ஆரியவதியும் சில ஆணிகளும்


நடப்பு வாரத்தில் மிகவும் அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வாக ஆரியவதி உலகெங்கும் பேசப்பட்டாள். சௌதியில் பணிபுரியச் செல்லும் பெண்களுக்கு நேரும் கொடுமைகளும், கொடூரங்களும் மனித உரிமை மீறல்களாக உலக அரங்கில் தொடர்ந்து எழுப்பபட்டே வந்திருக்கிறது. அடித்தல் உதைத்தல் காம இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவைகளிடையே உடலில் ஆணியை அடித்து ஏற்றுதல் என்பது மக்களிடையே ஒரு கொந்தளிப்பான மனோநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடுதல் போன்ற சின்னச்சின்ன தவறுகளுக்கான தண்டனையாக ஆணிகள் உடலில் ஏற்றப்பட்டிருக்கின்றன என்பதை அறியும் போது அந்த சௌதியினர் (ஐந்து குழந்தைகளுக்கு பெற்றோர்) மனித உருவில் மிருகமாக உலவியிருக்கின்றனர் என்பதை உணரமுடிகிறது.

சௌதி அரசு முதலில் இதை மறுத்தது. அவர் உடலில் ஆணிகளும் ஊசிகளும் இருந்திருந்தால் விமானநிலையத்தில் மெட்டல் டிடெக்டரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் எனும் வாதத்தை வைத்தது. ஆனால் ஆரியவதி மெட்டல் டிடெக்டர் சப்தமெழுப்பியதாகவும் அதைக்கேட்டு யாரும் விசாரிக்கவோ கண்டுகொள்ளவோ இல்லை என்று பிபிசிக்கு அளித்த செவியில் குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பில் சௌதி தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டபின் அந்த‌ சௌதி தம்பதியர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருகின்றன. ஆனாலும் மேல்விபரங்கள் எதுவும் இல்லை. 31/08/2010 அரப் நியூஸ் நாளிதழ், “பணிப்பெண்ணின் உடலில் ஆணி அடித்தது உண்மையாயின் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே, அதேநேரம் அந்தப் பெண் பொருளாதார பலன் கிடைக்கும் எனும் எண்ணத்தில் தானாகவே இதைச் செய்திருந்தால் அந்தப் பெண்ணும் தண்டனைக்கு உரியவளே” என்றும், “உலகில் வாழும் எவருக்கும் சவுதிகள் தாழ்ந்தவர்களும் அல்ல, உயர்ந்தவர்களும் அல்ல. துரதிஷ்டமாக நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் சௌதியின் நற்பெயருக்கு கள‌ங்கம் ஏற்படுத்துவதாக இருப்பதால் விரைந்து இவ்வழ‌க்கை முடிக்கவேண்டும்” என்று தனது தலையங்கத்தில் சௌதி அரசுக்கு அறிவுரை கூறியிருக்கிறது.

ஆரியவதிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிராக நமது குரலை பதிவு செய்யும் இந்நேரத்தில் இன்னொன்றையும் பதிவு செய்வது தேவையாக இருக்கிறது. ஆரியவதி விவகாரத்தை சிங்கள் ஊடகங்கள் ஒரு அரசியல் வடிவமாக முன்னெடுக்கின்றன. சௌதி தூதரகத்திடம் தனது கண்டனங்களை பதிவு செய்வது, இலங்கைப் பெண்கள் சௌதிக்கு வேலைக்காக செல்வதை தடை செய்யவிருப்பதாக செய்தி பரப்புவது என்று இலங்கை அரசுடன் இணைந்து உலக அரங்கில் முந்தள்ளுவதன் மூலம் இலங்கையில் இன்றளவும் நிகழ்ந்துவரும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் வதைகளையும் மறைக்க முயல்கிறது. ஒரு ஆரியவதியல்ல பல்லாயிரம் ஆரியவதிகள் இலங்கையின் இனவழிப்பினால் நடைப்பிணங்களாக உலவவிடப்பட்டுள்ள‌னர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதாக இலங்கை அரசின் புள்ளிவிபரங்களே தெரிவிக்கின்றன. வயதான பெற்றோர்கள் மகன்களை முட்கம்பி வேலிகளுக்குள் தேடிக்கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் நிலங்கள் சிங்களவர்களால் அரசின் ஆசியுடன் அபகரிக்கப்படுகின்றன. புத்தர் பொதுத் தெய்வமாக முன்னிருத்தப்படுகிறார். இவைகளையெல்லாம் பேசமறுக்கும் எவருக்கும் ஆரியவதியைப் பற்றி பேசும் தகுதியில்லை அல்லவா?


ஆரியவதியின் ஆணிகள் அத்துடன் முடிந்துவிடுபவையா? ஆரியவதிகளின் உடலுக்குள் சமூகம் அடித்து இறக்கியிருக்கும் ஆணிகளை என்ன செய்வது? இன்னும் கூட சௌதியில் ஆயிரக்கணக்கான‌ பெண்கள் உறங்கக் கூட நேரமின்றி நித்தமும் வேலை எனும் ஆணியால் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன சிகிச்சை செய்து ஆணிகளை நீக்குவது?

இருவரும் வேலை செய்தால்தான் இக்காலத்தில் குடும்பத்தை ஓட்டமுடியும் என்று பெண்களை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளையும் அவளைமட்டுமே சுமக்கவைப்பது அவள்மீது அடிக்கப்பட்ட ஆணியல்லவா?

தான் விரும்பியவனை மணந்தாள் என்பதற்காக குடும்பத்தோடு கொலை செய்துவிட்டு பணத்தை இறைத்து சாதிய இயல்பு என்று தீர்ப்பு வாங்குவது அவள்மீது அடிக்கப்பட்ட ஆணியல்லவா?

பெற்ற மகளையே கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டு  நடத்தை கெட்டவள் என்று கூசாமல் கூறுவது அவள்மீது அடிக்கப்பட்ட ஆணியல்லவா?

திருமணம் செய்துகொள்கிறேன் என ஏமாற்றி பூவரசிகளை வெளித்தள்ளிவிட்டு என் கணவர் நல்லவர் என்பது அவள்மீது அடிக்கப்பட்ட ஆணியல்லவா?

உலகெங்கும் பெண்களுக்கு சுதந்திரம் இருப்பதாக கூறிக்கொண்டே அவர்களை பாலியல் பண்டமாக நுகர பயன்படுத்தும், அதையே அவர்களது சுதந்திரமாக கற்பித்து வைத்திருக்கும் ஆணியை எப்படி பிடுங்கி எறிவது?

இன்னும் பணிபுரியும் இடங்களில், வாழும் வீடுகளில், பொதுவெளிகளில் என்று எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் பெண்கள் மீது ஆணிகள் இறக்கப்பட்டிருக்கின்றன. இறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவைகளை எதைக்கொண்டு அகற்றுவது?

சமூகத்தின் மீது அழுத்தமாக, ஆழமாக அறையப்பட்டிருக்கும் ஆணாதிக்கம், முதலாளியம் எனும் ஆணிகள் அகற்றப்படும்போது மட்டுமே ஏனைய ஆணிகள் இற்று வீழும். வெறுமனே ஆரியவதிகளின் கதைகளை பேசிவிட்டு கலைந்துவிடுவதில் அல்ல, பெண் என்பதன் பொருளை அதன் முழுமையான பொருளில் புரிந்து கொள்ள முயல்வதும், களத்தில் செயல்படுத்துவதுமே அதற்கான தொடக்கம்.

9 thoughts on “ஆரியவதியும் சில ஆணிகளும்

 1. //அதேநேரம் அந்தப் பெண் பொருளாதார பலன் கிடைக்கும் எனும் எண்ணத்தில் தானாகவே இதைச் செய்திருந்தால் அந்தப் பெண்ணும் தண்டனைக்கு உரியவளே//
  இதை எழுதியவர் ஆணி அடித்த மிருகத்தைவிட மோசமானவராக இருப்பார் போல இருக்கே.

 2. Robin, மேல் செப்டம்பர்2, 2010 இல் 11:51 AM சொன்னார்

  ///////////””””””””””””””””””//அதேநேரம் அந்தப் பெண் பொருளாதார பலன் கிடைக்கும் எனும் எண்ணத்தில் தானாகவே இதைச் செய்திருந்தால் அந்தப் பெண்ணும் தண்டனைக்கு உரியவளே//
  இதை எழுதியவர் ஆணி அடித்த மிருகத்தைவிட மோசமானவராக இருப்பார் போல இருக்கே.”””””””””””””””””””””””””””””””//////////
  “பூமியில் ஒருவரும் நல்லவரில்லையே பிதாவைத்தவிர” என்று இயேசு சொன்னால் மட்டும் ஏற்றுகொள்ளும் ராபின் அவர்களே இதை மட்டும் வசதியாக மறுப்பது ஏனோ.எல்லா நிலையிலிருந்தும் ஆராயவேண்டும் அதனால் இந்த வரி தவராக படவில்லை.

 3. //“பூமியில் ஒருவரும் நல்லவரில்லையே பிதாவைத்தவிர” என்று இயேசு சொன்னால் மட்டும் ஏற்றுகொள்ளும் ராபின் அவர்களே இதை மட்டும் வசதியாக மறுப்பது ஏனோ.எல்லா நிலையிலிருந்தும் ஆராயவேண்டும் அதனால் இந்த வரி தவராக படவில்லை.// இதில் லெனின் ஐயா மட்டும் விதிவிலக்கு, ரொம்ப ரொம்ப நல்லவரு 🙂

 4. நான் நல்லவனா கெட்டவனா என்பது முக்கியமல்ல
  //அதேநேரம் அந்தப் பெண் பொருளாதார பலன் கிடைக்கும் எனும் எண்ணத்தில் தானாகவே இதைச் செய்திருந்தால் அந்தப் பெண்ணும் தண்டனைக்கு உரியவளே//
  இந்த வார்த்தையில் என்ன தவறை க(கா)ண்டுபிடித்தீர்கள்.இதற்குமுன்னிருக்கும் வாக்கியத்தை நீங்கள் பார்கவில்லையா?(” “பணிப்பெண்ணின் உடலில் ஆணி அடித்தது உண்மையாயின் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே”)

 5. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

  //இதில் லெனின் ஐயா மட்டும் விதிவிலக்கு, ரொம்ப ரொம்ப நல்லவரு//

  இதுல காமெடி என்னன்னா ராபின் அவர்கள் லெனினை கலாய்கிரேன் என்று என்னி அவருக்கு தெரியாமலேயே ஜீஸஸ்(ஸல்) அவர்களுடைய வார்த்தையை கலாய்த்திருக்கிறார்(பொய்பிக்கிறார்-பூமியில் ஒருவரும் நல்லவரில்லையே பிதாவைத்தவிர)….வார்த்தையைய் பார்த்து உபயோகப்படுத்துங்கள் ராபின் அவர்களே 😦

 6. லெனின்,
  எந்த பெண்ணாவது பணம் கிடைக்கவேண்டும் என்பதற்காக இத்தனை ஆணிகளை தன் உடலில் குத்திக்கொள்வாளா? ஒரு பெண் இந்த அளவுக்கு கொடுமைப் படுத்தப்பட்டிருக்கும்போது ஒருவருக்கு இந்த மாதிரி சந்தேகம் வருகிறது என்றால் அவரை என்னவென்று சொல்வது?

  செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍–schoolboy,, (இப்படி ஒரு பெயரா) ஜீஸசை முகமதுவுக்கு இணையாக கருதும் உங்களை விட யாரும் அவரை கேவலப்படுத்திவிடமுடியாது.

 7. ///////////ஜீஸசை முகமதுவுக்கு இணையாக கருதும் உங்களை விட யாரும் அவரை கேவலப்படுத்திவிடமுடியாது.//////////////////////
  இந்த கட்டுரை திசைதிருப்பலாக மாறிவிட வேண்டாம்.
  /////////////////எந்த பெண்ணாவது பணம் கிடைக்கவேண்டும் என்பதற்காக இத்தனை ஆணிகளை தன் உடலில் குத்திக்கொள்வாளா?/////////////////////////
  எந்த காலத்தில் இருக்கின்றீர்கள் பணத்துக்காக மனிதர்கள் எல்லா நிலையையும் கையிலெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.(அதற்காக இந்த அம்மா இந்த நிலையைத்தான் கையிலெடுத்தார்கள் என்று கட்டுரையாளர் உறுதியாக சொல்லவில்லை என்பதை அந்த வார்தையை படிக்கும்போதே தெரியும்).ஒரு பிரச்சனையை எல்லா கோணத்திலும் பார்த்தால்தான் உண்மை புலப்படும்.

 8. Lankan maid’s torture charges baseless: Saudi officials

  By MD RASOOLDEEN | ARAB NEWS
  Published: Sep 2, 2010 00:22 Updated: Sep 2, 2010 06:54

  Saudi officials have refuted claims that a sponsor in Riyadh hammered nails into the body of his Sri Lankan housemaid as punishment, saying the allegations are baseless.

  RIYADH: Saudi officials have refuted claims that a sponsor in Riyadh hammered nails into the body of his Sri Lankan housemaid as punishment.

  “These allegations against the Saudi employer are baseless and the whole episode looks like one big drama,” said Saad Al-Baddah, chairman of the Saudi Arabian National Recruitment Committee (SANARCOM), which is responsible for the recruitment and management of foreign workers in the Kingdom.

  He told Arab News on Wednesday that 49-year-old L.T. Ariyawathi has signed a letter acknowledging her last salary and said that she did not experience any problems with her sponsor before she left Saudi Arabia. Al-Baddah described the torture allegations as a figment of the maid’s imagination, adding that Saudi authorities are wondering how the nails and needles were embedded into her body.

  The maid did not go to the doctors straight from the airport, only after a few days, Al Baddah said. He added that the Saudi sponsor, who is over 60, suffers from heart conditions. “The sponsor’s doctors have advised him to do only 25 percent of his normal work because of his weak heart,” he said. “How can a person in such poor health be able to do a strenuous activity like hammer nails into a woman’s body?” He added that a woman with so many nails inside her could not survive for weeks.

  Al-Baddah met chairman of the Sri Lanka Bureau of Foreign Employment (SLFBE) Kingsley Ranawake at his office on Tuesday and pledged all cooperation in any investigation into the maid’s case.

  The Saudi Embassy in Colombo also issued a statement Wednesday casting doubt on Ariyawathi’s claims. “The important factor is that this housemaid cannot pass security checks and sophisticated machines at Riyadh and Colombo International Airports with these metal things inside her body,” an embassy spokesman said.

  He added that the Saudi ambassador was giving his personal attention to the matter and constantly being updated by officials from Sri Lanka’s External Affairs Ministry.

  Meanwhile, Arab News has learned that the Sri Lankan Ambassador Ahmed A. Jawad has submitted an official memo on Wednesday to a senior Saudi Foreign Ministry official attached to the consular division. Sources say that the letter was handed over to the ministry on behalf of the Sri Lankan government.

  The Sri Lankan Embassy received the medical report of the housemaid on Saturday from SLBFE and it is waiting for approval from its government before presenting the document to the Saudi Foreign Ministry.

  Ranawake, who is currently in Riyadh on a goodwill mission, was unavailable for comment.

 9. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

  ///////////ஜீஸசை முகமதுவுக்கு இணையாக கருதும் உங்களை விட யாரும் அவரை கேவலப்படுத்திவிடமுடியாது.//////////////////////
  நான் என்ன சொல்லிவிட்டேன் என்று இவர் இப்படி உளருகிறார்… இவர் என்ன உளருகிறார் என்று தாங்களாவது சொல்ல முடியுமா? முடிந்தால் என் மின் அஞ்லுக்கு அனுப்பவும்…aneeshabu@gmail.com

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s