இணையத்தால் என்ன சாதிக்கலாம்? #tnfisherman

இணைய தளம் டுவிட்டர் ஃபேஸ்புக் கடந்த சில நாட்களாகவே டுவிட்டர் பொங்கி குமுறிக் கொண்டிருக்கிறது, ப‌ல பத்தாயிரம் டுவிட்டுகளைக் கடந்துகொண்டிருக்கிறது. சற்றேறக்குறைய அனைத்து தமிழ் பதிவர்களும் சளைக்காமல் டுவிட்டர் தகவல்களை அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். தமிழ் இணைய உலகம் ஒருமுகமாக ஒன்றிணைந்து அரசுகளை எதிர்த்து குரல் கொடுப்பது இதுவே முதல் முறை எனக் கருதுகிறேன். மட்டுமல்லாது இணையப்பயன்பாடு இல்லாதவர்களுக்கும் கூட இது சென்று சேர்ந்து ஒரு அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இணையத்தால் என்ன சாதிக்கலாம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. … இணையத்தால் என்ன சாதிக்கலாம்? #tnfisherman-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

நாளை 61 வது குடியரசு தினமாம். பாதுகாப்பு ஏற்பாடுகள், பய பீதிகள் என கடந்த வாரம் முதலே பரபரப்பு காட்டப்படுகிறது. ஒரு கொண்டாட்ட மனோநிலைக்கு மக்கள் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். கொண்டாட்டங்களை நுகர்வைக்கொண்டே அள‌க்கமுடியும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விழாக்கால தள்ளுபடியை குடியரசு தினத்திற்கும் நீட்டுகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் 'தேசபக்த' நடிகைகளை "வந்தே மாட்றோம்" என்று கூறவைத்து நம்மை கொண்டாட தூண்டுகின்றன. இதையே இன்னும் விரிவான அளவில் யாராவது வெளிநாட்டு தலைவர்களை அழைத்துவந்து இராணுவ தளவாடங்களை ஓடவிட்டுக் காட்டி … கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 12

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 12 1932இல் டிராட்ஸ்கிய மற்றும் குழுக்கள் நடத்திய சதியையே வர்க்கப் போராட்டம் என்றனர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புரட்சிக்கு பிந்தைய சமுதாயத்தின் வர்க்கப் புரட்சியை தொடர்வது எப்படி?, ஜனநாயகம் என்றால் என்ன?, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் எந்த வர்க்கத்துக்கு ஜனநாயகம்?, முதலாளித்துவ மீட்சி என்பது என்ன?, என எதிலும் கருத்து முன்வைக்க முடியாது உள்ளது. மாறாக அவதூறுகளை சார்ந்து அரசியல் நடத்தும் டிராட்ஸ்கியம் முதல் மார்க்சிய எதிர்ப்பை நடத்தும் அனைத்து வித … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 12-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீதிமன்றத்தின் கருப்புப்பண கவலை, செயலேதுமற்ற சாவூட்டுக் கவலை

சில நாட்களாக கருப்புப்பண விவகாரம் மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. "நாட்டின் பொருளாதரமே கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதில் அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஈடுபட்டவர்களை வெளிப்படுத்த அரசு ஏன் மறுக்கிறது?" என்பதுபோன்ற கேள்விகளை அள்ளிவீசி நீதிமன்றம் தன் வீரியத்தை(!) நிரூபித்திருக்கிறது.   கடந்த பாரளுமன்ற தேர்தல் நேரத்தில் சுவிஸ் வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் 70 லட்சம் கோடி குறித்த தகவல் வெளியாகி, அரசியல்வியாதிகள் அதைக் கொண்டு சவடால்கள் அடித்து பொழுது போக்கினார்கள். உச்சகட்டமாக, நாங்கள் ஆட்சியமைத்தால் நூறு நாட்களில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் … நீதிமன்றத்தின் கருப்புப்பண கவலை, செயலேதுமற்ற சாவூட்டுக் கவலை-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௩ இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   இந்தப்பகுதியை, இந்தத்தொடரை வாசிக்கவிருக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கு, இஸ்லாம் குறித்த போதிய அறிமுகமில்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் என்னுடைய பார்வையில் அறிமுகம் செய்யும் விதமாக அமைத்திருந்தேன். நான் இஸ்லாத்தை அறிமுகம் செய்ததில் பொருட்பிழை ஏதுமில்லை என்பதை நண்பரின் பதிவு அறிவிக்கிறது. ஆனால் அதை செய்தவிதத்தில் அவருக்கு பேதமிருக்கிறது. அப்படி பேதமிருப்பதாய் அவர் கருதும் இரண்டு இடங்களை … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩-ஐ படிப்பதைத் தொடரவும்.