உதவி வேண்டி ஒரு கோரிக்கை

தோழர்களே, நண்பர்களே,
கடந்த இரண்டு நாட்களாக எனது கணிணி ஐந்து நிமிடத்தில் தானாகவே அணைந்துவிடுகிறது. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. நான் நிருவியுள்ள மெக் ஆஃபி கணிணியில் வைரஸ் எதுவும் இல்லை என்றே காட்டுகிறது. வேலை செய்யும் அந்த ஐந்து நிமிட இடைவெளியில் எந்தவிதமான நிரல் பிரச்சனைகளோ, அளவு மீறிய தாமதங்களோ இன்றி சிறப்பாக இயங்குகிறது. இந்தப்பிரச்சனை குறித்த விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்திலோ, மின்னஞ்சலிலோ எனக்கு விபரம் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் சரிசெய்துவிடுவேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தோழமையுடன்
செங்கொடி

17 thoughts on “உதவி வேண்டி ஒரு கோரிக்கை

 1. சவுதி அரசாங்கத்தின் சதியாக இருக்குமோ என்னவோ? தூக்கி போட்டுட்டு வேற ஒன்னு வாங்கிக்கங்க தோழரே.

 2. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

  it cant be due to virus

  desktop:
  check smps(switch mode power supply)

  laptop: i faced same kind of problem before ………
  hp service changed one ic chip in my system for that problem…..better give to good service center…..
  Mcafee waste software try to put bitdefender

 3. தோழரே, RAM ல் தூசி படிந்திருக்கலாம், அதை எடுத்து ஊதி, scratch விழாமல் துடைத்து பின்னர் போட்டுப்பாருங்கள்…

  தோழமையுடன்
  கேள்விக்குறி

 4. அன்பின் செங்கொடி @

  கண்டிப்பாக உங்களின் கணனி இன்டெல் நுண்செயலி (micro processor)அடிப்படையிலானதாக இருந்தால் அதன் வெப்ப குளிர்விப்பு விசிறியானது (micro processor heat sink fan) அதன் நிலையிலிருந்து கழன்று இருக்கலாம். அதனை மறுபடியும் நன்கு அழுத்தி பொறுத்தவும்.

  அதை செய்யும் முறையை கீழேயுள்ள அசை படத்தில் காணலாம்.

  ஏஎம்டி இது போல் ஆவதில்லை. காரணம் அதன் வெப்ப குளிர்விப்பு விசிறியானது (micro processor heat sink fan) நாலாபக்கமும் இறுக்கமானதாகவே அமைக்கப்பட்டிருக்கும். எனது 20 வருட அனுபவத்தில் பெரும்பாலும் இன்டெலில் மட்டுமே இப்படி ஆகிறது. இதற்கு வினவை சொல்லி ஒரு இடுகையிட்டால் தான் அவர்களை திருந்துவார்கள்போலும் 🙂

  பிரச்சினை சரியாகவில்லை யென்றால் மறுபடியும் தொடர்புகொள்ளவும்.அல்லது உடனடி உதவிக்கு http://wiki.pkp.in நாடவும்.அங்கு டெக்கீ நண்பர்கள் கூட்டமாக உள்ளனர்.

  with care & love,

  Muhammad Ismail .H, PHD.,
  http://gnuismail.blogspot.com

 5. என்னுடைய கம்ப்யூட்டரும் கொஞ்ச நாள் இப்படி மக்கார் செய்தது. என்னுடைய டாக்டர் பார்த்துவிட்டு ஒட்டடை நிறைய சேர்ந்துவிட்டது என்று சொல்லி கம்ப்யூட்டர் பூராவையும் வேகுவம் கிளீனரை வைத்து ஒட்டடை அடித்தார். குறிப்பாக கவனிக்கவேண்டியது- புராசசருக்கு மேல் ஒரு பேஃன் இருக்கும், இதில் குப்பைகள் சேர்ந்து சரியாக வேலை செய்யாமல் இருந்தால் புராசசர் சூடாகி தானே ஆப் ஆகிவிடும். இந்த பேஃனை கழட்டி கிளீன் செய்து போட்டால் சரியாகிவிடும்.

  முயற்சி செய்யவும்.

 6. 5 நிமிஷமே உங்களுக்கு எல்லாம் அதிகம். வினவுக்கும் இந்த மாதிரி ஆப்பு விழாதா?

 7. this may be the problem with irrelevant software or virus. if u have not installed any software recently, just restore to the date when it was working good. this will solve ur pbm.

  how to restore:

  start – accessories – system tools – restore

 8. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

  யாருப்பா அது கேள்விக்குறி ஸ்கூல் பாயின் டவுசர வாதம் பன்னாமலேயே கிழிச்சு விட்டது…..

 9. வைரசால் கணினி பாதிக்கப்பட்டிருந்தால் மீள சிறந்த வழி – கணினி boot ஆகும் போது F2 வை அழுத்தினால் ‘boot options ‘ ஸ்க்ரீன் வரும். அதில் ‘safe mode ‘ தெரிவு செய்யுங்கள். Safemode -இல் boot ஆனபின், Start > Control panel > System recovery தெரிவு செய்து அதில் கணினியின் ‘program updates /installation’ நிலையை ஐந்து நாட்களுக்கு பின்னோக்கி நகர்த்தி விடுங்கள். அதற்கு பின் இன்ஸ்டால் ஆன அனைத்து ப்ரொக்ராம்களும் அழிந்து போய்விடும். ஐந்து நாட்களுக்கு முன் உங்கள் கணினி இருந்த நிலையை அடைந்து விடும். வரலாற்றில் பின்னோக்கி சென்றுவிடுவீர்கள் (காந்தி தொழிற்சாலைகளையெல்லாம் மூடி விட்டு திரும்ப ராட்டை சுற்றலாம் என்று சொன்னமாதிரி). இதனால் கடைசியாக நிறுவப்பெற்ற வைரஸ்கள் அழிக்கப்பட்டுவிடும். திரும்ப ஆன் செய்து பாருங்கள். இதை நீங்கள் செய்து கொண்டிருக்கும் போதே கணினி அணைந்து போனால், கண்டிப்பாக வேறு பிரச்சினைகள் தான்.

  கொஞ்சம் ஹார்டுவேரை நோண்டிப் பார்க்கலாம்.

  ஐந்து நிமிடத்தில் கணினி அணைந்து போன பின் மானிடர் லைட் டி. ஆர். பாலு மாதிரி ‘blink ‘ ஆகிறதா? சேதுசமுத்திரத்துக்கு வந்தது போல ‘RAM’ பிரச்சினையாக இருக்கலாம் . RAM -ஐ கழற்றி, ரப்பர் செருப்பால்…. ச்சே… ரப்பர் அழிப்பானால் RAM -இன் இருபக்கமும் அழுக்கெடுத்து திரும்ப கவனமாக மாட்டி, கணினியை ஆன் செய்யுங்கள்.

  சிலசமயங்களில் பிராசெசர் சூடாவதால் இப்படி நேரலாம். பிராசெசர் மேலுள்ள ‘heat sink fan’-ஐக் கழற்றி thermal compound (gel) -ஐ புதிதாக தடவவேண்டியிருக்கும். யாராவது மெக்கானிக்கை வைத்து செய்வது தான் சிறந்தது. அல்லது யூடியூப் உதவியை நடலாம்.

  அல்லது SMPS பிரச்சினை. மாற்ற வேண்டியிருக்கும் அல்லது ரிப்பேர் செய்யலாம்.

 10. May be too much of dust or smps problem. I too faced the same problem. First my hardward person cleared my CPU. it worked for few months then again i got same problem. He suggested to change the smps. now it is working fine

 11. “schoolboyயின் கிழிஞ்ச டவுடரின் நடுவே”
  Mr.கேள்விகுறி நீங்க டவுசருக்குள்ள எட்டி பாக்காதீங்க schoolboy பாம் போட்டுட போராரு.
  அன்புள்ள தோழர் செங்கொடிக்கு உங்கள் கணினிக்கு ஏற்பட்டதுபோல் எங்கள் அலுவலகத்திலுள்ள கணினியிலும்(பழையது என்பதால்) ஏற்பட்டது உங்களுடைய கணினி பழமையானதென்றால் மாற்றுவதே உங்களுக்கு சிறந்தது.

 12. தோழரே! இந்தப்பிரச்சினை மென்பொருள் மற்றும் வன்பொருளினால் ஏற்ப்படக்கூடியதே. ஆனாலும் இரண்டிற்குமும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

  கனணியை நீங்கள் அணைக்கும் போது அது வழமையாக அணைவது போல் அது அணைகின்றது என்றால் இது கெடு நோக்குள்ள(malicious) மென்பொருளே. இவற்றை சில இலவச வைரஸ்-நீக்கிகள் பெரிதும் நீக்காது எனவே சிறந்த வைரஸ்-நீக்கிகளை பாவித்து நீக்க முயற்சி செய்யவும்.
  1. BITDEFENDER
  2. KASPERSKY ANTI-VIRUS(KAV) or KASPERSKY INTERNET SECURITY (KIS)

  போன்றவை சிறந்ததே!

  மின்சாரம் தடைப்படுவது போன்று அணைந்தால் அது வன்பொருள் பிரச்சினையாக கூட இருக்க முடியும். இதற்கு நிவர்த்தி கூரவேண்டுமெனில் போதிய அளவு தகவகள் வேண்டும் அதைவிட சிறந்தது கனணி திருத்துபவர்களிடம் கொடுத்து திருத்திக் கொள்வதும் நலதே.

  நிச்சாயமாக வன்பொருள் பிரச்சினை இல்லை என்றால் கனணியின் முக்கிய கோப்புக்களை பாதுகாப்பபுப் பன்னிவிட்டு (BACKUP) உங்களின் இயங்குதளத்ததை (OPERATING SYSTEM) மீள்-நிறுவுதல் சிறந்ததே. ஏன் எனில் FUD (Fully Undetected)என அழைக்கப்படக்கூடிய கெடு நொக்குள்ள மென் பொருகள் இணையத்தை உலாவும் போது தன்னிச்சையாகவே கனணியில் பரிவிறக்கம் செய்து இயங்குகின்றது மற்றும் இதன் இயங்குமிடம் போன்றவற்றை அறிவது சற்று சிரமமே. எனவே இயங்குதளத்தை மீள்-நிறுவுவதும் சிறந்ததே.

 13. நண்பர் செங்கொடிக்கு,

  லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பை நான்கு வருடங்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யவேண்டும்.
  சமீபத்திய கம்ப்யூட்டர்களில் ப்ராஸஸர் சிப் அதிகமாக சூடானால் தானாக கம்ப்யூட்டர் அணைந்துவிடுவது போல வடிவமைத்திருக்கிறார்கள். ஆகையால், உங்கள் ப்ராஸஸர் விரைவிலேயே சூடாகி விடுகிறது என்று நினைக்கிறேன்.
  இவ்வாறு சூடாவது அந்த ப்ராஸஸர் அல்லது மெமரி ராமுக்கு காற்றோட்டம் இல்லாமல் அடைந்து போவதால் நடக்கலாம்.

  காற்றோட்டமாக இருக்க, அந்த ப்ராஸஸருக்கு அருகில் ஒரு பேன் இருக்கும். அதில் குப்பை அடைந்து மூடியிர்க்கும். அதனை ஒரு டூப் பிரஷ் கொண்டு சுத்தம் செய்து விடுங்கள். மற்றபடி முடிந்தால் கம்ப்யூட்டரை திரந்து நன்றாக ஹேர் டிரையர் மூலம் தூசு தும்புகளை நீக்குங்கள். இப்போது சரியாக இருக்கும்.

 14. நான் நினைக்கின்றேன் நண்பர்கள் பலரிடம் புரோஸஸர் பற்றி பிழையான கருத்துக்கள் நிலவுகின்றது என்று. புரோஸஸரின் அதிக சூட்டினால் கனணி அணையுமாயின் திரும்பவும் கனணியை இயக்க முட்படும் போது அது இயங்க மறுக்கும் ஏனேனில் புரோஸஸர் ஆனது அதிக சூட்டினால் அணையும் போது அது AUTO SHUTDOWN என்ற நிலையை அடையும். இதற்காக நீங்கள் உங்கள் கனணியின் மின்சாரத்தை முற்றாக துண்டித்துவிட்டு சிறிது நேரத்தின் பின்னர் இயக்கும் போது அது இயங்கும்.

  பல கனணிகளில் புரோஸஸர் AUTO SHUTDOWN ஆனால் நீங்கள் மீள் இயக்கம் பன்னும் போது அது புரோஸஸர் SHUTDOWN ஆனா விடயத்தை தெரிவிக்கும்.

 15. தோழர்களே, நண்பர்களே,

  பிரச்சனை ஏதுமின்றி கணிணி இயங்குகிறது ஆனால் விரைவில் அணைந்துவிடுகிறது, எனவே இது நாமே சரிசெய்துவிடக்கூடிய சிறிய பிரச்சனையாக இருக்கும் என நினைத்துத்தான் உங்களிடம் உதவிகோரினேன். ஆனால் நீங்கள் தந்த பின்னூட்டங்களை கண்டு மலைப்புதான் வந்தது. ஹார்டுவேர் குறித்து ஒன்றும் தெரியாது என்பதால் தகுந்த இடத்தில் கொடுத்து சரிசெய்வதுதான் பொருத்தமானது எனசெயல்பட்டு இன்று பழைய இயக்கத்திற்கு எனது கணிணி மீண்டிருக்கிறது. நீங்கள் ஊகித்திருந்தது போலவே ப்ராஸஸர் விசிரி ஊள்ளிட்ட சிலவற்றை மாற்றியதாக பழுதுநீக்கியவர் கூறினார். அத்தோடு உங்கள் கணிணி வயோதிகத்தில் தள்ளாடுகிறது மரணிக்குமுன் மாறிக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையையும் தந்திருக்கிறார். எனவே அதற்கான முனைப்பில் இருக்கிறேன்.

  பரிவுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து உதவிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. மின்னஞ்சலில் வைரஸ்களை சோதித்துநீக்கும் நிரல்கோப்புகளை அனுப்பிவைத்த நண்பர் மது அவர்களுக்கும் மிகுந்த நன்றி.

  தோழமையுடன்
  செங்கொடி

 16. If your operating system (windows) may be a duplicate one. manufacturar found u r the victim. you might keep the automatic update in on position.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s