இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 2

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 2


ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்?

ரஷ்ய‌ ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது,  65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன்,  அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.  5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ள‌வர்களில் 36 சதவீதம் பேர் ஸ்டாலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

மறுபுறம் லெனின், ஸ்டாலின் பற்றிய சரியான மதிப்பீடுகள், உலகளவில் உருவாகின்றது. மார்க்சியமே உலகை மாற்றும் ஒரே தத்துவமாக, தலைநிமிர்ந்து வருகின்றது. இதை தகர்க்க ஸ்டாலின் மரணமடைந்து  50 வது ஆண்டில் உலகெங்கும் மீண்டும் பெரியளவில் அரசியலற்ற வெற்று அவதூறுகள் மீளவும் உயிர்ப்பிக்கப்பட்டன. ஸ்டாலின் மீதான அரசியல் ரீதியான மதிப்பும், மக்களிடையே செயல்பூர்வமாக நடைமுறை ரீதியாக அதிகாரித்து வரும் பாட்டாளிவர்க்க செல்வாக்கையும் கொச்சைப் படுத்துவதே, மூலதனத்தக்கு அவதூறு நிபந்தனையாகி விட்டது. பாட்டாளி வர்க்கதின் வர்க்க கண்ணோட்டத்தைக் கொச்சைப்படுத்தவே, ஸ்டாலின் மீதான அவதூறுகளை முன்வைக்கின்றன. மூலதனத்தின் நெம்புகோலாக செயற்படும் வலது இடது சுதந்திர செய்தி அமைப்புகள்,  பலபக்க அவதூறுகளை 2003 ல் வெளியிட்டன. ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆதாரவுடன், கடந்தகால ஆவணங்களை எல்லாம் தூசிதட்டி எடுத்ததனர். ஆய்வுகள் என்ற பெயரில், அரசியலற்ற அவதூறுகளை நூலாக்கி டாக்டர் பட்டம் பெறுகின்றனர். இந்த நூல்களை மேயும் ட்ராட்ஸ்க்சியம் முதல் ஏகாதிபத்தியம் வரை, புல்லரிக்கும் மர்மக் கதைகளை உருவாக்கி உலாவ விடுகின்றனர்.  அதேநேரம் கடந்த 80 வருடமாக ஸ்டாலின் மீது இவர்கள் கட்டியமைத்த பொய்களும், அதை மெருகூட்டிய ஆதாரங்களும் உண்மையற்று போகின்றது. இதை செய்தியாக்கி, ஆய்வாக்கிய எவரும் நேர்மையாக சுயவிமர்சனம் செய்வதில்லை. அன்று அப்பட்டமாக ஆதாரம் என்ற பெயரில் கட்டமைத்த தரவுகள் அனைத்தும், விதிவிலக்கின்றி இன்று பொய்யாகியுள்ளது. இப்படி ஆய்வுகள் என்ற பெயரில் எழுதியவர்கள் பலர், ஏகாதிபத்திய உளவாளிகளாகவும், அவர்களிடம் கையூட்டுப் பெற்று இருந்ததும் கூட இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இப்படி தகவல்களை வழங்கியவர்களுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான தொடர்புகள்கூட இன்று ஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ளது.

இதை ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்திய ட்ராட்ஸ்க்கியத்தின் 80 வருட அரசியல் கந்தலாகி நிர்வணமாகின்ற நிலையிலும், எந்த சுயவிமர்சனத்தையும் செய்யவில்லை. மாறாக அரசியலற்ற அவதுறை அரசியலாக கொண்டே, இன்றும் பிழைக்கின்றனர். வர்க்க எதிரிகளை ஸ்டாலின் முன்நிறுத்தி, அவர்களை சாதுவான பசுவாககாட்டியே வந்தனர். அரசியல் ரீதியான விவாதம், விமர்சனம் எதுவுமற்ற வகையில், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை சிதைக்க நெம்புகோல்களை நிமிர்த்த முனைகின்றனர்.

ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கும் ஒவ்வொருவனின் அரசியல் என்ன? சமகால நிகழ்வுகளில் அவர்களின் அரசியல் நிலை என்ன? அதில் அவர்களின் பாத்திரம் என்ன? என்று நெருங்கி ஆராயும் அனைவருக்கும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் கபடங்கள் இருப்பது அப்பட்டமாக தெரியவரும்.

ட்ராட்ஸ்கியத்தின் அவதூறுகள் அரசியலற்ற செப்புபிடு வித்தையாக அரங்கேறுகின்றது. கடந்தகாலத்தில் அவதூறுகள் மறுக்கும் எந்த விவாதத்துக்கும் சரி, அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் மீதான விவாத்துக்கும் சரி, அவர்கள் பதில் அளிப்பதில்லை. தம்மையும் தமது சந்தர்ப்பவாத நிலைப்பட்டையும் மூடிமறைத்த படி, ஒருதலைப்பட்சமாக அவதுறை மட்டும் பொறுக்கி எடுத்து பக்கங்களை நிரப்புகின்றனர். இந்த வகையில் ட்ராட்ஸ்க்கியவாதிகளின் இந்த நிலைப்பாடு, அப்பட்டமாகவே ஏகாதிபத்தியத்துக்கு நேரடியாக சேவை செய்கின்றது. விவாதத்தை மறுத்தும், அவதூற்றை ஆதாரமாக கொள்கின்ற போக்கை லெனின் அம்பலப்படுத்தும்போது, கொள்கைரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒருவாதத்திற்கும் பதில் சொல்லாமல் அவன்மீது  இரக்கம் காட்டுவதாகச் சொல்வது விவாதிப்பதாகப் பொருளாகாது. மாறாக அவதூறு செய்யமுயல்வது ஆகும். இப்படி உண்மை நிர்வாணமாகி விடும்போது, கடந்தகால சொந்த நிலைப்பாடுகள்கூட கேள்விக்குள்ளாகின்றது. இதை மூடிமறைக்க விவாதம் மற்றும் எதிர்வாதத்தை முன்வைப்பது அவசியமற்றதாக்கின்றது. முன்பைவிட அவதூற்றுக்கு புதுமெருகூட்டி, வானத்தையே வில்லாக வளைக்க முனைகின்றர். “அவதூறின் அரசியல் முக்கியத்துவம்” என்ற கட்டுரையில் லெனின் அரசியல் அவதூறு பலசமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், வெறித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது” என்றார். தொழிலாளர் வர்க்கத்தின் பெயரில் வர்க்கப் போராட்டத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பின்பாக தொடரும் வர்க்கப் போராட்டத்தையும் மறுக்கும் ட்ராட்ஸ்க்கியத்தின் மூடிமறைத்த அவதூற்றை நாம் இனம் காண வேண்டியுள்ளது.

மார்க்சியத்தின் பல்வேறு அடிப்படைகளை தகர்க்க நினைக்கும் ஏகாதிபத்திய நோக்கத்துக்கு முண்டு கொடுக்கும் கருத்துகள் பல வெளியாகின்றன. அதில் ஒரு பகுதியாக ஸ்டாலினை தூற்றும் தனிமனித வசைபாடல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதைப்போன்று ட்ராட்ஸ்கியத்தின் நான்காம் அகில சர்வதேச இணைய தளத்தில் வசைபாடலை வெளியிடுகின்றன. இந்த அவதூறுக்கான மூலநூல்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றது என்பது விதிவிலக்கல்ல. இவர்களுக்கு மட்டுமல்ல ஸ்டாலின் தூற்றும் வகையில், மேற்கத்திய வலது இடது பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளியிட்ட பலபக்கச் செய்திகள் சார்ந்த அவதூறுகளுக்குமான மூலநூல்களும், ஒன்றாக இருப்பது தற்செயலானவை அல்ல. கடந்த பத்து வருடமாக முன்னைய சோவியத் ஆவணங்களை எல்லாம் புரட்டிப் பார்த்து பல தொடாச்சியான அவாதூறு கட்டுரைகள் எழுதப்பட்டன,  எழுதப்படுகின்றன. இவற்றில் இருந்தே, இன்று அவதூற்றை தொகுத்து தூற்றுகின்றனர். அண்மைக் காலத்தில், முன்பு போல் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை பற்றிய கற்பனைத் தரவுகளை முன்வைக்க முடிவதில்லை. முன்னைய கற்பனையான புள்ளிவிபரங்கள் முன்வைத்து செய்த அவதூற்றையும்,  அரசியல் பிழைப்பையும், முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் அமுக்குவது போல் அழுக்கிவிட முயலுகின்றனர். ட்ராட்ஸ்கிய பத்திரிகைகள் முதல் ஏகாதிபத்தியம் வரை முன்னர் தாம் கூறிய புள்ளிவிபரக் கற்பனைகளைப் பற்றி, வாய் திறப்பதில்லை. ஏகாதிபத்தியம் எதைஎதையெல்லாம் சொன்னதோ, அதை அப்படியே மீள வாந்தியெடுத்த ஸ்டாலின் எதிர்ப்புவாதிகள், ஏகாதிபத்திய தத்துவார்த்த கோட்பாட்டுக்கு இவைசவாக இருந்ததையும், இருப்பதையும் நாம் காண முடிகின்றது.

புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் நடத்தப்படுவதை எதிர்க்கும் டிராஸ்கிஸ்டுகள், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதையே எற்றுக் கொள்வதில்லை. லெனின் கூறகின்றார் முன்னொக்கிச் செல்வது, அதாவது கம்யூனிசத்தை நோக்கிச் செல்வது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வழியேதான் முடியும், அதைத்தவிர வேறு வழியில்லை” என்றார்.  ஆனால் டிராட்ஸ்கிகள் ஜனநாயகத்தை அதன் முரணற்றவகையில் பகுத்து ஆராயத்தவறி, அதை ஆதாரமாக கொண்டே தூற்றுகின்றனர். ஜனநாயகத்தை கொச்சை வடிவில் திரித்து தூற்றும்போது சோசலிசப் புரட்சிக்கு முன்நிபந்தனையான அரசியல், பொருளாதார அடிப்படைகளும் ஜனநாயக உணர்வுகளும் மனிதச் சிந்தனைப் பரப்புக்களும் விரிவடைந்திராத மூர்க்கத்தனமான விவசாயச முகக்குணங்களில் தான் ஸ்டாலினிசம் உதித்தெழுந்தது. ஜனநாயகப் புரட்சியைக் கண்டறியாத தேசமாய் ரஷ்யா இருந்தது” என்று ட்ராட்ஸ்கியம் வாசைபாடும் போது, ஜனநாயகம் பற்றி முதலாளித்துவ சிந்தனை எல்லைக்குள் நின்றே கூச்சலிடுபவர்களாக இருக்கின்றனர். சோவியத்தில் ஜனநாயக புரட்சி நடைபெறவில்லை என்று, லெனினையே மறுத்துத் திரிக்கின்றனர். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில் சோசலிச புரட்சி நடைபெற முடியாது என்று கூறுவதன் மூலம், எதைத்தான் எமக்கு போதிக்க முனைகின்றனர். வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள் என்பதை தவிர‌, வேறு ஒன்றையும் அல்ல. ஆழ்ந்து நோக்கினால் ஸ்டாரலின் பற்றிய அவதூறுகள், வர்க்கப் போராட்டம் முதல் ஜனநாயகம் பற்றிய அரசியலில், ஏகாதிபத்தியத்துக்கும் ட்ராட்ஸ்கியத்துக்கும் எந்த வேறுபாடு அடிப்படைக் கோட்பாட்டின் மேல் இருப்பதில்லை. அப்படி ஒரு வேறுபாடு இருப்பதாக விளக்க முடியாதவர்களாகவே ட்ராட்ஸ்கிய அவதூறுகள் கட்டமைக்கப்படுகின்றன. ட்ராட்ஸ்கிய அவதூறுகள் எந்தளவுக்கு உள்ளதோ, அந்தளவுக்கு குருச்சேவ் அன்று ஸ்டாலினை தூற்றினான். குருச்சேவ் ஸ்டாலினை ஏன் மறுத்தான் என்பதும், எந்த அரசியலை கைவிட்டான் என்பதை நாம் ஆராய்வதன் மூலமே, ட்ராட்ஸ்கியத்துடன் அக்கபக்கமாகவே குருச்சேவ் செயல்பட்டான் என்பதை எதார்த்ததில் துல்லியமாக காணமுடியும்.

1956 இல் டிராட்ஸ்கியவாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் குருச்சேவ்வின் அவதூறுக்கு கொள்கை ரீதியாக நன்றி தெரிவித்தனர். மேல் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி முதலாளித்துவத்தை மீட்ட இந்தச் சதியை (என்ன சதி என்பதை ஆதாரமாக கீழே பார்ப்போம்)  நியாப்படுத்தி “இதற்காக நாம் 25 வருடங்களாக காத்திருந்தோம். எனவே, நாம் இப்போது உள்ளே புகுந்திட வேண்டும். மிகுந்த ஆற்றலுடன் செயல்பட வேண்டும்” என்றனர். குருச்சேவ் எதைச் செய்தரோ அதைச் செய்ய  25 வருடமாக முயன்று தோற்றதை ஒப்புக்கொண்டது டிராட்ஸ்கியம். ஒரு முதலாளித்துவ மீட்சியை வரவேற்றதுடன் அதில் பங்கு கொள்ளவும் முயன்றனர்.  1956 இல் 20 வது காங்கிரசில் குருச்சேவ் ஸ்டாலினுக்கு எதிராக கட்டமைத்து அவதூறுகளை, இரகசிய சுற்று அறிக்கையாக வெளியிட்டு தூற்றியபோது, டிராட்ஸ்கியவாதிகள் இப்படிப் போற்றினர். ஸ்டாலினின் அடிப்படையான வர்க்க கண்ணோட்டம் சார்ந்த மிச்சசொச்ச வர்க்க அடிப்படைகளையும் துடைத்தெறிய, உள்ளே புகுந்து ஆற்றலுடன் அழித்துவிட அறைகூவல் விடுத்தனர். வர்க்க அடிப்படைகளை அழித்தொழிப்பை நியாப்படுத்தி 1961 இல் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் “குருச்சேவின் நடவடிக்கைகளில், பழைமைவாதிகளுக்கு எதிரான ஸ்டாலினிய அழிப்புப் போராட்டத்துக்கு நாம் விமர்சனத்துடனான ஆதரவை வழங்கவேண்டும்” என்றனர். இப்படி கொள்கை வகுத்து குருச்சேவை தாங்கிபிடித்து உதவியதன் மூலம், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை குழி தோண்டி புதைக்க உதவினர். இதைத்தான் டிராட்ஸ்கியவாதிகள் அன்றுமுதல் இன்றுவரை செய்தனர், செய்து வருகின்றனர்.

1963 இல் ட்ராட்ஸ்கிய வாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது காங்கிரசிலும், 22 வது காங்கிரஸ்சிலும் உருவாகியுள்ள நிலமை, தொழிலாளர் அரசு நடக்கும் நாடுகளிலே கூட நமது இயக்கம் மறுமலர்ச்சி அடைவதற்கு மிகவும் சாதகமானதாகும்” என்று கூறி பாட்டாளி வர்க்கத்தின்அ டிப்படையான கோட்பாடுகளை சிதைப்பதில் கரம் குவித்தனர். இவர்கள் குருச்சேவ்வின் மார்க்சிய விரோத நிலைகளை ஆதாரித்துடன், அதற்கு துணையாக செயல்படவும் அறைகூவல் விடுத்தனர்.  1961 இல் 22 வது காங்கிரஸ் முடிவை வரவேற்ற ட்ராட்ஸ்கிஸ்டுகளின் நான்காம் அகிலம்,  புதிய மத்திய குழுவுக்கு ஒரு கடித்தை எழுதியது. அதில் 1937 இல் ஸ்டாலினால் கொல்லபட்டவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பபடும் என்று 1937 இல் ட்ராட்ஸ்கி கூறியதை சுட்டிக் காட்டியதுடன் இன்று இந்த தீர்க்கதரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்” என்று கூறியதுடன்,  நினைவுச் சின்னத்தின் மீது ட்ராட்ஸ்கியின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்” என சுட்டிக்காட்டினர். அத்துடன் குருச்சேவைப் பாரட்டியதுடன் ட்ராட்ஸ்கியிசத்துக்கு கதவு திறந்துவிட்டுள்ளது” என்று கூறினர்.  அத்துடன் ட்ராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காம் அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கும் மாபெரும் உதவியைச் செய்திருக்கிறது” என்று பிரகடனம் செய்தனர். ஸ்டாலின் மரணத்தின்பின் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சியை ட்ராட்ஸ்கிகள் ஆதாரித்து வரவேற்றதை நாம் இங்கு காண்கின்றோம். குருச்வேவின் நோக்கமும், ட்ராட்ஸ்கியின் நோக்கமும் அக்கபக்கமாக இணைந்து வந்ததையும், ஒரே புள்ளியில் சந்தித்தையே இவை காட்டுகின்றன. ஸ்டாலினிய மார்க்சிய அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்த பலரை, குருச்சேவ் தலைமையிலான முதலாளித்துவ மீட்சியாளர்கள் உலகஅளவில் படுகொலை செய்தும்,  ஆயிரக்கணக்கில் சிறையில் அடைத்த நிலையில் தான், ஸ்டாலின் மீதான தாக்குதலை நடத்தமுடிந்தது. மார்க்சியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட எதிர்புரட்சியாளர்களை சிறைகளில் இருந்து விடுவித்தும், புனர்வாழ்வும் கொடுக்கப்பட்டது. புனர்வாழ்வு கொடுக்கப்பட்ட எதிர்புரட்சியாளர்கள் அரசின் முன்னணி அதிகாரத்துக்கும், கட்சியின் தலைமைக்கு கொண்டு வரப்பட்டனர். ஸ்டாலினின் மீதான தாக்குதல் தனிநபர் ரீதியாகவும்,  அரசியல் ரீதியாகவும் விரிந்த அளவில் தொடுக்கப்பட்டது.

குருச்சேவ் ஸ்டாலினை தனிநபர் ரீதியாக அவதூற்றைப் பொழிந்த போது எல்லையற்ற வகையில் விரிந்து காணப்பட்டது. குருச்சேவ் ஸ்டாலினை “சூதாடி”, “முட்டாள்”, ”கொலைகாரன்”, “மடையன்”, “பயங்கர இவான் போன்ற ஒரு கொடுங்கோலன்”, “ஒருகுற்றவாளி”, “கொள்ளைக்காரன்” என்று பலவாக தாக்கினான். “ரசிய வரலாற்றிலேயே மிகப் பெரிய சாவாதிகாரி” என்றான். மேலும் குருச்சேவ் தனது தாக்குதலை ஸ்டாலினுக்கு எதிராக 20 வது காங்கிரஸ்சில் நடத்தியபோது “குரோதமனோபாவம் கொண்டவன்” என்றான். “இரக்கமின்றிஆணவமாகச் செயல்பட்டவர்” என்றான். “அடக்குமுறைபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர் என்றான்” “தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டும் அறிந்தவர்” என்றான்.  “ஒரு கோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டார்”  என்றான் “ஸ்டாலின் தலைமை ரசிய சமூக வளர்ச்சிப் பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறி விட்டது”  என்றான். குருச்சேவ் இதுபோன்ற அவதூறுகளை தொடாச்சியாக பொழிந்தான். டிராட்ஸ்கியம் இது போன்றவற்றையே தன் வராலற்றில் தொடாச்சியாக இடைவிடமால் செய்துவந்தது. அண்ணன் தம்பியாக இதில் ஒன்றுபட்டு நின்று, தனிமனித தாக்குதலை நடத்திய நிலையில், கொள்கைரீதியாக இவர்கள் தமக்கு இடையில் உடன்பட்டனர்.

இதை இன்றும் ஆதாரித்து நிற்பதுடன், டிராட்ஸ்கியத்தின் தலைசிறந்த வாரிசாக குருச்சேவை போற்றவும் தயங்கவில்லை. டிராட்ஸ்கிஸ்ட்டுகள் கூறுகின்றனர் 1954 இல் குருசேவின் வேண்டுகோளின்படி அமைக்கப்பட்ட விசாரணைக்குழு கம்யூனிஸ்டுகள் மற்றும் குற்றச் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது” என்பதை எடுத்துக்காட்டி, ஸ்டாலினின் மீதான குற்றம் நிரூபனமாக இருப்பதாக தம்பட்டமடிக்கின்றனர். குருச்சேவ் திட்டமிட்டு மார்க்சிய நிலைப்பாட்டைக் கொண்டோரை படுகொலை செய்த நிகழ்வும், மார்க்சியத்தின் எதிரிகளை விடுவித்ததும் கம்யூனிசத்தின் வெற்றி என்கின்றனர். இதை நியாப்படுத்தும் வகையில் “1956 ல் ஸ்டாலின் கால அநீதிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு போலி ஆவணங்கள் அடிப்படையில் அரசியல் பழிவாங்கலாக விசராணை மற்றும் வழக்குகள் நடைபெற்றதாய் அறிக்கை சமர்ப்பித்தது” என்று கூறியதை எடுத்துக்காட்டி, ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கின்றனர். போலி ஆவணம் மூலம் விசாரணை என்பதும், அதை முதன்மை படுத்திக்காட்டி டிராட்ஸ்கியம் பிழைக்க முனைகின்றது. இந்த பிழைப்புவாத கூத்தடிப்பு ஒருபுறம் நிகழ, அன்று ஒரு சதி கட்டமைக்கப்பட்டதை ட்ராட்ஸ்கியம் சொந்த முரண்பாட்டுடன் பெருமையாக முன்வைக்கின்றது. அதையும் கட்டுரையின் தொடர்ச்சியில் விரிவாக ஆராய்வோம்.

குருச்சேவ் அரசியல் என்ன என்ற அடிப்படை உள்ளடகத்தில் இருந்து, இதை பகுத்தாய்வதை மறுப்பதே டிராட்ஸ்கியமாக உள்ளது. கோட்பாட்டு ரீதியாக என்ன அரசியலை முதலாளித்துவ மீட்பின் போது, குருச்சேவ் கையாண்டான் என்பதையும் கட்டுரை தொடர்ச்சியில் விரிவாக பார்ப்போம். அரசியல் ரீதியாக மார்க்சியத்தை மறுத்த குருச்சேவ் முதலாளித்துவத்தை நிலை நாட்ட களையெடுப்புகளை நடத்தினான். இவற்றை வானுயரப் போற்றும் டிராட்ஸ்கிகள் “ஸ்டாலினின் நிழலான பெரிஜா 23.12.1953 இல் சோவியத் உயர் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு 5 மார்ச் 1954 இல் சுட்டுக்கொல்லப்பட்டான். பல ஆயிரம் நேர்மையான கம்யூனிஸ்டுகளை கொன்றமை, பிரிட்டிஸ் உளவுத்துறைக்கு வேலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டக்களின்படி ‘சோவியத் மக்களின் எதிரி’ என்று பிரகடனப் படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் நேர்மையான கம்யூனிஸ்ட்டுகளை தொடர்ந்து குருச்சேவ் பாதுகாத்தான் என்கின்றனர். மேலும் ஸ்டாலினை தூற்றவும் மார்க்சியத்தை வேரோடு பிடுங்கவும் “…பல்கேரிய, செக்கோஸ்லாவாக்கிய, ஹ‌ங்கேரி களையெடுப்புகளில் பங்கு கொண்ட ஸ்டானிச கொலையாளிகளான அபகுமெவ், லீசற்சோவ், மக்காரோவ், பெஜல்கின் ஆகியோரும் கைதாகி விசாரணையின் பின்பு சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டாலினிசத்தை சோசலிசம் என்று நம்ப விரும்புகிறவர்கள் இவர்களையே பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்கள் என்றுநம்பலாம்” இப்படிக் கூறுவதன் மூலம், உண்மையில் டிராட்ஸ்கிகள் சவால் விடுகின்றனர். குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை அப்பட்டமாகவே மறுக்கின்றனர். குருச்சேவின் வாலை பிடித்து தொங்கி ஊளையிடவும் கூடத் தயங்கவில்லை. ‘கம்யூனிஸ்டான’ குருச்சேவ் தான், பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளை கொன்றதாக இன்றும் கூறுகின்றனர். இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் போது, இங்கு இவர்கள் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், தமது வாக்கநலன் சார்ந்து முதலாளித்துவ மீட்சிக்கானவன் முறையை எதிர்க்கவில்லை. ‘மனிதாபிமானம்,  ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம்’ என்பதெல்லாம் ஸ்டாலினை எதிர்ப்பதற்கான டிராட்ஸ்கியத்தின் வெற்று ஆயுதங்கள் என்பதை, இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஸ்டாலின் போன்றவர்கள் அன்றே கொல்லப்பட்டு டிராட்ஸ்கி போன்ற ‘கம்யூனிஸ்ட்டுகள்’ ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என்பதே இதன் சராம்சமாகும். குருசேவ்வின் வருகையின் பின்பான ஸ்டாலினிச அதிகார வாழ்வின் தளர்வு தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை வெளிப்படையாக உருவாக்கின” என்று டிராட்ஸ்கியம் கூறி குருச்சேவை ஆதாரிக்கும் போது, அரசியல் ரீதியாகவும் ஒன்றபட்டே அன்றும் சரி இன்றும் சரி நிற்கின்றனர்.  இவற்றை நாம் விரிவாகப் பார்ப்போம்

இந்நூலின் முந்தைய பகுதி

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

11 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 2

  1. மார்க்சியமே உலகை மாற்றும் ஒரே தத்துவமாக, தலைநிமிர்ந்து வருகின்றது. ///

    செத்து போன கிழவர், கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துக்கணும்னா முடியுமா.

  2. //செத்து போன கிழவர், கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துக்கணும்னா முடியுமா//

    செத்துப்போன கிழவர் சுவர்க்கத்தில் ஆப்பிள் சாப்பிட்டு, நீள விழி சுந்தரிகளுடன் உறவாட முடியுமென்றால், இன்ன்மும் பெரும்பான்மை மக்களின் சிந்தனைகளில் உயிர்வாழும் மார்க்சியத்தினால் ஏன் உலகை மாற்ற முடியாது?

  3. Marksiyam enna maatrathai indha ulagirku kondu vandhu irukkiradhu, Russia vil commnist puratchi vandhadhu 50 varudam thaaku pidikka villai, garbochov adibaraaga irundha varai oru irumbu thirai itta naadagavey irndhadhu,
    Staalin aatchi kaalathil Russia oru Vallarasaaga maariyadhu adharku pinnaal 2kodi uiyr pazli irukkiradhu, ulaga varalaatril staalinai vida oru kodungol mannan irundhadu illai, adarkku saandru avanaal erpatta manidha uir ilappugalin ennikkiaye sollum
    hitler kooda 1kodikku kuraivaagavey kolai saidhu iruppan, enna hitlerukku support panna ma ka ika pondra amaippu illai, appadi yadhaavadu irundhaal hitler nallavan endru sila reportgal sonnadaaga avargalum solluvaargal

  4. மார்க்சியம் என்ன மாற்றத்தை இந்த உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறது , ரஷ்ய வில் கம்ம்னிஸ்ட் புரட்சி வந்து 50 வருடம் தாக்கு பிடிக்க வில்லை , கர்போசோவ் அதிபராக இருந்த வரை ஒரு இரும்பு திரை இட்ட நாடாகவே இறந்தது ,
    ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரஷ்ய ஒரு வல்லரசாக மாறியது அதற்கு பின்னால் 2 கோடி உயிர் பலி இருக்கிறது , உலக வரலாற்றில் ஸ்டாலினை விட ஒரு கொடுங்கோல் மன்னன் இருந்தது இல்லை , அதற்கு சான்று அவனால் ஏற்பட்ட மனித உயிர் இழப்புகளின் எண்ணிக்கையே சொல்லும்
    ஹிட்லர் கூட 1 கோடிக்கு குறைவாகவே கொலை செய்து இருப்பான் , என்ன ஹிட்லருக்கு சப்போர்ட் பண்ண ம க இக போன்ற அமைப்பு இல்லை , அப்படி யதாவது இருந்தால் ஹிட்லர் நல்லவன் என்று சில அறிக்கை சொன்னதாக அவர்களும் சொல்லுவார்கள்.
    இந்த கொலை காரன் நல்லவன் வல்லவன் என்று சொல்ல இத்தனை பதிவுகள்

  5. அன்பு தோழர்களே,

    இந்த மண்ணில் சொர்க்கத்தை படைப்போம் என்று என் சிஷ்யன் இராயகரன் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட என் தம்பி செங்கொடி அவர்களிடம் இந்த மண்ணில் எப்படி சொர்க்கம் சாத்தியமாகும் என்று யாராவது கேட்டால் அவர்களுக்கு நான் அறிவியல் பூர்வமாக ஒரு விளக்கம் கொடுக்கிறேன். இன்றைய பாலைவன அரபு நாடுகளை எப்படி சொர்க்க பூமியாக மாற்றியிருக்கிறார்கள் என்று சிந்தித்து பாருங்கள். கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அழிந்து மக்கி போன உயிரினங்ககளின் இரசாயன மாற்றங்கள் தான் இன்று அவர்களுக்கு பெட்ரோலாக கிடைக்கிறது. அந்த பெட்ரோலை வைத்து தான் அவர்கள் பொருளாதார ரீதியில் வளம் பெற்று இன்று அந்த நாட்டையே சொர்க்கமாக்கி விட்டார்கள். அது போல் கடந்த நூற்றாண்டில் ஸ்டாலின் கோடி கணக்கான மனிதர்களை கொன்றது எதிர்காலத்தில் அந்த உடல்கள் மட்கி போய் இரசாயன மாற்றத்தால் பெட்ரோல் ஆக மாறி ரஷ்யாவை வளம் மிக்க பகுதியாக மாற்றும். அப்படி மாற்றும் பொது நாங்கள் எளிதாக இந்த மண்ணில் சொர்க்கத்தை படைப்போம்.ஆக ஸ்டாலின் கோடி கணக்கான உயிர்களை கொன்றது ஓர் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உருவான அறிவியல் ரீதியான முடிவு தான் என்பதை இங்கே ஆணித்தரமாக கூறுகிறேன். இந்த அடிப்படையில் தான் ம க இ க தொண்டர்களும் இந்த மண்ணின் சொர்க்கத்தை நம்புகிறார்கள் .

    இப்படிக்கு

    உங்கள் உண்மையுள்ள காரல் மார்க்ஸ்

  6. காரா மார்க்ஸ் எனும் பெயரில் எழுதும் நண்பருக்கு,

    நீங்கள் காரா மார்க்ஸ் என்றோ காரிய மார்க்ஸ் என்றோ எந்தப்பெயரில் வேண்டுமானாலும் எழுதுங்கள், ஆனால் மார்க்ஸாக உருவகப்படுத்திக்கொண்டு எழுதக்கூடாது. தொடக்கத்தில் சில நாட்கள் எழுதுவீர்கள் பின் உங்களுக்கே அலுத்துவிடும் என எண்ணினேன். ஆனால் நீங்கள் தொடர்வதோடு உங்களின் திருவிளையாடல் பலவித பரிணாமங்களில் வந்துகொண்டிருக்கிறது. இனி இதை நீங்கள் தொடரும் பட்சத்தில் உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்படும். இடுகையில் சொல்லப்பட்டிருப்பவற்றை மறுக்கமுடியாமல் கேள்வி எழுப்ப முடியாமல் வறட்டுக் கிண்டல் செய்பவர்களுக்கு இனி இடமில்லை.

    செங்கொடி

  7. நண்பர் முபாரக்,

    இரும்புத்திரை நாடு, கோர்பசேவ், கம்யூனிசம், ஸ்டாலின் கொலைகள் என்று எங்கோ கேள்விப்பட்ட முதலாளித்துவ வாந்திகளை கிளறுவதை விட்டுவிட்டு, உண்மை என்ன என்பதை ஆய்வுசெய்ய முற்படுங்கள், அப்போது உங்களுக்கு விடை கிடைக்கும். முடியாது என்றால் இந்தத் தொடர் முடியும் வரை தொடர்ந்து படியுங்கள். ஸ்டாலின் கொலை என தூக்கத்தில் பேசும் நோயைப்போல் பேசவேண்டாம். குறைந்த பட்சம் ஸ்டாலின் எப்போது கொலை செய்தார் எந்த இடத்தில் கொலை செய்தார் எப்படி கொலை செய்தார் என விபரமாவது சொல்லமுடியுமா உங்களால்?

    செங்கொடி

  8. ஸ்டாலின் என்ன ஒருவரையா கொலை செய்தார்? எங்கே? எப்போது? எப்படி? என்று சொல்ல, அவர் ஆட்சி காலத்தில் ரஷ்யாவில் கொலை செய்தார் லட்ச கணக்கில் இல்லை கோடி கணக்கில் செய்தார்,
    தன சொந்த நாட்டு மக்களுக்கு உணவு, ஓய்வு கொடுக்காமல் 24 மணிநேரம் வேலை வாங்கினார்
    நீங்கள் கொடுக்கின்ற ஆதாரங்கள் தான் பணத்திற்காக புனைய பட்டது.

  9. முபாரக்,

    காதுமடல்களை சூடாக்கும் உங்கள் கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. போய் ஓய்வெடுத்து கோபமெல்லாம் ஆறிய பிறகு வாருங்கள் நிதானமாக பேசிக்கொள்ளலாம்.

    செங்கொடி

  10. ஆமாம் 2 கோடிக்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றவனுக்கு வக்காலத்து வாங்குபவரை பார்த்து கோபபடாமல்? புன்னகையா? செய்ய முடியும்,
    பேசியோ விவாதம் செய்தோ தீர்த்துக்கொள்ள இது என்ன இந்திய நீதி மன்றமா?
    சர்வாதிகாரி ஸ்டாலின் ஒரு கருப்பு வரலாறு.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s