மாவீரர் நாள் எனும் சடங்கு

நவம்பர் மாத இறுதியில் ஒருவார காலத்திற்கு போரில் மடிந்த வீரர்களை நினைவுகூறும் பொருட்டு மாவீரர் நாள் கொண்டாட்டங்களை 1989 லிருந்து நடத்தி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். இதன் இறுதி நாளன்று புலிகள் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்துவார். ஆனால் இலங்கை அரசு நடத்திய இன அழிப்புப் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாக்கப் பட்டதுடன் தலைமைப் பொருப்பில் இருந்தவர்களையும் அது நரவேட்டையாடியது. இதனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பிரபகரனோ வேறு புலித்தலைவர்களோ உரையேதும் நிகழ்த்தவில்லை. ஆனால் இந்த ஆண்டு நாடுகடந்த அமைப்பிலிருந்து மாவீரர் நாள் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

ஈழத்தமிழகம் இன்று இனவழிப்பாளர்களின் கைகளில் கடைசிக்கட்ட உயிர்ப்பை இழுத்துப் பிடித்துக்கொண்டு கிடக்கிறது. முள்வேலிகள் இன்னும் மாறவில்லை, தமிழர்களை மீள்குடியேற்ற பொய்க்காரணங்கள் புனைந்து தாமதிக்கப்படுகிறது, சிங்களக் குடியேற்றங்கள் விரைந்து நடத்தப்படுகிறது. தமிழர்களின் வீடுகளும் நிலங்களும் சிங்களவர்களாலும், இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்படுகிறது, கலாச்சாரம் தொடங்கி ஆன்மீகம் வரையில் அனைத்தும் சிதைவுக்கும் மாற்றத்திற்கும் உள்ளாக்கப்படுகிறது. வேதனைகளும், இழப்புகளும் இடியாய் இறங்கியிருந்தாலும், போராட்டங்கள் துளிர்த்தேயாக வேண்டிய காலமிது. ஆனாலும் தகர்க்கப்பட்டுவிட்ட புலிகள் அமைப்பின் தொடர்ச்சி இன்னும் நீடிக்கிறது என காட்டியாகவேண்டிய கட்டாயமிருப்பதாக கற்பித்துக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் தனித்தனியே மோதிக்கொள்வது வலியுடன் கிடக்கும் மக்களை முன்னிலும் வீழ்த்துகிறது.

 

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நினைவு எனும் பெயரில் ஆடம்பரமாக கொண்டாட்டங்கள் நடத்துவது அதைவைத்து பொருள் ஈட்டுவதற்குத்தான் என்றும், இராணுவத்திடம் கையுயர்த்தி சரணடைந்தவர்களுக்கு போராட்டம் பற்றி பேசும் தகுதியில்லை என்றும் மாவீரர் சடங்கை முன்வைத்து பிழைப்புவாத அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறமென்றால் தமிழகத்தின் மாவீரன்களும், போர்வாள்களும் இன்னமும் பிரபாகன் தோன்றுவார், பாவங்களை வாங்கிக்கொள்வார் என்று உயிர்த்தெழும்பு சுவிசேஷங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

 

இலங்கை அரசின் இனவழிப்பு முயற்சிகளை எதிர்கொண்டு பலகாலம் களத்தில் நின்று போரிட்டவர்கள் என்றாலும், புலிகள் தமிழர்களின் விடுதலை எனும் நோக்கில் சரியான அரசியல் பார்வையை கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. சர்வதேச அரசுத்தலைமைகளை சமாதனம் செய்து ஆதரிக்கவைப்பதன் மூலமும், இந்தியாவை அனுசரித்துச் செல்வதன் மூலமும் தனி ஈழத்திற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்பதே அவர்களின் பார்வையாக இருந்தது. முதலாளித்துவ அரசுகளை நம்பிய அளவுக்கு அவர்கள் மக்களை நம்பவில்லை.

 

பழைய புலிகளின் இந்தப் பாதையிலிருந்து சற்றும் விலகாமல் புதிய புலிகளும் நடைபோடுகிறார்கள் என்பதை அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை காட்டுகிறது.

 

“நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச் சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப் பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க் குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்”

என்று கோரியிருப்பதன் மூலம் இலங்கை தனியாக நின்று ஈழப் போராட்டத்தை சிதைத்ததைப்போன்ற உருவகத்தைக் கொண்டுவருகிறார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை நடத்திய போரில் பன்னாட்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கு எந்தவித பங்களிப்பும் இல்லை எனும் கருத்தை ஏற்படுத்துகிறார்கள். அப்பட்டமாக நடந்த இனவழிப்புப் போரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பன்னாட்டு சமூகம், போர்க்குற்றங்களுக்காக இலங்கை அரசை தண்டிக்கும் என்று மத நம்பிக்கையைப் போல நம்புகிறார்கள். உலகில் இதுவரை தனிநாடாய் பிரிந்துபோன எந்த ஒரு நாடும் சந்தைப் பொருளாதார நலனை முன்னிட்டே பிரிந்திருக்கிறது அல்லது பிரிக்கப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்படாத எந்தஒரு தேசிய இனமும் தனிநாடாக பிரிவதற்கு ஏகாதிபத்தியம் அனுமதிக்காது என்பதுதான் உலகின் நடைமுறையாக இருந்துவந்திருக்கிறது. ஆனால் ‘தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு’ இவர்கள் உலகைக் கோருகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? சந்தைப் பொருளாதார நலன்களுக்கு முன்னால் நாங்கள் அடிபணியத்தயார், ஈழம் ஒரு தனிநாடாய் அமைந்தால் போதும் என்பதா? உலகம் முழுவதும் அந்த நலன்களுக்காக மக்கள் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனி நாடாய் எங்களுக்குத் தந்துவிடுங்கள் நாங்களும் அதுபோல தமிழ் மக்களை வதைக்கிறோம் என்றால் தமிழ் மக்களுக்கான விடுதலை என்பது போலித்தனமாகத்தான் இருக்கும். எந்த ஏகாதிபத்திய நலன்களுக்காக தமிழர்களின் மீது இனவழிப்புப் போர் நடத்தப்பட்டதோ அதே காரணத்திற்காக தனியீழம் என்றால் இனவழிப்புப் போருக்கும் அதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை.

 

இலங்கை மண்ணில் புலிகள் அமைப்பு துடைத்தழிக்கப்பட்டிருப்பது தமிழீழ விடுதலைப் போருக்கு மீப்பெரும் பின்னடைவு என்றால், புலிகளின் மக்கள் திரள் போராட்டத்தின் பங்களிப்பு இல்லாத இராணுவவாத அரசியல் கண்ணோட்டமும் பின்னடைவுதான். இன்றைய நிலையில், மீளமர்வுப் பணிகளை துரிதப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளைத் தடுத்து தமிழர்களின் சொந்த இடங்களிலேயே அவர்களை வாழவைப்பதும் மிகுந்த இன்றியமையாததாயிருக்கிறது. அதற்கான பணிகளில், எல்லாவற்றையும் இழந்து சோர்ந்து கிடக்கும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை மீண்டும் போராட வைப்பதுதான் இன்றைய அவசியமாக இருக்கிறது. இதை சரியான திசையில் புரட்சிகர இடதுசாரி இயக்கங்களாலேயே செயல்படுத்த முடியும். அந்த வகையில் அத்தகைய விழிப்புணர்வுடன் மக்களை அணிதிரட்டுவதே செய்யவேண்டிய பணியாக இருக்கிறது.

 

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌


 

ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?

அடுத்தடுத்து கரையில் மோதும் அலைகளைப்போல், ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் தைத்து உறைந்து கிடக்கும் கோபத்தை உசுப்பிவிடும் தகுதியை ஊழல்கள் என்றோ இழந்துவிட்டன. காரணம், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளுமே தமக்குள் ஊழல் வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்காக கட்சியோ, கட்சிக்காரர்களோ தண்டிக்கப்படுவதில்லை. மட்டுமல்லாது உள்ளுறையாக மக்களே ஊழல்மயப்படுத்தப்பட்டுவிட்டனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சந்தர்ப்பவாதமாக ஓட்டுக்குப் பணம் தொடங்கி, சுயநலமாக, காரியவாதமாக தமக்கு என்ன லாபம்? எனும் கேள்வியில் தொங்கிக் கொண்டு வாழும்படி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஊழலே சர்வரோக நிவாரணியாகிவிட்ட அரசியல்வியாதிகளை யாரும் தண்டித்துவிட முடியாது எனும் இயலாமையினால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள். இப்போதைய பரபரப்பு சலசலப்பெல்லாம் அடுத்து யார்? எவ்வளவு தொகை? என்பனபோனற ஆர்வங்களின் விளைவுகளே.

மராட்டிய கார்கில் வீரர்களுக்கான குடியிருப்பு ஊழல், இராணுவ நிலபேர ஊழல், அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், கன்னட நிலம் வாங்கிய ஊழல்….. என்று தொடராக வந்துகொண்டிருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும் அவைகள் மக்கள் நலன்களுக்காக செயல்படப்போவ‌தில்லை என்றாலும், இந்த ஊழல் பணங்கள் முறையாக அரசுக்கு கிடைத்திருந்தால், குறைந்தபட்சம் ஓட்டுப் பொறுக்குவதற்காகவேனும் சில இலவசத் திட்டங்களேனும் வந்திருக்காதா? வேறு வழியின்றி மாட்டிக் கொண்டவை மட்டும்தான் இவை. கருப்பு நிறத்தில் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் பணம் கூட கடந்த ஆண்டு ஒரு செய்தியாய் வந்து போனது. எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்ல இவை என்ன வெள்ளத்தில் அடித்துவரப்படும் ஊதிப்போன பன்றிப் பிணங்களா? நாம் உழைத்த, நமக்காக பயன்படத்தக்க பணமல்லவா? முதுகில் வலிக்கும்வரை காத்திருக்க வேண்டுமா?

மத்திய அமைச்சர் பதவி விலகி விட்டார், மராட்டிய முதல்வர் பதவி விலகி விட்டார், கன்னட முதல்வர் பதவி விலகப் போகிறார் என்றவாறு வரும் பதவி விலகல் நாடகங்கள் ஊழல் செய்ததற்கான தண்டனையா? அல்லது தவறிழைத்துவிட்டோம் எனும் தார்மீகங்களின் உந்துதலா? நிச்சயம் இல்லை. செய்தியறிந்து கொண்ட மக்களை ஆற்றுப்படுத்தச் செய்யும் வினையாடல்கள். நாளை மக்கள் மறந்ததும் வேறு பதவிகளில் அமர்ந்து கொண்டு தாம் செய்ததை கூடுதல் கவனத்துடன் தொடர்வார்கள்.

பதினோரு நாட்களாக நாடாளுமன்றம் அமளிகளால் செயல்படாமல் முடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தே தீருவது என விடாப்பிடியாக நிற்கின்றன. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளாக நாளிதழ்களால் விளம்பப்படும் இது என்ன விதமான பயனைத் தரும்? இன்னும் சில நாட்கள் நாடாளுமன்றம் கூச்சலைச் சந்தித்தால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் அல்லது குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படலாம். அடுத்து நாடாளுமன்றம் தொடங்கும் போது வேறு விதமான பிரச்சனைகள், வேறு விதமான சவடால்கள், அதோடு மறந்துவிடும். நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்தால் ஊழல் செய்த பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமா? திருடர்கள் ஒன்று சேர்ந்தால் திருட்டுப் பொருட்கள் மீட்கப்படுமா? இந்த ஆட்சிக்காலத்தை மட்டும் விசாரிக்கலாம் என்கின்றன எதிர்க்கட்சிகளின் கூட்டு. பழைய ஆட்சிக்காலத்திலிருந்து பார்க்கலாமா? என்கிறது ஆளும்கட்சிக்கூட்டு. இந்த‌ பல்லவி எதிர்ப்பல்லவியையா ஊழலுக்கான எதிர்வினையாக மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பது?

நாடாளுமன்றம் முறையாக நடந்தால் எதையாவது செய்துவிடமுடியுமா? அது ஒரு அரட்டை மன்றம் என்பதைத்தவிர என்ன நடந்திருக்கிறது இதுவரை? என்ன அதிகாரம் இருக்கிறது அந்த பன்றித் தொழுவத்திற்கு? நாட்டை நடத்திச் செல்வதற்கும் இந்த தொழுவத்தின் அரட்டைகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? அரசு என்ன செய்ய வேண்டும்? அதை எப்படிச் செய்ய வேண்டும்? எதை நோக்கிச் செல்ல வேண்டும்? எந்த திசையில் செல்லவேண்டும்? என்பன போன்ற அனைத்தையும் தீர்மானிப்பது உலக வர்த்தகக் கழகம், பன்னாட்டு நிதியம் ஊடாக பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளல்லவா? ஊழல்கள் என்பதென்ன? இந்த முதலாளிகளுக்கு இயற்கை வளங்களையும், சலுகைகளையும் அள்ளிக் கொடுப்பதனால் வீசப்படும் எலும்புத்துண்டுகளல்லவா ஊழல்கள். எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்டவர்கள் அதை வீசியவர்களுக்கெதிராய் நடவடிக்கை எடுப்பார்களா? வாலாட்டுவார்களா?

எல்லா மாற்றுகளிலும் இந்த அயோக்கியத்தனங்களையே கலையாக நேர்த்தியாகச் செய்யும் அதிர்ச்சியைக் கண்டு கண்டு மக்களிடம் படர்ந்த‌ நொதித்துப்போன அலட்சியங்களையே தம் செயலுக்கான அங்கீகாரமாய் மடைமாற்றுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள். தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு பணமாய், ஆட்சிக் காலங்களில் இலவசத்திட்டங்களாய் மக்களை பின்னோக்கிய பரிணாமத்தில் தள்ளிக்கொண்டு சென்ற காரணத்தினால்தான் மக்கள் இவைகளை செய்திகளாய், பொழுதுபோக்கு அறிதல்களாய் கடந்து போகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் தேவையாய் இருக்கிறது.

இந்த ஊழல்களின் பணத்தை பறிமுதல் செய்து மக்கள் பணிக்காக பயன்படுத்த வேண்டும் என மக்களால் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க முடியாதா? இந்த ஊழல்வாதிகளையும், அதற்கு காரணமானவர்களையும், இதன் மூலம் பலனடைந்தவர்களையும் இப்போதே விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்ய முடியாதா?

தண்ணீர் வரவில்லை என்று காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்ய முடிகிறபோது, இலவசங்கள் முறையாக கிடைக்கவில்லை என்று நகராட்சி அலுவலகங்களை முற்றுகையிட முடிகிறபோது, விலைவாசி உயர்வினை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்ய முடிகிறபோது, ஊதிய உயர்வு வேண்டும் எனக்கோரி போராட முடிகிறபோது, இதுபோன்ற அனைத்திற்கும் ஒட்டுமொத்தக் காரணமாய் இருக்கும், ஊழலை விதை போட்டு வளர்க்கும் தனியர்மயம், தாராளமயம், உலகமயத்தை எதிர்த்து போராடமுடியாதா? முடியும். அரசியலை அதன் மெய்யான பொருளில் நாம் புரிந்துகொள்ளும்போது, நம் துன்பங்களும் துயரங்களும் இங்கிருந்தே பிறப்பெடுக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் போது, அனைத்து மாய்மாலங்களையும் கடந்து பாட்டாளிகளாய் நாம் களத்தில் நிற்கும் போது நம்மால் நிச்சயம் முடியும்.

 

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 7

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 07

சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி

 

ஸ்டாலின் அவதூறுகளை பொழிவோர் அனைவரும், குருச்சேவ் நடத்தியதை முதலாளித்துவ மீட்சியாக‌ ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக குருச்சேவ் சோசலித்தின் பாதையை ஸ்டாலினிடம் இருந்து மீட்டு எடுத்தார் என்பதே, அவர்களின் அடிப்படையான கோட்பாடாகும். இதையே ஏகாதிபத்தியம் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை கைக்கொள்ளும் அடிப்படையான அரசியல் வரையறையாகும். ஆனால் உள்ளிருந்து முதலாளித்துவ மீட்சிகான அபாயத்தை லெனின் தீர்க்க தரிசனமாக விளக்கும் போது, சிறு உடமையாளர்கள் நமது கட்சிக்குள் மேலாதிக்கம் பெறுவதற்கு, அதுவும் மிக விரைவாகப் பெறுவதற்கு எதிராக நமது கட்சிக்குள்ள பாட்டாளி வர்க்கத்தன்மை என்பது தன்னைச் சிறிதும் பாதுகாத்துக் கொள்ளாது என்று, சாதுர்யமுள்ள வெண்படையினர் அனைவரும் நிச்சயமாக நம்புகின்றனர்” என்றார். மீட்சிக்கான வர்க்க கூறுகள் தொடர்ச்சியாக உருவாவது, வர்க்க அமைப்பில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.

 

இதை முடிமறைப்பதன் மூலமே குருச்சேவ் முதலாளித்துவ மீட்சியை நடத்த முடிந்தது. சர்வதேச கம்யூனிஸ் கட்சிகளுக்கு ஸ்டாலின் காலத்தை தூற்றி ரசிய கட்சி அனுப்பிய கடித்தில் மக்களுடைய வாழ்க்கையை நச்சுப்படுத்திய நிச்சமின்மையும், சந்தேகமும், அச்சம் நிறைந்த சூழலும் நிலவியது” என்று அறிவித்தனர். இதன் மூலம் சர்வதேச கம்யூனிச இயக்கத்தையே பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து தடம் புரளும் படி கோரியது. இப்படி குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து தூற்றிய போது எது மறுக்கப்பட்டது? எது போற்றப்பட்டது? ஸ்டாலினை தூற்றிய குருச்சேவ் அமெரிக்கா ஜனதிபதியை பற்றி கூறும் போது அவர் மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றவர்” என்றார். மக்களின் ஆதாரவைப் பெற்றவர் என்பதால், அமெரிக்கா பாட்டாளி வர்க்கமும் சரி, உலக பாட்டாளி வர்க்கம் சரி அவரை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்தக் கூடாது” என்றார். அவர் ஜனநாயக வழிகளில் மக்களின் ஆதாரவைப் பெற்றவர்” என்றார். அத்துடன் சமாதானத்தில் உண்மையான ஆர்வம் உடையவர்” என்றும் சமாதனத்தைப் பாதுகாப்பதற்கு உள்ளார்ந்த கவனம் காட்டினர்” என்றார். மேலும் குருச்சேவ் கென்னடியைப் பற்றி கூறும் போது பூமியில் அமைதியான வாழ்விற்கும் ஆக்கபூர்வமான உழைப்புக்கும் ஏற்ற நிலைமைகளை அவர் உருவாக்குவார் என்று எதிர்பார்ப்பது நியாயமானது” என்றார். உலகில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் அவசியமில்லை” என்றார். உலகில் அமைதியை பாட்டாளி வர்க்கம் மட்டுமே நிலைநாட்ட முடியும் என்ற அரசியல் உள்ளடகத்தை மறுத்த குருச்சேவ், அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் ஜனபதிபதி உலக அமைதியை, உழைப்புக்கு எற்ற நிலையை உருவாக்குவர்” என்றார். எனவே வர்க்க கட்சிகளை கலைத்து, அவற்றை முதலாளித்துவ கட்சியாக்க கோரினர்.

 

ஸ்டாலின் என்ற கொடுங்கோலன் தான் வர்க்க கட்சியை முன்னிறுத்தி இதற்கு தடையாக இருந்தாகவும், “உலக அமைதியை, உழைப்புக்கு எற்ற நிலையை” உருவாக்குவதற்கு தடையாக இருந்தாக தூற்றினான். பாட்டாளி வர்க்கத்தை இழிவுபடுத்தியபடியும், ஸ்டாலினை மறுத்தபடியும் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து ஆயுதங்களில்லாத, ஆயுதப்படைகள் இல்லாத, போர்கள் இல்லாத ஓர் உலகத்தை உருவாக்க முடியும்” என்றான் குருச்சேவ். இது வேறு ஒன்றுமல்ல, டிராட்ஸ்கி அன்று லெனின் முன்வைத்த சமாதனத்தை மறுத்து, ஜெர்மானிய எல்லையில் படை கலைப்பை கோரிய அதே வடிவில் முன்வைக்கப்பட்டது. குருச்சேவ் ஆயுதங்களில்லாத, ஆயுதப்படைகள் இல்லாத, போர்கள் இல்லாத வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தை ஏகாதிபத்தியத்துடன் சோந்து படைக்க முடியும் என்றான். இப்படி வர்க்க கட்சியின் அரசியல் அடிப்படையை இல்லாததாக்கினான். சுரண்டலற்ற உழைப்புக்கு எற்ற கூலியையும், யுத்தமற்ற அமைதியையும் நிறுவ, ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க நிலைப்பாடு மறுக்கப்பட வேண்டியது அவசியமென்றான். இதன் மூலம் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்கா நாடுகளின் பொரளாதார வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தைத் துவங்கும்” என்று பிரகடனம் செய்து, முதலாளித்துவ மீட்சியை ரஷ்யாவில் குருச்சேவ் நடத்தினான்.

 

ஆம், உலகை சூறையாடவதில் ஒன்றுபட வேண்டியதையே குருச்சேவ் பிரகடனம் செய்தான். இதற்கு ஸ்டாலின் மறுக்கப்பட்டு தூற்றுப்படுவது அடிப்படை அரசியல் நிபந்தனையாக இருந்தது. குருச்சேவ் ஸ்டாலினை ‘சூதாடி’, ‘முட்டாள்’, ‘கொலைகாரன்’, ‘மடையன்’, ‘பயங்கர இவான் போன்ற ஒரு கொடுங்கோலன்’, ‘ஒரு குற்றவாளி’, ‘கொள்ளைக்காரன்’ என்று பலவாக தாக்கினான். ‘ரசியா வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வாதிகாரி’ என்றான். மேலும் குருச்சேவ் தனது தாக்குதலை ஸ்டாலினுக்கு எதிராக 20 வது காங்கிரஸ்சில் நடத்திய போது ‘குரோத மனோபாவம் கொண்டவர்’ என்றான். ‘இரக்கமின்றி ஆணவமாகச் செயல்பட்டவர்’ என்றான். ‘அடக்குமுறை பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்’ என்றான். ‘தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டும் அறிந்தவர்’ என்றான். ‘ஒரு கோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்ட மிட்டார்’ என்றான் ‘ஸ்டாலின் தலைமை ரசிய சமூக வளர்ச்சிப் பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறிவிட்டது’ என்றான். இப்படி டிராட்ஸ்கிகளின் நெம்புகோலை இறுக பிடித்தபடி நடத்திய அவதூறுகள் மூலம், பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டன. அரசியலற்ற அவதூறுகளை பொழிகின்ற போது, அரசியல் ரீதியான சிதைவு அடிப்படையான ஆதாரமாக உள்ளது. வரலாற்றில் இது முதல் முறையமல்ல இறுதியுமல்ல.

 

பக்கூன் பாட்டாளி வர்க்க அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டு மார்க்ஸ்சை வசைபாடிய போதும் இது நிகழ்ந்தது. முதலில் மார்க்ஸ்சின் நம்பிக்கையைப் பெற நான் உங்கள் சீடன், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்றான். முதலாம் அகில தலைமையை கைப்பற்ற பக்கூன் எடுத்த முயற்சியில் தோற்ற போது ஒரு ஜெர்மானியனும், யூதனுமான அவன், அடியிலிருந்து முடிவரை ஒரு எதேச்சதிகாரி மட்டுமல்ல ஒரு சர்வாதிகாரி” என்றான். பாட்டாளி வர்க்க அடிப்படையைக் கைவிட்ட காவுத்ஸ்கி லெனினை வசைபாடிய போது ஓர் அரசாங்க மதத்தின் தரத்திற்கு மட்டுமல்ல, மாறாக ஒரு மத்திய கால அல்லது கிழக்கத்திய (மதத்தின்) மூடநம்பிக்கையின் தரத்திற்கு மார்க்சியத்தை லெனின் குறுக்கிவிட்ட”தாக தூற்றினான். மேலும் அவன் லெனினை தூற்றிய போது ஏகக் கடவுள் கொள்கையினரின் கடவுள்” என்று தூற்றினான். டிராட்ஸ்கி ஸ்ரானினை தூற்றும் போது “கொடுங்கோலன்” என்றான்; ஸ்டாலினிய அதிகார வர்க்கம் தலைவர்களுக்கு தெய்வீக குணாம்சங்களைச் சூட்டும் ஒரு இழிவான தலைவர் வழிபாட்டை உருவாக்கிவிட்டது” என்றான். டிராட்ஸ்கி லெனினையும் போல்ஷ்விக் கட்சியையும் தூற்றும் போது ‘பதவி வெறியர்கள்’, ‘பிளவுவாதிகள்’ என்று குற்றம் சாட்டினான். ‘குழுவாதத்தை எதிர்ப்போம்’ என்று டிராட்ஸ்கி ஆர்ப்பாட்டம் செய்த போது லெனின், குழு வாதத்திற்கு அப்பாற்பட்டவர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் டிராட்ஸ்கி, குழுவாதத்தின் மோசமான மிச்ச சொச்சங்களின் பிரதிநிதி” மோசமான பிளவுவாதிகளின் பிரதிநிதி” என்று அம்பலப்படுத்துகின்றார். டிட்டோ பாட்டாளி வர்க்கத் தலைவர் ஸ்டாலினை தூற்றும் போது முற்றுமுழுக்க தனிநபர் அதிகாரத்தைக் கொண்ட ஒரு அமைப்பு முறையில் ஒரு சர்வாதிகாரியாக இருப்பதாக அவதூறு பொழிந்தான். இப்படி மார்க்சியத்தை கைவிட்டு ஒடியவர்கள் எப்போதும் ஒரேவிதமாக ஊளையிடுவதில் பின்நிற்பதில்லை. மார்க்சியத்தை கைவிட்டு ஒடும் போது பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் மேல் அவதுறை பொழிவது அல்லது உச்சி மோந்து புகழ்ந்து வழிபாடுகளை உருவாக்கியபடி தான் பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்தப்படுகின்றது.

 

இது பற்றி லெனின் குறிப்பிடும் போது ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் மத்தியில் புகழ்பெற்ற புரட்சிகரத் தலைவர்கள் மறைந்த பின்னர், அவர்களுடைய எதிரிகள் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஏமாற்றுவதற்காக அந்த தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த முயல்வது வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்தது” நிகழ்ந்து வருகின்றது. இதற்கு வெளியில் தலைவர்கள் உயிருடன் உள்ள போதே மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் மூலம் இது பரிணாமிக்கின்றது. குருச்சேவ் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றிய போதும், அவன் மூடிமறைக்கபட்ட ஒரு சந்தர்ப்பவாதியாக இழி பிறவியாக இருந்தான். 1937 இல் குருச்சேவ் தோழர் ஸ்டாலினுக்கு எதிராக கரம் உயாத்துபவர்கள் நம் அனைவருக்கும் எதிராக கரம் உயாத்துபவர்கள், உழைக்கும் வர்க்கத்துக்கும் மக்களுக்கும் எதிராக கரம் உயர்த்துபவர்கள். தோழர் ஸ்டாலினுக்கும் எதிராக கரம் உயர்த்துவதன் மூலம் அவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் லெனின் ஆகியோராது போதனைகளுக்கு எதிராக கரம் உயர்த்துகிறார்கள்!” என்றான். பின்னால் ஸ்டாலினை தூற்றிய இவனே, ஸ்டாலினை 1939 இல் ஸ்ராலினை போற்றும் போது மாபெரும் தோழர் லெனின் அவர்களின் நெருங்கிய நண்பர், போராட்ட தோழன்”, என்றான். 1939 இல் மாபெரும் மேதை, ஆசான் மனிதகுலத்தின் தலைவர்” என்றான். 1945 இல்  எப்போதும் வெற்றியீட்டும் மாபெரும் இராணுவத் தளபதி” என்றான். 1939 இல் மக்களின் உண்மையான நன்பன்” என்றான். 1949 இல் சொந்த தந்தை” எனறு பலவாறாக ஸ்ராலினைப் புகழ்ந்தான். ஆனால் ஸ்ராலின் மரணமடைந்த பின் ஆட்சிக்கு வந்த குருச்சேவ் முதலாளித்துவ மீட்சியை தொடங்கிய போது, மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தை கைவிட்டு எதிர்மறையில் நின்று தூற்றினான். 1957 யூன் மாதம் மத்திய குழு கூட்டத்தில் குருச்சேவ் மொலடோவ், சுகனோவிச் ஆகியோரைச் சுட்டிக் காட்டி எங்கள் கட்சித் தலைவர்களினதும், எண்ணற்ற அப்பாவி போல்ஷவிக்குகளினதும் இரத்தக் கறை உங்கள் கைகளில் படிந்து உள்ளது” என கூச்சல் இட்டான். அப்போது “உமது கையிலும் தான்” என  எதிர்க் கூச்சல் ஈட்டனர். அதற்கு குருச்சேவ் “ஆம் எனது கையிலும் தான்” என்று கூறி, நான் அப்போது பொலிட்பீரோவில் இருக்கவில்லை என்று திட்டினான். இப்படி பரஸ்பரம் தூற்றி கழுத்தின் மேல் கத்திய வைத்த குருச்சேவ், முதலாளித்துவ மீட்சியை எதிர்பின்றி விரைவாக்கினான். முதலாளித்துவ மீட்சிக்கான சதியில் ஈடுபட்டவர்களைப் பற்றிக் கூறும்போது குருச்சேவ், “ஸ்டாலினால் பலியெடுக்கப்பட்ட சிறந்த அப்பாவி கம்யூனிஸ்டுகளை” என்ற படி அமெரிக்காவுடன் கூடிக்கூலாவினான். ஸ்டாலின் பாதுகாத்த அனைத்து பாட்டாளி வர்க்க அடிப்படைகளையும் தூக்கியெறிந்தான்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி -5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –6

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌

அலைக்கற்றை ஊழல்: ராஜா வால், தலை எங்கே?


இதுவரை வெளிவந்த ஊழல்களிலேயே தொகையில் மிகப்பெரிய ஊழலாக வெளிவந்திருக்கிறது அலைக்கற்றை ஊழல். ஒரு வாரமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி, கூச்சலிட்டு, நெருக்கடி கொடுத்து ஒரு வழியாக ராஜா பதவி விலகிவிட்டார். 2008 லிருந்து ஸ்பெக்ட்ரம் எனும் இந்த அலைக்கற்றை ஊழல் பேசப்பட்டு வந்தாலும் ஒரு எல்லையைத்தாண்டி இதில் மக்கள் கவனம் பதிந்துவிடாதபடி தேசிய அளவில் காங்கிரசும், தமிழக அளவில் திமுகவும் பார்த்துக்கொண்டன. இடையில் திமுகவில் ஏற்பட்ட குடும்பச்சண்டையில் இந்த ஊழல் பரவலாக பேசப்பட்டாலும் சமாதானத்தின் பின் ஈரத்துணியில் மூடப்பட்டது. இதனிடையே நீதிமன்றம் இந்த ஊழல் தொடர்பாக புலனாய்வு அமைப்புக்கு விடுத்த கண்டனங்களைத் தொடர்ந்து பரபரப்பாகி ராஜா விலகல்வரை வந்திருக்கிறது.
1990 நரசிம்மராவ் காலத்தில் தொலைத்தொடர்புத்துறையில் தனியாருக்கு அனுமதியளிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் பணங்காய்ச்சி மரமாகவே அந்தத்துறை இருந்து வந்திருக்கிறது. கம்பிகளில் கடந்து கொண்டிருந்த தொலைபேசி சேவை மின்காந்த அலைகளுக்கு தாவிய போது; அரசிடம் மட்டுமே இருந்த இதில் தனியாரை அனுமதிக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் வந்தபோது, அலைக்கற்றையை தனியாருக்கு ஒதுக்கிக்கொடுக்க கட்டணம் நிர்ணயிக்கபட்டதில் அன்றிலிருந்து இன்றுவரை இருந்த அத்தனை அரசுகளுமே அடிமாட்டுவிலைக்கு தனியாரிடம் தள்ளிவிட்டு பணத்தில் குளித்துள்ளன. அந்த வகையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையான 2ஜி ஒதுக்கீட்டில் அந்தத் துறையின் அமைச்சரான‌ ராஜா தனியார் நிறுவனங்களுக்கு செய்த ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நினைத்துப்பார்க்கவே மலைப்பை ஏற்படுத்தும் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டு சட்டபூர்வமாகத்தான் நான் செய்தேன், நான் குற்றமற்றவன் என கடைசி நிமிடம்வரை கூறிக்கொண்டிருக்க முடிகிறதே, இதில்தான் மக்கள் குறித்து இந்த ஓட்டுப்பொறுக்கிகள் கொண்டிருக்கும் கருத்து குறியீடாக வெளிப்படுகிறது.
இந்த ஊழல் வெளியானதிலிருந்து நான் முன்னர் இருந்த அமைச்சர்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் நானும் பின்பற்றியிருக்கிறேன் என்றும் பிரதமருக்கு தெரிவித்துவிட்டே ஒவ்வொன்றையும் செய்திருக்கிறேன் என்றும் கூறி வருகிறார் ராஜா. 2008ல் ஒதுக்கீடு தொடங்கியதிலிருந்தே அதன் வழிமுறைகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. தணிக்கைச் செயலர் கூட என்னுடைய யோசனைகள் புறந்தள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். என்றால் மன்மோகன் சிங்கிற்கு தெரிந்தே தான் எல்லாம் நடந்திருக்கிறது. அதையும் அவர் ஆமோதிக்கிறார், இல்லையென்றால் பிரதம‌ரிடம் தெரிவித்துவிட்டே செய்திருக்கிறேன் என கூறியதை மன்மோகன் சிங் மறுக்கவில்லையே.
தலித் என்பதால் என்னைக் குறிவைக்கிறார்கள், தணிக்கை அறிக்கையில் அரசுக்கு இழப்பு என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது கையாடல் செய்ததாக கூறப்படவில்லை, தணிக்கை அறிக்கையை கணக்கிலெடுத்தால் எந்த அமைச்சரும் பணி செய்யமுடியாது, குற்றச்சாட்டுதான் கூறப்படுகிறதே ஒழிய நிருபணமாகவில்லை என ஆயிரம் சப்பைக்கட்டுகள் கூறினாலும் ராஜாவின் கைவரிசை வெளிப்படவே செய்திருக்கிறது. இதில் ராஜாவின் பங்கு என்ன? ௧) 2001ல் விற்க்கப்பட்டபோதே குறைவான மதிப்பீடு என விமர்சனம் எழுந்த அதே விலையை 2008லும் எந்த மாற்றமும் செய்யாமல் தீர்மானித்தது, ௨) வெளிப்படியான ஏல முறையை பின்பற்றாமல் முதலில் வந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது, ௩) தொலைத்தொடர்புத்துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத டப்பா நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தது, ௪) அலைக்கற்றை பெற்ற நிறுவனங்களை உடனேயே வேறு நிறுவனங்களுக்கு விற்றுக்கொள்ள அனுமதித்தது. இந்த‌ குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலும் கூறப்படவில்லை.
அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வதில் நிபுணர்கள் என்று பெயரெடுத்த திமுகவினரின் முத்திரை இந்த ஊழலிலும் பதியப்பட்டிருக்கிறது. தொலைத்தொடர்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஸ்வான், யுனிடெக் போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்படுகின்றன. ஸ்வான் நிறுவனத்தை 2006ல் ராஜாவின் ஆலோசனையின் பெயரில் அம்பானியின் கிளை நிறுவனம் ஒன்றிடமிருந்து ஷாகித் பால்வா என்பவர் வாங்கியிருக்கிறார். இதன் பங்குதாரர்களாக மொரீஷியஷில் உள்ள பாரத் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் உரிமையாளர்கள் டைகர் டிரஸ்டீஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் இந்தியப் பெருங்கடல் தீவு ஒன்றில் உள்ள ஸீப்ரா இன்வெஸ்ட்மெண்ட்ஸையும் நடத்துகிறார்கள். இப்படி இந்த நிறுவனங்கள் உரிமையாளர்கள் ஒன்றைத்தொட்டு ஒன்று என நீண்டுகொண்டே போகிறது, பல்வேறு நிறுவனங்கள், பலப்பல ஆட்கள் மூலமாக இந்நிறுவனங்கள் ராஜாவுக்கு வேண்டியவர்கள் வழியாக கருணாநிதி குடும்பத்தினர்களுக்கு உரிமையானதாக இருக்கும் என நாம் நம்பலாம். சரி, இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வாங்கிய நிறுவனம் அதை துபாயிலுள்ள எடிசலாத் எனும் நிறுவனத்திற்கு விற்கிறது. இந்த எடிசலாத்தின் பங்குதாரர்கள் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள், இவர்கள் ஈடிஏ எனும் நிறுவனத்தை நடத்துகிறார்கள். இந்த ஈடிஏ நிறுவனத்திற்கு தமிழகத்தில் நடக்கும் கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அரசியலில் இவர்கள் வகிக்கும் கூட்டணி நிர்பந்தங்களை தாண்டி இவைகளை முனைப்புடன் கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்து தண்டிக்கவேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட இவர்கள் மட்டுமல்ல இவர்களின் பேரன்களின் தலைமுறையும் கடந்திருக்கும்.


இந்த ஊழலின் மொத்தக் கனத்தையும் ராஜாவோ, திமுகவோ மட்டும்தான் சுமக்கிறதா? நிச்சயம் இல்லை. காங்கிரசுக்கு இதில் பங்கு இல்லாவிட்டால் இதுவரை இவர்களைக் காத்து காப்பாற்றியிருக்க வேண்டியதில்லை. பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தொலைத்தொடர்புத்துறையின் மடுவில் வேண்டியமட்டும் கறந்திருக்கின்றன. இந்த ஊழல் மட்டுமல்ல எந்த‌ ஊழலிலும் கட்சி பேதம் கடந்த பிணைப்பு இல்லாமலில்லை. இந்தவகையில் குவிக்கும் பணத்தில் ஒருபகுதியை தேர்தலின் போது மக்களிடம் விட்டெறிவதன் மூலம் வாக்காளர்களையும் இதுபோன்ற ஊழல்களுக்குள் இணைத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன? நான்கு கோடியா? ஐந்து கோடியா? ஒரு ஓட்டுக்கு ஆயிரம் வீதம் கொடுத்தாலும் ஐந்தாயிரம் கோடிதான் ஆனால் ஊழலோ லட்சக்கணக்கான கோடிகள். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், கறி பிரியாணியும், டாஸ்மார்க் சரக்கும் தந்து ஓட்டு வாங்குவது அவர்களுக்கு மலிவானதுதான். திமுகவை தவிர்த்து அதிமுகவை தேர்ந்தெடுத்தால்; இரண்டையும் ஒதுக்கி மூன்றாம் அணியை தேர்ந்தெடுத்தால்; காங்கிரஸை விடுத்து பாஜகவை தேர்ந்தெடுத்தால்; இருவரையும் தள்ளிவிட்டு போலி கம்யூனிஸ்ட்களையே தேர்ந்தெடுத்தால், யாரைத் தேர்ந்தெடுத்தாலும் கட்சிப் பெயர்களைத் தவிர வேறேதும் மாற்ற‌ம் இருக்குமா?
ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளே இப்படியென்றால் அவர்களை ஆட்டிவைக்கும் பெருமுதலாளிகளை இந்த அமைப்பில் என்ன செய்துவிடமுடியும்? சிந்திக்க வேண்டிய நேரம் இது. புரட்சிகர இயக்கங்களின் கீழ் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் தனியார்மய தாரளமய உலகமய அமைப்புகளை தூக்கி எறிவதைத்தவிர வேறு வழியேதும் இருக்கிறதா?

 

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌

தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௭

“மனிதர்கள் அறிந்துகொள்வதற்காக இதை நாம் அத்தாட்சியாக ஆக்கிவைத்திருக்கிறோம்” குரானில் சில இடங்களில் இப்படி ஒரு அறிவிப்பு இருக்கும். எடுத்துக்காட்டாக ஃபிர் அவ்னின் உடல் குறித்த வசனம், நூஹின் கப்பல் குறித்த வசனம். குரானில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி அறிவிக்கப்பட்டிருந்தால் பின்னர் ஒரு நாளில் அந்த அத்தாட்சி வெளிப்படுத்தபட்டு குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதை மெய்ப்பித்து நிற்கும் என்பது மதவாதிகள் அடிக்கும் ஜல்லி. ஆனால் குரானில் அல்லா அத்தாட்சி என அறிவித்து இன்னும் வெளிப்படுத்தாமல் அல்லது வெளிப்படுத்தமுடியாமல் (வெளிப்படுத்தினால் அதை பாதுகாக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு அறிவு(!) வேண்டுமல்லவா?) காத்திருப்பு பட்டியலில் இருக்கும் அத்தாட்சிகளும் குரானில் இருக்கின்றன.

 

“……. இதோ பாரும் உம்முடைய உணவையும் உம்முடைய பானத்தையும். அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை. ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும். உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக உயிர் பெறச் செய்கிறோம். ……” குரான் 2:259.

 

“இன்னும் நூஹின் சமூகத்தவர், அவர்கள் நம் தூதர்களைப் பொய்யாக்கியபோது, நாம் அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம். ….” குரான் 25:37

 

இதில் முதல்வசனம் ஒரு கதை சொல்கிறது. அதில் ஒருவர் உணவும் குடிப்பதற்குப் பானமும் எடுத்துக்கொண்டு கழுதையில் பயணம் செய்கிறார். வழியில் ஒரு கிராமத்தைக் கடக்கும் போது அந்தக் கிராமத்தின் வீடுகள் இடிந்து கிடக்கின்றன. இதைக்காணும் அவர் மனதில் ‘இப்படி வீடுகள் இடிந்து விழுந்து கொல்லப்பட்டவர்களை அல்லா எப்படி தீர்ப்பு நாளில் மீண்டும் எழுப்ப முடியும்?’ எனும் ஐயம் எழுகிறது. உடனே அல்லா அவருக்கு புரியவைப்பதற்காக அவரை மரணமடையச் செய்கிறான். பின்னர் அவர் உயிர் கொடுத்து எழுப்பப்படுகிறார். எழுந்த அவர் சிறிது நேரம் உறங்கியதாக கருதுகிறார். அப்போது அசரீரியாக அல்லா பேசுகிறான், “எவ்வளவு காலம் இந்த நிலையில் இருந்தீர்?” “ஒரு நாள் அல்லது அதில் சிறிய பகுதி” “அவ்வாறல்ல, நூறாண்டுகள் மரணமடைந்து பூமியின்மேல் கிடந்தீர். உங்கள் உணவையும் பானத்தையும் பாருங்கள், அவை கெட்டுப்போகவில்லை. ஆனால் அந்தக் கழுதை” அப்போதுதான் அவர் பார்க்கிறார் செத்து மக்கிப் போய் கிடக்கிறது. “மக்கிப்போய் கிடக்கும் கழுதையைக் கவனியுங்கள் எப்படி அதன் எலும்புகளை ஒன்று சேர்த்து சதையைப் போர்த்துகிறோம் என்று பாரும். நீர் தெளிவடைவதற்கும், இனி வரும் மனிதர்களுக்கு அத்தாட்சியாகவும் அதனை உயிர்பெறச் செய்கிறோம்” பின் அவர் உணர்ந்து கொண்டு “அல்லா எல்லாப் பொருளின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறி தெளிவடைகிறார்.

 

இந்தக் கதையில் ஒரு மனிதன் தரையில் நூறு ஆண்டுகளுக்கு கிடக்கிறான். அவன் இறந்து கிடந்தாலும், உறங்கிக் கிடந்தாலும் உடலளவில் குறைந்தபட்ச சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை. ஏனென்றால் நூறு ஆண்டுகள் கழித்து, சில மணிநேரம் உறங்கியதாகத்தான் ஆண்டவனுக்கு பேட்டியளிக்கிறார். நம்பகத்தன்மைக்கே அத்தாட்சி தேவைப்படும் நிலையில் ஒரே இறைவனால் மனிதனுக்கு வழிகாட்ட தரப்பட்ட வேதத்தில் இருக்கும் இந்தக் கதைதான் மனிதன் மீண்டும் எழுப்பப்படுவான் என்பதற்கு அத்தாட்சியாம். விருப்பப்படுபவர்கள் நம்பிக்கொள்ளலாம். போகட்டும், இதில் அத்தாட்சி என்பது எது? கழுதையா? மனிதனா? எந்த விதத்தில் அது மீள் சாட்சியாகப் போகிறது?

 

இரண்டாம் வசனம் மனிதர்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறது. அதாவது, தன்னுடைய இருப்பை பல்வேறு அத்தாட்சிகள் மூலம் மெய்ப்பித்தும் மனிதர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் தன்னால் அழிக்கப்பட்ட மக்களை பட்டியலிட்டுக்காட்டி மனிதர்களை எச்சரிக்கிறது. இதோ அந்தப் பட்டியல் ௧) ஃபிர் அவ்னின் கூட்டத்தினர், ௨) நூஹ் சமூகத்தினர், ௩) ஆது சமூகத்தினர், ௪) ஸமூது சமூகத்தினர், ௫) ரஸ்வாசிகள் இன்னும் இவர்களுக்கு இடைப்பட்ட அநேக தலைமுறையினர். இந்தப்பட்டியலில் நூஹ் சமூகத்தில் மூழ்கடிக்கப்பட்டவர்களை அத்தாட்சியாக்கியிருப்பதாக இந்த வசனம் குறிப்பிடுகிறது. இங்குதான் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாமிய கதையாடலின்படி ஃபிர் அவ்னின் உடலும், நூஹின் கப்பலும் அத்தாட்சிகள் (இந்த அத்தட்சிகளின் பித்தலாட்டங்கள் குறித்து ஏற்கனவே இந்தத் தொடரில் எழுதப்பட்டிருக்கிறது) ஃபிர் அவ்னின் உடல் மூழ்கியவர்களுக்கான அத்தாட்சி, நூஹின் கப்பல் தப்பிப் பிழைத்தவர்களுக்கான அத்தாட்சி. ஆனால் இந்த இடத்தில் இவைகளை பட்டியலிடும் போது நூஹின் சமூகத்தினரை மூழ்கியவர்களுக்கான அத்தாட்சியாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் கப்பல் என்பது பிழைத்தவர்களுக்கான அத்தாட்சி. இதை நீண்ட காலமாக (23 ஆண்டுகள்) குரானை தருவதற்கு எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பிழை என்று கொள்வதா? அல்லது நூஹ் சமூகத்தினரின் மூழ்கடிக்கப்பட்ட அத்தாட்சி இனிமேல்தான் வெளிப்படுத்தப்படவிருக்கிறது என எடுத்துக்கொள்வதா?

 

ஆம். இந்த இரண்டு அத்தாட்சிகளும் இனிமேல் தான் வெளிப்படுத்தப்படவிருக்கின்றன, அல்லது தகுந்த காலம் வந்ததும் அல்லா அவைகளை வெளிப்படுத்துவான் என இஸ்லாமியர்கள் தமக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ள‌ விரும்புவார்களாயின், அதற்கு எதிராகவும் குரானில் ஒரு அத்தாட்சி இருக்கிறது. மேற்கண்டவைகளைப் போல அத்தாட்சியாக வைத்திருக்கிறோம் என்று பொதுவாகக் குறிப்பிடாமல் இன்னும் தெளிவாகவே அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“இது என் இறைவனிடமிருந்துள்ள கிருபையே ஆகும். ஆனால் என் இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் போது அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். மேலும் என் இறைவனின் வாக்குறுதி உண்மையானதே என்றும் கூறினார்” குரான் 18:98

 

இந்த வசனத்தில் கிருபை(கருணை) என்று கூறப்படுவது அத்தாட்சியையும் இறைவனின் வாக்குறுதி என்பது மறுமை நாள் அதாவது இறைவன் உலகை அழிக்கும் நாளையும் குறிக்கும். அந்த அத்தாட்சியானது வெளிப்படுத்திக்காட்டவேண்டிய அவசியமின்றி உலக அழிவு நாள் வரை இருந்து இறைவனால் அழிக்கப்படும் என்றும் அந்த வசனம் கூறுகிறது. என்ன அந்த அத்தாட்சி?

 

துல்கர்னைன் எனும் ஒரு மன்னன் வலசை போகிறான். அப்போது ஒரு பகுதியைச் சார்ந்தவர்கள் யஃஜூஜும், மஃஜூஜும் கூட்டத்தார்கள் தம்மை தொல்லை செய்வதாகவும் அவர்களிடமிருந்து தம்மை காக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார்கள். மன்னனும் அதற்கு இசைவு தெரிவித்து, அவர்கள் வராமலிருக்கும் பொருட்டு இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை இரும்புப் பாளங்களால் அடுக்கி செம்பை உருக்கி ஊற்றி நிறைத்து விடுகிறார். இதன்பிறகு அவர்கள் இதில் ஏறிவரவோ ஓட்டையிட்டு துளைத்து வரவோ சக்தியற்றவர்கள் என்று விளக்கமும் அளிக்கிறார். இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட தூரத்தை இரும்புப் பாளங்களால் இட்டு நிரப்பி செம்பை உருக்கி ஊற்றி அடைத்ததைத்தான் மறுமை நாளில் இறைவன் தூளாக்குவது வரை இருக்கும் என்கிறார். எங்கே இருக்கிறது இந்த இடம்? இது ஒன்றும் மறைத்து வைத்திருந்து வெளிப்படுத்தக்கூடிய பொருளில்லையே, உலகில் இப்படி ஒரு இடம் இல்லை என்பது ஒன்றே குரான் இறைவன் தந்ததல்ல, முகம்மது தனது தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டதுதான் அல்லாவும் குரானும் என்பதை நிரூபிக்கப் போதுமானது.

 

வாய்ப்புள்ள இடங்களை நீட்டி முழக்குவதும், அல்லாதவற்றை இருட்டடிப்பு செய்வதும் மதவாதிகளின் வழக்கம். இந்த வழக்கச் சகதிக்குள்தான் மதங்களின் வேதங்களின் புனிதங்கள் பிறபெடுக்கின்றன. அதற்கு இது இன்னுமொரு சான்று.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

 

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 6

இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது?

டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்டாலினின் அவதூறுகளில் இருந்துதான் கட்டிய‌மைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல” என்ற கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்த தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்று வேட்டுகளின், எதிர்புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகிறது. இங்கு தனிதனிச் சம்பவங்களை அல்ல என்ற கூறிய போதும், தனி தனி சம்பவங்களையே அவதூறின் தொகுப்பாக முன்வைக்கிறார்கள். அதிகாரம் என்றால் என்ன என்ற அடிப்படை அரசியலைக் கூட விவாதிக்க வக்கற்றவர்கள், அவதூறுகளின் தொகுப்பே மார்க்சியம் என்கின்றனர். எந்தவிதமான அரசியல் அடிப்படையுமற்ற பட்டியலைக் கொண்டு ஏகாதிபத்தியம் எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே டிராட்ஸ்கிகளும் காவடி எடுக்கின்றனர். இதைத் தான் நாம் மேலே டிட்டோவின் முதலாளித்துவ மீட்சி சார்ந்த போக்குக்கு எதிரான ஸ்டாலின் நிலையையும், முதலாளித்துவ மீட்சிக்கு சார்பான டிராட்ஸ்கிகள் நிலையையும் ஓப்பிட்டு ஆராய்ந்தோம். ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ளவேண்டுமே தவிர” என்று கூறி, தனிச் தனி சம்பவகளால் தொகுக்கப்பட்டு, அவை அவதூற்றல் நிரப்பபட்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்கா  நியாயப்படுத்த எதை எல்லாம் செய்ததோ, அதுபோன்றே டிராட்ஸ்கிகள் சமகாலம் வரை  செய்கின்றனர்.

ஸ்டாலினை அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதன் மூலம் அடிப்படை, மார்க்சியம் மறுக்கப்படுகிறது. அராஜகவாத கோட்பாட்டு அடிப்படையில் நின்று, டிராட்ஸ்கிகளால் ஸ்டாலின் தூற்றப்படுகின்றார். பாட்டாளி வர்க்கம் ஒரு வர்க்கப் புரட்சியில் அரசை கைப்பற்றம் போது எதைச் சாதிக்கின்றது?  முதலில் அதிகாரத்தை பெறுகின்றது. முதலாளித்துவ வர்க்க அதிகாரத்துக்கு பதில், பாட்டாளி வர்க்க அதிகாரத்தை பெறுகின்றது. ஆனால் டிராட்ஸ்கிகள் அதிகாரத்தையே கொச்சைப்படுத்தி அதற்கு எதிராக இருக்கும் போதே, அவர்களின் இறுதி இலட்சியம் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை மறுப்பதை ஆதாரமாக கொள்கின்றது. ஏகாதிபத்தியம் போல் ஸ்டாலினை விமர்சிப்பவர்கள், மார்க்சியத்தின் அடிப்படையை ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் பற்றி வாய் திறப்பதில்லை. மாறாக தனிமனித உரிமை பற்றியும், ஜனநாயகம் பற்றியும் மட்டுமே ஒருதலைபட்சமாக விளக்கும் அவர்கள், இதில் மட்டும் சிறிய இடைவெளிகளில் தமக்கிடையில் வேறுபடுகின்றனர். இதனால் முரண்பாடு உள்ளது போல் தம்மைத் தாம் வேறுபடுத்துகின்றனர். மார்க்சியம் இவற்றில் நேர் எதிர்த் தன்மையை கொண்டே செயல்படுகின்றது.

மார்க்சியம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கிறது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான ஒரு நீடித்த இயக்கமாகும். வர்க்கங்கள் நீடிக்கும் வரை வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பு பின்புமாக தொடரும். இது ஒரு வர்க்க அடிப்படையாகும். இந்த வர்க்கப் போராட்டம் அமைதியாகவும், வன்முறை சார்ந்தும் நீடிக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சியாகும். இங்கு ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு. இது எந்த தனிமனிதனுக்கு விதிவிலக்கல்லாதது. சமூக எல்லைக்குள் வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. சமூகத்துக்குத் தான் ஜனநாயகம். இதைத் தாண்டி இங்கு தனிமனிதனுக்கு இருப்பதாக கூறுவது, சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து வேறு விளக்கம் பெறாது. புரட்சியின் எற்ற இறக்கத்துக்கு இணங்க, இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வாக்கப் போராட்டத்தை பலப்படுத்தவும், பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது. ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இவை மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடகமாகும். இதை ஏகாதிபத்தியம் எற்றுக் கொள்வதில்லை. அதே போல் டிராட்ஸ்கிய வாதிகளும், அனைத்து வகை பினாமிகளும் கூட எற்றுக் கொள்வதில்லை. இதில் இவர்கள் அனைவரும் கோட்பாட்டு ரீதியில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே, ஸ்டாலின் அவதூறுகள் கட்டப்படுகின்றன. அவதூறுகள் தேடப்பட்டு, அவை  முன்வைக்கப்படுகின்றன. ஸ்டாலின் பற்றிய பிரச்சனையில், இதைப் பற்றி பேச மறுத்து மார்க்சியத்தை புதைகுழிக்குள் திட்மிட்டே தள்ளி மூடுகின்றனர்.

ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கங்கள் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துகும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக, ஒன்றுக்கு மறுக்கப்படுகின்ற வரை தான் அது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. இது வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநயாகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்ததை ஏகாதிபத்தியம் மூடிமறைக்கின்றது. அதே போல் டிராட்ஸ்கிய ஏகாதிபத்திய கோட்பாட்டு எடுபிடிகள் கூட திட்டமிட்டே அதைப் பூசிமொழுகுகின்றனர். இதையே  டிட்டோ – குருச்சேவ் கும்பல் தனது முதலாளித்துவ மீட்சிக்கான செங்கம்பளமாக பயன்படுத்த டிராட்ஸ்கிகள் அதை விரித்தனர்.

ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே, எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கிலும்; துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. பாட்டாளி வர்க்க சமுதாயத்தில், சுரண்டல் வர்க்கத்துக்கு சுரண்டும் ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது. இதுபோல் முதலாளித்துவமும், அதில் இருந்து உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்தின் ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும் அதன் பண்பியல் கூறுகளை எதார்த்தத்தில் இலகுவாக புரிந்து கொள்ளவைக்கின்றது. வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து, சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை கொண்டிராத எல்லா நிலையிலும், சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம் எப்போதும் நிர்வாணமாக இருப்பதில்லை. அது தன்னை மூடிமறைத்து கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக மற்றைய வர்க்கத்துக்கு சலுகை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை அழகு படுத்துகின்றது. இந்த ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாதபடி, அதை மூடிமறைக்கின்றது. சமுதாயத்தில் இந்த போலித்தனத்தை யார் யாரெலாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை தொடர்வதற்காக பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை நிர்வாணப்படுத்துகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.

மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, இந்த ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை, புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர்தரப்புக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வெவ்வேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.

ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்தும் வர்க்க எல்லைக்கு அப்பால் நீடிக்க முடியாது. இதை எற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகம் உருவாக்கியுள்ள மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது, பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம், தனிமனித உரிமை எதையும் முதலாளித்துவ ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இதுபோல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. இந்த எதிர்தெதிரான வர்க்கப் போராட்டத்தின் நீடித்த நிகழ்ச்சி நிரலை நிராகரித்தபடி தான், ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் கட்டப்படுகின்றன. ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கும் போது, அரசியல் உள்ளடக்கம் குறித்த‌ கருத்தை முன்வைக்கவோ விமர்சிக்கவோ மறுக்கின்றனர். கூர்மையாக நிதானமாக அவதானிக்கும் யாரும், ஸ்டாலின் அவாதூறுகளில் இந்த அடிப்படையில் நின்று விவதிப்பதில்லை என்பதைக் கண்டு கொள்ள முடியும். மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதில் மார்க்சியவாதிகளாகிய நாங்கள் அவற்றை என்றும் புறம் தள்ளியது கிடையாது.

அதேநேரம் நாம் அதிகாரத்தை கைப்பற்றவும், அதை உயிரிலும் மேலானதாக பாதுகாக்கவும் போராடுவோம். இதை மார்க்சிய எதிரிகள் அதை “ஸ்டாலினிசம்” என்றால் அதற்காகவும் நாம் போராடுவோம். சுரண்டு வர்க்கத்தின் மேல் அதிகாரத்தை கையாள மறுக்கின்ற, முதலாளித்துவ எடுபிடிகளின் எல்லா சொற்புனைவுகளுக்கும் நாம் நேரடியான எதிரிகள் ஆவோம். “ஸ்டாலினிசம்” என்று யார் இதைச் சொல்லுகின்றார்கள். கூர்மையாக அவதானிக்கும் யாரும் ஏகாதிபத்திய மதிப்பீடுகளிலும் சரி, டிராட்ஸ்கிய மதிப்பீடுகளில சரி, இது போன்று குலைக்கின்ற பலரும் ஒரே விதமாக மதிப்பிடவும், ஒன்றுபட்டு நிற்பதை அவதானிக்க முடியும். இதை கூர்மையாக வேறுபடுத்த முயலும் யாரும், கோட்பாட்டு ரீதியாக வேறுபாடு இருப்பதில்லை என்ற உண்மையைக் நிதர்சனமாக காணமுடியும். இவர்கள் அனைவரும் தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்ற நெம்புகோலை பிடித்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் ஒரே விதமாக குரைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர் பட்டியலை ஏகாதிபத்தியம் எப்படி வெளியிட்டதோ அதை அப்படியே வாந்தி எடுத்தவர்கள், அவை இன்று பொய்யாகும் போது மௌனமாக அதை காலால் புதைத்தபடி தான் புதிதாக அவதூறுகளை அப்புகின்றனர். புதிய அவதூறுகளை ஏகாதிபத்திய வாந்திகளை  மெண்டு மீளக் கக்குவதை கடந்து எதுவும் நகரவில்லை. கூர்மையாக இரண்டையும் அவதானிக்கும் யாராலும், இதை துல்லியமாக இனம் காணமுடியும்.

ஏகாதிபத்திய எலும்புகளை வாயில் கவ்வியபடி குலைக்கும் இவர்கள், கட்சி பற்றிய அடிப்படையான உள்ளடகத்தையே கொச்சையாக மாறுக்கின்றனர். கட்சியின் வர்க்க உள்ளடகத்தை மறுத்து தனிமனிதர்கள் சார்ந்த அவதூறுகளை கட்டமைக்கும் போது, இயங்கியல் அடிப்படை விதியையே மறுப்பது அவசியமாகிவிடுகின்றது.


1. ஒருவன் கட்சியில் சேர்ந்தால் ஆயுள் பூராவும் அவனை கம்யூனிஸ்டாகவே இருப்பான் என்ற இயங்கியல் மறுப்பை முன்னெடுத்து அவதுறை மேலும் மெருகுட்டுகின்றனர்.

2. கட்சியில் உள்ள கருத்துச் சுதந்திரம் என்பது கோட்பாடு கடந்த முதலாளித்துவ உரிமைவரை உள்ளதாக காட்டி, அதை பாட்டாளி வர்க்கம் மறுப்பது ஜனநாயக விரோதம் என்ற காட்டுகின்றனர். இதை வன்முறை சார்ந்த, சாராத இரு நிலைலும் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை வரை நீட்டி, பாட்டாளி வர்க்க அதிகாரத்தை கைப்பற்றும் முதலாளித்துவ உரிமை வரை கட்சி கண்ணோட்த்தைச் சிதைத்து பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக அவதூறுகளை கட்டமைக்கின்றனர்.

3. கட்சியின் ஜனநாயக மத்தியத்துவம் என்பது இரகசிய சதிக் குழுக்களை கட்டவும், கட்சிக்குள் கட்சியை கட்டும் உரிமையை உள்ளடக்கியது என்ற எல்லை வரை காட்டி அவதூறுகளை கட்டமைக்கின்றனர்.

இப்படி பல.  உதாரணமாக டிராட்ஸ்கியம் இதை எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம். 1950 களின் பின் “… கட்சியுள் சியோனிசக் குழுக்களை தேடுதல் என்ற தந்திரம், ஸ்டாலின் யூதர்களை கட்சியில் இருந்து துடைக்கும் நடவடிக்கையாகும். யூத அடியைச் சேர்ந்த தோழர்கள் என்ற கௌவுரவப் பெயர்களில் யூதக் கம்யூனிஸ்டுகள் கண்காணிக்கப்பட்ட கேவலங்கள் நடந்தன. யூதர்களின் அமைப்பான வவ்வன் மீதும் தாக்குதல் நடந்தது” என்று தூற்றும் போது, கட்சியில் யூத அடையளங்களுடன், யூத அமைப்பின் பெயரிலும் இருப்பதை அங்கிகாரிப்பதே சர்வதேசியம் என்கின்றனர் டிராட்ஸ்கியவாதிகள். யூதம் ஒரு படுபிற்போக்கான பார்ப்பனியம் போன்ற அடிப்படைவாத மதவாதமாகும். இதற்கு வெளியில் யூத கோட்பாடுகள் கிடையாது. வேறு விளக்கம் இதற்கு வெளியில் கிடையாது. பார்ப்பனியம் எப்படி தனக்கொரு மொழியையும், தனக்கொரு மதத்தையும் கொண்டு மக்களை அடக்கி செயல்படுகின்றதோ, அப்படித்தான் யூதமும். 1948 இல் பலஸ்தீனப் பிரதேசத்தில் பிரிட்டிஸ் மற்றும் அமெரிக்கா ஏகாதிபத்தியத் துணையுடன், மத்திய கிழக்கில் ஒரு பேட்டி ரவுடியாக இஸ்ரேல் என்ற நாட்டை பலாத்காரமாக யூத முதலாளிகளும் எகாதிபத்தியமும் சேர்ந்து உருவாக்கிய போது அதை சோவியத்யூனியன் எதிர்த்தது. இதன் போது யூத மத அடையாளங்களுடன் சோவியத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும், கட்சியில் இருக்கும் யூதர் அடையாளத்துடன் இஸ்ரேலை ஆதாரிப்பதையும் கட்சி ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.

ஒட்டுமொத்தத்தில் பாட்டாளி வர்க்கம் கைகட்டி மௌனமாக தனிமனித உரிமையின் பெயரிலும், தனிமனித ஜனநாயகத்தின் பெயரிலும் இவற்றை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். இது இல்லாத வரை, இவற்றை மனித விரோதக் குற்றமாக காட்டுகின்றனர். இதை மறுத்த ஸ்டாலின் தூற்றப்பட்டார். பாட்டாளி வர்க்கம் ஸ்டாலின் பெயரால் இழிவாடப்படுகின்றது. உருக்கு போன்ற பாட்டாளி வர்க்க கட்சி உள்ளடக்கத்தை கோட்பாட்டு ரீதியாக சிதைப்பதில் இருந்தே, தமது முதலாளித்துவ சொந்த வர்க்க அவதூறுகளை பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக முன்வைத்து நியாயப்படுத்த முடிகிறது.

நுணுக்கமாக தொடரும் அவதூறுகளை அவதானித்தால், ஏகாதிபத்தியம் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை எப்படி கொச்சைப்படுத்துகின்றதோ, அப்படியே இவர்களும் கொச்சைப்படுத்துகின்றனர். இதில் வேறுபாடுகள் இருப்பதில்லை. ஏகாதிபத்தியம் எப்படி எதை எதையெல்லாம் ஸ்டாலினுக்கு எதிராக ஏற்ற இறக்கத்துடன் அவதூறூக கட்டமைக்கின்றதோ, அதையே இந்த டிராட்ஸ்கிய கனவான்களும் மீள வாந்தி எடுக்கின்றனர். மற்றவர்களும் தான். ஸ்டாலினை தூற்றும் இவர்கள் அதற்கு பிந்திய குருச்சேவ், பிரஸ்னேவ் முதல் கொப்பச்சேவ் வரையான காலத்தை தூற்றுவதில்லை. சிற்சில முரண்பாட்டுடன் ஆதாரிப்பதும், கண்டும் காணமல் விடுவதுமே, இவர்களின் சிறப்பான ஒற்றுமையாக உள்ளது. ஸ்டாலின் கால கட்டமே, உலக மூலதனத்தின் மிக நெருக்கடியான காலகட்டமாகும். இதில் இருந்து ஏகாதிபத்தியத்தை மீட்ட குருச்சேவ், ஸ்டாலினை தூற்றினான். மார்க்சியத்தின் அடிப்படை உள்ளடகத்தையே மறுத்து, மார்க்சியத்தை சிதைத்து முதலாளித்துவ மீட்சியை நடத்தினான்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி -5

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

புரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…


நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ அமைப்பு தனக்குள் இற்றுக்கொண்டிருக்கும் ஓசைகள் வெளிக்கேட்கத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அது தன் தலை நிலமாகிய அமெரிக்காவிலேயே வங்கிகளாய், பெரு நிறுவனங்களாய் வெடித்து வீழ்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் பணம் கொட்டப்பட்டு அவை நிலைத்திருப்பதாய் காட்ட முற்பட்டாலும் படிந்துவிட்ட வெடிப்புகளின் பல்லிளிப்புகளை மறைக்க விழி பிதுங்குகிறது முதலாளியம். உள்ளே எழுந்து கிளைபரப்பி விரியும் வலியை தடுத்தாட்கொள்வதாய் நினைத்துக்கொண்டு முன்னிலும் அதிகமாய் மக்களைக் கடித்து ரத்தம் குடித்துக்கொண்டிருக்கிறது. புவியெங்கும் கறைகளாய் அதன் உமிழல்கள்.


லத்தீன் அமெரிக்க நாடுகள் அத்தனையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ அரசுகளை சீர்குலைத்து தன் பொம்மைகளை நிறுவுவதற்கு படுகொலைகளையும் இனவழிப்புகளையும் துணிந்து நடத்தியிருக்கிறது அமெரிக்கா. சிலியின் அலண்டே தொடங்கி கியூபாவின் காஸ்ட்ரோ வரை தனது நலன்களுக்கு உகந்ததாக இல்லாத எந்தத் தலைவரையும் சதிப்புரட்சி மூலம் கொலைசெய்வதிலிந்து அடுக்கடுக்காய் வாடகைக் கொலையாளிகள் மூலம் கொலை செய்ய முயற்சிப்பதுவரை அமெரிக்கா செய்யாத பாதகங்களில்லை. வெனிசூலாவின் சாவேஸை கவிழ்த்துவிட வாய்ப்புக்கிடைக்காதா என அலைவது இன்னும் நின்றுவிடவில்லை. தோல்வியுற்ற ஈக்வடார் சதிப்புரட்சியின் சூடு இன்னும் ஆறிவிடவில்லை. இவைகளெல்லாம் முழுமையாக சோசலிசத்தை செயல்படுத்தும் நாடுகளில்லை என்றாலும், சோசலிசம், கம்யூனிசம் போன்ற வார்த்தைகளை எந்தநாடும் மறந்தும் கூட உச்சரித்து விடக்கூடாது என கங்கணம் கட்டுகிறது தன்னை ஜனநாயகத்தின் காவலன் என கருதிக்கொள்ளும் அமெரிக்கா.


மத்திய தரைக்கடல் நாடுகளில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டபின் வளைகுடா நாடுகளைனைத்தும் அறிவிக்கப்படாத அமெரிக்க மாநிலங்கள் என்றே செயல்பட்டுவருகிறது அமெரிக்கா. அவைகள் மீறிவிடக்கூடாது என்பதற்காக இஸ்ரேலை ஆதரித்து உருவாக்கி வளர்த்து வருகிறது. ஈரானில் அமெரிக்கப் பொம்மையான ஷாவை நீக்கி அயதுல்லா கொமேனி வந்ததும், தன்னால் உருவாக்கப்பட்ட பாத் கட்சியின் சதாம் உசேன் மூலம் போர் தொடுத்ததும், சதாம் அடிபணிய மறுத்ததால் அபாயகரமான ஆயுதங்கள் என்று கூறி தூக்கிலிட்டதும், ஈரான் இஸ்ரேலுக்கு அணுஆயுதப் போட்டியாகி வளைகுடா நாடுகளில் தாக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காக, பாகிஸ்தான் துணையுடன் ‘முஜாஹிதீன் ஹல்க்’, ‘ஜண்டுல்லாஹ்’ போன்ற இயக்கங்கள் மூலம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதும் எல்லோரும் அறிந்த ரகசியங்கள்.
ஆப்பிரிக்க நாடுகளின் கனிம வளங்கள் முதல் அனைத்தையும் மக்களை பட்டினி போட்டுக் கொன்று சுரண்டிக் கொழுக்கின்றன அமெரிக்க ஐரோப்பிய பெரு மூலதன நிறுவனங்கள். மூன்றாம் உலக நாடுகளை கடன்வலையில் சிக்கவைத்து, கடனுக்கான நிபந்தனைகளின் வாயிலாக உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளை வளைப்பதுடன் அவைகளின் உற்பத்தியை ஏற்றுமதி எனும் பெயரில் வட்டியாகக் கறந்துவிடுகின்றன. உலகின் வளங்களை கொள்ளையடித்துச் சுருட்டுவது ஒருபுறமென்றால் மறுபுறம் வளங்களையும், சுற்றுச்சூழலையும் மாசடையவைத்து சீர்கெடுப்பதும் முதலாளித்துவம் தான்.

இந்தியாவிலும் லட்சக்கணக்கான விவாசாயிகள் முதலாய், நேற்றைய நோக்கியோ அம்பிகா ஈறாய் எத்தனையெத்தனை கொலைகள், என்னென்ன கொடுமைகள். கோடிகோடியாய் முதலாளிகளுக்கு சலுகைகள் என்றாலும் உளுத்த தானியங்களைக்கூட ஏழைகளுக்கு கொடுக்கும் சாத்தியமில்லை என பிரதமரே பேசுவது, உழைப்பவனின் நரம்பை உருவி உதாரிகளுக்கு ஊஞ்சல் கட்டிப்போடும் அயோக்கியத்தனமில்லையா? இதற்கு முதலாளியத்தைத் தவிர வேறெதை நோக்கி விரல் சுட்டமுடியும்?


மக்களின் வறுமைக்கும், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களின் நாசத்திற்கும் ஒட்டுமொத்தக் காரணமாக இருக்கும் முதலாளித்துவத்தை மக்கள் எட்டி உதைத்திருக்க வேண்டும், ஆனால், முதலாளிய பொருளாதாரக் கொள்கைகள் முன்னேற்றமாகவும், ஏகாதிபத்திய நாடுகளை சொர்க்கமாகவும், அங்கு செல்வதை லட்சியமாகவும் கொள்ளுமளவுக்கு மக்கள் மந்தைகளாக்கப்படுகின்றனர். காரணம் உலகின் மொத்த ஊடகங்களும், கருத்துப்பரவலுக்கான கருவிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்திருப்பதாலும் மக்களின் மனங்களை தங்களின் வசதிக்கேற்ப திருப்பியெடுக்குமான வாய்ப்பு வாய்க்கப்பெற்றிருப்பதும்தான். தாங்கள் வளர்த்துவிட்ட ஒரு சதாம் உசேன் தங்களுக்கெதிராய் திரும்ப எத்தனித்ததும் பேரளிவு ஆயுதங்கள் எனும் உலகின் மோசமான பொய்யை காரணமாகக் கூறி தூக்கிலிட்டுக் கொல்லவும், தடைகளின் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளை கொன்றொழிக்கவும் சுலபமாக முடிகிறது. இன்றுவரை ஒரு குண்டூசியைக் கூட பேரழிவு ஆயுதமாக கண்டெடுக்க முடியவில்லை என்றாலும், எந்த நாட்டாலும், எந்த அமைப்பாலும் இந்தக் கொடூரத்தை, நரவேட்டையை தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முடிந்ததில்லை. இதை கண்ணெதிரே கண்டுகொண்டிருக்கும் போதிலுமே கம்யூனிசம் மக்களை வதைத்தது, ஸ்டாலின் கோடிக்கணக்கில் கொன்றார் எனும் கடந்த காலக் கட்டுக்கதைகளை நம்ப விரும்பும் மக்கள் இருக்கிறார்கள் என்பது, முதலாளித்துவம் எந்த அளவில் மக்கள் மனங்களையும் அரித்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாய் நிற்கிறது.


இந்தக் கொடுமைகளிலிருந்தும் கொடூரங்களிலிருந்தும்; உலகைச் சீரழிப்பவர்களிடமிருந்தும், மக்களைச் சுரண்டி அவர்களை ஏழ்மையிலும் அடிமைத்தளையிலும் கட்டிவைத்திருப்பதிலிருந்தும் மக்களை விடுவிப்பது யார்? எது உலக மக்களுக்கான விடிவைத்தரும்? மதங்களா? காப்பது கிடக்கட்டும், இவைகளை சுட்டிக்காட்டி கண்டிக்கும் வீரியம் இருக்கிறதா அவைகளிடம்? செத்தபிறகு சொர்க்கமென்றும், மறுபிற‌வியில் வாழவைப்பேன் என்றும் மக்களை ஏமாற்றி இந்த சமூக அமைப்புகளைத் தக்கவைத்ததைத்தவிர மதங்கள் செய்ததென்ன? ஒன்றுமில்லை.


இந்த உலகில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் போராட்டத்தின் ரத்தச்சகதியிலிருந்து முளைத்து வந்தவைதான். அத்தனை உரிமைகளையும் நோகாமல் அனுபவிக்கும் நாம், நம் தோள்களில் தங்கி நகர்த்திச் செல்லவேண்டிய போராட்டக் களத்தை, சுகம் சொகுசு எனும் தனிமனித நத்தைக் கூட்டுக்குள் சுருக்கிக் கொள்வதேன்? நம் சொகுசுகளின் உறைகுளிரில் தீயைக் கிழித்துப்போட்டது ஒரு கொள்கை. இந்த உலகை வியாக்கியானம் செய்வதல்ல, அதை புரட்சிகரமாக மாற்றியமைப்பதே நம் முதல் தேவையாக இருக்கிறது என்று நம் செல்களின் தடித்தனங்களை ஊடுருவி, ஊடுருவி உரத்துச் சொன்னது அந்தக் கொள்கை. அது தான் கம்யூனிசம்.
மகிழ்ச்சி என்பது உளவியல் சார்ந்ததல்ல, அது செயல்களைச் சார்ந்தது, போராட்டத்தின் வழியே வருவது என ஒவ்வொரு மனிதனையும் உலுக்கிச் சொன்னது 1917 நவம்பர் 7. ஆம் இன்றுதான். உலகின் புரட்சிகர இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்த நாள். அந்த மகத்தான ரஷ்யப் புரட்சியின் நாள் இன்று. மக்கள் மீது சுமத்தப்படும் கொடுமைகளை, முதலாளித்துவ அநீதிகளை எதிர்த்து முறியடிக்கும் திறனை தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கும் கம்யூனிசத்தின் கீழ் அணிவகுப்போம், சுடர்களாய் அல்ல தீப்பந்தமாய்.
எழுந்து வாருங்கள் சுடர்களே,

அகல்விளக்கின் அங்கமாய்

மினுக்கிக்கொண்டிருந்தது போதும்

வெடித்துப்பேசும் நெருப்பு நாக்காய்

கொழுந்துவிட்டெரிவோம்


தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி நாள் வாழ்த்துக்கள்

 

அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை


பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா: சோவியத் யூனியனின் அற்புதங்கள்

%d bloggers like this: