ஜனநாயகத்தின் அம்மணமும் கன்னடக் கோவ‌ணமும்

சில வார‌ங்களுக்கு முன்பிருந்தே கன்னட எதியூரப்பா கோவில் கோவிலாக சுற்றிவரத்தொடங்கினார். பாஜக பக்தர்களிடம் கேட்டால், அக்டோபர் மாதம் வந்தாலே அது எதியூரப்பாவைப் பிடித்து ஆட்டும் என்று கடந்த நிகழ்வுகளை அள்ளி வீசுகிறார்கள். 2007 அக்டோபரில் மஜத கட்சி ஆட்சி மாற்றத்திற்கு சம்மதிக்காததால் ஆட்சியை இழந்தார். 2008 அக்டோபரில் த்லைமையிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்று பிரச்சனை கிளம்பியது. 2009 அக்டோபரில் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கிக்கொண்டு கண்ணீர்விட்டு கதறும் நிலைக்குப் போனார். 2010 அக்டோபரில் அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது…