இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 10

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 10

அமெரிக்க முதல் டிராட்ஸ்கிகள் வரை குருசேவ் வாழ்த்த, அவனோ கம்யூனிசத்தை தூற்றினான்

22வது காங்கிரஸ்சில் நடத்திய முதலாளித்துவ மீட்சியை மார்க்சிய-லெனினியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைப்படுத்திய புத்திக் கூர்மையுள்ள முன்மாதிரி” என்று கூறி குருசேவை வாழ்த்தியது; ஏன், அமெரிக்கா உள்ளிட்ட டிராட்ஸ்கியவாதிகள் அனைவரும் குருசேவை வாழ்த்தி வரவேற்றனர். டைம்ஸ் என்ற அமெரிக்க இதழ் குருசேவ் பற்றிய குறிப்பில் மேற்கத்திய நாடுகளின் சிறந்த மாஸ்கோ நண்பர்” என்று புகழ்ந்தது.  ஏகாதிபத்தியவாதியான டபிள்யூ.ஏ.ஹாரிமன் சோவியத் பிரதமர் நிகடா குருச்சேவ் அமெரிக்கா அரசியல் வாதியைப் போல் நடந்துகொள்கிறார்” என்று புகழாரம் சூட்டினார். பிரிட்டிஸ் பத்திரிகையான டைம் அண்டு டைடு சுதந்திர உலகத்தைப் பொறுத்தவரை, இதுவரை ரசியர்கள் கொண்டிருந்த பிரதமர்களில் மிகச் சிறந்த பிரதமராக குருச்சேவ் கருதப்படுகிறார். சமாதான சகவாழ்வை அவர் உண்மையில் நம்புகின்றார்” என்றது

வாஷிங்டனில் இருந்து எஜன்ஸ் பிரான்ஸ் பிரஸ்ஸதல் அனுப்பிய செய்தியில் சோவியத்-அமெரிக்க உறவுகளை உயர்த்துவதற்கான இந்த சாத்தியப்பாடனது, குறிப்பிட்ட எல்லைக்குள் குருசேவ்வின் பணிகளை அமெரிக்கா எளிதாக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் சிந்திக்குமளவிற்கு இட்டுச் சென்றுள்ளது” என்று தெரிவித்தது. ஜே.எப்.டல்லஸ் கலிபோர்னிய முதலாளிகள் மத்தியில் பேசும் போது சமாதான பூர்வமான வெற்றிக்காக ஒர் உன்னதமான திட்டத்துக்கு குருசேவ் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்” என்றார். ஏகாதிபத்தியவாதிகளின் மிகச் சிறந்த முதலாளித்துவ மீட்சியாளனாக குருசேவ் இருந்தான். டிராட்ஸ்கிகள் அவனுடன் கைகோர்த்து நின்றனர். இன்றும் குருச்சேவை டிராட்ஸ்கிகள் புகழ்கின்றனர். ஸ்டாலினை தூற்றி கழுவேற்றிய குருசேவின் கொள்கைளை இன்றுவரை உயர்த்தி நிற்கின்றனர். இந்த முதலாளித்துவ மீட்சியை நடத்திய போது, அதை எதிர்த்த மார்க்சியவாதிகளை கொன்று ஒழித்தை ஆதரிக்கின்றனர். இவர்களை ஸ்டாலினிஸ்ட்கள் என அடை மொழியூடாக சிறுமைப்படுத்தி, அவர்களின் படுகொலையை அங்கீகரிக்கின்றனர். சோவியத் மக்களின் சோசலிசம் காவு கொள்ளபப்பட்டதை மறுத்தனர். தொடந்தும் சோசலிச நாடு என்றனர். எல்லா கம்யூனிச எதிரிகளும் முதலாளித்துவ மீட்சி நடக்கவில்லை என்றனர். மாறாக சோசலிசம் பூத்துக் குழுங்குவதாக பிரகடனம் செய்தனர்.

இன்றும் கம்யூனிச எதிரிகளின் அடிப்படையான அவதூறுக்கான விளக்கம், இதில் இருந்தே கட்டமைக்கப்படுகின்றது. அன்று முதலாளித்துவ மீட்சி எதுவும் நடக்கவில்லை என்றனர். அதேநேரம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் சோவியத்தில் நடந்த மாற்றத்தை வரவேற்று அதற்கு உதவினர். லண்டன் டைம்ஸ் மேற்கத்திய நாடுகள் விரும்பும் வகையில் நடந்து கொள்ளும் மிகச்சிறந்த பிரதமர்… எனவே சிறிது காலத்துக்காவது, குருச்சேவ் அவர்களின் நிலையை மேலும் பலவீனமாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும்” என்று ஏகாதிபத்திய மூலதனத்துக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் அறிவுரை கூறிய‌து. இதையே தான் கம்யூனிஸ்ட் என்று கூறித் திரிந்த டிராட்ஸ்கிகள் முதல் எல்லா வண்ண நாய்களும் கூறின. கம்யூனிஸ்ட்களை ஸ்டாலினிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி அவதூறு செய்தன.

இந்நிலையில் உலகளாவிய பலத்த ஆதரவுடன் குருசேவ் மேலும் முதலாளித்துவ மீட்சியை விரைவாக்கினான். அவன் வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோரி பல நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு முன்னரேயே, முதலாளிகளை சாதாரண சீர்திருத்தங்களை விட மிகவும் மேம்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி நிர்ப்பந்திக்க முடியும்” என்றான். வர்க்கப் போராட்டமின்றி மூலதனத்தை ஒழிக்க அடிப்படை உற்பத்திச் சாதனங்களை முதலாளிகளிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்வதற்கு முதலாளிகளே சம்மதிக்க கூடிய, முதலாளிகளும் அதை விருப்பக்கூடிய நிலைமை உள்ளது” என்றான். எனவே, மூலதனத்தை பாட்டாளி வர்க்கம் விலைக்கு வாங்கி வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றான். எந்த டிராட்ஸ்கியமும் இதை எதிர்கக்கவில்லை; மாறாக ஆதரித்தனர். ஏனெனின் இது ஸ்டாலிசத்தின் (மார்க்சியத்தின்) கொள்கைக்கு எதிரானது என்பதால் மட்டுமின்றி, வன்முறை சார்ந்த மக்கள் திரள் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் டிராட்ஸ்கியத்துடன் இது இணைந்தும் போனது.

இதையே 20வது கட்சிக் காங்கிரஸ்சில் ஸ்டாலினை மறுத்து குருசேவ் முன்வைத்த அறிக்கையில் பாராளுமன்றப் பாதையின் மூலம் சோசலிசத்திற்கான மாற்றம் அதாவது ‘சமாதான மாற்றம்’ என்பதை தொடாந்து முன்வைத்தான். உண்மையில் குருசேவின் கொள்கைகள் 1935ம் ஆண்டு சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் வெளிப்பட்டு நின்றது. 1935 முதல் கம்யூனிசத்துக்கு எதிராக செயல்பட்ட ஏர்ல் பிரேளடர் 1944 இல் வெளியிட்ட நூலான கம்யுனிஸ்டுகளும் தேசிய ஒற்றமையும்” என்ற நூலில் இவை செறிந்து காணப்படுகின்றது. வர்க்கப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர். யுத்தம் உலகின் பெரும்பகுதியை அழித்துவிடும் ஒரு உண்மையான பேரழிவாக இருக்கும். …உலகின் பெரும்பகுதியை 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு காட்டுமிராண்டித்தன வாழ்க்கைக்குப் தள்ளிவிடக் கூடும். …அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட மேம்படுத்தும் உடன்பாட்டினை வலியுறுத்தவதே கம்யூனிசப் பாதை” என்றார். அவர் மேலும் 1941 இல்  ஜனநாயக ரீதியாக இணங்கச் செய்வது மற்றும் நம்பிக்கை இவற்றையே முழுவதுமாகச் சார்ந்து இருக்க வேண்டும்” என்றான். இரண்டாம் உலக யுத்த முடிவில் 1948 இல் “சமாதான முறையில் சோசலிசத்துக்கு மாறிச் செல்வதற்கு சாத்தியமான நிலைமைகளை” உலகம் அடைந்துள்ளது என்றான். 1944 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திரமான பாத்திரத்தை மறுத்து கம்யூனிஸ்டுகளின் நடைமுறை ரீதியான அரசியல் நோக்கங்ககள் அவர்களை விட மிகப் பெரிய எண்ணிக்கையிலான கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்களுடன் முக்கிய அம்சங்களிலும் உடன்பாடானவையாக உள்ளவை நீண்ட காலத்துக்கு இருக்கும்” என்றான். 1960 இல் அமெரிக்கா கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்டாலின் எப்படி அழித்தார் என எழுதும் ஏர்ல் பிரேளடர் “1945 –ல் நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்படக் காரணமாக இருந்த அதே முரண்பட்ட கருத்தைத் தான் குருச்சேவ் இப்போது கடைப்பிடிக்கின்றார்” என்றான். வார்த்தைக்கு வார்த்தை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே வாதிட்ட அதே பாதையாகத்தான் இருக்கிறது, எனவே எனது குற்றம் தற்காலிகமாகவாவது புதிய வைதீக முறையாக மாறியிருக்கிறது” என்றான். கம்யூனிசத்தின் அடிப்படை கோட்பாடுகளை மறுத்து நின்ற போது, சர்வதேச கம்யூனிச இயக்கம் வெளியேற்றிய ஏர்ல் பிரேளடர்ரின் அன்றைய திட்டங்கள் தான் குருசேவின் இன்றைய கொள்கையாகியது. அவன் தன்னைத் தானே கம்யூனிஸ்ட் என்ற போற்றியதுடன், தனக்கும் தனது அதே கொள்கை முன்னெடுக்கும் குருச்சேவுக்கும் புனர்ஜென்மம் வழங்க கோருகின்றான். ஸ்டாலினும் பாட்டாளி வர்க்கமும் தன்னை வெளியேற்றியது குற்றம் என்கின்றான். தன்னைப் போன்றவர்களை வெளியேற்றியது தவறு என்கின்றான். கொள்கை ரீதியான கடும் போக்கு கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தாக கூறும் இவனின் கொள்கைகள், முதலாளித்துவ மீட்சிக்கு அடிப்படையாக வழிகாட்டியது. முதலாளித்துவ மீட்சிக்கு ஸ்டாலின் மறுக்கப்பட வேண்டும் என்பது இயங்கியல். அதை ஸ்டாலினிசம் எனத் தொடங்கி சர்வாதிகாரம் என பலவகையில் மறுப்பவர்களின் தேவைக்கு எற்ப அவை கொள்கை விளக்கமாகியது.

குருசேவ் வர்க்க கட்சியின் குறிக்கோளை சிதைக்க கட்சியின் அடிப்படை உள்ளடக்கத்தையே சிதைத்தான். உற்பத்தி அடிப்படையில் கட்சியை கட்டுதல் என்ற பெயரில் ‘தொழிற்துறைக் கட்சி’, ‘விவசாயக் கட்சி’ என்று கட்சியை அதன் அடிப்படை வர்க்க குணாம்சத்தையே மறுத்தான். சோசலிசத்தில் அரசியலை விட பொருளாதாரத்தின் முக்கியத்துவம் கருதியே இப்படிச் செய்தாக பல கதைகளை கூறினான். குருசேவ் கட்சி அமைப்புகளின் பிரதான வேலை, உற்பத்தியே என நாங்கள் அடித்துக் கூறுவோம்” என்றான். குருசேவ் கம்யூனிசம் என்பதை உடல் மற்றும் மூளை உழைப்பால் உற்பத்தியான ஏராளமான பண்டங்கள் நிறைந்த ஒரு பாத்திரம் அனைவருக்கும் எளிதில் கிட்டுமாறு இது இருக்கும்” என்றான். இப்படி கம்யூனிசத்துக்கு புது அகராதி எழுதிய இவன், கட்சி அமைப்பின் பிரதான வேலை வர்க்கப் போராட்டம் என்பதை மறுத்தான். கட்சியின் பிரதான வேலை உற்பத்தி என்ற கருத்து, டிராட்ஸ்கியத்தின் அடிப்படையாகும். இதை புகாரின் மற்றும் டிராட்ஸ்கி முன்வைத்த போது லெனின் பொருளாதாரத்தின் உருட்டித் திரட்டப்பட்ட வெளிப்பாடே அரசியல்,… ஆனால் அரசியல், பொருளாதாரத்தின் மீதும் செல்வாக்கு செலுத்துகின்றது இதற்கு மாறாக வாதிடுவது மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுப்பதாகும்” என்று அம்பலம் செய்தார். தொடர்ந்தும் லெனின் “.. இந்த விசயத்தைப் பற்றி ஒரு சரியான அரசியல் அணுகுமுறை இன்றி ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது. மேலும், தன்னுடைய உற்பத்திப் பிரச்சனைகளைக் கூடத் தீர்க்க முடியாது” என்றார். குருசேவும் – டிராட்ஸ்கியும் சந்தித்த இந்த புள்ளியில் இருந்தே முதலாளித்துவ மீட்சி தொடங்கியது. டிராட்ஸ்கிகள் முதலாளித்துவ மீட்சி என்பதே அங்கு நடக்கவில்லை என்று இன்றுவரை சாதிக்கின்றனர். ஏன், கம்யூனிசத்தை திருத்த விரும்பும் அனைவரும் இதையே கிளிப்பிள்ளை போல் சொல்கின்றனர். முதலாளித்துவ மீட்சியல்ல, அங்கு சோசலிசத்தின் பாதையே தொடர்ந்தது என்கின்றனர். 22வது காங்கிரஸ்சில் குருசேவ் இருபது வருடங்களில் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டிவிடுவோம்” என்றான். அதாவது 20 வருடத்தில் முதலாளித்துவ மீட்சியை பூரணமாக்கிவிடுவோம் என்பதே இதன் சாரம். இது எதார்த்தமாகியது. 1980 களில் கொப்பச்சேவ் அதை பூரணமாக்கி உறுதி செய்தான். சோசலிசம் என்பதே பூரணமான முதலாளித்துவ ஆட்சியாக மாறிக் கொள்வதை குறித்து நின்றது. கொர்பச்சேவ் ஸ்டாலின் –பிரெஸ்னேவ் கால கட்டத்தில் திரிக்கபட்ட உருமாற்றம் செய்யப்பட்ட போலி சோசலிசத்தை சோசலிசத்தில் இருந்து களைந்துதெறிய வேண்டும்” என்றான். இப்படி கூறி அப்பட்டமாக முதலாளித்துவ மீட்சியை நடத்திய போது, இதை டிராட்ஸ்கியம் பெருமையாக எடுத்துக் காட்டி போற்றியது.

குருசேவ் “ஆ! ஸ்டாலின் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பே செத்திருந்தால்” எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றான். மார்க்சியத்துக்கு எதிரான டிராட்ஸ்கியவாதிகள் முதல் எல்லா மக்கள் விரோதிகளும் பாட்டாளி வர்க்க அடிப்படைகளை எவ்வளவு இலகுவாக துடைத்திருக்க முடியும் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அத்துடன் இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிகளின் வெற்றிக்கு எவ்வளவு சாதகமாக இருந்திருக்கும் என்ற அவாவையும் பிரதிபலித்து நிற்பதின் கூற்று இது. 20 வது காங்கிரஸ்சில் ‘தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை’ நிறைவேற்றிய பின்பே மக்கள் மேலான ‘கனத்த சுமை’ அகற்றப்பட்டு ‘ரசிய சமுதாயத்தின் வளர்ச்சி’ திடீரென துரிதப்படுத்தப்பட்டது என்று உலக கம்யூனிச இயக்கத்துக்கு அறிவித்தான். ரசிய சமுதாய வளர்ச்சி என்பது முதலாளித்துவ மீட்சியாக இருந்தது. தனிநபர் வழிப்பாட்டை எதிர்ப்பது என்பது ஸ்டாலின் தூற்றப்படுவதாக இருந்தது. எல்லா குற்றமும் ஸ்டாலின் மேல் சுமத்தப்பட்டது. இதன் மூலம் மார்க்சிய அடிப்படைகள் மறுக்கப்படுவதாக இருந்தது. வளர்ச்சி திடீரென துரிதப்பட்டது என்பது ஏகாதிபத்தியத்துடன் கூடிக் கூலாவுவதாக இருந்தது. லெனின் தலைவர்கள் பற்றி குறிப்பிடும் போது வரலாற்றில் எந்த ஒரு வர்க்கமும் தனது அரசியல் தலைவர்களை – ஒரு இயக்கத்தைக் கட்டி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லக் கூடிய புகழ்பெற்றுச் சிறந்த தனது பிரதிநிதிகளை – உருவாக்காமல் அரசியல் அதிகாரத்தை வென்றதில்லை” என்றார். அவர் மேலும் கூறும் போது அனுபவமிக்க பெரும் செல்வாக்கு பெற்ற கட்சித் தலைவர்களை பயிற்றுவிப்பது என்பது நீண்ட காலம் பிடிக்கக் கூடிய கடினமான பணியாகும். ஆனால் இதில்லாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற அதன் ஒன்றுபட்ட விருப்பம் என்பது ஒரு வெற்றுச் சொல்லாகும்” என்றார். இதை குருசேவ் மறுத்தான். ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க தலைமைப் பண்பையே மறுத்தான். அதனிடத்தில் முதலாளித்துவ பண்பை செருகி நின்று தூற்றினான். பாட்டாளி வர்க்க தலைமையை தூற்றுவதற்கு வர்க்க போராட்டத்தின் அடிப்படையான அதிகாரத்தை கொச்சைப்படுத்தி நின்றான். மாறாக முதலாளித்துவ அதிகாரத்துவத்தை, அதன் கபடத்தை, மோசடியை முன்வைத்தான். ஏகாதிபத்தியத்துடனும், எதிர் புரட்சி சக்திகளுடனும் கூடிக் கூலாவினான். பாட்டாளி வர்க்கத்தை கைவிட்டு முதலாளித்துவ மீட்சியை நடைமுறைப்படுத்திய படி ஏகாதிபத்தியத்தியத்தின் கைக்கூலியாக சீரழிந்த டிட்டோவையே தனது ஆசானாக கொண்டான். குருசேவ் டிட்டோ பற்றி குறிப்பிடும் போது ஒரே கருத்தைச் சேர்ந்தவர்கள், ஓரே கோட்பாட்டினால் வழிகாட்டப்படுபவர்கள்” என்றான். முதலாளித்துவ மீட்சியை நடத்துவதில் ஸ்டாலினை தூற்றுவதில் ஒன்றுபட்டனர்.

சர்வதேச வர்க்கப் போராட்டத்தை கைவிட்டனர். அதை காட்டிக் கொடுத்தனர். குருசேவ் சொன்னான் ‘காலனிய முறையின் அமைதியான சவ அடக்கத்தை’ செய்யக் கோரினான். பாட்டாளி வர்க்கத்தின் எதிர் முதலாளித்துவம் என்ற கோட்பாட்டை கைவிடக் கோரினான். 1955 இல் குருச்சேவ் அல்ஜிரிய விடுதலைப் போராட்டம் பற்றிய தனது உரையில் ரசியா பிறநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை. என்பதை எல்லாவற்றக்கும் முதலாவதாக நான் கருத்தில் வைத்திருந்தேன், வைத்திருக்கிறேன்” என்றான். மக்களின் போராட்டத்தையும் அதன் நியாயமான பண்பையும் நிராகரித்து, எகாதிபத்திய காலனியாக இருப்பதை அங்கீகரித்தான். 1958 இல் மீண்டும் குருசேவ் பிரான்ஸ் பலவீனமடைவதை நாங்கள் விரும்பவில்லை. பிரான்ஸ் இன்னும் மகத்தானதாக மாறவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றான். பிரஞ்சு ஏகாதிபத்தியம் அல்ஜிரிய மக்களின் பிணங்கள் மேல் பலமடைவதை ஆதரிப்பதாக கூறினான். அல்ஜிரிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிய பிரஞ்சு ஏகாதிபத்தியத்தை ஆதரித்தான். பிரஞ்சு கம்யூனிஸ்ட்டுகள் பிரஞ்சு எகாதிபத்திய காலனிய கொள்கையை ஆதரித்து நிற்க கோரினான். அல்ஜிரிய மக்களை பிரஞ்சு கம்யூனிஸ்ட்டுகள் கொல்லவேண்டும் என்றான். ஏனெனில் பிரஞ்சு பலவீனமடைவதை கம்யூனிசம் விரும்பவில்லை என்றான். 1960 இல் காங்கோவுக்கு அமெரிக்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தை ஐ.நா கொடியுடன் அனுப்ப ரசியா ஐ.நாவில் வாக்களித்தது. ஆக்கிரமிப்பு படைகளை கொண்டு செல்ல ரசிய போக்குவரத்து உதவிகளைச் செய்தது. அங்கு அமெரிக்கா எற்படுத்திய பொம்மை அரசை உற்சாகமாக ஆதாரித்துடன், மக்களை அடங்கிப் போகக் கோரினர். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு அப்பட்டமாகவே துணை நின்றனர். அதில் பங்கு கோரி நின்றனர். ஸ்டாலின் மறுக்கப்பட்டு ஏகாதிபத்திய துணையுடன் காலனிகள் மீளவும் உருவாக்க துணைசெய்தார்கள்.

இந்த துணை போகும் பாத்திரத்தை மேலும் ஆழமாக்க ஏகாதிபத்தியம் கோரியது. அமெரிக்க பிரதிநிதியான டீன் ரஸ்க அமெரிக்க வீரர்களின் தேசிய மாநாட்டில் ஆற்றிய உரையில்’ உலகப் புரட்சி எனும் தங்களுடைய இலக்கை கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைவிடும் வரை சமாதானம் உறுதி செய்யப்படுவது என்பதும், நிலையான சமாதானம் என்பதும் இருக்க முடியாதது” அவர் மேலும் உலகக் கம்யூனிச வெற்றி எனும் மாயையை ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டு முன் செல்லுங்கள்” என்று ரசிய தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். ஸ்டாலினை மறுத்த குருசேவ் சொன்னான் நாங்கள் அமெரிக்காவுடன் நண்பர்களாக இருப்பதற்கு, சமாதனத்திற்காகவும், சர்வதேச பாதுகாபிற்காகவும் மட்டுமின்றி பொருளாதார, கலாச்சார அரங்குகளில் கூட அதனுடன் ஒத்துலைப்பதற்கு விரும்புகின்றோம்” ஆனால் ஸ்டாலின் ஒரு நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றிய புரட்சியானது, தன்னை சுய நிறைவடைந்த ஒன்றாக கருதவே கூடாது. மாறாக எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியை விரைவுபடுத்த உதவுவதற்கான சாதனமாகக் கருதவேண்டும்” என்றார். அவர் மேலும் கூறும் போது தனது வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்கான (அதாவது உலகப் புரட்சிக்கான) ஒரு வலுமிக்க தளமாக… அது அமைந்திருக்கின்றது” என்றார். ஸ்டாலின் என் மறுக்கப்பட்டார்?, ஏன் தூற்றப்பட்டார்?, இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார் என்பதற்கு, பாட்டாளி வர்க்கம் அல்லாத அவர்கள் அரசியல் நிலையில் இருந்தே புரிந்து கொள்ளமுடியும்.

ஸ்டாலினை மறுத்து எதை எப்படி செய்தார்கள்?, என்பதிலிருந்தும், எகாதிபத்தியம் தொடர்ந்து எதைக் கோரியது என்பதிலிருந்தும் இதை ஆழமாக யாரும் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்க மாநில வங்கிகளின் சங்கத்தில் உரையற்றிய ஜே.எப்.டல்லஸ் சோவியத், வன்முறையைக் கைவிடுவது என்பது… தற்போது நிலவும் நிலைமைகளை அப்படியே தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது என்று பொருள்படாது. மாறாக அமைதி வழி மாற்றத்தைப் பொருள்படுத்தும்” என்றார். தற்காப்போடு நின்று கொள்வது போதுமானதல்ல. சுதந்திரம் என்பது ஊடுருவத் தக்க வகையில் சாதகமான சக்தியாக இருக்க வேண்டும்” என்றார். அமெரிக்கா ஜனதிபதி டி.டி.அய்சனேவர் ஸ்டாலின் போன்ற கொடூரமான சர்வாதிகாரத்தினால் கட்டுண்டு கிடக்கும் மக்கள், தங்களுடைய சொந்த சுதந்திரமான ஓட்டுக்களின் மூலம் தங்களுடைய விதிகளைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை இறுதியாகப் பெறும் பொருட்டு சமாதான சகவாழ்வு கையாளப்பட வேண்டும்” என்றார். அமெரிக்கா ஜனதிபதி ஜே.எப்.கென்னடி சோவியத் பேரரசிலும் மற்ற எல்லாக் கண்டங்களிலும் மாற்றங்கள் நிகழ்வதற்கும்… மிக அதிகபட்டசமான மக்களுக்கு மிக அதிகமான சுதந்திரம் எற்படுவதற்கும், உலக சமாதனதுக்கு இட்டுச்செல்வதற்கும்… நம் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்ய வேண்டியது நம் கடமை..” என்றார். அவர் மேலும் சுதந்திரமான தேர்வுக்கு வாய்பை உருவாக்க சுதந்திரத்தை பொறுமையாக ஊக்குவிப்பது மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிராக நிர்ப்பந்தம் கொடுப்பது” என்ற கொள்கையை சோவியத் மீது கையாள்வதாக அறிவித்தார். சோவித்தில் நடந்தது என்ன என்பது அப்பட்மாகவே தெரிகின்றது. ஸ்டாலின் ஏன் தூற்றபட்டார், ஏன் மறுக்கப்பட்டார், என் அதை அனைவரும் வரவேற்று கொண்டாடினர் என்பது தெள்ளத் தெளிவாக அம்பலப்பட்டு கிடக்கின்றது.

முதலாளித்துவ மீட்சியும் அதன் மூலம் முதலாளித்துவ நலன்களுமே, இதன் அடிப்படையான ஒரேயொரு குறிக்கோளாக இருந்தது. இதுபற்றி லெனின் கூறினார் உலகம் முழுக்க கம்யூனிசம் தோன்றும் வரை சோசலிசம் உக்கிரமான வர்க்க மோதல்கள் நிறைந்த ஒரு முழுச் சகாப்தமாக அமைகிறது” என்றார் அவர் மேலும் இந்த சகாப்தம் முடிவடையும் வரை, சுரண்டல்காரர் தவிர்க்க முடியாதபடி மீட்சிக்கான நம்பிக்கை ஆவலுடன் வளர்த்துக் கொண்டிருப்பதோடு, இந்த நம்பிக்கை மீட்சிக்கான முயற்சிகளாகவும் மாற்றப்படுகிறது” என்றார். ஆம் இதை மறுப்பதே இன்று வரை ஸ்டாலினை தூற்றுவோரின் மையமான அரசியல் உள்ளடக்கமாகும். ஸ்டாலின் இதை உயிரினும் மேலானதாக பாதுகாத்தார். இதை யாரும் இனியும் மறுத்து நிறுவமுடியாது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


40 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 10

 1. செங்கொடி செம்மலே
  ///இது ஸ்டாலிசத்தின் (மார்க்சியத்தின்) கொள்கைக்கு எதிரானது என்பதால் மட்டுமின்றி, வன்முறை சார்ந்த மக்கள் திரள் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் டிராட்ஸ்கியத்துடன் இது இணைந்தும் போனது///
  இதிலிருந்து மக்கள் ஸ்டாலினிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த மக்கள் அவருடைய ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பே அவர்களை வெகுண்டு எழ செய்துள்ளது.இந்த எழுச்சி உங்களது கொள்கை [அசலோ,போலியோ]க்கு ஆதரவாக இருந்தால் அதை “புரட்சி ” என்பீர்கள். உங்களுக்கு மாற்றமாக இருந்ததால் மக்கள் திரளை வன்முறை கும்பல் போல் வர்ணித்து உள்ளீர்கள்.இந்தியாவில் இருந்து கொண்டு தனியுடமையின் சுகத்தை முழுமையாக அனுபவித்து கொண்டு,சோசலிசத்தை காகிதத்திலும்,இணைய தளத்திலும் பதிபவர்களுக்கு ஸ்டாலினிசத்தால் பாதிக்கப் பட்ட மக்களின் வேதனை என்னதெரியும்?பட்டவனுக்க்கல்லவா தெரியும்.
  சமூக சூழ்நிலைக் கேற்ப சட்டம் வகுப்பதுதான் சோசலிசம் ஆகும்.பிறகென்ன மக்கள் ஸ்டாலினிசத்தின் கொடுமை வெறுத்து,ட்ராட்ஸ்கியத்தை ஆதரித்த தால் அதர்க் கேற்ப குருசேவ் மாற்றத்தை கொண்டு வந்தார்
  . ///இதையே தான் கம்யூனிஸ்ட் என்று கூறித் திரிந்த டிராட்ஸ்கிகள் முதல் எல்லா வண்ண நாய்களும் கூறின. கம்யூனிஸ்ட்களை ஸ்டாலினிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி அவதூறு செய்தன///
  நீங்கள் சொல்லும் வண்ண நாய்கள் ,’கட்டுபடாத ஆர்தோடக்ஸ் ‘ சொன்ன RED DOGS கிடையாதுதானே |
  என்னுடைய கருத்து என்னவெனின் குருசேவ் மட்டும் நீங்கள் சொல்லியுள்ள மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், ரஷ்யா இன்று சோமாலியா போலோ இல்லை அதைவிட மோசமான நிலைக்கோ சென்று இருக்கலாம்.அங்குள்ள செசன்யா முஸ்லிம்களின் துஆ’ வைக் கொண்டு இறவன் அவர்களை காப்பாற்றியுள்ளான்.அவனே அனைத்தையும் அறிந்தவன்

 2. கடைசியிலிருந்து இரண்டாவது வரியில் ‘இறவன்’என்றுள்ளதை “இறைவன்” என்று திருத்தி வாசித்து கொள்ளுங்கள்.

 3. ///இதையே தான் கம்யூனிஸ்ட் என்று கூறித் திரிந்த டிராட்ஸ்கிகள் முதல் எல்லா வண்ண நாய்களும் கூறின.

  கம்யூனிஸ்ட்களை ஸ்டாலினிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி அவதூறு செய்தன///

  “RED DOG BARKING”

 4. after sometime I am reading your article. I have no word to comment on it. anyhow you established your position regarding with guruchev and stalin differntation very well. thank you and vanakkam.

 5. இந்த மதவாதிகளின் வாதம் எப்படி இருக்கும் என்றால்

  எங்களை குறை சொல்லுபவரே உங்கள் குறைகளை திருத்திக் கொள்ளுங்கள் என்பதுதான்.சரி நல்லது.

  தோழர் ஸ்டாலின் கால,அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை அவர் தரப்பு வாதங்களாக கூறுகிறார்.அதனை நீங்கள் விமர்சிக்க வேண்டுமென்றால் அதற்கு எதிரான ஆதாரங்களை கூறலாம்.

  இதெ போன்ற ஒன்றை நம்ம ஊரிலேயே உதாரணம் காட்டுகிறேன்.

  இந்த தவுகீத் கொள்கை எல்லாம் இந்த 10 வருடமாகத்தான்.நாஅங்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வந்து உண்மையான மார்க்கத்தை காட்டுகிறோம் என்று கூறுகிறீர்கள். நீங்கள் சொலதை கொஞ்சம் மாற்றிப் பார்த்தேன். எல்லாம் குரானில் கற்றுக் கொண்ட அடைப்புக்குறி டெக்னிக்தான்

  பாருங்கள் பிடிக்கவில்லை எனில் வேறு ஒன்று தருகிறேன்.
  ______________

  என்னுடைய(இப்ராஹிம்) கருத்து என்னவெனின் வஹாபிகள்(குருசேவ் )மட்டும் நீங்கள்(தவுகீத் அல்லாத முஸ்லிம்கள்) சொல்லியுள்ள மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால்,முஸ்லிம்கள்( ரஷ்யா) இன்று பல தெய்வ வழிபாடு(சோமாலியா) போலோ இல்லை அதைவிட மோசமான நிலைக்கோ சென்று இருக்கலாம்.

  ________________________

 6. நண்பர் இப்ராஹிம்,

  முதலில் நீங்கள் குறிப்பிட்ட அந்த மேற்கோளை மீண்டுமொருமுறை படித்துப்பாருங்கள். வன்முறை சார்ந்த மக்கள் திரள் வர்க்கப் போராட்டம் என்பது தான் மார்சிய நிலைப்பாடு. இதைத்தான் அந்த மேற்கோள் சுட்டுகிறது. நீங்களோ நேரெதிராக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அப்புறம் என்ன சொன்னீர்கள், ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சியடைந்தார்களா? கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னாலாவது பரவாயில்லை, குற்றால அருவியே விழுகிறது என்று சொன்னால் என்ன சொல்வது?

 7. .இந்தியாவில் இருந்து கொண்டு மத சார்பின்மையின்(தனியுடமையின்) சுகத்தை முழுமையாக அனுபவித்து கொண்டு,மத வாதத்தை(சோசலிசத்தை) காகிதத்திலும்,இணைய தளத்திலும் பதிபவர்களுக்கு மத வாதத்தால்(ஸ்டாலினிசத்தால்) பாதிக்கப் பட்ட மக்களின் வேதனை என்னதெரியும்?பட்டவனுக்க்கல்லவா(ஈராக்,ஆப்கானிஸ்தான்)) தெரியும்.

  குரான் ஹதிற்(சமூக சூழ்நிலைக்)கேற்ப சட்டம் வகுப்பதுதான் இஸ்லாமியம்(சோசலிசம்) ஆகும்.பிறகென்ன மக்கள் மத வாதத்தின்(ஸ்டாலினிசத்தின்) கொடுமை வெறுத்து,மத சார்பின்மையை(ட்ராட்ஸ்கியத்தை) ஆதரித்த தால் அதர்க் கேற்ப ஆட்சியாளர்கள்(குருசேவ்) மாற்றத்தை கொண்டு வந்தார்

 8. சங்கர்,மத வாதத்தால் இராக்,ஆப்கான் போலவே ரஷ்ய மக்களும் ஸ்டாலினிசத்தால் பாதிக்கபட்டுள்ளதாக கூறியுள்ளதை வரவேற்கிறேன்.ஆனால் இராக்கில் மதவாதம் தான் சீரழிவுக்கு காரணமா? இல்லை என்பது சங்கரைத் தவிர உலகத்தில் எல்லோருக்கும் தெரியும்.ஆப்கானில் மத வாதமா?அந்த நாட்டின் சீரழிவுக்கு முதற்காரணம் பொதுவுடைமை காரார்களின் ஆதிக்க வெறியல்லவா?சவுதிக் காரரான பின்லாதினை களத்தில் இறக்கிவிட்டது யார்? மதவாதிகலா?அமைதி யின் இலக்கனதாரி அமெரிக்காவா? புத்தர் சிலையை தகர்த்தது மத வாதமா?இல்லை ,முந்தைய அரசுடன் குழந்தைகளுக்கான மருந்து விநியோகத்தை தாலிபான் ஆட்சியில் ஜப்பான் நிறுத்தியதன் கோபமே|
  ///குரான் ஹதிற்(சமூக சூழ்நிலைக்)கேற்ப சட்டம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,குருசேவ்) மாற்றத்தை கொண்டு வந்தார்///
  குரான் ஹதீதை சட்டமாக்கிய எந்த நாட்டில் ஆட்சியாளர்கள் மாற்றத்தை கொண்டு வந்தனர்

 9. செங்கொடி,1917 இல் கேப்பையில் நெய்வடிகிறது என்று சொன்னதை நம்பிய மக்கள் தானே அது பொய்யாக விடிந்தபோது ஸ்டாலின் சிலையை உடைத்தார்கள்.
  . ஸ்டாலினிசம் சிறப்ப்பாக ,மக்கள் விருப்பமாக இருந்தால் இப்போது வன்முறை சார்ந்த மக்கள் திரள் வர்க்க போராட்டம் என்னவாயிற்று?

 10. // இராக்கில் மதவாதம் தான் சீரழிவுக்கு காரணமா? இல்லை என்பது சங்கரைத் தவிர உலகத்தில் எல்லோருக்கும் தெரியும்.ஆப்கானில் மத வாதமா?அந்த நாட்டின் சீரழிவுக்கு முதற்காரணம் பொதுவுடைமை காரார்களின் ஆதிக்க வெறியல்லவா?//

  தலிபான்களின் ஆட்சி அதன் முந்திய ஆட்சியை விட எப்படி சிறந்தது?
  அவர்கள் தேச பக்தர்கள் அந்நிய நாட்டுப் படைகளை விரட்டினார்கள் என்பதை கூட ஏற்றுக் கொள்கிறேன். மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு.

  அதன் பிறகு ஆறாம் நூற்றாண்டு சட்டங்களால் அங்கு வாழும் மக்கள் இந்தியாவில வாழும் மக்களை விட மிகவும் சுதந்திரமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா?

  ஈராக்கில் இப்போது நடப்பது ஷியா சுன்னின வன்முறை அல்லவா? ஊக்குவிப்பது அமெரிக்காதான் என்றாலும்அவர்களுக்கு ஒற்றுமையாக இருக்க தெரியாதா?
  அதை தீர்க்க எந்த மத அமைப்பாவது முயற்சி செய்கிறார்களா?.ஈரான் மீது அமெரிக்க போர் தொடுத்தால் சவுதி உட்பட்ட நாடுகள் மகிழ்ச்சிதான் அடைவார்கள்.

  //குரான் ஹதீதை சட்டமாக்கிய எந்த நாட்டில் ஆட்சியாளர்கள் மாற்றத்தை கொண்டு வந்தனர்//

  துருக்கி என்பது ஆட்டோமான் பேரரசின் தலைமை பொறுப்பில் இருந்தது.முதல் உலகப் போரில் தோற்ற பின் சவுதி உட்பட்ட நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் அதனிடம் இருந்து பிரிந்தன.

  அது இப்போது இஸ்லாமிய சட்டங்களை மூட்டை கட்டிவிட்டு மத சார்பின்மையை பின்பற்று வதால் அதன் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். பல முறை இரானுவ புரட்சி நடத்தி இஸ்லாமிய ஆட்சி முறை கொண்டுவர முயற்சி நடந்து முறியடிக்கப் பட்டது.

  பெண்கள் பொது இடங்களில் தலையில் துணி கட்டுவது கூட மத அடையாளமாக தடை செய்யப் பட்டு உள்லது என்றால் பாருங்களேன்.

 11. sankar,///அதன் பிறகு ஆறாம் நூற்றாண்டு சட்டங்களால் அங்கு வாழும் மக்கள் இந்தியாவில வாழும் மக்களை விட மிகவும் சுதந்திரமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா?///
  ஆதிக்க வெறிபிடித்தவர் களான ரஷ்யாவும் அமெரிக்காவும் அந்த நாட்டை தாக்கி அமைதியாக இருக்க விடாமல் மக்கள் நாட்டை மீட்கவே பெரும் காலத்தை செலவழிக்க வேண்டியுள்ளது.மேலும் பண்டைய காலத்து சீன குளத்தான்கரை கூட்டு வாழ்க்கையை அதாவது உங்களது கருத்துப்படி பெண் ஆதிக்க சமுதாயத்தை கொண்டுவரப் போவதாக சொல்லும் நீங்கள் ஆறாம் நூற்றாண்டு சட்டங்களை பேசுவது வேடிக்கை..அங்கு இன்னும் யாரும் ஆறாம் நூற்றாண்டு சட்டத்தை அமல் படுத்தவில்லை.அமல் படுத்திய பிறகு அது பற்றி பேசுவோம்.
  இராக்கிலும் இன்னும் ஆறாம் நூற்றாண்டு சட்டங்கள் வரவில்லை.
  ///மத வாதத்தால்(ஸ்டாலினிசத்தால்) பாதிக்கப் பட்ட மக்களின் வேதனை என்னதெரியும்?பட்டவனுக்க்கல்லவா(ஈராக்,ஆப்கானிஸ்தான்)) தெரியும்/////
  நீங்கள் வைத்த கருத்து தவறு என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.
  ///துருக்கி என்பது ஆட்டோமான் பேரரசின் தலைமை பொறுப்பில் இருந்தது///

  நீங்கள் கூறும் உதுமானியாக்களின் ஆட்சி குர்ஆன் அடிப்படையில் நடந்த ஆட்சி அல்ல..இவர்களின் ஆட்சிகாலத்தில்தான் வஹ்ஹாப் இமாம் அவர்கள் குரான் ஹதீத் பிரச்சாரம் செய்து அவரின் ஆலோசனை பேரில் இப்னு சவுத் என்பவர் தற்போதைய சவ்திரசின் மக்கா பகுதியை பிடித்து தனது ஆட்சியை கொண்டு வந்தார்.முதல் உலக போருக்கு பின் சவூதி முழுவதும் இப்னு சவுத்தின் வாரிசுகள் கையில் வந்தது.சவுதில்தான் ஓரளவு நடைமுறையில் இஸ்லாமிய ஆட்சி நடை பெறுகிறது.துருக்கியர்களின் ஆட்சி இஸ்லாமியர்களின் ஆட்சி . இஸ்லாமிய ஆட்சி அல்ல.

 12. நண்பர் இப்ராஹிம்,

  முதலில் எழுதப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள முயலுங்கள். மேற்கோளுக்கு எதிராக முதலில் புரிந்து கொண்டீர்கள். இப்போது உண்மைக்கு எதிராக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மெய்யாகச் சொல்வதானால் நீங்கள் அப்படி புரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். ஈராக்கில் சதாம் சிலையை ஈராக் மக்கள் உடைத்தனர் என பரப்புரை செய்வது போல்தான் இதுவும்.

  இப்போதும் ரஷ்ய மக்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அண்மையில் ஒரு முதலாளிய இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் ரஷ்ய மக்கள் அதிகம் விரும்பும் தலைவர்களில் மூன்றாவது இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார் என அறிவித்தது. முதல் இருவர் வரலாற்றுக்கால அரசர்கள்.

 13. //சவுதில்தான் ஓரளவு நடைமுறையில் இஸ்லாமிய ஆட்சி நடை பெறுகிறது.துருக்கியர்களின் ஆட்சி இஸ்லாமியர்களின் ஆட்சி . இஸ்லாமிய ஆட்சி அல்ல//

  சரியாக தேர்ந்தெடுக்கப் பட்ட கலிபாக்களின் ஆட்சி நீங்கலாக(632_661)அப்போது இதுவரை முழுமையான இஸ்லாமிய ஆட்சி இதுவரை நடமுறைப் படுத்தப் பட‌வே இல்லையா?

  சவுதி அரசு எத்தனை சதவீத இஸ்லாமய அரசு?

  தலிபான்கள் செயலை நீங்கள் ஆதரிப்பது மிகவும் ஆச்சரியமாஅக இருக்கிறது.

  அவர்கள் கூட இஸ்லாமிய ஆட்சிதான நடத்துகிறார்களா? அவர்கள் எத்தை சதவீதம்?

  முழுமையான இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன?
  __________________

  அது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் மக்களின் கவலை

  நாங்கள் ஆணும் பெண்ணும் சரி சம்மாக வாழும் அமைப்பை பற்றி பேசுகிறோம்.சூழ்நிலைகளுக்கு தக்கவாறு மாற்றங்களை ஏற்படுத்டுவது பற்றி பேசுகிறோம். நீங்கள் ஆறாம் நூற்றாண்டிலேயே எல்லாம் சொல்லி ஆயிற்று என்று கூறுகிறீர்கள். முன் காலத்தின் பெண்ணை தலைவியாக கொண்ட சமுதாயம் இருந்தது.பிறகு ஆண் தலைமை கொண்ட சமுதாயமே தொடர்கிறது. இருவரும் சம உரிமை பெற்ற சமுதாயம் கொண்டு வர வேண்டுமென்றே சொல்கிறோம்.

  __________________

  (632‍_661)ற்கு பிறகு நடந்த உம்மையாதுகளின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி முறை இல்லை என்று ஷியா பிரிவினரும்,வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர். நீங்கள் கூட ஆட்டோமான் ஆட்சிய இஸ்லாமிய அரசு இல்லை என்று வஹாபிய சவுதி அரசே கொஞ்சம் இஸ்லாமிய அரசு என்று கூறிகிறீர்கள்.

  ஆக 1400+ ஆண்டுகளின் இஸ்லாமிய அரசு அமைந்து இருந்தது 29 வருடம் மட்டுமே. வேறு ஏதாவது அரசை சொல்லுங்கள் ஆராய்வோம்.
  அதை அமைக்க போராடி வருகின்றீர்கள்.
  _____________

  பொது உடமை கொள்கையும் 1917ஆம் ஆண்டு முதல் இரஷ்யா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஆட்சியில் இருந்தது.
  1980க்குப் பின் பல நாடுகளில் ஆட்சி பொறுப்பை இழந்தது.மீண்டும் அரசமைக்க போராடி வருகின்றனர்.
  ___________

  அவர் கள் ஆட்சி பொறுப்பில் இல்லாமல் இருப்பது 30+ வருடங்கள்.நீங்கள் எவ்வளவு காலம்?.
  ____________

 14. sengodi,////இப்போதும் ரஷ்ய மக்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அண்மையில் ஒரு முதலாளிய இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் ரஷ்ய மக்கள் அதிகம் விரும்பும் தலைவர்களில் மூன்றாவது இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார் என அறிவித்தது. முதல் இருவர் வரலாற்றுக்கால அரசர்கள்////
  அந்த கருத்து கணிப்பை அப்படியே இங்கு வைத்திருந்தால் எல்லோரும் அறிய வாய்ப்பிருக்குமே ஸ்டாலினைவிட முந்தைய மன்னர் காலத்து ஆட்சிதான் பெருபான்மையான மக்கள் விரும்புவதால் ,பெரும்பான்மையான மக்கள் கம்யுனிசத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்றுதானே பொருள்.

 15. sankar,.////அவர்கள் தேச பக்தர்கள் அந்நிய நாட்டுப் படைகளை விரட்டினார்கள் என்பதை கூட ஏற்றுக் கொள்கிறேன்.///
  அந்நிய நாட்டில் புகுந்த ரஷ்யாவை என் கண்டிக்கவில்லை?
  ///தலிபான்கள் செயலை நீங்கள் ஆதரிப்பது மிகவும் ஆச்சரியமாஅக இருக்கிறது///
  மேற்கத்திய மீடியாக்கள் தரும் தகவல்களை வைத்து அவர்களைப் பற்றி நான் எந்த முடிவுக்கும் வரவில்லை.ஜப்பானிய அரசு குழந்தைகளுக்கான மருந்துகளை ஒப்பந்த படி நடக்காமல் மீறியதை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் ,அவர்கள் குழந்தைகள் மருந்து இல்லாமல் சாகும்போது வழிபட ஆளே இல்லாத புராண காலத்து புத்தர் சிலையை சிதைத்ததை உலக மகா கொடுரம்போல் காட்டினார்கள்.[தமிழர்களின் கற்புக்கரசி என மதிக்கப்படும் கண்ணகி சிலையை தமிழ்நாட்டிலே அகற்றப் பட்டது யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்]அந்நிய நாட்டில் புகுந்து அவர்களது கொள்கையை அந்நிய மக்களிடம் தினிப்பத்தர்க்காக லட்ச கணக்கான மக்களைக் கொன்ற ரஷ்யாவை விட தாலிபான்கள் என்ன கொடுமை செய்து விட்டார்கள்?அதை கொஞ்சம் சொல்லுங்கள் .உங்களது ஆச்சார ஆச்சரியம் இல்லாமல்போகும்.
  /// நாங்கள் ஆணும் பெண்ணும் சரி சம்மாக வாழும் அமைப்பை பற்றி பேசுகிறோம்.சூழ்நிலைகளுக்கு தக்கவாறு மாற்றங்களை ஏற்படுத்டுவது பற்றி பேசுகிறோம்///ஆணும் பெண்ணும் சமம் என்பதின் வியாக்கியானம் என்ன?சூழ்நிலைக்கு தந்தவாறு சட்டம் செய்யும் நீங்கள் அதற்கான ஒரு உதாரணம் தாருங்கள்.
  ஷீஆ பிரிவினரும் வரலாற்று ஆசிரியர்களும் உமையாக்களின் ஆட்சி பற்றி கூறியதை எங்கு இருந்து பெற்றீர்கள் என்பது பற்றி சொல்லுங்கள்.
  .////பொது உடமை கொள்கையும் 1917ஆம் ஆண்டு முதல் இரஷ்யா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஆட்சியில் இருந்தது///
  செங்கொடி இதுவரை கம்யுனிச ஆட்சி நடைபெற்றதே இல்லை என்கிறார்.சோஷலிச ஆட்சிதான் [ஈசல் போல்] வந்து போய்விட்டது என்கிறாரே.
  ///1980க்குப் பின் பல நாடுகளில் ஆட்சி பொறுப்பை இழந்தது.மீண்டும் அரசமைக்க போராடி வருகின்றனர்///
  இணையதளத்திலும் புத்தத்திலும் எழுதி போரடிக்க போவதுதான் மிச்சம்..

 16. sengodi,///. இன்றைய ஏகாதிபத்திய புள்ளிவிபரங்கள் 1920 முதல் 1950 வரையிலான காலத்தை முழுமையாக கொண்டு வெளிவந்துள்ளது. உளவாளிகள், சமூகவிரோதிகள், பாசிட்டுகள், கொலைகாரர்கள் எனமொத்தமாக 1921 முதல் 1953 முடிய 7,99,473 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஏகாதிபத்திய புள்ளிவிபரம் இன்று அறிவிக்கின்றது////
  இது பதிவு செய்யப் பட்டது மட்டுமே .மேலும் அவர்கள் நீங்கள் கூறும் குற்றவாளிகளாக இருந்துவிட்டு போகட்டும்.ஸ்டாலினிசத்தை எதிர்ர்தவர்கள்,மற்றும் ட்ராட்ஸ்கியன்கள் கொல்லப்பட்டவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் ஸ்டாலினுக்கு மட்டுமே தெரியும்..அன்று ஏகதிபதியர்களிடம் காசு வாங்கி ரஷ்யாமீது அவதூறு பரப்பியவர்கள், இன்று ஸ்டாலினிஸ்ட களிடம் காசு வாங்கி அவர்களுக்கு சாதகமாக எழுதலாம் அல்லவா?

 17. //அங்குள்ள செசன்யா முஸ்லிம்களின் துஆ’ வைக் கொண்டு இறைவன் அவர்களை காப்பாற்றியுள்ளான்.அவனே அனைத்தையும் அறிந்தவன்//

  உங்கள் இறைவனுக்கு சோமலியா, பாலஸ்தீனிய, லெபனானிய, ஈராக்கிய, குஜராத்திய முஸ்லீம்களின் நிலை பற்றி தெரியவரவில்லையோ! அல்லது அவர்களெல்லாம் துவாவே கேட்பதில்லையோ! அல்லது அவர்களின் துவாக்களெல்லாம் மலக்குகளால் மட்டறுக்கப்படுகின்றனவோ! அல்லது அவர்களெல்லாம் சுபிட்சமாகத்தான் வாழ்கிறார்களோ! உங்கள் இறைவன் அனைத்தையும் அறிந்தவர்தான் போங்கள்.

  அன்றைய கொடுங்கோலன் யார்? ஹிட்லரா? ஸ்டாலினா! தெளிவுப்படுத்திவிடுங்களேன். கொடுங்கோலர்கள் ஹிட்லரும் ஸ்டாலினும்தான் என்றால் 2ம் உலகப் போரில் முதலாளித்துவ ஜனநாயக! கோமான்கள் ஸ்டாலினுடன் கூட்டு வைத்தது ஏனோ! பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே தெரிந்திருக்கும் யார் மக்களை வதைத்த கொடுங்கோலன் என்று.
  குருஷேவிற்கு தேவையாக இருந்தது எது? ஸ்டாலினைத் தூற்றுவதா? அல்லது கம்யூனிசத்தை மறுதலிப்பதா? ஸ்டாலின் மக்களை வதைத்த ஒரு கொடுங்கோலனாக இருந்திருக்கும் பட்சத்தில், ஸ்டாலினுக்குப் பிறகு அதிபரான குருஷேவ் வர்க்கப் போராட்டத்தை அல்லவா முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் குருஷேவின் நடவடிக்கைகளும் அறிக்கைகளும் முதலாளித்துவ மீட்சிக்கானதாகவல்லவா இருந்தது. அதையாவது அவன் வெளிப்படையாக அறிவித்தானா என்றால் அதுவும் இல்லை. தனது முதலாளித்துவ மீட்சிக்கான முன்னெடுப்புகளையே சோஷலிசம் என்றான் அந்த துரோகி. தனது முதலாளித்துவ மீட்சிக்கான பாதையை தொடர்ந்துகொண்டே “இருபது வருடங்களில் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டிவிடுவோம்” .என்றான். உண்மையிலேயே கம்யூனிசத்தை நேரடியாக மறுதலிக்க முடியாமல் ஸ்டாலினை தூற்றியதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை சிதைப்பதுதான் அந்த துரோகியின் குறிக்கோள்.

 18. ///என்னுடைய கருத்து என்னவெனின் குருசேவ் மட்டும் நீங்கள் சொல்லியுள்ள மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், ரஷ்யா இன்று சோமாலியா போலோ இல்லை அதைவிட மோசமான நிலைக்கோ சென்று இருக்கலாம்.///—-இபுறாஹீம்.

  ஸ்டாலின் தலைமையில் ருஷ்ய மக்கள் 100% கல்வியறிவு, 100% வேலைவாய்ப்பு, 100% ற்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தனர். “இருபது வருடங்களில் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டிவிடுவோம்” என்ற குருஷேவ் மற்றும் அவனின் அடியொற்றிய நாய்களின் தலைமையில் ருஷ்யர்கள் ரொட்டித் துண்டிற்கே பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. குருஷேவ் கருத்துப்படி ரொட்டித் துண்டிற்கே மக்களை அலைய விடுவதுதான் கம்யூனிசம். இபுறாஹிமுக்கு இந்த நிலைதான் பரவாயில்லை என்று தெரிகிறது. குருஷேவ் இதுதான் கம்யூனிசம் என்றான். இந்த நிலையை இபுறாஹீம் என்னவாக வரையறுக்கிறார். இபுறாஹீம் குருஷேவை ஆதரிக்கும் பட்சத்தில் கம்யூனிசம் பரவாயில்லை என்கிறாரா!

 19. நண்பர் இப்ராஹிம்,

  எத்தனை ஏகாதிபத்திய சதிகள், எத்தனையெத்தனை அரசு அடக்குமுறைகள் அத்தனையையும் மீறி ரஷ்ய மக்கள் கம்யூனிசத்தையும், தோழர் ஸ்டாலினையும் மறக்கவில்லை, மறக்கவும் விரும்பவில்லை என்பதைத்தான் அந்த கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகிறது.

  நீங்கள் எந்த விபரமும் தெரியாமலேயே அப்படி காட்டிக்கொள்கிறீர்கள். இரண்டு கோடியிலிருந்து ஆறு கோடிவரை கணக்கு தந்தவர்களே இப்போது எட்டு லட்சத்திற்கு வந்திருக்கிறார்கள். சரி, இந்த எண்ணிக்கையும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையா? என்றால் அதுவும் இல்லை. ரஷ்யாவில் ஏற்பட்ட பஞ்சம் போன்றவற்றிக்கு கம்யூனிசம் தான் காரணம் என்று கூறிக்கொண்டு என்னென்ன வழிகளிலெல்லாமோ முனைந்து கணக்குக் கூட்டினாலும் முதலில் அவர்கள் சொன்ன எண்ணிக்கையை எட்டமுடியவில்லை என்பதால் இப்போது எட்டு லட்சம் என்கிறார்கள்.

  அவர்கள் காசு வாங்கிக்கொண்டு எழுதினார்கள் என்பதை நாங்கள் சொல்லவில்லை. பிரிட்டீஷ் ரகசிய உளவு அமைப்பு தான் சொன்னது “நாங்கள் பணம் கொடுத்து தான் எழுதச்சொன்னோம்” என்று. புகைப்பட ஆதாரங்களை வழங்கியவன் அமெரிக்க நீதிமன்றத்தில் தான் ஒத்துக்கொண்டான், “நான் ரஷ்யாவுக்கு ஒரு முறைதான்(ஐந்து நாள்) சென்றிருக்கிறேன், உக்ரைனுக்கோ சென்றதே இல்லை” என்று. யார் அவதூறு கூறினார்களோ அவர்களே தான் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை, ‘மாபெரும் சதி’ வழக்கு கூட உலக பத்திரிக்கையாளர்களுக்கு முன்பு தான் நடந்தது.

  நீங்கள் இஸ்லாத்தை எப்படி நேர்மறையில் நம்புகிறீர்களோ அதுபோல கம்யூனிசத்தை எதிர்மறையில் நம்புகிறீர்கள். இரண்டுமே வெற்று நம்பிக்கைகள் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

 20. கலை|லக்கும் தீனுக்கும்]வழிய தீன்
  இறைவனை எவ்வாறு நம்ப வேண்டும்?இறைவனிடம் அவன்தம் தூதர் காட்டித்தந்த வழியில் எவ்வாறு துஆ செய்ய வேண்டும் ?என்பது அறிந்து பொறுமை காட்டினால் நிச்சயமாக அவன் அருள் கிடைக்கும்.இறைவனின் சோதனைகளை யும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தால் சுபிட்சமாக வாழ்வது பற்றியும் தெரிந்து கொள்ளமுடியும்.
  அன்றைய கொடுங்கோலன் அமெரிக்கனுடன் தனது வழியில் ஸ்டாலினையும் இணைத்து கொண்டான்.ஹிட்லரை மிகக் கொடுங்கோலனாக முதாலளித்துவ நாடுகள் பரப்புரை செய்தன.ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன காருண்யா கடல் ,பார்ப்பதற்கே பசு போல் தோன்றும் இயேசுவை சித்ரவதை படுத்தி சிலுவையில் அறைந்தவர்கள் எப்படிப்பட்ட கொடுங்கோலர்களாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் தான் ஹிட்லர் அவர்கள இனப் படுகொலை செய்திருப்பான்.ஜப்பானில் அணுகுண்டுகளை போட்டு லட்ச கணாக்கான ஜப்பானியர்களை கொன்றதோடு இன்றுவரை புல் பூண்டுகள் விளையாமல் தரிசாக்கிய அமெரிக்காவை விட ஹிட்லர் என்ன கொடியவனா? லட்சக்கணக்கான பாலஸ்தின் மக்களை கொன்று புதைத்த இஸ்ரேலியன் ஹிட்லரை விட கொடியவன் இல்லையா?வியட்நாமில் கொலைவெறி தாக்குதல் நடத்திய அமெரிக்காவைவிட ஹிட்லர் கொடியவனா?ஆப்ரிக்காவில் ஆதிக்க வெறியுடன் புகுந்து ஒரு பாவமும் அறியாதஅப்பாவி மக்களை கொன்று ரச்யாவை விட ஹிட்லர் கொடியவனா?ஆப்கான் மக்களை கண்டைனரில் அடைத்து கவுண்டான்மாலா வரை கொண்டு சென்ற ,கொன்று சென்ற சிறை கொடுமை படுத்தி கொன்ற அமெரிக்கனை விட ஹிட்லர் கொடியவனா? வீழ்ந்து விட்ட பொருளாதரத்தை சரிகட்ட,இராக் எண்ணையை திருட பேரழிவு ஆயுதங்கள் என்று பொல்லாங்கு சொல்லி அந்நிய நாட்டில் புகுந்து ஒரு பாவமும் அறியாதஅப்பாவிமக்களை கீழே போட்டு மிதித்து கைகளை கட்டி ,அபுகிராப் சிறை மற்றும் பல இடங்களில் கொடூர கொடுமை செய்து கொன்ற புஸ்சைவிட ஹிட்லர் கொடியவனா?
  ///முதலாளித்துவ ஜனநாயக! கோமான்கள் ஸ்டாலினுடன் கூட்டு வைத்தது ஏனோ///
  உங்கள் பார்வையில் கொடியவன் ஹிட்லர் என்றாலும் கொடியவனை ஒழித்து விட்டு உலகை பங்கு போடா கொடியவர்களும் கொடியவர்களும் கூட்டு .
  .///ஸ்டாலின் தலைமையில் ருஷ்ய மக்கள் 100% கல்வியறிவு, 100% வேலைவாய்ப்பு, 100% ற்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தனர்/// ஒரு கொள்கை வெற்றி நடை போடும்போது அந்த கொள்கையை எதிர்ப்பவனும் அதன் பக்கம் திரும்பி விடுவது தானே மனித இயல்பு.அவ்வாறு இருக்க அந்த வெற்றி கொள்கையை கைவிட்டு வேறு பக்கம் திரும்ப தன மீதே மண் அள்ளி போடா குருசெவுக்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?எப்படியும் சோஷலிச தோல்வியை குருசேவ் தலையில் போட்டு ஸ்டாலினை காப்பாற்ற வேண்டும்?மீண்டும் சோஷலிச கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்லி மக்களை ஏமாற்றிட நினைத்தால் அவர்கள் என்ன இந்திய மக்களா? நூறு சதவீதம் படித்த ,சோசலித்தை அனுபவித்த மக்களாயிற்றே

 21. ஆப்கான் என்பது ஆப்ரிக்கா[ரஷ்யா தாக்கியதாக] என்று டைப் செய்யப்பட்டு விட்டது .திருத்தி கொள்ளவும்

 22. ///இறைவனை எவ்வாறு நம்ப வேண்டும்?இறைவனிடம் அவன்தம் தூதர் காட்டித்தந்த வழியில் எவ்வாறு துஆ செய்ய வேண்டும் ?என்பது அறிந்து பொறுமை காட்டினால் நிச்சயமாக அவன் அருள் கிடைக்கும்.இறைவனின் சோதனைகளை யும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும்///

  அப்போ சோமலியா, பாலஸ்தீனிய, லெபனானிய, ஈராக்கிய, குஜராத்திய முஸ்லீம்களுக்கெல்லாம் துவாவே கேட்கத் தெரியவில்லைன்னு சொல்லுறீங்களா! அவர்களுக்கெல்லாம் பொறுமை இல்லைன்னு சொல்றீங்களா!

 23. தலிபான்களின் கொள்கையை இப்ராஹிம் என்ற தனி மனிதன் நியாயப் படுத்டுகிறார் என்றே எடுத்துக் கொள்கிறேன்

  இஸ்லாமிய ஆட்சிமுறையை அவர்கள் 100% நடைமுறைபடுத்துகிறார்கள் அந்த ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டுவரவே பாடுபடுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
  __________________

  இஸ்லாம் என்பது அரசியல் சித்தாந்தம் என்பதையே உங்களின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. இஸ்லாமிய சட்டங்கள் முதலாளித்துவ, ஆணாதிக்க சட்டங்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாக விட்டது. குரான் மற்றும் ஹதிதுகளில் உலகம் வாழ்வதற்கு தேவையான எல்லாமே சொல்லியாகிவிட்டது. அதனை அரசியல், மத பிரமுகர்கள் எப்படி வேண்டுமானாலும் தங்கள் சுயநலத்திற்கு திரிக்க முடியும் என்பதை ஏற்கெனவே நிரூபித்து காட்டினோம். குரானில் உள்ள பல விஷயங்களை நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே நம்ப முடியும்.அதைத்தான் செய்கிறீர்கள்.குரான் குறிப்பிட்ட அத்தாட்சிகள் ஒன்றைக் கூட காட்ட முடியவில்லை.

  நீங்கள் கூறும் எந்த கொள்கைக்கும் ஆதரவாகவும்,அதற்கு எதிராகவும் குரானில் இருந்தே கருத்து கூற முடியும், இன்னும் பல விஷயங்களில் குரான் வல்லுனர்களால் கூட ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இந்த சூழ்நிலையில் நான் அல்லது அவர்கள்(தலிபான்,சவுதி….தவுகீத்) சொல்லும் குரான் விளக்கம் மட்டும் சரி அதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது நடக்காத காரியம்.

  இதனை பற்றி இன்னும் எழுதுவேன்.
  __________

  இந்த பதிவில் திரு ஸ்டானினுக்கு பிறகு பொறுப்ப்பேற்ற குஷேவ் என்பவர் ஸ்டாலின் மீது பல அவதூறு பிரச்சாரங்களை செய்தார் என்பது தோழரின் கருத்து.குருஷேவ் உண்மையைத்தான் கூறியிருப்பர்ர் என்று உங்களுக்கு தோன்றுகிறது.

  முவையாக்களின் ஆட்சிகாலத்தில் தொழுகையின் போது திரு அலியைஒ இழிவு படுத்தும் பல வாக்கியங்கள் சொல்லப்பட்டன.அதனை திரு உமர் 2 தன் ஆட்சிக்காலத்தில் மாற்றினார். சில சீர்திருத்தங்களையும் செய்தார்( மது விலக்கு).உம்மையாதின் வமசத்தினரால் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.

  உம்மையாதுகளின் காலத்தில் எழுதப்பட்ட பல ஹதிதுகளை பலகீனமாகவே எண்ணி தள்ளுபடி செய்யப்பட்டது.இபின் இஷாக (704_770) எழுதிய முகமதுவின் வாழ்க்கை கூட உம்மையாதுகளின் காலத்திலேயே எழுதப்பட்டது.இந்த புத்தகத்தில் குறிப்பிட்ட செயலே சாஅத்தனைன் வசனங்கள் கதை.இப்புத்தகம் உம்மையாதுகளின் ஆட்சியில் தடை செய்யப்படவில்லை.ஆனால் இதை தழுவி எழுதியவருக்கு ஃபத்வா கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்ததே.
  _________________________________

  ஸ்டாலினை குருஷேவ் இழிவு படுத்தினார்.

  அலியை முவையா(ruled 662_680) இழிவு படுத்தினார்.

  உமர் 2(ruled 682_717) இழிவு படுத்திய செய‌ல்களை மாற்றினார்.
  இரஷ்ய மக்களும் மாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
  _________________

  இல்லை ஸ்டாலினை பற்றி குருஷேவ் சொன்னது எல்லாம் உண்மை என்ற பாணியில் உங்கள் கருத்துகளை ஆதாரபூர்வமாக எடுத்து வையுங்கள்.பதில் தருகிறோம்.

  __________________

  http://en.wikipedia.org/wiki/Umayyad_tradition_of_cursing_Ali

 24. //ஆணும் பெண்ணும் சமம் என்பதின் வியாக்கியானம் என்ன?சூழ்நிலைக்கு தந்தவாறு சட்டம் செய்யும் நீங்கள் அதற்கான ஒரு உதாரணம் தாருங்கள்.//

  இஸ்லாமிய ஆண்களின் கருத்துகளில் பெண்களின் சம உரிமை என்பது எப்படி பார்க்கப் படுகிறது என்பதை அறிவேன். சம உரிமை என்பது உடல் உறவு தொடர்பாகவே இஸ்லாமிய ஆண்களால் பார்க்கப் படுகிறது என்பது நகைப்புக்குறிய விஷயமே. அதைதாண்டி வாழ்வாதாரம் சம்பந்தமான பல பிரச்சினைகள் உள்ளது.ஆணை சார்ந்தே பெண் வாழ வேண்டும் என்பதை கூறும் கொள்கைகளை குப்பையில் போட வேண்டும்.
  ______________________________

  இந்திய பெண்களுக்கு சொத்துரிமை பற்றி மட்டும் முதலில் விவாதிக்கிறேன்.

  நல்ல கேள்வி கேட்டீர்கள் நமது நாட்டின் சட்டங்களிலேயே எடுத்துக்காட்டு தருகிறேன்.இந்து வாரிசுரிமை சட்டம் 2005 ஐ விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.இந்து என்னும் சொல்லை கிறித்தவ ,இஸ்லாமியரல்லாதோரை குறிக்கும் அர்த்தத்திலேயே பயன் படுத்துகிறேன்.

  ஒரு திருமணமான இந்து ஆணின் இறப்பிற்கு பின் அவருடைய சொத்திற்கு முதல் வாரிசுதாரர்கள்.

  1.) தாய்,தந்தை ,மனைவி,ம்கன்(கள்) ,மகள்(கள்)

  இரண்டாம் கட்ட வாரிசுதாரர்கள் என்பது அவ்வளவு முக்கியமில்லை என்பதால் இதனை மட்டும் எடுட்துக் கொள்வோம்.

  ஒரு மனிதருக்கு(அவர் இறப்பிற்கு பின்) ,தாய் ,தந்தை,மனைவி ,ஒரு மகன்,பஒரு மகள் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.
  அவர் சொத்து ஐந்து சம பிரிவுகளாக் பிரிக்கப்பட்டு(தாய்,தந்தை,மனைவி,மகன், மகள்) ஆகியோருக்கு அளிக்கப் படவேண்டும்.
  மகன் மகள்,திருமணம் ஆனவராகவோ,ஆகாம்ல் இருந்தாலும் அவர்கள் பங்கு குறைவது இல்லை.

  ஆண்களுக்கு சொததில் உள்ள உரிமை போல் பெண்களுக்கும் இச்சட்டம் தருகிறது.

  இதற்கு உங்கள் ஷாரியா சட்டம் மூலம் என்ன தீர்வு சொல்கிறீர்கள்? இதெ

  ஒரு திருமணமான முஸ்லிம் ஆணின் இறப்பிற்கு பின் அவருடைய சொத்திற்கு முதல் வாரிசுதாரர்கள் யர்? எப்படி பிருஇக்க வேண்டும்?

  இந்தியாவில் எப்படி? ஷாரியா சட்டத்தின் படி எப்படி?
  _______________

  இதன் பிறகு பெண்களின் திருமனம், உரிமைகள்,விவாக ரத்து தொடர்பாக நமது நாட்டு சட்டங்களை உங்கள் இறைவன் அளித்த சட்டங்களோடு ஒப்பிடுவோம்.
  ___________________________

 25. sengodi,///அந்த கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகிறது//// எங்களுக்கும் அந்த கருத்து கணிப்பை காட்டலாம் அல்லவா
  ///1921 முதல் 1953 முடிய 7,99,473 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ///
  இது பதிவு செய்யப்பட்ட மரணங்கள் என்று வைத்து கொள்வோம் ,ஸ்டாலின் காலத்தில் பதிவு செய்யபடாமல் எவ்வளவு களை எடுத்தார்கள் என்பது சகோதரர் சென்கொடிக்கும் தெரியாது எந்த அந்தர் பல்டிக்கும் தெரியாது.சரி இங்கு குருசேவ் ,கொர்போசெவ் போன்ற டிராட்ஸ்கிகள் களால் தான் ஏகாதிபத்திய சதிகளால்தான் சோசலிசம் முதலாளித்துவம் பக்கம் திருப்பி விடப் பட்டு பஞ்சம் வந்தது ,என்றால்,சீனாவில் பசி,பஞ்சம் வராமல் செழித்து உலக முதலிடம் பெற்றதே அது எப்படி ?ஆக ரஷ்யா சீரழிவுக்கு காரணம் ஸ்டாலின்தான் ,நீங்கள் உங்கள் அபிமான தலைவரை காப்பாற்ற குருச்சேவ் மேல் பலி போட்டு கொள்ளுங்கள். எங்களுக்கு ஒன்று இல்லை.எப்படியும் அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்க ஆள் கிடைத்தால் போதும்.

 26. ///அதனை அரசியல், மத பிரமுகர்கள் எப்படி வேண்டுமானாலும் தங்கள் சுயநலத்திற்கு திரிக்க முடியும் என்பதை ஏற்கெனவே நிரூபித்து காட்டினோம்///
  சங்கர்,எப்போது எங்கே?
  ///குரான் குறிப்பிட்ட அத்தாட்சிகள் ஒன்றைக் கூட காட்ட முடியவில்லை////
  அந்த அத்தாட்சிகள காலத்தால் அறிவீர்கள்,அவசரப் படேல்.அதனால் இப்போது ஒன்றும் குடி முழுகி போய் விடவில்லையே
  ///நீங்கள் கூறும் எந்த கொள்கைக்கும் ஆதரவாகவும்,அதற்கு எதிராகவும் குரானில் இருந்தே கருத்து கூற முடியும்,///
  அவ்வாறெனின் உங்களது பொது உடமைக்கும்,பெண் ஆதிக்கத்திற்கும் ஆதரவாக உள்ள கருத்துகளை காட்டுங்கள்.
  ///இன்னும் பல விஷயங்களில் குரான் வல்லுனர்களால் கூட ஒரு முடிவுக்கு வர இயலவில்லை///
  எந்த விசயங்களில்?
  ///உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது நடக்காத காரியம்///
  நாங்கள் உலகம் முழுவதும் கொண்டு வந்தால் தான் நடை முறை படுத்தமுடியும் என்று சொல்ல வில்லையே .உமர்[ரலி] அவர்கள் போல் ஆட்சி செய்தால் போதும் உலக மக்கள் தாங்களாகவே ஏற்று கொள்ள முன்வருவார்கள்.

 27. நண்பர் இப்ராஹிம்,

  இது என்ன முகம்மதுவின் ஆட்சி என நினைத்தீர்களா? பதிவு செய்து அறுநூறு பேர் பதிவு செய்யாமல் எத்தனை பேரோ என்பதற்கு. தோழர் ஸ்டாலின் ஆட்சியில் கொலைகள் நடந்ததாக நீங்கள் நம்பினால்(!) முதலில் அதை நிரூபியுங்கள், பிறகு மற்றதைப் பேசிக்கொள்ளலாம்.

 28. //அவ்வாறெனின் உங்களது பொது உடமைக்கும்,பெண் ஆதிக்கத்திற்கும் ஆதரவாக உள்ள கருத்துகளை காட்டுங்கள்.//

  பொது உடமை,அறிவிய்ல் இதை எல்லாம் மத புத்தகங்களில் தேடக்கூடாது. தோழர்(உங்களுக்கு பிடிக்க வில்லையெனில் வேண்டாம்) முகமது கூறிய கருத்துகளை பொது உடமைக்கு ஆதரவாக காட்ட முடியும்.

  //ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக சொத்து என்று கூறலாம்//
  6:139. மேலும் அவர்கள், “இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன – அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு” என்றும் கூறுகிறார்கள்; அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் – நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அறிந்தவனுமாக இருக்கின்றான்.

  //சரியான கூலி இல்லாவிட்டால் போராடுவார்கள் என்பதற்கு கூறலாம்//

  9:58. (நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் – அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.

  // தோழர் முகமதுவின் பொது உடமை பாருங்கள்//

  59:7. அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்

  70:24. அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.

  70:25. யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).

  இஸ்லாமிய சமூகத்தில் வறுமையை ஒழிப்போம் என்று (ஏதோ ஒரு வழியில்) பாடுபட்டால் நீங்களளும்( விரும்பாவிட்டாலும்) பொது உடமைவாதிதான்
  ______________

  இஸ்லாமிய கம்யுனிஸ்டுகளாக,ஜனநாயகவாதியாக, சிலர் தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.
  நீங்கள் எப்போதும் போல் இது குரான் மற்றும் ஹதிதில் கூறப்படவில்லை என்று கூறலாம்.ஒரு பொது உடமைவாதி முஸ்லிமாக இருக்க முடியாது என்று.

  அவர்கள் இரு கொள்கைகளையும் இணைத்து பார்த்தார்கள்.

  அதில் ஒருவர்தான் தோழர் அல்‍ஷரியாட்டி. இரானில் புரட்சி தோன்ற காரணமாக இருந்தவர்க்ளில் ஒருவர். பல புத்தகங்கள் இஸ்லாம்,பெண்கள் முன்னேற்றம்,மார்க்சீயம் குறித்து எழுதியுள்ளார். இஸ்லாமிய மார்க்சீயம் என்ற் கொள்கை,கொள்கைவாதிகள் இருக்கிறார்கள்.

  சில சுட்டிகள்.

  http://en.wikipedia.org/wiki/Islamic_Marxism

  http://www.shariati.com/

  http://en.wikipedia.org/wiki/Ali_Shariati
  _______________

  இந்தியாவில் இஸ்லாமிய பெண்களுக்கு சட்டபப்டி என்ன உரிமை பங்கு உண்டு?

  சவுதியில் எப்படி?

  ஷாரியா படி எது சரியானது?

 29. செங்கொடி ////இது என்ன முகம்மதுவின் ஆட்சி என நினைத்தீர்களா? பதிவு செய்து அறுநூறு பேர் பதிவு செய்யாமல் எத்தனை பேரோ என்பதற்கு////
  முகம்மதுவின் ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு பதிவு செய்யாத வன்முறை குற்றங்கள் மற்றும் முஹம்மது[நபி\]அவர்கள் பற்றி மனம் போன போக்கில் எழுத முடிகிறது.உங்கள் ஸ்டாலின் ஆட்சியில் அயல் நாட்டினர் வேலை பார்த்துகொண்டு இது போன்று கம்யுனிசத்திற்கு எதிராக எழுதுயுள்ளதை நிருபித்தால் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த இரண்டு கோடி பேர் கொலைகளை நிருபிக்கிறேன்.சரி சோசலிசத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறிய .சீனா பொருளாதரத்தில் முதலிடத்தில் உள்ளது.ஆனால் ஸ்டாலினால் நூறு சதவீதத்திற்கு மேல் முன்னேறிய ரஷ்யா பஞ்ச பரதேசியாகி ,பல பெண்களை ஆணாதிக்கமிக்க வெளிநாட்டினர்க்கும் பொது உடமையாக்கி விட்டார்களே.
  இது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே

 30. சங்கர்,///இல்லை ஸ்டாலினை பற்றி குருஷேவ் சொன்னது எல்லாம் உண்மை என்ற பாணியில் உங்கள் கருத்துகளை ஆதாரபூர்வமாக எடுத்து வையுங்கள்.பதில் தருகிறோம்///
  குருசேவ் ஸ்டாலினின் சோஷலிச ஆட்சியிலிருந்து முதலாளித்துவத்தை புகுத்தியதால்தான் ரஷ்யாவில் பஞ்சம் வந்தது என்றால் ,சீனாவின் முன்னேற்றத்திற்கு காரணம் என்ன?சீனாவில் ஸ்டாலினிசம் இல்லை என்பதுதான் காரணமா

 31. சங்கர்,///ஒரு மனிதருக்கு(அவர் இறப்பிற்கு பின்) ,தாய் ,தந்தை,மனைவி ,ஒரு மகன்,பஒரு மகள் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.
  அவர் சொத்து ஐந்து சம பிரிவுகளாக் பிரிக்கப்பட்டு(தாய்,தந்தை,மனைவி,மகன், மகள்) ஆகியோருக்கு அளிக்கப் படவேண்டும்///
  இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு சட்டங்களோடு ஆறாம் நூற்றாண்டு சட்டங்களை ஒப்பிட்டு பேச முன்வந்தமைக்கு நன்றி.இறந்தவரின் தாய் தந்தைக்கும் மற்றவருக்கும் சம பங்கு என்பதை மெச்சி உள்ளீர்கள் ஆனால் ரயில்வே,வருமானவரி சட்டம்,போன்ற பல்வேறு துறைகளில் அறுபது வயதை கடந்தவர்களுக்கு நிறைய சலுகைகள் உள்ளதே ஏன்?
  பேரன்,பேத்தி,மருமகள் போன்றவர்கட்கு அதே மாதிரியான சலுகைகள் இல்லையே இந்த பாரபட்சம் ஏன்?

 32. நண்பர் இப்ராஹிம்,

  கொலைகள் நடந்ததாக நீங்கள் நம்புவ‌தை நிரூபியுங்கள், பிறகு மற்றதைப் பேசிக்கொள்ளலாம்.

 33. எந்த ரஷ்ய போலீஸ் ஸ்டேசன் FIR வேண்டும் தோழரே

 34. புதிய புரட்சிகர மார்க்ஸிய தத்துவம்:

  ///அவர் சொத்து ஐந்து சம பிரிவுகளாக் பிரிக்கப்பட்டு(தாய்,தந்தை,மனைவி,மகன், மகள்) ஆகியோருக்கு அளிக்கப் படவேண்டும்///

  மற்றவர்களெல்லாம் மண்ணையா உண்பர் தோழரே!

 35. //இந்த பாரபட்சம் ஏன்?//

  இஸ்லாமிய சட்டம் தொடர்பாக சில விவரங்களை தெரிந்து கொள்வோம்.கீழ்க்காணும் தளத்தில் சொத்து பிரிப்பு கணக்கிறற்கு எளிதான மென் பொருள் உள்ளது.நண்பர்கள் பயன் படுத்தலாம்.

  http://www.lubnaa.com/money/InheritCalc.php

  சூழ்நிலை 1
  ஒரு முஸ்லிம் ஆண் இரறக்கும் போது அவருக்கு ,தாய் ,தந்தை,மனை,ஒரு மகன்,ஒரு மகள் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.
  மொத்த சொத்து =100%

  தந்தையின் பங்கு (1/6) 16.67
  தாயின் பங்கு (1/6) 16.67
  மனைவியின் பங்கு (1/8) 12.50
  மகனின் பங்கு (2:1) 36.11
  மகளின் பங்கு (2:1) 18.06
  ______________________________
  மொத்தம் =100
  __________________________
  இதே சூழ்நிலையில் ஒரு இந்து கும்பத்தினருக்கு ஐவருக்கும் சமமாக 20% கிடைக்கும்

  * * *

  சூழ்நிலை 2

  இறந்தவருக்கு மனைவி ,ஒரு மகன்,ஒரு மகள் மட்டும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

  மனைவியின் பங்கு (1/8) 12.50
  மகனின் பங்கு (2:1) 58.33
  மகளின் பங்கு (2:1) 28.17
  ______________________________
  மொத்தம் =100
  __________________________

  இதே சூழ்நிலையில் ஒரு இந்து கும்பத்தினருக்கு மூவருக்கும் சமமாக 33% கிடைக்கும்
  * * *
  சூழ்நிலை 3

  இறந்தவருக்கு மனைவி ,ஒரு மகன், மட்டும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

  மனைவியின் பங்கு (1/8) 12.50
  மகனின் பங்கு (2:1) 87.50
  ______________________________

  மொத்தம் =100
  __________________________

  இதே சூழ்நிலையில் ஒரு இந்து கும்பத்தினருக்கு இருவருக்கும் சமமாக 50% கிடைக்கும்.
  * * *

  சூழ்நிலை 4

  இறந்தவருக்கு மனைவி ,ஒரு மகள், மட்டும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

  மனைவியின் பங்கு (1/8) 12.50
  மகளின் பங்கு (1/2) 50%
  உறவினர்கள் 37.5%
  ______________________________

  மொத்தம் =100
  __________________________

  மகன் இல்லவிட்டால் சொத்தில் ஒரு பிரிவு உறவிரௌக்கு செல்கிறது.இதே சூழ்நிலையில் ஒரு இந்து கும்பத்தினருக்கு இருவருக்கும்(மனைவி,மகள்) சமமாக 50% கிடைக்கும்.

  * * *
  சூழ்நிலை 5

  இறந்தவருக்கு ,ஒரு மகன், மட்டும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

  மகனின் பங்கு (=100%)
  __________________________

  மொத்தம் =100
  __________________________
  இந்து குடும்பத்திலும் இதெதான்.
  * * *

  சூழ்நிலை 6

  இறந்தவருக்கு ,ஒரு மகள், மட்டும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

  மகளின் பங்கு (1/2) 50%
  உறவினர்கள் 50%
  ______________________________

  மொத்தம் =100
  __________________________

  ஒருவெளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மகள்கள் இருந்தால் உறவின‌ர்களுக்கு (1/3) போக மீதம் உள்ளதை அவர்கள் பிரித்து கொள்ள வேண்டும்.

  இந்து குடும்பத்தில் மக்ள்கள் இருக்கும் பட்சத்தில் உறவினர்களுக்கு ஒன்றும் கிடக்காது.அவர்கள் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டியதுதான்.
  _________________________

  சூழ்நிலை 7

  இறந்தவருக்கு குழந்தை இல்லாமல் இருந்தால் மனைவிக்கு 25% மட்டுமே கிடக்கும். மீதம் உள்ளது(75%) உறவின‌ர்களுக்கிடையே பங்கிடப்படும்.

  இந்து குடும்பத்தில் மனைவிக்கே(தாய் தந்தை இல்லாத பட்சத்தில்) 100% கிடைக்கும் .இறந்தவரின், தாய் தந்தை இருந்தல் அவர்களுடன் சம்மாக(33%) பிரித்து கொள்ள வேண்டும்.
  * * *

  இதன் சாராம்சம்

  1. ஆணுக்கு பெண்னை போல் இரு மடங்கு பங்கு

  2. ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் உறவின‌ர்களுக்கும் பங்கு.

  இதனை எப்படி நியாய படுத்துகிறீர்கள்?.

  ஒரு குறிப்பிட்ட விஷயம் .இந்த விவரங்கள் எல்லாம் உயில் எழுதாமல் இறந்தவருக்குத்தான்.

  உயில் எழுதும் இஸ்லாமியர்கள் யாருக்கு வேண்டுமானலும் அவர்கள் சொந்தமாக சம்பாதித்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
  அவர்கள் மேற்கூறிய இஸ்லாமிய முறைப்படி எழுதுகிறார்களா என்பது எல்லாவற்றையும் அறிந்த(?) அவர்களின் அல்லாவுக்கு மட்டுமே தெரியும்.

 36. தோழரே,

  இறந்தவர் வைத்துச்சென்ற அதிகபடியான கடன் பற்றியும்…,

 37. சங்கர் ////இதன் சாராம்சம்
  1. ஆணுக்கு பெண்னை போல் இரு மடங்கு பங்கு
  2. ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் உறவின‌ர்களுக்கும் பங்கு.
  இதனை எப்படி நியாய படுத்துகிறீர்கள்?.
  ஒரு குறிப்பிட்ட விஷயம் .இந்த விவரங்கள் எல்லாம் உயில் எழுதாமல் இறந்தவருக்குத்தான்////
  சங்கர் ,2005 இல் பெண்ணுக்கு சொத்துரிமை கொண்டுவந்து பெருமை பேசும் நீங்கள் 1400 களுக்கு முன் கொண்டுவந்த நபி[ஸல்] பற்றி பெருமைப்பட உங்கள் மனம் என் கொடுக்க மாட்டேன்கிறது.?
  சொத்தை குடும்பத்தில் பலருக்கு பிரித்து கொடுப்பதை நீங்கள் தவறு கானுகிரீர்களா?
  உயில் இஸ்லாத்தில் செல்லாது.உயிருடன் இருக்கும் சமயத்தில் அவர் விரும்பும் நபருக்கு சொத்து வை கொடுத்துவிடவேண்டும்.
  ///ஆணுககு பெண்ணைப்போல் இரு மடங்கு/// .
  பெண் ஆணிடமிருந்து மகர் பெறுகிறாள் .ஆண் மகர் கொடுக்கவேண்டும்.
  பெண்னுக்கு சீதனம் மூலம் சொத்தின் ஒரு பகுதி பெற வாய்ப்பு உள்ளது.
  பெண்ணுக்கு கணவரது உழைப்பில் பங்கு கிடைக்கிறது.
  ஆணோ தனது உழைப்பில் பெண்ணுக்கு பங்கு கொடுக்க வேண்டியுள்ளது,இப்படி பலவற்றை பேலன்ஸ் பண்ணித்தான் இஸ்லாம் பாகபிரிவினை பகிர்வு செய்துள்ளது..

 38. ////கொலைகள் நடந்ததாக நீங்கள் நம்புவ‌தை நிரூபியுங்கள், பிறகு மற்றதைப் பேசிக்கொள்ளலாம்////
  ஸ்டாலின் கொலைகளை இப்போது ஸ்டாலின் வந்தாலும் நிருபிக்க முடியாது. ஈராக்கில்,ஆப்கனில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் எண்ணிக்கை பற்றி அமெரிக்கா தரும் புள்ளி விவரமும் சரிதானா? சோளிசத்தை கைவிட்ட தால் தான் ரஷ்யா பஞ்ச பரதேசியாகிவிட்டது என்றால் அதே சோசலிசத்தை கைவிட்ட சீனா முன்னேறி யுள்ளதே ஏன் என்று கேட்டால் பதிலைக் காணோம்.ஸ்டாலினை போல் கொடுங்கோல் ஆட்சி இல்லாமலே சோஷலிச காலத்திலும் அது மறைந்து போன காலத்திலும் முன்னேறியதற்கு அதன் மக்கட் தொகையே காரணம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s