ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே


கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரிடம் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட பழமைவாத இந்து அமைப்புகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருந்தாராம். உலகில் பலருடைய, பல நாடுகளுடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கும் விக்கிலீக்ஸ் இதையும் வெளிக் கொண்டுவந்திருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் இரட்டை வேடம்தான் என்றாலும் அந்தக் கூற்றில் தவறேதும் இல்லை, சரியானது தான். ஆனாலும், அது முழு உண்மையையும் வெளிப்படுத்திவிட்டதாக கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்து அமைப்புகள் எனும் சொல்லின் பொருளில் காங்கிரசும் உள்ளடங்கியுள்ளது.

 
பாஜக தொடங்கி ஆர்.எஸ்.எஸ், சிவசேனா உட்பட அனைத்து இந்து அமைப்புகளும், ராகுல் ஒரு கத்துக்குட்டி என்பது முதல் காங்கிரஸ் பொறுப்பற்ற கட்சி என்பது வரை நாளிதழ்களில் அறிக்கைவிட்டு ‘உள்ளேன் ஐயா’ கூறியுள்ளன. தொண்டர்களோ உருவ பொம்மை எரிப்பதுவரை போய்விட்டனர். மோடி, “ராகுல் பாகிஸ்தான் ஆதரவாளர்” என்கிறார்; வெங்கையா நாயுடு, “பொறுப்பற்ற பேச்சு, இந்தியாவை பலவீனப்படுத்தும்” என்கிறார்: பால் தாக்கரே, “இந்து மதத்திற்கு எதிரான சகிக்க முடியாத கருத்து” என்கிறார்; உமாபாரதி, “நேரு குடியரசு அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் க்கு இடம் கொடுத்தார் தெரியுமா?” என்கிறார்; ஆர்.எஸ்.எஸ், “உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டு தூதரிடம் பேசலாமா?” என்கிறது. ஆனால் மறந்தும் கூட ஒருவராவது, அவர் சொன்னது தவறு இந்து அமைப்புகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை என்று கூற மறுக்கிறார்கள். ஏனென்றால் அப்படிக் கூறினால் மக்கள் வேறொரு வாயால் சிரிப்பார்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். பின் எதற்கு இந்த கூச்சல்?

 
பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக அடிவாங்கி முடங்கிக்கிடந்த பாஜகவை ஸ்பெக்ட்ரம் ஊழல் விழித்தெழ வைத்தது ஊழலை எதிர்த்து ஏனையோருடன் இணைந்து இருபது நாட்களுக்கும் அதிகமாக இவர்கள் நடத்திய ‘கூச்சல் குழப்ப’ போராட்டத்தினால்(!) மக்கள் மத்தியில் ஊழலை எதிர்ப்பவர்கள் என்று தங்களுக்கு மதிப்பு வந்துவிட்டதாக மிதந்து கொண்டிருந்தவர்களுக்கு, குளிர்கால கூட்டத்தொடர் முடிந்துவிட்டது ஒரு ஆற்றாமையை ஏற்படுத்தியிருந்தது. அதிலிருந்து விடுபட சரியான நேரத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ராகுல் பேச்சை பயன்படுத்திக்கொண்டு அடுத்த சுற்றை தொடங்கிவிட்டனர்.
பண்டைக்காலம் முதல் இன்றுவரை இந்துமத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாகவே இருந்துள்ளன என்பதை யாரால் மறுக்க முடியும்? பார்ப்பனீயத்தை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட பௌத்தம், சாங்கியம் போன்றவற்றை தின்று செரித்தது பயங்கரவாதமில்லையா? நந்தன், வள்ளலாரை எரித்துக்கொன்றுவிட்டு ஜோதியில் கலந்ததாக கதை கட்டிவிட்டது பயங்கரவாதமில்லையா? வில்லை இனி தொடக்கூடாது என்பதற்காக ஏகலைவன் கட்டைவிரலை வெட்டியெறிந்துவிட்டு குருதட்சனை என்று கூசாமல் கூறியது பயங்கரவாதமில்லையா? ஒரு கிழவனை இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக்கொண்டு கொன்றது பயங்கரவாதமில்லையா? இந்தியாவெங்கும் கொலைவெறிபிடித்து நடத்திய கலவரங்கள் பயங்கரவாதமில்லையா? காலிஃபிளவர் வயலுக்கு இரத்தப்பாசனம் செய்த பகல்பூர் படுகொலைகள் பயங்கரவாதமில்லையா? எப்படி உயிருடன் எரித்தோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம் என செய்முறை விளக்கங்களுடன் சொல்லிக்காட்டிய குஜராத் வெறியாட்டங்கள் பயங்கரவாதமில்லையா? யாருக்குச் சொந்தமான இடம் என அறுபடு ஆண்டுகளாக நடந்த வழக்கில் நாங்கள் அப்படி நம்புகிறோம் ஆகவே உங்களுக்கு இடமில்லை என கட்டப்பஞ்சாயத்து செய்ய‌ வைத்தது பயங்கரவாதமில்லையா? மக்களில் பெரும்பாலானோரை தீண்டத்தகாதவன் என ஒதுக்கிவைத்திருக்கும் இந்துமதமே பயங்கரவாதமில்லையா?

 
பிஜேபியினரும் இந்து அமைப்பினரும் குதிக்கத்தொடங்கியதும், நான் அப்படிக் கூறவில்லை எல்லா பயங்கரவாதங்களும் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று தான் கூறினேன் என்று பின்வாங்கியிருக்கிறார் ராகுல். காங்கிரசோ இதில் ஏதோ சதி இருக்கிறது என்று ஐயப்பட்டிருக்கிறது. ஆனால் இதை இவர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் சிமியும், ஆர்.எஸ்.எஸ் ம் பயங்கரவாத அமைப்புகள் தான் என்று ராகுல் பேட்டியளித்தார். காவி பயங்கரவாதம் என சிதம்பரம் கூறினார். ஆக இது வெளிப்பட்ட ரகசியமல்ல, காங்கிரஸின் தற்போதைய வேலைத்திட்டமே, இந்து அமைப்புகளை பயங்கரவாத அமைப்புக‌ள் என்று தாக்குவது தான். இது ஒரு ஓட்டுப்பொறுக்கி அரசியல் உத்தி தானேயன்றி, இந்து அமைப்புகள் என்று தன்னிலிருந்து பிரித்துக்காட்ட காங்கிரஸுக்கு எந்த தகுதியும் இல்லை.தான் ஒரு இந்து சனாதனி என காந்தி அறிவித்துக் கொள்ளவில்லையா? ஆர்.எஸ்.எஸில் உறுப்பினராக இருந்தவர்கள் காங்கிரஸிலும் உறுப்பினர்களாக, தலைவர்களாக, பிரதமராக‌ இருக்கவில்லையா? காந்தி கொலையினால் தடைவிதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எ உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடையை விலக்க காய் நகர்த்தியது காங்கிரஸ்காரகளில்லையா? முஸ்லீம்களா கொள்ளையடிக்கப்பட்ட கோவில் என்று சோமநாத ஆலயத்தை புதுப்பிக்கும் அரசியலைக் கையிலெடுத்து இந்து வெறியை ஊட்டியது இராஜேந்திர பிரசாத் இல்லையா? தற்போதைய பிஜேபி யின் வசனமான பசுவதை தடைச்சட்டம் என்பதை வடமாநிலங்களில் அமலுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் இல்லையா? உபி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ் டன் இளைஞர் காங்கிரஸும், காங்கிரஸ் சேவாதளமும் இணைந்து படுகொலைகள் புரியவில்லையா? திருட்டுத்தனமாய் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமர் பொம்மையை வழிபட கதவைத்திறந்தது ராஜீவ் இல்லையா? 92 மசூதி இடிப்பின் போது ஒரு லட்சம் ராணுவத்தினர் மசூதியை இடிப்பதற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா?

 
பிஜேபி இந்து அமைப்புகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை. இஸ்லாமிய மக்கள் மீது காங்கிரஸுக்கு எவ்வித அக்கரையும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு இந்து மக்கள் மீது பிஜேபி க்கும் ஒரு அக்கரையும் இல்லை என்பதும் உண்மையே. எதிரும் புதிருமான கொள்கைகளை கொண்டிருப்பதைப்போல் படம் காண்பிக்கும் இந்த இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது செயல்படுத்திய கொள்கை ஒன்றுதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம். விலைவாசி எட்டமுடியாத உயரத்தில் நிற்பது தொடங்கி, இன்று மலைக்க வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்வரை அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் இருப்பது இரண்டு கட்சிகளும் தட்டாமல் செயல்படுத்தும் இந்த பொருளாதாரக் கொள்கைகள் தான்.


இந்து என்றும் முஸ்லீம் என்றும் கிருஸ்தவம் என்றும் பேதம் பார்க்காமல் லவ்ஹூல் மஹ்பூழ் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் தீர்க்க தரிசனம் நிறைவேறும் நிமித்தமாக ஏவப்படும் பிரம்மாஸ்திரமாய் உழைக்கும் மக்களைத் தாக்கும் தனியார்மய கொள்கைகளை அட்டியின்றி நிறைவேற்றிவரும் இக்கட்சிகள் நடத்தும் நாடகத்தை சிந்திக்கும் மக்களால் மதிக்க முடியுமா? மக்கள் கழுத்தறுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொண்டு இந்து என்றும் முஸ்லீம் என்றும் பக்கம் பிரித்து வரும் இவர்கள் முகத்தில் காறி உமிழாமல் மக்களுக்கு ஒரு விடிவும் இல்லை.


மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌

24 thoughts on “ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே

 1. நண்பர் செங்கொடி .

  பௌத்தம் மற்றும் சமணம் என்ற மதங்களை இந்து மதம் விழின்கியது என்பதில் ஒரு சந்தேகம் எனக்கு .இந்தியாவில் தோன்றிய மதங்களில் நடைமுறை படுத்துவதில் கொஞ்சம் கடினமான வழிமுறை கொண்டது பௌத்தமும் ,சமணமும் .இந்து மதம் அந்த மதங்களை ஒழித்தது என்றால் இந்து மதம் என்று சொல்லப்படும் சைவமா இல்லை வைணவமா ?

  தென் இந்தியாவில் சைவம் தான் அன்றைய மதம் எனலாம் .இது வைனவத்திற்க்கு கூட எதிராக இருந்தது .

  இன்னொன்று இந்தியாவில் ஒருவர் நினைத்தவுடன் ஒரு மதத்தை பரப்பி எல்லா மக்களையும் அதை ஏற்று கொள்ள வைக்க முடியாது .இது வரலாறு தரும் உண்மை .சிறு தெய்வ வழிபாடுகளையும் இந்து மதம் ஏற்று கொண்டது என்று வேண்டும் என்றால் சொல்லலாம் .சிறு தெய்வ வழிபாட்டு மக்கள் இன்னும் அதையே செய்கிறார்கள் .இதில் பார்பானியம் எங்கு வந்தது என்பது தான் கேள்வி .வரலாற்றில் அதுவும் தமிழகத்தில் பௌத்தம் மற்றும் சமணம் பரவியதற்கு ஆதாரம் இருக்கு ஆனால் எல்லா மக்களும் ஏற்று கொண்டார்களா என்பதுதான் ஏன் கேள்வி ?

  சாதியை உருவாக்கியது ஒரு சதி என்றீர்கள் .ஆனால் மரபணு சோதனையில் இது பண்டைய காலம் தொட்டு இருக்கு என்று சொல்லுகிறார்கள் .குறிப்பாக 70000 வருடங்களாக இருக்கு என்கிறார்கள் .நீங்கள் சொல்லும் ஆரியர்கள் வந்தது முற்பது ஆயிரம் வருடம் கழித்து என்கிறார்கள் .40000 வருடங்கள் ஆகிறது (ஆரியர்கள் வந்து ) .நீங்கள் சொல்லுவதற்கும் இந்த சோதனைக்கும் நிறைய வேறுபாடு இருக்கே ?……..

  ஆனால் நேரு செய்த ஒரு தவறு முஸ்லிம் நாடுகள் தங்களை முஸ்லிம் நாடு என்று பிரகடனம் படுத்துவதை போல இந்தியாவை ஒரு இந்து நாடாக பிரகடனம் படுத்தி இருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது .

  உலமயம் ஆக்கல் என்பது காலத்தின் கட்டாயம் இதை கம்யுனிச நாடுகளும் பின்பற்று கின்றன .எந்த கொள்கையில் இருந்தாலும் ஊழல் செய்வது தவறு என்று தெரியாத அரசியல் மற்றும் மக்கள் இருக்கும் வரை ஒன்றும் செய்ய இயலாது .

  ஒரு சந்தேகம் கம்யுனிச நாடுகள் இறுதியில் ஏன் ஹிட்லர ஆட்சி போல் ஆகிறது ? அங்கும் குடும்ப ஆட்சி நடப்பது ஏன் ?

 2. //ஆனால் மரபணு சோதனையில் இது பண்டைய காலம் தொட்டு இருக்கு என்று சொல்லுகிறார்கள் .குறிப்பாக 70000 வருடங்களாக இருக்கு என்கிறார்கள் //

  அப்ப பிரம்மா படைத்த போதே சாதி இருந்தது நன்று கூறிவிடலாமே.
  இராமன் 17.5 இலட்சம் ஆண்டுக்கும் முந்தியவன். இராமனே சம்புகன் என்னும் கீழ் தாழ்த்தப்ப்பட்ட அறிஞரை கொன்றான் என்பதால்,அதற்கும் முந்தியது இல்லையா?. அப்போது இராமாயனம் கட்டுக் கதையா? .நீங்கள் நீதிமன்றத்தால் சொல்லப் பட்ட ஒரு உண்மையை மறுக்கிறீர்கள்.

  விவாதிக்கும் முன்பு ஆதாரம் உள்ள விஷயங்களை மட்டும் கூற வேண்டும்.
  சாதி 70000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.

  நிறைய பேச வேண்டி உள்ளது.

 3. மத வாதிகள் பொதுவாக கூறும் கருத்து எங்கள் மதம் முன்பு மிக நன்றாக இருந்தது. இப்போது அதனை மனிதர்கள் சரியாக பின்பற்றாததாலே எல்லாப் பிரச்சினைகளும் என்று கூறுவர்.

  ஒரு நாட்டின் உள்ள பெரும்பான்மையினரை மதம் என்ற பெயரால் திரட்ட சிறுபான்மையினரை மதத்தின் பெயரால் ஒன்றாக காட்டி அவர்கள் எல்லாருமே தீவிரவாதிகள்,நாட்டிற்கு எதிரானவர்கள் என்று நம்ப வைப்பது காலம் காலமாக நடந்து வருவது ஒன்று. மதத்தை பாதுகாக்க உங்கள் உயிரையும் தரவேண்டும் என்று மூளை சலவை செய்து இளைஞர்களின் வாழ்வை பறிப்பதும் இதில் அடங்கும்.

  நாம் சரி அவர்கள் தவறு என்ற கருத்தாக்கமே இந்த பிரச்சினை களுக்கு காரணமாகிறது. நாம் எல்லோரும் ஒன்று,நம்க்குள் இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் சின்ன சின்ன பிரச்சினைகள், அவர்கள் வேறு.அவர்கள் அப்படித்தான்,அவ்ர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக நமக்கு எதிராகவே சிந்திபவர்கள்,நாளை நம்மை அழிப்பதற்கு முன் அவர்களை இன்றே அழிப்போம் நமது உள் பிரச்சினைகளை பிறகு பார்த்துக் கொள்வோம், என்பதுதான் இந்த மத அரசியல்வாதிகளின் கொள்கை. இதனை நம் நாட்டில் இருந்து
  எல்லா நாடுகளிலும் பார்க்கலாம்.

  மனித சமுதாயம் ஏறத்தாழ ஒரே நிலையிலேயே இருந்து வருகிறது.
  அன்று நடந்தது போலவே இன்றும் மத வன்முறை,அரசியல் ந்டக்கிறது. மதம் என்பதும் அதிகாரத்தை அடையும் அரசியல் சித்தாந்தமே.

 4. //மத வாதிகள் பொதுவாக கூறும் கருத்து எங்கள் மதம் முன்பு மிக நன்றாக இருந்தது. இப்போது அதனை மனிதர்கள் சரியாக பின்பற்றாததாலே எல்லாப் பிரச்சினைகளும் என்று கூறுவர்.//

  அருமை… அருமை…. கம்ரடகள் தான் இப்படி கூறுவார்கள் என்றிருந்தேன்.

 5. //இதை படித்து பாருங்கள் இது சமீபத்தில் வெளி வந்த ஆய்வு முடிவுகள் //

  தோழர் குண சேகரன்

  இந்த கருத்துகள்
  மனிதர்கள் ஒரே இடத்தில்(கிழக்கு ஆப்பிரிக்காவில்) தோன்றி உலகம் முழுவதும் பரவினார்கள் என்று கூறுகிறது.தென்னிந்தியரும் வட இந்தியரும் வெவேறு இனத்தவர் என்று கூறுகிறது.

  இதனை மத்வாதிகள் தங்கள் படைப்புக் கொள்கைக்கும் ஆதரவாக கூறுவது உண்டு.

  நீங்கள் கூறியது போல்

  1.இனமும் சாதியும் ஒன்றா?. அப்படி என்றா உலகின் மற்ற இனக்குழுக்களிலும் சாதி இருக்க வேண்டுமல்லவா?

  2.சரி இனம் சாதியாக‌ உருவெடுத்தது .இந்தியாவில் மட்டும்தான் குலத்தொழில்,சாதி உயர்வு தாழ்வு கோட்பாடு வந்தது என்கிறீர்களா?( அதற்கு இந்து மதத்தை குறை சொல்லலாமா?)

  3.சாதி மனிதன் உருவான போதே இருந்தது என்றால் முன் வந்த தென்னிந்திய இனக்குழுக்களிலும்,பின் வந்த வட இந்திய இனக் குழுக்களிலும் பிராமண,சத்திரிய,வைசிய,சூத்திர,சண்டாள சாதிகள் இருப்பது எப்படி?

  4.இந்த கோட்பாடு சாதியை எப்படி குறிப்பிடுகிறது?.

  சாதி எப்படி உருவானது என்பது பற்றிய பல கருத்தாக்கங்கள் உண்டு.இன்னும் எதுவும் மிக சரியாக விளக்க இயலவில்லை.

  அதை பற்றிய கருத்தாங்கள் பற்றி நீங்கள் சேகரித்த விவரங்கள் ,ஆய்வுகள் உங்களுக்கு சரியாக படும் பட்சத்தில் அளித்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

 6. //shankar//

  நீங்க என்ன கேகுரீங்கன்னு புரியல ? உங்கள் கருத்துபடி ஐந்து சாதிகள் தான் இந்தியாவில் இருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை என்பது தான் உண்மை .நான் யோசிக்கும் விசியம் இன்னொன்று தொழில் முறை என்றாலும் ஒரே தொழில் செய்யும் இரு வேறு இடங்களில் இரு சாதிகளாக இருப்பது எப்படி ?

  ஏதோ ஒரு வகையில் இந்திய மக்கள் ஆரம்பத்தில் இருந்தே குழுக்களாக இருந்திருக்க வேண்டும் என்பதே ஏன் எண்ணம் .

  இன்னும் பல கருத்துக்கள் இருக்கிறது ஆனால் அதிகம் பேசபடுவது மதம் உருவாக்கியது என்று ,இதில் ஒரு முரண்பாடு இருக்கிறது .

  இதே போல் நடுநிலையாக பல ஆராயயிசிகள் நடந்தால் பல உண்மைகள் வெளியில் வரும் என்பதே உண்மை .

 7. //இதே போல் நடுநிலையாக பல ஆராயயிசிகள் நடந்தால் பல உண்மைகள் வெளியில் வரும் என்பதே உண்மை .//

  பெரும்பாலும் எல்ல இந்திய சாதிகளையும் இந்த 5 பிரிவுகளுக்குள் குறிப்பிட முடிவதால்தான் சொன்னேன்.இதை பற்றி அம்பேத்கார் கூட ஆய்வுகள் செய்து உள்ளார்.

  ஆர்வம் உள்ள நீங்கள் ஏன் செய்ய கூடாது?.

 8. //ஆர்வம் உள்ள நீங்கள் ஏன் செய்ய கூடாது?.//

  தமிழகத்தில் அது சாத்தியம் இல்லாத ஒன்று .இன்னும் தமிழனின் உண்மையான வரலாறு எழுதப்பட வில்லை என்பதே உண்மை .இதற்க்கு காரணம் சாதி தான் .

  நமது ஆராயயிசியில் சாதியை ஒதுக்கி விடுவதால் தான் எழுத முடியவில்லை .

  வெற்று கூச்சல்கள் மட்டுமே வரலாறு ஆகாது .

  இந்தியாவை எல்லா மதங்களுக்கும் பொதுபடையான நாடு என்று பிரகடனம் செய்தார் நேரு .அங்கு தான் தவறு நடந்து விட்டது என்கிறேன் .எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்த இந்து மத எதிர்பாளர்கள் ஏன் மதம் சார்ந்த சிவில் சட்டத்துக்கு மட்டும் தலை ஆட்ட வேண்டும் ?

  தன்னை பகுத்து அறியும் அறிவாளி என்று தப்பட்டம் அடித்த அத்தனை மேதாவிகளும் அம்பேத்கார் சேர்த்தும் தான் ,ஏன் மதம் சார்ந்த சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் .

  ஒரு நாட்டுக்கு ஒரு சட்டம் இருத்தல் நியாயம்.அது என்ன மதம் சார்ந்த சட்டம் ?

 9. தோழர் வணக்கம்
  //இந்தியாவை எல்லா மதங்களுக்கும் பொதுபடையான நாடு என்று பிரகடனம் செய்தார் நேரு //
  எல்லா மதங்களையும் சம‌மாக பாவிப்பதாக கூறும் நாடு மத சார்பற்ற நாடு ஆகுமா?.

  நமது அரசியல்வாதிகள் எது அரசியல் ஆதாயம் தருமோ அதனைத்தான் செய்வார்கள்.அவர்கள் செய்லுக்கு எல்லாம் விளக்கம் யாராலுமே விளக்கம் தர முடியாது.

  //தன்னை பகுத்து அறியும் அறிவாளி என்று தப்பட்டம் அடித்த அத்தனை மேதாவிகளும் அம்பேத்கார் சேர்த்தும் தான் ,ஏன் மதம் சார்ந்த சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்//

  என்ன சொல்ல வருகிறீர்கள் அம்பேத்கார் மட்டுமே அரசியல் சட்டம் வகுத்தார் சில விஷயஙங்களை வேஎண்டுமென்றே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார் என்றா?.

  அம்பேத்த்காரால் சீரமைக்கப் பட்ட இந்து திருமண சட்ட விதிகள் விவாக இரத்திற்கு ஆதரவாக இருந்ததால் பலத்த எதிர்ப்பு வந்தது.

  உங்கள் விவாதத்தை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஆரம்பித்தால் நலம். பொது அரசியல் சட்டம்(எப்படிபட்ட சட்டம்? மனுவின் சட்டம்?) இருந்தால்,இந்தியா இந்து நாடாக இருந்தால் 90% பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று சொகிறீர்களா?.

  இந்த இந்து என்கிற வார்த்தைக்கு பதிலாக வேறு எந்த‌ மத்த்தின் பேரையும் போடு பார்த்தாலும் பொருந்தும்.

  ஒரு (பெரும்பான்மையினரின்) மதத்தினரின் சட்டங்களை மற்றவர்களும் பின் பற்ற‌ வேண்டும் என்பது சரியல்ல.

  http://en.wikipedia.org/wiki/Hindu_Code_Bills

 10. திரு. செங்கொடி அவர்களே, ஹிந்து மற்றும் இஸ்லாம் மதம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். ஆனால் கிறிஸ்தவ மதம் மற்றும் ஏனைய மதங்களை பற்றி பதிவு எதையும் உங்கள் தளத்தில் காண முடியவில்லையே! காரணம் தெரிந்து கொள்ளலாமா….

 11. //சங்கர் //

  நீங்கள் தான் எழுதி இருந்தீர்கள் இந்து மதம் அனைத்து மதங்களையும் அழித்து விட்டது என்று .இது உண்மை இல்லை என்பதே எனது நிலைபாடு

 12. //நீங்கள் தான் எழுதி இருந்தீர்கள் இந்து மதம் அனைத்து மதங்களையும் அழித்து விட்டது //
  சரி
  இந்து மதம் என்றால் என்ன?
  10 வரிகளுக்கு மேற்பட்டு விளக்கவும்.

 13. //ஆனால் கிறிஸ்தவ மதம் மற்றும் ஏனைய மதங்களை பற்றி பதிவு எதையும் உங்கள் தளத்தில் காண முடியவில்லையே! காரணம் தெரிந்து கொள்ளலாமா//

  பூபியில் விமர்சன‌த்திற்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. விமர்ச‌ன‌த்தை தாங்க முடியாத கொள்கைகள் அழியும்.

  தி.க வினர் இந்து மதத்தை விமர்சித்தால் ஏன் மத்தவனை விமர்சிக்கவில்லை என்பார்கள். திக கர்ரர்கள் ஒரு முன்னாள் இந்து என்பதால் அதனை செய்கிறார்கள்.

  ஒரு முன்னாள் இஸ்லாமியர் இஸ்லாமை ஆய்வு செய்து விமர்சிக்கிறார். அவ்வளவுதான்.

  அதற்காக எல்லா முன்னாள் ஆட்கள் மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும் என்பது அல்ல. மதத்தை விமர்சிக்க மத வாதிகளை விட மதத்தை பற்றிய விவரங்கள் தெரிய வேண்டும்.நிறைய உழைக்க வேண்டும்.

  நீங்கள் ஒரு முன்னால் கிறித்தவராகவோ,கிறித்தவத்தை பற்றி விஷயஞானம் உள்ள பட்சத்தில் ஏன் விமர்சிக்க கூடாது?.எல்லாமே பிறரே(ஹீரோ) செய்யவேண்டும் என்று எதிர் பார்ப்பதுதான் தமிழனின் குணமோ?

 14. //பௌத்தம் மற்றும் சமணம் என்ற மதங்களை இந்து மதம் விழின்கியது என்பதில் ஒரு சந்தேகம் எனக்கு .இந்தியாவில் தோன்றிய மதங்களில் நடைமுறை படுத்துவதில் கொஞ்சம் கடினமான வழிமுறை கொண்டது பௌத்தமும் ,சமணமும் .இந்து மதம் அந்த மதங்களை ஒழித்தது என்றால் //

  குணசேகரன், ரொம்ப அறிவுபூர்வமா கேள்வி எழுப்புவாதாக நினைப்போ?
  உமது கேள்வியிலே நீர் ஒரு ஆர் எஸ் எஸ் அம்பி என்பது தெளிவு

  சமண மற்றும் புத்த மதங்களில் துறவிகளுக்கான விதிமுறைகள்தான் கடினமானது, சராசரி மனிதர்களுக்கான் விதிமுறைகள் மிகவும் எளிமையானதே,

  இந்து மதத்தின் சாதிபிரிவுகள் எப்போது வந்ததோ அப்போதுதான் பார்ப்பனியமும் வந்தது,

  ஆதிக்க சாதியில் பிறந்த ஒரேயொறு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு உம்மைபோன்றவர்களின் கொழுப்பான பார்ப்பனிய கருத்துக்களால் இந்து மதம் ஒரு பார்ப்பன பிராடு மதம் என்பதை மறைக்க முடியாது.

 15. //விடுதலை//

  நான் எந்த ஆர் எஸ் எஸ் லும் இல்லை .முதலில் புரிந்து கொல்ல முயற்சி செய்யுங்கள் இல்லை என்றால் தவறாக எழுத வேண்டாம் .

  இந்தியாவில் ஒரு மதத்தை மட்டும் மக்களை பின்பற்ற வைப்பது கடினம் .

  அப்படி முடித்திருந்தால் இன்று இந்திய வெங்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவம் மட்டுமே இருந்திருக்கும் .

  இந்து மதம் என்ன பரப்பியா இப்படி ஆனது இல்லைவே இல்லை என்பதே என் கருத்து .

  வழக்கை முறையையும் மனிதனின் தேடுதலையும் வைத்தே இந்து மதம் இன்றும் நிலைத்து நின்று இருக்கிறது .

  எந்த இந்துவும் நான் இந்து என்று வெளியில் மார்தட்டி கொள்ளுவது இல்லை .

  அவர் அவர் மனதில் அந்த மத கருத்துகள் நிலைத்து இருப்பதால் தான் இன்னும் அதை அழிபதர்க்கு பாடுபடுகிறார்கள் .

  இந்து மதத்தை அழிக்க எல்லா பக்கமும் இருந்து போராடுகிறார்கள் .இஸ்லாம் ஒரு பக்கம் ,கிறிஸ்துவம் ஒரு பக்கம் ,நாத்திக வாதிகள் ஒரு பக்கம் .

  ஆனால் எந்த பெரியாரளும் அதை செய்ய இயலவில்லை .விநாயகர் சிலை ஒடைததன் விளைவு இன்று தெருவுக்கு தெரு விநாயகர் கோவில் .கோவில் இல்லாத ஊர் இல்லை .திருவிழா கொண்டாடாத மனிதன் இல்லை .

  புரிந்து கொண்டு விவாதியுங்கள் தெரியவில்லை என்றால் விட்டு விடுங்கள் .

 16. தவறாக எழுத வேண்டாம்

  //புரிந்து கொல்ல முயற்சி செய்யுங்கள்//

  இல்லை

  புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் .

  //இந்து மதத்தை அழிக்க எல்லா பக்கமும் இருந்து போராடுகிறார்கள் //

  நித்யானந்தா,காஞ்சிபுரம் தேவநாதன், ஜெயெந்திரர் ஆகியோரின் பங்களிப்பையும் மறந்துவிடாதீர்.

  கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,சீக்கிரம் இன்னொரு அவதாரம் எடுத்து பக்தர்களை காத்து மதத்தை காக்கும் அசுரர்களை அழிக்க சொல்லுங்கள். அதனை ஒரு பண்டிகையாக கொண்டாடுங்கள்.

  //விநாயகர் கோவில் .கோவில் இல்லாத ஊர் இல்லை//

  கோவில்கள் இருப்பது எதனாலே?

  பூசாரி வாழ வேண்டும் அதனாலே.

  //புரிந்து கொண்டு விவாதியுங்கள் //

  புரியும் படி கூறுங்கள்.கட்டாயம் கூறவேண்டும்.

 17. ///orthodoxmuslim at 5:12 PM
  Dear Ibrahim,
  Beware of RED DOGS.
  Please do not answer/argue with them .////
  இந்துத்துவா தீவிரவாதிகள் ,இந்திய முஜாஹிதீன்கள் என்ற பெயரில் குண்டு வைக்கிறார்கள் என்றால்,மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் [ரெட் டாக்ஸ்] முஸ்லிம் ஆர்தொடகஸ் என்ற பெயரில் பயமுறுத்துகிறார்கள்.

 18. //shankar //

  சில எழுத்து பிழைகள் வந்து விட்டது மனிக்கவும் .

  மனிதனுக்கு பண்டிகை என்பது இல்லை என்றால் அவன் இயந்திரம் போல தான் .நமது சமுதாயம் மற்றவர்கள் போல அல்ல .அதனால் தான் பல பண்டிகைகள் ,புதிது புதிதாக கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள்

  இது மனிதனுக்கு தேவையான ஒன்று .

  இதை விடுங்கள் நான் சொன்னதுக்கு பதிலையவே காணோமே .இந்து மதம் எந்த மதத்தையும் அழிக்க வில்லை என்கிறேன் .

  அதற்கான ஆதாரம் வேண்டும் என்கிறேன் .அதே போல சமணம் மற்றும் பௌத்தம் இந்தியாவில் அனைவராலும் பின்பற்ற பற்றது என்பதற்கும் ஆதாரம் தேவை .

 19. //இந்து மதம் எந்த மதத்தையும் அழிக்க வில்லை என்கிறேன்.//

  முதலில் இந்து மதம் என்பதை வரையறை செய்வோம்.

  இந்து மதம் என்பது பல வழிபாட்டு முறைகளின்(மதம்) கலவை.சைவ,வைணவ, கௌமாரம்…. இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம்.

  இந்திய அரசியலமைப்பு சட்டப் படி எவர் ஒருவர் கிறித்தவ , இஸ்லாமியராக,பார்சி, யூத மதத்தை சேர்ந்தவராக இல்லாமல் இருக்கிறாரோ அவரே இந்து என்று கூறுகிறது.

  புத்த,சீக்கிய மதத்தையும் இந்து மதத்தில் சேர்த்தது ஏன்?
  ____________

  Article 25 (2)(b) of the Constitution stipulates that “the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jain or Buddhist religion”.1 The Hindu Marriage Act of 1955 goes in greater detail to define this “legal Hindu”, by stipulating in Section 2 that the Act applies:

  “(a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,

  “(b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and

  “(c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion”.2
  ____________

  கிறித்தவமும்,இஸ்லாமுக்கு முந்தி இங்கு வாழ்ந்தவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்பதே இதற்கு பொருள்.

  இங்கு அனைவரும் (இராம ராஜ்ஜியம்) எல்லா நலமும் பெற்று வாழ்ந்தனர் என்று இந்துத்வ அமைப்புகள் பிரச்சாரம் செய்வது அனைவரும் அறிந்ததே.
  __________________

  இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறென்.

  இந்து மதம் என்பதை சமஸ்கிருத வேதங்களை ஆதாரமாக கொண்ட வைதீக மதமாக எடுத்துக் கொள்கிறேன்.

  புத்த மதம் ஏன் அழிந்தது என்று பார்ப்போம்.

  வேத கால இந்து மதத்தில் விலங்குகளை வெட்டி பலி கொடுத்து யாகம் செய்வது ,தேவர்களுக்கு பங்கு கொடுப்பது நடைமுறையில் இருந்த ஒன்று.

  புத்த மதம் இதனை எதிர்த்ததால் இவ்வழக்கம் நடைடமுறையில் இருந்து ஒழிந்தது.

  இந்து மதம் புத்த மதத்தின் க்ள்கைகளை தனது என்று திருடிக் கொண்டது.அசோகருக்குப் பிறகு அவருடைய பவுத்த சாம்ராஜ்யம் வைதீக ம‌தத்தினரால் கவிழ்க்கப் பட்டது.

  அசோகரின் வம்சம் சத்திரிய சத்திரிய வம்சத்தை சார்ந்தவர்கள் அல்ல. அப்போது புத்த மதத்தை பின்மபற்றியவர்கள் அவனைவருமே தாழ்த்தப்பட்ட்வர்களாக ஆக்கப் பட்டனர்.

  இது அம்பேத்கார் சாதிகள் குறித்து செய்த ஆய்வின் சாராம்சம்.இப்புத்தகங்கள் இத்தளத்தின் நூலகம் பகுதியில் இருக்கின்றன.

  1.புத்த மதத்தின் கொள்கைகளை இந்து மதம் ஏற்று கொண்டது என்றால் இப்போது இந்து மதத்தில் இருக்கும் காருண்ய கொள்கைகள் எல்லாம் பத்த மதத்தின் கொள்கைகளே.

  2.புத்த மதத்தினரை இந்து மதத்தின் தாழ்த்தப்பட்டவராக்கி விட்டனர்.

  3. தாழ்த்தப்பட்ட மக்களில் பலர் கிறித்தவ,இஸ்லாமிற்கு மதம் மாறிவிட்டனர்.
  _____________________

  http://en.wikipedia.org/wiki/Caste_system_in_India
  http://en.wikipedia.org/wiki/History_of_Buddhism

 20. குணா ஜீ

  கருத்துக்களை திரித்து குழப்பி அதில் குளிர் காயவதே பார்ப்பன்களின் வேலை,,,
  சரி பிரச்சனைக்கு வருவோம்
  ஆரஎஸ்எஸ் என்பது ஒரு பிற்போக்கு பாசிச அமைப்பு மட்டுமல்ல அது ஒரு கருத்தாக விளங்குகிறது, உம்முடைய கருத்து ஆரஎஸ்எஸ் ன் கருத்தாகவே இருக்கிறது , இந்து மதத்தை யார் பரப்பினால் என்ன அதன் யோக்யதை என்ன என்பதே கேள்வி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதை ஏற்று கொள்கீறீரா?

  //அவர் அவர் மனதில் அந்த மத கருத்துகள் நிலைத்து இருப்பதால் தான் இன்னும் அதை அழிபதர்க்கு பாடுபடுகிறார்கள் .
  இந்து மதத்தை அழிக்க எல்லா பக்கமும் இருந்து போராடுகிறார்கள் .இஸ்லாம் ஒரு பக்கம் ,கிறிஸ்துவம் ஒரு பக்கம் ,நாத்திக வாதிகள் ஒரு பக்கம் .
  ஆனால் எந்த பெரியாரளும் அதை செய்ய இயலவில்லை .விநாயகர் சிலை ஒடைததன் விளைவு இன்று தெருவுக்கு தெரு விநாயகர் கோவில் .கோவில் இல்லாத ஊர் இல்லை .திருவிழா கொண்டாடாத மனிதன்//

  ஒவ்வொரு சாதி இந்துவும் தான் இந்து என்று தன் சாதி கொழுப்பில் எச்சக்கால்
  நாயை போல் குலைப்பது பரவாலாக இருக்கிறது இது பல வழிகளில் நடக்கிறது
  சாயபு சகோதரரை துலக்கன் என்று சொல்லுவதும் நான் இந்து என்று சொல்லுவதின் மறுவடிவம்தான்,

  இசுலாமோ, கிறித்துவமோ இந்து மதத்தை அடிக்க கங்கனம் கட்டிக்கொண்டு திறியவில்லை நீங்கள்தான் திரிகிறீர்கள், நீங்கள் பள்ளா, பறையா என்று கொழுப்பெடுத்து திரிந்தீர்கள். அவர்களுக்கு முசுலீம் மதம் சமத்துவத்தை தந்தது போனார்கள், கிறித்துவமதத்தில் ஒரு ஒட்டனோ, சக்கிலியோ பாதிரியார் ஆக முடியும் ஆனால் இந்து மத்த்தின் யோக்கியதை என்ன என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை அதற்கு தீண்டாத மக்களும் , சேரிகளும் கண் முன்னே தெரிகிறது, முதலில் சாதியை ஒழித்து விட்டு இந்து மதத்திற்கு காவடி தூக்குங்கள் குணா ஜீ! அப்போது இந்து மதம் தானாக முக்தியைடயும்,
  பகுத்தறிவு போராளி தந்தை பெரியார் அவர்கள் தனது தள்ளாத வயதில்
  தனது தடியினால் ஆபாச கற்பனையான இந்து மதத்தை அடித்து நொறுக்கினார்
  அதனால் உம்மை போன்றவர்கள் கூட சாக்கடையில் வினாயகனை உடைக்கிறீர்கள், தெருவுக்கு தெரு வினாயகன் கோயில் இருக்கலாம் ஆனால் டவுனுக்கு ஒரு பிராமணாள் கபே கூட இல்லை என்பதை மனதில் வையும்
  விரைவில் பிராமணாள் மதமே இல்லாமால் போகும் காலம் வரும் திருவிழா நடக்கிறது அங்கே விபச்சாரமும் , இந்திர வெறியோடு சாராய குடியும் தொடர்கிறது.
  குணா நான் என்ன சொன்னேன்னு புரிகிறதா?

 21. அப்படியென்றால் மதம் அபின் என்றுகூறும் காம்ரேட்கள் கேரளாவில், கிருஷ்ண் ஜெயந்தியும்,விவேகானந்தர் பிறந்த நாள் கொண்ட்டாட்டமும் நடத்துவதேன்….

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s