காஷ்மீரில் கல்லெறிந்தால் தில்லியில் விழுமா?


கடந்த சில மாதங்களாக ‘காஷ்மீரில் வன்முறை’ ‘வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழப்பு’ என்று செய்தி ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன. இராணுவத்தை எதிர்த்து காஷ்மீரிகள் கல்லெறியும் காணொளிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு அதை பயங்கரவாதச் செயல் போல் சித்தரிக்கின்றன. யார் வன்முறையாளர்கள்? யார் எதிர்கொள்பவர்கள்? என்பதற்கு தேசியம் எனும் சொல்லே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காஷ்மீரில் எறியப்படும் கற்கள் இவர்களின் தேசியக் கேடயத்தையும் துளைத்துக்கொண்டு செல்லும் வீரியத்தை நாளுக்கு நாள் பெற்றுவருகிறது.

காஷ்மீர் விவகரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, இந்தியாவுக்கு சொந்தமானதை பாகிஸ்தானும் சீனாவும் அபகரித்து வைத்துக்கொண்டுள்ளன. இந்தியாவை துண்டாட நினைக்கும் சக்திகள் இப்படித்தான் தேசியப்பார்வைக்காரர்களின் கோணம் இருக்கிறது. ஆனால் உண்மை இதற்கு மாறாக இருக்கிறது. காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான், சீனா எனும் மூன்று நாடுகளிலும் பிரிக்கப்பட்டுக் கிடக்கிறது. இதில் பெரும்பகுதி நிலத்தை வைத்திருக்கும் இந்தியா ஏனையவை தனக்கே சொந்தம் என்று கருதுகிறது. காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமா? பாகிஸ்தானுக்கா? என்பதைவிட காஷ்மீரிகளுக்கு சொந்தம் என்பதை யாரும் உணரத் தயாராக இல்லை. காஷ்மீரிகளை ஒதுக்கிவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

1947ல் காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது, காஷ்மீரிகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்றுவரை அந்த வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. மாறாக தொடர்ந்து தேர்தல் என்ற பெயரில் முறைகேடுகளின் மூலம் தில்லியின் பொம்மைகள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டனர். 1987ல் காங்கிரசுடன் கூட்டு வைத்திருந்த தேசிய மாநாட்டுக்கட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வெல்லும் நிலையிலிருந்த, காஷ்மீரின் பல அமைப்புகள் இணைந்த எம்யூஎப் எனும் கூட்டணி ஓரிரு இடங்களையே வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதுதான் காஷ்மீர் பிரச்சனையை ஊதிவிட்டு ஆயுதப் போராட்டமாக உருவெடுக்க வழி செய்தது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பாகிஸ்தானும் களத்தில் குதித்தது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளையும், வாக்கெடுப்பு நடத்தப்படும் என தான் அளித்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்ட இந்தியா இந்தப் போராட்டங்களைப் பயன்படுத்தி காஷ்மீரில் இராணுவத்தைக் குவித்தது.

இந்திய இராணுவம் காஷ்மீரில் செய்தது, செய்துகொண்டிருப்பது என்ன? தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பதற்காக இராணுவம் போராடிக்கொண்டிருப்பதாக அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இந்தப் புள்ளிவிபரங்களை கொஞ்சம் உற்று நோக்கலாம். காஷ்மீரின் போலீஸ்படையைத் தவிர்த்து இராணுவத்தினர் மட்டும் 5 லட்சம் பேர் காஷ்மீரில் நிலை கொண்டிருக்கிறார்கள், அதாவது இருபது காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் எனும் அள‌வில் இராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70000க்கும் அதிகமான காஷ்மீரிகள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். விசாரணை என்ற பெயரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் 8000 பேர் எந்தவித அடையாளமும் இன்றி ‘காணாமல்’ போய்விட்டனர். அண்மையில் ஷோபியானைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு ஆற்றில் வீசி எறியப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம், இதுபோல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கொன்றுமில்லை. இப்படி ஆயுதங்களின் முனையில் தங்களின் வாழ்வைச் சிதைத்த இராணுவத்திற்கு எதிராக போராடாமல், காஷ்மீரிகள் சினிமா பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறதா?

தொன்னூறுகளின் தொடக்கத்தில் காஷ்மீரில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் போது இந்தியாவின் குரல் உலக‌ அரங்கில் எடுபட்டது. காரணம், அரசை எதிர்த்துபோராடுபவர்கள் பயங்கர‌வாதிகள் எனும் உலகின், இந்தியாவின் கருத்துக்கு வலுசேர்ப்பது போல் குண்டுவெடிப்புகள் காட்டப்பட்டன. ஆனால் கடந்த‌ சில மாதங்களாக நடைபெற்றுவரும் கல்லெறியும் போராட்டம், உலக அரங்கில் போராளிகளை பயங்கரவாதிகளாக காட்டமுடியாமல் திணறுகிறது இந்திய அரசு, அதேநேரம் இப்போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது. ஏனென்றால் இந்த கல்லெறி போராட்டம் நீண்டால், பலகாலமாக இந்தியா நடத்திவரும் ‘வெளியிலிருந்து வரும் தீவிரவாதத்திற்கு காஷ்மீர் இலக்காகிறது’ எனும் நாடகத்தை இனிமேலும் ஓட்டமுடியாமல் போகும். ஆகவே தான் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தேனும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தாகவேண்டும் எனும் மனோநிலைக்கு இந்தியா இறங்கி வந்திருக்கிறது.


முதல்கட்டமாக ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரங்களை குறிப்பிட்ட சில பகுதிகளில் விலக்குவது குறித்து அரசு ஆலோசிப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. அப்படியே விலக்கிக்கொள்வது என்று முடிவெடுத்து அறிவித்தாலும்கூட நடைமுறையில் அதை செயல்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அதற்குள்ளாகவே எதிர்க்கட்சிகளும், காவி வானரங்களும் குதிக்கத்தொடங்கிவிட்டன. முதல்வரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பது தொடங்கி, இராணுவத்தின் அதிகாரத்தைக் குறைத்தால் அது நாட்டுக்கே அச்சுறுத்தலாகிவிடும் என்பதுவரை அவைகளின் கூச்சல்கள். இது உகந்த நேரமல்ல என்றால் கல்லெறி போராட்டத்திற்கு முன்பு சிலகாலம் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் சற்று மந்தநிலை காணப்பட்டதே, அப்போது இராணுவத்தின் வரம்பற்ற அதிகாரத்தை குறைப்பது குறித்து பேசாமல் மௌனம் காத்தது ஏன்?

காஷ்மீர் பிரச்சனை என்பது ஆளும்கட்சிகளுக்கு (எந்தக் கட்சியாக இருந்தாலும்) இந்திய தரகு, பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்கான‌ பிராந்திய ஆதிக்கத்திற்காக ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை நியாயப்படுத்த உதவும் ஒரு கருவி. எதிர்க்கட்சிகளுக்கு (எந்தக் கட்சியாக இருந்தாலும்) அடுத்த ஆட்சிக்காக ஓட்டுப் பொறுக்கவும், பிழைப்புவாத அரசியல் நடத்தவுமான கருவி. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்கும் பலன் தரக்கூடிய காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்த காரியவாதிகள் முன்வருவார்கள் என எதிர்பார்க்க முடியுமா?

துப்பாக்கி ரவைகளுக்கு எதிராக கல்லெறியும் போராட்டம் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. காந்’தீய’வழியில் இது அகிம்சை போராட்டமல்ல, வெடிகுண்டு என அலறிக்கொண்டே காஷ்மீரிகளின் வாழ்வை இரக்கமின்றித் தகர்க்க இது பயங்கரவாதமுமல்ல. அவர்கள் எறியும் கல் யாரையும் கொல்வதில்லை, ஆனாலும் அதிபயங்கர ஆயுதம் தரித்திருப்போரை கிலியடையச் செய்திருக்கிறது. தொடரவேண்டும், காஷ்மீரில் எறியப்படும் அந்தக் கல் தில்லியின் கதவுகளை நொறுக்கவேண்டும். அவர்களின் உரிமை வெல்லப்படும் வரை அந்தக் கற்களின் உந்துவிசை ஓயாது, ஓய்ந்துவிடவும் கூடாது.

16 Comments Add yours

 1. கும்மி சொல்கிறார்:

  பாராளுமன்றத்தில் நேருவின் உரை – 1952, August 7.

  Let me say clearly that we accept the basic proposition that the future of Kashmir is going to be decided finally by the goodwill and pleasure of her people. The goodwill and pleasure of this Parliament is of no importance in this matter, not because this Parliament does not have the strength to decide the question of Kashmir but because any kind of imposition would be against the principles that this Parliament holds. Kashmir is very close to our minds and hearts and if by some decree or adverse fortune, ceases to be a part of India, it will be a wrench and a pain and torment for us. If, however, the people of Kashmir do not wish to remain with us, let them go by all means. We will not keep them against their will, however painful it may be to us. I want to stress that it is only the people of Kashmir who can decide the future of Kashmir. It is not that we have merely said that to the United Nations and to the people of Kashmir, it is our conviction and one that is borne out by the policy that we have pursued, not only in Kashmir but everywhere. Though these five years have meant a lot of trouble and expense and in spite of all we have done, we would willingly leave if it was made clear to us that the people of Kashmir wanted us to go. However sad we may feel about leaving we are not going to stay against the wishes of the people. We are not going to impose ourselves on them on the point of the bayonet

 2. முகம்மது ஷாஃபி சொல்கிறார்:

  என்னமோ எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம்மாதிரி குர் ஆன்ல அங்க அப்படி இருக்கு இங்க இப்படி இருக்குன்னு அறிவாளி வேசம் போடுறது. அத சமாளிக்கிறதுக்கு காஸ்மீர் முஸ்லீம்களுக்கு சப்போர்ட் பண்றது.

  வெக்கமா இல்ல, இதுக்கு வேற எதாவது செய்யலாமே

 3. Madhu சொல்கிறார்:

  முகம்மது ஷாஃபி, எல்லாவற்றையும் அரைகுறை அறிவோடு மத கண் கொண்டு பார்த்தால் இப்படிதான் தெரியும்.

 4. முகம்மது ஷாஃபி சொல்கிறார்:

  தோ வந்துட்டார்பா முழுசு

  பேர் மட்டுமா இல்லை குடிக்கிறதும் அதுதானா. போங்கப்பா போயி எலுமிச்சம்பழத்த தலையில தேச்சு குளிங்க‌

 5. syed ali சொல்கிறார்:

  dear shafi,

  cool,please dont mix two different matters.

  thanks,

 6. syed ali சொல்கிறார்:

  dear shafi,

  assalamu alaikum,

  Please try to give explanations to him.try to avoid this type of habits.it is very ugly. we are mohamed’s followers.so please dont act like communist,rss etc….

 7. கலை சொல்கிறார்:

  நல்ல கட்டுரை.

  சௌதிகளுக்காக குரல் கொடுத்த சகோதரர்கள் காஷ்மீரிகளுக்காக குரல் கொடுக்காதது ஏன் என்றுதான் புரியவில்லை

 8. Madhu சொல்கிறார்:

  ஒரு வேளை குர்ரானில் அனுமதிக்கபடவில்லையோ என்னவோ..

 9. லெனின் சொல்கிறார்:

  பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதனுடைய வலி தெரியும்.காஷ்மீரிகள் பாதிக்கப்பட்டவர்கள் அதனால்தான் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென போராடுகிறார்கள்.இந்திய அரசுக்கும்,பாகிஸ்தான் அரசுக்கும் மனசாட்சியென்றொன்றிருந்தால் அவர்களுக்கு சுதந்திரம் அளித்திருப்பார்கள்.(இங்கேயும் அங்கேயும்தான் மனசாட்சிகளற்ற அரசியல்வாதிகள் இருக்கிறார்களே)

 10. syed ali சொல்கிறார்:

  Dear Madhu,

  Youtr above statement looks like senkodi articles about islam.because he has confusing mind.your question also like that. but i understand one think you and senkodi did not read quran.

 11. shahul சொல்கிறார்:

  Indian government should respect the feelings of kashmiris….but congress never understand the peoples problemd…..

 12. லெனின் சொல்கிறார்:

  “””””””””””ஒரு வேளை குர்ரானில் அனுமதிக்கபடவில்லையோ என்னவோ”””””””””””””
  இது இஸ்லாத்தின் மீதான குரோதத்தின் வெளிப்பாடாகவே கருதுகிறேன்.

 13. ஹைதர் அலி சொல்கிறார்:

  மது என்கிற மார்க்ஸிய மத வெறிப்பிடித்த நாய்க்கி
  `/////அறிவியல் கருத்துகள் வேண்டும் என்றால் அறிவியல் நூலை படியுங்கள். மத நூல்களில் அறிவியலை தேடுவது, மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது’ என்று பெரியாரே இதுபோன்ற மோசடி அறிஞர்களின் கருத்துகளை கண்டித்திருக்கிறார்.
  ஆர்.எம். வீரப்பன் என்ற ‘விஞ்ஞானியின்’ ஆலோசனையை கேட்டு நீங்கள் மலத்தில் அரிசி பொறுக்குவது என்றால் போய் பொறுக்குங்கள். அதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.`என்று எழுதியருந்தேன்.
  இது அப்படியே குர்ஆனில் அறிவியல் தேடுபவர்களுக்கும் பொருந்தும்.////// குர்ஆன இவன் மலமுன்னு சொல்லுவான் நம்ம கேட்டுகிட்டு அப்புடியிலாம் சொல்லதீக நீங்க நல்லவுக இப்புடியிலாம் பின்னூட்டம் போட்டால் இவனுகளுக்கு ஒரைக்காது மஞ்சல இருக்குறதால்லாம் மலமுன்னு நெனைக்கிற மார்க்ஸிய பன்னிகளை அவருகளுடைய மெழியில்தான் எதிர்கொள்ள வேண்டும் இதனை சகோதரர்கள் லெனின் மற்றும் syad ali போன்றவர்கள் என்னை போல் விரைவில் விளங்கி கொள்வர்கள்

 14. Madhu சொல்கிறார்:

  மதம் மனிதனை மூடனாக்கிவிடும் என்பதற்கு ஹைதர் அலியின் பதிலே சான்று. அறிவியல் எதையாவது கண்டுபிடித்தால் அதை வைத்து கொண்டு,ஆனால் அறிவியலையே மறுத்து பேசி கொண்டு இது குர்ரானில் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது 1200 வருடங்களுக்கு முன்னரே என்று கதை அளந்து மதத்தை பரப்புவதற்கு அறிவியலை துணைக்கழைக்கும் மூடர்களை எப்படி அழைக்கலாம்..?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s