தி.மு.க ஆட்சியின் நிறைவுக்காலம். பல்வேறு இலவசத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்திருக்கிறார்கள், ஆட்சியின் மீது பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு என்று ஒன்றுமில்லை, விலை வாசி உயர்வு, மின்சாரத்தட்டுப்பாடு ஆகியவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் டிசம்பரில் தேர்தலை நடத்தத் திட்டமிடுவதால் அப்போது மின் தட்டுப்பாடு ஒரு பிரச்சனையாக இருக்காது என்றும், விலைவாசி உயர்வு பிரச்சனையை பணபலம் சமாளிக்கும் என்றும், காங்கிரசுடன் கூட்டணி, பாமக சேரும் எனும் நம்பிக்கை இவற்றோடு அதிமுக விலிருந்து தொடர்ந்து தாவல்கள் நடைபெறுவது என்று எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து அடுத்தமுறையும் திமுக அணியே மீண்டும் வெல்லும் என அதன் அடிவருடிகள் தங்களின் கணக்கை விதைத்துக்கொண்டிருக்க; ஆட்சிப் பொறுப்பிலிருப்பவர்களோ கலங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நிகழ்வுகள் காட்டுகின்றன.
அண்மையில் பொதுப்பணித்துறையை கையில் வைத்திருந்த அமைச்சர் துரைமுருகன் அதிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது கேரளாவுடனான முல்லைப் பெரியாறு சிக்கலை சரியாகக் கையாளவில்லை என்பது காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அதன் மெய்யான பின்னணிகள் இப்போது அம்பலமாகியிருக்கின்றன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் வழியாக வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் நடைபெற்ற முறைகேடுகள் இப்போது வெடித்துப் பரவி வருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், அமைச்சர் பூங்கோதையும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. அரசின் ரகசியச் செயல்பாடுகள் வெளிவந்த அதில் வெளியே கசியவிட்டதாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்த லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த சங்கர் எனும் அதிகாரி, அரசின் ஊழல்களை முறைகேடுகளை சவுக்கு எனும் பெயரில் அம்பலப்படுத்தி வருகிறார். (இவர் நடத்திவரும் இணைய தளங்கள் சவுக்கு படைப்புகள், தமிழக மக்கள் உரிமைக் கழகம், இலக்கு) சில நாட்களுக்கு முன்னர் இவர் காவல்துறை உயர் அதிகாரிகளான ஜாபர் சேட், சங்கர் ஜீவால், நக்கீரன் இதழின் துணை ஆசிரியரான காமராஜ் ஆகியோருக்கு வீட்டு மனைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முறைகேடாகவழங்கியது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார். இதைக் கண்டு அதிர்ந்துபோன அதிகாரவர்க்கம், சாலையில் சென்ற ஒருவரை தாக்கி வழிப்பறி செய்ததாக பிணையில் வெளிவரமுடியாத சட்டப் பிரிவுகளில் கடந்த புதன் கிழமை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
இது மட்டுமல்ல, மதுரை ரெங்கசாமி புரத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விதிமுறைகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதை அம்பலப்படுத்திய தினபூமி நாளிதழின் ஆசிரியர் மணிமாறனையும் கைது செய்து சிறையில் அடைத்துளனர்.
இது புதியது என்றோ, அதிசயமானது என்றோ கருதிவிடமுடியாது. அதிகாரவர்க்கமும் அரசும் என்றும் மக்கள் நல நோக்கில் எதையும் செய்ததில்லை, செய்வதில்லை. செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திலும், அரசுகளின் ஒவ்வொரு அசைவிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலனே பிரதானமாய் அடங்கியிருக்கும். அதையே சுற்றி வளைத்து மக்களுக்கான திட்டங்களாய் பசப்புவார்கள். அவை மறுக்கவியலாமல் ஆதாரங்களாய் வெளிப்படும் போது எந்த வெட்கமுமின்றி எந்த வரம்புக்கும் சென்று அடக்கி ஒடுக்க முனைவார்கள். இதற்கான அண்மை எடுத்துக்காட்டாகத்தான் பதிவர் சவுக்கு சங்கரும் தினபூமி மணிமாறனும். பத்திரிக்கையாளர்களைக் கைது செய்வது முன்பே நடந்துவரும் ஒன்றுதான். ஆனால் வலைத்தளத்தில் எழுதியதற்காக கைது செய்யப்படும் முதல் ஆளாக சவுக்கு சங்கர் இருக்கக் கூடும்.
அரசு எந்திரத்தின் கோரமுகம் எனும் வகையில் மக்களிடம் எடுத்துச் செல்லும் அதேவேளை சக பதிவர் எனும் முறையிலும் சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை அனைத்து தமிழ் பதிவர்களும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.
இது குறித்து விரிவாக அறிந்துகொள்ள
பதிவர் “சவுக்கு” சங்கர் கைது !



malpractices should be condemned. Thamizhaga arasu should be take necessary actions to curb it.Instead of that it would’nt do any harm to the revealers if they reveal the realities.It is against the journalism and freedom of people.
நண்பர் கவிஞர் தணிகை,
உங்கள் கருத்துக்களை தமிழில் எழுத முயலாமே.
செங்கொடி