குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௮


குரான் பலவகையான உயிரினங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ௧) கழுதை, தேனீ போன்ற எல்லோருக்கும் அறிமுகமான பூமியில் இருப்பவைகள், ௨) எதிர்காலத்தில் தோன்றவிருப்பதாகவும், பூமியில் இருப்பதாகவும் ஆனால் மனிதர்களுக்கு  அறிமுகமில்லாத இரண்டு உயிரினங்கள். இதில் முதல்வகை  உயிரினங்கள் குறித்து அனைவரும் அறிந்திருப்பதால் விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. ஆனால் இரண்டாவதுவகை உயிரினங்கள் இஸ்லாமியர்கள் கேள்வியாக மட்டுமே அறிந்தது என்பதால் அவற்றை விவரிப்பது அவசியமாகிறது. பூமியில் மனிதன் வாழத்தொடங்கியது முதல், மனிதர்கள் கடவுளால் அழிக்கப்படும் நாள் வரை பூமியில் மனிதர்களூடே வாழ்ந்துகொண்டிருக்கும் ‘ஜின்’ எனும் உயிரினமும், யுகமுடிவு நாளின் அடையாளமாக பூமியிலிருந்து வெளிப்படுத்தப்படும் ‘தப்பாத்’ எனும் ஒருவகை மிருகமுமே அந்த உயிரினங்கள். இதில் தப்பாத் ஒரே ஒரு மிருகம் தான் ஜோடியோ இனப்பெருக்கமோ கிடையாது. ஆனால் ஜின்கள் அப்படியல்ல, மனிதர்களைப்போலவே உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து கொண்டிருப்பவைகள். மனிதனைவிட சில வகைகளில் மிகைத்த ஆற்றலுடைத்தவை, பறவைகளைப் போல் பறக்க முடிந்தவை. மனிதர்களை நல்வழிப்படுத்த(!) தூதர்களை அனுப்பியது போலவே ஜின்களுக்கும் தூதர்கள் உண்டு. குரானில் அனேக இடங்களில் ஜின்களை குறிப்பிட்டிருந்தாலும் தப்பாத் குறித்து ஒரு வசனம் தான். இந்த இரண்டு உயிரினங்களுமே பேசும் ஆற்றல் கொண்டவை என்பதும் ஷைத்தான் என பரவலாக அறியப்படுவதும் ஜின் வகையைச் சேர்ந்ததுதான் என்பதும் தனித்தன்மையானது.


இது குறித்த குரான் வசனங்கள்,


“மேலும் நாம் உம்மிடம் இந்த குர் ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரைத் திருப்பியதும், அவர்கள் அங்கு வந்தபோது ‘மௌனமாக இருங்கள்’ என்று சொன்னார்கள். முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்” குரான் 46:29


“அவர்கள் மீது வாக்கு நெருங்கும்போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம். அது நிச்சயமாக, மனிதர்கள் நம் வசனங்கள் மீது உறுதி கொள்ளவில்லை என்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்” குரான் 27:82


ஜின்கள் குறித்து ஏராளமான ஹதீஸ்கள் இருக்கின்றன. அவைகள் எங்கு தங்குகின்றன? எவற்றை உண்கின்றன? என்பன தொடங்கி ஜின்களுடன் மனிதனுக்குள்ள தொடர்புவரை விரிவாக பேசுகின்றன ஹதீஸ்கள். ஜோதிடர்கள் கூறுபவைகள் சில வேளை உண்மையாக நடந்துவிடுகிறதே அது எப்படி எனும் கேள்விக்கு, முகம்மது ‘வானவர்கள் பேசுவதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு தங்கள் நண்பர்களான ஜோதிடர்களிடம் கூறிவிடுகின்றன. அவர்கள் அந்த ஒன்றில் நூறு பொய்யைக் கலந்து ஜோதிடமாக கூறிவிடுகிறார்கள்’ என்கிறார். முகம்மதின் மனைவி ஆயிஷா கூறியதாக புஹாரி 6213 ல் இந்த ஹதீஸ் இருக்கிறது.


“நான் தொழுவதை ஒரு ஜின் தடை செய்ய நினைத்தது, அதை பள்ளிவாசல் தூணில் கட்டிவைத்து உங்களுக்கு காட்டலாம் என நினைத்தேன். ஆனால் ” பின்னாளில் எவருமே அடையமுடியாத ஆளுமையை எனக்கு வழங்குவாயாக” என சுலைமான் கேட்டுக்கொண்டதற்கு மாறாக அமைந்துவிடும் என்பதால் விட்டுவிட்டேன்” என முகம்மது ஓரிடத்தில் கூறியிருக்கிறார். இதுவும் ஹதீஸ்தான்


“நச்சுப்பாம்புகளை கொல்லுங்கள் ஆனால் நச்சில்லாமல் வீடுகளில் உலவும் பாம்பைக் கொல்லாதீர்கள், ஏனென்றால் ஜின்கள் பாம்புகளின் உருவத்தில் இருக்கின்றன. போய்விடு என மூன்றுமுறை கூறுங்கள், அதன்பிறகும் அவை போகவில்லையென்றால் பின்னர் அடியுங்கள்” என முகம்மது கூறுகிறார் இதுவும் ஹதீஸ் தான்.


மக்கள் வசிக்கும் நகரங்களில், குப்பை கொட்டும் இடங்கள், கழிப்பிடங்கள், ஒட்டகத் தொழுவங்கள், மண்ணறைகள், அடர்ந்த காடுகள், பாலைவெளிகள், குகைகள் இன்னும் பல இடங்களிலும் வசித்து எலும்புகளையும் காய்ந்த மலத்தையும் உணவாக உண்ணும், ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து இனப்பெருக்கம் செய்யும் நெருப்பினால் படைக்கப்பட்ட இந்த ஜின் எனும் உயிரினங்கள், உலகில் எங்கும் அகப்படவில்லை. இவ்வாறான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதற்கான சின்னஞ்சிறு தடயங்கள் கூட உலகில் தட்டுப்பட்டதில்லை. மனிதர்களைப் போல பல்கிப் பெருகிக்கொண்டிருக்கும் இந்த உயிரினங்களின் இருப்பினால் பூமியில் நிகழ்ந்த விளைவுகள் என்று எதுவும் அறுதியிடப்படவில்லை. ஆனாலும் இப்படி ஒரு உயிரினம் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் எப்படி? நாங்கள் ஏனைய மதத்தவர்களைப் போலல்ல குரான் எங்களை சிந்திக்கச் சொல்லியிருக்கிறது எனும் முஸ்லீம்கள் எந்த அடிப்படையில் ஜின்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கூற முடியுமா?


கடைசிக்கால ஒற்றை விலங்கான தப்பாத் எனும் உயிரினம் குறித்து ஜின்னைப்போன்ற விரிவான விபரங்கள் எதுவும் இல்லை. பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என கடவுள் முடிவெடுத்தபின்னர் இந்த விலங்கு பூமியைப் பிளந்து கொண்டு வெளிவரும். வெளிவந்து மனிதர்களைப் பார்த்து இவர் இறை வேதத்தை உண்மையாகப் பின்பற்றினார், இவர் பின்பற்றவில்லை, இவர் பின்பற்றுவது போல நடித்தார் என்று அவரவர்களின் நிலைக்கேற்ப அவர்களிடம் பேசி சான்றிதழ்கள் வழங்கும்.


புமியிலிருந்து தாவரங்கள் தானே முளைக்கும்? புழு பூச்சிகள் பொந்துகளில் வாழும், ஆனால் பூமியிலிருந்து திடீரென ஒரு உயிரினம் வெளிப்பட முடியுமா? அப்படி வெளிப்படும் ஒரு உயிரினம் உடனே பேச முடியுமா? எந்தப் பகுதியில் என்ன மொழியில் பேசும்? பேச்சு என்றால் என்ன? ஒரு உயிரினம் சமூக வயப்பட்டிருப்ப‌தன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? அதுவும் மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?


அல்லாவுக்கு இவைகளெல்லாம் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான், ஆண்டவனின் மகிமை இது என்பவர்களுக்கு அறிவியல் குறித்துப் பேச எந்த அறுகதையும் இல்லை. இன்று கண்டுபிடிக்கப்படும் அறிவியல் நுணுக்கங்கள் கூட குரானில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது,  என ஜல்லியடிப்பவர்கள் இந்த பேசும் உயிரிங்கள் குறித்து என்ன கூறுவார்கள்?
தான் விரும்பும் ஒழுங்கை மக்களிடம் கட்டியமைப்பதற்காக முகம்மது 23 ஆண்டுகளாய் சிந்தித்து சிறுகச் சிறுக கோர்த்துத்தொகுத்தது தான் இஸ்லாமும் குரானும், இதில் மக்களை ஈர்ப்புடன் பயணப்படவைக்க சேர்த்தவைகள் தான் இதுபோன்ற கதைகளும். இதை புனிதம் என்பதும் எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்ற ஓரிறை என்பதும் உயர்வு நவிற்சி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.


இத்தொடரின் முந்தைய பகுதிகள்

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

 

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌

73 thoughts on “குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

  1. ungaluku paithyam pidthu vittathu pola.alla enbavan ungal pakathu veetu karan endru nainaithu kondu seyila padugireergal.thandanai nichyam undu.

  2. ithu ellam sthiyama endru kepan endrum quran munbe koorivitathu.eppadi uyirai katrai kannal parka mudiyavillayo(antha katril kooda oxygen nitrogen carbon ena pala vagai undu, unnal ithai 1000 andu munnal namba mudiyuma )athai pola nambikai kondavanuke sorkam endrum unnai pola vithandavatham seigiravanuku naraga vethanai endru quran solli ullathu.

  3. allah enna un pkathu veetukaran intha ulagai padaithavan,nee enna periya ivana unaku udane vilakam alika .athu mattum illai ithu ellam nadakum pothu nee allah irukinran endru evlo mandradinalum unudiya mudivu allahvidame ullathu

  4. ஜின்கள் பற்றி இன்னும் ஆச்சர்யமான விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இந்த இணைய தளத்தை பார்க்கலாம்.

    http://www.islamawareness.net/Jinn/jinn.html

  5. //குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா//

    ஏன் சாத்தியமில்லை.பெரிய தாடி தாலிபான் வெறி நாய்கள் பேசும் உயிரினம் தானே?

  6. periyaar ,அடுத்த நாட்டில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி,அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்ற அமைதிமிக்க ரஷ்யா ஆடுகளை விரட்டியடித்ததால் கம்யுனிஸ்ட் பெரியாருக்கு தாலிபான்கள் மீது இவ்வளவு கோபம் வருகிறதோ|

  7. 1.ஜின்கள் என்றால் என்ன?

    மனிதர்கள் படக்கப் படுவதற்கு முன்பாக இறைவன் படைத்ததாக சொல்லப்படும் உயிரினங்கள்.மனிதர்கள் களிமண்ணில் இருந்தும் ஜின்கள் நெருப்பில் இருந்தும் படைக்கப் பட்டதாக குரான் கூறுகிறது.

    55:15. நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்
    _______________

    2.ஜின்கள் ஏன் படைக்கப் பட்டன?

    51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

    ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர்கள் தலைவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற தலைவரின் எதிர்பார்ப்பு போல் இதுவும் நியாயமானதே. காலில் விழுதல்,கவிதை பாடுதல்,ஆட்ட பாட்டம்,பாராட்டு விழா என்று ஏற்பாடு செய்து கொண்டே இருந்தால் எல்லா நலங்களும்,வளங்களும் தேடிவராதோ?
    _________________

    3.ஜின்களும் மலக்குககளும் ஒன்றா?

    இது தூதர் மற்றும் நபி வார்த்தைகள் போன்றது.இதை பற்றி குரான் ஒன்றும் கூற்வில்லை .ஆனால் இப்லீஸ் என்பது ஜின் என்று சில இடங்களிலும் மலக்கு என்று சில இடங்களிலும் கூறப்படுகிறது.

    வழக்கப் போல குழப்பம்தான்.
    __________________

    4. இந்த இப்லீஸ் யார்.

    17:61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.

    இவர் ஒரு ஜின் ஆக இருந்து இறைவனின் எதிரியாக மாறியவர்.

    ஆதமுக்கு பணியாத்தால் கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர். இப்போது தனிக் கட்சி நடத்தி வருகிறார்.

    தலைவரின் வாரிசுக்களௌக்கு பணியாதவர்கள் கட்சியை விட்டு வெளியே அனுப்ப்ப படுவது நாம் அறியாததா?

    இப்லீஸ் ஆதமை வணங்க மாட்டான் என்று தெரிந்தே வணங்க சொல்லி அவவனை கட்ட்சியை விட்டு வெளியே அனுப்பிய இறைவனின் தந்திரத்தில் நமது அரசியல்வாதி கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

    3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்

    _________________

    (தொடரும்)

  8. செங்கொடி குழுமத்திற்கு,

    பல வருடங்களாக குர்ஆனை கற்று தேர்ந்து கடந்த ஒரு வருடமாக சுமார் 29 விமரிசனக்கட்டுரைகள் எழுதி முஸ்லிம்களை விட அதிகமாக குர்ஆனை அரும்பாடுபட்டு தங்கள் ஆய்வு செய்து வருவது எமக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது. மேலும் இதுவரை தமிழ் முஸ்லிம் மக்கள்,அச்சமுதாய வழிகாட்டிகள்,இஸ்லாமிய பிரச்சார பீரங்கிகள்(சஹர் நேரம்) பன்னூல் ஆசிரியர்கள்,விவாத வீரர்கள் எவரும் உமக்கு பதில் அளிக்காமல் இருப்பது எமக்கு வருத்தமளிக்கிறது.

    மேலும் உங்கள் விமரிசனத்திற்கான‌ பதிலை உங்கள் ஆய்வு குழுமமே தேடிக்கொள்ள வேண்டுகிறேன்.

  9. “இஸ்லாமிய பிரச்சார பீரங்கிகள்(சஹர் நேரம்) பன்னூல் ஆசிரியர்கள்,விவாத வீரர்கள்” iththana per vettiya thiriyaraaingala?. Poor souls.

  10. அட அறிவு கேட்ட மனிதா உனக்கு மரணம் வரும் போது கண்டு கொள்வாய் உண்மையான இறைவன் அல்லாஹ் தான் என்றும் உண்மையான மார்க்கம் இஸ்லாம் தான் என்றும் கண்டு கொள்வாய் ஆனால் அப்போது உனக்கு உயிர் வாழ அவகாசம் அளிக்கப்படமாட்டாது
    20:99 அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் போது அவன் கூறுவான் என் இறைவனே என்னை திரும்ப உலகுக்கு திருப்பி அனுப்புவாயாக என்று நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களை செய்வதற்காக என்றும் கூறுவான் அவ்வாறில்லை அவன் கூறுவது வெறும் வார்த்தையே அன்றி வேறில்லை

  11. தோழர்,
    இது தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் இருந்து வந்தது,தங்கள் கட்டுரையின் வாயிலாக அவைகள் படிப்படியாக பூர்த்தியாகிக் கொண்டே வருகிறது. தொடர்ந்து எழுதி வாருங்கள் நன்றி.

  12. முஸ்லிம் மதத்தை விட்டு வெளியே போன பிறகு ,முஸ்லிம் பெயர்களையும் முஸ்லிமாகவும் கொண்டு எழுதி வருவது முஸ்லிம்களின் மனதை புண்படுத்திபார்க்கும் ஆசையே அவர்களுக்கு தனி அலாதி போலும்.காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு .பெரிய ஆராய்ச்சி பண்ணிவிட்டாராம் .குர்ஆனில் செம்புசுவர் இருக்கிறதே அந்தசுவர் எங்கே ?ஜின் இருக்கிறதே அந்த ஜின் எங்கே?கால்தடத்தை எங்கே?இறை நம்பிக்கை இல்லாமல் படித்தால் மாங்க மடையனும் கேட்கக்கூடிய கேள்விதான் இவைகள். “கருவறையில் ரத்தகட்டியிளிருந்து உருவாகிறான் என்று வருகிறதே ,அவ்வாறெனின் அலக் என்ற வார்த்தையை ஆயிந்து ‘அட்டை போல் ஒட்டி உறிஞ்சும் ஒன்று’என விந்திலுள்ள உயிரணுவுக்கு விளக்கம் கண்டானே மாரிஸ் புகைல் அவனன்றோ அறிஞன்.
    .///. விவாத வீரர்கள் எவரும் உமக்கு பதில் அளிக்காமல் இருப்பது எமக்கு வருத்தமளிக்கிறது///
    வெங்காய ஆர்தோடக்ஸ் உங்களது மாமேதைகளால் இதற்க்கு பதில் சொல்ல வேண்டுங்கள்.
    பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சம் எப்படி இருந்தது? அந்த வெடிப்பு ஏன் நடந்தது?அந்த வெடிப்புக்கான அணுக்கள் உருவானது எப்படி?உருவாக்கியது யார்?நாலாயிரம் பில்லியன் ஆண்டுகள் என்று கலண்டர் போட்டது சரியா?
    மனித குரங்கின் பரிணாம வளர்ச்சிதான் மனிதன் என்றால் இப்போதும் மனித குரங்குகள் ஏன் உள்ளது?
    மனித குரங்கு மட்டும்தான் பரிணாம வளர்ச்சி அடைந்ததா? மற்ற மிருகங்கள் ஏன் பரிணாம வளர்ச்சி
    அடைய வில்லை?
    பரிணாம வளர்ச்சியை இபோதைய மனித உருவத்துடன் நிறுத்தியது யார்?

  13. அன்பரே இபுறாகிம்,

    நீங்க பேசுற‌து கூட அண்ணன் கொடுத்த linக் தான் போல தெரியுது.

    வாய்ச்சவடால் விடாமல் சட்டுன்னு பேப்பர் பேனா எடுத்து 29 கேள்வியுல முதல் கேள்விக்காகவாவது பதில் எழுதுங்க‌

  14. //கருவறையில் ரத்தகட்டியிளிருந்து உருவாகிறான் என்று வருகிறதே //

    முதல் மூன்று வாரங்களுக்கு வெறும் சதைப்பிண்டமாகவே கரு இருக்கும் என்று குர் ஆன் கூறுகின்றது. ஆனால், 18 நாட்களில் இதயம் துடிக்க ஆரம்பித்துவிடும். 18 நாட்கள் என்பது மூன்று வாரங்களுக்கும் குறைவான காலமே. நீங்கள் குறிப்பிட்ட இந்த வசனத்திலும், குர் ஆனின் பொய்மை வெளிப்படுகின்றதே.

    நீங்கள் குர் ஆனின் எந்த வசனத்தை ஆராய்ந்து பார்த்தாலும், அது பொய் என்பது நன்றாக தெரியும். செங்கொடி அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பதிவிட்டு வருகின்றார். உங்கள் கருத்துக்களை உரிய பதிவுகளில் பதியலாமே. இந்தப் பதிவில் சில விலங்குகளைப் பற்றி பேசியுள்ளார். அவற்றுக்கு என்ன பதில் என்று மட்டும் இங்கு பேசுவோம். மற்ற விஷயங்களை அதற்குரிய பதிவுகளில் வைத்துக்கொள்வோம்.

    உங்கள் வேத புத்தகத்தில் தவறே இருக்காது என்னும் தவறான முன் முடிவுகளை தவிர்த்துவிட்டு, பதிவில் அலசியிருக்கும் விஷயம் ஏற்புடையதா இல்லையா என்று கூறுங்கள்.

  15. @S.Ibrahim

    நீங்கள் எழுப்பியுள்ள விஷயம் பற்றி செங்கொடி தனது முந்தைய பதிவொன்றில் கேள்விகளை எழுப்பியுள்ளார், சில விளக்கங்கள் கொடுத்துள்ளார். முடிந்தால் அந்த விளக்கங்களையும் படியுங்கள்.

    https://senkodi.wordpress.com/2010/03/17/embryo/

    உங்கள் தரப்பு நபர் ஒருவரும் அதே போன்று காப்பி பேஸ்ட் செய்து ஒரு பதிவு போட்டு சுட்டிக்காட்டியதும், தனக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொண்டார்.

    http://tamilislam25.blogspot.com/2010/03/01.html

    .

  16. ///பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சம் எப்படி இருந்தது? அந்த வெடிப்பு ஏன் நடந்தது?அந்த வெடிப்புக்கான அணுக்கள் உருவானது எப்படி?உருவாக்கியது யார்?நாலாயிரம் பில்லியன் ஆண்டுகள் என்று கலண்டர் போட்டது சரியா?
    மனித குரங்கின் பரிணாம வளர்ச்சிதான் மனிதன் என்றால் இப்போதும் மனித குரங்குகள் ஏன் உள்ளது?
    மனித குரங்கு மட்டும்தான் பரிணாம வளர்ச்சி அடைந்ததா? மற்ற மிருகங்கள் ஏன் பரிணாம வளர்ச்சி
    அடைய வில்லை?
    பரிணாம வளர்ச்சியை இபோதைய மனித உருவத்துடன் நிறுத்தியது யார்?///

    இதைத் தவிர மற்றவற்றுக்கெல்லாம் மாமேதைகள் பதில் சொல்லிவிட்டார்கள்.முட்டாள் முஸ்லிம்களின் ஒன்பது கடமைகளைசொன்னவர்கள்; அவர்களது கடமைகளை யாரிடம் சொல்வார்களோ ? அவற்றினை செய்ததை கண்டதும் யாரோ?

  17. rari/தோழர்,
    இது தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் இருந்து வந்தது,தங்கள் கட்டுரையின் வாயிலாக அவைகள் படிப்படியாக பூர்த்தியாகிக் கொண்டே வருகிறது. தொடர்ந்து எழுதி வாருங்கள் நன்றி

    .முன்பே உங்களது சுய ரூபம் வெளியாகிவிட்டது .இப்போது என்ன படிப்படியாக ?இந்த பம்மாத்து எல்லாம் எதற்கோ

  18. //மற்றவற்றுக்கெல்லாம் மாமேதைகள் பதில் சொல்லிவிட்டார்கள்.//

    கரு உருவாதல் பற்றிய குர் ஆனின் கட்டுக்கதையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

    மற்ற விஷயங்களுக்கான சுட்டிகள்.

    http://kaiyedu.blogspot.com/2008/11/blog-post_13.html
    http://kaiyedu.blogspot.com/2010/04/blog-post.html

    http://public.web.cern.ch/public/


    பதிவிற்கு சம்பந்தமில்லாதபோதும், நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு தகவல்கள் தந்துள்ளோம். இப்பொழுது பதிவில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதில்களை தாருங்கள். ஜின்கள் பற்றியும், தப்பாத் பற்றியும் உங்களிடமிருக்கும் ஆதாரங்களை தாருங்கள். பேசுவோம்.

  19. நண்பர் இப்ராஹிம்
    நீங்கள் எழுப்பி உள்ள கேள்விகள் பதிவுக்கு அப்பாற் பட்டது.இருந்தாலும் அதை பற்றியும் விவாதிப்போம்.
    //பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சம் எப்படி இருந்தது? அந்த வெடிப்பு ஏன் நடந்தது?அந்த வெடிப்புக்கான அணுக்கள் உருவானது எப்படி?உருவாக்கியது யார்?//
    பெரு வெடிப்புக் கொள்கை என்றால் என்ன?
    நமது பேரண்டம் உருவானது ப்ற்றி ஆராயும் அறிவியலாளர்கள், அதனி பற்றிய ஆய்வுகள் செய்து பல கோட்பாடுகளை உருவாகினார்கள்.

    இந்த பெரு வெடிப்புக் கொள்கை என்பது ஜார்ஜ் லெமிட்டியர் என்ற பெல்ஜிய கத்தோலிக்க மதகுருவால் முதலில் கூறப் பட்டது. 1927 ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் இந்த கருத்தாக்கம் பற்றி விளக்கப் படுகிறது.

    இந்தக் கருத்தானது அண்டத்தின் தோற்றம் பற்றிய பல கேள்விகளுக்கு விடயளித்தாலும் இதன் மீதான ஆய்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

    ஒருவேளை இன்னொரு அறிஞர் இதற்கு மாறான ஒரு கருத்தாகம் கொண்டு வந்தாலும் வரலாம்,அது பல கெள்விகளுக்கு பெரு வெடிப்புக் கொள்கையை விட சிறந்த விளக்கம் அளிக்கலாம்.

    இது மனிதனை அறிவாற்றலை காட்டுகிறதே தவிர எந்த விதத்திலும் மதப் புத்தகங்களை பெருமை பட்டுத்தவில்லை.

    சில இஸ்லாமிய பிரச்சார்கர்கள் இதனை ஏற்றுக் கொள்வதால்(வேறு வழி) இதனை மதக் கூட்டங்களில் இந்தப் பெயரை கேட்கலாம்.

    அறிவியல் செய்வது இந்த கால கட்டதில் இருந்து கடந்த காலத்தை கணிக்க முயல்கிறது. ஆய்வுகளின் படி இந்த அண்டம் 13.7 பில்லியன்(1370 கோடி) ஆண்டுகள் முந்தியது என்று தெரிகிறது..

    அறிவியல் இந்த 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து இந்த நாள் வரை நடந்த வரலாறை பரிணாம வளர்ச்சி கொண்டே விளக்குகிறது.

    எந்த வேதமும் நமது அண்டம் உருவான காலத்தை குறிப்பிடவில்லை.அறிவியல் சொல்வதை புதகம் சொல்கிறது என்பது கடவுளை விட அறிவியலுக்கே சக்தி அதிகம் என்று ஒத்துக் கொள்வது போல.

    கண்டு பிடித்தவர் கத்தோலிக்க மதகுரு என்றால் கூட இது என் மதக் கடவுள்,என் வேதம் சொன்னது என்று சொல்லாத நேர்மைக்காக அவரை பாராட்ட வேண்டும்.

    இப்ராஹிம் நீங்கள் சொன்னது போல் எல்லாவற்றையும் ஒரு கருத்து விளக்கினால் கூட அதற்கு முன் என்ன என்று கேட்க இயலும்.ஆனால் அல்லாவுக்கு முன் என்ன என்று கேட்க கூடாதா?

    முகமதுக்கு 610_632ல் என்ன அறிவு இருந்ததோ குரானில் உள்ள விஷயங்களும் அந்த அறிவுக்குட்பட்ட அளவே இருக்க முடியும்.

    உங்கள் நம்பிக்கை என்பது என்பது வேறு விஷயம் ஆனால் எல்லாமே குரானில் 1400 வருடங்களுக்கு மென்பே கூறப்பட்டு விட்டது என்பது மத நபிக்கையாளர்களை தவிர யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________

  20. நாம் நமது ஜின்கள் ஆராய்சியை தொடர்வோம்.

    இந்த ஜின்கள் என்பது இஸ்லாஅமில் மட்டும்தான் கூறப்படுகிறதா என்றால் இல்லை.இஸ்லாமின் மூத்த பங்காளியான கிறித்தவத்திலும் தூதர்கள் காப்ரியேல்(ஜிப்ரியேல்) மிகாவேல் மற்றும் லூசிபர்(நம்ம இப்லீஸ்தான்) பற்றி கூறப்படுகிறது. லூசிபர் அன்ட் கோ வான‌த்தில் இருந்து பூமிக்கு தள்ளப் பட்டதாக கூறப்படுகிறது.
    ______________________________________

    ஜின்கள் என்ற பெயர் அதன் வனனைகள் மட்டும் இஸ்லாமுக்கே உரித்தானது.

    அது எப்படி வந்தது?

    6:100. இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் – அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.

    37:158. அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்

    இந்த சவசனத்தில் இருந்து ஜின்கள் என்பது இஸ்லாமுக்கு முந்தைய அரபியர்களின் வழிபாடுகளுல் ஒன்று என்று தெரிகிறது.

    _________________________________________________

    இந்த ஜின்களில் ஆண் ,பெண் ,மொழி,உடை உண்டா?

    ஆண் பெண் பற்றி விவரம் இல்லை ஆனால் விவகாரமான விஷயம் உண்டு.

    55:56. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

    55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

    சொர்க்கத்தில் உள்ள நீள் கண்ணழகிகளை மனிதனும் ஜின்னும் தீண்டியது இல்லை என்றால் ஜின்கள் ஆண் மட்டுமா? ஆண் என்றால் மட்டுமே பெண்களை தீண்டும் என்று
    பொருள் கொள்ளலாம்.

    மொழி பற்றி வழக்கம் போல் விவரம் இல்லை. மொழி அரபி ஆக இருக்கலாம்.

    6:112. இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் – எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக

    ஏனெனில் முகமதுவிற்கு ஜின் ஏதோ பொய் கற்பனை கூறியுள்ளதாக தெரிகிறது.அவருக்கு தெரிந்தது அரபி மட்டுமே .என்வே அந்த ஜின் மட்டுமாவது அரபி பேசி இருக்கலாம்.

    ஒவ்வொரு நபிக்கும் என்று கூறினாலும் இந்த சுலைமான் (சாலமன்( பாப்பையா அல்ல) ) மட்டும்தான் ஜின்களை மேய்ப்பதில் கில்லாடியாக இருந்து உள்ளார்.
    அவர் பழக்கம் வைத்து இருந்த ஜின்கள் எபிரேய மொழி பேசி இருக்கலாம்.

    27:17. மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.

    34:12. (அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).

    ___________________
    (தொடரும்)

  21. ///ஏதாவது இஸ்லாம் பற்றி கேட்டால் (அண்ண‌னிடமிருந்து இரவல்) லிங்க் அனுப்புவாங்க. அவங்கள் கேள்வி மட்டும் தான் கேட்பாங்க ஆனால் பதில் தெரியாது.அவங்க புரோகிதர்(அண்ணன்)சொல்வதை மட்டும் கேட்பார்கள்///
    வெங்காய ஆர்தோடக்ஸ் ,இது முஸ்லிம்களுக்கு மட்டுமா?கும்மிக்கும் உண்டா?
    உங்களை நான் மாமேதைகள் என்று சொன்னது எதிர்மறையில் ;
    ///இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்
    இம்மரத்தின் ஆதி புள்ளியிலிருந்து நகர்ந்தால் முதலில் கிளைக்கும் புள்ளி வெவ்வேறு வகை உயிரிகளாகப் பிரிந்த தருணத்தைக் குறிக்கிறது.
    அதில் மனிதனும் குரங்கும் ஏதோவொரு சூழல் மாற்றத்தினால் ஒரு புள்ளியில் துவங்கிய இரண்டு உயிரிகள்.///
    முதல் உயிர் எப்படி தோன்றியது?அது என்ன தனது சூழல்? தனது இருத்தல் ? ஆதி புள்ளியை போட்டது யார்?அதெப்படி வெவ்வேறு உயிர்களாக பிரியும்?மனிதனும்,குரங்கும் ஒரு புள்ளியில் துவங்கிய இரண்டு உயிர்கள் .ஒரு புள்ளியிலிருந்து துவங்குவதை பார்த்தது சார்லஸ் டார்வினா?இல்லை அவரது நூறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த அவர் தாத்தாவா?

  22. கும்மி ///ஜின்கள் பற்றியும், தப்பாத் பற்றியும் உங்களிடமிருக்கும் ஆதாரங்களை தாருங்கள். பேசுவோம்///பதிவுக்கு பொருத்தம்தான் எனது கேள்விகள். கையேடு படித்து எழுந்த எனது சந்தேகங்களுக்கு பதில் சொல்லுங்கள்.அப்புறம் ஜின்கள் பற்றியும் தப்பாத் பற்றியும் பதில் சொல்லுவோம் இன்சா அல்லாஹ் .

  23. sankar///இந்தக் கருத்தானது அண்டத்தின் தோற்றம் பற்றிய பல கேள்விகளுக்கு விடயளித்தாலும் இதன் மீதான ஆய்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன///
    அவர் அண்டத்தின் தோற்றம் பற்றி என்ன பதில்களை சொன்னார்?அதை சொல்லி இருக்கலாமே \ குர்ஆணைப்பற்றி வளவள .தொளதொள என்று எழுதும் அவருடைய பதில்களை கொஞ்சம் விரிவாக சொல்லலாமே

    ///ஒருவேளை இன்னொரு அறிஞர் இதற்கு மாறான ஒரு கருத்தாகம் கொண்டு வந்தாலும் வரலாம்,அது பல கெள்விகளுக்கு பெரு வெடிப்புக் கொள்கையை விட சிறந்த விளக்கம் அளிக்கலாம்///
    ///இதன் மீதான ஆய்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
    ஒருவேளை இன்னொரு அறிஞர் இதற்கு மாறான ஒரு கருத்தாகம் கொண்டு வந்தாலும் வரலாம்,அது பல கெள்விகளுக்கு பெரு வெடிப்புக் கொள்கையை விட சிறந்த விளக்கம் அளிக்கலாம்///
    ஒருவேளை அந்த பெருவெடிப்பை உருவாக்கியது அல்லாஹ் தான் என்று சொல்லிவிட்டால்,,,,,,,,,,,பெருவெடிப்பு கொள்கையை விட சிறந்த விளக்கம் வரட்டுமே | அல்லாஹ் தான் என்று சொல்வதற்குள் ம.க.இ.க ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டு வந்து விடலாம் என்று நம்புகிறீர்களா

  24. //ஒருவேளை அந்த பெருவெடிப்பை உருவாக்கியது அல்லாஹ் தான் என்று சொல்லிவிட்டால்//
    உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.உலகத்தின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி யாளர்களின் கருத்தினில் ஒன்றுதான் பெரு வெடிப்பு எனப்படும் பிக் பேங் கருத்தாக்கம். நாளை ஒரு கொள்கை இதனை தவறு என்று கூட நிரூபிக்கலாம்.

    குரான் குறிப்பிடுகிற மனிதர்கள்,ஜின்கள் மற்றும் சம்பவங்கள எதனையும் வரலாற்றில் காணவில்லை என்றால். வரலாற்றுக்கு முந்திய விஷயங்களை பேசுகிறீர்கள் என்றால்.

    குரானில் குறிப்பிடும் மனிதர்கள்,ஜின்கள்,மற்றும் சம்பவங்களை நிரூபிக்க முடியாது என்றே அர்த்தம் ஆகின்றது.
    _______________________________

    சரி தவுகீத் முஸ்லிம்கள் பெரு வெடிப்பையும்,குரான் ,அல்லா போன்று நம்புகிறீர்கள்.

    அல்லா பெரு வெடிப்பை உருவாக்கினார் என்று வைத்துக் கொள்வோம்.

    1. “அல்லா பெரு வெடிப்பின் மூலம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்ட சராசரங்களையும் படைத்தான்” என்று குரானில் எங்கே சொல்லப் பட்டு இருக்கிறது?

    2. சரி அல்லாவிற்கு பெரு வெடிப்பு மூலம்தான் அண்ட சராசரங்களையும் உலகை உருவாக்க முடியும் என்றால் அல்லாவும் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப் பட்டவரா?

    3. பெரு வெடிப்பு கொள்கை ஏஎற்பட்டது 13.7 பில்லியன்(1370 கோடி) ஆண்டுகளுக்கு முன். இப்பொதைய மனிதன்(ஹோமோ சேபியன்) பரிணாமத்தின் படி தோன்றியது சுமர்ர் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.
    தோழர் கையேட்டின் பதிவில் படித்து இருப்பீர்கள் உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரை 24 மனி நேரம் என்று வைத்தால்.மனிதர்களின் வரலாறு (ஆதம் முதம் நண்பர் இப்ராஹிம் வரை) 10 வினாடிகள் மட்டுமே.

    இதனை குரான் ஏற்றுக் கொள்கிறதா?

    4.இந்த காணொளி பெரு வெடிப்புக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு,வளர்சிசியையும் காட்டுகிறது.

    பாருங்கள் நன்றி

  25. பதிவு சம்பந்தமாக உரையாட முன்வராததன் மூலம், ஜின்கள் மற்றும் தப்பாத் குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதை உணர்த்திய நண்பர் S.Ibrahim அவர்களுக்கு நன்றிகள்.

    துல்கர்னைன் சுவற்றுக்கான ஆதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல், ஜின்கள், தப்பாத் இவற்றிற்கான ஆதாரங்களுக்கும் காத்திருக்கவேண்டும் போல. பாவம், 1400 வருடங்களாக தேடிக்கொண்டிருக்கின்றனர். எவ்வித ஆதாரங்களும் சிக்கவில்லை.

  26. குர்ஆன் என்றால் கும்மியடிப்பவர் ;பரிணாமம் என்றால் பம்மி ஓடுவது ஏனோ? சுட்டிகாட்டிய பரிணாமம் கதைக்கு ஆதாரம் இல்லை என்று ஒப்புக்கொண்ட கும்மிக்கு நன்றி முஸ்லிம்களாகிய நாங்கள்தான் முட்டாள்கள்.அறிவுலக மேதைகள் சரணடைவது ஆச்சரியமாக உள்ளது.

  27. வெ.ஆ[அசைவத்துக்கும் வெங்காயம் அதிகம் தேவை].
    ///வாய்ச்சவடால் விடாமல் சட்டுன்னு பேப்பர் பேனா எடுத்து 29 கேள்வியுல முதல் கேள்விக்காகவாவது பதில் எழுதுங்க‌///
    அடுத்தவர்களின் 9 கடமைகள் பற்றி பேசியவரால் தனது [வெ.ஆ.]கடமைப் பற்றி கேட்டு பதில் சொல்லத் தெரியவில்லை.

  28. sankar,///இப்ராஹிம் நீங்கள் சொன்னது போல் எல்லாவற்றையும் ஒரு கருத்து விளக்கினால் கூட அதற்கு முன் என்ன என்று கேட்க இயலும்.ஆனால் அல்லாவுக்கு முன் என்ன என்று கேட்க கூடாதா?///
    நாங்கள் எல்லாமே அல்லாஹ் தான் என்று நம்புகிறோம் .நீங்கள் அறிவுப்பூர்வமாக ஆதாரம் தரக் கூடியவர்கள்.என் அறிவு அதற்க்கு முன் என்ன வென்று கேட்கிறது.உங்கள் விஞ்ஞான அறிவைக் கொண்டு பதில் தாருங்கள்.நீங்கள் எதிர் கேள்வி கேட்பது அறிவுடைமை ஆகாது.

    ///ஆய்வுகளின் படி இந்த அண்டம் 13.7 பில்லியன்(1370 கோடி) ஆண்டுகள் முந்தியது என்று தெரிகிறது/// கணிக்கிறது,தெரிகிறது என்பது விஞ்ஞானிகளின் வார்த்தை..நம்பிக்கை கொள்வது மதவாதிகளின் வார்த்தை.மதம் பண்பாட்டை வளர்க்கும் .விஞ்ஞானம் பண்பாட்டை சீரழிக்கும்.

    ///எந்த வேதமும் நமது அண்டம் உருவான காலத்தை குறிப்பிடவில்லை.அறிவியல் சொல்வதை புதகம் சொல்கிறது என்பது கடவுளை விட அறிவியலுக்கே சக்தி அதிகம் என்று ஒத்துக் கொள்வது போல///
    கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு இங்கு யாருக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்? நாங்கள் எங்களிடம் கேட்கவில்லை.நீங்கள் அறிவியலைவிட கடவுளுக்கே சக்தி அதிகம் என்று நம்பிக்கை வைத்து உள்ளீர்களா

  29. ///உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரை 24 மனி நேரம் என்று வைத்தால்.மனிதர்களின் வரலாறு (ஆதம் முதம் நண்பர் இப்ராஹிம் வரை) 10 வினாடிகள் மட்டுமே////
    மனிதனின் வாழ்வுக்கு தேவையான வரலாற்று சம்பவங்கள் மற்றுமே சொல்லப்பட்டுள்ளன.அதை கொண்டு அவன் வாழ்வுக்கு தேவைகளை தேடிக் கொள்ள அவனுக்கு மூளை கொடுத்துள்ளான் இறைவன்..

  30. I think you have lots of misconceptions about islam.
    i know a person who can give explanation to all of your misconception about islam.
    Dr.Zakir Naik.you can wath his videos thourgh internet or peace Tv.
    do u know world fastest growing religion is islam.235%.if there is any errors, its never grow this much of fast….
    ok brother watch his vedio “IS THE QURAN GOD WORD”
    in this link http://webcast.challengeyoursoul.com/index.php?categoryId=19

  31. ///மனிதனின் வாழ்வுக்கு தேவையான வரலாற்று சம்பவங்கள் மற்றுமே சொல்லப்பட்டுள்ளன.அதை கொண்டு அவன் வாழ்வுக்கு தேவைகளை தேடிக் கொள்ள அவனுக்கு மூளை கொடுத்துள்ளான் இறைவன்///

    Dear Ibrahimji,

    I know you have A BOOK EVERYTHING DETAILED but you do not have answer for the questions asked. Am I right?.

  32. dear orthodoxnusklim
    //வாய்ச்சவடால் விடாமல் சட்டுன்னு பேப்பர் பேனா எடுத்து 29 கேள்வியுல முதல் கேள்விக்காகவாவது பதில் எழுதுங்க‌//

    idhai paarum ayya!
    http://www.ihsasonline.tk

  33. ////dear orthodoxnusklim
    //வாய்ச்சவடால் விடாமல் சட்டுன்னு பேப்பர் பேனா எடுத்து 29 கேள்வியுல முதல் கேள்விக்காகவாவது பதில் எழுதுங்க‌//
    idhai paarum ayya!
    http://www.ihsasonline.tk/////

    வாப்பா,
    பழைய மேட்டர்,சரக்கு ரொம்ப குறைவு,

  34. //நீங்கள் அறிவுப்பூர்வமாக ஆதாரம் தரக் கூடியவர்கள்.என் அறிவு அதற்க்கு முன் என்ன வென்று கேட்கிறது.உங்கள் விஞ்ஞான அறிவைக் கொண்டு பதில் தாருங்கள்.நீங்கள் எதிர் கேள்வி கேட்பது அறிவுடைமை ஆகாது//

    நண்பர் இப்ராஹிம்
    அறிவியல் என்பது இயற்கையை ,அதன் விதிகளை ஆதாரபூர்வமாக விளங்கி கொள்வது, எதையும் ஏன் என்று கேள்வி கேட்டு சரியான பதிலை தேடி பயணிப்பது. அதுவே மனித சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைக்கிறது.

    மனிதன் எல்லாவ‌வற்றையும் அறிந்தவனாக படைக்கப் பட்டான் என்றே குரான் கூறுகிறது.மலக்குகளை விட ஆதமுக்கு அறிவு அதிகமாகவே இருந்து உள்ளது.

    ஆனால் அறிவியல் ஆதி மனிதனுடைய அறிவு விலங்குகளை விட சற்றே மேம்பட்டது அது கொஞசம் கொஞச‌மாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றே கூறுகிறது.

    பெரு வெடிப்புக் கொள்கையின் மூலம் இறைவன் உலகயும் பரபஞ்சத்தையும் படைத்தார் என்றால் உலகம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.உலகம் தோன்றி 13.699 பில்லியன் ஆண்டுகள் கழித்து மனிதனை இப்போது உள்ள உருவத்தில்(ஆதம் 90 அடி உயரம் உள்ளவர் என்று ஹதிதுகள் கூறுகின்றன) மனிதனை படைத்தார் என்று நம்பவேண்டும்.

    நம்பிகிறீர்களா?

    பெரு வெடிப்பை குரான் ஆடரிக்கிறது என்றால் உலகம் தோன்றி 99.99% காலம் கடந்து மனிதன் என்றால் உலகம் மனிதனுக்காக படைக்கப் பட்டதா?.

    இன்றைய கால கட்டத்தில் கூட உலகத்தின் தோற்றம் பற்றி பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை,ஆனால் மனிதன் அதனையும் கண்டுபிடிப்பான் என்ற நம்பிக்கையிலேயே மனித சமுதாயம் முன்னேற்றப் பாதையில் பயனிக்கிறது. இது கூட மனிதனின் அறிவு வளர வளர இயற்கையின் மர்மங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவான் என்பதையே உறுதி படுத்துகிறது.
    ஆனால் மதங்கள் ஆதி மனிதனுக்கு எல்லாம் தெரியும்,பேசினான் விவசாயம்,வழிபாடு செய்தான் என்றெல்லாம் கூறுகிறது.

    விலங்குகள் கூட இறைவனை வணங்குகிறது என்று கூட கூறுகின்றது.
    விலங்குகளிலும் ஓரினப் புணர்ச்சி உண்டு என்றால் ஓரின‌ப் புணர்ச்சிக் காரர்களின் வணங்குதலை இறைவன் ஏற்றுக் கொள்கிறாரா?

    http://ww5.pondicherryblog.com/2010/12/homosexuality-some-understandings/

    ஒருவேளை பரிணாமக் கொள்கை நிரூபிக்கப் பட்டால், இப்போது பரிணாமத்தை எதிர்க்கும் மதங்கள் அப்போது ஏற்று அதற்கும் ஒரு விளக்கம் அளிக்கும்.

    ______________________

    //கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு இங்கு யாருக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்? //
    மனித சமுதாயத்திற்குதான்.கடவுளை மற .மனிதனை நினை.

    //நாங்கள் எங்களிடம் கேட்கவில்லை.நீங்கள் அறிவியலைவிட கடவுளுக்கே சக்தி அதிகம் என்று நம்பிக்கை வைத்து உள்ளீர்களா//

    எனக்கு இறை நம்பிக்கை கிடையாது.கருத்தாக பார்த்தால் அறிவியலை விட சக்தி அதிகம் இருந்தால் மட்டுமே கடவுளாக இருக்க தகுதி உண்டு.

    //மனிதனின் வாழ்வுக்கு தேவையான வரலாற்று சம்பவங்கள் மற்றுமே சொல்லப்பட்டுள்ளன.அதை கொண்டு அவன் வாழ்வுக்கு தேவைகளை தேடிக் கொள்ள அவனுக்கு மூளை கொடுத்துள்ளான் இறைவன்//

    தெவையா இல்லையா என்பது உங்கள் பிரச்சினை.
    வரலாறா இல்ல்யா என்பதே எங்கள் பிரச்சினை.வரலாறு என்றால் நடந்த சம்பவங்கள்.குரானில் சொல்லப்பட்ட நிறைய மனிதர்கள்,சம்பவங்கள் தோரா மற்றும் பைபிள் தவிர எங்குமே குறிப்பிட படாதவர்கள்.

    1400+ வருடங்கள் ஆன பிறகும் குரானில் சொல்லப் பட்ட பல மனிதர்கள் யார் என்று கூட தெ=டெளிவாக கூற இயலவில்லை.நம்ம துல்கர்னைன் கூட அப்படித்தான்

    //மதவாதிகளின் வார்த்தை.மதம் பண்பாட்டை வளர்க்கும் .விஞ்ஞானம் பண்பாட்டை சீரழிக்கும்.//

    எனக்கு பண்பாடாக தெரிவது உங்களுக்கு வேறு மாதிரியாக தெரியலாம். அடிமை முறையயை மதம் ஒழிக்கவில்லை, மன்னராட்சியை மதம் ஒழிக்கவில்லை. ஆண் பெண் சம்த்துவம் கொடுக்கவில்லை. மத்த்தின் பெயரால் ந்டக்கும் வன்முறையை தடுக்கவில்லை.

    அறிவியலை எங்கள் மத்மும் மெய்பிக்கிறது என்று ஒவ்வொரு மத பிரச்சாரகரும் முழங்கும் போதும் பண்பாடு சீரழிவது தெரிகிறது.
    _________________________

  35. நண்பர் சபீக்கா
    நீங்கள் இந்த தளத்திற்கு புதிது என்று எண்ணுகிறேன். இன்னொருவர் சொல்லித்தான் உங்கள் மத புத்தகம் புரிந்து கொள்ள முடியும் என்றால் இது எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது என்றே பொருள் படுகிறது.
    மிகவும் நன்றி.

    நாம் திருப்பி திருப்பி சொவது இதுதான் குரானில் சொல்லபட்ட மனித்ர்கள் அதன் முந்தைய வேதங்களான தோரா மற்றும் பைபிளில் மட்டுமே குறிப்பிடப் படுபவர்கள்.ஆகவே 1400+ வருடங்களில் இதர்கான முயற்சி எதுவுமே நடக்கவில்லை.அல்லது வரலாற்றோடு குரானில் சொன்ன மனிதர்களை சம்பந்தப் படுத்தவே முடியாது.

    நபிகள் ஆதம் முதல் முகமது வர கால வரிசை ,வரலாற்று ஆதாரம் காட்ட முடியுமா?.இது குறித்து சாகிர் நாயக் ஏதாவது பேசி உள்ளாரா? கூறவும்

    குரான் கடவுளின் வார்த்தை என்பதற்கு அவர் கூறிய ஆதாரம் எல்லாம் கதைக்கு உதவாது.

    முதல் முதலில் உதுமான் காலத்தில் தொகுக்கப் பட்ட குரான் குயுஃபிக் அரபி எழுத்தில் எழுதப்பட்டது. அந்த குரானை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்து இஸ்லாமிய நண்பர்களால் படிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
    .
    http://www.archive.org/details/Al-mushaf-Al-Imam

    நண்பர் குரானியவாதி,இப்ராஹிம்,சபீக்கா
    இந்த குரானை பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன்படுத்டும் குரனோடு ஒப்ப்டுங்கள்.
    இந்த குயுஃபிக் குரானையும் அதே விதத்தில் உங்களால் ஓத முடிகிறதா?அதே சப்தம்,சந்தம்,அர்த்தம் வருகிறதா?

    இதனை பற்றி இன்னும் எழுதுவேன்.

  36. Dear Shekodi Shankar,

    The Existing Arabic text of Qur”an 100% match with Kufic Text of the Qur’an.

    But there are some additions with technology.

    1. Addition of title name in every chapter.

    2. Numbering-of verses.

    3. Arabic calligraphy/fond changes for higher resolution.

    4. Additions of vowels/consonants for non-Arabs.

    FYKI

    quranist@aol.com

  37. சங்கர் ///1400+ வருடங்கள் ஆன பிறகும் குரானில் சொல்லப் பட்ட பல மனிதர்கள் யார் என்று கூட தெ=டெளிவாக கூற இயலவில்லை.நம்ம துல்கர்னைன் கூட அப்படித்தான்///
    குர்ஆன் எதைச் சொல்லுகிறதோ அது மட்டும் நமக்கு போதும்.துல்கர்னைன் யாராக இருந்தால் உங்களுக்கு என்ன?அவர் இப்போது ஆணாதிக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தாரா?இல்லை அவரை வைத்து பொதுவுடமையை உலகம் முழுவதும் கொண்டுவரப் போகிறீர்களா?அவர் யார் என்று தெரியாவிட்டால் ஆணுககு பெண்ணை சமமாக்க முடியாமல் போகிவிடுமா?

    .

  38. sankar,///நண்பர் குரானியவாதி,இப்ராஹிம்,சபீக்கா
    இந்த குரானை பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன்படுத்டும் குரனோடு ஒப்ப்டுங்கள்.
    இந்த குயுஃபிக் குரானையும் அதே விதத்தில் உங்களால் ஓத முடிகிறதா?அதே சப்தம்,சந்தம்,அர்த்தம் வருகிறதா?
    இதனை பற்றி இன்னும் எழுதுவேன்////
    நூறு வருடத்துக்கு முந்தைய தமிழ் எழுத்துக்களை இப்போதைய இளைஞர்களால் படிக்க இயலாது.தொல்பொருள் ஆராயிச்ச்யாலர்களால் தான் பண்டைய தமிழை அறியமுடியும் அவ்வாறிருக்க உதுமான் [ரலி]காலத்து அரபியை எங்களை வாசிக்கசொன்னால் எப்படி?அதைவாசிக்க கூடியவர்கள் இருக்கிறார்கள்.இதே சப்தமும்,சந்தமும் அர்த்தமும்தான் வரும் .அதற்க்கு மாற்றமாக வரும் அர்த்தம் உங்களுக்கு யாரும் சொல்லியிருந்தால் சொல்லுங்கள்..

  39. சங்கர் ///நபிகள் ஆதம் முதல் முகமது வர கால வரிசை ,வரலாற்று ஆதாரம் காட்ட முடியுமா?///
    உங்கள் வாழ்க்கைக்கோ பொதுவுடமைக்கோஅவர்களின் வரலாறில் இருந்து எத்வும் ஆதாரம் தேவைப் படுகிறதா? சும்மா கதை கேட்டால் சதைதான் போடும்.கால விரயம்..

  40. இந்த பதிவை எழுதியவருக்காக என்னுடைய சின்ன சந்தேகத்தை கேட்கிறேன்..இப்ப நீ கக்கூஸ்ல கூட உட்கார்ந்து ஆன்லைன்னில் உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியுதே…இதை உன் முப்பாட்டான் கனவாவது கண்டிருப்பானா..இப்படியெல்லாம் சாத்தியப்படும்..என்று…இப்ப மட்டும் உனக்கு எப்படி முடியுதுப்பா..!
    அப்படித்தான் படைத்தவன் விரும்பும் போது விரும்பியபடி நடக்கும்..

  41. //இதை உன் முப்பாட்டான் கனவாவது கண்டிருப்பானா..இப்படியெல்லாம் சாத்தியப்படும்..என்று…இப்ப மட்டும் உனக்கு எப்படி முடியுதுப்பா..!//

    இதெல்லாம் சாத்தியம் என்று உங்கள் அல்லாவும் முகமதுவும் கூட கனவு கண்டு இருக்க மாட்டார்கள். அல்லா கனவு காண்பாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் முகமது கண்ட கனவில் சுவரில் விழுந்த ஓட்டையை அடைக்க வாருங்கள் என்றே வேண்டுகிறோம்.

    இப்படி எல்லாம் கேள்வி கேட்போம் என்று தெரிந்து இருந்தால் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து விளக்கமாக இறக்கி இருப்பார்கள்.

  42. அன்பு இஸ்லாமிய நண்பர்களே,
    அல்லாதான் அனைத்து உயிர்களையும்
    படைத்தான் என்று கூறுவீர்கள் என்றால்
    அதேபோல எல்லா மதத்தவர்க்கும்

    அதே உரிமை உள்ளது என்பதை

    மறந்து விடாதீர்கள்,

    கர்த்தர்தான் எல்லா உயிர்களையும் படைத்தார்

    என்று கூறும் கிறிஸ்தவரையும்

    ப்ரம்மாதான் அனைத்து ஊயிர்களையும்

    படைத்தார் என்று கூறும் இந்து நண்பர்களையும்

    மறுக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?

    அதது அவரவர் உரிமை!

    எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன‌

    “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

    பழித்தது ஒழித்து விடின்”

    வள்ளுவன் வாக்கை உலகம் முழுவதும் உணரச் செய்வோம்

    வாருங்கள் நன்பர்களே

    “நீ உன் கடவுளை கும்பிடு,

    நான் என் கடவுளைக் கும்பிடுகிறேன்,

    அவன் அவன் கடவுளைக் கும்பிடட்டும்”.

    இதில் யாருக்கு என்ன வருத்தம்?

    த‌‍மிழன்.இந்தியன்@யாஹூ.காம்

  43. இபுறாகிம்,
    //முன்பே உங்களது சுயரூபம் வெளியாகிவிட்டது இப்போது என்ன படிப்படியாக?//
    இப்பவும் நான் கற்பனை,கட்டுக்கதை,மூடநம்பிக்கை,பழைமைவாதங்கள்,சடங்குகள்,வாழ்க்கைக்கு உபயோகமில்லாத வேண்டுதல்,பலியிடல்,வணங்கி வழிபடுதல் போன்ற காட்டுமிராண்டி காலத்துச் சிந்தனைகள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை ஏற்றுக் கொண்டதும் இல்லை. இதில் நான் எங்கே வேசம் போட்டேன் என் சுயரூபம் வெளியாவதற்கு? இவைகளை எடுத்துச் சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா? கற்பனைகளை நம்புவதற்கு உங்களுக்கு உரிமை இருப்பது போல் அதை மறுப்பதற்கு எங்களுக்கும் உரிமை உண்டு.

  44. சங்கர்,ஒரு கட்சியின் தலைவர் தனது கட்சிக்கு பல மாவட்ட செயலாளர்களை நியமிக்கிறார்/ பின் ஒவ்வொருவராக அழைத்து, விதி முறைகளை கூறி ,மேலும் எனக்கு அவசியம் ஏற்பட்டால்,மாவட்டத்தை இரண்டாக பிரித்து இன்னொரு மாவட்ட செயலாளரை நியமிப்பேன் ,நான் அப்படி நியமிக்கும்போது நீங்கள் அதை ஏற்றுகொள்வீர்களா?என்று கேட்பது போலவே 3 ;81 வசனம் உள்ளது

  45. ரபி ///கற்பனை,கட்டுக்கதை,மூடநம்பிக்கை,பழைமைவாதங்கள்,சடங்குகள்,வாழ்க்கைக்கு உபயோகமில்லாத வேண்டுதல்,பலியிடல்,வணங்கி வழிபடுதல் போன்ற காட்டுமிராண்டி காலத்துச் சிந்தனைகள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை ஏற்றுக் கொண்டதும் இல்லை///
    இவ்வளவு தெரிந்தவருக்கு ஜின் விசயத்தில் மட்டும் சந்தேகம் இருந்த தாகக் கூறுவது வேஷம் என்றேன்.இப்படி முஸ்லிம்கள் பெயரில் கருத்தை எழுதி அப்பாவி முஸ்லிம்களை உங்கள் பக்கமிழுக்க கையாளும் உத்தி.///இது தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் இருந்து வந்தது,தங்கள் கட்டுரையின் வாயிலாக அவைகள் படிப்படியாக பூர்த்தியாகிக் கொண்டே வருகிறது. தொடர்ந்து எழுதி வாருங்கள் நன்றி///.

  46. //…அப்படி நியமிக்கும்போது நீங்கள் அதை ஏற்றுகொள்வீர்களா?என்று கேட்பது போலவே 3 ;81 வசனம் உள்ளது//

    நண்பர் இப்ராஹிம்
    உங்கள் சகவாசம் சரியில்லை.இந்த சங்கருடன் விவாதித்து அவர் மாதிரியே கட்சி வாரிசுன்னு பேச ஆரம்பித்து விட்டீர்கள்.
    ________________

    உங்கள் உவமான்ம் ஒரு அள்விற்கு சரியானதுதான்.பி ஜே அவர்களின் கருத்தையே சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அவர் கருத்துடன் எனக்கு உடன் பாடில்லை.நன்றி.
    _________________________________

  47. sankar,
    3;81 வசனத்திற்கு விளக்கம் கேட்டீர்.பலமுறை சொல்லியும் புரியவில்லை .உவமானம் சொன்னால் சரிதான் இருந்தாலும் உடன்பாடில்லை ,உடன்பட்டால்தான் முஸ்லிம் ஆகிவிடுவீர்களே ,கம்யுனிஸ்ட்டாக இருக்கும் வரை உடன்படாமல் இருந்துதான ஆகவேண்டும்.

  48. //உடன்பட்டால்தான் முஸ்லிம் ஆகிவிடுவீர்களே ,கம்யுனிஸ்ட்டாக இருக்கும் .//வரை உடன்படாமல் இருந்துதான ஆகவேண்டும்//

    உடன்பட்டு உருப்படி இல்லாமல் போவதற்கு( எ.கா சேஷாசல பெரியார் தாச சித்தார்த்த அப்துல்லாஹ்).உடன்பாடில்லாமல் உருப்படியாக இருப்பதே மேல்.

  49. //பரிணாம வளர்ச்சியை இபோதைய மனித உருவத்துடன் நிறுத்தியது யார்?//

    நின்னு போச்சுன்னு யார் சொன்னது!?

  50. //இதில் யாருக்கு என்ன வருத்தம்?//

    யார் எப்படி நாசமா போனா எனகென்னன்னு விட்ரலாம்னு சொல்றிங்களா நண்பா!?

  51. வாழ்[வால்] பையன்
    நின்னு போகவில்லை.இனி தலையில் கொம்பு முளைக்கும் என்று டார்வின் சொல்லி இருக்கிறார்.இருந்துவிட்டு போகட்டும்.வளர்ந்து கொண்டே இருக்கும்
    மனிதன் ,குரங்கின் பரிணாமம் என்றால் குரங்கு எதன் பரிணாமம்? குரங்காக பரிணாம வளர்ச்சி அடையுமுன் அது என்னவாக இருந்தது?இதை யாரிடம் கேட்டு சொல்வீர்கள்?

  52. வணக்கம் வால்,

    உணவகம், சங்கமம் வேலைகளில் ஒழிவின்றி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். குட்டிப்பாப்பா நலமா? பரிணாமம் தொடர் என்னாச்சு?

  53. பரிணாமப்பாடத்தை ரெண்டு மண்டு அம்பிகளும் புரியாமல் பேசுற‌தை டார்வின் கேள்விப்பட்டாருண்ணா தூக்கு போட்டுண்டுவாள் அபிஸ்டு!!!

    காலம்காலமா குடுமி வச்சு ஆச்சாரத்தோடு இருந்தாலும் பிறக்கிற குழந்தை குடுமியோட பிறக்காதுடா அம்பி,நம்மதான்டா மழிச்சுக்கனும் மண்டு!!!

    காலம்காலமா காது குத்தி கம்மல் போட்டு பார்த்தாலும் பிறக்கிற குழந்தை கம்மலோட‌ பிறக்காதுடா அம்பி,நம்மதான்டா காலநேரம் பார்த்து கம்மல் மாட்டனும்டா மண்டு!!!

    காலம்காலமா சுன்னத்பண்ணி விட்டாலும் பிறக்கிற குழந்ததை சுன்னத்பண்ணிக்கிட்டு பிறக்காதுடா அம்பி,நம்மதான்டா வட்டிக்கிவாங்கி பிரியாணி போட்டு சுன்னத்கல்யாணம் பண்ணனும் மண்டு!!!

  54. //பரிணாமம் தொடர் என்னாச்சு//

    இணைய வசதி இப்பொழது தான் வந்தது தோழர், விரைவில் தொடரும்!

  55. //இனி தலையில் கொம்பு முளைக்கும் என்று டார்வின் சொல்லி இருக்கிறார்//

    மத வாதிகளே நீங்கள் அறிவியல் தெரிந்து கொள்ள வேண்டும்.மனிதன் குரங்கில் இருந்து தோனற‌வில்லை,குரங்கு,மனிதன் போன்ற உயிரினங்கள் ஒரே மூதாதையினரிடமிருந்து தோன்றின.

    பரிணாமம் பற்றி உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க தயார்.

    ஒரு சின்ன விஷயம் இந்த விஷயத்தை இன்னார் கூறினார் என்றால் அதற்கு ஆதாரமாக ஏதாவது இணையப் பக்கமோ,புத்தகமோ காட்ட வேண்டும்.

    டார்வின் மனிதனுக்கு எந்த புத்தக்த்தில் கொம்பு முளைக்கும் என்று கூறியுள்ளார்?

    குரான்(18:94) ல் கூறும் துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புடையவன் என்று அர்த்தமா இல்லையா?

    துல்கர்னைன் கொம்பும்,டார்வின் கொம்பும் ஒன்றா இல்லையா?

  56. sankar,
    //டார்வின் மனிதனுக்கு எந்த புத்தக்த்தில் கொம்பு முளைக்கும் என்று கூறியுள்ளார்///
    நான் தான் செங்கொடி தளத்தில் கூறியுள்ளேன்.வால் பையன் பரிணாமம் நிற்கவில்லை என்று அவருக்கு வால் வளர்ந்துள்ளதை வைத்து சொல்லியிருப்பாரோ என்று எண்ணி நான் கொம்பு வளர வாய்ப்பு உள்ளது என்று யூகித்து சொன்னேன்.டார்வின் காதுக்கு இந்த விஷயம் போகுமா? ஏனெனின் ,அவர் யூகித்து சொன்னதை இன்றளவும் ஒரு கூட்டம் நம்பிக்கொண்டு அதைப்பற்றி அளவாலாவி கொண்டிருக்கிறார்களே என்ற சந்தோசத்தில் இருக்கும் டார்வின் ,தூக்கு கயிறை,,,,,,,,,,

  57. காலம்,காலமா செங்கொடி தூக்கினாலும் பிறக்கிற குழந்தை தொப்பில் கொடியோடுதான் பிறக்கும் ,செங்கோடியோடு பிறக்காதுடா,பின்னாடிதான் கந்து வட்டிக்கு கடன் வாங்கி செலுத்த முடியாமல் வேறு வழி இன்றி செங்கொடி தூக்குவாங்க மண்டு

  58. அறிவியல் பேசினால் மதவாதிகலுக்கு கோபம் வருவது என்? ஜின் சரக்கு டாஸ்மாக் கடையில் இருக்கு.

  59. , ஒரு முகமதியனும் ‘குரான்’ வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்த தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும் பொருந்தியது, அதில் உள்ள ஒரு சிறு கோடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும். அதுவேதான் உண்மையான மதம், முறையே கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்

  60. நாத்திகன்,

    இந்துக்கள் பரிணாமவியலையோ, எந்த அறிவியலையுமோ எதிர்ப்பதிலலை. தமிழ் இந்து தளத்தில் பரிணாமவியலுக்கு ஆதரவான கட்டுரைகளை பார்க்கலாம்.

    ஆகவே இந்துக்களையோ இந்து மதத்தையோ தெரிந்துகொள்ளாமல், உட்டாலக்கடியாக இஸ்லாமையும் இந்து மதத்தையும் கோர்க்கவேண்டாம். தமிழ் இந்து என்னும் தளத்தில் பரிணாமவியலுக்கோ அல்லது பொதுவாக அறிவியலுக்கோ எதிரான கட்டுரைகள் இருந்தால் காட்டுங்களேன்.

    இஸ்லாமை புரிந்துகொண்டு அதன் பின்னர் விமர்சிக்கிறீர்கள் இல்லையா? அதே போல இந்து மதத்தை முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பிறகு இந்து மதத்தை விமர்சியுங்கள். விமர்சனத்தை இந்துமதம் எப்போதுமே ஆரோக்கியமாக சந்திக்கும். திருத்திக்கொள்ளவும் தயங்காது.

  61. சமத்துவமின்மை, சமூக அநீதி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்து மதம், வளர்ச்சிக்கு வழி வகுக்கவில்லை. தீண்டத்தகாத மக்கள், இந்து மதத்தில் அடிமைகளாக இருக்கும் வரை எந்தவித தன்னம்பிக்கையும் புத்துணர்வும் வரவே வராது. “இந்து மதம் தீண்டாமை கொடுமையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தீமை செய்து விடவில்லை. மற்றவர்க்கும் இந்த நாட்டுக்கும் கூட அது எதிரானது” என்பதனையும் அம்பேத்கர் அவ்வுரையில் குறிப்பிடுகிறார். “இந்து மதமும் அதன் சமூகப் படிநிலைத் தன்மையும் நம்மை அழித்துவிட்டது. ஆனால் இத்துடன் இது நின்றுவிடப்போவதில்லை. இந்துக்களையும், இறுதியாக இந்தியாவையும் அழித்து விடும். இந்து மதம் யாரையுமே காப்பாற்றாது.” என்கிறார் அம்பேத்கர்.

    இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. ஒரு ? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

    வருணாச்சிரமம் என்னும் ஏணிப்படியாலான சதுர்வருண முறையை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்தால் ஒரு தீண்டத்தகாதவனை சங்கராச்சாரியாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில், மானமுள்ள எந்தத் தீண்டாதவனும் தன்னை இந்து என்று அழைத்துக்கொள்ள விரும்பமாட்டான். சாதியம் ஒழிக்கப்பட வேண்டுமென்றால் இந்து மதத்தை அழித்தொழிக்க வேதங்களையும் சாத்திரங்களையும் வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். பகுத்தறிவு செயல்பட இடங்கொடுக்காத, ஒழுக்கம் செயற்பட இடங்கொடுக்காத வேதங்களையும் சாத்திரங்களையும், நீங்கள் தகர்க்க வேண்டும். ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்கவேண்டும்

  62. நிலா,நிலா ஓடிவா,
    நில்லாமல் ஓடிவா ,
    நாத்திகனுக்கு நெத்தியடி கொடுக்க ,
    நிலா,நிலா ஓடிவா,

  63. அன்பு இப்ராஹிம்,

    அன்பு சகோதரர் நீங்கள் கூப்பிட்டு நான் வராமல் போய்விடுவேனா?

    அம்பேத்காருக்கு இந்து மதத்தை திட்ட உரிமை உண்டு. அதற்காக அவரை யாரும் கொளுத்தவும் இல்லை, கழுத்தை அறுத்து கொல்லவும் இல்லை. எங்கள் நபியை அவமரியாதை செய்துவிட்டான் என்று வெட்டிக்கொல்லவும் இல்லை.

    அவர் சொன்னதில் உண்மை இருந்தது. அதனை காந்தி முத்ற்கொண்டு எல்லோருமே ஒப்புகொண்டார்கள். இஸ்லாமியர் இந்தியாவுக்குள் தீண்டாமையை கொண்டுவந்தாலும், அதனை இந்துக்கள் நிராகரிக்கவில்லை. தீண்டாமையை இந்துக்கள் உபயோகப்படுத்தினார்கள். அதற்காக அவர்கள் வருந்த வேண்டும். தங்கள் தவறுகளை திருத்திகொள்ளவேண்டும். அதனைத்தான் இப்போதும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு செய்து அவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற உழைக்கிறார்கள். எம் எல் ஏ சீட், எம்பி சீட் என்று எல்லாவற்றிலும் இடம் கொடுக்கிறார்கள். இதுவெல்லாம் அவர்கள் மெஜாரிட்டி இருந்ததால் செய்ததல்ல. தலித் ஒருவரையே அரசியல் நிர்ணய சட்டம் அமைக்கவும் பெருவரியான இந்துக்களும் காங்கிரஸும் அழைத்தார்கள். அவரது கோபம் நியாயமானது. அவர் இந்துமதத்தை திட்ட எல்லா உரிமையும் உண்டு. ஆனால், அவர் திட்டுவதாலேயே அவர் சொல்வதெல்லாம் உண்மையும் ஆகிவிடாது.

    தீண்டத்தகாதவரை சங்கராச்சாரியாக ஏற்றுகொள்ள வேண்டும் என்று கோர எனக்கு உரிமை கிடையாது. ஏனெனில் சங்கரமடம் ஒன்றும் எல்லா இந்துக்களுக்குமான மடமும் கிடையாது. ஏனெனில் எல்லா இந்துக்களுக்குமான மடம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது ராமகிருஷ்ண மடம் மட்டுமே. மற்ற எல்லா மடங்களும் அந்தந்த ஜாதி மடங்கள்தான். அது வைத்துகொள்ளமுடியாது என்று தடுக்கவும் முடியாது.

    போஹ்ரா ஜாதியினர் தங்களுக்கென ஒரு முஸ்லீம் மடம் வைத்துகொள்கிறார்கள். அதில் மற்றவர்கள் தலையிட முடியுமா? அல்லது போஹ்ரா ஜாதியினர் தவிர மற்றவர்கள் அதன் தலைவராக முடியுமா?

    இஸ்மாயிலிகள் முகம்மதுவின் வழித்தோன்றல்கள் மட்டுமே தலைவராக முடியும் என்று ஆவர்த்தனம் வாசிக்கிறார்கள். அவர்களை கொல்லவா முடியும?

    அல்லது அரேபியாவின் பெயரையே மாற்றி சவுதி அரேபியா என்று சவுத் குடும்பபெயரை வைத்து அரசு நடத்துகிறார்கள். இஸ்லாமில் அனைவரும் சமம் என்று இப்ராஹிமையா அடுத்த தலைவராக ஆக்குவார்கள்?

    ராமகிருஷ்ணமடத்தில் இன்று யார் வேண்டுமானாலும் தலைவராக ஆகலாம். பிறப்பு ஒரு தடையும் அல்ல. ஏன் பார்ப்பனர்களும் இன்று வணங்குவது மீனவக்குலத்தில் பிறந்த அம்மா அமிர்தானந்தமயியைத்தான். சங்கராச்சாரியார் நடையாக சென்று மாதா அமிர்தானந்தமயியை சந்தித்து வணங்கினார்.

    இந்து மதத்தை பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதே போல மற்றவர்களை விமர்சனம் செய்யும் முன்னால் உங்களைப் பற்றியே சற்று அறிந்துகொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.

  64. //இஸ்லாமியர் இந்தியாவுக்குள் தீண்டாமையை கொண்டுவந்தாலும், அதனை இந்துக்கள் நிராகரிக்கவில்லை. தீண்டாமையை இந்துக்கள் உபயோகப்படுத்தினார்கள்//

    Best Regards,
    IHRC
    Professor. Dr.Rama Nila
    loose@motion.com

  65. இந்து மதம் என்றால் பொருளும் ஆதாரமுமில்லையே! அப்படியிருக்க, இந்து மதம் எங்கிருந்துண்டானது? ஒரு கிறிஸ்துவனை ஒரு அனுகூலம் செய்து கொடுக்கும்படி கேட்டால், அதை அவன் செலவிலே செய்து வைப்பான். அதுபோலவே, மகமதியனும் (கரகோஷம்). இதைக் கேட்டால் நாஸ்திகர்கள் என்கிறார்கள். இந்துமதம் என்பதற்கே ஆதாரமுமிஉண்மையில் இன்று வரை இந்து மதம் மனுதர்மத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஆலய வழிபாடுகள், விழக்கள், சடங்குகள் என்று அனைத்துமே மனுதர்மம் வகுத்துக் கொடுத்தன்படிதான் இயங்குகிறது. பார்ப்பனர் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வதும் மனுதர்மத்தின்படிதான். சூத்திரர் சிறுதெய்வங்களுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லமலோ, வாயைக் கட்டிக் கொண்டோ பூசை செய்வதும் மனுதர்மத்தின்படிதான். இந்து மதம் முற்று முழுதாகவே மனுதர்ம முறையில்தான் இயங்குகிறது.
    ல்லை; இந்துக்கள் என்று ஒரு சாதியுமில்லை.

  66. நிலா,நிலா ஓடிவா,
    நில்லாமல் ஓடிவா ,
    நாத்திகனுக்கு நெத்தியடி கொடுக்க ,
    நிலா,நிலா ஓடிவா,பக்தியை மட்டுமே பரப்பி மக்களின் புத்தியை நாசப்படுத்த வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமா?

    பக்தியின் பெயரால் புத்தியைக் கெடுத்துக் கொண்டு, பொருளையும் பொழுதையும் நாசப்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?

    அவர்களைச் சிந்திக்க வைக்கும் சீரிய வழியில் பகுத்தறிவுப் பணிகளை மேற் கொள்ளக் கூடாதா?

  67. இஸ்லாமியர்களின் அறிவியல் தாகம் எப்படிப்பட்டது? வேத வசனங்களை அறிவியல் வயப்பட்டு பொருள் விளக்குபவ‌ர்கள், அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லா வசனங்களையும் அணுகுவார்களா? என்றால் நிச்சயமாக மாட்டார்கள். அணுகியிருந்தால் குரானில் சொல்லப்படும் ஜின்களை எப்படி மெய்ப்பிப்பது. ஜின்களின் இருப்பை பொருத்தவரை எந்த ஆதாரமோ, அறிவியல் விளக்கங்களோ அவர்களுக்கு தேவையில்லை. அல்லா குரானில் கூறியிருப்பது மட்டுமே போதுமானது, ஜின்கள் எனும் உயிரினங்கள் உலகில் இருக்கின்றன, அதை யாரும் மெய்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. இதே போல் ஏனைய வசனங்களையும் எடுத்துக்கொள்ளலாமே, குரான் இன்றைய அறிவியலை மெய்ப்பிப்பதாக நிரூபித்தாக‌ வேண்டிய அவசியமென்ன?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s