செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௩

இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

இந்தப்பகுதியை, இந்தத்தொடரை வாசிக்கவிருக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கு, இஸ்லாம் குறித்த போதிய அறிமுகமில்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் என்னுடைய பார்வையில் அறிமுகம் செய்யும் விதமாக அமைத்திருந்தேன். நான் இஸ்லாத்தை அறிமுகம் செய்ததில் பொருட்பிழை ஏதுமில்லை என்பதை நண்பரின் பதிவு அறிவிக்கிறது. ஆனால் அதை செய்தவிதத்தில் அவருக்கு பேதமிருக்கிறது. அப்படி பேதமிருப்பதாய் அவர் கருதும் இரண்டு இடங்களை குறிப்பிட்டு தம் பதிவை தயாரித்திருக்கிறார்.

 

முதல் பேதமாய் நண்பர் குறிப்பது, சைத்தான் என்பவன் மனிதனின் எதிரி தானேயன்றி ஆண்டவனின் எதிரியல்ல என்பதை. அதற்கு ஆதாரமாக நண்பர் எடுத்துவைத்திருப்பது “சைத்தான் உங்களுக்கு எதிரி” என்று ஆண்டவன் மனிதனுக்கு கூறும் ஒரு குரான் வசனம். தன்னுடைய படைப்பாகிய மனிதனிடம், யார் தான் அறிவுறுத்தியபடி நடக்கவேண்டும் என விரும்புகிறானோ அத்தகைய மனிதனிடம், யாரை தன்னுடைய பிரதிநிதியாக படைத்திருக்கிறானோ அத்தகைய‌ மனிதனிடம் ஆண்டவன் கூறுகிறான் சைத்தான் உனக்கு எதிரி என்று. என்றால் ஆண்டவனுக்கு சைத்தானுடனான உறவு என்ன? தன்னுடைய நண்பனை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? தன்னுடைய எதிரியை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? இந்த இடத்தில் எல்லாமே ஆண்டவனின் படைப்புகள் எனும் சமன்பாட்டைக் கொண்டுவரவேண்டாம். ஏனென்றால் மலக்குகளும், மனிதனும், மரக்கட்டையும் மூன்றுமே ஆண்டவனின் படைப்பு தான். ஆனால் கொண்டிருக்கும் உறவில் மூன்றின் மதிப்பும் வேறுவேறுதான். எனவே உனக்கு எதிரி என சைத்தானை மனிதனுக்கு ஆண்டவன் காட்டுகிறானென்றால் அதில் உட்கிடக்கையாக இருப்பது தனக்கு எதிரி என்பதுதான்.

 

ஒருவனுக்கு எதிரி என யாரைக் கூறமுடியும்? யார் எதிராக செயல்படுகிறானோ அவனைத்தான் ஒருவனுக்கு எதிரி என்று கூறமுடியும். அந்த வகையில் சைத்தான் மனிதனுக்கு எதிராக செயல்படுகிறானா? இறைவனுக்கு எதிராக செயல்படுகிறானா? மனிதனுக்கு எதிராக செயல்படுகிறான் என்றால் மனிதனை துன்பப்படுத்த முயலவேண்டும், மனிதனுக்கு இன்னல்களை ஏற்படுத்த வேண்டும், மனிதனை நிர்மூலமாக்க வேண்டும். ஆனால் சைத்தான் இவைகளைச் செய்வதில்லை, மாறாக மனிதனுக்கு இன்பங்களைக் காட்டுவதன் மூலம், சொகுசுகளை காட்டுவதன் மூலம், இன்னும் பல்வேறு உத்திகள் மூலம் இறைவனின் நினைப்பை மனிதனிடமிருந்து நீக்க முயல்கிறான். ஆக சைத்தான் மனிதனிடம் செயல்படுகிறான் ஆனால் ஆண்டவனுக்கு எதிராக செயல்படுகிறான். மறுபக்கம் ஆண்டவனோ என் சொல்லைக் கேட்டால் உனக்கு மிட்டாய் தருவேன், சைத்தான் சொல்லைக் கேட்டல் பிரம்படி தருவேன் என்கிறான். என்றால் யாருக்கு யார் எதிரி?

 

சைத்தான் மனிதனை ஆண்டவனின் திசையிலிருந்து திருப்புகிறான், அதாவது மனிதனிடம் தான் செயல்படுகிறான் என்றாலும் அது விளைவுதான், வினையல்ல. வினை என்பது சைத்தான் ஆண்டவனை எதிர்த்தது தான். ஆண்டவனின் சொல்லுக்கு கீழ்படிய மறுத்து எதிர்த்து நின்ற வினையின் விளைவு தான் மனிதனை திசைமாற்றும் சைத்தானின் முயற்சி. மனிதனைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சைத்தான் ஆண்டவனை எதிர்க்கவில்லை. ஆண்டவனை எதிர்த்ததால்தான் மனிதனைக் கெடுக்கிறான். எனவே சைத்தானின் நோக்கம் ஆண்டவனை எதிர்த்தது தானேயன்றி, மனிதனைக் கெடுப்பதல்ல. எனவே சைத்தான் ஆண்டவனின் எதிரி என்பதே சரி, மனிதனின் எதிரி என்பது மாத்திரைக் குறைவுதான்.

 

தர்க்கரீதியான(!) ஒன்றையும் இதில் இணைத்திருக்கிறார். அதாவது சைத்தான் மனிதனின் மனதைத்தான் கெடுத்தானாம் மார்க்கத்தைக் கெடுக்கவில்லையாம். மார்க்கம் என்பதென்ன தனியொரு பொருளா? (இங்கு மார்க்கம் என்று அவரது சொல்லாகவே கையாண்டிருக்கிறேன். மதமா மார்க்கமா என்பதை பின்னர் விளக்குகிறேன்) மனிதர்க‌ளை நீக்கிவிட்டால் மார்க்கம் என்பதை எப்படி வரையறுப்பது? மனிதர்களின் மனதிலிருந்து பிரித்து தனித்த ஒன்றாக மார்க்கத்தை அடையாளப்படுத்த முடியாது. எனவே மார்க்கத்தைக் கெடுத்தான் என்பதும், மனதைக் கெடுத்தான் என்பதும் ஒன்றுதான் மாறுபட்டதல்ல. முன்னவர்களின் மன‌திலிருக்கும் மார்க்கத்தைக் கெடுத்து அதையே பின்னவர்களுக்கு அழகாகக் காட்டியதால்தான் அதையே அவர்களும் பின்பற்றும்படியாகிறது. இதில் தர்க்கவியல் குறை ஒன்றுமில்லை.

 

இரண்டாவதாக‌, இஸ்லாத்தை இதுவரை யாரும் ஆதாரபூர்வமாக யாரும் விமர்சித்ததில்லை என்கிறார். குரானிலேயே இதற்குமேல் தர்க்கிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் எனும் பொருளுள்ள வசனங்கள் இருக்கின்றன. விமர்சனம் செய்து மீறிப்போகும்போது தாக்குதலில் இறங்குவதற்கு அண்மைக்காலம் வரை எடுத்துக்காட்டுகள் உண்டு. இங்கும் கூட கம்யூனிச அவதூறுகளை கூறியிருக்கிறீர்கள். கொலை, கொலை என்று அலறியவர்களே நாங்கள் காசுக்காகத்தான் அவயமிட்டோம் என ஒதுங்கிவிட்டார்கள், நீங்களோ இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கம்யூனிசம் குறித்த விமர்சனம் இருந்தால் தனித்தொடராக வெளியிடலாம், நான் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்த ஆயத்தமாக இருக்கிறேன். அப்புறம் இஸ்லாத்தில் மாற்றம் செய்ய தேவையிருக்காது என கூறியிருக்கிறீர்கள். அதை உங்கள் நம்பிக்கை என நகர்ந்துவிடலாம். ஆனால் போகிறபோக்கில், \\தவறு எனில் மாற்றுவோம்// என்று கூறியிருக்கிறீர்களே. என்ன விசமம் இது. இஸ்லாத்தில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ யாருக்கு அதிகாரம் இருக்கிறது? பொருட்பிழையில்லாமல் சொற்பிழைகளையே பெரும்பேதமாய் பதிவெழுதி எனக்கு விளக்கம் கூறிவிட்டு, இஸ்லாத்தின் அடிமடியிலேயே கைவைத்துவிட்டீர்களே. பலே, பலே.

 

எண்ணைக் கொப்பரை என்பது நரகத்தைக் குறிக்கும் ஒரு குறியீடு அவ்வளவு தான், நேரடியாக நெருப்பில் வாட்டுவது என்றாலும் எண்ணெய் தடவி ஓவனில் வைத்தாலும் அதில் பொருட்பிழை ஒன்றுமில்லை. இந்தப் பதிவில் கூட மிட்டாய், பிரம்படி என்று சொர்க்கம், நரகத்தை குறியீட்டால் குறித்திருக்கிறேன்.

 

அடுத்து, இஸ்லாத்தை விமர்சித்ததற்காக இன்னலுக்கு ஆளான சிலரை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் குறித்த குறிப்புகளை இணையத்தில் தேடித்தந்திருக்கிறீர்கள். இறுதியாக \\உண்மயை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கும் போது இவர் குறிப்பிட்ட தடங்கள் வருவது இயல்பே// என்று ஒப்புதல் தந்திருக்கிறீர்கள். ஆனால் நான் குறிப்பிட்டிருந்ததற்கும் நீங்கள் இயல்பு என்பதற்கும் இடையில் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. ஏனைய மதங்களைப் பொருத்தவரை மதத்திற்குள் இருந்து கொண்டே அந்த மதக்கொள்கைகளை விமர்சிக்க முடியும், விமர்சித்திருக்கிறார்கள். அதை அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்கமாக கருதியிருக்கிறார்களேய‌ன்றி புறக்கணித்ததில்லை. ஆனால் ஆப்ரஹாமிய மதங்களில் அது இயலாது. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் முடியவே முடியாது. ஒரு அரசு இருந்து மதக் கொள்கைகளுக்கு எதிரானவரை தடுப்பது தண்டிப்பது என்பது வேறு, மக்களே புறக்கணிப்பது என்பது வேறு. அதுவரை நெருங்கிய உறவினர்களாக நண்பர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை விமர்சித்துவிட்டால் அடுத்த கணமே அங்கு ஒரு விலக்கம் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஏனென்றால் இஸ்லாத்தில் கடமை தான் இருக்கிறதேயன்றி, விமர்சிக்கும் உரிமையில்லை. இதுதான் துன்புறுத்தல் வரை கொண்டு சேர்க்கிறது. தக்கலை கவிஞர் ரசூல், மைலாஞ்சி கவிதைத்தொகுப்பில் ஏன் பெண் நபி இல்லை என்று கேட்டு கவிதை வெளியிட்டதற்காக, கவிதையை நீக்கி மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள் மறுத்ததால் ஊர் விலக்கம் செய்யப்பட்டர். ஆண்டுகள் பல கடந்தும் அவரால் வீட்டுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில் தாகத்திற்கு மோர் வாங்கி குடிக்கமுடியாது. \\இவ்வாறு அறியாமையினால் ஓரிரு இடங்களில் நடப்பதை எடுத்து காட்டுவது சரியானது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்// சரிதான், அப்படி எடுத்துக்கொள்லலாம். ஆனால், இதை இயல்பு என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா?

 

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

22 thoughts on “செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

 1. //ஏன் பெண் நபி இல்லை //
  தூதர்கள் மற்றும் வஹி பற்றி கொஞ்சம் பார்ப்போம்

  இந்த வசனம் கூறுவதை பார்த்தால் தூதர்களுக்கு மட்டுமே வஹி வரும் என தோன்றுகிறது.

  4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

  _______________________

  சரி என்று பார்த்தால்

  இறைத் தூதர்களுக்கு மட்டுமே வஹீ(இறை வெளிப்பாடு) வருமா?

  28:7. நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு – அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.

  இந்த வசனம் மூஸாவின் தாயாருக்கு வஹி வந்ததாக கூறுகிறது.

  1.தூதர்களுக்கு மட்டும் வஹி என்றால் மூஸாவின் தாயாரும் தூதரா? அப்படியெனில் இஸ்லாமின் ஒரே பெண் தூத்ர்.
  2.தூதரல்லாதவர்களுக்கும் வஹி வருமா?

  அப்படியெனில் வஹி இன்னும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்,வந்து கொண்டிருக்கலாம். அதனையே இவ்வசனம் கூறுகிறது.
  இன்னும் ஈசாவின் தாயார் மிர்யமுடன் தூதர்கள் பேசியதாக இவ்வசனம் கூறுகிறது.இவரும் தூதரா?

  _______________________

  42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
  __________________

  4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.

  இறவன் யரிடமும் பேச மாட்டார் என்கிறது 42:51.மூஸாவிடம் பேசினார் என்கிறது 4:164 .
  __________________

  இஸ்லாமியர்கள் இறைதூதர் என்பதை பற்றியும் வஹி யார் யாருக்கு வரும்,இப்போதும் வருமா வராதா,இறைவன் பேசேசினாரா,பேசுவாரா,யாரிடம் மலக்குகள் அனுப்பி பேசுவார் என்பதையெல்லாம் தகுந்த ஆதாரங்களுடன் பதிலளிக்க வேண்டுகிறேன்
  ____________________

 2. //முதல் பேதமாய் நண்பர் குறிப்பது, சைத்தான் என்பவன் மனிதனின் எதிரி தானேயன்றி ஆண்டவனின் எதிரியல்ல என்பதை. அதற்கு ஆதாரமாக நண்பர் எடுத்துவைத்திருப்பது “சைத்தான் உங்களுக்கு எதிரி” என்று ஆண்டவன் மனிதனுக்கு கூறும் ஒரு குரான் வசனம்.//

  ஷைத்தான் இறைவ்வனுக்கு விரோதி என்று வசனம் இல்லையா? சரி அதையும் பார்ப்போம்

  1. இப்லீஸ்(சைத்தான்) ஆதமுக்கு பணியாததால் காஃபிர் ஆகியதை கூறும் வசனம்.

  38:74. இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
  __________________
  2.
  இந்த வசனம் அல்லா காஃபிர்களுக்கு விரோதி என்று கூறுகிறது.

  2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
  __________________________

  ஆகவே காஃபிரான இப்லீஸ் என்னும் சைத்தான் அல்லாவின் விரோதி.

  சைத்தான் மட்டுமல்ல காஃபிர்கள் அனைவருமே அல்லா மற்றும் அவரின் அடியாட்களுக்கும் விரோதிகள்.
  ______________________

  இந்த வசனம் இலவச இணைப்பு விளக்கம் தேவையில்லை

  9:83. காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
  _______________

 3. \\இவ்வாறு அறியாமையினால் ஓரிரு இடங்களில் நடப்பதை எடுத்து காட்டுவது சரியானது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்//

  ஓரிரு இடங்களிலா!?

  இதுக்கு பேரு தான் பொய் சொல்லி மதத்தை காப்பாத்துறது, மத சார்பற்ற இந்தியாவிலேயே இந்த கதின்னா, இஸ்லாமிய நாடு என்று சொல்லி கொள்பவர்கள் என்ன பண்ணுவாங்கன்னு யோசிக்கனும்!

  மனிதம் செத்த மதம் எதற்கு!?

 4. ///அதுவரை நெருங்கிய உறவினர்களாக நண்பர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை விமர்சித்துவிட்டால் அடுத்த கணமே அங்கு ஒரு விலக்கம் வந்து உட்கார்ந்து கொள்ளும்///

  இதென்ன பிரமாதம்.

  அல்லாவை விமர்சிப்பது அல்லது மறுப்பது என்ற நிலைக்கு கணவனோ அல்லது மனைவியோ வருவார்களேயானால் அவர்களைப் பிரிந்துவிடுமாறும், அவர்கள் இணைந்து வாழ்வது தடுக்கப்பட்டது என்றும் மாட்சிமைப் பொருந்திய கணம் ’யா கரீம்”! அவர்கள் அறிவுறுத்துகிறார். அங்கே இருவரையும் பிரித்து வைக்கும் பணியை செவ்வனே தனது தலைமேற்கொண்டு செய்கிறார்.
  பொதுவாக இஸ்லாத்தில் சுதந்திரம் கிடையாது.

 5. /மனிதனுக்கு இன்பங்களைக் காட்டுவதன் மூலம், சொகுசுகளை காட்டுவதன் மூலம், இன்னும் பல்வேறு உத்திகள் மூலம் இறைவனின் நினைப்பை மனிதனிடமிருந்து நீக்க முயல்கிறான். ஆக சைத்தான் மனிதனிடம் செயல்படுகிறான் ஆனால் ஆண்டவனுக்கு எதிராக செயல்படுகிறான். மறுபக்கம் ஆண்டவனோ என் சொல்லைக் கேட்டால் உனக்கு மிட்டாய் தருவேன், சைத்தான் சொல்லைக் கேட்டல் பிரம்படி தருவேன் என்கிறான். என்றால் யாருக்கு யார் எதிரி?////
  தோணி எனக்கு எதிரி அல்ல ஆனால் பிளஸ் டூ படிக்கும் என் மகனுக்கு எதிரி .தோனியின் பேட்டிங் என் மகனுக்கு ரசனையாகத்தான் தெரியும்.நான் கிரிக்கெட் பார்க்காதே என்று சொல்லுவது அவனுக்கு சிரமமாகவே தெரியும்.என் சொல்லை கேட்டால் மெரிட்டில் அண்ணா யுனிவர்சிட்டி யில் நுழைந்து விடலாம் .தோனியை ரசித்தால் டுட்டோரியளுக்குத்தான் போகவேண்டும் என்று நான் சொல்லுவது என் மகனுக்கு கசக்கவே செய்யும்..
  ///கொலை, கொலை என்று அலறியவர்களே நாங்கள் காசுக்காகத்தான் அவயமிட்டோம் என ஒதுங்கிவிட்டார்கள்///
  உங்கள் பார்வையஈல் அன்று காசுக்காக பொய் சொன்னார்கள் எங்கள் பார்வையில் இன்று காசுக்காக பொய் சொல்லுகிறார்கள்.
  ,///இஸ்லாத்தை விமர்சித்ததற்காக இன்னலுக்கு ஆளான சிலரை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.///
  இந்த இணைய தளத்திலே எனனை கம்யுனிஸ்ட் ஒருவர் மிரட்டினார்.
  கம்யுனிஸ்ட் ஆட்சி எங்காவது நடந்தால் உங்களது மனித உரிமை மீறல் பற்றி பேசலாம்.இருப்பினும் ம.க.இ.க பற்றி வன்முறை செய்திகள் இதுவரை ஒன்றுமே நடக்கவில்லையா?
  . ////தக்கலை கவிஞர் ரசூல், மைலாஞ்சி கவிதைத்தொகுப்பில் ஏன் பெண் நபி இல்லை என்று கேட்டு கவிதை வெளியிட்டதற்காக, கவிதையை நீக்கி மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள் மறுத்ததால் ஊர் விலக்கம் செய்யப்பட்டர்///
  இதே ஸ்டாலின் ஆட்சியில் அவரை பற்றி விமர்சன கவிதை எழுதி இருந்தால் அவர் “உலக விலக்கம்”செய்யப் பட்டிருப்பார்.

 6. //என் சொல்லை கேட்டால் மெரிட்டில் அண்ணா யுனிவர்சிட்டி யில் நுழைந்து விடலாம் .தோனியை ரசித்தால் டுட்டோரியளுக்குத்தான் போகவேண்டும் என்று நான் சொல்லுவது என் மகனுக்கு கசக்கவே செய்யும்.//

  //என் சொல்லை கேட்டால் மெரிட்டில் அண்ணா யுனிவர்சிட்டி யில் நுழைந்து விடலாம் .தோனியை ரசித்தால் டுட்டோரியளுக்குத்தான் போகவேண்டும் என்று நான் சொல்லுவது என் மகனுக்கு கசக்கவே செய்யும்.//

  நல்ல உதாரணம்தான் நண்பரே ஆனால் இது நம் தந்தை நமக்கு கூறிய அறிவுரை.இப்போது நன்றாக் மட்டைப் பந்து ஆடத் தெரிந்தால் உலகமே உங்கள் காலடியில் வரும் என்று இளைஞர்களுக்கு தெரியும்.ஐ பி எல் ஏலம் பார்த்தாலே எவ்வளவு பணம் இப்போது மாநில அளவு வீரர்கள் கூட சம்பாதிக்க முடியும் என்று தெரியும்.

  டெண்டுல்கர் கூட பள்ளிப்படிப்பில் கோடை விட்டவர்தான் ஆனால் அவர் விளையாட்டில் புகழ் பெறுவது ஒன்றும் தடை படவில்லை.டெண்டுல்கரின் தந்தை உங்களை போல் நினைத்திருந்தல் என்ன ஆவது?.

  மகன் நன்றாக விளையாடினால் உற்சாகப் படுத்துங்கள்.

  விளையாடாமல் தொலக் காட்சி அதிக நேரம் மட்டும் பார்த்தால் நீங்கள் சொல்வது சரி.

  தம்பி இபின் இப்ராஹிம் ஒழுங்காக படியுங்கள் வாப்பா(அத்தா) ரொம்ப கவலைப் படுகிறார்.

 7. கலை, ////பொதுவாக இஸ்லாத்தில் சுதந்திரம் கிடையாது///
  சுதந்திரம் என்றால் என்னவென்று ச்டாளிநிடமோ அல்லது அவரது சிஷ்யர்களிடமோ தான் தெரிந்து கொள்ளவேண்டும்

 8. வால்பையன்,
  //மனிதம் செத்த மதம் எதற்கு////
  இரண்டு கோடி மக்கள் செத்தபிறகு கம்யுனிசம் ,சோசலிசம் எல்லாம் எதற்கு?!

 9. செங்கொடி ///இஸ்லாத்தில் கடமை தான் இருக்கிறதேயன்றி, விமர்சிக்கும் உரிமையில்லை. இதுதான் துன்புறுத்தல் வரை கொண்டு சேர்க்கிறது. தக்கலை கவிஞர் ரசூல், மைலாஞ்சி கவிதைத்தொகுப்பில் ஏன் பெண் நபி இல்லை என்று கேட்டு கவிதை வெளியிட்டதற்காக, கவிதையை நீக்கி மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள்.////
  குமுதத்தில் ஒரு நடிகையின் கதை என்று உண்மை சம்பவங்கள் பற்றி 1990 இல் ஒரு தொடர் வெளி வந்து கொண்ருந்தது அச்சமயம் சினிமா நடிகர் சங்கம் குமுதம் அலுவலகத்தில் நுழைந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கியது.அதன் பின்னர் கருணாநிதி தலையிட்டு அத்தொடர் வெளியாவதை நிறுத்த செய்தார் .மீண்டும் கடந்த மூன்றாண்டுகள் முன்பு அத்தொடர் வெளியிடப்பட்டது.மீண்டும் வற்புறத்தி நிறுத்தப் பட்டது.முழுக்க முழுக்க விபச்சாரம் பண்ணும் கூட்டமே அவர்களைப் பற்றிய உண்மையை வெளியிட கூடாது என்று அராஜாகம் பண்ணுகிறது..அதையெல்லாம் எத்தனை பத்திரிக்கைகள் சுதந்திரம் பற்றி பேசின?இதைப் போன்று நாடார் சமூகம் பற்றியும் அப்பத்திரிக்கை எழுதும் சமயம் பிரச்னை ஏற்படவே பாதியில் நிறுத்தப்பட்டது.இப்படி மானம் கெட்டசினிமா நடிகர்களுக்கு இருக்கக் கூடிய உணர்வுகள் கூட முஸ்லிம்களுக்கு இறுகக் கூடாதா?

 10. ///உங்கள் பார்வையஈல் அன்று காசுக்காக பொய் சொன்னார்கள் எங்கள் பார்வையில் இன்று காசுக்காக பொய் சொல்லுகிறார்கள்.///

  எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே லகலகலக வென்று உளறக்கூடாது.
  இன்னமும் ஸ்டாலின் பெயரைக்கேட்டாலே முதலாளிகள்களுக்கு இரவில் ஒன்னுக்கு போவது நின்றபாடில்லை. கம்யூனிசத்தை பூச்சாண்டியாக காட்டுவதற்கு முதலாளிகளுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு ஸ்டாலின் மட்டுமே, என்றிருக்கும்போது காசு வாங்கிகிட்டு பொய் சொன்னாங்கன்னு சொல்றீங்களே! ! இதெல்லாம் நம்பும்படியாவா இருக்கு! முதலில் உங்களுடைய பார்வையை மாற்றவும்.
  .

 11. ///சுதந்திரம் என்றால் என்னவென்று ச்டாளிநிடமோ அல்லது அவரது சிஷ்யர்களிடமோ தான் தெரிந்து கொள்ளவேண்டும்///

  சரியான நபர்களிடம் கேட்கச் சொல்லியிருக்கிறீர்கள்.
  நன்றி!

 12. சங்கர் ///டெண்டுல்கர் கூட பள்ளிப்படிப்பில் கோடை விட்டவர்தான் ஆனால் அவர் விளையாட்டில் புகழ் பெறுவது ஒன்றும் தடை படவில்லை.டெண்டுல்கரின் தந்தை உங்களை போல் நினைத்திருந்தல் என்ன ஆவது///
  110 கோடியில் “பதினாலில் ஒன்று” என்பது அத்தி பூத்த கதை .டெண்டுல்கரின் தந்தை படிக்கவே சொல்லியிருப்பார். எல்லாம் குருட்டு பூனை விட்டத்தில் பாயிந்ததை போன்று ..;ரோல் மாடலாக கொண்டால் இந்தியா இன்னும் பஞ்ச நாடகாவே இருக்கும்,இந்தியாவின் மக்கட் தொகையே கிரிகேட்டாலர்களின் செல்வம் கொழிக்கும் தளம்..

 13. kalai ///காசு வாங்கிகிட்டு பொய் சொன்னாங்கன்னு சொல்றீங்களே! !///
  .
  கீழே உள்ளது நான் சொல்லியது அல்ல
  ///நாங்கள் காசுக்காகத்தான் அவயமிட்டோம் என ஒதுங்கிவிட்டார்கள்///
  அந்தர் பல்டி சாட்சிகளை ஆதாரமாக கொண்டு வராதீர்கள் .இதெல்லாம் செவி வழி கதை .அறிவியல்பூர்வமாக உரசி பார்க்க உரைகள் இருந்தால் சொல்லுங்கள்

 14. ஸ்டாலின் 2கோடி மக்களை கொன்றார் என்று எந்த அறிவியலைக் கொண்டு உரசிப் பார்த்தீர்கள்?

 15. கலை ///இன்னமும் ஸ்டாலின் பெயரைக்கேட்டாலே முதலாளிகள்களுக்கு இரவில் ஒன்னுக்கு போவது நின்றபாடில்லை///
  இப்போது ரஷ்ய தொழிலாளிகள் அல்லவா இதை சொல்ல வேண்டும் ?முதலாளித்துவ நாட்டில் சொகுசுவாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு இப்படி சொல்லுவது நியாயமா?
  ////2கோடி மக்களை கொன்றார் என்று எந்த அறிவியலைக் கொண்டு உரசிப் பார்த்தீர்கள்?///
  ஹிட்லர் ஆதரவாளர்களும் இதைத்தான் கேட்கிறார்கள்

 16. ///முதலாளித்துவ நாட்டில் சொகுசுவாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு இப்படி சொல்லுவது நியாயமா?///

  இது அடிமையாக இருந்தே பழக்கப்பட்டதன் வெளிப்பாடு.

  முதலாளித்துவ நாடு என்றால் அங்கு முதலாளிகள் உழைத்து எல்லோருக்கும் கஞ்சி ஊத்துகிறார்கள் என்று பொருளல்ல. அம்முதலாளிகளுக்கே கஞ்சி ஊத்துவது தொழிலாள, விவசாய வர்க்கங்கள்தான். நம்து உழைப்பின் பலனை அனுபவித்துக் கொண்டே நம்மை ஒடுக்குபவனே முதலாளி. எனவே அவர்களை எதிர்க்க வேண்டியது என்னுடையதும் உங்களடையதுமான உரிமைகள். சம்பளம் கொடுக்கிறான் என்பதற்காக அவனுக்கு கூழைகும்பிடு போடவேண்டிய அவசியமில்லை. சம்பளம் முதலாளியுடைய வியர்வையல்ல நம்முடைய வியர்வை,இரத்தம்

 17. /////ஹிட்லர் ஆதரவாளர்களும் இதைத்தான் கேட்கிறார்கள்/////

  ஜெர்மனிய ரைஷ்ஸ்டாக் தீவைப்பும், இரண்டாம் உலகப்போரும், இன்றைய இசுரேலுமே ஆதாரங்கள்.

  ஸ்டாலினின் கொலைகளும், கொடுமைகளும் தாங்காமல் சோவியத்துடன் இணைந்திருந்த எந்த தேசிய இனமக்களாவது இது போன்று வெளியேறியிருக்கின்றனரா?

  கொலை,கொலை என்று ஒப்பாரி வைத்து ஓடியவனெல்லாம் யார்? கட்சிக்குள்ளிருந்தே சகுனி வேலைபார்த்த துரோகிகள்.

 18. அல்லாமிகவும் சக்தி வாய்ந்தவ‌ர். இருந்தாலும்

  1. தூதரை தனியாக விடுட் விடாதீர்கள்

  2.அனைவரும் தன் உயிரை விட முகமதுவின் உயிரையே மேலாக கருத வேண்டும்.

  உடல் மண்ணுக்கு உயிர் தூதருக்கு

  3. இப்படி செய்தால் பலன் உண்டு

  நான் சொல்லவில்லை குரான்(அல்லா) சொல்கிறது.
  ______________

  9:120. மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன – நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
  ____________

 19. 9:120

  It is not advisable for the city dwellers and those around them of the Nomads that they should lag behind after God’s messenger, nor should they yearn for themselves above him. That is because any thirst that will come to them, or fatigue, or hunger in the cause of God, or any step that they take which will annoy the rejecters, or any gain they have over any enemy; it will be recorded as a good deed for them. God does not waste the reward of the good doers.

  quranist@aol.com

 20. quran 9:120
  P.J Translation

  120. அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து போருக்குச் செல்லாது தங்குவதும், அவரது உயிரை விடத் தமது உயிர்களை விரும்பு வதும் மதீனாவாசிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கும் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகம், சிரமம், பசி ஏற்பட்டாலும், (ஏக இறைவனை) மறுப்போருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் மிதித்தாலும், எதிரியிடமிருந்து ஒரு தாக்குதலைப் பெற்றாலும் அதற்காக அவர்களுக்கு ஒரு நல்லறம் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை. நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

 21. சங்கர்.எப்ப பார்க்கினும் சுற்றி வளைத்து வருவதையே உங்களது வாடிக்கையாக உள்ளது. 9;120 வசனத்தின் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்ன?அதை சொல்லுங்கள்

 22. உடல் மண்ணுக்கு உயிர் தூதருக்கு

  _______

  என்றே கூறுகிறது வசனம். ஒவ்வொருவருக்கும் அவர் உயிர்தான் பெரியது.தான் நேசிக்கும் மனைவி அல்லது குழந்தைகளுக்காக சில சம்யம் இழக்க நேரிடலாம்.அதுவும் தனக்கு பிறகு அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக்வே.

  ஆனால் இங்கு என்னை பாதுகாக்க உங்கள் உயிரையும் விட தயாராக இருக்க வேண்டும் என்கிறார் முகமது(குரான்). ஒரு தூதர் போனால் இன்னொரு தூதரை அல்லா அனுப்ப மாட்டாரா?இல்லை தூதரை அல்லா பாதுகாக்க மாட்டாரா?

  அதுவும் அப்படி செய்தால் தகுந்த கூலி என்கிறார்.அதாவது கூலி என்று கூறினால் மட்டுமே பாதுகாப்பார்களா? எதையாவது செய்ய வேண்டுமென்றால் கூலி.செய்யவில்லையென்றால் தண்டனை அவ்வளவுதான்.கூலி இம்மையிலும்(உயிரோடு இருந்தல்) மறுமையிலும்(?).

  3:146.எத்தனையோ நபிமார்களுடன் சேர்ந்து எவ்வளவோ படையினர் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்து விடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்து விடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

  147. ”எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.

  148. எனவே இவ்வுலகக் கூலியையும், மறுமையின் அழகிய கூலியையும் அவர் களுக்கு அல்லாஹ் வழங்கினான். நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

  வரம்பு மீறாதீர்கள்,மீறினாலும் மன்னிக்க படும்.
  2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை

  முகமதுக்கு முந்திய தூதர்கள்(யூதர்கள்) அனைவரும் இன்னொருவரின் நாட்டை ஆக்கிரமிக்கவே போர் புரிந்தன்ர்.இன்னமும் செய்கிறார்கள்.

  முகமதுக்கு பின் வந்தவர்கள் போரினால் அரசு விரிவாக்கம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் இந்த போருக்கு ஊக்கமூட்டும் வசன‌ங்களை பயன் படுத்தியே வீரர்களை உற்சாக்ப் படுத்தி இருப்பார்கள்.

  யூத மதம் இரு இனவெறி சித்தாந்தம்.(யாரும் யூதராக மதம் மாற முடியாது,இந்த இனத்தவர் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்)

  இஸ்லாம் ஒரு அரசு விரிவாக்க சித்தாந்தம்.(எப்படியாவது மதம் மாற்றுதல் அல்லது போர் புரிந்து அரசு அமைத்தல்)

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s