அண்மையில் “உலகின் அழகிய மணமக்கள்” எனும் தலைப்பில் வினவில் ஒரு திருமணம் குறித்த கட்டுரை வெளியானது. பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு ஆணும் பெண்ணும் சமம் என்பதை உரக்கக்கூவி நடத்தப்பட்ட அத்திருமணத்தை பலரும் பாராட்டினர், மணமக்களை அறிந்திராதவர்கள் கூட தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டார்கள், முஸ்லீம்கள் உட்பட. ஆனால் அதுபோன்ற ஒரு திருமணம் பற்றிய செய்தி செப்டம்பர் 2010 புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்டிருந்தது, அதை வினவு “இஸ்லாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்” என இடுகையாக இட்டிருந்தது. முந்திய கட்டுரையில் உரிமையோடு சொந்தம் சொல்லி விளித்து வாழ்த்துக்கூறியவர்கள் கூட பிந்திய கட்டுரையில் தங்கள் பின்னூட்டங்களைச் சுழற்றிச் சுழற்றி சண்டையிட்டார்கள். காரணம் முந்திய திருமணம் யாரோ(!) இருவருக்கிடையில் நடந்தது. இரண்டாவது திருமணமோ இஸ்லாமிய சமுதாயத்தில் நடந்தது. நோக்கத்தில் மாற்றமில்லை, நடைமுறையில் மாற்றமில்லை, விருப்பங்களில் மாற்றமில்லை, கொள்கைகளில் மாற்றமில்லை. ஆனால் மதம் என்ற ஒற்றைச் சொல்லில் மாற்றமிருந்தது. இஸ்லாம் என்ற ஒற்றைச் சொல் மூளையை பிளந்து போட்டது. முற்போக்குச் சிந்தனைகளை முடக்கிப் போட்டது.
திருமணத்தில் பிரச்சனையில்லை, அதைக்கூறியதில், அந்தத் தலைப்பில் தான் பிரச்சனை எனச் சிலர் பதில் கூற முனையலாம். இஸ்லாமியர் இருவர் விட்டுவிலகி பொதுவுடமையில் நுழைந்து விட்டார்கள் எனும் தம்பட்டமல்ல அந்தச் செய்தி. கம்யூனிசத்தை ஏற்றவர்கள் என்றாலும் அந்தத்திருமணம் இஸ்லாமிய சமுதாயத்தின் மத்தியில் நிகழ்ந்தது. முன்னேற்பாடுகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் இணக்கத்தைப்பெற்று நடந்த திருமணம் என்பதால்தான் இஸ்லாமிய சமூகம் தலைப்பில் இடம்பெற்றிருக்கிறதேயன்றி மணமக்கள் இஸ்லாமியர்களாக இருந்தவர்கள் என்பதனால் அல்ல. உலகின் அழகிய இரண்டாவது மணமக்கள் முப்பதாவது மணமக்கள் என்றெல்லாம்கூட தலைப்பு வைத்திருக்கமுடியும்; ஆனாலும், வணக்கவிடங்களில் கூட நீதி மறுக்கப்பட்டு எல்லாத்துறைகளிலும் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கும் இஸ்லாமிய சமூகம் உய்வுறுவதற்கு அனைத்துச் சமூக மக்களையும் ஒன்றுதிரட்டி போராடுவது அவசியம் என்பதை மதவாதிகள் கொஞ்சமும் உணரவில்லை, நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்பதாலும் அந்தத்தலைப்பில் இஸ்லாமிய சமூகம் இடம்பெற்றிருக்கிறது.
இஸ்லாமிய திருமணமே புரட்சிகரமானதுதான் ஆனால் இஸ்லாமிய திருமணமுறையை விலக்கிவிட்ட ஒன்றை புரட்சிகரமானது எனக்கூறுவதா? என்பதும் முஸ்லீம்களின் கோபத்திற்கு காரணம். இஸ்லாமிய திருமண முறை புரட்சிகரமானதா? புரட்சிகர உள்ளடக்கங்கள் அதில் உள்ளடங்கியிருக்கிறதா? நிச்சயமாக இல்லை. எந்த அடிப்படையில் இஸ்லாமிய திருமணமுறையை புரட்சிகரமானது என நம்புகிறார்கள். ஊரெல்லாம் வரதட்சனை கொடுமைகள் நிறைந்திருக்கையில் இஸ்லாம் வரதட்சனையை தடுக்கிறது. வட்டிக்கு கடன் வாங்கி திருமணம் செய்கையில் இஸ்லாம் சிக்கனமாக நடத்தச்சொல்லியிருக்கிறது. என்பன போன்ற சில சில்லரை சீர்திருத்தங்களால் இஸ்லாமிய திருமணமுறை புரட்சிகர நிலைக்கு உயர்ந்துவிடுமா? ஆணுக்குப் பெண் அடிமையில்லை என்பதை ஓங்கிச் சொல்லும் உயிரின்றி சீர்திருத்தச் சட்டைகளை அணிந்துகொண்டால் இஸ்லாமிய திருமணமுறை உயிரோட்டமுள்ளதாய் ஆகிவிடுமா?
வரதட்சனை எனும் கொடுமையைப் பற்றி பேசும் முஸ்லீம்கள் தனதட்சனை பெண்களை பாதுகாக்கும் என பேசுவது வேடிக்கைதான். வரதட்சனையால் சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்ணின் நிலையும், தனதட்சனையால் பாதிக்கப்படும் ஆணின் நிலையும் ஒன்றல்ல என்றாலும், வரதட்சனை கொடுமை, தனதட்சனைதான் பெண்களைக் காக்கும் அருமருந்து என்பவர்கள் ஆண் பெண் சம உரிமை பற்றியோ புரட்சி பற்றியோ பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் (2:223) என்று விருப்பப்படியெல்லாம் பரிசோதனை செய்யத்தூண்டும், விளை நிலம் எனும் உவமையின் மூலம் தரிசாகப் போடும் உரிமையும் ஆணுக்கு உண்டு எனச்சொல்லும், பெண்களை போகப் பொருளாக வைக்கும் நிலையை உள்ளே வைத்திருக்கும் இஸ்லாமிய திருமணம் எந்த விதத்தில் புரட்சிகரமானது?
பிரியும் நிலை வந்தால், மனைவியை திரும்ப அழைத்துக்கொள்ளும் உரிமை கணவனுக்கே உண்டு (2:228) என்று பெண்ணை ஒரு பொருட்டாகவே மதிக்காத தன்மையை உள்ளே வைத்திருக்கும் இஸ்லாமிய திருமணமுறை எந்த விதத்தில் புரட்சிகரமானது?
ஒரு ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண் சாட்சிகள் (2:282) என்று பச்சையாக உமிழும் ஆணாதிக்கத்தை உள்ளே வைத்திருக்கும் இஸ்லாமிய திருமணமுறை எந்த விதத்தில் புரட்சிகரமானது?
தங்கம், வெள்ளி, குதிரைகள், கால்நடைகள், நிலம் போல பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம்தரும் பொருள்தான் (3:14) என்று வெளிப்படையாக ஓலமிடும் அவலத்தை உள்ளே வைத்திருக்கும் இஸ்லாமிய திருமணமுறை எந்த விதத்தில் புரட்சிகரமானது?
ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள் என்றும் ஆணின் சொல்லை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் (4:34) என்றும் ஆணுக்கு அதிகாரம் வழங்கும் காட்டுமிராண்டித்தனத்தை உள்ளே வைத்திருக்கும் இஸ்லாமிய திருமணமுறை எந்த விதத்தில் புரட்சிகரமானது?
ஆண்களின் கண்களிலிருந்து தன்னை மறைத்துக்கொள்ளாத பெண்களை நான் தண்டிப்பேன் (33:59) என்று தினவெடுத்துக்கூறும் மடமையை உள்ளே வைத்திருக்கும் இஸ்லாமிய திருமணமுறை எந்த விதத்தில் புரட்சிகரமானது?
பிணக்கு வந்து பிரியும் நிலை வந்தால் குழந்தைகள் மீது பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை, என்று பால் கொடுப்பதற்குக்கூட விலை பேசி தாய்மையை கேவலப்படுத்தும் அயோக்கியத்தனத்தை உள்ளேவைத்திருக்கும் இஸ்லாமிய திருமணமுறை எந்த விதத்தில் புரட்சிகரமானது?
ஒரு ஆண் உறவுக்கு அழைத்து என்ன காரணமிருந்தாலும் மனைவியானவள் மறுத்தால் அவள் விடியும்வரை கடவுளின் உதவியாளர்களால் சபிக்கப்படுகிறாள் எனக்கூறும் ஒரு மதத்தில் இருந்துகொண்டு என்ன பொருளில் இஸ்லாமிய திருமணமுறை புரட்சிகரமானது என கூறத்துணிகிறார்கள்.
மதம் ஒரு போதைப் பொருள் என்று மார்க்ஸ் அன்று கூறியதன் நிகழ்கால எடுத்துக்காடுகளாக தங்களைத்தாங்களே அம்பலப்படுத்திக்கொண்டும், மதத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டும் இருக்கும் இவர்களின் முகவரிகளை இவர்களின் கண்களின் முன்னே விரித்துக் காட்ட தோழர் அலாவுதீனுக்கும், தோழர் சப்னா ஆஸ்மிக்கும் நடந்த புரட்சிகர திருமணத்தை “இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்” என தலைப்பிட்டுக் காட்டுவது சாலப்பொருத்தமானதே.
இந்தியாவில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் போராடவேண்டிய நிலையில் உள்ள முஸ்லீம்கள் வர்க்கம் எனும் ஆயுதத்தை கைக்கொள்ளாமல் மதத்தை அணிந்துகொள்வதில் பொருளொன்றுமில்லை என்பதை உணர்ந்துகொண்டு அலாவுதீன்களாகவும், சப்னா ஆஸ்மிகளாகவும் வரவேண்டும் என உங்களை அழைக்கிறோம்.
தொடர்புடைய கட்டுரைகள்
சாட்டையடி பதிவு. வாழ்த்துகள்.
நான் இஸ்லாம் திருமணம் பற்றி கொண்டிருக்கும் அதே கருத்துக்கள் துணிச்சலுடன் கேள்விக்கணைகளாய் உங்களிடமிருந்து வந்து விழுந்திருக்கிறது. உண்மையான மனசாட்சிக்கு நேர்மையாக சொல்லப் போனால் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லை.இஸ்லாம் எனக்கும் தெரியும். குர்-ஆன் என்னிடமும் உண்டு.தலாக்; 3 முறை எங்கிருந்து வேண்டுமானாலும் சொல்லி-தொலைபேசி வழியாகக் கூடச் சொல்லி மனைவியைப் பிரித்து வைக்கலாம் என்பது என்ன மதம். அவர்கள் திருமணமே கூட அலாதியானது. முகம்மது நபி காலத்தில் எந்த போன் இருந்தது? எல்லாம் வசதிக்காக இவர்களின் அயோக்யத்தனத்திற்காக செய்வது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று. பெண் பர்தா அணியும்போது ஆண்கள் அனைவரும் அணிவதும்தானே? நபி என்ன சொல்கிறார் என்றால்? “தலாக் சொல்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது ஆனால் அது அவருக்கு-அல்லாவுக்கு உகப்பானதல்ல” என்கிறார். ஆண்டவர் அல்லாவுக்கு உகப்பானதில்லை எனும்போது ஏன் தலாக் சொல்லி தள்ளி வைத்து பிரித்து வைக்கிறார்கள்? எத்தனை பேரை வேண்டுமானாலும் மணப்பது இஸ்லாம் காட்டிய நெறிதான் – மேலை நாட்டு-மேற்கத்திய நாட்டு கலாச்சாரமாய்விட்டது. கல்லால் அடித்துக் கொல்லாது கொஞ்சமாக கொஞ்சமாக மிருகங்கள் கூட. இதெல்லாம் ஒரு மதம் ஒரு மார்க்கம் கடவுள் பேர் சொல்லி
இப்படிப் பார்க்கும்போதுதான் மார்க்ஸ் அபின் என்றது; பெரியார் அடியோடு ஒழிக்கச் சொல்வது எல்லாம் எவ்வளவு பொருத்தமானது எனச் சொல்லத் தோன்றுகிறது. இந்த அக்கப்போருக்கெல்லாம் யாரால் மணி கட்டமுடியும்? நீங்கள் எழுதுகிறீர். உண்மையை. அது என்றும் நிற்கும். கவிஞர்தணிகை.best wishes.vanakkam.thanks from a well wisher.
செங்கொடி பரக்கவிட்டு செய்கின்ற திருமணம் மட்டுமெ சீர்திருத்தத் திருமணம் மற்ற திருமணமெல்லாம் சீர்திருத்தத் திருமணமில்லை உங்கள் பார்வையில் அப்படிதானெ?
சில்லரைதனமில்லாத சீர்திருத்தத் திருமணமென்றால் என்னனு சொன்னா நல்லா இருக்கும்.
அலாவுதீன் சப்னா ஆஷ்மிக்கு சமவுரிமை கொடுதுட்டாருனு எப்படி சொல்லுரீங்கனுதான் எனக்கு புரியலை. இல்லை சென்கொடி பரக்கவிட்டுட்டாலெ சம உரிமை கொடுத்தாச்சினு வசிக்கலமா?.
பொய்யை ****************அம்பலமாகிறது
____________________________________________________
நண்பரே,
வேறொரு தளத்தைப்பற்றிய விமர்சனங்களை இங்கு வைக்கவேண்டாம்
செங்கொடி
கேள்விகள் இங்கே. பதிகள் எங்கே?
http://athikkadayan.blogspot.com/2010/10/blog-post_07.html
kavingar thanigai islam ethnai perai vendum endraalum manakka solla villai adiga patchamaaga 4, adhuvum anivaraium samamaaga nadatha solli irukkiradhu , 4 peraium samamaaga nadathuvadhu sulabam alla enbadu ellorukkum therium, andha kaalathil por nadandhu adhil aangal adigal uir ilappu irunadhadhu adhnaal aangalai vida pengalin ennikkai adigam, adhodu mattum illaamal, adigamaaga vidhvaigal irundhaargal avargalum nalla badi vaazla ippadi sattam irukkiradhu, indru indiavai eduthukondaal ethanai muslimgal 4 pondatti vaithirukkiraargal? muslimgalai vida hindukkal ondrirku mel thunaivirai vaithu irukkiraargal idhai naan solla villai oru survey report solgiradhu.
islamiya murai padi thirumanam oru puratchi thirumanam thaan, aanal neengal othukolla maatteergal, ippodhu nadaimurail muslimgal edhai pinpatrugiraargal endru paarka vendaam, unmail islam enna solgiradhu endru paarungal, 1.varadatchanai vaanga koodhadhu
2.manamagan manamagalukku (mahar) panamo alladu any property koduthu avalai thirumanam saidhu kolla vendum
3. thalak enbadu verum 3 murai solli vittal vivagarathu aagi vidaadhu mudhal murai avan 100 murai thalak endru sonnaalum adhu 1 endru thaan etru kollapadum irandaavadhu murai thalak solla 3 maadha kaalam irukku pinbu 3 murai thalak solla innum 3 maadam vendum motham 9 maadhangal irukku idhai ungalukku evlo sonnalum vasadiyaaga marandhu viduveergal idhu thaan 3 thalakkin murai
4. manamaganukku manamaglidam evvalvu urimai irukkiradho andha alavukku manamagalukkum manamaganidam urimai irukkiradhu.
5. pengalukku pardha poduvadhu avargalai ganniya paduthavey andri verillai,
6. indru arai kurai aadaigalinaal samudaayam eppadi seer kettu irukkiradhu endru paarungal
ungal veettu pengal fashion show vai paarthu vittu udai anivadhu enadhu sudandiram endru verum two piece anindhu kondu veliye sella anumadippeergala?
நபிக்கு 12 மனைவியாமே , அது எப்படி..அவரு முஸ்லிம் இல்லையா ? இல்ல அவருக்கு இந்த சட்ட திட்டம் எல்லாம் பொருந்தாதா ?
செங்கொடி என்ற அரை கம்ப கொடியே! இந்த கட்டுரையின் மூலம் உன்னுடைய அரைவேக்காட்டுத்தனம் தெளிவாக அம்பலம் ஆகிறது. யாரோ தவறான கருத்துக்களை விதைத்ததன் அடிப்படையில் இஸ்லாம் மீது தான் கொண்ட சொந்த வெறுப்பின் காரணமாக கட்டுரை என்ற பெயரில் கப்சாக்களை அவிழ்த்து விட்டு கொண்டு இருக்கிறாய்.
கப்சாக்களும், பொய் மூட்டைகளும், அரைகுறை விளக்கமும், அரைவேக்காட்டுதனமும் கீழே உள்ள விளக்கத்தின் மூலம் அம்பலம் ஆகிறது.
(2 -223). உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! ‘அவனைச் சந்திக்கவுள்ளிர்கள்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
இதில் மேலே உள்ள முதல் வரியை மட்டும் எடுத்து கொண்டு இவராக ஒரு விளக்கத்தை தருகிறார். அதாவது (விளை நிலம் எனும் உவமையின் மூலம் தரிசாகப் போடும் உரிமையும் ஆணுக்கு உண்டு எனச்சொல்லும்) என்ற விளக்கத்தை தருகிறார்.
இவர் இது போல தரிசாக போட்டுள்ளார் என்று நினைக்கிறேன். அதன் இப்படி ஒரு விளக்கத்தை இங்கே தருகிறார்.
உங்களின் விளை நிலங்கள் என்பது உங்கள் மனைவியை தவிர வேறு பெண்ணிடமும் செல்லாதீர்கள் என்று எவ்வளவு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இது இவருக்கு தெரிய வில்லை என்றால் அறிவு உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாமே?
((2 -228). விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்)
அதே போன்று இதுலும் ஒரு வரி இவருடைய வசதிக்கேற்ப! மேலே உள்ள வசனத்தின் மூலம் பெண்களின் உரிமை எவ்வளவு சிறப்பாக கூறப்படுகிறது அந்த முழு வசனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
(2 -282 ). நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள்.85 அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத் தக்கது; ஒருவருக் கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர. (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத் தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.
மேலே உள்ள வசனத்திலும் ஒரு வரி. அதற்கு பின் வரும் வசனங்களை பசிக்காக விழுங்கி விட்டார் போலும்.
(3 -14). பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.
இதற்கும் ஏப்ப சாப்பையான விளக்கங்கள். இவைகள் மீது மிகுந்த ஆசை வைக்காதீர்கள் என்ற அழகான வசனங்கள். ஆனால் இவரோ வசனத்தின் வார்த்தைகளை இவருடைய சுய நலத்திற்காக வலைத்துகொண்டார் போலும்.
இப்படி அனைத்திலுமே இவருடைய சொந்த கருத்துக்களும் சொந்த விளக்கங்களும் கொடுத்து சிறப்பாக ஜோடித்திருக்கிறார். இப்படி பட்ட புளுகு மூட்டைகளை பாராட்டுவதற்காக இவருக்காக சிலர் ஜால்ரா தட்டுகிறார்கள்.
செங்கொடி பரப்பதர்கள்ள தரையில் விரித்து படுத்து தூங்குவதற்கே என்று இதன் மூலம் தெளிவாக அம்பலமாகிறது.
என்னைப் பொருத்த வரையில் தம் என்பது வழிகாட்டி அதாவது இரயில்கைகாட்டி அவ்வளவுதான். நாம் போகும் பாதையில் ஏற்படும் தடைகளை நாமே உணர்ந்து தடைகளை நீக்கி புதியபாதையை வகுப்பது போல் பழைமைவாத தடைகளை புறந்தள்ளி பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும்.அனுமதியளிக்காத மதத்தையும் புறந்தள்ள வேண்டும்.இது காலத்தின் கட்டாயம் தானாகக் கணியாது ஆனால் கணிந்துகொண்டிருக்கின்றது என்பது என்னவோ உண்மை. அதைத்தான் உங்கள் கட்டுரையும் உணர்த்துகிறது.
எல்லா மத,ஜாதிகளிலும் சம தர்ம, மனம் விரும்பும் திருமணங்களே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
அப்பாஸின் பின்னூட்டம், விளக்கம், எழுத்து நடை அருமை. சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாத போதும்
2.228 seems to be a good point. the wife should ensured that she is not pregnant, before getting divorce. practically an useful provision.
சரியான கேள்விகள்.
நண்பர் அப்பாஸ்,
நான் எந்த குரான் வசனத்தையும் முழுமையாக சொல்லவில்லை, இன்னும் அதன் சொற்களை அப்படியே பயன்படுத்தவும் இல்லை. அது என்ன சொல்கிறது என்பதை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். முழு வசனத்தையும் எழுதுகிறேன் என்று வந்த நீங்களும் நான் எழுதிய கருத்தை தெளிவாக மறுத்திருக்கிறீர்களா என்றால் இல்லை. வெறுமனே கோபம் அவ்வளவுதான். பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்? மதத்தை பிடித்துக்கொண்டு தொங்கும் அனைவருமே இப்படித்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் நீங்கள் விதிவிலக்கா என்ன?
2:223 உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள் எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள். இந்த வசனத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான உறவை, விளை நிலத்தின்மீது அதன் ஆண்டைக்கு உள்ள உரிமையோடு ஒப்பிடுகிறது குரான். அதில் தானியங்களை விளைவிப்பதும் தரிசாய்ப் போடுவது ஆண்டையின் விருப்பத்தைச் சார்ந்தது. என்று நான் கூறியது அந்த வசனத்திற்கு நெருக்கமாக இருக்கிறதா? \\உங்கள் மனைவியை தவிர வேறு பெண்ணிடமும் செல்லாதீர்கள்// என்று நீங்கள் கூறுவது நெருக்கமாக இருக்கிறதா? நான்கு மனைவிகள் மட்டுமல்லாது உங்கள் வலக்கரத்திற்கு சொந்தமான எத்தனை அடிமைப் பெண்களோடும் உறவு வைத்துக்கொள்ள குரான் அனுமதித்திருக்கும் போது மனைவியைத்தவிர வேறு பெண்களிடம் செல்லாதீர்கள் என்று அந்த வசனத்திற்கு பொருள் கொள்ள உங்களுக்கு மட்டும் வானத்திலிருந்து வஹி(!) வந்ததா? கணவன் மனைவி உறவை ஆண்டைக்கும் நிலத்துக்கும் ஒப்பிடும் உவமையில் என்ன வெங்காய சமத்துவம் இருக்கிறது? என்பதுதான் நான் எழுப்பிய கேள்வி, அதற்கு உங்கள் பதில் என்ன?
2:228 கணவன் மனைவிக்கிடையில் பிரிவு வந்திருக்கும் நிலையில் எந்தப்பெண்ணும் தன் கர்ப்பத்தை மறைக்கமாட்டாள் என்பது ஒருபுறமிருந்தாலும் சமாதனம் ஏற்படும் சூழலில் மனைவியை சேர்த்துக்கொள்ளும் உரிமை கணவனுக்குத்தான் உண்டு மனைவிக்கு இல்லை. பெண்ணை விட ஆண் உயர்ந்தவன் எனக்கூறும் அந்த வசனத்தில் பெண்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் ஒருவரி எழுதியது தவறு நீங்கள் முழு வசனத்தையும் எழுதினீர்கள். அதில் உள்ள விசயம் என்ன? அதில் என்ன புடலங்காய் சமத்துவம் இருக்கிறது என்பதுதான் நான் கேட்ட கேள்வி, அதற்கு உங்கள் பதில் என்ன?
2:282 ஆணின் ஒரு சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சி இதுதான் குரான் கூறும் நீதி. இந்த வசனத்திலுள்ள மீத வரிகளை நான் பசிக்காக விழுங்கி விட்டதாகவே கொள்வோம். மசிக்கு விரயமாக நீங்கள் எழுதிய அந்த நீ…..ளமான வசனத்தில் நீங்கள் கூற வருவது என்ன? இரண்டு பெண்களின் சாட்சி என்று நான் தவறாக எழுதிவிட்டேனா? மறுத்து நீங்கள் ஆணின் சாட்சியும் பெண்ணின் சாட்சியும் சமமானது என கூறப்போகிறீர்களா? இரண்டு பெண்ணுக்கு ஒரு ஆண் சமமானவன் எனக்கூறும் வசனத்தில் என்ன கத்தரிக்காய் கருத்து இருக்கிறது என்பதுதான் நான் கேட்ட கேள்வி, அதற்கு உங்கள் பதில் என்ன?
3:14 ஆண்களுக்கு சுகம் தரும் பொருட்கள் எவை? தங்கம், வெள்ளி, குதிரை, கால்நடைகள், (கவனிக்கவும்)ஆண்குழந்தைகள், சாகுபடி நிலங்கள் இவைகளோடு பெண்களும் ஆண்களுக்கு சுகம்தரும் பொருட்கள். இது என்னுடைய சுய நலத்துக்காக நான் கூறும் ஏப்ப சாப்பையான விளக்கம் என்றால், உங்களின் ஏப்பமிடாத சாப்பை விளக்கத்தை நீங்கள் கூறவேண்டியது தானே. குதிரை, கழுதை கால்நடை, தங்கம் வெள்ளி போல பெண்களும் ஆண்களின் சொத்து என்று கூறும் இந்த வசனத்தில் பெண்களுக்கு என்ன புண்ணாக்கு உரிமை இருக்கிறது என்பதுதான் நான் கேட்ட கேள்வி, அதற்கு உங்கள் பதில் என்ன?
இந்த வசனங்களை மட்டுமா நான் குறிப்பிட்டிருந்தேன். இன்னும் 4:34; 33:59; 65:6 இவற்றிற்கெல்லாம் நீங்கள் முழு வசனம் எழுதவில்லையே, உங்கள் குரானில் இந்த வசனங்களெல்லாம் கிழிந்துவிட்டதா? அந்த ஹதீஸ்…?
நண்பரே, அறைகுறை என்று ஆரம்பித்து என்னவெல்லாமோ வசைமாரி பொழிவதற்கு முன்னால் கட்டுரையை படித்துப்பார்த்து, என்ன கேட்கப்பட்டிருக்கிறது அதற்கு என்ன பதில் கூறுகிறோம் என நிதானித்து பதில்கூற முயலுங்கள். கோபப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.
செங்கொடி
இது பற்றி ஏற்கனவே ஒரு முறை இந்த தளத்திலேயே விவாதித்திருக்கிறோம் செங்கொடி, ஒரு முறை தருமி அவர்களின் பதிவிலும், கடைசி வரை அவர்களால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லையே!
ஒரே வித்தியாசம் அப்போதெல்லாம் நேரடி விவாதத்திற்கு அழைப்பார்கள், இப்போ அதைக்காணோம்!
Thanks:திப்பு
மணமகன் அலாவுதீனுக்கு சில கேள்விகள். தோழர்களும் பதிலளிக்கலாம். ஆரோகியமான விவாதத்தை வரவேற்கிறேன்.
1. இயக்கவியல் கண்ணோட்டம் கொண்ட கடவுள் மறுப்பாளரான நீங்கள் இசுலாமிய அடையாளம் தரும் பெயரில் நீடிக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. ஆனால் அதை தவறாக பயன்படுத்த உங்களுக்கு உரிமையில்லை. கடவுள் மறுப்பாளர் எனும் போது நீங்கள் இசுலாமியராக இருக்க முடியாது. ஆனாலும் உங்கள் பெயரில் உள்ள இசுலாமிய அடையாளத்தை வைத்துக்கொண்டு முசுலிம் சமாத் திருமண பதிவு புத்தகத்தில் உங்கள் திருமணத்தை பதிவு செய்தது சரிதானா?
2. உங்கள் திருமணத்தை சமாத் பதிவு செய்ய வலிய முன் வந்திருந்தாலும் நீங்கள் மறுத்திருக்க வேண்டும். இயக்கவியல் கண்ணோட்டம் கொண்ட பொருள்முதல் வாதியான உங்களுக்கு உங்கள் கருத்துப்படி பிற்போக்கான ஒரு மதத்தின் நிறுவனத்தில் உங்கள் திருமணத்தை பதிவு செய்ய வெட்கமாக இல்லையா!
3. நீங்கள் சமாஅத்தில் பதிவு செய்யாமல் திருமணம் செய்திருந்தால் உங்கள் உறவினர் நண்பர்களை தவிர்த்து பிற முசுலிம் மக்கள் உங்கள் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பார்களா.
4. கடவுளை மறுக்கும் உங்கள் திருமணத்தை வினவும் பு.ஜ.வும் இசுலாமிய திருமணம் என்று சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
5. உங்கள் திருமணத்தில் இரு சாரார் போட்ட சண்டை பிரியாணி போட்டவுடன் நின்று போனதாக எழுதி பு.ஜ.வும் வினவும் உங்கள் விருந்தினர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
வினவுக்கான கேள்விகள்..
1. உங்கள் அமைப்பு தோழர் ஒருவர் பிற்போக்கு மத நிறுவனத்தில் தனது திருமணத்தை பதிவு செய்வதை எப்படி அனுமதிக்கிறீர்கள்?.”சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்ட திருமணங்கள்” மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள அந்த பதிவேட்டில் ”வர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட”இந்த திருமணத்தை பதிவு செய்வது சரிதானா.
2.சகோதரர் ஹைதர் அலியை அவர் பொதுவுடைமை கொள்கையை ஏற்காதவர் என்றபோதிலும் தோழர் என்றுதான் அழைப்போம் என்கிறீர்கள்.அவரை தோழராக மாற்றும் முயற்சியை கைவிடப்போவதில்லை என்கிறீர்கள்.அது உங்கள் பரப்புரை உரிமை.ஒப்புக்கொள்கிறோம்.உங்கள் முயற்சியில் வெற்றி பெற்றால் அவரை தோழர் என்று அழைக்கலாம்.ஆனால் அப்படி அவர் பொதுவுடமைவாதியாக மாறாதவரை அவர் விரும்பாவிட்டாலும் தோழர் என்றுதான் அழைப்போம் என்பது நீங்கள் போற்றும் பொதுவுடமைப் பண்பாகுமா.
Why are you people are blaming other religion just to show your religion(communism) asif it is better?
So for I have seen not even a single communist (real or duplicate) blogger has portrayed the actual communism for the preacing of it’s ideals. They only try to make up the communism asif the better than others.
Please, kindly reconsider your strategy.
Write and preach only your won religion. Leave blaming the others. If you did so many of the problems will be solved automatically…
you people are the real bad threat to India.
நண்பர் செங்கொடிக்கு
மின்னஞ்சலில் தங்களின் தகவலுக்கு நன்றி. பகுத்தறிவோடு சிந்திக்கின்ற கட்டுரைகளை வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்.எனது முன் பதிவில் “தம்” என பிழையாக உள்ளதை வேதம் என திருத்தி வாசிக்கவும்.
********************************************************
நான் உங்களுக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை. அது தானியங்கியாக வந்த அஞ்சலா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
செங்கொடி
இஸ்லாத்தைக்குறித்து தொடர்ந்து அவதூற்றைப்பரப்பிவரும் செங்கொடிக்கு,
தாங்கள் இதுத்தொடர்பான நேரடி விவாதத்திற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.சகோதரர் பி.ஜெ.அவர்கள் உங்களிடம் விவாதத்திற்கு நாளைக்கேட்டுள்ளார்கள்.சால்ஜாப்பு சொல்லாமல் உடனடியாக ஒப்புக்கொள்ளவும்.தேவையற்ற விவாதங்களையும் கருத்து மோதல்களையும் உருவாக்குவதை நிறுத்த இதனால் இயலும்.
பின்குறிப்பு:உங்களுடைய கருத்துக்கள் முட்டாள்தனமானவை.கம்யூனிசம் தோற்றுப்போன கொள்கை என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆணுக்கு நான்கு மனைவிகள் வரை வைத்துக்கொள்ள சொல்லுகின்ற இஸ்லாம். பெண்ணுக்கு இரண்டு கணவன் வரை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லவில்லை.
திருமண முறிவும் ஆணுக்கு சாதகமாகவே இருக்கிறது. பர்தா, தலாக் என இன்னும் பெண்களை அடிமைகளாகவே இஸ்லாம் கருதுகிறது.
நண்பர் செங்கொடி, /////மணமக்களை அறிந்திராதவர்கள் கூட தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டார்கள், முஸ்லீம்கள் உட்பட. ஆனால் அதுபோன்ற ஒரு திருமணம் பற்றிய செய்தி செப்டம்பர் 2010 புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்டிருந்தது, அதை வினவு “இஸ்லாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்” என இடுகையாக இட்டிருந்தது. முந்திய கட்டுரையில் உரிமையோடு சொந்தம் சொல்லி விளித்து வாழ்த்துக்கூறியவர்கள் கூட பிந்திய கட்டுரையில் தங்கள் பின்னூட்டங்களைச் சுழற்றிச் சுழற்றி சண்டையிட்டார்கள். காரணம் முந்திய திருமணம் யாரோ(!) இருவருக்கிடையில் நடந்தது. இரண்டாவது திருமணமோ இஸ்லாமிய சமுதாயத்தில் நடந்தது. நோக்கத்தில் மாற்றமில்லை, நடைமுறையில் மாற்றமில்லை, விருப்பங்களில் மாற்றமில்லை, கொள்கைகளில் மாற்றமில்லை. ஆனால் மதம் என்ற ஒற்றைச் சொல்லில் மாற்றமிருந்தது. இஸ்லாம் என்ற ஒற்றைச் சொல் மூளையை பிளந்து போட்டது. முற்போக்குச் சிந்தனைகளை முடக்கிப் போட்டது.////// இந்த பதிவிற்கும் எனக்கும் நிறைய தொடர்பு இருப்பதால் நான் மெளனம் கலைந்து பேச வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன் /////////////மணமக்களை அறிந்திராதவர்கள் கூட தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டார்கள்,/////////////////// மணமக்களை நான் நன்கு அறிந்தவன் இந்த முறை விடுமுறையில் ஊருக்கு வந்தபோது நண்பர் பாண்டியனை பு.க அலுவலகத்தில் சந்தித்து பேசினேன் மிகவும் எளிமையானவர் பழக இனிமையானவர் ஒருநாள் பழக்கத்திலே நான் உரிமையோடு உறவு முறை சொல்லி பழகும் அளவுக்கு அவருடான நேருக்கம் ஏற்பட்டது சகோதரி அஜிதா அவர்களை சந்திக்க வில்லையேன்றாலும் கனோளி மூலம் அவர்களுடைய கலை நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன் அதன் மூலம் அவர்கள் மீது ஒரு மரியாதை கலந்த பாசம் நான் ம.க.இ.க வுடைய கலைக்குழுவின் ரசிகன் என்றுக்கூட சொல்லலாம் அதானல் வாழ்த்து தெரிவித்தேன் இதனை நீங்கள் இவ்வளவு கொச்சைப்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை குறிப்பு: இப்போழுது வேல நேரம் பிஸியாக இருக்கிறேன் மாலை 5ந் மணிக்கி மேல் (சவூதி டைம்) விரிவாக ஒக்கந்து எழுதுகிறேன்
தனக்கென ஒரு வட்டத்தை போட்டு கொண்டு, தான் மட்டும் அறிந்த விளக்கத்தை வைத்து கொண்டு அறியாமையை விட்டு விலகியவர்களை மீண்டும் அறியாமைக்குள் தள்ள நினைக்கும் “ஒரு வரி புலவரே”
நான் கோபப்படுவதற்கு இங்கே காரணம் உண்டு. ஆனால் தாங்கள் கோபப்படுவதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
(2 -223). உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! ‘அவனைச் சந்திக்கவுள்ளிர்கள்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
மேலே உள்ள வசனத்தை மீண்டும் இவர் முழுமையாக வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன். (உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! ‘அவனைச் சந்திக்கவுள்ளிர்கள்’) இப்படிப்பட்ட வார்த்தைகள் ஒருவனை நல்வழிபடுத்த கூடிய வார்த்தைகளா அல்லது தரிசாக போடுங்கள் என்று தீங்கை விளைவிக்க சொல்ல கூடிய வார்த்தைகளா? அப்படி தரிசாக போடுங்கள் என்று சொல்வதற்கு இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்த தேவையில்லை என்று நான் நினைக்கிறன். ஆனால் அது போன்ற காரியங்கள் செய்தவர்களுக்கு இவ்வதமான எண்ணங்கள் வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இவ்விதமான வசனங்களே இவருடைய விளக்கத்திற்கு தடுப்பு சுவர்களாக நிற்கின்றன.
(2 -228).
ஒரு (சிறப்பான) குடும்பம் அமைய ஆண் பெண் நல்லிணக்கம் தேவை. நல்லிணக்கம் இல்லையென்றால் அக்குடும்பம் சின்னாபின்னமாகிவிடும் என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு சிறப்பான குடும்பத்தை நிர்வகிக்கும் மிக பெரிய பொறுப்பு ஆண்களிடமே உள்ளது. அதற்காகத்தான் நம் இந்தியா அரசின் குடும்ப அட்டையில் கூட 99 . 99 % ஆண்களே குடும்ப தலைவர்களாக உள்ளனர். (இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்). இந்த வசனம்தான் இவருக்கு உரிமை பறிப்பாக தெரிகிறது. இப்படிவைத்து கொள்வோம் ஒரு ஆண் பல பெண்களை நாடினால் அது பெண்களுக்கு பாதிப்பு என்று கூறும் நீங்கள். அதே விதமான பாதிப்பு ஆண்களுக்கும் உண்டு என்று தாங்கள் ஏன் நினைப்பதில்லை?. ஆண்களிடம் கட்டு பட்டு நடப்பதாலேயே ஒரு பெண்ணும் சிறப்படைவால் அதே நேரத்தில் அக்குடும்பமும் சிறப்படையும். (பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.) அதற்கு அடுத்து வரும் வசனங்கள் கடமைகளும் உரிமைகளும் பெண்களுக்கு சிறந்த முறையில் உண்டு என்று தெளிவு படுத்துகிறது. ஆனால் தாங்கள் இதை மறந்தது (மறைத்தது) ஏனோ?
(2 – 282 ) உள்ள வாசகம்.
(உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள். அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. )
மேலே உள்ள வாசகம் தமிழில்தான் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இரண்டு ஆண்கள் இல்லாதபட்சத்தில் ஒரு ஆணையும் அதுவும் திருப்தியடையும் ஆணை சாட்சியாக வைத்துகொள்ள சொல்கிறது. ஆனால் இவரோ இவர் ஒரு வரியை எடுத்து கொண்டு சப்பை கட்டு கட்டுகிறார். இதை மறுப்பதற்கு தாங்கள் இஸ்லாம் மீது கொண்ட சொந்த வெறுப்பே காரணம் என்று தெளிவாக தெரிகிறது.
(3 -14). (பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது)
நாம் இப்போது கண்கூடாக காண்கிறோம். இப்போதுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் பணம் என்று. அது மட்டும் இல்லாமல் கள்ள தொடர்பு என்ற பிரச்சனையினால் கொலைகள் இப்போது சாதரணமாக நடக்கிறது என்பதை நாம் தினம்தோறும் செய்திகளிலும் நாளேடுகளிலும் காண்கிறோம். பணத்தை போன்று தவறு செய்யும் பெண்ணும் ஒரு போதை என்று அனைவருக்கும் தெளிவாக தெரியும். ஒரு ஆண் தவறு செய்தால் அது அவனை மட்டும்தாம் பாதிக்கும் ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் அவனுடைய கணவன், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் பாதிக்கும். தவறு செய்யும் பெண்கள் ஒரு போக பொருள் அதனால் அவர்களை நாடாதீர்கள் என்று தெளிவாக கூறபடுகிறது. இந்த வசனத்தின் மூலம் பெண்களின் உரிமை பரி போய்விட்டது என்று விண்ணுக்கும் மண்ணிற்கும் குதிக்கிறார் இந்த புண்ணாக்கு வியாபாரி.
அது மட்டும் அல்லாமல் ஆண் குழந்தைகள் மீது கூட ஆசை வைக்காதீர்கள் என்று பெண் சிசு கொலைகளை தவிர்ப்பது போன்று பெண்ணின் உரிமையை உயர்த்துகிறது இந்த வசனம்.
(4 : 34 ) (ஆண் பெண் இருபாலாரில்) சிலரை சிலைவிட மேன்மைபடுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தாங்கள் சொத்துக்களிலிருந்து செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தாங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்க வேண்டியவற்றை, அல்லாவின் பாதுகாவல் கொண்டு பாதுகாத்துக் கொள்வார்கள். எந்த பெண்கள் விசயத்தில் அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லா உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கிறான்.
கணவனுக்கு மாறு செய்யும் பெண்களுக்கு முதலில் நல்லுபதேசம் தான் சொல்ல சொல்கிறது. அதில் கட்டுபடாவிட்டால் படுக்கையை விட்டு விலக்கிவிடுங்கள். அதன் பின்புதான் (இலேசாக) அடியுங்கள். அதிலும் வரம்பு மீறி விடாதிர்கள் என்று சொல்லபடுகிறது. ஆனால் இவரோ முதலில் கொஞ்சம் முடிவில் கொஞ்சம் என்று எடுத்து கொண்டு இவர் மனதில் படும் கருத்தின் வாயிலாக அடியுங்கள் என்று தன்னுடைய இயக்க நண்பர்களுக்கு சொல்லி கொடுக்கிறார்.
(33 – 59 ). நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக் கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.’ அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
மேலே உள்ள வசனம் குர் ஆன் வசனம் ஆனால் இவரோ (ஆண்களின் கண்களிலிருந்து தன்னை மறைத்துக்கொள்ளாத பெண்களை நான் தண்டிப்பேன் (33:59)) இது போன்ற வசனத்தை சொல்கிறார். நான் தண்டிப்பேன் என்று அந்த வசனத்தில் எதாவது ஒரு வார்த்தை உள்ளதா? பெண்களின் கற்பு மற்றும் பெண்களை போக பொருளாக காட்டக்கூடாது என்பதற்காக அந்த வசனம் உள்ளது. ஆண்கள் மேலே ஆடையில்லாமல் தெருக்களில் நடக்க இயலும் அதுவே ஒரு நல்லொழுக்க பெண்ணால் இயலுமா? இவர் புளுகு மூட்டைகளின் மொத்த உருவம் என்று அற்பட்டமாக தெரிகிறது.
(65-6). உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த் துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்கு) அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் (அக்குழந்தைக்கு) இன்னொருத்தி பாலூட்டட்டும்.
ஆண் பெண் இருவருக்கும் மன ஒற்றுமை இல்லாமல் விவாகம் செய்ய நேரிட்டால் அப்போது அந்த தாயின் நலனை மட்டும் கருதினால் போதாது. அந்த பிள்ளையின் நலனையும் கருத வேண்டும். இவர்களின் சண்டைக்குள் அந்த குழந்தை பாதிக்கப் படும். அதன் நலனை கருதி இந்த வசனம் சொல்ல படுகிறது. ஆனால் இவருக்கு கூலி என்பது பணம் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறது. ஆம் அதுக்காகவே போராடும் நபர்களுக்கு அதுதானே தெரியும். அவர்களை சிரமபடுத்ததீர்கள், நெருக்கடி ஏற்படுத்தாதீர்கள் போன்ற வார்த்தைகள் எல்லாம் இவர் கண்களில்ருந்து மறைந்து விட்டது.
குர் ஆன் (64 – 6). அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களை புறக்கணித்தான். அல்லாஹ் தேவை யற்றவன்; புகழுக்குரியவன்.
நான் மீண்டும் கூறுகிறேன் உங்கள் தலைவர்கள் அனைவரும் வயிறு சம்பந்த பட்ட பிரச்சனைகாகவே போராடினார்களே தவிர குடும்பம் தொடர்பான விசயங்களை மறந்து விட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. யாரோ இவர் மனதில் விதைத்த தவறான எண்ணங்களை இவர் திரட்டி வைத்து கொண்டு சொந்த வெறுப்பின் காரணமாக இது போன்ற அரைகுறை கட்டுரைகளை அவிழ்த்து விட்டு கொண்டிருக்கிறார். இவருக்கு ஆதரவாக (கவிஞர் தணிகை) சிந்திக்கும் ஆற்றலை இழந்த நபரும் சிலரும். பகுத்தறிவு என்பது பசிக்காக போராடுவது மட்டும் அல்ல. வாழ்கையை சிறப்பாக வாழ்ந்து காட்டுவதும்தான். நன்றி.
எனக்கும் இதே கேள்விதான். உலகின் அழகிய மணமக்கள் பதிவின் போது, வியந்து பாராட்டிய பல இஸ்லாம் சகோதரர்கள் இப்போது ஏன் தேவையில்லாமல் இப்படி திருமண செய்தியே பொய் என்பதைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்ப்படுத்த முயல்கிறார்கள் எனத் தெரியவில்லை.
மேலும், இந்த திருமண முறை பிற்போக்கானது என்று கூறிக்கொண்டும் தங்கள் பழைய முறைதான் முற்போக்கான திருமண முறை எனக் கூறி யாரை நம்ப வைக்க முயல்கிறார்கள். இதைப் பார்த்து மேலும் பலர் முற்போக்கான வழிகளில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வார்களோ என்ற பயந்து அவர்களைத் தடுக்க முயற்சிக்காரார்களோ என என்பதைத் தவிர வேறெந்த காரணமும் எனக்குப் பிடிபடவில்லை.
இங்கேயும் சரி, இன்னும் சில பதிவுகளிலும் சரி, அவர்கள் இன்னமும் தங்கள் முறைதான் சரி என்று வாதிட்டுக்கொண்டிருப்பது ஏன்? இவர்களது இந்த செயல்களைப் பார்க்கும்போது ‘பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டதாக நினைக்கும்’ என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.
/*பகுத்தறிவு என்பது பசிக்காக போராடுவது மட்டும் அல்ல. வாழ்கையை சிறப்பாக வாழ்ந்து காட்டுவதும்தான்.*/
பசிவந்துட்டால் பத்தும் பரந்துடும் அப்படினு சொல்லுரது சரிதானொ.
அஜ்ஹிர் அலி, அதுவே ஐந்தறிவு ஜீவனுக்கும் பகுத்தறிவுள்ள மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம். (அறிவு) உள்ளவன் சிந்திப்பான் இல்லாதவர்கள் மொட்டைதாத்தா குட்டையில் விழுந்தது போல் விழுந்து விட வேண்டியதுதான்.
‘பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டதாக நினைக்கும்’ இது ஒரு பகுத்தறிவுள்ள பழமொழியா? பழமொழிதான் ஆதரமா? சிந்திப்பதை மறந்து (மறுத்து) விட்டு சிறு பிள்ளைத்தனமாக உளறாதே Mr . அன்பு
அச்சொசோ, இது என்ன ஒரு காமெடி பதிவு, செங்கொடி இஸ்லாதுல அரகொரன்னு தெரியும், ஆனா இவ்வளவான்னு தெரியாது,
கொஞ்சம் தனியா ஒக்காந்து யோசிச்சு பாருங்க. ஆனா, பொண்ணுக்கு இயற்கையாவே உணர்ச்சிகள் வேற, இது புரியாம ஆணும பொண்ணும் சமம்னு போலம்பிகிட்டு இருக்கீங்க, சமம்னு தான் இஸ்லாமும் சொல்லுது, சில விஷயங்கள் ஆண்களுக்கு சில விஷயம் பெண்களுக்குன்னு சரியான முறையில இருக்குற சட்டம்.
உங்கள மாதிரி வெளி நாட்டுல சொல்லிக்கிட்டு இருந்தாங்க, ஆணும் பொண்ணும் சமம்னு, இப்டி சொல்ற எல்லா எடத்துலயும் பொண்ணுங்கள தும்சம் பண்ணிட்டு போயிடுறாங்க, உங்க கருத்துக்கு முதல்ல பொண்ணுங்க எத்தன பெரு சப்போர்ட் பண்றாங்கன்னு போயி பாருங்க.
ஆணும் பொண்ணும் செக்ஸ் வச்சிகிறது கொச்சன்னு சொல்றிங்க நீங்க, அப்டிலம் இல்லப்பா சரியான முறையில வசுகங்கன்னு சொல்லுது இஸ்லாம், அது தப்பாம்,
அவங்க அவங்க இஷ்டத்துக்கு வாழுங்க னு விளைவு விளங்காம சொல்றிங்க நீங்க, அப்டிலம் இல்லப்பா இப்டி இருந்தாதான் சரியா இருக்கும்னு சொல்லுது இஸ்லாம்.
உங்களோட அறியாமை கேள்விக்கு இஸ்லாத்தின் அடித்தட்டில் இருக்கும் என்னால் கூட சரியான பதில் தரமுடியும், நானும் சவுதியில் தான் இருக்கிறேன், நீங்கள் இருக்கும் தம்மாமில் தான் நானும் இருக்கிறேன். சந்திக்க தயாரா? ?
உங்கள் கருத்துக்கள் முட்டாள் தனமானவை என்பதை விரைவில் பதிவில் போடுகிறேன்.
Mr. அப்பாஸ், நான் அதை பகுத்தறிவு பழமொழின்னு எங்க சொல்லி இருக்கேன்? உங்களில் சில பேர் தொடர்ந்து ‘உங்கள் திருமண முறைதான் முற்போக்கானது, கடவுள் மறுப்பு திருமணங்களை விட’ என பிடிவாதமாக இருப்பதை சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்ட ஒரு சின்ன உவமை அவ்வளவுதான். எந்த வகையில் உங்கள் திருமண முறை முற்போக்கானது எனக் கேட்டால், பழமொழி முற்போக்கானதா என ஆராய்வது ஏன்?
நண்பர் செங்கொடி, ////இரண்டாவது திருமணமோ இஸ்லாமிய சமுதாயத்தில் நடந்தது. நோக்கத்தில் மாற்றமில்லை, நடைமுறையில் மாற்றமில்லை, விருப்பங்களில் மாற்றமில்லை, கொள்கைகளில் மாற்றமில்லை. ஆனால் மதம் என்ற ஒற்றைச் சொல்லில் மாற்றமிருந்தது. இஸ்லாம் என்ற ஒற்றைச் சொல் மூளையை பிளந்து போட்டது. முற்போக்குச் சிந்தனைகளை முடக்கிப் போட்டது/// அய்யா எதையும் மொடக்கி போடல நான் எதற்காக கேள்வி எழுப்பினேன் என்பதையும் நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் இருந்தாலும் இங்கும் பதில் சொல்லுகிறேன் 1.மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்துணைத் தலைவரின் மகளல்ல எப்புடி இப்படி ஒரு பொய்யை துனிந்து சொல்கீறிர்கள் என்று தெரியவில்லை? 2.பொதுவாகப் பச்சைக் கொடி முசுலிம்களின் அடையாளமாக சித்தரிக்க படுகின்றன உண்மை அதுவல்ல அப்புறம் அந்த எப்போழுதும் பச்சைக்கொடி பறக்கும் என்று ( பச்சைக்கொடி செவப்புக்கொடி இவர்களின் எதுகை மொனை ரசனைக்காக) புதிய ஜனநாயகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அந்த மண்டபத்தில் இதுவரை எந்த பச்சை கொடியும் பறந்ததில்லை 3.தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தில் கலந்துக் கொண்டதாக கதை அளந்து விட்டிருக்கிறது பு.ஜ. இதழ் இதுவும் அண்டபுழுகு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை 4.திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக எந்த முசுலீமும் நம்புறதில்லை குர் ஆனிலையும் இல்லை இது நம்ம டி விஜய ரஜேந்தர் படத்துல வர்ர பாட்டு (கால்யணந்தாம் சொர்க்கத்துல நிச்சயிக்கபடுதாம் பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப் படுதாம்) அவரு மக கலியணத்துல கொண்டு பொயி போர்டு வையுங்க பொருத்தமாக இருக்கும். அப்புறம் நம்ம டி ரஜேந்தர் மாதிரி சொர்க்கம். வர்க்கம். தர்க்கம் அப்புடியின்னு அடுக்கு மொழி வசனத்த யூஸ் பன்னி போர்டு வச்சுட்ட அது முசுலிம்களின் நம்பிக்கை அயிடுமா? 5.ஒரு நேர்மையான பத்திரிக்கையாக இருந்தால் தள்ளு முள்ளு நடந்ததை எழுதியிருக்க வேண்டும் மணமகனிடம் தவ்ஹீத் ஜமாத்தார்கள் தாவா செய்து விட்டு வெளியேறி போனதை எழுதியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாற்றமாக (தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர், அக்:2010 பு.ஜ. பாக்கம் 17)திட்டி விட்டு சென்றவர்களை வாழ்த்திவிட்டு சென்றதாக எழுதியாது உண்மையா? 6.நம்ம அப்பாசு இருக்கார்ல அப்பாசு அவரு கரைக்குடி காரரு என்பதினால் சிவகங்கை மவட்ட தவ்ஹீத் ஜமாத் தலைவரும் என் நண்பருமான அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சவூதியல இருந்து நம்ம அப்பாசு போன் பொட்டு என்னுடைய மகளுக்கு தவ்ஹீத் முறைப்படி திருமணம் நடக்கவிருக்கிறது அதானல் உங்களின் தவ்ஹீத் மண பதிவேடு புத்தகத்தை எடுத்துட்டு போங்க அதில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார் இப்படி ஏன் அப்பாசு சொல்லி தவ்ஹீத் ஜமாத் காரர்களை ஏமாற்ற வேண்டும்?
நண்பர் அப்பாஸ்,
பெண்ணை அடிமைத்தளையில் நீடிக்கவைக்கும் எதையும் உடைப்பதுதான் மண உறவில் புரட்சிகரமானது. அத்தகைய நிலை எதுவும் இஸ்லாமிய திருமணமுறையில் இல்லை. எனவே அது புரட்சிகர உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் கட்டுரையின் மையக்கரு. இதை துலக்கமாக எடுத்துக்காட்டுவதற்குத்தான் நான் சில குரான் வசனங்களின் கருத்துகளை எடுத்துக்கொண்டிருந்தேன். இதை மறுக்கப்புகுந்த நீங்கள் மையத்தை விலக்கிவிட்டு வசனங்களின் மீதான பார்வையை மட்டும் எடுத்துவைக்கிறீர்கள். நேரடியாகவே கேட்கிறேன் இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் சமமெனக் கருதுகிறதா? அல்ல என்றால் அதில் வாதிப்பதற்கு ஒன்றுமில்லை, இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதல்ல. இனி வசனங்களுக்கு வருவோம்.
2:223 உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள் எனக்கூறும் உவமையை மட்டுமல்ல அதன் பிறகான சொற்களையும் சேர்த்துக்கொண்டு பாருங்கள். அது அல்லா மனிதனுக்கு உபதேசம் செய்திருக்கிறான் என்றெல்லாம் கூறுகிறீர்கள். ஒன்றை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். வெறும் உவமையை மட்டும் வைத்துக்கொண்டு நான் அந்தக் கருத்துக்கு வரவில்லை. அந்த உவமையைக் கூறும் அல்லாவின் பார்வையே தவறு என்பதுதான் என் நிலைப்பாடு. (இந்த இடத்தில் அல்லாவின் கோணம் என்பதை இல்பொருள் உவமை அணியாகத்தான் பயன்படுத்தியுள்ளேன்) அல்லாவின் நீதிமன்றத்தில் மனைவியை ஒதுக்கிவைப்பதொன்றும் குற்ற நடவடிக்கையல்ல. ஆணுக்கு ஒத்திசைவாக நடக்காத பெண்ணை பணியவைப்பதற்கு அல்லா பரிந்துரைக்கும் வழிமுறைகளில் படுக்கையைவிட்டு விலக்கிவைப்பதும் ஒன்று. அதே நேரம் ஆண் அழைத்துவிட்டால் எந்தக்காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கக்கூடாது என்பதும் அல்லாவின் வழிமுறைகளில் உள்ளதுதான். ஆக ஆணும் பெண்ணும் கலக்கும் உறவு என்பது முழுதாக ஆணின் விருப்பு வெறுப்புகளைப் பொருத்தே இருக்கவேண்டும் என்பதுதான் அல்லாவின் நீதி. அதனால்தான் உவமை கூறும் இடத்தில் கூட நிலமும் நீரும் என்பதைப்போன்று கூறாமல் நிலமும் அதன் உரிமையாளனும் எனக்கூறப்பட்டிருக்கிறது. அல்லா கூறும் உபதேசத்தையும் சேர்த்து பொருள் கொள்ளச்சொல்லும் உங்களுக்கு அல்லாவின் பார்வையே கோணல் என நான் கூறுவதை செரிப்பது கொஞ்சம் சிரமம் தான்.
2:282 \\மேலே உள்ள வாசகம் தமிழில்தான் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இரண்டு ஆண்கள் இல்லாதபட்சத்தில் ஒரு ஆணையும் அதுவும் திருப்தியடையும் ஆணை சாட்சியாக வைத்துகொள்ள சொல்கிறது. ஆனால் இவரோ இவர் ஒரு வரியை எடுத்து கொண்டு சப்பை கட்டு கட்டுகிறார். இதை மறுப்பதற்கு தாங்கள் இஸ்லாம் மீது கொண்ட சொந்த வெறுப்பே காரணம் என்று தெளிவாக தெரிகிறது// ஒரு ஆணின் சாட்சிக்கு ஈடாக ஏன் இரண்டு பெண்களின் சாட்சி என்பதுதான் விவாதிக்க வேண்டிய விசயம். நீங்கள் எழுதியிருப்பது எந்தவிதத்திலாவது இதை எதிரொலிக்கிறதா? இரண்டு ஆணின் சாட்சி அல்லது ஒரு ஆண் இரண்டு பெண்களின் சாட்சி. இது ஆணும் பெண்ணும் சமம் எனக்காட்டுகிறதா? ஆணைவிட பெண் மட்டமானவள் எனக்காட்டுகிறதா?
3:14 \\மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது// என நீங்கள் குறிப்பிட்டுள்ள இடத்தில் உண்மையில் ஆண்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது என்பது தான் சரியானது. ஏனென்றால் மனிதர்கள் என்றால் அது பொதுவாக ஆண்களையும் பெண்களையும் சேர்த்துக் குறிக்கும். இந்த வசனம் கூட உபதேசத்தின் சாயலில் கூறப்படுவதுதான். நான் மறுக்கவில்லை. ஆனால் நான் சொல்வது அந்த வசனம் உபதேசமா இல்லையா என்பதல்ல. ஒரு ஆணின் பார்வையில் இவ்வுலக சுகம்தரும் பொருட்களாக கூறப்பட்டுள்ளவைகளில் பெண்களையும் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பெண் என்பவள் ஆணுக்கு ஒரு சுகம் தரும் கருவி என்றமட்டில்தான் அதன் பொருள் இருக்கிறதேயன்றி ஆணும் பெண்ணும் சமம் என்பதாக இல்லை என்பதுதான் நான் குறிப்பிட்டது. நீங்கள் உங்கள் பதிலாக குறிப்பிடவேண்டியதும் அதுவே. ஆண் தவறு செய்தால் ஆணை மட்டுமே பாதிக்கும் பெண் தவறு செய்தால் குடும்பத்தையே பாதிக்கும், முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் என்பன போன்ற நிலப்பிரபுத்துவக்கால கற்புநெறி பழமொழிகளையெல்லாம் குப்பைக்கூடைக்கு அனுப்பிவிட்டு ஆணுக்குப் பெண் ஏன் சமமாக இருக்கமுடியாது என்பதைக் கூறுங்கள்.
4:34 முதலில் நல்லுபதேசம் பிறகு படுக்கையில் விலக்குதல் அதன் பிறகு அடித்தல், இது பெண் தவறு செய்தால் ஆண் செய்யவேண்டியவைகள். சரி, ஆண் தவறு செய்தால் பெண் என்ன செய்யவேண்டும்? ஆணுக்கு கீழானவள்தான் பெண் என்பதுதான் இஸ்லாத்தின் குரானின் அல்லாவின் அடி நாதம். இதில் எத்தனை வசனங்களை புளிவைத்து விளக்கினாலும் பொருள் ஒன்றுதான். லேசாகத்தான் அடிக்கச்சொல்லியிருக்கிறது என நீங்கள் அடைப்புக்குறிக்குள் போட்டு சமாளித்தாலும் ஏன் அடிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி?
33:59 தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் என நீங்கள் பொருள்கண்ட இடத்தை ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் நோவினை செய்யப்படாதிருக்க என பொருள் கொண்டிருக்கிறார்கள். நோவினை யார் செய்வது அல்லாவைத்தவிர. தவிரவும் தங்கள் அங்கங்களை மறைத்துக்கொள்ளாவிட்டால் அது ஆண்களை தூண்டிய குற்றத்தை ஏற்படுத்தும் என்பதே பெண்ணை மட்டமாக நினைக்கும் ஆண்களின் பார்வையைத்தான் குறிக்கிறது. அதைத்தான் அல்லாவும் வெளிப்படுத்துகிறார். கலவி என்பது தேவை என்பதைத்தாண்டி நுகர்வு என்றானபின்னர்தான் அங்கங்கள் கவர்ச்சியாகிறது. நுகர்வாக இல்லாத இடங்களில் கவர்ச்சி இல்லை. இதற்கு எதிரிடையாக பெண் துன்பப்படாதிருக்க வேண்டுமென்றால் ஆண்களால் எதுவெல்லாம் கவர்ச்சியாக பார்க்கப்படுகிறதோ அதையெல்லாம் மறைக்க வேண்டும் என குற்றத்தை பாதிப்பால் ஈடு செய்ய நினைக்கும் பார்வையில், பெண் என்பவள் ஆணின் போகப் பொருள் என்பதுதானே நிலை நிறுத்தப்படுகிறது.
65:6 கணவன் மனைவிக்கிடையில் பிரிவினை வந்துவிட்டால் குழந்தை யாரைச் சேரும்? ஒருபோதும் பெண்ணுக்கல்ல. சிரமபடுத்ததீர்கள், நெருக்கடி ஏற்படுத்தாதீர்கள் என்றெல்லாம் அந்த வசனத்தில் இருக்கிறது. இருந்தால் என்ன? அதன் உட்கரு என்ன? குழந்தையின் மீது மனைவிக்கு உரிமையில்லை. அந்த உரிமையில்லாததன் அடிப்படையில் பால் கொடுக்கக் கூலி. பலியிடப்போகும் ஆட்டுக்குக் கூட நல்ல உணவிட்டு சிறப்பாக பராமரிக்கிறார்கள் என்பதற்காக நல்ல எஜமானன் என்று ஆடு மகிழ்ந்துவிட முடியுமா? அந்த ஆட்டின் நிலையில் தான் பெண்ணும் இருத்திவைக்கப்பட்டிருக்கிறாள்.
ஆக எடுத்துக்காட்டப்பட்ட அனைத்து வசனங்களிலும் பெண் ஆணுக்கு கீழானவள் எனும் நிலையே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதேயன்றி சமத்துவம் அல்ல. சமத்துவம் இல்லாத இந்த நிலையை ஏற்றுக்கொண்டு என்ன சடங்குகளை நீங்கள் செய்தாலும் செய்யவில்லையென்றாலும் அத்திருமணம் புரட்சிகரமானதாக இருக்கமுடியாது.
நாங்கள் என்ன பிரச்சனைக்காக் போராடுகிறோம்? யாருக்காக போராடுகிறோம் என்பதெல்லாம் அந்த போராட்டங்களில் நீங்களும் பங்குபற்ற வரும்போது தெளிவாக உங்களுக்கு விளங்கியிருக்கும். நீங்கள் இன்று அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் போராட்டங்களின் மூலம் பெறப்பட்டதேயன்றி துவாக்களின் மூலம் பெறப்பட்டதல்ல என்பதை நீங்கள் உணரும் காலம் வரும். அந்தக்காலத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம், அதற்காக பாடுபடுகிறோம்.
செங்கொடி
நண்பர் ஹைதர் அலி,
குறிப்பிட்ட அந்த வாசகங்கள் உங்களை மனதில்வைத்து எழுதப்பட்டதுதான் என்றாலும் அதில் உங்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கம் கிஞ்சிற்றும் இல்லை என்பதை உளமாறக் கூறுகிறேன். அது ஒரு ஆதங்கம். முந்தைய திருமணத்தில் அவ்வளவு உரிமையுடன் வாழ்த்துத்தெரிவித்த நீங்கள் பிந்தைய திருமணத்தில் மறந்தும் கூட உங்கள் வாழ்த்தைப் பதிவு செய்யவில்லை. நீங்கள் குறிப்பிட்டிருப்பவைதான் அத்திருமணத்தில் உங்கள் ஏற்பின்மை என்றால் மணமக்களுக்கு வாழ்த்தைத் தெரிவித்துவிட்டுக்கூட அவைகளை நீங்கள் எழுப்பியிருக்கலாம். மாறாக, உங்கள் எழுத்தில் அந்தத்திருமணத்தில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இல்லை திருமணத்தில் உங்களுக்கு உடன்பாடுதான் ஆனால் அதை புஜவில் எழுதிய விதம் மட்டும்தான் தவறானது என நீங்கள் கருதியிருந்தால், ஒருமுறை அதை வெளிப்படையாக அறிவித்துவிடுங்கள். பின் என்னுடைய பிழையான புரிந்துகொள்ளலுக்காக உங்களிடம் வருத்தம் தெரிவித்து சுயவிமர்சனம் செய்துகொள்வதில் எனக்கு வெட்கமொன்றும் இல்லை.
மற்றப்படி நீங்கள் தெரிவித்துள்ள காரணங்கள் அனைத்திற்கும் வினவு தளத்திலேயே தோழர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள் என்பதால் நான் குறிப்பிட ஒன்றுமில்லை.
செங்கொடி
நண்பர் ஃபா,
உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்ததும் உங்கள் மேல் பரிதாபம்தான் வருகிறது. முதலில் நீங்கள் பதிவைப் போடுங்கள் அதிலாவது ஏதாவது விசயமிருக்கிறதா என்று பார்க்கலாம்.
செங்கொடி
சென்கொடியே!
குர் ஆன் வசனங்களோ, (உண்மையான) இஸ்லாமிய திருமண முறையோ பிற்போக்கானதல்ல. தாங்கள் இஸ்லாம் மீது கொண்ட வெறுப்பும் தங்களுடைய இயக்க நண்பர்களின் எண்ணமும்தான் பிற்போக்கானவை என்று மேலே உள்ள விவாதத்தை ஒருவர் நடுநிலையாக பார்த்தால் தெரியும்.
(ஒரு ஆணின் சாட்சிக்கு ஈடாக ஏன் இரண்டு பெண்களின் சாட்சி என்பதுதான் விவாதிக்க வேண்டிய விசயம். நீங்கள் எழுதியிருப்பது எந்தவிதத்திலாவது இதை எதிரொலிக்கிறதா? இரண்டு ஆணின் சாட்சி அல்லது ஒரு ஆண் இரண்டு பெண்களின் சாட்சி. இது ஆணும் பெண்ணும் சமம் எனக்காட்டுகிறதா? ஆணைவிட பெண் மட்டமானவள் எனக்காட்டுகிறதா?)
(ஆண் தவறு செய்தால் ஆணை மட்டுமே பாதிக்கும் பெண் தவறு செய்தால் குடும்பத்தையே பாதிக்கும், முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் என்பன போன்ற நிலப்பிரபுத்துவக்கால கற்புநெறி பழமொழிகளையெல்லாம் குப்பைக்கூடைக்கு அனுப்பிவிட்டு ஆணுக்குப் பெண் ஏன் சமமாக இருக்கமுடியாது என்பதைக் கூறுங்கள்.)
ஓகே பிரக்டிகலா வருவோம்.
ஆண் பெண் சமம். இஸ்லாமிய திருமண முறையில் அது காணப்படவில்லை அதனால் அது புரட்சிகரமானது அல்ல என்பது தான் தாங்களுடைய அரை கட்டுரையின் மைய கரு என்று தாங்கள் தெளிவாக கூறிவிட்டீர்கள்.
சரி இப்படி வைத்து கொள்வோம். நான் என்னுடைய மேல் சட்டை இல்லாமல் உங்களுடைய வீட்டில் வந்து உட்காருகிறேன். அதே போன்று தங்களுடைய சகோதரியை என்னுடன் உட்கார அனுமதிப்பீர்களா? எனக்கு சகோதரி இல்லை என்று இதற்கும் பூசி மொழுகாமல், முடியும் அல்லது முடியாது என்று ஒரு வரியில் தாங்கள் பதில் தர வேண்டும். அப்படி முடியும் என்றால் இப்போதே நான் வர தயார் முகவரியை தாருங்கள். ஆனால் முடியாது என்றால் தங்களுடைய ஆண் பெண் சமம் என்ற வாதம் அடி பட்டு விட்டது என்று அர்த்தம். பாசங்குடைய பதில்கள் இல்லாமல் கட்டாயம் இதற்கு முடியும் அல்லது முடியாது என்று பதில் கூறுங்கள்.
தவ்ஹீத் ஜமாத் தாங்களை நேரடி விவாதத்திற்கு அழைத்தால் தாங்கள் மறுப்பதற்கு காரணம் மேலே உள்ள விவாதத்தின் மூலம் தெளிவாக தெரிகிறது. நேரடி விவாதத்திற்கு அழைத்தால் நீங்கள் ஏன் சால் ஜாப்பு சொல்லுகிறீர்கள். தங்களுடைய சிந்தனைகள்தான் முற்போக்கு என்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும். தங்குடைய குட்டு வெளிப்பட்டு விடும் என்று நான் கருதுகிறேன். விவாதத்தில் கலந்து கொண்டு மக்களை வென்றெடுக்க வேண்டியதானே?
ஜர்காவாமல் விவாதத்திற்கு கலந்து கொள்ள தாங்களை வேண்டுகிறேன். அதற்கான ஏற்பாடுகளை வேண்டுமானால் நானும் செய்து தருகிறேன்.
//சரி இப்படி வைத்து கொள்வோம். நான் என்னுடைய மேல் சட்டை இல்லாமல் உங்களுடைய வீட்டில் வந்து உட்காருகிறேன். அதே போன்று தங்களுடைய சகோதரியை என்னுடன் உட்கார அனுமதிப்பீர்களா?//ஹய்யா இனிமே செங்கொடிக்கு பிறச்சனையில்லை அவர் சுலபமாக சொல்லிவிடுவார் “தங்கள் விவாதத்தில் நேர்மையில்லை, விவாவாதம் செய்ய தெரியவில்லை தங்கள் உளரல்களை இனிமே பொருட்டுத்த மாட்டேன்” என்று முற்று புள்ளி வைத்துவிடுவார்!!!!
//சரி இப்படி வைத்து கொள்வோம். நான் என்னுடைய மேல் சட்டை இல்லாமல் உங்களுடைய வீட்டில் வந்து உட்காருகிறேன். அதே போன்று தங்களுடைய சகோதரியை என்னுடன் உட்கார அனுமதிப்பீர்களா?// அப்பாஸ் அவர்களே தமிழ்நாடு எப்போதோ சவுதி அரசு பிடிக்கு வந்து விட்டது என்பது தங்களுக்கு தெரியாதா???? அவர் வேளியே தலைகாட்டினால் அவருக்கு பல பிரச்சனை வந்துவிடும்….வேண்டும் என்றால் தாங்கள் டிஎன்டிஜே’யை ருஸ்ஸியாவிற்கு போய் விவாதம் செய்ய சொல்லுங்கள்
//ஆண் பெண் சமம்// ஒரே வயதுடைய ஆண் பெண் மோதிக்கொள்ள செய்யுங்கள் முடிவில் யார் (physical) பலம் உடையவர் என்று தங்களுக்கு தெரியவரும்
//4:34 முதலில் நல்லுபதேசம் பிறகு படுக்கையில் விலக்குதல் அதன் பிறகு அடித்தல், இது பெண் தவறு செய்தால் ஆண் செய்யவேண்டியவைகள். சரி, ஆண் தவறு செய்தால் பெண் என்ன செய்யவேண்டும்?//
என்னை பொறுத்தவரை தவறு என்பது இஸுலாத்திற்கு எதிராக நடப்பது உதாரணமாக ஒரு ஆண் தவறு செய்கிறான் அதற்கு அந்த (ஈமானுள்ள)பெண் அவனை தண்டிக்க முற்படுகிறாள் .ஏற்கணவே நல்வழியில் தரம்புரண்ட அவன் தண்டிக்க வரும் மணைவியை பந்தாட எவ்வுளவு நேரம் ஆகும் .பாதிப்படைய போவது யார்?
ஸ்டாலினை பற்றி எடுத்துக்கூறும் தாங்கள் அப்படியே ஸ்டாலின் மனைவிகளை பற்றியும் எடுத்துக்கூறுங்கள் Ekaterina Svanidze,Nadezhda Alliluyeva,Rosa Kaganovich
//சரி இப்படி வைத்து கொள்வோம். நான் என்னுடைய மேல் சட்டை இல்லாமல் உங்களுடைய வீட்டில் வந்து உட்காருகிறேன். அதே போன்று தங்களுடைய சகோதரியை என்னுடன் உட்கார அனுமதிப்பீர்களா? //
இது குரானின் படி அனுமதிக்கப் பட்டதா? ஆண்கள் மேல் சட்டை இல்லாமல்
இருக்கலாமா?
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (7:26)
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். (7:27)
இது விக்ரம் படத்தில் கமல் ஒரு பெண்ணிடம் சொல்லிய ஆபாசமான வசனம்.
ஒருவேளை நீங்கள் கமலை பின்பற்றுபவரோ? இஸ்லாம் சும்மா பேருக்கா?
இதனை உங்கள் வீட்டின் முன்பு கல்வெட்டில் பொறித்து வைத்து அனைவரும் படித்து ஞானம் பெற வாழ்த்துகிறேன்.
நண்பர் சங்கர் அவர்களே! உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. பூசி மொழுகும் பதில்கள் மட்டும் ஏவுகணைகளாக விழுகின்றன.
உங்களுக்குத் தான் குர் ஆன் வசனம் தேவையில்லையே பின்பு எதற்காக அதை மேற்கோள் காட்டவேண்டும். அனுமதிக்கப் பட்டதா அல்லது படாததா என்பது என்னோடு போகட்டும்.
இங்கே ஆபாசமா? அல்லது ஆபாசம் இல்லையா? என்ற விவாதம் நடக்க வில்லை. மாறாக ஆணும் பெண்ணும் அனைத்து நடவடிக்கைகளிலும் சமமாக நடத்த பட வேண்டும் என்ற கருத்தை திரு. செண்ட்கொடி அவர்கள் இங்கே பதிவு செய்தார். அதற்கு நான் ஒரு விளக்கத்தைச் சொல்லி அதுவும் நடைமுறையில் உள்ள விளக்கத்தை சொல்லி கேள்வி கேட்டேன்.
அதற்கு தாங்கள் கோபம் முற்று வரிந்து கட்டிக் கொண்டு விக்ரம் கமல் என்று பாசாங்கு பதில்களை கூறுகிறீர். உங்களை விட கமலை முற்றிலும் எதிர்ப்பவன் நான் அது இங்கே தேவையில்லை. பதிலுக்காக காத்திருக்கிறேன்.
அன்பு இசுலாமிய நண்பர்களே ,என் இனிய செங்கொடி தோழர்களே ,
உங்களுக்கு எல்லாம் என் சலாம் மற்றும் லால் சலாம் .
நான் தான் காரல் மார்க்க்ஸ் பேசுறேன் . உண்மையான இஸ்லாமிய இஸ்லாமிய திருமணத்துல வரதட்சணை கிடையாது , தாரை தம்பட்டம் கிடையாது , பாட்டு,கூத்து கேளிக்கை கிடையாது, ஆணும் பெண்ணும் சேர்ந்து கூத்தடிக்க முடியாது ,வீண் விரயம் கிடையாது , எளிமை மட்டும் தான் உண்டு , அது ஒரு வாழ்க்கைகான ஒப்பந்தம் தான் என்று ஜம்பம் அடிக்கும் இஸ்லாமியர்களே கேளுங்கள் . என்னுடைய வழியில் வந்த செங்கொடி தோழர்களின் திருமணங்களை பற்றி. முதலின் என்னுடைய ஆஸ்தான சிஷ்யன் ஸ்டாலினின் கதையை கேளுங்கள் .
என்னுடைய சிஷ்யன் ஸ்டாலின் எப்படி பெண் சுதந்திரத்தை காப்பாத்தியிருக்கார் தெரியுமா ? அந்த சுதந்திரத்தை நிரந்தரமா அனுபவிச்சு அலுத்து போய்தான் அவர் முதல் மனைவி Nadeszhda Alliluyev தற்கொலை செய்துட்டாங்க . அவர் மகள் ஸ்வெட்லானா கூட ஸ்டாலின் கொடுத்த சுதந்திர காற்றை சுவாசிச்சி கிட்டே தான் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிட்டாங்க தெரியுமா ? என்ன பெரிசா இஸ்லாமிய பெண் சுதந்திரத்தை பத்தி பேசுறீங்க. அரைகுறை ஆடை உடித்திகிட்டு உலகம் முழுதும் விபசார தொழில் செய்யும் சீன பெண்களை போன்ற சுதந்திரம் உங்களுக்கு உண்டா ? கொஞ்சம் கூடம் வெட்கம் இல்லாம கவர்ச்சியை எல்லாம் மறைச்சிக்கிட்டு எங்க ஜொள்ளு தோழர்களுக்கு எதையும் காண்பிக்காம நடக்கிற உங்களுக்கு பெண் சுதந்திரத்தை பற்றி பேச என்ன யோகத்தை இருக்கு.?
எங்க திருமணத்தில பகத் சிங் படம் வைப்போம் , புரட்சி பாட்டு பாடுவோம், தாராளம் வரதட்சணை கூட வாங்குவோம். இதெல்லாம் இருக்கிற எங்க திருமணம் புரட்சியா ? இல்லை எளிமை ,எளிமை, மகர் என்று வாய்கிழிய பேசும் உங்க திருமணம் புரட்சியா ?
ஒண்டிக்கு ஒண்டி வந்தா இந்த காரல் மார்ச்ஸ் துலுக்கன் மாரை பிட்சி புடுவேன் பிச்சி ஆமா ……
இப்ப நேரம் ஆயிடுச்சி . நேரம் கிடைக்கும் போது வருவேன் தோழர்களே உங்களுக்கு சப்போர்ட் செய்வதற்கு .
இப்படிக்கு
காரல் மார்க்ஸ்
அப்பாஸ் அவர்களே சங்கர் எப்பொளுதுமே அப்படித்தான் முதலில் விவாதம் செய்யலாம் என்று ஆரம்பிப்பார் சில நாள் கழித்து ஏதாவுது உளர ஆரம்பித்து விடுவார் ,தாங்கள் அவரிடம் பதில் ஏதும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்!! அவருக்கு மனம் சம்பந்தமான குறை இருக்கிறது என்று நினைக்கிறேன்……ஆதலால் எப்போது உளர ஆரம்பிக்கிறாரோ அப்போது விவாதத்தை முடிப்பது நன்று…
//உங்களுக்குத் தான் குர் ஆன் வசனம் தேவையில்லையே பின்பு எதற்காக அதை மேற்கோள் காட்டவேண்டும். அனுமதிக்கப் பட்டதா அல்லது படாததா என்பது என்னோடு போகட்டும்.//
யார் சொன்னது ?நான் குரானை ஐந்து வருடமாக படித்து வருகிறேன். அது ஒரு சிறந்த புத்தகம் என்ற வகையில் அதன் மீது மதிப்பும், பல விமர்சனங்களும் உண்டு. படித்தால் நிச்சயம் கேள்விகள் வரும் ,பதில் கிடைக்கும் வரை தேடல் தொடரும்.
இங்கே பிரச்சினை என்ன .இஸ்லாமிய முறையல்லாமல் ஒரு ஆணும் பென்னும் திருமணம் செய்து கொண்டார்கள். அது அனுமதிக்கப் பட்டதா இல்லையா அவர்களோடு போகட்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.
போன வசனம் கொஞ்சம் மரியாதையான வசனம். இங்கே ஒரு ஆண் யார் யார் முன்னல் ஆடயின்றி இருக்கலாம் என்று கூறுகிறது. கேளுங்கள்.
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் ‘ளுஹர்’ நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் – இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (24:58)
குரானில்(மற்றும் ஹதிது) மட்டுமே இறைவனின் வார்த்தை அதனை அப்ப்டியே பின்பற்றுவோ. அப்படி செய்யதவன் எல்லாம் இஸ்லாமிய பெயர் தாங்கி என்று நண்பர்கள் கூறுவார்கள்.
சும்மா தைரியமாக சொல்லி விடுங்கள் . மதம்,நம்பிக்கை எல்லாம் சும்மா,இப்படி மதத்திற்காக இப்படி பேசினால்தான் நாலு பேர் மதிக்கிறான் என்ன செய்வது?.
ஒருவேளை நீங்கள் இந்துத்வா(வியா)தியா இஸ்லாமியர்களை இப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று கேவலப் படுத்த திட்டமா?.
//இங்கே ஆபாசமா? அல்லது ஆபாசம் இல்லையா? என்ற விவாதம் நடக்க வில்லை. மாறாக ஆணும் பெண்ணும் அனைத்து நடவடிக்கைகளிலும் சமமாக நடத்த பட வேண்டும்//
யாகவராயினும் நா காக்க என்ற வள்ளுவரின் வாக்குதான் ஞாபகம் வருகிறது.
அனைத்து நடவடிக்கைகளிலும் நடத்தப் பட வேண்டுமென்றால் என்ன?.
இஸ்லாம் ஒரு(ஆண்களுக்கு மட்டும்) இனிய மார்க்கம்தான்
குரான் வசனத்தில் மனைவியை அடிக்க சொல்லி இருக்கிறது என்றால் அத்ற்கு என்ன விளக்கம்?
வலக்கரம் சொந்தமாக்கி கொளண்டவர்கள் என்றால் யார்?
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். (23:6)
இது சட்டப் படி செல்லுமா?
இன்னும் நிறைய இருக்கு. வாங்க
//அப்பாஸ் அவர்களே சங்கர் எப்பொளுதுமே அப்படித்தான் முதலில் விவாதம் செய்யலாம் என்று ஆரம்பிப்பார் சில நாள் கழித்து ஏதாவுது உளர ஆரம்பித்து விடுவார் ,தாங்கள் அவரிடம் பதில் ஏதும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்!! அவருக்கு மனம் சம்பந்தமான குறை இருக்கிறது என்று நினைக்கிறேன்……ஆதலால் எப்போது உளர ஆரம்பிக்கிறாரோ அப்போது விவாதத்தை முடிப்பது நன்று//
நண்பருக்கு வணக்கம் . நல்லா இருக்கிங்களா?. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி
//சரி இப்படி வைத்து கொள்வோம். நான் என்னுடைய மேல் சட்டை இல்லாமல் உங்களுடைய வீட்டில் வந்து உட்காருகிறேன். அதே போன்று தங்களுடைய சகோதரியை என்னுடன் உட்கார அனுமதிப்பீர்களா?//
தலைவா! அப்பாசு! என்னா ஒரு விளக்கம். புல்லரிக்குதுப்பா. சரி இப்படி வைத்துக்கொள்வோம். அமெரிக்காவுல ஜட்டியே போடாம முச்சந்தியில நிக்க ஒரு பொண்ணு ரெடி. நீங்க ஜட்டி போடாம அவ கூட நிக்க ரெடியா!
கீ பல ஹால் காட்டரபி என்ற சாகித், ////தலைவா! அப்பாசு! என்னா ஒரு விளக்கம். புல்லரிக்குதுப்பா. சரி இப்படி வைத்துக்கொள்வோம். அமெரிக்காவுல ஜட்டியே போடாம முச்சந்தியில நிக்க ஒரு பொண்ணு ரெடி. நீங்க ஜட்டி போடாம அவ கூட நிக்க ரெடியா!///// அப்ப இந்த விஷயத்துல ஒங்களுடைய முழமையான அதரவு அமெரிக்காவுக்கு உண்டு அப்புடித்தானே அப்புறம் ஏணே அமெரிக்காவ எதிக்கிறோம் ஆப்பிரிக்காவ எதிக்கிறோமுன்னு கத விடனும்
நண்பர் சங்கர் செளக்கியமா,///இது குரானின் படி அனுமதிக்கப் பட்டதா? ஆண்கள் மேல் சட்டை இல்லாமல்
இருக்கலாமா?/// இருக்காலம்
நண்பர் ஹைதர்,
அஹ்லன்!அஹ்லன்!. நீங்க இங்கதான் இருக்கீகளா! ஹைதர் நான் சாகித் இல்லை. இப்புடி எதுவும் தெரியாம மூக்கை நுழச்சுதான் வினவுல மூக்கு உடைஞ்சது. இங்கயுமா! நான் சாகித் இல்லை. சாகித் இல்லை! நான் காட்டரபி! காட்டரபி!.
அன்பார்ந்த ஹைதர்! ஆணைபோலவே உணர்வும், உயிருமுள்ள பெண்ணுக்கும் நமது சமூக வாழ்வியலில் சமமான உரிமையை கொடுங்கள் எனக்கேட்டால் உங்களது சகோதரர்கள் பிராவைக் கழட்ட பெண்கள் ரெடியா என்கின்றனர். உரிமைக் கொடுப்பது என்பது பிராவைக் கழட்டுவதுதான் என்று எந்த அர்த்தத்தில் கூறுகிறீர்கள். விளக்கவும்
///அஹ்லன்!அஹ்லன்!. நீங்க இங்கதான் இருக்கீகளா! ஹைதர் நான் சாகித் இல்லை. இப்புடி எதுவும் தெரியாம மூக்கை நுழச்சுதான் வினவுல மூக்கு உடைஞ்சது//// யாருக்கு ஒங்களுக்கு தானே
ஆதியில் மனிதன் ஆடையின்றித் திரிந்ததுதான் வரலாறு.நாகரீகம் கருதி ஆடைகளை நெய்து அலங்கரித்துக் கொண்டவன் மனிதனே. அதை மறைபொருளாக்கி கவர்ச்சியாக்கியதும் மனிதனே. ஆடையின்றி ஆணும் பெண்ணும் உலாவியது கவர்ச்சி என அன்று ஆதிமனிதர்களுக்குத் தெரியவில்லை. மனிதன் சிந்திக்காமல் இருந்திருந்தால் இன்றும் அதே நிலைதான் நமக்கும். ஆதாம் ஏவாளை கலிமண்ணினால் படைத்த கடவுள் பேண்ட்டும் சுடிதாரும் போட்டுமா அழகு பார்த்தான்? உள்ளாடை முதற்கொண்டு நாமே படைத்தோம். ஆடைகள் அளித்தது ஆண்டவன் அல்ல மனிதனே. இப்படித்தான் ஆடைகளை நெய்து உடுத்தவேண்டும் என செய்முறை விளக்கம் கூவியதாக வேதவரலாறு ஏதும் இல்லை. ஆணுக்கு இணையாக ஆபாசப்பட அழகிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்? அங்கு அவ்விருவர்களும் சமமானவர்களே. அந்தரங்கமான விசயங்களில் இருபாலரும் சமமே. விமர்சனங்கள் கொச்சைப்படுத்துவதற்கு அல்ல,கருத்து பரிமாற்றத்திற்காக அமைந்தால் அனைவருக்கும் பயன் தரும். பதி(நா)வடக்கம் தேவை நண்பர்களே.
//யாருக்கு ஒங்களுக்கு தானே//
மூக்கு உடைபட்டது யாருக்கு? தவ்ஹீதினர் கலந்துகொல்ளவே இல்லை என அடம்பிடித்த உங்களுக்கா? அல்லது எனக்கா?
ஹைதர்! பெண்களுக்கு சமமான உரிமையை கொடுங்கள் எனக்கேட்டால் உங்களது சகோதரர்கள் பிராவைக் கழட்ட பெண்கள் ரெடியா என்கின்றனர். உரிமைக் கொடுப்பது என்பது பிராவைக் கழட்டுவதுதான் என்று எந்த அர்த்தத்தில் கூறுகிறீர்கள். விளக்கவும்
.
செங்கொடி,
மணமகன் மணமேடையில் அவராக தனியாக இருந்ததுபோன்ற படங்களைத்தான் பார்த்ததாக நினைவு.
மணமகளை மேடைக்கு வரவைக்கக்கூட துணிவில்லாத புரட்சி என்ன புரட்சி? ஏன் இப்படி புரட்சி என்ற வார்த்தையை கொச்சைப்படுத்துகிறீர்கள்?
ஒருவர் ஒரு மதத்தை ஏற்றுக் கொள்கிறார் என்றாலே அங்கு பெண்ணடிமைத்தனம் வந்துவிடுகிறது. அதிலும் இஸ்லாம் வழிப் புரட்சி என்பது ..என்ன கொடுமை செங்கொடி???
**
இஸ்லாத்தினுள் இருந்து கொண்டு அவரின் மத எல்லைக்கு உட்பட்டு சில கலக முயற்சிகளைச் செய்கிறார் என்று நினைக்கிறேன்.
மாற்றத்தை நோக்கிய ஒரு படிக்கல் என்று சொல்லுங்கள் சரி.நிச்சயம் மாற்றம் கொண்டாடப்படவேண்டியது மற்றும் ஆதரிக்கப்படவேண்டியது.
எந்த ஒரு மதத்தை அல்லது சாதியைப் பின்பற்றுபவரும் கம்யூனிஸ்ட்டாக இருக்கமுடியாது. கம்யூனிஸ்ட் அனுதாபியாக ஆதரவாளாராக (வெளியில் இருந்து ஆதரவு) இருக்கலாம். இப்படியே போனால் வடது இலது போல இஸ்லாமிய கம்யுனிஸ்ட்கட்சி வந்துவிடும்.
.
.
Karl Marx
Religion is the opium of the people
From wiki …
http://en.wikipedia.org/wiki/Opium_of_the_people
//Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people. The abolition of religion as the illusory happiness of the people is the demand for their real happiness. //
.
நண்பர் அப்பாஸ்,
இஸ்லாம் பெண்களை ஆணைவிட கீழாக மோசமாக நடத்துகிறது, சமத்துவம் அங்கே இல்லை என்பதற்கு சில வசனங்கள் மூலம் எடுத்துக்காட்டியிருந்தேன்.
௧) விளை நிலங்கள் எனும் உவமையின் மூலம் பெண் என்பவள் ஆணின் உடைமையான ஒரு பொருள் எனக்காட்டி பெண்ணை கீழ்மைப்படுத்துகிறது.
௨) ஒரு ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சி எனக்கூறியதன் மூலம் பெண்ணை மட்டப்படுத்துகிறது.
௩) ஆண்களுக்கு சுகம்தரும் பொருட்களை பட்டியலிடும்போது பெண்ணையும் சேர்த்துக்கூறி பெண் என்பவள் ஆணின் சுகத்துக்காகத்தான் என்று பெண்ணைக் கேவலப்படுத்துகிறது
௪) பெண்களை படுக்கையிலிருந்து விலக்கியும் அடித்தும் ஆண்கள் தங்கள் வழிக்கு கொண்டுவரலாம் என்று பெண்ணை அடிமைப்படுத்துகிறது.
௫) வெறிகொண்டலையும் ஆணின் பாலியல் குற்றத்தை பெண்ணின் பாதிப்புகளை கொண்டு பயங்காட்டி சமப்படுத்துகிறது
௬) பிரிவினை என்று வந்துவிட்டால் பெற்ற குழந்தையைக்கூட தாய்க்கு உரிமையில்லாததாக ஆக்கி தாய்மையை இழிவுபடுத்துகிறது
௭) பிரிவினை என்று வந்துவிட்டால் கணவனுக்கு மட்டுமே திரும்ப அழைத்துக்கொள்ளும் உரிமை உண்டு என்றதன் மூலம் பெண்ணை அலட்சியப்படுத்துகிறது.
௮) ஆண் அழைத்துவிட்டால் பெண் மறுக்கக்கூடாது என்றதன் மூலம் ஆணை திருப்திப்படுத்துவதே பெண்ணின் வேலை என்று அசிங்கப்படுத்துகிறது
என்று நான் எடுத்துக்காட்டியிருந்தேன். \\குர் ஆன் வசனங்களோ, (உண்மையான) இஸ்லாமிய திருமண முறையோ பிற்போக்கானதல்ல// என நிருவ விரும்பும் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும், குரானின் வசனங்கள் இன்னின்ன விதங்களின் சரியானது எனவே ஆணும் பெண்ணும் சமமாக இருக்கவேண்டிய அவசியமில்லை என எடுத்துக்காட்டியிருக்க வேண்டும். ஆனால், ஆணும் பெண்ணும் சமமல்ல என்பதை நிரூபிப்பதற்கு அவுத்துப்போடச் சொல்லுகிறீர்கள். நன்றி, ஆணும் பெண்ணும் சமமல்ல என்பதை குரானின் சட்டதிட்டங்களின் மூலம் நிரூபிக்கமுடியாது, அசிங்கமான வழிகளையே பின்பற்றவேண்டும் என ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறீர்களே, அதற்கு மிகுந்த நன்றி.
முதலில் என் மனைவி குறித்து, இப்போது என் சகோதரி குறித்து, ஆக பெண்களை போகப்பொருளாகத்தான் இஸ்லாமும் குரானும் வைத்திருக்கிறது என்பதற்கு நீங்களே ஆகச்சிறந்த சாட்சியாக இருக்கிறீர்கள். குரான் ஒரு ஆணை பெண்ணின் விசயத்தில் எப்படி உருவாக்கும் என்பதற்கும் நீங்களே எடுத்துக்காட்டு.
ஒரு ஆணின் முன்னால் பெண்ணால் நிர்வாணமாக இருப்பதினால் இயலாமை என்ன இருக்கிறது? ஒரு பெண் துணிந்துவிட்டால் எங்கும் அவளால் நிர்வாணமாக இருக்கமுடியும். ஆனால் பிரச்சனை ஒரு நொடி அவள் நிர்வாணமாக இருந்தால் அதன் பிறக்கான வாழ்நாள் முழுதும் இந்த ஆணாதிக்க சமூகம் அவளை விபச்சாரி என ஏசும். அதுதான் அவளுக்கு இயலாமையாக இருக்கும். இன்னின்ன பாகங்களைத்தவிர மற்றவைகளை மறைக்காவிட்டால் உன் கற்புக்கு(!) பங்கம் வந்துவிடும் என குரான் உட்பட உலகின் பிற்போக்குத்தனங்களெல்லாம் பெண்ணை ஆணாதிக்க நுகத்தடியில் கட்டிவைப்பதால், ஆண்டாண்டுகாலமாக அந்தச் சிறையில் இருப்பதால் அதன் உள்ளார்ந்த மதிப்பீடுகளை உணரமுடியாமல் உடன்பட்டுப் போகிறாள். இதைத்தான் நீங்கள் ஆண் சட்டையை கழற்ற முடியும் பெண்ணால் முடியுமா? என்கிறீர்கள். நானும் அப்படித்தான் இருப்பேன் என ஒரு பெண் துணிந்துவிட்டால் உங்களால் என்ன செய்யமுடியும்? பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்? குரானிய குட்டையில் ஊறிய பெண்களை மட்டும்தானே நீங்கள் கண்டிருப்பீர்கள். புரட்சிகர பெண்களைக் கண்டதுண்டா? கத்திரி வைத்திருப்பார்கள், வெட்டிவிடுவார்கள். ஜாக்கிரதை
உலகில் அரையாடை மட்டுமே அணிந்த பழங்குடி இன சமூகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? எல்லா ஆண்களின் முன்னாலும் மேலாடையின்றி அவர்களால் இயல்பாக வரமுடியும். இதைக்கொண்டு நீங்கள் அங்கு ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்படுகிறார்கள் என முடிவுகட்டிவிடுவீர்களா?
நேரடிக் குதியல்கள் வெகு சில நாட்களாக இங்கு இல்லாமலிருந்தது. நண்பர் வால்பையன் இங்கு அதை மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டார், அதனால் மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஏன் இங்கு நடப்பதெல்லாம் உங்களுக்கு விவாதமாய் தெரிவதில்லை. இன்னார்தான் என் கேள்விகளுக்கு பதில்கூறவேண்டும் என எந்தக் கட்டுப்பாடுகளும் நான் விதிப்பதில்லை. அவசரம் என்றால் இங்கோ அவர்களின் சொந்தத்தளங்களிலோ விவாதிக்கலாமே. நேராக வந்தால்தான் ஆச்சு என அடம்பிடிப்பது ஏன்?
செங்கொடி
நண்பர் கல்வெட்டு,
மாற்றத்தை நோக்கிய படிக்கல் என்பது சரியான சொல்லாடல்தான். அது இஸ்லாமிய சமுதாயத்தில் சீர்திருத்தத்திருமணம் என்பதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு புரட்சிகரமான மாற்றம். அதற்கான எதிர்வினைகளின் விளைவாகவே இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கனவே பரீட்சித்துப்பார்க்கப்பட்டதுதான். வளைகுடா நாடுகள் அனைத்திலும் அரபு மார்க்சியம் இருந்திருக்கிறது. மீண்டும் அது எழுந்து மார்க்சியத்தை நோக்கி நடைபோடவும் செய்யும்.
செங்கொடி
நண்பர் செங்கொடி,முதலில் ஒன்றை தெளிவுப்படுத்திவிடலாம், சகோதரர் அப்பாஸ் அவர்கள் உங்களுக்கு பதில் சொல்லும் விதமாக ஹதீஸ் குர் ஆன் அடிப்படையில் பதில் கூறிக்கொண்டிருந்தாதல் நானும் அதே அடிப்படையில்பதில் கூறினாள் குழப்பம் ஏற்படும் என்று இதுவரை எழுதவில்லை ஆனால் அவர் தெளிவான பதில் சொல்லியும் பதிலில்லை பதிலில்லை என்று நீங்கள் சமாளிப்பதால் இனி நான் அடிப்படையில் இருந்து விளக்குகிறேன் ஆனால் ஒரு ஒரு வசனமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் முதலில் ஒரு வசனத்திற்கு தேளிவு கிடைத்தபிறகு அது சம்பந்தமான துனை கேள்விகள் மேலும் விளக்கங்கள் சரியா தவறா என்று முடிவேடுத்துவிட்டு அடுத்த வசனத்திற்கு போகலாம் ரெடியா?
நண்பர் செங்கொடி,/////உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் (2:223) என்று விருப்பப்படியெல்லாம் பரிசோதனை செய்யத்தூண்டும், விளை நிலம் எனும் உவமையின் மூலம் தரிசாகப் போடும் உரிமையும் ஆணுக்கு உண்டு எனச்சொல்லும், பெண்களை போகப் பொருளாக வைக்கும் நிலையை உள்ளே வைத்திருக்கும் இஸ்லாமிய திருமணம் எந்த விதத்தில் புரட்சிகரமானது?//// (அல்பகறா:2 வச:223 உங்களின் மனைவியர் உங்களின் விளை நிலங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்) இந்த வசனம் எந்த காலகட்டத்தில் இறங்கியது இந்த வசனம் அந்த சமூக மக்களுக்கு என்ன அறிவுரை சொல்லுவதற்காக இறங்கியது இதையேல்லாம் ஆய்வு செய்யாமல் வேறுமென கம்யூனிஸ கோப பார்வையோடு ஆரய்ந்தால் ஒங்களுக்கு ஒன்றும் புரியாது, இந்த வசனம் மதீனாவில் இறங்கியது அங்கு யூதர்களிடம் இருந்த மூட பழக்க வழக்கங்கள் நிறைந்து கானப்பட்டன (ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து பெண்ணுறுப்பில் உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள் எனவே; உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள் உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பிவாறு செல்லுங்கள் எனும்(2:223) வசனம் இறங்கியது அறிவிப்பவர்:ஜாபிர் (ரலி) நூல்கள்:புகாரி(4528) முஸ்லிம்(2826) ) இந்த வசனத்தின் மூலம் அதுபோன்ற மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டன, நபிகள் காலத்து யூதர்கள் சில முறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது என்று கருதி வந்தனர் அவ்வாறு உறவு கொண்டால் குழந்தை மாறு கண்ணுடையதாகப் பிறக்கும் எனவும் பிரச்சாரம் செய்து வந்தனர் ( நூல்:முஸ்லிம் 2592) இந்தத் தவறான நம்பிக்கைக்கு எதிராகவே இவ்வசனம் அருளப்பட்டது மேலும் குறிப்பிட்ட நாட்களில் தான் இல்லறம் நடத்த வேண்டும் என்பன போன்ற மூட நம்பிக்கைகளையும் இவ்வசனம் எதிர்க்கிறது. மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் முகமாக இறங்கிய ஒர் புரட்சிகரமான வசனத்தை திரித்து ஆன்டை தரிசு என்று எப்படி விளக்கம் கொடுக்க துனிந்தீர்கள் நேர்மையானவாரக இருந்தால் சுய விமர்சனம் செய்யுது கொள்ளுங்கள் இதற்கான பதிலை பொறுத்து அடுத்த வசனங்களை நொக்கி செல்லலாம்
//ஒரு ஆணின் முன்னால் பெண்ணால் நிர்வாணமாக இருப்பதினால் இயலாமை என்ன இருக்கிறது? ஒரு பெண் துணிந்துவிட்டால் எங்கும் அவளால் நிர்வாணமாக இருக்கமுடியும். ஆனால் பிரச்சனை ஒரு நொடி அவள் நிர்வாணமாக இருந்தால் அதன் பிறக்கான வாழ்நாள் முழுதும் இந்த ஆணாதிக்க சமூகம் அவளை விபச்சாரி என ஏசும்//
நிர்வாணமாக இருப்பதினால் இயலாமை என்ன இருக்கிறது? என்று கேட்கும் நீங்கள் எங்களை போல்(மத வெறியர்கள்) உள்ளவர்களை திருத்துவதுதானே உங்கள் பணி ஆதலால் நிர்வாணம் என்பது சீரழிவு என்று எண்ணிக்கொண்டிருக்கும் மக்களிடம் ம.க.இ.க உள்ள பெண்கள் நிர்வாணமாக பிறச்சாரம் செய்யலாமே தாங்கள் புரட்சி செய்யலாமே …பிறர் தூற்றுவார் என்று எண்ணினால் தங்கள் அலுவகத்தில் பெண்களும் ஆண்களும் பிறந்தமேணியாக வேலைகளில் ஈடுபடலாமே (இதனால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்களாமே)…..கம்யூனிசத்தை பிராக்டிகலாக உள்ளே புகுத்துங்கள் என்றும் சொல்லும் உங்களுக்கு இதை செய்வது உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காதே………….
காட்டரபி அவர்களே எனக்கு தாங்கள் வினவில் நான் எழுப்பிய கேள்விக்கு விடை தரவேயில்லையே……….
காட்டரபி:
பள்ளிக்கூடத் தம்பி, நீங்கள் கட்டுரையை ஒழுங்காவே படிக்கமாட்டீங்களா! இவங்க சொன்னாங்கன்னா எழுதியிருக்கிறாங்க?
Reply
Posted on 13-Aug-10 at 8:20
schoolboy
ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்துவிட்டு அதற்கு மேல் குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டராவது கையில் தண்ணீர் புட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்து கடக்கும் இவர்களிடம், இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன. ithukku neengalay meaning thaangq mr.kaatarabi….
Posted on 14-Aug-10 at 12:58 am
திருமணத்தில் ஆரம்பித்து, நிர்வாண்த்தில் வந்து முடிந்து விட்டது. தோழர் செங்கொடி இஸ்லாமிய திருமணம் குறித்து சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு சில நண்பர் மட்டுமே அது குறித்து பதில் அளித்து கொண்டு இருக்கின்றனர்.
நிர்வாணமாக பிற பெண்களை இருக்க சொல்வது நாகரிகமாக இல்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.
இஸ்லாமிய திருமண விவரங்கள் குறித்து சரியாக( மத்த்தின் படி) செய்யப் பட வேண்டியது என்ன?
1. மகர் என்பது என்ன,எவ்வளவு கொடுக்கப் பட வேண்டும்?
2. திருமணத்தின் போது மணமக்கள் தாங்கள் இஸ்ல்லாமை மன பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று அறிக்கை இட வேண்டுமா?
3. ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் முதல் மனைவி தடுக்க இயலுமா?.
4. விவாக ரத்து செய்தால் குழந்தைகள் யார் பொறுப்பில் இருக்க வேண்டும்?
5. முஸ்லிம் ஆண் யூத ,கிறித்தவ பெண்களை மணப்பது குரானில் அனுமதிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன் சரியா?
6. முஸ்லிம்களுக்கிடையே கலப்பு மணம்( சுன்னி,ஷியா, பிற வகுப்பினரிடம்) செய்யவது உண்டா?.
7. எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும்?
8.தற்காலிக திருமணம்(முட்டா) ஷியா பிரிவினரிடம் நடைமுறைக்கு உள்ளது. இது சரியா?.
http://www.al-islam.org/encyclopedia/chapter6a/7.html
9. ஆண் நினைத்தால் பெண்ணை அவள் விருப்பமின்றி விவாகரத்து செய்ய இயலுமா?
10.பெண் நினைத்தால் ஆணை அவன் விருப்பமின்றி விவாகரத்து செய்ய இயலுமா?
//நண்பர் சங்கர் செளக்கியமா,///இது குரானின் படி அனுமதிக்கப் பட்டதா? ஆண்கள் மேல் சட்டை இல்லாமல்
இருக்கலாமா?/// இருக்காலம்//
வணக்கம் நண்பரே . நீங்களாவது முறையாக விவாதம் செய்கிறீர்கள் மகிழ்ச்சி.
இது குரானில் கூறப்பட்டுள்ளதா?
//நிர்வாணமாக பிற பெண்களை இருக்க சொல்வது நாகரிகமாக இல்லை//
நண்பர் செங்கொடிதான் “இயலாமை” என்ற சொல்லை பயன்படுத்தினார் …அவர் நிர்வாணம் என்பது தவறு என்று சொல்லவிலையே மாறாக பிறர் அவரை விபசாரி என்று திட்டும் என்று தான் சொல்கிறார் …….கம்யூனிஸ்டுகள் தான் எதையும் பிராக்டிகளாக சிந்திக்கும் தன்மையுடையவர் ஆயிற்றே. மதம் என்னது மூடத்தனம் என்று சொல்லும் அவர்கள் ஒன்றும் ஒரு மதத்தில் இருந்துகொண்டுசொல்லவில்லை அதே போல் நிர்வாணம் குறித்த விழிப்புணர்வை அவர்கள் ம.க.யி.க அலுவலகத்தில் ஆவது செயல்படித்தலாமே!!!!!??? நிர்வாணம் என்பது எங்களைப்போல் உள்ளவர்களுக்கு தான் தப்பாக தோன்றுகிரது அவர்களுக்கு இல்லேயே……இதில் என்ன நாகரீகம் இருக்கிறது
அட போங்கப்பா போரடிக்குது ஒரே பொண்டாட்டியோட எத்தனை நாள்தான் குடும்பம் நடத்துவது. முதலில் இந்த முறையையே மாத்தனும்.எப்படீன்னா திருமணம் என்பதற்கு பதிலா “புதிய வாழ்விணையர் ஒப்பந்த விழா” என மாற்றி குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் என நிர்ணயிக்க வேண்டும். இணைதொடர ஒப்பந்தம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நிபந்தணை 1.மூன்று ஆண்டுகளுக்கு பிறகே குழந்தை பிறப்பு. 2.ஒரு ஆண்டு நிறைவடைந்த பிறகே இணை முறிவு ஒப்புதல் அனுமதி. 3.அனுமதிக்குப் பிறகே இரண்டாம் வாழ்விணையர் ஒப்பந்தம் வழங்கல். 4.முதல் ஒப்பந்தத்தில் பிறந்த குழந்தை ஒன்று எனில் தாய்க்கே சொந்தம், இரண்டு எனில் ஆளுக்கொரு குழந்தை வீதம் அதிலும் 15வயது நிறையும் வரையில் தாயிடமும் தந்தையிடமும் சரிசமமாகவே பிரிந்து வளர வேண்டும். வளர்ந்தபின் அந்த குழ்ந்தையின் விருப்பப்படியே தாயிடமோ தந்தையிடமோ செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும். யப்பா இப்பவே கண்ணக்கட்டுதே மிச்சத்த நாளைக்கு பார்ப்போமே.
நண்பர் ஹைதர் அலி,
மனைவியர் உங்களின் விளை நிலங்கள் நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள். இது கணவன் மனைவிக்கு இடையேயான உறவினைக் குறிப்பதற்கு அல்லா பயன்படுத்திய உவமை. இந்த உவமையை மட்டுமே கொண்டு நான் எனது கருத்துக்கு வரவில்லை என்பதையும் கடந்த பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆனால் வேறொரு கோணத்திலிருந்து ஹதீஸின் துணையுடன் இந்த வசனம் வந்த பின்னணியை கூறியிருக்கிறீர்கள். ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் முகம்மது இறந்து 250 ஆண்டுகளின் பின்னர் தொகுக்கப்பட்டவை என்பதையும், முகம்மது இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் இவைகளை தொகுக்கவேண்டும் எனும் எண்ணமே எழுந்தது என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். இன்னும் தெளிவாகச்சொல்வதென்றால், முஆவியாவின் பிறகு இஸ்லாமிய அரசியல் இறுக்கமான கோட்பாட்டு வழியிலிருந்து மாறி சமூகரீதியான உள்ளடக்கங்களின் வழிக்கு மாறிய பிறகு எழுந்த தேவைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. குரானின் வசனங்களுக்கு ஹதீஸின் பின்னணியில் பொருள்கொள்ள முன்வரும்போது ஹதீஸ்களின் பின்னணியையும் உள்வாங்கிக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
யூதர்களின் மூடப்பழக்கம் என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படி பின்புறமிருந்து பிறப்புறுப்பில் புணர்வது என்பது ஐயத்திற்கிடமானதே. புஹாரியில் இது பின்புறமிருந்து புணர்வது என்றுதான் இருக்கிறது. பின்புறமிருந்து என்பதின் விளக்கம் என்ன என்பதை புஹாரி 4527 தெளிவாகக் கூறுகிறது. “நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். எனவே நீங்கள் விரும்பிய முறையில் உங்கள் விளை நிலத்திற்குச் செல்லுங்கள் எனும் (திருக்குர் ஆன் 2:223வது)வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு உமர் (ரலி)மனைவியிடம் அவளுடைய …….. கணவன் புணரலாம் என்று குறிப்பிட்டார்கள்” இந்த ஹதீஸில் குறிப்பிட்ட இடத்தை நான் தணிக்கை செய்யவில்லை என்னிடமிருக்கும் பிரதியில் இப்படியே தான் இருக்கிறது. இந்தச் சுட்டியில் நீங்கள் அதைக் காணலாம். ( https://docs.google.com/leaf?id=0B9cfNuo6m3ACNmRlNDE0NDMtYWQxMS00NTJkLTllM2MtNmU2NDZkODE3NmVj&hl=en&authkey=CPmEh_MM ) மேலும் முஸ்லிம் 2828 இப்படிக்கூறுகிறது, “இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நுஅமான் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், “விரும்பினால் அவள் கவிழ்ந்து படுத்திருக்கும் நிலையில்; விரும்பினால் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில். ஆயினும்,பெண் உறுப்பில்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது” பலவிதமான முறைகளில் உடலுறவு கொள்வது பழக்கத்தில் இருந்திருக்கும் அக்காலத்தில் பின்புறமிருந்தோ முன்புறமிருந்தோ கொள்ளும் உடலுறவு குறித்த மூடப்பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு வசனத்தை இறக்கிவைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. என்றால் அந்த வசனத்தில் வேறொரு முக்கியத்துவம் இருக்கிறது. யூதர்களின் இருந்த மூடப்பழக்கம் பின்புறமிருந்து கொள்ளும் உடலுறவில் இல்லை, பின்புற வழியிலிருந்து கொள்ளும் உடலுறவாகவே இருந்திருக்க வேண்டும். பின்புற வழியில் கொள்ளும் உறவு சரியானதா தவறானதா எனும் கேள்விக்கு விடையளிக்கவே அந்த வசனம் முனைந்திருக்க வேண்டும். இதையே புஹாரி 4527 உறுதிப்படுத்துகிறது. இப்போது அந்த வசனத்தைப் பாருங்கள் உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலம் எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள். ஆக யூதர்களிடம் பின்னால் உறவு கொண்டால் சாமி கண்ணை நோண்டும் எனும் நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். பல யூதப் பழக்கவழக்கங்களை நம்பிக்கைகளை மறுதலிக்கும் குரான் இதையும் மறுதலித்திருக்கிறது.
பொதுவாக பெரும்பாலான ஹதீஸ்களில் அல்லாஹ்வின் ரஸூல் இப்படிக் கூறினார்கள் அல்லது நான் கூறக் கேட்டேன் என்று முகம்மதின் பெயரைத்தாங்கியே தொடங்கும், ஆனால் இந்த விசயத்தில் புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸிலும், முஸ்லீமிலுள்ள ஹதீஸிலும் அவ்விதமான வாக்கியம் இல்லாமல் நேரடியாகவே தொடங்குகிறது என்பதைக் கவனிக்கவும்.
ஏன் இந்த விசயங்களை இங்கு சுட்டுகிறேன் என்றால் குரானின் வசனங்கள் ஹதீஸ்களின் துணையுடன் நுட்பமாக பொருள் மாற்றம் செய்யப்படுகிறது என்பதைக் குறிக்கவே. இஸ்லாமிய அரசியல் மதினாவிலிருந்து பாக்தாத்திற்கு நகர்ந்த பிறகு கோட்பாட்டு ஆன்மீகம் சமூகவயப்பட்ட ஆன்மீகமாக மாற்றம் பெற்றதன் விளைவாகவே அடிமை முறையை விரிவாகப் பேசும் குரானை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும், வியர்வை உலருமுன்பே கூலி போன்றவற்றை உள்ளடக்கிய ஹதீஸ்கள் முன்னிலை பெற்றன. அந்த வகையிலேயே பெண்மையை கேவலப்படுத்தும் விசயங்களும் ஹதீஸ்களின் துணையுடன் புத்தாக்கம் பெற்றன.
இதையே இன்னொரு கோணத்தில் பார்ப்போம். குரானின் வசனங்களில் ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு அதற்குள் அறிவியல் தேற்றங்களையே வளைத்துச் சேர்த்துவிடுவதைக் காண்கிறோம், நீங்களும் அதை உணர்ந்தே இருப்பீர்கள். இதை விவரிக்கும்போது எப்படிச் சொல்கிறார்கள், இது இறைவனின் வார்த்தை இதன் ஒரு எழுத்துகூட ஒரு வார்த்தை கூட தேவையற்றதாக மாற்றுப் பொருள்கொள்வதை தடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்; எந்தக்காலத்திலும் இதன் ஒன்றைக் கூட பொருத்தமில்லாதது என்று கூறிவிட முடியாது. அதனால்தான் இதனைப்போன்ற ஒன்றைக் கொண்டுவர முடியுமா என சவால் விடுகிறது. என்றெல்லாம் கூறுவார்கள். இந்த வசனத்தில் உங்கள் விளை நிலங்கள் என்று நேரடியாக கூறப்பட்டிருக்கிறது. ஒருவனின் விளை நிலம் என்றால் அதில் அவன் பருத்தியும் விளைவிக்கலாம், பார்த்தீனியச் செடியையும் விளைவிக்கலாம், கரும்பும் பயிரிடலாம் கஞ்சாவும் பயிரிடலாம், விரும்பினால் எதையும் விளைவிக்காமலும் போட்டுவைக்கலாம். இந்தப் பொருளை அந்த உவமை தருகிறதா இல்லையா. இந்தப் போதுகளில் மட்டும் ஏன் அந்த வசனத்தை முகம்மது இறந்து இருநூற்றைம்பது ஆண்டுகள் கடந்தபின் தொகுக்கப்பட்ட ஹதீஸுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக்கருதுகிறீர்கள். ஆமாம் குரானுக்கு உங்கள் விருப்பப்படி பொருள் கொள்ளக் கூடாது என்றால் அல்லா என்ற ஒன்றின் தன்மைகளாக நீங்கள் உருவகப் படுத்தியிருக்கிறீர்களே எக்காலமும் உணர்ந்தவன் என்று. பின்காலத்தில் இப்படியெல்லாம் குதர்க்கமாக புரிந்துகொள்ள இந்த உவமை வழிவகுக்கும் என்பது அன்று அல்லா அறிந்திருக்கவில்லை என்று பொருள்படும் பரவாயில்லையா?
அருமை ஹைதர் அலி,
நினைவு தெரிந்த காலம்முதல் நீங்கள் ஆண்டவன் எனும் மிகைமதிப்பூட்டப்பட்ட உருவகத்தின் கீழேயே இருந்துவந்திருக்கிறீர்கள். அதிலிருந்து விடுதலை பெறுவது வலிதரக்கூடியதாகவே இருக்கும். அந்த வலியை கோபமாக மடைமாற்றி கேள்விகளை வெளித்தள்ளுவதை விட உள்வசமாய் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்வதன் மூலமே உங்களின் விடுபடுவலியை எதிர்கொள்ளும் வலு கிடைக்கும். அந்த வலுவுக்காக நீங்கள் கேள்விகளை எங்களை நோக்கி வீச வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இந்த வசனத்திலும், வேறு வசனங்களிலும் நீங்கள் தொடருங்கள் நான் காத்திருக்கிறேன். இந்தப்பதிவில் மட்டுமல்ல, தேவைப்பட்டால் கேள்வி பதில் பகுதியிலும் கூட நாம் தொடரலாம்.
செங்கொடி
((2 -228). விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்)
சமத்துவம் பேசும் கொடியே!
நான் மேலே உள்ள குர் ஆன் வசனத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டேன். அந்த வசனத்திலேயே ஆண்களுக்கு உள்ள உரிமை ஆண்களுக்கு, பெண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கு என்று. ஆனால் தொடர்ந்து வசனத்தை தாங்கள் சரியாகவே வாசிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
\\\பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்///
இதிலேயே ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
\\குர் ஆன் வசனங்களோ, (உண்மையான) இஸ்லாமிய திருமண முறையோ பிற்போக்கானதல்ல// \\\என நிருவ விரும்பும் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும், குரானின் வசனங்கள் இன்னின்ன விதங்களின் சரியானது எனவே ஆணும் பெண்ணும் சமமாக இருக்கவேண்டிய அவசியமில்லை என எடுத்துக்காட்டியிருக்க வேண்டும். ஆனால், ஆணும் பெண்ணும் சமமல்ல என்பதை நிரூபிப்பதற்கு அவுத்துப்போடச் சொல்லுகிறீர்கள்////.
மீண்டும் மீண்டும் இதை தாங்கள் வினவியதால் நடைமுறையில் உள்ள ஒரு விளக்கத்தை சொல்லி அதிலிருந்தே கேள்வியும் கேட்டேன். தாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் முடியும் அல்லது முடியாது என்று பதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் தாங்களோ கேட்ட கேளிவிக்கு பதில் சொல்லாமல் முடியாமல் விவாதத்திதை திசை திருப்பும் நோக்குடன் நான் கொச்சையாக பேசினேன் என்று என் மீது பலியை தூக்கி போடுகிறீர்கள்.
இதில் நான் ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் தரவில்லை மாறாக தாங்கள்தான் முடியாது என்று ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்.
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை மற்றும் தேய்ந்த குறுந்தகடு போன்று மறு மொழியும் கொடியே!
\\\ஆனால் பிரச்சனை ஒரு நொடி அவள் நிர்வாணமாக இருந்தால் அதன் பிறக்கான வாழ்நாள் முழுதும் இந்த ஆணாதிக்க சமூகம் அவளை விபச்சாரி என ஏசும்/// ஆகா தாங்கள் ஆணாதிக்கம் மீது கொண்ட சொந்த வெறுப்பு மற்றும் அதே நோக்கத்துடன் குர் ஆன் வசனங்களுக்கு பொருள் கொள்ளும் முறையே பெண்ணடிமையாக சித்தரிப்பதற்கு காரணம். ஆண் ஆதிக்கம் மட்டும்தான் ஏசுமா அவளை? இது ஒரு பச்சை பொய் ஆண் பெண் இரண்டு சமூகமுமே அவளை ஏசும் என்பதுதான் உண்மை.
சரி இனி பிரக்டிகளுக்கு வருவோம்
I
ஆண் பெண் உறவில் ஆணுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு அப்படியா? அவள் கர்ப்பம் தரிக்கும் பொது 10 மாதங்கள் உணவு முறையில் மற்றும் ஆரோக்யத்தில் மாற்றம் என பல கஷ்டங்களை அவள் சந்திக்கிறாள். இதில் ஆண் பெண்ணை விட இயற்கையாகவே மேம்படுகிறானா? இல்லையா? தாங்கள் இதை எப்படி சரி கட்டுவீர்கள் என்று தெளிவாக விளக்க வேண்டும்.
II
ஒரு ஆண் நினைத்தால் ஒரு பெண்ணின் விருப்பமின்றி (காம உணர்வு இல்லாமல்) அவளை என்ன வேண்டுமானாலும் (பலாத்காரம்) செய்ய இயலும். ஆனால் ஒரு பெண் நினைத்தால் ஒரு ஆண் விருப்பமின்றி (காம உணர்வு இல்லாமல்) அவனை என்ன வேண்டுமானாலும் (பலாத்காரம்) செய்ய இயலுமா? இந்த நிலையில் ஆண் பெண்ணை விட இயற்கையாகவே உயர்வாக மேம்படுகிறானா? இல்லையா? அப்படி இல்லை என்றால் தாங்கள் அதை தெளிவாக விளக்க வேண்டும். இதை நான் சொன்னால் கொச்சையாக பேசுகிறேன் என்று சொல்வார்கள் இந்த புரட்சியாளர்கள்.
III
அனைத்து ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் ஏன் ஆண் பெண் என பிரித்து வைக்கிறார்கள்?. ஓட்டபந்தயம், குத்துசண்டை போன்ற போட்டிகளில் ஒன்றாக கலந்து விடலாமே தங்களின் கூற்று படி சமத்துவம் பெருகும் தானே? இதற்கு தாங்கள் தெளிவான விளக்கம் தர வேண்டுகிறேன்.
இன்னும் தொடரும் பிரக்டிகள்வாதிகளுக்கு பிரக்டிகள் கேள்விகள்.
\\\உலகில் அரையாடை மட்டுமே அணிந்த பழங்குடி இன சமூகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? எல்லா ஆண்களின் முன்னாலும் மேலாடையின்றி அவர்களால் இயல்பாக வரமுடியும். இதைக்கொண்டு நீங்கள் அங்கு ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்படுகிறார்கள் என முடிவுகட்டிவிடுவீர்களா?/// (நிர்வாணமாக இருப்பதினால் இயலாமை என்ன இருக்கிறது? என்று கேட்கும் நீங்கள் எங்களை போல்(மத வெறியர்கள்) உள்ளவர்களை திருத்துவதுதானே உங்கள் பணி ஆதலால் நிர்வாணம் என்பது சீரழிவு என்று எண்ணிக்கொண்டிருக்கும் மக்களிடம் ம.க.இ.க உள்ள பெண்கள் நிர்வாணமாக பிறச்சாரம் செய்யலாமே தாங்கள் புரட்சி செய்யலாமே …பிறர் தூற்றுவார் என்று எண்ணினால் தங்கள் அலுவகத்தில் பெண்களும் ஆண்களும் பிறந்தமேணியாக வேலைகளில் ஈடுபடலாமே (இதனால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்களாமே)…..கம்யூனிசத்தை பிராக்டிகலாக உள்ளே புகுத்துங்கள் என்றும் சொல்லும் உங்களுக்கு இதை செய்வது உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காதே………….) இந்த பதிலை ஸ்கூல் பாய் அவர்கள் சொன்னார்கள். பழங்குடியினரை சுட்டி காட்டும் நீங்கள். ஸ்கூல் பாய் யின் பதிலை நடைமுறைக்கு கொண்டு வரலாமே? நேரம், ஆடை வாங்கும் பணம் அனைத்திலும் மிச்சம் தானே?
1. மகர் என்பது என்ன,எவ்வளவு கொடுக்கப் பட வேண்டும்?
2. திருமணத்தின் போது மணமக்கள் தாங்கள் இஸ்ல்லாமை மன பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று அறிக்கை இட வேண்டுமா?
3. ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் முதல் மனைவி தடுக்க இயலுமா?.
4. விவாக ரத்து செய்தால் குழந்தைகள் யார் பொறுப்பில் இருக்க வேண்டும்?
5. முஸ்லிம் ஆண் யூத ,கிறித்தவ பெண்களை மணப்பது குரானில் அனுமதிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன் சரியா?
6. முஸ்லிம்களுக்கிடையே கலப்பு மணம்( சுன்னி,ஷியா, பிற வகுப்பினரிடம்) செய்யவது உண்டா?.
7. எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும்?
8.தற்காலிக திருமணம்(முட்டா) ஷியா பிரிவினரிடம் நடைமுறைக்கு உள்ளது. இது சரியா?.
http://www.al-islam.org/encyclopedia/chapter6a/7.html
9. ஆண் நினைத்தால் பெண்ணை அவள் விருப்பமின்றி விவாகரத்து செய்ய இயலுமா?
10.பெண் நினைத்தால் ஆணை அவன் விருப்பமின்றி விவாகரத்து செய்ய இயலுமா?
நண்பர் சங்கர்,
மேலே உள்ள கேள்விகள் அனைத்திற்கும் தாங்கள் அருகே உள்ள இஸ்லாமிய பள்ளிக்கோ அல்லது இஸ்லாமிய இணைய தளங்களுக்கோ சென்று பதிலை பெற்று கொள்ளலாம். நன்றி.
\\\தலைவா! அப்பாசு! என்னா ஒரு விளக்கம். புல்லரிக்குதுப்பா. சரி இப்படி வைத்துக்கொள்வோம். அமெரிக்காவுல ஜட்டியே போடாம முச்சந்தியில நிக்க ஒரு பொண்ணு ரெடி. நீங்க ஜட்டி போடாம அவ கூட நிக்க ரெடியா!///
தலைவா காட்டரபி,
தாங்கள் அந்த பெண்ணுடைய விலாசம் மற்றும் தொலைபேசி எண் தர முடிந்தால் அந்த பெண்ணுடன் விவத்தித்த பின் என்னுடைய முடிவை கூறுகிறேன்.
குரானில், சில சரித்திரக் கதைகளைத் தவிர, சில நல்லுபதேசங்களைத் தவிர மற்றவைகள் முஹம்மதிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும், தன்னிடம் வந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளுமே ஆகும். இத்தீர்வுகளே சட்டமாகவும் மாறுகிறது. குரானில் உள்ள வசனங்கள் எதற்காக கூறப்பட்டது என்பதனையும், அந்நேர நிகழ்வுகளையும் ஹதீதின் துணைகொண்டே புரிந்து கொள்ளமுடியும்.
ஒரு ஆணின் சாட்சி இரண்டு பெண் சாட்சிகளுக்கு (2:282) ஈடானது என்பதை விளக்கும்,வலியிருத்தும் ஹதீஸ் நெ.304
304-………..’இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன’ என்று பெண்கள் கேட்டனர். ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;
மேலும்…..
தபூக் போரில் தோல்வியைத் தழுவி திரும்பி வந்த முஹம்மது, ……….கணவனை இழந்த பெண்கள் சவரக்கத்தியை பயன்படுத்திக் கொள்ளட்டும் எனவும் கூறுகிறார்.
போரில் தோற்றது ஆண்கள்! ஊரில் மொட்டையாகுவது பெண்களா! ஏன்? ஏனென்றால் ஆணுக்காகத்தான் பெண். ஆணின் போகப்பொருள்தான் பெண். செய் என்றால் செய்துவிடு. படு என்றால் படுத்துவிடு. ஓடு என்றால் ஓடிவிடு. பெண் சாபமிடுபவள், ஆணை வழிகெடுப்பவள், நன்றி கெட்டவள், அறிவுக்குன்றியவள்.
அவ்வளவும் ஆணாதிக்க வார்த்தைகள்
//தலைவா காட்டரபி,
தாங்கள் அந்த பெண்ணுடைய விலாசம் மற்றும் தொலைபேசி எண் தர முடிந்தால் அந்த பெண்ணுடன் விவத்தித்த பின் என்னுடைய முடிவை கூறுகிறேன்.//
நீங்க ஜட்டியோட நிக்க மட்டும் ஊர் கூடி விவாதிப்பீஙக. அவுரு சகோதரி பிராயில்லாம உட்கார மட்டும் செங்கொடிகிட்ட ஆர்டர் போடுறீங்க. என்னத் தலைவா நியாயம். நியாயமா அந்தம்மாகிட்டல்ல நீங்க கேட்கனும்.
/////////////////////மேலும்…..
தபூக் போரில் தோல்வியைத் தழுவி திரும்பி வந்த முஹம்மது, ……….கணவனை இழந்த பெண்கள் சவரக்கத்தியை பயன்படுத்திக் கொள்ளட்டும் எனவும் கூறுகிறார்.////////////////////////////////
இந்த வரியை தாங்கள் எந்த ஹதீஸிலிருந்து எடுத்துள்ளீர்கள் என்பதை விளக்கவும் தோ*ர் கலை அவர்களே.
நண்பர் அப்பாஸ்,
\\ஆகா தாங்கள் ஆணாதிக்கம் மீது கொண்ட சொந்த வெறுப்பு மற்றும் அதே நோக்கத்துடன் குர் ஆன் வசனங்களுக்கு பொருள் கொள்ளும் முறையே பெண்ணடிமையாக சித்தரிப்பதற்கு காரணம். ஆண் ஆதிக்கம் மட்டும்தான் ஏசுமா அவளை? இது ஒரு பச்சை பொய் ஆண் பெண் இரண்டு சமூகமுமே அவளை ஏசும் என்பதுதான் உண்மை// இப்படி நீங்கள் எழுதியதைப் படித்து நண்பர் ஹைதர் அலியே சிரித்துக்கொண்டிருப்பார். ‘ஆணாதிக்கத்தின் மீது கொண்ட சொந்த வெறுப்பு’ ஆணாதிக்கத்தின் மீது சொந்த வெறுப்பு, பொது வெறுப்பு என்றெல்லாம் பிரித்துக்கொள்ள முடியுமா? ஆணாதிக்க சமூகம் என்றால் ‘இது ஒரு பச்சை பொய் ஆண் பெண் இரண்டு சமூகமுமே அவளை ஏசும் என்பதுதான் உண்மை’ என்கிறீர்கள். என்ன சொல்வது. ஆணாதிக்கம் என்றால் என்னவென்றே தெரியாத நீங்கள், குரானில் ஆணாதிக்கம் இல்லை என்று வாதிட வந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதியிருக்கும் இந்த வரிகள் உங்களோடு வாதிட வேண்டுமா என பரிசீலனை செய்ய வைக்கிறது. நண்பரே, எதுகுறித்து வாதிட நினைக்கிறீர்களோ அதுகுறித்து கொஞ்சமேனும் தெரிந்துகொள்ள முயலுங்கள்.
\\மீண்டும் மீண்டும் இதை தாங்கள் வினவியதால் நடைமுறையில் உள்ள ஒரு விளக்கத்தை சொல்லி அதிலிருந்தே கேள்வியும் கேட்டேன்// குரான் ஹதீஸ் வழியில் ஆண்பெண் சமமின்மையை நிருவ முயலாமல் அவுத்துப்போட்டு நிருவ முனைகிறீர்கள் என உங்கள் மீது நான் வைத்த குற்றச்சாட்டுக்கு உங்களின் விளக்கம் இது. நான் மீண்டும் மீண்டும் வினவுவதற்கு எந்த விளக்கத்தயும் நீங்கள் தந்திருக்கவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். உங்களின் முதல் பின்னூட்டத்தில் நான் முழு வசனத்தை எழுதவில்லை என்று நீங்கள் முழுவசனத்தை எழுதினீர்கள் விளக்கம் ஒன்றுமில்லை. ஆனால் நான் தரிசாக போட்டுள்ளேன் என்று என்மீது அவதூறு. அவதூறுகளை நீக்கிவிட்டு அதற்கு நான் முறையாக விளக்கமளித்தேன். இதற்குப்பிறகும் நீங்கள் உங்களின் இரண்டாவது பின்னூட்டத்தில் மீண்டும் முழுவசனத்தையும் விரித்துக்கூறி விவரித்தீர்கள். அதற்காகத்தான் நான் என்னுடைய மறுமொழியில் ஆண் பெண் சமமா இல்லையா என்பதுதான் மையக்கருத்து வசனங்களின் மீதான பார்வையல்ல எனக்கூறியிருந்தேன். இதையடுத்துதான் எனக்கான உங்களின் மூன்றாவது பின்னூட்டத்தில் என்னுடைய சகோதரியுடன் அமர ஆசைப்பட்டீர்கள். ஆக நீங்கள் எந்த விளக்கமும் முறையாக கூறாத நிலையில் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவதூறு கூறுவீர்கள் அதையும் ‘மீண்டும் மீண்டும் இதை தாங்கள் வினவியதால்’ என்று வேறு வழியில்லாமல் கூறியதைப்போல காட்டமுனைவீர்கள். இது உங்கள் தவறை நியாயப்படுத்தமுயலும் போக்கு எனவே இதற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன்.
\\பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு// குரான் வசனத்திலுள்ள இந்த வரியின் முலம் சில இடத்தில் ஆண்களுக்கு பெண்களைவிட உயர்வும், சில இடத்தில் பெண்களுக்கு ஆண்களைவிட உயர்வும் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறீர்கள். அது உண்மையாயின் ஆண் பெண் உறவில் பெண்ணுக்கு ஆணைவிட உயர்வு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை சுட்டிக்காட்ட முடியுமா உங்களால்?
இனி உங்கள் பிராக்டிகல்களுக்கு வருவோம்,
1) ஒரு பெண் தாய்மையடைவதை எப்படிப் பார்ப்பது? ஆண் பெண் சமத்துவம் என்பது உடல் பலத்தில் அடங்கிவிடக்கூடியதா? அதைத்தாண்டி உணர்வு என ஒன்றுண்டு அது தெரியுமா உங்களுக்கு? இனப்பெருக்கம் என்பது பாதுகாப்பும் பரிவும் கொடுத்து கவனிக்க வேண்டிய காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் அவளைவிட ஆண் பலசாலி என்று கூறுவது, நோயுற்று தளர்ந்திருக்கும் ஒருவனிடம் ஆரோக்கியமாக உள்ள ஒருவன் உன்னைவிட நான் பலசாலி என்பது போன்றதாகும். உடல் பலத்தில் பொருத்தம் பார்க்கவேண்டுமென்றால் இருவரும் ஆரோக்கிய நிலையில் இருக்கும் போது பார்க்கவேண்டும். மாறாக தாய்மைக் காலம் என்பது தன்னுடைய உடல் சத்துக்களைப் பிரித்து இன்னொன்றை உருவாக்கும் காலம். அவள் தன்னுடைய பலத்தைப் பிரித்து இன்னொன்றுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் வந்து நின்று பலம் பார்க்க வேண்டும் என்கிறீர்கள். வேடிக்கைதான். இதை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். உடல்பலம், அறிவு, திறமை, வீரம், தொழில் நுட்பம், உழைப்பு, செயற்பாடு என்று எதிலும் ஆணுடன் போட்டிபோடும் திறன் படைத்தவள் பெண். ஆனால் தலைகீழாக நின்றாலும் ஆணால் போட்டிபோடவே முடியாத ஒருவிசயம் இருக்கிறது, அதுதான் தாய்மை. இப்போது சொல்லுங்கள், தாய்மையடையும் தகுதி என்னும் ஒரு பண்பிற்காகவே அவள் ஆணை விட உயர்வாக மதிக்கப்பட வேண்டியவள். ஆனால் நீங்களோ அவள் தாய்மையடைந்திருக்கும்போது ஆணைவிட உடல்பலம் குன்றிவிடுகிறாள் எனவே அவள் ஆணுக்கு கீழானவள் என்கிறீர்கள்.
2) உடலியல் கூறுகள் குறித்து எவ்விதமான தெளிவும் இல்லாமல் வன்மத்துடன், பெண்ணை ஆணுக்குக் கீழாக காட்டியே தீருவது எனும் ரீதியில் வைக்கப்படும் கருத்து இது. ஆணால் பலத்காரம் செய்யமுடியும் என்பதே ஒரு தகுதியா? பெண்ணுக்குத்தான் கருவைத்தாங்கி வளர்க்கும் அமைப்பு அமைந்திருக்கிறது, எனவே உயிரணுக்கள் உடலினுள் சென்று விடப்பட்டாக வேண்டிய தேவை இருக்கிறது. அதேபோல் ஆணுக்கும் உடலுக்குள் செலுத்தியாக வேண்டிய தேவை இருக்கிறது. ஆணுக்கு பெண் உடலினுள் செலுத்தியாக வேண்டும் என்பதனால் விரைப்பு அவசியப்படுகிறது. விரைப்பு அவசியப்படுவதினாலேயே ஆணுக்கு குறிப்பிட்ட மனோநிலையில் இருந்தாக வேண்டும் என்றாகிறது. பெண்ணுக்கும் உணர்வு ரீதியாக அந்த மனோநிலை அவசியம் என்றாலும் உடலியல் ரீதியாக அது அவசியமில்லை. இதைத்தான் நீங்கள் ஆண்களால் வன்புணர்ச்சி செய்யமுடியும் பெண்களால் முடியுமா என்கிறீர்கள். இது உடல் ரீதியான ஒரு மாறுபாடு. இது பொதுவாக ஆணைவிட பெண் கொஞ்சம் உயரம் குறைந்தவள் என்பதைப் போன்றதுதான். ஆணைவிட பெண் உயரம் குறைந்தவள் எனவே அவள் ஆணுக்கு கீழானவள் என கூறமுடியுமா? (ஆண் சட்டையை கழற்ற முடியும் பெண்னால் முடியுமா எனக் கேட்பவர்களால் இதையும் கேட்கமுடியும்தான்) இதையே இன்னோரு விதமாக பார்க்கலாமே, ஆணால் எல்லா நேரத்திலும் தயாராக முடியாது, ஆனால் பெண்ணால் எந்த நேரத்திலும் தயாராக முடியும். ஆக இந்த விதத்திலும் பெண்ணே ஆணைவிட உயர்ந்து நிற்கத்தகுதி படைத்தவள்.
3) விளையாட்டுப் போட்டிகளில் ஆண் பெண்களுக்கு தனித்தனிப் போட்டிகள் நடத்தப்படுவதும் ஒருவகையில் ஆணாதிக்கப் பார்வைதான். தொடக்கத்தில் பெண்கள் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டதேயில்லை. போராட்டங்களின் மூலம்தான் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டிகளும் சேர்க்கப்பட்டன. ஆணும் பெண்ணும் சேர்ந்து விளையாட்டில் கலந்துகொண்டிருந்தால் பெண்களின் போட்டியிடும் திறமையையும் வென்றுகாட்டும் திறமையையும் இவ்வுலகம் கண்டிருக்கும். ஆணுடன் பெண் போட்டியிடுவதா எனும் ஆதிக்கப்பார்வைதான் அப்படி நடத்தப்படாமைக்கு காரணம். மனித குலத்தின் தொடக்கத்தில் வேட்டையிடுவதில் தொடங்கி அன்றையகால அனைத்திலும் பெண்ணே பலசாலியாக இருந்தாள் தனிச்சொத்துடமை, ஆணாதிக்கத்தின் தொடக்கத்தில் தான் படிப்படியாக பெண் பலவீனமானவளாக மாற்றப்பட்டாள். அதனால்தான் இன்றும்கூட பெண்களுக்கான போட்டிகளில் ஆண்களின் இலக்கை விட குறைவான இலக்கே நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பண் ஆணைவிட பலவீனமானவள் என்றாகிவிடமாட்டாள். எப்படியென்றால், எடுத்துக்காட்டாக ஒரு பழுதூக்கும் வீராங்கணை 100 கிலோ எடை தூக்குகிறாள் என்று கொள்வோம். வயதிலும் ஆரோக்கியத்திலும் அவளை ஒத்த ஆண்களால் 100 கிலோவை தூக்கிவிட முடியுமா? முடியாது. அதேபோல்தான் ஆணின் இலக்கிற்கு பெண்ணுக்கும் பயிற்சியளிக்கப்பட்டால் பெண்ணாலும் ஜொலிக்க முடியும்.
மேலாடையை துறக்க முடிவதே ஆண் உயர்ந்தவன் என்பதற்கான தகுதி என நீங்கள் கூறும்போது, மேலாடை இல்லாத சமூகமும் இவ்வுலகில் இருக்கிறது. எனவே மேலாடை இல்லாமல் இருப்பதாலேயே அங்கு சமத்துவம் நிலவுவதாக கருதுவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூற முடியாத நீங்கள், வேறெங்கோ இழுத்துச் செல்கிறீர்கள். ஆடை கொஞ்சம் விலகினாலே அவள் கற்பில் குறைந்தவளாக இந்த ஆணாதிக்க சமூகத்தால் கருதப்படும் நிலையில் அதை எதிர்த்து அப்படி நாங்கள் இருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் எனக்கூறும் துணிவின்மை பெண்களது இயலாமை எனும் பொருளில் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் ஆடையின்றி இருப்பது எங்கள் கொள்கை போல் நீங்கள் திரிக்கிறீர்கள். என்ன செய்வது பதில் கூற முடியவில்லை என்றால் இப்படி திரித்துத்தான் சமாளிக்க வேண்டியதிருக்கும். பொதுவுடமைவாதிகள் எப்படி இருக்க வேண்டும்? எப்படி செயல்படவேண்டும்? என்பது குறித்து கருத்துக்கூறும் அறுகதையும் தகுதியும் மதவாதிகளுக்கு கிடையாது. மறக்கவேண்டாம்.
செங்கொடி
அருமையான விளக்கம் தோழர் செங்கொடி ! செரீனா வில்லியம்ஸ் கிட்ட டென்னிஸ் ஆட முடியுமா இந்த மதவாதிகள்…
மிகவும் தெளிவான விளக்கம் தந்தீர்கள் செங்கொடி அவர்களே. பளு தூக்குவதை விடுங்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பயிற்சியில்லாத ஒத்த வயதுடைய ஒரு ஆணால் ஓட முடியுமா? இதைச்சொன்னால் கடவுள் படைத்த படைப்பிலேயே ஆணும் பெண்ணும் வித்தியாசப்படுத்தித் தான் படைக்கப்பட்டது என ஒரு ம(ந்)தவாத குரூப் உளறிக்கொண்டிருக்கிறது. என்னத்தச் சொல்ல? விண்வெளிக்கு வீராங்கணைகள் செல்லும் இந்தக்காலத்திலும் இவர்களின் பழைமைவாதத்தை விட்டபாடில்லை. கதைகளில் வரும் விண்வெளிப்பயணத்தை கொண்டாடுவதையும் இவர்கள் விட்டபாடில்லை.
ஆண் பெண்ணிடம் வாங்குவதற்கு பெயர் வரதட்சனை என்றால் மகர் என்ற பெயரில் பெண் ஆணிடம் வாங்குவதற்குப் பெயர் என்னவோ? பெண்ணை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பான இதையும் தடை செய்ய வேண்டும்.
முன்னொருகாலத்தில் அரேபியர்கள் பெண்களை ஏலத்தில் எடுப்பார்களாமே?
உண்மையா செங்கொடி அவர்களே?
//விரைப்பு அவசியப்படுவதினாலேயே ஆணுக்கு குறிப்பிட்ட மனோநிலையில் இருந்தாக வேண்டும் என்றாகிறது. பெண்ணுக்கும் உணர்வு ரீதியாக அந்த மனோநிலை அவசியம் என்றாலும் உடலியல் ரீதியாக அது அவசியமில்லை. இதைத்தான் நீங்கள் ஆண்களால் வன்புணர்ச்சி செய்யமுடியும் பெண்களால் முடியுமா என்கிறீர்கள். இது உடல் ரீதியான ஒரு மாறுபாடு. இது பொதுவாக ஆணைவிட பெண் கொஞ்சம் உயரம் குறைந்தவள் என்பதைப் போன்றதுதான். ஆணைவிட பெண் உயரம் குறைந்தவள் எனவே அவள் ஆணுக்கு கீழானவள் என கூறமுடியுமா?//
அஸ்ஸலாமு அழைக்கும்,
உங்களுடைய பதிளிலயே உங்களுக்கு ஆப்பு செங்கோடியார் அவர்களே. ஆண் பெண் உடல் ரீதியாகயும், மன ரீதியாகவும், வேறுபட்டவள் என்பதை நீங்கள் ஒப்பு கொள்கிரீரா இல்லையா?
மழுப்பாமல் பதில் தரவும்.
ஆணின் உடல் அமைப்பை விட சற்று மாறுபட்டு, ஆண்களை கவர்பவள் என்பதை ஒப்பு கொள்கிறீரா இல்லையா?
ஆண் மறைக்க வேண்டியதை விட அதிகமாக மறைக்க பட வேண்டியவள் என்பதை ஒப்பு கொள்கிறீரா இல்லையா?
தியாகதிற்காக ஆண்களை விட அதிகமாக மதிக்க பட வேண்டியவள் என்பதை ஒப்பு கொள்கிரீரா இல்லையா?
இதையே இஸ்லாம் கூறுகிறது ஆண் பெண் சமம், ஆனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாருபட்டவல் என்று. பெண்களை பற்றி இஸ்லாம் கூறியதை தாங்கள் சற்று விளங்காமல் உள்ளீர்.
உங்களுடைய பாணியில் வெறுமனே சமம் என்றால் எல்லா விசயத்திலும் சமமாக தானே இருக்க முடியும். இவன் மேல் சட்டையை கழற்றி இருக்கும் பட்சத்தில் அவளும் அப்படி இருந்தால் தானே நீங்கள் கூறும் சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருக்கும்.
உங்களுடைய கொள்கை தான் பெண்களை கொச்சை படுத்தும் வேளையில் தீவிரமாக உள்ளது. நீங்கள் சொல்லும் சமம் என்பதை எத்தனை பெண்கள் ஏற்று கொள்கிறார்கள் என்று பார்த்தல் உங்களுக்கே புது விளக்கம் பிறக்கும். இஸ்லாத்தின் பார்வை சரி என்பதை ஏற்று இஸ்லாத்தையும் விரைவில் ஏற்று கொள்வீர்.
\\\நீங்க ஜட்டியோட நிக்க மட்டும் ஊர் கூடி விவாதிப்பீஙக. அவுரு சகோதரி பிராயில்லாம உட்கார மட்டும் செங்கொடிகிட்ட ஆர்டர் போடுறீங்க. என்னத் தலைவா நியாயம். நியாயமா அந்தம்மாகிட்டல்ல நீங்க கேட்கனும்///
காட்டரபி,
உங்களுக்கு புத்தி மழுங்கி விட்டது என்று நினைக்கிறன். எந்த பெண் என்று சொல்லாமல் அந்தம்மா கிட்ட போய் கேளுனா? எந்த அம்மாகிட்ட போய் கேக்குறது கொஞ்சம் தெளிவாக பதில் கூறவும்.
யூதர்களிடம் நடைமுறையில் இருந்த பழக்கவழக்கங்களுக்கு மாற்றமாக செய்யுமாறு தன்னைப் பின்பற்றியவர்களுக்கு கூறுகிறார் முஹம்மது. யூதர்களை கடுமையாக எதிர்த்தவர் முஹம்மது. யூதர்களை மறுதலிப்பதிலிருந்துதான் ஆமினாம்மா புதல்வரின் புரட்சி தொடங்குகிறது.
2:223 வசனத்திற்கு செங்கொடி அளித்த, “விளை நிலம் எனும் உவமையின் மூலம் தரிசாகப் போடும் உரிமையும் ஆணுக்கு உண்டு” என்ற விளக்கம் தவறானது. அதைப்போன்றே அப்பாசு கூறிய, “உங்களின் விளை நிலங்கள் என்பது உங்கள் மனைவியை தவிர வேறு பெண்ணிடமும் செல்லாதீர்கள்” என்பதும் தவறானது. நண்பர் ஹைதர் கூறிய புஹாரி ஹதீஸ் 4528 யைக் கொண்டே இவ்வசனத்தை புரிந்துகொள்ளமுடியும். அதாவது பெண்ணின் பின்பக்கமாக இருந்துகொண்டு பெண்ணுறுப்பு வழியாக உடலுறவு கொண்டால் பிறக்கும் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்ற யூதர்களின் கருத்தை மறுதலித்து கூறப்பட்டதே இவ்வசனம் என்பதுதான் சரியானது.
ஆசனவாய் வழியே உறவுகொள்ளும் வழக்கம் யூதர்களிடம் இருந்திருந்து அதைப்பற்றி முஹம்மதிடம் கேட்கப்பட்டதற்காக இவ்வசனம் கூறப்பட்டதென்றால் ”உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்” என்று முஹம்மது கூறியிருக்க முடியாது. ஏனென்றால் ஆசனவாய் வழியே உறவு கொள்ளுவதை முஹம்மது தடைசெய்திருக்கிறார்.
//மூடப்பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு வசனத்தை இறக்கிவைத்திருக்கவேண்டிய அவசியமில்லை.//
முஹம்மதிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் கதைகளுக்கும் கூறப்பட்டவையே குரானின் வசனங்களே தவிர அதில் வேறு முக்கியத்துவம் ஒன்றுமில்லை.
அடச்சே இதுக்கு ஒரு வசனமா என நண்பர்கள் கருதலாம். சந்திரன் பிளந்துவிட்டதுன்னு ஒரு டுபாக்கூர் வசனம் இருக்கும்போது இதெல்லாம் எம்மாத்திரம்.
ஆண்கள் போரில் தோற்றவுடன் பெண்கள் மொட்டைபோடுங்கள் என்பதாக முஹம்மது கூறியதாக நான் எழுதியது தவறானது., வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றேன்
மறந்துவிட்டேன். ஹைதருக்கு நன்றி
நண்பர் ஹைதர் அலி சிரிக்கிராரோ இல்லையோ தாங்கள் எழுதும் பூசி மொழுகும் பதில்களால் உங்களுடைய இயக்க நண்பர்களையே சிரிக்க வைக்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது. \\\சொந்த வெறுப்பு, பொது வெறுப்பு என்றெல்லாம் பிரித்துக்கொள்ள முடியுமா?/// தாங்கள் சொந்த மற்றும் பொது வெறுப்பு கூட தெரியாமல் கட்டுரை எழுதுவது “நான் காகிதத்தில் கப்பல் செய்து கனடா நாடுவரை சென்றடைந்தேன்” என்று சொல்வது போன்று உள்ளது. சரி நானே விளக்குகிறேன். தாங்கள் மட்டும் கொண்ட வெறுப்பு சொந்த வெறுப்பு அதே பொது மக்கள் அனைவரிடமும் காணபட்டால் அது பொது வெறுப்பு. (உதாரணம் கம்யூனிஸ்ட் மதவாதிகள் மேல் கொண்டுள்ள வெறுப்பு) இந்த சாதாரண விஷயம் கூட தெரியாமல் உங்களை எப்படி இயக்கத்தில் சேர்த்தார்கள் என்பது சந்தேகிக்க வைக்கிறது.
\\\ஆணாதிக்கம் என்றால் என்னவென்றே தெரியாத நீங்கள், குரானில் ஆணாதிக்கம் இல்லை என்று வாதிட வந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதியிருக்கும் இந்த வரிகள் உங்களோடு வாதிட வேண்டுமா என பரிசீலனை செய்ய வைக்கிறது. நண்பரே, எதுகுறித்து வாதிட நினைக்கிறீர்களோ அதுகுறித்து கொஞ்சமேனும் தெரிந்துகொள்ள முயலுங்கள்/// இதற்கு முன்னால் உள்ள விவாதத்திலேயே நான் தெளிவாக சுட்டிக் காட்டினேன். பெண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கு தரப்பட்டுள்ளது ஆண்களுக்கு உள்ள உரிமை ஆண்களுக்கு தரப்பட்டுள்ளது என்று. ஆனால் பெண்களால் இயலாத சில காரியங்களில் ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு என்று. அந்த இயலாத காரியத்தை எடுத்து கொண்டு இதில் ஆணாதிக்கம் விளையாடி விட்டது விளையாடி விட்டது என்று மீண்டும் மீண்டும் எடுத்து வைத்த வாதத்தையே எடுத்து வைத்து கொண்டு இருக்கும் தாங்கள்தான் ஆணாதிக்கம் பற்றிய அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் உளறுவது நகைப்புக்குரியது. ஒரு அரசு தன்னுடைய குடிமகனுக்கு ஒரு சிறந்த சட்டத்தை விதித்தால் அந்த சட்டம் அவனுக்கு எந்த விதத்தில் பயனளிக்கிறது என்று பார்ப்பீர்களா? அல்லது இது அரசினுடைய ஆதிக்கம் என்று கூறுவீர்களா? தாங்கள் முதலாளித்துவத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவீர்கள் உங்களுடைய பார்வைக்கு அது போராட்டம் ஆனால் முதலாளிகளுடைய பார்வைக்கு அது தொழிலாளர்களின் ஆதிக்கம் என கருதப்படும். அதற்காக இதை அவர்கள் ஆதிக்கம் என்று சொன்னால் நீங்கள் அதை அங்கிகரிப்பீர்களா? ஒரு தாய் தன்னுடைய பிள்ளைக்கு எது நல்லது எது கெட்டது அறிவுரை கூறுகிறாள். அந்த குழந்தையை நல் வழி படுத்துவதற்காக சில சமயங்களில் அடிக்கவும் செய்வாள் இது அந்த குழந்தையை வெறுப்படையத்தான் செய்யும் அதற்காக அந்த குழந்தை தாயை திருப்பி அடிக்க இயலுமா? அல்லது திட்ட இயலுமா? அல்லது தாய் செய்வது ஆதிக்கம் என்று கூற இயலுமா? இல்லை தாங்கள் அதை ஆதிக்கம் என்று ஏற்றுகொள்வீர்களா? அல்லது அறிவுரை என்று கொள்வீர்களா? அறிவுரைக்கும் ஆதிக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் கட்டுரை வரைவது “காதிலே காட்டெருமை நுழைந்தது” என்பது போன்று உள்ளது.
(கேள்வி 1 ) தாங்கள் முறையாக வாசித்தீர்களா இல்லையா என்று கூட தெரிய வில்லை. இந்த கேள்வியில் \\\இனப்பெருக்கம் என்பது பாதுகாப்பும் பரிவும் கொடுத்து கவனிக்க வேண்டிய காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் அவளைவிட ஆண் பலசாலி என்று கூறுவது, நோயுற்று தளர்ந்திருக்கும் ஒருவனிடம் ஆரோக்கியமாக உள்ள ஒருவன் உன்னைவிட நான் பலசாலி என்பது போன்றதாகும்./// நான் பெண்ணை விட ஆண் பலசாலி என்று குறிப்பிடவே இல்லை. கேட்காத கேள்விக்கு பதில் தருவது ஏன் என்று எனக்கு புரிய வில்லை. இனப் பெருக்கம் மற்றும் ஒரு தாயின் கடைமையை பற்றி கேட்கவே இல்லை. மாறாக தாய்மை அடைவதை ஒரு கட்டுரையாக தாங்கள் இங்கே வரைந்து கொண்டு இருக்கிறீர்கள். நான் என்ன கேட்டேன் (ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் போது கர்ப்பம் தரிக்கும் பொது 10 மாதங்கள் உணவு முறையில் மற்றும் ஆரோக்யத்தில் மாற்றம் என பல கஷ்டங்களை அவள் சந்திக்கிறாள்). என்று அவளுடைய கஷ்டங்களை குறிப்பிட்டு இந்த விதமான கஷ்டங்கள் ஆண்கள் பெறுவதில்லை என்று குறிப்பிட்டேன். ஆணை விட பெண் பலசாலியா அல்லது பெண்ணை விட ஆண் பலசாலிய என்று பட்டிமன்றம் நடத்த சொல்ல வில்லை. \\\இதை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். உடல்பலம், அறிவு, திறமை, வீரம், தொழில் நுட்பம், உழைப்பு, செயற்பாடு என்று எதிலும் ஆணுடன் போட்டிபோடும் திறன் படைத்தவள் பெண்../// உடல்பலம், அறிவு, திறமை, வீரம், தொழில் நுட்பம், உழைப்பு, செயற்பாடு ((போட்டி போடுவது)) என்ற வார்த்தை கொண்டு தாங்களே எனக்கு இங்கு பதிலை எடுத்து கொடுத்துள்ளீர்கள். போட்டி என்பது வேறு சமம் என்பது வேறு என்று தாங்களுக்கு தெளிவாக தெரியாதா? போட்டியில் ஒருவர் தோல்வியுற்றே தீர வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. \\\ஆனால் தலைகீழாக நின்றாலும் ஆணால் போட்டிபோடவே முடியாத ஒருவிசயம் இருக்கிறது, அதுதான் தாய்மை. இப்போது சொல்லுங்கள், தாய்மையடையும் தகுதி என்னும் ஒரு பண்பிற்காகவே அவள் ஆணை விட உயர்வாக மதிக்கப்பட வேண்டியவள்/// இதன் படி பெண்கள் தாய்மையடைவதால் ஆணை விட உயர்வாக மதிக்க பட வேண்டியவள் என்று தெளிவாக குறிபிட்டுள்ளீர்கள். ஆண்கள் பெண்களை தாய்மை அடைய செய்வது தங்களின் கூற்று படி பெண்களுக்கு ஆண்களை விட உயர்வுதானே. இதை வேறு கோணத்தில் பார்க்கலாம் ஆண்கள் பெண்களை தாய்மை படுத்துவதின் மூலம் அந்த பெண்களை பெருமை படுத்துகிறார்கள். ஆனால் அந்த பெண்களோ அந்த ஆண்களுக்கு எந்த கைமாறும் செய்வதில்லை. மாறாக பிரசவம் வரைக்கும் அந்த பெண்களுடன் இருந்து தங்களுடைய நேரம் வீணாவதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாவது ஆண்கள்தானே. இதில் பெண் ஆதிக்கமே தலைதூக்கி உள்ளது என்று நான் கூறினால் அதை ஒப்புக்கொள்ள தாங்கள் தயாரா?
\\\குர் ஆன் (4 – 3 ) அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.///
உங்களுக்கு பிடித்த பெண்களை நான்கு வரை திருமணம் செய்து கொள்ள குர் ஆன் அனுமதிக்கிறது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் வைக்கிறது. உன்னால் மனைவியரிடையே நீதியாக நடக்க முடிந்தால் மட்டும் அனுமதிக்கிறது.
ஆனால் திரு. செங்கொடி அவர்களின் பெருமைப்படுத்தும் கூற்றை பொது மக்களிடம் பதிவு செய்தால் எந்தனை பெண்களை வேண்டுமானாலும் பெருமைப் படுத்தலாம் என்று பெருமைப் படுத்தி விட்டு தனக்கென வந்தது என்று விட்டு விட்டு ஓடிவிடுவார்கள்தானே? மீறி அவர்களை கேட்டல் நாங்கள் என்ன செய்தோம் பெண்களை பெருமைதானே படுத்தினோம் என்று கூறி தப்பித்து கொள்வார்கள்தானே? பெருமைப் படுத்துவதினால் இந்த காலத்தில் எத்தனை பெண்கள் அந்த பெருமைகளை வைத்து எப்படி கஷ்டப் படுவார்கள் மற்றும் படுகிறார்கள் என்று கண்கூடாக பார்க்கிறோம். மாதவாதிகள் என்று ஏளனமாக பார்க்கும் தோழர்கள் செங்கொடியின் ஆண் பெண் சமத்துவத்தை கொஞ்சம் சிந்திக்க வேண்டுகிறேன்.
(4-21). உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?
மேலே உள்ள வசனம் உடன்படிக்கை என்ற வார்த்தையை கொண்டு பெண்களுடைய (security ) பாதுகாப்பை எவ்வளது தெளிவாக சொல்லியுள்ளது என்பதை இயக்க நண்பர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
நேரம் பற்றா குறையால் மீதமுள்ள விளக்கத்திற்கு நாளை பதில் கூறுகிறேன் மன்னிக்கவும்.
நண்பர் செங்கொடி அவர்களுக்கு, இரண்டு நாட்களாக இனைய வசதி கிடைக்கவில்லை அதனால் பதில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது மன்னிக்கவும். .//// ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் முகம்மது இறந்து 250 ஆண்டுகளின் பின்னர் தொகுக்கப்பட்டவை என்பதையும், முகம்மது இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் இவைகளை தொகுக்கவேண்டும் எனும் எண்ணமே எழுந்தது என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.//// ஹதீஸ்கள் ஆதாரபூர்வமானதா இல்லையா என்பதை தனியாக விவாதித்துக் கொள்வோம் இப்போது அதற்குள்ளுள் செல்லமால் நாம் எடுத்துக் கொண்ட வசனத்திற்கு வருவோம் //////யூதர்களின் மூடப்பழக்கம் என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படி பின்புறமிருந்து பிறப்புறுப்பில் புணர்வது என்பது ஐயத்திற்கிடமானதே/////// கண்டிப்பாக ஐயத்திற்கிடமானதில்லை பார்கக வசனம் (2:223) இதில் விளைநிலம் என்பதை சுட்ட “ஹர்ஸ்” எனும் சொல் மூலத்தில் ஆளப்பெற்றுள்ளது. இது இங்கு குழந்தை விளையும் நிலத்தைக் குறிக்கும் சொல் (அரபு டிஷ்னரியை பார்க்கவும்) அதாவது பிறப்புறுப்பை குறிக்கும் அரபுகள் பொதுவாக உவமையான பெயர்களை தங்கள் மொழியில் வைத்துக்கொள்ளக்கூடிய பழக்கமுடையவர்கள் உதரணத்திற்கு “அலிபாபா” இது ஒரு கதையில் வரக்கூடிய கதாபத்திரத்தின் பெயர் ஆனால் அரபுகள் திருடனை விளிக்க அலிபாபா என்ற பெயரை பயன்படுத்துவர்கள் “மஞ்னுன்” என்பதும் அப்படித்தான், ஆகவே ஹதீசுக்கே போகமால் குர்ஆனில் இருந்து விளங்கிக் கொள்ளலாம் ஹதிஸ் ஆதாரமும் இருக்கிறது, பின்குறிப்பு: சவூதி நேரம் 6to 9.30 வரை பத்தாவியுள்ள ஒரு நூலகத்தில்பகுதி நேர வேலை பார்க்கிறேன் இப்போழுது டயமில்லை வேலை முடிந்து வந்து மீதி பதிலை தருகிறேன்
//உங்களுக்கு புத்தி மழுங்கி விட்டது என்று நினைக்கிறன். எந்த பெண் என்று சொல்லாமல் அந்தம்மா கிட்ட போய் கேளுனா? எந்த அம்மாகிட்ட போய் கேக்குறது கொஞ்சம் தெளிவாக பதில் கூறவும்//
ஒரு கட்டத்தில் நீங்களெல்லாம் வசைபாட ஆரம்பித்துவிடுகிறீர்கள். பதிலுக்கு என்னாலும் “என்னத் தலைவா மப்புல இருக்கியா? ஒக்கார கூப்புட்டது நீ, யாருக்கிட்டன்னு ந்ம்மகிட்டேயே டபாய்குறியேன்னு கேட்கமுடி்யும்”? அது நாகரிகமாக இருக்காதுன்னு தவிர்த்துக்கொள்கின்றேன்.
நீங்க வினவுல வர காட்டரபிதான? ஏன்னா ஒருகேள்விக்கு அவர் பதில் சொல்லாம இருக்கார்………..
காட்டரபி:
பள்ளிக்கூடத் தம்பி, நீங்கள் கட்டுரையை ஒழுங்காவே படிக்கமாட்டீங்களா! இவங்க சொன்னாங்கன்னா எழுதியிருக்கிறாங்க?
Reply
Posted on 13-Aug-10 at 8:20
schoolboy
ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்துவிட்டு அதற்கு மேல் குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டராவது கையில் தண்ணீர் புட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்து கடக்கும் இவர்களிடம், இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால் தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள் வறண்டு விடுகின்றன. ithukku neengalay meaning thaangq mr.kaatarabi….
Posted on 14-Aug-10 at 12:58 am
நண்பர்கள் அப்பாஸ், ஹைதர் அலி,
அவசரம் ஒன்றுமில்லை. நிதானமாக உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு முழுமையாக உங்கள் விளக்கங்களை சொல்லுங்கள் பின்னர் நான் வருகிறேன்.
செங்கொடி
நண்பர் செங்கொடி, தொடர்கிறேன் ஹதீஸ் ஆதாரம். அப்துர் ரஹ்மான் பின் ஸாபித் அவர்கள் கூறியதாவது: நான் ஹப்ஸா பின்த் அப்திர் ரஹ்மான் பின் அபீபக்கர் அவர்களிடம் சென்று நான் உங்களிடம் ஒன்றைப் பற்றி விளக்கம் கேட்க வேண்டும் ஆனால் அதை உங்களிடம் கேட்பதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று கூறினேன் அதற்கு அவர்கள் என்னுடைய சகோதரர் மகனே! வெட்கப்படதே (தாராளமாக கேள்) என்றார்கள் அப்போது நான் பெண்களிடம் அவர்களது பின்பக்கத்தில் உறவு கொள்வதைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்றேன் அதற்கு அவர்கள் பின் வருமாறு கூறினார்கள் எனக்கு (நபி ஸல் அவர்களுடைய துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் மக்காவாசிகள் மதீனாவுக்கு (நாடு துறந்து) வந்தபோது அன்சாரிகளிலுள்ள பெண்களை மணந்து கொண்டனர் அந்தப் பெண்களிடம் பின்புறமாக அவர்களது பிறவி உறுப்பில் உடலுறவு கொண்டனர் இதனிடையே அவர்களில் ஒரு பெண் தன் கணவருக்கு உடன்பட மறுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் போய் விளக்கம் கேட்டு வாரத வரை நீங்கள் இவ்வாறு செய்யக் கூடாது என்று கூறினார் பின்னர் அப்பெண் நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் உம்மு சலமா அவர்களிடம் சென்று நடந்தை கூறினார் அதற்கு சலமா அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வரும்வரை சற்று அமர்ந்திரு என்று அப்பெண்ணிடம் கூறினார்கள் பின்னர் நபி ஸல் அவர்கள் வந்தபோது இது குறித்து விளக்கம் கேட்க அப்பெண் வெட்கப்பட்டுக் கொண்டு வெளியே சென்றுவிட்டார் அதனால் நபி ஸல் அவர்களிடம் உம்மு சலமா அவர்களே விளக்கம் கேட்டார்கள் உடனே அந்த அன்சாரிப் பெண்ணை அழையுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் உம்மு சலமா அவர்கள் அப்பெண்ணை அழைத்து வந்ததும் அப்பெண்ணிடம் நபிஸல் அவர்கள் 2:223 வசனத்தொடரை ஒதிக்காட்டிவிட்டு ஆனால் உடலுறவு என்பது பிறவி உறுப்பில் மட்டும்தான் என்று கூறினார்கள் ( நூல்கள்: அஹ்மத், முஸ்னது, தாரீமி, எண் 551) அடுத்து இன்னோரு ஹதீஸ் , அன்சாரிகள் யூதர்களுடன் சிலை வணக்கத்தில் இருந்து வந்தவர்கள் எனவே அவர்கள் யூதர்களின் செயல்களைப் பின்பற்றி வந்தனர். யூதர்கள் ஒரு முறையில் உடலுறவு வைத்துக் கொள்வர்கள் . இதையே அன்சாரிகளும் பின்பற்றினார்கள் ஆனால் குறைஷிகள் பலமுறைகளில் உடலுறவு கொண்டு வந்தனர் சிலர் முன் புறமாகவும் சிலர் பின்புறமாக மண்டியிட்டும் பெண்ணுறுப்பில் உடலுறவு கொண்டனர். இந்நிலையில் முஹாஜிர் ஒருவர் அன்சாரிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் அன்சாரிகளுக்கு தெரியாத முறையில் உடலுறவுக் கொள்ள முற்ப்பட்டபோது அப்பேண்மணி மறுத்து இது தொடர்பாக நபிகளாரிடம் கேட்ட போது (2:223) வசனத்தை ஒதி காட்டினார்கள் ( நூல்: அபூதாவூத் 1849) இந்த ஹதீஸ்கள் போதும்ன்னு நினைக்கிறேன் ///////////////////அக்காலத்தில் பின்புறமிருந்தோ முன்புறமிருந்தோ கொள்ளும் உடலுறவு குறித்த மூடப்பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு வசனத்தை இறக்கிவைத்திருக்கவேண்டிய அவசியமில்லை //////////////////// இது என்ன இதை விட சின்ன சின்ன விஷயங்களுக்கேல்லாம் குர்ஆனில் வழிகாட்டல்கள் நிறைந்து கிடக்கின்றன (கொசுவையோ, அதைவிட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப் பட மாட்டன் 2:26) என்ற வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்
pradeep
////////////அருமையான விளக்கம் தோழர் செங்கொடி ! செரீனா வில்லியம்ஸ் கிட்ட டென்னிஸ் ஆட முடியுமா இந்த மதவாதிகள்…//////////////
இப்படியொரு கேவலமான கேள்விக்கு என்னிடமும் ஒரு கேவலமான கேள்வியிருக்கு “சச்சின் டென்டுல்கரிடம் பெண்கள் கிரிக்கெட்டில் போட்டிபோட முடியுமா?”
“சச்சின் டென்டுல்கரிடம் பெண்கள் கிரிக்கெட்டில் போட்டிபோட முடியுமா?”என்பதை
“சச்சின் டென்டுல்கரிடம் உங்களுடைய புரட்சிக்கார பெண்கள் கிரிக்கெட்டில் போட்டிபோட முடியுமா?”என்று திருத்தி வாசிக்கவும்.
//நான் என்னுடைய மேல் சட்டை இல்லாமல் உங்களுடைய வீட்டில் வந்து உட்காருகிறேன். அதே போன்று தங்களுடைய சகோதரியை என்னுடன் உட்கார அனுமதிப்பீர்களா? //
//தவ்ஹீத் ஜமாத் தாங்களை நேரடி விவாதத்திற்கு அழைத்தால் தாங்கள் மறுப்பதற்கு காரணம் மேலே உள்ள விவாதத்தின் மூலம் தெளிவாக தெரிகிறது.//
செங்கொடிய only ஜட்டியோட தான் விவாதத்திற்க்கு வரனுன்னு சொல்றீங்களோ!
////////////செங்கொடிய only ஜட்டியோட தான் விவாதத்திற்க்கு வரனுன்னு சொல்றீங்களோ!////////////
காட்டரபி அவர்களே தாங்கள் உண்மையாகவே கட்டானா இருப்பீரோ என்று சந்தேகித்தேன் இப்பொழுது தெளிவு படுத்திவிட்டீர்கள்.
அப்பாசு ஒங்களுக்கு நான் புரியவைக்கவா!
வசனம் 2:223- உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!
அதாவது, ஒங்க பொஞ்சாதி ஒங்களுக்கு. அவங்க ஒரு விவசாய நிலம். ஒங்களுக்கு எப்பஎல்லாம் தோனுதோ, ஒங்களுக்கு எப்படியெல்லாம் தோனுதோ அப்படியெல்லாம் (முன்னாலதாங்க) அந்த நிலத்துல உழுவுங்க, உழுது பயிறுடுங்கன்னு சொல்லியிருக்கு. இல்லியா!
இங்கதான் எனக்கும் ஒரு டவுட்டு. ஒரு உசுறும் உணர்வும் உள்ள ஒரு உசுர, தெமேன்னு அசையாம இருக்குற நிலத்தோட எப்படி ஒப்பிடலாம். முதல்ல இந்த ஒப்பீடே தவறுன்னு சொல்றேன். இது ஆணாதிக்க சிந்தனையில் வெளிவந்த உவமை. இந்த உவமையின்படி ஒரு ஆம்பிளையின் விருப்பப்படிதான் ஒரு பொம்பளை இருக்கவேண்டும் என்றாகிறது. கணவனின் ஆசைகள்தான் மனைவியின் ஆசைகள் என்றாகிவிடுகிறது இல்லியா! ஒரு ஆண் தன்னை எப்படியெல்லாம் உழவேண்டும் என்ற ஆசைகள் ஒரு பெண்ணுக்கு இருக்காதா?ஒரு ஆணை விரும்பியவாறு உழச் சொன்ன அல்லா ஒரு பெண்ணின் விருப்பத்தை பற்றி ஏதேனும் சொல்லியிருக்காரா?(தெமேன்னு இருங்கன்னு சொன்னதைத் தவிர).
அந்த மூடநம்பிக்கைக்குத் தான் இந்த வசனம்னா, அவரு என்னா சொல்லியிருக்கனும். அது போல செஞ்சா மாறுகண்ணோட பிறக்கும் என்ற யூதர்களின் கருத்து தவறுப்பா, நீங்க தாராளமா அந்தமாதிரி செய்யலாம் என்றல்லவா சொல்லியிருக்கனும். அதவுட்டுட்டு விளைநிலம் வெங்காய நிலம்னு எதுக்கு இந்த ஆணாதிக்க ஜோடனையெல்லாம்.
//காட்டரபி அவர்களே தாங்கள் உண்மையாகவே கட்டானா இருப்பீரோ என்று சந்தேகித்தேன் இப்பொழுது தெளிவு படுத்திவிட்டீர்கள்.//
சரியாச் சொல்லுங்க பாஸ். கட்டான் இல்ல பாஸ் ”காட்டான்”. எங்க மீண்டும் சரியா சொல்லுங்க, ”காட்டான்”
தேங்ஸ் லெனின்.
நண்பர் ஹைதர் அலி,
உங்கள் பெயரில் சற்றுமுன் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விபரம் குறித்து (நீங்கள் இது வினவுக்கும் தெரியும் என குறிப்பிட்டிருந்ததால்) வினவு தோழர்களிடம் விபரம் கேட்டபோது அதை மறுக்கிறார். மட்டுமல்லாது நீங்கள் வினவு தோழர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். விரைந்து தொடர்பு கொள்வீர்கள் என நம்புகிறேன்.
செங்கொடி
தோழர் சங்கருக்கு.
1. மகர் என்பது என்ன,எவ்வளவு கொடுக்கப் பட வேண்டும்?
ஆண் பெண்னுக்கு கொடுப்பது.
நிர்னைக்கப்படாதது பெண் விறும்பி எவ்வளவு வேண்டாலும் கேட்கலாம் அவள் விறும்பினால் அதை வாங்காமலும் இருக்கலாம் அதன் முழு உரிமையும் பெண்னுக்கு மட்டுமே.
2. திருமணத்தின் போது மணமக்கள் தாங்கள் இஸ்ல்லாமை மன பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று அறிக்கை இட வேண்டுமா?
திருமண ஒப்பந்ததில் அப்படி ஒரு வாசகம் அவசியம் அல்ல.
3. ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் முதல் மனைவி தடுக்க இயலுமா?
முதல் மனவியின் அனுமதி இல்லாமல் முறையாகா இரண்டாவது திருமணம் செய்யமுடியாது அதனால் முதல் மனைவிக்கு விருப்பம் இல்லையென்றால் தடுக்க இயலும்.
4. விவாக ரத்து செய்தால் குழந்தைகள் யார் பொறுப்பில் இருக்க வேண்டும்?
இருவரும் சம்மதித்தால் யாருடன் வேண்டாலும் இருக்கலாம் இல்லாத பட்சத்தில் குழந்தைகள் தந்தையையே சார்ந்து இருக்கவேண்டும்.
5. முஸ்லிம் ஆண் யூத ,கிறித்தவ பெண்களை மணப்பது குரானில் அனுமதிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன் சரியா?
சரிதான்.
6. முஸ்லிம்களுக்கிடையே கலப்பு மணம்( சுன்னி,ஷியா, பிற வகுப்பினரிடம்) செய்யவது உண்டா?.
ஐந்தாவது கேள்விக்க்கே சரி என்னும்போது ஆறாவது கேள்வி தேவையில்லை என்று நினைக்கிறேன்.
7. எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும்?
இதில் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அதே நேரத்தில் தகுதி உள்ள ஆணும் தகுதி உள்ள பெண்னும் என்று உள்ளது.
8.தற்காலிக திருமணம்(முட்டா) ஷியா பிரிவினரிடம் நடைமுறைக்கு உள்ளது. இது சரியா?.
http://www.al-islam.org/encyclopedia/chapter6a/7.html
தவறு.
9. ஆண் நினைத்தால் பெண்ணை அவள் விருப்பமின்றி விவாகரத்து செய்ய இயலுமா?
முடியும்.
10.பெண் நினைத்தால் ஆணை அவன் விருப்பமின்றி விவாகரத்து செய்ய இயலுமா?
முடியும்.
//5. முஸ்லிம் ஆண் யூத ,கிறித்தவ பெண்களை மணப்பது குரானில் அனுமதிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன் சரியா?
சரிதான்.//
நண்பர் ராஜவம்சம், அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் ஐந்தாவது பதில் தவறென நினைகிறேன், உங்கள் பதில் கீழ் கொடுக்க பட்டுள்ள வசனத்திற்கு மாறுபட்டு உள்ளது. திருத்தி கொள்ளவும்.
“அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்’ (அல் குர்ஆன் 2:221) “
நண்பர் ஹைதர் அலி,
இரண்டு பகுதிகளாக உங்களுடைய விளக்கத்தில் பின்புறமிருந்துதான் பின்புற வழியிலிருந்தல்ல என்பதை தெளிவிப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் இங்கு முதன்மையான கேள்வி அந்த உவமையை தரிசாக போடுவதான பொருளில் எடுத்துக்கொள்ளமுடியுமா? என்பதுதான். நீங்கள் நினைப்பதுபோல் ஹதீஸ் ஆதரப்பூர்வமானவையா இல்லையா? என்பதை நோக்கி நான் என் வாதங்களை எடுத்துவைக்கவில்லை. அந்த உவமையின் பொருளாக நீங்கள் ஹதீஸைக்கூறியபோது, ஹதீஸின் வெளிச்சத்தில் ஒரு வசனத்தின் பொருளைக் காணும்போது ஹதீஸின் பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதாகவே நான் கூறியிருந்தேன். மட்டுமல்லாது ஹதீஸிகளை எடுத்தாளும் போது ஏற்படும் தெளிவின்மையைக் குறிக்கவே பின்புறமா? பின்புறவழியா? எனும் குழப்பத்தைச் சுட்டியிருந்தேன். என்றாலும் அது முதன்மையானதல்ல.
யூதர்களின் மூடப்பழக்கத்தை தொடருவதா வேண்டாமா எனும் ஐயமான, வசனம் 2:223 வருவதற்கு முந்திய காலகட்டம்; ஐயத்திற்கு தெளிவு கிடைத்த, வசனம் 2:223 வந்ததற்கு பிறகான காலகட்டம். இந்த இரண்டு காலகட்டங்களில் தெளிவு கிடைத்த பிறகான காலகட்டத்தில் தான் இந்த விவகாரத்திற்கான ஹதீஸ்கள் இருக்கின்றன. முந்திய காலகட்டத்தில் இந்த விவகாரத்திற்கான ஹதீஸ்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது சந்தேகம் இருந்த நேரத்தில் அது குறித்த எந்த ஹதீஸும் இல்லை. சந்தேகம் தெளிவான பிறகு 2:223 க்கான பொருள் என்ன எனக் கேட்கும் ஹதீஸ்கள் இருக்கின்றன. இதன் பொருள் என்ன? தெளிவாகச் சொல்வதென்றால் வசனம் 2:223 வருவதற்கு முன்னால் அப்படி ஒரு ஐயம் இருந்ததற்கான எந்த சான்றும் இல்லை. இதை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு ஐயம் இருந்த நிலையில் அதை விளக்கும் விதமாக இந்த வசனம் இறங்கியது என்று, வசனம் இறங்கிய பிறகு அதற்கான காரணமாக ஹதீஸ்கள் இருக்கின்றனவேயன்றி. இப்படி ஒரு ஐயம் இருந்தது, இப்படி ஒரு குழப்பம் இருந்தது என்பதை குறிக்கும் ஹதீஸ்கள் எதுவுமில்லை. ஐயம் வசனம் இறங்குவதற்கு முன்பில்லை, வசனம் இறங்கியதற்குப் பிறகுதான் ஐயம் வருகிறது.
‘ஹர்ஸ்’ எனும் சொல் பிறப்புறுப்பைக் குறிக்கும் சொல்லாக இருந்தும் அது விளைநிலத்துக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். என்றால் புஹாரி 4527 ன் பொருள் என்ன?
நீங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் ஹதீஸ்களில் தெரிவது என்ன? உடலுறவில் குறைஷிகளுக்கு சிலமுறைகளும், அன்சாரிகளுக்கு (யூதர்களோடு தொடர்புடைய) சில முறைகளும் இருந்திருக்கின்றன. குறைஷி ஆண்களும், அன்சாரிப் பெண்களும் கலக்கும்போதுதான் பிரச்சனை எழுகிறது. அப்படி எழும் பிரச்சனைகள் முகம்மதிடம் வரும்போது அதற்குத்தீர்வாக ஏற்கனவே இருக்கும் வசனம் 2:223 ஐ கூறுகிறார். அப்படியென்றால் யாருடைய ஐயத்தின்போது வசனம் 2:223 இறங்கியது?
இவைகளிலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? ஆண் பெண் உறவைக் குறிப்பிட்ட உவமையுடன் வசனமாக குரானில் இடம்பெற்றுவிட்டது. அதன்பிறகான காலங்களில் அந்த வசனம் பெண்களை மட்டமாக குறிக்கிறது என்பது உணரப்பட்டபின், அதனை சமன் செய்யும் விதமாக ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன. இதில் உங்களுக்கு உடன்பாடில்லாத பட்சத்தில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு தெளிவான விடையை தாருங்கள். அதனோடு கடந்த பின்னூட்டத்தில் அந்த உவமைக்கு ஏன் தரிசு எனும் பொருள் கொள்ளக்கூடாது எனும் விதத்தில் நான் குறிப்பிட்டிருந்த பின்பகுதிக்கும் (இதையே இன்னொரு கோணத்தில் பார்ப்போம். ……… அல்லா அறிந்திருக்கவில்லை என்று பொருள்படும் பரவாயில்லையா?) சேர்த்து விடையளிக்கவும்
செங்கொடி
\\\உடலியல் கூறுகள் குறித்து எவ்விதமான தெளிவும் இல்லாமல் வன்மத்துடன், பெண்ணை ஆணுக்குக் கீழாக காட்டியே தீருவது எனும் ரீதியில் வைக்கப்படும் கருத்து இது.///
உடலியல் கூறுகளில் தெளிவு இல்லாமல் இருந்திருந்தால் நான் இந்த கருத்தை இங்கே வைத்திருக்கவே மாட்டேன் திரு. செங்கொடி அவர்களே.
\\\ஆணால் பலத்காரம் செய்யமுடியும் என்பதே ஒரு தகுதியா? பெண்ணுக்குத்தான் கருவைத்தாங்கி வளர்க்கும் அமைப்பு அமைந்திருக்கிறது, எனவே உயிரணுக்கள் உடலினுள் சென்று விடப்பட்டாக வேண்டிய தேவை இருக்கிறது. அதேபோல் ஆணுக்கும் உடலுக்குள் செலுத்தியாக வேண்டிய தேவை இருக்கிறது. ஆணுக்கு பெண் உடலினுள் செலுத்தியாக வேண்டும் என்பதனால் விரைப்பு அவசியப்படுகிறது. விரைப்பு அவசியப்படுவதினாலேயே ஆணுக்கு குறிப்பிட்ட மனோநிலையில் இருந்தாக வேண்டும் என்றாகிறது.///
தகுதியா? தகுதி இல்லையா? என்பதற்கு தனி ஒரு விவாதம் வைத்து கொள்வோம். தாங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் பெண்களுக்கு கருவைத்தாங்கி வளர்க்கும் அமைப்பு உள்ளது ஆனால் ஆண்களுக்கு அந்த அமைப்பு இல்லை மற்றும் மனோ ரீதியாக ஆண்களுக்கு அந்த விரைப்பு தேவைப் படுகிறது ஆனால் பெண்களுக்கு தேவை இல்லை என்று. எனவே உடல் மற்றும் மனோ ரீதியாக ஆண் பெண் மாறு படுகிறார்கள் என்று தாங்களே தெளிவாக ஒப்புக்கொண்டு விட்டீர்கள். இதற்கு தாங்கள் ஒரு போதும் மறுப்பு தெரிவிக்கவே இயலாது. அப்படி தெரிவிப்பீர்களாயின் அது சமாளிப்பாகவே இருக்கும். இதற்கு முன்பும் அது போன்றுதான் செய்து கொண்டு இருக்கீர்கள் என்று தாங்கள் இயக்க நண்பர்களும் நன்கு அறிவார்கள். \\\இதையே இன்னோரு விதமாக பார்க்கலாமே, ஆணால் எல்லா நேரத்திலும் தயாராக முடியாது, ஆனால் பெண்ணால் எந்த நேரத்திலும் தயாராக முடியும்./// இது போன்ற இவ்வளவு விளக்கத்தை தர நேரம் எடுத்து கொண்ட தாங்கள் (அடுக்கடுக்காக கூறுகிறீர்கள்) பெண்கள் எந்த நேரத்திலும் தயாராக இருந்து ஆண்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அதில் ஏற்படும் பாதிப்பு ஆண்களுக்கா அல்லது பெண்களுக்கா என்பதை மறைப்பதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் இது மனோ ரீதியாக மற்றும் உடல் ரீதியாக ஒரு போதும் சமமாக மாட்டார்கள் என்று இங்கே பதிவு செய்து கொள்கிறேன். ஆனால் தங்களுடைய புரட்சி பெண்கள் அதற்கும் எப்போதும் வேண்டுமானாலும் தயாராக இருப்போம் என்று கூறி அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு மருந்து மற்றும் பாதுகாப்பு வழிகள் உண்டு என்று தெரிவித்தால் சில நாட்களுக்கு முன்பு புரட்சி பெண், தானே தலைவி குஷ்பு அவர்களுக்கு செருப்பு மாலைகளும், விலக்கமாத்து பூஜை நடந்ததே அதைவிட தங்களுடைய புரட்சி பெண்களுக்கு இரட்டிப்பாக நடக்கும் என்பதை தாங்களே கண்கூட பார்க்கும் நிலை வரும் என்று கூறி கொள்கிறேன்.
\\\விளையாட்டுப் போட்டிகளில் ஆண் பெண்களுக்கு தனித்தனிப் போட்டிகள் நடத்தப்படுவதும் ஒருவகையில் ஆணாதிக்கப் பார்வைதான்///.
உங்கமையாக தாங்கள் ஆணாதிக்கம் மேல் கொண்ட பார்வையை நினைத்து எனக்கு சிரிப்பு தான் வருகிறது. அதை தாங்கள் இயக்க நண்பர்கள் செய்யாமல் பார்த்து கொள்ளவும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் மிகப் பழமை பெற்ற பயிற்சியாளர்களும், போட்டி நடுவர்களும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் தெரியாத ஆண் ஆதிக்கம் உங்களுக்கு தெரிந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
\\\மனித குலத்தின் தொடக்கத்தில் வேட்டையிடுவதில் தொடங்கி அன்றையகால அனைத்திலும் பெண்ணே பலசாலியாக இருந்தாள் தனிச்சொத்துடமை, ஆணாதிக்கத்தின் தொடக்கத்தில் தான் படிப்படியாக பெண் பலவீனமானவளாக மாற்றப்பட்டாள். அதனால்தான் இன்றும்கூட பெண்களுக்கான போட்டிகளில் ஆண்களின் இலக்கை விட குறைவான இலக்கே நிர்ணயிக்கப்படுகிறது.///
மனித குலத்தில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களிலும் தற்போது கூட பெண்ணினம் வேட்டையாடத்தான் செய்கிறது அதற்காக ஆணினத்தை விட பெண்ணினம் பலசாலி என்று சொல்லிவிட இயலுமா? ஒரு கூட்டத்தில் பத்து பெண் சிங்கங்கள் இருந்தாலும் அதை ஒரு ஆண் சிங்கம் நிர்வாகிக்கும்
தன்மையுடையது. மனித குலத்தில் மட்டும் அல்ல அனைத்து உயிரினங்களிலும் உடல் அளவிலும் மனதளவிலும் ஆண் பெண் ஒரு போதும் சமமாகது.
\\\ஆண்களின் இலக்கை விட குறைவான இலக்கே நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பண் ஆணைவிட பலவீனமானவள் என்றாகிவிடமாட்டாள். எப்படியென்றால், எடுத்துக்காட்டாக ஒரு பழுதூக்கும் வீராங்கணை 100 கிலோ எடை தூக்குகிறாள் என்று கொள்வோம். வயதிலும் ஆரோக்கியத்திலும் அவளை ஒத்த ஆண்களால் 100 கிலோவை தூக்கிவிட முடியுமா? முடியாது. அதேபோல்தான் ஆணின் இலக்கிற்கு பெண்ணுக்கும் பயிற்சியளிக்கப்பட்டால் பெண்ணாலும் ஜொலிக்க முடியும்///
இலக்குகளை நிர்ணயிப்பது ஆணாதிக்கம் என்று கூறும் தாங்கள் அதை நிர்ணயிப்பது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்களை போன்றோ என்னை போன்றோ சாதாரண ஆட்கள் அதை நிர்ணயிப்பதில்லை அனைத்திலும் தேர்ச்சி பெற்ற அனுபவமுடைய ஆண்களும் பெண்களும் தான் அதை முடிவுசெய்வார்கள். இதில் ஆணாதிக்கம் உள்ளது என்பது பைத்தியகாரத்தனமான பதில்.
\\\எடுத்துக்காட்டாக ஒரு பழுதூக்கும் வீராங்கணை 100 கிலோ எடை தூக்குகிறாள் என்று கொள்வோம். வயதிலும் ஆரோக்கியத்திலும் அவளை ஒத்த ஆண்களால் 100 கிலோவை தூக்கிவிட முடியுமா?/// இவளை போன்றே பயிற்சி அளிக்கப்பட்ட பழுதூக்கும் வீரன் 150 கிலோ எடை தூக்குவான் என்பதை நான் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
புரட்சி என்று வாதிடும் தாங்கள் பழங்குடியினரையோ அல்லது நாகரீகம் வளராத சமுதாயத்தையோ இங்கே எடுத்துகாட்டாக காட்டவே இயலாது. அப்படி காட்டுவீர்கள் ஆனால் நீங்கள் செய்வது இங்கே புரட்சியே அல்ல என்பதை ஏற்று கொண்ட விதம் ஆகும். அதற்காகத்தான் நாகரிகம் வளர்ந்த \\\ம.க.இ.க உள்ள பெண்கள் நிர்வாணமாக பிறச்சாரம் செய்யலாமே தாங்கள் புரட்சி செய்யலாமே …பிறர் தூற்றுவார் என்று எண்ணினால் தங்கள் அலுவகத்தில் பெண்களும் ஆண்களும் பிறந்தமேணியாக வேலைகளில் ஈடுபடலாமே/// தங்களுடைய புரட்சி பெண்கள் இது போன்ற காரியங்களில் ஈடு பட்டு புரட்சி செய்ய வேண்டியது தானே என்ற கருத்தை நான் இங்கே பதிவு செய்தேன். அதானால் மாதவாதிகளில் சில பேர் அறியாமையால் செய்யும் சில நடவடிக்கைகளை தாங்களும் தங்களுடைய புரட்சி இயக்கமும் புரட்சி என்று பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு மரியாதை தருகிறோம் என்ற பெயரில் அவர்களுடைய வாழ்க்கையையே கேள்வி குறியாக்குகிரீர்கள் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
எப்படியும் தாங்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு கட்டுரை வரையாதான் போகிறீர் வரையும் அதற்கு நான் பதில் தர தயாராக உள்ளோம்.
விடப்பட்ட கருத்து
\\\அன்றையகால அனைத்திலும் பெண்ணே பலசாலியாக இருந்தாள் தனிச்சொத்துடமை, ஆணாதிக்கத்தின் தொடக்கத்தில் தான் படிப்படியாக பெண் பலவீனமானவளாக மாற்றப்பட்டாள்.///
பெண்களே பலசாலியாக இருந்தார்கள் அதன் பின்பு எப்படி ஆண்களால் பெண்களை ஆட்சி செய்ய முடிந்தாது. அல்லது பெண்கள் புத்தி மழுங்கி விட்டதா? அல்லது பெண்கள் விட்டு கொடுத்து விட்டார்களா? அல்லது பெண்கள் ஆண்களால் மயக்க பட்டார்களா? பெண்கள் பலசாலியாக இருந்தார்கள் பின்பு ஆணாதிக்கம் செய்து விட்டார்கள் என்னது இது கேக்குறவன் கேனபயலா இருந்த எலி ஏரோப்ளேன் ஓட்டும் என்று சொல்வீர்கள் போன்று உள்ளது. கருத்துக்கு சிறப்பு சேர்பதற்காக இது மாதிரி அவிழ்த்து விட வேண்டாம். இந்த காலத்தில் மட்டும் அல்ல அந்த காலத்தில் கூட ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்தது. அது ஒரு சில மட ஆண்களாலும், பெண்களாலும் இன்று கூட வாழியாடி வாழையாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் குர் ஆனில் பெண்களுக்கு உடைய கடமைகள் உரிமைகள் சிறப்பாக சொல்லி இருப்பதே உண்மை. அதை தாங்கள் நேர்மையான பார்வையுடன் சிந்திக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் உள்ள பயடா என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி கடந்த புதன்கிழமை கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியை கற்பழித்தது யார் தெரியுமா? 15 வயது பையன்!. அந்த சிறுமியிடம் சாதுரியமாக பேசி சிறுமியை அந்த ஊரில் உள்ள எம் எல் சுகதியா யுனிவர்சிடிட்டி வளாகத்திற்கு கொண்டு சென்று அங்கு சிறுமியை கற்பிழித்து விட்டு தப்பி ஒடிவிட்டான்.
சிறுமியின் குடும்பத்தினரின் போராட்டத்திற்கு பிறகு கற்பழிப்பில் ஈடுபட்ட 15 வயது பையன் கைது செய்யப்பட்டுள்ளான். பிடிஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுமி நடனமாட சென்றிருந்ததாக மற்றொரு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலுணர்வுகளை துண்டும் சினிமாவின் பாதிப்பு கிராமம் வரை சென்றுள்ளது என்பதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது! எல்லை இல்லாமல் போகும் இந்த சினிமாவின் அட்டகாசம் அடக்கப்பட வேண்டும்.
மேலும் தனது குழந்தைகளை கூத்தாட விட்டு பார்க்கும் பெற்றோர்களும் இதிலிருந்து பாடம் பெற வேண்டும்.
உங்கள் குழந்தைகள் நடனமாடுவதினால் அதை பார்ப்பவரின் பாலுணர்வு துண்டப்பட்டு அதனால் பாதிப்பு உங்கள் குழுந்தைக்கே என்பதையும் இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகின்றது.
செய்திக்காக
மேலும் விபரத்திற்கு
http://english.samaylive.com/regional-news/rajasthan-news/676475327/minor-girl-raped-in-udaipur.html
அப்பாசு,
நீங்கள் குறிப்பிட்ட செய்திக்காக செய்தியிலிருந்து நீங்கள் சொல்லவருவதென்ன?
நடந்த நிகழ்வுக்கு யாரின் மீது எதன் மீது குற்றம் சொல்ல வருகிறீர்கள்?
நடனம் கற்றுக்கொண்ட சிறுமியையா!
நடனம் கற்றுக்கொள்ள அனுமதித்த பெற்றோரையா!
நுகர்வு வெறியைத் தூண்டும் சினிமாவையா?
நுகர்வு வெறி பரப்பும் முதலாளித்துவ அரசையா?
ஆணை சபலக் கேசாகப் படைத்த இறைவனையா?
எங்குமே தாங்கள் அந்தக் கயவனை குற்றம் சொல்லவில்லையே!
அவன் செய்த தவறை நடனத்தின் மூலமும் சினிமாவின் மூலமும் சரிசெய்ய முயல்கிறீர்களே! ஏன்?
இதுதான் ஆணாதிக்கம் என்பது.
5. முஸ்லிம் ஆண் யூத ,கிறித்தவ பெண்களை மணப்பது குரானில் அனுமதிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன் சரியா?
சரிதான்.//
நண்பர் ராஜவம்சம், அஸ்ஸலாமு அலைக்கும்.
//தங்களின் ஐந்தாவது பதில் தவறென நினைகிறேன், உங்கள் பதில் கீழ் கொடுக்க பட்டுள்ள வசனத்திற்கு மாறுபட்டு உள்ளது. திருத்தி கொள்ளவும்.
“அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்’ (அல் குர்ஆன் 2:221) “//
நன்றி இராஜவம்சம்.
நண்பர் ஃபஆ(Fa) இந்த வசனம் குறித்து உங்கள் கருத்து என்ன?. நீங்கள் காட்டிய வசன்ம் கூட இணை வைக்கும் பெண்கள் என்றுதான் கூறப் படுகிறது. யூதர்கள், மற்றும் கிறித்தவர்கள் இணை வைக்கிறார்களா?. முகமது நபியின் ஒரு மனைவியின்(?) பெயர் கூட மேரி என்று நினைக்கிறேன்.
மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம் ஆணுக்கும் , கிறித்தவ, யூத பெண்களுக்கும் திருமணம் சாதாரணமான விஷயம். மறந்த பாலஸ்தீன இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்தின் மனைவி ஒரு பாலஸ்தீன கிறித்தவ பெண்.
இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் – மேலும் அவர் மறுமையில நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார். (5:5)
இஸ்லாமிய நண்பர்கள் தந்த பின்னூட்டங்களை படிக்கும் போது அதன் முக்கிய அம்சங்கள்.
1. பெண் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலகீனமானவள்.
2.பெண்ணின் முக்கிய கடமை திருமணம் செய்து ,கணவனை சந்தோஷப் படுத்துவதுதான்.மேலும் பிள்ளை பெற்றுக் கொடுப்பதும் கூட அவளது கடமையாகும்.
3. திருமணத்திற்கு வயது தடை இல்லை.
4. ஆண் நான்கு திருமணம் செய்ய அனுமதி உண்டு.
5.ஒருவேளை அவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் அவள் விருப்ப மின்றியே செய்ய முடியும்.
6. திருமண இரத்திற்கு பிறகு அவளுக்கு ஜீவனாம்சம் கணவன் கொடுக்க தேவை இல்லை.
இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானது என்றால், மேற்கூறிய அம்சங்கள் எல்லாம் நல்ல நாகரிகமான விஷயங்களா?
நண்பர் அப்பாஸ்,
மூன்று பகுதிகளாக நீங்கள் அளித்த விளக்கம் முழுவதும் ஆணாதிக்கம் என்பது குறித்து உங்களுக்கு எந்தத் தெளிவும் இல்லை என்பதையே மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது. அதோடுமட்டுமல்லாமல் கேட்க்கப்பட்டதை உள்வாங்கி தெளிவுபெறும் அல்லது தெளிவுதரும் விளக்கங்கள் தருவதை விடுத்து பதில் சொன்னால் மட்டும் போதும் எனும் உங்கள் நிலையும் விளங்குகிறது. அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு, \\தாங்கள் மட்டும் கொண்ட வெறுப்பு சொந்த வெறுப்பு அதே பொது மக்கள் அனைவரிடமும் காணபட்டால் அது பொது வெறுப்பு// இது உங்களின் புல்லரிக்கவைக்கும் அருஞ்சொற்பொருள் விளக்கம், ஆனால் கேள்வி என்ன? \ஆணாதிக்கத்தின் மீது சொந்த வெறுப்பு, பொது வெறுப்பு என்றெல்லாம் பிரித்துக்கொள்ள முடியுமா?/ இதுமட்டுமா புரட்சி குறித்தான உங்களின் கருத்தும் புல்லரிக்க வைக்கிறது, \\புரட்சி என்று வாதிடும் தாங்கள் பழங்குடியினரையோ அல்லது நாகரீகம் வளராத சமுதாயத்தையோ இங்கே எடுத்துகாட்டாக காட்டவே இயலாது. அப்படி காட்டுவீர்கள் ஆனால் நீங்கள் செய்வது இங்கே புரட்சியே அல்ல என்பதை ஏற்று கொண்ட விதம் ஆகும்// இது ஒரு சோற்றுப் பதம் தான்.
\\இதற்கு முன்னால் உள்ள விவாதத்திலேயே நான் தெளிவாக சுட்டிக் காட்டினேன். பெண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கு தரப்பட்டுள்ளது ஆண்களுக்கு உள்ள உரிமை ஆண்களுக்கு தரப்பட்டுள்ளது என்று// இல்லை. பெண்களுக்கும் உரிமை தரப்பட்டுள்ளது எனும் குரான் வசனத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டீர்களேயன்றி, பெண்களுக்கு என்ன உரிமைகள் தரப்பட்டுள்ளது என நீங்கள் குறிப்பிடவில்லை. இதை உங்களுக்கு நான் கேள்வியாகவும் வைத்தேன், \ஆண் பெண் உறவில் பெண்ணுக்கு ஆணைவிட உயர்வு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை சுட்டிக்காட்ட முடியுமா உங்களால்?/ ஆனால் இதுவரை நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள். இப்போது \\பெண்களால் இயலாத சில காரியங்களில் ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு// என்றும் கூறியிருக்கிறீர்கள். மீண்டும் உங்களுக்கு நான் கேள்வியாக வைக்கிறேன். எது பெண்களால் இயலாத காரியம்? அந்தக் காரியங்களில் எப்படி ஆணுக்கு உயர்வு இருக்கிறது? விளக்குங்கள்.
\\ஆண்கள் பெண்களை தாய்மை படுத்துவதின் மூலம் அந்த பெண்களை பெருமை படுத்துகிறார்கள். ஆனால் அந்த பெண்களோ அந்த ஆண்களுக்கு எந்த கைமாறும் செய்வதில்லை. மாறாக பிரசவம் வரைக்கும் அந்த பெண்களுடன் இருந்து தங்களுடைய நேரம் வீணாவதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாவது ஆண்கள்தானே. இதில் பெண் ஆதிக்கமே தலைதூக்கி உள்ளது என்று நான் கூறினால் அதை ஒப்புக்கொள்ள தாங்கள் தயாரா?// இது ஏற்கமுடியாத கருத்து என்றாலும் இந்த இடத்தில் நீங்கள் இதை உங்கள் கருத்து போலவும், இதை ஏற்கமுடியுமா என்று என்னை கேள்வி கேட்பதுபோலவும் அமைத்திருக்கிறீர்கள். ஆனால் அடுத்த சில வரிகளிலேயே, \\செங்கொடி அவர்களின் பெருமைப்படுத்தும் கூற்றை பொது மக்களிடம் பதிவு செய்தால் எந்தனை பெண்களை வேண்டுமானாலும் பெருமைப் படுத்தலாம் என்று பெருமைப் படுத்தி விட்டு தனக்கென வந்தது என்று விட்டு விட்டு ஓடிவிடுவார்கள்தானே?// என உங்களின் குப்பை எண்ணங்களை என்மீது திணிக்கிறீர்கள். இது முறையான விவாதப் போக்கு அல்ல.
1) இதில் உங்கள் கேள்வி என்ன? ஆண் பெண் உறவில் ஆண் இழப்பதற்கு ஒன்றுமில்லை, பெண் இழப்புகளைச் சந்திக்கிறாள் அதனால் ஆண் பெண்ணை விட இயறகையாக மேம்படுகிறான், என்பது உங்கள் கேள்வி. இதில் ஆணைவிட பெண் சிரமங்களை சந்திக்கிறாள் என்பதில் ஆணுக்கு என்ன உயர்வு இருக்கிறது? அதுதானே உங்கள் நோக்கம், பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்பதை நிருவுவதற்குத்தானே இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள். என்றால் சிரமங்களைச் சந்திக்கும் பெண் தாழ்ந்தவள், அவ்வாறு சிரமங்களைச் சந்திக்காத ஆண் உயர்ந்தவன் என்பதன் பொருள் என்ன? பெண் பலவீனமானவளாக இருக்கிறாள் ஆண் பலமுள்ளவனாக இருக்கிறான் அதனால் ஆண் உயர்ந்தவனாகிறான் என்பதுதான் உங்கள் கேள்வியின் உட்கிடக்கை. அவ்வாறல்லாவிடின் பெண் கஷ்டங்களை சந்திக்கிறாள் என்பதன் மூலம் ஆண் உயர்ந்தவன் என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்? விளக்குங்கள். ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை எப்படி கொள்வீர்கள். சமம் எனும் போது அங்கு போட்டியின் தேவையில்லை. சமமின்மை என்றால் அதை எப்படி நிரூபிப்பது? இதே விசயத்தில் \\ஆண்கள் பெண்களை தாய்மை அடைய செய்வது// என்றொரு சொற்றொடரையும் எழுதியுள்ளீர்கள். இது தவறானது. ஒரு பெண் தாய்மையடைய வேண்டுமென்றால் ஆண் பெண் இருவருடைய பங்களிப்பும் வேண்டும், இருவருடைய பங்களிப்பும் இல்லாமல் ஒரு பெண்ணால் தாய்மையடைய முடியாது. இதை ஆண்தான் தாய்மையடையச் செய்கிறான் என்று கூறுவதே ஆணாதிக்கப்பார்வைதான்.
2) \\பெண்களுக்கு கருவைத்தாங்கி வளர்க்கும் அமைப்பு உள்ளது ஆனால் ஆண்களுக்கு அந்த அமைப்பு இல்லை மற்றும் மனோ ரீதியாக ஆண்களுக்கு அந்த விரைப்பு தேவைப் படுகிறது ஆனால் பெண்களுக்கு தேவை இல்லை என்று. எனவே உடல் மற்றும் மனோ ரீதியாக ஆண் பெண் மாறு படுகிறார்கள் என்று தாங்களே தெளிவாக ஒப்புக்கொண்டு விட்டீர்கள்// இதில் ஒப்புக்கொள்வதற்கும் மறுப்பதற்கும் என்ன இருக்கிறது. இது வெளிப்படையானது தானே, உடல் ரீதியிலும் உள ரீதியிலும் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த மாறுபட்ட அமைப்பை ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்கிறீர்களே அது தான் பிரச்சனை. ஆணும் பெண்ணும் மாறுபட்டவர்கள். அப்படி மாறுபடாமல் ஒரேபோல் இருக்கவேண்டுமென்றால் ஆண் பெண் எனும் பேதம் ஏன்? மாறுபட்ட அமைப்புகளுடன் இருக்கும் ஆணும் பெண்ணும்தான் கலக்கமுடியும், அதன் மூலம் பெருக்க முடியும். இதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மாற்றமாக இருக்கும் இருவரில் ஒருவர் உயர்ந்தவர் என்றால் எப்படி? என்பதுதான் கேள்வியே. இரண்டு ஆண்களில் ஒருவர் உயரமாக இருப்பார் மற்றவர் கொஞ்சம் குறைவாக இருப்பார். இதனால் ஒருவர் மேம்பட்டவர் மற்றவர் கீழானவர் என கூற முடியுமா? ஒருவர் விரைந்து செயல்படக்கூடியவராக இருப்பார் மற்றவர் நிதானமாக செயல்படக்கூடியவராக இருப்பார் இதனால் ஒருவர் மேம்பட்டவர் மற்றவர் கீழானவர் என கூற முடியுமா? கூறமுடியாது எனும் போது ஆண் எப்படி உயர்ந்தவன்? பெண் எப்படி தாழ்ந்தவள்? இதைத்தான் நீங்கள் சுற்றிவளைத்து ஆணால் வன்புணர்ச்சி செய்ய முடியும் பெண்ணால் முடியாது என்கிறீர்கள். இப்படி நீங்கள் கூறுவதால் தான், வண்புணர்ச்சி செய்வது ஒரு தகுதியா? எனும் கேள்வி வருகிறது. அது தனிப்பட்டு விவாதிக்க வேண்டிய ஒன்று என்றால், என்ன பொருளில் நீங்கள் ஆணால் வன்புணர்ச்சி செய்ய முடியும் பெண்ணால் அது முடியாது என கூறுகிறீர்கள். இதைக் கூறுவதன் மூலம் எந்த அடிப்படையில் ஆண் உயர்ந்தவன் என்கிறீர்கள்? விளக்குங்கள்.
\\பெண்கள் எந்த நேரத்திலும் தயாராக இருந்து ஆண்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அதில் ஏற்படும் பாதிப்பு ஆண்களுக்கா அல்லது பெண்களுக்கா// கருவைச்சுமப்பது பாதிப்பு என்பது சமூகத்தில் இருக்கும் தவறான பார்வைகளுள் ஒன்று. ஆண் தன்னால் செய்யமுடிந்தவற்றை வீரம் என்றும், தன்னால் செய்ய முடியாதவற்றை பாதிப்பு என்றும் கூறுவதும் ஆணாதிக்கப் பார்வைதான். கருவைச் சுமப்பது பாதிப்பல்ல, அந்தக் கருவுக்கு இன்னோரு காரணமானவன் தன்னுடைய பங்களிப்பை மறுப்பதுதான் பெண்ணுக்கு பாதிப்பு. இதை பொதுமைப்படுத்தி கலவிக்குப் பின்னால் ஆண்களுக்கு பாதிப்பில்லை பெண்களுக்கு பாதிப்பு என்பது சமூகத்தின் அயோக்கியத்தனம்.
3) \\ஒலிம்பிக் விளையாட்டுப் …. ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது// \\உங்களை போன்றோ என்னை போன்றோ …. பைத்தியகாரத்தனமான பதில்// இது போன்ற உங்களது குழந்தைத்தனமான பதில்களில் நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. இவை உங்களுக்கு ஆணாதிக்கம் குறித்து என்ன அறிதல் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவதால் அப்படியே விட்டுவைக்கிறேன். விளையாட்டுப்போட்டிகளில் இலக்கு நிர்ணயிப்பது என்பது எப்படி நடைபெறுகிறது? எட்டப்படவேண்டிய அளவு எதுவோ அதையே இலக்காகக் கொண்டு பயிற்சியும் தீர்மானமும் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஆணின் பழுதூக்கும் முந்திய அதிகபட்ச அளவு 150 கிலோவாக இருந்தால் தற்போது 151 கிலோவை இலக்காக தீர்மானித்து செயல்படுவார்கள். பெண்ணின் பழுதூக்கும் முந்திய அதிகபட்ச அளவு 100 கிலோவாக இருந்தால் தற்போது 101 கிலோவை இலக்காக தீர்மானித்து செயல்படுவார்கள். ஒரு மாற்றத்திற்கு பெண்ணுக்கு 160 கிலோவும் ஆணுக்கு 120கிலோவும் இலக்காக தரப்பட்டால் அதை அவர்கள் அந்த அளவிலேயே நிறைவேற்றுவார்கள். இதற்குத்தான் இந்த எளிய எடுத்துக்காட்டை முந்திய பின்னூட்டத்தில் அளித்திருந்தேன். ஒரு பெண்ணுக்கு 100 கிலோ பயிற்சியளிக்கப்பட்டிருக்கும்போது அவளால் சுலபமாக 100 கிலோவை தூக்க முடியும். ஆனால் அவளையொத்த பயிற்சியளிக்கப்படாத ஆணால் 100 கிலோவை தூக்கமுடியாது. விசயம் பயிற்சி எடுத்துக்கொள்வதில் இருக்கிறதேயன்றி ஆண் பெண்ணில் இல்லை.
\\பெண்கள் பலசாலியாக இருந்தார்கள் பின்பு ஆணாதிக்கம் செய்து விட்டார்கள் என்னது இது கேக்குறவன் கேனபயலா இருந்த எலி ஏரோப்ளேன் ஓட்டும் என்று சொல்வீர்கள் போன்று உள்ளது. கருத்துக்கு சிறப்பு சேர்பதற்காக இது மாதிரி அவிழ்த்து விட வேண்டாம்// என்ன சொல்வது, உங்கள் அறியாமையை நினைத்து பரிதாபப்படத்தான் முடியும். மனிதகுல வரலாறு பற்றி கொஞ்சமேனும் படித்திருந்தீர்களென்றால் தொடக்கத்தில் சமூகத்தை நிர்வாகம் செய்வதில் தொடங்கி அனைத்திலும் தலைமைதாங்கியது பெண்கள் தான் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
புதிதாக 4:3; 4:21 ஆகிய இரண்டு வசனங்களை உங்கள் கருத்தில் வலுவூட்டுவதற்காக சேர்த்திருக்கிறீர்கள் என கருதுகிறேன். ஆனால் நாம் வாதித்துக்கொண்டிருக்கும் கருத்தில் இந்த இரண்டு வசனங்களிலும் குறிப்பில்லை என்பதால் விட்டுவிடுகிறேன். ஒருவேளை தொடர்பிருக்கிறது என நீங்கள் கருதினால் அது தொடர்பாக விளக்குங்கள்.
செங்கொடி
///////////////////தொடக்கத்தில் சமூகத்தை நிர்வாகம் செய்வதில் தொடங்கி அனைத்திலும் தலைமைதாங்கியது பெண்கள் தான் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.///////////////////////////
இதைப்பற்றி நான் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன் இதைப்பற்றிய தொகுப்பை முழுவதுமாய் நான் எங்கே படிப்பது உதவவும் செங்கொடி அவர்களே.
//யூதர்கள், மற்றும் கிறித்தவர்கள் இணை வைக்கிறார்களா?.//
ஆம் இணை வைப்பவர்களே,
//முகமது நபியின் ஒரு மனைவியின்(?) பெயர் கூட மேரி என்று நினைக்கிறேன்.//
அப்படியெல்லாம் இல்லை, ஆதாரம் உள்ளதை மட்டும் தரவும்.
//மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம் ஆணுக்கும் , கிறித்தவ, யூத பெண்களுக்கும் திருமணம் சாதாரணமான விஷயம்.//
இதுவும் ஆதாரம் இல்லாமல் தரப்படும் செய்தி.
//1. பெண் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலகீனமானவள்.//
ஆணும் பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேறு பட்டவர்கள் என்றே இஸ்லாம் கூறுகிறது.
//2.பெண்ணின் முக்கிய கடமை திருமணம் செய்து ,கணவனை சந்தோஷப் படுத்துவதுதான்.மேலும் பிள்ளை பெற்றுக் கொடுப்பதும் கூட அவளது கடமையாகும்//
ஆண் பெண் திருமணம் அவரவர் விருப்பம், இஸ்லாத்தின் கடமைகள் என்ன வென்று புரிந்து கொண்டால் திருமணத்தை கடமை என்று கூற மாட்டீர்கள், அது நபியின் வழிமுறையின் கீழே வரும்.
//3. திருமணத்திற்கு வயது தடை இல்லை.//
பெண் வயசுக்கு வந்த பின்னரே திருமணம் செய்ய அனுமதிக்க படுவாள்.
//4. ஆண் நான்கு திருமணம் செய்ய அனுமதி உண்டு.//
ஆம் அனுமதி உண்டு, நடை முறை வாழ்கையில் மாப்பிள்ளை கிடைக்காத பெண்கள் என்ன செய்ய முடியும், ஒன்று திருமணம் ஆனவனை திருமணம் செய்ய முடியும், இல்லையெனில் தவறான வழியில் போக வேண்டும், எது சரி என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
//5.ஒருவேளை அவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் அவள் விருப்ப மின்றியே செய்ய முடியும்.//
அவன் அவளுடன் வாழவோ அவள் அவனுடன் வாழவோ விருப்பம் இல்லையெனில் உடனே விவாகரத்து செய்து கொள்ள வேண்டியதானே, அப்படி விரும்பாதவர்களை கட்டாய படுத்தி வாழ வைப்பதினலயே கொலை போன்ற தவறான செயல்கள் நடைபெறுகின்றன.
//இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானது என்றால், மேற்கூறிய அம்சங்கள் எல்லாம் நல்ல நாகரிகமான விஷயங்களா?//
விளக்கம் கொடுக்க பட்டுள்ளது இஸ்லாம் மட்டும் தான் நாகரீகம் என்று ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன்.
காட்டரபி
அந்த செய்திலேயே யார் மீது குற்றம் என்று தெளிவாக சொல்லியுள்ளது.
\\\பாலுணர்வுகளை துண்டும் சினிமாவின் பாதிப்பு கிராமம் வரை சென்றுள்ளது என்பதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது! எல்லை இல்லாமல் போகும் இந்த சினிமாவின் அட்டகாசம் அடக்கப்பட வேண்டும்.
மேலும் தனது குழந்தைகளை கூத்தாட விட்டு பார்க்கும் பெற்றோர்களும் இதிலிருந்து பாடம் பெற வேண்டும்.///
//போராட்டங்களின் மூலம்தான் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டிகளும் சேர்க்கப்பட்டன//
செங்கொடி அவர்களே வலைப்பதிவில் யார் போராடினார் என்று தேடிப்பார்தேன் கிடைக்கவில்லை. தாங்கள் எப்படியும் அறிந்திறுப்பீர்கள் ரெபரென்ஸ் தர முடியுமா???
என் பெயர் ஜான். நான் கிறித்துவத்திலிருந்து வெளியேறி நாத்திகனாவன். இந்த தளத்தில் முதன்முறையாக பதிவிடுகிறேன். இதில் எனது அனுபவம் ஒன்றிலிருந்து தொடங்குகிறேன்.
சுமார் 13 வருடங்களுக்கு முன்பு ஊட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ள சின்ன ஆனைப்பள்ளம் என்ற பகுதியில் சுமார் 50 பேர் கட்டட வேலைகள் செய்துகொண்டிருந்தோம். நாங்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது எங்களை யாரோ கண்காணிப்பது போன்று உணர்வு ஏற்படும். திரும்பிப் பார்த்தால் யாரும் கண்ணுக்கு தென்படமாட்டார்கள். இப்படியாக சிலநாட்கள் சென்றன. ஒருநாள் இன்றைக்கு இது என்னவென்று தெரிந்துவிடுவது என்ற முடிவுடன் 20 பேர் மறைவாக நின்று கண்காணித்தோம். அப்பொழுது சில காட்டுவாசிகள் அவ்விடத்திற்கு வந்து வேலையில் ஈடுபட்டவர்களை நோட்டமிட்டனர். உடனே நாங்கள் அவர்களை நோக்கி நடக்கலானோம். எங்களைக் கண்டதும் அவர்கள் மிக வேகமாக் ஓடலானார்கள். எங்களால் அவர்களைப் பிடிக்கமுடியவில்லை. அநாவசியமாக செடிகளையும் மரங்களையும் தாவிச் சென்றனர். அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதையையே அறியமுடியவில்லை. அவர்களில் ஆண்களும் இருந்தனர் பெண்களும் இருந்தனர் மேலாடையில்லாமலே. ஒருமுறை அதிகப் பிரயாசனப்பட்டு ஒருவனைப் பிடித்தோம். அவனை ஒரு தன்னார்வ நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்து அவர்கள்மூலம் அக்காட்டுவாசிகளின் இருப்பிடத்திற்குச் சென்றோம். அங்கு பெண்கள் மேலாடையின்றியே காணப்பட்டனர். இடுப்புப் பகுதியை தழைகளால் மறைத்திருந்தனர். அப் பெண்களின் உடலும் ஆணைப் போன்றே வலுவானதாக இருந்த்து. அவர்கள் ஒருவிதமாக ஒலிகளையே எழுப்பி தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். ஏன் இதை இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், வேலைக்குச் சென்று பொருளீட்டித்தான் உயிர்வாழவேண்டும் என்ற அவசியமில்லாத அக்காலத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள். வில்லும் அம்பும் கண்டுபிடிப்பதற்கு முன்பான காட்டுமிராண்டிக் காலக்கட்டத்தில் விலங்குகளுடன் போட்டியிட்டு வாழ்ந்த அச்சமுதாயத்தில் பெண் வீட்டிலோ அல்லது குகையினுள்ளேவோ இருந்திருக்க ஆண்மட்டுமே வேட்டையாடி உயிர் வாழ்ந்திருக்க முடியுமா? ஆணும் பெண்ணும் சரிசம்மாக உணவைத்தேடிய அக்காலக்கட்ட்த்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்திருக்கமுடியாது…………..
எனக்கு வேலைப் பளு அதிகமாகையால் இன்று இரவு அல்லது நாளைத் தொடர்கிறேன்.
நண்பர் ஜான்,
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் எண்ணங்கள். இதே கேள்வி எனக்குள்ளும் ஏற்பட்டது. ஆனுக்கும் பெண்ணுக்கும் எதற்காக வெங்காய ஏற்றத்தாழ்வுகளை மதவாதிகள் எதிர்பார்க்கிறார்கள் என புரியவில்லை. சமுதாயத்தில் பெண்கள் சமநிலைக்கு உயர்வதால் ஆண்கள் தாழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்களா? அல்லது நாடுதான் தாழ்நிலைக்கு போய்விடுமா? நாட்டின் பொருளாதாரநிலைதான் சீர்கெட்டுவிடுமா? உடல் ரீதியாக பெண் ஆணுக்குச் சமமாக இல்லை அப்படி படைக்கப்படவில்லை என்பதே கடவுளின் தன்மைக்கு தனிச்சிறப்பா? ஒருவேலை ஏழை பணக்காரண் என்ற ஏற்றத்தாழ்வுகள் நாட்டிற்கு அவசியம் வேண்டும் என்பதுபோல் இதுவும் தேவை என எண்ணுகிறார்களோ என்னவோ???
//மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம் ஆணுக்கும் , கிறித்தவ, யூத பெண்களுக்கும் திருமணம் சாதாரணமான விஷயம்.//
//இதுவும் ஆதாரம் இல்லாமல் தரப்படும் செய்தி.//
முகமது நபியின் ஒரு மனைவியின்(?) பெயர் கூட மேரி என்று நினைக்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/Maria_al-Qibtiyya
மறந்த பாலஸ்தீன இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்தின் மனைவி ஒரு பாலஸ்தீன கிறித்தவ பெண்
//1. பெண் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலகீனமானவள்.//
//ஆணும் பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேறு பட்டவர்கள் என்றே இஸ்லாம் கூறுகிறது. //
குரான் வசனம் ப்ளீஸ்
//3. திருமணத்திற்கு வயது தடை இல்லை.//
//பெண் வயசுக்கு வந்த பின்னரே திருமணம் செய்ய அனுமதிக்க படுவாள்.//
குரான் வசனம் கொடுக்கவும்.
//4. ஆண் நான்கு திருமணம் செய்ய அனுமதி உண்டு.//
//ஆம் அனுமதி உண்டு, நடை முறை வாழ்கையில் மாப்பிள்ளை கிடைக்காத பெண்கள் என்ன செய்ய முடியும், ஒன்று திருமணம் ஆனவனை திருமணம் செய்ய முடியும், இல்லையெனில் தவறான வழியில் போக வேண்டும், எது சரி என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.//
நல்ல விளக்கம் . இந்திய மக்கள் தொகையில் சுமார் 1000ஆண்களுக்கு 950 பெண்களே உள்ளனர். ஏன் மாப்பிள்ளை கிடக்கவில்லை?. வரதட்சினையா?இல்லை வேறு பிரச்சினையா?
//5.ஒருவேளை அவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் அவள் விருப்ப மின்றியே செய்ய முடியும்.//
//அவன் அவளுடன் வாழவோ அவள் அவனுடன் வாழவோ விருப்பம் இல்லையெனில் உடனே விவாகரத்து செய்து கொள்ள வேண்டியதானே, அப்படி விரும்பாதவர்களை கட்டாய படுத்தி வாழ வைப்பதினலயே கொலை போன்ற தவறான செயல்கள் நடைபெறுகின்றன.//
.ஒர் மனிதர் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார் சில ஆண்டுகளில் பல குழந்தைகள். அவன் அவளை விட்டுவிட்டு வேறு பெண் மீது ஆசை படுகிறான் இவளை விவாக இரத்து செய்து அவளை கைப்பிடிக்கிறான். இது இஸ்லாமை தவிர எந்த மதத்திலும் பகிரங்கமாக நடக்காது அங்கு அவனுக்கு சிறைசாலைதான் கிடக்கும். எனவே இதுவும் புரட்சிதான்
//விளக்கம் கொடுக்க பட்டுள்ளது இஸ்லாம் மட்டும் தான் நாகரீகம் என்று ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன்//
ந்ங்கள் மனதில் பட்டதை கூறியுள்ளீர்கள். மன்னனிக்கவும்
சென்கொடியாரே!
\\\இல்லை. பெண்களுக்கும் உரிமை தரப்பட்டுள்ளது எனும் குரான் வசனத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டீர்களேயன்றி, பெண்களுக்கு என்ன உரிமைகள் தரப்பட்டுள்ளது என நீங்கள் குறிப்பிடவில்லை. இதை உங்களுக்கு நான் கேள்வியாகவும் வைத்தேன்\ஆண் பெண் உறவில் பெண்ணுக்கு ஆணைவிட உயர்வு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை சுட்டிக்காட்ட முடியுமா உங்களால்?/ ஆனால் இதுவரை நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள்.///
திரு செங்கொடி அவர்களே! இதை ஒரு தனி விவாதமாக எடுத்து கொண்டால் இன்னும் அனைவரும் தெளிவு பெறலாம் என்று நினைக்கிறேன்.
\\\என உங்களின் குப்பை எண்ணங்களை என்மீது திணிக்கிறீர்கள். இது முறையான விவாதப் போக்கு அல்ல/// இதற்கு தாங்களால் பதில் கூற இயலவில்லை. அதனால் இது என்னுடைய எண்ணம் மற்றும் விவாத போக்கு அல்ல என்று சமாளிக்கிறீர்கள். நன்றி
1 ) தாங்கள் தெளிவான பதிலை கூறவே இல்லை. பல கஷ்டங்களை சந்திக்கிறாள் என்று கூறினேன். மற்றும் அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு அவளிடம்தான் உள்ளது. இதில் ஆணும் பெண்ணும் ஒரு பொது சமம் ஆகாது என்று நான் தெளிவாக கூறியும் எனென்ன கஷ்டங்கள் என்று கேட்கிறீர். அதை தாங்கள் புரட்சி பெண்கள் அல்லாத மற்ற பெண்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் ஏனென்றால் தாங்கள் புரட்சி பெண்கள் எதற்கும் துணிந்தவர்கள் மற்றும் எண்ணிக்கையில் குறைவே. \\\இதை ஆண்தான் தாய்மையடையச் செய்கிறான் என்று கூறுவதே ஆணாதிக்கப்பார்வைதான்/// பெண்ணின் விருப்பமின்றி ஆண் நிறைவேற்ற இயலும் என்று முன்னரே ஒரு வாதம் வைத்தேன். அதை தாங்கள் மறந்து விட்டு மீண்டும் கூறுகிறீர்கள்.
2 ) \\\இதில் ஒப்புக்கொள்வதற்கும் மறுப்பதற்கும் என்ன இருக்கிறது. இது வெளிப்படையானது தானே, உடல் ரீதியிலும் உள ரீதியிலும் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை///. நான் ஆண் பெண் சமமில்லை என்று தெளிவாக நிறுவியும் அதை தாங்கள் உயர்வு தாழ்வு என்று கட்டுரை வரைந்து அதை மறைப்பதை தெளிவாக அனைவரும் பார்க்க முடிகிறது .
\\\கருவைச்சுமப்பது பாதிப்பு என்பது சமூகத்தில் இருக்கும் தவறான பார்வைகளுள் ஒன்று. ஆண் தன்னால் செய்யமுடிந்தவற்றை வீரம் என்றும், தன்னால் செய்ய முடியாதவற்றை பாதிப்பு என்றும் கூறுவதும் ஆணாதிக்கப் பார்வைதான்.///
இதிலும் தெளிவில்லாமல் கட்டுரை வரைவதற்கு முயல்கிறீர். பெண் பிரசவத்தினால் உயிரிழப்பு கூட நேரிடலாம். ஆனால் நான் இதை கூறினால் வாழ்வதற்கும் சாவதற்கும் என்ன இருக்கிறது. அதில் ஏற்ற தாழ்வு என்ன இருக்கிறது. இதில் பெண் ஆணுக்கு எந்த விதாத்தில் குறைந்தவள் ஆகிவிடுவாள் என்று மீண்டும் ஒரு உயர்வு தாழ்வு கட்டுரை வரைவீர்.
3 ) பயிற்சிதான் என்று நானும் ஒத்துக்கொள்கிறேன். அதே அளவு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு ஆண் 150 கிலோ எடை தூக்குவான் என்று கூறினேன். அதற்கும் தாங்கள் வரைவது ஒரு கட்டுரை. நன்றி. ௦
\\பெண்கள் பலசாலியாக இருந்தார்கள் பின்பு ஆணாதிக்கம் செய்து விட்டார்கள் என்னது இது கேக்குறவன் கேனபயலா இருந்த எலி ஏரோப்ளேன் ஓட்டும் என்று சொல்வீர்கள் போன்று உள்ளது. கருத்துக்கு சிறப்பு சேர்பதற்காக இது மாதிரி அவிழ்த்து விட வேண்டாம்//
எனக்கு மனித குல வரலாறு தெரியவில்லை என்று சமாளிப்பது மற்றும் ஒரு தெளிவற்ற விளக்கம். ஆம் நான் பரிதாபதிற்குரியவன். தாங்கள் அதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
\\\ஒரு அரசு தன்னுடைய குடிமகனுக்கு ஒரு சிறந்த சட்டத்தை விதித்தால் அந்த சட்டம் அவனுக்கு எந்த விதத்தில் பயனளிக்கிறது என்று பார்ப்பீர்களா? அல்லது இது அரசினுடைய ஆதிக்கம் என்று கூறுவீர்களா? தாங்கள் முதலாளித்துவத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவீர்கள் உங்களுடைய பார்வைக்கு அது போராட்டம் ஆனால் முதலாளிகளுடைய பார்வைக்கு அது தொழிலாளர்களின் ஆதிக்கம் என கருதப்படும். அதற்காக இதை அவர்கள் ஆதிக்கம் என்று சொன்னால் நீங்கள் அதை அங்கிகரிப்பீர்களா? ஒரு தாய் தன்னுடைய பிள்ளைக்கு எது நல்லது எது கெட்டது அறிவுரை கூறுகிறாள். அந்த குழந்தையை நல் வழி படுத்துவதற்காக சில சமயங்களில் அடிக்கவும் செய்வாள் இது அந்த குழந்தையை வெறுப்படையத்தான் செய்யும் அதற்காக அந்த குழந்தை தாயை திருப்பி அடிக்க இயலுமா? அல்லது திட்ட இயலுமா? அல்லது தாய் செய்வது ஆதிக்கம் என்று கூற இயலுமா? இல்லை தாங்கள் அதை ஆதிக்கம் என்று ஏற்றுகொள்வீர்களா? அல்லது அறிவுரை என்று கொள்வீர்களா? அறிவுரைக்கும் ஆதிக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் கட்டுரை வரைவது “காதிலே காட்டெருமை நுழைந்தது” என்பது போன்று உள்ளது.///
ஆதிக்கத்திற்கும் அறிவுரைக்கும் வித்தியாசம் என்று இப்படி ஒரு கருத்தை பதிவு செய்தேன். தாங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது மறைத்து விட்டீர்களா? என்று தெரியவில்லை. இதெல்லாம் ஆதிக்கம் இல்லை என்றால். நடைமுறையில் சில ஆண்கள் செய்யும் தவறை தவிர அனைத்தும் ஆண்களும் செய்வது ஆதிக்கம் இல்லை என்று நான் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
தேவைப்பட்டால்
1 ) ஆணாதிக்கம்
2 ) இஸ்லாத்தில் பெண்ணின் உரிமை மற்றும் கடமை
3 ) இஸ்லாம் பெண்களை உயர்வாகவே சித்தரிக்கிறது.
மேலே தலைப்பில் விவாதம் செய்ய தயார்.
தயவு செய்து கட்டுரையாக வரையாமல் கருத்துகளை மட்டும் பதியும் மாறு கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர் ஜான் அவர்களே!
நான் இதை தெளிவாக பதிவு செய்து விட்டேன். மனித குலத்தில் மட்டும் அல்ல அனைத்து உயிரினத்திலும் கூட ஆண் மற்றும் பெண்ணினம் இணைந்துதான் வேட்டையாடி வருகின்றன. இதற்கு தங்களுடைய வரலாறு தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
மற்றும் செங்கொடி அவர்களுக்கு
நான் எதாவது தாங்கள் மனது புண்படுத்தும் படி பேசியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி .
நண்பர் அப்பாஸ்,
உங்களின் நிலைபாடு பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்பது. இதை குரானே கூறியிருப்பதால் இந்த நிலைபாடு சரி என்பது. இதை மெய்ப்பிப்பதற்குத்தான் நீங்கள் இங்கு விவாதிக்க வந்தது. ஆனால் உங்களின் இந்த பின்னூட்டம் உங்களின் நிலைபாட்டை நிரூபிப்பதை நோக்கி நகராமல் விலகி, இலக்கின்றி நிற்கிறது.
\\இதை ஒரு தனி விவாதமாக எடுத்து கொண்டால் இன்னும் அனைவரும் தெளிவு பெறலாம்// இப்படி எழுதியிருப்பதன் மூலம் ஆணைவிட பெண்ணுக்கு உயர்வு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை நீங்கள் குறிப்பிடவில்லை என்றாகிறது. அப்படியென்றால் \\இதற்கு முன்னால் உள்ள விவாதத்திலேயே நான் தெளிவாக சுட்டிக் காட்டினேன். பெண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கு தரப்பட்டுள்ளது ஆண்களுக்கு உள்ள உரிமை ஆண்களுக்கு தரப்பட்டுள்ளது என்று// என எழுதியது ஏன்? மற்றும் \எது பெண்களால் இயலாத காரியம்? அந்தக் காரியங்களில் எப்படி ஆணுக்கு உயர்வு இருக்கிறது?/ என்றும் நான் ஒரு கேள்வியை கேட்டிருந்தேன்.
\\இதற்கு தாங்களால் பதில் கூற இயலவில்லை. அதனால் இது என்னுடைய எண்ணம் மற்றும் விவாத போக்கு அல்ல என்று சமாளிக்கிறீர்கள்// உங்களின் முரண்பாடான போக்கை இதில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதாவது தாய்மைப்படுத்துவதன் மூலம் ஆண்கள் பெண்களைப் பெருமைப்படுத்துகிறார்கள் எனும் கருத்தை முதலில் குறிப்பிட்ட இடத்தில், உங்களுடைய கருத்தாகவும் கூறாமல் ஒரு யூகமாகக் குறிப்பிட்டு இதை நீங்கள் ஏற்பீர்களா? என்று கேட்டிருந்தீர்கள். இதையே இரண்டாவதாக குறிப்பிட்ட இடத்தில் என்னுடைய கருத்தாக கூறியிருந்தீர்கள். இது முரண்பட்ட நிலையாக மட்டுமல்ல உங்களின் திட்டமிடலும் இதன் பின்னில் இருக்கக்கூடும் என்பதால்தான் ஏற்கமுடியாத கருத்து என்று ஓரசையில் கூறிவிட்டு \உங்களின் குப்பை எண்ணங்களை என்மீது திணிக்கிறீர்கள். இது முறையான விவாதப் போக்கு அல்ல/ எனவும் குறிப்பிட்டிருந்தேன். இது சமாளிப்பு அல்ல, என்னுடைய தெளிவான நிலை.
கேள்வி 1, 2, 3 இந்த மூன்றிலும் நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள், என்ன சொல்லவருகிறீர்கள் விளங்கிக்கொள்ள முடியவில்லை, அவ்வளவு குழப்பம். ஆணும் பெண்ணும் சமம் என்று நானும் இல்லை பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்று நீங்களும் இங்கு வாதிட்டுக்கொண்டிருக்கிறோம். இதில் 123ல் நீங்கள் நீங்கள் தந்திருக்கும் பதில்களில் உங்கள் நிலையை விளக்கப் போதுமான குறிப்புகள் ஏதாவது இருக்கிறதா? வெறுமனே நான் கூறியிருக்கும் வாக்கியங்களை எடுத்துப்போட்டு அதற்கு ஏதாவது பதில் கூறியாக வேண்டுமே எனும் நிர்ப்பந்தத்தில் எழுதியிருப்பது போலத் தெரிகிறது. அப்படியான எந்த நிர்ப்பந்தமும் உங்களுக்கு இல்லை நண்பரே.
\\ஒரு அரசு தன்னுடைய குடிமகனுக்கு ஒரு சிறந்த சட்டத்தை விதித்தால் …….காதிலே காட்டெருமை நுழைந்தது” என்பது போன்று உள்ளது// ஆம், உங்களது இந்த பத்திக்கு நான் பதில் கூறவில்லை. காரணம், அதில் நீங்கள் அரசு, சட்டம், அறிவுரை, ஆதிக்கம் என்பனபோன்ற சொற்களையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறீர்கள். நீங்கள் கூறவருவதை நான் மறுக்கவேண்டுமென்றால், அரசு என்றால் என்ன? அரசின் சட்டங்கள் எத்தகையவை? அரசின் சட்டங்கள் குடிகளின் எந்தவர்க்கத்தைப் பிரதிபலிக்கின்றன? குரானின் சட்டங்களும் அரசு சட்டங்களும் எந்தப் புள்ளியில் ஒன்றிணைகின்றன? என்பனவைகளை நோக்கி நான் என் பதிலை அமைக்க வேண்டியதிருக்கும். ஆணாதிக்கம் என்பதற்கே உங்களின் புரிதல் எத்தன்மையதாய் இருக்கிறது என்பதை அறிந்திருப்பதால், இவைகள் குறித்துப் பேசுவதற்குப் பயமாய் இருந்தது. எனவே பதில் தரவில்லை, தவறாக எண்ணவேண்டாம்.
அடுத்து தனித்த விவாதம் குறித்து எழுதியிருக்கிறீர்கள். உங்களின் இதுவரையான விவாதப்போக்கில் உங்கள் விவாதங்களை நீங்கள் தெளிவு பெறுவது அல்லது தெளிவை நோக்கி நகர்த்திச் செல்வது எனும் அடிப்படையில் அமைக்காமல் பதில் கூறினால் போதும் எனும் திசையில் அமைந்திருக்கிறீர்கள் என்பதே என்னுடைய கருத்து. இந்தவிதமான விவாதத்தில், பங்குபெறும் நமக்கு மட்டுமல்ல படிக்கும் யாருக்கும் பலனிருக்குமா என்பது ஐயமே. ஆகவே இதைத்தவிர்த்து நேரிய முறையில் கூர்மையான விவாதத்தை தர முன்வருவீர்களேயானால் எனக்கு மறுப்பேதுமில்லை. அதேநேரம் இந்த விவாதத்தை என்ன செய்வது? இதையும் தனித்த விவாதத்தியும் தனித்தனியாக நடத்துவதா? அல்லது ஒருங்கிணைத்து நடத்துவதா? என்பதை தெளிவுபடுத்தி விடுங்கள். மூன்று தலைப்புகளை தந்திருக்கிறீர்கள், தலைப்பை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், அந்த மூன்றுக்குள் ஒன்று என்றாலும், மூன்றையும் ஒன்றிணைத்து குரானில் ஆணாதிக்கம் எனக் கொண்டாலும், அந்த மூன்றுக்கு வெளியேயான ஒன்று என்றாலும் எனக்குச் சம்மதமே. விபரம் தாருங்கள் நாம் தொடர்வோம்.
செங்கொடி
பின்குறிப்பு: இந்த என்னுடைய பின்னூட்டத்தில் நான் அறிந்தவன் போலும், நீங்கள் சற்றே குறைந்தவர் போலும் ஒரு தொனி வந்திருக்கிறது. நிச்சயமாக என்னுடைய எண்ணம் அதுவல்ல. உங்கள் பதில்களில் இருக்கும் தன்மையை மட்டுமே நான் சுட்டிக்காட்ட விரும்பியிருக்கிறேன் அவ்வளவே.
…..நாங்கள் அக்காட்டுவாசிகளிடம் ஒரு வாரம் தங்கியிருந்தோம். அவர்கள் அனைவரும் ஒரே இடத்திலேயே வசித்தாலும் தனிதனி குடும்பமாகவே இருந்தனர். பிரச்சினைகள் ஒரு குழுவின் மூலம் தீர்த்துக்கொண்டனர். அக்குழுவில் ஆண்களும் பெண்களும் கலந்திருந்தனர். இவர்களிடயேயான புணர்ச்சி உறவு முறையைப் பற்றி அறியமுடியவில்லை. அவர்கள் வேட்டைக்காக வில்லும், அம்பும், ஈட்டியும் பயன்படுத்தினர். இதை இருபாலருமே பாவித்தனர். பொதுவாக இறைச்சியை சுட்ட பின்பே உண்டனர். ஆனால் நிலச்சாகுபடி முறையை அறிந்திருக்கவில்லை என்பதினால் இவர்களின் வளர்ச்சி அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரவில்லை. இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட நாகரிகமடைந்த மனிதர்கள் இவர்களைச் சுற்றி வாழ்ந்துவந்தமையால் இவர்களிடையே ஏற்பட்ட ஏதோ ஒரு அச்சத்தின் காரணமாகவே வேறெங்கும் நகரமுடியாமல் இவர்கள் அவ்விடத்திலேயே முடங்கிப் போயிருக்கலாம் என்று ஒரு அதிகாரி கூறினார்.
முக்கியமாக மனிதனின் தனிச்சொத்திற்கு வித்திட்ட உற்பத்திமுறை இந்நிலச்சாகுபடி முறையும் கால்நடை வளர்ப்பும்தான். இதன் பிறகே மனிதனிடம் செல்வம் அதிகமாகிறது. இதன்காரணமாக அப்பொழுது ஏற்பட்ட வேலைப்பிரிவினையின் காரணமாக உழைப்புக் கருவிகளை ஆணுக்கு உரித்தானதாக மாறுகிறது. இவ்வாறு உழைப்புக் கருவிக்கு சொந்தக்காரனாக மாறிய ஆண் அதன்மூலம் பெறப்பட்ட செலவத்திற்கும் சொந்தக்காரனாக ஆகிவிடுவதினால் பெண்ணைவிட முக்கியமான அந்தஸ்த்தைப் பெறுகிறான். தன்னிடம் பெருகிய சொத்து தனது குழந்தைக்கு போய்ச்சேரவேண்டும் என்பதினால், அதுவரையில் பெண்வழியாக கணக்கிடப்பட்ட வம்சாவளி தூக்கியெறியப்பட்டு ஆண்வழி வாரிசுரிமை முறை புகுத்தப்படுகிறது. பெண் வீட்டு வேலைக்காரியாக்கப்படுகிறாள். இன்றைய காலகட்டத்தில் ஆணின் வழியாக வம்சாவளி கணக்கிடப்படுவதின் மூலம் ஆணே நிர்வகிக்கும் திறமையுள்ளவனாக கணிக்கப்ப்டுகிறான் என்பது போலவே அன்று பெண்வழியாக வம்சாவளி இருந்ததன் மூலம் அன்று பெண் பலசாலியாகவும், திறமையானவளாகவும், வேட்டையாடுதல் போன்றவற்றில் தலைமை தாங்குபவளாகவும் இருந்திருப்பாள் என்பதை அறிந்துகொள்ளலாம்….
நண்பர் அப்பாஸ்,
//பயிற்சி தான் என்று நானும் ஒத்துக்கொள்கிறேன். அதே அளவு (100கிலோ)பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு ஆண் 150 கிலோ எடையை தூக்குவான்.//
100 கிலோவிற்கே பயிற்சியளித்தால்தான் தூக்கமுடியும் என்ற நிலை ஆணுக்கு வந்த பிறகு 150 கிலோதூக்குவான் என்பது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் கூறுகிறீர்கள். பயிற்சியளிக்காமல் 150 கிலோவை தூக்கினால் தான் ஆண் பலசாளி என்பதாகும்.
sheik, நண்பரே pj எல்லாம் ஒரு ஆளுனுட்டு மொதல்ல இதுவரைக்கும் அவர் குடுத்ததே விளக்கமில்ல வெறும் சால்ஜாப்பு ஐயோ ஐயோ pj எல்லாம் ஒரு தலைவன்னு இன்னும் நம்பர ஜனங்க இருக்காங்களேன்னு நினைக்கிறப்போ ஒன்னே ஒன்னு தோணுது இனி இந்த சமூகத்த அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது
((((\எது பெண்களால் இயலாத காரியம்? அந்தக் காரியங்களில் எப்படி ஆணுக்கு உயர்வு இருக்கிறது?/ என்றும் நான் ஒரு கேள்வியை கேட்டிருந்தேன்.))))
பேசாமல் ஒன்னு செய்யுங்க செங்கொடி… நீங்க ஊருக்குப்போய் வீட்டில உக்காந்துகொண்டு, உங்கள் மனைவியை வெளிநாட்டுக்கு விசா அடித்து பிளைட்டு ஏத்தி சம்பாரித்து குடும்பத்தை காப்பாத்த அவுப்பிவுடுங்களேன். அப்போது, தெரியுமே உங்கள் கேள்விக்கான விடை.
என்னாப்பா செங்கொடி… ஒரே அக்கப்போரா இருக்குது.
நீங்க சொல்லாம செய்யிறத நாங்க சொல்லிட்டு செய்யுறோம். செய்யுறத செய்யமுடிஞ்சத மட்டுமே சொல்றோம். ஒங்கலமாதிரி சொல்லுறது ஒண்ணு செய்யிறது வேறன்னு நாங்க போலியா வாழ இல்ல. நீங்க வெட்டி பந்தா வுட்டுகிட்டு திரியிரீங்க. அம்புட்டுதான். திருந்துனா சந்தோசம்… அது எங்க..
//பின்குறிப்பு: இந்த என்னுடைய பின்னூட்டத்தில் நான் அறிந்தவன் போலும், நீங்கள் சற்றே குறைந்தவர் போலும் ஒரு தொனி வந்திருக்கிறது.///—அப்போ நீங்க அறிந்தவர் இல்லையா… ???
சரி சரி… வேற உருப்படியான வேலைய பாப்போம்…
பை… பை…
Mr.feroz
//////////////இனி இந்த சமூகத்த அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது/////////////////////////////
இதுக்குபேர்தான் இறை நிராகரிப்பு.
கடந்த சில நாட்களாக தொழில் தொடர்பாக வெளிநாடு சென்றுவிட்டதால் பதில் கூற முடியவில்லை. rafi , தங்களுடைய நிலையையும் திரு. சென்கொடியினுடைய நிலையையும் சொன்னதற்கு நன்றி. \\\கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் கூறுகிறீர்கள்./// அப்போ நீங்க என்ன பண்ணனும் ஒரு பயிற்சி இல்லாத பெண்ணையும் ஒரு ஆணையும் மோத விட்டு பார்க்கணும். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி. மோதுவதற்கு நான் ரெடி தங்களுடைய புரட்சி பெண் ரெடியா? சும்மா வாதம் செய்யனும்னு செய்யாத rafi லாஜிகா பேசு. குறிப்பு பயிற்சி அளிக்கபடாத பெண் ஏனென்றால் நான் எந்த வித கலையையும் கற்றவன் அல்ல.
இங்கே பெண்ணுக்கும் ஆணுக்கும் மல்யுத்த போட்டி நடை பெறவில்லை(அதனை அல்லா, குரான் மற்றும் முகமது அனுமதிக்கிறார்களா என்பது வேறு விஷயம்.)
இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தான் பெண்ணுக்கும்,குழந்தைகளுக்கும் சமுக (சட்ட ரீதியான)பாதுகாப்பு இருக்கிறதா என்பதுதான்.
சமீப காலமாக செய்திகளில் அடிபடும் ஒரு விஷயம். ஒரு நடிகர் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து குழந்தைகளும் உண்டு. அத்திருமணத்தின் போது அப்பெண் கணவனின் மததிற்கே மாறிவிட்டார்.
இப்போது கணவனுக்கோ இன்னொரு நடிகை மீது ஆசை.மனைவியை தள்ளி வைத்து விட்டு ஒரு நடிகையை திருமணம் செய்ய ஆசை படுகிறார்.ஆனால் அவரும் அவர் மனைவியின் தற்போதைய மதமும்ம் அவரை தடுக்கிறது.
அவருக்கு விவரம் தெரியவில்லை, ஒருவேளை அவர் முதல் திருமணத்திலேயே மனைவியின் மதத்திற்கு மாறி இருந்தால் மனைவியை
எளிதாக கழட்டி விட்டு இருக்கலாம். இந்த புரட்சி வேறு எந்த மதத்திலேயும் கிடையாது.
மற்ற மதங்களின்(,இறை மறுப்பு) திருமணத்தை விட இஸ்லாமிய திருமணத்தில் பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் சமூக பாதுகாப்பு குறைவே. மறுக்க இயலுமா?
1.இஸ்லாம் ஒரு பெண் திருமணம் செய்யாமல் வாழ அனுமதிகிறதா?
குரான் வசனம் வேண்டும்.
2.இஸ்லாம் ஒரு ஆண் திருமணம் செய்யாமல் வாழ அனுமதிகிறதா?
குரான் வசனம் வேண்டும்
3.பெண்ணுக்கு கணவனின் சொத்தில் பங்கு உண்டா? எவ்வளவு?
குரான் வசனம் வேண்டும்
4. ஒரு மனிதர் தன் மனைவியை விவாக ரத்து செய்த பின் அவருக்கும் அவர் மனைவிக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் அவர் சொத்தில் உரிமை உண்டா?எவ்வளவு?.
குரான் வசனம் வேண்டும்.
5. இபோது இணையம் மூலமாகவே திருமணம் நடைபெறுகிறது.இது சரியா?
குரான் வசனம் வேண்டும்
இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி கரமான திருமணத்தை தாங்கள் செங்கொடிகள் நடைமுறை படுத்த 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.பெண்கள் மாத விடாய் காலங்களில் ஓரங்கட்டப்பட்ட கொடுமையான காலத்தில் முஹம்மது நபி[ஸல்]அவர்கள் தனது மனைவி ஆய்சா[ரலி] பீரிட்டில் இருந்தபோது, ஒரே தட்டில் அமர்ந்து உணவை உண்ணும்போது ,கோழிக்கறிகால்பீசை எடுத்து தனது மனைவியை கடித்து சாப்பிடச்செய்து பின் அதே இடத்தில் தானும் கடித்து சாப்பிட்டு பெண்மையை உயர்த்திய பெருமை,அதே போன்று பீரிடு சமயத்தில் பள்ளிவாசலுக்கு சென்று,பாயை எடுத்து வர சொல்லியதன் மூலம் அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்வதை தவறு இல்லை என்று பெண்ணின் பெருமையை உயர்த்தியது,பெருநாள் அன்று பீரியடில் இருக்கும் பெண்கள் புத்தாடை அணியாமல் மகிழ்ச்சியின்றி இருந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களையும் தொழுகை திடலுக்கு அழைத்தது.இது போன்று பெண்ணின் பெருமையை ,பெண்ணை மனுசியாக்கிய தன்மையை வேறெந்த தலைவரும் செய்ததுண்டா சென்கொடியானே|ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டப்பட்ட புரட்சி திருமணத்தை இப்போது செய்து காட்டி தண்டரா போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
மற்ற மதங்களின்(,இறை மறுப்பு) திருமணத்தை விட இஸ்லாமிய திருமணத்தில் பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் சமூக பாதுகாப்பு குறைவே. மறுக்க இயலுமா? இஸ்லாத்தில் தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உண்டு.இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாப்புகள்பற்றி ஏராளமானஇணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.மகாராஸ்ட்ராவில் இலட்சம் கணவர்களை காண வில்லை என்ற செய்தியை சமுக சேவகர் அன்ன ஹசாரே என்பவர் தெரிவித்திருந்தார்.ஜீவனாம்சம் தீர்ப்பு அளிக்கப்பட பின் பல் கணவர்கள் [முஸ்லிம்கள் அல்ல]தாங்கள் முகவரியை மாற்றி சென்று விட்டார்கள்.அதையும் கண்டுபிடித்து செல்லும் போலிஸ் காரர்களுக்கு மாமுல் கொடுத்து தப்பிவிடுகிறார்கள்.ஸ்டவ் முஸ்லிம் அல்லாதவர்கள் வீட்டில்தான் அதிகமாக வெடிக்கிறது என்பதும் சங்கருக்கு தெரியாதா ஒன்றல்ல.பல ஆஸ்ரமங்களில் உள்ள குழந்தைகளை கணக்கெடுத்து பாருங்கள்.உண்மை புரியும்.சும்மா பொத்தம் பொதுவாக இஸ்லாத்தின் சேரை வாரி இறைக்க முடிவு பன்னியாகி விட்டது.சங்கர்ராச்சாரியார்பெயரில் வரும் சங்கரே தாங்கள் புரட்சி பெயருக்கு இன்னும் மாறவில்லையே ஏன்?
இதற்க்கான தங்களது மறுமொழியை காணோமே| என்? உங்களது தோழர்கள் எத்தனை பேர் பெண்களுக்கு சமத்துவம் கொடுத்துள்ளீர்கள்?உங்கள் வீடுகளில் நேரடி ஆய்வு செய்தால் அல்லவா உங்கள் சமத்துவத்தின் உண்மை நிலை ஊருக்கு தெரியும்.இந்த தளத்தில் பேசுவதின் செயலாக்கத்தை நாங்கள் நேரில் எங்கே காணமுடிகிறது ?
காரல் மார்க்ஸ் என்ற பித்தனை பின்பற்றும் செங்கொடி அவர்களே உலகில் சொன்னதை செய்து காட்டியவர்.மன்னராக இருந்த அவர்,ஒரே மகளுக்கு கூட அவர் இறந்த பின்னர் வாரிசுகளுக்கு என்று காணி நிலம் கூட சேர்த்துவைக்காமல் சென்றவர்..
/சங்கர்ராச்சாரியார்பெயரில் வரும் சங்கரே தாங்கள் புரட்சி பெயருக்கு இன்னும் ?மாறவில்லையே ஏன்?//
பேரில் என்ன இருக்கிறது?. பேர் மாறுவது,மதம் மாறுவது எல்லாம் தெவை இல்லாத ஒன்று. நீங்கள் கூடத்தான் இப்ராஹிம் என்பவரின் பெயரை வைத்து ஊள்ளீர்கள். அவர் இரண்டுமனைவி உடையவர். குரானின் படி இரண்டு ,பைபிள் படி மூன்று).
1.முஸ்லிம் அல்லாதவர்களின் திருமணங்களில் வரதட்சனை சட்டப் படி வாங்குவது குற்றம் ஆனால் நடைமுறையில் இருக்கிறது.
முஸ்லீம்களின் திருமணத்தில் மத வழக்கப் படி மகர் என்னும் தொகை வழங்கப் பட வேண்டும்.தவுகீத் மைப்பினர் மட்டும் இதனை ஒரு குறியீடாக 5000 அல்லது 1000 ரூபயில் முடித்து விடுகின்றனர்.மற்றவர்களிடம் பெண்ணுக்கு நகை மற்றும் வரதட்சினை பழக்கம் உண்டு.
2.முஸ்லீம் அல்லாதவர்கள் திருமணத்தில் தாலியோ மோதிரமோ மணமகன் ,மண மகளுக்கு அணிவிக்க வேண்டும்.திருமணத்தில் இருவரும் நடக்கும் இடத்தில் இருந்தாக வேண்டும்.
முஸ்லிம் திருமணத்தில் மணமகன் ஒரு இடத்திலும் (வெளிநாடு) மணமகள் ஒரு இடத்திலும் இருக்கலாம். இனையம் மூலம் திருமனம் நடக்கலாம்.
அப்படியே விவாகரத்து செய்வதால் என்றால் கூட செய்யலாம்.
3. முஸ்லீம் அல்லாதவர்களின் இரண்டாவது திருமணம் அவ்வளவு சுலபமல்ல. முதல் மனைவியை விவாக ரத்து செய்தால் மட்டுமே நடக்கும்.விவாக ரத்தும் சுலபமல்ல.விவாக ரத்து செய்தால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்.இன்னும் குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். இதனால் ஸ்டவ் வெடிக்கிறது என்பதும் உண்மைதான்.அத்ற்காக இரண்டாம் திருமனம் செய்து இன்னொரு குடும்பத்தை கைவிடுபவன் அதற்க்கன விலையை கொடுத்தே ஆக வேண்டும்.ஜீவனாம்சம் கொடுக்க பயந்து தலைமறைவாக திருட்டு வாழ்க்கை மட்டுமே நடத்த முடியும்.
ஆனால் இஸ்லாமில் இரண்டாவது திருமணம் மிகவும் சுலபம்.மதத்தில் ஒரே சமயத்தில் நான்கு வரை அனுமதிக்கப் பட்டது.விவாக ரத்தும் சுலபம்.ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம்.அப்படி மனைவி கேட்டால் மதவாதிகள் துனைக்கு வருவார்கள்.
தன்னை விட 5 வயது அதிகமாக உள்ள பெண்னை திருமணம் செய்யலாமா?
இஸ்லாத்தை முறையாக விளங்காமல் பேசுவது மிகப்பெரிய தவறு, தெரிந்ததை சொல்லவும் தெரியாததை தெரியாது என்று இருப்பது நல்லது , விளக்கம் விரைவில் வரும்
இப்படிக்கு . உஸ்மானி பேரவை , தமிழ்நாடு ,