ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௯
மாவோ தற்போது ஒரு மார்க்சியவாதியாக இருந்தார் ஆனால் ஒரு கம்யூனிஸ்டாக ஆகவில்லை. ஏனென்றால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் சீனாவில் இருக்கவில்லை. பீக்கிங்கில் வாழ்ந்த ரஷ்யர்கள் மூலமாக, சென் ரூ கியூ அவர்களும், லி ரா சாவ் அவர்களும் கம்யூனிஸ்ட் சர்வதேசியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 1920ஆம் ஆண்டு வசந்த காலத்தின் போதுதான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உத்தியோக பிரதிநிதிகிரி கோரி வோய்ட்டின்ஸ்கி பீக்கிங் வந்து சேர்ந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான யாங் மிங் சாய் அவர்களும் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்ற வந்திருந்தார். அவர்கள் லி ரா சாவ் அவர்களுடனும் பெரும்பாலும் லீயுனுடைய மார்க்சிய கோட்பாட்டு ஆய்வுச்சங்கத்தின் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினர். அதே வருடத்தின் மூன்றாவது அகிலத்தின் டச்சுப் பிரதிநிதியும், உற்சாகமும் இணங்குவிக்கும் திறன் உடையவருமான ஜான் ஹென்ட்ரிக்கன்நீவ்லியட் (சீன மொழியில் ரி சான் குவோ சி) ஷாங்காய்க்கு வந்திருந்தார். அங்குள்ள தீவிர சீனக் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளவே அவர் வந்திருந்தார். 1920 மே மாதத்தில் சென் அவர்கள் தான் ஒரு மத்திய கம்யூனிசஸ்ட் குழுவை ஸ்தாபித்த ஒரு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இதன் சில உறுப்பினர்கள் (பீக்கிங்கில் உள்ள லி ராவ் சா குழு சென் அவர்களால் காண்டானில் அமைக்கப்பட்ட மற்றொரு குழு, ஷாண்டுங், ஹூப்பேயிலுள்ள குழுக்கள், ஹூனானில் உள்ள மாவோவின் குழு) அடுத்த வருடம் ஷாங்காயில் இடம்பெற்ற மாநாட்டின் அமைப்பாளர்கள் ஆகினார்கள். இவர்கள் வோய்ட்டின்ஸ்கியின் உதவியுடன் முதலாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரசை கூட்டினார்கள்.
இதை 1937ல் நினைவு கூரும்போது வயதில் இளமையாக இருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்ததோடு உலகத்திலேயே ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பலம்மிக்க தனக்கென்று சொந்த ராணுவத்தை கொண்டிருந்த ஒரேஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாகத்தான் இருந்தது.
மாவோ தன்னுடைய கதையை தொடர்ந்தார்,
1921 மே மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்குரார்பணக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் ஷாங்காய் சென்றேன். இதன் அங்குரார்ப்பணத்தில் முன்னோடிக்கடமைகள் சென் ரூ சியூ அவர்களாலும் லி ரா சாவ் அவர்களாலும் செய்யப்பட்டன. இந்த இருவருமே சீனாவின் மிகச்சிறந்த புத்திஜீவி தலைவர்களுள் இருவராக இருந்தனர். லி ரா சாவ்வின் கீழ் பீக்கிங் தேசிய பல்கலைக்கழகத்தின் உதவி நூலகராக நான் விரைவாக மார்க்க்சியத்தி நோக்கி விருத்தியடைந்தேன். இந்தப் பாதையை நோக்கிய எனது ஆர்வத்திற்கு சென் ரூ சியூ அவர்களும் ஊன்றுகோலாக இருந்தார். ஷாங்காய்க்கான எனது இரண்டாவது பயணத்தின் போது நான் படித்திருந்த மார்க்க்சிய புத்தகங்களைப்பற்றி சென்னுடன் கலந்துரையாடியிருந்தேன். நம்பிக்கை பற்றிய சென்னின் சொந்த விளக்கங்கள் எனது வாழ்க்கையின் மிகவும் தீர்க்கமான அந்த காலகட்டத்தில் என்னில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
ஷாங்காயில் இடம்பெற அந்த வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்திலே (கட்சியின் முதலாவது காங்கிரஸ்) என்னைவிட மற்றுமொரு ஹூனான்வாசியே இருந்தார் (மாவோவின் பழைய நண்பரான ஹோஷ் ஹெங். இவர் 1935ல் கோமிண்டாங்கினால் கொல்லப்பட்டார்) அதில் பங்குபற்றிய ஏனையோர் பின்வருமாறு, சாங் குவோ ராவ் (தற்போது செஞ்சீன ராணுவத்தின் ராணூவ கவுன்சில் உதவித்தலைவர்) பாவ் ஹூய் ஷெங், ஷூ பூ ஷாய் ஆகியவர்களாவர். எல்லாமாக எங்களில் 12 பேர் இருந்தோம். ஷாங்காயில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் மத்தியக்குழுவில் இருந்தோர் விபரம் பின்வருமாறு, சென் ரூ சியூ, சாங் குவோ ராவ், சென் குங் போ, ஷீ செங் ரூங் (தற்போது நாங்கிங்கில் அதிகாரி) சுன் யுவான் லு, லி ஹான் சுன் (1972ல் வூ ஹானில் கட்சியின் முதலாவது மாகாணக்கிளை அமைக்கப்பட்டது. அதில் நானும் உறுப்பினரானேன். ஏனைய மாகானங்களிலும் நகரங்களிலும் ஸ்தாபனங்கள் நிறுவப்பட்டன. ஹிப்பே உறுப்பினர்களில் ருங் பி வூ – தற்போது பாவோ அன்னில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிப் பாடசாலையின் அதிபர் – சு பாய் ஹாவ், ஷி யங் ஆகியோர் இருந்தனர். கட்சியின் சென்ஷி கிளையில் காவோ சுங் யூ(காவ் காங்)மேலும் பல மாணவர் தலைவர்களும் இருந்தனர். கட்சியின் பீக்கிங் கிளையில் வீ ரா ராவோ(ரெங் சுங் சியா 1934ல் சியாங்காய் ஷேக்கால் கொல்லப்பட்டார்) லோ சுங் லன், லியூ சென் ஜிங் (தற்போது ட்ராட்ஸ்கியவாதி) வேறுபலர் இருந்தனர். காண்டன் கிளையில் லின் போ சு தற்போது சீன சோவியத் அரசில் நிதி ஆணையாளராக உள்ளார். பெங் பாய் ஆகியோர் இருந்தனர். வாங் சுன் மெய் மற்றும் ரெங் என் மிங் ஆகியோர் ஷாண்டுங் கட்சிக் கிளை ஸ்தாபன உறுப்பினர்களில் அடங்குவர்.
இதனிடையே செயலாளராக இருந்த ஹூனான் கம்யூனிஸ்ட் கிளை 1922 மே மத அளவில் ஏற்கனவே சுரங்கத்தொழிலாளர்கள், ரயில்வே ஊழியர்கள், மாநகரசபை வேலையாட்கள், அச்சக ஊழியர்கள், அரச நாணயம் அச்சிடும் தொழிலாளர்கள் ஆகியோரிடையே 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உருவாக்கியிருந்தனர். அந்த வருடம் குளிர் காலத்தில் ஒரு உத்வேகமான தொழிலாளர் இயக்கம் உருவாகியது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் பிரதானமாக மாணவர்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் தான் கூடுதலாக நடத்தப்பட்டன. விவசாயிகளிடையே மிகக் குறைவான அளவிலேயே நடாடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான பெரிய சுரங்கங்களும், கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் ஸ்தாபனமயப் படுத்தப்பட்டனர். மாணவர் தொழிலாளர் ஆகிய இருதரப்பு முனைகளிலும் ஏராளமான போராட்டங்கள் இடம்பெற்றன. 1922 குளிர்காலத்தில் ஹூனானின் ஆளூனரான சாவோ கெங் ரி, ஹூ வாங் ஐ, பாங் யுவான் சிங் என்ற இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார். இதன் விளைவாக அவருக்கெதிராக பரவலான கிளர்ச்சி ஏற்பட்டது. கொலை செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களில் ஒருவரான ஹூ வாங் ஐ ஒரு வலதுசாரி தொழிற்சங்கத்தின் தலைவராவார்.
மாகாண கோமிண்டாங் கட்சியிலும் மாவோ ஒரு முன்னணி உறுப்பினராக இருந்தார். அடோல்ஃப் ஜோபேயுடன் சுன் யாட் சென் ஏற்படுத்திக்கொண்ட இருகட்சிக் கூட்டணி ஒப்பந்தத்தின் பின்பு சுன் யாட் சென் கோமிண்டாங் கட்சியினுள் கம்யூனிச எதிர்ப்பு சக்திகளை ரகசியமாக அகற்றத்தொடங்கினார். கட்சியை ஹூனானில் மறு சீரமைப்பதற்கு சுன் யாட் சென் தனது பழைய சகபாடி லின் த்சு ஹான், மா சே துங், சியாசி ஆகியோருக்கு அதிகாரம் அளித்தார். 1923 ஜனவரி சாரிகளை ஒரு தீவிரவாத கருவியாக அவர்கள் மாற்றியிருந்தனர்.
தொழிற்சங்கங்களில் அராஜகநாதிகளும் செல்வக்குப் பெற்றிருந்தனர். அப்போது இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும், அனைத்து ஹூனான் தொழிலாளர் பிரதிநிதிகள் சபை என்ற அமைப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனாலும் அவர்களுடன் நாங்கள் சமரச உடன்பாடு கொண்டிருந்தோம். அத்தொடு பேச்சுவார்த்தை மூலமாக அவர்கள் எடுக்கவிருந்த அவசரமான, பயனற்ற நடவடிக்கைகள் பலவற்றை தடுத்தி நிறுத்தினோம். சாங் கெங் ரிக்கு எதிரான இயக்கத்தை ஒழுங்கு செய்து உதவ நான் ஷாங்காய்க்கு அனுப்பப்பட்டேன். 1922 குளிர்காலத்தில் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் கூட்டம் ஷாங்காயில் கூட்டப்பட்டது. அதில் கலந்து கொள்ள நான் விரும்பினேன். இருப்பினும் அந்தக்கூட்டத்தில் நான் பங்குபற்ற இயலாமல் போய்விட்டது. நான் ஹூனானுக்கு திரும்பி தொழிற்சங்கங்களுக்கு இடையேயான எனது வேலையில் தீவிரமாக ஈடுபட்டென். அந்த வருடம் வசந்த காலத்தில், மேம்பாடான ஊதியத்திற்காகவும், மேம்பாடான தொழிற்கௌரவத்திற்காகவும் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க வேண்டுமென்று பல வேலை நிருத்தங்கள் இடம்பெற்றன. அவற்றில் பெரும்பாலானவை வெற்றிபெற்றன. மே 1ம் திகதி ஹூனானில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சீனாவில் தொழிலாளர் இயக்கத்தின் முன்னெப்போதும் இல்லாத பலத்திற்கு இந்த சாதனை கட்டியம் கூறியது.
1923 மே மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் காண்டனில் நடைபெற்றது. கோமிண்டாங் கட்சியுடன் சேருவது, அதனுடன் ஒத்துழைப்பது, அத்தோடு வடபகுதி ராணுவத்திற்கு எதிராகஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்ற வரலாற்றுப் புகழ்மிக்க தீர்மானம் இங்கு தான் எடுக்கப்பட்டது. நான் காண்டானுக்கு சென்று கோமிண்டாங் கட்சியின் முதலாவது தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டேன். மார்ச் மாதத்தில் நான் ஷாங்காய் திரும்பி கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்றுக்குழு (மத்தியக் குழு)விலும் கோமிண்டாங் கட்சியின் நிறைவேற்றுக்குழுவிலும் எனது கடமையை ஒருங்கிணைந்த முறையில் செய்தேன். இந்தக்குழுவின் அப்போதைய ஏனைய உறுப்பினர்களில் வாங் சிங் வெய் (பின்னாளின் நாங்கிங்கின் பிரதமர்) ஹூஜ் ஹான் மின் ஆகியோர் அடங்குவர். கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியில் மேற்குறிப்பிட்டவர்களுடன் இணைந்து நான் செயற்பட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியினரும் தேசியவாத கட்சியினரும் 1925ல் முதலாவது ஷாங்காய் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தை உருவாக்கினார்கள். இதன் விளைவாக மே 30ம் திகதி ஆர்ப்பாட்டம் ஏற்ப்பட்டது. அன்னிய நாட்டில் பிராந்தியங்களை ஏற்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவருமாறும், ஷாங்காய் சர்வதேசக் குடியிருப்பின் ஆளுமையை சீனாவுக்கு திருப்பித்தருமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது பிரித்தானிய குடியிருப்பு காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டு பலரை கொன்றனர். பிரித்தானிய பொருட்களை பகிஷ்கரிக்கும் நடைமுறைக்கு இது வழிகோலியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னணி அமைப்பாளர்கள் லியூ ஷா சி, சென் யுன் ஆகியோராவர்.
இந் நூலின் முந்திய பகுதிகள்
ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧