குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௬


 

அறிவியல் மெய்ப்பிப்புகள், அண்டவிதிகள் போன்றவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாய் மனிதனுக்கு தெரிந்திருக்கக்கூடிய எளிய பிழைகளும் குரானில் இருக்கின்றன. அவை என்ன?

 

“பின் எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி…..” குரான் 16:69

“….. இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்…….” குரான் 24:43

“அது சிறப்பான விருந்தா அல்லது ஜக்கூம் என்ற மரமா?…… நிச்சயமாக அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்…..பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு குடிக்க கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்” குரான் 37:62‍,67

“சீழ் நீரைத்தவிர அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை” குரான் 69:36

“அவர்களுக்கு விஷச் செடிகளைத்தவிர வேறு உணவில்லை” குரான் 88:6

 

மதவாதிகள் குரானின் அறிவியல் என்றோ, வேதத்தின் அற்புதங்கள் என்றோ பேசத்தலைப்பட்டால் மற்றெல்லாவற்றையும் விட முதலில் எடுத்துக்கொள்ளும் ஒன்று தேனீ. ஆனால் அதே வசனத்திலிருக்கும் இந்த வாக்கியத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். குரான் 16:69ல் அல்லா தேனீக்கள் கனிகளிலிருந்து உணவருந்துவதாகக் கூறுகிறார். கனிகள் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், அந்த இடத்தில் ‘தமர்’ என்றே அரபியில் குறிக்கப்பட்டிருக்கிறது. தமர் என்பது பழங்களைக் குறிக்கும் பொதுச் சொல்லல்ல. அது பேரீத்தம் பழத்தைக் குறிக்கும் தனிப்பட்ட சொல். ஆக குரான் தேனீக்கள் பேரீத்தம் பழத்தை உண்கின்றன எனும் அறிவியல்(!) உண்மையைப் போட்டுடைத்திருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் தேனீக்கள் பேரீத்தம் பழத்தையோ அல்லது வேறு பழங்களையோ உண்பதில்லை, பூக்களிலிருந்து சேகரிக்கும் தேனையே அவை உண்கின்றன என்பது அல்லவா உண்மை. எல்லாவற்றையும்விட மிகைத்த ஞானமுடைய அல்லா ஏன் இப்படிக் கூறிவிட்டார், அதுவும் எக்காலத்திற்கும் பொருந்தும் குரானில்.

 

வசனம் 24:43 மழை பொழியும் விதம் குறித்து பேசுகிறது. அதன் முழு வசனம் இப்படி இருக்கிறது, “நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து அவற்றை ஒன்றாக இணையச் செய்து அதன் பின் அதை அடர்த்தியாக்குகிறான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான். அதைத் தான் நாடியவர் மீது விழும்படி செய்கிறான்……” என்று போகிறது. இது ஆலங்கட்டி மழை பற்றிய குரானின் புல்லரிக்கவைக்கும் விளக்கம். இந்த விளக்கம் தவறானது, பொருந்தாதது என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் எழுதி சமன் செய்திருக்கிறார்கள். அடைப்புக்குறியுடன் சேர்த்து இப்படி “அவன் வானத்தில் மலைக(ளைப்போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்” என்று சமாளித்திருக்கிறார்கள். மழைவிழுவது மேகத்திலிருந்து என்பது தெரிகிறது, ஆனால் சில நேரங்களில் பனிக்கட்டி மழையும் பொழிகிறதே எப்படி? சரிதான் வானத்தில் பனிக்கட்டி மலை ஒன்று இருக்கிறது போலும் எனும் வறண்ட சிந்தனையின் விளைவுதான் இந்த வசனம். நம்புங்கள் குரான் எல்லாம் வல்ல அல்லா இறக்கியருளியது தான்.


 

அடுத்திருக்கும் மூன்று வசனங்களும் நரகத்தாரின் உணவுகுறித்த குரானின் கூற்றுகள். அதாவது பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என அல்லா நினைக்கும் ஒரு நாளில் பூமி அழிக்கப்பட்டு அதுவரை பூமியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும், ஆதி மனிதன் தொடங்கி கடைசி காலம் வரை (கோடானுகோடி ஆண்டுகள் ஆனாலும்) வாழ்ந்த மக்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி வாழ்ந்தவர்கள் சொர்க்கத்திற்கும், அப்படி வாழாதவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். இதில் நரகத்திற்கு அனுப்பப்படும் மனிதர்களின் உணவு என்ன என்பதைத்தான் அந்த மூன்று வசனங்களும் தெரிவிக்கின்றன. இதில் பிரச்சனை என்னவென்றால் மூன்றும் வெவ்வேறு உணவுகளைக் கூறுகின்றன என்பதுதான். முதல் வசனத்தில் ஜக்கூம் என்ற மரமும் கொதிக்கும் நீரும் என அறிவிக்கப்படுகிறது. ஜக்கூம் என்பது ஒருவகையான கள்ளி வகை மரம் என பொருள் கூறுகிறார்கள். ஜக்கூம் என்ற மரமும் குடிப்பதற்கு கொதிக்கும் நீரும் முதல் வசனத்தின் படி நரகத்தாரின் உணவு. ஆனால் 69:36ன் படி சீழ் நீரைத்தவிர வேறு எந்த உணவுமில்லை என அடித்துக்கூறுகிறது. இதே தொனியில் 88:6 விஷச்செடிகள் மட்டும்தான் உணவு வேறில்லை என திட்டவட்டமாகக் கூறுகிறது. என்றால் எதுதான் நரகத்தின் உணவு? நரகம் என்று ஒன்றில்லை என்பவர்களுக்கு இது குறித்த தேவை ஒன்றுமிலை. ஆனால் இருக்கிறது என நம்புபவர்களுக்கு எது உணவு என தெரிந்திருப்பது அவசியமல்லவா?

 

சில மொழிபெயர்ப்புகளில் விஷச்செடி என்பதை முட்செடி என்பதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதைக்கொண்டு கள்ளி என்பதும் முட்கள் நிறைந்தது தான், எனவே இரண்டு மூன்றாம் வசனங்களில் தனித்தனியாகவும், முதல் வசனத்தில் இரண்டையும் சேர்த்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பொழிப்புரை தருகிறார்கள். ஆனால் சீழ், விஷச்செடி வசனங்களில் தனித்தனியே இதைத்தவிர வேறு உணவில்லை என தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. முட்செடி என்பதும் கள்ளி என்பதும் ஒன்றுதான் எனக் கொண்டாலும் முதல் வசனத்தில் ஜக்கூம் மரம் என்று வருகிறது மூன்றாம் வசனத்திலோ விஷச்செடி, என்றால் அல்லா செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதை ஒப்புக்கொள்வார்களா? இரண்டாம் வசனத்தில் சீழ் நீர் என்பது அருவருப்பான நீர் எனும் பொருளில் நீரின் தரத்தைக்குறிக்கிறது, அது குளிர்ந்திருக்குமா சூடாக இருக்குமா என்ற விபரமில்லை. முதல் வசனத்தில் கொதிக்கும் நீர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி சுகாதாரமான குடிநீரா இல்லையா என்ற விபரமில்லை. எனவே இரண்டையும் ஒன்றெனெக் கொள்வதற்கு இடமில்லை.

 

குரான் மீது மதவாதிகள் ஏற்றிவைத்திருக்கும் புனிதக்கனம் தாளாமல் அது தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எல்லாம் அறிந்தவன் எக்காலமும் உணர்ந்தவன் என்றெல்லாம் தட்டப்பட்ட ஒளிவட்டங்களே இன்று அப்படி ஒன்றிலிருந்து வந்திருந்தால் இதுபோன்ற வசனங்கள் கிளைத்திருக்குமா எனும் ஐயங்களை நேரியவர்கள் நெஞ்சில் விதைத்துக்கொண்டிருக்கிறது.  எந்த வசனங்களைக் கொண்டு அறிவியல் என்றும் முன்னறிவிப்பு என்றும் புருடா விட்டார்களோ அந்த குரானின் வசனங்களே அவர்களை சாயம் வெளுக்கச் செய்துகொண்டிருக்கிறது.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

19 thoughts on “குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

 1. குரான் அறிவியல் நூல் அல்ல என்றும் சொல்கிறார்கள் அதேசமயத்தில் அறிவியல் ஆறாய்ச்சியெல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்றும் அதை சரியாக படிக்காததும் ஆறாயாததும் நம்முடைய தவறு. குரானிலேயே ஆறாயவேண்டாமா? என இறைவன் கூறியிருக்கிறான் என்றும் கூறி குதூகலம் அடைகிறார்கள். இதைவிட ஒரு நகைச்சுவை வேறு எங்கும் இல்லை

 2. நூற்றுக்கு நூறு சதவீதம் அறிவியல் ஆறாய்ச்சிகளில் 80% குரான் உண்மைப்ப்டுத்தி விட்டதாம். மீதமுள்ள 20% அய் எதிர்காலத்தில் அறிவியல் வெளிப்படுத்தும்போது தெரியவருமாம். இது ஜாகிர் நாயக்கின் உலக மகா காமடி. ஆக இவர்களாக குரானை ஆறாய்ந்து இப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று உணர்த்தமாட்டார்கள், யாராவது கண்டுபிடித்துக் கூறினால் இதைத்தான் முன்பே குரான் கூறிவிட்டது என்று சவடால் விடுவார்கள். எந்தவொரு வேதத்தையும் குறைகூறுவதாக நினைக்க வேண்டாம் அதில் உள்ள தேவையான அறிவுரைகளை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் அறியாமையை விட்டொழியுங்கள் கண்ணைமூடிக்கொண்டு நம்பாதீர்கள். சிந்தியுங்கள்….

 3. செங்கொடி குரானை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. மீதமுள்ள 20% ல் நாளை தேனீக்கள் கனிகளை உட்கொள்வதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துவிட்டால் அப்ப அந்த வசனம் தேவைப்படுமே.இப்போதைக்கு அடைப்புக்குறியில் உள்ள மலர் என்பதுதான் சரியான அர்த்தம்,கனி என்பது நிரூபிக்கப்பட்டால் அடைப்புக்குறியை எடுத்துவிட்டால் போச்சு.

 4. //sha, மேல் அக்டோபர்22, 2010 இல் 11:05 மாலை சொன்னார்:
  hi senkodi,
  Insha allah, your soul will get answer for all question.//
  செங்கொடி ஆத்மாவுக்கு பதில் கிடைக்கிறது இருக்கட்டும்(அதுவும் கடவுள் அருளால,கிழிஞ்சது போங்க).உங்க ஆத்துமாவுக்கு கிடைச்ச விளக்கத்தை இங்க சொன்னீங்கன்னா எங்களை மாதிரி காபிர்களுக்கு கொஞ்சம் பயன்படும்.

 5. நண்பர் வானம்,

  காஃபிர் என எழுதி தங்களை தாழ்த்திக்கொண்டது போல் தோன்றுகிறது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அச்சொல்லுக்கு மறைத்தல்,மறுத்தல் என்றே பொருள்படும். கடவுள் இல்லை என்று மறுப்பதால் அப்படி அழைக்கிறார்கள். இல்லாத கடவுளை (நிரூபிக்காத கற்பனையை)இருக்கு என அவர்கள் மறுப்பதால் உங்களைப்பொருத்த வரையில் அவர்களும் காஃபிர்களே. பலஉருவ பொம்மைகளை வணங்குபவர்கள் சிலை வணங்கிகள் எனில் உருவமில்லா கற்பணையை வணங்குபவர்கள் கற்பணை வணங்கிகள் இதில் வேற்றுமை ஒன்றும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

 6. இறை நம்பிக்கையாளர்கள் மத்தியில் நான் காஃபிர் என்பது எனக்கு மகிழ்ச்சிதான்.தாழ்வு ஒன்றுமில்லை. தற்போதைய பல கடவுள்களை கண்டுபிடிப்பதற்க்கு முன்பே மனிதன் நெருப்பை உண்டாக்கும் வித்தையையும், சக்கரத்தையும் கண்டுபிடித்துவிட்டான். அதன் பிறகு தனது அதீத கற்பனாசக்தியின் விளைவாக தோன்றிய கடவுளுக்கு பெரும்பாலானோர் நம்பிக்கையாளர்கள் எனும்போது நான் காஃபிர் என்பது பெருமைதான். ஏனென்றால் கடவுளைவிட இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் மனித குலத்துக்கு தந்த பங்களிப்பு மிக மிக அதிகம்.

 7. காலில் எத்தனை விரல்கள் என்று தெரியாமலே நடக்கும் சிறுசுகளுக்கும், சிறகுடைந்த செங்கொடிக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை.

 8. கேள்வி பகுதி04
  தாடி வளர்ப்பது நபி வளிய அனை வெட்டுவது ஹரமா என்பதை பார்ப்போம்

  இஸ்லாமியர்களின் சில கருத்து தாடியை வெட்டளாம் ஆனால் வளிக்க்கடாத
  தப்லீக் ஐமாத் இயக்கத்தினுடைய கருத்து தாடி கட்டயம் வைக்கவேண்டும் நபி மொழி தாடியை வளர்த்து மீசையை கத்திருத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது ஆக தாடி வளிப்பது ஹராம் என்பது இதில் விளங்கின்றது
  கேள்வி இதுதான் ஒரு முஸ்லீம் ஹராத்தை செய்தால் அவனுடைய அமல் ஏற்றுக்கொள்ளப்படாது எனவே எத்தனை பேர்கள் தாடியை வளித்து பள்ளிக்கு வந்து தொழுகின்றார்கள் அப்படியானால் ஹராத்தினுடைய சட்டம் என்ன சொல்லுங்கள்

 9. செங்கொடி ,
  ஆறாம் நூற்றாண்டின் அராபிய எழுத படிக்க தெரியாதவனுக்கு இவ்வளவு தான் தெரியும்.
  இதற்கு மேல் எதிர்பார்த்தல் கூடாது, அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புருடா உட்டுட்டு போய்ட்டான்.
  அதுல என்ன அறிவியலாவது இல்லை மன்னாங்கட்டியாவது ?
  ஒரு மயிரும் இருக்காது .

 10. செங்கொடி நீங்கள் எழுதிய கட்டுரைக்கு விவரம் தெரியாத ஆள்களிடமிருந்து உங்களுக்கு பாராட்டு கிடைக்கலாம் அது போன்று உலகத்தில் எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை ஆனால் உங்களையும் என்னையும் படைத்த இறைவனுக்கு எல்லாமே தெரியும் ஆதலால் உங்களுக்கு இந்த அளவிற்கு அறிவு கொடுத்த இவனுக்கே எல்லா புகழும் மறுபடியும் ஆய்வு செய்யுங்க உங்களுக்கு இதை விட சரியாய் விளக்கம் கிடைக்கும். அதற்கு சில சான்றுகள் உங்களுக்காக,

  குர்ஆனில் விஞ்ஞானம்

  1. விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
  2. கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி
  3. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது
  4. இரு கடல்களுக்கிடையே தடுப்பு
  5. அனைத்திலும் ஜோடி
  6. பெருவெடிப்பு கொள்கை
  7. சூரியனும் கோள்களும்
  8. ஓரங்களில் குறையும் பூமி
  9. தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்

  1. விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்:

  அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125

  விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

  ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.

  இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.

  2. கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி:

  மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வறண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. அல்குர்ஆன் 22:5

  பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். அல்குர்ஆன் 23:14

  இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது “பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

  இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் அவற்றுக்கான வடிவத்தை பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.

  இதைத் தான் “பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

  3. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது:

  நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

  உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

  உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகிறன்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.

  இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாகிறது.

  அதாவது அரைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

  4. இரு கடல்களுக்கிடையே தடுப்பு:

  அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
  அல்குர்ஆன் 25:53

  இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61

  இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் – இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12

  அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
  அல்குர்ஆன் 55:19-20.

  திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே
  ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.

  இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

  இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.
  எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

  5. அனைத்திலும் ஜோடி:

  மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3

  “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்). அல்குர்ஆன் 20:53

  பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 36:36

  நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். அல்குர்ஆன் 51:49

  திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

  தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.
  தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

  மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.

  அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்த சொல் இல்லை, இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  6. பெருவெடிப்பு கொள்கை:

  நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

  இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.

  திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

  இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.

  எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.

  7. சூரியனும் கோள்களும்:

  (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் – நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2

  “நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29

  அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13

  இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40

  அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5

  சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.

  பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.

  இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

  பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

  ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது; அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

  இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

  இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.

  8. ஓரங்களில் குறையும் பூமி:

  பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41

  எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44

  நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

  14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

  எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

  9. தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்:

  உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69

  இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.
  பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.

  உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.

  இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

 11. இஸ்லாமியர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே எங்கள் குர்ஆனில் இப்படி சொல்லி இருக்கிறது என்று இருபத்தியோராம் நூற்றாண்டு அறிவியலை ஏழாம் நூற்றாண்டுக்கு கடத்திக்கொண்டு போவது புதிதல்ல. உண்மையை சொல்வதென்றால் உலகம் பிரபஞ்சம் இவைகளை பற்றிய அறிவு இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே கிரேக்கர்களிடம்,பாபிலோநியர்களிடம் சுமேரியர்களிடம் அமெரிக்க பழங்குடியினரிடம் மற்றும் இந்தியர்களிடம் இருந்தது. கிரேக்கர்கள் தங்களின் புத்தகத்தில் எழுதி வைத்ததைத்தான் பிற்காலத்தில் (இருண்ட காலம் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் காலத்திருக்கு பிறகு) ஐரோப்பியர்கள் மீண்டும் அறிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இதைதான் மறுமலர்ச்சி என்று குறிப்பிடுவதுண்டு. இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த அறிவு எங்கு போனது? ரோமன் கத்தோலிக்க மதம் மிக பெரிய மதமாக இருந்த படியினால் ரோம் மேற்கு உலகத்திற்கும் கான்ஸ்டன்டைன் கிழக்கு உலகத்துக்கும் தலைமை பீடமாக இருந்து வந்தன.கான்ஸ்டன்டைன் நோபிள் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவம் என்று பிறகு கேலி செய்யப்பட்டு போப்பினால் நிராகரிக்கப்பட்டது.கிருஸ்துவ மதவாதிகள் பைபிளுக்கு எதிராக சொல்லப்பட்ட கருத்துக்களை இப்போதைய இஸ்லாமிய தீவிரவாதிகள் போல அழித்துக்கொண்டிருந்த வேளையில் மேற்கு உலகத்து கிரேக்க அறிவு கிழக்கு உலகத்துக்கு பாதுகாப்பு கருதி கொண்டு வரப்பட்டது..ஏனென்றால் கான்ஸ்டன்டைன் நோபிள் அப்போது ரோம் போல பிடிவாதம் காட்டாமல் அறிவை அழிக்க முயலாமல் அதை பத்திரமாக பாதுகாத்து வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் கான்ஸ்டன்டைன் துருக்கிய இஸ்லாமியரிடம் வீழ்ந்தது.கிரேக்க அறிவு இஸ்லாமியர்கள் வசம் ஆனது.அதை அவர்கள் எப்படி பயன் படுத்திக்கொண்டார்கள் என்பதைவிட அதை அழிக்காமல் வைத்திருந்தார்கள் என்பதே முக்கியமானது. இன்றைய முஸ்லிம் தீவிரவாதிகள் போல் அல்லாமல் அவர்கள் இருந்திருப்பது ஒரு விதத்தில் நன்மையே. இந்துக்களின் வேதங்களில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே ஏவுகணை அறிவியல் இருப்பதாக டாக்டர் கார்ல் சாகன் சொல்லியிருக்கிறார். எனவே இந்துக்களும் இனிமேல் முஸ்லிம்கள் போல தங்கள் வேதத்தில் இது இப்படி முன்பே சொல்லி இருக்கிறது என்று மார் தட்டிகொள்ளலாம்.

 12. இஸ்லாமிய மார்க்கம் “ஈமானை” அடிப்படையாக கொண்டது!அறிவியலை அல்ல !

  இறைத்தூதர் வாழ்ந்த காலத்தில் அறிவியலை ஆராய்ந்து மக்கள் அதில் அதிக அளவில் இணையவில்லை……. , இஸ்லாம் கூறிய ஏகத்துவம் , வணக்கவியல் , வாழ்வியல் கோட்பாடுகளின் ஈர்ப்பில்தான் இணைந்தனர்!

  மேலும் குரான் ஒஅர் அறிவியல் நூல் அல்ல! அதே சமயம் அறிவியலுக்கு முரணாகவும் அமைய வாய்ப்பில்லை ..

  தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை மனதில் கொண்டு குரானை விமர்சிக்கும் முன் , முற்காலம் மற்றும் பிற்கால அறிவியல் நிகழ்வுளையும் கருத்தில் கொள்ளுங்கள.

  ஏன் என்றால் , முற்காலத்தின் பல அறிவியல் தத்துவங்கள் தற்காலத்தில்
  மறுக்கபட்டு விட்டன.

  அதே போன்று தற்கால கொள்கைகள் பிற்காலத்தில் மாற்றப்படலாம் …

  உதாரணமாக நியூட்டனின் ஈர்ப்பியல் விதிகளை , ஐன்ஸ்டீனின் சார்பியல் விதிகள் புறம் தள்ளின..

  உங்களுக்கு உண்மையை உணர்ந்து மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் “பகிரங்க விவாதம் ” செய்ய அழைப்பு தருகின்றோம்!

  நான் அறிந்த வரையில் கீழ்காணும் அமைப்பை தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் நேர்வழி அடைய முடியும்!

  wwwdottntjdotnet

  அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்

 13. நண்பர் ராஜா,

  நீங்கள் கூறும் விவாதத்துக்கு நான் தயார். ஆனால் அது எழுத்து வடிவில் இருக்க வேண்டும். சம்மதமா? இங்கு வந்து சத்தம் போடுவதை விடுத்து உங்கள் ஆட்களை எழுத்து விவாதத்துக்கு தயார் செய்யும் வேலையைப் பாருங்கள்.

 14. காதர், on ஒக்ரோபர்16, 2011 at 12:52 பிப said:

  செங்கொடி ,
  ஆறாம் நூற்றாண்டின் அராபிய எழுத படிக்க தெரியாதவனுக்கு இவ்வளவு தான் தெரியும்.
  இதற்கு மேல் எதிர்பார்த்தல் கூடாது, அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புருடா உட்டுட்டு போய்ட்டான்.
  அதுல என்ன அறிவியலாவது இல்லை மன்னாங்கட்டியாவது ?
  ஒரு மயிரும் இருக்காது . This kind of language usage not true. whoms you taking he was prophet Muhammed . you accept or refuse that your opinion. but ugly word usage about prophet never tolerated.

 15. சகோதரா,
  நீங்களும் உங்களை சார்ந்த அனைவரும் நேர் வழி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்கிறேன்.. தாங்கள் எந்த நேரமும் கீழ்க்காணும் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.. எழுத்து
  பூர்வமாக விவாதம் செய்ய அன்புடன் அழைக்கிறோம்

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
  மண்ணடி
  சென்னை
  tntjdotnet/

  To Contact:

  tntjdotnet/contact-us

 16. நண்பர் ராஜா,

  நான் யாரையும் சென்று விவாதத்திற்கு அழைக்கும் அவசியமில்லை. அதேநேரம் யார் என்னுடன் விவாதிக்க வேண்டும் என விருப்பப்பட்டாலும் தாராளமாக என்னை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s