? ஒரு உதாரணம் காட்ட முடியுமா? தேனீ பற்றிய உங்கள் கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லாததற்கு காரணம், அதற்கு முன் பதிலளிக்க வேண்டிய உங்கள் துணைக்கேள்விகள் மீதம் உள்ளன என்பதால்தான். அதற்காக, அறிவியல் உண்மையை நான் மறுக்கிறேன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
//அறிவியல் உண்மைகள் எப்படி இருந்தாலும் சாதகமாக என்றாலும் பாதகமாக என்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்வது தான் என்னுடைய நிலை. ஏனென்றால் அறிவியல் தான் என் உரைகல், நீங்கள் கருதுவதைப்போல் வேறெதோ உரைகல்லை வைத்துக்கொண்டு அறிவியலை உரசிப்பார்ப்பதில்லை. ஏனென்றால் அறிவியலின் அணுகுமுறையே உரசிப்பார்ப்பதுதான்.//
//நிலைப் பிரபஞ்சம் என்பது பெருவெடிப்புக்கொள்கையைப்போலவே யூகம் தான். யூகம் தான் மாறுபாடடையும், உண்மைகளல்ல. இருப்பினும் எதுவும் மாறும் தன்மையுடையது என்பது அறிவியலின் நேர்மை.//
இதைப் பற்றி தொடருமுன், உங்கள் பார்வையில் அறிவியல் உண்மை என்றால் எப்படிப் பட்டது? அதற்கும் அறிவியல் யூகத்திற்கும் என்ன வேறுபாடுகள்? ஒரு கருத்து எப்போது ‘யூகம்’ என்ற நிலையிலிருந்து ‘உண்மை’ என்ற நிலைக்கு மாறும்? ‘உண்மை’ நிலையை அடைந்தபிறகு அது மாறுதல் அடைய வழி உண்டா? அறிவியல்தான் எனது உரைகல் என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த உரைகல்லை வைத்துக் கொண்டு நீங்கள் எதை உரசிப் பார்ப்பீர்கள்? அந்த ‘உரைகல்’லைக் கொண்டு இன்று ஒரு கருத்தை தவறானது நீங்கள் ஒதுக்கித் தள்ளுகிறீர்கள்.. நாளை அந்த ‘உரைகல்’லே மாற்றம் கண்டு விட்டது என்றால், நேற்று நீங்கள் தவறானது என்று தீர்ப்பளித்த கருத்தைப் பற்றி இன்று உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதைப் பற்றி அறிவியலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். இது அறிவியல் யூகமா? அறிவியல் உண்மையா? இதை நீங்கள் ‘உரைகல்’ என்று ஏற்றுக் கொள்கிறீர்களா?
இந்த கேள்விகளுக்கு, அலங்கார வார்த்தைகளை தவிர்த்து, தெளிவான, நேரடியான பதில் சொல்ல முயற்சித்துப் பாருங்கள்.
– சலாஹுத்தீன்
subscribe me
நண்பர் சலாஹுத்தீன்,
\\ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகளை ஆதாரங்களின்றி ‘கற்பனை’ என்றும் ‘கட்டுக்கதை’ என்றும் எழுதிக் கொண்டிருக்கும்// மீண்டும் அதே அதாரமற்ற பொருளற்ற குற்றச்சாட்டு. ஐயா பெரியவரே, இதுவரை நான் எழுதியவற்றில் எது ஆதாரங்களின்றி கற்பனையாகவும் கட்டுக்கதையாகவும் எழுதியிருக்கிறேன் என்று கூறமுடியுமா? அவ்வாறு கூறமுடியாமல் இருக்கும் நீங்கள் மீண்டும் மீண்டும் கற்பனை என கத்திக்கொண்டிருப்பதன் மூலம் உங்களின் இயலாமையை மறைத்துக்கொள்கிறீர்கள். இஸ்லாமிய சமூகத்தின் நம்பிக்கையை தக்க ஆதாரங்களுடன் விமர்சிப்பதே என்மீது கோபம் கொள்வதற்கான காரணமாக கூறும் நீங்கள் எது கட்டுக்கதை என்று எடுத்துக்காட்டாமல் மீண்டும் மீண்டும் கட்டுக்கதை என்று கூறிக்கொண்டிருக்கும் உங்கள் மீது கோபப்படாமல் வெண்சாமரமா வீசமுடியும்?
நான் உங்கள் மீது கோபப்பட்ட இடம் எது? \\ நீங்கள் தவறாக முடிவு செய்திருந்தாலும் கூட நான் அவ்வாறு சொன்னேன் என்று நீங்கள் கூறியது திரிப்புதான், அது விவாத நேர்மையற்றது தான். இது தான் நீங்கள் விளக்கம் சொல்லவேண்டிய இடம். இதை விட்டுவிட்டு அறிவியலின் மாறும் தன்மையினால் அது அரைகுறையானது என மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தால் நீங்கள் அரைகுறையானவர் என்று நான் கருதும்படியாகும், எச்சரிக்கை// இது தானே. இந்த இடத்தின் மையமான கேள்வி என்ன? அதற்கு பதில் கூறுவதை விட்டுவிட்டு என்னாலும் கோபப்படமுடியும் என்று கூறிவிட்டு நகர்ந்து விட்டீர்களே. இது தான் நீங்கள் பதில் கூறும் முறைமையா? கோபபட்டேன் என்று கூறுவதை விட ஏன் கோபப்பட்டேன்? அதற்கான சூழல் என்ன? என்று பார்ப்பது தான் நேர்மையான செயல்.
எது நாகரீகம்? அநாகரீகமான சொற்களை பயன்படுத்தாமல் எழுதுவது தான் நாகரீகமா? எடுத்துக்கொள்ளும் விசயத்தின் கேள்வி என்ன? அதன் மையமான நோக்கம் என்ன? அதன் கோணம் என்ன? என்று பார்த்து அதற்கு பதில் கூறுவது தான் நாகரீகம். இந்தக்கட்டுரையின் மையப்பொருளான நோவாவின் கப்பல் குறித்து தொடர்ச்சியாக விவாதிக்க இயலாமலிருக்கும் நீங்கள் அப்படி விவாதிப்பதற்கு நேரமில்லை, அலுவலக வேலை என கூறும் நீங்கள் இரண்டாம் கட்ட விசயங்களான அறிவியலையும், ஐன்ஸ்டீனையும் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள். இவைகளை விவாதிக்க கிடைக்கும் நேரத்தில் முக்கியமான அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கலாமே. இதன் மூலம் இதைத்தான் விவாதிக்கவேண்டும் இதைக் கூடாது என்றெல்லாம் நான் நிபந்தனை விதிக்கவில்லை. முக்கிய விவாதப் பொருளை எடுத்துக்கொண்டு கூடவே கிளைகள் குறித்தும் விவாதிக்கலாம். மையமானதை விட்டுவிட்டு க்கிளை விவாதங்கள் வேண்டாம் என்கிறேன். ஒரு வேளை மெய்யாகவே உங்களுக்கு வேலைப்பழு இருந்தால் கூறிவிடுங்கள் நான் காத்திருக்கிறேன். கரண்டு கம்பி, புளிங்குடி முகம்மது போன்றவர்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி இடும் பின்னூட்டங்களை வைத்து நான் உங்களை மதிப்பிடுவதில்லை.
ஐன்ஸ்டீனின் கருத்தில் உள்ள அறிவியல் எனும் சொல் அறிவியலை அதாவது அறிவியல் ஆய்வுகளைத்தான் குறிக்கும். அவரின் வானியல் ஆய்வுகளிடையே விடை தெரியாத சில வியப்புகள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒளியின் வேகம் ஒரு மாறிலி என்பது. இந்தவிதமான வியப்புகள் தான் அவரின் சிறப்பு சார்பியல் கோட்பாட்டை கண்டு உலகை வியப்பில் ஆழ்த்த அவருக்கு தூண்டுதலாக இருந்தது. இந்த வியப்பைத்தான் அவர் ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்துகிறார். அவருக்கு ஏற்பட்ட வியப்புக்கும் மனிதனின் அக நம்பிக்கையான ஆன்மீகத்திற்கும் தொடர்பு ஒன்றுமில்லை. ஆனால் ஒரு அறிவியலாளரான அவர் தனது மெய் நிகர் உலகமும் ஒரு ஆன்மீகவாதி கூறும் மெய்நிகர் உலகமும் ஒன்று தான் என அவர் தவறாக கருதியிருக்கக்கூடும். அதனால் தான் அவர் ஆன்மீகம் இல்லாத அறிவியல் அரைகுறையானது என்று தன்னுடைய கருத்தை கூறுகிறார். இந்த கருதியிருக்கக் கூடும் என்பதை ஆதாரமில்லாமல் நானாக கற்பனை செய்யவில்லை. அவரே அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறார், தினப்படி மனித வாழ்வில் குறுக்கிடும் கடவுளை அல்ல என்று. எனவே கடவுள் பற்றி சரியான புரிதலை கொண்டிருந்த அவர், அறிவியலை மதத்துடன் தொடர்பு படுத்தியதன் காரணம் அவருக்கு ஏற்பட்ட விடை தெரியாத வியப்பு மதவாதி கூறும் கடவுளோடு ஒன்றிப்போகாவிடினும் ஒன்றிப்போவதாக அவர் கருதியதனால் தான். எனவே அந்தக்கருத்தை புறக்கணிப்பதில் பிழை ஒன்றுமில்லை.
\\அறிவியலாளர்களின் கூற்றிற்கும் அறிவியல் கண்டுபிடிப்பிற்கும் இடையில் என்னென்ன வேறுபாடுகள் என்பதை விளக்குங்கள்// இதை தனியாக விளக்கவேண்டியதில்லை என கருதுகிறேன். மேலுள்ள ஐன்ஸ்டீன் பற்றிய கருத்துகளே இதற்கு போதுமானதாகும்.
\\அறிவியலாளர்கள் ஆன்மீகத்தை ‘எக்ஸ்’ ஆக கருதுகிறார்கள் என்றால் அது “Exists” என்பதால்தான். அறிவியல் ரீதியில் அதற்கு இன்னும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஆன்மீகமே இல்லை என்றாகிவிடாது// இதில் நீங்கள் கூறவருவதென்ன? விடை தெரியாத ஒன்றை எக்ஸ் என கருதி விடையை வந்தடைகிறார்களென்றால் அந்த எக்ஸ் இருக்கிறது என்பதால் தானே. அதுபோல இன்னும் விடை கண்டுபிடிக்கப்படாவிடினும் கடவுளும் இருக்கிறது. அதை இல்லை என்று கூறமுடியாது, என்றா? முதலில் அது ஒரு எடுத்துக்காட்டு. எடுத்துக்காட்டிற்காக கூறுவதை அப்படியே பொருத்திக்கொள்ளவேண்டும் எனும் அவசியமில்லை. இல்லை பொருத்த வேண்டும் என கருதுவீர்களாயின் இன்னொரு விளக்கமும் இருக்கிறது. விடை கண்டுபிடிக்கப்படாதவரைதான் அது எக்ஸ். கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எக்ஸ் என்பதன் தன்மை, கண்டுபிடிக்கப்படும் விடையின் தன்மையால் மாற்றப்படும். அதுபோல கண்டுபிடிக்கப்படும் வரை தான் கடவுள், கண்டுபிடிக்கப்பட்டால், கண்டுபிடிக்கப்படும் அறிவியலின் விதி கடவுளை மாற்றிவிடும் என்று கொள்ளலாமா?
\\அறிவியலின் எந்தக் கூறை நான் மறுக்கிறேன் அல்லது எந்த ஆய்வை நான் ஏற்றுக்கொள்ளவில்லை சொல்லமுடியுமா?// என்று நான் உங்களை கேட்டிருந்தேன். அதற்கு பதிலளிக்காத நீங்கள், \\நான் எந்த அறிவியல் உண்மையை மறுத்திருக்கிறேன்? ஒரு உதாரணம் காட்ட முடியுமா?// என்று என்னை கேட்டிருக்கிறீர்கள். இதோ நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அறிவியல் உண்மைகளில் சில, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள மனிதன் 950 வயது வரை உயிர்வாழ்ந்தான் என்பதை அறிவியல் மறுக்கிறது. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக சில மனிதர்கள் குகையில் உறங்க முடியும் என்பதை அறிவியல் மறுக்கிறது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆதி மனிதன் மொழி பேசினான் என்பதை அறிவியல் மறுக்கிறது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
அன்பு சலாஹுத்தீன், ஏற்கனவே நீங்கள் மையத்தை விட்டு விலகி நின்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என கூறிக்கொண்டிருக்கிறேன். இதில் மீண்டும் அறிவியல் குறித்த புதுக் கேள்விகளா? இவைகளுக்கு இப்போது பதில் கூற முனைந்தால் அதுவே மையத்தை விட்டு இன்னும் விலகிப்போக ஏதுவாகிவிடும். எனவே மீதமிருக்கும் கேள்விகள் என்று நான் தொகுத்த 9 கேள்விகளுக்கான பதில்கள், பதில் கூறுகிறேன் என நீங்களாகவே அறிவித்த ஒரு கேள்வி என அனைத்திற்கும் நீங்கள் பதில் கூறி அவைகளில் ஒரு முடிவுக்கு வந்த பின் இவைகளுக்கான பதிலை தொடங்கலாம்.
செங்கொடி
//இதுவரை நான் எழுதியவற்றில் எது ஆதாரங்களின்றி கற்பனையாகவும் கட்டுக்கதையாகவும் எழுதியிருக்கிறேன் என்று கூறமுடியுமா?//
ஐயா மகாபெரியவரே, நீங்கள் எழுதியதில் ஓரிரண்டு ஆதாரங்கள் இன்றி இருந்தால் சுட்டிக் காட்டலாம். எழுதுவது எல்லாமே அப்படி இருந்தால் நான் என்ன செய்வது? நீளநீளமாக நீங்கள் எழுதுவதெல்லாம் ஆதாரங்களாகும் என்றால் தமிழகத்தின் தலை சிறந்த வரலாற்று ஆய்வு நூற்களை எழுதியவர் சாண்டில்யன் தான் என ஒப்புக்கொள்ள வேண்டி வரும்.
சில உதாரணங்கள் தருகிறேன்.
பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை அறிவியலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே உங்களுக்கு ‘விவாதக்களம்’ பதிவு முழுவதற்குமான ‘ஆதாரமாக(?)’ இருந்தது என்பதை மறந்து விட்டீர்கள் போலும்.
அது போல நோவா ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதற்கான உங்கள் ஆதாரங்களின் (?) உண்மை நிலையை இந்தப் பதிவின் மேற்கண்ட பின்னூட்டங்களை நிதானமாக படித்திருந்தீர்களென்றால் அறிந்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல புத்தருக்கும் ஏசுவுக்கும் முடிச்சு போட்டு, ஏசுவே கற்பனைதான் என்று அறிவித்திருக்கிறீர்களே. உங்களை விட சிறந்த ‘ஆதாரங்களை’, லிங்கனையும் கென்னடியையும் ஓப்பிட்ட இணையத்தளத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.
பதிவுகளை எழுதினால், திரும்ப ஒருமுறை படித்துப் பாருங்கள் நண்பரே.
– சலாஹுத்தீன்
நண்பர் சலாஹுத்தீன்,
நல்லது நண்பரே, சென்று வருக.
விவாதக்களத்திலும் இங்குமாக உங்களுடன் நடந்த விவாதம் அவைகளை படிப்பவர்களுக்கு மதவாதிகளின் விளைச்சலுக்கான வேர் எங்கிருந்து துளிர்க்கிறது என்பதை புரிவதற்கு நிச்சயம் உதவும்.
அந்த வகையில்……
நன்றி திரு சலாஹுத்தீன்.
செங்கொடி
நண்பர் செங்கொடி,
உங்கள் ஆதாரங்களை(?) சாண்டில்யனின் வரலாற்று நூல்களோடு ஒப்பிட்டது உங்களுக்குப் பிடிக்கவில்லை போலுள்ளது. உங்கள் ஆதாரங்களின் தன்மையை இதை விட மென்மையாக எப்படி சுட்டிக் காட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை.
விவாதக்களத்தை abrupt ஆக நிறுத்தியது போலவே இதையும் நிறுத்தியிருக்கிறீர்கள். Anyway, இது உங்கள் தளம். இதில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எதை வேண்டுமானாலும் தடுக்கலாம். ஆனால், உங்களுக்குப் பிடித்தமிலலாத ஒரு கொள்கை என்பதற்காக இஸ்லாம் பற்றி உங்கள் மனம் போனபடி எல்லாம் எழுத முடியாது. இந்த விஷயத்தில் இதுவரை நீங்கள் கவனிக்க மறந்த, அல்லது கவனிக்க மறுத்து வரும் சிலவற்றை சுட்டிக் காட்ட எண்ணுகிறேன்.
1. இஸ்லாமின் அடிப்படைகளை தகர்க்கப் போவதாக சூளுரைத்திருக்கும் நீங்கள், அதன் முதல் கட்டமாக, இஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றி மிகத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப் போகும் மருத்துவர், அந்த நோயாளியின் உடல் தன்மை, அவருக்கு இருக்கும் உபாதைகள், நோய்கள் ஆகியவற்றைப் பற்றி சரியான முறையில் அறிந்திருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லாவிட்டால், நோயாளியிடம் இல்லாத நோய்க்கு இவர் மருந்து கொடுத்து, நலமாக இருந்தவரை நோயாளியாக மாற்றிவிடுவார்.
இதுவரையிலான உங்கள் பதிவுகள், இஸ்லாம் பற்றி நீங்கள் அரைகுறையான அறிவை மட்டுமே பெற்றிருப்பதை காட்டுகின்றன. எனவே, இஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றி நீங்கள் முதலில் தெளிவாக தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
2. இஸ்லாமின் கொள்கைகள் இன்னதுதான் என குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தெளிவாக வரையறுக்கப் பட்டவை. அவை மாற்றப்பட முடியாதவை. அவற்றைத் தவறு என நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள் என்றால், அக்கொள்கைகளை எதனோடு நீங்கள் ஒப்பிட்டு நீங்கள் இந்த முடிவிற்கு வந்தீர்கள் என்பதை முதலிலேயே தெள்ளத் தெளிவாக நீங்கள் அறிவித்திருக்க வேண்டும். அந்த ‘அளவுகோல்’ எது என்பதை நீங்கள் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அந்த அளவுகோல் இஸ்லாமியக் கொள்கைகளைவிட மிகத் தெளிவானதாகவும், ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும், எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்டதாகவும் இருக்க வேண்டும்.
அப்படி ஒரு அளவுகோலை நீங்கள் அறிமுகப் படுத்தாமலேயே, ‘எதையும் அறிவியல் ரீதியில் மட்டுமே ஏற்றுக் கொள்வேன்’ என பொத்தாம் பொதுவாக நீங்கள் சொல்லி வந்ததாலேயே ‘உங்கள் பார்வையில் அறிவியல் என்றால் என்ன?’ என்பது பற்றி நான் இத்தனை கேள்விகள் கேட்க வேண்டி வந்தது. அதற்கான உங்கள் பதில்களோ தெளிவைத் தருவதற்குப் பதிலாக குழப்பத்தையே அதிகரித்திருக்கின்றன. அதற்குக் காரணம், தெளிவான ‘அளவுகோல்’ எதுவும் இல்லாமலேயே நீங்கள் இஸ்லாமை ‘அளக்க’ முற்பட்டதுதான்.
எனவே, இஸ்லாமியக் கொள்கைகளை மதிப்பீடு செய்யுமுன் அதற்கான உங்கள் அளவுகோல் என்ன என்பதை தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். அதற்கான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருங்கள்.
3. அடுத்தது மிக முக்கியமான ஒரு கருத்து. ஒட்டு மொத்த மனித குலத்தின் வாழ்க்கை வழிகாட்டியாக ஒரு கொள்கை இருக்க முடியுமென்றால் அது எந்த ஒரு தனிமனிதராலும் தோற்றுவிக்கப் பட்டதாக இருக்க முடியாது. தனி மனிதர்களோ குழுக்களோ தோற்றுவிக்கும் கொள்கைகள் முழுமையானதாக இருப்பதற்குச் சாத்தியமேயில்லை. ரஷ்யாவின் ஒரு மூலையில் வாழ்ந்த ஒரு நபருக்கு இந்தியாவின் தென்மூலையில் வசிக்கும் விவசாயியின் பிரச்னையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆப்ரிக்க குக்கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழைத்தாய் ஒருவரின் பொருளாதார நிலை அவருக்கு புரியாது. இருந்தாலும் புரட்சிகரமான சில கொள்கைகளை வெளியிட்டார்கள் என்பதற்காகவே சில தனிமனிதர்கள் மக்களால் துதிபாடப் பட்டார்கள். அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் போற்றிப் புகழப் பட்டன.
இத்தகைய தனிமனிதத் துதிபாடல்களிலிருந்து மனிதகுலத்தை விடுவித்தது இஸ்லாம். மனிதகுலம் முழுமைக்குமான வாழ்க்கை வழிகாட்டல்களை வகுக்கும் தகுதி எந்தத் தனிமனிதருக்கோ குழுக்களுக்கோ கிடையாது என்பதை தெளிவாக அறிவிக்கிறது இஸ்லாம். எல்லா மனிதர்களுக்கும், வாழ்வின் எல்லா நிலைக்கும் பொருந்த வேண்டும் என்றால் அந்த வழிகாட்டல்களை, அந்த மனித குலத்தை படைத்த படைப்புச் சக்தி மட்டுமே அளிக்க முடியும் என்று பயிற்றுவிக்கிறது இஸ்லாம். அந்தப் படைப்புச் சக்தியின் முன் மனிதரகள் அனைவரும் சமமானவரே என்ற சமத்துவத்தை தோற்றுவித்ததும் இஸ்லாம்.
நண்பரே, உங்கள் வலைத்தளத்தில் உங்களைப் பற்றிய அறிமுகப் பக்கத்தில் நீங்கள் இப்படி குறிப்பிட்டிருக்கிறீர்கள், “உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு.” உங்களையும் என்னையும் போன்ற பலம், பலவீனங்களைக் கொண்ட சாதாரண மனிதர்கள் தோற்றுவித்த கொள்கைகள் உலக மக்களின் துன்பங்களுக்கு தீர்வு வழங்கும் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். மார்க்ஸும் லெனினும் உங்களை விட பத்து, நூறு, ஆயிரம் மடங்கு அதிகமான சிந்தனைத் திறன் படைத்தவர்களாக இருந்திருக்கலாம். இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே? உலக மக்கள் அனைவரின் பிரச்னைகளுக்கும் அவர்கள் எப்படி தீர்வு சொல்ல முடியும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நண்பரே!
மனித குலத்தை தோற்றுவித்து அதனை வாழச் செய்து கொண்டிருக்கும் அந்த மகத்தான படைப்புச்சக்தி மட்டுமே அத்தகைய வழிகாட்டல்களை அளிக்க முடியும்.
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உங்களைப் போன்ற சக மனிதர்களின் சிந்தனையில் உதித்த கொள்கைகளுக்காக உங்கள் வாழ்க்கையை அடகு வைக்கப் போகிறீர்கள் நண்பரே! அந்த இழிநிலையைத் தகர்த்தெரியும் இஸ்லாமின் கொள்கைகளை புரிந்துணர்ந்து, இறைச்சக்தியின் முன்னே தவிர வேறெவர்க்கும் அடிபணியத் தேவையில்லாத இஸ்லாமின் பக்கம் வாருங்கள் என ஒரு சகோதரனாக அழைப்பு விடுக்கிறேன்.
நன்றி
– சலாஹுத்தீன்
//இஸ்லாமின் பக்கம் வாருங்கள் //
இந்த பொழப்புக்கு…………………………………
வாங்க வால் பையன்! வார்த்தைகளை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். இல்லையேல் நீங்கள் வெளியிட்ட வார்த்தைகளே உங்களை கட்டிப்போட்டு விடும். நீங்கள் முன்னர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு இதே பதிவில் பதில் சொல்லியிருக்கிறேனே, பார்க்கவில்லையா?
நித்தியகன்னிகளை அல்லா பல்லாங்குழி விளையாடவா தருகிறார்! அதுவும் மேட்டருக்கு தானே!
இதுல என்ன கட்டுபாடான வார்த்தை, ஆணுக்கு ஒரு நீதி, பெண்னுக்கு ஒரு நீதி தருவது தான் இஸ்லாமா?
சரி பெண்ணுக்கு என்ன தான் கிடைக்கும் சொர்க்கத்தில் அதை சொல்லுங்க.
நண்பரே, ஆணாயினும் பெண்ணாயினும் இன்று அவர்களின் செயல்களுக்கான பலனை மறுமையில் கூடுதல் குறைவின்றி பெற்றுக் கொள்வார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. சொர்க்கத்தில் பெண்ணுக்கு என்ன கிடைக்கும் என்பதை என்னால் சொல்ல இயலாது. ஆனால் இறைவன் அநீதம் இழைப்பவன் அல்ல. எனவே, அவளது செயலுக்கு உரிய பலனை அவள் நிச்சயம் அடைந்துக் கொள்வாள்.
இதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பதல்ல இஸ்லாம். சமீபகாலம் வரை நடைமுறையிலிருந்த அவ்வாறான பாகுபாடுகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்னரே தகர்த்தெரிந்தது இஸ்லாம்தான்.
பரிணாம கோட்பாடு பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் போலுள்ளது. அதைப் பற்றி எனக்கு இருக்கும் சில சந்தேகங்களை உங்களிடம் கேட்கலாமா?
//சொர்க்கத்தில் பெண்ணுக்கு என்ன கிடைக்கும் என்பதை என்னால் சொல்ல இயலாது. //
ஆண்களுக்கு என்ன கொடுக்க்கப்படும்னு சொன்ன அல்லா ஏன் பெண்களுக்கு என்ன கிடைக்கனும் சொல்லல, பெண்களை மிருகங்கள் லிஸ்டில் சேர்த்துட்டாரா!?
//பரிணாம கோட்பாடு பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் போலுள்ளது. அதைப் பற்றி எனக்கு இருக்கும் சில சந்தேகங்களை உங்களிடம் கேட்கலாமா?//
எதாவது கேள்விக்கு பதில் தெரியலைனா இப்படி தான் திசை திருப்பனும், அதை தான் அல்லா சொல்லி கொடுத்திருக்கார்!
எனக்குத் தெரியாததை ‘தெரியவில்லை’ என்று சொல்வதில் என்ன தப்பு?
அதேபோல, நீங்கள் நன்றாக அறிந்திருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்கலாமா என்றால் அதை ஏன் திசை திருப்பலாக எடுத்துக் கொள்கிறீர்கள்? நூஹ் நபியின் கப்பல் பற்றிய பதிவில் நித்திய கன்னிகளைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்பது திசை திருப்பலாக உங்களுக்குத் தெரியவில்லையா?
//எனக்குத் தெரியாததை ‘தெரியவில்லை’ என்று சொல்வதில் என்ன தப்பு? //
அது தான் இஸ்லாம்!, தெரியாது ஆனா எல்லா பக்கமும் போய் சண்டைபோட சொல்லும்!
பரிணாமம் பற்றி விளக்க நான் அதிகம் படிக்கவில்லை! தெரிந்தவரை சொல்கிறேன்!
இந்த பதிவி இஸ்லாத்தின் ஆதாரத்தை ஆட்டபார்ப்பதால் தான் நித்திகன்னிகைகள் கேள்வி!?
சரி அதென்ன நித்திய கன்னிகைகள், எங்கேயும் ஓட்டை இருக்காதோ?
//அது தான் இஸ்லாம்!, தெரியாது ஆனா எல்லா பக்கமும் போய் சண்டைபோட சொல்லும்! //
அப்படி அல்ல. இஸ்லாத்தைப் பற்றி சரியாகத் தெரிந்திராத அரைகுறைகள்தான் இஸ்லாத்தை ‘வைத்து’ சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். இஸ்லாம் பற்றி ஓரளவுக்காவது புரிந்து வைத்திருப்பவர்கள் தானாகச் சண்டைக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால் வந்தச் சண்டையை விட மாட்டார்கள். என்னைப் பொருத்தவரை, இஸ்லாம் குறித்து நானாக எவரிடமும் விவாதிக்த் தொடங்குவதில்லை.
இந்தப் பதிவு இஸ்லாத்தின் ஆதாரத்தை ஆட்டப் பார்த்தது என்று ஒரு நல்ல நகைச்சுவைக் கருத்தை பதிந்திருக்கிறீர்கள். “இஸ்லாம் எனும் மரத்தின் இலைகளையும் கிளைகளையும் ஏன் அசைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? அதன் ஆணி வேரை காட்டுகிறேன். அதை வெட்டி விட்டீர்களென்றால், இஸ்லாம் மட்டுமல்ல, படைப்புக் கோட்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கும் அனைத்து மதங்களுமே சாய்ந்து விடும்” என்று சொல்லி ‘இஸ்லாமின் அடிப்படை’ ஒன்றை சுட்டிக் காட்டி அதை மறுக்கும்படி செங்கொடிக்கு அறிவுறுத்தியவன் நான். ‘விவாதக்களம்’ பதிவை முதலிலிருந்து படித்திருந்தீர்களென்றால் உங்களுக்குப் புரியும்.
நித்தியகன்னிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. அதைப் பற்றி பேசுவதை விட நீங்கள் கொஞ்சமாவது தெரிந்திருக்கும் பரிணாமம் பற்றி பேசுவோமா?
எனது முதல் கேள்வி:
டார்வின் பரிணாமக் கோட்பாட்டை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதினார்?
//இஸ்லாத்தைப் பற்றி சரியாகத் தெரிந்திராத அரைகுறைகள்தான் இஸ்லாத்தை ‘வைத்து’ சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். //
சொர்க்கத்தில் பெண்களுக்கு என்ன கிடைக்குனு உங்களுக்கே தெரியல, அப்ப நீங்களும் அரைகுறையா?
//டார்வின் பரிணாமக் கோட்பாட்டை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதினார்?//
நான் டார்வின் படித்ததில்லை!
பரிணாமம் என்பது டார்வினின் பார்வையில் வேறு மாதிரி இருக்கலாம், நான் என் பார்வையில் பார்க்கிறேன்!
//நித்தியகன்னிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. //
குரான்ல தானே இருக்கு, தெரியாதுன்னு ஏன் நம்பனும்?
//சொர்க்கத்தில் பெண்களுக்கு என்ன கிடைக்குனு உங்களுக்கே தெரியல, அப்ப நீங்களும் அரைகுறையா?//
இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை தெளிவிப்பதற்காக அன்றி நானாக எவரிடமும் வம்புச்சண்டைக்கு போனால் நானும் அரைகுறைதான்.
//நித்தியகன்னிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. //
குரான்ல தானே இருக்கு, தெரியாதுன்னு ஏன் நம்பனும்?//
இஸ்லாமின் அடிப்படைகளுள் ஒன்று, சொர்க்கம், நரகம், மறுமை நாள், வானவர்கள் போன்ற மறைவான விஷயங்களின் மீது நம்பிக்கை கொள்வது. அதன்படி, சொர்க்கத்தில் ‘ஹூருல்ஈன்’ எனப்படும் கன்னிகள் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்கு மேல் எனக்குத் தெரியாது.
//பரிணாமம் என்பது டார்வினின் பார்வையில் வேறு மாதிரி இருக்கலாம், நான் என் பார்வையில் பார்க்கிறேன்! //
சரி.. அப்ப உங்கள் பார்வையிலேயே பதில் சொல்லுங்கள்.
பரிணாமக் கோட்பாட்டை நீங்கள் நம்புவதற்கு அடிப்படை காரணியாக இருப்பது எது?
//சொர்க்கத்தில் ‘ஹூருல்ஈன்’ எனப்படும் கன்னிகள் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்கு மேல் எனக்குத் தெரியாது. //
எதுவுமே தெரியாம கன்னிகளை வச்சிகிட்டு என்ன செய்விங்க தோழரே! கன்னிகள் என்றால் பெண்கள் தானே, அவர்கள் என்ன போகப்பொருளா? அல்லா கடவுளா இல்ல சைக்கோவா!?
//பரிணாமக் கோட்பாட்டை நீங்கள் நம்புவதற்கு அடிப்படை காரணியாக இருப்பது எது?//
எனது பதிவில் விளக்கமா இருக்கே!
//எதுவுமே தெரியாம கன்னிகளை வச்சிகிட்டு என்ன செய்விங்க தோழரே! //
தோழரே.. மறுமையில் நான் சொர்க்கத்தில் இருக்கும்போது நீங்கள் என்னை பார்க்க நேர்ந்தால் அப்போது என்னிடம் இந்தக் கேள்வியை கேளுங்கள். பதில் சொல்கிறேன்.
// பரிணாமக் கோட்பாட்டை நீங்கள் நம்புவதற்கு அடிப்படை காரணியாக இருப்பது எது?//
எனது பதிவில் விளக்கமா இருக்கே! //
அதனால் என்ன? அந்தப் பதிவில் நீங்கள் எழுதியதை இந்தப் பதிவிலும் கொஞ்சம் சொல்லுங்கள். அந்தப் பதிவில் நீங்கள்தானே எழுதினீர்கள்?
//மறுமையில் நான் சொர்க்கத்தில் இருக்கும்போது நீங்கள் என்னை பார்க்க நேர்ந்தால் அப்போது என்னிடம் இந்தக் கேள்வியை கேளுங்கள். பதில் சொல்கிறேன்.//
நல்லா ஜோக் அடிக்க வருது உங்களுக்கு!
//அந்தப் பதிவில் நீங்கள் எழுதியதை இந்தப் பதிவிலும் கொஞ்சம் சொல்லுங்கள். அந்தப் பதிவில் நீங்கள்தானே எழுதினீர்கள்?//
http://valpaiyan.blogspot.com/2010/04/blog-post_28.html
எனது பதிவு தான்!
என்ன தோழரே, ஒரு கேள்விக்கு பதில் கேட்டால் உங்கள் பதிவின் சுட்டியை கொடுக்கிறீர்கள்? அதிலும் என் கேள்விக்கு பதில் இல்லையே?
பரிணாமத்தை நான் நம்பக்காரணம் அதில் இருக்கிறது!, அடிப்படை காரணி தானே கேட்டிங்க அதான் அது!
http://valpaiyan.blogspot.com/2010/02/blog-post_26.html
வாழைப்பழக் கதை மாதிரி ‘அதான் அது’ என்கிறீர்களே தவிர, கேள்விக்கு பதிலை கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறீர்களே? நியாயமா?
சரி போகட்டும்..
எனது இரண்டாவது கேள்விக்காவது பதில் சொல்லுங்கள்:
2. பரிணாம கோட்பாட்டின்படி பிரபஞ்சத்தின் முதல் உயிரினம் எப்படி தோன்றியது?
நான் விஞ்ஞானி இல்ல!
ஒன்பதாங்கிளாஸ் தான் படிச்சிருக்கேன், அந்த ஆராய்ச்சியெல்லாம் செய்யுறவங்க கிட்ட தான் அதை கேட்கனும்! நானே தான் சொல்லி ஆகனும்னு வெயிட் பண்ணனும்!
நான் பரிணாம வளர்ச்சியை பின்னோக்கி பயணித்து பார்க்கிறேன்!
தோழரே, பரிணாமம் பற்றி பேச, எழுத படிப்பறிவு தேவையில்லை, சுற்றுசூழலை ஊன்றி கவனித்தாலே போதுமானது! என்று நீங்கள்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
நீங்கள் மேலும் சொல்லியிருக்கிறீர்கள்: //நம்மை சுற்றி ஆயிரமாயிரம் பரிணாமத்தின் சுவடுகள் சிதறி கிடக்கின்றன, அலட்சியம் செய்வது மதவாதிகளின் குணம், அது ஏன், எவ்வாறு, எப்படி என்று கேள்வி கேட்பது பகுத்தறிவாளனின் குணம்!, அதையும் கூட சொன்னவுடன் நம்பவேண்டியதில்லை, அதற்க்குண்டான சாத்தியகூறுகளை ஆராயும் தனிபட்ட உரிமை தனியொரு மனிதனுக்கும் இருக்கிறது! சிந்திக்க தான் அந்த மூளை மறுக்கிறது!//
நான் மதவாதிதான். ஆனால் சிந்திக்க மறுப்பவன் அல்ல. அதனால்தான் பரிணாமம் பற்றி ஏன், எவ்வாறு, எப்படி என்று எனக்குள் நிறைய கேள்விகள் இருக்கின்றன.
நீங்கள் ஒரு பகுத்தறிவாளர் என்றால், பரிணாமத்தை நம்பத்தொடங்குவதற்கு முன்னால் இதே கேள்விகளை கேட்டு பதில் பெற்றிருக்க வேண்டுமே? அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த பிறகல்லவா அதனை நம்பத் தொடங்கியிருக்க வேண்டும்? ‘அந்த ஆராய்ச்சியெல்லாம் செய்யுறவங்க கிட்ட தான் அதை கேட்கனும்!’ என்றால் இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் தெரியுமுன்பே இதையெல்லாம் நீங்கள் நம்பத் தொடங்கிவிட்டீர்களா? நீங்கள் பகுத்தறிவாளரா? இல்லையா?
//நீங்கள் நம்பத் தொடங்கிவிட்டீர்களா? நீங்கள் பகுத்தறிவாளரா? இல்லையா?//
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது, நம்ப தொடங்கி தான் உள்ளேன், முடிவு செய்யவில்லை!
யாராவது கடவுளை காட்டினால் மாறிக்க வேண்டியது தான்! நீங்க காட்றிங்களா அல்லாவை!
//யாராவது கடவுளை காட்டினால் மாறிக்க வேண்டியது தான்! நீங்க காட்றிங்களா அல்லாவை!//
இறைவனை நேரில் பார்க்காமல் நம்பிக்கைக் கொள்வதற்குப் பெயர்தான் ‘இறை நம்பிக்கை’! அதற்கான சாத்தியக்கூறுகளும் அத்தாட்சிகளும் ஏராளம் இருக்கின்றன. தேடுங்கள். கண்டடைவீர். ஆனால் ‘இறைவன் இல்லை’ என்று முன்முடிவு செய்து கண்ணை மூடி வைத்துக் கொண்டு, ‘எனக்கு யாராவது இறைவனை காட்றீங்களா’ என்று பாசாங்கு பண்ணுவது பயனற்றது.
//இறைவனை நேரில் பார்க்காமல் நம்பிக்கைக் கொள்வதற்குப் பெயர்தான் ‘இறை நம்பிக்கை’! //
இதற்கு பேரு பாசாங்கு இல்லையா! நான் பண்றது தான் பாசாங்கா!
//அதற்கான சாத்தியக்கூறுகளும் அத்தாட்சிகளும் ஏராளம் இருக்கின்றன//
இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல! ஒரு புத்தகம் உங்களுக்கு சாத்தியகூறா!?
தோழரே,
பிரபஞ்சம் தானாகத்தான் உருவாகியிருக்கும் என்று சில அறிவியலாளர்கள் நம்பிக் கொண்டு அதற்கான ஆதாரங்களை தேடு தேடு என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடையதும் நம்பிக்கைதான்.
ஆனால் நான் இந்தப் பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் சக்தி படைத்தது என்று நம்புகிறேன். அதற்கான அத்தாட்சிகள், சாத்தியக்கூறுகள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றுதான் நான் உங்களிடம் கேட்ட இரண்டாம் கேள்வி. உங்கள் கொள்கையில் நீங்கள் உறுதியானவராக இருந்தால் உலகின் முதல் உயிர் எப்படி தானாக தோன்றியது என்பதை எனக்கு நிரூபித்துக் காட்டுங்களேன்.
எனது நம்பிக்கையின் அடுத்தடுத்த நிலைகளாக, இறைத்தூதர்களை அந்த படைப்பாளனே அனுப்பினான் என்பதை நம்புகிறேன். மேலும் குர்ஆன் உள்ளிட்ட வேதங்களை அந்த இறைவனே அருளினான் எனவும் நம்பிக்கை கொள்கிறேன். எனது நம்பிக்கைக்கு மாற்றமான ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்டுங்களேன்.
எனது நம்பிக்கையை ‘நம்பிக்கை’ என்றே சொல்வது எப்படி பாசாங்காகும்?
அதே வேளையில், ‘நான் பகுத்தறிவாளன். எதையும் ஏன், எப்படி என்று கேள்வி கேட்ட பிறகே ஏற்றுக் கொள்வேன். அதையும் அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த பிறகே முடிவு செய்வேன்’ என்று சொல்லி விட்டு, பரிணாமம் பற்றி அடிப்படையான சில கேள்விகளைக் கேட்டால், ‘எனக்குத் தெரியாது. விஞ்ஞானிகளைக் கேளுங்கள்’ என்பது பாசாங்கில்லாமல் வேறென்ன?
//பரிணாமம் பற்றி அடிப்படையான சில கேள்விகளைக் கேட்டால், ‘எனக்குத் தெரியாது. விஞ்ஞானிகளைக் கேளுங்கள்’ என்பது பாசாங்கில்லாமல் வேறென்ன?//
தோழரே! உயிரின தோற்றம் வெகு சாதரணமாக விளக்க முடிவதல்ல! அதை பற்றி நண்பர்களுடன் விவாதித்து வருகிறேன்! உயிர் ஆதாரனமான உட்கரு உருவாகியதை பற்றீய விவாதம் போய் கொண்டிருக்கிறது! எனது பதிவில் விரைவில் உலக தோற்றத்தையும், இயிரின தோற்றத்ததையும் எழுதுவேன்!
தெரியாதுன்னு சொல்லி பழக்கமில்லை! தெரிந்து கொள்வேன் என்று சொல்லியே பழக்கம்!
//தெரியாதுன்னு சொல்லி பழக்கமில்லை! தெரிந்து கொள்வேன் என்று சொல்லியே பழக்கம்! //
நல்ல பழக்கம்தான். மென்மேலும் கேள்விகள் கேட்டு தெளிவான விளக்கங்களை நீங்கள் பெற பிரார்த்திக்கிறேன்.
அதேவேளையில், உங்களுக்கு உடன்பாடில்லாத கொள்கையாக இருந்தால் அதில் உண்மை இருக்காது என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். உங்கள் தேடல் பயணத்தை தொடருங்கள்.
//உங்களுக்கு உடன்பாடில்லாத கொள்கையாக இருந்தால் அதில் உண்மை இருக்காது என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். உங்கள் தேடல் பயணத்தை தொடருங்கள்.//
நான் எந்த முடிவுக்கும் வரல!
நீங்களும் சொர்க்கத்தில் பெண்களுக்கு என்ன கிடைக்கும்னு கேட்டு சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்!.
எனக்கு சொன்ன மாதிரியே நீங்களும் இருக்க வாழ்த்துக்கள்!
//நீங்களும் சொர்க்கத்தில் பெண்களுக்கு என்ன கிடைக்கும்னு கேட்டு சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்!.//
இதுல உங்களுக்கு எப்படி வசதி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
//இதுல உங்களுக்கு எப்படி வசதி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.//
கடவுள் எம்புட்டு கேவலமானவன்னு தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான்!
ஆடையில் பட்டால்கூட அசிங்கம் என அருவருக்கப்பட்டும் விந்துத்துளியிலிருந்த உருவான நீங்களும் நானும் கேவலமானவர்களா? அந்தக் கேவலமான ஜந்துக்களை படைத்து உணவளித்து பாதுகாத்துவரும் அந்த படைப்பாளன் கேவலமானவனா?
பூமி அவனுக்கு ப்ளேகிரவுண்டா!
படைப்பானாம், எல்லா செயலுக்கும் அவனே காரணம் என்பானாம், கடைசியில் நரகத்தில் விடுவானாம், நல்லா வுடுறிங்க கதை!
வால்பையன்,
தயவுசெய்து ஹூருள் ஈன் பற்றி இங்கே கீழ்க்காணும் சுட்டியில் சென்று பொறுமையாக கருத்தூன்றி படித்து தெளிவடைந்து விடாதீர்கள்…..
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/8-sorkathil-thunaikal/
ஏனென்றால்…. இன்னும் பற்பல தளங்களில் பற்பல பின்னூட்டங்களில் பற்பல மனிதர்களிடம் பற்பல வருடங்களாக பற்பல தடவைகள் “நித்தியகன்னிகள்” …. “நித்தியகன்னிகள்” …. “நித்தியகன்னிகள்” ….. என்று கேட்டுக்கொண்டே இருக்க முடியாது போய்விடுமே….
எனவே உங்கள் ‘அருமை பெருமையினை’ தக்க வைத்துக்கொள்ள அந்த லிங்க்கை மட்டும் தயவு செய்து கிளிக்கி தெரிந்து கொண்டு விடாதீர்கள்…..
சொர்க்கத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்ல துணையை கடவுள் கொடுப்பாராம்! நல்லா மாமா வேலை பார்க்குறாரையா கடவுள்!
ஆண்களுக்கு சொல்லி பெண்களுக்கும் அதேன்னு சொன்னாங்களாம், யார் கிட்ட காது குத்துறிங்க, பெண்களை அடிமையாக வச்சிபுட்டு சலுகைகள் கொடுக்குறாங்களாம்!
வால்பையன்: ஒங்க அப்பா ஒங்க நல்ல செயல்களை பார்த்து விட்டு புள்ளைக்கி நல்ல குடும்பத்துல( தெவுடியாள) இல்லாம நல்ல பெண்ன பாத்து கட்டி வசச ஒங்க அப்பாவ அன்னையிலிருந்து அப்பாண்னு கூப்பிடாம அடெய் மாமா பயலே இங்கே வாடா அப்புடின்ன கூப்புடுவீக உன்னுடைய சொல்லையும் செயலையும் பாத்த நீ ம.க.இ.க காரன் மாதிரி தெரியல நல்ல தண்ணியடிச்சிட்டு கடவுள மறுத்து வாந்தியேடுத்து கவித எழுதி திரிறவான் மாதிரி இருக்கு
நான் ம.க.இ.க கிடையாது!
எங்கப்பன் யாரு எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க, நான் என்ன குழந்தையா!?
எனக்கு அறிவில்ல இது எப்படி பட்ட பொண்ணுன்னு பார்க்க, சரி அப்படியே இருந்தாலும் ஒரு பொண்ணை தேவிடியான்னு எப்படி சொல்லலாம்! அவளை கல்யாணம் பண்றது கொலை குத்தமா!? நாலு பொண்டாட்டி கட்டின முகமது தேவடியானா?
உடன்பாடில்லாத ஒரு கொள்கை என்றால் அதை எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானாலும் பேசலாம் என்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? ஒன்பதாவதிற்கு மேலே படிக்காமல் இருப்பது தவறல்ல. ஆனால் ஒரு ஒன்பது வயது சிறுவனிடம் இருக்கும் நாகரீகம், பண்பாடு கூட இல்லாமல் நடந்துக் கொள்வது மனமுதிர்ச்சியின்மையின் அடையாளம்.
நண்பர் வால்பையன்,
உங்களின் வாத முறையும், சொற்களும் எல்லை மீறுகின்றன. நல்ல விவாத அனுபவத்தை தர பெற முடியாத போது தவிர்த்துக்கொள்வது சிறந்தது. வீம்புக்கு எழுதுவது சீர்கெடுக்கத்தான் செய்யுமேயன்றி சிந்திக்கவைக்காது.
இது ஏனைய நண்பர்களுக்கும் பொருந்தும்
செங்கொடி
ஒரு பொண்ணை தேவிடியான்னு சொல்றது மட்டும் சரியா!
அப்படி என்ன நான் தப்பா சொல்லிபுட்டேன்!
Mr. Vaal paiyan,
You dont know how to answer.. is this the way to answer?
Your answers are showing that you dont know anything, and you are a good “comedy piece”.
Try to be a decent man and show your proof. if not, better go and take rest. or try to join in cinema as a comedian.
வந்துட்டுராயா நாட்டாம தீர்ப்பு சொல்ல!
நூஹ்(நோவா)வின் கப்பல் கதை பாருங்கள்.
http://www.youtube.com/watch?v= CccaGaKOlSI&;feature=player_embedded#!
1 http://www.youtube.com/watch?v=CccaGaKOlSI
2. http://www.youtube.com/watch?v=ah5xFMYbP4s&feature=channel
3. http://www.youtube.com/watch?v=U8E0pRA9qxw&feature=related
see these videos
யூத, கிருஸ்தவ, இந்துப்புராணங்களின் கலப்பட கலவை, முகம்மதுவின் கர்பனைதான் இந்த குரான்.இந்த நூஹ் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருக் க முடியாது? நூஹ் எழாயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது?
இந்த இடுகைக்கான மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பார்க்க: http://www.ihsasonline.tk
//நாலு பொண்டாட்டி கட்டின முகமது தேவடியானா? //
ithalllaaam senkodi censor seyya maaattaaaraaa?
பகுத்தறிவுக்கு பொருந்தாத புராணப்புலம்பல்களை பற்ரி பேசி நேரம் வீண் ஆவதை நான் விரும்ப வில்லை
வெள்ளமென நுரைத்து
புறையோடிய சமுதாயத்தை
காக்கவும கரைசேர்க்கவும்
நூஹ் ( NOVA) கட்டியது
வாழ்கைநெறி என்ற “தெப்பம்”.
உதாரணமாக கூறப்பட்டதை
கப்பலென உருவகித்து
பைபிள் கூறுவதுபோல்
ஆங்கிலப்படங்களுக்கு நிகரான
ஒரு கதையை ஜோடித்தது
“மதவாதிகள்”
quranist@aol.com
GOD
——————————————————————————————————————–
16:79. Did they not look to the birds held in the atmosphere of the sky No one holds them up except God. In that are signs for a people who believe.
தூசு/மாசு/பறவை/விமானம்/துணை/கோள்/கிரகம் ஆகியவை இயற்பியல் விதிகளுக்குட்பட்டு வான்வெளியில்/விண்ணில் பறக்கும்/மிதக்கும்.
——————————————————————————————————————-
quranist@aol.com
எனக்கும் சில சந்தேகங்கள்…
1.அல்லாவை ஏற்றுக்கொண்டவர்களுடன் இரண்டிரண்டு ஜோடி உயிரினங்களையும் கப்பலில் ஏற்றிக்கொள்ளச் சொல்கிறார் அல்லா.
அவ்வாறாயின் ஏற்றப்படாத அனைத்து உயிரினங்களும் பாவம் செய்தவைகளா?
2. கப்பலில் ஏற்றப்பட்ட மனிதர்களை பின்தோன்றல்களுக்காக என்கிறார் அல்லா. இதனுடன் இரண்டிரண்டு ஜோடி உயிரினங்களை ஏற்றிக்கொள்ளச் சொன்னதையும் பொருத்திப் பார்க்கும்போது அவையும் பின்தோன்ற்ல்களுக்காகத்தான் என்றாகிறது. மேலும், இது அன்று உலகம் முழுதும் வெள்ளம் வந்ததையும் குறிக்கிறது. மேலும், அல்லா படைக்கும் வேலையை தொடரவில்லை என்பதையும் உணர்த்துகிறது. எனவே, அக்கப்பலில் உலகம் முழுவதிமுள்ள உயிரினங்களின் ஜோடிகளும் ஏற்றிக்கொள்ளப்பட்டனவா?
அரைவேக்காட்டுத்தனமாக உளறியுள்ளீர்.
s. ibrahim
நீங்கள் யாரை அரைவேக்காட்டுத்தனமாக உளறியுள்ளீர் என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். சந்தேகம் கேட்ட என்னையா? அல்லது கட்டுரை எழுதியவரையா?
நோவா கட்டிய கப்பலில் இரண்டிரண்டு ஜோடி உயிரினங்களைத்தான் ஏற்றிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் அல்லா. மீதமிருந்த உயிரினங்கள் என்ன ஆனது என முழுவேக்காடு S, ibrahim விளக்கவேண்டும்.
இந்த இஸ்லாமிய நோவா கதை , யூத , கிறித்தவ கட்டு கதையின் நீட்சியே !!
சிந்திக்கும் அல்பல்சபியாவுக்கு வாழ்த்துக்கள் !
s.Ibrahim,
குரானின் வசனங்களிலிருந்து எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே எனது இரு சந்தேகங்களை இங்கே பதிவு செய்தேன். ஆனால், மதிப்பிற்குரிய நண்பராகிய நீங்கள் அதற்கு விளக்கமளிப்பதை விடுத்து என்னை அரைவேக்காடு என வசைபாடியிருக்கிறீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் குரான் மீது விமர்சனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களும் அதே போன்றுதான் இருக்க வேண்டும் என நினைப்பது தவறு.
அல்பல்சபியா,
இந்த இப்ராஹீம் என்ற இஸ்லாமிய ஆதரவாளருக்கு இஸ்லாமும் தெரியாது , அடிப்படை அறிவியலும் தெரியாது.
இவர் கண் கட்டி நம்புவது போலவே உலகமும் நம்ப வேண்டும் என்று சொல்லும் கிறுக்கர் !
போலார் கரடிகள் துருவ பகுதிகளில் மட்டுமே காணப்படும் உயிரினம், சில வகை பண்டா கரடிகள் ஆஸ்திரேலியாவில் மலை பகுதிகளில் மட்டுமே காண கிடைக்கும், இந்த இருவகை கரடி இனமும் எப்படி மத்திய கிழக்கு அராபிய பிரதேசத்தில் இருந்து அது தற்போது வாழும் பகுதிக்கு செல்ல முடியும் .
இல்லை அல்லாஹ் “குன்”னுன்னு சொன்ன அதான் போய்ட போகுது, அப்டின்னா அத நம்ப நாங்கள் தயாராக இல்லை .
உலகில் மொத்தம்
5490 வகை பாலூட்டிகள்,
9998 பறவையினங்கள்,
9084 வகை ஊர்வன , 6433 இருவாழ்விகள் , 31300 வகை மீன்கள்.
ஆக இந்த மொத்த உயிரின வகைகளும் நோவாவின் கப்பலில் ஒவ்வொரு ஜோடி இருந்ததா?
மனிதனை முட்டாளாக்கும் மூடத்தனம் !!!
Reference :
***************
http://purpleslinky.com/trivia/science/15-amazing-animals-from-around-the-world/
http://www.currentresults.com/Environment-Facts/Plants-Animals/number-species.php
அல்பல்சபீல் உங்கள் பெயருக்கான விளக்கம்தாருங்கள்.இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்ட உங்களுக்கும் அரபி மொழிக்கும் என்ன உறவு என்பதையும் சொல்லுங்கள்.அடக்க முடியாத அறிவுள்ள நீங்கள் பெயர் விசயத்தில் மடமையாக இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
///நோவா கட்டிய கப்பலில் இரண்டிரண்டு ஜோடி உயிரினங்களைத்தான் ஏற்றிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் அல்லா. மீதமிருந்த உயிரினங்கள் என்ன ஆனது என முழுவேக்காடு S, ibrahim விளக்கவேண்டும்.///
மற்ற உயிரினங்கள் மூழ்கடிக்க பட்டிருக்கும்
நூஹ் என்பவர் மூசாவிற்கும் காலத்தால் முற்பட்டவர் எனவே யூதர்களின் தோராவிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கும் கதைதான். அந்தக்கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்படும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை அதைத்தான் முகம்மதுவும் தன்னுடைய குரானில் வசனமாக்கியிருக்கிறார்.================மூடனே நாங்கள் நம்புவது மோசஸை மூஸா (அலை) என்றுதான் அதனால் அது பெரிய விஷயம் இல்லை, நீ மூடன் என்பதை பல இடங்களின் நிரூபித்து வருகிறாய் , வாழ்த்துக்கள்
உலகில் சொல்லப்படும் எல்லாமே ஒன்றைத்தான் குறிக்கிறது, லெமூரியா கண்டம் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் அதைத்தான் குறிக்கிறது, பல புனித புத்தகங்கள் மாற்றப்பட்டு விட்டன. இந்த உண்மை தெரியாமல் நீயெல்லாம் என்னத்த சொல்ல