ராக்கெட் விட்டவர்களின் ராக்கெட்

கடந்த 25 ம் தேதி இஸ்ரோ கடவுள்கள் ஏவிய ஜிஎஸ்எல்வி ராக்கெட் சிவகாசி ராக்கெட்டாகிப் போனதில் கடவுளர்களுக்கு மட்டுமல்லாது பக்தர்களுக்கும் ஏக வருத்தம். ஏனென்றால் முன்பு உள்ளூர் தயாரிப்பு என்று ஏழுமலையானையெல்லாம் ஏவலுக்கு கூப்பிட்ட பிறகும் அவன் அழுத்தமாக போட்ட கோவிந்தாவின் இழுப்பு ஏப்ரலிலிருந்து டிசம்பர் வரை நீண்டுவிட்டதே. ஒரு செயற்கைக்கோள் ஏவல் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்போது அது ஒரு செய்தியாக முடிந்துவிடுகிறது. ஆனால் அதுவே தோல்வியில் முடியும்போது அதனுடன் தேசபக்தியும் கலந்துவிடுவதால் அதன் பரப்பெல்லை செய்தி என்பதையும் தாண்டி விரிந்து விடுகிறது. இந்த முறையும் அது நடந்திருக்கிறது. சிலநூறு கோடிகள் வீணாகி விட்டதே என்று ஒரு பக்கமும், நம்முடைய அறிவியலாளர்கள் விரைவிலேயே அடுத்ததற்கு ஆயத்தமாகிவிடுவார்கள் என்று மறுபக்கமும், ரஷ்யாவிலிருந்து வாங்கிய ஏழு பொறிகளில் ஒன்று மட்டுமே மீதமிருக்கும் நிலையில் சந்திராயன் 2 தடைபட்டு விடுமோ என்று இன்னொரு பக்கமுமாக விசாரிப்புகள், விவாதிப்புகள்.

 

இதற்கு முன்னரும் பலமுறை இதுபோன்ற திட்டங்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஆனால் இப்போது நடந்திருக்கும் இந்தத்தோல்வியை அறிவியலாளர்களே சற்று ஆச்சரியத்துடன் தான் பார்க்கிறார்கள். ஏனென்றால் இதற்கு முன்னர் நிகழ்ந்த தோல்விகள் இரண்டாம் மூன்றாம் நிலைகளில் ஏற்பட்ட சிக்கல்களினால் நிகழ்ந்தவை. தற்போது முதல் நிலையிலேயே சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது தான் அறிவியலாளர்களைக் கவலையுறச் செய்திருக்கிறது. ஏவப்பட்ட சில நொடிகளிலேயே தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் ராக்கெட்டுக்குமான தொடர்பு அறுந்துவிட்டது. பிறகு வேறு வழியில்லை என்பதால் சிதறடிக்கப்பட்டு கடலில் வீழ்த்தப்பட்டிருக்கிறது.

 

ஏப்ரலில் நடந்த தோல்விக்குப் பிறகு, ஒரு குழு அமைக்கப்பட்டு தோல்விக்கான காரணங்களை அலசி அந்தக்குறை தற்போதைய ஏவுத‌லில் சரி செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது புதிதாக வேறொரு குறைபாடு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இதைக்கொண்டு நாட்டின் மீது அக்கரைகொண்ட(!) சில நாளிதழ்கள் தங்கள் கவலைகளை வெளியிட்டிருக்கின்றன. அதாவது தற்போதைய கல்வி முறை எப்படி சிறந்த ஊதியத்தைப் பெறுவது எனும் அடிப்படையில் இருக்கிறது. பொறியாளர்களாக வருபவர்கள் எங்கு அதிக ஊதியம் கிடைக்கிறதோ அதற்குத் தேவையான சிறப்பம்சங்களைக் கற்பது எனும் நோக்கில் செயல்படுகிறார்கள். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணிசெய்ய முன்வருபவர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள் என்பதாகப் போகின்றன அந்தக் கவலைகள். ஆனால் இந்தப் போக்கிற்கு எது அடிநாதமாய் இருக்கிறது என்பது குறித்து அந்தக் கவலைகள் கவலைப்படவில்லை.

 

தற்போதைய சூழலில் கல்வி என்பது அறிதல் எனும் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பெருநிறுவனங்களுக்கு என்ன விதமான தேவை இருக்கிறதோ அந்த விதத்தில் தெளிந்து கொள்வதே கல்வியாக இருக்கிறது. உடலுழைப்பிலிருந்து, அறிவுசார் உழைப்புவரை நிறுவனங்களுக்கு என்ன தேவை என்பதே முதன்மைப்படுத்தப்படுகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தில் மக்களை சுரண்டிக்கொழுக்க முதலாளிகளுக்கு என்ன தொழில்நுட்பம் தேவையோ அந்த தொழில்நுட்பத்தை கற்று வைத்திருப்பதற்குப் பெயர்தான் கல்வி. எடுத்துக்காட்டாக, செல்லிடப்பேசியில் நாள்தோறும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, இப்படி அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் முதலாலிகள் லாபமீட்டுவதற்குப் பயன்படும் வரையில்தான் அது கல்வியாக நடப்பிலிருக்கும். குறிப்பிட்ட அந்த தொழில்நுட்பத்தால் இனி லாபமீட்ட முடியாது எனும் நிலையில் அந்தக் கல்வி வேறொரு தொழில்நுட்பக் கல்வியால் இடம்பெயர்க்கப்பட்டிருக்கும். மட்டுமல்லாது, தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கே பெருநிறுவனங்களும் முதலாளிகளும்தான் நிதியளிக்கிறார்கள். முதலாளிகள் நிதியளித்து நடத்தப்படும் ஆய்வுகள் முதலாளிகளின் லாபத்தை நோக்கமாகக் கொண்டிருக்குமா? மக்களின் நலவாழ்வை நோக்கமாகக் கொண்டிருக்குமா? ஆக கல்வி என்பதே முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கு என்றானபிறகு, அந்தக் கல்வியைக் கற்றவர்கள் முதலாளிகளுக்கு சாதக‌மாக தங்கள் கல்வியை பயன்படுத்தியே தீர‌வேண்டும் என்றான பிறகு, அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவை செய்ய முன்வரவேண்டும் என அறிவுரை கூறுவதில் என்ன பொருள் இருந்துவிட முடியும்?

 

பொருளற்ற இதுபோன்ற கவலைகளையும் அறிவுரைகளையும் விட வேறொரு கவலை நமக்கு முதன்மையானதாக இருக்கிறது.

 

இந்தத்திட்டம் வெற்றியடைந்திருந்தால் என்ன சாதிக்கப்பட்டிருக்கும்? அதிக எடையும் தொழில்நுட்பமும் கொண்ட ஜிசாட் செயற்கைக்கோள் தகவல் தொடர்பில் மிகச்சிறந்த இடத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தந்திருக்கும், 2500 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள் செலுத்தும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியிலில் இந்தியாவுக்கும் இடம் கிடைத்திருக்கும். இதனால் செயற்கைக் கோள்களை அனுப்ப பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையிருக்காது என்பதுடன் வணிக நோக்கிலும் இந்தியாவுக்கு சாதகங்களை ஏற்படுத்தித்தந்திருக்கும். சந்திராயன் ஒன்று, இரண்டு போன்ற திட்டங்களினால் கிடைக்கும், கிடைக்கப்போகும் பலன்களென்ன? நிலவில் நீர்வளம் இருக்கிறதா என ஆராயலாம். நிலவின் தரையில் என்னென்ன கனிவளங்கள் மறைந்துகிடக்கின்றன? அவைகளை எப்படி பூமிக்கு கொண்டுவரலாம்? இவைகள் தானே. இவைகளினால் யாருக்கு பயன்? இந்தியாவுக்கு சாதகம், இந்தியாவின் பெருமை என்பதன் பொருள் என்ன? எந்த இந்தியா? இந்த ஆய்வுகளினால் பலனடைபவர்களின் இந்தியாவா? யாருக்கு எதிராக பயன்படப்போகிறதோ அவர்களின் இந்தியாவா? டாடா, அம்பானிகளின் இந்தியாவுக்கா? சோற்றைக்கூட திருடி உண்ணும் நிலையில் இருப்பவர்களின் இந்தியாவுக்கா?

உலகின் நீர்வளம் யாருக்கு சாதகமாய் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது? யாருக்கு பாதகமாய் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது? பூமியின் மொத்த நீர்வளத்தில் 99 விழுக்காடு கடல் நீர். மிதமிருக்கும் ஒரு விழுக்காட்டிலும் பெரும்பகுதி துருவப்பகுதிகளில் பனிப்பாறைகளாய் உறைந்துகிடக்கிறது. இவைபோக பயன்பட்டுக்கொண்டிருக்கும் நீர்வளத்தில் கால் பங்கிற்கு மேல் பெப்சி, கோக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எஞ்சியிருப்பவைகளைக்கூட அந்நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வேகவேகமாய் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. உலகின் அனைத்து நாடுகளையும் இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உலகமயத்தின் மூலம் மக்களுக்கு நீர் வழங்குவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி லாபம் சம்பாதித்து வருகின்றன. நீர் நிலைகள், ஏரிகுளங்களை பராமரிக்கக்கூடாது என்று நிர்ப்பந்தம் செய்கின்றன. ஆக பூமியில் இருக்கும் நீர்வளமே முதலாளிகளுக்கு சாதகமாகவும், மக்களை தண்ணீருக்கு விலை கொடுக்க வைத்திருப்பதன் மூலம் அவர்களுக்கு பாதகமாகவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுபோன்றே கனிம வளங்களும். இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதிகளில் கிடைக்கும் கனிமப்பொருட்களை அற்பமான விலையில் முதலாளிகள் கொள்ளையிட்டுச் செல்ல வசதியாக இந்தப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களை அரசே வேட்டையாடி அப்புறப்படுத்துகிறது. உலகின் எந்தப்பகுதியில் புதிதாக கனிமவளங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது முதலாளிகளுக்கு சாதகமாகவும் மக்களுக்கு பாதகமாகவும் முடிகிறது. பூமியில் கிடைக்கும் வளங்களையே முதலாளிகள் தங்களின் லாபத்திற்காக மக்களை வதைக்கப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது, நிலவிலும் இன்னும் வேறுபல கோள்களிலும் கண்டுபிடிக்கப்படும் வளங்கள் மக்களின் நன்மைக்காக நலனுக்காக பயன்பட்டுவிடுமா?

 

நாடு என்பதை தங்களுக்கானது எனும் பொருளில் பயன்படுத்துபவர்கள், அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை, செய்வதில்லை. ஏனென்றால் அந்த நாட்டிலிருந்து நாட்டு மக்களிடமிருந்து தங்களுக்குத் தேவையானதை அவர்கள் பறித்தெடுக்க வேண்டியதிருக்கிறது. அதனால் அதை அவர்கள் பொதுவாகவே முன்னிருத்துகிறார்கள். இந்தியாவின் பெருமை, இந்தியாவின் வளர்ச்சி, இந்தியாவின் சுத‌ந்திரம் என்பதெல்லாம் இந்தப்பொருளில் வருபவைகள் தாம். ஆனால் இதை பிரித்தெடுத்துக்காட்டும் போது அதை எதிர்கொள்வதற்காக வேறொரு கேள்வியை முன்வைப்பார்கள். அறிவியலை எதிர்க்கிறார்கள், அறிவியல் முன்னேற்றத்திற்கு தடை போடுகிறார்கள், அறிவியலை விலக்கிவிட்டு கற்காலத்தில் போய் வாழமுடியுமா? என்பதுதான் அந்தக் கேள்வி.

 

அறிவியல் என்பது இயற்கையை புரிந்துகொண்டு, மனிதகுல வாழ்வுக்கு எதிராக இருக்கும் இயற்கையின் தடைகளை மாற்றுவதற்காகப் போராடுவது. இதை மறுக்கமுடியாது. ஆனால் அறிவியல் இந்த திசையில் பயணப்படுகிறதா என்பதே முக்கியமான கேள்வி. 250 ஒளியாண்டுகள் தூரத்தில் சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரிய ஐ.ஆர்.எஸ்5 எனும் கோள் இருக்கிறது என விண்ணை உளவி கண்டுபிடிக்க முடிந்த அறிவியலை பாதாளச் சாக்கடையில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துளவி கண்டுபிடிக்கவைக்காமல் மனிதனை மூழ்கி கண்டுபிடித்து அடைப்பெடுக்க நிர்ப்பந்திக்கிறதே, இதை அறிவியலின் பிழையாகக் கொள்வதா? அதை கையில் வைத்திருக்கும் முதலாளியத்தின் பிழையாகக் கொள்வதா? நவீன செயற்கைக்கோள்கள் துணையுடன் எந்த இடத்தில் என்ன வகை மீன்கள் தற்போது அதிகம் கிடைக்கும் என கண்டறிந்து சொல்லி ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களை அனுப்பி கடல்வளத்தை கொள்ளையடிக்க பயன்படுத்தும் அறிவியலை பகலென்றும் இரவென்றும் பாராமல் வலையிழுத்தே வாழ்வைக்கடக்கும் மீனவர்களை எல்லை தாண்டினான் என்று ஆண்டுக்கணக்கில் சிறைவைக்க நிர்ப்பந்திக்கிறதே இது அறிவியலின் பிழையா? முதலாளியத்தின் பிழையா? எண்பதுகளைத் தாண்டிய கொழுத்தவர்களின் பழுத்த இதயத்தை ஈரிதழ் வால்வு என்றும் ஃபேஸ் மேக்கர் என்றும் துள்ளவைக்கும் அறிவியல் ஓட்டை விழுந்த இதயத்துடன் பணமில்லை என்பதால் பத்திலேயே பாடை கட்ட நிர்ப்பந்திக்கிறதே இது அறிவியலின் பிழையா? முதலாளியத்தின் பிழையா? அறிவியலை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அது யாருடைய கைகளில் இருக்கிறதோ அவர்களை மறுக்கமுடியும். ஏனென்றால் அவர்கள் உலகின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக அறிவியலை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்களை எதிர்க்க வேண்டும்.

 

இவைகளை உணராமல் சந்திராயனை அனுப்பிய‌தற்காக பெருமைப்படுவதும், சிவகாசி ராக்கெட் வெடித்துப்போனதற்காக சோகப்படுவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். அறிவியலை அனைவருக்குமானதாய் மாற்றியமைக்க போராடத்துணிவதே நாம் முன்னிற்க வேண்டிய‌ இன்றைய அவசியம்.

 

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 10

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 10

அமெரிக்க முதல் டிராட்ஸ்கிகள் வரை குருசேவ் வாழ்த்த, அவனோ கம்யூனிசத்தை தூற்றினான்

22வது காங்கிரஸ்சில் நடத்திய முதலாளித்துவ மீட்சியை மார்க்சிய-லெனினியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைப்படுத்திய புத்திக் கூர்மையுள்ள முன்மாதிரி” என்று கூறி குருசேவை வாழ்த்தியது; ஏன், அமெரிக்கா உள்ளிட்ட டிராட்ஸ்கியவாதிகள் அனைவரும் குருசேவை வாழ்த்தி வரவேற்றனர். டைம்ஸ் என்ற அமெரிக்க இதழ் குருசேவ் பற்றிய குறிப்பில் மேற்கத்திய நாடுகளின் சிறந்த மாஸ்கோ நண்பர்” என்று புகழ்ந்தது.  ஏகாதிபத்தியவாதியான டபிள்யூ.ஏ.ஹாரிமன் சோவியத் பிரதமர் நிகடா குருச்சேவ் அமெரிக்கா அரசியல் வாதியைப் போல் நடந்துகொள்கிறார்” என்று புகழாரம் சூட்டினார். பிரிட்டிஸ் பத்திரிகையான டைம் அண்டு டைடு சுதந்திர உலகத்தைப் பொறுத்தவரை, இதுவரை ரசியர்கள் கொண்டிருந்த பிரதமர்களில் மிகச் சிறந்த பிரதமராக குருச்சேவ் கருதப்படுகிறார். சமாதான சகவாழ்வை அவர் உண்மையில் நம்புகின்றார்” என்றது

வாஷிங்டனில் இருந்து எஜன்ஸ் பிரான்ஸ் பிரஸ்ஸதல் அனுப்பிய செய்தியில் சோவியத்-அமெரிக்க உறவுகளை உயர்த்துவதற்கான இந்த சாத்தியப்பாடனது, குறிப்பிட்ட எல்லைக்குள் குருசேவ்வின் பணிகளை அமெரிக்கா எளிதாக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் சிந்திக்குமளவிற்கு இட்டுச் சென்றுள்ளது” என்று தெரிவித்தது. ஜே.எப்.டல்லஸ் கலிபோர்னிய முதலாளிகள் மத்தியில் பேசும் போது சமாதான பூர்வமான வெற்றிக்காக ஒர் உன்னதமான திட்டத்துக்கு குருசேவ் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்” என்றார். ஏகாதிபத்தியவாதிகளின் மிகச் சிறந்த முதலாளித்துவ மீட்சியாளனாக குருசேவ் இருந்தான். டிராட்ஸ்கிகள் அவனுடன் கைகோர்த்து நின்றனர். இன்றும் குருச்சேவை டிராட்ஸ்கிகள் புகழ்கின்றனர். ஸ்டாலினை தூற்றி கழுவேற்றிய குருசேவின் கொள்கைளை இன்றுவரை உயர்த்தி நிற்கின்றனர். இந்த முதலாளித்துவ மீட்சியை நடத்திய போது, அதை எதிர்த்த மார்க்சியவாதிகளை கொன்று ஒழித்தை ஆதரிக்கின்றனர். இவர்களை ஸ்டாலினிஸ்ட்கள் என அடை மொழியூடாக சிறுமைப்படுத்தி, அவர்களின் படுகொலையை அங்கீகரிக்கின்றனர். சோவியத் மக்களின் சோசலிசம் காவு கொள்ளபப்பட்டதை மறுத்தனர். தொடந்தும் சோசலிச நாடு என்றனர். எல்லா கம்யூனிச எதிரிகளும் முதலாளித்துவ மீட்சி நடக்கவில்லை என்றனர். மாறாக சோசலிசம் பூத்துக் குழுங்குவதாக பிரகடனம் செய்தனர்.

இன்றும் கம்யூனிச எதிரிகளின் அடிப்படையான அவதூறுக்கான விளக்கம், இதில் இருந்தே கட்டமைக்கப்படுகின்றது. அன்று முதலாளித்துவ மீட்சி எதுவும் நடக்கவில்லை என்றனர். அதேநேரம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் சோவியத்தில் நடந்த மாற்றத்தை வரவேற்று அதற்கு உதவினர். லண்டன் டைம்ஸ் மேற்கத்திய நாடுகள் விரும்பும் வகையில் நடந்து கொள்ளும் மிகச்சிறந்த பிரதமர்… எனவே சிறிது காலத்துக்காவது, குருச்சேவ் அவர்களின் நிலையை மேலும் பலவீனமாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும்” என்று ஏகாதிபத்திய மூலதனத்துக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் அறிவுரை கூறிய‌து. இதையே தான் கம்யூனிஸ்ட் என்று கூறித் திரிந்த டிராட்ஸ்கிகள் முதல் எல்லா வண்ண நாய்களும் கூறின. கம்யூனிஸ்ட்களை ஸ்டாலினிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி அவதூறு செய்தன.

இந்நிலையில் உலகளாவிய பலத்த ஆதரவுடன் குருசேவ் மேலும் முதலாளித்துவ மீட்சியை விரைவாக்கினான். அவன் வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோரி பல நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு முன்னரேயே, முதலாளிகளை சாதாரண சீர்திருத்தங்களை விட மிகவும் மேம்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி நிர்ப்பந்திக்க முடியும்” என்றான். வர்க்கப் போராட்டமின்றி மூலதனத்தை ஒழிக்க அடிப்படை உற்பத்திச் சாதனங்களை முதலாளிகளிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்வதற்கு முதலாளிகளே சம்மதிக்க கூடிய, முதலாளிகளும் அதை விருப்பக்கூடிய நிலைமை உள்ளது” என்றான். எனவே, மூலதனத்தை பாட்டாளி வர்க்கம் விலைக்கு வாங்கி வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றான். எந்த டிராட்ஸ்கியமும் இதை எதிர்கக்கவில்லை; மாறாக ஆதரித்தனர். ஏனெனின் இது ஸ்டாலிசத்தின் (மார்க்சியத்தின்) கொள்கைக்கு எதிரானது என்பதால் மட்டுமின்றி, வன்முறை சார்ந்த மக்கள் திரள் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் டிராட்ஸ்கியத்துடன் இது இணைந்தும் போனது.

இதையே 20வது கட்சிக் காங்கிரஸ்சில் ஸ்டாலினை மறுத்து குருசேவ் முன்வைத்த அறிக்கையில் பாராளுமன்றப் பாதையின் மூலம் சோசலிசத்திற்கான மாற்றம் அதாவது ‘சமாதான மாற்றம்’ என்பதை தொடாந்து முன்வைத்தான். உண்மையில் குருசேவின் கொள்கைகள் 1935ம் ஆண்டு சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் வெளிப்பட்டு நின்றது. 1935 முதல் கம்யூனிசத்துக்கு எதிராக செயல்பட்ட ஏர்ல் பிரேளடர் 1944 இல் வெளியிட்ட நூலான கம்யுனிஸ்டுகளும் தேசிய ஒற்றமையும்” என்ற நூலில் இவை செறிந்து காணப்படுகின்றது. வர்க்கப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர். யுத்தம் உலகின் பெரும்பகுதியை அழித்துவிடும் ஒரு உண்மையான பேரழிவாக இருக்கும். …உலகின் பெரும்பகுதியை 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு காட்டுமிராண்டித்தன வாழ்க்கைக்குப் தள்ளிவிடக் கூடும். …அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட மேம்படுத்தும் உடன்பாட்டினை வலியுறுத்தவதே கம்யூனிசப் பாதை” என்றார். அவர் மேலும் 1941 இல்  ஜனநாயக ரீதியாக இணங்கச் செய்வது மற்றும் நம்பிக்கை இவற்றையே முழுவதுமாகச் சார்ந்து இருக்க வேண்டும்” என்றான். இரண்டாம் உலக யுத்த முடிவில் 1948 இல் “சமாதான முறையில் சோசலிசத்துக்கு மாறிச் செல்வதற்கு சாத்தியமான நிலைமைகளை” உலகம் அடைந்துள்ளது என்றான். 1944 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திரமான பாத்திரத்தை மறுத்து கம்யூனிஸ்டுகளின் நடைமுறை ரீதியான அரசியல் நோக்கங்ககள் அவர்களை விட மிகப் பெரிய எண்ணிக்கையிலான கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்களுடன் முக்கிய அம்சங்களிலும் உடன்பாடானவையாக உள்ளவை நீண்ட காலத்துக்கு இருக்கும்” என்றான். 1960 இல் அமெரிக்கா கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்டாலின் எப்படி அழித்தார் என எழுதும் ஏர்ல் பிரேளடர் “1945 –ல் நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்படக் காரணமாக இருந்த அதே முரண்பட்ட கருத்தைத் தான் குருச்சேவ் இப்போது கடைப்பிடிக்கின்றார்” என்றான். வார்த்தைக்கு வார்த்தை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே வாதிட்ட அதே பாதையாகத்தான் இருக்கிறது, எனவே எனது குற்றம் தற்காலிகமாகவாவது புதிய வைதீக முறையாக மாறியிருக்கிறது” என்றான். கம்யூனிசத்தின் அடிப்படை கோட்பாடுகளை மறுத்து நின்ற போது, சர்வதேச கம்யூனிச இயக்கம் வெளியேற்றிய ஏர்ல் பிரேளடர்ரின் அன்றைய திட்டங்கள் தான் குருசேவின் இன்றைய கொள்கையாகியது. அவன் தன்னைத் தானே கம்யூனிஸ்ட் என்ற போற்றியதுடன், தனக்கும் தனது அதே கொள்கை முன்னெடுக்கும் குருச்சேவுக்கும் புனர்ஜென்மம் வழங்க கோருகின்றான். ஸ்டாலினும் பாட்டாளி வர்க்கமும் தன்னை வெளியேற்றியது குற்றம் என்கின்றான். தன்னைப் போன்றவர்களை வெளியேற்றியது தவறு என்கின்றான். கொள்கை ரீதியான கடும் போக்கு கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தாக கூறும் இவனின் கொள்கைகள், முதலாளித்துவ மீட்சிக்கு அடிப்படையாக வழிகாட்டியது. முதலாளித்துவ மீட்சிக்கு ஸ்டாலின் மறுக்கப்பட வேண்டும் என்பது இயங்கியல். அதை ஸ்டாலினிசம் எனத் தொடங்கி சர்வாதிகாரம் என பலவகையில் மறுப்பவர்களின் தேவைக்கு எற்ப அவை கொள்கை விளக்கமாகியது.

குருசேவ் வர்க்க கட்சியின் குறிக்கோளை சிதைக்க கட்சியின் அடிப்படை உள்ளடக்கத்தையே சிதைத்தான். உற்பத்தி அடிப்படையில் கட்சியை கட்டுதல் என்ற பெயரில் ‘தொழிற்துறைக் கட்சி’, ‘விவசாயக் கட்சி’ என்று கட்சியை அதன் அடிப்படை வர்க்க குணாம்சத்தையே மறுத்தான். சோசலிசத்தில் அரசியலை விட பொருளாதாரத்தின் முக்கியத்துவம் கருதியே இப்படிச் செய்தாக பல கதைகளை கூறினான். குருசேவ் கட்சி அமைப்புகளின் பிரதான வேலை, உற்பத்தியே என நாங்கள் அடித்துக் கூறுவோம்” என்றான். குருசேவ் கம்யூனிசம் என்பதை உடல் மற்றும் மூளை உழைப்பால் உற்பத்தியான ஏராளமான பண்டங்கள் நிறைந்த ஒரு பாத்திரம் அனைவருக்கும் எளிதில் கிட்டுமாறு இது இருக்கும்” என்றான். இப்படி கம்யூனிசத்துக்கு புது அகராதி எழுதிய இவன், கட்சி அமைப்பின் பிரதான வேலை வர்க்கப் போராட்டம் என்பதை மறுத்தான். கட்சியின் பிரதான வேலை உற்பத்தி என்ற கருத்து, டிராட்ஸ்கியத்தின் அடிப்படையாகும். இதை புகாரின் மற்றும் டிராட்ஸ்கி முன்வைத்த போது லெனின் பொருளாதாரத்தின் உருட்டித் திரட்டப்பட்ட வெளிப்பாடே அரசியல்,… ஆனால் அரசியல், பொருளாதாரத்தின் மீதும் செல்வாக்கு செலுத்துகின்றது இதற்கு மாறாக வாதிடுவது மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுப்பதாகும்” என்று அம்பலம் செய்தார். தொடர்ந்தும் லெனின் “.. இந்த விசயத்தைப் பற்றி ஒரு சரியான அரசியல் அணுகுமுறை இன்றி ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது. மேலும், தன்னுடைய உற்பத்திப் பிரச்சனைகளைக் கூடத் தீர்க்க முடியாது” என்றார். குருசேவும் – டிராட்ஸ்கியும் சந்தித்த இந்த புள்ளியில் இருந்தே முதலாளித்துவ மீட்சி தொடங்கியது. டிராட்ஸ்கிகள் முதலாளித்துவ மீட்சி என்பதே அங்கு நடக்கவில்லை என்று இன்றுவரை சாதிக்கின்றனர். ஏன், கம்யூனிசத்தை திருத்த விரும்பும் அனைவரும் இதையே கிளிப்பிள்ளை போல் சொல்கின்றனர். முதலாளித்துவ மீட்சியல்ல, அங்கு சோசலிசத்தின் பாதையே தொடர்ந்தது என்கின்றனர். 22வது காங்கிரஸ்சில் குருசேவ் இருபது வருடங்களில் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டிவிடுவோம்” என்றான். அதாவது 20 வருடத்தில் முதலாளித்துவ மீட்சியை பூரணமாக்கிவிடுவோம் என்பதே இதன் சாரம். இது எதார்த்தமாகியது. 1980 களில் கொப்பச்சேவ் அதை பூரணமாக்கி உறுதி செய்தான். சோசலிசம் என்பதே பூரணமான முதலாளித்துவ ஆட்சியாக மாறிக் கொள்வதை குறித்து நின்றது. கொர்பச்சேவ் ஸ்டாலின் –பிரெஸ்னேவ் கால கட்டத்தில் திரிக்கபட்ட உருமாற்றம் செய்யப்பட்ட போலி சோசலிசத்தை சோசலிசத்தில் இருந்து களைந்துதெறிய வேண்டும்” என்றான். இப்படி கூறி அப்பட்டமாக முதலாளித்துவ மீட்சியை நடத்திய போது, இதை டிராட்ஸ்கியம் பெருமையாக எடுத்துக் காட்டி போற்றியது.

குருசேவ் “ஆ! ஸ்டாலின் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பே செத்திருந்தால்” எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றான். மார்க்சியத்துக்கு எதிரான டிராட்ஸ்கியவாதிகள் முதல் எல்லா மக்கள் விரோதிகளும் பாட்டாளி வர்க்க அடிப்படைகளை எவ்வளவு இலகுவாக துடைத்திருக்க முடியும் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அத்துடன் இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிகளின் வெற்றிக்கு எவ்வளவு சாதகமாக இருந்திருக்கும் என்ற அவாவையும் பிரதிபலித்து நிற்பதின் கூற்று இது. 20 வது காங்கிரஸ்சில் ‘தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை’ நிறைவேற்றிய பின்பே மக்கள் மேலான ‘கனத்த சுமை’ அகற்றப்பட்டு ‘ரசிய சமுதாயத்தின் வளர்ச்சி’ திடீரென துரிதப்படுத்தப்பட்டது என்று உலக கம்யூனிச இயக்கத்துக்கு அறிவித்தான். ரசிய சமுதாய வளர்ச்சி என்பது முதலாளித்துவ மீட்சியாக இருந்தது. தனிநபர் வழிப்பாட்டை எதிர்ப்பது என்பது ஸ்டாலின் தூற்றப்படுவதாக இருந்தது. எல்லா குற்றமும் ஸ்டாலின் மேல் சுமத்தப்பட்டது. இதன் மூலம் மார்க்சிய அடிப்படைகள் மறுக்கப்படுவதாக இருந்தது. வளர்ச்சி திடீரென துரிதப்பட்டது என்பது ஏகாதிபத்தியத்துடன் கூடிக் கூலாவுவதாக இருந்தது. லெனின் தலைவர்கள் பற்றி குறிப்பிடும் போது வரலாற்றில் எந்த ஒரு வர்க்கமும் தனது அரசியல் தலைவர்களை – ஒரு இயக்கத்தைக் கட்டி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லக் கூடிய புகழ்பெற்றுச் சிறந்த தனது பிரதிநிதிகளை – உருவாக்காமல் அரசியல் அதிகாரத்தை வென்றதில்லை” என்றார். அவர் மேலும் கூறும் போது அனுபவமிக்க பெரும் செல்வாக்கு பெற்ற கட்சித் தலைவர்களை பயிற்றுவிப்பது என்பது நீண்ட காலம் பிடிக்கக் கூடிய கடினமான பணியாகும். ஆனால் இதில்லாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற அதன் ஒன்றுபட்ட விருப்பம் என்பது ஒரு வெற்றுச் சொல்லாகும்” என்றார். இதை குருசேவ் மறுத்தான். ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க தலைமைப் பண்பையே மறுத்தான். அதனிடத்தில் முதலாளித்துவ பண்பை செருகி நின்று தூற்றினான். பாட்டாளி வர்க்க தலைமையை தூற்றுவதற்கு வர்க்க போராட்டத்தின் அடிப்படையான அதிகாரத்தை கொச்சைப்படுத்தி நின்றான். மாறாக முதலாளித்துவ அதிகாரத்துவத்தை, அதன் கபடத்தை, மோசடியை முன்வைத்தான். ஏகாதிபத்தியத்துடனும், எதிர் புரட்சி சக்திகளுடனும் கூடிக் கூலாவினான். பாட்டாளி வர்க்கத்தை கைவிட்டு முதலாளித்துவ மீட்சியை நடைமுறைப்படுத்திய படி ஏகாதிபத்தியத்தியத்தின் கைக்கூலியாக சீரழிந்த டிட்டோவையே தனது ஆசானாக கொண்டான். குருசேவ் டிட்டோ பற்றி குறிப்பிடும் போது ஒரே கருத்தைச் சேர்ந்தவர்கள், ஓரே கோட்பாட்டினால் வழிகாட்டப்படுபவர்கள்” என்றான். முதலாளித்துவ மீட்சியை நடத்துவதில் ஸ்டாலினை தூற்றுவதில் ஒன்றுபட்டனர்.

சர்வதேச வர்க்கப் போராட்டத்தை கைவிட்டனர். அதை காட்டிக் கொடுத்தனர். குருசேவ் சொன்னான் ‘காலனிய முறையின் அமைதியான சவ அடக்கத்தை’ செய்யக் கோரினான். பாட்டாளி வர்க்கத்தின் எதிர் முதலாளித்துவம் என்ற கோட்பாட்டை கைவிடக் கோரினான். 1955 இல் குருச்சேவ் அல்ஜிரிய விடுதலைப் போராட்டம் பற்றிய தனது உரையில் ரசியா பிறநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை. என்பதை எல்லாவற்றக்கும் முதலாவதாக நான் கருத்தில் வைத்திருந்தேன், வைத்திருக்கிறேன்” என்றான். மக்களின் போராட்டத்தையும் அதன் நியாயமான பண்பையும் நிராகரித்து, எகாதிபத்திய காலனியாக இருப்பதை அங்கீகரித்தான். 1958 இல் மீண்டும் குருசேவ் பிரான்ஸ் பலவீனமடைவதை நாங்கள் விரும்பவில்லை. பிரான்ஸ் இன்னும் மகத்தானதாக மாறவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றான். பிரஞ்சு ஏகாதிபத்தியம் அல்ஜிரிய மக்களின் பிணங்கள் மேல் பலமடைவதை ஆதரிப்பதாக கூறினான். அல்ஜிரிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிய பிரஞ்சு ஏகாதிபத்தியத்தை ஆதரித்தான். பிரஞ்சு கம்யூனிஸ்ட்டுகள் பிரஞ்சு எகாதிபத்திய காலனிய கொள்கையை ஆதரித்து நிற்க கோரினான். அல்ஜிரிய மக்களை பிரஞ்சு கம்யூனிஸ்ட்டுகள் கொல்லவேண்டும் என்றான். ஏனெனில் பிரஞ்சு பலவீனமடைவதை கம்யூனிசம் விரும்பவில்லை என்றான். 1960 இல் காங்கோவுக்கு அமெரிக்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தை ஐ.நா கொடியுடன் அனுப்ப ரசியா ஐ.நாவில் வாக்களித்தது. ஆக்கிரமிப்பு படைகளை கொண்டு செல்ல ரசிய போக்குவரத்து உதவிகளைச் செய்தது. அங்கு அமெரிக்கா எற்படுத்திய பொம்மை அரசை உற்சாகமாக ஆதாரித்துடன், மக்களை அடங்கிப் போகக் கோரினர். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு அப்பட்டமாகவே துணை நின்றனர். அதில் பங்கு கோரி நின்றனர். ஸ்டாலின் மறுக்கப்பட்டு ஏகாதிபத்திய துணையுடன் காலனிகள் மீளவும் உருவாக்க துணைசெய்தார்கள்.

இந்த துணை போகும் பாத்திரத்தை மேலும் ஆழமாக்க ஏகாதிபத்தியம் கோரியது. அமெரிக்க பிரதிநிதியான டீன் ரஸ்க அமெரிக்க வீரர்களின் தேசிய மாநாட்டில் ஆற்றிய உரையில்’ உலகப் புரட்சி எனும் தங்களுடைய இலக்கை கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைவிடும் வரை சமாதானம் உறுதி செய்யப்படுவது என்பதும், நிலையான சமாதானம் என்பதும் இருக்க முடியாதது” அவர் மேலும் உலகக் கம்யூனிச வெற்றி எனும் மாயையை ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டு முன் செல்லுங்கள்” என்று ரசிய தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். ஸ்டாலினை மறுத்த குருசேவ் சொன்னான் நாங்கள் அமெரிக்காவுடன் நண்பர்களாக இருப்பதற்கு, சமாதனத்திற்காகவும், சர்வதேச பாதுகாபிற்காகவும் மட்டுமின்றி பொருளாதார, கலாச்சார அரங்குகளில் கூட அதனுடன் ஒத்துலைப்பதற்கு விரும்புகின்றோம்” ஆனால் ஸ்டாலின் ஒரு நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றிய புரட்சியானது, தன்னை சுய நிறைவடைந்த ஒன்றாக கருதவே கூடாது. மாறாக எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியை விரைவுபடுத்த உதவுவதற்கான சாதனமாகக் கருதவேண்டும்” என்றார். அவர் மேலும் கூறும் போது தனது வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்கான (அதாவது உலகப் புரட்சிக்கான) ஒரு வலுமிக்க தளமாக… அது அமைந்திருக்கின்றது” என்றார். ஸ்டாலின் என் மறுக்கப்பட்டார்?, ஏன் தூற்றப்பட்டார்?, இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார் என்பதற்கு, பாட்டாளி வர்க்கம் அல்லாத அவர்கள் அரசியல் நிலையில் இருந்தே புரிந்து கொள்ளமுடியும்.

ஸ்டாலினை மறுத்து எதை எப்படி செய்தார்கள்?, என்பதிலிருந்தும், எகாதிபத்தியம் தொடர்ந்து எதைக் கோரியது என்பதிலிருந்தும் இதை ஆழமாக யாரும் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்க மாநில வங்கிகளின் சங்கத்தில் உரையற்றிய ஜே.எப்.டல்லஸ் சோவியத், வன்முறையைக் கைவிடுவது என்பது… தற்போது நிலவும் நிலைமைகளை அப்படியே தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது என்று பொருள்படாது. மாறாக அமைதி வழி மாற்றத்தைப் பொருள்படுத்தும்” என்றார். தற்காப்போடு நின்று கொள்வது போதுமானதல்ல. சுதந்திரம் என்பது ஊடுருவத் தக்க வகையில் சாதகமான சக்தியாக இருக்க வேண்டும்” என்றார். அமெரிக்கா ஜனதிபதி டி.டி.அய்சனேவர் ஸ்டாலின் போன்ற கொடூரமான சர்வாதிகாரத்தினால் கட்டுண்டு கிடக்கும் மக்கள், தங்களுடைய சொந்த சுதந்திரமான ஓட்டுக்களின் மூலம் தங்களுடைய விதிகளைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை இறுதியாகப் பெறும் பொருட்டு சமாதான சகவாழ்வு கையாளப்பட வேண்டும்” என்றார். அமெரிக்கா ஜனதிபதி ஜே.எப்.கென்னடி சோவியத் பேரரசிலும் மற்ற எல்லாக் கண்டங்களிலும் மாற்றங்கள் நிகழ்வதற்கும்… மிக அதிகபட்டசமான மக்களுக்கு மிக அதிகமான சுதந்திரம் எற்படுவதற்கும், உலக சமாதனதுக்கு இட்டுச்செல்வதற்கும்… நம் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்ய வேண்டியது நம் கடமை..” என்றார். அவர் மேலும் சுதந்திரமான தேர்வுக்கு வாய்பை உருவாக்க சுதந்திரத்தை பொறுமையாக ஊக்குவிப்பது மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிராக நிர்ப்பந்தம் கொடுப்பது” என்ற கொள்கையை சோவியத் மீது கையாள்வதாக அறிவித்தார். சோவித்தில் நடந்தது என்ன என்பது அப்பட்மாகவே தெரிகின்றது. ஸ்டாலின் ஏன் தூற்றபட்டார், ஏன் மறுக்கப்பட்டார், என் அதை அனைவரும் வரவேற்று கொண்டாடினர் என்பது தெள்ளத் தெளிவாக அம்பலப்பட்டு கிடக்கின்றது.

முதலாளித்துவ மீட்சியும் அதன் மூலம் முதலாளித்துவ நலன்களுமே, இதன் அடிப்படையான ஒரேயொரு குறிக்கோளாக இருந்தது. இதுபற்றி லெனின் கூறினார் உலகம் முழுக்க கம்யூனிசம் தோன்றும் வரை சோசலிசம் உக்கிரமான வர்க்க மோதல்கள் நிறைந்த ஒரு முழுச் சகாப்தமாக அமைகிறது” என்றார் அவர் மேலும் இந்த சகாப்தம் முடிவடையும் வரை, சுரண்டல்காரர் தவிர்க்க முடியாதபடி மீட்சிக்கான நம்பிக்கை ஆவலுடன் வளர்த்துக் கொண்டிருப்பதோடு, இந்த நம்பிக்கை மீட்சிக்கான முயற்சிகளாகவும் மாற்றப்படுகிறது” என்றார். ஆம் இதை மறுப்பதே இன்று வரை ஸ்டாலினை தூற்றுவோரின் மையமான அரசியல் உள்ளடக்கமாகும். ஸ்டாலின் இதை உயிரினும் மேலானதாக பாதுகாத்தார். இதை யாரும் இனியும் மறுத்து நிறுவமுடியாது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்

ஆந்திர ஓட்டுப்பொறுக்கி அரசியலில் அதிரடி நிகழ்வுகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. ஆனாலும் ராஜசேகரரெட்டியின் மரணத்திற்குப்பின் இந்த கேடுகெட்ட கூத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென விவசாயிகளின் மீது பாசம் பொத்துக்கொண்டு பொங்கியெழ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார், அதிலிருந்து செய்தி ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் ஜெகன்மோகனும் சேர்ந்துகொள்ள ஆந்திரம் விழி பிதுங்கி நிற்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்காக‌ அன்று அம்பேத்காரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அடாவடியாக உண்ணாவிரதத்தை தொடங்கிய காந்தியைப் போல் அடாவடி உண்ணாவிரதங்களால் தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர்.

 
அண்மையில் பெய்த மழையினால் வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்க ஆந்திர அரசு முதலில் ஏக்கருக்கு 4500 ரூபாயும் பின்னர் அதை ஆறாயிரமாக உயர்த்தியும் நிவரணத்தொகை அறிவித்தது. இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சந்திரபாபு நாயுடு இழப்பீட்டுத்தொகையை ஏக்கருக்கு பத்தாயிரமாக உயர்த்தவேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். காலவரையற்ற உண்ணாவிரதம் என்று விளபரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த நாடகம் இரண்டு நாட்களாகுமுன்னரே அவரின் உடல்நிலை சீர் கெடுகிறது என்று மருத்துவர்கள் குழு பிரச்சாரத்தைத் தொடங்க, பிரச்சனை சிக்கலாகி விட‌க் கூடாதே என அஞ்சிய ஆந்திர அரசு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு வேண்டியது. ஆதரவு பெருகுகிறது என்பதை அறிந்த‌ நாயுடு உண்ணாவிரதத்தை கைவிட மறுக்க, கைது செய்தாவது நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பியது அரசு. விளைவு, தெலுங்கு தேச தொண்டர்கள்(!) சாலை மறியல் கல்வீச்சு என இறங்கிவிட்டனர்.

 
நாயுடுவுக்கு அப்படியென்ன திடீர் பாசம் விவசாயிகள் மீது? அவரின் பாசம் விவசாயிகள் மீதல்ல, தன் மீது தான். ராஜசேகர ரெட்டி விபத்தினால் காலியாகிவிட்ட திண்ணைக்கு முதலில் ரோசய்யா, பிறகு கிரண்குமார் ரெட்டி என்று ஒரு நிலையற்ற தன்மை நிலவ, இடையில் ஜெகன் மோகன் நடைபயணம், தனிக்கட்சி என்று வீரம் காண்பிக்க, சும்மா இருந்தால் காணாமல் போய்விடுவோம் எனும் பயம் வந்தது நாயுடுவுக்கு. எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்தவருக்கு தொடர் மழையால் பயிர்கள் மூழ்கியது கிடைக்க, விவசாயிகளுக்கான போராளியாக புது அவதாரம் எடுத்தார்.

 
விவசாயிகளின் வயிற்றில் எரியும் தீயை ஏக்கருக்கு பத்தாயிரம் என்பது அணைத்து விடாது என்றாலும், இந்தக் கோரிக்கையை நாயுடுவால் வேறு வழிகளில் விடுத்திருக்க முடியாதா? தன்னுடைய கட்சித் தொண்டர்களின் பங்களிப்புடன் ஆந்திரா முழுவதிலும் இந்தக் கோரிக்கையை முன்னிருத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்க முடியாதா? தலைமையகத்தை முற்றுகையிட்டிருக்க முடியாதா? முடியலாம், ஆனால் அவை ஓரிரு நாட்களின் மக்களால் மறக்கப்பட்டுவிடும். எதிர்வரும் தேர்தலில் ஒட்டுகளாக அவை மாறாது. ஓட்டுக்களாக மாறவேண்டுமென்றால் தன்மீது அனுதாபம் ஏற்பட்டாக வேண்டும் என்பதைத்திட்டமிட்டே இந்த உண்ணாவிரத உருப்படியை கையில் எடுத்திருக்கிறார்.


ஆந்திராவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலுமே விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மழை பெய்து செழித்தாலும், பெய்யாமல் வறண்டாலும் அவைகளை தன்னை பாதிக்கும் அம்சங்களாக மாறிவருவதை மவுனமாகவே பார்த்துக்கொண்டிருக்கிறான் விவசாயி. அரசின் பொருளாதரக் கொள்கைகளினால் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். பசுமைப் புரட்சி எனும் பெயரில் செயற்கையான இரசாயண உரங்கள் விளை நிலங்களில் கொட்டி நிலத்தை மலடாக்கி விதைக்குக் கூட பண்ணாடு நிறுவனங்களிடம் கையேந்தும் நிலையை திட்டமிட்டு உருவாக்கி, இடு பொருட்களின் விலையை விண்ணுக்கு உயர்த்தி விளை பொருட்களின் விலையை மண்ணுக்குத்தாழ்த்தி, விவசாயிகளை ஒட்டாண்டியாக்கி அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு ஓடவிட்டிருக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தயாரா இந்த நாயுடுகளும் ரெட்டிகளும்?

 
பருவம் தப்பாமல் மழை பெய்துகொண்டிருந்த நாடு இது. ஆனால் இன்று என்றாவது மழை பெய்தாலே அது விளைநிலங்களிலும், குடியிருப்புகளில் புகுந்து மக்களையும் விவசாயிகளையும் தவிக்க வைக்கிறது. ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங்களும் நீர்நிலைகளும் இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் காணாமல் போய்விட்டன கடந்த சில பத்தாண்டுகளில். இருக்கும் நீர்நிலைகளையும் தூர்வாரி மராமத்துப் பணிகளை செய்யக்கூடாது என்று தடை போட்டிருக்கிறது உலக வங்கி. அதனால் தான் சிறு மழைக்கும் வயல்கள் தண்ணீரில் மிதக்கின்றன. உணவு தானியங்கள் புழுத்துப்போய் கடலில் கொட்டினாலும் அதை பசித்திருப்பவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என தத்துவ விசாரம் செய்யும் அறிவுஜீவி பிரதமர் தண்ணீரும் மின்சாரமும் இலவசமாய் கிடைப்பதனால் தான் விவசாயிகள் வீணாக்குகிறார்கள் என்று அவற்றுக்கு விலைவைத்து தனியாரிடம் தள்ளிவிட தருண‌ம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தயாரா இந்த நாயுடுகளும் ரெட்டிகளும்?

 
அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே ஆட்சியில் இருக்கும் போது கழுத்தை அறுப்பது, ஆட்சியில் இல்லாதபோது கட்டுப்போடுவதுபோல் நடிப்பது என்பதையே தங்கள் ஒரே கொள்கையாய் வைத்திருக்கின்றன. மக்கள் இவர்களை இனம்கண்டு துடைத்தழிக்க முன்வராதவரை நம்மில் படிந்திருக்கும் துயரத்தின் கறைகளை நீக்க முடியாது.

ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே


கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரிடம் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட பழமைவாத இந்து அமைப்புகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருந்தாராம். உலகில் பலருடைய, பல நாடுகளுடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கும் விக்கிலீக்ஸ் இதையும் வெளிக் கொண்டுவந்திருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் இரட்டை வேடம்தான் என்றாலும் அந்தக் கூற்றில் தவறேதும் இல்லை, சரியானது தான். ஆனாலும், அது முழு உண்மையையும் வெளிப்படுத்திவிட்டதாக கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்து அமைப்புகள் எனும் சொல்லின் பொருளில் காங்கிரசும் உள்ளடங்கியுள்ளது.

 
பாஜக தொடங்கி ஆர்.எஸ்.எஸ், சிவசேனா உட்பட அனைத்து இந்து அமைப்புகளும், ராகுல் ஒரு கத்துக்குட்டி என்பது முதல் காங்கிரஸ் பொறுப்பற்ற கட்சி என்பது வரை நாளிதழ்களில் அறிக்கைவிட்டு ‘உள்ளேன் ஐயா’ கூறியுள்ளன. தொண்டர்களோ உருவ பொம்மை எரிப்பதுவரை போய்விட்டனர். மோடி, “ராகுல் பாகிஸ்தான் ஆதரவாளர்” என்கிறார்; வெங்கையா நாயுடு, “பொறுப்பற்ற பேச்சு, இந்தியாவை பலவீனப்படுத்தும்” என்கிறார்: பால் தாக்கரே, “இந்து மதத்திற்கு எதிரான சகிக்க முடியாத கருத்து” என்கிறார்; உமாபாரதி, “நேரு குடியரசு அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் க்கு இடம் கொடுத்தார் தெரியுமா?” என்கிறார்; ஆர்.எஸ்.எஸ், “உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டு தூதரிடம் பேசலாமா?” என்கிறது. ஆனால் மறந்தும் கூட ஒருவராவது, அவர் சொன்னது தவறு இந்து அமைப்புகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை என்று கூற மறுக்கிறார்கள். ஏனென்றால் அப்படிக் கூறினால் மக்கள் வேறொரு வாயால் சிரிப்பார்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். பின் எதற்கு இந்த கூச்சல்?

 
பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக அடிவாங்கி முடங்கிக்கிடந்த பாஜகவை ஸ்பெக்ட்ரம் ஊழல் விழித்தெழ வைத்தது ஊழலை எதிர்த்து ஏனையோருடன் இணைந்து இருபது நாட்களுக்கும் அதிகமாக இவர்கள் நடத்திய ‘கூச்சல் குழப்ப’ போராட்டத்தினால்(!) மக்கள் மத்தியில் ஊழலை எதிர்ப்பவர்கள் என்று தங்களுக்கு மதிப்பு வந்துவிட்டதாக மிதந்து கொண்டிருந்தவர்களுக்கு, குளிர்கால கூட்டத்தொடர் முடிந்துவிட்டது ஒரு ஆற்றாமையை ஏற்படுத்தியிருந்தது. அதிலிருந்து விடுபட சரியான நேரத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ராகுல் பேச்சை பயன்படுத்திக்கொண்டு அடுத்த சுற்றை தொடங்கிவிட்டனர்.
பண்டைக்காலம் முதல் இன்றுவரை இந்துமத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாகவே இருந்துள்ளன என்பதை யாரால் மறுக்க முடியும்? பார்ப்பனீயத்தை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட பௌத்தம், சாங்கியம் போன்றவற்றை தின்று செரித்தது பயங்கரவாதமில்லையா? நந்தன், வள்ளலாரை எரித்துக்கொன்றுவிட்டு ஜோதியில் கலந்ததாக கதை கட்டிவிட்டது பயங்கரவாதமில்லையா? வில்லை இனி தொடக்கூடாது என்பதற்காக ஏகலைவன் கட்டைவிரலை வெட்டியெறிந்துவிட்டு குருதட்சனை என்று கூசாமல் கூறியது பயங்கரவாதமில்லையா? ஒரு கிழவனை இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக்கொண்டு கொன்றது பயங்கரவாதமில்லையா? இந்தியாவெங்கும் கொலைவெறிபிடித்து நடத்திய கலவரங்கள் பயங்கரவாதமில்லையா? காலிஃபிளவர் வயலுக்கு இரத்தப்பாசனம் செய்த பகல்பூர் படுகொலைகள் பயங்கரவாதமில்லையா? எப்படி உயிருடன் எரித்தோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம் என செய்முறை விளக்கங்களுடன் சொல்லிக்காட்டிய குஜராத் வெறியாட்டங்கள் பயங்கரவாதமில்லையா? யாருக்குச் சொந்தமான இடம் என அறுபடு ஆண்டுகளாக நடந்த வழக்கில் நாங்கள் அப்படி நம்புகிறோம் ஆகவே உங்களுக்கு இடமில்லை என கட்டப்பஞ்சாயத்து செய்ய‌ வைத்தது பயங்கரவாதமில்லையா? மக்களில் பெரும்பாலானோரை தீண்டத்தகாதவன் என ஒதுக்கிவைத்திருக்கும் இந்துமதமே பயங்கரவாதமில்லையா?

 
பிஜேபியினரும் இந்து அமைப்பினரும் குதிக்கத்தொடங்கியதும், நான் அப்படிக் கூறவில்லை எல்லா பயங்கரவாதங்களும் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று தான் கூறினேன் என்று பின்வாங்கியிருக்கிறார் ராகுல். காங்கிரசோ இதில் ஏதோ சதி இருக்கிறது என்று ஐயப்பட்டிருக்கிறது. ஆனால் இதை இவர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் சிமியும், ஆர்.எஸ்.எஸ் ம் பயங்கரவாத அமைப்புகள் தான் என்று ராகுல் பேட்டியளித்தார். காவி பயங்கரவாதம் என சிதம்பரம் கூறினார். ஆக இது வெளிப்பட்ட ரகசியமல்ல, காங்கிரஸின் தற்போதைய வேலைத்திட்டமே, இந்து அமைப்புகளை பயங்கரவாத அமைப்புக‌ள் என்று தாக்குவது தான். இது ஒரு ஓட்டுப்பொறுக்கி அரசியல் உத்தி தானேயன்றி, இந்து அமைப்புகள் என்று தன்னிலிருந்து பிரித்துக்காட்ட காங்கிரஸுக்கு எந்த தகுதியும் இல்லை.தான் ஒரு இந்து சனாதனி என காந்தி அறிவித்துக் கொள்ளவில்லையா? ஆர்.எஸ்.எஸில் உறுப்பினராக இருந்தவர்கள் காங்கிரஸிலும் உறுப்பினர்களாக, தலைவர்களாக, பிரதமராக‌ இருக்கவில்லையா? காந்தி கொலையினால் தடைவிதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எ உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடையை விலக்க காய் நகர்த்தியது காங்கிரஸ்காரகளில்லையா? முஸ்லீம்களா கொள்ளையடிக்கப்பட்ட கோவில் என்று சோமநாத ஆலயத்தை புதுப்பிக்கும் அரசியலைக் கையிலெடுத்து இந்து வெறியை ஊட்டியது இராஜேந்திர பிரசாத் இல்லையா? தற்போதைய பிஜேபி யின் வசனமான பசுவதை தடைச்சட்டம் என்பதை வடமாநிலங்களில் அமலுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் இல்லையா? உபி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ் டன் இளைஞர் காங்கிரஸும், காங்கிரஸ் சேவாதளமும் இணைந்து படுகொலைகள் புரியவில்லையா? திருட்டுத்தனமாய் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமர் பொம்மையை வழிபட கதவைத்திறந்தது ராஜீவ் இல்லையா? 92 மசூதி இடிப்பின் போது ஒரு லட்சம் ராணுவத்தினர் மசூதியை இடிப்பதற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா?

 
பிஜேபி இந்து அமைப்புகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை. இஸ்லாமிய மக்கள் மீது காங்கிரஸுக்கு எவ்வித அக்கரையும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு இந்து மக்கள் மீது பிஜேபி க்கும் ஒரு அக்கரையும் இல்லை என்பதும் உண்மையே. எதிரும் புதிருமான கொள்கைகளை கொண்டிருப்பதைப்போல் படம் காண்பிக்கும் இந்த இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது செயல்படுத்திய கொள்கை ஒன்றுதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம். விலைவாசி எட்டமுடியாத உயரத்தில் நிற்பது தொடங்கி, இன்று மலைக்க வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்வரை அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் இருப்பது இரண்டு கட்சிகளும் தட்டாமல் செயல்படுத்தும் இந்த பொருளாதாரக் கொள்கைகள் தான்.


இந்து என்றும் முஸ்லீம் என்றும் கிருஸ்தவம் என்றும் பேதம் பார்க்காமல் லவ்ஹூல் மஹ்பூழ் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் தீர்க்க தரிசனம் நிறைவேறும் நிமித்தமாக ஏவப்படும் பிரம்மாஸ்திரமாய் உழைக்கும் மக்களைத் தாக்கும் தனியார்மய கொள்கைகளை அட்டியின்றி நிறைவேற்றிவரும் இக்கட்சிகள் நடத்தும் நாடகத்தை சிந்திக்கும் மக்களால் மதிக்க முடியுமா? மக்கள் கழுத்தறுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொண்டு இந்து என்றும் முஸ்லீம் என்றும் பக்கம் பிரித்து வரும் இவர்கள் முகத்தில் காறி உமிழாமல் மக்களுக்கு ஒரு விடிவும் இல்லை.


மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி 09

அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதும், குறைவான சர்வதேசிவாதிகளாக நாம் மாறி விடுவது தான் கம்யூனிசம் என்றான் குருசேவ்

ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் “எந்த ஒரு சிறு பகுதி யுத்தமும், ஒரு உலக யுத்தம் என்ற காட்டுத் தீயை மூட்டிவிடும்” என்றான்.  “அணு ஆயுதமற்ற சாதாரணப் போராக உருவெடுக்கும் எந்த விதமான போரும் சர்வநாசம் விளைவிக்கும் பெரும் அணு ஆயுத எவுகணை யுத்தமாக வளர்ச்சி பெறும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் நிராகரித்தான். குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து கம்யூனிச அடிப்படைகளை கழுவில் எற்றிய நிகழ்வை வரவேற்ற அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி, உலகம் முழுவதையும் கம்யூனிச மயப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு தன்னுடைய தேசிய நலன்களை மட்டுமே கவனிக்க வேண்டியிருக்கும், சமாதான சூழ்நிலைமைகளில் கீழ் தன் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தருவதை மட்டுமே அது கவனிக்க வேண்டியிருக்கும்” என்றார். ஸ்டாலின் தூற்றப்பட்ட, மார்க்சியம் மறுக்கப்பட்ட நிகழ்வையும் ஏகாதிபத்தியங்கள் கொண்டாடின. ஸ்டாலினிடம் இருந்து மாறுபட எதைச் செய்ய வேண்டும் என்பதை குருச்சேவுக்கு தெளிவாக அறிவுறுத்தினர். ஸ்டாலின் சர்வதேச கம்யூனிச இயக்கத்தை வழி நடத்தியபடி வர்க்கப் போராட்டத்தை நிகழ்ச்சி நிரலாக முன்வைத்து நடத்திய போராட்டங்களையும், உலகளவிய பல்வேறு தொடர்ச்சியான எழுச்சிகளையும் நிறுத்த வேண்டும் என்பதே ஏகாதிபத்தியத்தின் கொள்கை. இதையே குருச்சேவ் கம்யூனிசம் என்றான். டிராட்ஸ்கிகள் ஆசையாக ஸ்டாலின் அதிகாரம் தகர்கின்றது என்று கூறி மகிழ்ந்தனர். அமெரிக்கா ஜனதிபதியின் வேண்டு கோள்களை குருச்சேவ் சிரமேற்றான்.

குருச்சேவ் ஒடுக்கப்பட்ட காலனிய நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையிலான “சமதான சகவாழ்வு” என்பதே கம்யூனிசம் என்றான். சமதான சகவாழ்வு “தேசியப் பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சியடைய” செய்யும் என்றான். இதனால் “அவற்றின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை”  உருவாக்கி, உள்நாட்டு சந்தையில் “ஒப்பிட முடியாத அளவு வளர்ச்சியடை”யும் என்றான். இதனால் ஏகாதிபத்தியங்களுக்கு காலனித்துவ பொருட்கள் அதிகம் கிடைக்கும் என்றும் “உயர் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாட்டிலுள்ளவர்களின் வாழ்க்கை தரத்தை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தும் என்றான். எனவே சமதான சகவாழ்வை முன் எடுத்து, கம்யூனிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை கைவிட அழைத்தான். கட்சிகளை முதலாளித்துவ கட்சியாக்கினான். ஸ்டாலின் பற்றிய மதிப்பை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்த கூவி அழைத்தான். ஆனால் ஸ்டாலின் பாட்டாளி வர்க்கத்துக்கு என்ன சொன்னார். நமது முன்னேற்றத்தைத் தடுக்க சர்வதேச மூலதனம் தன்னால் இயன்றதனைத்தையும் செய்யும் என்பதால் ரசியத் தொழிலாளி வர்க்கத்தைத் சுற்றி எல்லா நாடுகளின் பாட்டாளி வாக்கத்தையும் ஒடுக்கப்பட்டோரையும் ஒன்று திரட்டும் புரட்சிகர கொள்கையை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றோம்” என்றார். குருச்சேவோ இதை கைவிடக் கோரினான். நாம் முன்னேற முதலாளிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றான். முதலாளிகளுக்கு அதிகம் உழைத்து கொடுத்து லஞ்சம் பெற்று முன்னேற ஒவ்வொரு நாட்டு கட்சியும் முயல வேண்டும் என்றான். இதை அமெரிக்கா அதிகார வர்க்கத்தைச் சோந்த டல்லல் நீண்ட காலக் கண்ணோட்டத்தில், ஆம் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் நிச்சயம் என்று நான் சொல்வேன் – அவர்கள் இன்னும் அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதற்கும், இன்னும் குறைவான சர்வதேசிவாதிகளாகி விடுவதற்கும் எற்ற வகையில் ரசிய ஆட்சியாளர்களின் இன்றைய கொள்கைகளில் பரிணாம வளர்ச்சி இருக்கும்” என்று, குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை வருணித்தான். ஏகாதிபத்தியம் இப்படி வருணித்த போது டிராட்ஸ்கிகள் ஸ்டாலின் அதிகாரம் தகர்கின்றது, சோசலிசம் முன்னேறுகின்றது என்று கூறி குருச்சேவுக்கு பாரட்டுகளை வாரிவழங்கினர்.

அதை எற்றுக் கொண்ட குருச்சேவ் “தற்போது சமாதானம் மற்றும் சகவாழ்வுக்காக மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களும், பல அரசுத் தலைவர்களும் முன்வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, சமாதான சகவாழ்வின் அவசியத்தை மேலும் மேலும் தெளிவாக புரிந்து கொண்டு வருகிறார்கள்” என்றான். “நவீன கால சமுதாயம் முழுமைக்கும் வாழ்க்கையின் அடிப்படை விதியாக இது உள்ளது” என்றான். வர்க்க மோதலற்ற, மார்க்சியத்தை குழி தோன்டி புதைத்த சமாதியின் மேல் நின்று, இப்படி எதார்த்தத்தை தலைகீழாக்கி காட்ட முடிந்தது. இதை பிரதிபலித்த கென்னடி தனது அறிக்கையில்”வேறுபட்ட சமுக அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கிடையில் சமாதான சகவாழ்வின் பகுத்தறிவுக்கு ஒத்த தன்மையையும் நடைமுறை சாத்தியப்பாட்டையும் அங்கீகரித்தை நாம் மெச்சாமல் இருக்க முடியாது” என குருச்சேவை பாராட்டுகிறார். இதில் இருந்து தான் ஸ்டாலின் முற்றாக வேறுபடுகின்றார். இதனால் டிராட்ஸ்கிகள் முதல் குருச்சேவ் மற்றும் ஏகாதிபத்தியவாதிகள் வரை ஸ்டாலினை தூற்றினர்.

ஸ்டாலினை தூற்றியவர்கள் துற்றுபவர்கள் அனைவரும் வர்க்க அடிப்படையைக் கைவிட்டனர். கைவிடுகின்றனர். குருச்சேவ் மட்டும் என்ன விதிவிலக்கா? இல்லை.  1956 இல் “பாட்டாளி வர்க்கம் உழைக்கும் விவசாயிகள், புத்திஜீவிகள், தேசபக்த சக்திகள் ஆகியவர்களை அணிதிரட்டியும், முதலாளிகள், நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்யும் கொள்கையை விட்டுவிடத் திராணியற்ற சந்தர்ப்பவாதிகளை உறுதியோடு தூக்கியெறிந்தும், மக்களின் விருப்பத்துக்கு எதிராக நிற்கும் பிற்போக்கு சக்திகளை முறியடித்தும் பாராளுமன்றத்தில் ஒரு நிலையான பெரும்பான்மையை பெறக் கூடிய நிலை இருக்கின்றது” என்றான். இதன் மூலம் உலகப் புரட்சி வெல்லும் என்றான். சட்டவிரோதமான கட்சி வடிவத்தையே நிராகரித்து சட்டபூர்வமான கட்சியை மட்டும் கட்டவேண்டும் என்றான். பராளுமன்றம் அல்லாத அனைத்து புரட்சிகர வழியையும் பாட்டாளி வர்க்கம் கைவிட வேண்டும் என்றான். ஸ்டாலின் ஒரு கொடுங்கோலனாக இருந்து இதை அனுமதிக்க மறுத்தாக கூறி, தனது முதலாளித்துவ மீட்சிக்கு விளக்கமளித்தான். இந்த முதலாளித்துவ மீட்சிக்கான கூறுகளைப் பற்றி லெனின் தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாத போக்கை கடைப்பிடிக்கும் நபர்கள் முதலாளிகளைப் பாதுகாப்பதில், முதலாளிகளையே விஞ்சி நிற்கிறார்கள் என்பதை முதலாளிகள் புரிந்து கொண்டுள்ளதை காணமுடியும்” என்றார். இந்த நிலையில் ஏகாதிபத்திய பிரதிநிதிகள் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை முதலாளித்துவ மீட்சியை  தெளிவாகவே இனம் கண்டு பராட்டினர். பிரிட்டிஸ் பிரதமர் டக்ளஸ் ஹோம் ரசிய கம்யூனிசம் கல்வியையும், சாப்பாட்டையும் முதலில் வைத்துள்ளதாக திரு.குருச்சேவ் கூறியுள்ளார். இது நல்லது யுத்த-கம்யூனிசத்தை விட சாப்பாட்டுக் கம்யூனிசம் நல்லது. மெலிந்த, பசியுடன் உள்ள கம்யூனிஸ்டுகளைவிட கொழுத்த, வசதியான கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள், இதை அறிந்த நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என்றார். வசதியான ஏகாதிபத்திய கம்யூனிசமே எமக்கு வேண்டும் என்ற முதலாளித்துவ மீட்சியை ஆதாரித்தோர் கொண்டாடினர். டிராட்ஸ்கிகள் இதுதான் சோசலிசம் என்றனர்.

குருச்சேவ் வேகமாகவும் விரைவாகவும் மார்க்சியத்தை மறுத்தான். இதற்காக ஸ்டாலினைத் தூற்றினான். அவன் சொன்னான் “தொழிலாளர் வர்க்கம் நாட்டில் ஒரு வலிமைமிக்க புரட்சிகர இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பிடித்து அதனை ஒரு மக்கள் அதிகாரத்தின் கருவியாக மாற்றுவது என்பதன் பொருள், முதலாளி வர்க்கத்தின் இராணுவ அதிகார வர்க்க இயந்திரத்தை அழித்து அவ்விடத்தில் பாராளுமன்ற வடிவிலான ஒரு புதிய பாட்டாளி வர்க்க மக்கள் அரசை நிறுவுவது என்பதாகும்” என்றான். மார்க்சியத்தின் அடிப்படைகளை எல்லாம் மறுத்து, முதலாளித்துவத்தை கம்யூனிசமாக சித்தரிக்கும் இவன் தான், ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தை தகர்த்தான். பலரை சிறையில் தள்ளியதுடன், பலருக்கு மரண தண்டனையை வழங்கினான். கட்சியை முற்றாக களையெடுத்தான். முன்னாள் முதலாளித்துவ மீட்சியாளர்களை சிறையில் இருந்து விடுவித்ததுடன், பலருக்கு அரசியலில் புனர்ஜென்மம் வழங்கினான். சோவியத்யூனியனின் நிறமே மாறியது. கம்யூனிச இயக்கமே உலகளவில் அமைதி சமாதனம் என்று கூறி, மக்களின் முதுகில் எறிக் கொண்டது.

இதை எதிர்த்த சீனா கம்யூனிச கட்சியையும், உலக கம்யூனிஸ்ட்டுகளையும் தூற்றிக் காட்டிக் கொடுத்தான். டிராட்ஸ்கிகள் இவர்களை ஸ்டாலினிஸ்ட்டுகள் என்று வசைபாடிய படி, ஏகாதிபத்திய முதுகில் தொற்றிக் கொண்டனர். உலக கம்யூனிச இயக்கத்தை தூற்றிய குருச்சேவ் மூலதனத்துக்காக தலைகீழாக நின்றார். இதை ஒட்டி அமெரிக்கா விடுத்த செய்தி மற்றும் உலகம் பற்றிய அறிக்கையில் அவர் (குருச்சேவ்) சீனாவுடனான உறவைத் தவறாகக் கையாண்டதற்காக, நாம் அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம்… சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் அமைதியான பணிகள் மூலமும், பல்வேறு அதிர்ச்சியூட்டும் திடீர் நடவடிக்கைகள் மூலமும் குழப்பங்களைத் தோற்றவித்ததற்காக நாம் குருச்சேவ் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டனர். நியூஸ்வீக் தனது செய்தியில் செஞ்சீனாவுடன் குருச்சேவ் மேற்கொண்டுள்ள தகராறில் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் கருதுகின்றது” என்று ஏகாதிபத்திய கொள்கையை பளிச்சென்று வெளியிடுகின்றது. முதலாளித்துவ மீட்சிக்கு எதிராக உலகில் இருந்தவர்கள் சீனா தலைமையிலான கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே. டிராட்ஸ்கி அவதூறான பொழிப்புரையில் சொன்னான், ஸ்டாலினிஸ்ட்டுகள் மட்டும் தான். மற்றய அனைவரும் எதோ ஒரு வகையில் அமெரிக்காவின் நிலையுடன் ஒன்றுபட்டு நின்றனர். இதையே 1958 இல் அமெரிக்கா செனட்டர் ஹெச்.ஹெச் ஹம்ஃப்ரேயுக்கு குருச்சேவ்வுடன் உரையாடிய போது சீனாவின் மக்கள் கம்யூன் சராம்சத்தில் பிற்போக்கானவை” என்றார். உலக கம்யூனிச அடிப்படைகள் நிராகரிக்கபட்டன. அவை கொச்சைப்படுத்தப்பட்டன. அவை ஸ்டாலினிசம் என கேவலப்படுத்தப்பட்டது.

இது கீழை நாடுகளில் வெற்றி பெறவில்லை என்று கூறி, டிராட்ஸ்கியம் அங்கலாய்க்கின்றது. அது தம்முடன் மட்டும் சுருங்கிப் போனது என்ற கூறி புலம்பவும் தயங்கவில்லை. இன்று ஸ்டாலினிசம் என்ற பதம் இலங்கை, இந்தியச் சூழல்களில் டிராட்ஸ்கியவாதக் குற்றச்சாட்டாய் மட்டுமே குறுகிப் போய் நிற்கின்றது.”போதிய முதலாளியம் வளர்ந்திராத ஜனநாயகம், மனித உணர்வுகள் பற்றிய போதிய விழிப்புணர்ச்சியற்ற சூழலில் வாழும் பெரும்பாலான கீழைத்தேச ஸ்டாலினிச அமைப்புகள் தாம் வாழும் சமூகத்தின் நிலைகேற்ப விவசாய சமூகக் குணாம்சங்களின் முரட்டுத்தனத்தோடு ஸ்டாலினிசத்தை அரவணைத்துக் கொள்கின்றன” என்று டிராட்ஸ்கியம், மார்க்சியத்தின் வளர்ச்சியைக் கண்டு புலம்புகின்றனர். மேற்கு நாடுகளைவிட மற்றய நாடுகளில் நடக்கும் கூர்மையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய வர்க்கப் போராட்டங்கள் அனைத்தும், ஸ்டாலினை தமது அரசியல் வழிகாட்டுதலாக கொள்கின்றன. இதனால் தான் ட்ராட்கியம் புலம்புகின்றது. மேற்கில் இந்த போக்கு இல்லாமைக்கு கூறும் விளக்கம் அர்த்தமற்றவை. உண்மையில் மேற்கில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய வர்க்கப் போராட்டங்கள், நிகழ்ச்சிகள் நிரலில் இல்லை என்பதே உண்மை. தன்னெழுச்சியான இயக்கங்கள், மார்க்சிய தத்துவ வழிகாட்டல் அற்ற  போக்குகள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய எந்த உணர்வுபூர்வமான செல்பாடுகளும் குறிப்பிடக் கூடிய அளவுக்கு கிடையாது. இந்த போக்கு விதிவிலக்கின்றி நிச்சயமாக ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மார்க்சிய அடிப்படையுடன் மட்டும் தொடர்புடையது. 1950 களில் இறுதியில் தொடங்கிய சீராழிவு, கடந்தகால வர்க்கப் போராட்ட வெற்றிகளைக் கூட காப்பாற்ற வக்கற்றுப் போயுள்ளது. ஸ்டாலின் எந்தளவுக்கு மிதிக்கப்படுகின்றரோ, அந்தளவுக்கு மக்களின் அடிப்படை நலன்களும் மிதிக்கப்பட்டு சிதைக்கப்பட்டதை தாண்டி, தொழிலாளர்கள் எந்த உரிமையையும் மேற்கில் வென்று எடுக்கவும் இல்லை, பாதுகாக்கவும் முடியவில்லை.

டிராட்ஸ்கிகள் “ஸ்டாலினிசம் என்பது… ஸ்டாலினைப் பழிக்கும் அரசியலற்ற வெறும் புனைந்துரையல்ல. மாறாக அது அரசியல் அதிகாரத்துவப் போக்கை குறிப்பதாகும்” என்று கூறி பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிச உள்ளடக்கமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகார அமைப்புகளை சிதைப்பதையே குறித்துக் காட்டுகின்றனர். இதை பிரதிபலித்த நியூயார்க் டைம்ஸ் குருச்சேவின் இரகசிய அறிக்கை குறித்த 1956 இல் எழுதிய போது கம்யூனிச இயக்கத்தின் மதிப்பையும், செல்வாக்கையும் சிதைப்பதற்கான ஆயுதமாக உள்ளது” என்று கூறி, அதை பாதுகாக்க கோரியது. குருச்சேவ் சொன்ன “சமாதான முறையில் பரிணாமம்” என்ற கம்யூனிசத்தையே ரசியாவிலும் மற்றயை சோசலிச நாடுகளிலும் அமுல்படுத்துவதையே, ஜான் பாஸ்டர் டல்லல் என்ற அமெரிக்கா ஏகாதிபத்தியவாதி கோரினான்; அவன் மேலும் அதிக அளவு தாராளவாதத்திற்கான கூறுகள் ரசியாவில் இன்று காணப்படுகின்றன. இது தொடர்ந்தால், அவை ரசியாவில் ஒரு அடிப்படை மாற்றத்தையே கொண்டு வரும்” என்றான். இதைத்தான் டிராட்ஸ்கிகளும் கோரினர். அமெரிக்காவும் மற்றைய ஏகாதிபத்தியங்களும் விரும்பிய இந்த அடிப்படையான மாற்றம், முதலாளித்துவ மீட்சிதானே ஒழிய, வேறு ஒன்றும் அல்ல. இதைத்தான் டிட்டோவும், டிராட்ஸ்கியும் விரும்பியதுடன் பரஸ்பரம் ஸ்டாலினை தூற்றுவதன் பெயரில் தம்மைத் தாம் நியாப்படுத்திக் கொண்டனர்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.

 

கடந்த ஓராண்டாக “இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் தொடர் செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இது பரவலாக கவனம் பெற்ற தொடராக இருந்துவருகிறது. இத் தொடரை தொடங்கும்போது அனைத்து திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் மறுப்பும் கிளம்பிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் அறிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மறுப்பேதும் வரவில்லை. இத்தொடருக்கு வந்த எதிர்ப்பின் அளவில் கூட மறுப்புரைகள் வரவில்லை. இது என்னில் ஏமாற்றத்தையே உண்டாக்கியது என்றால் அது மிகையான கூற்றல்ல‌.

 

இந்நிலையில் நண்பர் சலாஹுத்தீன் என்பவர் தன்னுடைய தளத்தில் இத்தொடருக்கு மறுப்பு எழுதுவதாக என்னிடம் தெரிவித்தார். அவர் எழுதிய ஓரிரு பகுதிகளில் நானும் சென்று என்னுடைய விளக்கங்களை பின்னூட்டமாக வைத்தேன். (அதை இங்கு காணலாம்)பின்னர் அவர் தன் தொடரை நிறுத்திவிட்டு என்னிடம் விவாதிக்க விரும்புவதாகத்தெரிவித்தார். அந்த விவாதமும் இடையில் நின்றுபோனது. இந்த விவாதம் நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பின் கீழ் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது முஹ‌ம்மது இஹ்சாஸ் என்பவர் இஸ்லாம் குறித்த தொடருக்கு மறுப்பு எழுதுவதற்கென்றே தனியாக ஒரு தளத்தை தொடங்கி, முறைப்படி எனக்கு அறிவிக்கவும் செய்திருக்கிறார். இதுவரை அவர் நான்கு பகுதிகளை எழுதியுள்ளார். தொடக்கத்தில் அதை நான் பொருட்படுத்தவில்லை காரணம், அத்தொடர் தொடருமா என்பதில் எனக்கிருந்த ஐயம் தான். ஆனால் மறுப்புகளை எழுத அவர் எடுத்துக்கொள்ளும் முனைப்பு அத்தொடர் தொடர்ந்து வெளிவரும் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தது. எனவே அந்த மறுப்பிற்கான விளக்கத்தை அளிக்கவேண்டிய தேவை எழுகிறது. மட்டுமல்லாது, இஸ்லாம் குறித்த தொடரின் கடந்த பதிவுகளை மேலதிக விளக்கங்களுடன் கூர் தீட்டவும் பயன்படும் என்பதாலும் இது இன்றியமையாததாகிறது. நண்பர் முஹம்மது இஹ்சாஸ் தன் தொடரை தொடரும் வரை இதுவும் தொடராக வெளிவரும். தொடக்கத்தில் அவருடைய தளத்திலேயே பின்னூட்டமாக பதிவு செய்யலாம் என எண்ணினேன். ஆனால், இஸ்லாம் குறித்த தொடரை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு அதன் மறுப்பையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதாலும் இத்தொடரை தொடங்குகிறேன்.

 

தோழமையுடன்

செங்கொடி

 

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௧

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

தம்முடைய முதல் பதிவை நேரடி விவாதம் பற்றிய சுட்டலுடன் தொடங்கியுள்ளார். அதுகுறித்த விளக்கத்துடனே நானும் தொடங்குகிறேன்.

 

“இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் இந்தத்தொடர், பிஜேவுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதல்ல. நிகழ் உலகின் சுரண்டல்களுக்கு எதிராக, அதிகார வர்க்கங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியுமா எனும் எண்ணத்தில், அனைத்து மதங்களுமே வர்க்கச் சுரண்டல்களுக்கு ஆதரவாகவும், அதை எதிர்க்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன என்றாலும், நான் பிறந்த மதம் எனும் அடிப்படையில் இஸ்லாமிய புனிதங்களுக்கு எதிராக உண்மைகளைப் பேசுவதனூடாக சமூகப் போராட்டங்களுக்கு பயணப்படவைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதுதான்.

 

இந்தத்தொடரைத் தொடங்கியது முதலே பிஜே அவர்களுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ளுங்கள் என்று குறைவாகவும் கூடுதலாகவும் பல வடிவங்களில் எதிர்வினைகள் வந்தன. அதில் சில கட்டுரைகள் கடந்தபின் நண்பர் அப்துல் லத்தீப் சென்னையில் நடக்கும் விவாதத்தில் நீங்களும் பங்குகொள்ள முடியுமா என கேட்டிருந்தார். அதற்கு நான் சாத்தியமில்லை என்றும் எழுத்தில் தயார் என்றும் பதிலிறுத்திருந்தேன். இதன்பிறகே ‘இனிமை’ என்பவர் செங்கொடி தளத்திற்கான சுட்டியை இணைத்து, இதற்கு நீங்கள் பதிலளிக்க முடியுமா என பிஜேவிடம் கேட்கிறார். அவர் தன் கடிதத்தை இப்படித் தொடங்குகிறார்,

 

“தயவுசெய்து கீழேயுள்ள லிங்கை பார்வையிடுங்கள். அதில் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சில தமாஷான கட்டுரைகளை வெளியுட்டுள்ளார். முக்கியமாக தங்களுடைய குரான் மொழியாக்கத்தையும் அறிவியல் ஒப்பீட்டையும் தான் அதிகளவில் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். நாத்திகர்கள் எடுத்துவைத்த வாதங்கள் போன்று இருந்தாலும் இதற்குப் பதில் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்”

 

இதுதான் அவரது கடிதத்தின் முக்கியப் பகுதி. அதாவது நான் நேரடி விவாதத்திற்கு வரமுடியாது என மறுத்துவிட்ட நிலையில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே அவரது கடிதத்தின் நோக்கம். மேலதிக விபரமாக நேரடி விவாதத்திற்கு அழைத்து, மறுத்த விபரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதற்குப் பதிலளித்த பிஜே அவர்கள், கடிதத்தின் நோக்கமான பதிலளிப்பது என்பதை கவனமாக தவிர்த்துவிட்டு, நேரடி விவாதத்திற்கு வரச்சொல்லுங்கள் நாம் தயார் என பதிலளித்திருந்தார். எழுத்தில் தயார் நேரடியாக இயலாது என்பது என் நிலை, எழுத்தில் இயலாது நேரடியாக தயார் என்பது அவர் நிலை. யாருக்கு எதில் வசதிப்படுகிறதோ அதில் பதிலளிப்பது எனும் யதார்த்தமான நிலைக்கான அவர் பதிலின் தொனி எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு \\ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது// இதுபோன்ற அணுகுமுறையின் விளைவாகவும், தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் மின்னஞ்சல்களின் விளைவாகவும் நேரடி விவாதத்திற்கு மறுப்பது என்னுடைய வசதியை அனுசரித்துத்தனேயன்றி பயத்தினால் அல்ல என்பதை வெளிக்காட்டவேண்டி நேரடி விவாதத்திற்கு சம்மதித்தேன்.

 

ஆனால் எந்த நோக்கத்திற்காக நான் எழுதத்தொடங்கினேனோ அந்த நோக்கத்திற்கு நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே பொருத்தமானது என்பதோடு மட்டுமல்லாது, நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே சிறந்ததாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னுடைய அந்த உணர்தலை வெளிப்படுத்தும் விதமாகவும், எப்போது விவாதம் செய்யப்போகிறீர்கள் என தொடர்ந்துகொண்டே இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் நான் ஏன் பிஜேவுடன் நேரடி விவாதம் செய்யவேண்டும் எனும் இடுகையாக வெளியிட்டேன். என்னுடைய இந்த முடிவை தோழர்கள் சிலரும் மீளாய்வு செய்யுமாறு கேட்கிறார்கள். எது நோக்கத்திற்கு சரியானது? எது சிறப்பானது? என்பதில் நான் நின்றுகொண்டிருப்பதால் வடிவத்திற்கு முதன்மையளிக்கவில்லை.

 

காலத்துக்கு காலம் இஸ்லாம் மட்டுமே அனைவராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக நண்பர் கூறுவது தவறு. உலகின் விமர்சனமின்றி கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்று எதுவுமில்லை. அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டே வருகிறது. ஆனால் விமர்சனத்தை எதிர்த்து வளர்வது சரியான வளர்ச்சியல்ல. விமர்சனத்தை உள்வாங்கி அலசிப் பார்த்து தன்னுள் தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்வதே சரியான வளர்ச்சி.

 

பிஜே அவர்கள் பதிலில் தென்படுவதாக நான் குறிப்பிட்ட அதே தொனி நண்பரின் மறுப்பிலும் தொழிற்படுகிறது. மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி.

 

குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௮


குரான் பலவகையான உயிரினங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ௧) கழுதை, தேனீ போன்ற எல்லோருக்கும் அறிமுகமான பூமியில் இருப்பவைகள், ௨) எதிர்காலத்தில் தோன்றவிருப்பதாகவும், பூமியில் இருப்பதாகவும் ஆனால் மனிதர்களுக்கு  அறிமுகமில்லாத இரண்டு உயிரினங்கள். இதில் முதல்வகை  உயிரினங்கள் குறித்து அனைவரும் அறிந்திருப்பதால் விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. ஆனால் இரண்டாவதுவகை உயிரினங்கள் இஸ்லாமியர்கள் கேள்வியாக மட்டுமே அறிந்தது என்பதால் அவற்றை விவரிப்பது அவசியமாகிறது. பூமியில் மனிதன் வாழத்தொடங்கியது முதல், மனிதர்கள் கடவுளால் அழிக்கப்படும் நாள் வரை பூமியில் மனிதர்களூடே வாழ்ந்துகொண்டிருக்கும் ‘ஜின்’ எனும் உயிரினமும், யுகமுடிவு நாளின் அடையாளமாக பூமியிலிருந்து வெளிப்படுத்தப்படும் ‘தப்பாத்’ எனும் ஒருவகை மிருகமுமே அந்த உயிரினங்கள். இதில் தப்பாத் ஒரே ஒரு மிருகம் தான் ஜோடியோ இனப்பெருக்கமோ கிடையாது. ஆனால் ஜின்கள் அப்படியல்ல, மனிதர்களைப்போலவே உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து கொண்டிருப்பவைகள். மனிதனைவிட சில வகைகளில் மிகைத்த ஆற்றலுடைத்தவை, பறவைகளைப் போல் பறக்க முடிந்தவை. மனிதர்களை நல்வழிப்படுத்த(!) தூதர்களை அனுப்பியது போலவே ஜின்களுக்கும் தூதர்கள் உண்டு. குரானில் அனேக இடங்களில் ஜின்களை குறிப்பிட்டிருந்தாலும் தப்பாத் குறித்து ஒரு வசனம் தான். இந்த இரண்டு உயிரினங்களுமே பேசும் ஆற்றல் கொண்டவை என்பதும் ஷைத்தான் என பரவலாக அறியப்படுவதும் ஜின் வகையைச் சேர்ந்ததுதான் என்பதும் தனித்தன்மையானது.


இது குறித்த குரான் வசனங்கள்,


“மேலும் நாம் உம்மிடம் இந்த குர் ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரைத் திருப்பியதும், அவர்கள் அங்கு வந்தபோது ‘மௌனமாக இருங்கள்’ என்று சொன்னார்கள். முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்” குரான் 46:29


“அவர்கள் மீது வாக்கு நெருங்கும்போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம். அது நிச்சயமாக, மனிதர்கள் நம் வசனங்கள் மீது உறுதி கொள்ளவில்லை என்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்” குரான் 27:82


ஜின்கள் குறித்து ஏராளமான ஹதீஸ்கள் இருக்கின்றன. அவைகள் எங்கு தங்குகின்றன? எவற்றை உண்கின்றன? என்பன தொடங்கி ஜின்களுடன் மனிதனுக்குள்ள தொடர்புவரை விரிவாக பேசுகின்றன ஹதீஸ்கள். ஜோதிடர்கள் கூறுபவைகள் சில வேளை உண்மையாக நடந்துவிடுகிறதே அது எப்படி எனும் கேள்விக்கு, முகம்மது ‘வானவர்கள் பேசுவதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு தங்கள் நண்பர்களான ஜோதிடர்களிடம் கூறிவிடுகின்றன. அவர்கள் அந்த ஒன்றில் நூறு பொய்யைக் கலந்து ஜோதிடமாக கூறிவிடுகிறார்கள்’ என்கிறார். முகம்மதின் மனைவி ஆயிஷா கூறியதாக புஹாரி 6213 ல் இந்த ஹதீஸ் இருக்கிறது.


“நான் தொழுவதை ஒரு ஜின் தடை செய்ய நினைத்தது, அதை பள்ளிவாசல் தூணில் கட்டிவைத்து உங்களுக்கு காட்டலாம் என நினைத்தேன். ஆனால் ” பின்னாளில் எவருமே அடையமுடியாத ஆளுமையை எனக்கு வழங்குவாயாக” என சுலைமான் கேட்டுக்கொண்டதற்கு மாறாக அமைந்துவிடும் என்பதால் விட்டுவிட்டேன்” என முகம்மது ஓரிடத்தில் கூறியிருக்கிறார். இதுவும் ஹதீஸ்தான்


“நச்சுப்பாம்புகளை கொல்லுங்கள் ஆனால் நச்சில்லாமல் வீடுகளில் உலவும் பாம்பைக் கொல்லாதீர்கள், ஏனென்றால் ஜின்கள் பாம்புகளின் உருவத்தில் இருக்கின்றன. போய்விடு என மூன்றுமுறை கூறுங்கள், அதன்பிறகும் அவை போகவில்லையென்றால் பின்னர் அடியுங்கள்” என முகம்மது கூறுகிறார் இதுவும் ஹதீஸ் தான்.


மக்கள் வசிக்கும் நகரங்களில், குப்பை கொட்டும் இடங்கள், கழிப்பிடங்கள், ஒட்டகத் தொழுவங்கள், மண்ணறைகள், அடர்ந்த காடுகள், பாலைவெளிகள், குகைகள் இன்னும் பல இடங்களிலும் வசித்து எலும்புகளையும் காய்ந்த மலத்தையும் உணவாக உண்ணும், ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து இனப்பெருக்கம் செய்யும் நெருப்பினால் படைக்கப்பட்ட இந்த ஜின் எனும் உயிரினங்கள், உலகில் எங்கும் அகப்படவில்லை. இவ்வாறான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதற்கான சின்னஞ்சிறு தடயங்கள் கூட உலகில் தட்டுப்பட்டதில்லை. மனிதர்களைப் போல பல்கிப் பெருகிக்கொண்டிருக்கும் இந்த உயிரினங்களின் இருப்பினால் பூமியில் நிகழ்ந்த விளைவுகள் என்று எதுவும் அறுதியிடப்படவில்லை. ஆனாலும் இப்படி ஒரு உயிரினம் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் எப்படி? நாங்கள் ஏனைய மதத்தவர்களைப் போலல்ல குரான் எங்களை சிந்திக்கச் சொல்லியிருக்கிறது எனும் முஸ்லீம்கள் எந்த அடிப்படையில் ஜின்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கூற முடியுமா?


கடைசிக்கால ஒற்றை விலங்கான தப்பாத் எனும் உயிரினம் குறித்து ஜின்னைப்போன்ற விரிவான விபரங்கள் எதுவும் இல்லை. பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என கடவுள் முடிவெடுத்தபின்னர் இந்த விலங்கு பூமியைப் பிளந்து கொண்டு வெளிவரும். வெளிவந்து மனிதர்களைப் பார்த்து இவர் இறை வேதத்தை உண்மையாகப் பின்பற்றினார், இவர் பின்பற்றவில்லை, இவர் பின்பற்றுவது போல நடித்தார் என்று அவரவர்களின் நிலைக்கேற்ப அவர்களிடம் பேசி சான்றிதழ்கள் வழங்கும்.


புமியிலிருந்து தாவரங்கள் தானே முளைக்கும்? புழு பூச்சிகள் பொந்துகளில் வாழும், ஆனால் பூமியிலிருந்து திடீரென ஒரு உயிரினம் வெளிப்பட முடியுமா? அப்படி வெளிப்படும் ஒரு உயிரினம் உடனே பேச முடியுமா? எந்தப் பகுதியில் என்ன மொழியில் பேசும்? பேச்சு என்றால் என்ன? ஒரு உயிரினம் சமூக வயப்பட்டிருப்ப‌தன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? அதுவும் மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?


அல்லாவுக்கு இவைகளெல்லாம் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான், ஆண்டவனின் மகிமை இது என்பவர்களுக்கு அறிவியல் குறித்துப் பேச எந்த அறுகதையும் இல்லை. இன்று கண்டுபிடிக்கப்படும் அறிவியல் நுணுக்கங்கள் கூட குரானில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது,  என ஜல்லியடிப்பவர்கள் இந்த பேசும் உயிரிங்கள் குறித்து என்ன கூறுவார்கள்?
தான் விரும்பும் ஒழுங்கை மக்களிடம் கட்டியமைப்பதற்காக முகம்மது 23 ஆண்டுகளாய் சிந்தித்து சிறுகச் சிறுக கோர்த்துத்தொகுத்தது தான் இஸ்லாமும் குரானும், இதில் மக்களை ஈர்ப்புடன் பயணப்படவைக்க சேர்த்தவைகள் தான் இதுபோன்ற கதைகளும். இதை புனிதம் என்பதும் எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்ற ஓரிறை என்பதும் உயர்வு நவிற்சி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.


இத்தொடரின் முந்தைய பகுதிகள்

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

 

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌

%d bloggers like this: