கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட அணுவிபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது. இதை நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதம்(!) நடைபெற்றது. இந்த மசோதாவின் உயிரோட்டம் குறித்து விவாதம் செய்வதை இடதுசாரிகள் என தம்மை அழைத்துக்கொள்வோர் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மிகக்கவனமாக தவிர்த்துக்கொண்டன. மாறாக அவர்கள் விவாதித்ததெல்லாம் தொகையை அதிகரிக்கவேண்டும் என்பன போன்ற சில்லரை விசயங்களைத்தான். இழப்பீடு மசோதவில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய திருத்தம் தேசிய நலனுக்கு … அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: ஓகஸ்ட் 2010
உதவி வேண்டி ஒரு கோரிக்கை
தோழர்களே, நண்பர்களே, கடந்த இரண்டு நாட்களாக எனது கணிணி ஐந்து நிமிடத்தில் தானாகவே அணைந்துவிடுகிறது. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. நான் நிருவியுள்ள மெக் ஆஃபி கணிணியில் வைரஸ் எதுவும் இல்லை என்றே காட்டுகிறது. வேலை செய்யும் அந்த ஐந்து நிமிட இடைவெளியில் எந்தவிதமான நிரல் பிரச்சனைகளோ, அளவு மீறிய தாமதங்களோ இன்றி சிறப்பாக இயங்குகிறது. இந்தப்பிரச்சனை குறித்த விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்திலோ, மின்னஞ்சலிலோ எனக்கு விபரம் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் சரிசெய்துவிடுவேன். … உதவி வேண்டி ஒரு கோரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆதி மனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௪ மொழியறிவு என்பது மனிதன் சமூகவயப்பட்டதன் அடையாளம். கூட்டு உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாய் ஆனபின் தன் எண்ணங்களை, அனுபவங்களை பிரிதொரு மனிதனுக்கு உணர்த்துவதற்கு, கடத்துவதற்கு கண்டுபிடித்த கருவி. ஆதி மனித இனம் தோன்றியபோதே மொழியறிவு அவனுக்கு எட்டியிருக்கவில்லை. அவனது பாதுகாப்பற்ற சூழல் இன்னொரு மனிதனிடம் தொடர்பு கொண்டே ஆகவேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு அவன் கண்டு, கற்று, வளர்த்துக்கொண்டது தான் மொழி அதாவது பேச்சு. இப்போது குரானின் ஒரு … ஆதி மனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக…..
தருமி ஐயா தொடங்கி வால் பையன் ஊடாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உமா சங்கருக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து எழுதப்படும் கண்டன இடுகைகள் அதிகரித்து வருகின்றன. ஒரே நாளின் ஒரே பதிவில் எதிர்ப்பைத் தெரிவிப்பது எனும் யோசனை நன்றாக தெரிந்ததனால் செவ்வாய் இரவுவரை காத்திருந்தேன், தருமி ஐயாவோ, வால்பையனோ எந்த பதிவையும் பரிந்துரைத்ததாக தெரியவில்லை. இன்று காலை தருமி ஐயா இட்ட நான்கு வரி பதிவு தேவையான சீற்றத்துடன் இல்லாமல் மென்மையாக இருப்பதாக படுகிறது. … உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக…..-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுதந்திரம் என்றொரு கற்பிதம்
இன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. சுதந்திரம் என்றால் என்ன? … சுதந்திரம் என்றொரு கற்பிதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
செஞ்சேனையின் வளர்ச்சி ௨
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௪ 1929 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது செஞ்சேனை வட கியாங்கினை நோக்கி நகர்ந்தது. வழி நெடுகத் தாக்குதலை மேற்கொண்டும் பல நகர்களைக் கைப்பற்றிக்கொண்டும், கோமிண்டாங் இராணுவங்களின் மீது எண்ணிலடங்காத தோல்விகளை ஏற்படுத்திக்கொண்டும் செஞ்சேனை நகர்ந்தது. நான்சாங் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய தொலைவில் இருக்கும் போது முதலாவது இராணுவப் பிரிவு மேற்குப் பக்கமாகத் திரும்பி சாங்சாலை நோக்கி முன்னேறியது. இந்தப் படை நகர்வின் போது பெங்ரே ஹுவாயின் படையணிகள் வழியில் இணைந்து … செஞ்சேனையின் வளர்ச்சி ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொலைகார “டௌ” வே வெளியேறு
போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !! போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை.. போபால் – காலம் கடந்த அநீதி அன்பார்ந்த உழைக்கும் மக்களே , போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க … கொலைகார “டௌ” வே வெளியேறு-ஐ படிப்பதைத் தொடரவும்.
தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
உங்களுக்கெல்லாம் எண்ணெய்த்தோலரைத் தெரியுமோ தெரியாதோ, அது எனக்குத்தெரியாது ஆனால் அவரைப்பற்றி பேசாமலோ, அவரைப்பார்க்காமலோ யாரும் இருக்க முடியாது, ஏன் அவர் வரலைன்னா அன்னைக்கு குழம்பு ஆகாதுன்னா பார்த்துக்குங்களேன் இந்தக்கிராமத்தில். அது என்ன எண்ணைத்தோலர்ன்னு கேக்குறீங்களா? நீங்களெல்லாம் எண்ணை எங்க போய் வாங்குவீங்க? கடையிலதானே, அங்க போய் கோல்டு வின்னர், உஷா சன் பிளவர்ன்னு கேட்டு வாங்குவீங்க, ஆனா 100 மி.லி கேட்டா கிடைக்குமா? ஆனா எங்க எண்ணெய்த் தோலர் எங்க வீட்டுக்கே வந்து எண்ணெய் கொடுப்பார். 100 … தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா-ஐ படிப்பதைத் தொடரவும்.
கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௩ பொதுவாக காலம், வெளி இரண்டும் தனித்தனியானது என அறியப்பட்டிருந்தாலும், இரண்டும் பிரிக்கவொண்ணாதபடி பிணைந்திருப்பவை. காலம் என்பதை வெளியில் இருக்கும் பருப்பொருளின்றி முற்றறிந்து கொள்ள முடியாது. அதன் படி ஒரு நாள் என்பதின் முழுமையான பொருள் பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம். ஒரு ஆண்டு என்பது சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம். இப்போது குரானின் சில வசனங்களைப் பார்க்கலாம். வேதனையை அவர்கள் அவசரமாகத் தேடுகிறார்கள். அல்லாஹ் தன் … கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா-ஐ படிப்பதைத் தொடரவும்.