தேசியவாத காலகட்டம் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௦

அந்த வருடத்தில்  வம்போவா ராணுவப் பயிற்சிக் கல்லூரி திறக்கப்பட்டது. காலில் அதன் ஆலோசகரானார். ரஷ்யாவிலிருந்து சோவியத் ஆலோசகர்கள் வந்து சேர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங் கட்சி கூட்டிணைவு ஒப்பந்தம் ஒரு நாடு தழுவிய புரட்சிகர இயக்கமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. அடுத்த குளிர்காலத்தின் போது ஓய்வுக்காக நான் ஹூனான் திரும்பினேன். நான் ஷாங்காயில் சுகவீனமுற்றென். ஆனால் நான் ஹூனானில் இருக்கும்போது அந்த மாகாணத்தின் மாபெரும் விவசாய் இயக்கத்தின் மையத்தளத்தை நான் ஒழுங்குபடுத்தினேன்.

முன்பு விவசாயிகளிடையே வர்க்கப்போராட்டத்தின் பரிமானத்தை நான் முழுமையாக உணர்ந்திருக்கவில்லை. ஆனால் மே30 நிகழ்ச்சிகளுக்குப் பின் அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஒரு பாரிய அரசியல் நடவடிக்கை அலையின் போது, ஹூனானின் விவசாயிகள் மிகுந்த தீவிரவாதிகளாக மாறினர். நான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த எனது வீட்டை விட்டு வெளியேறி ஒரு கிராமிய அமைப்புருவாக்கும் இயக்கத்தை தொடங்கினேன். சில மாதங்களுக்குள்ளாகவே இருபதிற்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை நாங்கள் நிறுவினோம். அதுவே நிலப்பிரபுகளீன் கோபத்தை கிளறிவிட போதுமானதாக இருந்தது. அவர்கள் என்னை கைது செய்யுமாறு கோரினார்கள். என்னைத்தேடி சாங் கெங் ரி துருப்புகளை அனுப்பினார். நான் காண்டனுக்கு தப்பியோடினேன். சரியாக அந்த நேரத்தில்வரம்போவா ராணுவ பயிர்ச்சிக்கல்லூரி மாணவர்கல் யுவான் ராணுவத்துவவாதி யாங் சீ மிங்கையும், குவாங்கி ராணுவத்துவவாதி லு த்சு வாய்யையும் தோற்கடித்திருந்தனர். அந்த கோமிண்டாங் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையேயான ஐக்கியம் மீளவும் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு 1926ம் வருட வசந்த காலத்தின் போது நான் ஷாங்காய்க்கு சென்றேன். அந்த வருடம் மே மாதத்தில் சியாங் கேய் ஷேக்கின் தலைமையில் கோமிண்டாங் கட்சியின் இரண்டாவது முழு மானாடு நடைபெற்றது. (இந்தக்கூட்டத்தில் மாவோ கலந்துகொண்டார் இக்கட்சியின் மத்திய நிறைவேற்றுக்குழுவின் மாற்று உறுப்பினராக மீன்Dஉம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்) ஷாங்காயில் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவில் நான் பணிப்பாளராக கடமையாற்றினேன். அங்கிருந்து ஹூனானுக்கு அனுப்பப்பட்டேன். கோமிண்டாங் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டிற்கும் விவசாயிகள் பரிசோதகராக கடமையாற்றவே நான் அங்கு அனுப்பப்பட்டேன். இதற்கிடையே கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங் கட்சி  ஆகியவற்றின் கூட்டு முன்னணி தலைமியில் 1926ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், வரலாற்றுப் புகழ்பெற்ற வடக்கு நோக்கிய படைனடப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஹூனானில் நான் விவசாய் அமைப்புகளையும் அரசியல் நிலமைகளையும் 5 சி யென் பகுதிகளில் (காங்ஷா, லி லிற், சியாங் ரான், கூங் ஷான், சியாங் சியாங்) பரிசோதித்து எனது அறிக்கையை ஹூனானில் விவசாயிகள் இஅயக்கம் மீதான ஒரு ஆய்வரிக்கை கட்சி மத்திய குழுவுக்கு சமர்ப்பித்தேன். இதில் விவசாயிகளின் இயக்கம் பற்றிய கோட்பாட்டின் ஒரு புதிய வழியை உருவாக்குமாறு கோரியிருந்தேன். அடுத்த வசந்த காலத்தின் முற்பகுதியில் நான் வுகானை சென்றடைந்த போது மாகானங்களுக்கு இடையிலான விவசாயிகள் கூட்டம் ஒன்று இடம்பெற்ரது இதில் நான் கலந்துகொண்டு எனது ஆய்வுக்கட்டுரையின் பரிந்துரைகளைப் பற்றி கலந்துரையாடினேன். ஒரு பரந்த அடிப்படையிலான காணிப்பங்கீடு பற்றி இதில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பெங் பாய், பாங் சி மின் மற்றும் ஜோல்க், வோலன் என்று இரண்டு ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் 5ஆவது காங்கிரஸ் மானாடு வுகானில் கூட்டப்பட்டபோதும் கூட கம்யூனிஸ்ட் கட்சி சென் ரு சியூவின் ஆதிக்கத்திற்குள்ளேயே இருந்தது. சியாங் கேய் ஷேக் ஏற்கனவே எதிர்ப்புரட்சியை தொடங்கியிருந்ததோடு ஷாங்காயிலும் நாங்கிங்கிலும் கம்யூனிஸ்ட்கள் மீதான தனது தாக்குதலையும் ஆரம்பித்திருந்தது. அனைத்து எதிர்ப்புகளுக்கும் மத்தியில், அவற்றை ஒதுக்கித்தள்ளிவிட்டு வுகான் கோமிண்டாங் கட்சிக் கிளைக்கு சலுகைகளை வழங்கியதோடு அவர்கள் மீது பொருமையை கடைப்பிடிக்கும் கொள்கையை அவர் பின்பற்றினார். அத்தோடு அவர் ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாத குட்டி பூர்ஷ்வாக் கொள்கையை க் கடைப்பிடித்தார். கட்சியின் கொள்கையின் மீது அப்போது நான் மிகுந்த அதிருப்தி கொண்டிருந்தேன். விசேடமாக விவசாயிகள் இயக்கத்தின் மீதான கட்சியின் கொள்கைகளையிட்டு அதிருப்தி அடைந்திருந்தேன். விவசாயிகள் இயக்கத்தை மேலும் முழுமையாக ஸ்தாபன மயப்படுத்தி நிலப்பிரபுக்களுக்கு எதிரான வர்க்கப்போராட்டத்திற்கு ஆயத்தமாகியிருந்தால் சீன சோவியத் அரசுகள் மேலும் அதிகரித்த அளவிலான சக்திவாய்ந்த அபிவிருத்தியை நாடு முழுவதிலும் முன்பே அடைந்திருக்கும் என்று நான் தற்போது கருதுகிறேன்.

ஆனால் சென் ரு சியூ இதற்கு கடுமையாக மாறுபட்டார். 5ஆவது காங்கிரசின் இறுதிக்கூட்டத்தில் மாவோ இருக்கவில்லை. மக்களின் எதிரிகளான பெரும் நிலப்பிரபுக்களிடமிருந்தே காணி பறிமுதல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இது ஸ்டாலினின் பணீப்புரை அடிப்படையிலேயே நிகழ்ந்தது. புரட்சியில் விவசாயிக்லளின் பங்களிப்பைப் பற்றி சென் விளங்கிகொகொள்ளவில்லை. இந்தப்பங்களிப்பின் சாத்தியக்கூற்கள் வாய்ப்புவளங்கள் பற்றி அவர் வெகுவாகக் குறைத்தே மதிப்பிட்டார். ஆகவே மாபெரும் புரட்சிக்கு சிறிது முன்னதாக இடம்பெற்ற 5ஆவது காங்கிரஸ் ஒரு போதுமான் அளவினதாக காணிச்சீர்திருத்தத்ட் திட்டத்தை நிறைவேற்றத்தவறிவிட்டது. விவசாயப் போராட்டத்தை விரைவாக தீவிரப்படுத்த வேண்டும் என்ற எனது எண்ணக் கருத்துகள் மானாட்டில் விவாதிக்கப் படக்கூட இல்லை. சென் ரு சியூவாலேயே ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்த மத்தியக்குழு அவற்றை ஆய்வுக்கு எடுக்கக்கூட மறுத்துவிட்டது. நிலப்பிரபு என்பவர் 500மௌ (33 கெக்டேர் அளவுள்ள பரப்பு) காணிக்கு மேல் வைத்திருக்கும் ஒரு விவசாயியே ஒரு விவசாயியே என்று வரையறை செய்ததது,  முழுமையாக போதுமானதாக விருத்தி செய்வதற்கு; முழுமையாக போதுமானதாக இல்லாத நடைமுறைப் படுத்த முடியாத ஒரு அடிப்படை இதுவாகும். அத்தோடு சீனாவின் காணி ரீதியான பொருளாதாரத்தின் விசேட குணவியல்புகளை சிறிதளவும் கருத்துக்கொடுக்காத ஒரு அடிப்படை இதுவாகும். இருப்பினும் காங்கிரசை தொடர்ந்து அனைத்து சீன விவசாயிகள் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராக நான் பொருப்பேற்றேன். 1927ம் ஆண்டு வசந்த காலம் அளவில் ஹூ பே, கியாங்கி, பூகியன், விசேடமாக ஹூனான் ஆகிய பகுதியிலிருந்த விவசாய சங்கங்கள் (கம்யூனிஸ்ட் கட்சி இவற்றின் மீது ஒரு ஆர்வமற்ற போக்கை கொண்டிருந்த போதும்) திடுக்கிடவைக்கும் அளவிற்கு தீவிரவாத போக்குடையவை ஆகின. இது கோமிண்டாங் கட்சியையும் எச்சரிக்கை கொள்ள வைத்தது. உயர் அதிகாரிகளும் ராணுவ கMஆண்டர்களும் விவசாய சங்கத்தை ஒரு சோம்பேறி நாடோடிக் கூட்டம் என வர்ணித்ததோடு, அதன் நடவடிக்கைகளும் கோரிக்கைகளும் மிதமிஞ்சியவை என்றும் குற்றஞ்சாட்டினர். அத்தோடு அது அடக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். சென் ரு சியூ ஹூனானில் இருந்து பின்வாங்கி அங்கு இடம்பெறும் சில நிகழ்வுகளுக்கு நானே பொருப்ப்பாளன் என்று கூறினார். அத்தோடு எனது எண்ணக்கருத்துக்களை அவர் கடுமையாக எதிர்த்தார். (எல்லாப்பெரிய காணிகளையும் பரிமுதல் செய்யவேண்டும் எனும் ஹூனான் விவசாயிகள் சங்கத்தின் முன்மொழிவுகளை மாவோ ஆதரித்தார், அல்லது அவ்ரே பெரும்பாலும் உருவாக்கினார்)


ஏப்ரல் மாதமளவில் ஷாங்காய் நாங்கிங் ஆகிய இடங்களில் எதிர்ப்புரட்சி இயக்கம் தொடங்கிவிட்டது. ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட தொழிலாளர் படுகொலை சியாங் கேய் ஷேக்கின் தலைமையில் நடைபெற்றது. இதே நடவடிக்கைகள் காண்டானிலும் மேற்கொள்ளப்பட்டன. சு கோ சியாங் எழுச்சி மே 21ம் திகதி  ஹூனானில் இடம்பெற்றது பிற்போக்குவாதிகளால் ஏராளமான விவசாயிகளும் தொழிலாளர்களும் கொலை செய்யப்பட்டனர். இதற்கு சிறிது பிற்பாடு கோமிண்டாங் இடதிசாரிப்பிரிவு கம்யூனிஸ்ட் கட்சியுடனான ஒப்பந்தத்தை வுகானில்வைத்து தள்ளுபடி செய்தது. அத்தோடு கம்யூனிஸ்டுகளை கோமிண்டாங் கட்சியிலிருந்து வெளியேற்றியது. அரசிலிருந்து கம்யூனிஸ்டுகள் நீக்கப்பட்டமையால் விரைவில் அரசாங்கமே இல்லாதொழிந்தது.

தற்போது பல கம்யூனிஸ்ட் தலைவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி கட்சி உத்தரவிட்டது. ரஷ்யா ஷாங்காய் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டது. சிச்சுவானுக்கு செல்லும்படி எனக்கு உத்தரவு கிடைத்தது. இதற்குப்பதிலாக என்னை மாகாணக்குழுவில் செயலாளனாக என்னை ஹூனானுக்கு அனுப்பும்படி சென் ரு சியூவை இசையவைத்தேன். ஆனால் பத்து நாட்கலின் பின்பு வுகானில் தலைவராக இருந்த  ராங் ஷெங் சீக்கு எதிராக ஒரு எழுச்சியை நான் ஒழுங்கு செய்வதாக  குற்றம் கூறி உடனடியாக என்னை திரும்புமாறு அவர் கட்டளையிட்டார். தற்போது கட்சியின் செயல்முறைகள் பெருங்குழப்பமாக இருந்தன. சென் ரு சியூவின் தலைமையை ஏறத்தாள ஒவ்வொருவரும் எதிர்த்தனர். அத்தோடு அவரின் சந்தர்ப்பவாத வழிமுறையையும் எதிர்த்தார்கள். வுகானில் இது சம்பந்தப்பட்ட குழுக்களீன் வீழ்ச்சிக்கு மிகவிரைவாக அவரது வீழ்ச்சிக்கு வழிகோலியது.

இந் நூலின் முந்திய பகுதிகள்


பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

புரட்சிக்கு முன்னோடி ௧

புரட்சிக்கு முன்னோடி ௨

தேசியவாத காலகட்டம் ௧

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s