தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௭

“மனிதர்கள் அறிந்துகொள்வதற்காக இதை நாம் அத்தாட்சியாக ஆக்கிவைத்திருக்கிறோம்” குரானில் சில இடங்களில் இப்படி ஒரு அறிவிப்பு இருக்கும். எடுத்துக்காட்டாக ஃபிர் அவ்னின் உடல் குறித்த வசனம், நூஹின் கப்பல் குறித்த வசனம். குரானில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி அறிவிக்கப்பட்டிருந்தால் பின்னர் ஒரு நாளில் அந்த அத்தாட்சி வெளிப்படுத்தபட்டு குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதை மெய்ப்பித்து நிற்கும் என்பது மதவாதிகள் அடிக்கும் ஜல்லி. ஆனால் குரானில் அல்லா அத்தாட்சி என அறிவித்து இன்னும் வெளிப்படுத்தாமல் அல்லது வெளிப்படுத்தமுடியாமல் (வெளிப்படுத்தினால் அதை பாதுகாக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு அறிவு(!) வேண்டுமல்லவா?) காத்திருப்பு பட்டியலில் இருக்கும் அத்தாட்சிகளும் குரானில் இருக்கின்றன.

 

“……. இதோ பாரும் உம்முடைய உணவையும் உம்முடைய பானத்தையும். அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை. ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும். உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக உயிர் பெறச் செய்கிறோம். ……” குரான் 2:259.

 

“இன்னும் நூஹின் சமூகத்தவர், அவர்கள் நம் தூதர்களைப் பொய்யாக்கியபோது, நாம் அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம். ….” குரான் 25:37

 

இதில் முதல்வசனம் ஒரு கதை சொல்கிறது. அதில் ஒருவர் உணவும் குடிப்பதற்குப் பானமும் எடுத்துக்கொண்டு கழுதையில் பயணம் செய்கிறார். வழியில் ஒரு கிராமத்தைக் கடக்கும் போது அந்தக் கிராமத்தின் வீடுகள் இடிந்து கிடக்கின்றன. இதைக்காணும் அவர் மனதில் ‘இப்படி வீடுகள் இடிந்து விழுந்து கொல்லப்பட்டவர்களை அல்லா எப்படி தீர்ப்பு நாளில் மீண்டும் எழுப்ப முடியும்?’ எனும் ஐயம் எழுகிறது. உடனே அல்லா அவருக்கு புரியவைப்பதற்காக அவரை மரணமடையச் செய்கிறான். பின்னர் அவர் உயிர் கொடுத்து எழுப்பப்படுகிறார். எழுந்த அவர் சிறிது நேரம் உறங்கியதாக கருதுகிறார். அப்போது அசரீரியாக அல்லா பேசுகிறான், “எவ்வளவு காலம் இந்த நிலையில் இருந்தீர்?” “ஒரு நாள் அல்லது அதில் சிறிய பகுதி” “அவ்வாறல்ல, நூறாண்டுகள் மரணமடைந்து பூமியின்மேல் கிடந்தீர். உங்கள் உணவையும் பானத்தையும் பாருங்கள், அவை கெட்டுப்போகவில்லை. ஆனால் அந்தக் கழுதை” அப்போதுதான் அவர் பார்க்கிறார் செத்து மக்கிப் போய் கிடக்கிறது. “மக்கிப்போய் கிடக்கும் கழுதையைக் கவனியுங்கள் எப்படி அதன் எலும்புகளை ஒன்று சேர்த்து சதையைப் போர்த்துகிறோம் என்று பாரும். நீர் தெளிவடைவதற்கும், இனி வரும் மனிதர்களுக்கு அத்தாட்சியாகவும் அதனை உயிர்பெறச் செய்கிறோம்” பின் அவர் உணர்ந்து கொண்டு “அல்லா எல்லாப் பொருளின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறி தெளிவடைகிறார்.

 

இந்தக் கதையில் ஒரு மனிதன் தரையில் நூறு ஆண்டுகளுக்கு கிடக்கிறான். அவன் இறந்து கிடந்தாலும், உறங்கிக் கிடந்தாலும் உடலளவில் குறைந்தபட்ச சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை. ஏனென்றால் நூறு ஆண்டுகள் கழித்து, சில மணிநேரம் உறங்கியதாகத்தான் ஆண்டவனுக்கு பேட்டியளிக்கிறார். நம்பகத்தன்மைக்கே அத்தாட்சி தேவைப்படும் நிலையில் ஒரே இறைவனால் மனிதனுக்கு வழிகாட்ட தரப்பட்ட வேதத்தில் இருக்கும் இந்தக் கதைதான் மனிதன் மீண்டும் எழுப்பப்படுவான் என்பதற்கு அத்தாட்சியாம். விருப்பப்படுபவர்கள் நம்பிக்கொள்ளலாம். போகட்டும், இதில் அத்தாட்சி என்பது எது? கழுதையா? மனிதனா? எந்த விதத்தில் அது மீள் சாட்சியாகப் போகிறது?

 

இரண்டாம் வசனம் மனிதர்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறது. அதாவது, தன்னுடைய இருப்பை பல்வேறு அத்தாட்சிகள் மூலம் மெய்ப்பித்தும் மனிதர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் தன்னால் அழிக்கப்பட்ட மக்களை பட்டியலிட்டுக்காட்டி மனிதர்களை எச்சரிக்கிறது. இதோ அந்தப் பட்டியல் ௧) ஃபிர் அவ்னின் கூட்டத்தினர், ௨) நூஹ் சமூகத்தினர், ௩) ஆது சமூகத்தினர், ௪) ஸமூது சமூகத்தினர், ௫) ரஸ்வாசிகள் இன்னும் இவர்களுக்கு இடைப்பட்ட அநேக தலைமுறையினர். இந்தப்பட்டியலில் நூஹ் சமூகத்தில் மூழ்கடிக்கப்பட்டவர்களை அத்தாட்சியாக்கியிருப்பதாக இந்த வசனம் குறிப்பிடுகிறது. இங்குதான் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாமிய கதையாடலின்படி ஃபிர் அவ்னின் உடலும், நூஹின் கப்பலும் அத்தாட்சிகள் (இந்த அத்தட்சிகளின் பித்தலாட்டங்கள் குறித்து ஏற்கனவே இந்தத் தொடரில் எழுதப்பட்டிருக்கிறது) ஃபிர் அவ்னின் உடல் மூழ்கியவர்களுக்கான அத்தாட்சி, நூஹின் கப்பல் தப்பிப் பிழைத்தவர்களுக்கான அத்தாட்சி. ஆனால் இந்த இடத்தில் இவைகளை பட்டியலிடும் போது நூஹின் சமூகத்தினரை மூழ்கியவர்களுக்கான அத்தாட்சியாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் கப்பல் என்பது பிழைத்தவர்களுக்கான அத்தாட்சி. இதை நீண்ட காலமாக (23 ஆண்டுகள்) குரானை தருவதற்கு எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பிழை என்று கொள்வதா? அல்லது நூஹ் சமூகத்தினரின் மூழ்கடிக்கப்பட்ட அத்தாட்சி இனிமேல்தான் வெளிப்படுத்தப்படவிருக்கிறது என எடுத்துக்கொள்வதா?

 

ஆம். இந்த இரண்டு அத்தாட்சிகளும் இனிமேல் தான் வெளிப்படுத்தப்படவிருக்கின்றன, அல்லது தகுந்த காலம் வந்ததும் அல்லா அவைகளை வெளிப்படுத்துவான் என இஸ்லாமியர்கள் தமக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ள‌ விரும்புவார்களாயின், அதற்கு எதிராகவும் குரானில் ஒரு அத்தாட்சி இருக்கிறது. மேற்கண்டவைகளைப் போல அத்தாட்சியாக வைத்திருக்கிறோம் என்று பொதுவாகக் குறிப்பிடாமல் இன்னும் தெளிவாகவே அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“இது என் இறைவனிடமிருந்துள்ள கிருபையே ஆகும். ஆனால் என் இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் போது அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். மேலும் என் இறைவனின் வாக்குறுதி உண்மையானதே என்றும் கூறினார்” குரான் 18:98

 

இந்த வசனத்தில் கிருபை(கருணை) என்று கூறப்படுவது அத்தாட்சியையும் இறைவனின் வாக்குறுதி என்பது மறுமை நாள் அதாவது இறைவன் உலகை அழிக்கும் நாளையும் குறிக்கும். அந்த அத்தாட்சியானது வெளிப்படுத்திக்காட்டவேண்டிய அவசியமின்றி உலக அழிவு நாள் வரை இருந்து இறைவனால் அழிக்கப்படும் என்றும் அந்த வசனம் கூறுகிறது. என்ன அந்த அத்தாட்சி?

 

துல்கர்னைன் எனும் ஒரு மன்னன் வலசை போகிறான். அப்போது ஒரு பகுதியைச் சார்ந்தவர்கள் யஃஜூஜும், மஃஜூஜும் கூட்டத்தார்கள் தம்மை தொல்லை செய்வதாகவும் அவர்களிடமிருந்து தம்மை காக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார்கள். மன்னனும் அதற்கு இசைவு தெரிவித்து, அவர்கள் வராமலிருக்கும் பொருட்டு இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை இரும்புப் பாளங்களால் அடுக்கி செம்பை உருக்கி ஊற்றி நிறைத்து விடுகிறார். இதன்பிறகு அவர்கள் இதில் ஏறிவரவோ ஓட்டையிட்டு துளைத்து வரவோ சக்தியற்றவர்கள் என்று விளக்கமும் அளிக்கிறார். இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட தூரத்தை இரும்புப் பாளங்களால் இட்டு நிரப்பி செம்பை உருக்கி ஊற்றி அடைத்ததைத்தான் மறுமை நாளில் இறைவன் தூளாக்குவது வரை இருக்கும் என்கிறார். எங்கே இருக்கிறது இந்த இடம்? இது ஒன்றும் மறைத்து வைத்திருந்து வெளிப்படுத்தக்கூடிய பொருளில்லையே, உலகில் இப்படி ஒரு இடம் இல்லை என்பது ஒன்றே குரான் இறைவன் தந்ததல்ல, முகம்மது தனது தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டதுதான் அல்லாவும் குரானும் என்பதை நிரூபிக்கப் போதுமானது.

 

வாய்ப்புள்ள இடங்களை நீட்டி முழக்குவதும், அல்லாதவற்றை இருட்டடிப்பு செய்வதும் மதவாதிகளின் வழக்கம். இந்த வழக்கச் சகதிக்குள்தான் மதங்களின் வேதங்களின் புனிதங்கள் பிறபெடுக்கின்றன. அதற்கு இது இன்னுமொரு சான்று.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

 

49 thoughts on “தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

 1. இந்த மனிதன் இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தது ஹதிதுகளில் குறிப்பிட பட்டு உள்ளதா?குறிப்பிட பட்டு உள்ளதா?

  அந்த மனிதரை பற்றி குரானிலோ ஹதிதிலோ வேறு ஏதாவது குறிப்பிடப் பட்டு உள்ளதா?

  இந்த கதை இப்ராஹிமை பற்றி கூறும் போது வருகிறது வசனங்கள் 258 மற்றும் 260ல் கூட‌ இப்ராஹிமை பற்றியே கூறப் படுகிறது.அந்த மனிதருக்கும் இப்ராஹிமிற்கும் என்ன தொடர்பு?

  260வது வசனத்தில் கூட பறவைகள் குட இறந்து உயிர் பெற்றதாக கூறப் படுகிறது.

  செத்து செத்து விளையாடுராங்களோ?.

  முழு வசன‌த்தில் இந்த கதை கூறப் படுகிறது

  2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் – (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.

  2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “;(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.

 2. குர்-ஆன் “துல்கர்னைன்” என்று இந்த அரசனுக்குப் பெயர் உள்ளதாகச் சொல்கிறது. சரித்திர நூல்கள்படி அலேக்ஜாண்டருக்கு “துல்கர்னைன்” என்ற பெயர் உள்ளது..

  துல்கர்கைன் அலக்சான்டரா இல்லையா?

  குர்-ஆனில் அல்லா, துல்கர்னைன்(அலேக்ஜாண்டர்) ஒரு “ஓர் இறைக்கொள்கையாளன்”( பல தெய்வங்களை வணங்காதவன்) என்றும், அல்லாவின் வழியிலே நடப்பவன் என்றும் சொல்கிறான். ஆனால் சரித்திரம் நமக்குச் சொல்கிறது, அவன் பல தெய்வங்களை வணங்கியவன். அந்த தெய்வங்களுக்காக சென்ற இடமெல்லாம் பலிபீடங்களை நிறுவியவன்.

  இந்தியாவில் படையெடுத்து வரும்போது “ஹைபாஸிஸ்” நதிக்கரையில் அவன் தன் நாட்டு தெய்வங்களுக்கு (ஒலிம்பியன்) 12 பலிபீடங்களை நிறுவினான்

 3. எந்த அரசனோடு துல்கர்னைனை தொடர்புபடுத்துவது என்று குழம்பி, சிலர் அலேக்சாண்டரோடும், சிலர் சைரசோடும் தொடர்புபடுத்துவர். சைரஸின் சில பண்புகள், துல்கர்னைனோடு ஒத்துப்போகும். அதனால், அதுதான் துல்கர்னைன் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர்.

  கோட்டை ஒன்றினை சுட்டிக்காட்டி, அந்த சுவர் இதுவாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால், குர் ஆனில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது, அந்த சுவர், இரு மலைகளுக்கு இடையிலான பாதையை அடைத்திருக்கும்; இரும்பாலும், செம்பாலும் கட்டப்பட்டிருக்கும் என்று. உலகில் அது போன்ற சுவர் எங்கும் கிடையாது.

  மேலும், முகம்மது அந்த சுவற்றில், யஜூஜ், மஜூஜ் ஒரு துளையை ஏற்படுத்திவிட்டனர் என்றும் கூறியுள்ளார். முகம்மது காலத்தில் இருந்ததாக கூறப்பட்ட ஒரு சுவர், கியாமத் நாளன்றுதான் இடிக்கப்படும் என்று கூறப்பட்ட ஒரு சுவர், இன்று உலகில் இல்லை.

  குர் ஆனில் ஒரு பிழை கூட கிடையாது என்று கூறியவர்கள், இப்பேர்ப்பட்ட ஒரு வரலாற்றுப் (?) பிழையை என்ன சொல்லி சமாளிப்பார்கள்?

 4. 2. 260 அல்லது, சிதைந்து அழிந்துபோன ஒரு சிற்றூரைக் கடந்து சென்ற(உஜைர் என்ப)வரைப் பற்றி (நபியே!) உமக்குத் தெரியுமா? அவர், “இவ்வூர் அழிந்து போய்க் கிடக்கின்றதே! இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) நின்றார். அல்லாஹ் அவரை நூறாண்டுகள்வரை இறந்து கிடக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்பெற்றெழச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரிடம் வினவினான். அதற்கவர், “ஒரு நாளோ ஒரு நாளின் சிறு பகுதியோ” என்று விடையளித்தார். “இல்லை; நீர் நூறாண்டுகள் உயிரற்றுக் கிடந்தீர். இதோ பாரும் உம்முடைய உணவையும் குடிப்பையும். அவை எவ்வித மாறுதலையும் அடையவில்லை. ஆனால், உம்முடைய கழுதையின் நிலை என்னவென்று கவனித்தீரா? மனிதர்களுக்கு ஒரு சான்றாகக் காட்டும் பொருட்டு (உம்மை இவ்வாறு இறப்புநிலையில் வைத்து மீண்டும் எழச்செய்தோம்). (உமது கழுதையின்) எலும்புகளை உற்றுப் பார்த்துக் கொண்டிரும். அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் எவ்வாறு சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி அல்லாஹ் அதனை உயிர் பெற்றெழச் செய்தான். அவருக்கு(அல்லாஹ்வின் ஆற்றல் கண்கூடாக)த் தெளிவான போது, “திண்ணமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆதிக்கப் பேராற்றலுடையவன் என்பதை நான் நேரடியாகக் கண்டறிந்து கொண்டேன்” என்றார்.

  http://sites.google.com/site/tamilquraan2/chapter002ver201-286

  யார் இறந்து நூறாண்டுகளுக்கு பிறகு உயிர்த்த மனிதர் என்று பல குரான்களை இவ்வசனத்தை பார்த்தேன். இந்த தளத்தில் இருந்த குரானின் உஜைர் என்று வழக்கம் போல் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட பட்டு இருந்தது?

  இந்த உஜைர் என்பவர் எஸ்ரா என்று பைபிளில் அறியப் படுகிறார்.
  அவரை பற்றிய சிறு குறிப்பு
  கி.மு. 538இல் பாரசீக மன்னர் சைரசு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் அவர் இசுரயேல் மக்களுக்கு விடுதலை அளித்து யூதாவுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். செருபாபேலின் தலைமையில் இசுரயேல் மக்களுள் ஒரு பகுதியினர் முதலில் திரும்பி வந்தனர். திரும்பிவந்த இசுரயேலர் எருசலேமில் அழிந்திருந்த கோவிலைத் திரும்பவும், 515இல் கட்டியெழுப்பிப் புனிதப்படுத்தினர். மீண்டும் அங்கு வழிபாடு நடத்தினர்.
  சில ஆண்டுகளுக்குப் பின் எஸ்ராவின் தலைமையில் இஸ்ரயேல் மக்களுள் மற்றொரு பகுதியினர் திரும்பி வந்தனர்.

  எஸ்ரா ஒரு குரு; திருச்சட்ட வல்லுநர். உடன்படிக்கையின் மக்களாகவும், இறைவனின் புனித மக்களாகவும் தேர்ந்துகொள்ளப்பட்ட இசுரயேல் மக்களின் சிறப்பு நிலையைக் காக்குமாறு அவர்களின் மறைவாழ்விலும், சமூக வாழ்விலும் எஸ்ரா மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.

  மேலும் எஸ்ரா “இறையாட்சி” இசுரயேல் மக்களிடையே நிலவுமாறு அரசியல், மறை ஆகியவற்றின் பொறுப்பைக் குருக்களிடமே ஒப்படைத்து, அவற்றிற்கான சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தார்.
  இந்நூலின் பெரும் பகுதி எபிரேயத்திலும், சிறு பகுதி (4:8-6:18, மற்றும் 7:12-16) அரமேயத்திலும் எழுதப்பட்டுள்ளன.

  வரலாற்றில் நன்கு குறிப்பிட பட்ட ஒரு நபர் இறந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயிர் பெற்றது வரலாற்றில் எங்குமே குறிப்பிடவில்லை.

  உஜைரென்றாலே சர்ச்சைதான்.

  இவரை பற்றி இன்னொரு இடத்தில் இவரை யூதர்கள் கடவுளின் குமாரன் என்று குறிபிடுவதாக குரான் கூறுகிறது.

  யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (9:30)

  கிறித்தவர்கள் ஈசா(இயேசு)வை அல்லா(கடவுள்)வின் குமாரன் என்று கூறுகிறார்கள் சரி.ஆனால் ஓரிறை கொள்கையை பின்பற்றும் யூதர்கள் நபி உஐரை(எஸ்ரா)வை எப்போது அல்லா(கடவுள்)வின் குமாரன் என்று கூறினார்கள்?.

  2.260 வையும் 9:30 ஐயும் சார்ந்து பார்க்கும் போது இயேசுவையும் எஸ்ராவையும் குரான் குழப்புவது புரியும்

  எஸ்ரா ‍:::குரானின் படி யூதர்களை கடவுளின் குமாரன்‍ இறந்து உயிர்த்தெழுந்தவர்(நூறண்டுகளுக்கு பிறகு).

  இயேசு:புதிய ஏற்பாட்டின் படி கிறித்தவர்களின் கடவுளின் குமாரன்.இறந்து உயிர்த்தெழுந்தவர்(மூன்று நாட்களுக்கு பிறகு).

 5. அலெக்ஸாந்தர் தான் ஜூல் கர்னைன்.
  ஜூல் கர்னைன் என்றால் இரண்டு கொம்புகள் கொண்டவர் என்று பொருள்.
  அலெக்ஸாந்தர் எகிப்தை வெற்றிகொண்டபோது அவருக்கு இரண்டு கொம்புகள் கொண்ட கிரீடம் அணிவிக்கப்பட்டது. ஆகவே அவர் எங்கு சென்றாலும் அந்த கிரீடத்துடந்தான் சென்றார். அவர் இரண்டு கொம்புகள் கொண்ட கிரீடத்தை அணிந்ததாக நாணயங்கள் அச்சிடப்பட்டன. அலெக்ஸாந்தர் நாணயங்களை பார்த்தால் அது தெரியும்.

  அவரை முக்கிய கதாநாயகனாக ஆக்கி வீரதீர சாகசக்கதைகள் எழுதப்பட்டன. இதில் ஒன்று அலெக்ஸாந்தர் ரொமான்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது அலெக்ஸாந்தர் காலத்தில் எழுதபப்டவில்லை. இது மூன்றாம் நான்காம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டு புகழ்பெற்றது. இதிலும் அலெக்ஸாந்தரை ஜூல்கர்னைன் என்று பாராட்டி வரிகள் உள்ளன. முக்கியமாக மூன்றாம் நூற்றாண்டில் சிரிய மொழியில் (அரபிக்கு மிக நெருக்கமான மொழி) எழுதப்பட்ட அலெக்ஸாந்தர் காவியம் இப்போதும் கிடைக்கிறது. இதில் அலெக்ஸாந்தர் கிறிஸ்துவ கடவுளை கும்பிடுவதாகவும் எழுதப்பட்டுள்ளது.
  இந்த கற்பனை காவியத்தில் காக் மகாக் (gog magog) என் இரு நாட்டவர் இருக்கின்றனர். அங்கு ஒரு இரும்பு பித்தளை கதவத்தை கட்டி, காக் மகாக் நாட்டினர் உள்ளே வந்துவிடக்கூடாது என்று பூட்டி வைக்கிறார். 7000 வருடங்களுக்கு பின்னால் அந்த கதவுகள் உடைந்து காக் மகாக் ஆகியோரின் பிள்ளைகள் அந்த கதவுகளை உடைத்து வருவார்கள். அவர்களால், பெரும் தீமைகள் அப்போது நடக்கும் என்று கதை போகிறது..

  http://www.thinnai.com/?module=displaystory&story_id=20611028&edition_id=20061102&format=html

  இந்த கற்பனை கதையின் அடிப்படையில்தான் முகம்மது ஜூல்கர்னைன் யூத கடவுளை கும்பிட்டவன், அவன் காக் மகாக் ஆட்களை சிறைவைத்தான். அவன் உலகத்தில் எல்லைகள் வரைக்கும் சென்றவன் என்றெல்லாம் பூ சுற்றுகிறார்.

 6. முஹம்மது நபி[ஸல்] அவர்கள் கொண்டு வந்த வாழ்வியல் பற்றி விமர்சிக்க வழி இல்லாததால் .சாதாரண மர மண்டைகள் கூட கேட்கக்கூடிய கடவுள் கருப்பா சிவப்பா அடிப்படையிலான கேள்விகளை பெரிய அறிவு ஜீவியாக ஆராய்ச்சியாளராக காட்டிக்கொண்டு கம்யுனிசத்தை முஸ்லிம்களிடையே திணித்திடலாம் என அவருடைய கற்பனை கோட்டையை நிறுவிவிட இஸ்லாத்தின் வாயிலாக வருகிறார்.இந்த கற்பனைகோட்டை அந்த மறுமை நாள் வரை இருக்காது இன்சால்லாஹ் வரும் காலங்களில் இவைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் இஸ்லாமிய அறிஞர் களால் தூள் தூளாக்கப்படும்

 7. இறைவன்(?) தந்த செய்தியை அப்படியே தந்துவிட்டுப் போக தூதர் அவசியம் இல்லை. அதை ஒரு தபால்காரன் கூட செய்துவிட்டுப்போவான்,வசனங்களுக்கு விளக்கம் தரவே தூதரை நியமித்திருப்பதாக பி.ஜே.ஓர் உரையில் கூறியுள்ளார். அப்ப இதற்கும் கண்டிப்பாக விளக்கம் இருக்கனுமே? நண்பர் இப்றாஹிம் சொல்வதைப்பார்த்தால் இனிமேல்தான் ஆய்வு செய்து காலத்திற்குத் தகுந்தமாதிரி கதை சொல்ல வேண்டுமோ?

 8. //இன்சால்லாஹ் வரும் காலங்களில் இவைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் இஸ்லாமிய அறிஞர் களால் தூள் தூளாக்கப்படும்.//

  அப்ப இது வரைக்கும் யாரும் இதை பற்றி ஆய்வு செய்யவில்லை என்றே தெரிகிறது. உங்கள் இறைவன் நாடினால் சீக்கிரம் செய்யுங்கள்.1400 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
  1.செத்து பிழைத்தவர் உஜைர் என்று எப்படி கூறுகிறீர்கள்?.

  2.உஜைர்தான் எஸ்ராவா?.

  3. முன் பின் வசன‌ங்கள்(258&260) ஏன இப்ராஹிமை பற்றி கூறுகிறது.இடையில் உள்ள வசனம்(259) மட்டும் எஸ்ரா என்றால் எப்படி?
  உஜைரை முடித்துவிட்டு துல்கர்ணை பார்ப்போம்.நிறைய விஷயங்கள் உள்ளன‌

 9. இதுக்கு சப்பக்கட்டு கட்டுறதுக்கு யாருமே இல்லயா? இந்த முறை கற்பனைக்கோட்டையில விரிசல் ரொம்ப பெரிசா இருக்கும் போலருக்கே.

 10. ஆஹா பதிலுக்கு ஒரு இணையமா?
  நட்துவது யாராக இருந்தாலும் கருத்துகளே முக்கியம்.வரலாற்று ரீதியாக ஆதாரங்கள் அளிப்பார்களா? நாமும் பார்போம்

 11. sankar>>>அப்ப இது வரைக்கும் யாரும் இதை பற்றி ஆய்வு செய்யவில்லை என்றே தெரிகிறது. உங்கள் இறைவன் நாடினால் சீக்கிரம் செய்யுங்கள்.1400 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.,<<<
  சங்கர் சார்,ஆயுவு செய்தவர்தான் வாருங்கள் என்று அழைக்கிறார்.நீங்கள் புறமுதுகு காட்டி ஓடோடி சீனாவுக்கு பக்கத்தில் நின்று கொண்டு இப்படி பேசுவது எங்ஙனம் சரி?உங்கள் மூன்று கேள்விகள் என்ன முப்பது கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் நீங்கள் எங்கு உள்ளீர்கள் ?வரும் 21 .10 ஞாயிறு அன்று தூத்துக்குடியில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ;என்ற பிற மத,இச நண்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற இருக்கிறது இன்சா அல்லாஹ்.தாங்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்கள் ஓட்டைகளை சரிசெய்து கொள்ளுங்கள்

 12. vaanam>>>இதுக்கு சப்பக்கட்டு கட்டுறதுக்கு யாருமே இல்லயா? இந்த முறை கற்பனைக்கோட்டையில விரிசல் ரொம்ப பெரிசா இருக்கும் போலருக்கே,<<>>முஹம்மது நபி[ஸல்] அவர்கள் கொண்டு வந்த வாழ்வியல் பற்றி விமர்சிக்க வழி இல்லாததால் .சாதாரண மர மண்டைகள் கூட கேட்கக்கூடிய கடவுள் கருப்பா சிவப்பா அடிப்படையிலான கேள்விகளை பெரிய அறிவு ஜீவியாக ஆராய்ச்சியாளராக காட்டிக்கொண்டு கம்யுனிசத்தை முஸ்லிம்களிடையே திணித்திடலாம் என அவருடைய கற்பனை கோட்டையை நிறுவிவிட<<<
  இதுக்கு சப்பக்கட்டு கட்டுறதுக்கு யாருமே இல்லயா வானம்,

 13. //இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ;என்ற பிற மத,இச நண்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற இருக்கிறது இன்சா அல்லாஹ்.தாங்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்கள் ஓட்டைகளை சரிசெய்து கொள்ளுங்கள்//

  நான் தமிழ்நாட்டில்தற்சமயம் இல்லாத காரணத்தினால் வர இயலாது.தங்கள் அழைப்புக்கு நன்றி.அங்கே என்ன நடந்தாலும்,பி ஜே வின் இணைய தளத்திலோ அல்லது தொ(ல்)லைக் காட்சியிலோ வந்துவிடும். பார்க்கிறேன்..

 14. >>>இந்த இரண்டு அத்தாட்சிகளும் இனிமேல் தான் வெளிப்படுத்தப்படவிருக்கின்றன, அல்லது தகுந்த காலம் வந்ததும் அல்லா அவைகளை வெளிப்படுத்துவான் என இஸ்லாமியர்கள் தமக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ள‌ விரும்புவார்களாயின், அதற்கு எதிராகவும் குரானில் ஒரு அத்தாட்சி இருக்கிறது<<>>மறுமை நாளில் இறைவன் தூளாக்குவது வரை இருக்கும் என்கிறார். எங்கே இருக்கிறது இந்த இடம்? <<<
  செ.கொ சார்,,,
  முதலில் கூறிய இரண்டு அத்தாட்சிகளுக்கும் காரணம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது மலைகளுக் காண அத்தாட்சியை எங்கே ?உலகம் முழுவதும் மனிதர்களின் கண் களுக்குள் வந்துவிட்டதே செம்புமலையை எங்கே என்று கேட்கிறீர்கள்.அந்த செம்புசுவர் அன்று யஜுஜ்,மஜுஜ் களிடமிருந்து அந்த மக்களை காப்பாற்றியது.இன்று அதன் தேவை இல்லை .மனிதனின் கண்களில் செம்பு காணப்பட்டால் அது சுரண்டப்பட்டிருக்கும் அதனால் அந்த இறுதி நாள் வரை அந்த மலைகளும் இடையே உள்ள செம்பு சுவரும் மண்ணுக்குள் புதைந்து கடைசிநாள் வரை காப்பாற்ற செய்யப்பட்டிருக்கும். இல்லை எனில் மனிதனால் அறிய முடியாதவாறு செம்பு சுவர் கற்களால் சூழப்பட்டிருக்கும்

 15. இஸ்லாமியர்களின் இஸ்லாம் என்கிற கற்பனைக்கோட்டையை, அறிவு என்னும் அணுக்குண்டு போட்டு செங்கொடி அழித்து விடுவாரோ! என்று பயமாக உள்ளது. இஸ்லாமிற்கு செங்கொடி, சங்(கு)கொடி போர்த்தி விடுவாரோ! என்று பயப்படுகிறேன். வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் அருமை. மாற்று மத மக்கள் அனைவரும் கற்பனை இஸ்லாமை பற்றி குறிப்பெடுக்கும் நூலகமாக இந்த தளம் உள்ளது. தமிழ்நாட்டு இமாம்கள் நபியை பற்றி பொய்யை சொல்லியே, காலத்தை ஒட்டி பிழைப்பு நடத்திவிட்டார்கள். இதையெல்லாம் இனிதான் ஆய்வு செய்ய வேண்டும். பதில் கிடைக்க சில வருடம் ஆகலாம். சகோதரர் பி.ஜே ஆய்வு செய்து அவர் தளத்தில், ஒரு சப்பை விளக்கம் எழுதுவார். உடனே இங்குள்ளவர்கள் அதை வெட்டி, தங்கள் பதில் போல இங்கு ஒட்டுவார்கள். அதுவரை பொறுமை காக்கவும். செங்கொடி அவர்களே! அடுத்த தலைப்புக்கு போங்கள். நீங்கள் எழுதிய இந்த உண்மைக்கு சகோதரர் பி.ஜே தளத்தில் விதண்டாவிதமான விடையோ விளக்கமோ இல்லை.

 16. நண்பர் இப்ராஹிம்,
  நீங்கள் கூறுவது
  1.//இறுதி நாள் வரை அந்த மலைகளும் இடையே உள்ள செம்பு சுவரும் மண்ணுக்குள் புதைந்து கடைசிநாள் வரை காப்பாற்ற செய்யப்பட்டிருக்கும்.//

  2.//இல்லை எனில் மனிதனால் அறிய முடியாதவாறு செம்பு சுவர் கற்களால் சூழப்பட்டிருக்கும்.//

  தோழர் கூறியது

  1.//ஆம். இந்த இரண்டு அத்தாட்சிகளும் இனிமேல் தான் வெளிப்படுத்தப்படவிருக்கின்றன, அல்லது தகுந்த காலம் வந்ததும் அல்லா அவைகளை வெளிப்படுத்துவான் என இஸ்லாமியர்கள் தமக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ள‌ விரும்புவார்களாயின், அதற்கு எதிராகவும் குரானில் ஒரு அத்தாட்சி இருக்கிறது. மேற்கண்டவைகளைப் போல அத்தாட்சியாக வைத்திருக்கிறோம் என்று பொதுவாகக் குறிப்பிடாமல் இன்னும் தெளிவாகவே அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.//

  2.//இந்த வசனத்தில் கிருபை(கருணை) என்று கூறப்படுவது அத்தாட்சியையும் இறைவனின் வாக்குறுதி என்பது மறுமை நாள் அதாவது இறைவன் உலகை அழிக்கும் நாளையும் குறிக்கும். அந்த அத்தாட்சியானது வெளிப்படுத்திக்காட்டவேண்டிய அவசியமின்றி உலக அழிவு நாள் வரை இருந்து இறைவனால் அழிக்கப்படும் என்றும் அந்த வசனம் கூறுகிறது. என்ன அந்த அத்தாட்சி?//

  அ)குரானின் படி அது மனிதர்களுக்கு துன்கர்னைன் காலத்தில் இருந்து அத்தாட்சியாக விளங்கி மறுமை நாளில் தூள்தூளாக்கப் படும் என்று கூறப்பட்டு உள்ளதா?(தோழரின் க்கூறு)

  ஆ)துல்கர்னைன் காலத்தில் மட்டும் வெளிப்படையாக இருந்து பிறகு கற்களால் மறைக்கப் பட்டு பிறகு மறுமை நாளில் வெளிப்பட்டு தூள் தூளாக்கப் படும் என்று உள்ளதா?.(உங்களின் விளக்கம்)

  இ) துல்கர்னைன் காலத்திற்கு பிறகு அது எப்போது மறைக்க்கப் பட்டது?.அந்த அத்தாட்சியை துல்கர்னைன் காலத்திற்கு பிறகு யாராவது வராற்றில் பார்த்ததாக ஆதாரம் உண்டா?(என்னுடைய கேள்வி)

  ஈ)நீங்கள் கூறுவது(அத்தாட்சிகள் மறந்து வெளிவருவதூ) குரானில் அல்லது ஹதிதில் கூறப்பட்டு உள்ளதா?(அனைவரின் விருப்பம்)

 17. //இஸ்லாமியர்களின் இஸ்லாம் என்கிற கற்பனைக்கோட்டையை, அறிவு என்னும் அணுக்குண்டு போட்டு செங்கொடி அழித்து விடுவாரோ! என்று பயமாக உள்ளது. இஸ்லாமிற்கு செங்கொடி, சங்(கு)கொடி போர்த்தி விடுவாரோ! என்று பயப்படுகிறேன். //

  நண்பர் தில்லு துரை வணக்கம்

  எந்த மதமுமே விமர்சந்த்தினால் அழிந்தது இல்லை.விமர்சன்ங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளம்.காலத்திற்கு ஒவ்வாத,மனித நேய விரோதக்,இனவெறி சார்ந்த கருத்துகள் காணாமல் போய் விடும்.

  அரசியல்,பொருளாதார ஆதரவு இல்லாமல் போகும் போதும்,பிற மதங்களின் தாக்கம் அதிகரிக்கும் போது கூட அதன் தனித்தன்மையை கொஞ்சம் கொஞமாக இழக்கும்.

  நமது நாட்டில் புத்த மதம் அழிந்தது அரசியல் அதரவு இழந்த்தாலும்,அதன் கருத்துகளை பிற மதங்களும் ஏற்றததும்தான்.

  நாம் இந்தியாவில்,தமிழகத்தில்,உள்ள இணையம் பயன்படுத்தும் ,இஸ்லாமின் ஒரு பிரிவின்ரிடம் மட்டுமே வாதம் செய்கிரோம் .அவ்வளவுதான்.

 18. சுவரை பற்றி மறைந்துவிட்டது என்றும் பிறகு மறுமை நாளில் தோன்றி தூள் தூள் ஆக்கப் படும் என்று கூறுகிறார்கள் அது குரானின் வசனத்திற்கு ஏஎற்புடையதா என்ற கேள்விக்கு அவர்கள் விடை அளிக்கட்டும்

  நாம் யார் அந்த யஃஜூஜும், மஃஜூஜும் கூட்டத்தார்கள் என்பதை பற்றியும் அவர்களை குரான்,ஹதிது வேறு எங்காவது குறிபிடுகிறதா என்பத்னையும் பார்ப்போம்.

  குரான் அவர்களை இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறது

  18:94. அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

  21:96. யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.

  ஹதிது பத்து இடங்களில் குறிபிடுகிறது.

  593. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  “யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்.”
  என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
  “கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஷுஅபாவின் அறிவிப்பு கூறுகிறது. மேலேயுள்ள முதல் அறிவிப்பே பெரும்பாலோரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  3346. நபி(ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்
  நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுததுள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்..” என்று பதிலளித்தார்கள்.

  3347. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
  நபி(ஸல்) அவர்கள், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்துவிட்டான்” என்று கூறி தம் கையால் (அரபி எண் வடிவில்) என்று மடித்துக் காட்டினார்கள்.”

  3348. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, ‘ஆதமே!” என்பான். அதற்கு அவர்கள், ‘இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், ‘நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம்(அலை) அவர்கள், ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு அவன், ‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)” என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்” (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘அல்லாஹுஅக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)” என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)” என்று கூறினோம். உடனே அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) ‘அல்லாஹ் அக்பர்” என்று கூறினோம். அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), ‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.
  என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

  3598. ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்.
  நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குப் பேரழிவு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜுஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, தம் பெருவிரலாலும் அதற்கு அடுத்துள்ள விரலாலும் வளையமிட்டுக் காட்டினார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே நல்லவர்கள் (வாழ்ந்து கொண்டு) இருக்க (இறைவனின் தண்டனை இறங்கி) நாங்கள் அழிந்து போவோமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்! பாவங்கள் அதிகரித்துவிட்டால் (தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்தே அழிக்கப்படுவார்கள்)” என்று பதில் கூறினார்கள்.

  5293. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தின் மீதிருந்தபடி (புனித கஅபாவைச்) சுற்றி வந்தார்கள். அந்த (‘ஹஜருல் அஸ்வத்’ கல் இருக்கும்) மூலைக்கு வரும்போதெல்லாம் அதனை நோக்கி (தம் கையிலுள்ள ஒரு பொருளினால் முத்தமிடுவது போல்) சைகை செய்தபடி ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள். ஸைனர்(ரலி) கூறினார்.
  நபி(ஸல்) அவர்கள் ‘யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இதைப் போல் (சிறிது) திறக்கப்பட்டது’ என்று கூறி தம் கையால் 90 என்று (அரபி எண்வடிவில்) மடித்துக் காட்டினார்கள்.

  6530. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
  (மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) ‘ஆதமே!’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் ‘(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்’ என்று கூறுவார்கள்.
  அப்போது அல்லாஹ் ‘(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்’ என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு அவன் ‘ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)’ என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகிற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.
  இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே, அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(பயப்படாதீர்கள்;) நற்செய்தி பெறுங்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாக பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்’ என்று கூறிவிட்டுப் பிறகு, ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கவேண்டும் என்று நான் பேராவல் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழக்கமிட்டோம். பிறகு, நபி(ஸல்) அவர்கள் ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இருக்கவேண்டுமென நான் பேராவல் கொள்கிறேன். மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று, அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள்’ என்றார்கள்.
  என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.111

  7059. ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்.(ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபுகளுக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது. -அறிவிப்பாளர் சுஃப்யான்(ரஹ்) அவர்கள் (‘இந்த அளவிற்கு’ என்று கூறியபோது, தம் கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக் காட்டினார்கள்.
  அப்போது ‘நல்லவர்கள் நம்மிடையே இருக்கும் போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?’ என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம். தீமை பெருத்துவிட்டால்’ என்று பதிலளித்தார்கள்.10

  7135. ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார். ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடுக்கத்துடன் என்னிடம் வந்து, ‘வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்கு இன்று றக்கப்பட்டுள்ளது’ என்று சொல்லி, தம் கட்டை விரலையும் அதற்கடுத்த விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே நல்லவர்கள் இருக்க, நாங்கள் அழிந்துபோவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; தீமை பெரும்விடும்போது’ என்றார்கள்.67

  7136. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
  யஃஜூஜ் மற்றும் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவர் இந்த அளவிற்குத் திறக்கப்படுகின்றது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.அறிவிப்பாளர்களில் ஒருவரனா வுஹைப் இப்னு காலித்(ரஹ்) அவர்கள் (அரபு எண்) தொண்ணூறு என்பதைப் போன்று (விரல்களை) மடித்துக் காட்டினார்கள்.

  முகமதுவின் காலத்தில் அந்த சுவர் கொஞ்சம் திறந்தாக ஹதிது கூறுகிறது.

  யார் அவர்கள்?.அவர்களை கண்ண்டு ஏன் எல்லோரும் அஞ்சினர்?

  முகமதுவின் காலத்தில் அந்த சுவர் எல்லாருக்கும் பார்வையிலிருந்ததால் மட்டுமே இவ்வாறு கூற முடியும்.

  அப்ப சுவர் எங்கே?

  வரலாற்றில் இந்த யஃஜூஜ் மற்றும் மஃஜூஜ் கூட்டத்தை பற்றியும் பார்ப்போம்.
  (தொடரும்)

 19. //அரேபியாவில் இஸ்லாத்துக்கு முன் என்ன மதம் இருந்தது!//

  இது சம்பந்தமான உரையாடலை வேறு பதிவில் வைத்துக்கொள்வோம். இப்பதிவில் அலசியிருக்கும் துல்கர்னைன் சுவர், குர் ஆனில் இருக்கும் ஓட்டைகளிலேயே மிகப்பெரும் ஓட்டை. நாம் வேறு விஷயங்களை பேசினால், துல்கர்னைன் சுவரை பற்றி பேசுவதை விடுத்து வேறு பக்கம் சென்று விடுவர்.

  இரும்பாலும் செம்பாலும் கட்டப்பட்ட சுவர், இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருப்பதை காட்டினால் மட்டுமே அந்த வசனம் உண்மை என்றாகும். அதிலும், துல்கர்னைனின் கதையை அல்லாஹ்வே முகம்மதிடம் கூறி, மக்களிடம் கூறச் சொல்லியுள்ளதாக வசனம் வருகின்றது. அப்படி இருக்கும்பொழுது அப்படி ஒரு சுவர் இல்லை என்பது, இந்தக் கதையே முகம்மது இட்டுக்கட்டி கூறியது என்பதை நிரூபித்துவிடும்.

  சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்தித்துக்கொள்ளட்டும்.

 20. //துல்கர்னைன் சுவர், குர் ஆனில் இருக்கும் ஓட்டைகளிலேயே மிகப்பெரும் ஓட்டை. //

  சுவர்ல கூட அரபி அண் 90 மாதிரி ஓட்டைனு ஹதிதில் முகமது உரைக்கிறார். அரபி தெரிந்த நண்பர்கள் 90க்கு எப்படி கையில் சைகை செய்வது என்று கூறினால் நன்றாக இருக்கும்.

  வடிவேலு ஒரு படத்தில் என் கிணத்தை கானோம்னு சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது

 21. //சுவர்ல கூட அரபி அண் 90 மாதிரி ஓட்டைனு ஹதிதில் முகமது உரைக்கிறார்//

  ||இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுததுள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள்.||

  அவர் குறிப்பிட்டுள்ளது வட்ட வடிவத்தை குறிப்பதாக இருக்கும். அதனுடைய அளவை குறிக்கத்தான் கட்டை விரலையும் (பெரு விரல்), ஆட்காட்டி விரலையும் வளையம் போல் அமைத்துக் காட்டியுள்ளார்.

 22. முகமது மெக்காவில் இருந்த போது,யூத குருமார்கள் முகமதுக்கு அவர் இறை தூதரென்றால் இந்த மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்க வேஎண்டும் என்று கூறினர்.அந்த கேள்விகள்.

  1.ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன?

  2.கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன?

  3.ஆன்மா என்பது என்ன?

  முகமதுக்கு கேள்விகள் கேட்கப் பட்டு 15 நாட்கள் கழித்து ஜிப்ரயீல் பதில் கொண்டு வருகிறார் அதுதான் 18 வது சூரா குகை.

  இதில் இரண்டாவது கேள்விக்கு பதில்தான் துல்கர்னைன் என்பது. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லப் பட்டதாகவும் யூதர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.

  கேள்விக்கு ஒரு வார்த்தையில் ‘துல்கர்னைன்’ என்று ஜிப்ரயில் பதில் சொல்லியிருந்தால் பிரச்சினையே இல்லை ஒரு வார்த்தையில் பதிலளிக்க கேள்விக்கு துல்கர்னைன் சரித்திரத்தையே சொல்கிறேன் என்று இரும்பும் செம்பும் கலந்த சுவரை ம்லைகளுக்கு இடையில் கட்டினார் என்று சொல்லி
  இப்படி முகமதுவை மாட்டி விட்டு விட்டார்.

  நமக்கு சுவரை காணவில்லை என்று அதிர்ச்சி.யாரை கேட்பது?.

  முகமதுக்கு பதில் தெரியாது.ஜிபரயீல் சொன்னதை அப்படியே சொல்லி விட்டார். அவருக்கு சுவர் இருந்ததே தெரியாது.சுவரில் ஓட்டை(சின்னதுதான்) விழுந்ததை கூட கனவிலதான் கண்டார்.

  இதனை தவிர குரானிலோ ஹதிதிலோ இதை பற்றி ஏதாவது குறிப்பு இருக்கிறதா?

  அந்த சுவர் எங்கே என்று தெரிந்த ஒரே ஆள்(?) ஜிப்ரயீல்தான்.

  எங்களுக்கு தெரியாது என்று இஸ்லாமிய நண்பர்கள் ஒத்துக் கொள்வார்களா?

 23. அலெக்சாண்டரின் சுவர்

  இந்த சுவ‌ரைத் தேடி அலைந்த போது கண்ணில் பட்டது ஒரு விக்கிபீடியா பட்டம். இது இரு மலைகளுக்கு இடையே கட்டப் பட்ட சுவர் அல்லது கோட்டை பற்றி குறிபிடுகிறது.

  இந்த விளக்கமானது இரண்டு இடங்களுக்கு பொருந்துகிறது.

  1.காஸ்பின் சுவர் டெர்பென்ட் இரஷ்யா
  http://en.wikipedia.org/wiki/Gates_of_Alexander

  2.டேரிஅல் ஜார்ஜ் (இரஷ்யாவிற்கும் ஜார்ஜியாவிற்கும் இடையில் கஸ்பெக் மலை அடிவாரத்தில்)
  http://en.wikipedia.org/wiki/Pass_of_Dariel

  http://en.wikipedia.org/wiki/Alexander_in_the_Qur'an

  இந்த சுவர்கள் அலெக்சாண்டரால் கட்டப் பட்டதாக நம்பப்பட்டாலும் அது பாரசீக மன்னர்களால் கட்டப் பட்டது.

  இது செம்பும் இரும்பும் கலந்து கட்டப் படவில்லை.

  இரண்டு சுவர்களும் மிகவும் சிதிலமடைந்து இடிபாடுக்களுக்கிடையில் காணப்படுகிறது.

  உமர் கால்த்தில் காஸ்பின் சுவரை வந்து பார்த்ததாகவும்,அப்பாசித் வம்சத்தின் புகழ் பெற்ற அரசர் ஹாரூன் அல் இரஷித்(ஆயிரதொரு இரவுக் கதைகள் இவர் காலத்தில்தான் எழுதப் பட்டது) இங்கு வந்து சில காலம் தங்கி இருந்ததாக கூட கதைகள் உண்டு.

 24. ஒரு தடையம் சுவ‌டே காணோம்.பதிலுக்கு இணையம் தொடங்கினார்களேன்றால் அதிலேயும் மறுப்பே வர வில்லையே?.

 25. //ஒரு தடையம் சுவ‌டே காணோம்.பதிலுக்கு இணையம் தொடங்கினார்களேன்றால் அதிலேயும் மறுப்பே வர வில்லையே?//

  சோற்றிலே முழுப்பூசணியை மறைப்பது போல், மத நம்பிக்கையிலே மலையளவு சுவற்றை மறைப்பது என்பது இதுதான்.

  சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள். அதுபோல், பூமியில் அந்த சுவர் இருந்தால்தானே மறுப்பு வரும்.

 26. //ஒரு தடையம் சுவடே காணோம்//
  கற்பனைக்கொல்லாம் தடையம் கேட்டால் பாவம் அவர்கள் எங்கு செல்வார்கள்?

 27. //கற்பனைக்கொல்லாம் தடையம் கேட்டால் பாவம் அவர்கள் எங்கு செல்வார்கள்?//
  வணக்கம் ரஃபி,
  பொதுவாக இந்த மத வா(வியா)திகள் எங்கள் புத்தகத்தில் அறிவியல் இருக்கிறது, ஆதாரம் இருக்கு என்று அடித்துடக் கூறுவதும்,அதனை கேட்டு அவர் இர்சிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதும் கண் கொள்ள‌ காட்சி.எல்லா ஆட்களும் ஒரே ச்மயத்தில் சும்மா இருக்கரதை பார்த்தால் எல்லாரும் ஒரே குழு என்ற எண்ணம் வருகிறது.

  ஒருவேளை நேரிலே போயிருந்தா சுவ‌ர காமித்திருப்பார்களோ.

 28. வணக்கம் சங்கர்,

  எங்கள் வேதம் அறிவியல் புத்தகம் அல்ல என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே இது அறிவியலை மெய்ப்பிக்கிறது என இன்னொரு பக்கம் மத வியாபாரம் C.D. போட்டு படு ஜோரா நடந்து கொண்டிருக்கின்றது. இவர்களின் அறிவியல் பிஃர்அவுன்,தேன்,கடல் நீர் தடுப்பு,நட்சத்திரம்,சூரியன்,ச்ந்திரன்,மலைய நட்டு வச்சது,வானத்த விரிச்சிவச்சது, போன்ற ஏட்டுச்சுரைக்காய் கதையாகவே இன்னும் இருந்து வருவதை உணராமல் பெருமையடிப்பதில் தான் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். 2011 லாவது சிந்தித்துப்பார்ப்பார்களா?

 29. sankar>>>இ) துல்கர்னைன் காலத்திற்கு பிறகு அது எப்போது மறைக்க்கப் பட்டது?.அந்த அத்தாட்சியை துல்கர்னைன் காலத்திற்கு பிறகு யாராவது வராற்றில் பார்த்ததாக ஆதாரம் உண்டா?(என்னுடைய கேள்வி)

  ஈ)நீங்கள் கூறுவது(அத்தாட்சிகள் மறந்து வெளிவருவதூ) குரானில் அல்லது ஹதிதில் கூறப்பட்டு உள்ளதா?<<<.
  ஆப்கானில் அதிகமாக கனிம வளங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.{அதற்காகத்தான் தாலிபான் தீவிர வாதம் என்ற பெயரில் அமெரிக்கா அங்கு ஆக்ரமித்துள்ளது}. பாதுகாக்கப்படுகிறது என்றால் அது மறைக்கப்பட்டு பின்னர் வெளியாகும் என்பதுதான் பொருள்.அந்த நாள் வரும் வரை நீவிர் இருந்தால் அதை காணக்கூடும்

 30. இப்ராஹிம்,
  துல்கர்னைன் என்ற அலெக்ஸாந்தர் ஒரு முஸ்லீம் என்று குரான் சொல்லுகிறதே. ஆனால் அலெக்சாந்தர் எகிப்து தெய்வங்களிலிருந்து பெர்சிய தெய்வங்களை வரை எல்லாவற்றையும் கும்பிட்டவர் என்று வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றனவே. ஏன் இதில் குரான் பொய்யானது?

 31. //ஆப்கானில் அதிகமாக கனிம வளங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.{அதற்காகத்தான் தாலிபான் தீவிர வாதம் என்ற பெயரில் அமெரிக்கா அங்கு ஆக்ரமித்துள்ளது}. பாதுகாக்கப்படுகிறது என்றால் அது மறைக்கப்பட்டு பின்னர் வெளியாகும் என்பதுதான் பொருள்.அந்த நாள் வரும் வரை நீவிர் இருந்தால் அதை காணக்கூடும்//
  வணக்கம் நண்பர்
  இப்ராஹிம் மறைக்கப் படும் என்று எங்கு கூறப் பட்டு உள்ளது?.

  திரு முகமது காலத்தில் சுவரில் சின்ன ஓட்டை விழுந்த்தை கனவில் கண்டார். அப்போதும் மறைந்து இருந்ததா?. நடுக்கத்துடன் கூறினார் என்றால் அது அப்போது தெரிந்ததாக இருந்தது என்றுதானே விளக்கம்.பிறகு எப்போது பாதுகாக்கப் பட்டது?.

  ஆப்கனில் கனிம வளம் இருப்பதும் முன்னறிவுப்பு செய்யப் பட்டதா?

  அமெரிக்கா காரன் பண்றது அநியாயம். ஊரை அடித்து உலையில் போடுபவன். அது குறித்து வேறு பதிவுகளுக்கு வாருங்கள் விவாதிப்போம்.

 32. /துல்கர்னைன் என்ற அலெக்ஸாந்தர் ஒரு முஸ்லீம் என்று குரான் சொல்லுகிறதே. ஆனால் அலெக்சாந்தர் எகிப்து தெய்வங்களிலிருந்து பெர்சிய தெய்வங்களை வரை எல்லாவற்றையும் கும்பிட்டவர் என்று வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன//
  தோழர் அஜீஸ் வணக்கம்,
  அலெக்சாண்டரின் வம்ச மக்கள் ஆப்கானிஸ்தான்‍‍‍_பாகிஸ்தான் எல்லையில் வாழ்கிறார்கள்.இன்னும் அவர்களின் மத,கலாச்சாரங்களை பின்ப்ற்றுகிறார்கள்.
  தோழர் கலையரசனின் பதிவை பாருங்கள்

  http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_23.html

 33. >>.>துல்கர்னைன் என்ற அலெக்ஸாந்தர் ஒரு முஸ்லீம் என்று குரான் சொல்லுகிறதே.<<<
  இஸ்லாத்தை விட்டு பிரிந்தாலும்,அரபு மொழி மீது பிரியா காதல் கொண்ட வல்லோனின் அடிமை என பொருள் தரும் அப்துல் அஜீஸே| குர்ஆனில் துல்கர்னைன் என்ற அலெக்சாந்தர் முஸ்லிம் என்று எங்கே கூறப்பட்டுள்ளது?

 34. sankar இறைவன் பாதுகாப்பு என்றால்இருமலைகளும் செம்புசுவரும் மறைக்கப்பட்டிருக்கும்.
  ஆப்கானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமவளங்கள் அந்த செம்புசுவராக இருக்கலாம்.
  மக்களுக்கு அச்ச மூட்டி எச்சரிக்கை விடுவதற்காக இறைவனால் முஹம்மது நபி[ஸல்]அவர்களுக்கு கனவில் காட்டப்பட்டிருக்கும்

 35. //இறைவன் பாதுகாப்பு என்றால்இருமலைகளும் செம்புசுவரும் மறைக்கப்பட்டிருக்கும்.//
  திரு பிஜே அவர்களின் மொழி குரான் மொழி பெயர்ப்பு உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறதா?

  18:94. ‘துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக் கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?’ என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர்.
  95. ‘என் இறைவன் எனக்கு அளித்தி ருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்கு மிடையே தடுப்பை அமைக்கிறேன்’ என்றார்.
  96. (தனது பணியாளர்களிடம்) ‘என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!’ என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ‘ஊதுங்கள்!’ என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். ‘என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்’ என்றார்.
  97. அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது.
  98. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.

  எப்படி ஒத்துக் கொள்கிறது?அல்லது வேறு வசனம் கூறுங்கள் விவாதிப்போம்.
  ______________________________________________________________

  //ஆப்கானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமவளங்கள் அந்த செம்புசுவராக இருக்கலாம்.//
  கனிம வளங்கள் பற்றி இன்னும் கொஞ்சம் தகவல்கள் தாருங்கள்.
  ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________________________________
  மக்களுக்கு அச்ச மூட்டி எச்சரிக்கை விடுவதற்காக இறைவனால் முஹம்மது நபி[ஸல்]அவர்களுக்கு கனவில் காட்டப்பட்டிருக்கும்.

  97ஆம் வசனத்தை கவனிக்கவும். ஓட்டை அவர்களால் போட முடியாது என்றால்.திரு முகமது ஓட்டை விழுந்ததை கனவில் கண்டது எப்படி.

  திரு முகமதுவின் கனவுகளும் இறவனின் வெளிப்பாடுகளாக எடுத்துக் கொள்ளப் படுமா?
  ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________________
  //குர்ஆனில் துல்கர்னைன் என்ற அலெக்சாந்தர் முஸ்லிம் என்று எங்கே கூறப்பட்டுள்ளது//
  98ஆம் வசனத்தை குறிக்கவும்.துல்கர்ணைன் முஸ்லிம் இல்லை என்றால் யார் இந்த இறைவன்?. அவர்தான் மறுமை நாளில் மலையை தூள்தூள் ஆக்குவாரா?

 36. இப்ராஹிம்

  //
  இஸ்லாத்தை விட்டு பிரிந்தாலும்,அரபு மொழி மீது பிரியா காதல் கொண்ட வல்லோனின் அடிமை என பொருள் தரும் அப்துல் அஜீஸே| குர்ஆனில் துல்கர்னைன் என்ற அலெக்சாந்தர் முஸ்லிம் என்று எங்கே கூறப்பட்டுள்ளது?//

  98ஆம் வசனத்தை படியுங்கள். சங்கரும் நவம்பர் 27ஆம் தேதி கேட்டிருக்கிறார்.

  உங்கள் பதிலை காணவில்லையே.. இதன் மூலம் குரான் முகம்மது இட்டுக்கட்டியது என்று தெளிவாகிறதல்லவா?

  பொய்யாக தன்னை இறைதூதர் என்று கூறிகொண்ட பிராடு மனிதரின் பின்னால் சென்ற பாவம் உங்கள் மீதும் உங்கள் குடுமபத்தின் மீதும் நிரந்தரமாக இருக்கும்.

 37. துல்கர்னைன் ]இது என் இறைவனின் அருள்.என் இறைவனின் வாக்கு நிறைவேறும்போது இதை அவன் துளாக்கிவிடுவான்.என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது.என்றார். இப்படித்தான் 98.வது வசனம் கூறுகிறது.இதில் அலக்சாண்டர் எங்கே வருகிறார்.
  முஹம்மது நபி [ஸல்]அவர்களின் உபயத்தால் அப்துல் அஜிஸ் என்று பெயர் வைத்துள்ள நய வஞ்சகரே இந்த வசனம் அலெக்சாண்டரை குறிப்பிடுகிறது என்று பிராட் பண்ணுவது நீவீரும் சங்கரும் அல்லவா? நான்கு குருடர்கள் யானையப் பார்த்து கதை சொன்னதுபோல் உளறுவதை நிறுத்தி கொள்ளுங்கள்.

 38. // இந்த வசனம் அலெக்சாண்டரை குறிப்பிடுகிறது என்று பிராட் பண்ணுவது நீவீரும் சங்கரும் அல்லவா?//

  இதைத்தான் எதிர்பார்த்தேன்.

  அலெக்சாண்டரும் துல்கர்னைனனும் ஒன்றா ?

  துல்கர்னைன் அலெக்சாண்டர் என்றால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க இதுதான் ஒரெ வழி.

  அ) சரி யார் அந்த துல்கர்னைன்?

  ஆ)சரி யார் அந்த யஃஜூஜ், மஃஜூஜ் மக்கள்?

  இ) எங்கே அந்த சுவர்?

  இதே போல் உஜைர் என்பவர் எஸ்ரா இல்லை என்று சொல்லி விட்டால் பிரச்சினை முடிந்தது.

  இப்படி சொல்ல முடியும் .ஏனென்னில் குரனில் குறிப்பிடப்படும் பலரை வரலாற்றில் இவர்தான் என்று அறுதியிட்டு கூறவே முடியாது.

  குரான் குறிப்பிடும் பலர் அதன் முந்தைய வேதங்களான பைபிள்,மற்றும் தோராவில மட்டுமே குறிப்பிடப் படுபவர்கள்.

  மற்ற சான்றுகள் எதுவுமே இல்லை.

  ஆகவே நம் இவர்கள் அனைவருமே கற்பனை பாத்திரங்கள் என்று கூறினால் கூட அவர்களால் மறுக்க முடியாது.

  ஆகவே இந்த புத்தகத்தில் குறிப்பிடும் மனிதர்கள்,சம்பவங்கள் எல்லாம் கற்பனையே ,யாரையும் குறிப்பிடிவது இல்லை என்று ஒரு அறிவ்ப்பு முதல் பக்கத்தில் கொடுத்து விட்டால் நாம் ஏன் கேட்கப் போகிறோம்?

  ஆத்ரபூர்வமான வரலாற்றின் முன்னால் எல்லா மத்ங்களின் புராணக் கதைகள் எடுபடாது என்பதற்கு இந்த பதிலே சாட்சி.

 39. http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/374/

  374. துல்கர்னைன் நபியா?

  இவ்வசனத்தில் (18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப் படுகிறது. இவர் இறைத் தூதரா? இறைத் தூதராக இல்லாத நல்ல மனிதரா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
  யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தி னருக்கும், மக்களுக்கும் மத்தியில் தடுப்பை ஏற்படுத்திய துல்கர்னைன் அவர்கள் இத்தடுப்பு யுக முடிவு நாள் வரை நிலைத்திருக்கும் எனவும், யுக முடிவு நாள் ஏற்படும் போது தடுப்பு தூள் தூளாக்கப்பட்டு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியே வருவார்கள் என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு இறைத் தூதரால் தான் கூற முடியும். எனவே துல்கர்னைன் இறைத் தூதர் என்று கூறும் அறிஞர்கள் இவ்வசனத்தை அதற்குச் சான்றாகக் கொள்கின்றனர்.
  _____________________________
  1. துல்கர்னைன் ஒரு மன்னர் என்று பி ஜே எப்படி கூறுகிறார்?

  2. துல்கர்னைன் யார் என்றே சொல்லாமல்(தெரியாமல்) அவர் இறைத்தூதராக இருக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர் என்று சொல்கிறார்.

  3. யுக முடிவு நாள் வர நிலைத்திருக்கும்,(மறைக்கப் பட்டு இருக்காது) என்று பி ஜே கூறுகிறார்.அப்படி என்றால் சுவர் எங்கே?

  4. மனிதர்கள் விமான்னங்களை கண்டு பிடிப்பார்கள் அதன் மூலம் எவ்வளவு உயரமான மலையையும் தாண்டி விடலாம் என்பது இறைதூதரான துல்கர்னைனுக்கு தெரியாதா?

  5.இறைவன் துல் கர்னைனுடன் எந்த வகையிலும் தொடர்பு கொன்டதாக குரான் கூறாத போது அவர் எப்படி தான் கட்டிய ஒரு சுவர் யுக முடிவு வரை நிலைத்திருக்கும் என்று கூற முடியும்?

  6. துல்கர்னை கட்டிய சுவரில் ஓட்டை என்று முகமது கூறியது(ஹதிதுபுஹாரி 7136.) குரான் 18:97 ஐ பொய்யாக்குகிறதே. எது சரி.

  7.அலெக்சாண்டர் கட்டியதாக நம்ப படுகிற ஒரு சுவரை (டர்பென்ட் வால்)கலிபா உமர் வந்து பார்த்ததாக வரலாறு கூறுகிறது.உமரும் துல்கர்னைன் அலக்சாண்டர் என்று நம்பினாரோ?

  காஸ்பின் சுவர் டெர்பென்ட் இரஷ்யா
  http://en.wikipedia.org/wiki/Gates_of_Alexander

 40. ஒரு கிறித்தவ இணையத் தளத்தில் இருந்து எடுக்கப் பட்ட கேள்வி பதில்.

  உலகம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது எல்லோருக்கும் தெரியும். இது நிரூபிக்க்ப பட்ட படியால் அனைத்து மதங்களுமே பெரு வெடிப்புக் கொள்கைக்கு ஆதரவாக பேசுவதும் தெரிந்ததே.

  கிறித்தவ மதத்தில் ஆதம் முதல் இயேசு(நம்ம ஈசா நபிதான்) வரை பரம்பரை கதை சொல்வார்கள் அதன் வைத்து ஆதம் தோன்றியது சுமார் 6000 வருடங்களுக்கு முன் என்று ஒரு கால வரிசையும் வெளியிட்டு விட்டார்கள்.

  குரானில் இந்த மாதிரி விவரம் இல்லாததால் அவர்கள் குரான் ஆதம் காலம் பற்றி எதுவும் கூறவில்லை,ஆகவே அறிவியல் முதல் மனிதரன்(கள்) எப்போது பரிணாம முறையில் தோன்றினான் என்று கூறுகிறதோ அப்போதே அல்லா ஆதமை உருவாக்கினார் என்று தப்பித்துக் கொண்டார்கள்.

  முந்தின வேதத்தினர் என்ன சொல்ராங்கன்னு பார்த்தால் உண்மையிலேயே கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு விளக்கம் தருவதில் மூத்தவர்கள்தான்.

  உலகம் தோன்றியது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்தான். ஆனால் ஆதம் படைக்கப் பட்டது சுமார் 6000 வருடங்களுக்கு முன் என்று அடிதுப் பேசுகிறார்கள். ஆதியிலே வனத்தையும் பூமியையும்(மட்டும்) உருவாக்கினார்
  ஆதம் பிறகுதான் என்கிறார்கள்.

  என்ன சொல்ரது?. விளக்கம் சொல்வதில் ஓயாதவர்கள்தான் எல்லா மத்த்தினரும்.
  ___________________________________
  கேள்வி: பூமியானது கிட்டத்தட்ட நான்கு, ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்குமுன் உருவானது என்று உலக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் வேதத்தின்படி 6000 வருடங்களுக்கு முன்புதான் பூமி உண்டானது என்று எங்கள் பாஸ்டர் கூறுகிறார். எது சரி?

  பதில்: உங்கள் பாஸ்டர் கூறுவது தவறு. ஆதியாகமம் 1ம் அதிகாரத்தில் முதல் நாள், இரண்டாம் நாள் என்று எழுதப்பட்டதல்லவா அந்த குறிப்பிட்டநாளிலிருந்து கணக்கிட்டால் 6010 ஆண்டுகள் ஆகிறது.

  பூமியானது ஆதியாகமத்தில் மேலே வாசித்தப்படி அந்த முதல் நாள், இரண்டாம் நாளில் படைக்கப்படவில்லை. அதற்கு முன்பதாகவே படைப்புகள் யாவும் முடிந்துவிட்டது. ஆதி 1:1ம் வசனத்தைப் பாருங்கள். ஆதியிலே பூமி சிருஷ்டிக்கப்பட்டது என்று எழுதியுள்ளது. ஆதியிலே என்றால் Dateless Past தேதியோ, வருடங்களோ நிர்ணயிக்க முடியாத மிக பழைமையான காலமாகும்.

  யோ 1:1ல் ஆதியிலே வார்த்தையிருந்தது என்ற வசனத்தில் வரும் ஆதியிலே என்ற சொல் ஆதியாகமத்தில் வரும் ஆதியிலே என்ற வார்த்தையும் ஒரே பொருளை, அர்த்தத்தை கொடுக்கிறதாக இருக்கிறது. ஆகவே கோடானகோடி ஆண்டுகளுக்கு முன்பே வானமும், பூமியும் படைக்கப்பட்டாயிற்று. நம்முடைய வேதம் மனிதர்களின் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு இசைந்தேபோகிறது.

 41. யார் இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் என்ற ஒரு தேடலுக்கு ஒரு காணொளி யுட்யூபில் பார்த்தேன்.மொத்தம் 10 பாகம் இருக்கிறது.முதலிலேயே இதில் சொல்லப படுவது முழு உண்மை என்று சொல்லி விடுவதால் நமக்கு பிரச்சினை இல்லாமல் போய் விட்டது.
  Part 1:

  பாகம் இரண்டு துல்கர்னைன் பற்றி கூறிகிறது.

  அவர் 200 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு அராபியர் என்று கூறுகிறார்கள். அவர் முஸ்லிமாக இருந்தார் என்றும் கூறுகிறார்கள்.அவர் இப்ராஹிம் நபியின் காலத்தில் வாழ்ந்தாக கூறுகின்றனர். முதல் முறையாக காலம் சுமார் 2000 கி.மு என்று குறிபிடுகின்றனர்

  part 2:

  பாகம் மூன்று சுவரை பற்றி கூறுகிறது.ஜார்ஜியா அருகில் உள்ள டேரியல் கார்ஜ் என்ற கோட்டை மற்றும் சுவரை குறிப்பிடுகின்றது.

  http://en.wikipedia.org/wiki/Darial_Gorge

 42. 2:259. 

  பாழடைந்த நகரை கடக்கும் ஒருவர் இந்நகர் எவ்வாறு மீண்டும் உயிர்பெறும் என வினவினார்.

  Cinematography/Filming

  அந்நபர் நகரில் 100 வயதுவரை(century) உண்டும் உறங்கியும் வந்தார்.அவரது உணவு குடிப்பு முறைகளில் மாற்றமில்லை.ஆனால் அச்சமூகத்தின் பழைய வாகனம் ஒழிந்து போக்குவரத்து/வாகனம் நவீனமயமானது.அந்த நகரின் வாழ்வும்/life style (ஒரு அல்லது அரை நாள் )துரிதப்படுத்தப்பட்டதை விவரிக்கின்றது.

  இந்த நிகழ்வை மனத்திரையில்(screen play )பார்க்க திரைக்கதையாக (script)இங்கு இடம்பெறுகிறது.

  A film, also called a movie or motion picture, is a story conveyed with moving images. It is produced by recording photographic images with cameras, or by creating images using animation techniques or visual effects. The process of filmmaking has developed into an art form and industry.

  quranist@aol.com

 43. http://ariviyalputhaiyalalquran.blogspot.com/
  எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக… ஆமீன்..!!
  மலைப்பகுதியில் வாழ்ந்த யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு பெரும் துன்பங்களை அளித்து வந்துள்ளனர். இதைக் கண்டு செய்வதறியாது நின்ற மக்கள். அப்போது உலகின் அனைத்துப் பகுதியையும் ஆட்சி செய்த மன்னர் துல்கர்ணைன் அவர்களிடம் முறையிட்டனர், அவர் இரும்பைக் காய்ச்சி, அதன் மீது செம்பை ஊற்றியதும், கெட்டியான சுவராக ஆகிpட்டது. கெட்டியான அந்த இரும்புச்சுவருக்குப் பின்புறம் தான் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் உள்ளது என்பது தெரிய வருகிறது. திறந்துவிட்டால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு அலைகள் போல் வருவார்கள் என்பதிலிருந்து அவர்கள் எண்ணிலடங்கா கூட்டம் என்பதும் புரிய வருகிறது.

  இவ்வாறு அவர்கள் அடைத்து வைக்கப்பட்ட பகுதி எங்குள்ளது என்ற விபரம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கூறப்படவில்லை.

  தெரியாமல் இருப்பது ஏன்?

  நவீனக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு அது நடைமுறையில் உள்ள காலம் இது. ஆகாய விமானங்களும். ராடார் கருவிகளும், தொலை நோக்குக் கருவிகளும் என அதி நவீனக் கருவிகள் உள்ள இந்தக் காலத்தில், யஹ்ஜுஜ் – மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வாழும் மலைப் பகுதியயைக் கண்டு பிடிக்கப்படாமல் இருக்க முடியுமா? செம்பை உருக்கி ஊற்றப்பட்டு இரும்புச் சுவர் அமைத்திருக்கும் போது அதன் பளபளப்பைக் கண்டே அவர்களின் இருப்பிடம் அறியலாம் தானே? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

  இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. மனிதனிடம் நவீனச் சாதனங்கள் இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வில்லை என்பது அதைவிட உண்மையாகும்.

  பூமிக்கு அப்பாற்பட்டு நின்று பூமியைப்படம் பிடித்து இருக்கிறார்கள், பூமியின் பரப்பளவைத்தான் கண்டு பிடித்துள்ளார்கள் தவிர, பூமியை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு கருவிகள் பயன்படவில்லை. சில பகுதிகள் இப்போதுதான் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது என்றுதான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மண்ணில் இன்றும் மனிதக்கால்களோ, பார்வையோ படியாத இடங்கள் ஏராளமாக உள்ளன.

  சுக்கிவாய்ந்த கருவிகள் மூலம் பூமி முழுதும் ஆராயப்பட்டாலும் கூட, காடுகளை மேலோட்டமாகத்தான் பார்க்கலாமே தவிர, துல்லியமாக காணமுடியாது. மரமும், செடிகளும் நிறைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.
  உதாரணமாக விஞ்ஞானம் முன்னேறி விட்ட தற்காலத்தில் கூட காடுகளில் மறைந்து இருந்த வீரப்பனையும், ஆப்கனில் மலைகாடுகளில் மறைந்து இருந்த ஒசாமாவையும் கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது அனைவர்க்கும் தெரியும்….. எனவே..

  மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, குகைகளிலோ யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்த கருவிகள் மூலமும் அவர்களைக் காண முடியாது. செம்பு எனும் உலோகம் பாசிபடிந்து பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் அந்த பளபளப்பை கண்டுபிடிக்க முடியாமல் அதை அருகில் இருந்து பார்த்தாலும், தூரத்தில் இருந்து பார்த்தாலும் மலைமேல் புல் வளர்ந்துள்ளது போல் பசுமையாகவே தெரியும்.

  எனவே, எவரது கண்களுக்கு புலப்படாத பகுதியில் அந்தக் கூட்டத்தினர் வாழ்கின்றனர். இனி வருங்காலத்தில் மனிதர்கள் அவர்கள் வாழும் பகுதியை அடைய நேரிடலாம். அந்த நேரமும், மறுமை நாளின் அடையாளமாக, அவர்கள் வெளியேறும் காலமாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் விட மறுமையின் அடையாளமாக அவர்களின் வருகை இருக்கும் என்பதாலேயே அல்லாஹ் மனிதர்களின் பார்வையை விட்டு மறைத்து வைத்திருக்கலாம்…..

  தங்கள் மனதிலும் எண்ணத்திலும் இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துகளை பதித்து கொண்டு பார்த்தால்… நீங்கள் பார்க்கும் அனைத்துமே உங்களுக்கு தவறாக தோன்றும் சகோதரர் அவர்களே… திறந்த மனதோடு பாருங்கள்… எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நேர் வழியை காட்டுவானாக.. ஆமீன்….!!!

 44. அதான் 1.5 பில்லியன் பேரு இருக்கீங்களே, ஆளுக்கு ஒரு பக்கம் போய் தேடினாலும் கண்டு பிடிச்சிரலாமே. அதோட முகமது காலத்துலயே ஒரு ஆள் பாத்துட்டு வந்து முகமதுகிட்ட சொன்னதாகவும், அத முகமதுவும் ஒத்துக் கொண்டதாகவும் அதீஸ் இருக்கே. அப்போ அத ஏற்கனவே ஆள் பாத்துருக்காங்க. தேடி கண்டு பிடிக்க முடியாதது இல்ல. காட்டுக்குள்ளயும் இல்ல. இஸ்லாமிய அறிவியல் எழுதறத வுட்டுட்டு இத கண்டு பிடிச்சீங்க்கண்ணா, இஸ்லாம் உண்மை மார்க்கம்னு அடிச்சி விட்டறலாமுல ? அது மட்டும் இல்லாம யஜூஜ் மஜூஜ் இனத்தவர் 99% மற்றும் மத்தவங்க 1% என்று வேற முகமது விட்டுருக்காரு. அப்போ உலக மக்கள் 7 பில்லியன்னா யஜூஜ் மஜூஜ் 693 பில்லியன் மலைக்கு பின்னால இருக்காங்க. அதனாலதான் , ரிலீஸ் ஆனதும் கஸ்பியன் கடல முதல் பகுதியினரே குடிச்சி முடிச்சிருவாங்கலாம், அடுத்த பகுதியினர் இங்கே தண்ணி இருந்ததா பேசிக்குவாங்கலாம்.

 45. senkodi avargalai allah paathukappanaaga! Ivarai vida arivazhikalellam thavarai kandupidipathaga koori kadaisiyil islathai yeatru kolvathai makkal anaivarum kankoodaga paarkirargal.. insha allah avarum viraivil islathai yearpar enpathil evvitha ayyamum illai.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s