செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௨

நுழைவாயில்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

நுழைவாயில் பகுதியில் இஸ்லாம் குறித்த தொடரை நான் ஏன் எழுதவிருக்கிறேன் என்பதை விளக்கும் விதமாக, ஒரு தோராயமான முன்னோட்டமாக அமைத்திருந்தேன். அதில் இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைவது பயன்தரத்தக்கதாய் இருக்காது என்பதை குறியீட்டுக்காரணமாய் கொண்டிருந்தேன். ஏனென்றால் அது உத்தி ரீதியில் பார்ப்பனீயத்திற்கு உதவிகரமாகவே இருக்கும் என நான் குறிப்பிட்டிருந்தேன். இது நண்பருக்கு விளங்கவில்லை, அதை அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆக மதரீதியில் ஒன்றிணைவது தவறு என எந்த அடிப்படையில் நின்று நான் குறிப்பிட்டிருக்கிறேனோ அந்த அடிப்படை அவருக்கு விளங்கவில்லை. இருந்தாலும் அவர் என்னுடைய நிலைப்பாடுகளை மறுத்திருக்கிறார். ஆக அவருடைய எதிர்ப்பில் மதம் மட்டுமே முன்னிருத்தப்பட்டிருக்கிறது சமூகமல்ல. மெய். மதத்தை ஆராதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சமூக நிலைப்படு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. மதமே அனைத்தையும் தீர்மானிப்பதற்குப் போதுமானது எனும் நம்பிக்கையில் இருப்பவர்கள் அது எதிர்ப்புக்கு உள்ளாகும் போது எதிர்ப்பு மட்டுமே அவர்களின் பார்வையில் தென்படுமேயன்றி எதிர்ப்புக்கான காரணம் தென்படாது.

இந்தியாவைப் பொருத்தவரை பார்ப்பனீயம் என்பது ஒரு குலமோ, ஒரு மதமோ அல்ல, அது ஒரு அடக்குமுறைச் சட்டத்தொகுப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு அது நடப்பிலிருக்கிறது. அதை எதிர்த்துத்தோன்றிய கொள்கைகளும், கோட்பாடுககளும் பார்ப்பனீயத்தால் உள்வாங்கப்பட்டு தின்று செரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடக்குமுறைகளுக்கு பாதிக்கப்பட்ட மக்களை ஈர்க்கும் விதத்தில் இருப்பது தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியதற்கான காரணி. எனவே பார்ப்பனீயம் யாரை தனக்குக் கீழாக அடக்கிவைக்க விரும்புகிறதோ அவர்களே இந்தியாவில் இஸ்லாத்தின் ஆதாரம். எனவே பார்ப்பனீயம் யாரை அடக்கிவைக்க நினைக்கிறதோ அவர்களுக்கும்; அவர்களை எது ஈர்க்கிறதோ அவற்றுக்கும் இடையே ஒரு தடையை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இந்த அவசியத்திற்கான உத்தியாகவே இந்து எனும் மதவடிவம் பார்ப்பனியத்திற்கு பயன்படுகிறது. இந்து எனும் மத வடிவத்திற்குள் அனைவரையும் கட்டிப்போட்டால் தான் பார்ப்பனியத்தைப் பாதுகாக்க முடியும். இந்த வகைப்பாட்டில்தான் பௌத்தம் மதலான மதங்களை எதிரியாக சித்தரித்து வந்திருக்கிறது. எதிரி இல்லாவிட்டால் மேடுபள்ளமான அடக்குமுறைச் சட்டத்தொகுப்பில் ஒற்றுமை சாத்தியமில்லை. எனவே பெரும்பகுதி மக்களை அடக்குமுறைக் கொட்டடிக்குள் தக்கவைப்பதற்கு காலகாலமாக அதற்கு எதிரிகள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த எதிரித்ததத்துவத்தின் தற்போதைய பாத்திரம்தான் இஸ்லாம். இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒன்றிணைய ஒன்றிணைய அதைக் காட்டி ஒடுக்கப்பட்டவர்களை பார்ப்பனியம் இந்து மதமாய் ஒன்றிணைக்கும். அப்படி ஒன்றிணைப்பதற்கு இஸ்லாமியர்கள் சமூகப் பரப்பைக் கடந்து மதரீதியில் ஒன்றிணைந்திருப்பது அவசியம். பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த வேண்டுமென்றால் இந்து மதம் ஒடுக்கி வைத்திருக்கும் மக்கள் இந்து எனும் கூண்டை உடைக்க வேண்டும். அதற்கு இன்னொரு கூண்டு உதவ முடியாது. எல்லாக் கூண்டுக்குள் இருப்பவர்களும் சமூகத்தளத்தில் இணைந்து போராடாதவரை பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது. பார்ப்பனியம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் விரோதி என்பதால், இஸ்லாமியர்கள் மதரீதியில் ஒன்றிணைவது அவர்களுக்கே எதிரான ஒன்றாய் அமைந்திருக்கிறது. எந்த மதமும் உழைக்கும் மக்கள் குறித்து கவலைப்பட்டதில்லை, இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை. அதனால் தான் துலக்கமான இந்த உண்மை விளங்காமல் மதம் மட்டுமே பிரதானப் படுத்தப்படுகிறது.

இனி அவரின் மறுப்புகளுக்கு வருவோம், கருத்தியலாக மதம் மனிதர்களை ஆதிக்கம் செலுத்தும் போதும் மக்களின் செயல்பாடுகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். வெங்காய விலை நூறைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது உழைக்கும் மக்களால் மதவிவகாரங்களில் சிக்கெடுத்துக்கொண்டிருக்க முடியாது. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். மத விளக்கங்களையும், அதன் நுணுக்கங்களையும் கற்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை, ஆனாலும் அவர்கள் மதங்களை ஒதுக்கி விடுவதில்லை. கேள்விபதில் நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள் என்றால், ஒரு விதத்தில் அது ஹீரோயிச மனப்பான்மை, தான் சார்ந்த மதம் மேலோங்கி நிற்கும் நிகழ்ச்சிகளை விரும்புவது இயல்பு. இதை மதத்தை அறிவதில் முஸ்லீம்கள் காட்டும் ஆர்வம் என புரிந்துகொள்ள முடியாது கூடாது. எப்படியென்றால் தவ்ஹீத் ஜமாத்தில் பிரபலமல்லாத யாரோ ஒருவருக்கு, அவரின் நிகழ்ச்சிக்கு மக்கள் விரும்பிச் செல்ல மாட்டார்கள். ஆக அது மதத்தை அறியும் ஆவலல்ல. தவ்ஹீத் ஜமாத் அல்லது அதன் நிகழ்ச்சிகள் பிரபலமடைந்திருப்பதைக் கொண்டு அது மக்கள் மதத்தை அறிய விரும்புகிறார்கள் என்பதாகவும் கொள்ள முடியாது. ஏனென்றால் தவ்ஹீத் ஜமாத்தின் பிரபலம் என்பது முஸ்லீம்களின் மொத்தத்தில் ஒரு சிறுபகுதி தான். பிற இயக்கங்களோடு ஒப்பிடுகையில் அது பலமானது என்பதால் அது ஒட்டுமொத்தமாக மக்கள் மதத்தை அறிய விரும்புகிறார்கள் என்பதை பிரதிபலிப்பதாக கொள்ளமுடியாது.

நான் இப்படிக் கூறுவதால் மக்கள் இஸ்லாத்தின் மீது பற்றற்று இருப்பதாக பொருளல்ல. மதம் என்பது சிந்தித்து ஏற்றுக்கொண்ட ஒன்றல்ல. அது ஒரு மரபாக, கலாச்சாரமாக இருக்கிறது. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட எல்லையைத்தாண்டி சமூக வாழ்வில் செல்வாக்கு செலுத்த முடியாது. ஆனால் இந்த எல்லை ஏனைய மதங்களை விட முஸ்லீம்களில் அதிக பரப்பில் இருக்கிறது. ஏனைய மதப்பிரச்சாரங்களைக் கேட்கும் ஒருவன் ஈர்க்கப்படுவதை விட முஸ்லீம் அதிகமாக ஈர்க்கப்படுகிறான். இது ஏனைய மதங்களில் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆன்மீகத்தையும் சமூகத்தையும் கலப்பதில்லை. மதத்தை விரோதிப்பது ஏனைய மதங்களில் சமூகக் குற்றமாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லீம்களில் அது சமூகக் குற்றமாக பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்சிகளின் இடையே வரும் விளம்பர நேரங்களில் அலைவரிசைகளை மற்றி மாற்றி தாவிச் செல்கையில் ஒரு மத நிகழ்ச்சி வந்தால் அதியும் ஒரு விளம்பரம்போல் தாவிச்செல்ல ஒரு இந்துவுக்கு மனச் சங்கடம் எதுவும் இருக்காது, ஆனால் ஒரு முஸ்லீம் அப்படி தாவிச் செல்ல சங்கடமடைகிறான், அதைக் கவனிக்கிறான். இஸ்லாமிய பிரச்சார உலகம் கைக்கொண்டிருக்கும் அறிவியல் தர்க்க உத்திகள் இதை மேலும் வலுப்படுத்துகின்றன. அவ்வளவுதான். இந்த வேறுபாட்டை முஸ்லீம்களின் அறிதல் ஆர்வம் என்பதைவிட மரபாக முஸ்லீம்களுக்கு இருக்கும் தாக்கம் என்பது தான் பொருத்தமாக இருக்கும். இந்த அடிப்படையைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். இதைத்தான் நண்பர் இஸ்லாத்தின் உண்மைக்குச் சான்று, இஸ்லாம் மட்டுமே கேட்டவுடன் ஈர்க்கும் என்றெல்லாம் புளகமடைகிறார். மதமே எல்லாமும் என இருப்பவர்களிடம் இதுபோன்ற மிகைகள் தவிர்க்கவியலாதவை.

\\அரசு, பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் போது அவர்களின் மத அடையாளமே முன்னிறுத்தப்படுகிறது. இதனாலும்,அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது// இந்த என்னுடைய வாக்கியத்தை அவர் புரிந்து கொண்டதே தவறாக இருக்கிறது. அரசு பயங்கரவாதத்தினால் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுகள் கைக்கொண்டிருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பேதமின்றி அனைவரையும் பாதிக்கிறது. ஆனால் அதிகாரவர்க்கத்தின் பார்வையில் முஸ்லீம்கள் ஒதுக்கப்படுவதினாலும் அவர்கள் மதரீதியில் இணைவது துரிதப்படுத்தப்படுகிறது என்பது தான் நான் குறிப்பிட்டிருப்பது. எடுத்துக்காட்டாக அணமையில் அரசு வங்கிகள் கடன் கொடுக்கத் தகுதியற்ற பகுதிகள், அதாவது கொடுத்தால் திரும்ப வராது பயனுள்ள வழியில் செலவு செய்யப்படாது என பட்டியலிட்டு ஒதுக்கி வைத்த பகுதிகள் பெரும்பாலும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள். நண்பர் மேற்கோளுக்காக எடுத்த வாசகத்தின் முன்னால் உள்ள வாக்கியத்தில் இதை தளிவாக பதிவு செய்திருக்கிறேன், \\இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம்// ஆனாலும் நண்பர் இவர் அறிவோடுதான் எழுதுகிறாரா, விமர்சனம் செய்வதற்கு தகுதியிருக்கிறதா என்றெல்லாம் எகிறிக்குதிக்கிறார். குறைந்தபட்சம் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக்கூடவா விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.

உலக அளவில் முதலாளித்துவம் மக்களை வதைக்கிறது என்பதை உணர்ந்து போராட்டங்கள் பற்பல நாடுகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் முஸ்லீம் எனும் அடிப்படையில் நின்று முதலாளித்துவத்தை எதிர்க்க முடியுமா? வாழ்க்கைப் போராட்டம் என்பது இடஒதுக்கீடு கோசங்களோடு முடிந்துவிடுபவையல்ல. மக்களைக் கொல்லும் முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் மதக்கொள்கைகளை பரிசீலனைக்கு உள்ளாக்குவது அவசியம். ஏழையையும் பணக்காரனையும் நானே அப்படிப் படைத்தேன் எனக்கூவி அந்த ஏற்றத்தாழ்வை தக்கை வைக்கும் ஒரு கொள்கையை நம்பிக்கொண்டு அதற்கெதிராய் எப்படிப் போராட முடியும்?

\\இதன் மூலம் அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் என்பவை இஸ்லாமிய இறையியலாக சித்தரித்து காட்ட முற்படுகிறார். அரபு தேசியவாதம் என்பதும் அரபு மார்க்ஸியம் என்பதும் இஸ்லாமிய இறையியல் கிடையவே கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்// அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் போன்றவை இஸ்லாமிய இறையியலாக நான் சித்தரிக்கிறேனா? பொதுவாக முஸ்லீம்கள் இஸ்லாத்தை விமர்சித்தால் அதை எதிர்த்துச் சொல்லப்படும் முதல் வாக்கியமாக இஸ்லாத்தைப்பற்றிய சரியான அறிதல் இல்லாமல் கூறுகிறார் என்பதுதான் இருக்கும். ஆனால் நாம் என்ன சொல்கிறோம்? எதை விமர்சிக்கிறோம் என்பதை அறிவதற்கு குறைந்தபட்ச முயற்சிகளைக்கூட எடுக்க மாட்டார்கள். அரபு மார்க்சியம் என்றால் என்ன? அரபுலக மண்ணில் ஆன்மீகத்திற்கு இஸ்லாமும் சமூகத்திற்கு மார்க்ஸியமும் என்று இரணடையும் இணைத்து, கடவுட் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் மார்க்ஸிய தத்துவங்களை இஸ்லாத்துடன் இணைத்து உருவானது தான் அரபு மார்க்ஸியம். ஆனால் இவரோ அரபு மார்க்ஸியத்தை இஸ்லாமிய இறையியலாக நான் சித்தரித்துக்காட்டுவதாக கரடி விடுகிறார். அப்படி இணைத்தது பயன்படாது கடவுட்கொள்கையை கடாசிவிட்டு மார்க்ஸியமே இறைய தேவை என்றுதான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். (மார்க்ஸியம் புரட்சிகர மார்க்ஸியம் இரண்டும் ஒன்றுதான், மார்க்ஸியம் அதன் உள்ளடக்கத்தில் புரட்சிகரமானது)

நுழைவாயில் பகுதியை ஒரு வேண்டுகோளுடன் முடித்திருந்தேன், முன்முடிவுகளைத் தவிர்த்து விட்டு வாருங்கள் என்று. ஆனால் இவர் அதை தூக்கிக் கொண்டு வந்ததோடில்லாமல் அதையே கவசமாகவும் காட்டுகிறார்.

63 thoughts on “செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

 1. ///இஸ்லாமும் அதன் சட்டதிட்டங்களும் மட்டுமே சரியானது ஏனைய அனைத்தும் ஏதோ ஒருவகையில் தவறானவை என்பனபோன்ற முன்முடிவுகளை தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான வகையில் வினையாற்ற வாருங்கள் என அனைவரையும் அழைக்கிறேன்///
  .////புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூகத்தேவையாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் இத்தொடர் ///
  “கொம்புத்தேனுக்கு முடவன் ஆசை பட்டது போல் ”
  “சர்க்கஸ் சாகசவீரரை தவிர்த்துவிட்டு சர்க்கஸ் கோமாளியை ரசித்தது போல்”
  “ராணுவ வீரனை கண்டுக்காமல்,கர்கரே போன்ற புண்ணியர்களை கண்டுக்காமல் சூதட்டாக்காரரின் திருமண அன்பளிப்பாக 25 பவுன் வைர நெக்லசை பெற்ற சச்சினின் தேசபற்றை மெச்சுவது போல்”
  “ஓடத்தில் ஓட்டை என்று சொல்லி காகித ஓடத்தை காட்டியது போல் “

 2. ///இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம்.///செப்.16
  sengodi, இது தெரிந்த விசயமே.காரணம் என்னவென்றால் இஸ்லாமியர்களிடம் இஸ்லாமியம் இல்லாததே. இஸ்லாமியர்களிடம் மத உணர்வுகளை விட இன உணர்வுகளே நூறு மடங்கு அதிகம். முல்லாக்கள் தங்களது பிழைப்பை செழிப்பாக்க மக்களை மதத்தின் பால் அழைக்காமல் இன உணர்வுகளை தூண்டி திசை திருப்பிவிடுகிறான்.ஒரு ஏழைப்பெண் அந்நிய மதத்தினருடன் ஓடிவிட்டால் உணர்வுகள் துடித்து ,ரத்தம் கொதித்து கலவரத்தை உருவாக்கிவிடுவான்.அதற்காக உயிரையும் இழந்து விடுவான்.ஆனால் அந்த ஏழைப் பெண் 25 வயது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணி அவன் தான் என்பதை உணர்வது மில்லை.ஆலிம்களும் உணர்த்த போவதுமில்லை.வரதட்சனைக்கே பாத்திகா ஓதி இறைவன் அருள் கேட்டு பிரார்த்தனை பண்ணுபவன் தான் ஆலிம். முஹம்மது நபி[ஸல்]அவர்கள் சொன்ன ஆலிம்களுக்கு உரிய சிறப்பை வயிறு வீங்க பேசுவார்கள். ஆனால் முகம்மது நபி [ஸல்] அவர்கள் ஒரு நாள் கூட வயிறார சாப்பிட்டதில்லை என்பதை சொல்லமாட்டார்.இவர் ஒரு நேரம் கூட வயிறு குறையாமல் சாப்பிடுவதற்கான காரியங்களை செய்து கொள்வார்.நரபலி நாயகர் மோடி ஒரு பக்கம் இருந்தாலும் குஜராத் முஸ்லிம்களிடம் இஸ்லாம் இருந்ததில்லை என்பதும் உண்மை.அங்குள்ள மக்கள் இங்கே சேரி என்று சொல்லுவதை போலவே முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியை கஸ்பா என்கின்றனர்..அங்குள்ள கிராமத்து முஸ்லிம்கள் தர்கா வழிபாடுகள் முதல் சாராயம் காயிச்சுபவர்கள் கந்து வட்டி காரார்கள் என்பதின் அடையாளாமாகவே காணப்பட்டனர்.
  பெண் கல்வியை மறுக்கும் இந்த ஆலிம்கள் கற்ற ஆண்களின் வேலைக்கான இட ஒதுக்கீட்டு போராட்டத்தை கேலி செய்வார்கள்.இவர்களைப் பற்றி நிறைய சொல்லலாம்,.இந்து பாசிச வெறிக்கு பலியாகாமல் இருக்க மார்க்சியம் தேவை இல்லை, தூய இஸ்லாத்தை பின்பற்றினால் போதும்.இந்து பாசிச வெறிக்கு பலியாவது இன உணர்வுள்ள வடஇந்திய முஸ்லிம்களே அதிகம்

 3. //இந்து பாசிச வெறிக்கு பலியாவது இன உணர்வுள்ள வடஇந்திய முஸ்லிம்களே அதிகம்//
  தமிழக் முஸ்லீம்களை காத்துக்கொண்டிருப்பது அல்லா அல்ல. பெரியாரின் அர்ப்பணிபுகள்தான்.

 4. பெரியார் வந்த பிறகு ஐயப்ப பக்தர்களே பெருகிவிட்டர்களே
  பெரியார் பிறக்கும் முன்பே தமிழக மக்களிடம் ஒருவருக்கொருவர் உறவு முறை சொல்லி அழைக்கும் பழக்கம் உள்ளது.வட மாநில முஸ்லிம்களைவிட தமிழக முஸ்லிம்களிடம் இன உணர்வு குறைவு என்பதே காரணம் .அதென்ன காட்டற பி

 5. //வட மாநில முஸ்லிம்களைவிட தமிழக முஸ்லிம்களிடம் இன உணர்வு குறைவு என்பதே காரணம் //

  இன உணர்வு என்பதை விட பெரியாரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் பார்ப்பனர்களின் கொட்டம் அடக்கப்பட்டதே முதன்மையானது. அதுவே RSS தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு தடையாக இருந்துகொண்டுள்ளது.

 6. பெரியார்புராணம் பெரிய புராணத்தைவிட பெரிசு போல !!!

 7. //நுழைவாயில் பகுதியை ஒரு வேண்டுகோளுடன் முடித்திருந்தேன், முன்முடிவுகளைத் தவிர்த்து விட்டு வாருங்கள் என்று. ஆனால் இவர் அதை தூக்கிக் கொண்டு வந்ததோடில்லாமல் அதையே கவசமாகவும் காட்டுகிறார்.//

  ரொம்ப மனசு உடைஞ்சு எதையும் அவசரப்பட்டு செய்திடாதீங்க செங்கொடி.

 8. அதென்ன காட்டற பி ;காட்டாத பி
  நான் சொல்லுவது முஸ்லிகள் தரப்பை;
  பிராமணர் அல்லாத இந்து மக்களிடம் பெரியாரின் விழிப்புணர்வு பிரச்சாரம் மதவெறியை இல்லாமல் ஆக்கியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

 9. அண்ணே பெரியார் யார்ண்ணே ?

  கருப்புச்சட்டைக்காரர்களின் தந்தையாண்ணே ?

 10. பெரியார் பெயரை சொன்னதற்கே இப்படி எரியுதே தமிழ் வெறியனுக்கு. அது ஏன் என்றும் எல்லோருக்கும் தெரியும்.
  //பிராமணர் அல்லாத இந்து மக்களிடம் பெரியாரின் விழிப்புணர்வு பிரச்சாரம் மதவெறியை இல்லாமல் ஆக்கியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.//
  பெரியார் இல்லை என்றால் பார்பன சங்க பரிவார் இங்கும் வேரூன்றி மக்களிடம் வெறியை ஊட்டி இருக்கும்.
  என்ன செய்வது இஸ்லாமிற்கு மத வெறியை தக்க ஒரு பெரியார் இல்லையே. மத வெறியை ஊட்டும் பெரியவர்கள் தான் இருகிறார்கள்.

 11. பெரியார்புராணம் பாடிப்பாடி பெரியவாழ் இராமகோபாலன்களை வளர்த்தீங்க திரு.மட்டு.கொஞ்சம் யோசித்து பேசுங்க‌/எழுதுங்க‌

  திராவிடதேச கருப்புச்சட்டையை விட‌ இந்துதேச‌ காவிச்சட்டை வியாபாரம் சூப்பர்!

 12. //தமிழக் முஸ்லீம்களை காத்துக்கொண்டிருப்பது அல்லா அல்ல. பெரியாரின் அர்ப்பணிபுகள்தான்.//

  பெரியார் குல்லா போடாத முல்லா ! சரியாண்ணே ?

 13. ///புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூகத்தேவையாக இருக்கிறது ///

  புரட்சிகர மார்க்ஸியம் பற்றி ஆதார நூல்களுடன் விளக்கவும்

 14. //மத வெறியை ஊட்டும் பெரியவர்கள் தான் இருகிறார்கள்//

  பெரியாரின் திராவிடதேசவெறி தான் ஆரிய‌பார்ப்பனீய இந்துதேசவெறி பிடிக்கக்காரணமாயிற்று !

 15. கண்ணுக்கு மையழகு!
  கவிதைக்கு பொய்யழகு!!
  (இந்து)மத‌த்திற்கு சாதியழகு!!!

 16. //thamilveriyan,// – எதிலும் வெறிபிடித்தவனுக்கு மூளை மூளை செயல்படாது என்பது சரியாதான் இருக்கு..

  //திரு.மட்டு// – கலாச்சிட்டாராம்…

  பெரியாரின் திராவிட வெறியா.. அரைகுறையாக எதையாவது புரிந்து கொண்டு உலருவதே பலருக்கு வேலையாகிவிட்டது….

 17. matt////என்ன செய்வது இஸ்லாமிற்கு மத வெறியை தக்க ஒரு பெரியார் இல்லையே. மத வெறியை ஊட்டும் பெரியவர்கள் தான் இருகிறார்கள்////
  1995 க்குமுன் நடந்த ஒரு சில இந்து முஸ்லிம் கலவரங்கள் ,முஸ்லிம்களை பொறுத்தவரையில் தற்காப்பு அடிப்படையில் தன் கலவரத்தில் ஈடுபட்டிருப்பார்கள்..அதன் பின்னரே முஸ்லிம்களும் கலவரத்திற்கு காரணமகா விட்ட வேளையில் தான் பீ,ஜே ரத்ததான முகாம் ,இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி எல்லாம் நடத்தி முஸ்லிம்களின் என்ன ஓட்டங்களை மாற்றினார்.

 18. இப்ப கூட பாகிஸ்தான்ல ஒரு கிறித்துவ பெண் ஏதோ வாய்தவறி பேசியதற்கு தூக்கு தண்டனை விதித்திருக்கிறார்கள் .அதை எதிர்த்த பஞ்சாப் மாகாண கவர்னர் சுட்டு கொல்லபட்டிருக்கிறார்.அதென்ன யாருமே இஸ்லாம் குறித்து பேசவே கூடாதா?பேசினால் போடு தூக்குல இல்லன்ன கல்லால அடிச்சி கொல்லுன்னு காட்டுமிராண்டிபோல வாழ்கின்றனர்.நீங்கள் மிரட்டலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து எழுதவும்.அவைகள் கொளைதுகொண்டும் மிரட்டிகொண்டும்தான் இருப்பார்.அதான் அவர்கள் சுபாவம்.சகிப்புத்தனமை இல்லாதவர்கள்.

 19. ஹிந்துஸ்தானி செங்கொடி பாக்கிஸ்தானி பசுங்கொடியுடன் சமர்

  செய்வதெப்போது?

 20. பாக்கிஸ்த்தான் செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது வேறு விஷயம் .
  கம்யுனிசம் ஒழிக என்று சொல்லி முடிப்பதற்குள் ஸ்டாலின் ஆட்சியில் சமாதி கட்டி விடுவார்களாமே ,இது உண்மையா?செங்கொடி

 21. செகுவரா, எஸ். இப்ராஹிம் நீங்க ரெண்டு பேரும் சொல்றதும் உண்மைதான். இஸ்லாமை எதிர்த்தோ, நபி முகம்மதுவை எதிர்த்தோ எதேனும் சொன்னால் பாகிஸ்தானில் மட்டும் கொல்ல மாட்டார்கள். நார்வே, ஸ்வீடன், இந்தியா, பங்களாதேஷ் என்று எல்லா நாடுகளிலும் கொல்வார்கள். கம்யூனிசம் ஒழிக என்று சொன்னால் சீனா, ஸ்டாலினின் ரஷ்யா என்று எல்லா கம்யூனிஸ நாடுகளிலும் கொல்வார்கள். ஆனால் பாருங்கள், எல்லாவற்றிலும் மிகவும் கொடுமையானது என்று நீங்கள் சித்திரம் வரையும் பார்ப்பன பாசிச பயங்கரவாத இந்திய அரசில் மட்டும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். பினாயக் சென்னுக்கும், அருந்ததிராய்க்கும் அவார்ட் கொடுப்பார்கள். தைரியமாக மேடையில் பேசலாம். கருணாநிதி மாதிரி ராமனை கேவல்மாக பேசுபவர்களுக்கு முதல்வர் பதவி கூட கிட்டும்.

  அதனால், இளிச்சவாயனை ஏறி ஏறி மிதித்து உங்களது வீரதீர பராக்கிரமத்தை நன்றாக் காட்டலாம். முகமூடி போட்டுக்கொண்டு இஸ்லாத்தை செங்கொடி திட்டுவது மாதிரி வீரமணியோ கருணாநிதியோ செய்வதில்லை என்பதையும் கவனிக்கலாம்.

  இதெல்லாம் ஒரு விவாதம், இதனை படிக்கவும் ஒரு முட்டாள் கூட்டம்..

 22. அன்பார்ந்த நிலாவே,முஸ்லிம்களாக இருந்தாலும் கம்யுனிஸ்ட்களாக இருந்தாலும் நீங்கள் சொல்லுவது போலவே வெளிப்படையாக செய்து விடுவார்கள்.ஆனால் உங்கள் அபிமான இசம் இருக்கிறதே சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிற இசம்.ரயிலில் ஐம்பது இந்துக்களை கொன்று விட்டு முஸ்லிம்கள் மீது பலி போட்டு ஐயாயிரம் முஸ்லிம்களை கொன்று விடுவது ,பள்ளிவாசலில் குண்டு வைத்து முஸ்லிம்களை கொன்று விட்டு முஸ்லிம்கள் மீது பலி போடுவது ,கோயிலில் குண்டு ,குஜராத்தில் மரத்திலும் குண்டு இப்படி சாமியார்களையும் [பெண் சாமியார் உட்பட] முன்னால் ராணுவம் ,இந்நாள் ரானுவத்துனையோடு சகல பயங்கரவாதமும் பண்ணிவிட்டு முஸ்லிம்கள் மீது பலி போட்டு முஸ்லிம் இளைஞர்களை சிறையில் தள்ளும் சாமார்த்தியம் ,அதாவது ஒரே கல்லில் மூன்று மாங்காய், இந்த இசத்தை விடவா கம்யுனிசமும் இஸ்லாமும் கொடியது? கர்கரேயை கொன்று விட்டு ஓடோடிசென்று அவர் மனைவிக்கு கோடி கொடுக்கும்தையிரியம் யாருக்கு வரும்? தன சக அமைச்சரை கொன்று விட்டு ,இளிச்சவாயன் தீவிரவாதி முஸ்லிம்களை கைது செய்யும் வஞ்சகத்தனம் யாருக்கு வரும்? நாடாளுமன்ற தாக்குதல் நடத்தியது யார்?கர்கறேயிடம் சிக்கிய ஆதாரங்கள் மர்மமாய் மரணம் அடைந்தது எப்படி? செத்த மாட்டை அறுத்த ஐந்து தலித்கள் முதல் காமராஜ் .வள்ளலார் வரை உங்கள கதை எங்கெல்லாமோ பாய்கிறதே ,
  அன்று நாங்கள் மட்டுமே இந்துக்கள் உயர் ஜாதி ,எங்களின் தெருக்களில் நடக்ககூட உங்களுக்கு தகுதி இல்லை ,;இப்போது இந்துக்களே ஒன்று திரளுங்கள் ,அன்று “பிராமணாள் கபே”யில் ,பஞ்சமர் நீங்கலாக போர்ட் [பள்ளர்,பறையர் ,சானார்,சக்கிலியர்,துளுவர்] இன்று காசு கொழிக்கும் நாடார் சமுதாயத்தினரின் வீடுகளுக்கு ஓடோடி சென்று உயர் பட்டாச்சாரியாக்கள் அனைத்து வகை பூஜை செய்யும் பாங்கு இதெல்லாம் யாருக்கு வரும் ?. முஸ்லிகளுக்கு எதிராக கலவரம் செய்ய கீழ் ஜாதிகாரார்களை இந்து என்ற பெயரில் தூண்டிவிட்டு ,தங்களது பழைய தீண்டதகாதவர்களும் இந்நாள எதிரிகளையும் சாகடித்து வேடிக்கை பார்க்கும் தந்திரமெல்லாம் யாருக்கு வரும்?

 23. இந்தியர்களான நாமே தேசப்பற்று இல்லாம சண்டை போட்டுக்கிட்டு இருந்தா (செங்கொடி*இபுராஹிம்*நிலா)செங்கொடியின் சிறகொடிந்து எமக்கு நேரம் போக வழியில்லாமல் போயிடுமோ ?

 24. //இதெல்லாம் ஒரு விவாதம், இதனை படிக்கவும் ஒரு முட்டாள் கூட்டம்.//

  இவ்வளவு நாளா வரிக்கிவரி பாக்கி இல்லாம ராதூக்கமில்லாம பூஸ்ட் குடித்து பரிட்சைக்கு படிக்கிறமாதிரி படிச்சுண்டிருந்தேன்!

  கடைசியா படிச்ச என்னையே முட்டாள்ன்னு சொல்றிங்களே?

  செங்கொடிசார் இப்படியெல்லாம் பேசவிட்டீங்கன்னா ஊத்திமூடுறமாதிரி ஆயிடும் பார்த்துக்கோங்கன்னா!

 25. /முகமூடி போட்டுக்கொண்டு இஸ்லாத்தை செங்கொடி திட்டுவது மாதிரி வீரமணியோ கருணாநிதியோ செய்வதில்லை என்பதையும் கவனிக்கலாம்/

  அப்ப செங்கொடியை குல்லா போட்டுன்டு முல்லாக்களுடன் சேர்ந்து நோன்புக்கஞ்சி குடிக்க வரச்சொல்றீங்களா?

 26. //(மார்க்ஸியம் புரட்சிகர மார்க்ஸியம் இரண்டும் ஒன்றுதான், மார்க்ஸியம் அதன் உள்ளடக்கத்தில் புரட்சிகரமானது)//

  இப்படி தினக்கூலிகளை புரட்சி போராட்டமுன்னு உசுப்பேத்தி பணக்காரனோட மோதவிட்டு இருக்கிற வேலையயும் ஜப்பான் ரொபட்டை வைத்து செய்ய விட்டுருவீங்க போல தெரியுதே!

 27. அன்புள்ள இப்ராஹீம்,

  உங்களது பதிலை பார்த்து குழம்பிப்போய் யார் எழுதியது என்று பார்த்தேன். செங்கொடிதான் எழுதியிருப்பார் என்று நினைத்தல் இப்ராஹிம். என்ன ஒற்றுமை. இந்துக்களை கொண்று புதைப்பதற்கு செங்கொடியும் பச்சைக்கொடியும் ஒன்றுதான் என்று அறிந்தவர்கள்தானே இந்துக்கள்.

  //அன்பார்ந்த நிலாவே,முஸ்லிம்களாக இருந்தாலும் கம்யுனிஸ்ட்களாக இருந்தாலும் நீங்கள் சொல்லுவது போலவே வெளிப்படையாக செய்து விடுவார்கள்.//

  முஸ்லீம்கள் அப்படிபப்ட்ட காட்டுமிராண்டிகள்தான், மாற்றுக்கருத்து கொண்டவர்களை கொன்று புதைப்பவர்கள்தான், அமைதி மார்க்கம் எனப்தெல்லாம் பீலா என்று ஒப்புகொண்டதற்கு நன்றி. அடுத்து செங்கொடியும் ஒப்புகொண்டால் நல்லது.

  //ரயிலில் ஐம்பது இந்துக்களை கொன்று விட்டு முஸ்லிம்கள் மீது பலி போட்டு ஐயாயிரம் முஸ்லிம்களை கொன்று விடுவது //

  அய்யா இப்ராஹிம். ரயிலில் ஐம்பது இந்துக்களை கொன்றது இந்துக்களா? கோத்ராவில் ரயிலில் கொலை செய்தது இந்துக்கள்தான் என்ரு இதுவரை நவீன முஸ்லீம் லீக்காக ஆகிவரும் காங்கிரஸோ அல்லது ஏற்கெனவே இருக்கும் முஸ்லீம் லீக்குகளோ கூட சொல்லவில்லை. நீங்கள் ஒரு புதுக்கதையை கிளப்பி உண்மையாக்க முயற்சிக்கிகிறீர்கள் போலிருக்கிறது. செல்வராஜ் கொலையையும் இந்துக்கள்தான் செய்தார்கள் என்ரு ஆரம்பித்து டைரக்ட் ஆக்‌ஷ்ன் டே என்று முஸ்லீம்கள் இந்துக்களை கொன்று குவித்ததும் இந்துக்களே கொன்று குவித்துகொண்டார்கள் என்றும் பேசுங்கள். பக்கத்தில் ஏதாவது பைத்த்யக்கார ஆஸ்பத்திரி இருக்கும்,. எதற்கும் போய் மருத்துவரை பாருங்கள்.

  //முஸ்லிம்கள் மீது பலி போட்டு முஸ்லிம் இளைஞர்களை சிறையில் தள்ளும் சாமார்த்தியம் ,அதாவது ஒரே கல்லில் மூன்று மாங்காய், இந்த இசத்தை விடவா கம்யுனிசமும் இஸ்லாமும் கொடியது? //

  அய்யா இப்ராஹிம், முஸ்லீம்களை கொன்றால் அவர்கள் தண்டனை அடையவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுகருத்தில்லை. அஸீமானந்தா செய்திருந்தால் நிச்சயம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் நிரூபிக்கப்பட்ட மதானி, நிரூபிக்கப்பட்ட 26/11 மும்பை கொலைகள், ரயிலில் குண்டு வைத்துவிட்டு பாகிஸ்தானில் பதுங்குவது என்பதெல்லாம் செய்துவிட்டு பிறகு அவர்களை மனித உரிமை, சிறுபான்மை உரிமை அவர்களை விட்டுவிடுங்கள் என்ரு ஊர்வலம் போவது என்ன இந்துக்களா? நேற்றைக்கு பாகிஸ்தானில் ஒரு கவர்னரை கொலை செய்த காவலாளியை தண்டிக்கக்கூடாது என்று லட்சக்கணக்கான பாகிஸ்தானிகள் ஊர்வலம் போயிருக்கிறார்கள். அதெப்படி நீங்கள் மைனாரிட்டியாக இருந்தாலும் முஸ்லீம் குற்றவாளிகளை தண்டிக்கக்கூடாது, மெஜாரிட்டியாக இருந்தாலும் முஸ்லீம் குற்றவாளிகலை தண்டிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்?

  //கர்கரேயை கொன்று விட்டு ஓடோடிசென்று அவர் மனைவிக்கு கோடி கொடுக்கும்தையிரியம் யாருக்கு வரும்? தன சக அமைச்சரை கொன்று விட்டு ,இளிச்சவாயன் தீவிரவாதி முஸ்லிம்களை கைது செய்யும் வஞ்சகத்தனம் யாருக்கு வரும்? நாடாளுமன்ற தாக்குதல் நடத்தியது யார்?கர்கறேயிடம் சிக்கிய ஆதாரங்கள் மர்மமாய் மரணம் அடைந்தது எப்படி? //

  பரிதாபமாக இருக்கிறது. திக்விஜய் சிங்கும், காங்கிரசும் உங்களை நன்றாக ஏமாற்றுகிறார்கள். இப்படியெல்லாம் காங்கிரஸ் பேசி உங்கள்து வாகுக்களை பெற முயற்சி செய்கிரார்கள்.
  காங்கிரஸ் தலைவர்கள்தானே இதெல்லம பேசுகிரார்கள்? அதுதானே ஆட்சியில் இருக்கிறது? அவர்கள் ஏன் சட்டப்பூர்வமாக மோடியை தண்டிக்கக்கூடாது?

  //. முஸ்லிகளுக்கு எதிராக கலவரம் செய்ய கீழ் ஜாதிகாரார்களை இந்து என்ற பெயரில் தூண்டிவிட்டு ,தங்களது பழைய தீண்டதகாதவர்களும் இந்நாள எதிரிகளையும் சாகடித்து வேடிக்கை பார்க்கும் தந்திரமெல்லாம் யாருக்கு வரும்?
  //

  மீண்டும் பரிதாபப்படுகிறேன். தலித்துகள் எல்லாம் மடையர்கள். பார்ப்பனர்க் சொல்கேட்டு ஆடுகிரார்கள் என்ரு நினைக்கிரீர்கள்.
  இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு வந்தால், மதுரை வீரன் கோவிலும், தெருக்கோடி மாரியம்மன் கோவிலையும் உடைக்காமல் விட்டுவிடுவீர்களா?

  பார்ப்பனன் கோவிலில் பூஜை செய்பவன் மட்டும்தான். அவன் எல்லோருக்கும் ஒரு பூஜாரி அவ்வளவுதான். அவனை காட்டி இந்துக்களை வெருப்பேற்றி இந்து சமுதாயத்தை உடைக்கும் உங்களது முயர்சிகள் வெகுகாலமாக நடந்துவருகின்றன. நடத்துங்கள். ஆனால் இந்துக்கள் ஏமாளிகளல்ல.

 28. நவீன இந்து தேசவரலாற்றுச்சிற்பி நிலா அவர்களே சற்று போரடிக்கும்போது காமெடி டைம் போல வருக வருக ! உமது இந்துத்வவெறி சிறங்கு கைகளால் இஸ்லாமியர்களைச் சற்று சொரிக !

 29. ///இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு வந்தால், மதுரை வீரன் கோவிலும், தெருக்கோடி மாரியம்மன் கோவிலையும் உடைக்காமல் விட்டுவிடுவீர்களா?///

  20 வருசமாகியும் பாபர் மசூதி இடிச்ச‌ கூலி யார்
  தரப்புலயிருந்தும் வரலையேன்னு நம்ம இந்து நிலா கோவமாயிருக்கு போல!

 30. கலியுக மனுரூப அவதார இந்து நிலாவே,

  இந்துன்னா யாருன்னு சற்று அடையாளத்தோட சொன்னீங்கன்க அவங்க கிட்ட நாட்டை ஒப்படைச்சுட்டு ராமராஜ்ஜியத்துல ஒரு மூலையில ஒதுங்கிக்கொள்வோம்லா!

 31. பீலா விடும் நிலா.

  இதைக் கொஞ்சம் படியேன்.

  http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp

  என்னா நிலா, அதான் முழுசா நனைஞ்சாச்சுல்ல அப்புறம் எதுக்கு இன்னும் வீராப்பு? நெஞ்ச நிமித்தி ஆமாண்டா நாங்கதான் செஞ்சோம்னு வீரமா சொல்லுவீங்களா அத்த வுட்டுட்டு இன்னும் கோழை மாதிரி உடான்சு உட்றீங்களே!
  டேக் இட் ஈசி. கரசேவையே கர்மம் செய்யும். ஜெய் ஹிந்த்!

 32. nila ///முஸ்லீம்கள் அப்படிபப்ட்ட காட்டுமிராண்டிகள்தான், மாற்றுக்கருத்து கொண்டவர்களை கொன்று புதைப்பவர்கள்தான், அமைதி மார்க்கம் எனப்தெல்லாம் பீலா என்று ஒப்புகொண்டதற்கு நன்றி. அடுத்து செங்கொடியும் ஒப்புகொண்டால் நல்லது////
  நாங்கள் காட்டு மிரான்டிகள்தான்.செத்த பசுமாட்டை அறுத்த தலித்களை கொன்றுகுவித்த நீங்கள் வள்ளாலாறை கொன்ற நீங்கள் காருண்யா கடல் தான்.காஞ்சி பெரியவாள் கொலைவழக்கில் சிக்கியிருப்பதேல்லாம் காருண்யத்தின் வடிவமே .நிலாவே |முஸ்லிம்களில் சிலர் பொறுமை இழப்பதற்கும் அமைதி மார்க்கத்தோடு சம்பந்தபடுத்தி தங்களது அர்த்தமற்றை கோபத்தை தீர்த்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.இப்போதைய முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுகள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் மதத்தினால் வந்த தீவிர வாதாங்களா? எங்கே ஒன்றை சொல்லுங்கள்.
  ///இந்துக்களை கொன்று குவித்ததும் இந்துக்களே கொன்று குவித்துகொண்டார்கள் என்றும் பேசுங்கள். பக்கத்தில் ஏதாவது பைத்த்யக்கார ஆஸ்பத்திரி இருக்கும்,. எதற்கும் போய் மருத்துவரை பாருங்கள்///
  மோடியின் சக அமைச்சராக இருந்த பாண்ட்யாவை கொன்றுவிட்டு முஸ்லிம்கள் மீது வழக்கு போட்ட மோடியின் பக்த நிலாவே ,அமைச்சர் பாண்ட்யாவின் தந்தை கொடுத்த பத்திரிக்கை பேட்டியில் தான் ,தனது மகனைக் கொன்றது மோடி என்று கூறினார் மேலும் வீட்டுக்கு வந்த அவரை விரட்டினார்.அவர் அந்த காரணத்திற்க்காக மோடியை எதிர்த்து மணி நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். மேலும் ரயில் கொளுத்தியது பற்றி நீவிர் அப்பாவியாக காட்டிகிட்டாலும் உண்மையை ஒருநாளும் மறைக்க முடியாது.தெகல்க்கா பீ ஜெ பியின் தலித் தலைவரை பற்றி தெகல்க்கா கூறிய ஊழல் புகாரை ஏற்று கொண்டு உடன் அவரை பதவியிலிருந்து நீக்கிய இந்துத்தவா , மோடி ரயில் எரிப்பை ஒரு நாளும் ஒப்பு கொள்ளாது.சாதாரண பிரச்சனைகளிலே விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் இந்துத்துவா; ராகுல் காந்தி சங்க பரிவார் பற்றி கூறிய கருத்தையும் காங்கிரஸ் மாநாட்டில் நிறை வேற்றிய தீர்மானம் பற்றியும் அப்படிஅடக்கி வாசிப்பதை பார்த்தாலே தெரிய வில்லையா?சமிபத்தில் திக் விஜய் சிங் டெலி போன் ஆதாரம் கொடுத்தபோது மவுனியாகி விட்டதை புரிய வேண்டாமா? நாடாளுமன்ற தாக்குதல் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் ஏற்கனவே பொட சட்டத்தில் உள்ளே இருந்த அப்சல் குருவைபீ.ஜே .பீ அரசு விடுதலை செய்தது ஏன் என்று நாடாளுமன்ற விவாதத்தில் திக்விஜைசிங் கேட்டதுடன் அப்சல் குரு விஷயம் அடங்கி போய்விட்டதே ஏன்?
  ///நிரூபிக்கப்பட்ட 26/11 மும்பை கொலைகள்,///
  ஹேட்லி யை இந்தியாவில் கொண்டு வந்து விசாரித்தால் அமெரிக்காவும் பாக்கிஸ்தானும் கூட்டா?இஸ்ரேலும் மோடியும் கூட்டா?என்பது புரியும் ,மும்பை தாக்குதல் நடந்த போது தாஜ்மகால் ஓட்டலுக்கு அனுப்பப்படவேண்டிய கர்கரே வீடி ஸ்டேசனுக்கு அனுப்பவேண்டிய காரணமென்ன ?மும்பை போலிஸ் கமிசனரிடமிருந்து ,மகராஷ்டிர டி.ஜி.பி, பொறுப்பை எடுத்து கொண்டது ஏன்?என்று கொல்லப்பட்ட வீரர் களின் மனைவியர் தகவல் அறியும் சட்டத்தில் கேட்டதற்கு பதிலளிக்க முடியாமல் திணறுவது ஏன்?
  பாகிஸ்தானில் நடந்த சம்பவத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்கள் மத கொள்கையை விட இன உணர்வையே முதன்மையாக கொண்டவர்கள்.ஆனால் கிருஸ்ணா கமிசனின் மும்பை கலவரம் பற்றிய அறிக்கையை செயல் படுத்த முடியாமல் இருக்க காரணம் என்னவென்று தெரியுமா?
  ///இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு வந்தால், மதுரை வீரன் கோவிலும், தெருக்கோடி மாரியம்மன் கோவிலையும் உடைக்காமல் விட்டுவிடுவீர்களா///
  மதுரை வரை தன்படையை அனுப்பிய கொடுங்கோலர் அவுரங்கசீப் ஆட்சியிலே இடிக்கபடவிலையே மலேசியாவில் ,இந்தோனேசியாவில் வீதிக்கு வீதி இந்து கோயில்கள் உள்ளதே ,அங்கெல்லாம் இதுவரை ஒரு செங்களைக்கூட பெயர்த்ததாக செய்திகள் கிடையாதே .
  ///தலித்துகள் எல்லாம் மடையர்கள். பார்ப்பனர்க் சொல்கேட்டு ஆடுகிரார்கள் என்ரு நினைக்கிரீர்கள்.///
  எத்தனை காலம் அவர்கள் எயக்கப்பட்டார்கள் என்பதை அறிய வில்லையா?கூட்ட,கூட்டமாக அவர்களின் முன்னோர் இஸ்லாத்தை[எங்கள் முன்னோர்] ஏற்காவிட்டால் இன்னும் தமிழ்நாட்டில் ஹரியானாவில் செத்த மாட்டை அறுத்தவர்களின் கதைதானே

 33. அன்புள்ள இப்ராஹிம், மற்றும் போலி இந்தியர்களுக்கு,

  பாகிஸ்தானில் மத உணர்வை விட இன உணர்வை முக்கியமாக கொண்டவரகள் என்று பொய் சொல்லுகிறீர்கள். அப்படியே வைத்துகொண்டாலும், ஏன் இஸ்லாம் அவர்களிடமிருந்து இன உணர்வை ஆயிரம் வருடங்களாக நீக்கவில்லை என்று சொல்லமுடியுமா?

  அங்கே இருப்பது இஸ்லாமிய தீவிரவாத மத உணர்வுதான். அங்கே ஒரு கிறிஸ்துவ பெண் தொட்டுவிட்டாள் என்பதற்காக அவள் நபிகளை கேவல்மாக பேசினாள் என்று பொய் சொல்லி அவளை சட்டப்படி கொல்வதற்கு முனைந்திருக்கிறார்கள்.

  நபி முகம்மதுவை யாரும் திட்டாமல் பாதுகாக்கும் சட்டம் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யபப்டுகிறது என்று சொன்னதற்காக பஞ்சாப் கவர்னர் அவரது பாடிகார்டாலேயே கொலை செய்யப்படுகிறார். அந்த பாடி கார்டு மீது ஆயிரக்கணக்கான வக்கீல்கள் பூமாரி பொழிகின்றனர். அந்த பாடிகார்டை தண்டிக்கக்கூடாது என்ரு லட்சக்கணக்கான பாகிஸ்தானி முஸ்லீம்கள் ஊர்வலம் போகிறார்கள். இதில் எங்கே இன உணர்வு இருக்கிறது?
  இஸலாமில் இருக்கும் தீண்டாமையும், இஸ்லாமில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமும்தான் தெரிகிறது.

  அவுரங்க்சீப்பை சிவாஜி துரத்தி துரத்தி அடிக்கவில்ல்லை என்றால், மாரியம்மன் கோவில்களும், மதுரை வீரன் கோவில்களும் நிச்சயம் உடைக்கபப்ட்டிருக்கும்தான். காசி விசுவநாதர் ஆலயத்தையே உடைத்து ஞானவாபி மசூதி கட்டுபவன், மாரியம்மன் கோவிலை விட்டுவிடுவானா?

  கொஞ்சம் வடக்கே சென்று பாருங்கள். தமிழ்நாட்டில் இருப்பது போன்று ஊருக்கு ஊர் இருக்கும் கோவில்கள் அங்கே இருக்காது. எல்லா கிராமக்கோவில்களும் முஸ்லீம் ஆட்சிகளின் போது உடைக்கபப்ட்டுவிட்டன. பெரிய கோவில்களான ராமர் கோவில் மதுரா கோவில்கள் மிகுந்த பாதிபப்டைந்தன.


  வடக்கே அவுரங்கசீப்புக்கு பயந்து சாவுக்கு பயந்து கூட்டம் கூட்டமாக ஜாதி சாதியாக இஸ்லாமுக்கு மதம் மாறினார்கள். அதனால்தான் அஹ்மது பட்டேலையும், மோஹ்சினா கித்வாயையும் அங்கே பார்க்கிறீர்கள். ஜாதியையும் சேர்த்துகொண்டேதான் அங்கே முஸ்லீம். தலித்துகள் அங்கேயும் முஸ்லீம் ஆகவில்லை. ஏன் பாகிச்தானில்கூட தலித்துகள் முஸ்லீம் ஆகவில்லை. இன்று பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் எல்லோரும் தலித்துகள்தான்.

  தமிழ்நாட்டு கதை வேறு. நீங்கள் யாருமே தமிழர்கள் இல்லை. அரபியாவிலிருந்து மரக்கலத்தின் வழியே வந்தேறியவர்கள்தான் நீங்கள். இலங்கை மரைக்காயர்கள் அபப்டித்தான் சொல்லிகொள்கிறார்கள். நீங்களும் அபப்டியே.

  இந்தியாவில் தலித்துகள் முஸ்லீம்களை விட நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சச்சார் கமிட்டியே சொல்லும்போது ஏன் தலித்துகள் முஸ்லீமாக ஆகப்போகிறார்கள்?

 34. நிலாவின் கைச்சிறங்கு சொறிக்கு ஒரே மருந்து அரிதாரங்களின் இராமராஜ்ஜியம் தவிர வேறெதுவுமில்லை.

  அங்கிள் அக்பரை ஏன் விட்டுட்டீங்க இராம.நிலா அவர்களே!

 35. போலி இந்தியரே,
  என் கைக்கு சிறங்கு கொடுத்ததே உங்களைப் போன்ற அரபிய வந்தெறிகள்தானே? அதனை உங்களிடம் சொறியாமல் பிறகு யாரிடம் சொறிவது?

  இராமராஜ்ஜியம் என்றால் என்ன? அரசன் தன் நலனுக்காக ஆளாமல், குடிமக்களுக்காக தனது சொந்த சுகங்களையும் தன் இனிய மனைவியையும் விட்டுக்கொடுக்கும் அரசனாக இருக்க வேண்டும் என்பதுதான் ராமராஜ்ஜியம்.

  பொம்பளை ஆசைக்காக 22 கல்யாணம் பண்ணிக்கொள்வதும், தனக்கு பொண்டாட்டிகள் அடங்கி இருக்கவேண்டும் என்பதற்காக கடவுளின் பெயரை ஆபாசமாக பயன்படுத்திகொள்வதும் அல்ல.

  பாவம் அதெல்லாம் உங்களுக்கு எங்கே புரியப்போகுது? ராமனை ஜட்டியில் போட்டு சொறிந்துகொள்ளும் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத கும்பலுக்கு முன்னால் எதற்கு இதெல்லாம்? கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

 36. நிலா,சிவலிங்கம் வேறு .சிவன் வேறா?
  ///தன் இனிய மனைவியையும் விட்டுக்கொடுக்கும் அரசனாக இருக்க வேண்டும் என்பதுதான் ராமராஜ்ஜியம்//// இப்போது ராமா ராஜ்ஜியம் அமைக்கப்போவதாக சிலர் சொல்ல்லுகிரர்களே அவர்களெல்லாம் தங்களது இனிய மனைவிகளை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ச்சே ,வேண்டாம் ராமராஜ்யம் சோனியா ராஜ்ஜியம் போதும்.

 37. நீர் ஆரியருமல்ல,

  நான் அரபியுமல்ல,

  நாம் திராவிடனுமல்ல,

  நாம் அனைவரும் இந்திய‌னுமல்ல,

  சகோதரா நாம் மனிதன்,

  நம்மை விலங்கிட்டுவைத்திருப்பவர்கள் சூட்டிய அடிமைப்பெயர்,

  நம்மை ஆள நம் ஏஜமானர்கள் நமக்கு உடன்படாதிட்டப்பெயர்,

  அன்பு நிலாவே, அறிவு நிலாவைப்போன்று பிரகாசமனது.

  வெறியேற்றும் எந்நெறியும் நமக்கு ஆகாது!!!

 38. இராம.நிலாவுக்கு

  கைச்சிறங்கு முத்தி

  கையையே எடுக்கும்

  சூழ்நிலை வந்ததுவிட்டது.

  அந்தோ பரிதாபம்!!!

 39. நிலா, on ஜனவரி11, 2011 at 2:30 AM said

  தந்தை தசரதன் மற்றும் இராமன்:

  பொம்பளை ஆசைக்காக 22 கல்யாணம் பண்ணிக்கொள்வதும்,

  தன் இனிய மனைவியையும் விட்டுக்கொடுக்கும் அரசனாக இருக்க வேண்டும்

  என்பதுதான் ராமராஜ்ஜியம்

 40. கடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு

  அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல் குர்ஆன் மற்றும் பைபிள் குறிபிடுகின்றது இந்த நிகழ்வை விஞ்​ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்​ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research -NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த சம்பவம் விஞ்​ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவித்துள்ளது இவற்றை கம்ப்யூட்டர் கிராபிக் மூலம் விளக்கியுள்ளனர்.

  இதில் இவர்கள் 12 மணித்தியாலங்கள் 63 மைல்கள் வேகத்தில் வீசும் காற்று இரண்டு மீட்டர் ஆழமுள்ள தண்ணீரை புறம் தள்ளகூடியது என்றும் நான்கு மணித்தியாலங்களுக்கு பாதையையும் ஏற்படுத்தும் என்பதை காட்டுகின்றனர் இந்த ஆய்வுக்கு மாற்று கருத்துகள் இன்னும் வெளிவரவில்லை.

  மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

  இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” அல் குர்ஆன்

 41. //ராமனை ஜட்டியில் போட்டு சொறிந்துகொள்ளும் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் //

  ராமலிங்கமென்றாலும்

  சிவலிங்கமென்றாலும்

  கோமணத்து ஆண்குறியே,

  அதைச்சொரிய

  சிறங்குக்கை போதுமே,

  மற்றெதுமில்லை பராபரமே!!!

 42. ஜெகதீஸ்வரன், on ஜனவரி1, 2011 at 10:20 AM said:
  புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!.

  புத்தாண்டுன்னா

  என்னாண்ணே?

  எப்பண்ணே?

  தையா தக்கிடதும் சித்திரயான்னு

  முத்தமிழறிஞர் மூதறிஞர்கிட்ட

  சட்டுன்னு கேட்டு சொல்லுங்கண்ணெ!

  தான் பிறந்த நாள தமிழ்ப்புத்தாண்டுன்னு

  செம்மொழியார் அறிவிக்கப்போறாரு!!!

 43. போலி இந்தியரே,
  பக்கத்தில் அஹ்மதியா மசூதி எதாவது இருந்தால் உங்கள் சிறங்குகளை போக்கிக்கொள்ள தற்கொலை குண்டாக ஆகுங்கள்.

  அதுதான் அல்லா மாமா 72 கன்னியரை தரார் என்று சொல்லுறாங்களே.. சீக்கிரம்.

  ராமராஜ்ஜியமெல்லாம் உங்களுக்கு எதுக்கு? மூளை வலிக்கும். பாவம் நீங்கள்.

 44. என்ன அண்ணே!

  பேச்சு பேச்சா இருக்கனும்

  சும்மா பேஜார் ஆகக்கூடாது!

  ஆட்டத்துக்குன்னு வந்துட்டா

  அழக்கூடாதுண்ணே!

  சிறங்கு

  உடம்பு புண்ணாகிடப்போவுது

  சரி அண்ணன் பால்தாக்கரே

  எப்படி இருக்காருண்ணு

  பதில் போடுங்கண்ணே!

 45. இராம.நிலாவே!

  இந்தியா பருவமடைந்து

  வயது அருபத்திரண்டாகியும்

  அமைக்கமுடியலையே

  இராமராஜ்ஜியம்!!

  ஏன்? யார் சதி ?

 46. நிலா ,தில்லு துரையின் மறுபிறவி என்று நினைத்தேன்.ஆனால் சங்கரின் திருவிளையாடல் போல் தோணுதே

 47. சங்கர காணோமேன்னு பார்க்கிறீங்களா ?

  கம்பியை நீட்டி/எண்ணுறார் போல!

 48. வந்தேறி இப்ராஹிம்,

  உங்களைக் கூட நான் ஒரிஜினல் அரபு பின்லாடன் அடிவருடி என்றுதான் நினைத்தேன். நீங்களோ வந்தேறி உளறுவய் பிஜேவின் அடிவருடியாக இருக்கிறீர்கலே.

 49. இந்தியர்களான நாமே

  தேசப்பற்று இல்லாம

  சண்டை போட்டுக்கிட்டு இருந்தா!

  (இபுராஹிம்*நிலா)

  PAKISTAN ZINDABAD !!!

 50. தேசப்பற்றை பற்றி பேசற “இந்தியரை” பாருங்க்பப்பா… அடேங்கப்பா…
  நீங்க யாருங்க? செங்கொடி போல சீன அடிவருடியா? இப்ராஹிம் போல அரபிய அடிவருடியா?

 51. செங்கொடி அவர்களுக்கு
  நான் இத்தளத்திற்கு புதியவன். “கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” என்ற தொடர் கட்டுரையின் 29 பகுதிகளையும், அதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் வைக்கப்பட்டடுள்ள மறுப்புகளையும் படித்தேன்.
  எங்கள் இஸ்லாமியர்கள் கொடுத்துள்ள மறுப்புகள் வியக்க வைக்கிறது இதைவிட சிறப்பானதொரு விளக்கத்தை அல்லாஹ்வால் கூட தரமுடியாது.
   மொழிபெயர்ப்புகளில் பிழை
   குர்ஆனை மீண்டும் நன்கு வாசிக்கவும்
   onlinepj விற்கு வரவும்/ பார்வையிடவும்
   நேரடி விவாதத்திற்கு வரமுடியுமா?
  இத்தகைய மாபெரும் விளக்கங்களுக்குப் பிறகும் நீங்கள் “கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே” புகுந்து மற்ற முஸ்லீம்களையும் அழைத்துச் செல்வது சரியல்ல, இக்கட்டுரையைத் தொடர்வது முறையல்ல. (எங்க பொழப்புல மனண்ணப் போடதப்பா…!) உங்களுக்கு புரியவைப்பதற்காக அவ்விளக்கங்களை மீண்டுமொரு முறை காண்போம்
  மொழிபெயர்ப்புகளில் என்ன பிழை? எப்படி பிழை? என்பதைப்பற்றி நாங்கள் எதுவும் விளக்கமாட்டோம் ஏனென்றால் குர்ஆன்வசனங்களின் மிகச்சரியான பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியாத புத்தகத்தை மனிதர்களுக்கு வழங்குவதின் பயன் என்னவென்று நீங்கள் கேட்கக்கூடாது. அப்படிக் கேட்பவன் அல்லாஹ்விடமும் அவன் தூதர்களிடமும் நேரடியாகப் போர்புரிபவனாகக் கருதப்படுவான். (மதவாதிகள், இப்படித்தான் இத்தனை காலத்தையும் ஓட்டினார்கள், இப்பொழுதும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம் இனிமேலும் ஓட்டுவார்கள்- இது தொழில் ரகசியம்)
  குர்ஆனைத் திரும்பதிரும்ப வாசிப்பதால், அவர்களுக்கு மேலும் மேலும் குழப்பம் மட்டுமே அதிகரிக்கும் நாங்கள் விளக்கம் தரவும் மாட்டோம் (வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறோம்? தெரிந்தால்தானே சொல்லமுடியும்…?). அப்படியே விளக்கினாலும் கீறல் விழுந்த இசைத்தட்டு போல முன்னர் கூறியதையே கூறுவோம். இறுதியில் விடைதெரியாமல் வெறுத்துப்போய் அவர்களாகவே கேள்வி கேட்பதைக் கைவிட்டுவிடுவார்கள் பிறகென்ன நாங்கள் வெற்றி பெற்றதாக தண்டோர அடித்துக் கொள்வோம்.
  நபிகளார் முஹம்மது(ஸல்) அவர்களையோ, அவருக்கு வெளிப்பட்ட வஹீ அற்புதத்தையோ நாங்கள் காணும் பாக்கியத்தை பெறவில்லையே என்ற எங்களது பேராவலை தீர்க்கவே, தமிழ்மக்களுக்காக மடிக்கணிணியுடன் ஒரு புதிய சிறப்புத்தூதரை அல்லாஹ் அனுப்பியுள்ளான். அவர்தான் பீஜே (ஸல்).
  அவருக்கு வெளிப்படும் ஞானத்தின் வேகம் தங்க முடியாமல் online pj பலநேரங்களில்off-line pj வாக இருக்கிறது. முரண்பாடான உங்களது கேள்விகளுக்குபதில் கிடைக்காததற்கான காரணம் பீஜே (ஸல்) அவர்களின் ஞானத்தை அதேவேகத்ததுடன் கையாளும் எந்த வகையான PROCESSORS-ம் உலகில் இன்றுவரை உருவாக்கப்படவில்லை. எனவேதான் நாங்கள் இணையதள எழுத்து விவாதங்களை விரும்புவதில்லை பங்கெடுப்பதுமில்லை. மேலும் முரண்பாடான உங்களது கேள்விகள் எங்களது தளங்களில் இடம்பெறாமல் போவதற்கான காரணம் சைத்தானின் சூழ்ச்சியாகும். (மற்றொரு தூதரான ஜாகீர் நாயக் (ஸல்) அவர்களுக்கும் இதே பிரச்சனைதான்)
  இந்த உண்மை புரியாமல் எங்களை நேர்மையற்றவர்கள், கண்ணியமற்றவர்கள் என எள்ளிநகையாடுபவர்களைக் கண்டித்து எங்களது இயக்கம்சார்பில் முற்றைப் போராட்டம், தர்ணா, சாலைமறியல் சிறைநிரப்பும் போராட்டம் போன்ற போராட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடவுள்ளோம் (அறப்போராட்டம் என்ற பெயரில் சூறையாடல் மிரட்டல்களை விடுத்துதான் நக்கீரன், தினகரன், விஜய்TV போன்ற ஊடகங்களை அடக்கினோம்.)
  எனவே, நரகவாதி(?) செங்கொடியே, பீஜே (ஸல்) அவர்களுடன் நேரடி விதவிவாதத்தில் கலந்து கொள்வதுடன் அல்லாஹ்வின் சிறப்புத்தூதரை கண்களால் தரிசித்து, அவரது பரிந்துரையால் சொர்கவாசியாக பதவிஉயர்வு பெற்று, ஹூருலீன்களைப் புணரும் மாபெரும் புண்ணியத்தை அடையுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். (ஹூருலீன்கள் வேண்டுமா? வேண்டாமா? நாங்கள் ஒவ்வொருவரும் பச்சை நரம்புகளும், எலும்பு மஜ்ஜைகளும் தெரியுமளவிற்கு இளமையான, தளர்வற்ற அங்கங்களுடைய, புத்தம்புதிதான, துர்நாற்றமில்லாத(!?) 70 ஹூருலீன்களையும், அவர்களைப் புணர்வதற்குத் தேவையான சக்தியளிக்கக்கூடிய “ஜீப்ரீல்” BRAND ஆண்மைவிருத்தி லேகியம் உட்பட அனைத்தையும் அல்லாஹ்விடம் முன்பதிவு செய்துவிட்டோம்.) செங்கொடியே சிந்திக்கவும்…! இது நல்ல சான்ஸ்…! தவறவிட்டடால் திரும்ப கிடைக்காது. எண்ணெய்க் கொப்பரையில் வறுபட விருப்பமா? அல்லது “கிளுகிளு”ப்பான ஆயில்மசாஜ் வேண்டுமா? மீண்டுமொரு முறை நன்றாக சிந்திக்கவும்…!
  இதைத்தான் ” புரோக்கர் மாமா” (வாய்தவறிவிட்டது, அல்லாஹ் மன்னிப்பானாக…!) அல்லாஹ் குர்ஆனில், “சிந்திக்கும் மக்களுக்கு நிறைய அத்தாட்சிகள் இதில் இருக்கிறது” என்று குறிப்பிடுகிறான்.

  எனவே சிந்திப்போம் (சொர்க்கத்தில் வீரியமுடன்) செயல்படுவோம்…!
  இப்படிக்கு
  “தாவா பீரங்கி” தஜ்ஜால்

 52. நிலாவின் புது அவதாரம் தஜ்ஜால் என்பதை IP மூலம் செங்கொடி அறிந்திருப்பார் .அதை இங்கு மறுக்கமாட்டார் என்று நம்புகிறேன்

 53. யோவ்வ்.. தஜ்ஜால் புரோக்கர் மாமான்னு சொன்ன ? உனக்கு இருக்கு கி பி 2012 ..ல் ஆப்பு ? கூடவே செங்கொடி..அண்ணன்னுக்கும் .

 54. எந்த மதத்தயும் விமர்சிக்க யாருக்கும் உரிமை இருக்கிறது. கிறிஸ்துவம், இந்து மதங்கள் இவற்றை எதிர்கொண்டே வந்திருக்கின்றன. இஸ்லாம் மட்டும் தனக்கு எதிரான எந்த விதமான கருத்தையும் அனுமதிக்க விரும்புவதில்லை. இஸ்லாமியர்கள் கொஞ்சம் விழித்துக்கொண்டால் அவர்கள் தலையில் இருக்கும் குல்லாவை கழற்றி எறிந்துவிடுவார்கள். அல்லா என்னும் பொய்யை தோலுரிக்கும் செங்கொடி போன்றோரின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

 55. பிறாமணர்கள் திருந்தியிருக்கின்றார்கள். இப்ராகீம் அவர்களுக்கு பிறாமணர்கள் திருந்தி நாடார்கள் வீட்டிற்குச் செலவது பிடிக்கவில்லை.எல்லா சாதி மக்களின் மனப்பான்மையில் பெரிய மாற்றம் ஏற்பபட்டள்ளது. ஐயர மட்டும் விதிவிலக்கா என்ன ? அம்பேத்கார்நகரின் அக்ரகாரத்து பெண்கள் பலரை மருமகளாகப் பார்க்கலாமே. இதற்குப்பின்னும் பிறாமண வெறுப்பு தேவையா இபுறாகீம் அவர்களே!

 56. ஆதி காலத்தில் இந்தியாவில் சாதிகள் கிடையாது.வேதகால இந்தியாவில் சாதிகள் இல்லை. பக்குவப்பட்ட பிரிவு மக்கள் பக்குவப்பட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் என்ற இரு பிரிவினர்தாம் இருந்தனர். அதாவது அந்தணன் எனற கலாச்சாரத்தை ஒரளவிற்கு எட்டியவர்கள் – அந்தணம் ஆக காத்திருப்பவர்கள் என்ற இரு பிரிவினர்கள் இருந்தார்கள். இருப்பினும் தீண்டாமை வேதகாலத்தில் இல்லை. கால ஒட்டத்தின் பரிணாமத்தில் பண்பட்ட மக்கள் அனைவரும் பிறாமணமர்கள் ஆனார்கள். பிறாமணர்களின் ஆதி தகப்பனார்கள் இன்று உள்ள பல சாதி மக்களின் முன்னோர்களே.அதாவது பலசாதி மக்கள் சோ்ந்துஉருவாகியதுதான் ஐயா் ஐயங்கார் பிள்ளைமார் போன்ற சாதிகள். என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

 57. எனது கருத்திற்கு ஆதாரம் மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்.

 58. வருடங்கள் 7 கடந்து விட்டது. என் கருத்தை ஆதரித்தோ எதிா்த்தோ ஒரு கடிதமும் பதிவு செய்யப்படவில்லை.இதற்கு முன் எவ்வளவு விவாதங்கள் …கடிதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆச்சரியமே.

 59. இதற்கு முன் எவ்வளவு விவாதங்கள் …கடிதங்கள்

  ஆம். இப்போதெல்லாம் வலைப்பக்கங்களில் அதிகம் விவாதங்கள் நடப்பதில்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s