ஆந்திர ஓட்டுப்பொறுக்கி அரசியலில் அதிரடி நிகழ்வுகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. ஆனாலும் ராஜசேகரரெட்டியின் மரணத்திற்குப்பின் இந்த கேடுகெட்ட கூத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென விவசாயிகளின் மீது பாசம் பொத்துக்கொண்டு பொங்கியெழ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார், அதிலிருந்து செய்தி ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் ஜெகன்மோகனும் சேர்ந்துகொள்ள ஆந்திரம் விழி பிதுங்கி நிற்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்காக அன்று அம்பேத்காரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அடாவடியாக உண்ணாவிரதத்தை தொடங்கிய காந்தியைப் போல் அடாவடி உண்ணாவிரதங்களால் தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர்.
அண்மையில் பெய்த மழையினால் வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்க ஆந்திர அரசு முதலில் ஏக்கருக்கு 4500 ரூபாயும் பின்னர் அதை ஆறாயிரமாக உயர்த்தியும் நிவரணத்தொகை அறிவித்தது. இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சந்திரபாபு நாயுடு இழப்பீட்டுத்தொகையை ஏக்கருக்கு பத்தாயிரமாக உயர்த்தவேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். காலவரையற்ற உண்ணாவிரதம் என்று விளபரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த நாடகம் இரண்டு நாட்களாகுமுன்னரே அவரின் உடல்நிலை சீர் கெடுகிறது என்று மருத்துவர்கள் குழு பிரச்சாரத்தைத் தொடங்க, பிரச்சனை சிக்கலாகி விடக் கூடாதே என அஞ்சிய ஆந்திர அரசு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு வேண்டியது. ஆதரவு பெருகுகிறது என்பதை அறிந்த நாயுடு உண்ணாவிரதத்தை கைவிட மறுக்க, கைது செய்தாவது நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பியது அரசு. விளைவு, தெலுங்கு தேச தொண்டர்கள்(!) சாலை மறியல் கல்வீச்சு என இறங்கிவிட்டனர்.
நாயுடுவுக்கு அப்படியென்ன திடீர் பாசம் விவசாயிகள் மீது? அவரின் பாசம் விவசாயிகள் மீதல்ல, தன் மீது தான். ராஜசேகர ரெட்டி விபத்தினால் காலியாகிவிட்ட திண்ணைக்கு முதலில் ரோசய்யா, பிறகு கிரண்குமார் ரெட்டி என்று ஒரு நிலையற்ற தன்மை நிலவ, இடையில் ஜெகன் மோகன் நடைபயணம், தனிக்கட்சி என்று வீரம் காண்பிக்க, சும்மா இருந்தால் காணாமல் போய்விடுவோம் எனும் பயம் வந்தது நாயுடுவுக்கு. எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்தவருக்கு தொடர் மழையால் பயிர்கள் மூழ்கியது கிடைக்க, விவசாயிகளுக்கான போராளியாக புது அவதாரம் எடுத்தார்.
விவசாயிகளின் வயிற்றில் எரியும் தீயை ஏக்கருக்கு பத்தாயிரம் என்பது அணைத்து விடாது என்றாலும், இந்தக் கோரிக்கையை நாயுடுவால் வேறு வழிகளில் விடுத்திருக்க முடியாதா? தன்னுடைய கட்சித் தொண்டர்களின் பங்களிப்புடன் ஆந்திரா முழுவதிலும் இந்தக் கோரிக்கையை முன்னிருத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்க முடியாதா? தலைமையகத்தை முற்றுகையிட்டிருக்க முடியாதா? முடியலாம், ஆனால் அவை ஓரிரு நாட்களின் மக்களால் மறக்கப்பட்டுவிடும். எதிர்வரும் தேர்தலில் ஒட்டுகளாக அவை மாறாது. ஓட்டுக்களாக மாறவேண்டுமென்றால் தன்மீது அனுதாபம் ஏற்பட்டாக வேண்டும் என்பதைத்திட்டமிட்டே இந்த உண்ணாவிரத உருப்படியை கையில் எடுத்திருக்கிறார்.
ஆந்திராவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலுமே விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மழை பெய்து செழித்தாலும், பெய்யாமல் வறண்டாலும் அவைகளை தன்னை பாதிக்கும் அம்சங்களாக மாறிவருவதை மவுனமாகவே பார்த்துக்கொண்டிருக்கிறான் விவசாயி. அரசின் பொருளாதரக் கொள்கைகளினால் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். பசுமைப் புரட்சி எனும் பெயரில் செயற்கையான இரசாயண உரங்கள் விளை நிலங்களில் கொட்டி நிலத்தை மலடாக்கி விதைக்குக் கூட பண்ணாடு நிறுவனங்களிடம் கையேந்தும் நிலையை திட்டமிட்டு உருவாக்கி, இடு பொருட்களின் விலையை விண்ணுக்கு உயர்த்தி விளை பொருட்களின் விலையை மண்ணுக்குத்தாழ்த்தி, விவசாயிகளை ஒட்டாண்டியாக்கி அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு ஓடவிட்டிருக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தயாரா இந்த நாயுடுகளும் ரெட்டிகளும்?
பருவம் தப்பாமல் மழை பெய்துகொண்டிருந்த நாடு இது. ஆனால் இன்று என்றாவது மழை பெய்தாலே அது விளைநிலங்களிலும், குடியிருப்புகளில் புகுந்து மக்களையும் விவசாயிகளையும் தவிக்க வைக்கிறது. ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங்களும் நீர்நிலைகளும் இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் காணாமல் போய்விட்டன கடந்த சில பத்தாண்டுகளில். இருக்கும் நீர்நிலைகளையும் தூர்வாரி மராமத்துப் பணிகளை செய்யக்கூடாது என்று தடை போட்டிருக்கிறது உலக வங்கி. அதனால் தான் சிறு மழைக்கும் வயல்கள் தண்ணீரில் மிதக்கின்றன. உணவு தானியங்கள் புழுத்துப்போய் கடலில் கொட்டினாலும் அதை பசித்திருப்பவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என தத்துவ விசாரம் செய்யும் அறிவுஜீவி பிரதமர் தண்ணீரும் மின்சாரமும் இலவசமாய் கிடைப்பதனால் தான் விவசாயிகள் வீணாக்குகிறார்கள் என்று அவற்றுக்கு விலைவைத்து தனியாரிடம் தள்ளிவிட தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தயாரா இந்த நாயுடுகளும் ரெட்டிகளும்?
அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே ஆட்சியில் இருக்கும் போது கழுத்தை அறுப்பது, ஆட்சியில் இல்லாதபோது கட்டுப்போடுவதுபோல் நடிப்பது என்பதையே தங்கள் ஒரே கொள்கையாய் வைத்திருக்கின்றன. மக்கள் இவர்களை இனம்கண்டு துடைத்தழிக்க முன்வராதவரை நம்மில் படிந்திருக்கும் துயரத்தின் கறைகளை நீக்க முடியாது.
டோட்டலா நெகட்டிவாவே பார்த்து எழுதியிருக்கிங்க.
நல்ல காரியம் நடக்கும்போது ஆரு பண்றா,ஏன் பண்றா, எதுக்கு பண்றான்னெல்லாம் ரோசிக்க கூடாது பாஸ்.
ஓட்டுப்பொறுக்கி ஆந்திர அரசியல்(?) நான் தமிழக அரசியலை கிழிச்சா தமிழ் நாடு தாங்குமா பாஸ்?
இது உணர்ச்சிமிக்க அரசியல் ஸ்டண்டுதான் அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. உங்கள் கட்டுரைக்கு நன்றி.
கருணாநிதியும் பொய் மூட்டைகளும்
ஈரோடு ஆ.சரவணன்
லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ந் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை அனைத்து ஊடகங்களிலும் டிசம்பர் மாதம் 1ந் தேதி மிகப் பெரிய விளம்பரத்துடன் வெளியாகியுள்ளது. இது ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும். அவர் வெளியிட்ட அறிக்கையில் தனது சொத்து பத்துக்களை விலாவாரியாக பட்டியிலிட்டு தான் தவறே செய்யாதவன், தனது உறவுக்காக கூட நான் தவறு செய்யவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் பல வழிகளில் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது.
உண்மையிலேயே தமிழக முதல்வர் ஊழலுக்கு நெருப்பானவரா என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. ஒரு கட்சியின் மாநில பொருளாளரே தலைமையின் மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தியது திமுகவில் மட்டுமே நடந்தது. 6.11.1972ல் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் கருணாநிதியின் மீதும் மற்றும் சில அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் மனு கொடுத்தார்கள். இந்த மனுவின் மீதுதான் 2.2.1976ந் தேதி முன்னாள் நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது.
சர்க்காரியா கமிஷனால் வன்மையாக கண்டிக்கப்பட்டவர் தமிழக முதல்வர், கமிஷனில் விசாரணைக்குட்பட்ட விஷயங்களில் முக்கியமானது “ முதல் மந்திரியின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அவருடைய குடும்பத்தினர் வீடுகளையும் சொத்துக்களையும் வாங்கி வந்தார்கள்” என்பதாகும். இந்த குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக கமிஷன் கருத்து தெரிவித்தது. “வீராணம் திட்டத்தைத் திருவாளர்கள் சத்திய நாராயணா பிரதர்சுக்கு ஒப்படைக்க எடுத்த முடிவு ஒரு பெரிய நிர்வாகத் தவறு என்பதைச் சந்தேகமில்லாமல் கூறலாம்” என சர்க்காரிய தெரிவித்தார். தனது பதவிக் காலத்தில் தவறு செய்யாதவர் என்றும் ஊழலுக்கு தான் நெருப்பு என்பதும் மக்களை ஏமாற்றுகிற செயல்தான். மேலும் இவர் மீது போட்ட வழக்குகளை இந்திரா காந்தி தள்ளுபடி செய்த போது, கமிஷனில் பணியாற்றிய சிபிஐ. ஆதிகாரி திரு லட்சுமி நாராயணன் 2001ம் ஆண்டு மே மாதம் 29ந் தேதி பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ கருணாநிதி மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை வாபஸ் பெற்ற இந்திரா காந்தி அரசின் செயல் நியாயமற்றது “ என்று கூறியதும் இவரின் நெருப்புக்கு சான்றாகும்.
அனைத்து ஊடகங்களிலும் தமிழக முதல்வர் விடுத்த செய்தியில் “ என்னுடைய 87 வயதில் பல பொறுப்புகளில் இருந்தாலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை, அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்குப் பெற்றுக் கொண்டதும் இல்லை.” என தெரிவித்துள்ளார். ஆனால் 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்படும் சொத்துக்கள் எவ்வாறு வந்தது என்பதை தெரிவிக்க மறந்துவிட்டார். தமிழக முதல்வர் தனது பெயரில் சொத்துக்களை மட்டுமே தெரிவித்துவிட்டு, தனது மனைவி, துணைவி, மகன்கள் பெயரில் உள்ள சொத்துகளை தெரிவிக்கவில்லை என்பதும் மிகப் பெரிய நெருடலாகும்.
அஞ்சுகம் பதிப்பகத்தில் ரூ5000க்கு 50 சதவீத பங்குகள் உள்ள நிறுவனத்திற்கு உரிமை பட்ட நிலம் மற்றும் கட்டிடம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்தில் இவருக்கு எவ்வித பங்கும் கிடையாதா? இந்த சொத்து இருக்கின்ற இடம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது, இன்று இதன் மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்பது பலருக்கும் தெரிந்த செய்தியாகும். இந்த நிறுவனத்தில் உள்ள மீதி பங்குகள் 50 சதவீதமும் தனது மனைவி மு.க.தயாளு அம்மாள் பேரில் உள்ளது என்பதையும் பார்த்தால் , தமிழக முதல்வருக்கு அஞ்சுகம் பதிப்பத்தின் சொத்து முழுமையும் அவருடையது இந்த சொத்தை ஏன் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. இதைப் போலவே தமிழ்க்கனி பதிப்பகம் எனும் பெயரில் உள்ள சொத்துக்கள் ராசாத்தி அம்மாளுக்கு உரிமைப்பட்டதையும் மறைத்துவிட்டார்.
தனது பெயரில் வங்கியில் உள்ள வைப்புத் தொகையை மட்டும் கணக்கு காட்டி விட்டு தயாளு அம்மாள் பெயரில் இந்தியன் வங்கி கோடம்பாக்கத்தில் ரூ12,50,00,000(பணிரெண்டு கோடியே ஐம்பது லட்சம்) வைப்பு தொகை இருப்பதும், திருமதி ராசாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கி இராசா அண்ணாமலைபுரம் கிளையில் உள்ள ரூ5,00,00,000 (ஐந்து கோடி) இருப்பதையும் தெரிவிக்கவில்லை. கோபாலபுரத்தில் உள்ள வீட்டின் தன்மையை மட்டும் அந்தக் காலத்தில் ரூ45,000க்கு வாங்கினேன் என கூறிய முதல்வர், ரூ3.02 கோடி மதிப்புள்ள திருமதி இராசாத்தி அம்மாளுக்கு சொந்தமான மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி வீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
தமிழக முதல்வர் தனது மகனும் மாநில துணை முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் சொத்துக்களை பற்றி மூச்சுக் கூட விடவில்லை. மு.க.ஸ்டாலின் கணக்குப்படி தனது மனைவியின் பெயரில் சொத்தை விற்றதில் வரவேண்டிய தொகை ரூ14,50,000 என குறிப்பிட்டுள்ளது. இவர் எந்த சொத்தை விற்றார் என்பது இமாலய ரகசியமாகும். வசதியுடன் வாழுகின்றவர் கள் எவரும் தங்களுடைய சொத்துக்களை விற்கமாட்டார்கள் என்பது நியதியாகும். திரு ஸ்டாலின் தற்போது வசிக்கும் சீதாபதி நகர் வேளச்சேரி உள்ள வீடு வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதை தெரிவிப்பார்களா அல்லது தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பட்ட மனுவில் தனது மகன் மீது உள்ள சொத்துக்களை ஏன் காட்டவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
மதுரையில் ஆட்சிப் புரியும் தனது மகன் மு.க.அழகிரியின் சொத்துக்கள் எவ்வளவு அவைகள் எவ்வாறு வந்தன என்பதற்கு பட்டி மன்றம் வைக்க தமிழக முதல்வர் தயரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். முதலில் மு.க.அழகரி மற்றும் மனைவி மகன் மீது வங்கியில் உள்ள வைப்புத்தொகையை பார்த்தால் மிகவும் மலைத்துவிடுவீர்கள். இந்தியன் வங்கி டிவிஎஸ் நகரில் முக.அழகரி தனது பெயரில் உள்ள வைப்பு தொகை ரூ1,75,00,000 இந்த தொகையுடன் மேலும் ரூ50 லட்சம் இணைத்துள்ளார். தனது மனைவியின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ10 லட்சமும், இந்தியன் வங்கி டி.வி.எஸ் நகர் கிளையில் ரூ43,43,095 உள்ளது, தனது மகன் பெயரில் இந்தியன் வங்கி டி.வி.எஸ் நகர் கிளையில் வைப்பு நிதியாக உள்ளது ரூ1,19,01,330 ஆகும். ஆகவே இவர்கள் மூவர் பெயரிலும் உள்ள வைப்புத் தொகை எவ்வாறு வந்தது என்பதை தமிழக முதல்வர் தெரிவித்திருந்தால் ஊழலுக்கு நெருப்பானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
மதுரையில் ஆட்சி புரிபவர் வாங்கியுள்ள நிலங்கள் இன்னும் அதிகஅளவில் உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. உறவினருக்கு சொத்து சேர்க்க உதவில்லை என்று கூறும் தமிழக முதல்வர் சன் டிவி நெட்ஓர்க் என நிறுவனம் எவ்வாறு துவக்கப்பட்டு வளர்ந்தது. முரசொலி மாறன் தொடாந்த எல்லா கால கட்டத்திலும் 1967 தொடங்கி தொடாந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும் மத்தியில் அமைச்சராகவும் பதவி வகித்த காரணத்தால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த நிறுவனம் வளர்ந்தது என்றால் அது மிகையாகாது. அதாவது வி.பி.சிங் ஆட்சியில் மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாக இருந்த போது தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித் தந்து நெருக்கமாக உறவு கொண்டதின் காரணமாக, புருனே சுல்தான் ரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பாண்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார், மேற்படி பரிசை பயன்படுத்துவது தெரியாமல் இருந்த டாட்டியாவிடம், தனது நெருக்கத்தின் காரணமாக முரசொலி மாறன் பெற்று சன் டிவி தொடங்கப்பட்டது. 2000ஆவது ஆண்டில் திமுக ஆட்சியிலிருக்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் துவக்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்கனவே இருந்து ஹாத்வே என்கின்ற வட இந்திய நிறுவனம் 60 சதவீதம் தன்வசம் வைத்திருந்ததை தட்டி பறித்த கதையும் உண்டு.
தற்போது இந்த நிறுவனத்தில் தமிழக முதல்வரின் பங்கு 20 சதவீதமாகும். ஆனால் சன் டிவியில் எனது பங்குக்காக ரூ100 கோடி கொடுக்கப்பட்டது என்று கூறிய தமிழக முதல்வர் சன் டிவியில் தனது பங்குக்காக கொடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. தற்போது அதாவது இவருக்கு சன் டிவி பங்குகளை கொடுத்த போது நிறுவனத்தில் மொத்த மதிப்பு சுமார் ரூ16,000 கோடியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 சதவீத பங்குக்கு கிடைத்த தொகை ரூ 100 கோடி மட்டும்தான என்பதை தமிழக முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.
சித்தூர்.எஸ்.முருகேசன் முதலில் அடங்கு…
good exposure. what congress doing in A.P . I don’t know ; without reading the pulse of people and the partymen with the centralized power sonia is deciding with the advice of pranab and manmohan. But it is not good for congress in the nearest future.politicians are always want to be in limelight to get people’s opinion and goodname.