மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௯

குரானில் சாதாரணமாக இடம்பெற்றிருக்கும் வசனங்களுக்குக் கூட அறிவியல் முலாம் பூசி, எங்கள் வேதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அறிவியல் வளர்ச்சி குறித்து குறிப்பிட்டிருக்கிறது பார்த்தீர்களா என வியப்பவர்கள், அறிவியலுக்கு எதிராக இருக்கும் கட்டுக்கதைகளை மறந்துவிடுகிறார்கள் என்பதோடு மட்டுமல்லாது, அவைகளை அதிகம் வெளியில் பேசுவதும் இல்லை. ஏனென்றால் அறிவியல் மதமாக இஸ்லாத்தை நிருவ முற்படுகிறவர்களுக்கு அவை இடையூறாகவே இருக்கும். கீழ்காணும் இரண்டு வசனங்களை கவனியுங்கள்.

 

ஆகவே, பழிப்புக்கிடமான நிலையில் எறியப்பட வேண்டியவரானார். ஒரு மீன் விழுங்கிற்று. ஆனால் அவர் இறைவனைத் துதி செய்து தஸ்பீஹு செய்து கொண்டிராவிட்டால், எழுப்பப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். குரான் 37: 142, 143, 144

 

உங்களிலிருந்து சனிக்கிழமையன்று வரம்பு மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி சிறுமையடைந்த குரங்குகளாகிவிடுங்கள் என்று கூறினோம். குரான் 2:65

 

இவற்றில் முதல் வசனம் யூனுஸ் எனும் தூதரைப் பற்றியது. அறிவிக்கப்பட்டிருக்கும் தூதர்களில் இவர் சற்றே மாறுபட்டவர். இவரைப்போல் நடந்து கொள்ளவேண்டாம் என்று அல்லா முகம்மதுவுக்கு அறிவுறுத்துகிறான். இதை சமன்படுத்தும் விதமாக யூனுஸை விட என்னை உயர்ந்தவனாக கூறவேண்டாம் என ஹதீஸ்களில் முகம்மது அறிவுறுத்துகிறார்.

 

எல்லா தூதர்களையும் போல யூனுஸும் அவர் வாழ்ந்த பகுதிக்கு தூதராக நியமிக்கப்பட்டு மதப் பரப்புரை செய்கிறார். வழக்கமாக ஏனைய தூதர்களின் மத முயற்சிகள் ஏற்கப்படாமல் மறுதலிக்கப்பட்டு அல்லா அந்தப் பகுதி மக்களை அழிப்பதுடன் முடியும். ஆனால் யூனுஸைப் பொருத்தவரை கதையில் ஒரு திருப்பம். தன்னுடைய பரப்புரை முயற்சிகள் பலனளிக்காதபோது அல்லாவிட்ம் முறையிடுகிறார், அல்லாவும் அந்த முறையீட்டை ஏற்று அழித்துவிடுகிறேன் என்கிறார். உடனே யூனுஸ் ஊரைவிட்டு கிளம்பிவிடுகிறார். அவர் கிளம்பிய பின்னர் ஊர் அழிக்கபடவிருக்கிறது என்பதை அறிகுறிகளைக் கொண்டு உணர்ந்த மக்கள் அல்லாவிடம் அழுது மன்னிப்பு கேட்கிறார்கள். அல்லாவும் அழிக்காமல் இரக்கப்பட்டு விட்டுவிடுகிறார். மறுபுறம் ஊரை விட்டு கிளம்பிய யூனுஸ் ஒரு கப்பலில் பயணப்படுகிறார். கப்பலில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையால், பயணிகளில் யாராவது ஒருவரை கடலில் வீசிவிட்டு பயணத்தை தொடரலாம் என முடிவெடுக்கப்படுகிறது. சீட்டு குலுக்கிப் பார்த்ததில் யூனுஸ் பெயர் வந்துவிட அவரை கடலில் தூக்கி வீசிவிட்டு கப்பல் சென்றுவிடுகிறது. கடலில் வீசப்பட்ட யூனுஸை ஒரு மீன் தின்றுவிடுகிறது. மீனின் வயிற்றுக்குள் சென்ற பிறகு தான் யூனுஸுக்கு நினைவு வருகிறது, தாம் அல்லாவிடம் அனுமதி பெறாமலேயே ஊரைவிட்டுவிட்டு வந்துவிட்டோம் என்பது, அதனால் தான் இவ்வளவு துன்பங்களும் தமக்கு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து(!)கொண்ட யூனுஸ் மீனின் வயிற்றுக்குள் இருந்தே அல்லாவிடம் மன்னிப்பு கோருகிறார். அதை ஏற்று அல்லாவும் அவரை மீன் சிறைச்சாலையிலிருந்து விடுவிப்பு ஆணை பிறப்பிக்க அந்த மீன் அவரை கரையில் உமிழ்ந்துவிட்டு சென்று விடுகிறது. கரையில் அவர் அசைவற்றுக் கிடக்க ஒரு சுரைக்கொடி முளைத்து அவருக்கு நிழல் கொடுக்கிறது பின் அதிலிருந்த சுரைக்காய்களை உண்டு தெம்புபெற்று ஊர் திரும்பி மீண்டும் மதப் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

 

பாட்டிகள் கூறும் மந்திரவாதக் கதைகளை நினைவுபடுத்தும் இந்தக்கதை அப்படியே குரானில் இடம்பெற்றிருக்கவில்லை என்றாலும், இந்தக் கதையை உறுதிப்படுத்தும் அளவுக்கு அதன் வசனங்களில் குறிப்பிருக்கிறது. எவ்வளவு நாள் அவர் மீனின் வயிற்றுக்குள் இருந்தார் என்பது குரானில் கூறப்படவில்லை என்றாலும் நான்கு நாளிலிருந்து நாற்பது நாட்கள் வரை இருந்தார் என பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. எத்தனை நாள் என்பது ஒருபுறமிருக்கட்டும் மீனின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் எப்படி உயிருடன் வெளியில் வந்தார்? அதுவும் மீனின் வயிற்றுக்குள்ளிருந்து நடந்தவைகளை அசைபோட்டு சிந்தித்து அல்லாவை வேண்டித் தொழுது பின்னர் வெளியேற முடிந்திருக்கிறது என்றால்….. சிறு குழந்தைகள் கூட கேட்டால் சிரித்து விடக்கூடிய தன்மையில் இருக்கும் இந்தக் கதையை தங்கள் வேதத்தில் வைத்திருப்பவர்கள் தான் தங்கள் மதம் அறிவியல் மதம் என்றும் நாளை கண்டுபிடிக்கப்படவிருக்கும் அறிவியல் உண்மைகள் கூட தங்கள் வேதத்தை மீறி இருக்க முடியது என்றும் அளந்து விடுகிறார்கள்.

குரங்கின மூததைகளிடமிருந்துதான் மனிதன் கிளைத்தான் என்பது அறிவியல், ஆனால் குரான் தலைகீழ் பரிணாமத்தைக் கூறுகிறது. அதாவது, மனிதன் குரங்காக மாறினான் என்று. இதுதான் இரண்டாவது வசனத்தின் கதை. இப்ராஹிம் என்றொரு தூதர், மதப் பிரச்சாரத்தில் ஒழிச்சலின்றி ஈடுபட்டிருந்தபோதும் இடைவேளையில் மக்கள் ஒரு காளை உருவத்தை கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் கோபமடைந்த அல்லா, சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது என்று தண்டனை விதிக்கிறார். ஆனால் மக்கள் அதையும் மீறி சனிக்கிழமையும் மீன் பிடித்துவிடுகிறார்கள். அப்படி மீன்பிடித்தவர்களுக்குத்தான் குரங்குகளாக மாறிவிடுங்கள் என்று சாபம் கொடுக்கிறார். மட்டுமல்லாது,

 

நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக் கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும், பயபக்தியுடைவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம். குரான் 2:66

 

அதாவது, குரங்காக மாற்றப்பட்ட காலத்தவர்களுக்கு மட்டுமல்ல இன்றைய சமகாலத்தவர்களுக்கும் கூட அந்த குரங்குகளை படிப்பினையாக்கி வைத்திருப்பதாக அல்லா குரானில் கூறுகிறான். இதனால் இப்போது அந்த குரங்குகள் எங்கே என யாரும் கேட்டுவிடக்கூடது என்பதற்காக முகம்மது அவசரமாக அதை மறுக்கிறார்.  உருமாற்றப்பட்டவர்களுக்கு இனப்பெருக்கம் கிடையாது என்று அறிவித்து விடுகிறார்.

 

குரங்குகளின் மூததை விலங்கு ஒன்றிலிருந்து படிப்படியாக பல லட்சம் ஆண்டுகளில் உருமாறி வந்தவன் தான் மனிதன் என பரிணாமம் கூறினால் அதற்கு எதிராக ஆயிரம் கேள்விகளை எழுப்பும் மதவாதிகள், இங்கே ஒரே நொடியில் மனிதனை குரங்காக மாற்றிய இந்த கதைக்கு எதிராக ஒற்றை ஒரு கேள்வியையேனும் எழுப்ப முன்வருவார்களா?

 

ஒவ்வொரு உயிரினமும் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்காக பல்வேறு அமிலங்களை தங்கள் செரிமான உறுப்புகளில் சுரக்கின்றன. வெளிப்புற தோல்களில் பட்டால் அரித்துவிடக்கூடிய அளவில் நொதித் தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒரு மீனின் வயிற்றில் ஒரு மனிதன் சில நாட்கள் வசதியாக வாழ்ந்துவிட்டு வெளியில் வந்ததாக கதை சொல்கிறது குரான்.

 

ஒரு விலங்கைவிட அறிவிலும், செயலிலும், நினைவிலும், பரிமாற்றத்திலும், கருவிகளை பயன்படுத்துவதிலும் மேம்பாடு கொண்டவன் மனிதன். ஆனால் மனிதனின் இந்த மேம்பாடுகளையெல்லாம் ஒரு அழிப்பான் கொண்டு அழித்து விடுவதைப்போல் குரங்காக மாறிவிட்டார்கள் என கதை சொல்கிறது குரான்.

 

ஒரு சொல்லின் எழுத்துகளுக்குக் கூட அசை பிரித்து அறிவியல் விளக்கம் சொல்பவர்கள் இந்த கட்டுக்கதைகளுக்கு என்ன சொல்ல முடியும்?

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

 

 

95 thoughts on “மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

 1. //கோபமடைந்த அல்லா, சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது என்று தண்டனை விதிக்கிறார்.//

  தண்டனை ரொம்ப மோசமா இருக்கே!

  அல்லா இவ்ளோ பெரிய காமெடி பீஸ்னு ஏன் நீங்க முன்னாடியே சொல்லல! 🙂

 2. தூண்டில் போட்டு மீன் பிடிப்பவன் மனிதன்

  மீன் போட்டு (மனிதனை)குரங்காக்கி பிடிப்பவர் அல்லா

  7:163. (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் – அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன – ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை – அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
  ________________________

  இங்கும் சிலரை குரங்காகவும்,பன்றியாகவும் மாற்றுகிறார் இறைவன்.

  5:60. “அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் – அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

 3. //தண்டனை ரொம்ப மோசமா இருக்கே!//

  ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும், சில காலங்களுக்கு மீன் பிடிப்பதைத் தடை செய்யும். அது போல்தான் இதுவும்
  .

  .
  என்று பதில் வரும் பாருங்கள்.

 4. அவசரப்படாதீங்க!

  இப்பதான் மதரஸாவில் சேர்ந்தேன்.

  ஏழு வருஷம் கழித்து பதில் சொல்கிறேன் அண்ணாச்சி !

  இன்னும் முதல் கேள்விக்கே பதில் தெரியலே!

  இப்படி கேள்விமேல கேள்வி கேட்டதுனால தான்

  நான் ஸ்கூலுக்கே போகலை!

 5. அழகாக பக்கங்களை நிரப்புகிரீர்கள் வாழ்த்துக்கள்.

 6. //அழகாக பக்கங்களை நிரப்புகிரீர்கள் வாழ்த்துக்கள்//

  பிஜே, சர்வரையே நிரப்புராராம்! 🙂

 7. இங்கே கொஞ்ச அராபியர்க‌ளை குரங்குகளாக்வும்,பன்றிகளாகவும் மாற்றி அப்படியே வைக்க போகிறார்(அல்லது வைத்து விட்டாரா?) இறைவன்.எங்கே எப்போது என்று யாராவது கூறினால் நல்லது
  ____________
  5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்
  ‘அபூ ஆமிர்(ரலி)’ அல்லது ‘அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)’ என்னிடம் கூறினார்கள் – அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)

  நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
  என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், ‘நாளை எங்களிடம் வா’ என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
  ______________

  ஏன் எப்போதும் மனிதர்களை குரங்காகவும்,பன்றியாகவுமே மாற்றுகிறார் இறைவன்?ANY SECRET?

 8. Pardon my nitpicking.

  மேலே உள்ள படத்தை மட்டும் மாற்றி விடவும். ஏனெனில் அது ஒரு திமிங்கிலத்தின் படம் (பாலூட்டி வகை). சுறா போன்ற ஏதேனும் ஒரு மீன் படத்தை இட்டால் சரியாக இருக்கும்.

  மிகவும் அருமையான உங்கள் கட்டுரையில் பிழை இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

  நன்றி

 9. ////அறிவியல் மதமாக இஸ்லாத்தை நிருவ முற்படுகிறவர்களுக்கு அவை இடையூறாகவே இருக்கும். கீழ்காணும் இரண்டு வசனங்களை கவனியுங்கள்///
  இறைவனின் அற்புத செயல் நேரில் பார்த்தவர்களுக்கும் நம்புவர்களுக்கும் மட்டுமே புரியும்.சுனாமி வரும் முன் அதன் பேரழிவு பலருக்கு கேள்விக்குறியாகத்தான் இருக்கும். ஆயிரம் வருடங்களுக்கு முன் இணைய தள வசதியை பற்றி கூறி இருந்தால் ,அந்த மக்களும் சென்கொடிபோல் போல்தான் கேள்விகளை எழுப்பி இருப்பார்கள்
  .////ஏன் எப்போதும் மனிதர்களை குரங்காகவும்,பன்றியாகவுமே மாற்றுகிறார் இறைவன்?ANY செக்ரெட்///
  மனிதன் வெளித்தோற்றத்தில் குரங்கு போலும், உள் உடலமைப்பில் பன்றியின் இதயமும்,ரத்தமும் மனிதனுக்கு ஒத்துப் போவதாக கூறப்படுவதில் குர்ஆன் வசனங்களும் ஹதீத்களும் தொடர்பு இருப்பதை தான் சங்கர் இங்கே கூற வருகிறாரோ

 10. //பிஜே, சர்வரையே நிரப்புராராம்!//

  உங்கள் கதை போல வெட்டி இல்லையே.

 11. வாரா வாரம் சனிக்கிழமை வந்து கொண்டுதான் இருக்கிறது,இப்ப மீன் பிடிக்கிற மக்களை அல்லா தண்டிப்பதில்லையா? 1400 ஆண்டுகளுக்கு முன் போட்ட சட்டம் நீக்கப்பட்டுவிட்டதா என்ன? செங்கொடியாரின் பகுத்தறிவுப் பொறியில் இறை(?)வசனங்கள் சிக்கிவிட்டன என்பதென்னவோ உண்மை!

 12. //உங்கள் கதை போல வெட்டி இல்லையே.//

  http://dharumi.blogspot.com/2011/01/468.html

  யாரு வெட்டின்னு பாருங்க, பிஜேவே வந்தாலும் டவுசர் இல்லாம தான் போகனும்!, உங்களுக்கு பதில் தெரியலைன்னா, ஆமா குரானில் இருப்பது எல்லாம் உண்மையில்லைன்னு ஒத்துகிட்டு நவுறுங்க!

 13. //மனிதன் வெளித்தோற்றத்தில் குரங்கு போலும், உள் உடலமைப்பில் பன்றியின் இதயமும்,ரத்தமும் மனிதனுக்கு ஒத்துப் போவதாக கூறப்படுவதில் குர்ஆன் வசனங்களும் ஹதீத்களும் தொடர்பு இருப்பதை தான் சங்கர் இங்கே கூற வருகிறாரோ
  //
  நல்ல கண்டுபிடிப்பு நண்பர் இப்ராஹிம்.எந்த விளக்கமும் மதவாதிகளால் எப்படி வேண்டுமானாலும் அவர்களுக்கு பொருந்தும் வகையில் விளக்க முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு . இதனை திரு பி ஜேவிடம் சொல்லி குரானில் இன்னொரு அறிவியல் செயல் என்று விளக்கம் போட சொல்லலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் அல்லாவின் செயல்கள் அறிவியலுக்கு கட்டுப் பட்டது என்று ஆகிவிடும்.

  மனிதன் குரங்காவது,பன்றியாவது போன்ற கதைகள் எல்லா மத புத்தக்ங்களிலும் உள்ளன.இந்த மாதிரி விஷயங்களை யாராலும் நிரூபிக்க முடியாது என்றும் தெரியும். அதனாஅல் வேறு விஷயத்திற்கு வருவோம்.

  சனிக்கிழமை மீன் பிடித்தவர்களை குரங்காய் மாற்றிய இறைவன் இஸ்லாமியர்களை வெள்ளிக்கிழமை இராமசாமிகளாக ஆக்கியதும் ஒரு நகை முரணே.

  வெள்ளிக்கிழமை சரி என்றால் மனிதனை குரங்கு பன்றியாக்கியது தவறு.

  சனிக்கிழமை சரி என்றால் வெள்ளிக்கிழமை இராமசாமிகள் ஆக கூடாது.

  முன்பு சனிக்கிழமை இப்ப் வெள்ளிக்கிழமை என்றால் இறைவனின் கொள்கைகள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஏன் மாறியது?

 14. உளறுவாய் சங்கர்,
  அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்?
  குரானை பற்றீ பேசிக்கொண்டிருக்கும்போது எனதற்கு இராமசாமி பற்றிய பேச்சு?

  எவனோ கழிந்ததை தின்று ஏப்பம் விடுபவர்களை பன்றிகள் என்று சொல்லலாம் இல்லையா? அதுமாதிரி மார்க்ஸ் அன்று கழிந்ததை இன்னமும் தின்று வாந்தி எடுக்கும் உங்களை போன்றோர்களை அல்லா பன்றிகளாக்கிவிட்டார் என்று சொல்லலாம்.

  அதே போல மூளை இருந்தும் உபயோகிக்காமல் இருக்கும் பல மடையர்களை உங்களுக்கு எதற்கு மூளை என்று மீண்டும் குரங்குகளாக்கிவிட்டார் என்றும் சொல்லலாம்.

  மனிதன் குரங்காவது பன்றியாவது எல்லாம் எல்லா மதப்புத்தகங்களிலும் உள்ளன என்ரு ஏன் மற்றவர்களை இழுக்கவேண்டும்? புத்தமதத்தில் இருக்கிறதா? கிறிஸ்துவ மதத்தில் இருக்கிறதா? யூத மதத்திலாவது இருக்கிறதா? அல்லது சமண மதத்தில் இருக்கிறதா அல்லது உங்களது மிகுந்த ஆசைக்குறிய இந்துமதத்திலாவது இருக்கிறதா?

  ஆதாரம் காட்டுங்கள்.

 15. ஆசைக்குறிய என்றதும் எனக்கு இந்துமதத்தின் மீது ஆசை இல்லை என்று பதில் கூறவேண்டாம். அதன் பெயர் sarcasm

 16. வணக்கம் நிலா
  //அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்?//
  இஸ்லாமியர்களின் நாள் காட்டியே நிலாவை(சந்திரனை) அடிப்பையாக கொண்டதுதான்.

  //குரானை பற்றீ பேசிக்கொண்டிருக்கும்போது எனதற்கு இராமசாமி பற்றிய பேச்சு?//
  வெள்ளிக் கிழமை இராமசாமி யார் என்று உங்களுக்கு தெரியாதா? வைதேகி காத்திருந்தால் திரைப் படத்தில் வரும் திரு இராதாரவியின் பெயர்.அவர் வெள்ளிக்கிழமைகளில் தாதா வசூல் செய்வார்.அதில் உங்களுக்கு என்ன கோபம்.இராதா ரவி இரசிகரா நீங்கள்?. சனிக்கிழமை என்பது யூதர்களுக்கு ஓய்வு நாள் ஆக்வே அந்நாளில் எந்த வேலையும் செய்யக் கூடாது.அதில் மீன் பித்தவர்களை இறைவன் குரங்குகளாக ஆக்கிவிட்டார் என்பதுதான் இப்பதிவின் சாரம்.
  ஆனால் அதே இறைவன் சொன்னதாக(?) வெள்ளிக்கிழமையை புனித நாளாக கடைப் பிடிக்கின்ற‌னர். எப்போது ஏன் மாறியது?.மாற்றப் போகும் இறைவன் சனிக்கிழமையில் மீன் பிடித்தவர்களை குரங்காக மாற்றலாமா என்பதுதான் என் கேள்வி
  //அதுமாதிரி மார்க்ஸ் அன்று கழிந்ததை இன்னமும் தின்று வாந்தி எடுக்கும் உங்களை போன்றோர்களை அல்லா பன்றிகளாக்கிவிட்டார் என்று சொல்லலாம்.//

  அல்லா மீது திடீர் பாசமா? .மார்க்ஸ் சொன்ன கருத்துகளை விவாதிப்பது என்றால் அது சம்படந்த மான பதிவில் விவாதிக்கலாம். விவாதத்தின் போக்கை மாற்ற வேண்டாம்.

  //மனிதன் குரங்காவது பன்றியாவது எல்லாம் எல்லா மதப்புத்தகங்களிலும் உள்ளன என்ரு ஏன் மற்றவர்களை இழுக்கவேண்டும்? புத்தமதத்தில் இருக்கிறதா? கிறிஸ்துவ மதத்தில் இருக்கிறதா? யூத மதத்திலாவது இருக்கிறதா? அல்லது சமண மதத்தில் இருக்கிறதா அல்லது உங்களது மிகுந்த ஆசைக்குறிய இந்துமதத்திலாவது இருக்கிறதா?//
  என் பின்னூட்டத்தை படித்து விட்டு பிறகே பதில் எழுதவும்.
  ______________________________________________
  நான் எழுதியது
  மனிதன் குரங்காவது,பன்றியாவது போன்ற கதைகள் எல்லா மத புத்தக்ங்களிலும் உள்ளன.இந்த மாதிரி விஷயங்களை யாராலும் நிரூபிக்க முடியாது என்றும் தெரியும். அதனாஅல் வேறு விஷயத்திற்கு வருவோம்.
  __________________________

  இந்து மதத்தில் விஷ்னு மீன்,பன்றி,ஆமை போன்ற அவதாரங்களை எடுத்துள்ளார்.
  கிறித்தவ மதத்திலும் மிருகம் பேசியது,அந்திக் கிறிஸ்து(வெளி ப் படுத்தின சுவிஷேஷம்) என்பவரை மிருகம் என்றே குறிப்பிடுவது போன்ற கட்டுக் கதைகள் ஏராளம்.
  ________________________

  பௌத்தம்,சமண புத்தகங்கள் படித்தது இல்லை.ஆனால் பௌத்தர்கள் (இலங்கை) ,சமணர்கள்(ஜெயின்கள்) இந்து கடவுள்களையும்ம் வணங்குவதால் அவர்களும் இக்கதைகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
  கிரேக்க புராணக் கதைகளை எடுத்தீர்கள் என்றால் அம்புலிமாமா(இதுக்கும் ஆட்சேபனை உண்டா?) கதைகள் மாதிர் இருக்கும்.
  ________________________

  நான் ஒரு இறை மறுப்பாளன் எந்த மத நம்பிக்கையும் இல்லாதவன். அனைவரின் மத ஈடுபாடு கூட ஆதாரமற்ற நம்பிக்கை மட்டுமே என்றே சொல்கிறேன்.

  இப்ராஹிம் பதில் சொல்வார்.தெரியும்.

  நிலா அவசியம் பதில் இட வேண்டும்.எதிர் பார்க்கிறேன்.

 17. உளறுவாய் சங்கர்,

  வைதேகி காத்திருந்தாள் படம் உலக மகா இலக்கியம் என்று நினைத்த்கொண்டு எல்லோரும் அறிந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. உங்கள் லெவலே அதுதானோ என்னவோ

  நீங்கள் சொன்னது மனிதன் குரங்காகும் கதை. அது எங்கே இந்து மதத்தில் இருக்கிறது? இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளான் என்பது இந்து மத நம்பிக்கை. ஆகையால் இறைவன் குரங்கு மனிதன், முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள், நாத்திகர்கள், அல்லா, முகம்மது, கார்ல் மார்க்ஸ், காகிதம் அணு, எலக்ட்ரான் என்று ஏன் சங்கரிலும் கூட உள்ளான்.
  இதற்கும் நீங்கள் சொன்ன மனிதன் குரங்காவதற்கும் என்ன சம்பந்தம்? அவதாரம் எடுபபதற்கும் மனிதனாக இருப்பவனை உருமாற்றி குரங்காக ஆக்குவதற்கும் வித்தியாசம் இல்லையா?

  இந்து மத புராணங்களில் கடவுள் எந்த மனிதனையாவது குரங்காக ஆக்கினாரா? ஆதாரம் காட்டுங்கள்.

 18. நீங்கள் சொன்னது மனிதன் குரங்காகும் கதை. அது எங்கே இந்து மதத்தில் இருக்கிறது?
  இந்துத்வா நண்பருக்கு

  கொஞ்சமாவது புரானம் ,வேதம் படிக்கனும் .

  மனிதன் குரங்கு பன்றியாக மாறுவது போன்றவை கதைகள் என்று கூறி, கதை கூறும் விஷயத்தையாவது ஒரு விளக்கம் சொல்லுங்கள் என்று இஸ்லாமியர்களை கேட்கிறேன்.

  இங்கே பதிவுக்கு சம்பந்தமாக ஏதாவது பேசினால் நல்லது.
  ___________________

  நான் கூறியது நடக்க முடியாத விஷயங்களை சொல்லும் கதைகள்.இருந்தாலும் இந்து மதத்தில் இல்லாத கட்டுக் கதைகளா?
  மனிதன் ஒரு விலங்காக மாறும் கதைகளை கூறினால் என்ன ச்ய்ய போகிறீர்கள்?.

  இந்த மாதிரி ஏதாவது ஒரு கட்டுக் கதைக்கு ஆதாரம் காடட முடியும்னு நினைகிற ஆளா?.அப்படி விளக்கமா சொல்லனும். இந்து மதத்தில் உள்ள கதைகளுக்கு ஒரு பெரிய அகராதியே போடலாம்.

  நமக்கும் தி க தோழர்கள் போல் பேச தெரியும் நண்பரே.அதனை அவர்களே செய்வதால் நாங்கள் இஸ்லாம் பக்கம் விமர்சிக்கிறோம்.

  இதோ இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதைத் தருகிறேன். படியுங்கள்.

  1.தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்’ (இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் -587-589)

  அங்கு(தெனனிந்தியா) இருந்தவர்கள் மனிதர்களா இல்லை குரங்குகளா?

  மனிதர் என்றால் வால்மீகி பொய்யன்.

  குரங்கு என்றால் நிரூபியுங்கள் விவேகனந்தரை பொய்யன் என்று.

  2.இராமயனத்தில் வரும் குரங்குகள் அனைத்துமே தேவர்களின் அவதாரம் என்றும் கூறப்படுகிறது.

  3. குரங்கு அனுமார் மனிதர்களை விட பலமும்,புத்தியும் உடைவராக,சிரஞ்சீவியாக இருக்கிறார்.இவர் காற்றின் ( வாயு புத்திரன்)மகன். அனுமாரின் தாய் யார்?

  3.நாரதர் முகம் குரங்காக மாறிய கதை தெரியாதா?

  4.வாதாபி என்ற அசுரன் ஆடாக மாறிய கதை தெரியாதா?

  5.வினாயகர் யானை முகத்தோடு இருப்பது தெரியாதா?

  5..அனுமாரின் விந்தை மீன் விழுங்கி ஜாம்பவான் பிறந்தது தெரியாதா?

  6. வினாயகரின் வாகனம் ஒரு எலியாக மாறிய அசுரன்

  இன்னும் மனிதன் அலியாக மாறுவது, பெண்ணாக மாறுவது,விட்டாலாச்சார்யா பட‌த்தில் வரும் அத்தனை அற்புத காட்சிகளும் உள்ள மதம்தான் சனாதன வைதீக மதம்.
  ஏகப்பட்ட கட்டுக் கதைகள் .நீங்கள் அயோத்தியில் இராமன் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தான் என்று நிரூபிக்க முடியுமா?.

  ____________________

  நாங்கள்( இப்போது இஸ்லாமிய)மதத்தின் நம்பிக்கைகளை எவ்வளவு ஆதாரமற்றதாக உள்ளது என்று அவர்கள் வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டி விவாதித்து வருகிறோம்.

  இஸ்லாமிய மத நம்பிக்கை உள்ளவர்கள் இதற்கு பதில் அளிக்கிறார்கள்.

  உங்களின் நிலைப்பாடு என்ன ?

  ப‌திவுக்கு சம்பந்தமாக ஏதாவது உருப்படியாக பேசலாம்.
  ____________________

 19. //இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளான் என்பது இந்து மத நம்பிக்கை//

  உயிர் என்பது இந்து மதப்படி என்ன? கூறுங்கள்.

  நாத்திகர்களின் கருத்து படி ஒரு அருமையான பதிவு.
  http://kaiyedu.blogspot.com/2008/02/i.html

 20. ///அறிகுறிகளைக் கொண்டு உணர்ந்த மக்கள் அல்லாவிடம் அழுது மன்னிப்பு கேட்கிறார்கள்//

  அல்லா பாரபட்சமானவர் போலும்! அழிவதற்கான அறிகுறிகளை வைத்து பாவமன்னிப்புக் கோரிய யூனுசின் உம்மத்தினரை காப்பாற்றுகிறார் அல்லா. ஆனால் மறுமையின் அறிகுறிகள் வெளிப்பட்ட பின் முகம்மதின் உம்மத்துகள் பாவமன்னிப்புக் கோரினால் ஏற்றுக்கொள்ளப்படாது என்கிறார். இது வன்மையாக கண்டிக்கப்படத் தக்க செயலாகும்.

 21. மதம் (என்ன மதமாகினும்) அது உருவாக்கப்பட்டது இரண்டு காரணத்திற்கு:
  1.மனிதனை பிரித்தாள
  2.பெண்களை அடிமைபடுத்த.
  ஆக மனிதனால் உருவாக்கப்பட்டதே கடவுள் மதம் என்பது போன்று கற்பனைகள்.நீங்கள் தொடர்ந்து எந்த மிரட்டலுக்கும் பணில்யாமல் இஸ்லாமின் ஓட்டைகளை சுட்டிகாட்டுவது நிச்சயம் ஒரு நல்ல முயற்சி.உங்க தைரியத்துக்கு ஒரு சல்யூட்.
  மனிதன்ம்தான் இன்றைய தேவை மதமல்ல.!!!மக்கள் உணர வேண்டும்

 22. குர்ஆன் அறிவியலுக்கு முரண்படாது என்பது பொதுவான விசயமாகும்.மற்றபடி மக்களுக்கு அறிவுறுத்தளுக்காக சொல்லப்படும் சிறப்பான விசயங்கள் அறிவியலுக்கு மாற்றமாக இருந்தால் தான் மக்கள் இறைவனை நம்புவார்கள்.நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றை இடையிடையே நடத்தி காட்டினாலே இறைவனின் அற்புதம் மக்களுக்கு தெரிய வரும்.இதை அறிவியலோடு ஒப்பிட்டு காட்டுவது செங்கொடியின் அறியாமையாகும்.சிறு குழந்தைக்கும் கூட தெரிய வரும் இந்த விசயத்தை செங்கொடி சாதித்ததாக புகழாரம் வேறு.இப்படி ஒன்றுமே நடக்காவிட்டால் இறைவன் இருப்பதற்கு என்ன அத்தாட்சி?ஏன் சுனாமி பேரழிவை முன்னரே கண்டு பிடிக்க முடிய வில்லை? அதன்பின்னர் சுனாமி வரப் போகிறது என்று அமெரிக்க அறிவித்ததை மத்திய அரசு வெளியிட தூத்துக்குடி,ராமநாதபுறம் நகரங்கள் காலியாகிவிட வழக்கமான அலைகள் கூட இல்லாமற் போயிற்றே அறிவியலுக்கு அடி சறுக்கியது ஏன்?
  எஸ்.கே.மீன்படம் தவறு என்கிறார்? சுறா வாக இருந்தால் சரியாக இருக்கும் திமிங்கிலம் பாலூட்டி வகை என்கிறாரே ஏன்?

 23. எக்ஸ் ரபி ///வாரா வாரம் சனிக்கிழமை வந்து கொண்டுதான் இருக்கிறது,இப்ப மீன் பிடிக்கிற மக்களை அல்லா தண்டிப்பதில்லையா? ///
  இதற்க்கு பதில் சங்கருக்கே தெரியும்

 24. வால்பையன்,
  அல்லா இவ்ளோ பெரிய காமெடி பீஸ்னு ஏன் நீங்க முன்னாடியே சொல்லல!
  சனிக்கிழமை இறைவணக்க நாள். அதனால் அன்று எந்த காரியங்களும் செய்யக்கூடாது என்பது இறைகட்டளை. உங்களது பண்ணை வாழ்க்கையை விட , குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை விட இது ஒன்றும் காமெடி பீஸ் கிடையாது.

 25. வால் பேயன் .///பிஜேவே வந்தாலும் டவுசர் இல்லாம தான் போகனும்!, உங்களுக்கு பதில் தெரியலைன்னா, ஆமா குரானில் இருப்பது எல்லாம் உண்மையில்லைன்னு ஒத்துகிட்டு நவுறுங்க///
  பீ.ஜே அழைத்தால் வரவே மாட்டேன் என்று ஓடியது யார்?ஓடியபோது கழன்ற டவுசருக்கு காரணத்தை எழுதி பக்கத்தை நிரப்பியது யார்

 26. //பீ.ஜே அழைத்தால் வரவே மாட்டேன் என்று ஓடியது யார்?ஓடியபோது கழன்ற டவுசருக்கு காரணத்தை எழுதி பக்கத்தை நிரப்பியது யார்//

  தேவைன்னா பீஜேவை என்னை வந்து பார்க்க சொல்லவும், அல்லாவுக்கு உருவம் இருக்குன்னு உங்க கூட்டத்துகுள்ளயே வாங்கிகட்டிகிட்டு ஓடிபோன பீஜேவை நான் வேற தனியா ஓடிப்போயிட்டாருன்னு சொல்லனுமா!?

  அல்லா காமெடிபீஸ்னா, பீஜே கைபுள்ள!

  உங்க கூட்டணி செம ஜாலி தான் போங்க!

 27. மனிதன் ////இஸ்லாமின் ஓட்டைகளை சுட்டிகாட்டுவது நிச்சயம் ஒரு நல்ல முயற்சி.உங்க தைரியத்துக்கு ஒரு சல்யூட்.///
  கிழிந்த சட்டைக்காரர்கள் முதலில் கம்யுனிச நூலைக் கொண்டு பீத்தலை தைத்துவிட்டு இஸ்லாமிய சட்டையின் பட்டன் ஹோலை பற்றி பிறகு பேசட்டும்.

 28. கலை///அல்லா பாரபட்சமானவர் போலும்!///புரிதலில்லாதகலையே ,இறைவன் வழிகாட்டுதல் இல்லாமல் தூதர் நடந்து கொண்டதால் யூனுஸ் தண்டிக்கப்பட்டு மக்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.

 29. வால் பேயன் ///அல்லாவுக்கு உருவம் இருக்குன்னு உங்க கூட்டத்துகுள்ளயே வாங்கிகட்டிகிட்டு ஓடிபோன பீஜேவை நான் வேற தனியா ஓடிப்போயிட்டாருன்னு சொல்லனுமா!?///
  தயைசெய்து உளற வேண்டாம்.அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்பது குர் ஆன் கூறும் உண்மை.இன்னும் அந்த தலைப்பில் எத்தனை பேரை வேண்டுமானாலும் விவாதத்தில் சந்திப்பார்.அவரது சிடிக்கள் வெளியிடப்பட்டு மக்களிடம் உலாவருகிறது.ஜமாலியின் சிடிக்கள் வெளியிடப்படவேயில்லை.
  //தேவைன்னா பீஜேவை என்னை வந்து பார்க்க சொல்லவும்,////
  இந்த வார்த்தைகளே நீங்கள் ஓடிப்போக தயாராகிவிட்டீர்கள் என்பதை காட்டுகிறது.

 30. //அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்பது குர் ஆன் கூறும் உண்மை.//

  பின் ஏன் உருவ வழிபாட்டை எதிர்க்கிறீர்கள் நண்பரே!?

 31. சங்கர் ///மாற்றப் போகும் இறைவன் சனிக்கிழமையில் மீன் பிடித்தவர்களை குரங்காக மாற்றலாமா என்பதுதான் என் கேள்வி////
  மது விலக்குத்தான் ரத்தாகப் போகிறதே ரத்தாகும் முன் குடித்தவர்களை ஏன் கைது செய்தார்கள்

 32. சங்கர் ///மாற்றப் போகும் இறைவன் சனிக்கிழமையில் மீன் பிடித்தவர்களை குரங்காக மாற்றலாமா என்பதுதான் என் கேள்வி////
  மது விலக்குத்தான் ரத்தாகப் போகிறதே ரத்தாகும் முன் குடித்தவர்களை ஏன் கைது செய்தார்கள்//

  அப்ப அல்லா கோமாளின்னு நீங்களே ஒத்துகிறிங்களா இப்ராஹிம்!

 33. நண்பரே |உருவத்தை மறுமையிலே காணமுடியும் .இப்போது காணாத உருவத்தை எப்படி உருவகப் படுத்த முடியும் ?
  இறைவனுக்கு வழிபடுவதுதான் முக்கியமே தவிர உருவம் முக்கியம் அல்ல

 34. நண்பரே ,இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப் பட்ட வேதம் வேறு. சமூக சூழ்நிலைக்கேற்ப குர் ஆன் கொடுக்கப்பட்டது.அதன் சட்டம் வேறு உங்களுக்கு இனிப்பு அவசியம்..எனக்கு இனிப்பு பத்தியம்

 35. //நண்பரே |உருவத்தை மறுமையிலே காணமுடியும் .இப்போது காணாத உருவத்தை எப்படி உருவகப் படுத்த முடியும் ?
  இறைவனுக்கு வழிபடுவதுதான் முக்கியமே தவிர உருவம் முக்கியம் அல்ல//

  முக்கியம், முக்கியமில்லை என்பது அடுத்த விசயம், உருவ வழிபாடு செய்பவர்கள் கூற்று என்ன?

  சகல சக்தி உள்ள கடவுள் நான் வணங்கும் வடிவில் எனக்கு அருள் அளிக்க முடியாதா என்பது தானே! அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், பிறகு எதற்கு கடவுள்!

 36. //நண்பரே ,இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப் பட்ட வேதம் வேறு. சமூக சூழ்நிலைக்கேற்ப குர் ஆன் கொடுக்கப்பட்டது.அதன் சட்டம் வேறு உங்களுக்கு இனிப்பு அவசியம்..எனக்கு இனிப்பு பத்தியம்//

  ஒரே கடவுள் மாறி மாறி வேதங்களை கொடுத்தால், கடவுளே குழப்பத்தில் இருக்கிறார் என்று தானே அர்த்தம்!

 37. //மது விலக்குத்தான் ரத்தாகப் போகிறதே ரத்தாகும் முன் குடித்தவர்களை ஏன் கைது செய்தார்கள்/
  நண்பர் இப்ராஹிம்
  இறைவன் கொடுத்த தண்டனை சனிக்கிழமை ஆளுங்களுக்கு அதிகமாக‌ தெரியலையா? சனிக்கிழமை மீன் பிடித்தால் குரங்கு ஆகிறார்கள்.

  இதே மாதிரி உங்க வெள்ளிக்கிழமை ஆளுங்களுக்கு ஏதாவது தண்டனை கொடுத்து உள்ளாரா?

  முகமதுக்கு புனித மாதங்களில் கூட போர் நடத்த அனுமதிக்கிறார்.அவர் மட்டும் அல்லாவின் விதிகளை மீறலாமா?.இன்ன்னும் பல விதி விலக்குகள் அனுமதிக்கப் பட்டு உள்ளது. ஒரே இறைவன் ஏன் பாரபட்சம் காட்ட வேண்டும்?.

  இந்த வசனம் பத்ரு போருக்கான நியாயப் படுத்தல்.ஆனால் போரை தொடங்கியது முஸ்லிம்களே. இவ்வசனத்தில் இருந்தே புனித‌ மாதங்கள்
  முடிந்த பிறகு கூட நடத்தி இருக்க முடியும் என்ற போதும் போர் தொடுக்கப் பட்டது.

  2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

  1. இது போரா அல்லது கொள்ளை முயற்சியா?
  2. புனித மாதங்களில் முஸ்லிம்கள் போர் தொடங்கலாமா?
  3.இதனை அல்லா மன்னிக்கலாமா?
  4. சனிகிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை மாறியது எப்போது?குரான்,ஹதிதில் இருந்து ஆதாரம் காட்டவும்.
  5.இந்த யூதர்கள் குரங்கான விஷயம் முந்தைய வேதங்களில் குறிப்பிட பட்டு உள்ளதா?.நான் அறிந்தவரை இல்லை.

 38. வால் பையன்
  //கோபமடைந்த அல்லா, சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது என்று தண்டனை விதிக்கிறார்.//
  தண்டனை ரொம்ப மோசமா இருக்கே!
  அல்லா இவ்ளோ பெரிய காமெடி பீஸ்னு ஏன் நீங்க முன்னாடியே சொல்லல!
  தோழரே. வார விடுமுறையை இஸ்லாம் அப்போதே அறிமுகப் படுத்தியதை கொஞ்சம் எண்ணி பாருங்கள்
  வார விடுமறை விடாத தொழில் நிறுவனங்களை தொழிலாளர் நல அதிகாரி கண்டிப்பது இல்லையா? !

 39. //வார விடுமுறையை இஸ்லாம் அப்போதே அறிமுகப் படுத்தியதை கொஞ்சம் எண்ணி பாருங்கள்
  வார விடுமறை விடாத தொழில் நிறுவனங்களை தொழிலாளர் நல அதிகாரி கண்டிப்பது இல்லையா? !//

  பொருள் சார்ந்த சமூகம், தொழில் உருவாகுவதற்கு முன்னர், மனிதன் வேட்டையாடி உணவை பெற்றான், அப்பொழுதெல்லாம் தேவைக்கு மட்டுமே வேலை, வார விடுமுறை என்று தனியாக இல்லை, மனிதன் தன் தேவைக்கு வகுத்து கொண்டதை கடவுள் பெயரில் செய்தால் பயந்து எல்லாரும் செய்வாங்கன்னு உருவாக்கப்பட்டது, அதே போல் தன் தேவைக்காகவும் முகமதுவால் கடவுள் வாக்கு என சொல்லபட்ட பல வசனங்கள் குரானில் இருக்கு நண்பரே!

 40. வால் பையன்
  ///உருவ வழிபாடு செய்பவர்கள் கூற்று என்ன?//
  அவர்கள் கூற்று எங்களுக்கு ஒரு பொருட்டல்ல .வழிபாடு என்பது எவ்வாறு என்பதை முகம்மதுநபி[ஸல்] அவர்கள் காட்டித் தந்திருக்கிரார்கள்.அதன் பலன் மறுமையிலே என்கிறது இஸ்லாம்.

 41. V.P.///பொருள் சார்ந்த சமூகம், தொழில் உருவாகுவதற்கு முன்னர், மனிதன் வேட்டையாடி உணவை பெற்றான், அப்பொழுதெல்லாம் தேவைக்கு மட்டுமே வேலை, வார விடுமுறை என்று தனியாக இல்லை/////
  யூனுஸின் காலம் கி.மு.780 இந்த காலத்தில் மனிதன் தேவைக்கு மட்டுமே வேலை செய்தான் என்பதற்கு ஆதாரங்கள் உண்டா

 42. //யூனுஸின் காலம் கி.மு.780 இந்த காலத்தில் மனிதன் தேவைக்கு மட்டுமே வேலை செய்தான் என்பதற்கு ஆதாரங்கள் உண்டா//

  காலத்துக்கு ஏத்தா மாதிரி கடவுள் கருத்தை மாத்திகுவாரோ!, அதே போல் கடசி தூதர் முகமது என்ற கூற்றையும் மாற்றலாம் இல்லையா! இன்னொருவர் நான் தான் கடைசி தூதர் என்றால் ஒத்துகொள்வீர்களா!?

 43. சங்கர் ,பலமுறைகள் ,தவணைகள் பிறகே தண்டனை கொடுக்கபட்டிருக்கும் மேலும் காலப்போக்கில் தணடனைகள் குறையவே செய்யும்.
  மூன்று வெள்ளிகிழமை தொடர்ந்து வணக்கம் செய்ய வில்லை என்றால் அவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடுவதாக ஹதீத்கள் தெரிவிக்கின்றன.
  1. இது போரா அல்லது கொள்ளை முயற்சியா?
  தன்னையும் தனது சகாக்களையும் உடமைகளை விட்டு விரட்டியவர்களை ,போரிட்டு கைது செய்வதும் பொருட்களை கைப்பற்றுவதும் எப்படி கொள்ளை முயற்சியாகும்?பேரழிவு ஆயுதங்கள் என்று பெரும் பொய்யை சொல்லி எண்ணையை கொள்ளையடித்து இஸ்ரேல் மூலம் உறிஞ்சும் கொடுமையை கேட்க நாதி இல்லாதவர்கள் இஸ்லாத்தை பற்றி என்னவெல்லாம் பேசுகிறார்கள்?
  2. புனித மாதங்களில் முஸ்லிம்கள் போர் தொடங்கலாமா?
  3.இதனை அல்லா மன்னிக்கலாமா?
  பத்ருவை நோக்கி போருக்கு வந்து கொண்டிருப்பவர்களை ரமலான் முடியட்டும் போருக்கு வருகிறோம் என்று சொல்ல வேண்டுமா?
  4. சனிகிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை மாறியது எப்போது?குரான்,ஹதிதில் இருந்து ஆதாரம் காட்டவும்.
  முகம்மது நபி[ஸல்] காலத்தில் தான் வெள்ளிகிழமை ஜும்மா நாளாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது .ஹதீதில் ஆதாரம் கேட்டோ ,தேடி பார்த்துத்தான் தரமுடியும்
  5.இந்த யூதர்கள் குரங்கான விஷயம் முந்தைய வேதங்களில் குறிப்பிட பட்டு உள்ளதா?.நான் அறிந்தவரை இல்லை
  எங்களுக்கு அது அவசியமில்லை.உங்களுக்கு தேவை என்றால் ஆய்வு செய்து கொள்ளுங்கள்.

 44. V.P///கடைசி தூதர் முகமது என்ற கூற்றையும் மாற்றலாம் இல்லையா///
  கடைசி தூதர் ,இனிவரும் மக்களுக்கேற்றவாறு சட்டங்கள் தந்தாகிவிட்டது .இனி தூதர் இல்லை என உறுதி யாக்கப் பட்டு விட்டது இதை நம்பியவர்களே முஸ்லிம்கள். உங்களின்கற்பனைக்கு அவசியமென்ன?

 45. //கடைசி தூதர் ,இனிவரும் மக்களுக்கேற்றவாறு சட்டங்கள் தந்தாகிவிட்டது .இனி தூதர் இல்லை என உறுதி யாக்கப் பட்டு விட்டது இதை நம்பியவர்களே முஸ்லிம்கள். உங்களின்கற்பனைக்கு அவசியமென்ன?//

  மக்களுக்கு ஏற்றவாறு சட்டங்களா?

  நாலு பொண்டாட்டி கட்டலாம்,
  பொண்டாட்டியை அடிக்கலாம்,
  இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லலாம்

  அடடே அருமையான சட்டம் தான் போங்க!

  உங்க நம்பிக்கையில எதை கொண்டு அடிச்சாலும் அசையாது என்பது மிகுந்த மகிழ்ச்சி!, நடந்தால் தான் மனிதன், நின்று கொண்டேயிருந்தால் மரம்!

 46. யூதர்களின் வேதப் படி உலகை ஆறு நாட்களில் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்து இருந்ததால் சனிக்கிழமையை அவர்கள் புனித நாளாக கடை பிடித்து அந்த நாளில் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள்.

  அதையே கிறித்தவர்கள் இறைவன் திங்கள் கிழமை ஆரம்பித்து(இறைவன் அரசு ஊழியரா?) சனி ஆறாம் நாள் என்று ஞாயிறு ஓய்வுநாள் என்கிறார்கள்.
  வரலாற்றின் படி கிறித்தவன் ரோம பேரரசின் அரசாங்க மதம் ஆன பிறகு சூரியனின் நாளான ஞாயிறே சனிக்கிழமைக்கு பதிலாக ஏற்று கொள்ளப் பட்டது.

  கிறித்தவத்தில் ஒரு பிரிவான செவந்த் டே அட்வென்டிஸ்ட் கும்பல் சனிக்கிழமையெ புனித நாள் என்று கூறுகின்றனர்.

  இஸ்லாமியர்கள் எப்படி வெள்ளிக்கிழமையை புனித நாளாக ஏற்று கொண்டார்கள்?

  குரானில் வெளிப்பாடு இல்லை

  ஹதிதில் இப்படி கூறப் படுகிறது.

  3486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  (உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும்.
  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

  இந்த ஹதிதில் இருந்து யூதர்களும் ,கிறித்தவர்களும் திரு முகமதுவை இறைத்தூதராக ஏற்று கொள்ளாத படியால அவரால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை என்று ஆகிவிட்டது.

  வெள்ளிக்கிழமை என்பது அல்லா சொல்ல வில்லை,முகமது
  ____________
  யூதர்களுக்கும்,கிறித்தவர்களுக்கும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக செய்தது. ஆல் இன் ஆலின் தாடி பதிவு மாதிரி(நன்றி திரு வால் பையன்).

 47. V.P.நாலு பெண்கள் திருமணம் என்பது அவசியத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.நீங்கள் ஏக பத்தினி யாளரா?மனைவித்த் தவிர மற்றவர்களை தேடி அலைபவர்களை ,தாங்கள் அறியமாட்டீர்களா?
  பெண்டாட்டியை அடிக்கலாம் என்று இஸ்லாம் எங்கே சொல்லுகிறது? இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லலாம் என்று ரமாகோபாலனாக பேசுவதை தவிருங்கள்.மிருகமும் அடித்தால் நகரவேசெயும்

 48. //V.P.நாலு பெண்கள் திருமணம் என்பது அவசியத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.//

  அவசியம் காலத்திற்கு மாறும் என்பது தெரிந்து எப்படி குரானில் சொல்லப்பட்டது. மாற்றம் பெற வேண்டிய ஒன்று குரானில் இருப்பின், குரான் எப்படி எல்லா காலத்துக்கும் பொருந்தும் ஒன்றாகும்!?, அப்ப இன்னொரு வேதத்துக்கு நாங்கள் காத்திருக்கனுமா!?

  //நீங்கள் ஏக பத்தினி யாளரா?மனைவித்த் தவிர மற்றவர்களை தேடி அலைபவர்களை ,தாங்கள் அறியமாட்டீர்களா?//

  பத்து பொண்டாட்டி கூட கட்டிக்கோ, ஆனா அதனை மதத்தின் பெயரில் நியாயபடுத்தாதே என்பதே என் வாதம். மனைவியை தவிர ஆண்கள் வேறு பெண்களை தேடுகிறார்கள் ஒத்துகிறேன் அதேபோல் மனைவியும் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா!?

  //பெண்டாட்டியை அடிக்கலாம் என்று இஸ்லாம் எங்கே சொல்லுகிறது?//

  ரைட்டு, நீங்க நேத்து தான் இஸ்லாத்தில் சேர்ந்தீர்களா?.

  // இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லலாம் என்று ரமாகோபாலனாக பேசுவதை தவிருங்கள்.மிருகமும் அடித்தால் நகரவேசெயும்//

  இறைமறுப்பாளர்களை கொல்வதால் அல்லா மகிழ்ச்சியடைகிறான் என்ற வசனம் குரானில் இல்லவேயில்லையா!?

  யார் ராமகோபாலன், உங்க அண்ணனா நண்பரே!

 49. பெண்டாட்டியை அடிக்கலாம் என்று இஸ்லாம் எங்கே சொல்லுகிறது?

  மனைவியை அடிக்கலாம் என்று சொல்லும் குரான் வசனம்.

  4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

 50. கணவன் மன‌வியை அடித்ததை பஞ்சாயத்து ச்ய்யும் முகமது
  ________________________________

  5825. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
  ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
  (ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.
  -(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி
  (நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, ‘இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது’ என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.
  அப்பெண்மணி, ‘(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை’ என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், ‘பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்’ என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ ‘அனுமதிக்கப்பட்டவள்’ அல்லது ‘ஏற்றவள்’ நீ ‘அனுமதிக்கப்பட்டவள்’ அல்லது ‘ஏற்றவள்’ அல்லள்’ என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ‘இவர்கள் உங்கள் புதல்வர்களா?’ என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்’ என்றார்கள்.45
  Volume :6 Book :77
  ________________________

  இதற்கு விளக்கம் சொல்ல விரும்பவில்லை.நீங்களே விளங்கி கொள்ளுங்கள்.

 51. கீழே உள்ளவை எல்லாம் எனக்கு மிகவும் “பிடித்து விட்டது”!

  இப்படி ஒன்றுமே நடக்காவிட்டால் இறைவன் இருப்பதற்கு என்ன அத்தாட்சி?(அதாவது ஏதாவது ஒரு ‘குண்டக்க மண்டக்க”!)

  சுறா வாக இருந்தால் சரியாக இருக்கும் திமிங்கிலம் பாலூட்டி வகை என்கிறாரே ஏன்?/(ஏங்க இப்படி அறிவியலுக்கு எதிரா பேசுறாங்க?)

  /அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்பது குர் ஆன் கூறும் உண்மை.// (படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்!)

  தோழரே. வார விடுமுறையை இஸ்லாம் அப்போதே அறிமுகப் படுத்தியதை கொஞ்சம் எண்ணி பாருங்கள். (அல்லா எவ்வளவு தொழிலாளர் மேம்பாடு பற்றி யோசித்திருக்கிறார்!)

  !பெண்டாட்டியை அடிக்கலாம் என்று இஸ்லாம் எங்கே சொல்லுகிறது? (எந்தக் குச்சி, எந்த எலும்பு அப்டில்லாம் சொல்லியிருக்கிறது பொய்யோ?)

 52. வால்பையன்,
  //நண்பரே ,இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப் பட்ட வேதம் வேறு. சமூக சூழ்நிலைக்கேற்ப குர் ஆன் கொடுக்கப்பட்டது.அதன் சட்டம் வேறு உங்களுக்கு இனிப்பு அவசியம்..எனக்கு இனிப்பு பத்தியம்//

  ஒரே கடவுள் மாறி மாறி வேதங்களை கொடுத்தால், கடவுளே குழப்பத்தில் இருக்கிறார் என்று தானே அர்த்தம்!

  வால்ஸ்,
  இதைப் பற்றி கேட்டா பதிலே வருவதில்லை. ஏன்னு உங்களுக்குத் தெரியுமா?

 53. ///புரிதலில்லாதகலையே ,இறைவன் வழிகாட்டுதல் இல்லாமல் தூதர் நடந்து கொண்டதால் யூனுஸ் தண்டிக்கப்பட்டு மக்கள் விடுவிக்கப்படுகிறார்கள்///

  மிகவும் புரிதலுள்ள இபுறாஹீமே!

  யூனுஸ் கிளம்பிய பிற்பாடுதான் வேதனை வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன. அதை உணர்ந்த அம்மக்கள் அதன் பிறகே இறைவனை இறைஞ்சுகிறார்கள். அவர்களின் இறைஞ்சுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் அழிவிலிருந்து காப்பற்றப்படுகிறார்கள் என்பதாகவே சொல்லப்படுகிறது. ஆனால், மறுமை நாளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்ட பிறகு ஈமான் கொள்பவர்களின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது என முஹம்மது கூறுகிறார். ஏன் இந்த பாரபட்சம்?

 54. தோழர் சங்கர்,

  இவ்வளவு தெளிவான வசனம் குரானில் இருந்தும், எங்கே மனைவியை அல்லா அடிக்கச் சொன்னார் என தைரியமாக கேள்வி கேட்கிறார்கள் என்றால்,கடவுளின் வாக்கில் கண்டிப்பாக குறை இருக்காது என்ற குருட்டு நம்பிக்கையும், இருந்துவிட‌க்கூடாது என்று கண்காணித்து காப்பாற்றியும் வருகிறார்கள் என்பதும் தெளிவு.

 55. ஒரு உலகம் ஒரே கடவுள் எனில் ஒரே வேதம் அதுவும் முதலும் இறுதியுமாக இருந்திருக்க வேண்டும்.சூழ்நிலைக்கேற்ப் வேதத்தை மாற்றியமைப்பதைவிட எங்கும் எதிலும் ஒரே சூழ்நிலையை அந்தக் கடவுளே உருவாக்கித் தந்திருக்க வேண்டும்,அவனே அனைத்தும் அறிந்தவனுக்குத் தகுதியானவன்.(எ.கா. குரான் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது என இன்று குருட்டு நம்பிக்கையில் இருப்பதைப் போன்று முதல் வேதத்தை அன்றே நம்ப வைத்திருக்க வேண்டும்) காலத்திற்கு ஏற்ப வேதம் கொடுப்பதென்பது ஒரு சாதாரண மனிதனின் செயல். வேதங்கள் யாவும் மனிதர்களால் எழுதப்பட்டது என்பதால்தான் இத்தனை குழப்பங்கள். ஆக கடவுளையும் வேதத்தையும் அறிமுகப்படுத்தியவன் மனிதனே!

 56. ஏதோ தெரியாம சொல்லீட்டாங்க…..

  விட்டலாச்சாரியார் என்ன இந்தக் காலத்தில் மட்டுமே இருந்திருந்திருப்பாரா?

  அந்தக் காலத்திலும் ஒரு விட்டலாச்சாரியார் இருந்துள்ளார்.

  மதம் கொண்டவர்கள் அனைவரும் காமடி பீஸ் என்று அந்த விட்டலாச்சாரியாருக்குத் தெரியும். காமடிப் பீஸ்களின் எண்ணிக்கைக் கூடிவிட்டதென்று காமடி பீஸ்களே கூறுகின்றன.

 57. //ஆக கடவுளையும் வேதத்தையும் அறிமுகப்படுத்தியவன் மனிதனே!//

  வேதங்கள் என்பதை கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புரியும்.

  1. வேதங்களில் கூறப்படும் சம்பவங்கள் அக்கால வாழ்க்கையை,தர்ம நியாயங்களையே பிரதி பலிக்கும்.

  2.வேதத்தின் காலமும் ,அறிவியல்,மனித விரோத கருத்துகளும் எதிர்மறை விகிதம் உடையது.அதாவது வேதம் பழமையாக இருந்தால் கருத்துகள் மிக முரண்படும். வேதத்தின் காலம் கொஞ்சம் அருகில் இருந்தால் முரண்பாடுகள் குறையும்.

  3.குரான் எழுதப்பட்டது,யூத ,கிறித்தவ வேதங்களில் சில முரண்படுகளை தவிர்த்து என்று கூற முடியும்.ஆதம் தோன்றியது 6000 ஆண்டுகளுக்கு முன் என்று யூத கிறித்தவ வேதங்கள் கூறும் போது குரான் அதை பற்றி கூறுவது இல்லை. அது போல கால அளவுகளுக்கு குரான் இடம் தருவதே இல்லை.

  அப்படியும் சில முரண்பாடுகள் இருப்பதற்கு
  அக்காலத்தில் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

  4. குரானில் விட்டுப் போன விஷயங்களை ஹதிது என்பபடும் தூதர் வார்த்தைகளை கொண்டு நிரப்புகிறார்கள்.

  குரான் : அல்லா கூறியதாக முகமது கூறியது.

  ஹதிது: முகமது கூறியதாக அவர் சிஷ்யர்கள் கூறியது.

  குரான் மொழி பெயர்ப்புகள் இப்போது சுலபமாக கிடைப்பதால் அனைவராலும் சில விஷயங்களை சரி பார்க்க முடிகிறது என்றாலும் மொழிபெயர்ப்புகளில்
  உள்ள வித்தியாசங்களும்,பல விளக்கங்களௌம் ஒரு சாதாரண இஸ்லாமியரை ஏதாவது ஒரு பிரச்சாரகர்ரின் கருத்துக்கு தலையாட்டும்படி செய்து விடுகிறது.

  ____________

  குரானில் சுன்னத் பற்றி கூறப்படவில்லை.

  உதுமான் குரானுக்கு புள்ளி கோடு வைத்து எழுத்து சீர்திருத்தம் செய்யப் பட்டது.

  முகமதுக்கு பிந்தை 200 ஆண்டுகள் வாரிசுப் போர்களே நடை பெற்ற‌து.

  போன்ற விஷயங்கள் பல இஸ்லாமியர்களுக்கு தெரியாது.
  ___________________________

 58. v.p
  ///அப்ப இன்னொரு வேதத்துக்கு நாங்கள் காத்திருக்கனுமா!////
  கடைசிநாள் வரை ஏற்படும் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டே அதிகபட்சமாக நான்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  ///பத்து பொண்டாட்டி கூட கட்டிக்கோ, ஆனா அதனை மதத்தின் பெயரில் நியாயபடுத்தாதே என்பதே என் வாதம். மனைவியை தவிர ஆண்கள் வேறு பெண்களை தேடுகிறார்கள் ஒத்துகிறேன் அதேபோல் மனைவியும் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா!////
  அந்த தேடுதலை தவிர்ப்பதற்கும் சட்டபூர்வமாக பெண்களின் அந்தஸ்த்தை உயர்த்துவதற்கும் ,தேடுதலுக்கு வரம்பு நிர்ணயிப்பதற்கும் இஸ்லாம் வழி காண்கிறது. பெண்களுமே நான்கு கணவர் வைத்துக் கொண்டால் உலகம் குழப்பமய மாகிவிடும்.உங்களுக்கு தெரிந்த பெண்களை வேண்டுமானால் அதை நடைமுறைபடுத்தி பார்க்க சொல்லுங்கள்.
  ///இறைமறுப்பாளர்களை கொல்வதால் அல்லா மகிழ்ச்சியடைகிறான் என்ற வசனம் குரானில் இல்லவேயில்லையா!?///
  நீங்கள் காட்டுங்கள் ,விளக்கம் அதிலேயே இருப்பதை பார்க்கலாம்.
  ///யார் ராமகோபாலன், உங்க அண்ணனா நண்பரே///
  இஸ்லாத்திற்கு எதிராக துவேசம் பரப்பும் எங்க அண்ணன்தான் [இந்தியன் என்பதால்]

 59. சங்கர் ,இக்கட்டான சூழ்நிலையில் குடும்பம் நல்ல முறையில் தொடர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சொல்லி இருப்பதை நீங்களும் அறிந்து கொண்டே வால் பையன் தருமி போன்று கூறவருவது சரியன்று.மனைவியை தலாக் விடும் உச்ச கட்டத்திலும் லேசாக அடிக்குமாறு சொல்லுகிறது.ஒரு பெண்மணி தம் கன்னத்தில் அவர் கணவர் அறைந்துவிட்டதாக நபி[ஸல்]அவர்களிடம் முறையிட ,அதற்க்கான இழப்பீடு உண்டு என்று கூறினார்கள்.அதன் பின்னரே இந்த வசனம் அருளப்பற்றது.இதிலிருந்து கடைசி பட்ச கண்டனமாக தான் லேசான ,காயம் ஏற்படாதவாறு மனைவியை குடும்பம் பிரிந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே அடிக்க சொல்லுகிறது.மனைவியை அடிப்பவர்களுக்கு இது ஒரு எச்ச்சரிகையாகத்தான் உள்ளது.
  அடுத்து இக்ரிமா அறிவிக்கும் ஒரு ஹதீதை கூறியுள்ளீர்கள். இன்றைய நவ நாகரிக உலகில் தினசரி அடிபட்டு ,உதைபட்டு ‘கல்லானாலும் கணவன் “பல துயரங்களை பெண்கள் படும் அவஸ்தை. பல நாட்கள் படும் அடி பொறுக்காமல் தான்,ஒரு சிலர் போலிஸ் ஸ்டேசன் செல்லுகிறார்கள்.ஆனால் இங்கே பாருங்கள்.ஒரு அடி கூட பொறுக்காமல் நபி[ஸல்]அவர்களிடம் முறையிட ,கணவர் சாட்சிகளுடன் வந்து மறுப்பதையும் ,நபி[சல்]நீதி தவறாமல் விசாரிப்பதையும் இஸ்லாத்தின் பிரதிநிதியாக தாங்கள் ,நண்பர்கள் அறியும்வண்ணம் எடுத்து வைத்தமைக்கு நன்றிகள்

 60. தருமி ///இப்படி ஒன்றுமே நடக்காவிட்டால் இறைவன் இருப்பதற்கு என்ன அத்தாட்சி?(அதாவது ஏதாவது ஒரு ‘குண்டக்க மண்டக்க”!///
  ///அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்பது குர் ஆன் கூறும் உண்மை.// (படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்////!
  (அல்லா எவ்வளவு தொழிலாளர் மேம்பாடு பற்றி யோசித்திருக்கிறார்!
  ///எந்தக் குச்சி, எந்த எலும்பு அப்டில்லாம் சொல்லியிருக்கிறது பொய்யோ?///
  தருமி ,பண்பாடு கருமி .புரிதல் கம்மி
  ஒரே கடவுள் மாறி மாறி வேதங்களை கொடுத்தால், கடவுளே குழப்பத்தில் இருக்கிறார் என்று தானே அர்த்தம்!
  அன்று 21 வயதுக்கு வாக்குரிமை.அதன் பின் 18 வயதுக்கு வாக்குரிமை.இப்போது 16 வயதினருக்கும் வாக்குரிமை அளிக்க ஆலோசனை.இதற்க்கு பெயர் குழப்பமா

 61. டியர் இப்ராஹிம்!

  முகமதுவிடம் வந்த பஞ்சாயத்து பற்றியல்ல பேச்சு, மனைவியை அடிக்கலாம் என குரானில் இருந்தால் அது கடவுளே உத்தரவிட்டது மாதிரி தானே!

  //அன்று 21 வயதுக்கு வாக்குரிமை.அதன் பின் 18 வயதுக்கு வாக்குரிமை.இப்போது 16 வயதினருக்கும் வாக்குரிமை அளிக்க ஆலோசனை.இதற்க்கு பெயர் குழப்பமா//

  மனிதன் மாறி மாறி சிந்திக்கலாம், ஆனால் கடவுளுமா!?

  அடபோங்கப்பா! இந்த கடவுளுக்கு கட்டண கக்கூஸே மேல்!

 62. //நீங்களும் அறிந்து கொண்டே வால் பையன் தருமி போன்று கூறவருவது சரியன்று.//

  1.ஆண் பெண்ணை அடித்ததை அல்லா(குரான்),முகமது(ஹதிஸ்) மற்றும் நீங்கள் சாதாரணமாக எடுத்திக் கொள்கிறீர்கள்.

  2.(இலேசாக ) அடிப்பது மனைவியை திருத்தவே என்றால் கணவன் தவறு செய்தால் என்ன செய்வது?

  3. முகமது ஒரு என்னை போல்,உங்களைப் போல் ஒரு சாதாரண மனிதர் என்றால் அவர் வாழ்ந்த கால கட்டத்திற்கு அவர் செய்த நடைமுறைகளை தவ‌றென்று கூற முடியாது. ஆனால் அவர் இறைத்தூதர்களிலேயே சிறந்தவர், இறுதி தூதர்,இறுதி வேதம் கொண்டு வந்தவர் என்றால் அவர் செயல் சிறந்ததாக கூற முடியாது.
  அவரின் செயல்கள் மிக சிறந்த்தாக எக்காலத்திற்கும் பொருந்தும் வண்னம் இருக்க வேண்டும்.

  4. ஹதிதை விடுங்கள்,குரானாவது அடிப்பதை கோடிட்டு காட்டாமல் இருந்திருக்கலாம்

  //நபி[சல்]நீதி தவறாமல் விசாரிப்பதையும் இஸ்லாத்தின் பிரதிநிதியாக தாங்கள் ,நண்பர்கள் அறியும்வண்ணம் எடுத்து வைத்தமைக்கு நன்றிகள்//

  5. இப்படி ஆகி விட்டதா?.சரி பரவாயில்லை .நான் பிரதிநிதி, இராம கோபாலன் அண்னன் என்கிறீர்கள். இரண்டு குரான் வசன்ம்,ஒரு ஹதிது சொன்னால் பிரதிநிதியா?.இப்படித்தான் பலர் பிழைப்பே ஓடிக்கொண்டு இருக்கிறது.

  நான் அந்த இராம கோபாலனை மனிதன் என்றே சொல்வதில்லை.

  அந்த ஹதிதில் குறிப்பிட்ட விஷயங்களை ஒரு இறைத்தூதரின் சிறந்த நீதியென்று என்னால் ஏற்று கொள்ள முடியாது.அவர் கணவன் அடித்ததை கண்டிக்க வில்லை.முகமதுவின் மனைவி கூட அப்பெண்ணின் காயத்தை காட்டி ஆறுதல் சொல்கிறார்.உங்கள் நபிக்கு திரு அப்துல் ரகுமான் மிகவும் வேண்டப்பட்டவர் என்றே தோன்றுகிறது.
  __________

  அப்புறம் சனிக்கிழமை ஓய்வுநாள் எப்போது, வெள்ளிக்கிழமையாக மாறியது என்பதை சொல்லுங்கள்.
  குரானில் இல்லை.புஹாரியில் முதலில் எப்போது ஜுமா தொழுகை வெள்ளிக் கிழமை நட‌ந்தது என்ற விவரம் இல்லை.
  சனிக்கிழமையின் முக்கியத்துவத்தை குரான் கூறுவதை பாருங்கள்.
  ____________
  16:124. “சனிக்கிழமை (ஓய்வு நாள்)” என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் – நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்
  ___________________

  இவ்வளவு சனிக்கிழமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இறைவன் ஏன் வெள்ளிக்கிழமைக்கு மாற்ற வேண்டும்? அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே.

  வெள்ளிக் கிழமையின் மகத்துவம் என்ன?
  ________________

  62:9. ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

  இந்த வசனம் வெள்ளி ஜுமா தொழுகை என்று கூறா விட்டாலும். அன்று வியாபாரம் செய்யலாம் தொழுகையின் போது மட்டும் நிறுத்தலாம் என்று கூறுகிறது.

  மீன் பிடித்தால் குரங்கு ஆக்குவார்,வியாபாரம் செய்ய அனுமதிப்பாரா?
  _______________
  ////இறைமறுப்பாளர்களை கொல்வதால் அல்லா மகிழ்ச்சியடைகிறான் என்ற வசனம் குரானில் இல்லவேயில்லையா!?///
  நீங்கள் காட்டுங்கள் ,விளக்கம் அதிலேயே இருப்பதை பார்க்கலாம்.//
  குரானில் வசனம் வேண்டுமென்றால் நான் தருகிறேன்.
  ____________
  8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
  ____
  அல்லா பத்ரு போரில் வியாபாரக் கூட்டத்தை அளிக்காமல் போர்வீரர்களுடன் சண்டையிடும் வாய்ப்பை அளித்ததாக முகமது தன் வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டுகிறார்.

  காஃபிகளை கொலவதை இறைவன் விரும்புகிறான் என்று வசனம் கூறுகிறது.
  நீங்கள் விளக்குங்கோ
  __________________

 63. ex rafi///முதலும் இறுதியுமாக இருந்திருக்க வேண்டும்.சூழ்நிலைக்கேற்ப் வேதத்தை மாற்றியமைப்பதைவிட எங்கும் எதிலும் ஒரே சூழ்நிலையை அந்தக் கடவுளே உருவாக்கித் தந்திருக்க வேண்டும்,///
  இறைவன் இது பற்றி உங்களிடம் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை

 64. இராவணன் .///விட்டலாச்சாரியார் என்ன இந்தக் காலத்தில் மட்டுமே இருந்திருந்திருப்பாரா///
  இறைவனின் அற்புதங்களை நேரில் கண்டவர்களில் ஒரு சிலரின் கற்பனையே விட்டலாச்சாரியாருக்கு முன்மாதிரிகள்.

 65. இபுறாஹிம்,
  //இறைவன் இதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை//

  உருப்படியாக சுயமாக ஆலோசிக்கக்கூட தெரியாத கையாலாகாத அரபுநாட்டு கற்பனைக் கடவுளும் அவசியமில்லை.

 66. எக்ஸ்ரபி///இத்தனை குழப்பங்கள். ஆக கடவுளையும் வேதத்தையும் அறிமுகப்படுத்தியவன் மனிதனே///
  எழுத, படிக்க தெரியாத ஒரு மனிதரால் இந்த காலத்திலும் 150 கோடி மக்களால் பின்பற்றக்கூடிய வழிகாட்டுதலை தந்திருக்க முடியுமா?இப்போதைய அறிவுலக மேதைகளின் சட்டங்களிலே எத்தனை ஓட்டைகள்?எத்தனை குழப்பங்கள்? ஐம்பது ஆண்டுகளுக்கு கூட நிற்க முடியாமல் உங்களது ஆசான்கள் மாபெரும் மேதைகள் ஏங்கல்ஸ்,மார்க்ஸ் கோட்பாடுகள் எல்லாம் காயலான் கடைக்கு வந்துவிட்டதே |
  மேலும் அரபுநாட்டு கடவுள் அவசியப்படாத உங்களுக்கு அரபு நாட்டு பெயர் மட்டும் தேவைப்படுவது ஏனோ

 67. கலையே ///யூனுஸ் கிளம்பிய பிற்பாடுதான் வேதனை வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன. அதை உணர்ந்த அம்மக்கள் அதன் பிறகே இறைவனை இறைஞ்சுகிறார்கள்////
  இந்த விஷயம் குர் ஆனில் இல்லை என்று .உங்களது செங்கொடி எங்கே எடுத்தார்?அவரிடம் கேளுங்கள்.
  உங்களில் பலர் குர் ஆனில் தவறு காண முடியவில்லையே என்று முந்தைய சமுதாயத்திற்கு சொல்லப்பட்டதையும் , இப்போதைய மக்களுக்கு சொல்லப்பட்டதையும் போட்டு குழப்பி கேட்டு கொண்டிருப்பதே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள். .

 68. இபுறாஹீமே,

  10:98; 21:87; 37:139-149 ஆகிய வசனங்களை படிக்கவும்.

  வசனம் 10:98. ல் வேதனை இறக்கப்படும் சமயம் விசுவாசம் கொள்பவர்களின் விசுவாசம் பயனளிக்காது, யூனுஸ் சமுதாயத்தினரைத் தவிர என்றும் ”அவர்கள் நம்பிக்கைக் கொண்ட பொழுது , உலக வாழ்வில் இழிவான வேதனையை விட்டும் நாம் நீக்கினோம்” என்றும் கூறப்பட்டுள்ளதே!

 69. .///மனிதன் மாறி மாறி சிந்திக்கலாம், ஆனால் கடவுளுமா!?
  அடபோங்கப்பா! இந்த கடவுளுக்கு கட்டண கக்கூஸே மேல்////
  மனிதனின் சிந்தனைகள் மாறக்கூடியதை இறைவன் அறிந்தவன்.அவன் சிந்தனைகளுக்கு தகுந்தவாறு அவனுக்கு வாய்புகள் கொடுத்தே தனக்கும் கட்டுபட வாழ்வியல் வகுப்பவனே இறைவன்

 70. sankar////ஆண் பெண்ணை அடித்ததை அல்லா(குரான்),முகமது(ஹதிஸ்) மற்றும் நீங்கள் சாதாரணமாக எடுத்திக் கொள்கிறீர்கள்///
  கணவன் குடும்பத்தலைவன் ,நிர்வாகி என்னும்போது குடும்ப நலன் கருதி பாம்பும் சாகவேண்டும் கம்பும் ஒடியக் கூடாது என்பது போன்று பிரச்சனையும் தீரவேண்டும் மனைவிக்கும் காயம் ஏற்படக் கூடாது என்பது போல ,மனித உரிமைகழகம் போல குரான் இங்கே தனது தீர்வை வைத்துள்ளது .
  கணவன் மனையரிடையே விவாகரத்து படித்தரங்களை குர்ஆன் சொல்லுவதை தலையில் தூக்கிக் கொண்டு ஆடும் பொது வுடைமை வாதிகளே | நீங்களே கைவிட்ட உங்களது பண்ணை வாழ்க்கை ஒருபுறம் இருக்கட்டும் .போலி பொதுவுடைமை வாதிகளைத் தவிர உங்கள் உண்மை பொதுவுடமைவாதி களின் மனைவியரின் மத்தியில் ஒரு சர்வே நடத்தி உங்களில் மனைவியரை அடிப்பவர்கள் அடித்தவர்கள் 5 % முதல் 10 %வரை இருப்பார்கள்; இல்லை என்று நிருபித்து காட்டுங்கள்.
  மேலும் கணவன் அடிப்பவராக இருந்தால் அவள் குலா முறையில் விவாக ரத்து முறையும் உள்ளது.
  ////இலேசாக ) அடிப்பது மனைவியை திருத்தவே என்றால் கணவன் தவறு செய்தால் என்ன செய்வது/
  மன்னர் தவறு செய்தால் மன்னரை மாற்றிவிட வேண்டும்

 71. //உங்களில் மனைவியரை அடிப்பவர்கள் அடித்தவர்கள் 5 % முதல் 10 %வரை இருப்பார்கள்; இல்லை என்று நிருபித்து காட்டுங்கள்.//

  நீங்க பெய ஆள் நண்பரே.எப்படி சொல்ரீங்க?

  அப்படியே மனைவியிடம் அடி வாங்குபவர்களுக்கும் கணக்கு சொல்லுங்க. கணக்கு சரியா வந்தால்தான் நிரூபிக்க முடியும் .

 72. தோழரே,

  அத்தியாயம் 37 வசனம் 139‍‍‍‍‍‍‍ முதல் 147 வரை:

  யூனுஸ் நன்னெறியாளர்களில் ஒருவராவார்.

  அவர் வழிதவறிய‌ குற்றமிழைத்து நஷ்டவாளியானார்.

  இழிந்தவரான அவரை இருள் விழுங்கியது.

  அவர் மனம்திருந்திய ஒருவ்ராக இல்லையெனில் உயிர்த்தெழும் நாள்வரை துன்பமே குடிகொண்டிருக்கும்.

  ஆக வாடிய அவரை மீளச்செய்தோம்.

  அவர் துளிர்த்தெழவும் செய்தோம்.

  பின்பு நூறாயிரத்திற்கும் மேலானவர்களிடம் அனுப்பிவைத்தோம்.

  quranist@aol.com

 73. S.Ibrahim, on ஜனவரி17, 2011 at 5:48 AM said:
  பெண்டாட்டியை அடிக்கலாம் என்று இஸ்லாம் எங்கே சொல்லுகிறது?

  ****

  இதன்படி, இவருக்கு இந்த நிமிடம் வரை (ஜனவரி17, 2011 at 5:48 AM ) >பெண்டாட்டியை அடிக்கலாம் என்று குரான் சொல்லியுள்ளது தெரியவில்லை.

  இவர் வயது 25 என்று கொண்டால்கூட இதுவரை குரான் முழுவதும் தெரியாத ஒருவராகவே வாழ்ந்துள்ளார்.

  =====

  SANKAR, on ஜனவரி17, 2011 at 6:48 AM said:

  மனைவியை அடிக்கலாம் என்று சொல்லும் குரான் வசனம் எது என்று சங்கர் ஜனவரி17, 2011 at 6:48 AM அன்று இந்த வசனத்தைச் 4:34. சொல்கிறார்.

  ===
  அப்படி ஒரு வசனம் இருப்பதே தெரியாமல் , அடுத்தவர்கள் (குரானையும் இஸ்லாத்தையும் நம்பாதவர்கள்) சொன்னதை வைத்து அறிந்து கொண்ட இவர் உடனே அதற்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

  ===

  S.Ibrahim, on ஜனவரி18, 2011 at 6:25 AM said:

  சங்கர் ,இக்கட்டான சூழ்நிலையில் குடும்பம் நல்ல முறையில் தொடர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சொல்லி இருப்பதை நீங்களும் அறிந்து கொண்டே வால் பையன் தருமி போன்று கூறவருவது சரியன்று.

  ***

  குரானை முழுவதும் படித்து அப்புறம் மதத்‌தை ஏற்றுக்கொள்ளலாம் பிடித்து இருந்தால்.

  என்ன ஏது என்று தெரியாமலேயே பெற்றோர்களால் சிறுவயதிலேயே நேர்ந்துவிடப்பட்டவர்களாகததான் பலர் உள்ளார்கள்.

  :-((((

  .

 74. மக்காவில் முஸ்லிம்களுக்கு கொடுத்த தொல்லை தாங்காமல் மதினாவிற்கு வந்த பின்பும் யூதர்கள் மற்றும் பகைவர்கள் மூலமும் தொல்லை கொடுத்து வந்தனர். மதினாவில் முஸ்லிம்களின் வளர்ச்சியைக் கண்டு மதினாவில் போர் தொடுக்க மக்கா இறை நிராகரிப்பாளர்கள் திட்டமிட்டு ஆயுதங்கள் வாங்குவதற்க் காண நிதி திரட்ட அபு சுப்யான் தலைமையில் ஒரு குழு சிரியா சென்று பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும்லாபத் தொகையைக் கொண்டு ஆயுதம் வாங்க திட்டமிடுகிறது.இதையர்ந்த நபி[ஸல்]
  sankar////காஃபிகளை கொலவதை இறைவன் விரும்புகிறான் என்று வசனம் கூறுகிறது.
  நீங்கள் விளக்குங்கோ////

  அவர்கள் அபுசுப்யானை வழிமறிக்க வேண்டும் என்ற நோக்குடன் தனது தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள் .ஆனாலும் வணிகக் குழு தப்பிவிட்டது.மேலும் வணிக குழுவை காப்பாற்ற அபு ஜஹ்ல் தலைமையில் மக்காவிலிருந்து ஒரு படை வருகிறது.அபு சுப்யான் தான் தப்பிவிட்டதை அபு ஜஹ்ல் க்கு செய்தி அனுப்பிய பிறகும் வெறியுடன் முஸ்லிம்களை தாக்கவேண்டும் என்று பதர் நோக்கி அவன் படை வருகிறது.அப்போது முஸ்லிம்களில் சிலர் அபுசுப்யான் உடைய வாணிக கூட்டம் தப்பிய பிறகு அபு ஜஹ்ல் இடம் ஏன் போர் செய்ய வேண்டும்?என்று விவாதித்த சமயத்தில் அருளப் பற்ற வசனத்தை குறிப்பிட்டுள்ளீர்கள். வணிக கூட்டத்தை காப்பாற்ற வந்த அபு சுப்யான் அவர் மக்கா வந்து சேர்ந்து விட்டதாகவும் அபு ஜஹ்ல் ஐ மக்காவிற்கு திருப்புமாறு கூறிய பிறகும் தன்னிடம் படை பெரிதி முஸ்லிம்கள் குறைவாக உள்ளனர் அதனால் அவர்களை தாக்கி அழித்துவிட நினைப்பவர்களை உங்களைப் போன்ற ஸ்டாலினின் அடிவருடிகள் வேண்டுமானால் தலை வருடி முகர்ந்து பார்ப்பீர்கள்..இஸ்லாம் எதிரிகளை அழிக்க வேசொல்லுகிறது .இங்கே காபிர்கள் என்பவர்கள் எதிரியாக வருபவர்கள் .அவர்களை எதிர்த்து போரிட்டு கொல்லாமல்,காபிர்களே முஸ்லிம்களை கொன்றுவிட்டு நிம்மதியாக மக்காவிற்கு செல்லுங்கள் என்று குர் ஆன் சொல்லுமா? மதினாவில் காபிர்கள் இருக்கவே செய்தனர்.அவர்களை கொல்ல சொல்லவில்லையே .

 75. sankar //////மீன் பிடித்தால் குரங்கு ஆக்குவார்,வியாபாரம் செய்ய அனுமதிப்பாரா?///

  மூசா [அலை] அவர்களைப் பார்த்து வேண்டுமானால் நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்.நாங்கள் இகேயே அமர்ந்து இருக்கிறோம் [5 ;24 ] என்று கூறிய அவர்களது சமூகத்தாரைப் போன்று நாங்கள் இருக்கமாட்டோம் நாங்களும் உங்களுடன் வந்து போரிடுகிறோம் என்று கூறியவர்கள்தான் முகம்மதுநபி[ஸல்] அவர்களுடைய சமூகம்.

  சங்கரே, இரண்டு சமூகத்திற்கு உள்ள வித்தியாசத்தை பாருங்கள் .

 76. கலை,சங்கர் கவனத்திற்கு
  ///அவர்களின் இறைஞ்சுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் அழிவிலிருந்து காப்பற்றப்படுகிறார்கள் என்பதாகவே சொல்லப்படுகிறது. ஆனால், மறுமை நாளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்ட பிறகு ஈமான் கொள்பவர்களின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது என முஹம்மது கூறுகிறார். ஏன் இந்த பாரபட்சம்///
  ///மீன் பிடித்தால் குரங்கு ஆக்குவார்,வியாபாரம் செய்ய அனுமதிப்பாரா?///

  ////மூசா [அலை] அவர்களைப் பார்த்து வேண்டுமானால் நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்.நாங்கள் இகேயே அமர்ந்து இருக்கிறோம் [5 ;24 ] என்று கூறிய அவர்களது சமூகத்தாரைப் போன்று நாங்கள் இருக்கமாட்டோம் நாங்களும் உங்களுடன் வந்து போரிடுகிறோம் என்று கூறியவர்கள்தான் முகம்மதுநபி[ஸல்] அவர்களுடைய சமூகம்.////

 77. குடும்ப நலன் கருதிதான் மனைவியை அல்லா அடிக்கச் சொல்கிறார் என்றால், நம்முடைய நிகழ்காலத்தில் மனைவியைவிட கணவனாலேயே அதிகமாக குடும்பத்தில் பிரச்சினை வருகிறது, எனும்போது குடும்ப நலன் கருதி மனைவி கணவனை துடப்பக்கட்டையால் இலேசாக அடியுங்கள் என ஏன் அல்லா சொல்லவில்லை?

 78. பணியைத் தொடருங்கள் நண்பரே. எல்லாம் கட்டுக் கதைதான். பைபிளில் கூட வாரத்தின் கடைசி நாள் விடுமுறை நாள் என்றும் அன்று சில நியதிகளைக் கடைப்பிடிக்கச் சொல்லியும் உள்ளது. அதிலும் பழைய ஏற்பாட்டில் நிறைய குளறுபடிகள் நம்ப மறுக்கும் விசியங்கள் இருப்பதை அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். ஒன்று வேண்டுமானால் கொள்ளலாம். மனிதன் காட்டுமிராண்டியாக இருந்ததன் வரலாறை ; அறிவு குறைந்திருந்து எதை வேண்டுமானாலும் நம்புவான் என்பதன் பதிவாக இந்த நூல்களைக் கொள்ளலாம்.
  இவண்: அன்புடன்: கவிஞர் தணிகை.

 79. பொய்புனையும் கவிஞரே |.///எல்லாம் கட்டுக் கதைதான்///
  காலையி எழுந்து சிறுநீர் கழிப்பது முதல் இரவு படுக்கையறை வரை ;,பிறந்தது முதல் மரண குழியில் வைக்கும் வரை மனிதனின் வாழ்வியலை முறைப் படுத்தியுள்ள குரான் சட்டங்களா கட்டு கதைகள்
  காட்டுமிராண்டி வாழ்க்கைதான் மனித முன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டி என்று மார்க்ஸ் சொல்லி யுள்ளாராமே.அதையும் சேர்த்து செங்கொடி நண்பரை எழுதச் சொன்னால் என்ன

 80. இபுறாஹிம்,
  //எழுத படிக்கத்தெரியாத ஒரு மனிதரால் இந்த காலத்திலும் 150 கோடி மக்களால் பின்பற்றக்கூடிய வழிகாட்டுதலை தந்திருக்க முடியுமா?//

  முகம்மது வகுத்த வழிகாட்டுதல் வெறும் 150 கோடி,ஆனால் அதற்கு மாற்றமாக அவரவர்களின் வழிகாட்டுதல் எண்ணிக்கை முறையே (புள்ளிவிபரம் தெரிந்தவர்கள் தந்து உதவலாம்)சுமாராக இயேசுவின் வழிகாட்டில் 200 கோடி,புத்தரின் வழிகாட்டில் 150 கோடிக்கும் மேல் மற்றும் திருவள்ளுவர்,ஸ்டாலின்,லெனின்,மார்க்ஸ் போன்ற இதர வழிகாட்டில் செல்பவர்கள் மீதமுள்ளவர்கள், ஆக மொத்த‌ எண்ணிக்கையோ சுமார் 450 கோடி நண்பரே.
  //ஆசான்கள்,மேதைகள் கோட்பாடுகள் எல்லாம் காயலான் கடைக்கு வந்துவிட்டதே//

  அந்த மேதைகள் எல்லாம் தானாக தன் கைப்பட சுயசிந்தனையில் எழுதியதாக ஒத்துக்கொண்டவர்கள். கடவுள்,தண்டனை,மறுமை போன்ற கற்பனைகளை இடையில் செறுகி பொய்சொல்லி பூச்சாண்டி காட்டி யாரும் யாரையும் பயமுறுத்தவில்லை.
  //அரபுநாட்டு கடவுள் அவசியப்படாத உங்களுக்கு அரபுநாட்டு பெயர் மட்டும் தேவைப்படுவது ஏனோ?//
  அரபுநாட்டில் கண்டுபிடித்த கடவுளைத்தான் அவசியமில்லை என்றேன் அரபு மொழியை அல்ல. ஏன் அந்தக் கற்பனை அரபு மொழியை மட்டுமே அறிமுகப்படுத்தியதா? எழுத படிக்கத் தெரியாத மனிதர் என்பது அற்புத செயலுக்கு அளவுகோலா என்ன?

 81. கலை ///நம்முடைய நிகழ்காலத்தில் மனைவியைவிட கணவனாலேயே அதிகமாக குடும்பத்தில் பிரச்சினை வருகிறது///
  நான் கேள்விப்பட்டவரை,என் அறிவுக்கு எட்டிய வரை மனைவியரால் தான் அதிக பிரச்சனைகள் வருவதை பார்க்கிறோம்.பல குடும்ப பிரச்னைகள் பஞ்சாயத்துக்கு சென்ற அனுபவத்தில் சொல்லுகிறேன்.உங்கள் கருத்துக்கு சாதகமாக ஆதாரம் இருந்தால் ஏற்றுக் கொள்வோம்.
  மேலும் மனைவியை கடைசிகட்ட நடவடிக்கையாக லேசாக காயம் ஏற்படாத வாறு அடிக்கசொல்லுகிறது மற்றபடி சாதரணமாக அடித்ததை கண்டித்தும் அவ்வாறு அடிக்கக்கூடாது எனவும் கூறியுள்ள ஹதீதகளும் உள்ளன .
  ,///குடும்ப நலன் கருதி மனைவி கணவனை துடப்பக்கட்டையால் இலேசாக அடியுங்கள் என ஏன் அல்லா சொல்லவில்லை?///
  நீங்கள் சொல்லுவது போல் கணவன் குடிகாரனாக இருந்து தொந்தரவு பண்ணினால் துடப்பகட்டையால் லேசாக என்ன பலமாக அடித்தாலும் அதற்க்கு எதிரான குரான் வசனங்கள் ,ஹதீத்கள் இருப்பதாக தெரியவில்லை.இஸ்லாம் நியாயத்தின் பக்கமே இருக்கும் .
  பதிவுக்கு தொடர்பு இல்லாத ஒரு விசயத்தையும் தற்செயலாக கிடைத்ததால் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்,உங்களில் ஒருவரிடம் அவரது பணியாளர்கள் உணவு கொண்டு வந்தால் அவர் அப்பணி யாளரையும் தன்னுடன் உட்கார வைத்துகொண்டு உணவு உட்கொள்ளட்டும். அவ்வாறு உட்கார வைக்க வில்லை என்றாலும் கூட அவர்க்கு ஒரு கவளம் அல்லது இரு கவளம் அல்லது அதைவிட அதிகமாக அந்த உணவிலிருந்து கொடுக்கச் செயுங்கள்.அவர் அதை சமைத்த பொது அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்து கொண்டார்..
  இது போன்று பல பெரும் கோடிஸ்வரர்கள் அரபு நாட்டில் இப்போது செயல்படுவதை நண்பர்கள் மூலம் அறிந்துள்ளேன்.சோசலிசத் தலைவர்கள் இது போன்று எதுவும் கூறியுள்ளனரா?அல்லது நடந்து உள்ளனரா?

 82. கல்வெட்டு ///குரானை முழுவதும் படித்து அப்புறம் மதத்‌தை ஏற்றுக்கொள்ளலாம் பிடித்து இருந்தால்.
  என்ன ஏது என்று தெரியாமலேயே பெற்றோர்களால் சிறுவயதிலேயே நேர்ந்துவிடப்பட்டவர்களாகததான் பலர் உள்ளார்கள்.
  (((////
  கலை ,நீங்கள் சொன்ன “லகலக லகலக “‘வாக இங்கே கல்வெட்டு காட்சி தருவதை பாருங்கள்.

 83. இபுறாஹீம்,

  நீங்கள் கூறுவதை முற்றிலுமாக நான் மறுக்கிறேன். குடிகாரனாக, கள்ள்க்காதலனாக, பொறுக்கியாக, குழந்தைகளிடம் அன்பில்லாதவனாக, காமுகனாக, போக்கிரியாக, புகைபிடிப்பவனாக, ஊதாரியாக அதிகமாக இருப்பது ஆண்தான்.

  நீங்கள் கூறிய ஹதீதிற்கும் இதற்கும் சம்பந்தமில்லையென நினைக்கிறேன். எனது கேள்வியென்னவென்றால்-
  தவறு செய்யும் பெண்ணை அடிக்கச் சொல்லி வசனம் எழுதிய அல்லா தவறு செய்யும் ஆணையும் அடிக்கலாம் என ஏன் வசனம் எழுதவில்லை. என்பதுதான்.

 84. சங்கர் ///வெள்ளிக் கிழமையின் மகத்துவம் என்ன?///
  வெள்ளிகிழமையா ,சனிக்கிழமையா என்பதல்ல இறைகட்டளை க்கு அடிபணிதலா? மறுத்தலா?என்பதே இங்கே விவகாரம்

 85. கலை .////தவறு செய்யும் ஆணையும் அடிக்கலாம் என ஏன் வசனம் எழுதவில்லை. என்பதுதான்///
  குடும்பத் தலைவன் கணவன் .மேலும் பொதுவாக மனவியரைவிட கணவனே வயதில் கூடினவறாக்வும் இருப்பார்கள் என்பதையும் கவனத்திர்கொள்ளுங்கள். இங்கே மனைவியை அடிப்பதும் என்பது மானக்கேடான காரியங்களை செய்தால் மட்டுமே என்று நபி[ஸல்] அவர்களின் இறுதி பேருரையில் தெளிவாக கூறியுள்ளார்கள். கணவன் என்ன செய்தாலும் புல்லானாலும் புருஷன் என்ற கோட்பாடு இஸ்லாத்தில் இல்லை.கணவன்தவறு செய்தால் மனைவி குலா பெற்று கொள்ளலாம். அவன் அநியாயம் செய்தாலும் அடிக்கக்கூடாது என்று குர்ஆனோ,ஹதீதோ சொல்லாத வரை அவனை அடிக்க பலமும் அதன் மூலம் அவனை திருத்த முடியும் என்றாலும் இஸ்லாம் ஒரு போதும் தடையாக இருக்காது.இஸ்லாத்தில் நேரடியாக சொல்லப் படாவிட்டாலும் அதற்க்கு எதிரான வசனங்களோ,ஹதீத்களோ இல்லாத காரணத்தினால் திருந்துவதற்கு அவசியம் ஏற்படின் அடிப்பது அவளுக்கு மறைமுகமாக அளிக்கப்பட சலுகையாகவே கொள்ளலாம் இறைவனே அனைத்தையும் அறிந்தவன்..

 86. வெள்ளிக் கிழமை வந்ததை நானே கூறுகிறேன்.
  3486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  (உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும்.
  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
  ____________________
  யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முந்தியவர்கள் என்பதனை காட்ட. ஒருவேளை யூதர்கள் திரு முகமதை ஏற்றுக் கொண்டு இருந்தால் அது சனிக்கிழமையாகவே இருந்து இருக்கும்.

  இறுதி சமுதாயம் என்றால் பொருள் என்ன?
  _______________

  வெள்ளிக்கிழமையின் மகாத்மியங்கள்.

  5294. அபுல் காசிம்(முஹம்மத்- ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.
  இதைக் கூறும்போது நபி(ஸல்) அவர்கள் தம் விரல் நுனியை நடுவிரல் மற்றும் மோதிர விரலின் அடிப்பாகத்தின் மீது வைத்துத் தம் கையால் சைகை செய்தார்கள். ‘இதன்மூலம் அது குறைந்த நேரம் என்பதை நபியவர்கள் உணர்த்துகிறார்கள்’ என நாங்கள் பேசிக்கொண்டோம்.
  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

  3211. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்து வண்ணம் (உள்ளே) வருவார்கள்.
  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
  ______________

 87. வால்பையனுக்கு,,,,,

  /////////////////////////////////////////////////////////பின் ஏன் உருவ வழிபாட்டை எதிர்க்கிறீர்கள் நண்பரே!? ////////////////////////////////////////////////////////////////

  ///////////////////////////////////////////////////////////////////முக்கியம், முக்கியமில்லை என்பது அடுத்த விசயம், உருவ வழிபாடு செய்பவர்கள் கூற்று என்ன? சகல சக்தி உள்ள கடவுள் நான் வணங்கும் வடிவில் எனக்கு அருள் அளிக்க முடியாதா என்பது தானே! அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், பிறகு எதற்கு கடவுள்! ///////////////////////////////////////////////////////////////////////

  மீன் படத்திற்க்கு கீழே இருப்பதை வால்பையன் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?

 88. Apes and Pigs:

  2:65. You have come to know who it was amongst you that transgressed the Sabbath, We said to them: “Be despicable apes!”

  5:60. Say: “Shall I inform you of worse than this as a punishment from God Those whom God cursed and became angry at them, and He made from them apes and pigs and servants of evil. Those have a worst place and are more astray from the right path.”

  வாரக்கடைசி நாளில் (week-end)தூண்டிலிட/fishing (Dating/Mating)துணைதேடித்திரியும் மனிதர்களை சிற்றறிவு பெற்ற அதிக பாலியல் சேஷ்டை புரியும் குரங்குகளாகவும் அதிகக்கொழுப்பெடுத்த பன்றிகளாகவும் (உருவத்தால் அல்ல)விபச்சார செயல்புரிவர்களாக மாற்றினோம்.

  Search sites for Animal prostitution/sexual behavior of apes and pigs.

  quranist@aol.com

 89. Abrogation:

  New international version:

  Matthew 12:40

  “For as Jonah was three days and three nights in the belly of a huge fish, so the Son of Man will be three days and three nights in the heart of the earth.”

  King James version:

  Matthew12:40

  “For as Jonas was three days and three nights in the whale’s belly; so shall the Son of man be three days and three nights in the heart of the earth.” Matthew 12:40 (KJV)

  Final Testament:

  37:139‍‍‍‍‍‍‍-147 .
  யூனுஸ் நன்னெறியாளர்களில் ஒருவராவார்.
  அவர் வழிதவறிய‌ குற்றமிழைத்து நஷ்டவாளியானார்.
  இழிந்தவரான அவரை இருள் விழுங்கியது.
  அவர் மனம்திருந்திய ஒருவ்ராக இல்லையெனில் உயிர்த்தெழும் நாள்வரை துன்பமே குடிகொண்டிருக்கும்.
  ஆக வாடிய அவரை மீளச்செய்தோம்.
  அவர் துளிர்த்தெழவும் செய்தோம்.
  பின்பு நூறாயிரத்திற்கும் மேலானவர்களிடம் அனுப்பிவைத்தோம்.

  quranist@aol.com

 90. @ Mohammed ihsas :
  பாஸ் , என்ன மழுப்புறீங்க ,
  அது மீன் இல்லை திமிங்கலம்னா அத நேரடியா சொல்லி இருக்கலாமே.?
  ஜோனாஹ் (உங்களுக்கு யூனுஸ்) கதை ஒரு பழங்கதை , அது பழைய வேதங்களின் சாராம்சம். இந்த கதைய முஹம்மத் தனது பாணியில் சொல்லி இருக்கிறார்.

  37:144 மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே இருந்திருப்பார்.
  கேள்வி :::
  இது முஹம்மது உட்ட பீலா , மறுமை நாள் வரை ஒரு மனிதனை எப்படி வைக்க முடியும், அப்போ அந்த மீனும் மறுமை நாள் வரை இருக்குமா ?

  உங்கள் நிலை :
  **********************
  அவனுக்கு எதுவும் சிரமமல்ல! தான் நாடியதைச் செய்பவன் என்பது எமது நிலை.
  உங்கள் குழப்பம் :
  *********************
  இந்த தொடர் முழுக்க முழுக்க எமது நம்பிக்கைக்குள்ளிருந்து விமர்சிக்காமல் வேறொரு கோணத்தில்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது!

  என்ன மாறுபட்ட நிலை உங்கள் நிலை 🙂

 91. முட்டாள் தனமான கேள்வி :::
  **********************************************
  37:22 (இவ்வாறு கட்டளையிடப்படும்:) “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் மற்றும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு வாருங்கள்.

  இஸ்லாமிய கோட்பாடுகளின் படி அல்லாஹ்வை தவிர வேறு தெய்வம் மற்றும் கடவுள் இல்லை.
  பின்னே எப்படி முட்டாள் தனமா இந்த கேள்வி கேக்கலாம் ?
  வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு வாருங்கள்.
  ஆக இது அல்லா என்ற கடவுள் சொல்ல வில்லை , முஹம்மத் சொன்னது.
  ஏன் என்றால் அல்லாஹ்வும் அவர்கள் வணங்கிய தெய்வங்களுள் ஒன்று தானே ?

 92. muttal pasangala…. ungalai patri thaan alla kooruhinran… avarhal kannirundhum kurudarhal kadhirundhum sevidarhal endru…
  allah dhan ungalaku hidhayath valanga vendum…
  qu’ran ai seeriya murayil padiyungal… thelivu peralam

 93. கடலில் மூழ்கிய படகு.. திமிங்கலத்தின் வயிற்றில் சிக்கிய மீனவர்.. 3 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்பு!
  http://dhunt.in/143Vu?ss=wsp
  via Dailyhunt

 94. நண்பர் தமிமுல் அன்சாரி,

  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தச் செய்தி பொய்யான செய்தி. எவ்வாறெனில், 3 நாட்கள் திமிங்கிலத்தில் வயிற்றில் தங்கியிருந்து விட்டு உயிருடன் வெளிவருவது என்பது எவ்வளவு ஆச்சரியகரமான செய்தி. இவ்வளவு ஆச்சரியமான ஒரு செய்தி, தமிழில் ஓரிரு தளங்களைத் தவிர வேறெதிலும் வெளியிடப்படவில்லையே ஏன்? தமிழைத் தவிர பிற மொழிகளில் இந்தச் செய்தி பிரசுரிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஸ்பெயினின் பிரபல செய்திதளமான ‘தி லோகல்’ எனும் ஆங்கில தளத்தில் தேடிப் பார்த்தேன். இப்படி ஒரு செய்தியே இல்லை. அது எப்படி ஸ்பெயினில் நடந்த ஒரு நிகழ்வு, ஸ்பெயினில் வெளியிடப்படாமல் நேரடியாக தமிழுக்கு வந்து விட்டதா?

  அந்தச் செய்தியில் ஏற்படும் ஐயங்கள், திமிங்கலங்கள் பொதுவாக ஆழம் குறைந்த கரைப்பகுதிகளுக்கு வருவதில்லை. (செத்து கரை ஒதுங்குவது வேறு) அந்த மீனவர் ஆழ்கடலுக்கு தனியாக மீன் பிடிக்கச் சென்றாரா? துணைக்குச் சென்றவர்கள் குறித்த விபரம் எதுவும் இல்லையே ஏன்? திமிங்கலம் செரிக்க முடியாத அளவுக்கு மனிதன் கடினமான பொருளா? திமிங்கலத்தின் பசிக்கு ஒரு மனிதன் என்பது ஒரு அரிசி மாதிரி. ஒரு வேளையில் ஏராளமான கடல் உயிரினங்களை உணவாக கொண்டிருக்கும். அதில் தவறுதலாக மனிதனும் சேர்ந்து விட்டான் என்றால் ஏனைய கடல் உயிரினங்கள் எல்லாம் செரித்து விட்டது மனிதன் மட்டும் செரிக்காமல் அப்படியே கழிவாக வெளியில் வந்து விட்டானா? அந்த திமிங்கலம் கடலில் தன் கழிவை கழிக்காமல் கரையில் வந்து கழித்து விட்டுப் போனதா? அல்லது ஏற்கனவே மூன்று நாட்கள் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து சோர்வுற்ற அந்த மனிதன், நடுக்கடலிலிருந்து எப்படி கரை ஒதுங்கினான்?

  அறிவியல் ரீதியான பிரச்சனைகள். மூன்று நாட்களாக அந்த மனிதனுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் எப்படி கிடைத்தது. சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலுக்குத் தான் செல்லும், வயிற்றுக் கெல்லாம் வருவதில்லை.வயிற்றுக்குள் உணவைச் செரிப்பதற்கு வெளிப்படும் என்சைம்கள் எந்தப் பொருளையும் நொதிக்க வைத்துவிடும். திமிங்கலம் போன்ற பெரிய உயிரினங்களுக்கு அந்த என்சைம்களின் தீவிரம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் மூன்று நாட்கள் அந்த மனிதன் தப்பியது எப்படி?

  மதவாதிகள் தான் எதையும் சிந்தித்துப் பார்க்காமல் தனக்கு சாதகமாக இருந்தால் எதையும் பரப்புவர்கள். நீங்கள் மதவாதியாக இருக்க மாட்டீர்கள் என எண்னுகிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s